தமிழ்நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் (தேர்தல் 2016: பகுதி 6)

வெற்றி பெறும் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்ற கேவலமான மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் உங்கள் எதிர்காலம் வெற்றி பெறுவதற்கான கட்சிக்கு வாக்களியுங்கள். அந்தக் கட்சி பாஜக, அதன் சின்னம் தாமரை… மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் – தயவு செய்து தமிழ் நாட்டைக் கைவிட்டு விடாதீர்கள். மீண்டும் நரகத் தீக்குள் முழுகி விடாதீர்கள். தமிழ் நாட்டை நாசக்காரர்களிடமும் மோசடிப் பேர்வழிகளிடமும் ரவுடிகளிடமும் கொள்ளையர்களிடமும் அடமானம் வைத்து விடாதீர்கள். உங்கள் சந்ததியினருக்குப் பாவத்தை இழைத்து விடாதீர்கள். அவர்களின் எதிர்காலத்தைப் பாழடித்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகளின் கல்வியைக் கேலிப் பொருளாக்கி அவர்களை எதற்கும் உபயோகமில்லாத வீணர்களாக மாற்றி விடாதீர்கள். உங்கள் நதிகளை அழித்து விடாதீர்கள். உங்கள் மலைகளை இழந்து விடாதீர்கள்…

View More தமிழ்நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் (தேர்தல் 2016: பகுதி 6)

பா.ஜ.கவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் (தமிழக தேர்தல் 2016: பகுதி 5)

முதலில் பி ஜே பி அரசு தமிழ்நாட்டுக்காக என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்ப்போம். முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளத்தின் அடாவடியையும் மீறி தமிழ் நாட்டிற்கு அதிக நீர் வருவதற்காக அணையின் உயரத்தை உயர்த்த ஆட்சிக்கு வந்தவுடனேயே உத்தரவிட்டது. காங்கிரஸ் திமுக அரசாங்களினால் தடை செய்யப் பட்ட ஜல்லிக்கட்டை முறையாக நடத்த ஏற்பாடுகளை செய்தது. இன்று தமிழகத்தில் ஓரளவுக்கு மின் வெட்டு இல்லாமல் இருப்பதன் காரணம் அகந்தையும் மூர்க்கமும் நிறைந்த ஜெயலலிதா அரசு அல்ல. மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய மின் பகிர்மான கட்டுமானங்களை துரித கதியில் நிர்மாணித்து மத்திய தொகுப்பில் இருந்து வரும் மின்சாரத்தை தடையின்றி அளித்து வருவதே காரணம்.., இனி பாஜக மத்திய பாஜக அரசின் மகத்தான சாதனைகளை எடுத்துச் சொல்ல பல ஆயிரம் பக்கங்கள் தேவைப் படும். முக்கியமான சிலவற்றை மட்டும் பார்க்கலாம்..

View More பா.ஜ.கவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் (தமிழக தேர்தல் 2016: பகுதி 5)

தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 4 (வேண்டும் பா.ஜ.க)

தமிழ் நாடு அழிவுப் பாதையில் இருந்தும், ஊழல்களின் பிடியில் இருந்தும், வன்முறைகள் பயங்கரவாதப் பிடிகளில் இருந்தும், அழிந்து கொண்டிருக்கும் கல்விகளில் இருந்தும், சூழல் அழிவுகளில் இருந்தும், கடன்களில் இருந்தும் விட்டு விடுதலையாகி வளர்ச்சிப் பாதையில் சென்று ஒளி மயமான ஒரு எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் தமிழ் நாட்டு வாக்களர்களின் முன்னால் இருக்கும் ஒரே ஒரு தேர்வு பா ஜ க கட்சி மட்டுமே. பா ஜ க எந்த வகையில் முந்தைய நான்கு கட்சிகளை விட வேறு பட்டது? ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்… அவர்கள் இது வரை என்ன செய்திருக்கிறார்கள் என்று கேட்கலாம். தாங்கள் ஆளும் மாநிலங்களிலும், மத்திய அரசிலும், தமிழ் நாட்டுக்காகவும் பி ஜே பி இது வரை செய்துள்ள சாதனைகள் எண்ணற்றவை….

View More தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 4 (வேண்டும் பா.ஜ.க)

தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)

அதே ஊழல்கள், அதே ரவுடித்தனங்கள், அதே கொலை கொள்ளைகள், அதே செயல்பாட்டின்மை, அறிவின்மை, திறமையின்மை அதே மக்கள் விரோதப் போக்குகள் அதே ஜாதீய வெறித்தனங்கள் நிறைந்த ஒரு கூட்டணி. ம.ந.கூ என்ற அமைப்பில் இந்தியாவின் அனைத்து விதமான தேசத் துரோகிகளும் ஒன்று கூடியிருக்கிறார்கள். மக்களை பிச்சைக்காரர்களாக ஏழைகளாக வைத்திருப்பதன் மூலமாக மட்டுமே தங்களது அரசியல் அதிகாரத்தைத் தொடர முடியும் என்று நம்பும் நச்சுக் கிருமிகள், நாசகார ஏஜெண்டுகளான மார்க்சிஸ்டுகள் இந்தக் கூட்டணியில் இருப்பதினால் மட்டுமே கூட இது கண்டிப்பாக எதிர்க்கப் பட வேண்டும். இவர்களை ஆதரித்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் ஒற்றுமைக்கே அதன் இருப்புக்கே உலை வைத்து விடுவார்கள்… கூட்டணியின் தலைவர் விஜயகாந்த். அவர் நல்ல மனிதராக இருக்கலாம். அவரைத்தான் இவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இவர் ஜெயலலிதாவை விடவும் மோசமான உடல் மற்றும் மன நிலை உடையவராக இருக்கிறார். குணா என்னும் சினிமாவில் புத்தி ஸ்வாதீனமில்லாத மகன் பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்று மோசடி செய்ய முயலும் அவனது அம்மாவின் கும்பலைப் போன்றது இந்தக் கூட்டணி….

View More தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)

தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 2 (வேண்டாம் அ.தி.மு.க)

ஒரு உடல் நலன் இல்லாத அதிகார வெறி பிடித்த மர்மமான ஒரு பெண்மணிக்கு ஏன் தமிழ் நாடு வாக்களிக்க வேண்டும்? சிந்தியுங்கள். ஜெயலலிதாவுக்கு இன்றைய தேவை ஓய்வும், மருத்துவ சிகிச்சையும், பயிற்சிகளும், மருந்துகளுமே அன்றி நிச்சயமாக முதல்வர் பதவி கிடையாது. அதற்கான அருகதையுடையவர் அவர் கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். அவருக்குத் தேவையான ஓய்வை அளியுங்கள்… தமிழ் நாட்டில் முக்கியமான இந்துத் தலைவர்கள் பலரும் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப் பட்டார்கள். ஆம்பூரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பெரும் கலவரம் நடத்தி போலீஸ்காரர்களைக் கடுமையாகத் தாக்கி பெண் போலீஸ்காரர்களை மான பங்கப் படுத்தினர். இது எதையும் கண்டு கொள்ளாமல்இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழ் நாட்டில் வேர் விட்டு வளர அனுமதி அளித்து வைத்திருக்கிறார் ஜெயலலிதா. ஓட்டுக்காக இவர் அனுமதித்திருக்கும் பயங்கரவாதம் நாளைக்கு ஒட்டு மொத்தத் தமிழ் நாட்டையே அழித்து விடக் கூடியது. நீங்களும் உங்கள் மனைவி குழந்தைகளும் குண்டு வெடித்துச் சிதறும் அபாயம் தமிழ் நாட்டைச் சூழ்ந்துள்ளது. ஊழல் மலிந்த நீர், மின்சாரம், கல்வி, பாதுகாப்பு,சாலை, வேலை என்று அனைத்து துறைகளிலும் மெத்தனமும் செயலின்மையும் ஊழல்களும் மலிந்த ஜெயலலிதா அரசு உடனடியாக நீக்கப் பட வேண்டும்…

View More தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 2 (வேண்டாம் அ.தி.மு.க)

தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 1 (வேண்டாம் தி.மு.க)

இது வெறும் அரசியல் நிகழ்வு மட்டும் அல்ல. நம்மையும் நமது வாரிசுகளையும், நமது எதிர்கால சந்ததியினரையும் தனிப்பட்ட அளவிலும் பாதிக்கச் செய்யும் ஒரு முக்கியமான பொது நிகழ்வு ஆகும். எப்படி உங்கள் கல்வி, திருமணம், குழந்தைகள் நலன், வீடு கட்டுதல்/வாங்குதல், வேலை போன்றவற்றிற்கு எல்லாம் அதி முக்கியத்துவம் தருவீர்களோ அது போன்ற ஒரு முக்கியத்துவத்தைத் தயவு செய்து இந்தத் தேர்தல் குறித்தான எனது வேண்டுகோளுக்கும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்… உலக வரலாற்றிலேயே மாபெரும் ஊழல்களை நிகழ்த்தியவை தி மு க வும் காங்கிரஸும். வேறு எந்த நாட்டிலும் இவர்கள் கைது செய்யப் பட்டு மரண தண்டனையோ அல்லது வாழ்நாள் முழுக்கச் சிறையோ அளிக்கப் பட்டு நிரந்தரமாக ஜெயிலில் இருந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டுமே மீண்டும் மீண்டும் இவர்கள் தேசத்தைக் கொள்ளையடிக்கத் தேர்தலில் போட்டி போடுகிறார்கள்.,,,

View More தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 1 (வேண்டாம் தி.மு.க)

தள்ளாடும் அரசு, தடுமாறும் அமைச்சர்கள்

இன்னமும் 100 பேர் அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர்களாக- அமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்… ஆட்சிக்கு வந்து 16 மாதங்களில் 15 அமைச்சர்களை மாற்றுவதென்பது, ஒட்டுமொத்த அமைச்சரவையின் நம்பகத்தன்மையைப் பாதிப்பதாகவே உள்ளது… உளவுத்துறைக்கு அமைச்சர்கள் குறித்த தவறான தகவல்களை போட்டியாளர்கள் தருவதாகவும் தகவல்கள் உண்டு… பதவியில் இல்லாதவர்களே நிம்மதியாக இருக்க முடியும் என்ற சூழல் தமிழகத்தில்… காமராஜர் அமைச்சரவையில் அரசியல் நடத்தவில்லை… காமராஜர் ஆட்சி என்பது ஒரு கனவுச்சொல்லாக தமிழகத்தில் நிலைபெற்றிருப்பது அதனால்தான்…

View More தள்ளாடும் அரசு, தடுமாறும் அமைச்சர்கள்

மக்களாட்சி நாட்குறிப்பின் துக்கமான பக்கங்கள்…

பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த தேவே கவுடாவின் கட்சியும் காங்கிரசும் திரைமறைவில் நடத்திய சதிகளைக் கைவிட்டுவிட்டு, நேரடியாகவே களமிறங்கி நடத்திய கூத்துக்கள் [..] மீனுக்கு காத்திருந்த கொக்கு போல, உடனடியாக கர்நாடகா அரசைக் கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பிய கவர்னர் [..]

View More மக்களாட்சி நாட்குறிப்பின் துக்கமான பக்கங்கள்…