கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 9

<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> 

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய
கிறிஸ்துமதச்சேதனம்
பகுதி 1 – பதிஇயல்
இயேசுவின் ஜீவிதம்
இயேசுவின் திருப்பலி

அன்புக்குரிய நண்பர்களே!
வணக்கம். கிறிஸ்தவர்களின் ஆண்டவராகிய ஜெஹோவா மற்றும் அவரது ஒரே திருக்குமாரனாகிய இயேசு ஆகியோருக்கு கிறித்தவப் பிரச்சாரகர்களால் இருப்பதாக கற்பிக்கப்படுகின்ற தெய்வீகத் தன்மைகள் ஒவ்வொன்றையும் பைபிளில் இருந்து தக்க ஆதாரங்களைக் சுட்டிக்காட்டி ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் நிராகரித்ததை கடந்த பகுதிகளிலே கண்டோம். இந்தப்பகுதியிலே கிறிஸ்தவத்தின் பாவவிமோசனமாக விடுதலைக்கு ஒரே வழியாக கற்பிக்கப்படுகிற இயேசுவின் திருப்பலி என்ற கோட்பாடு ஒரு புனைவு என்பதை எவ்வாறு ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் எவ்வாறு நிருபிக்கிறார் என்பதைக்காண்போம்.

ஓ கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர்களே!
இயேசு எல்லா மனித உயிர்களின் பாவங்களைப் போக்குவதற்காக திருப்பலியாக மரித்தார் என்பதால் அவர் தேவன் என்று நீங்கள் வாதாடுகிறீர்கள். அப்படியானால் கீழ்கண்ட கேள்விகள் எழுகின்றன.
1. இயேசு எந்த தெய்வத்திற்கு பலி கொடுக்கப்பட்டார்?
2. அவரை அந்ததெய்வத்துக்கு பலியாக கொடுத்தவர்கள் யார்?
இயேசு பலியிடப்பட்டாரா?
இயேசுவை பலியிடும் எந்த ஒரு சடங்கும் யாராலும் நிகழ்த்தப்படவே இல்லை. அப்படி நிகழ்ந்ததற்கு புதிய ஏற்பாட்டில் ஆதாரங்கள் ஏதும் இல்லவே இல்லை. யூதர்கள் இயேசுவைப்பிடித்து அவர் செய்த குற்றங்களுக்கு தண்டனையாக அவரை அன்றைய ஆட்சியாளர்களான உரோமானிய அதிகாரிகளைக்கொண்டு கொல்வித்தனர். இதுதான் உண்மை. இயேசுவின் குற்றம் நிரூபிக்கப்படாமல் இருந்திருந்தால் நிச்சயமாக அவர் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டிருக்க மாட்டார் என்பது உறுதி.

இயேசு தலைமறைவானது ஏன்?
மெய்யாகவே இயேசு மனிதர்களின் பாவத்தை கழுவுவதற்காகப் பலியிடப்படுவதற்காக பிறந்திருந்தால், அவர் ஏன் யூதர்களுக்கு அஞ்சி வனாந்திரத்தில் மறைந்து ஓளிந்து வாழ்ந்தார்? பொதுவெளியில் யூதர்களோடு சுதந்திரமாக உலாவியிருக்கலாமே? அவர் யாருக்கும் அஞ்சி ஓடி ஒளிந்துகொள்ளவில்லை என்றால் ஏன் உங்களது விவிலியம் ஏன் கீழ்கண்டவாறு சொல்லவேண்டும்.
“ஆனால் தலைமை ஆசாரியரும் பரிசேயரும் இயேசுவைப்பற்றிய ஒரு புதிய கட்டளையைக் கொடுத்திருந்தனர். எவராவது இயேசு எங்கே இருக்கிறார் என்று தெரிந்துகொண்டால் உடனே வந்து தெரிவிக்க வேண்டும். பிறகு, தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் இயேசுவைக் கைதுசெய்ய முடியும்”(யோவான் 11:57).
யூதகுருமார்கள் இயேசுவைக் கைதுசெய்ய ஆணையிட்ட பின்னரும் அவரை யூதர்களால் பிடிக்கமுடியவில்லை. ஆகவே இயேசு யூதர்களுக்கு அஞ்சி, மறைந்துவாழ்ந்தது உறுதியாகிறது. கடைசிக்கட்டத்தில் அவரது பயம் அதிகமானது, நடுக்கம் அதிகரித்தது அதனால் அவர் மறைவிடத்தில் ஒளிந்துகொண்டார் என்பதும் விளங்குகிறது.

இயேசு மரணபயம் அற்றவரா?
மரணபயத்தினால் இயேசு ஓடி ஒளியவில்லை, மறைந்திருக்கவில்லை என்று நீங்கள் வாதாடலாம். அப்படியானால் யோவானுடைய சுவிசேஷம் ஏன் இப்படி சொல்லவேண்டும்?
“அந்நாள்முதல் அவரைக் கொலை செய்யும்படிக்கு ஆலோசனை பண்ணினார்கள். ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம் விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் எனப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்”(யோவான் 11:53-54).
“நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆபிரகாம் பிறப்பதற்குமுன்பே நான் இருக்கிறேன்” என்றார் இயேசு. இயேசு இதைச் சொன்னதும் மக்கள் அவர்மீது கல் எறிவதற்குக் கற்களைப் பொறுக்கினார்கள். ஆனால் இயேசு மறைந்து, அந்த தேவாலயத்தைவிட்டு விலகிப்போனார் (யோவான் 8:58-59)”.
லூக்காவின் சுவிசேஷம் கீழ்கண்டவாறு சொல்கிறது,
a-jesus-cliff“அம்மக்கள் எழுந்து இயேசுவை நகரத்திலிருந்து வெளியேறும்படியாகக் கட்டாயப்படுத்தினர். அவர்கள் நகரம் ஒரு மலையின்மேல் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அவர்கள் இயேசுவை மலையின் விளிம்புக்குக்கொண்டுவந்தனர். விளிம்பிலிருந்து அவரைத் தள்ளிவிட அவர்கள் முனைந்தார்கள். ஆனால் இயேசு அவர்களுக்கு நடுவே நடந்து, அங்கிருந்து சென்றுவிட்டார்”(லூக்கா 4:29-30).
இயேசுவின் திருப்பலி பரமபிதாவின் திட்டமா?
இயேசு சிலுவைப்பாடுகளால் துயருற்று பாஸ்கா பண்டிகையன்று மரணிக்கவேண்டும் என்பது அவரது பிதாவாகிய ஜெஹோவாவின் திட்டம். அதை ஏற்றுக்கொண்டு இயேசுவும் அன்றே மரித்தார்.03 Jesus Crucifixtion
பாஸ்கா பண்டிகையின்போது இஸ்ரவேலர்களும் மற்ற பழங்குடிகளும் ஒன்றுகூடுவார்கள். அப்படிக்கூடும்போது இரட்சகராகிய இயேசு தமக்காக உலகில் பிறந்து, துன்பப்பட்டார், திருப்பலியானார் என்பதை அவர்கள் அனைவரும் அறியவார்கள்.
அப்படி அறிந்ததனால் நியாயத்தீர்ப்பு நாளிலே இயேசுவை எங்களுக்குத்தெரியாது என்று யாரும் சொல்லி தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள இயலாது. பலர் அறியும்வண்ணம் இயேசுவின் திருப்பலி நிகழவேண்டும் என்பதற்காக பாஸ்கா பண்டிகைவரை அவர் மறைந்து வாழ்ந்தார் என்றுகூட நீங்கள் வாதிடலாம். ஆனால் உங்கள் பரிசுத்த வேதாகமாகிய பைபிளில் இதற்கு ஆதாரம் ஏதும் இல்லையே!
நீங்கள் சொல்லுகிறபடி உலகம்முழுவதும் இயேசுவின் துயரப்பாடுகளை அறிந்துகொள்ளவேண்டும் என்பது அவரது பிதாவின் இச்சை என்றால், அந்த பாஸ்கா பண்டிகையின்போது நிகழ்ந்த இயேசுவின் மரணம் உலகம்முழுதும் அறியப்பட்டிருக்கவேண்டுமே. அப்போது உலகம்முழுதும் உள்ள மக்கள் அதனை அறிந்தனரா? இப்போது உலகில் உள்ள அனைவருக்கும் இது தெரியுமா? இல்லை, வருகின்ற காலத்திலாவது உலகம்முழுவதும் வாழ்கிற மக்கள் இதை அறிவார்களா? எண்ணற்ற மக்கள் இந்த உலகத்தில் இயேசு என்ற பெயரைக்கேட்காமலே இறந்துபோயினரே!
இன்னும் பலப்பலர் அதேபோல இயேசுவை அறியாமலேயே இறந்துபோகவும் வாய்ப்பு உண்டு. எனவே உங்கள் பரமபிதாவாகிய ஜெஹோவாவிற்கு அப்படிப்பட்ட திட்டமே இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது புரிகிறது.
உங்கள் தேவனாகிய ஜெஹோவா இயேசுவாழ்ந்த பிராந்தியத்தில் உள்ளவர்கள் மட்டும் அவரது மரணத்தை அறியவேண்டும் என்று விரும்பியிருந்தால் உலகெங்கும் இயேசுவின் செய்தியை ஏன் பரப்புகிறீர்கள்?
இயேசு தனது பிதா குறித்த காலத்தில் துன்பப்பட்டு மரணம் அடையவிரும்பினார், அதற்கு முன்னர் மரணிக்க விரும்பவில்லை என்று நீங்கள் சொன்னது உண்மையாக இருந்தால், அந்தத் துன்பங்களையெல்லாம் அவர் விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மையாகிவிடுமே!
மேலும், பிதாவாகிய ஜெஹோவா இயேசு எப்போது துன்பப்படவேண்டும் என்று முன்னரே முடிவுசெய்திருந்தால், இயேசுவுக்கு அந்த வேளை வருவதற்குமுன் துன்பப்பட்டிருக்க அவசியம் இருந்திருக்காதே? அப்படியானால் அந்த வேளை வரும்வரை அவர் வனாந்திரத்தில் ஒளிந்து மறைந்திருக்கவேண்டிய அவசியம் என்ன?
தான் துன்புற்று மரணிக்கிற காலம் எது என்பது இயேசுவுக்கு தெரியாததால் அவர் மறைந்திருந்தார் என்று நீங்கள் சொல்லலாம். அப்படியானால் துன்பங்களை அனுபவிப்பதற்கும் சிலுவையில் மரிப்பதற்கும் இயேசு சம்மதம் அளித்திருக்கவில்லை என்று அது பொருள்படுமே? இயேசு மனித உயிர்களின் மீட்சிக்காக தானே விரும்பி துன்புற்று மரணிக்கவில்லை என்பது தெளிவாகவே இவற்றிலிருந்து தெரிகிறது. அவரது விதியே அவரது துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்றுமட்டும் புரிகிறது.
இயேசு பிதாவின் திட்டப்படி தான் துன்பப்படப்போகின்றேன் என்பதை அறிவார், ஆனால் தான் மரிக்கப்போகிற நேரத்தைமட்டுமே அவர் அறியமாட்டார். எனவே அவர் தலைமறைவாக இருந்தார் என்று நீங்கள் வாதிடலாம். இந்த வாதம்கூட அச்சத்தினாலே இயேசு தலைமறைவாக வாழ்ந்தார் என்பதை உறுதிப்படுத்திவிடும்.
இயேசுவுக்கு தான் மரிக்கப்போகிற நாள் சரியாகத் தெரிந்திருந்தால் அவர் யூதர்களால் பிடிக்கப்பட்ட நாளன்றைக்கு மறைந்துகொண்டிருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காதே? அதற்கு மாறாக யூதர்கள் அவரைப் பிடிக்கவந்தபோது அவர்களை எதிர்க்காமல், தப்பிக்க முயற்சிக்காமல் தம்மை கைதுசெய்ய அவர் அனுமதித்தார்.01 Jesus's arrest
அவர் ஏன் அப்படிச்செய்தார்? அவரிடம் இருந்ததாக நீங்கள் சொல்லும் மாயமாக மறைந்துபோகும் சக்தி என்னவாயிற்று?
தனது தந்தையின் ஆணைக்கு கீழ்படிவதற்காகவே மறைந்துவாழ்ந்த இயேசு பின்னர் யூதர்களிடம் சரணடைந்தார் என்று நீங்கள் சொல்லமுடியாது. ஏனென்றால், இயேசுவுக்கு தான் எப்போது மரணிக்கப்போகிறோம் என்பது தெரியாது என்று சொல்லிவிட்டீர்களே! இயேசு யூதர்கள் தம்மைக் கைதுசெய்ய முயன்றபோது அவர்களிடமிருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை என்பதனாலே அவர் அதற்கு முயற்சிசெய்யவில்லை என்பதுதானே உண்மை?
அவரது பரமபிதாவாகிய ஜெஹோவா இயேசுவைப் பலியிட முடிவுசெய்திருக்கவில்லை, அதற்கான நாளையும் அவர் குறித்துவைத்திருக்கவில்லை, அதைப்பற்றி இயேசுவுக்கு எதுவும் தெரிந்திருக்கவும் இல்லை, அந்தமுடிவுக்கு எந்த சம்மதத்தையும் அவர் தனது பிதாவுக்குக் கொடுக்கவும் இல்லை.

இயேசு யூதாஸை சபித்தது தண்டித்தது சரியா?
02 Judasஇயேசுவுக்கு தாம் மனிதர்களின் பாவங்களுக்கு பலியாக மரிக்கப்போகிறோம் என்பது தெரிந்திருந்தால் அவர் மறைவிடத்தில் ஒளிந்திருக்கமாட்டார். அப்படி அவர் தனது பலிதானத்தை உணர்ந்திருந்தால், தன்னைக் காட்டிக்கொடுத்த யூதாஸை ஆசீர்வதிக்காமல் சபித்தது ஏன்?
“மனிதகுமாரன் இறப்பார். இது நடக்குமென வேதவாக்கியம் சொல்கிறது. மனிதகுமாரனைக் கொல்வதற்குக் காட்டிக்கொடுக்கிறவனுக்கு மிகுந்த தீமை விளையும். அதைவிட அவன் பிறக்காமலேயே இருந்திருக்கலாம்” என்றார் (மத்தேயு 26:24).
தன்னைக்காட்டிக்கொடுத்த யூதாசின் துரோகத்துக்கு தண்டனையாக அவனுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதைத்தான் இயேசு சொன்னார் அதில் சாபம் ஏதும் இல்லை என்று நீங்கள் வாதாடலாம்.
அப்படியானால் இயேசுவின் துன்பம், துயரம், மரணம் ஆகியவற்றை நிச்சயித்த அவரது பிதாவாகிய ஜெஹோவாவின்மீது இயேசுவின் சாபம் சென்றிருக்கவேண்டுமே? இயேசு தனது துன்பத்திற்கு மூலகாரணமாக இருந்த ஜெஹோவாவை விடுத்து, அதற்குக் கருவியாக இருந்த யூதாஸை சபித்ததற்குக் காரணம் அவர் அடைந்த ஆழ்ந்த வருத்தமாகத்தான் இருக்கமுடியும்!
எல்லாம் அறிந்தவரான இயேசு, தனது தெய்வீகத்தன்மையினாலே யூதாஸை சபித்தார் — அதன்மூலம் தீர்க்கசதரிசனமாக அவன் தன்னைக்காட்டிக்கொடுப்பதை உரைத்தார் என்றுகூட நீங்கள் வாதாடலாம். அந்தமாதிரி வருங்காலத்தில் நிகழ இருப்பதை முன்னமே கண்டு உரைக்கும் சக்தி இயேசுவுக்கு இருந்திருந்தால், யூதாஸைத் தனது பிரிய சீடனாக அவர் வரித்தது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. இயேசு தனது துன்பங்களுக்குக் காரணமான யாரையாவது சபிக்கவேண்டும் என்றால் அதற்கெல்லாம் மூலகாரணமாக இருந்த ஜெஹோவாவைத்தானே அவர் சபித்திருக்கவேண்டும்? அதைச் செய்யாமல் யூதாஸைச் சபித்த இயேசுவின் செய்கை, அவருக்கு தீர்க்கதரிசன சக்தி இல்லை என்பதைத்தானே காட்டுகிறது?

இயேசு பட்ட துன்பங்களுக்குக் காரணம் யார்?
இப்போது நமக்குமுன்னே உள்ள கேள்வி, இயேசு பட்ட வேதனைகளுக்குக் காரணம் என்ன என்பதுதான். இயேசுவின் துயர்ப்பாடுகளுக்கு யூதாசின் துரோகம் காரணமா? இல்லை, ஜெஹோவா என்ற தேவனின் திட்டம் காரணமா? இல்லை, இரண்டுமே காரணமா?
யூதாசின் துரோகம்தான் காரணம் என்றால் இயேசுவின் மரணம் மனிதகுலம் செய்த, செய்யவிருக்கின்ற பாவங்களுக்கான கழுவாய், திருப்பலி என்று சொல்லமுடியாது.
ஜெஹோவா என்ற உங்களது தேவனின் திட்டமே காரணம் என்றால், தேவனின் ஆக்ஞைபடி இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் பாவியாகக் கருதப்பட்டு, நரகத்தில் தள்ளப்பட்டிருக்ககூடாது. இரண்டுமே காரணம் என்றால், யூதாஸைத் தீயவன் என்றும் ஜெஹோவாவைத் தேவன், நல்லவன் என்றும் சொல்வது அநீதியானதாகும், அநியாயமாகும்.
மரணத்துக்கு அஞ்சி வனாந்திரத்தில் மறைந்திருந்த இயேசு தன்னைக் காட்டிக்கொடுத்த யூதாஸைப் பழிவாங்கும் நோக்கிலே சபித்தார். இதிலிருந்து இயேசு பாவங்களுக்கு கழுவாயாக இறக்கவில்லை, பலியிடப்படவில்லை என்பது தெளிவாகிறது.
நண்பர்களே! இந்தப் பகுதியில் இயேசுவின் திருப்பலி என்ற கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கை ஆதாரமில்லாத புனைவு என்பதை ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பதைக் கண்டோம். அடுத்த பகுதியில் இயேசுவின் உயிர்த்தெழுதலும் ஒரு புனைவே என்பதைக் காண்போம்.

[தொடரும்]

<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> 

குறிப்புகள்:

i.  பைபிளின் புதிய ஏற்பாட்டின் எந்த ஒரு சுவிஷேசத்திலும், இயேசு எந்த தெய்வத்துக்கும் பலியிடப்பட்டதற்கான குறிப்புகள் ஏதும் இல்லை. பலியிடுவது என்பது ஒன்று இருந்தால் அது ஒரு தெய்வத்தின் முன்னிலையிலேயே, அதற்காகவே, அதன் பெயராலே அச்சடங்கு நிகழ்த்தப்படவேண்டும் என்பது உலகம் முழுவதும் உள்ள பொதுவான விதியாகும்.
கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று எல்லாக் காலங்களிலும் ஆதாம்-ஏவாள் மற்றும் அவர்தம் வம்சாவழியினர் செய்த பாவங்ளுக்கு கழுவாயாக, தேவனின் ஒரே குமாரரான இயேசு, தூயவராக பாவத்தின் கறைபடியாதவராகத் தோன்றி, வாழ்ந்து துன்பப்பட்டு, செய்யாத குற்றத்துக்குத் தண்டிக்கப்பட்டார் — அவரது மரணம் மனிதகுலம் செய்த பாவங்களுக்கான பலி என்பது கிறிஸ்தவர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. பலி என்பது மனிதர்கள் தாம் செய்யும் பாவத்திற்கு கழுவாயாகப் பரிகாரமாகக் கருதப்படுவது, எல்லா நாகரிகங்களிலும் மக்கள் தொகுதிகளிலும் காணப்படும் ஒரு வழக்காறுதான். ஆனால் பலி ஒரு தெய்வத்துக்குத்தான் கொடுக்கப்படவேண்டும்.
ஆனால் இங்கே பாவம் இருக்கிறது, பலிப் பசுவாக ஜெஹோவா என்ற யூதரின் தெய்வத்தின் பிள்ளையே இருக்கிறார்.
சரி, தெய்வம் எங்கே? யூதர்களுக்கும் சரி, கிறிஸ்தவர்களுக்கும் சரி, ஒரே தெய்வம் ஜெஹோவாதான். வேறு தெய்வம் கிடையாது. அப்படியானால் ஜெஹோவாவுக்கு இயேசு பலியிடப்பட்டார் என்று கிறிஸ்தவர்கள் சொல்லமுடியுமா? நிச்சயம் சொல்லவே முடியாது. காரணம், அப்பனுக்கு பிள்ளையை பலிகொடுத்தால் அப்பனுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்பது அபத்தம். அப்பனே பிள்ளையை பலிகொடுக்கத் திட்டமிட்டார் என்பது இன்னமும் அபத்தம்.

ii.  பலி என்று வரும்போது யார் எஜமானராக இருந்து பலியை நிகழ்த்துகிறார்கள் என்பதும் முக்கியம். அவர்களுக்கு பலிகொடுப்பதற்கு ஒரு நோக்கம் இருக்கும். பலியின் பயன் பலியை ஏற்பாடு செய்த யஜமானர்களையே சேரும். இதுவும் தெய்வங்களுக்கு கொடுக்கும் பலிகளைப்பற்றிய ஒரு பொது நியதிதான்.
இங்கே இயேசுவின் திருப்பலியை எடுத்துக்கொண்டால், இயேசுவைக் கொன்றவர்கள் யூதர்களின் குருமார்களா, அந்தக்காலத்தில் யூதர்களை ஆண்ட உரோமர்களா, அல்லது இதைத் திட்டமிட்ட ஜெஹோவாவா? யூதகுருமார்களே திட்டமிட்டு இயேசுவின் மீது குற்றம் சுமத்தி ரோமானிய அதிகாரியிடம் இயேசுவுக்கு தண்டனை வாங்கித்தந்தார்கள் என்பதை புதிய ஏற்பாடு சொல்கிறது. ஆகவே அவர்களுக்குத்தான் பலியின் பயன் சேரும் என்று கிறிஸ்தவர்களால் சொல்லமுடியாது. பலி ஜெஹோவா என்ற யூதர்களின் தேவனுக்கே சேரும் என்று சொல்லவும் முடியாது. காரணம், பலிகொடுப்பவரும் வாங்குபவரும் ஒருவராக இருக்கமுடியாது. தனக்குத்தானே ஒருவர் பலிகொடுத்துக்கொள்ள முடியாது. இவர்களையெல்லாம் விட்டுவிட்டு இயேசுவின் பலிதானத்தின் பயன் பலிகொடுப்பதில் எந்தவித சம்பந்தமும் இல்லாத அவரது விசுவாசிகளுக்கு என்று கிறிஸ்தவ தேவஇயல் வாதிகள் சொல்லுவது தர்க்க அறிவுக்குப் பொருந்தவே பொருந்தவில்லை. அதைவிட பலிகொடுத்தால் பலிகொடுப்பதற்கு முன்செய்த பாவம் போகும் என்பதால், இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றிற்கு பல நூறு ஆண்டுகளுக்குப்பின்னும் அவரது ரத்தம் மனிதர்களின் பாவங்களைப்போக்கும் என்ற நம்பிக்கையும் தர்க்க அறிவுக்கு முரணாகவே அமைகிறது.

iii.  மரணபயத்தினை வென்றவர்களே யோகிகள், ஞானிகள், மாவீரர்கள் என்பது பாரதப் பண்பாட்டில் காணப்படும் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.
மரணத்தை வெல்லுதல், மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறுதல் என்பதற்கெல்லாம்கூட மரணபயத்தை கடத்தல் என்பது ஒரு முக்கியமான கட்டமாகும். மரணபயத்தை வெல்லாதவர்களுக்கு, மரணத்தைவெல்லுதல் என்பது சாத்தியமில்லாதது. ம்ருத்யுஞ்ஜயர் என்ற வைதீக, சைவ கருத்தாக்கத்தினை கிறிஸ்தவர்கள் இயேசுவுக்கு புனைந்து ஏற்ற முனைகிறார்கள் (வேறு எதற்கு, நமது மதங்களை அழிப்பதற்குத்தான், ஜீரணம் செய்வதற்குத்தான்!). ம்ருத்யுஞ்ஜய இயேசுவே என்று கீர்த்தனங்கள் வேறு பாடுகிறார்கள். மரணத்தைக்கண்டு அஞ்சி, ஓடி ஒளிந்த ஒருவரை யோகி என்றும், ஞானி என்றும் ம்ருத்யுஞ்ஜெயர் என்றெல்லாம் கிறைஸ்தவர்கள் சொல்வது அபத்தமானப் முற்றிலும் அறிவுக்கு பொருந்தாத புனைவே!

11 Replies to “கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 9”

  1. அனைத்து ஹிந்துக்களும் நம் மதம் பற்றி ஆழ்ந்த அறிவும், நம்பிக்கையும் கொண்டு,யாராவது அவதூறோ, குறையோ கூறினால், மறுப்பு தெரிவித்து நமது உன்னதங்களை பொறுமையாகவும், அழுத்தமாகவும் எடுத்து கூறி, நம்மை நிலை நிறுத்த வேண்டியது ஒவ்வொரு ஹிந்துவின் கடமையாகும்.

  2. ஸ்ரீ சுப்ரமணியன் ஐயா
    எல்லா ஹிந்துக்களும் ஹிந்து சமய தத்துவங்களையும், இதிகாசப்புராணங்களையும் அறிந்துகொள்ளவேண்டும். அது நாம் நமது தர்மத்தை காக்க அவசியம் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. அதைப்போன்ற இன்னும் முக்கியமான விடயம் ஹிந்துக்கள் கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற அபிராஹாமிய ரிலிஜியன்களைப்பற்றியும்(இவைகள் சமயங்களோ, மதங்களோ அல்ல மாறாக அரசியல் நோக்குடைய நம்பிக்கை முறைகள், கட்டமைப்புகள் என்பதே உண்மை) அவற்றின் வரலாறு, அடிப்படை நம்பிக்கைகள் ஆகியவற்றையும் ஆழ்ந்து தெளிவாக சரியாகப்புரிந்துகொள்வதும் அவசியம். அவற்றை சரியாகப்புரிந்துகொள்ளாததால் அவர்களது நோக்கங்களை விளங்கிக்கொள்ளாததால் நாம் இழந்தது அதிகம். அவற்றைப்புரிந்துகொள்ளாமல், அவர்களோடு விவாதித்து நிராகரணம் செய்யாமல் விட்டுவிட்டால் ஏற்படும் விளைவுகள் கொடுமையாகவே இருக்கும். ஒவ்வொரு ஹிந்துவும் கிறிஸ்தவத்தை அதன் ஆதாரக்கட்டமைப்பை, நம்பிக்கைகளை, அரசியல் நோக்கினை உணர்ந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கிலே ஸ்ரீ ல ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் இந்த நூலை எழுதியிருக்கிறார். கிறிஸ்தவர்கள் அன்றும் இன்றும் நாம் விவாதிக்கத்தொடங்கினால் அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுவதை வழக்கமாகக்கொண்டிருக்கின்றார்கள். அறிவார்ந்த விவாதத்தை கிறிஸ்தவர்களோடு நாம் செய்யவேண்டும் என் பதற்காகவே இந்த மொழிபெயர்ப்பை அடியேன் செய்துவருகின்றேன். இதைப்படிக்கும் ஹிந்துத்துவர்கள் ஸ்ரீ ல ஸ்ரீ சுவாமிகளின் கருத்துக்களைத் தமிழகமெங்கும் கொண்டு செல்லவேண்டுகின்றேன்.

  3. ஸ்ரீ நந்தா அவர்களுடைய மேலான கவனத்துக்கு
    “இப்போது நமது தமிழ் ஹிந்துவில் வெளிவந்துகொண்டிருக்கும் கிறிஸ்துவ மதத்தை நிராகரித்தல் என்னும் நூல் அச்சில் வெளியாகவில்லை. இப்போது மொழி பெயர்ப்பினை செய்து கொண்டிருக்கின்றேன். நாற்பது சதவீதம் மட்டுமே இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது. அனைத்து பகுதிகளும் இந்த தளத்தில் வெளியான பின்னர் அச்சில் இந்த நூல் வெளியிடப்படும்”.
    சிவசிவ

  4. // இவைகள் சமயங்களோ, மதங்களோ அல்ல மாறாக அரசியல் நோக்குடைய நம்பிக்கை முறைகள், கட்டமைப்புகள் என்பதே உண்மை //

    செரியாக சொன்னீர்கள். இந்த உண்மையை அணைத்து இந்துக்களுக்கும் பத்து வயதிற்குள்ளாகவே திரும்ப திரும்ப சொல்லி அவர்களது ஆழ்மனதில் பதியுமாறு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் வருங்கால இந்துக்கள் மதச்சார்பின்மைவாதிகளால் குழப்பமடையாமல் இருப்பர்.

    “The Muslim Ummah is a military machine.”

    The mumins (muslims) are exempted from prayers, fasting, pilgrimage and the rest and all their sins and crimes stand pardoned, if they engage themselves in killing the kafirs (non-muslims).

    The murder of infidels (kafir-kushi), is counted a merit in a Muslim. It is not necessary that he should tame his own passions or mortify his flesh; it is not necessary for him to grow a rich growth of spirituality. He has only to slay a certain class of his fellow beings or plunder their lands and wealth, and this act in itself would raise his soul to heaven. A religion whose followers are taught to regard robbery and murder as a religious duty, is incompatible with the progress of mankind or with the peace of the world.
    – Chapter 8, The Calcutta Quran Petition by Sita Ram Goel.

    8:39. And fight them until there is no more Fitnah
    (disbelief and polytheism: i.e. worshipping others besides
    Allâh) and the religion (worship) will all be for Allâh Alone
    [in the whole of the world ]. But if they cease (worshipping
    others besides Allâh), then certainly, Allâh is All-Seer of what
    they do.

    8:12. (Remember) when your Lord inspired the angels,
    “Verily, I am with you, so keep firm those who have
    believed. I will cast terror into the hearts of those who have
    disbelieved, so strike them over the necks, and smite over
    all their fingers and toes.”

    – The Quran.

  5. புத்த மதம் தொடர்பாக ஏதேனும் குறிப்பிடுங்கள். ஆவலாக உள்ளது.

  6. Radika on July 3, 2016 at 9:08 pm
    அம்மையீர் பௌத்த தரிசனத்தில் ஈடுபாடு பயிற்சி மற்றும் புலமை உடையவர்கள்தான் பௌத்த சமயத்தைப்பற்றி எழுதவேண்டும். பௌத்தம் தொடர்பானக்கட்டுரைகளையும் தமிழ் ஹிந்து வெளியிடும் என்பதில் சந்தேகம் இல்லை. பௌத்த காப்பியமான மணிமேகலையைப்பற்றிய கட்டுரைகள் இந்த தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை வாசிக்கும்படி வேண்டுகின்றேன்.

  7. வணக்கம்,
    கிறித்துவ மதத்தை பற்றி நம் நாட்டின் ஞானிகளான விவேகானந்தர், ஓஷோ, மேலும் பலர் விமர்சித்து உள்ளதை அறிகிறேன். இவர்கள் அனைவரின் விமர்சனங்களை பற்றி முழுமையாக தமிழில் தெரிந்துகொள்ள ஏதேனும் புத்தகங்கள் உள்ளனவா ? அல்லது இணையதளம் வழியாக தமிழில் தெரிந்து கொள்ள வழி உண்டா என்பதை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி…

  8. சிவஸ்ரீ. விபூதிபூஷண்
    ஆம்..நான் மணிமேகலை தொடரை இடைவிடாது வாசித்து வருகிறேன். உங்கள் கருத்திற்கு நன்றி-

  9. நா.விவேக் ராஜ்
    “கிறித்துவ மதத்தை பற்றி நம் நாட்டின் ஞானிகளான விவேகானந்தர், ஓஷோ, மேலும் பலர் விமர்சித்து உள்ளதை அறிகிறேன். இவர்கள் அனைவரின் விமர்சனங்களை பற்றி முழுமையாக தமிழில் தெரிந்துகொள்ள ஏதேனும் புத்தகங்கள் உள்ளனவா ?”
    கிறிஸ்தவத்தைப்பற்றி ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள், சுவாமி விவேகானந்தர், சுவாமி தயானந்த சுவாமிகள்(ஆர்ய சமாஜத்தின் நிறுவனர்), மஹாத்மா காந்தி ஆகிய பெரியோர்களும் விவாதத்தினை முன்வைத்திருக்கின்றனர். சட்டம்பி சாமிஜியின் நூலை இங்கே மொழி பெயர்த்து அளித்துவருகின்றோம். சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம் என்னும் தொகுப்பு நூலில் உள்ள கிறிஸ்தவத்தைப்பற்றிய விமர்சனங்களில் முக்கியமானவற்றை எழுமின் விழிமின் என்ற அற்புதமான நூலில் ஏகநாத் ராணடே தொகுத்துள்ளார். அதனை விவேகானந்தக்கேந்திரம் வெளியிட்டுள்ளது.ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் சத்யார்த்தப்பிரகாஸ் என்ற நூல் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அபிராஹாமிய ரிலிஜியன்களைப்பற்றிய மிக ஆழமான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இணையத்தில் தேடினாலும் கிடைக்கும். ஆனால் காந்தி அண்ணல் அவர்களின் கிறிஸ்தவத்தைப்பற்றியத் தொகுப்பு நூல் எதையும் காணமுடியவில்லை. அதோடு விவேகானந்த அடிகளுடைய கிறிஸ்துமத விமர்சனமும் முழுமையாகத்தொகுப்பட்டு தமிழிலும் வெளியாகவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *