பல்லாண்டு காலமாக இந்துக்களுக்கும், இந்திய விரோதிகளுக்கும் ஆதரவாக ஆனந்த விகடன் செயல்படுவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனந்த விகடனை கருநாநிதி குடும்பம் மூலமாக சர்ச்சுகள் வாங்கிவிட்டன என்றும் அந்தப் பத்திரிகையில் எழுத முற்றிலும் இந்தியவிரோத மனப்பான்மை கொண்டவர்களை சர்ச்சுகள் நியமித்திருக்கின்றன என்பதிலும் உண்மைகள் இருப்பதாகவே தோன்றுகிறது.
என் இந்த யூகத்தை நிரூபிப்பது போலத்தான் இந்தக் கட்டுரையும் இருக்கிறது. இந்தக் கட்டுரை மூலம் சர்ச்சுகள் என்ன சொல்கின்றன என்பதை பொருள் விளக்கம் என ப்ராக்கெட் போட்டு சொல்லி இருக்கிறேன்.
தோண்டத் தோண்ட சிலைகள் ! – ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்
மானிட சமுதாயத்தைக் காக்க, அழிவு ஏற்படுத்தும் கிருமி குப்பியைக் கைப்பற்ற ‘தசாவதாரம்’ படத்தில் கமலஹாசன் பெரும் போராட்டத்தையே நடத்தினார். அந்த சிலையின் ஆற்றலை உணர்ந்த அமெரிக்க கமல், சிலையைக் கொண்டு போக படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. சிலைகள், வெறும் சிலைகள் அல்ல… அவைகள் நம் சித்த மருத்துவத்தின் அடையாளங்கள். பதினெண் சித்தர்கள் தொட்டு மகான்கள் வரையில், சிலைகளின் வழியாகத்தான் சஞ்சீவி மூலிகைகளை இழைத்து வைத்து அதை சிலைகளுக்குள் புகுத்தினர்.
[[[பொருள் விளக்கம்: கோயிலில் இருக்கும் சிலைகளுக்கு எந்த ஆன்மீக சக்தியும் கிடையாது. தூய தமிழர்களான சித்தர்கள் அறிவியல் முறைப்படி மருந்துகளை வைத்து உருவாக்கிய அந்தக் காலத்து ஹாஸ்பிட்டல்கள்தான் இந்தக் காலத்தில் கோயில்கள் என்று சிலர் புகுத்தினர். இதற்கான ஆதாரம் க-மல ஹாஸன் வந்து போன “தசாவதாரம்” வீடியோ.
பெரிய ஜோக் என்னவென்றால், அந்த வீடியோவில் அமெரிக்கத் தலைவீங்கிக் கமல் கடத்த விரும்பியது சிலையை அல்ல, சிலைக்குள் இந்திய க-மல ஹாசன் போட்டு வைத்த ஒரு கண்டுபிடிப்பை.
க-மல ஹாசன் படமே சரிவர புரியாதவர்களைத்தான் கிறுத்துவ சர்ச்சுகளின் பத்திரிக்கையான ஆனந்த விகடன் வேலைக்கு வைத்துக் கொள்கிறது. “எனக்கு முட்டாள்கள்தான் வேண்டும்” என்று ஈவெரா சொன்னதை ஆனந்த விகடன் நிறைவேற்றி வருகிறது.]]]
இன்ன கோயில் தீர்த்தம் அருந்தினால், இந்த நோய் போகும் என்று சொல்லி வைத்து சிலைகளுக்கு அபிஷேகம் நடத்தி, வழியும் நீரை தீர்த்தமாக்கிக் அருந்த வைத்தனர். கோயிலுக்கு மனிதர்களை வரவழைக்க இப்படியாக ‘பக்தி’ மார்க்கத்தைக் காட்டி நோய் தீர்த்தனர். இப்போதெல்லாம், பளிங்குக் கற்களில் சிலைகளை வைக்கிறார்கள் அது வேறு கதை. அதற்குள் நாம் போக வேண்டாம்.
[[[பொருள் விளக்கம்: ஹிந்துக்களின் பக்தி மார்க்கம் பற்றி சொல்லும்போது, அதை பக்தி மார்க்கம் என்று சொல்லக் கூடாது, “பக்தி” மார்க்கம் என்று கொட்டேஷன் போட்டுத்தான் சொல்ல வேண்டும். அதாவது, கோயிலுக்கு, மன்னிக்கவும், சித்த மருத்துவ ஹாஸ்பிடலுக்கு “மனிதர்களை” வரவழைக்க இப்படிப்பட்ட தந்திரங்களை பின்பற்றினார்கள் அந்தக் காலத்து பிற்போக்குவாதிகள்.
இப்படித் தந்திரங்களைப் பின்பற்றாவிட்டால், இந்த ஹிந்து காட்டுமிராண்டிகள் நோய்க்கு மருந்து வேண்டாம் என்று சொல்லி இருப்பார்கள். ஜலதோஷம் வந்தால்கூட இந்தத் தமிழ்க் காட்டுமிராண்டிகள் வடக்கிருந்து உயிர்நீப்பார்களே ஒழிந்து, சித்த மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை ஏற்க மாட்டார்கள். அதனால், சித்தர்கள் இப்படி மறைமுகமாக ஹாஸ்பிட்டல்களை நடத்தி மருந்து கொடுத்து வந்தார்கள். சித்த மருத்துவம் என்பதே இப்படிப் பொய்களைச் சொல்லித்தான் ஏமாற்றி வருகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் எனதருமை விகடன் வாசக மக்கழே. ]]]
நாம் போக வேண்டியது, சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த ஆயிரம் ஆண்டு பழமையான சிலைக் கடத்தல் மற்றும் அதன் காரண கர்த்தாவான ஆசாமி குறித்த விஷயத்துக்குள்.
தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் இன்றைய தெலுங்கானாவில் இருக்கும் ஹைதராபாத்தில் இருந்து சென்னை புதுப்பேட்டைக்குள் நுழைந்த அந்த இளைஞனின் பெயர் தீனதயாளன்.
பிழைப்புக்காக ஆரம்பத்தில் ஏதேதோ வேலைகள் செய்து, நாட்களை நகர்த்திய அந்த இளைஞனின் கால்குலேட்டர் இல்லாத கணக்குப் போடும் திறனால், மாடு பராமரிப்பும், மேய்ப்புமாக இருந்த கைத்தொழில் தொலைந்து போய் மாடு தரகு பிடியும், பாத்திர வியாபாரமும் கைக்கு வந்தது.
வட்டிக்கு விடுதல், சினிமா படங்களை லீசுக்கு எடுத்து விநியோகித்தல் என்று இப்படி அடுத்தடுத்து அந்த இளைஞனின் பாதை அமைந்து விட, சென்னையை நிரந்தரமாக்கிக் கொண்டு பயணத்தைத் தொடர ஆரம்பித்தார்.
தீனதயாளனின் திருமணம், பிள்ளைகள், அவர்களின் கல்வி, அவர்களின் திருமணம் என்று எல்லாமே ஸ்டார் அந்தஸ்தோடு சுபமாக சென்னையிலேயே பிரமுகர்கள் சூழ ஆசீர்வதிக்க, சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் பின்னர், மகன் அமெரிக்காவிலும், மகள் பெங்களூருவிலும் என்று செட்டில் செய்து விட்டார், தீனதயாளன்.
ஓய்வில்லாத ஓட்டம், ஓட்டம் என்றே வாழ்க்கையின் பெரும்பகுதி போனதில் தீனதயாளனின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை கணக்கெடுத்துச் சொல்லவே நிறைய ஆட்கள் தேவைப்படுகிற அளவு செல்வம் குவிந்து வழிந்தது.
[[[பொருள் விளக்கம்: தீனதயாளன் மிகப் பெரிய உழைப்பாளி. அதுவும் ஏழையாக இருந்து தன் கடுமையான உழைப்பால் மிகப் பெரிய பணக்காராக மாறியவர்.
கணிதமேதை ராமானுஜரைவிட மிகப் பெரிய கணிதமேதை. கால்குலேட்டர் இல்லாமலேயே 2 + 4 = 8 என்று ஒரு நொடியில் சொல்லிவிடக் கூடியவர். அப்படிப்பட்ட கணிதமேதையை இந்த சமூகம் பிற்படுத்தப்பட்டவர் ஆக்கியது. அதனால் வாழ வழியில்லாமல் போன அந்தக் கணித மேதையை கடத்தல் மேதையாக்கியது இந்தக் கொடூர சமூகம்.
போலீஸ்காரர்கள் சிலைக் கடத்தித்தான் அவருக்கு பணம் வந்தது என்று சொல்கிறார்கள். இருந்தாலும், அவர் அந்தத் தொழில்களைவிட மற்ற தொழில்களையே அதிகம் செய்தார். இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காகத்தான் அந்தப் பட்டியலை நாங்கள் கொடுத்து இருக்கிறோம்.
எனவே, அந்த உழைப்பைப் பாருங்கள். ஆகா, இப்படி அல்லவா இளைஞர்கள் உழைக்க வேண்டும்.]]]
தன்னுடைய 77-வது வயதில் இப்போது, (2016 -) மீண்டும் தீனதயாளன் ஓட ஆரம்பித்திருக்கிறார்.
[[[பொருள் விளக்கம்: இந்த 77 வயது முதியவரை, உழைப்பாளியை, உலகெங்கும் ஓட வைத்து இருக்கிறது கருணையற்ற இந்த அரசு. கடத்தல்க்கார’ர்’ வீரப்ப’ரை’க்கூட நாங்கள் அவர் இவர் என்று மரியாதையுடன் சொல்வது போல இவரையும் மரியாதையுடன் விளித்திருப்பதை வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.]]]
அவரை விடாமல் விரட்டிக் கொண்டிருக்கிறார் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேல். தீனதயாளன் எப்படி தன்னை படிப்படியாக (?!) வளர்த்துக் கொண்டார், இவ்வளவு செல்வம் குவிந்தது எப்படி என்பது குறித்தெல்லாம் கேள்வி கேட்க எந்த ‘துறையும்’ இல்லாத நிலையில், அதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது.
[[[பொருள் விளக்கம்: கரப்ஷன் தடுப்பதற்காக இந்திய அரசால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட துறைகள், சிலைகடத்தலின் போது சேர்த்து கடத்தப்பட்டதால் அவை எதுவும் இந்தியாவில் இல்லை. அதனால்தான் செல்வக் குவிப்பு குறித்துக் கேள்விகேட்க எந்தத் ‘துறையும்’ இல்லை. இது ஆனந்தவிகடன் எனும் சர்ச் பத்திரிகைக்குத் தெரியும். ஆனந்த விகடன் குழுவினரின் அறிவே அறிவு !
துறை என்பதை “துறை” என கொட்டேஷன் மார்க்குக்குள் போட்டுச் சொல்லி இருப்பதால், ஒரு மிகப் பெரிய அறிவுசீவி குழுவினரால் ஆனந்த விகடன் நடத்தப்படுகிறது “என்பதை” தெரிந்துகொள்வீராக !
நானும் அறிவுசீவிதான். என்பதை உங்களுக்குக் காட்ட என்பதை என்பதை கொட்டேஷனுக்குள் போட்டு “என்பதை” என்று சொல்லி இருக்கிறேன்.]]]
போலீஸ் தரப்பில் விசாரித்தோம்.
“சிலை கடத்தல் வழக்கில் தமிழ் சினிமா படத் தயாரிப்பாளர் வி.சேகர், சிக்கியபின் மீண்டும் ஒரு பெரிய அளவிலான சேசிங் ஏதும் இல்லாமல் இருந்தது. அப்போது சிலை கடத்தல் விவகாரத்தில் பெரிதாகப் பேசப்பட்ட சினிமா நடிகையின் மூலமும் ஒன்றும் கிடைக்க வில்லை.
தீனதயாளன் விவகாரம் அப்படிப்பட்டது அல்ல. ஆனால் சர்வதேச அளவில் சிலை கடத்தல் மற்றும் கொள்ளையில் தேடப்பட்டு வரும் சுபாஷ் சந்திர கபூரின் நெருங்கிய தொழில் கூட்டாளி இந்த தீனதயாளன். முதல் நாளே இவர் வீட்டிலிருந்து 50 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 55 சுவாமி சிலைகளை. பார்சல் போட்டு வைத்திருந்த ஸ்டேஜில் மீட்டிருக்கிறோம்” என்றனர்.
சென்னை, ஆழ்வார்பேட்டை, முர்ரே கேட் சாலையில், ஐந்து கிரவுண்ட் பரப்பளவில் இரண்டடுக்கு மாடிகளுடன் சலவைக் கற்களால் 25 கோடி ரூபாய் பெருமானத்தில் இழைத்து இழைத்து கட்டப் பட்டிருக்கிறது அந்த வீடு. சுற்றிலும் போலீஸ் நிற்க, முந்தைய ஆர்ட் கேலரியின் முகமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது.
ஒரு கலா ரசிகனுக்குரிய வீடு போல தோற்றமளிக்கும் அங்கே தரை தளத்தில், கலைப்பொருட்கள் விற்பனைக்கான, ‘அபர்ணா ஆர்ட் கேலரி ’ இதுநாள் வரையில் தொழில் பாதுகாப்பு மையமாய் தீனதயாளனுக்கு இருந்து வந்துள்ளது.
முன்பக்கமாக இவைகளை காட்சிப்படுத்தி வைத்து விட்டு, பின் பக்கமாக தீனதயாளன் ஏற்றி அனுப்பி வைத்த கோயில் திருட்டுச் சிலைகளும், கடத்தல் சிலைகளும் ஏராளம் என்கின்றனர், விசாரணை தரப்பில்…
[[[பொருள் விளக்கம்: இதெல்லாம் விசாரணைத் தரப்பில் சொல்லப்படுவது. இது உண்மையா என்பது ஆனந்த விகடன் பத்திரிகைக்குத் தெரியாது.]]]
எப்படி ட்ராக் செய்தீர்கள் ?’ என்று போலீஸ் தரப்பில் பேசியதில்,
“ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலைப் பற்றி நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. அவருக்கான (சோர்ஸ்) தொடர்பை பலப்படுத்தி வைத்துக் கொள்வது அவர் வழக்கம். இதனால்தான் சாலையோரக் கூலிகள், குடிசைப் பகுதி மக்கள் இன்னும் சிலர் அவருடைய போன் நம்பரை கேட்டாலே சொல்வார்கள்.
கடந்த திங்கட்கிழமை ஐ.ஜி. சாரின் அலுவலகத்துக்கு ‘அந்த’ தொடர்பு வட்டத்திலிருந்துதான் போன் வந்திருக்க வேண்டும். ‘குறிப்பிட்ட ஏரியாவில் இருந்து நள்ளிரவில் சிலைகள் பார்சல் செய்யப்பட்டு லாரிகளில் கொண்டு போகிறார்கள். யாரும், இதை கண்டு கொள்வதில்லை’ என்பதே போனில் வந்த தகவல்.
இந்த தகவலைத் தொடர்ந்து எங்களுக்கு அலர்ட் போட்டு விட்ட ஐ.ஜி., ‘ இந்த ஆபரேசனில் யார் யார் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அங்கே சிலை கடத்தல் நடப்பதை எப்படி உறுதி செய்வது?’ என்பது போன்றவைகள் குறித்து ஒரு ஸ்பெஷல் கிளாசே எடுத்து விட்டார்.
அதன்படி முதலில் அந்த வீட்டை கண்காணிப்புதான் செய்தோம். அந்த வீட்டில், கருடாழ்வார் சிலையையே பார்சல் போட்டு கடத்தும் வேலையில் மும்முரமாக இருந்த, தீனதயாளனின் மேலாளர் மற்றும் உதவியாளர்கள் ராஜாமணி, குமார், மான்சிங் ஆகியோர்தான் முதலில் சிக்கியவர்கள். சத்தமில்லாமல், அவர்களை எங்கள் கஸ்டடிக்கு கொண்டு வந்து விட்டோம்.
ஒருவர் மேலாளர், மற்ற இருவர் தீனதயாளனுக்கு நம்பிக்கையான நபர்கள் என்று தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்து முடித்த பின்னரே, கோர்ட்டில் ரெய்டுக்கான அனுமதி பெற்று சோதனையில் இறங்கினோம். நான்கு நாட்கள் ஓடி விட்டன.
[[[பொருள் விளக்கம்: அதாவது, தீனதயாளன் தப்பிச் செல்லவும், முடிந்த அளவு சிலைகளை இந்த வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தவும் காவல்த்துறையானது நான்கு நாட்கள் டைம் கொடுத்தது.]]]
இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் அந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்டோம். சுற்றிலும் பளிங்கு சலவைக் கற்கள், ஆனால், குறிப்பிட்ட சில இடங்களைத் தட்டிப் பார்க்கும் போது சத்தம் வேறு மாதிரியாக கேட்கவே, சுவற்றை உடைத்து சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்துதான் அபூர்வமான நம்முடைய நாட்டின் பழங்கால ஓவியங்களும், 34 சிலைகளும் மீட்கப்பட்டன.” என்று விவரித்தனர்.
ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் பேசினோம்.
“சிலை கடத்தலில் 1965-ம் ஆண்டுமுதல் ஈடுபட்டு வரும் தீனதயாளன், ஸ்ரீவில்லிபுத்துார் பக்கத்தில் கோவில் சிலை திருடிய வழக்கில், கைதானவர். அதில் ஜாமீனில் வந்த பின், சென்னையில் இருந்த ஆர்ட் கேலரிகளை மொத்தமாக மூடிவிட்டு, ஆந்திராவுக்கே போய் விட்டார்.
ஆந்திராவிலிருந்து, மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு சிலைகளை கடத்தும் திட்டம் தோல்வியில் முடியவே, அங்கிருந்து கிழக்காசிய நாடுகளில் தஞ்சமாகி பின்னர், மீண்டும் சென்னைக்கு வந்து பழையபடி சிலை கடத்தல் வேலையில் இறங்கியிருக்கிறார். தஞ்சாவூர், அரியலுார், ஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள சோழர் கால சிலைகள் இந்த டீமால் கடத்தப்பட்டுள்ளன. அவைகள் எத்தனை என, கணக்கெடுத்து வருகிறோம்.
தீனதயாளனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகள், பல கோயில்களில் இருந்து திருடப்பட்டவை. மிகவும் பழமையான ஓவியங்களும் கிடைத்துள்ளன. அவைகள் யாவும் நம்முடைய நாட்டின் கலைப் பொக்கிஷங்கள் ஆகும்.
அவைகள் எந்த காலகட்டத்து ஓவியங்கள் என கண்டுபிடிக்க டெல்லியில் உள்ள தொல்லியல் துறைக்கு ஃபேக்ஸ் அனுப்பியுள்ளோம். அவர்கள் திங்கட்கிழமை சென்னை வருகிறார்கள். அவர்களது ஆய்வு முடிவுக்கு பின்னர் இன்னும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம்.
இதுவரையில் 93 சிலைகள் அந்த வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல சிலைகள் புதைத்தும் வைக்கப்பட்டிருந்தன. உலோகச் சிலைகள் மட்டுமல்ல, யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட சிலைகளும் ஏராளம். 2004-ம் ஆண்டு, நெல்லை பழவூர் கோவிலில் நடராஜர் சிலை உள்பட 13 சிலைகளை திருடியதாக கூட்டாளிகள் 8 பேருடன் தீனதயாளன் சிக்கினர். 9 சிலைகள் மீட்கப்பட்டன.நடராஜர் சிலையின் மதிப்பு மட்டுமே ரூ. 16 கோடி. இந்த வழக்கில் தீனதயாளன் கைது ஆகாமல், தலைமறைவாக இருந்தே அப்போது ஜாமீன் பெற்றார். இப்போது அப்படி முடியாது என்று கருதுகிறோம். மேலும், எங்கும் தப்பி விடாதபடி, அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டுவிட்டது ” என்கிறார் பொன்.மாணிக்கவேல்.
[[[பொருள் விளக்கம்: 2004ல் பிடிபட்ட நடராஜர் சிலையின் மதிப்பு மட்டுமே 16 கோடி. அது கோயிலுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டதா என்பது போன்ற தகவல்களை எல்லாம் கேட்பது, ஆனந்த விகடன் வாசகர்களின் அறிவுக்கு அதீதமான விஷயம். எனவே, நாங்கள் அதையெல்லாம் சொல்ல மாட்டோம். 2004ல் தப்பித்த தீனதயாளன் 1965லும் பிடிபட்டு தப்பித்தவர். இப்போதும் அவர் பிடிபடவில்லை.
93 சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், இவை அனைத்தின் மதிப்பும் 50 கோடிகள் மட்டுமே.]]]
“தீனதயாளனை நான் தேடிப் போகப் போவதில்லை. ஆனால், அவரே இங்கு வந்து சரண் அடைவார், எங்களுக்கு அவரை எப்படி சரண் அடைய வைக்க வேண்டுமென்பது தெரியும்” என்று உறுதியாக சொல்கிறார் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்.
பொன்.மாணிக்கவேல் கையில் ஒரு புத்தகம் இப்போது இருக்கிறது. அடிக்கடி அதை பிரித்துப் படித்துப் பார்த்து ‘நோட்ஸ்’ எடுத்து வைத்துக் கொள்கிறார். அது சிலைகள், பழங்கால கலைப் பொக்கிஷங்கள் தொடர்பான ஒரு பெரிய புத்தகம்.
தீனதயாளனின் வீட்டுக்கு அவரே போலீஸ் பாதுகாப்பைப் போட்டு வைத்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் உள்ளே போகும் போது, அவரையும் சோதனை செய்தே உள்ளே அனுப்பி வைக்கிறார்கள் போலீசார்.
[[[பொருள் விளக்கம்: பொதுவாக போலீஸ்க்காரர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்றாலும் பொன். மாணிக்கவேல் மிகவும் நல்லவர். எங்களுக்கு வடா பாவ் வாங்கித் தந்தார். அவர் வெளியில் இருந்து மிகப் பெரிய சிலைகளை ஷர்ட், பேண்ட் பாக்கட்டில் வைத்துக்கொண்டு வந்து தீனதயாளன் வீட்டில் வைத்துவிடவில்லை என்பதற்கு இந்த செக்கிங்கே ஆதாரம்.
மற்றபடி, இன்னும் சில நாட்களில் நீங்களும் இந்தக் கடத்தலை மறந்துவிடுவீர்கள், போலீஸ்காரர்களும் 1965லும், 2004லும் மறந்தபடி இதை மறந்துவிடுவார்கள். ]]]
இதில் எனக்கொரு பிரச்சனை, இந்த சிலை கடத்தல் தொடர்பாக இசுலாமியர்களும், திராவிடவியாதிகளும், முகநூலிலும் நேரிலும் இவ்வாறு கூறுகிறார்கள்,” என்னப்பா, கோவிலுக்குள்ள இருந்த வரைக்கும் சாமி,கடவுள்,தெய்வம்னு சொன்னீங்க, இப்ப என்னடானா சிலைய கடத்திபுட்டான்னு அசிங்கமா சொல்லுறீங்களே, எங்க தெய்வத்த, கடவுள்கள எங்களுக்கு வரமும் அருளும் குடுத்த சாமிய கடதிட்டான்னு ஏன் சொல்லமாட்றீங்க.” இப்படியாக பகடி செய்கிறார்கள் இதற்க்கு என்ன பதில் கூறி அவர்களின் வாயை அடைக்க செய்வது என்று தயவு செய்து கூறவும். அக்கறையுடன் தான் கேட்க்கிறேன்.
கல் உ ளிப்பட்டு, உருப்பெற்று சிலையாகிறது. அது கோவிலில் ப்ரதிஷ்ட்டை செய்யப்படும்போது தெய்வம் என்கிறோம். பதவியில் இருக்கும் வரை ஜெயலலிதா முதல்வர், பதவியில் இல்லாவிட்டால் கட்சியின் பொ.செயலாளர் .அமானுல்லா MBBS படித்தால் டாக்டர் , Eng படித்தால் இன்ஜினியர், குண்டு வைத்தால் தீவிரவாதி அவ்வளவுதான்.
அன்புள்ள தாயுமானவன்,
இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் உருவத்தின் மூலம் செய்யப்படும் வழிபாடுகள் பற்றிய அடிப்படை உண்மைகள் தெரியாதவர்கள். அவர்களை சுவாமி சிவானந்தா எழுதிய உருவவழிபாடு பற்றிய சிறு புத்தகத்தை வாங்கி படிக்க சொல்லுங்கள். நீங்கள் அந்த புத்தகத்தை ஏற்கனவே படித்திருந்தால், நீங்களே நல்ல விளக்கம் கொடுக்கமுடியும். சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய ஒரு புத்தகம் சுமார் 48 பக்கங்கள் உள்ளது. அந்த நூலில் உருவவழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி விளக்கம் தெளிவாக உள்ளது.
கர்ப்பக்கிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட சிலைகளே விக்கிரகம் எனப்படும். கர்ப்பகிரகத்தில் உற்சவ மூர்த்திகளை பிரதிஷ்டை செய்யமாட்டார்கள். கருவறையில் கருங்கல் விக்கிரகங்கள் மருந்து சாத்தி, பீடத்தில் நிலை நிறுத்தப்படும். அந்த விக்கிரகங்கள் கோயிலின் குடமுழுக்கு செய்யப்படும்போது தான் இந்த சிலைகளை விக்கிரகமாக மாற்றும் சடங்கு மந்திர உச்சாடனத்துடன் உருவேற்றப்படும்.
உருவவழிபாட்டின் அடிப்படைகளை அறிய சித்தயோகி சிவதாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை படித்தும் பல விவரங்களை அறியலாம். இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் உங்களிடம் கேள்வி கேட்கிறார்கள் அவர்களுக்கு உங்களால் பதில்தர இயலவில்லை என்றால், தாங்கள் இந்துசமயம் பற்றி இன்னமும் ஏராளம் புரிந்துகொள்ளவேண்டும் என்று கருத இடம் இருக்கிறது. உருவவழிபாட்டின் அடிப்படைகள் பற்றி , இதே தமிழ் இந்து தளத்தில் ஏராளம் விளக்கமான கட்டுரைகள் வந்துள்ளன. அவற்றை படித்தாலே விளங்கும். மேலும் கருவறை பீடத்தில் உள்ளவரை தான் அவை விக்கிரகம் என்று வழிபடும் தகுதியை பெறும் . கருவறையை விட்டு அகற்றப்பட்டுவிட்டால், அவை விக்கிரகம் அல்ல. வெறும் சிலை ஆகிவிடும். முழுவிவரம் அறிய ஆகம சாஸ்திரங்களை படியுங்கள்.
தாயுமானவரின் மனைவிக்கு அவர் கணவர். அவரது குழந்தைகளுக்கு அவர் தந்தை. அது எப்படி ஒரே ஆள் கணவராகவும், தந்தையாகவும் இருக்கிறாரோ அதேபோலத்தான் ஒரு சிலை கர்ப்பக்கிரகத்தை விட்டு வெளியே இருந்தால், அது வெறும் சிலை. கர்ப்பக்கிரகத்தில் உள்ள பீடத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்தால் மட்டுமே அது விக்கிரகம் ஆகும்.
மேலும் முழு விவரம் அறிய விரும்பும் பிற மத நண்பர்களுக்கு , சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் ஆர்ஷவித்யா குருகுலம் வெளியிட்டுள்ள இந்து மதம் பற்றிய பாட நூல்களை வாங்கி படிக்க சொல்லுங்கள். படித்து புரிந்து கொள்ள தயாராக இல்லை என்றால் வாயை மூடிக்கொண்டு போக சொல்லுங்கள்.
உங்களிடம் அப்படி கேள்வி கேட்ட அன்பர்களின் தொலைபேசி, ஈ மெயில் முகவரிகளை கொடுத்தால் அவர்களுக்கு தேவையான பதிலை அனுப்பிவைக்கிறோம்.
தாயுமானவன் அவர்களே ! கிறிஸ்தவர்களும் , இசுலாமியர்களும் தங்கள் மதத்தை பரப்புவதற்காக எத்தனை லட்சம் மனிதர்களை கூட கொல்ல தயங்காதவர்கள் ! கோவிலில் உள்ள சிலைக்கு தெய்வ சக்தியை மந்த்ரங்கள் மூலம் வழிபடு செய்கிறோம் ! பக்திமானுக்கு அது தெய்வமாக தெரியும் ! பரதேசி இறக்குமதி மத காரனுக்கு அது காசு தரும் சிலையாக தெரியும் ! உங்கள் வயதுக்கு வந்த மகளை நீங்கள் எங்கள் குலம் தழைக்க வந்த கொழுந்து என்பீர்கள் ! சாராயம் குடித்தவனுக்கு அது “ஆயிட்டமாகத்தான் ” தெரியும் . அதனாலேயே உங்கள் பெண் குழந்தை ” அயிட்டமாகி” விடுமா ? இதனால் தான் இவர்களை நமது கோவிலில் அனுமதிப்பது இல்லை ! மந்திரா உச்சாடனம் செய்து வழிபடும் சிலைகள் தெய்வங்களே !
நாம் எங்கும் நிறைந்த கடவுளை சிலையில் வழிபடுகிறோம். ஆனால் அந்த சிலையில் ஒரு பின்னம் வந்தால், அதை மாற்றிவிட்டு வேறு சிலை வைக்கிறோம். ஏனென்றால் நமக்கு அந்த சிலை கடவுள் இல்லை, ஒரு உருவகம் என்று நன்கு தெரியும். அதனால்தான் ஆயிரம் கோவில்களை இடித்தாலும், எங்கள் இந்து மதத்தை அழிக்க முடியவில்லை.
சித்தர்களையும் , சித்த மருத்துவத்தையும் பற்றிய இழிவான குறிப்புகளைத் தவிர்க்க வேண்டும் .