கருப்புப் பணமும் கள்ள பத்திரிகைகளும்

modi-demonetization-war-against-black-moneyநான் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்திருக்கிறேன். சென்ற செவ்வாய் இரவு மோடி 500/1000 செல்லாது என்று சொன்னதில் இருந்து நேற்று இரவு வரை தொடர்ந்து பல்வேறு ஊர்களுக்குப்பயணித்துக் கொண்டேயிருந்தேன். அன்று காலை பயணச் செலவுகளுக்காக நான் எடுத்த 20000 ரூபாய்களுமே 1000/500 நோட்டுக்களாகவே இருந்தன. அந்தப் பணத்துடன் நான் ஒரு வாரம்வெளியே தொடர்ந்து சுற்றியுள்ளேன். பெங்களூர் மதுரை போன்ற பெரு நகரங்கள் முதல் காரவிளை, அங்க மங்கலம், நாலு மாவடி, உப்பத்தூர் போன்ற குக்கிராமங்கள் வரை பயணித்துள்ளேன். இந்த கரன்ஸி மாற்றம் தொடர்பான எனது அவதானிப்புகள் கீழே:

பழைய பணம் 20,000 வைத்துக் கொண்டே என்னால் எனது பயணச் செலவுகளை பெரும்பாலும் எந்தவிதமான சங்கடங்களும் இன்றிச் சமாளிக்க முடிந்தது.

டோல் கேட்டுகளில் புதன் மாலை வரை சிரமங்கள் இருந்தன. அதையும் மத்திய அரசின் கவனத்திற்குக் கொணர்ந்த பின்னர் இன்று வரை டோல் கட்டணத்தையே நீக்கி விட்டார்கள்.

பெட்ரோல் பங்குகளில் பழைய கரன்ஸிகளை ஏற்றுக் கொள்கிறார்கள். சில இடங்களில் சில்லறைகளையும் தருகிறார்கள்.

சாப்பிடவில்லை என்று சொல்லி விட்டால் எந்த கரன்ஸியையும் சென்ற இடங்களில் எல்லாம் ஹோட்டல்களில் வாங்கிக் கொண்டார்கள்.

நெல்லையில் ஒரு பெரிய பாத்திரக் கடையில் என் டெபிட் கார்ட் இணைப்பு வேலை செய்யாததினால் 6000 ரூபாய்கள் என்னிடம் இருந்த பழைய பணத்தையே பெற்றுக் கொண்டார்கள்.

டாக்ஸி டிரைவர்கள் என்னிடம் இருந்த பழைய பணத்தை ஏற்றுக் கொண்டார்கள். தாங்கள் வங்கியில் மாற்றிக் கொள்வதாகச் சொல்லி விட்டார்கள். என்னிடம் இருந்த பழைய பணம் அனைத்தும் தீர்ந்த பொழுதும் கூட, கடைசியாக என்னை அழைத்து வந்த டாக்ஸி டிரைவர், “பரவாயில்லை என் வங்கிக் கணக்கில் உங்கள் பணத்தை செலுத்தி விடுங்கள்” என்று தன் வங்கிக்கணக்கை என்னிடம் தந்து விட்டு, என் செலவுக்காக சில நூறு ரூபாய் நோட்டுக்களையும் தந்து விட்டுச் சென்றார்.

மக்கள் நிலமை அறிந்து ஒருவருக்கொருவர் அனுசரணையாகவும் விட்டுக் கொடுத்தும் சிறு கடன்கள் கொடுத்தும் இதைக் கடந்து செல்கிறார்கள்.

பல இடங்களிலும் என்னிடம் பழைய பணம் தான் உள்ளது என்று சொன்னாலும் பரவாயில்லை நாங்கள் வங்கிகளில் செலுத்திக் கொள்கிறோம் என்று பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்கள்.

நான் பழைய பணம் வைத்திருந்த படியால் எந்த ஊரிலும் பட்டினி கிடக்கவில்லை. எந்தப் பொருளையும் வாங்காமல் வரவில்லை. எங்கும் நான் அமெரிக்காவில் இருந்து வருகிறேன் என்று சொல்லிச் சலுகை கேட்கவில்லை. ஒரு உள்ளூர்க் காரனாகவே, சிக்கலான தருணங்களில் மக்களும் வியாபாரிகளும் எப்படி சக மனிதர்களை அணுகுகிறார்கள் என்று அவதானித்துக்கொண்டே வந்தேன்.

இடையில் எங்கும் வங்கிகளுக்கோ ஏ டி எம் களுக்கோ செல்லவில்லை. பெங்களூரில் ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டிலும், ஒரு கடையிலும், வன திருப்பதி சரவணபவனில் மட்டுமே என் டெபிட்கார்டுகளை பயன் படுத்தினேன். ஏ டி எம் மில் பணம் எடுக்கவில்லை.

பயணம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களிடம் பேசிக் கொண்டேயிருந்தேன். சிலர் முதல் வாரத்திற்குப் பதிலாக இரண்டாவது மூன்றாவது வாரத்தில் இதைச் செய்திருக்கலாம் என்று சொன்னார்களே தவிர எவரும் இதை கண்டிக்கவோ மோடியை எதிர்க்கவோ இல்லை. அனைவரும் மிகவும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனுமேயே இந்தச் சிரமங்களை எதிர் கொண்டார்கள். காத்திருப்பதை பெரிய விஷயமாக எவரும் கருதிக் கொள்ளவில்லை. இந்தியாவில் வரிசையில் காத்திருப்பது என்பது இந்தியர்களின் ரத்தத்திலேயே கலந்து விட்ட ஒன்று. இது புதிதும்அல்ல, இறுதியும் அல்ல. இந்தக் காத்திருத்தலை ஒரு தேச தேச சேவையாகவே பலரும் எடுத்துக் கொண்டார்கள். இதை ஒரு மாபெரும் துணிவான புரட்சிகரமான நடவடிக்கை என்றே ஏகோபித்துப் பாராட்டினார்கள்.

black_money_demonetization

எவரிடமும் நான் ஒரு மோடி ஆதரவாளன் என்று அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை. தேவையான பணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விஷயத்தில் இன்னும் கொஞ்சம் தயார்நிலையில் இருந்து கொண்டு அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம் என்ற அளவில் மட்டுமே மக்கள் எதிர் கருத்து கொண்டிருந்தார்கள்.

இன்று (14 நவம்பர்) என்னிடம் இருந்த 20,000 பழைய ரூபாய்களும் தீர்ந்து போய் விட்டன. காலையில் சென்னைக்குச் செல்ல விமானத்துக்கும் சென்னையில் தங்க ஹோட்டலுக்கும் டெபிட்கார்டு மூலமாகவே ஏற்பாடுகள் செய்து கொள்ள முடிந்தது. கொஞ்சம் முயற்சித்தால் இந்த வாரத்தையும் நான் கையில் கரன்ஸிகள் இல்லாமலேயே ஏ டி எம், வங்கி பக்கம் போகாமலேயேசமாளித்து விடுவேன் என்று நம்புகிறேன்.

நிச்சயமாகப் பல குறு வணிகர்களும், அன்றாடம் கடனுக்குப் பொருள் வாங்கி வணிகம் செய்யும் எளிமையான வணிகர்களும் பாதிக்கப் பட்டிருப்பார்கள். ஒரு சிலர் அவசரத் தேவைகளுக்காகத் தவித்திருப்பார்கள். இருந்தாலும் இது அமெரிக்கா அல்ல. மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியப் பட்டவர்கள் அல்லர். கூடுமானவரை பரஸ்பர புரிதலுடன் அனுசரித்துச்செல்கிறார்கள். சின்னச் சின்னக் கடன் கொடுத்து வாங்கி நிலமையைச் சமாளித்துக் கொள்கிறார்கள். இந்த கட்டுப்பாடுகளினால் பெரும்பாலும் எவரும் எவரையும் பெரும் கஷ்டங்களுக்குஉள்ளாக அனுமதிப்பதில்லை. பரஸ்பர உதவிகளின் மூலமாகக் கடந்து செல்கிறார்கள்.

அதே சமயத்தில் மக்கள் தேவையில்லாத அச்சத்திற்கும் தேவையில்லாத பதட்டத்திற்கும் உள்ளாகி, தேவையில்லாமல் வங்கிகளிலும் ஏ டி எம் களிலும் போய் நின்று வங்கி ஊழியர்களுக்குஅநாவசியமான அழுத்தங்களைத் தருகிறார்கள்.

ஒரு விபத்து நடக்கும் பொழுதோ ஒரு இயற்கை இடர் ஏற்படும் பொழுதோ இது போலவே கூட்டம் கூட்டமாகச் சென்று வேடிக்கை பார்க்கும் இயல்பான தமிழர்களின் குணம் இந்தத்தருணத்திலும் வெளிப்படுகிறது. தங்களுக்குப் பெரிய பணத் தேவையில்லாவிட்டாலும் கூட, தேவையில்லாத அச்சத்திலும் வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் கலக்கும் உணர்விலுமாககூட்டம் கூட்டமாக காத்திருக்கிறார்கள். இதில் அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் பாதிப் பேர்கள் மட்டுமே இருக்கும். இதை மக்கள் தவிர்த்திருக்கலாம்.

மக்களின் இந்தப் பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்குப் பெரும் காரணம் பெரும்பாலும் கருப்புப் பணத்தில் நடத்தப்படும் மீடியாக்களே. லஞ்ச லாவண்யத்தில் திளைத்துக் கருப்புப்பணத்தை அடுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள் பலர் இந்த மீடியா அதிபர்களாகவும் இருக்கிறார்கள். இந்தப் பத்திரிகைகளும் டி விக்களும் மக்களிடம் தேவையற்ற எதிர்மறை செய்திகளைப்  பரப்பி அச்சம் ஏற்படுத்தி அவர்களைக் கலவரப் படுத்திக் கூட்டம் கூட்டமாக வங்கிகளை முற்றுகையிட வைக்கிறார்கள்.

சில அரசியல் கட்சிகள் சார்ந்த தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும், இதில் மிக மோசமாகப் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்கின்றன. மிகவும் தரம் கெட்ட விதத்தில் இந்தமீடியாக்கள் செயல் படுகின்றன. இவர்கள் வைக்கும் ஒப்பாரிகளில், பரப்பும் பொய்ச் செய்திகளில், பரப்பும் அவதூறுகளில் இருந்தே இவர்கள் பெரும் அளவில் பாதிக்கப் பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால் இவர்களின் தீய நோக்கம் புரியாத மக்கள் இவர்கள் பரப்பும் உள்நோக்கம் கொண்ட அவதூற்றுச் செய்திகளினால் மிகவும் கலவரமடைந்து வங்கிகளுக்குப் படையெடுக்கிறார்கள்.

சில பத்திரிகைகள் மட்டுமே மிகுந்த பொறுப்புணர்வுடனும் தேசப் பற்றுடனும் நடந்து கொள்கின்றன. அந்த மாதிரியான பத்திரிகைகளைப் பாராட்ட வேண்டியது நமது கடமை.

நன்றி: தினமணி
நன்றி: தினமணி

இந்தக் கரன்ஸி மாற்றம் செயல் படுத்துவதில் அரசாங்கத்துக்கும் வங்கிகளுக்கும் பல சிரமங்கள் உள்ளன. அதில் நாமும் பங்கேற்றுக் கொண்டு இந்தத் தருணத்தில் தேசத்தின் நலனைக் கருதி கடந்து செல்ல வேண்டும். நம் பாதுகாப்புக்காக தேச எல்லையில் நம் ராணுவ வீரர்கள் அல்லும் பகலும் அயராது காத்து நிற்கின்றார்கள். போலீஸ்காரர்கள் நாள் முழுவதும் கொடும் வெயிலில் காவல் நிற்கிறார்கள். இன்னும் பல லட்சம் தனியார், அரசு ஊழியர்கள் நின்று கொண்டும் நடந்து கொண்டும் வரிசைகளில் பல மணி நேரங்கள் காத்து நின்று நமக்காகப் பணி செய்கிறார்கள்.தேசத்தின் நலனுக்காக நாமும் சில மணி நேரங்கள் வரிசையில் நிற்பதை பெரிது படுத்தக் கூடாது. தேசத்திற்கு நம்மால் இயன்ற ஒரு சிறு சேவையாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தச் சிரமங்கள் தற்காலிகமானவை அவற்றை நாம் பல்வேறு விதங்களில் கடந்து செல்லலாம். சிறு கடன்கள், டெபிட் கார்ட், கிரிடிட் கார்ட் பயன்படுத்துதல். அத்தியாவசிய தேவைகளுக்குமட்டும் பணம் செலவழித்தல், செலவுகளைத் தள்ளி போடுதல் போன்ற நடவடிக்கைகள் மூலமாக எளிதாக இதைக் கடந்து செல்லலாம். ஓரிரு வாரங்களில் நிலமை சுமுகமாக மாறும்.

இந்த நடவடிக்கையைத் துணிவாக எடுத்துள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு ஆதரவளித்துப் பாராட்ட வேண்டியது நமது கடமையாகும். மோடி இந்தியாவுக்குக் கிடைத்துள்ள ஒரு அரியபொக்கிஷம். வாராது வந்த மாமணி. ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

இந்த மாபெரும் பணியைக் கூடுமான வரையிலும் மக்களுக்கு இடர்பாடின்றி செயல் படுத்த உதவிக் கொண்டிருக்கும் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும், காவலர்களுக்கும், அரசுப் பணியினருக்கும் நமது பாராட்டுக்கள்.

இக்கட்டான தருணங்களில் இந்தியா இணைந்து செயல் படும் என்பதை விளக்கிய இன்னொரு தருணம் இந்தக் கள்ளப் பண, கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை.

வாழ்க மோடி! வெல்க அவர் பணி!

(ச.திருமலை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய பதிவு)

19 Replies to “கருப்புப் பணமும் கள்ள பத்திரிகைகளும்”

  1. மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்ட பதிவு. ஒவ்வொரு இந்தியனும் தோளோடு தோள் சேர்ந்து பிரதம மந்திருக்கு ஆதரவாக செயல்படவேண்டும். மற்றும் கள்ளப்பேர்வழிகளின் விஷபிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும். இந்துத்தொண்டு நிறுவனங்களும், ஆன்மீக மடங்களும் தம்மாலான உதவியை மிக நீண்ட வரிசையில் நிற்கும் மக்களுக்குச் செய்யவேண்டும். இதை ஒரு வாய்ப்பாகவே எடுத்து அவர்கள் பங்களிக்கவேண்டும். இந்நேரம்வரையில் நம்மவர்களின் எத்தகைய அனுசரணையான பங்களிப்பினையையும் செய்தியின் வாயிலாக அறிந்துக்கொள்ளமுடியாமை ஒரு துரதிஷ்டமே.

    //* மோடி இந்தியாவுக்குக் கிடைத்துள்ள ஒரு அரியபொக்கிஷம். வாராது வந்த மாமணி. ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ? *//

    —-லட்சத்திலொரு வார்த்தை. மாணிக்கத்தைத் தவறவிட்டால் மற்றுமொரு வாய்ப்பு எக்காலத்திலும் கிட்டாது.

  2. சரியான அணுகுமுறை- நல்ல கருத்துக்கள்.
    இந்த மாதிரி விஷயங்களில் திடீர்/அதிரடி நடவடிக்கைதான் பயன் தரும். தற்காலிக சிரமங்களைத் தாங்கிக்கொள்வதுதான் நல்ல குடிமகனுக்குப் பெருமை.
    இல்லாத விஷயங்களை எழுதி, இருப்பதைப் பெரிதுபடுத்தியே பணம் சம்பாதிக்கும் பத்திரிகைகள், கவர்ச்சியைக் காட்டி ஓடும் மீடியாக்கள் ஓலமிடுகின்றன. எதிர்க்கட்சிகள் கூச்சலிடுகின்றன. இதுவே “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பதைக் காட்டவில்லையா!
    சாதரண நாட்களிலேயே ஏ.டி.எம். பெட்ரோல் பங்கு, டோல் கவுன்டர், முதலிய இடங்களில் க்யூ இருக்கிறது.மின்சார பில் கட்ட க்யூ இருக்கிறது. ஏன், சினிமா டிக்கெட்டிற்கும் ரேஷனுக்கும் க்யூவில் நிற்கவில்லையா? நாட்டுக்கு நல்லது என்றால் சிறிய, தார்காலிக சங்கடங்களைக்கூடத் தாங்கிக் கொள்ள இயலாத/ விரும்பாத நோஞ்சான்/கயவர்களாகிவிட்டோமா? கொடிபிடித்த குமரன் இருந்த நாட்டில் இந்த நிலையா!கேவலமாக இல்லை?

    மோடி அரசினர் ஒரு விஷயத்தைச் சரியாக விளக்கவில்லை. இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம் கள்ளப்பணம் மட்டும் அல்ல- போலிப் பணமும் தான்.[Fake currency]கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இது 100% அதிகரித்திருக்கிறது. இந்தப்பணம் முழுவதும் தீவிரவாதிகளுக்குப் போகிறது. மோடியின் அதிரடி நடவடிக்கையினால் இது உடனே நிறுத்தப்பட்டது. கருப்புப் பணம் ஒழியுமோ, ஒழியாதோ தெரியாது. ஆனால் தீவிரவாதிகளுக்கு விழுந்த இந்த அடியே நமக்குப் பெரிய நன்மையாகும்.

    கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நமது பொருளாதார நிலையைக் கவனித்துவந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்: கருப்புப் பணத்திற்கு முக்கிய காரணம் அரசியல் ஊழல். அதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் நடத்திய பர்மிட்-லைசென்ஸ்- கோட்டா சர்க்கார்.இந்திரா கந்தி “ஊழல் உலகம் தழுவிய சமாசாரம்” (universal phenomenon)என்று சொல்லி அதை நியாயப்படுத்தி நடத்திக்காட்டினார். தமிழ் நாட்டிலோ கருணாநிதி ஊழலுக்கே புதிய இலக்கணம் வகுத்தார் என சர்க்காரியா கமிஷன் கூறியது. இத்தகைய நாயக-நாயகிகள் நிறைந்த நம் அரசியலை விட்டு ஊழல் நீங்குமா? கருப்புப் பணம் ஒழியுமா?
    என்ன இருந்தாலும் எடுத்த துணிவான நடவடிக்கைக்கு நேர்மையான பொதுவாழ்வில் அக்கறை கொண்ட அனைவரும் ஆதரவு தரவேண்டியது அவசியம். அது நமது கடமை.

  3. திருமலை அவர்களுக்கு ஒரு சபாஷ்!.நாட்டு நிலைமைகளை தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளார்.சில ஊடகப் பேடிகளின் வெற்று அவலக்குரல்களையும்,கூலிக்கு மாரடிக்கும் செயல்களையும் கடந்த சில நாட்களாகவே பார்த்துவருகிறோம்.பிரதமர் மோதி கர்மசிரத்தையாக கள்ளப்பணத்தையும்,கருப்பு பணத்தையும் ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கும் பொழுது,அதை பாராட்ட மனமில்லை என்றாலும் அதை தூற்றாமலாவது இருக்கலாம்.கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேல் ஆட்சியில் இருந்து ஒரு துரும்பையும் கிள்ளிப் போட வக்கில்லாதவர்கள்,போலி விளம்பரத்திற்காக தன் வாழ்நாளிலேயே முதன் முறையாக ATM முன் ‘வரிசையில்’ நிற்பதும்,நிதி அமைச்சராக இருந்து ஒரு ‘ஆணியையும்’ பிடுங்க முடியாத ஒருவர் இதனால் ஒரு பயனும் இல்லை என்று ‘மாய்மாலக்கண்ணீர்’வடிப்பதும்,
    பாட்டாளிக்களுக்காகவே கட்சி நடத்துவதாக ‘பீத்தி’கொள்ளும்’ சில கட்சிகள் கருப்புப்பண முதலைகளுக்கும்,கள்ளநோட்டுக்கள் அடித்து புழக்கத்தில் விட்டு தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கு உறுதுணையாவதும்,சாமானிய மக்களுக்கு தெரியாமல் இல்லை.தகுந்த நேரம் வரும்பொழுது தக்க பாடம் புகட்டுவார்கள்.

  4. //மக்கள் நிலமை அறிந்து ஒருவருக்கொருவர் அனுசரணையாகவும் விட்டுக் கொடுத்தும் சிறு கடன்கள் கொடுத்தும் இதைக் கடந்து செல்கிறார்கள்.

    பல இடங்களிலும் என்னிடம் பழைய பணம் தான் உள்ளது என்று சொன்னாலும் பரவாயில்லை நாங்கள் வங்கிகளில் செலுத்திக் கொள்கிறோம் என்று பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்கள்.//

    இப்படிப்பட்ட மாமனிதர்கள் தமிழ்நாட்டிலிருக்கிறார்கள் என்றதும் மகிழ்ச்சி. அவரகளது சிலர் படங்களைப் போட்டிருக்கலாம். தமிழ் நாட்டில் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அறியும் போது பரவசமாக இருக்கிறது.

  5. அய்யா திருமலை அவர்கள் தன்னுடைய கனவில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி விட்டார்கள். யாரும் இதுவெல்லாம் உண்மையாக இருக்குமோ என்று எந்த கேள்வியும் கேட்க பிடாது, மீறி கேட்டால் அவர்கள் தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவின் நெற்றிக்கண் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அப்புறம் என்ன, அவர்களால் முடிந்த ஒரு சின்ன சனாதன காரா சேவை .. கருத்தை எடிட்டு இல்லை இல்லை மொத்தமாக வெளியிடாமல் காலியே செய்து விடுவார்கள் தான்.ஆனால் கட்டுரையில் வரும் கதா பாத்திரங்கள் அனைத்தையும் திருமலை அவர்கள் பார்த்து பார்த்து நன்றாகவே செதுக்கி இருக்கிறார். இந்த விஷயத்தில் அன்னாரின் படைப்பூக்கத்தை வெகுவாக பாராட்டியே ஆக வேண்டும்.

    அதாகப்பட்டது , அன்னார் பூலோக சொர்க்கம், இந்திய நடுத்தரவர்கத்தின் புண்ணிய க்ஷேத்திரமான அமெரிக்கபுரியில் இருந்து வந்து இறங்கியதில் இருந்து கதை தொடங்குகிறது. கொல்பவனும் நானே கொல்லப் படுபவனும் நானே என்று பகவத் கீதையில் பரந்தாமன் அனைத்துமாக விளங்குவதை போல், நமது ஐயா திருமலை அவர்களும் மேற்படி கட்டுரையில் திருமலையாகவும் வருகிறார், பெட்ரோல் பங்க்கு ஊழியராகவும் வருகிறார், பாத்திர கடைக்கார முதலாளியாகவும் வந்து அருள் பாலிக்கிறார், ஓட்டல் ஊழியராகவும் வந்து அன்னம் பாலித்து பசி தவிர்க்கிறார். பின்னே, கிருஷ்ண பரமாத்வாவின் வாரிசுகளுக்கு இதை கற்று தரவா வேண்டும்.

    இதை விட மக்கள் டென்ஷன் ஆகி வங்கி ஊழியர்களை வறுத்து எடுக்கின்றனர் என்று வேறு அங்காலாய்கின்றார். இந்த அங்கலாய்ப்பில் மோடி மக்கள் மேல் திணித்திற்கும் ஹைப்பர் டென்ஷனை அப்படியே முழு பூசணிக்காயை சுண்டைக்காயில் மறைக்கும் யுக்தியாக கையாள்கிறார். மொத்தத்தில் இந்த கருப்பு பணத்திற்கு எதிராக மோடி மக்கள் மீது… மன்னிக்கவும் கருப்பு பண முதலைகள் மீது தொடுத்து இருக்கும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு நமது தமிழ்ஹிந்து சனாதனிகள் செய்யும் வேலையை தெளிவாக ஒரே வார்த்தையில் கூறவேண்டுமானால். மரத்தில் மறைத்தது விட்டது மாமத யானை.

  6. பிரதமர் மோடி செய்த உருப்படியான ஒரே காரியம் இதுதான். பாராட்டுக்கள். வாராது வந்த மாமணி தான். பிஜேபி ஆட்சி மேல் கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது. நன்றி ராஜன்.

  7. Panchayath office and TNEB counters rejected Rs500, 1000 notes.Petrol bung staffs accepted the above notes and requested to get petrol for the entire 500 or1000 note.Even in the vigilance awareness week state government staffs were accepting bribes since they were habituated for long time.Today one TTE switched off the light after checking my season ticket in 16525 Train after Marthandam (Kuzhithurai)I told him that I was also maintaining the same habit but kept the light on due to frequent tunnels in between.While we were suffered several situations like election time, why can’t we wait for some days

  8. திருமலை அவர்களின் பதிவு 100% உண்மை.
    நகரவாசிகளுக்கு சில சிரமங்கள் கொஞ்சம் இருக்கலாம்.சிறு நகரம்,கிராமங்களில் நிலமை சீராகவே உள்ளது.நன்மைக்கு சில சிரமங்களை அனுபவிப்பது இயல்பே.வலியில்லாத வாழ்வேது?

  9. The intention to unearth black money is good, but the planning & execution are poor. Initially, the govt announced 2 days holidays for ATMs in order to distribute 100 rupee notes. But the situation is still the same.

    A lot of people in the unorganized sector were greatly affected since they did not receive their wages while some got only 50%.

    Worse, the Govt has now announced that they will place an indelible ink on the finger when you deposit money. This is an assault on the self respect of the people.

    On the black money, the IT dept had said that even after conducting raids, the hoarding in terms of cash was only 6%, the rest are in the form of assets.

    At the end of the day, it is the poor & the middle class who continue to suffer, while the rich get away.

  10. Last month when JIO sim card was launched I saw a long queu before Reliance Digital shop across many localities in Chennai to get the new offer. Now the very same people fume and fret for such a situation. Personal pain but national gain indeed.

  11. The objective is to eliminate black money. That should be done without harming the innocent while money holders who earned their income by their hard and sincere labour. Has it been done? Have the black money holders and circulators stopped or been hempered by this act? There have many expert opinions around now in many fora, which says that the act wont make a big dent anywhere. Today swarajyamag article says political funding (read black money circulation) will continue as before.

    So, personalised opinion – Modi only is our God – can’t help here. However, it is possible to remain positive in one aspect namely, the counterfeit currency from Pakistan to feed terrorism in Indian soil and with piping black money for such nefarious purpose, will somewhat become successful.

    It is all money economics. Dont write personalised essays. We need experts to write here.

  12. அனைத்து வங்கி ஊழியர்களுக்கும், காவலர்களுக்கும், அரசுப் பணியினருக்கும் நமதுபாராட்டுக்கள் நகரவாசிகளுக்கு சில சிரமங்கள் கொஞ்சம் இருக்கலாம்.சிறு நகரம்,கிராமங்களில் நிலமை சீராகவே உள்ளது.நன்மைக்கு சில சிரமங்களை அனுபவிப்பது இயல்பே.வலியில்லாத வாழ்வேது

  13. thiru thayumaanvan avargalea maraiththiruntha maraththai modi vetti veelthivittar
    indrau mathayaanai veliyil therigirathu.

  14. Hello Editor, first of all leave this anti national word, its an govt responsibility to make sure all necessary arrangement is made before implementing any rule or law, govt failed in this issue first off all, secondly your blog name is some thing related to Tamil culture till now why didnt write about jallikattu issue, whole Tamil Nadu is protesting for this to happen so called NAMO govt is not having any word about this, i hope very soon you people ill start to say those are speaking about jallikattu also termed as so called Anti nationals, come on man.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *