<< தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>
தொடர்ச்சி..
போதை மருந்திற்கு அடிமையான அக்பரின் தகப்பன் ஹுமாயூன் ஆட்சிக்காலம் மிக மோசமான ஒன்றாக இருந்தது. வரலாற்றாசிரியர் ஷெலட் அதனைப் பற்றி இவ்வாறு விவரிக்கிறார்.
“ஆக்ராவுக்குத் திரும்பிய ஹுமாயூன் ஓப்பியம் என்கிற போதை மருந்தை அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்தார். அரசு நிர்வாக ஸ்தம்பித்தது. ரூமிகானின் தலைமையில் சுனார் கோட்டையில் நுழைந்த ஹுமாயுனின் முகலாயப்படைகள் அங்கிருந்தவர்களைக் கொடூரமாகக் கொன்றார்கள். ஏறக்குறைய முன்னூறுக்கும் மேற்பட்ட ஆப்கானிய பீரங்கிப் படையினரின் கைகள் துண்டிக்கப்பட்டன. ஹுமாயுன் ரூபிகானை படைத்தலைவராக நியமிக்க அதனை எதிர்த்த பிற படைத்தலைவர்கள் ரூமிகானுக்கு விஷம் வைத்துக் கொன்றார்கள்.
கவுர் என்னுமிடத்தில் அந்தப்புரத்தில் நுழைந்த ஹுமாயுன் அதை விட்டு வெளியே வராமல் குடியும், கூத்துமாகக் காலத்தைக் கழித்தார். ஹுமாயுனினி நிர்வாகிகள் (அமீர்கள்) அவரின் இந்த நடத்தையினால் மிக அவநம்பிக்கையடைந்தார்கள். 1538-ஆம் வருட காலத்தில் ஹுமயுனின் நடத்தை மிக மோசமான காலத்தை எட்டியது. இருந்தாலும் அவரது இரு சகோதரர்களான ஹிண்டாலும், கம்ரனும் தனக்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டுவதனை அறிந்த ஹுமாயுன் வங்காளத்திலிருந்து ஆக்ரா திரும்பினார்”
இதற்கிடையில் முப்பத்து மூன்று வயதான ஹுமாயுனுக்கு 14 வயதான ஹமீதா பானுவின் மீது மோகம் பிறந்து அவளை கட்டாயத் திருமணம் செய்து கொண்டார். இன்றைய காலகட்டத்தில் ஒரு பதினாலு வயதுப் பெண்ணுடன் உடலுறவு கொள்வது குழந்தைகளை வன்புணர்வு செய்வதற்கு ஒப்பானது. ஹுமாயுனுக்கு அதனைப் பற்றியெல்லாம் கவலையில்லை. இந்தியாவில் தோற்கடிகடிக்கப்பட்டு நாடோட்யாகத் திரிந்த ஹுமாயுன் சிந்துப் பகுதியில் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்தார். இந்தச் சூழ் நிலையில் ஹுமாயுன் அவரது சகோதரனான ஹிண்டாலைப் பார்ப்பதற்கு வருகிறார். ஹிண்டாலின் அந்தப்புரத்திலிருந்த ஹமீதா பானுவை முதன்முதலாகப் பார்த்து அவளால் மிகவும் கவரப்பட்டார்.
ஹமீதா பானு, ஹிண்டாலின் ஆன்மிக குருவான பாபா தோஸ்த் என்பவரின் மகள். 33 வயதான ஹுமாயுன் 14 வயதான அந்தப் பெண்ணின் கரம்பிடிக்க ஆசைப்பட்டார். சிறுமி ஹமீதா பானு அச்சத்துடனும் அருவருப்புடனும் அதனை ஏற்க மறுக்கிறாள். சகோதரன் ஹிண்டாலும் அதனை ஏற்கவில்லை. இருந்தாலும் பிடிவாதமாக ஹுமாயுன் அந்தப் பெண்ணை ஏராளமான வரதட்சிணை (இரண்டு இலட்சம்) கொடுத்துத் திருமணம் செய்து கொண்டார். நாடிழந்து, வீடிழந்து நாடோடியாகவும், வழிப்பறிக் கொள்ளைக்காரனாகவும் திரிந்த ஹுமாயுனுக்கு அந்தப் பணம் எங்கிருந்து கிடைத்திருக்கும்? நிச்சயாமாக எவனையாவது கொள்ளையடித்த பணமாகத்தான் இருக்கும் அது. அதையும் மீறி பெண் கொடுக்க மறுத்தால் பாபா தோஸ்த்தும் அந்தப் பெண்ணும் உயிருடன் வாழ்வது நிச்சயமில்லை”
அக்பரின் முன்னோர்களான கொலைகார, போதை மருந்திற்கு அடிமையான, குடிகாரர்களான, குரூரமான செங்கிஸ்கானையும், தைமூரையும் பற்றிப் பார்த்தோம். அவருக்குப் பின் வந்தவர்களும் இதில் எந்த விதத்திலும் குறைவானவர்களில்லை. இதுபோன்ற காட்டுமிராண்டிகளின் வழி வந்த அக்பர் மட்டும் ஏதோ அதிசயமானவராக நம்மை நம்ப வைக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து அது மிகவு வெற்றிகரமாகவும் இன்றைக்கு ஆகியிருக்கிறது. வழி வழியாக கொடியவர்களின் வழி வந்த ஒருவன் மட்டும் எப்படி உத்தமனான் என்கிற கேள்விக்கு பதில் எதுவும் கிடைப்பதில்லை.
ஒரு வாதத்திற்காக அக்பர் நல்லவர், வல்லவர் என்று வைத்துக் கொண்டாலும் அக்பரின் மகனான சலிமின் (ஜஹாங்கிர்) குரூரம் தனி வகையைச் சார்ந்தது. கண்மூடித்தனமாக ஓப்பியமும், மதுவும் குடித்து எந்த நேரமும் மூளை மழுங்கி வெறியுடன் திரிந்த ஜஹாங்கிர் தனக்குப் பிடிக்காதவ்ர்களுக்கு இழைத்த கொடுமைகள் கடவுளால் பொறுக்க இயலாதவை. ஜஹாங்கிருடன் இருந்த அவரது குறிப்பெழுத்தாளன் ஒருவன் அந்தப்புரத்திலிருந்த வேலைக்காரப் பெண் ஒருத்தியுடன் காதலில் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத ஜஹாங்கிர் அவனது தோலை உயிருடன் உரித்தார் என்கிற செய்தியைப் படிக்கையிலேயே குலை நடுங்கும்.
அக்பர் ஒரு சிறந்த மனிதனாக இருந்திருந்தால் அவரது மகனான ஜஹாங்கிர் இப்படிப் பிறரைக் குரூரத்துடன் கொலை செய்வானா என்பதினை நாம் யோசிக்க வேண்டும். அதே ஜஹாங்கிர் அவரது தந்தையான அக்பரை விஷம் வைத்துக் கொல்லவும் முயற்சிகள் செய்திருக்கிறார். வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித், “1591-ஆம் வருடம் அக்பர் கடுமையான வயிற்றுவலியால் துடித்தார். தன்னுடைய மகனான ஜஹாங்கிர்தான் தனக்கு விஷம் வைத்திருக்க வேண்டும் என அக்பர் சந்தேகப்பட்டார்” என்கிறார். எனவே அக்பரின் காலத்தில் ஜஹாங்கிர் மிகவும் வெறுக்கப்பட்ட ஒரு மனிதனாகத்தான் இருந்தார்.
விஷம் வைத்துக் கொல்வதில் வெற்றியடையாத ஜஹாங்கிர், தனது தகப்பனான அக்பரை சிறைப்பிடித்துக் கொல்வதற்கும் முயன்றிருக்கிறார். மீண்டும் வின்செண்ட் ஸ்மித், “….ஜஹாங்கிரின் புரட்சியை அறிந்த அக்பர் உடனடியாக ஆக்ராவுக்குத் திரும்புகிறார் (1601). ஜஹாங்கிர் போர்த்துக்கீசியர்களின் உதவியை நாடி அவர்களிடமிருந்த வெடிமருந்துகளைக் கோரிப் பெற முயன்றார்…..ஜஹாங்கிரை அடக்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட அவரது வரலாற்றாசிரியரான அபுல் ஃபைசல் படையெடுத்து வரும் வழியில் பிடிக்கப்ட்டு, ஒரு ஈட்டியின் முனையால் குத்தப்பட்டு மரத்தோடு அறையப்பட்டார்….பின்னர் அவரது தலை வெட்டப்பட்டு அலஹாபாத்திலிருந்த ஜஹாங்கிருக்கு அனுப்பி வைக்கப்பட்டது….ஜஹாங்கிர் கெட்ட வார்த்தைகளினால் அந்தத் தலையை அர்ச்சித்துக் குப்பையில் எறிந்தார்…..”
அக்பருக்குப் பின் அரியணை ஏற வேண்டிய இளவரசனான ஜஹாங்கிர் அலஹாபாத்தில் கண்மூடித்தனமாக போதைமருந்தையும், மதுவையும் குடித்து மயங்கிக் கிடந்தார். பெரும் கோபம் கொண்டவரான ஜஹாங்கிர் மதுவின் போதையால் மிகவும் வெறி கொண்டவராக எவராலும் கட்டுப்படுத்த இயலாதவராக ஆனார். அவருக்கு முன் நிகழ்ந்த சிறிய, சிறிய தவறுகளுக்கும் மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. மன்னிப்பு என்கிற வார்த்தையே மறந்து போனது. ஏற்கனவே சொன்னபடி தவறு செய்த எழுத்தனை தோலுறிக்கையில் துடித்த அவனை ஜஹாங்கிர் அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். எனவே ஜஹாங்கிருக்கு எதிரான மனோபாவம் அவரது எதிரிகளிடையேயும், பொது மக்களிடையேயும் இருந்ததில் ஆச்சரியமில்லை. இப்படிப்பட்ட குரூர மனம் கொண்ட ஜஹாங்கிர் தனது தந்தையைக் கொல்ல நினைத்தது நிச்சயமான ஒன்றாகத்தான் இருக்கும்”
வயது ஏற, ஏற ஜஹாங்கிரின் காம லீலைகள் அதிகரிக்க ஆரம்பித்தன. குடிப்பதும் இன்னபிற இளவயது பிணக்குகளும் அதிகமாகின. ஏற்கனவே நூற்றுக் கணக்கான பெண்களைக் கொண்ட மிகப்பெரிய அந்தப்புரம் இருந்தாலும், ஜஹாங்கிர் அவரது சகாவான ஜய்ன்கான் கோகாவின் மகள் மீது மட்டற்ற காதல் கொண்டார். இதைப்போலவே மித்ருன்னிஸா (எதிர்கால நூர்ஜஹான்) மற்றும் அனார்கலியின் (அக்பரின் வைப்பாட்டி. ஜஹாங்கிரை விடவும் இரண்டு மடங்கு வயதானவள்) மீதான அவரது காதலையும் நாம் புறந்தள்ள முடியாது. அக்பருக்கு எதிராக புரட்சி செய்து அலஹாபாத்தைப் பிடித்துக் கொண்ட பிற ஜஹாங்கிரின் போக்கிரித்தனமும், போதைமருந்து உபயோகமும், குடியும் உச்சத்தைத் தொட்டது. ஒருகட்டத்தில் எவ்வளவு மது குடித்தாலும் போதையே ஏறாத ஒரு நிலைமையை அவர் வந்தடைந்தார் என்றால் எந்த அளவிற்கு அந்த ஆள் குடித்திருக்க வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள். எனவே ஓப்பியத்தை மதுவுடன் கலந்து உபயோகிக்க ஆரம்பித்தார்.
தனது 18-ஆவது வயதில் குடிக்க ஆரம்பித்த ஜஹாங்கிர் ஒரே வேளையில் இருபது கோப்பைகள் மதுவை (double distilled spirit) அருந்துவதனை வழக்கமாகக் கொண்டவர். போதையின் உச்சத்தில் ஒருவனுக்கு காயடிக்க உத்தரவு அளிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு வேலைக்காரனை அடித்தே கொன்றிருக்கிறார். மேலே சொன்னபடி ஒருத்தனுக்கு உயிருடன் தோல் உறிக்கப்பட்டிருக்கிறது.
ஜஹாங்கிர் மட்டுமில்லை. அவருக்குப் பின் வந்த அக்பரின் பேரனான ஷாஜஹானும் மிகக் குரூரமான, இரக்கமற்ற கொலைகாரனே. செங்கிஸ்கானின், தைமூரின் வழி வந்த ஷாஜஹானுக்கும் வேறு குணம் வந்துவிடவா போகிறது?
மவுல்வி மொயினுதீன் அகமது “மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் ஷாஜஹானின் குறுகிய மனப்பான்மை சில சமயங்களில் அவனது மனைவியான மும்தாஜிடமிருந்து துவங்குகிறது என்பதில் சிறிதளவு உண்மை இருக்கிறது” என்கிறார். இன்னொரு வரலாற்றாசிரியரான இ.பி. ஹாவெல், “கிறிஸ்தவ பாதிரிமார்கள் ஷாஜஹனால் மிகுந்த சித்திரவதைக்குள்ளானார்கள். கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்டவளான அவரது மனைவி மும்தாஜ் இறப்பதற்கு சிறிதுகாலத்திற்கு முன்னர் ஷாஜஹானைத் தூண்டிவிட்டு ஹூக்ளியில் அமைந்திருந்த போர்ச்சுக்கீசிய காலனியைத் தாக்க வைத்தாள்” எனச் சொல்கிறார்.
இதனையே வேறுபல வரலாற்றாசிரியர்களும் உறுதி செய்கிறார்கள். “ஷாஜஹான் பலமுறை கிறிஸ்தவ பாதிரிகளை தனது அவைக்கு அழைத்து அவர்களை இஸ்லாமியர்களாக மதம் மாறுவதற்கு வற்புறுத்தினார். அதனை மறுத்தவர்கள் மீது மிகவும் சினம் கொண்ட ஷாஜஹான் அவர்களை உடனடியாக சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார். இன்னும் சிலர் கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு யானைகளில் கால்களில் இடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். எதோச்சதிகார கொடூரங்களில் ஷாஜஹான் அவர்களின் முன்னால் வந்தவர்களையெல்லாம் மிஞ்சிய ஒருவர். அரியணையை அடைவதற்காக் தன்னுடைய உறவினர்கள், எதிரிகள் என அத்தனை பேர்களையும் படுகொலை செய்தவர் ஷாஜஹான். அவரை தனிப்பட்ட முறையில் அறிந்த இங்கிலாந்தின் தூதுவரான தாமஸ் ரோ “ஷாஜஹான் தன்னைப் பற்றிய மித மிஞ்சிய பெருமித உணர்வுடையவர். மற்றவர்களை (பிற மதத்தவர்களை) வெறுப்புடனேயே அணுகும் மனோபாவமுடையவர்” என்கிறார்.
“துரோகிகளான காஃபிரி ஹிந்துக்கள் பனாரஸில் சிலை வழிபாட்டு ஆலயத்தைக் கட்டத் துவங்கியிருப்பதாகவும், நாட்டின் பிற பகுதிகளிலும் அதுபோன்ற பல ஆலயங்கள் கட்டப்பட்டதாகவும் பேரரசருக்குத் தெரியவந்தது. அல்லாவின் மதத்தை பேணிப் பாதுகாப்பவரான பேரரசர் பனாரஸ் ஆலயத்தையும், பேரரசின் எந்தவொரு பகுதியிலும் இருக்கும் சிலைவழிபாட்டுத் தலங்களையும் உடனடியா இடிக்க உத்தரவிட்டார். இதுவரை வந்த தகவல்களின்படி பனாரஸ் மாவட்டத்தின் அலஹாபாத் பகுதியில் மட்டும் 76 ஆலயங்கள் இடிக்கப்பட்டதாகத் தகவல் வந்திருக்கிறது” என ஷாஜ்ஹானின் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஷாஜஹன் கிறிஸ்தவர்களுக்கு இழைத்த கொடுமைகளையும் சிறிது பார்ப்போம்.
தவுலதாபாத்தை வென்ற ஷாஜஹானின் தளபதிகளான காசிம்கானும், கம்புவும் 400 கிறிஸ்தவ சிறைக்கைதிகளைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். அவர்களில் ஆண், பெண், இளைஞர்கள், முதியவர்கள் என பலதரப்பினரும் இருந்தார்கள். தாங்கள் வழிபடும் சிலையை கையில் கொண்டு வந்த அவர்கள், அல்லாவின் மதத்தைப் பேணும் பேரரசரின் முன் நிறுத்தப்பட்டார்கள். பேரரசர் மவுல்விகளைக் கொண்டு இஸ்லாமிய மதத்தின் அருமை, பெருமைகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வைத்து அவர்களை இஸ்லாமியர்களாக மதம் மாறுவதற்கு அழைப்பு விடுத்தார்.
கிறிஸ்தவ சிறைக்கைதிகளில் ஒருசிலர் இஸ்லாமியர்களாக மதம் மாறுவதற்குச் சம்மதித்தனர். ஆனால் பெரும்பாலோர் அவ்வாறு செய்வதற்கு மறுத்துவிட்டனர். மறுத்தவர்கள் அமீர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்களைக் கொடுஞ்சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அவ்வாறு அடைக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்து நரகத்திற்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களின் சிலைகள் ஜமுனா நதியின் தூக்கியெறிப்பட்டன. எஞ்சியவைகள் உடைத்தெறியப்பட்டன.
(தொடரும்)
<< தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>
we understand that mogal emperors are cruelest of cruel people and the part 1 – 5 goes to prove that. It is better to start these stories from the time of cruel king chengiskhan of mangolia so that the people of India will be able to know the real buried truth in fabricated history. These would bring out the truth that the akanda bharatham was true to the present generation of hindus, having its landscape from afganistan to burma in east to west and from kashmir to kanyakumari in north to south in ancient days. A good expose of muslim rulers in Indian peninsula.
Could not able to type in tamil, though I wish, since I have no applicable software for typing in tamil.
The desert faith has done incalculable damage to our country and culture. Yet there are people here ( the leftists, Khancross and some regional parties) who praise the contributions of Islamists to Indian culture. Votes, money and beef biriyani, what else!.