அக்பர் என்னும் கயவன் – 6

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி.. 

ஜஹாங்கிரின் ஆட்சிக்காலத்தைப்போலவே ஷாஜஹானின் ஆட்சிக் காலமும் குரூரங்கள் நிறைந்த ஒன்று.  ஷாஜஹானைத் தொடர்ந்து அரியணை ஏறிய அவரது மகனான ஔரங்கசிப் அவரையும் மிஞ்சிய மதவெறியும், குரூரமும், துரோகமும் செய்தவர்.  ஔரங்கசிப் இறந்தது முன்னூறு வருடங்களுக்கு முன்தான் என்பதினை யோசிக்கையில் அவரது கொள்ளுப்பாட்டனான அக்பர் எவ்வளவு கொடூரமானவராக இருந்திருப்பார் என்பதினை நாம் சிந்திக்க முடியும். எனவே அக்பருக்கு முன்னாலும் சரி, அக்பருக்குப் பின்னாலும் சரி அவர் வழிவந்த அனைவருமே காட்டுமிராண்டிகளாக, குரூரத்தில், கொலைவெறியில் ஒருவரை ஒருவர் மிஞ்சியவர்களாக இருப்பதினைக் காண்கிறோம். அக்பர் இந்தச் சங்கிலியின் ஒரு கண்ணியே. எனவே அவர் பிறரைவிடவும் வித்தியாசமானவராக, அன்பே உருவான்வராக, கண்ணியம் நிறைந்தவராக இருக்க வாய்ப்பே இல்லை.

அக்பர் நற்குணங்கள் கொண்ட பேரரசராக இருந்திருப்பின், அவருக்குப்பின் வந்தவர்களும் அவரைப்போலவே நல்ல குணங்களை உடையவர்களாக, உலகம் போற்றும் உத்தமர்களாக அல்லவா இருந்திருக்க வேண்டும்? எனவே அக்பரது முன்னோர்களினதும், அக்பரின் வாரிசுகளினதும் வரலாற்றை முழுமையாக அறியாத ஒருவனே அக்பரைப்பற்றி உலவும் கதைகளை நம்புவனாக இருப்பான் என்பதில் சந்தேகமில்லை.

அக்பரின் குரூரங்களைக் குறித்து நாம் ஆராய்வதற்குமுன்னர் அவரது சமகாலத்தவர்களான அவரது உறவினர்களின் குரூரங்களைப்பற்றியும் சிறிது ஆராய்வோம். நமக்கு மீண்டும்மீண்டும் கற்பிக்கப்படுவதுபோல அக்பர் ஒரு இரக்கமுள்ள, அன்பும், கனிவுமுள்ளதொரு பேரரசனாக இருந்திருந்திருந்தால் அவரது உறவினர்களின் கொடுஞ்செயல்களைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டுமல்லவா? ஆனால் அவர் அவ்வாறு எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. உண்மையில் அவரும் அவரது உறவினர்களும் கொடூரமான ஓநாய்களைப்போலவும் கழுதைப் புலிகளைப்போலவும் அல்லவா நடந்து கொண்டார்கள்?

சுங்கிஸ் கானின் (Chungiz khan) அன்னையும் குஜராத்தின் பிரதிநிதியுமான ஒரு பெண்மணி (1573) ஜூஹார்கான் ஹப்சி என்பவன் தன்னுடைய மகனைக் கொலைசெய்துவிட்டதாக அக்பரிடம் முறையிடுகிறாள். இருவருமே அக்பரின் உறவினர்கள் என்றாலும் ஒருவரை ஒருவர் கொல்வதில் சளைத்தவர்களில்லை என்பதனை இந்த உதாரணம் காட்டுகிறது.

அக்பரின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்த அபுல் மாலி என்பவர் காபூலுக்குத் தப்பியோடி அங்கிருந்த அக்பரின் வளர்ப்பு சகோதரனின் அன்னையான மாஹ் ச்சிக் (Mah Gchk) என்கிற பெண்மணியிடம் சரணடைகிறார். தனக்கும் ஹுமாயுனுக்கும் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணின் மனத்தைக் கரைக்கும் அபுல் மாலிக்கு தன்னுடைய மகளான ஃபக்ருன்னிஸ்ஸாவை திருமணம்செய்துவைக்கிறாள். சிறிது காலம் கழித்து அவளின் சொத்தை அடைவதற்குத் தடையாக இருக்கும் அந்தப் பெண்மணியை அபுல் மாலி கத்தியால் குத்திக் கொல்கிறான்.

அக்பரின் சொந்த மாமனான கம்ரன் தன்னிடம் பிடிபட்ட எதிரியின் குடும்பத்திலிருந்த பெண்கள், குழந்தைகள் என அத்தனைபேர்களையும் குரூரமான சித்திரவதைக்கு ஆளாக்கினான்.

மேற்கண்ட சில சம்பவங்கள் அக்பரின் காலத்தில் அவரது உறவினர்களால் நிகழ்த்தப்பட்ட  சில குரூரங்களுக்கு எடுத்துக்காட்டுகள். அக்பரின் ஆட்சிக்காலம் முழுவதும் இதுபோன்ற கொலைகளும், படுகொலைகளும், கற்பழிப்புகளும், கொள்ளையடித்தலும் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன. அக்பரின் ஐம்பது ஆண்டுகால ஆட்சி அவருக்கு முன்னால் இருந்தவர்களின் குரூர நடவடிக்கைகளிலிருந்து சிறிதும் விலகியிருக்கவில்லை என்பதையே நாம் இங்கு காணாப்போகிறோம். அப்படியே அக்பரின் ஆட்சி அவரது முன்னோர்களின் காலத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்திருந்தால் அது நமக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் உண்மையில் நிலைமை அப்படி இருந்திருக்கவில்லை.

இனி வரும் பகுதிகளில் அக்பருடையதும் அவரது படைத்தலைவர்களினது, அவரது அமைச்சரவையில் இருந்தவர்களினதுமான குரூரங்களைப் பற்றிப் பார்க்கலாம். அதுவே உங்களுக்குத் தேவையான ஆதாரங்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. துரதிருஷ்டவசமாக இந்திய வரலாற்றை எழுதியவர்கள் தர்க்கபூர்வமான தரவுகளை,  ஆவணங்களை, வரலாற்றுக் கூறுகளை, குறிப்புகளை முற்றிலும் மறைத்துவிட்டு தங்களின் இஷ்டம்போல எழுதிவைத்தார்கள்.

அக்பர் தனது முன்னோர்களைவிடவோ அல்லது அவருக்குப் பின்னர் வந்தவர்களைவிடவோ குரூரத்தில் எந்தவிதத்திலும் குறைந்தவரில்லை என்பதே உண்மை.  தன்னிடமிருந்த அளவுக்கதிகமான அதிகாரத்தைக்கொண்டு, வஞ்சகமும், சூழ்ச்சிகளும், துரோகங்களும்செய்து பிழைத்த அக்பர் இந்தியாவில் மட்டுமலலாது உலகிலேயே மிகக் கொடுஞ்செயல்கள் புரிந்தவர்கள் வரிசையில் வருவதற்குத் தகுதியான ஒரு ஆளேயன்றி வேறில்லை.

வரலாற்றாசிரியர் கர்னல் டோடின் கூற்றுப்படி, “பல தலைமுறைகள்கண்ட இந்தியாவின் போர்க்குணம் கொண்ட ராஜபுத்திரர்களும், ஷத்திரியர்களும் அக்பரின் வஞ்சக வாளுக்கு இறையானார்கள். அவரால் வெற்றிகொள்ளப்பட்டவர்கள் அடைந்த துயரங்களும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. அழிவையே வழியாகக் கொண்டு நடந்த ஷகாபுதின், அல்லாவுதின் போன்றவர்களுக்கு இணையானவர் அக்பர். ராஜபுத்திரர்களின் தெய்வமான ஏக்லிங்காஜி கோவிலை அழித்து அதன் மூலஸ்தானத்தில் இஸ்லாமிய மதப்பிரச்சாரகர்களின் மேடையாக மாற்றியவர் அக்பர்’ என்கிறார்.

இந்தியாவின் செக்யூலரிஸ்டுகளாக தங்களை அறிவித்துக் கொண்டவர்கள் மிகவும் போலித்தனமான பாவனைகளோடு அக்பரை ஹிந்து அரசரான அசோகருடன் ஒப்பிடுவதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித் இந்தப் போலித்தனத்தைத் தோலுறிக்கிறார். “தன்னை ஒரு சிறந்த நீதி வழுவாத ஒரு ஹிந்து பேரரசனுக்கு ஒப்பிடுவதனைக் கேட்டு அக்பரே சிரித்திருப்பார். கலிங்கத்துப் போரில் அசோகர் நிகழ்த்திய அழிவுகளைக் கண்டபிறகு அசோகர் வன்முறையைக் கைவிட்டதனைப்போல அக்பர் ஒருபோதும் செய்ததில்லை. அதற்கு மாறாக மேலும், மேலும் வன்முறைகளும், கொலைகளும், கொள்ளைகளும் அக்பரால் நிகழ்த்தப்பட்டன”

அக்பரின் குரூர மனப்பான்மையைக் குறித்தான சில சிறிய உதாரணங்களை இங்கு பார்ப்போம். இவையனைத்தும் அக்பரின் காலத்தில் வாழ்ந்த அவருடைய சொந்த வரலாற்றாசிரியர்களால் எழுதிவைக்கப்பட்டவை.

அக்பரின் உறவினரான கம்ரனின் மகனை குவாலியர் கோட்டையில் 1565-ஆம் வருடம் யாருக்கும் தெரியாமல் கொலைசெய்ய உத்தரவிடுகிறார் அக்பர். அந்த உதாரணமே பிற்காலத்தில் அரியணை ஏறிய ஷாஜஹான், ஔரங்கசிப் போன்றவர்களால் கடைப்பிடிக்கப்பட்டு குவாலியர் கோட்டை பெரும் கொலைக்களமாகத் திகழ்ந்தது.

அக்பரின் குரூரம் (sadism) அவரது கல்யாண குணங்களில் ஒன்றாக நிரந்தரமாகத் திகழ்ந்த ஒன்று. அவரது சிறியவயதிலிருந்து முதியவயது வரைக்கும் அவரது குரூர குணம் பல்வேறுவகைகளில் வெளிப்பட்டுக்கொண்டே இருந்ததைக் காணலாம்.

இரண்டாம் பானிபட் போர்

நவம்பர் 5, 1556-ஆம் வருடம் அக்பர் வெறும் 14 வயதுச் சிறுவன். ஹேமுவுடன் நிகழ்ந்த போரில் கண்ணில் புகுந்த அம்பு மூளையைத் துளைத்ததில் ஹேமு அரை மயக்க நிலையில் இருந்தார். அந்த நிலையிலேய அவரைச் சிறுவனான அக்பரின் முன்னர் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். அக்பர் வெறியுடன் தனது கையிலிருந்த குறுவாளால் (scimitar) ஹேமுவின் கழுத்தை அறுத்துக் கொல்கிறார்.

பானிப்பட்டில் நிகழ்ந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போரைக் குறித்துக் கூறும் வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித், “இந்தப் போரில் ஹேமு மிக எளிதாக வென்றிருக்கும் வாய்ப்பே அதிகமிருந்தாலும் எதிர்பாராமல் பாய்ந்த அம்பின் காரணமாக அவர் தோல்வியடைய நேரிட்டது. அதனைக் கண்ட அவரது படைகள் சிதறியோடிவிட்டன. காட்டுக்குள் ஓடிய ஹேமுவின் பட்டத்து யானை பிடிக்கப்ப்ட்டு ஹேமு அதன்மீது அமர்த்தப்பட்டு அக்பரின் மாமனான பைராம்கானுக்கும், அக்பருக்கும் முன் அழைத்து வரப்படுகிறார்.

அக்பர் ஹேமுவின் கழுத்தை அறுத்த பின்னர் அங்கிருந்த அத்தனை பேர்களும் உயிரற்ற ஹேமுவின் உடலில் வாள்களைப் பாய்ச்சினர். ஹேமுவின் தலை காபூலுக்கு அனுப்பபட்டு அவரது உடல் தில்லியின் மசூதி வாசலுக்கருகில் புதைக்கப்படுகிறது. ஆனால் இந்திய வரலாற்றாசிரியர்கள் அவரது மாமனான பைராம்கானின் உத்தரவின்பேரில்தான் அக்பர் ஹேமுவைக் கொன்றதாக கதையளந்து கொண்டிருக்கிறார்கள்” என்கிறார்.

மேலும், “போரில் வெற்றிபெற்ற அக்பரின் படை பானிபட்டிலிருந்து தெற்கில் முன்னேறி தில்லியை வந்தடைகிறது. தில்லியின் கோட்டைக் கதவுகள் அக்பரின் வருகைக்காகத் திறந்துவைக்கப்படுகின்றன. ஆக்ராவும் அக்பரின் கைவசமாகிறது. மங்கோலியர்களின் கொடூர வழக்கப்படி போரில் பிடிபட்டவர்களின் தலைகள் கொய்யப்பட்டு ஒரு பெரும் கோபுரமாக செய்யப்படுகிறது. ஹேமுவின் அரண்மனையிலிருந்து விலைமதிக்கமுடியாத பொக்கிஷங்கள் அக்பரின் வசம் செல்கிறது, ஹேமுவின் வயதான தகப்பன் தலை துண்டித்துக் கொல்லப்பட்டார்”.

மால்வாவின் சுல்தானான பேஸ்பகதூரை வெல்லும் அக்பரின் படைத்தலைவர்களான ஆதம்கானும், பீர் முகமதுவும் அங்கு சொல்லமுடியாத குரூரங்களை நிகழ்த்திக் காட்டுகிறார்கள். வரலாற்றாசிரியர் பதாயுனி அதற்குச் சாட்சியாக அந்த நேரத்தில் அங்கு இருந்திருக்கிறார். பிடிபட்ட எதிரிகளின் படைகள் அணி அணியாக அழைத்துவரப்பட்டு அவர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன. அவர்களின் ரத்தம் ஆறுபோல ஓடியது. பீர் முகமது குரூரங்களின் எல்லைகளைக் கடந்தான். அவனைச் சந்திக்க கைகளில் குரானுடன் வந்த இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினரான சையத்கள்  கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்கள்.

Image result for Malwa fort
மால்வா கோட்டை

அந்தப் போருக்குப் பின்னர் ஆதம்கான் மால்வாவின் கவர்னராக நியமிக்கப்படுகிறான். பின்னர் சிறிது நாள்களுக்குப் பிறகு ஆதம்கான் நீக்கப்பட்டு பீர்முகம்மது கவர்னராகிறான். பின்னர் அவனே பர்ஹான்பூரையும்ம் பிஜகத்தையும் தாக்கிப் பிடித்து கோட்டைக்குள்ளிருந்த அத்தனை பேர்களையும் படுகொலை புரிகிறான். செங்கிஸ்கான் செய்த அத்தனை கொடும் செயல்களையும் பீர்முகமது பின்பற்றியதாகச் சொல்கிறார் பதாயுனி.

ஆதம்கான் பின்னர் ஆக்ரா கோட்டையிலிருந்து தூக்கியெறியப்பட்டு கொல்லப்பட்டான். அக்பரின் ஏவலாளிகளில் ஒருவனான அட்காகான் என்பவனை ஆதம்கான் கொலை செய்த காரணத்தால் அக்பர் அவனை ஆக்ராக் கோட்டையிலிருந்து தூக்கியெறிந்து கொல்ல உத்தரவிடுகிறார். அதனைப் பற்றி விளக்கும் வின்செண்ட் ஸ்மித், “ஆதம்கான் ஆக்ரா கோட்டையின் மாடியிலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டான். ஆனால் அவன் இறக்காமல் அரை உயிராகத் துடித்துக் கொண்டிருந்தான். அக்பர் மீண்டும் அவனைத் தூக்கி வந்து கோட்டையின் மேலிருந்து மீண்டும் தூக்கியெறிய உத்தரவிடுகிறார். அவனுடைய கழுத்து உடைந்து மூளை நாலாபக்கமும் சிதறியது”.

[தொடரும்]

3 Replies to “அக்பர் என்னும் கயவன் – 6”

  1. The Hindus are sleeping while the wicked leftists are rewriting history. Tomorrow’s children will learn that the kind hearted aurangazeb constructed temples by collecting special taxes from the Muslims. The Khancross, leftists and the desert religionists are very active inthe social media while the pro Hindu support group has poor presence. I request the tamilhindu to come up with an article on the arrest of Arab shaikhs, maulvis , brokers in hyderabad recently

  2. செங்கிஸ்கானின் காலம் 1227 உடன் முடிவடைவதாக விக்கிபீடியா கூறுகிறது. அவரத் அன்னை அதன் பிறகு முந்நூறு ஆண்டு காலம் வாழ்ந்தார்களா?

  3. கணேஷ், அது chungiz khan. இவர் அக்பர் வம்சாவளியினர். Genghis khan அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *