அக்பர் என்னும் கயவன் – 7

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி.. 

அக்பரே நேரடியாகப் படையெடுத்துச் சென்று எட்டா மாகாணத்திலுள்ள எட்டு கிராமங்களைத் தாக்கி அழிக்கிறார்.  பரோங்க் கிராமத்திலிருந்த ஒரு பெரியவீட்டில் ஆயிரம்பேர்கள் (ஹிந்துக்கள்) அடைத்துவைக்கப்பட்டு எரிக்கப்பட்டார்கள்.

ஏப்ரல் 1567-ஆம் வருடம் ஒரு நம்பமுடியாத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஆக்ராவுக்குத் திரும்பும் வழியில் அக்பர் பஞ்சாபின் தானேஷ்வர் என்கிற இடத்தில் முகாமிட்டார். பஞ்சாபின் இரண்டு ஹிந்து வகுப்பினரான குருவும், புருவும் கோவிலின் வருமானத்தைப் பகிர்ந்துகொள்வதில் தங்களுக்குள் உள்ள சர்ச்சையை அக்பரிடம் முறையிட்டார்கள். அவர்கள் இருவரையும் இரண்டு பக்கமாகப் பிரித்து நிற்கவைக்கும் அக்பர் அவர்களுக்குக் கத்திகளையும், ஈட்டிகளையும், குறுவாள்களையும் கொடுத்து அவர்களை சண்டையிடவைக்கிறார். ஏறக்குறைய 800 பேர்களிருந்த அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்று மடிகிறார்கள். ஏதாவது ஒரு தரப்பில் ஆட்கள் குறைகையில் அக்பர் தனது படையிலிருந்த கொலைகார முஸ்லிம்களை அவர்கள் பகுதிக்கு அனுப்பிவைக்கிறார். இபபடியே மாற்றிமாற்றிச் செய்ததால் அந்த 800 குருக்களும், புருக்களும் செத்துமடிகிறார்கள். அக்பர் அந்த “விளையாட்டை” மிகவும் ரசித்து மகிழ்ந்ததாக அவரின் அத்தனை வரலாற்றாசிரியர்களும் குறிப்பிட்டார்கள்.

அக்பரைப் போன்றதொரு “சிறந்த” மனிதன் இதுபோன்ற ரத்தவெறிகொண்ட விளையாட்டை அனுமதித்தது மட்டுமல்லாமல் அதனை ரசித்தும் பார்த்தனை என்னவென்று சொல்ல? இந்தச் சம்பவே அக்பரின் உண்மையான குணத்தையும் அவரின் உள் நோக்கங்களையும் தெளிவாக்குகிறது.

ஒரு அடிப்படைவாத இஸ்லாமியரான அக்பர், காஃபிர்களான ஹிந்துக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும், வெட்டிக்கொண்டும் சாவதனை ரசித்துக் குதூகலமடைந்த அக்பரின் வக்கிரபுத்திக்கு இதனைவிடவும் சிறந்த உதாரணம் வேறெதுவும் இருக்குமா என்ன?

அக்பர் வருவதனைக் கண்டு பனாரஸ் மற்றும் பிராயகை வாழ் ஹிந்துக்கள் சிதறி ஓடினார்கள். அன்பும், கருணையும் கொண்டதொரு அரசன் வரும்வழியில் உள்ள மக்கள் அவனுக்கு உற்சாக வரவேற்பல்லவா அளிப்பார்கள்? ஆனால் அக்பரை குடிமக்கள், குறிப்பாக ஹிந்துக்கள் ஒரு மனித வேட்டையாடும் விலங்காகவே அஞ்சி விலகினார்கள்.

வின்செண்ட் ஸ்மித், “அக்பர் பனாரஸ் மற்றும் பிரயாகையினுள் நுழைந்து அந்த நகரங்களைச் சூறையாடினார். தான் வருகையில் அந்த நகரின் கதவுகளை மூடியவர்களைப் பழிவாங்கவே அந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது”. ஒரு நீதிமானான அரசனைப் பார்த்து ஜனங்கள் எதற்காக தங்களின் வீடுகளைப் பூட்டிக்கொள்ளவேண்டும்? ஆனால் உண்மையில் அக்பரின் படையினர் கட்டவிழ்த்துவிடும் வன்முறையும், பெண்களுக்கெதிரான பாலியன் வன்முறைகளுக்கும் அஞ்சியே அந்த நகரத்து மக்கள் அவ்வாறு நடந்துகொள்ளத் தலைப்பட்டார்கள். அக்பரின் ஐம்பது ஆண்டுகால ஆட்சிக்காலம் முழுக்க இதுவேதான் நிகழ்ந்தது.

தனக்கு எதிராகப் புரட்சி செய்த கான் ஜமானின் படையைச் சேர்ந்த முகமது மிராக் என்பவன் தொடர்ந்து ஐந்து நாட்கள் கொலைக்களத்தில் வைத்துச் சித்திரவதை செய்யப்பட்டான். ஒவ்வொரு நாளும் முகமது மிராக்கை ஒரு மரச் சட்டத்தில் அடைத்துப் பின்னர் அந்தப் பெட்டியை அவரது யானைகளுக்கு முன்னால் வைக்க உத்தரவிட்டார் அக்பர். யானைகள் அவனை தும்பிக்கையால் மூச்சுமுட்ட இறுக்கிப் பிடித்தும், கால்களால் மரச்சட்டத்தை உதைத்தும் விளையாடின. யானைகளுக்குக் கொல்ல உத்தரவிடும்வரை அவை யாரையும் கொல்வதில்லையாதலால், ஐந்து நாட்கள் இந்தக் கொடிய விளையாட்டு நடத்தப்பட்டது. அக்பரின் வரலாற்றாசிரியரான அபுல் ஃபசல் இந்தச் சம்பவத்தை மிகப் பெருமையாக எழுதிவைத்திருக்கிறார்.

அக்பரின் படையினரிடம் சிக்கி கற்பழிக்கப்படுவதில் இருந்து தப்பவும், பாலியல் அடிமைகளாவதிலும் இருந்து தப்புவதற்காக ராஜபுத்திரப் பெண்களும், குழந்தைகளும் கூட்டம் கூட்டமாக தீயில் குதித்து இறந்த சம்பவங்கள் அக்பரின் கொடுங்கோன்மையை பறைசாற்றும். இதைப்பற்றிக் கூறும் வின்செண்ட் ஸ்மித், “சித்தூரின் படைகள் இறுதிப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் ஜுஹார் பலிதானம் (தீயில் குதித்து இறத்தல்) நடந்து முடிந்துவிட்டிருந்தது. அரண்மனையின் மூன்று பகுதிகளில் இதற்காக பெரும் தீ வளர்க்கப்பட்டது. ஒன்பது அரசிகளும், ஐந்து இளவரசிகளும், அவர்களின் பெண் குழந்தைகளும், இரண்டு கைக்குழந்தைகளும், அரண்மனையின் அத்தனை முக்கியஸ்தர்களின் குடும்பங்களும் தீயில் குதித்து இறந்தார்கள்.

அடுத்தநாள் காலை அரண்மனைக்குள் புகுந்த அக்பரைத் தடுத்து நிறுத்த 8000 ராஜபுத்திரர்கள் சாகும்வரை போரிடுவதற்குக் கங்கணம் கட்டிக்கொண்டார்கள். இதனைக் கண்டு சினமுற்ற அக்பர் சித்தூர் அரண்மனையின் மீது கடுமையான தாக்குதலைத் துவக்கினார். இரக்கமற்ற படுகொலைகள் துவங்கின. மேற்கண்ட 8000 ராஜபுத்திரப் படைவீரர்களுக்கு சித்தூரின் 40,000 பொதுமக்கள் உதவினார்கள் என்பதால் அவர்களைக் கொலை செய்ய உத்தரவிட்டார் அக்பர். ஏறக்குறைய 30,000 பேர்கள் வாளுக்கு இறையாக்கப்பட்டு,. எஞ்சியவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள்.

இரக்கமுள்ளதொரு அரசன் செய்கிற செயலா இது?

நவம்பர் 1572-ஆம் வருடம் அக்பருக்கு எதிராகப் புரட்சி செய்த அகமதாபாத்தின் அரசரான முஸாஃபர் ஷா தோல்வியுற்று, ஒரு சோளக்காட்டில் ஒளிந்திருக்கையில் பிடிபட்டார். அலஹாபாத் நகரம் சூறையாடப்பட்டு, பிடிபட்டவர்கள் அனைவரும் யானையின் கால்களில் இட்டு நசுக்கிக் கொல்லப்பட்டார்கள்.

அகபருக்கு எதிராகப் புரட்சி செய்த இன்னொரு அரசவையினனான ஹாம்-ஜபான் என்பவனை குஜராத்தின் சூரத்தில் பிடித்தார் அக்பர். ஹம்-ஜபான் என்ற பெயரின் அர்த்தம் “உண்மையை மட்டுமே பேசும் ஒரு நாக்கு” என்று அர்த்தம். எனவே அக்பர் அவரின் நாக்கைத் துண்டிக்க உத்தரவிட்டார். அதன்படியே “உண்மையை மட்டுமே பேசும் நாக்கு” துண்டிக்கப்பட்டது.

அக்பரின் கல்வியறிவற்ற மூளை செயல்படும் விதத்தில் இதுவும் ஒன்று.

ஹுசைன் குலிகான் (கான் ஜஹான்) தனது சிறைக்கைதிகளுடன் அக்பருக்காக காத்து நிற்கிறான். கைதிகளில் ஒருவனான மசூத் ஹுசைன் மிர்ஸாவின் கண்கள் ஊசியால் தைக்கப்பட்டு மூடியிருக்கின்றன. அங்கிருந்த 300 பிற கைதிகளின் முகங்கள் கழுதை, பன்றி மற்றும் நாய்த் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. அவர்களில் சிலர் புதுமையான சித்திரவதைகள் செய்யப்பட்டு இறக்கிறார்கள்….அக்பரைப் போன்றதொரு அரசன் இதுபோன்றதொரு சித்திரவதைகளை அவனது தார்த்தாரிய மூதாதைகளிடமிருந்தே பெற்றிருக்க வேண்டும்“.

இதுபோன்ற கொடூரங்களை நாள்முழுக்கச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அக்பரை எதிர்த்தவர்கள் சித்திரவதைசெய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். இன்னொருபுறம் அக்பருக்குப் பிடிக்காதவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். 1581-82-ஆம் வருடம் அக்பரை எதிர்த்த ஷேக்குகளும், ஃபக்கீர்களும் காந்தஹாருக்குக் கொண்டுசெல்லப்பட்டு, குதிரைவாங்குவதற்காக அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.

அக்பரின் அரசவையில் இருந்த இளம் ஹிந்து ஓவியனான யஷ்வந்த் அக்பரைச் சுற்றி நடந்த, அக்பரால் நடத்தப்பட்ட வன்புணர்ச்சிகளையும், போது மருந்து உபயோகங்களையும், வெள்ளமென ஓடிய மதுவையும், விபச்சாரத்தையும் கண்டு வெறுத்துப்போய் தன்னைத் தானே கத்தியால் குத்தித் தற்கொலைசெய்துகொண்டான். அக்பரின் இன்னொரு மூத்த அமைச்சரான ராஜா பகவான்தாஸ் அக்பரின் அரசவையில் அவருக்குக் நிகழ்ந்த அவமானங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்துபோனார்.

விஷம் தயார் செய்பவன் ஒருவனை அக்பர் வேலைக்கு வைத்திருந்தார். அக்பர் சொல்லும் ஆளுக்கு விஷம்வைப்பதுதான் அவனது வேலை. சிறைக்கைதிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளும் கொடூரமானவை. கழுமரத்தில் ஏற்றிக் கொல்வது, சிலுவையில் அறைந்து கொல்வது, தலையைத் துண்டிப்பது, யானையின் கால்களில் இட்டு மிதித்துக் கொல்வது, தூக்கிலிடுவது என விதவிதமான தண்டனைகள் அளிக்கப்பட்டன. சிறிய குற்றங்களுக்கு கைகளை வெட்டுவதிலிருந்து சவுக்கால் விளாசுவதுவரை தண்டனை அளிக்கப்பட்டது. யாருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது, யார்யார் சிறையில் இடப்பட்டார்கள் என்பதற்கான ஆவணங்கள் எதுவும் எழுதிவைக்கப்படவில்லை. தண்டனை அளிக்கப்படாதவர்கள் சிறையில் புழுத்து, மனநிலை பிறழ்ந்து இறந்தார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொடுமையான முறையில் சித்திரவதை செய்யப்பட்டார்கள். அக்பரால் மன்னிப்பு வழங்கப்பட்ட வெகுசிலர் இரக்கத்தால் மன்னிக்கப்படவில்லை. அந்தச் சூழ்நிலையில் அக்பருக்கு என்ன சாதகம் நிகழுமோ அதன்படியே தண்டனை மன்னிப்புகள் வழங்கப்பட்டன,” என்கிறார் வின்செண்ட் ஸ்மித்.

அக்பர் காலத்தில் அங்கு வந்த கிறிஸ்தவப் பாதிரிகள் சொன்னது போல “அக்பர் ஒரு கிழக்கின் பயங்கரம்” என்பதில் சந்தேகமில்லை. தடைபடாத அக்பரின் நாற்பதாண்டுகால தொடர்ச்சியான ஆட்சி அவரின் சர்வாதிகார மனப்பான்மையை மேலும் கூடுதலாக்கியது.

அக்பரைக் கண்டு குடிமக்கள் அஞ்சினார்களேயன்றி ஒருபோதும் அவர் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டிருக்கவில்லை. அரசின்மீது தனது பிடியை இறுக்கமாக வைத்திருந்த அக்பர், தான் விரும்பியபடியெல்லாம் நடந்து கொண்டார். அந்தச் சுதந்திரத்தை உபயோகித்து அக்பர் பல நம்பவேமுடியாத கொடூரங்களை அரங்கேற்றினார் என்பதே உண்மை.

குரானில் போதிக்கப்படும் படுபயங்கரமான தண்டனைகள் முகலாய அரசில் தாரளமாக உபயோகிக்கப்பட்டன.

நீதித் துறை நடவடிக்கைகளான குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிப்பதும், சத்தியப் பிராமணம் எடுப்பதும், சாட்சிகளை விசாரிப்பதும் அக்பரின் அரசவையில் முற்றிலும் நிராகரிக்கப்பட்டன. தன் மனதில் தோன்றிய சித்திரவதைகளை குற்றவாளிகளின் மீது உபயோகிக்க ஒருபோதும் அக்பர் தயங்கியதில்லை. தனக்கு வரிவழங்காத விவசாயிகள் மது தனது படைகளை ஏவி, அவர்களைக் கசக்கிப் பிழிவதற்கும் அவர் பயன்படுத்தினார். தனக்குத் தோன்றியதை மற்றவர்கள் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் எனபதில் அக்பர் ஒருபோதும் சமரசம் செய்துகொண்டதில்லை.

[தொடரும்]

4 Replies to “அக்பர் என்னும் கயவன் – 7”

  1. நாம் ஒன்றை மறந்து விடுகின்றோம். இந்த அக்பா் படையில் இருந்தவா்கள் அனைவரம் முஸ்லீம்களா ? இந்துக்கள் நிறைய போ்கள் இருந்தாா்கள். இந்துக்களுக்க அநியாயம் நடந்தபோது அவா்கள் என்ன செய்தாா்கள் ? அவா்களும் அக்பாின் திட்டத்திற்கு முழு ஆதரவு தொிவித்து முழு ஒத்துழைப்பு அழைத்தாா்கள்.அதுதான் அவமானம்.நம்மிடையே உள்ள குறைபாடு.நான் ஏன் ஒரு அகண்ட சமூதாயமாக வளா்க்கப்படவில்லை. இந்துக்களுக்கு எதிரான முஸ்லீம்களின் கொடூர திட்டங்களை நிறைவேற்ற சக இந்துக்களை முழு ஒத்துழைப்பு அளித்தாா்கள் என்பதுதான் எங்கோ பிரச்சனை இருக்கின்றது என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.தௌஹீத் ஜமாத் தலைவா் பிஜெ ” எனக்கு ஆதரவாக 50 லட்சம் முஸ்லீம் இளைஞா்கள் களத்தில் இறங்க தயாராக உள்ளாா்கள். தமிழ்நாட்டில் இருபதாயிரம்காவல்துறையினா் இருப்பாா்களா ? மோதிப்பாா்பபோமா ? எத்தனை உயிா்கள் பலியானாலும் கவலையில்லை” என்று விஸ்வரூபம் திரைப்பட போராட்டத்தில் அறிவிப்பு அளித்தாா்.
    இந்த மனதைாியம் தான் முஸ்லீம்களுக்கு அதீதமான துணிச்சலை அளிக்கின்றது.அமைப்பு ரீதியில் வினாடியில் கூட்டமாக் கூடிவிடும் பண்பாடு காரணமாக யாரையும் என்னவும் செய்யமுடியும் என்று ஒரு சாதாரண முஸ்லீம் நினைக்கின்றான் ? இன்றைய நிலையும் அப்படித்தான இருக்கின்றது.ஆம்புா் கலவரம் ஒன்றே போதும். முஸ்லீம்கள் நாட்டின் சட்டத்திற்கு அப்பால்பட்டுதான் வாழ்கின்றாா்கள் என்பது அளைவருக்கும் விளங்கும்.ஆம்புா் கலவரத்தின் இன்றைய நிலைஎன்ன ஏதாவது தொியுமா ? பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு என்ன நிவாரணம் கிடைத்தது ? காவல்துறையை தாக்கியவா்களுக்கு எதிராக காவல்துறை எத்தனை போ்கள் மீது வழக்கு நடைபெறுகின்றது ? இந்துக்களுக்கு என்ன நிவாரணம் ? இப்படி எழும் கேள்விகளுக்கு என்ன பதில் ? தாங்கள் பதிவு செய்யலாமா ?

  2. இன்றும் ஒரு முஸ்லீம் கிறிஸ்தவனும் தன்னை சிறந்த முஸ்லீமாக கிறிஸ்தவனாக த்தான் காட்டிக் கொள்வான். மதச்சாா்பற்றவனாக ஒருபோதும் தன்னைக் காட்டிக்கொள்ள மாட்டவே மாட்டான்.ஆனால் இந்துவோ பல்லை இழி இழி என்று இழித்து இசுலாம் ஒரு இனிய மாா்க்கம் என்று அளக்கின்றான். கிறிஸ்தவம் இந்தியாவிற்கு கல்வியை அளித்தது என்கிறான்.ஏன் இந்த கோழைத்தனம். தன்னை இந்துவாக காட்ட பயப்படுகின்றானே ஏன் ?

  3. அக்பரின் அரசவையில் இருந்த இளம் ஹிந்து ஓவியனான யஷ்வந்த் அக்பரைச் சுற்றி நடந்த, அக்பரால் நடத்தப்பட்ட வன்புணர்ச்சிகளையும், போது மருந்து உபயோகங்களையும், வெள்ளமென ஓடிய மதுவையும், விபச்சாரத்தையும் கண்டு வெறுத்துப்போய் தன்னைத் தானே கத்தியால் குத்தித் தற்கொலைசெய்துகொண்டான். அக்பரின் இன்னொரு மூத்த அமைச்சரான ராஜா பகவான்தாஸ் அக்பரின் அரசவையில் அவருக்குக் நிகழ்ந்த அவமானங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்துபோனார்.
    இவா்களால் இந்து வீரா்களை திரட்டி ஏன் அக்பருக்கு எதிரான புரட்சியைச் செய்ய முயலவில்லை .இந்துக்களுக்க அமைப்பு ரீதியில் திரள தொியாது. முஸ்லீம்களுக்கு அந்தகாலமே அந்த கலை தெரியும். இந்த ஒரு அம்சம்தான் வெற்றி தோல்வியை நிா்ணயம் செய்கின்றது.நம்மிடையே விரயம் அதிகம் உள்ளது.

  4. இந்துக்களுக்கு அமைப்பு ரீதியாக திரளத்தெரியாது? காரணம் என்ன தெரியுமா? ஜாதிகள்!!! இந்துமதத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஜாதிகள், இந்துமதத்தின் உயிர் நாடியான ஜாதிகள் ஒருவரோடு ஒருவரை சேர விடாது, ஜாதீய ஏற்றத்தாழ்வினால் ஒரு ஜாதி ஆட்களுக்கு பிரச்சனை என்றால் மற்றோரு ஜாதி ஆட்கள் வரமாட்டார்கள்.ஆனால் இஸ்லாமில் இந்துமத்தைப்போல மிக ஆழமான ஜாதி பிளவுகள் கிடையாது, அதனால் அவர்களில் ஒருவருக்கு பிரச்சனையென்றாலும் அனைவரும் ஒன்றுகூடிவிடுவார்கள், அந்த தைரியம் இந்து என்று கூறிக்கொள்ளும் ஒருவருக்குக்கூட கிடையாது.
    முதலில் இந்து மதத்தின் ஜாதிகளை ஒழித்துவிட்டு அப்புறம் கேளுங்கள், ஏன் இந்துக்கள் அமைப்புரீதியாக திரளமாட்டேன்என்கிறார்கள்யென்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *