<< தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>
தொடர்ச்சி..
அக்பரின் சர்வாதிகார மனப்பான்மையையும், கல்வியறிவற்ற, பிறரை நிர்பந்தம் செய்யும் மனப்பான்மையையும் விளக்குவதற்காக, வரலாற்றாசிரியர் கர்னல் டோட் கீழ்க்கண்ட விசித்திரமான நிகழ்வொன்றைக் கூறுகிறார்.
“அக்பரின் மனைவியான ஜோதாபாய் மரணமடைந்தபிறகு, தன்னைச் சுற்றியுள்ள அத்தனை பேர்களும் தங்களின் தாடி, மீசையை மழித்துக் கொள்ள உத்தரவிடுகிறார் அக்பர். அதைக் கட்டாயமாக நிறைவேற்றவேண்டும் என்பதற்காக அரசவை நாவிதர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
ஹதாஸ் (ராவ் போஜ்) என்பவரின் இடத்திற்கு நாவிதர்கள் வந்தபோது தன்னுடைய ஆண்மையின் அடையாளமான தனது தாடி-மீசையை மழிக்க மறுத்து அவர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார், ஹதாஸ். ராவ் போஜின் இந்த எதிர்ப்பையும், அவரது வசைபாட்டையும் அக்பரின் காதுக்குக் கொண்டு செல்லும் அவரது எதிரிகள், ஜோதாபாயின் மரணத்தை அவர் அவமதித்துவிட்டதாக அவரிடம் வத்திவைக்கிறார்கள்.
ராவ் போஜ் அக்பரின் படைத்தலைவர்களில் ஒருவர். அக்பருக்குப் போரில் பலவெற்றிகளை ஈட்டித் தந்தவர். இருந்தாலும் அதனையெல்லாம் புறந்தள்ளிய அக்பர், ராவ் போஜை உடனடியாக சக்கரத்தில் கட்டி, அவரது மீசையை மழிக்க உத்தரவிடுகிறார். ராவ் போஜின் ஹதாஸ் இனத்தவர்கள் ஆயதங்களுடன் அதை எதிர்க்கத் தயாராகிறார்கள். அக்பரின் ஆதரவுப் படைகள் அவர்களுடன் போர்புரியத் தயாராக, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அக்பர் உடனடியாக அங்கு சென்று அனைவரையும் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.”
இஸ்லாமிய அரசர்களின் அந்தப்புரத்திற்குத் தங்களின் பெண்களை ஒப்படைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ராஜபுத்திரர்கள் தங்களின் சுயமரியாதையை இழந்து வாடிக்கொண்டிருந்தார்கள். வீரர்களான ராஜபுத்திரர்கள் தங்களது பெண்கள் தங்களின் குலவழக்கப்படி ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு மணம்முடிக்க இயலாமல் முஸ்லிம்களின் விபச்சாரிகளாக இருக்கும் நிலைகண்டு மனதுக்குள் குமுறிக்கொண்டிருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் ஹதாஸ்களின் மீசை-தாடியை மழிக்கச் சொன்னது அவர்களின் கோபத்தை இன்னும் தூண்டியது.
ஆனால் நரியைப்போன்ற தந்திரகுணமுள்ள அக்பர், தனது உத்தரவிற்காகக் காத்துநிற்கும் ராஜபுத்திரர்களை, அவர்கள் வீரர்களாக இருந்தாலும், அவர்களின் தலைமுடியையும், மீசையையும், தாடியையும் மழிக்கச் செய்துஅவமானப் படுத்துவதற்காகவே இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. உறவினர் எவரும் இறந்துவிட்டால் குலவழக்கப்படி தலைமுடியை மழித்துக் கொள்ளும் ஹிந்துக்களான ராஜபுத்திரர்கள், அக்பரின் இந்தக் கட்டாயப்படுத்துதலை விரும்பவில்லை.
பிறரைக் கொல்வதையும், கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் வசிப்பவர்களை படுகொலை செய்வதனையும் ஒரு பொழுதுபோக்காகவும், மற்ற பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பும் ஒரு தந்திரமாகவும் செய்து வந்தவர் அக்பர். இதனை விடவும் குரூரதையுள்ள மனிதன் எவனும் இருக்க முடியுமா என்ன?
வரலாற்றாசிரியர் ஃபரிஷ்டா, “அக்பரின் மகனான இளவரசன் முராத் மிர்ஸா அளவுக்கதிகமான போதைமருந்து உட்கொண்டதால் மரணமடைந்து ஷாபூரில் புதைக்கப்பட்டான் (அந்தப் பிணம் பின்னர் அங்கிருந்து எடுக்கப்பட்டு தில்லியிலுள்ள அவரது பாட்டனான ஹுமாயுனின் கல்லறையில் புதைக்கப்பட்டது). அந்தத் துக்கத்திலிருந்து தனது மனதை மாற்றுவதற்காக மட்டுமே அக்பர் தக்காணத்தின்மீது படையெடுக்க முடிவு செய்கிறார்” என்கிறார்.
ஆக, கொலையும், கொள்ளையும் மட்டுமே தனது கவலைகளைத் தீர்க்கும் என நம்பிய பேரரசர் அக்பர் ஒருவாராகத்தானிருக்கும்.
நாகர்கோட்டைப் பிடித்த அக்பரின் படையினர் அங்கிருந்தவர்களுடன் ஏராளமான பசுக்களையும் கொன்றனர். கொல்லப்பட்டவர்கள், மற்றும் பசுக்களின் ரத்தத்தைத் தங்களின் காலணிகளில் நிரப்பி அங்கிருந்த ஆலயத்தின் கதவுகளின் மீதும், சிலைகளின் மீது தெளித்தனர். மத ஒற்றுமைக்குப் பாடுபட்டதாக நமக்குக் கற்பிக்கப்படுகிற அக்பரின் அக்கிரமங்களில் ஒன்று இது.
இஸ்லாமிய அடிப்படைவாத, சுன்னி முஸ்லிமான அக்பர், இந்துக்களை மட்டுமல்லாமல் இஸ்லாமின் பிறபிரிவினரையும் விட்டுவைக்கவில்லை.
“அக்பர் இலாஹிக்கள் எனப்படும் ஷேக்குகள் பலரை சிறைப்பிடித்தார். இந்த இலாஹிக்கள் இஸ்லாமில் இருப்பது போன்ற சில சட்டங்களையும், வழி முறைகளையும் உருவாக்கிக் கொண்டு அதனைப் பின்பற்றி வந்தனர். அக்பர் இலாஹிக்கள் தங்களின் நம்பிக்கைகளைத் துறந்துவிட்டு மீண்டும் உண்மையான இஸ்லாமிற்குத் திரும்பத் தயாரா? என அவர்களிடம் கேட்டார். அதற்கு மறுத்த அவர்கள் அடிமைகளாக காந்தஹாருக்கு அனுப்பப்பட்டு, அங்கு துருக்கிய துப்பாக்கிகளுக்குப் பதிலாக விற்பனை செய்யப்பட்டனர்”. அக்பரின் பரந்தமனப்பான்மைக்கு இந்தச் சம்பவமும் ஒரு சான்றே.
மத ஒற்றுமையைப் பேணிக்காப்பதற்காகவும், இனங்களை ஒருங்கிணைப்பதற்காகவும் அக்பர் பல திருமணங்களைச் செய்து கொண்டார் என்பது நமக்கு மீண்டும், மீண்டும் சொல்லப்படுகிறதொரு செய்தி.
இனிவரும் அத்தியாயங்களில் அந்தத் திருமணங்கள் அனைத்துமே அக்பர் தனது ஆயுதபலத்தை உபயோகித்து, பிற அரசர்களை மிரட்டி, அவர்களின் பெண்களைக் கட்டாயத் திருமணம் செய்து கொண்டவை என்பதனை விளக்கமாகப் பார்ப்போம்.
போரில் தோற்கடிக்கப்பட்ட ஹிந்து அரசர்களின் பெண்களை கட்டாயத் திருமணம்செய்து தூக்கிச்சென்று அவர்களைத் தனது அந்தப்புரத்தில் அடைத்துவைக்கும் குரூரனானஅக்பர், அந்தப் பெண்கள் தனது அந்தப்புரத்திற்கு வந்தபிறகு அவர்களின் பெற்றோர்களைக்கூடப் பார்க்க அனுமதிக்காத கொடிய மூடன். ஜெய்பூர் அரசரான ராஜா பர்மானில் மகளை இவ்வாறு திருமணம்செய்துகொண்ட அக்பர், அதற்குப் பிறகு ஒரே ஒரு முறை மட்டுமே அந்தப் பெண் தனது பெற்றோர்களைப் பார்க்க அனுமதித்தார். அந்தப் பெண்ணுடைய மற்றும் அவர்களின் பெற்றோர்களின் மனம் எத்தனை துக்கங்களை அனுபவித்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே மனம் கூசுகிறது.
வரலாற்றாசிரியர் ஸ்ரீவத்சவ், “பேரரசரின் ஹிந்து மனைவியான ஜெய்ப்பூர் இளவரசி அவளது இறந்து போன சகோதரனான பூபதியின் மரணத்திற்கு துக்கம் விசாரிப்பதற்கு மட்டும் ஒரே ஒருமுறை அவளது பெற்றோரின் இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டாள்,” என்கிறார்.
இதன்மூலம் அக்பரின் அந்தப்புரத்திற்குக் கொண்டு சென்று அடைத்துவைக்கப்பட்ட அத்தனை பெண்களும் வாழ்நாள் முழுவதும் சிறைக்கைதிகளைப்போல நடத்தப்பட்டு மூடிவைக்கப்பட்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. ஒருமுறை உள்ளே நுழைந்த எந்தப் பெண்ணும் மீண்டும் உயிருடன் திரும்பவில்லை.
நமக்குக் கற்பிக்கப்பட்டது போல அக்பர் எல்லா மதங்களையும் நேசிக்கிற ஒரு மனிதனில்லை. அவரின் ஹிந்து வெறுப்பு அதீதமானது. அவரது அரசவைக்கு வந்த கிறிஸ்தவ பாதிரிகளுக்கு ஹிந்துக்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொடுத்த கயவன் அவர்.
இதனைக் கூற வரும் ஸ்ரீவத்சவ், “நகரின் பிரபல ஹிந்து ஒருவரின் வீடுகள் அவரிடமிருந்து பிடுங்கப்பட்டு, கிறிஸ்தவப் பாதிரிகள் புதிதாக மதம்மாறிய கிறிஸ்தவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் பொருட்டு கொடுக்கப்பட்டது. போர்த்துக்கீசியப் பாதிரியான சேவியர், அக்பரின் உத்தரவின் பேரில் ஆக்ராவின் பல வீடுகளைக் கைப்பற்றி அந்த வீடுகளில் லாகூர் மிஷன் நடத்தப்பட்டது. அந்த வீடுகளுக்குச் சொந்தமான ஹிந்துக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டார்கள்,” என்கிறார்..
ஒரு மனிதனின் குணத்தை அவனது சிந்தனை மற்றும் நடவடிக்கைகளைக் கொண்டு எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே நடக்கும் சண்டையைப் பார்ப்பதிலும், அங்கு சிந்தப்படும் ரத்தத்தைக் கண்டு மகிழ்வதிலும் அக்பருக்கு மிகுந்த ஆர்வமிருந்தது.
முகலாய அரசில் பயணம் செய்த கிறிஸ்தவப் பாதிரியான மான்சராட் (Monserrate), தான் ஆக்ராவுக்குச் சென்றிருக்கையில் அக்பர் கிறிஸ்தவ பாதிரிகளை அப்படியான ஒரு சண்டையைப் பார்க்க அழைத்ததையும், அது தங்களின் மதநம்பிக்கைக்கு எதிரானது என்று சொல்லி அந்தப் பாதிரிகள் மறுத்ததால் அக்பர் வருத்தமடைந்ததனையும் குறிப்பிடுகிறார்.
அக்பர் கணவனை இழந்த இந்துக் கைம்பெண்கள் உடன்கட்டை ஏறுவதனை வெறுத்ததாகவும், அதனைத் தடுத்துப் பலபெண்களைக் காப்பாற்றியதாகவும் நாம் படித்திருக்கிறோம். அது அக்பரின் முன்னேற்றச் சிந்தனையைக் காட்டுவதாக மீண்டும், மீண்டும் நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் அப்படியா நடந்தது? அக்பர் தனக்குப் பிடித்த பெண்கள் சிலர் உடன்கட்டை ஏறுவதைத் தடுத்துப் பின்னர் அவரது அந்தப்புரத்திற்கு தள்ளிக் கொண்டு போனதைத் தவிர, உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதே உண்மை.
உடன்கட்டை ஏறும் பெண்ணைத் தனது அரண்மனை உப்பரிகையிலிருந்து கண்டு மகிழவருமாறு அக்பர் கிறிஸ்தவ பாதிரிகளை அழைத்த விவரத்தை கிறிஸ்தவ பாதிரியான மான்சராட் பதிவு செய்திருக்கிறார். “அக்பர் சதி(உடன்கட்டை) ஏறும் ஒரு நிகழ்வைக் காண உடனே வருமாறு பாதிரிகளுக்கு அழைப்பு விடுத்தார். நடப்பது என்னவென்று அறியாத பாதிரிகள் அங்கு சென்று அந்த்க் குரூரமான காட்சியைக் கண்டு வருத்தம் கொண்டனர்”.
ஒரு பெண் உடன்கட்டை ஏறுவதனைக் கண்டு குரூரமகிழ்ச்சி கொள்ளும், அதனைப் பிறருக்கும் காட்டி அவர்களையும் மகிழ்விக்க எண்ணும் ஒருவரா உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடைசெய்ய முயன்றிருப்பார்?
[தொடரும்]