நேற்று பாராளுமன்ற விவாதத்தில் ராகுல் காந்தி பகிரங்கமாக ரஃபேல் போர் விமானம் வாங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லாதது போலவும், நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்த நாட்டை ஏமாற்றுவது போலவும் சொல்லியதோடு மட்டும் இல்லாமல், தானே பிரான்ஸ் நாட்டு அதிபருடன் தனிப்பட்ட முறையில் பேசும் போது, இந்த அரசாங்கம் கூறியது போல எந்த ஒரு ரகசிய ராஜாங்க ஒப்பந்தமும் போடவில்லை என்றும், தேவை பட்டால் இதை எந்த இடத்திலும் தான் சொல்ல தயாராக இருப்பதாக தெரிவித்ததாகவும் சொல்லி பாராளுமன்றத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறார். பிரான்ஸ் நாடு ராகுல் காந்தி சொன்ன அந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்து இருக்கிறது. இந்த சமயத்தில் தான் இந்த குற்றச்சாட்டுகள் பற்றிய முழு தகவலை ஸ்வராஜ்யா பத்திரிக்கை அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறது. அதை அடிப்படையாக வைத்து இந்தப் பதிவை எழுதுகிறேன்.
ராகுல் காந்தி இன்னொரு விஷயத்தையும் சொல்லி இருக்கிறார். அதாவது அவர்கள் ஆட்சி செய்தபோது போட்ட ஒப்பந்தத்தில் இந்த அளவு விலை கொடுக்க தயாராக இல்லை எனவும், இந்த அரசு அதிக விலை கொடுத்து இதை வாங்கப் போவதாகவும் குண்டை வீசி இருக்கிறார். இதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த கட்டுரை விளக்கி இருக்கிறது. பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல் காந்தி இந்த விமர்சனங்களுக்கு ஏதாவது ஆதாரம் வைத்துகொண்டு பேசியதாக தெரியவில்லை. முதலில் இந்த போர் ரக விமானம் வாங்க வேண்டியதன் அவசியம் மற்றும் இதன் தொடக்கம் எங்கே என்பதை பாப்போம்.
2001 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படை (IAF) 126 நடுத்தர மல்டி ரோல் காம்பாட் ஆகஸ்ட் (எம்எம்ஆர்சிஏ) விமானத்தின் தேவையை வெளிப்படுத்தியது, இதில் 18 விமானம் இறக்குமதி செய்யப்பட வேண்டும், மீதமுள்ள 108 விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) தொழில்நுட்பத்தை மாற்றுவதன் மூலம் இங்கேயே உற்பத்தி செய்து கொள்ளலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு இந்த தேவைகளை கணக்கில் கொண்டு திட்டங்களுக்கு கோரிக்கை விடுத்து, இந்திய அரசாங்கம் டெண்டர்களை வரவேற்று இருந்தது. ஆறு உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் ரஃபேல் மற்றும் யூரோஃபையர் டைஃப்பூன் இருவரிடையே தான் போட்டி இருந்தது. கடைசியில் ரபேல் இறுதி வெற்றியாளராக அறிவிக்கப் பட்டது. இந்த அறிவிப்பு செய்யப்பட்ட நாள் 31 ஜனவரி 2012, பின்னர் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் தொடங்கியது. இரண்டு வருடங்களாக தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு என்று சொல்ல படுகிறது.
முதல் காரணம் ரஃபேல் போர் ரக விமானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகிய Dassault ற்கு HAL நிறுவனத்தின் திறமை மீது நம்பிக்கை இல்லாதது. அதுவும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களை உற்பத்தி செய்வது எனபது லேசுபட்ட விஷயம் இல்லை.
இரண்டாவது காரணம் இந்தியா தயாரிப்பு தொழில்நுட்பம் முழுவதையும் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்கு முழுதும் அந்த நிறுவனம் உடன்பட வில்லை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரை அவர்கள் தொழில் நுட்பத்தை தர தயாராக இருந்தனர் ஆனால் design technology ஐ தர மறுத்து விட்டனர். இந்த இரண்டு காரணம் தவிர்த்து மிக முக்கியமான விஷயம் பணம்.
அரசாங்கம் சொல்லி வந்த தொகை சுமார் எண்பது மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் இந்த துறையில் இருக்கும் வல்லுனர்கள் இருநூற்று இருபது மில்லியன் டாலர்கள் ஆகும் என்று சொல்லி வந்தனர். 126 போர் ரக விமாங்களை வாங்கும் செலவு இந்த கணக்கின் படி பார்த்தால் சுமார் முப்பது பில்லியன் டாலர்களை தாண்டும். ஒரு பில்லியன் டாலர் எனபது சுமார் 6000 கோடி ரூபாய். இதை எல்லாம் கணக்கு போட்டு பார்த்துவிட்டு தான் அப்போதைய அரசாங்கம் இந்த போர் ரக விமானம் வாங்குவதை மூட்டை கட்டி பரணில் போட்டு விட்டது.
அதற்கு பின் மோடி ஜெயித்து வந்தார். பிரான்ஸ் நாட்டு அரசோடு அரசாங்க ரீதியாக ஒப்பந்தம் போட்டு 36 போர் ரக விமானங்கள் வாங்குவதாக அதுவும் பறப்பதற்கு தயாராக உள்ள நிலையில் இருக்கும் விமானங்களை நம்முடைய இந்திய ராணுவத்தில் சேர்க்க ஒப்பந்தம் போட்டார். அதன் படி இந்த விமானங்கள் இன்னும் சிறிது மாதங்களில் வந்து இறங்கும். நமது விமானப்படையில் இந்த மாதிரியான போர் ரக விமானங்களின் பற்றாகுறை இருப்பது உலகம் அறிந்த செய்தி. இந்த நிலையில் முதலில் வந்து இறங்கும் விமானங்களும் அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக வந்து இறங்கப் போகும் விமானங்களும் நமக்கு மிக பெரிய பலத்தைத் தரும் என்பதில் துளியும் சந்தேகமே வேண்டாம்.
இப்போது திரு ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளைப் பாப்போம்.
முதலாவதாக அவர் சொன்னது இந்த விமானங்களின் விலை. அடுத்து நிர்மலா சீதாராமன் புளுகியதாக அவர் சொன்ன ரகசிய ஒப்பந்தம் பற்றியது. மூன்றாவதாக பிரான்ஸ் நாட்டு அதிபர் தன்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியதாக அவர் சொன்ன விஷயம். அடுத்து எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனம் இதில் பங்கேற்பது பற்றிய விஷயம்.
முதலில் UPA அரசாங்கம் சொன்ன விலை மிகவும் குறைவான ஒன்று என்று இந்த துறை சார்ந்த வல்லுனர்கள் தெளிவாக ஆதரங்களுடன் சொல்லி விட்டனர். இன்னும் சொல்லப் போனால் நம்மிடம் ஏற்கனவே இருக்கும் அதுவும் வயதான Mirage போர் ரக விமானங்களின் upgradation cost மட்டுமே அரசாங்கம் குறிப்பிட்ட விலையை விட அதிகமாக இருக்கும். அதையும் மீறி இந்த விலைக்கு ரஃபேல் போர் ரக விமானங்களை விற்க தயாராக இருந்தால் அது நிச்சயமாக அதி நவீன தொழில் நுட்பத்தில் இருக்கும் சமீபத்திய விமானமாக இருக்காது என்று ஆணித்தரமாக அந்த வல்லுனர்கள் பத்திரிக்கைகளில் எழுதி விட்டனர்.
ஆனால் இப்போது மோடி அரசாங்கம் வாங்க இருப்பதோ அதி நவீன தொழில் நுட்பத்தில் தயாராகி கொண்டிருக்கும் விமானங்கள். அதிலும் பார்த்தோம் என்றால், இவர்கள் பழைய விமானங்களுக்கு செலவிட வேண்டிய பணத்தை விட வெறும் ஐந்து மில்லியன் டாலர்கள் மட்டுமே இதற்கு அதிகம். அது மட்டும் இல்லாமல் நமக்கு சாதகமாக என்னென்ன தேவைப்படுமோ அத்தனை சரத்துகளையும் நாம் இதில் உடன்பட வைத்து இருக்கிறோம். அதாவது இந்திய விமான படைக்கு தேவையான நம் பாதுகாப்பிற்கு தேவையான model, தேவையான பயிற்சி மற்றும் ஐந்து வருடங்களுக்கு உண்டான பராமரிப்பு மற்றும் இதில் ஏதாவது குறை இருந்தால் இந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யும் சரத்து.. எகிப்து மற்றும் கத்தார் போன்ற தேசங்கள் என்ன விலைக்கு இந்த விமானங்களை வாங்கினரோ கிட்டத்தட்ட அதே விலைக்குத் தான் நாமும் வாங்கி இருக்கிறோம். எல்லாவற்றையும் விட நமக்குத் தேவையான மாற்றங்களுடன்.
பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் ராஜாங்க ரீதியான இரகசிய ஒப்பந்தம் பழைய காங்கிரஸ் அமைச்சர் அந்தோனி சார்பில் கை எழுத்து இடப்பட்டது என்று கூறி அந்த ஒப்பந்தத்தையும் காண்பித்து விட்டார். பிரான்ஸ் அரசாங்கமும் தெளிவாக ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சொன்னதாக சொன்ன தகவலை மறுத்து விட்டது. இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பிரான்ஸ் அதிபர் சொல்கிறார் – “எந்த ஒரு நாடும், ஒரு ஒப்பந்தம் மிக முக்கியமான வணிக நலன்களை உள்ளடக்கியதாக இருக்கும் போது, ஒப்பந்தத்தின் விவரங்களை பொதுப்படையாக கொடுக்க விரும்புவதில்லை. வர்த்தக ஒப்பந்தங்களின் விவரங்கள் போட்டியிடும் நிறுவனங்களுக்கு தெரியாதபடி செய்யப்பட வேண்டும். அதனால் நிறுவனங்களின் நலன்கள் பாதிக்கலாம், எனவே தான் இரகசியம் காக்க படவேண்டும். இது எல்லா தொழிலுக்கும் பொருந்தும்”.
இப்படி சொன்ன அதிபர், இந்த ரகசிய உடன்படிக்கை ஷரத்துகள் இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு இடையே எதாவது சந்தேகத்தை விதைக்கும் என்றால், அதனால் மோடி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு இருக்கும் என்றால், அந்த தகவலை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், பிரெஞ்சு ஜனாதிபதியின் கூற்று படி, இந்த ரகசிய ஒப்பந்தம் பற்றிய சரத்து இந்திய அரசாங்கத்தின் விருப்பத்திற்கு உட்பட்டு இருக்கின்ற ஒன்று. இன்னொரு விஷயம் பிரஞ்சு அரசாங்கம் பகிரங்கமாக, தண்டோரா போட்டு எல்லா தகவல்களையும் பொது வெளியில் பகிர்ந்து கொள்ள உரிமம் வழங்கவில்லை என்று தெளிவாக சொல்லி இருக்கின்றனர். அவர்கள் இரகசியத்தை விரும்புகிறார்கள் என்பது கண்கூடான நிஜம். புத்தி இருக்கும் எல்லோரும் அப்படி தான் நடந்து கொள்வர்.
ராகுல் காந்தியின் பேச்சு spirited defensive speech என்று நான் பதிவிட்டதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. காரணம் அவரை ஓட்டி தள்ளியது போல வேறு எந்த தலைவரையும் இது வரை யாரும் செய்தது இல்லை. எவ்வளவு அடி வாங்கினாலும் இவன் தாங்குறானே. ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாம்மா என்கிற வடிவேலு பரிதாபம் மேலோங்குவது தவிர்க்க முடிய வில்லை.
ஆனால் இந்த ஸ்வராஜ்யா பத்திரிக்கை கட்டுரை கூறுவதே உண்மையான தகவல்கள். இது எல்லோருக்கும் போய் சேர வேண்டும். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த ஒரு அரசியலும் கலக்க கூடாது என்கிற எண்ணத்தில் தான் இந்தப் பதிவை எழுதியுள்ளேன்.
(ஸ்ரீராம் TKL தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
ராகுல் காந்தி ஒரு பக்குவம் இல்லாத சிறுபையன். போா் விமானங்கள் குறித்த எந்தவிசயத்தையும் பகீரங்கமாக விவாதிப்பது தவறு. விலை போன்ற சிறு தகவல்கள் கிடைத்தால் கூட எதிரி ராணுவத்தினா் விமானத்தின் தரம் தொழில் நுட்பம் திறன் போன்றவற்றை மதீப்பீடு செய்து விடுவார்கள்.இது போன்ற தகவல்கள் கிடைத்தாலே அவர்கள் தக்க எதிா் நடவடிக்கை எடுத்து விடுவார்கள். ராணுவ நடவடிக்கைளில் ரகசியம் மிக முக்கியம்.
இந்த மிகச் சாதாரண விசயம் கூட தெரியாத ஒரு கைநாட்டுப்போ் வழி வருங்கால பிரதமா் கனவோடு நாட்டை உலா வருகின்றாா். 50 மாடுகளைக் கொடுத்தால் கூட ஒழுங்காக மேய்க்க இவரால் இயலாது.பாவம் 45 வயதிற்கு மேல் ஆகிவிட்டது.ஒரு இந்திய பெண்ணை பார்த்து இவருக்கு திருமணம் செய்து வைக்க நாதியில்லையா ?
இல்லை இவரும் தகப்பன்போல் ஸபெயின் நாட்டு பெண்ணை திருமணம் செய்து விட்டாரா ? இந்த உண்மையை ராகுல் தொிவிப்பாரா ?