ஆச்சி மசாலாவானது ஸ்ரீரங்கம் கோவிலுக்குள்ளே விளம்பரம் செய்திருக்கிறது. எனவே கோவில் அறங்காவலரை தூக்கு என இங்கே சில பல ஆட்கள் கொதித்திருந்தார்கள். அவர்களிடம் ஒரு கேள்வி –
இது போல் இன்னும் பல நிறுவனங்கள் இருக்கிறதே அது தெரியுமா?
எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டிலே ஒரு பெரிய நிறுவனம் குறிப்பிட்ட மதத்திற்கு ஆன சேவையை பல இடங்களிலே பகிரங்கமாகவே செய்துவருகிறது. நாம் நடத்தும் மாதாந்திர வெளியீடுகளிலேயே அதன் விளம்பரம் உண்டு. சில பல கோவில்களிலேயும் விளம்பரம் உண்டு. கண்டுபிடிக்க முடியாட்டி ஒரு சின்ன துப்பு தர்றேன். சென்னை புத்தகண்காட்சியிலே பார்த்திருக்கலாம். எனக்கே அப்படித்தான் தெரிந்தது.
மற்ற மதங்கள் கார்ப்பரேட்டுகள் போல ஆள் அம்பு, பணபலம், திட்டம் வகுத்தல் என இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்துக்களோ இன்னும் குடிசைத்தொழிலாகவே இருக்கிறார்கள்.
இது தான் வித்தியாசம். எனவே இதை வைத்துக்கொண்டு எளிதிலே ஏமாற்றி விடலாம் என இயங்கும்போது நாம் என்ன செய்கிறோம்?
தெரியாமல் ஏமாந்த ஆட்களையும் போட்டு அடிக்கிறோம். முன்பு இந்த மதமாற்ற கொள்ளையர்கள் இந்தியாவுக்குள்ளே வந்த போது பிராமணர்கள் மீது இறைச்சியையோ அல்லது ரத்தத்தையோ வீசிவிடுவார்களாம். மற்ற பிராமணர்கள் அவரை ஒதுக்கிவிடுவதால் வேறு வழியில்லாமல் மதம் மாறி வாழவேண்டியிருக்குமாம். அப்படி எவ்வளவோ பேரை மதம் மாற்றினார்களாம்.
அதே போல் இன்றைக்கு பேரை மறைத்து வெறும் விளம்பரம் என கொடுக்கும்போது ஏமாந்த ஆட்களையும் மதம் மாறு என துரத்தி விடுகிறோம். வெளங்குமா?
வியாபாரத்திலே இப்படி பார்ப்பது மிகவும் கடினம். அப்படி பார்த்தால் பெட்ரோல், டீசல் எதுவுமே நாம் வாங்கமுடியாது. அவிங்களும் நாம் விளைவிக்கும் அரிசி, பருப்பு, கோதுமை என ஏதும் வாங்கி சாப்பிட முடியாது.
ஆனால் இந்த கார்ப்பரேட் முறையிலே செய்யப்படும் மதமாற்றத்தை தடுப்பது எப்படி? நாமும் இதே போல் ஒருங்கிணைந்த முறையிலே செய்யலாமா என கேட்டால் அது நடக்காது.
ஏன்? எல்லா விஷயத்தையுமே மையப்படுத்தப்பட்ட (centralized) திட்டமாக செய்ய முடியாது. சிலதுகள் குடிசைத்தொழிலாகவே தான் இருக்கும். சிலதுகளை கார்ப்பரேட் முறையிலே மட்டுமே செய்யமுடியும்.
எடுத்துக்காட்டு உணவு தயாரிப்பது. விவசாயம். ஹோட்டல் நடத்துவது.
ரிலையன்ஸ் போல ஒரு ஓட்டல் நடத்த முடியுமா? கே எப் சி, பீசா ஹட், போல நடத்தினாலும் பொரிப்பது, சுடுவது எல்லாம் அந்த இடத்திலேயே குடிசைத்தொழிலாகவே செய்தாகவேண்டும். மாவு முன்னமே அரைத்து வைத்திருப்பது போல வேண்டுமானால் பீசாவுக்கு மாவு பிசைந்து வைத்துக்கொள்ள்லாம்.
மதம் என்பதோ அதை விட சிக்கலானது. உணர்வு சம்பந்தப்பட்டது. மாவு அரைத்து வைப்பது போலக்கூட எதையும் செய்யமுடியாது.
அதை எப்படி வணிகம் ஆக்குவது? ஒரே வழி ஏமாத்துவது தான். புரியும்படியாக சொன்னால் விளம்பரம்.
இன்றைக்கு கார்ப்பரேட் விற்பனை உத்திகள், விளம்பர உத்திகள், நுணுக்கங்கள், நுட்பங்கள் எல்லாமே கிறிஸ்தவர்களின் மதம் மாற்றும் முயற்சியிலே இருந்தே வந்தவை. வியாபாரம் மற்றும் வணிகம் படித்த ஆட்களால் இதை பார்த்தவுடனேயே புரிந்து கொள்ளமுடியும்.
என்ன மொபைல், துணி என விற்பதற்கு பதிலாக கடவுள் என சொல்லி விற்பார்கள், அவ்வளவு தான்.
கதை கட்டிவிடுவது, தூயவராக புனிதராக காட்டுவது எல்லாமே போர்ப்பயிற்சிகள் போல காலங்காலமாக பரிசோதிக்கபட்டு பயிலப்பட்டு தெளிவாக அமைக்கப்பட்டவை.
அதே விஷயத்தை நாமும் செய்தால் வெல்லுமா என்பது இருக்கட்டும். இப்போதே வெல்லுகிறதா என்பதைப் பார்க்கவேண்டும்.
இதைச் சொல்லும்போதே குறிப்பிட்ட மதங்கள் 2% இருக்கின்றன, 4% மட்டுமே இருக்கின்றன, எனவே பிரச்சினை இல்லை என சொல்ல வரவில்லை. என்னதான் விளம்பரம் செய்தாலும் ஓரளவுக்குத்தான் ஏமாற்ற முடியும். வெறும் விளம்பரம் சலிப்பையே தரும்.
விளம்பரத்தால் வெல்ல முடியாவிடில் அடிப்பது பணத்தை கொண்டு. ஏழ்மையை மட்டுமல்ல, தொடர்புகளையும் பயன்படுத்துகிறார்கள். வணிகத்திலே நெட்வோர்க்கிங் என சொல்லப்படும் தொடர்புகள் மிக முக்கியம். அதிலே இருந்து தான் தகவல்களும் அறிமுகங்களும் கிடைக்கும். அதை செவ்வனே செய்து தற்காத்துக்கொள்ள முயல்கிறார்கள்.
நாம் அதை செய்ய முடியுமா? செய்ய மாட்டோம். அடுத்தவனை கெடுத்து அதிலே சொறிந்து சுகம் காண்பதை இந்த ஸ்ரீரங்கம் வழக்கிலேயே பார்த்தாயிற்று.
மாட்டுக்கறி தின்பவன் காலிலே போய் விழுந்தாலும் விழுவோமே தவிர, அவன் காறித்துப்பினாலும் நக்கி சுகப்படுவோமே தவிர, பங்காளிக்கு சொந்தக்காரனுக்கு ஒரு சின்ன உதவி செய்யாவிட்டாலும் துன்பம் கொடுக்காமல் இருக்கமாட்டோம்.
வெறும் மதம் மாற்றம், விளம்பரம் செய்கிறார்கள், ஊருக்கு ஊர் வருகிறார்கள் என்பதையே பார்க்கும் நாம், அவர்கள் மறைமுகமாக வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பது, கடன் உதவிகள் செய்வது, படிப்புக்கு, நோய் வந்தால் உதவி செய்வது என்பதைப் பார்ப்பதில்லை, அல்லது கண்டும் கவனமில்லாமலிருக்கிறோம்.
சாதிக்கட்டமைப்பு இருக்கும் வரை இங்கேயும் அது இருந்தது.
சாதி, நிறுவன மதம் இரண்டையுமே நான் அரசு அமைப்பாக, நிர்வாக அமைப்பாகவே பார்க்கிறேன். ஜனநாயகம், சோசிலிசம் போல.
இப்போது நாம் சாதிக்கட்டமைப்பை பெருமளவு விட்டாயிற்று. மத கட்டமைப்பையும் நேர்த்தியாக செய்யமுடியவில்லை. இதைவிடகொடுமையாக, சாதி அமைப்பின் கெட்ட அம்சமான ரத்தப்பகை, பழிவாங்குதலை வைத்திருக்கிறோம். நல்லதை விடுத்து கெட்டதை மட்டும் வைத்துக் கொண்டிருக்கிறோம்.
அப்புறம் எப்படி எதிர்கொள்வது?
பரப்புரை செய்ய வருபவர்களை விரட்டிவிடலாம். பதிலடி கொடுத்துவிடலாம்.
ஆனால் நம்மில் நலிந்தோருக்கு உதவி? தேவையிக்கும் குடும்பங்களுக்கு உதவியும் ஆறுதலும்? முன்னேற துடிக்கும் இளைஞர்கள் இளைஞிகளுக்கு வழிகாட்டுதல்?
இதை யார் செய்வது?
காசைக் கொட்ட நமக்கு தெரிந்தது எல்லாம் ஒரே இடம்தான் – கோவில்.
அங்கே கொண்டு போய் சம்பாதிச்ச காசை கொட்டவேண்டியது. கொள்ளையடிக்கறவன் வந்து அடிச்சிட்டு போயிடுவான். நாம லபோ திபோன்னு புலம்பவேண்டியது தான். 1200 வருசத்துக்கு அப்புறமும் அறிவு வரலைன்னா?
அந்தக்காலத்திலே கோவிலிலே கொட்டினார்கள் என்றால், அங்கே கல்வி கற்பிக்கும் சாலைகள், ஆதுர சாலைகள், சோறிடும் இடங்கள் என ஒரு தனி அரசாங்கமே இயங்கிக் கொண்டிருந்தது. இன்றைக்கு இன்சூரன்ஸ் போல, கோவிலே கொண்டு போய் கொடுத்துவிட்டு, தேவை என்றோ பஞ்சம் என்றோ வரும்போது அங்கே தஞ்சமடைந்து சமாளித்து வாழ்ந்தார்கள்.
இன்றைக்கு அதை அல்லவா நாம் செய்யவேண்டும்?
காஞ்சி மடம் பல்கலைகழகம் கட்டியது மட்டுமே எனக்குதெரிந்த ஒன்றே ஒன்று. சித்தியடைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அவர்கள் அந்த தவறுக்காக தண்டிக்கப்பட்டார்.
மாதா அமிர்தானந்தமயி போன்றவர்களே இதைப் புரிந்து செயல்படுகிறார்கள். கோயமுத்தூரிலேயே கட்டியிருக்கிறார்கள். இங்கே மேல்மருவத்தூர் பங்காரு அவர்களும் கல்லூரி கட்டியிருக்கிறார்.
இவர்களோடு சேர்ந்து செயல்பட யாரேனும் என்ன முயற்சியேனும் எடுத்ததுண்டா?
கிடையாது, கிடையவே கிடையாது. ஏன்னா அகங்காரம் ஆணவம். பரம்பரையாக வந்த ஆட்கள் இன்றைக்கு அவர்களிடம் போய் நிற்பதா? அதற்கு மாட்டுக்கறி தின்பவன் காலிலேயே விழுந்தால் என்ன எனும் கொள்கை கோட்பாடு.
அந்ட குருமார்களது சமயக் கொள்கையை முழுவதும் ஏற்கவேண்டும் என்பதில்லை, இதிலே மட்டுமாவது இணைந்து செயல்படலாமே?
சத்யசாயி பாபாவும் ஏகப்பட்டது தொண்டுகள் செய்தார். அவரை பிடிக்கவில்லை, நம்புகிறீர்கள் நம்பாமல் போகிறீர்கள் என்பதெல்லாம் வேறு விஷயம். தொண்டை ஒரு சொல் பாராட்டிச் சொல்லக்கூட முடியாது என்றால்?
இந்த, “சமயரீதியாகப் பின்பற்றினால் மட்டுமே சொல்லுவேன்” என்றால் யாரும் யார் செய்வதையும் சொல்லமுடியாது. ஏன்னா இங்கே இருப்பது அத்துணை பிரிவுகள், அத்துணை வழிபாட்டு முறைகள்.
கத்தோலிக்க சர்ச் உலகம் முழுவதும் எவ்வளவு பல்கலைகழகங்கள், கல்லூரிகள் நடத்துகிறது என பாருங்கள். அதை எப்படி எதிர்கொள்வது?
எனவே, சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) போல, எதிலே ஒத்துவருமோ அதில் இணைந்து செயல்படுவோம் என ஆரம்பித்தால் ஒழிய, இந்த கார்ப்பரேட் வணிக மதம் மாற்றலை தடுக்கமுடியாது.
தெரிந்தோ தெரியாமலோ வேறு வழின்றியோ ஏமாந்த ஆட்களை உதைத்து, எதிரிகளிடம் தள்ளிவிட்டு, நமக்கு நாமே குழி தோண்டுவதை விடுத்து, அவர்களுக்கு புரியவைத்து, திருத்தி, அரவணைத்து செல்லவேண்டும்.
நமக்குள்ளே இருக்கும் பிரச்சினைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும்.
வீம்புக்கு வேட்டையாடுவதால் எந்த பிரயோசனமும் இல்லை.
(ராஜா சங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
பல விஷயங்கள் இங்கு சொல்லப்படுகின்றன. மறு மொழி சற்று சிரமம்.
1. மத மாற்றம் என்பது கிறிஸ்தவர்களின் அடிப்படைக் கொள்கை.கல்வி அதற்கான சிறந்த கருவி என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். 1836ல். மெக்காலே புகுத்திய கல்விமுறையின் அடிப்படை அம்சமே இதுதான்: வெளிப்படையான மதமாற்ற முயற்சியின்றி, கல்வி ஒன்றினாலேயே ஹிந்துக்களை மாற்றுவது. இதில் பெருமளவு வெற்றிகண்டுவிட்டனர். இன்று இந்தியாவின் ஜனத்தொகையில் 50%கு மேலும் இருப்பவர்கள் 25 வயதிற்கு உட்பட்டவர்களே. இவர்கள் மெக்காலே வழிக் கல்வி கற்றவர்கள். இவர்களில் எத்தனை ஹிந்துக்கள் உண்மையான ஹிந்துக்கள்? எல்லாம் பெயரளவில்தான். Their basic approach to life is secular ie non-religious
Western orientation.
2 ஆங்கிலேய ஆட்சியில் மிஷினரிகள் சுதந்திரமாகச் செயல்பட்டனர். சுதந்திர இந்தியாவில் ‘மைனாரிடிகள்’ என்ற பெயரில் மேலும் சுதந்திரமாக இயங்குகின்றனர்.
3.ஹிந்து சமய அமைப்புகளுக்கு நவீன பாணி பொதுக்கல்வியில் ஆர்வம் இருந்ததில்லை; இன்னமும் இல்லை. சில தனியார் முயற்சியினால் சில பள்ளி, கல்லூரிகள் துவக்கப்படன. ஆனால் செக்யூலர் என்ற பெயரில் மத்திய அரசும், ஹிந்துமத விரோதப்போக்கை கொள்கையாகக் கொண்ட மாநில அரசும் ஹிந்துக்களின் கல்விமுயற்சிகளுக்கு ஆதரவு தருவதில்லை. மீறி முயல்பவர்கள் அவதூறுக்கும் அல்லலுக்கும் ஆளாவார்கள். இன்று கல்வித்தூறை அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் ஜாகீராக மாறிவிட்டது. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் அவர்கள் மதத்தைப் பற்றிப் பேசுவது போல் ஹிந்துக்கள் நடத்தும் நிறுவனங்களில் ஹிந்துக்கள் பேச முடியாது. ஹிந்துக்களுக்கு கல்வி விஷயத்தில் முழு சுதந்திரம் இல்லை.
4. Society of Jesus [Jesuits] 16ம் நூற்றாண்டில் ஸ்பெயினில் துவங்கப்படது. மதம் மாற்றுவதுதான் இதன் முக்கிய குறிக்கோள். இதற்காக கல்வித்துறையைத் தேர்ந்தெடுத்தார்கள். இன்று 112 நாடுகளில் செயல்படுகிறார்கள். கல்வித்துறை கைவசம் இருப்பதால் கார்பொரேட் உத்திகள் அத்துபடி. ஆனாலும் பல நாடுகளில் [இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா உட்பட] அவர்கள் ‘ஒரு மாதிரி’யாகவே பார்க்கப்படுகிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில்தான் அவர்கள் செல்வாக்கு அதிகம்.( இங்கு ஒரு ஜெஸ்யூட் பாதிரியார் CBSE தலைவராகவே இருந்தார்!]
Salesians of Don Bosco [SDB] என்ற அமைப்பு 1870 வாக்கில் இத்தாலியில் தோன்றியது. தொழிற் புரட்சியினால் வழிமுறைத் தொழில்களை இழந்து வறுமையில் வாடிய ஏழைகளின் குழந்தைகளுக்கு கல்வி போதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி இன்று உலகில் கிறிஸ்துவ மிஷினரிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது’
ஹிந்துக்களிடையே இதுபோன்ற எந்த அமைப்பும் இல்லை.ராமகிருஷ்ண மடம் கல்வித்துறையில் இருந்தாலும் தங்களை முழு ஹிந்துக்கள் எனக் கூறிக்கொள்வதில்லை. பிறருடன் ஒத்துழைக்க மாட்டார்கள்.
5. மத மாற்றம் இருக்கட்டும். வேறு மதம் போன ஹிந்துக்கள் திரும்பி வருவது கூட இங்கு எளிதல்ல. மோடி அரசே பின்வாங்கியது! பின் ஹிந்துக்கள் என்ன செய்வார்கள்?
6. ஹிந்துக்கள் பொருளாதாரத் துறையில் சிறந்தே விளங்குகிறார்கள். சிறு தொழிலானாலும் சிறக்கவே செய்கிறார்கள். அவர்களுக்கான பிரத்யேகமான அணுகுமுறைகளும் தொழில் நுட்பங்களும் இருக்கவே செய்கின்றன. ஜீனியஸ்களும் இருக்கிறார்கள். இவற்றைப் பற்றி “India Uninc” by Prof. R.Vaidyanathan [Westland,2014], “Indian Models of Economy,Business and Management” by P.Kanagasabapathi [PHI Learning, 2012] ஆகிய புத்தகங்களில் விரிவாகவே காணலாம். ஆனால் இவற்றை சமயத்துறையில் இந்தியாவில் செய்துகாட்டுவது நமது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சாத்தியமல்ல. மோடி அரசே ‘கர்வாப்ஸி” விஷயத்தில் பல்டி அடித்ததே!
7 ஹிந்துக்கள் என்ன சாதிக்க முடியும் என்பதை உலக அரங்கில் ஸ்ரீல பக்திவேதாந்த ப்ரபுபாதர் 12 வருஷங்களுக்குள் செய்துகாட்டினார். பல நாடுகளில் சர்ச்சுகளின் சவாலை எதிர்கொண்டு வெற்றிகண்டார். நியூ யார்க் நீதி மன்ற வழக்கிலும் வெற்றி பெற்றார். தங்கள் வழிக் கல்விமுறை சரியானதே என சட்டப்படி நிலை நாட்டினார்.
இதில் செயல் பட்டது ஸ்ரீ ப்ரபுபாதா மூளையும், படித்த வெள்ளைக்கார இளைஞர்களின் உழைப்பும். ஆனால் நமது அரசும், நீதி நிர்வாக நிலையும் இதற்கு ஆதரவாக இருக்குமா, இந்த முயற்சிகள் இந்தியாவில் வெற்றிபெறுமா என்பது சந்தேகமே.
8. நமது பல்கலைக் கழகங்களில் இடதுசாரிகளின் ஆதிக்கம் ஓங்கி இருக்கிறது. மீடியா, பத்திரிககள் செக்யூலர் எனச்சொல்லித் திரிபவர்களின் பிடியில் இயங்குகின்றன. எந்த விஷயத்திலும் ஹிந்துக்களுக்கு எதிரான போக்கே default நிலையாகிவிட்டது. தமிழ் நாட்டு திராவிட அரசியல் வாதிகள் ஹிந்து மதம் தங்கள் மதம் இல்லை என்பது போன்றும், கிறிஸ்தவ, முகம்மதிய மதங்களுக்கு ஆதரவாகவும் தான் செயல்படுகின்றன. எந்த விஷயத்திலும் ஹிந்துக்களைப் பிரிப்பது மிகவும் எளிதாகிவிட்டது..
9. ஒரு சமூகம் அரசினரின் தயவை நாடாமல் தங்களைத் தாங்களே முன்னேற்றிக்கொள்ள இயலுமா? இயலும் என்பதற்கு பார்ஸி சமூகம் சிறந்த உதாரணமாகத்திகழ்கிறது. நாம் கோயில்களில் கொண்டு கொட்டி அரசியல் பெருச்சாளிகளுக்கு விருந்தாகும் பணம், ஹிந்துக்களின் மறுமலர்ச்சிக்குப் பயன்படவேண்டும்.[ ஸ்ரீமத் பாகவதத்தின் படி, கலி காலத்தில் கோயில்களில் மூர்த்திகள் சான்னித்யம் இழந்துவிடும், தீர்த்தங்கள், தலங்கள் தங்கள் புனிதத் தன்மை இழந்து வியாபாரத் தலங்களாகிவிடும். இதைத்தான் அரசினரின் பிடியில் இருக்கும் ஹிந்துக் கோவில்களில் இன்று நாம் பார்க்கிறோம். பின் அங்கு ஏன் பணத்தைக் கொண்டு இரைக்கவேண்டும்?]
10. கிறிஸ்தவத்திலும் 100க்கு மேற்பட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர்களில் ஒரு பிரிவினர் மற்றவர் சர்ச்சுக்குப் போகமாட்டார். ஆனால் நாம் பொதுவாக கிறிஸ்தவர்களை ஒன்றாகவே பார்க்கிறோம். மத மாற்றம் அவர்கள் அனைவரையும் இயக்கும் பெரிய சக்தியாக இருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் பொதுவானது.
ஹிந்துக்கள் என்றும் ஒரே தலைமையின் கீழ் செயல்பட்டதில்லை. They are divided on the basis of theology and philosophy, though they derive from the same scriptures. Most Hindus are not even aware of the basic foundations or unifying features of their religion.
11. கிறிஸ்துவர்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். பல நாடுகள் அவர்கள் வசம். படைபலம், பணபலம், பத்திரிகை பலம் ஆகியவை மிகுந்தவர்கள்.
இந்தியாவில் எதாவது என்றால், இடதுசாரி-செக்யூலர் அமெரிக்கப் பத்திரிகைகள் கூட வரிந்து எழுதும். ஹிந்துக்களுக்கு இத்தகைய பலம் இல்லை. ஹிந்துக்கள் இருப்பது ஒரே நாடு- அதுவும் ஹிந்து நாடு அல்ல.
12. 1200 வருஷங்களாக ஹிந்துக்கள் சிறு சிறு குழுவாகத்தான் அந்நிய மதத்தினரை எதிர்கொண்டனர், தோல்வி கண்டனர். விஜய நகரப் பேரரசு, சிவாஜி ஆகியவர்களின் முயற்சியினால் தென் பாரதம் சிறிது தப்பிப் பிழைத்தது; ஆனால் ஐரோப்பியர்களின் அரசியல்-பொருளாதார முறைகளினால் நமது சமுதாய வாழ்வியல் ஆதாரங்கள் மாறிவிட்டன. சுதந்திர இந்தியாவில் ஹிந்துக்கள் பல விதங்களில் பிரிக்கப்பட்டு விட்டனர். இங்கு நடப்பது வகுப்புவாத அரசியல்- ஒவ்வொரு கட்சியும் அடிப்படையில் ஒரு வகுப்பினரின்/சமூகத்தினரின் கட்சியே.[ ரஷ்யாவில் பகவத் கீதைக்கு ஏதோ எதிர்ப்பு என்றதும் சில வட இந்தியக் கட்சிகள் அலறின- காரணம் கிருஷ்ணர் யாதவர் என்பதால், கீதை ஹிந்து மத நூல் என்பதால் அல்ல] With the rise of communal consciousness which leads to political power, who is bothered about religion? All parties play the same game. Hindus are in a limbo.
பிரச்சனை முழுவதும் அப்படியே படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள் திரு.நஞ்சப்பா அவர்களே. அருமையான பதிவு. இந்து சமூகத்தின் பிரச்சனைகள் குறித்து இவ்வளவு ஆழமாகவும் அகலமாகவும் தொிந்து வைத்திருக்கும் தங்களின் நல்உள்ளத்திற்கு இந்துக்களை நேசிக்கும்உ யா் பண்பிற்கு என்து வாழ்த்துக்கள்.
கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள் என்பதும், ஹிந்து மதம் ஒரு பெட்டிக்கடை நிறுவனம் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஏன் ஆசிய நாடான சைனா, ஜப்பான் இவர்களின் வாலை ஒட்ட அறுத்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, நம்மால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் அவர்களது தேசப்பற்றும், தங்களது பண்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோளும் எதனாலும் மாறாமல் ஆழ்மனதில் இன்றும் இருப்பதுதான். நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன் அவர்களைப் போல்தான் இருந்தோம் ஆனால் அதை கட்டிக்காக்க தெரியாமல் கடமையை மறந்து உரிமையைக் கொண்டாட ஆரம்பித்தோம் என்பதுதான் நிஜம். ஒன்றுகூடி கொள்ளையர்களை வெளியேற்றி விட்டு இருப்பதைக் கட்டி காக்காமல் பங்குபோட கற்றுக்கொண்டோம். தேசப்பற்றா, பண்பாடா அதெல்லாம் பின்பு பார்த்துக் கொள்ளலாம் எனது பங்கு எங்கே என்று அலைய ஆரம்பித்து நமக்குள் பகைமையை எண்ணெய் ஊற்றி எரியவிட்டோம். இதில் குளிர்காய்வது எப்படி என்று மாற்று மதத்தவர்கள் நன்றாகவே கற்றுக்கொண்டுள்ளனர். அது இன்று எல்லாத் தொழிலிலும் சுய லாபத்திற்காக அரசியலாக்கப் பட்டு தேசியம் பண்பாட்டை கட்டிக்காத்தல் எல்லாம் குப்பையில் போடப்பட்டுள்ளது.
சேதுபதி அருணாசலம் கட்டுரை ”இந்தியர்களின் வரலாற்றுப் பிரக்ஞை -வி.எ.ஸ் நைபால் இதற்கான பதிலைத்தான் சொல்லுகிறது..
வைசியர்களின் பணத்தாசையாலும் – ஷத்திரியர்களின் பதவி ஆசையாலும் தான் அன்னியர்களின் ஆக்கிரமிப்பை அனுமதித்தோம். இவர்களில் பலர் விடுதலை போரில் ஈடுபட்டாலும் இதில் பெரும் பங்கு வகித்தது மற்ற இரு வர்ணத்தவர்கள்தான். அப்பொழுது அடங்கி இருந்த பூதம் விடுதலைக்குப் பின் மீண்டும் மேலே சொன்ன குறிக்கோளுக்காக வெறியுடன் செயல்படுவதுதான் அடிப்படையான காரணம். இவர்கள் ஏழ்மைக்குப் பாதுகாவலர்களாக செயல் படுவதால் மதமாற்றங்கள் அதிகரித்து ஒன்றுபட்ட தேசத்தை மீண்டும் ஒரு விடுதலைப் போருக்கு இட்டுச் செல்கிறது.
Kindly reveal the names of commercial organisations which are supporting Christian conversions. Hindus need not contribute for Hindu causes but at least they can avoid indirectly contributing to conversion efforts by avoiding products from commercial establishments like Aachi masala. We must also boycott, newspapers, tv channels, movies etc ., which are openly critical of Hindu faith. Once their business is hit they will crawl before us. This is only a small sacrifice needed from the Hindus to correct the menace of aggressive Christian conversions. We must also think of using sec 295A more widely against some Christian preachers who openly insult Hindu beliefs and deities.