கார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன?

முன்பு இந்த மதமாற்ற கொள்ளையர்கள் இந்தியாவுக்குள்ளே வந்த போது பிராமணர்கள் மீது இறைச்சியையோ அல்லது ரத்தத்தையோ வீசிவிடுவார்களாம். மற்ற பிராமணர்கள் அவரை ஒதுக்கிவிடுவதால் வேறு வழியில்லாமல் மதம் மாறி வாழவேண்டியிருக்குமாம். அப்படி எவ்வளவோ பேரை மதம் மாற்றினார்களாம். அதே போல் இன்றைக்கு பேரை மறைத்து வெறும் விளம்பரம் என கொடுக்கும்போது ஏமாந்த ஆட்களையும் வசைபாடி அவமானப்படுத்தி துரத்தி விடுகிறோம். வெளங்குமா? அவர்களுக்கு புரியவைத்து, திருத்தி, அரவணைத்து செல்லவேண்டும். நமக்குள்ளே இருக்கும் பிரச்சினைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும்… பரப்புரை செய்ய வருபவர்களை விரட்டிவிடலாம். பதிலடி கொடுத்துவிடலாம். ஆனால் நம்மில் நலிந்தோருக்கு உதவி? தேவையிக்கும் குடும்பங்களுக்கு உதவியும் ஆறுதலும்? முன்னேற துடிக்கும் இளைஞர்கள் இளைஞிகளுக்கு வழிகாட்டுதல்? இதை யார் செய்வது?…

View More கார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன?

நில உச்சவரம்புச்சட்டமும் இந்திய விவசாயமும்

கொங்கு வழக்கில் முட்டுவழி என்பார்கள். அதாவது முதலீடு. நிலத்தின் அளவு அதிகமாகும்போது முட்டுவழி குறைவதும், குறைவான நிலப்பரப்புக்கு முட்டுவழி அதிகமாவதும் இயற்கை. உலகில் எல்லா தொழில்களுக்கும் பொதுவான நியதி இதுதான்… கார்ப்பரேட்டுகள் விவசாயத்தின் எதிரிகள் அல்ல. உண்மையில் அவர்கள் வருகைக்குப்பிறகே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. சேலம் தர்மபுரி பகுதியைச்சேர்ந்த மாம்பழ விவசாயிகள் காலம் காலமாக உள்ளூர் வியாபாரிகளால்வஞ்சிக்கப்பட்டு வந்தனர். மாம்பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்கள் வந்த பிறகுதான் அவர்கள் நிலை மேம்பட்டது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இன்று எந்த கார்ப்பரேட்டுகளை கரித்துக்கொட்டுகிறோமோ, அவர்கள்தான் இனி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றப்போகிறார்கள்…

View More நில உச்சவரம்புச்சட்டமும் இந்திய விவசாயமும்

கத்தி – திரைப்பார்வை

இயக்குநர் முருகதாஸ் அவர்களுக்கு, நான் தங்களின் திரைப்படங்களின் மிகப்பெரும் ரசிகன். தங்களின் உணர்வுகளையும், கோப தாபங்களையும் முழமையாக மதிக்கிறேன். அர்த்தமற்ற சினிமாத்தனமான விமர்சனங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை. என்னுடைய விமர்சனம் ஆழமானது… ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்த முதல் விஷயம் முருகதாஸ் புதிதாக கம்யூனிஸம் பேசுகிறார்… எதற்கெடுத்தாலும் முதலாளிகளை குறைசொல்லாமல் அவற்றால் நமக்கு வரும் இலாபத்தை எண்ணிப் பார்ப்போம். மக்கள் போராட்டங்களை பெரிதுபடுத்தி அதை ஊக்கப்படுத்தாமல் அரசாங்கத்திற்கு துணை நிற்போம். இறுதியில் சென்னைக்கு செல்லும் ஏரி தண்ணீரை முடக்கும் காட்சி தவறான முன்னுதாரணமாக ஆகிவிடுமோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது…உங்கள் படத்தின் வசனத்தையே மேற்கோள் காட்டி கூறுகிறேன், “போலி மதச்சார்பின்மை என்பது மிகப்பெரும் சிலந்தி வலை”. அதில் சிக்கிய சிறுபூச்சியாக நீங்கள் மாறிவிடாதீர்கள்…

View More கத்தி – திரைப்பார்வை