நாம் நம் ஊரில் சில தையல்காரர்களைப் பார்த்திருப்போம் அவர்கள் தங்களிடம் மீதமுள்ள துணிகளை வைத்து ஒரு சட்டையைத் தைத்துவிடுவார்கள். அது நன்றாகவும் இருக்காது, அதைத் தூக்கி எறியவும் முடியாது. அதேபோல் கமலஹாசன் தன்னிடம் ஏற்கெனவே இருந்த ஒரு படத்தின் மீதக்காட்சிகளிலிருந்து புதியதாக ஒரு படத்தைத் தயாரிக்க ஆசைப்பட்டுவிட்டார். அது ஒரு படமாகவும் இல்லாமல் படம் இல்லாததாகவும் இல்லாமல் ஏதோ ஒன்றாக உருவாகி இருக்கிறது.
50 வயதுக்கு மேல் ஒருவன் தன் காதல் அனுபவங்களை நினைத்து நினைத்துத் தனக்குத் தானே சிரித்துக் கொள்வது போல அமைந்திருக்கிறது இத் திரைப்படம். என்னவெல்லாமோ காட்சிகள் திடீர் திடீரென வருகின்றன. தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. அக்காட்சி முடிவடைந்ததும் நாம் ஏதேனும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டி உள்ளது. இதற்கிடையில் கமலின் வழக்கம்போன்ற மேதாவித்தனமான வசனங்கள் வேறு. புரியவில்லை என்பதன் அர்த்தம், கமல் எப்போதுமே 20 வருடங்களுக்கு முன்பான ஒரு திரைப்படத்தை எடுத்து விடுவார் என்று அவரது ரசிகர்கள் சொல்லிக் கொள்ளும் வகையிலானது அல்ல. தெளிவின்மை தரும் புரிதலின்மை.
ஒரு காட்சி ஏன் வருகிறது, அது சொல்ல வரும் செய்தி என்ன என்று எதுவும் யாருக்கும் புரியாது. முதலில் இருந்து கடைசி வரை ஒரே இடத்திலேயே கதை அப்படியே நிற்கிறது. காட்சிகள் தொடர்பின்றி நகர்கின்றன. நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். யாரோ யாரோஒருவரைக் கொன்று கொண்டே இருக்கிறார்கள். யார் செத்தால் நமக்கென்ன என்ற மனப்பான்மையில் நாம் அமர்ந்திருக்கிறோம். முதல் பாகத்தில் தப்பித்துப்போன ராகுல்போஸ் இடைவேளைக்குப் பிறகுதான் தலையைக் காண்பிக்கிறார். இப்படத்தில் இவருக்கு எவ்வித ஸ்கோப்பும் இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்பதை நிரூபிக்கும் வகையிலான காட்சிகள்தான் படம் நெடுகிலும் பெரும்பாலும் வருகின்றன.
64 வயது கமலுக்கு இரண்டு பெண்கள் போட்டிப் போட்டுக்கொண்டும் ஒருவருக்கொருவர் பொறாமைப்பட்டுக் கொண்டும் பேசும் காட்சிகள் பெரும் அலுப்பைத் தருகின்றன. எரிச்சலை அடக்கமுடியவில்லை. கமலுக்கும் மனைவிக்குமான காதல் காட்சிகள் காணச் சகிக்கவில்லை. கமல் இப்போது முஸ்லிமா இந்துவா என்ற குழப்பம் அவர் மனைவிக்கு மட்டுமல்ல, நமக்கும் ஏற்படுகிறது. கமலின் மனைவி அவரை ஏன் அன்றுதான் கல்யாணம் ஆன ஒருவர் போல உருகுகிறார் என்பதெல்லாம் ஒரு மண்ணும் புரியவில்லை. வசீம் என்று அழைக்கிறார். கொடுமை.
கமல் சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் என்னவெல்லாமோ வசனம் பேசுகிறார். படத்தின் முதல் காட்சியில் தன் அரசியலுக்கு விளம்பரம் செய்து கொள்கிறார். இதனால் படத்தில் வரும் காட்சிகள் அரசியலுக்கு உள்ளதா அல்லது படத்துக்கு உரியதா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. 64 குண்டுகள் என்கிறார். 64 வருடம் கொள்ளை என்று பிராமணரைப் பார்த்துச் சொல்கிறார். நொடிக்கு நொடியில் முஸ்லிம் – பிராமண – காங்கிரஸ் அரசியல் என்று மாறும்போது நமக்குத் தலை சுற்றுகிறது. அந்த 64 என்பது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பது எனக்குப் புரியவில்லை. 1947ல் சுதந்திரம் பெற்றதைக் குறிப்பிடுகிறது என்றால் 64 என்பது இடிக்கிறது. நிச்சயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். ஒருவேளை 2011ல் நடக்கும் கதையா? இதை விளக்க கமல் இன்னொரு படம் எடுத்துத் தொலைக்காமல் இருக்கவேண்டும்.
முதல் பாகத்தில் மிகத் தெளிவாக, இந்திய முஸ்லீம் நல்லவன் என்கிற அடையாளத்தைச் சொல்லி இருந்தால் படத்திற்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்று நினைத்தாரோ என்னவோ, இப்படத்தில் இந்திய முஸ்லிம்களை வெளிப்படையாக உயர்த்தும் காட்சிகள் மிக தெளிவாகக் காண்பிக்கப்படுகின்றன. இந்தத் தெளிவு முதல் படத்தில் கிடைத்த அடியில் கமலுக்கு ஏற்பட்டிருக்கிறது.
பிராமணர்கள் மேல் இருக்கும் எரிச்சல் கமலுக்கு இன்னும் தீரவில்லை. படத்தில் இந்தியாவைக் காட்டிக் கொடுப்பவர் ஒருவர் பிராமணர். அவர் பெயர் ஐயர் என்றே வருகிறது. அதுமட்டுமின்றி வகைதொகை இல்லாமல் எல்லோரும் பிராமண பாஷையில் பேசிக் கொல்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் எட்டிப் பார்த்து ரூம் போட உதவி செய்யும் ஒரு நபர் கூட பிராமண பாஷையில் பேசுகிறார். இது போதாதென்று திடீரென ஆண்ட்ரியாவும் பிராமண பாஷை பேசுகிறார். நல்லைவேளை, அடுத்த காட்சியில் கொல்லப்பட்டுவிடுகிறார். முஸ்லிம்களை வம்பிக்கிழுத்தால், அது இந்திய முஸ்லிம் உலக முஸ்லிம் வேறுபாடுகளையெல்லாம் தாண்டி, கொமட்டிலேயே கும்மாங்குத்தாகக் கொண்டு வரும் என்பதைப் புரிந்துகொண்டுவிட்ட கமல், பிராமணர்கள்தான் சரிப்பட்டு வரும் என்ற முடிவுக்கு வந்திருப்பது பெரிதும் வரவேற்கப்படவேண்டியது. அரசியல் செய்ய உயிர் வேண்டும் என்பதைத்தான் நம் முன்னோர்கள் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்று சுருங்கச் சொல்லினர்.
படத்தில் பக்கத்து வீட்டுக்குப் போய் வரும் தோரணையில் பாகிஸ்தான் போய்விடுகிறார்கள். கமல் நினைத்தால் கண்மூடி ஆப்கானிஸ்தான் போகிறார். அடுத்த காட்சியில் அம்மாவைப் பார்க்க டெல்லி வருகிறார். அவரிடம் தான் மகன் என்று சொல்லத் தேவையில்லை எனச் சொல்லிவிடுகிறார். காலில் விழுகிறார். பாடுகிறார்கள், ஆடுகிறார்கள், பாடாய்ப்படுத்துகிறார்கள். அவர் மதமென்ன என்று யோசிக்கும்போதே கமல் வேறு நாட்டுக்குப் போய்விடுகிறார். கமல் இப்போது அமெரிக்காவில் இருக்கிறாரா டெல்லியில் இருக்கிறாரா ஆப்கானிஸ்தானில் இருக்கிறாரா பாகிஸ்தானில் இருக்கிறாரா என்று கண்டுபிடிப்பதற்குள் நமக்கு வயதாகிவிடுகிறது.
கமலுக்கும் வயதாகிவிட்டது. ஆனால் அழகாக இருக்கிறார், நடிக்காமல் இருக்கும்போது மட்டும். பிரச்சினை என்னவென்றால் படம் முழுக்க ஏதாவது நடித்துக் கொண்டே இருக்கிறார். பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன நடிப்பு.
பாசிட்டிவாக சில விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்றால், இப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பல காட்சிகளை குன்சாக ஒன்றாக்கி ஒரு படமாக்கியது பெரிய சாதனைதான். இதற்கு எடிட்டருக்குப் பெரிய பாராட்டு சொல்ல வேண்டும். பல காட்சிகள் ஆங்கிலப்படத்தின் தரத்துடன் இருக்கின்றன – பார்க்க மட்டும். இதற்கு இணையாகப் பல காட்சிகள் தரமற்று இருக்கின்றன.
படத்தில் சிரிக்க சீரியஸான பல காட்சிகள் உண்டு என்றாலும் கிளைமாக்ஸ் காட்சி சிரிப்பின் உச்சம். 40 நொடியில் கமல் குண்டு வெடிப்பிலிருந்து தப்பித்து வில்லனையும் கொன்று தன் மனைவி கொல்லப்படுவதற்கு முன்னால் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வரும் காட்சி, வேறு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அதிலும், உன் கடவுளே உன்னைக் கொல்லும் என்று சொல்லவும், சாகக் கிடக்கும் ஒரு அல்லக்கை கமலைப் பார்த்து சைகையில் கேட்க, கமல் அதை மறுக்க, இவன் ஊதறும் அவ ஆடறதுக்கும் இணையான காட்சி.
ஒரு திரைப்படம் எடுத்து முடித்ததும் அதை எப்படித் தயாரித்தோம் என்று கடைசியில் ஓட விடுவார்கள். பெரிதினும் பெரிது கேள் என்ற எண்ணத்தில் கமல் அதையே ஒரு திரைப்படமாக்கத் துணிந்து விட்டார். விஸ்வரூபம் பாகம் 1 படத்துக்குச் செய்யும் மரியாதையாக இந்தப் படத்தை கமல் தவிர்த்திருக்க வேண்டும்.
பின்குறிப்பு: எப்போதும் ஒருத்தன் என்னை அண்ணா என்றுதான் அழைப்பான். தம்பி போல அவன். ஒருநாள் திடீரென்று பெயர் சொல்லி அழைத்தான். நீ போ என்று சொல்ல ஆரம்பித்தான். என் மனதுக்குள் மலைபோல கேள்விகள். வேறொன்றுமில்லை. உத்தமவில்லன் வரை ஜிப்ரான் என்றறியப்பட்ட இசையமைப்பாளர் இப்படத்தில் முகம்மது ஜிப்ரான் ஆகியிருக்கிறார். வாழ்த்துக்கள். வரும்போதே ஜோசப் விஜய் ஆகவும் முகமது ஜிப்ரான் ஆகவும் வந்து விடுங்கள் என்பதே நம் வேண்டுகோள்.
(ஹரன்பிரசன்னா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
நான் திரைப்படங்கள் பார்ப்பது கிடையாது. நான் பார்த்த கடைசி படம் நாளை நமதே. தியேட்டா்களில் நடக்கும் பண்பற்ற செயல்களைப் பார்த்து வெறுத்து திரைப்படங்கள் பார்ப்பதை விட்டு விட்டேன். என் வீட்டு தொலைக்காட்சியிலும் நான் மற்றும் எனது வீட்டாரோ திரைப்படங்கள் பார்ப்பதில்லை. ஆகவே இந்த கண்ராவி எப்படியிருந்தாலும் எனக்கு நட்டம் இல்லை. இந்த குப்பையை பற்றி ஒரு பதிவு செய்ய வேண்டியதில்லை.
குப்பைகள் தியேட்டருக்குள் இருந்து விட்டு போகட்டுமே!
எதற்கு இந்தத் தேவையற்ற அருவருக்க வைக்கும் ப்ராமண வெறுப்பு.கடந்த சில பத்தாண்டுகளாக அவர்கள் மீது திட்டமிட்டு, மிகவும் தீவிரமாக, தமிழக மக்களிடையே நடத்தப்பட்ட ப்ராமண வெறுப்புப் பிரச்சாரம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்து இருக்கிறது.அந்தப் பிரிவினைவாதத் திராவிட அரசியல் நடத்திய கடைசித் தூணும் விழுந்து விட்டது. மிஷநரிகள் பின்புலத்துடன் நடத்தப்பட்ட இதுபோன்ற பிரிவினை வாதங்களால் இலங்கை, ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் அந்தந்த மக்களின் உறவுகளிடையே இரத்த ஆறு ஓட வைக்க முடிந்தது. ஆனால் அதே தந்திரம் இங்கே சுத்தமாக எடுபடாமல் போய் விட்டது என்பதை ‘அவர்களே ‘ உணர்ந்து வெகு நாட்களாகி விட்டது.அதனால்தான் மதமாற்ற மிஷநரிகள் ‘முப்பாட்டன் முருகன்’ என்றும், ‘தோமையர் வருகை’ என்றும், ‘சமணர் கோவில் சான்று’ தேடியும் வேறு வேறு வழிகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.ஆனால் இந்த ‘ஒரு லட்ச ரூபாய் குடிகார’ மக்கள் மய்யத் தலைவருக்கு ப்ராமண எதிர்ப்பு என்பது இன்னும் ஒரு மிகப் பெரிய அரசியல் நடவடிக்கையாகவே தோன்றுகிறது போலும்.தமிழ் மக்களை இதனால் கவரவே முடியாது.வேண்டுமானால் அவர்களின் சலிப்பைச் சம்பாதிக்கலாம்.ஆனால் பரமக்குடி ஐயங்காரின் சொந்த சாதி எதிர்ப்பு அவருக்கு இதுவரை ஒரேயொரு உதவி செய்து இருக்கிறது என்பதை மறுக்க இயலாது..அவர் மானசீகமாக போற்றும் போலி நாத்திகவாதிகளால் ‘சாம்பார்2’ என்றோ ‘வத்தக் குழம்பு’ என்றோ பட்டப் பெயர்கள் சூட்டப்படாமல் தப்பிக்க உதவியிருக்கிறது..அவ்வளவுதான்!!
//இசையமைப்பாளர் இப்படத்தில் முகம்மது ஜிப்ரான் ஆகியிருக்கிறார். வாழ்த்துக்கள். வரும்போதே ஜோசப் விஜய் ஆகவும் முகமது ஜிப்ரான் ஆகவும் வந்து விடுங்கள் என்பதே நம் வேண்டுகோள்.//
சினிமாக்காரர்களும் கலைஞர்களும் ஏன் ஜாதி, மத அடையாளங்களைக் காட்ட வேண்டுமென்று வேண்டுகிறீர்கள் ? அவையெந்த வகையில் உதவும் படங்கள் ஓட ? புரியவில்லையே?
Kamal has this feeling that being born in a Brahmin family would be a hindrance to his cinema & political career. Since the 70s, he has been openly or indirectly targeting the Brahmin community. There will be at least 1 scene making fun of Brahmins, ridiculing their practices etc.,
But he must realize that however much he tries to portray himself as an atheist/ Brahmin hater, he will not be accepted whole heartedly.
As for Viswaroopam 2, thankfully it has flopped at the box office.
//Kamal has this feeling that being born in a Brahmin family would be a hindrance to his cinema & political career. //
Correct observation. Yet, you’ve seen him only. But I’ve seen many who don’t like to call or associate themselves with Brahmins or community! If at all, they stop within their immediate family circle members and grudgingly accept some customs like marriage ceremony. Beyond that, their identity as a member of their community is non-existent. There’re hundreds and hundreds athiests in the community who scoff or even ridicule at the customs and rituals of Brahmins. The priests who welcomed Stalin may have stopped many hearts of Brahmis; but for me, it was no surprise at all as there are brahmin-baiters within.
Sometimes, this kind of complex gets created if you, as a Brahmin, move out of your ghetto and mingle with mixed bag of people, (or have to, due to professional or other reasons like Kamal) inviting them to your house and going to theirs in private and public life – that is, you seem to have gone out of the community, so to speak.
It is in one sense salutary – you become broad-minded and able to accept others as your brethren. To live within a group narrows minds. In another sense, it is bad – the legacy of Brahminism needs to be passed to next generations and you’ll have to contribute your mite towards that. If the legacy is not passed, the next generations will be without moorings. To which community will they belong then? Already only in your community, marrying outside is going on full steam. And whatever measures taken to stem the tide, are of no avail.
The better course for you is to leave the disparate and desperate individuals out and concentrate on those who are willing to stay put, espousing the Brahminical ways of domestic life. I mean, don’t worry about Kamal, the late Gnani, the veteran journalist T N Gopalan and Narain etc. Bring up your own children as the torch bearers of your community life.
//But he must realize that however much he tries to portray himself as an atheist/ Brahmin hater, he will not be accepted whole heatedly.//
Presumptuous.
You cannot predict the future social and political scene in TN because it is changing fast. BTW, why should he need to be accepted by others as of their own? Was Jayalalitha accepted? She was crticised life long. Still she ruled voted again and again to power 🙂 And she had massive adulation – from across society. Kamal may go the way, if only he is clever to ride his horses !
// சினிமாக்காரர்களும் கலைஞர்களும் ஏன் ஜாதி, மத அடையாளங்களைக் காட்ட வேண்டுமென்று வேண்டுகிறீர்கள் ? அவையெந்த வகையில் உதவும் படங்கள் ஓட ? புரியவில்லையே? //
காட்டச் சொல்லவில்லை, மறைக்கவேண்டாம் – இந்துமதப்பெயரின் பின்னால் மறைந்துகொள்ளவேண்டாம், சொந்த அடையாளத்தோடு தோன்றுங்கள் என்றுதான் சொல்லப்படுகிறது.
பொன் முத்துக்குமார்!!
எழுத்தாளர்கள், சினிமா, நாடக கலைஞர்கள், புனைப்பெயரகளில் தோன்றுவது உலகம் முழுக்க நடைபெறுவது. பொதுவாக இப்புனைப்பெயர்கள் செகூலர் பெயர்களாகத்தான் இருக்கும்.. அப்படி பெயர்கள் வைத்துக்கொள்வதை தவறென்கிறீர்களா? சுஜாதா, சாரு நிவேதிதா ஸ்டெல்லா புரூஸ் (இப்பெயரை வைத்து 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுதியவர் ஓர் இந்து) எனபன தவறா? விஜய் என்றால் வெற்றி என்னும் செகூலர் பெயர். அக்னேயா என்பது புகழ்பெற்ற இந்திக்கவிஞரின் பெயர். பொருள்: பெயரில்லாதவன். இவர்கள் தங்கள் இயற்பெயர்களைக் காட்டிவிட்டால் உங்களுக்கு என்ன இலாபம்? காட்டாவிட்டால் என்ன நட்டம்? பொதுமக்களையும் கிருத்துவ பிரச்சாரகர்களையும் இங்கிழுக்க வேண்டாம். அது வேறு. பொதுமக்கள் இந்துப்பெயர்களை வைத்துkகொண்டால் இட ஒதுக்கீடு கிடைக்கும். சினிமா, நாடக, கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் மட்டும்தான் பேசுகிறோம். இவர்களுக்கு என்ன கிடைக்கும்? புரியல கொஞ்சம் சொல்லுங்க.
இப்ரான் ஓர் இசைக்கலைஞர். அவரின் பெயர் முஹமது இப்ரான் என்றவுடன் ஏன் ஹரன் ப்ரசன்னா புளங்காகிதமேனடைகிறார்? இப்ரானின் இசை உயர்ந்துவிடுமா அவர் தன் இயற்பெயரைக்காட்டிவிட்டால்? படங்கள் ஓடுமா? இளையராஜா என்ற பெயரே புனைப்பெயர். அவரின் பெற்றோர் கிருத்துவர்கள். அவரின் இயற்பெயரும் கிருத்துவப்பெயர்தான். அவர் என்று திரைப்படத்த்துறையின் என்று நுழைந்தாரோ அன்றிலிருந்தே இளையராஜா என்ற புனைப்பெயர்தான். அவரைப்பற்றி ஹரன் ப்ரசன்னா சொல்லலாமே இளையராஜா தன் கிருத்துவ இயற்பெயரை ஏன் ஒழித்துக் கொள்கிறார் என்று? நினைவிருக்கட்டும்; அவர் இந்து ஆன்மிகத்தில் ஆழங்கால் பட்டவர்; ஆனால் முறைப்படி இந்துவாகவில்லை. இதே போல ஜோசப் என்னும் வைணவப்பேச்சாளரும் அவர் மனைவி பாத்திமாவும் இன்னும் உரோமன் கத்தோலிக்கர்கள்தான் ரிகார்டில்.
என் முடிவு என்னவென்றால், ஒருவன் ஏதோ ஒரு தீய நோக்கத்தினால் தன் இயற்பெயரை மறைத்துக்கொள்வதென்றால் மட்டுமே நாம் அபாயச்சங்கிலையைப்பிடித்திழுக்க வேண்டும். சினிமா நடிகர்களும் இசையப்பாளர்களும் தங்கள்தங்கள் இயற்பெயர்களை ஒழித்துக்கொண்டு ஏதாவது சமூக விரோதச்செயல்களை பண்ணுகிறார்களா ? இம்ரான் என்ன செய்தார்? விஜய் என்ன செய்தார்?
//ஒருவேளை 2011ல் நடக்கும் கதையா// I think yes, That’s how it’s shown in the beginning. He even mentions this in another scene (mentioning the 1.5 ton nuclear bomb – 67 years back when World war 2 was happening – Which mean in 1944. So we need to take the period as 2011.
// இவர்கள் தங்கள் இயற்பெயர்களைக் காட்டிவிட்டால் உங்களுக்கு என்ன இலாபம்? காட்டாவிட்டால் என்ன நட்டம்? //
இது லாப நஷ்டக் கணக்கல்ல. ஒரு இந்து இந்து மதத்தைப்பற்றி தவறாக பேசுவதற்கும் இந்து பெயரில் இருக்கும் ஒரு கிறித்தவர் இந்து மதத்தைப்பற்றி தவறாக பேசுவதற்கும் உள்ள வித்தியாசமே இது. முன்னது விமரசனக்கணக்கில் வரும் (அவர் தி.க-வாக இல்லாத பட்சத்தில்) பின்னது அழிக்கும் நோக்கு.
BSV,
The point is not that. Everyne knew that Vijay is a Christian. That is bcos, when he came to movies, his father SAC was a famous film director, who proclaimed that he was a christian. Vijay is not apologetic about it.
In fact, these days, his letter pad indicates “Joseph Vijay”.
Ilayaraja’s family were SC converts but he has openly admitted to his hindu beliefs. He has even admonished Christian attempts at conversion.
Kamal may not believe in his family religious beliefs, but let him not try to portray himself as a “non brahmin”. It does not cut much ice & is also not necessary.
Very disappointment story. Old jai Shankar film is much better than this film. Question is how could terrorist from Afghanistan roam in America and India like a free bird though we hesitate to offer visa to athletes from Afghanistan and Pakistan.
Let Kamal be whatever; even a worm, pest or insect. But he has no business to insult brahmins for his daily bread.Begging is more honorable than insulting and wounding people for a living