பொன்னியின் செல்வன் பாகம்-1: திரைப்பார்வை

ஒருவகையில் பொன்னியின் செல்வன் ஒரு “தமிழ் ஹாரி பாட்டர்” போல. சோழ சாம்ராஜ்ய வரலாற்றில் நிலவிய குழப்பத்தைக் களமாக்கி, ஒரு மாபெரும் காவியத்தன்மை கொண்ட நாவலை சிந்தித்தது கல்கியின் கூர்மையான வரலாற்று பிரக்ஞையையும், ஒரு கதாசிரியராக அவரது கற்பனை வளத்தையும் காட்டுகிறது.. ஒட்டுமொத்தமாக படம் சுவாரஸ்யமாக, ரசிக்கும்படியாக இருந்தது. சிற்சில போதாமைகள் தவிர்த்து பெரிய குறைகள், சொதப்பல்கள் எதுவும் இல்லை. இந்தப் படத்தின் முக்கியமான ஒரு குறை என்றால், இந்த மூன்று பாத்திரங்களைத் தவிர்த்து மற்றவைஅவ்வளவு சரியாக வெளிப்படவில்லை என்பது தான்…

View More பொன்னியின் செல்வன் பாகம்-1: திரைப்பார்வை

ராக்கெட்ரி: நம்பி விளைவு – திரைப்பார்வை

ஒரு சராசரி திரைப்பட ரசிகரை மட்டுமல்லாது, இஸ்ரோவையும், விண்வெளித்துறையையும் பற்றிய பல செய்திகளை அறிந்து, நம்பி நாராயணன் எழுதிய Ready to Fire புத்தகத்துடன் பரிச்சயம் உள்ளவர்களையும் கூட “வாவ்” சொல்ல வைத்திருப்பது இந்தப் படத்தின் ஆகப்பெரிய வெற்றி. முயன்றால் இந்திய சினிமா தனது கைக்கு அடக்கமான பட்ஜெட்டிலும் எத்தகைய வீச்சை, உயரத்தைக் கொண்டு வர முடியும் என்பதை இந்தப் படம் நிரூபித்திருக்கிறது. ‘ராக்கெட்ரி’ ஒவ்வொரு இந்திய இளைஞரும் பார்த்து உள்வாங்க வேண்டிய ஒரு திரைப்படம்…

View More ராக்கெட்ரி: நம்பி விளைவு – திரைப்பார்வை

அரசியல் “மாநாடு”: திரைப்பார்வை

இருபது நிமிடங்களில் என் மீது திணிக்கப்படும் கருத்து என்னவென்று தெரிந்துவிட்டது. 1998 கோவை குண்டு வெடிப்பு களம். பாஷா என்ற பெயரை யாரும் உச்சரிக்கவில்லை.. “எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள்” என்று ஆதங்கப்படும் அவர்கள் “ஏன் எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள்” என்று கேள்வி கேட்காமல் இருப்பது விந்தையே.. படம் முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் மகன் “ஆமாம்பா. Poor they are. They are being crucified. பாவம் அவுங்க” என்று சொன்னபொழுது தான் என் பயம் அதிகமாகியது. The agenda works…

View More அரசியல் “மாநாடு”: திரைப்பார்வை

இருளர்களும் புளோரிடா மலைப்பாம்புகளும்

குட்டி விலங்குகளை சுவாகா பண்ணும் மலைப்பாம்புகளைப் பிடிக்க இயலாமல் மொத்த புளோரிடா அரசாங்கமும் தடுமாறியது.. ஆராய்ச்சியாளர் ரோமுலஸ் விட்டேக்கர் உதவியுடன் தமிழ் நாட்டிலிருந்து மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் என்ற இரு இருளர்களையும் அங்கு தருவிக்கிறது. இது நடந்தது 2017ல், பொய்யான சித்தரிப்பில் எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம் ‘ கூறும் 1993ஆம் வருடத்திற்கு நாற்பது ஆண்டுகள் சென்ற பிறகு நிகழ்ந்தது இது… இருளர்களுக்கு என்று தனியாக உள்ள கூட்டுறவுச் சங்கம் நாற்பது வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது. இதன் உறுப்பினர்களான இருளர்கள் மருந்துக்காக விஷப் பாம்புகளைப் பிடித்து கொடிய நஞ்சினை உரிய தொழில் நுட்பங்களோடு சரியான பாதுகாப்பு வழிமுறைகளோடு எடுக்கிறார்கள்… கிட்டதட்ட இரண்டு இலட்சம் எண்ணிக்கையுள்ள இருளர் சமுதாயத்தின் இறுதி பாம்புப் பிடிப்பவர்களாக இவர்கள் மட்டுமே இருக்கப் போகின்றனர்…

View More இருளர்களும் புளோரிடா மலைப்பாம்புகளும்

ருத்ர தாண்டவம் – திரைப்பார்வை

டிரெய்லரில் வந்த காட்சிகளை வைத்து கிறிஸ்தவ மதமாற்ற அபாயம் அழுத்தமாக பேசப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சிறு ஏமாற்றம். ஆயினும், போதைப் பொருள் பரவல், பட்டியல் சமுதாயத்தினரின் பாதுகாப்புக்காக உருவாக்கப் பட்ட வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் (PCR) துஷ்பிரயோகம், “க்ரிப்டோ கிறிஸ்டியன்ஸ்” ஏன்று பெயர்சுட்டப்பட்டும் முகமூடி கிறிஸ்தவர்கள், தேசவிரோத “போராட்ட” என்ஜிஓ அரசியல் என நான்கு பரபரப்பான சமாசாரங்களைப் போட்டுக் காய்ச்சி காட்டமான காக்டெயிலாக இப்படி ஒரு அதிரடி திரைப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. இந்த ஒரு விஷயத்துக்காகவே அவருக்கும் மற்றும் இதனுடன் தொடர்புடைய அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்…

View More ருத்ர தாண்டவம் – திரைப்பார்வை

சர்வம் தாளமயம் – திரைப்பார்வை

மிருதங்கம் என்ற தோற்கருவியை செய்து கர்நாடக சங்கீதக் கச்சேரிகளின் மிருதங்க வித்வான்களுக்கு அளித்து வரும் ஒரு பட்டியல் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் பீட்டர் ஜான்சன். ஒரு தருணத்தில் மூத்த வித்வான் பாலக்காடு வேம்பு ஐயரின் வாசிப்பால் கவரப்பட்டு அவரது சீடராகி விடவேண்டும் என்று துடிக்கிறார். பல்வேறு சாத்தியங்கள் வழியாக அவரைப் போன்றவர்கள் நுழைவதற்கே கடினமான கர்நாடக இசை உலகம் என்ற இரும்புக் கோட்டைக்குள் அவர் புகுந்து விடும் சித்திரம் இந்தப் படத்தில் அற்புதமாக எழுந்து வருகிறது…

View More சர்வம் தாளமயம் – திரைப்பார்வை

பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 2

ரஜினி விஷயத்தில் அவர் இந்திய தேசிய நலனை முன்னெடுப்பார் என்று நம்ப எந்த முகாந்தரமும் இல்லை. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே இந்து விரோதிகளின் கைப்பாவையாகிவிட்டிருக்கிறார். அவருடைய சமீபத்திய திரைப்படங்கள் அதையே காட்டுகின்றன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தமிழகத்தை காப்பாற்றுவதற்கு முன் ரஜினியைக் காப்பாற்றவேண்டும் என்றுதான் தோன்றுகிறது… மக்கள் இந்து மனநிலையுடனும் இந்திய தேசிய மனநிலையுடனும் வளர்ச்சி தொடர்பான எதிர்பார்ப்புகளுடனும் தான் இருக்கிறார்கள். மக்களுடைய அந்த உணர்வுக்குக் குரல் கொடுக்க எந்த தமிழக கட்சியும் முன்வருவதில்லை. ரஜினிகாந்த் தனது பிரபல்யத்தைப் பயன்படுத்தி அந்தக் குரலை முன்னெடுக்கவேண்டும். வெற்றி தோல்வி பற்றி சிந்தித்து காய் நகர்த்த வேண்டிய விஷயம் அல்ல இது…

View More பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 2

பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 1

ரஜினியின் அடையாளங்கள் என்னென்ன… தேசியவாதி, தெய்வ பக்தி மிகுந்தவர், மத நல்லிணக்க குணம்கொண்டவர், தீமைகள் குறைவான ஆணாதிக்க மனோபாவம், ஏழை எளியவர்களின் காப்பாளர்.. இவையெல்லாம் கபாலிக்கு முன்… இந்து விரோதம் என்பது புதிய விஷயம் ஒன்றுமல்ல. பராசக்தி காலம் தொடங்கி நடந்துவரும் அசட்டு, அபாயகரமான விஷயம் தான். ஆனால், இப்போது இந்து விரோத படங்களின் பெருக்கமானது முந்தைய இரண்டு காலகட்டத்தைவிடக் கூடுதல் கவனத்துடன் பார்க்கப்படவேண்டியது. ஏனென்றால், அது இதுவரை எப்போதும் இருந்திராத இந்திய விரோதம் என்ற விஷத்தையும் நுட்பமாக உள்ளே கொண்டிருக்கிறது…

View More பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 1

விஸ்வரூபம் 2: திரைப்பார்வை

50 வயதுக்கு மேல் ஒருவன் தன் காதல் அனுபவங்களை நினைத்து நினைத்துத் தனக்குத் தானே சிரித்துக் கொள்வது போல அமைந்திருக்கிறது இத் திரைப்படம். கமல் சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் என்னவெல்லாமோ வசனம் பேசுகிறார். படத்தின் முதல் காட்சியில் தன் அரசியலுக்கு விளம்பரம் செய்து கொள்கிறார். இதனால் படத்தில் வரும் காட்சிகள் அரசியலுக்கு உள்ளதா அல்லது படத்துக்கு உரியதா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. 64 குண்டுகள் என்கிறார். 64 வருடம் கொள்ளை என்று பிராமணரைப் பார்த்துச் சொல்கிறார். நொடிக்கு நொடியில் முஸ்லிம் – பிராமண – காங்கிரஸ் அரசியல் என்று மாறும்போது நமக்குத் தலை சுற்றுகிறது.. கமலுக்கும் மனைவிக்குமான காதல் காட்சிகள் காணச் சகிக்கவில்லை. கமல் இப்போது முஸ்லிமா இந்துவா என்ற குழப்பம் அவர் மனைவிக்கு மட்டுமல்ல, நமக்கும் ஏற்படுகிறது…பாசிட்டிவாக சில விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்றால், இப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பல காட்சிகளை குன்சாக ஒன்றாக்கி ஒரு படமாக்கியது பெரிய சாதனைதான். இதற்கு எடிட்டருக்குப் பெரிய பாராட்டு சொல்ல வேண்டும்…

View More விஸ்வரூபம் 2: திரைப்பார்வை

ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை

வால்மீகி ஒரு சாதாரண கவியல்ல. மானுட அகத்தையும் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் நெறிகளையும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுக் கண்டு தெளிந்த மகத்தான கவி-ரிஷி அவர். அதனால் தான் வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றதையும், ராவணனின் பெருமைகளையும், அக்னிபிரவேசத்தின் போது ராமன் சீதையிடம் கடுஞ்சொல் கூறுவதையும், சீதை அதை எதிர்கொள்ளும் துயரத்தையும் அவரால் எழுத முடிந்திருக்கிறது.இவ்வளவு பெருமைகளும் கொண்டிருந்த ராவணன் அதர்ம வழியில் சென்று அழிந்தான் என்பது தான் அந்தக் காவியத்திற்கு உச்சத்தன்மையை அளிக்கிறது… இந்த நாட்டின் படிப்பறிவில்லாத கிராம மக்கள் கூட உள்வாங்கிக் கொண்டுள்ள இந்தப் பண்பாட்டுச் செழுமையை சிறிதும் உணரும் திறனும் அறிவும் இல்லாத படித்த முட்டாள்களும், அறிவிலிகளும் தான் ராமாயணத்தையே திருப்பிப் போட்டு தாங்கள் ஏதோ புதியதாக பெரிய “புரட்சி” செய்துவிட்டதாகக் கருதிக் கொள்கிறார்கள்….

View More ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை