தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன?

தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த காலகட்டத்தில் உச்சநீதிமன்றம் வழக்கம் போல தனது சிறப்பான பங்கை ஆற்றிவிட்டது. ஹிந்து மரபுக்கு குந்தகமாக செயல்பட விரும்புபவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுறுசுறுப்பாகியுள்ள இக்கால கட்டத்தில் நாம் இந்தப் பண்டிகையை எதற்காக கொண்டாடி வருகிறோம் என்பது பற்றி, நூலாராய்ச்சியின் அடிப்படையில் கூறப்பட்ட கருத்துக்களை அறிவது மிக அவசியம். அதிலும், கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் “பட்டாசு வெடித்தல்” எதற்காக என்பதனை அறிவது அவசியமாகிறது.

பத்மபூஷன் திரு வே ராகவனின் ஆராய்ச்சி

பத்மபூஷன் திரு. வே. ராகவன் (1908-1979) மிகவும் மதிக்கப்பட்ட ஒரு ஸம்ஸ்க்ருத அறிஞர். Festivals, Sports and Past time of India (1979) எனும் நூல் அவரால் எழுதப்பட்டது. அந்த நூல் ஹிந்துப் பண்டிகைகள் பற்றி ஆழமான ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. அந்த நூலிலிருந்து சில கருத்துக்களை தொகுத்து மொழிபெயர்த்து இங்கே அளிக்கிறேன்.

ஒவ்வொரு ஹிந்து பண்டிகைக்கும் அது கொண்டாடப் படுவதற்காக காரணங்கள் மாறுபட்டுக்கொண்டு வருகின்றன. அது கொண்டாடப்படும் விதமும் மாறுகிறது. தொன்றுதொட்டு. ஆஸ்வயுஜ/புரட்டாசி (செப்டம்பர் முடிவில் அல்லது அக்டோபர் துவக்கத்தில் வரும்) அமாவாசை துவங்கி, கார்த்திகை பௌர்ணமி வரை பல உற்சவங்கள் கொண்டாடப்பட்டன என்பதற்கு நூலாதாரம் உள்ளது. தீபாவளி, காலத்தின் ஓட்டத்தில் மேற்குறிப்பிடப்பட்ட காலகட்டத்தினுடைய பண்டிகைகளின் தொகுப்பாக ஆகியுள்ளது. அனைத்துமே ஏறக்குறைய ஒளி தொடர்பான விழாக்கள் தான். (பக்கம் 58.)

வேதங்களில் தீபாவளி?

தீபாவளி பண்டிகை பண்டைய காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வந்துள்ளது. மழைக் காலம் கழிந்து இருளும், ஈரமும் வடிந்த பின் இலையுதிர்காலத்தின் துவக்கத்தில் ஒளியின் உற்சவமாக பண்டைய காலத்தில் இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. (ப.171)

ரிக்வேதத்திலும், ஶுக்ல யஜுர்வேதத்திலும் ஒளியைப் போற்றுவது பற்றி பல குறிப்புகள் உள்ளன. புத்தரும் கூட “ஆத்ம தீபோ பவ” (உனக்கு நீயே ஒளியாகு) என்று உபதேசித்தார்.(ப.162). மேலும், தீபாவளி பற்றி வாத்ஸ்யாயனரின் காமஸூத்ரம் (பொது யுகம் இரண்டாம் நூற்றாண்டு), நாகாநந்தம் எனும் ஸம்ஸ்க்ருத நாடகம் (பொ.யு. ஏழாம் நூற்றாண்டு), ஸோமதேவரின் யசஸ்திலக சம்பூ (பொ.யு. பத்தாம் நூற்றாண்டு) போன்ற நூல்களிலும் குறிப்புகள் உள்ளன.( (ப.165))

நரக சதுர்தசி

தீபாவளியை நரக சதுர்தசி என்கிறோம். நரகாசுரனை பகவான் க்ருஷ்ணர் வதைத்த தினமாகக் கொண்டாடுகின்றோம். அதர்மத்தை தர்மம் வென்ற நாளாக தற்போது இந்த விழா கொண்டாடப்படுகிறது. நரக சதுர்தசிக்கு மற்றொரு விளக்கமும் உண்டு. யமன் ஆட்சி புரியும் நகரத்திற்கு நரகம் என்று பெயர். மனிதர்கள் நரகத்திற்குப் போகமல் இருப்பதற்காகவும், அகால மரணம் அடையாமல் இருப்பதற்காகவும் (கங்கா) ஸ்னானம் முதலியவை தீபாவளி தினத்தில் செய்யப்படுகின்றன. என்று பத்மபுராண குறிப்பு உணர்த்துகிறது. (பத்மபுராணம் காண்டம் 4 அத்யாயம் 124 ஸ்லோகம் 4,6,9,10) (ப.165)

முன்னோர்களும் தீபாவளியும்

முன்னோர்களுக்கு மிக உகந்த மகாளய பட்சத்திற்குப் பின் வருவதனால் தீபாவளிக்கும் முன்னோர்களுக்கும், யமனுக்கும் தொடர்பு உள்ளது என்பது தெளிவு. மகாளய பட்சத்தில் முன்னோர்கள் பூவுலகிற்கு வந்து தர்ப்பணம் முதலியவற்றால் அளிக்கப்படும் உணவினை ஏற்கிறார்கள். இந்த காலகட்டத்தின் கடைசியில் யமனுக்கும் பூஜை செய்யப்படுகிறது. தீபாவளி அமாவாசைக்குப் பின் வரும் த்விதியை திதி யம-த்விதீயை என்று அழைக்கப்படுகிறது. யமனுக்கு தர்ப்பணம் அளிக்கப்படுகிறது. (ப.166)

தீபாவளியில் பட்டாசு

தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் எப்போது வந்தன? இது ஒன்றும் புதிய பழக்கமல்ல. தீபாவளி பண்டிகையின் மிக புராதனமான அம்சம் இது. இன்று கொண்டாட்டத்திற்காக பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. ஆனால் பண்டைய காலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு வேறு காரணமிருந்தது. மகாளய பட்சத்தில் பூவுலகிற்கு வந்த முன்னோர்கள் திரும்பிச் செல்லும் காலம் தீபாவளி. அவர்கள் தங்கள் லோகத்திற்குத் திரும்பச் செல்லும் வழியினை ஒளிமயமாக்கத்தான் உயர்ந்த கம்பங்களில் தீப்பந்தங்கள் பண்டைய காலத்தில் ஏற்றப்பட்டன. ஆகாயத்தில் வாணவேடிக்கைகளும் கூட இதற்காகத்தான் தீபாவளி சந்தர்பத்தில் ஏற்படுத்தப்பட்டன. பண்டைய நூல்களில் இதற்கு “உல்கா தானம்” என்று பெயர். இது பற்றி ஒரு குறிப்பு வருமாறு

“உல்கா ஹஸ்தா நரா: குர்யு: பித்ரூ’ணாம் மார்க³த³ர்ஶனம்”  (வாசஸ்பத்யம் ப. 1360)

கையில் தீப்பந்தம் ஏந்தி மாந்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு (திரும்பிசெல்ல) வழிகாட்ட வேண்டும். (ப.167)

தீபாவளி-க்ருத்யம் (Chandra Shum Shere Collection, Bodlien, Oxofrd, D.824, xiv (works between 16-19th Century)) எனும் நூலில் தீபாவளியன்று செய்யப்பட வேண்டிய சடங்குகள் கூறப்பட்டுள்ளன. அதிகாலையில் எண்ணைக் குளியலை முடித்துக்கொண்டு, லக்ஷ்மி, குபேரன், இந்த்ரன் ஆகியோர்களின் திருவுருவங்களை வழிபட்டு தீபச்ராத்தம் எனும் சடங்கு செய்யப்பட வேண்டும். மேலுலகிற்குத் திரும்பிச்செல்லும் முன்னோர்களின் பாதை ஒளிர இது செய்யப்படுகிறது. அது தொடர்பான ஒரு ஸம்ஸ்க்ருதச் செய்யுள் வருமாறு –

யமலோகம் பரித்யஜய ஆக³தா யே மஹாலயே |
உஜ்ஜ்வலஜ்யோதிஷா வர்த்ம ப்ரபஶ்யந்தோ வ்ரஜந்து தே ||

(மகாளயத்தில் யமலோகத்தை விட்டு நம்மிடம் வந்த முன்னோர்கள், தங்கள் பாதை ஒளிமிகுந்ததாக ஆக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்த்துக்கொண்டே திரும்பச்செல்லட்டும்). (ப.167)

மெக்ஸிகோ தேசத்திலும் கூட இதே காலகட்டத்தில் (நவம்பர் 2 தேதி) “All Souls Day” எனும் விழா கொண்டாடப்படுகிறது. முன்னோர்களின் கல்லறைகளில் இனிப்பு வகைகள், பட்டாசுகள் இந்தச் சந்தர்பத்தில் படைக்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. சைனாவில் Lanterns Day, ஜப்பானில் “போன் மட்ஸூரி” போன்ற விழாக்கள் இதே காரணத்திற்காக கொண்டாடப்படுகின்றன. பண்டைய எகிப்திலும் கூட இது போன்றதொரு பண்டிகை இருந்தது. (ப.170)

விஜய நகர ஸாம்ராஜ்யத்திலும் (பொ.யு. 1336 முதல்) , மொகலாயர்களின் காலகட்டத்திலும், மராட்டிய பேஷ்வாக்கள் ஆட்சியிலும் கூட மகாநவமியினை தொடர்ந்து வாணவேடிக்கைகள் விசேஷமாக செய்யப்பட்டன. ஒரிய அரசனான ப்ரதாப ருத்ரனின் (பொ.யு. 1497-1539) ஆட்சியில் வாணவேடிக்கைகள் நடந்தது பற்றிய குறிப்புகள் உள்ளன. கேரளத்திலும் காஷ்மீரத்திலும் கூட வாணவேடிக்கைகள் இருந்தது பற்றி குறிப்புகள் கிடைத்துள்ளன. விசேஷமாக கேரளத்தில் நீலகண்டன் என்பவரால் “வெடிக்கம்ப விதி” என்று பட்டாசுகள் தயாரிப்பு பற்றி ஒரு நூலே எழுதப்பட்டுள்ளது. (ப.211).

பதினெட்டாம் (பொ.யு.) நூற்றாண்டில் ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் தீபாவளி சந்தர்பத்தில் லட்சக்கணக்கில் தீபங்கள் ஏற்றப்பட்டு, நான்கு நாட்கள் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் அந்தப் பகுதியின் அரசரால் நடத்தப்பட்டது என்பது பற்றிய ஆதாரங்களை கொடுக்கிறார் பி.கே கோடே எனும் அறிஞர் (P.K.Gode Studies, Vol.V, Studies in Indian Cultural History, Vol.II, 1960, The History of Fireworks in India, p.31-56)

இவ்வாறு மிகவும் புராதனமான, பல ஆழமான காரணங்கள் கொண்ட, எல்லா நாகரீகங்களுக்கும் பொதுவான, களிப்பும் ஒளியும் மிகுந்ததான, இந்த தீபாவளி பண்டிகை நமது கலாச்சாரத்தின் பாரம்பரியத்தின் சொத்து. பண்டைய மரபுத் தொடர்ச்சியின் இழை. இந்த கலாச்சார பொக்கிஷத்தை இழக்கலாமா? இந்த மரபுத் தொடர்ச்சியின் இழை அறுபடலாமா?

இந்த தீபாவளி பண்டிகை மேலும் சிறப்பாகவும் மகிழ்வுடனும் எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும், இயற்கை மாசுபடாமல் பட்டாசுகளை தயாரிக்கும் முறை என்ன, என்பது பற்றி சிந்தித்து அதற்குத் தகுந்த செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தான் விவேகம். மாறாக, காலங்காலமாக நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வரும் இந்த பண்டிகை பற்றி, மக்களை கலந்தாலோசிக்காமல், அவர்களிடையே ஒத்த கருத்தை உருவாக்காமல், கலாச்சார புரிந்துணர்வில்லாமல் கட்டுப்பாடுகளை விதிப்பது எதிர்மறையான உணர்வுகளையே தூண்டும் அல்லவா?

இந்த தீபாவளித் திருநாளில் தீபாவளி, மற்றும் இது போன்ற பண்டைய அர்த்தமுள்ள ஹிந்து கலாச்சார நிகழ்வுகள் பற்றிய விவேக ஒளி அனைவரிலும் பரவ அந்தப் பரமன் அருள்புரியட்டும்.

கட்டுரையாசிரியர் ஜெயராமன் மகாதேவன்  வேத, சாஸ்திரங்களிலும், யோகத்திலும் ஆழ்ந்த புலமைபெற்ற சம்ஸ்கிருத அறிஞர். சென்னை கிருஷ்ணமாசார்யா யோக மந்திரத்தில் ஆய்வுத்துறை இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். இவரது எழுத்துக்களை கீழ்க்கண்ட இணையதளங்களில் வாசிக்கலாம்.  https://independent.academia.edu/jayaramanMahadevan
https://yoga-literary-research.blogspot.in/2015/10/the-books.html
https://alarka-bhasitam.blogspot.in/

15 Replies to “தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன?”

 1. மகாராஷ்ட்ர பேஷ்வாக்கள் வேதம் தழைக்க காசி வேத அறிஞர்களுக்கு நிதி உதவி செய்த போதும் வேத அர்த்தம் பயிற்றுவிப்பதற்கு வகை செய்யத் தவறியதால் வேதத்தில் பொதிந்துள்ள யுத்த நுட்பங்கள் தெரியாமலே போயிற்று. அதனால் ஹிந்துக்கள் போர்முனையில் தோல்வி அடைய நேர்ந்தது என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் (சர்சங்கசாலக்காக 1940 – 1973 காலகட்டத்தில் பணிபுரிந்தவர்) ஸ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர் (ஸ்ரீ குருஜி)அறிஞர்கள் சந்திப்பு ஒன்றில் சுட்டிக்காட்டியிருப்பது ’சிந்தனைக் களஞ்சியம்’ என்ற அவரது பேச்சுக்கள் எழுத்துக்களின் 12 வால்யூம் தொகுப்பில் பதிவாகியுள்ளது. திரு. ஜயராமன் பாரதத்தில் பட்டாசின் தொன்மையையும் சாஸ்திரம் பட்டாசு வெடிப்பதை விதித்திருப்பதையும் உரிய ஸ்லோகத்தை அர்த்தத்துடன் மேற்கோள் காட்டியதால் தெரிந்து கொள்கிறோம். அதாவது உச்சநீதி மன்றம் குறுக்கிட்டிருப்பது பட்டாசு என்ற ஏதோ இடையில் வந்த “சூழல் விரோதமான தீய பழக்கத்தில்” அல்ல. மூதாதையருக்கான விருந்தோம்பல் என்ற தொன்மையான சாஸ்திர சம்மதமான சம்பிரதாயத்தில் என்பதை இந்தக் கட்டுரை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது அல்லவா?

 2. Illuminating article. Special thanks for telling us about Dr.Raghavan’s book. Dr.Raghavan went to the original sources for his material.and his references are valuable.

 3. பட்டாசுகள் வெடிப்பதால் காற்றின் மாசு அதிகமாகின்றது என்பது உண்மை. சுயகட்டுப்பாடு தேவை.சுயகட்டுப்பாடுதான் மனிதனை மிருகங்களில் இருந்து வேறுபடுத்துகின்றது. இந்துக்கள் பண்டிகைகள் கொண்டாடும் விதங்களில் வளா்ச்சி தேவை. பழையனவற்றை கழிய விடுங்கள்.

 4. அ.அன்புராஜ்
  I agree. You should start preaching to Christians and Muslims first on this. Millions of tress are cut down, millions of turkeys,birds and animals are slaughtered for Christmas.Farm animals bred for religious functions and consumption are ALSO the biggest culprits in generating greenhouse gas,thus impacting our environment. Millions of animals are bled to death causing huge pollution during Id. In comparison, firecrackers on one day in a year is a drop in this ocean of pollution. Please let us know about your progress with Christians and Muslims on this and then, and only then, come back to us on Diwali pollution, thanks.

 5. ***மனிதன் இயற்கையோடு விளையாடிக்கொண்டிருக்கிறான்***

  சந்தேகத்தின் அடியாழம் வரை ஒருவன் சென்று அங்கேயே தங்கி விட முடியாது. சந்தேகம் என்பது ஆத்மாவை மறுப்பது. கடவுளை மறுப்பதல்ல. எந்த உருவத்தை மறுத்தாலும் இறுதியில் அது ஆத்மாவில் நின்றுவிடும். தன்னை மறுப்பதாய் போய், அது நிற்கும். எவனால் அந்த சந்தேகத்தை முழுமையாய் தாங்க முடியும்?. இறை தத்துவம் என்பது இறுதியில் தன்னிடம் தான் போய் சேரும். தன்னுடைய ஆத்மா தான் என்பதில் போய் நிற்கும். அதில் வளர்ச்சி சாத்தியம்.

  தீப ஒளித்திருநாளில் இந்த வாண வேடிக்கைகள், புகைகள், ஒலிகள், புகை மண்டலத்தால் ஏற்படும் ப்ரச்சினைகள் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். பட்டாசுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா? அல்லது பட்டாசுகள் வாண வேடிக்கைகள் கொழுத்துவதை நிறுத்திவிட்டால் சுற்றுச்சூழல் வளமடைந்து விடுமா? இந்த பட்டாசுகளை விட மிக அதிகமாக சூழலை கெடுப்பது எது? மனிதன் இதுவரை கவனிக்காத ஒன்று. மனிதன் தான். மனிதன் வெளியேற்றும் மூச்சுக்காற்று. இனி வரும் காலங்களில் இதை காரணம் காட்டி மனிதன் மூச்சு விடுவதை தடுக்க வேண்டுமா? மனிதன் வெளிவிடும் மூச்சுக்காற்றை இயற்கை கவனித்துக்கொள்கிறதென்றால் மற்றவற்றையும் அதுதானே கவனிக்க வேண்டும். பூமியே மனிதனின் இருப்புதான். மனிதனை அழித்து விடலாமா? மனிதனை காரணம் காட்டி பிறப்பை தடுத்து விடலாமா?

  எப்பொழுதெல்லாம் மனிதனுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமென்று தெரிகிறதோ அப்போது வாணவேடிக்கை நிறைய கொழுத்த வேண்டும். இது ஒரு வைத்தியம். ஆங்கில வைத்தியம் என்ன செய்கிறது? நோய்க்கு நோய் கிருமியைத்தான் அளிக்கிறது. அப்போது இரண்டும் ஒன்றையொன்று அழித்துக்கொண்டு விடுகிறது. அதுபோல மற்ற சுற்றுச்சூழல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறதோ, அதனை இந்த பாதிப்பு நீக்கும். ஒவ்வொன்றும் காரணத்தோடு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. காரணம் என்ன? நரகாசுரனை அழித்த புராணம் இருக்கிறதே, எனவே அதை கொண்டாடுதல். பொருள் என்ன? நரகன் என்றால் என்ன? நரகல் என்றால் என்ன? நரகன் என்பது தீமையின் மொத்த உருவம். நரகல் என்றால் நரகல் என்றால் மலம். மலம் என்ற விஷயம் அழிந்ததற்காய் கொண்டாடுதல். அல்லது அழித்ததற்காய் கொண்டாடுதல். வேறு வகையில் எடுத்தால் கொண்டாடுவதால் அழியும் நரகாசுரன் இந்த கொண்டாட்டத்தை வரமாக பெறுகிறான். நீங்கள் வரத்தை மறுத்தால் என்ன ஆகும். நரகாசுரன் மறுபடி பிறந்து வர வேண்டியதுதான்.

  அந்த புராணத்தை பார்த்தால், திருமால் வராக அவதாரம் எடுத்த பொழுது வராகத்திற்கும் பூமி தேவிக்கும் பிறந்த மகன் நரகாசுரன். திருமாலுக்கும் பூமி தேவிக்கும் பிறந்தவன் நரகலின் வடிவமா? இது என்ன புதுக்கதை. தெய்வத்திற்கு பிறந்தது அசுரமாக எப்படி மாறும். இதில் புதைந்த தத்துவம் என்ன?

  வராகம் என்பது நரகலை அழிப்பது. மலத்தை உண்பது. எல்லா நரகலையும் அழிக்கக்கூடியது. அது பூமியை தீண்டுகின்ற பொழுது, பூமா தேவியை தீண்டி குடைந்து எடுக்கின்ற பொழுது நரகாசுரன் தோன்றுகிறான். அப்போது நரகலை உணவாக உண்டு அதனை செரித்து கொண்டிருக்கிற ஒன்றிலிருந்து இது வெளிப்பட்டு விடுகிறது. செரித்த ஒன்று வெளிப்படுகிறது. பூமியை தொடுகின்ற பொழுது. என்ன பொருள். பூமியின் மலத்தை சுத்தப்படுத்துவதால் உருவாகின்ற நரகல். மிகுந்த சுத்தத்தால் பிறக்கின்ற அசுத்தம். பூமியில் மனிதன் முழுவதுமாக சுத்தத்தையும் செய்யக்கூடாது. அசுத்தத்தையும் முழுவதுமாக செய்யக்கூடாது. அதிக சுத்தம் என்று இறங்கினால் அசுத்தம் மறுபடியும் தன்னைத்தானே வேறு வழிகளில் பிறப்பித்துக்கொள்ளும். எல்லா நோயையும் ஒழிப்பதற்காக கிளம்பினால் புதுவகை நோய்கள் உருவாகும். புதுவகை கிருமிகள் பரவும். இயற்கை, சுத்தமும் அசுத்தமும் நிறைந்தது. இரண்டும் ஒன்றையொன்று கலந்தே இருக்கும். சுத்தத்தை விட அசுத்தம் அதிகமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அசுத்தத்திலிருந்துதான் சுத்தம் பிறக்க முடியும்.

  புதுப்பிறவிகள் எப்படி பிறக்கிறது? மழை பொழிகிறது. நீர் தேங்கி சகதிகள் சாக்கடைகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கே உயிர் தோன்றி விடுகிறது. பெண்ணின் கருப்பை என்ன சுத்தமானதா?

  அதை திறந்து விட்டு மனிதன் அருகில் நிற்க முடியுமா? அசுத்தம் நிறைந்தது. அங்கே உயிர் இருக்கிறது. உயிர் ஜனிக்கிறது. இந்த அசுத்தம் தான் அந்த உயிரை காக்கிறது என்பது இன்னொரு விஷயம். கருப்பையில் உள்ள அசுத்த நீரை நீக்கி சுத்தமான நீரால் நிரப்பி அதில் குழந்தையை மிதக்க விட முடியுமா?

  மனிதன் கருத்துக்களை தவறாக புரிந்து கொள்கிறான். இது கிருஷ்ணனை கொண்டாடுவதற்கோ, மத சம்பந்தமான குறியீடாகவோ இது இல்லை. எல்லா கொண்டாட்டங்களும் இப்படித்தான். ஒரு பண்டிகை என்று வைத்துள்ள அந்த நாள் மிக மிக முக்கியமானது. அது சாதாரணமல்ல. ரிஷிகளும் முனிகணங்களும் சரியாக சில இடங்களையும் சில நேரங்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த இடத்திலும் அந்த நேரத்திலும் ஆத்ம சாட்சத்கரமும் தெய்வ சாட்சாத்கரமும் பரிபூரணமாக முடியும். அதிலும் முக்கியமாக எதையெதையெல்லாம் வடிவமைத்திருக்கிறார்களோ அவைகள் எல்லாம் அந்த நாளில் அந்த இடத்தில் வழிபட வழிபட அதனுடைய சாட்சாத்காரம் அதிகமாகும் என்று பொருள்.

  தீப ஒளி திருநாளில், லஷ்மி என்பது இதில் மிக முக்கியம். லஷ்மி கடாட்சம். லக்ஷ்மி தோன்றுகிறாள். லக்ஷ்மியின் தத்துவமான ஸ்ரீ என்னும் பீஜத்தின் தத்துவம் தெரியுமா? இதை யாரும் கவனித்ததில்லை. லக்ஷ்மி என்றால் மனிதனுக்கு தெரிந்தது பணம் மாத்திரமே. மூல சக்தி என்றிருக்கிறதே அதை ஸ்ரீ பீஜம் குறிக்கிறது. உடலாகட்டும் மனமாகட்டும் அதில் மூலமான சக்தி. உடல் மற்றும் உலகத்தில் இருக்கின்ற சக்தி அனைத்திற்கும் மூலமான வஸ்து, அதுதான் ஸ்ரீம் என்ற பீஜம். இந்த ஸ்ரீம் என்ற பீஜத்தை சொல்ல சொல்ல முதலில் அந்த சக்தி முதலில் தெளிவாகும். அது முதலில் வெளிப்பட துவங்கும் அந்த பீஜம் மிகச்சிறந்த ஒன்று. அதை ஏன் தீப ஒளித்திருநாளில் இதை வைத்திருக்கிறார்கள். ஏன் மற்றவற்றை கும்பிடக்கூடாதா? சரஸ்வதியை வணங்கலாம். சிவனை வணங்கலாம். எத்தனையோ தெய்வங்கள். இதற்கு ஏன் அந்த முக்கியத்துவம்.

  பாற்கடலை கடைந்து அன்னை வெளிப்படுகிறாள். இதிலும் ஒரு தத்துவம், என்ன அது? கடைகின்ற பொழுது முதலில் பாற்கடலில் எது வெளிப்பட்டது. ஆலகால விஷம். லக்ஷ்மியானவள் தன்வந்திரிக்கும் முன்னதாக தோன்றுகிறாள். இறுதியில் தான் அவள் வெளிப்படுகிறாள். முதலில் அனைவரையும் அழிக்கும் சக்தியாக மிகப்பெரும் அசுத்தமாக ஆலகால விஷம், இறுதியில் ஆக்கும் சக்தி, அமிர்தம் கிளம்புகிறது. இந்த பாற்கடல் என்பது தனக்குள் இத்தனை சக்திகளையும் அடக்கிக்கொண்டிருக்கிறது என்று பொருள். இதுதான் அசுத்தமும் சுத்தமும் கலந்திருப்பது. அதுவே இயற்கை. அதில் அசுத்தம் மிக அதிகமாகவும் கொடூரமாகவும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த கொடூரம் தான் லக்ஷ்மியை வெளிப்படுத்துகிறது. சக்தியின் மூலப்பொருளானவள் வெளிப்படுகிறாள். அதனால் ஆலகால விஷத்தின் பிறப்புதான் இந்த சக்தி அதனால் தான் மூதேவி ஸ்ரீதேவி இருவரையும் அக்கா தங்கை என்கிறார்கள். ஒரே இடத்திலிருந்து தோன்றுதல்.

  இந்த ஸ்ரீம் பீஜம் சக்திகளின் மூலக்கூறு என சொல்லப்பட்டது. அந்த சக்திகளின் மூலக்கூறு அந்த நாளில் பிறக்க வேண்டும். அந்த சக்திகளின் மூலக்கூறு என்பதின் குறியீடாக மனிதனின் உடலில் குண்டலினியும் வெளியில் அக்னியும் இருக்கிறது. அக்னிதான் சக்தியின் குறியீடு. ஹோம திரவியங்கள் எதை போட்டாலும் இந்த அக்னி பகவான் தான் அதை கொண்டு போய் சேர்க்க வேண்டும். அந்த அக்னியே சக்தி. அந்த அக்னியே சக்திக்கு தூதுவனும் ஆகிறான். அந்த அக்னியே சக்தியை கொண்டு வந்து தருபவனும் ஆகிறான். அதனால் இந்த சக்திகள் என்று வெளிப்பட வேண்டுமோ அன்று ஸ்ரீம் பீஜத்தால் வழிபடுதல் மிகச்சிறந்தது என்பது முக்கியம்.

  இன்றைய தினத்தில் தீப ஒளித்திருநாளில் வாணவேடிக்கையாகவும் வெடியாகவும் வெடிப்பது அக்னியின் ஜாலங்கள். அந்த சக்தி அடைக்கப்பட்டிருந்தால் அது எப்படி வெடித்து கிளம்பும். கிளம்புகின்ற பொழுது அதன் வெடிப்பு எப்படி? அந்த முழுமையைத்தான் இது காட்டுகிறது. இந்த அக்னி சக்தி எந்த தினத்தில் மிக அதிமாக வெளிப்படுகிறதோ அந்த தினத்தில் இந்த ஸ்ரீம் பீஜத்தால் எவன் பரிபூரணமாக வழிபடுகிறானோ அவன் உள்ளிலிருந்து சக்தியின் மூலமும், பொருட்கள் அனைத்திற்குமான மூலமும் எதுவோ அது மிக அதிகமாய் வெளிப்பட்டு அவனிடம் வந்து நிற்கும் என்ற விதி உண்டு. அதனால் தீப ஒளி திருநாள் அன்று லக்ஷ்மியை வழிபடுகிறார்கள்.

  பாற்கடலில் முதலில் வெளிப்பட்டது ஊழித்தீ. அந்த அக்னியை தாங்க முடியாமல் தான் தேவர்களும் அசுரர்களும் தவித்தனர். விஷம் வெளிப்படும் பொழுது அதன் உஷ்ணம் அவர்களை அரிக்கிறது. அதுதான் வெப்பம். ஆலகால விஷத்தோடு சேர்ந்து ஊழிப்பெரும் தீயும் தோன்றுகிறது. அதைத்தான் சிவபெருமான் தன் கையில் எடுத்து வைத்துக்கொள்கிறான்.

  எப்படி பிறப்பு என்பது ஏற்பட்டது. ஆகாசம் முதல் தத்துவம். அடுத்து வாயு, அடுத்து நீர், அடுத்து நெருப்பு, அதன் பின் பூமி. அதாவது நீருக்குள் நெருப்பும் பூமியும் அடக்கம். பாற்கடல் என்பது வங்கப்பெருங்கடல் அல்ல. பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றும் உள்ளுக்குள்ளே அடங்கி அடங்கி செல்லும். பாற்கடல் என்பது, இப்போது அனைவராலும் சொல்லப்படுகிறதே பால்வீதி(milky way). இதனுடைய உருவாக்கம். இப்படித்தான் பெயர்கள் தோன்றும். தானாக அது வரும். இந்த பால் வீதி பெயர் எப்படி தோன்றியது. பாலா ஓடிக்கொண்டிருக்கிறது. பாற்கடலில் என்ன பாலா ஓடிக்கொண்டிருக்கிறது என்று பகடி செய்பவர்கள் பால்வீதியில் என்ன பாலா ஓடிக்கொண்டிருக்கிறது என கேட்பார்களா? ஆனால் பால் வீதி என்ற பெயர் ஏன் வைக்க வேண்டும். பால் என்றால் ஷீரம், அது மனிதனை வளர்க்கின்ற சக்தி. எல்லா உயிர்களுக்கும் சக்தி தருவது. அதிலிருந்து வெளிப்படுகிறது. அதாவது இதற்குள்ளிருந்து அனைத்தும் கிளம்பும் என்பதே விதி. எல்லாம் ஒரு உருவகங்கள்.

  அதனால் பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மியை இந்த தீப ஒளி திருநாளில் வழிபடுவது மிகச்சிறந்தது. அதனை வேட்டுக்களோடு வழிபடுவது மிகச்சிறந்தது. அந்த ஸ்ரீம் மந்திரத்தை சொல்லுவதை விட, அந்த வாண வேடிக்கைகளை நின்று கவனித்து அதை ஆனந்தித்து உள்ளே கவனிக்க கவனிக்க அவரவர்க்குள்ளும் அந்த சக்தி பெருகும் என்ற விதி உண்டு. ஆனால் எவரும் அதை செய்வதில்லை.
  இதையெல்லாம் சொன்னால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கூட வரலாம். வெடிக்காதே என்று நீதிமன்றம் சொன்னால், வெடிக்கச்சொல்லுவது குற்றம் என்பார்களே!!

  இந்த வாண வேடிக்கைகளையும், வெடி வெடிப்பதையும் நிறுத்தினால் என்ன ஆகும்? முழுவதுமாகவே நிறுத்தி விடுகிறீர்கள் என்றே வைத்துக்கொள்வோம். பூமியின் எந்த இடங்களிலும் இல்லை. என்ன ஆகும்? மனிதர்களின் கணக்குப்படி எல்லாம் சுத்தமாகும். அல்லது அதிக மாசு குறைந்து போகும். மாசின் அதிக உயர்வு என்பது இல்லாமல் இருக்கும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படப்போகும் மாசு என்னவென்று இந்த மனிதர்களுக்கு புரிவதில்லை. வெடி வெடிப்பதால் மாசு ஏற்படுகிறது என்கிறார்கள். இந்த மாசு எதனை அழிக்கிறது. இந்த வெடி ஒவ்வொன்றிற்கும் மூலமான ரசாயனங்கள் என்ன? அதனுடைய விளைவுகள் என்ன? எதைச்செய்யும்.? எதை அழிக்கும்? மனிதனுக்குள் இது இருக்கிறதா? இல்லையா? மனித உடலுக்குள் இது இருக்கிறதா இல்லையா? வெளியே என்னென்ன உண்டோ அது மனிதன் உள்ளேயும் உண்டு.

  மனிதன் தன் திட்டங்களோடு இயற்கையோடு விளையாடக்கூடாது. இயற்கை இது போன்ற வாணவேடிக்கைகளையும் வெடிகளையும் வரவேற்கிறது. அதற்காகவே இவைகளெல்லாம் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட விஷயங்கள் புராணங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இயற்கை தன்னுடைய மாசுகளை அழித்துக்கொள்ள இதை தேர்ந்தெடுக்கிறது. சில விஷயங்களை உருவாக்கவும் இதனை தேர்ந்தெடுக்கிறது. மனிதன் இந்த விஷயங்களை தொந்தரவு செய்தால் அந்த மாசும் பரவும். அந்த மாசினை இயற்கை அழிப்பதால் ஏற்படக்கூடிய நன்மையும் தடைபடும். ஆகையால் இதை கொண்டாடாமல் தவிர்ப்பது தவறானது.

  நாஞ்சில் சுரேஷ்

 6. To
  Dr Rama Krishnan
  Sir, I am a practising Hindu.I have many thing to do with Hindus alone. I love Hindus Hindu culture Hindu Literature and Hindu History. It is my wish the Hindu society should not be a stagnating society.In Course of time every branch of our department gathers some silt and we must do some desiltation. Else ….. I leave it to your own imagination. Please note I am not an atheist.
  The one and only aim of Deepavali should not be Bursting of crakers.Crakers cause pollution. Hence we must be sober in firing crakers. This is what I insist on. I have no intention to denigrade the Hinduism.1000 yrs of slavery has reduced considerable portion of our society to the level of ….. ? simpletons. Am I correct ? I was born in a community which was once considered to be full of simpletons.
  The challenge posed by christians and Muslims is something tremendous. We must raise to the occasion and defect them. If there no common programme that bridges all segments of Our society, the result will be too small to defect the designs of christians and Muslims, who are struggling to destroy Hindu culture.Please go through my previous writing you would realise this truth.

  Let Hindus do desiltation of their society without waiting for christians and Muslims.This is enough. Thank you very much.Please read MY writings on SUVANAPPRIYAN .Then you ……….

 7. Let us cut or minimise unproductive expenses. That will deplete Human resources

 8. Mr Anburaj, this is sort of cop out. You and I know very well that Christians and Muslims will not lift a finger in the fight against pollution. So , “we need to do something without waiting for them” is a spurious argument when Hindu festivals in overal context are the minuscule culprits. Why take on a minor pickpocket guy when mass murderers happily go about their business? Your advice is to the wrong crowd.

 9. திரு. ஜெயராமன் மஹாதேவன்,

  கட்டுரைக்கு மிக்க நன்றி. டாக்டர். ராகவனின் புத்தகம் இப்பொழுது அச்சில் இல்லை என்றே தோன்றுகிறது. நானும் இந்னூலைப் பல இடங்களில் தேடினேன். கிடைக்கவில்லை. இந்னூலை நீங்கள் வலைதளத்தில் பதிவேற்றினால் அது பலருக்கும் பயன் பயக்கும்.

  இனி, दीपोत्सवचतुर्दश्यां कार्यं तु यमतर्प्पणम् (“தீபோத்ஸவ சதுர்தசி அன்று யம தர்ப்பணம் செய்ய வேண்டும்) என்ற விதியை ஒட்டி நானும் (என் தந்தை சொன்னபடி) தீபாவளி அன்று யம தர்ப்பணம் செய்கிறேன். ஆனால் தீபாவளிக்கும் யமனுக்கும் என்ன தொடர்பு என்று இக்கட்டுரையைப் படித்த பின்னரே ஊகிக்கமுடிகிறது. அதே போல் தீபாவளிக்கும் மயானக் கொல்லைக்கும் என்ன சம்பந்தம் என்று பல நாட்களாக எனக்குப் புரியாமல் இருந்தது. இப்பொழுது, தீபாவளிக்கும் மஹாளய பட்சத்துக்கும் தொடர்பு புரிந்த பின் இந்த கேள்விக்கும் விடை ஊகிக்கமுடிகிறது.

  இந்நூலைத் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். இன்றைக்கு ஒரு தென்னிந்தியப் பத்திரிகையாளர் “தென்னிந்தியாவில் நரக சதுர்தசி மட்டுமே கொண்டாடுகிறோம். தீபாவளி அல்ல. இந்தியர் எல்லோரும் ஒரேமாதிரியானவர் அல்ல”எனற “அரிய கருத்து” ஒன்றை ட்வீட் செய்ததாகப் படித்தேன். இந்துக்களின் கலாசார அறிவின்மை இப்படி இருக்கிறது. எனவே, இது போன்ற நூல்களை மறுபதிப்பு செய்ய முயற்சிப்பதும், மொழிபெயர்ப்பதும் நம் கடமை. சொல்லப் போனால், பட்டாசு வெடிப்பதை விட நாம் கொண்டாடும் விழவுகளின் முன்னோடிகளையும் தாத்பர்யத்தையும் அறிவதே மேலானது என்பேன். இதனால் உச்ச நீதி மன்றம் செய்தது சரியென்று கூறவில்லை. ஆனால் முன்னோர் நினைவோ, கிருஷ்ணரின் நினைவோ சற்றும் அல்லாமல் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்தும், காதைப் பிளக்கும் வெடிகளை வெடித்தும் நாம் கொண்டாடுவது என்ன என்று புரியவில்லை. தவிரவும் இந்த சமயத்தில் உயிருக்குப் பயந்து ஓடும் பிராணிகளைக் கண்டும் நமக்குக் கருணை பிறக்கவில்லையென்றால் இன்றும் நம் எல்லோரினுள் நரகாசுரன் உயிரோடு இருக்கிறான் என்றே தோன்றுகிறது.

  தீபாவளிப் பண்டிகை தொடர்பாக அரவிந்தன் நீலகண்டன் அருமையான கட்டுரை ஒன்றை “ஸ்வராஜ்யா” வலைதளத்தில் எழுதியுள்ளார். அதையும் இங்கே கூற வேண்டும்.

 10. This is for Mr Anburaj and people like him who advise Hindus not to celebrate Diwali with crackers.
  Copy pasted from my FB
  Don’t be Apologetic about Diwali – Enjoy it!!!

  In city of Bengaluru alone – 4 lakhs Animals are Killed on Eid which includes 10000 Large animals like Cattle and Camels
  It generates 300 tonnes of animal waste which is just buried in pits near Kogilu on the city outskirts
  For 14 lakh Muslims in Bengaluru – 4 lakh Animals killed
  Even if one Animal weighs 10 kg then can an average person eat 3 kg meat on single day ?
  And mind you this includes kids and infants also
  So most of the meat goes waste though people might claim we give it to poor

  If you conflate this number to whole of India then imagine the number of Animals killed on the single day ?
  For 200 millon it must be at least 20 millon Animals
  And 200 millon kgs of Meat and staggering 8 billon kgs of Green House gases or Carbon dioxide and we are not even calculating the lakhs of tonnes of bio waste generated

  And now conflate this number to the whole world
  It is 200 millon Animals 80 billon kgs of CO2

  Now let us come to ThanksGiving in USA – 45 million Turkeys are killed

  Christmas in US – 25 million Turkeys are killed

  In US 30 million trees are chopped off every year to make Christmas Tree
  Which is huge pollution
  And 50 million artificial trees are used which is made of plastic and is even more polluting
  On Independence Day July 4th USA uses 1 billion Worth of fire crackers which is 5 times more than what India uses in an whole year

  Chinese use more times more firecrackers on Chinese New Year alone that what US does on July 4
  World wide on New year billions Worth Fire crackers are used

  Hindu festivals are the only Eco Friendly festivals on Earth
  As most of Hindus eat only Vegetarian food on festivals
  Other wise every other religion the meat is the most important item on a festival or any celebration

  But when it comes to narrative it is only hindu festivals which are being maligned as polluting
  Holi – Water Pollution so Waterless Holi
  Ganesh – Sea or River Pollution So Green Ganesh
  Dussehra – Riots/ sexual abuse so don’t go dandia or no Durga Idol immersion
  Diwali – Air Pollution so no fire crackers
  Have you seen any one raising topic of Pollution on Christmas New year or Eid ?
  Has anyone campaigned for Veg Xmas or Green New Year or No killing on Eid ?
  So don’t let breaking India forces take the fun out of Diwali
  Let the festivals of lights
  Hindu festivals are green by nature as Hindus worship nature and all tHe festivals are born out of nature worship

  PS – The most comprehensive report on Delhi Pollution by IIT Kharagpur has not included Fire crackers in the report
  Road Dust, Concrete batching, Vehicles, Coal tandoors, Crop burning, industries are responsible for Delhi air pollution

 11. திரு. பரிக்சித்,
  மிக்க நன்றி. பதிவிறக்கம் செய்துகொண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *