தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத திமுகவுக்கு நன்றி: ஒரு திறந்த மடல்

இப்பண்டிகை வராக மூர்த்திக்கும் பூமி அன்னைக்கும் பிறந்த நரகாசுரனை அதே வராக மூர்த்தி – பூமாதேவி அவதார அம்சங்களான ஸ்ரீ கிருஷ்ண சத்யபாமாவால் வதம் செய்யப்படும் நாள் என தென்னகத்தில் கொண்டாடப்படுகிறது. அதர்மியானவன் சொந்த மைந்தனென்றாலும் அவனை வதம் செய்யும் பாரத பண்பாடு எங்கே. கடைமட்டத் தொண்டன் முதல் கணக்கற்றோர் செய்த தியாகத்தை ஒரு குடும்பம் மட்டுமே உண்டு மகிழும் கழகம் எங்கே! எனவே திமுகவினர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதென்பது சரியானதல்ல. தீபாவளிக்கு கண்ணியமானதல்ல…

View More தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத திமுகவுக்கு நன்றி: ஒரு திறந்த மடல்

எழுநூறாண்டு பழைய ஈழத்துத் தமிழ் இலக்கியம் பேசும் தீபாவளித் திருநாள்

பொ.யு 1310ஆம் ஆண்டு இற்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன் போசராச பண்டிதர் இயற்றிய சரசோதிமாலை என்ற ஈழத்து சோதிட இலக்கிய நூல், “உரிய நற்பிதிர்கள் இன்பமுறு தீபாவலியாம் எண்ணெய் – மருவி வெந்நீரின் மூழ்கி மகிழ்ந்து நல் தருமம் செய்யே” என்று கூறுகிறது. ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) சதுர்த்தசி என்ற குறிப்பும் உண்டு.. இந்த நூலின் காலகட்டத்தில் வடஇலங்கை – குறிப்பாக யாழ்ப்பாணம் பாண்டியப் பேரரசின் தளபதியாக கருதப்பட்ட ஆரியச்சக்கரவர்த்திகளால் ஆளப்பட்டு வந்தது… ஆக, ஆயிரம் ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக தமிழர்கள் தீபாவளி திருநாளை கொண்டாடி வருகின்றனர்…

View More எழுநூறாண்டு பழைய ஈழத்துத் தமிழ் இலக்கியம் பேசும் தீபாவளித் திருநாள்

தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன?

தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் எப்போது வந்தன? இது ஒன்றும் புதிய பழக்கமல்ல. தீபாவளி பண்டிகையின் மிக புராதனமான அம்சம் இது. மகாளய பட்சத்தில் பூவுலகிற்கு வந்த முன்னோர்கள் திரும்பிச் செல்லும் காலம் தீபாவளி. அவர்கள் தங்கள் லோகத்திற்குத் திரும்பச் செல்லும் வழியினை ஒளிமயமாக்கத்தான் உயர்ந்த கம்பங்களில் தீப்பந்தங்கள் பண்டைய காலத்தில் ஏற்றப்பட்டன. ஆகாயத்தில் வாணவேடிக்கைகளும் கூட இதற்காகத்தான் தீபாவளி சந்தர்பத்தில் ஏற்படுத்தப்பட்டன. பண்டைய நூல்களில் இதற்கு “உல்கா தானம்” என்று பெயர்.. விஜயநகர சாம்ராஜ்யத்திலும் (பொ.யு. 1336 முதல்) , மொகலாயர்களின் காலகட்டத்திலும், மராட்டிய பேஷ்வாக்கள் ஆட்சியிலும் கூட மகாநவமியினை தொடர்ந்து வாணவேடிக்கைகள் விசேஷமாக செய்யப்பட்டன. ஒரிய அரசனான ப்ரதாப ருத்ரனின் (பொ.யு. 1497-1539) ஆட்சியில் வாணவேடிக்கைகள் நடந்தது பற்றிய குறிப்புகள் உள்ளன. கேரளத்திலும் காஷ்மீரத்திலும் கூட வாணவேடிக்கைகள் இருந்தது பற்றி குறிப்புகள் கிடைத்துள்ளன. விசேஷமாக கேரளத்தில் நீலகண்டன் என்பவரால் “வெடிக்கம்ப விதி” என்று பட்டாசுகள் தயாரிப்பு பற்றி ஒரு நூலே எழுதப்பட்டுள்ளது…

View More தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன?