பாரத தேசியத்தின் சவால்கள்: போரும் வியூகமும்

மனிதர்கள் அடிப்படையில் குழு மனப்பான்மை கொண்டவர்கள். ஜாதி, மதம், மொழி, இனம், நிறம், வர்க்கம், தேசியம் என பல அடையாளங்களின் அடிப்படையில் மக்கள் ஒன்று சேர்வதுண்டு. அடையாளம் எவ்வளவு பெரிதாக பலரை உள்ளடக்கியதாக ஆகிறதோ அவ்வளவு அழிவை ஏற்படுத்தும் என்பதற்கு இஸ்லாமிய, கிறிஸ்தவ, கம்யூனிஸ பேரடையாளங்கள் உதாரணம். மிகப் பெரிய அடையாளமாக உருவானாலும் உள் அலகுகளை பூரண சுதந்தரத்துடன் மதித்து ஏற்கும் பாரத தேசியம் என்பது அப்படியான பேரடையாளங்களிலேயே விதிவிலக்கானது.

பன்மைத்துவமும், பிற அடையாளங்களின் இருப்பை அங்கீகரித்தலும் (ஒன்றை ஒன்று சார்ந்த, ஒன்றால் உருவான மற்றொன்று) அதிகாரக் குவிப்புக்கு எதிரான தன்மையும் பாரத தேசியத்தின் ஆன்மா என்று சொல்லலாம்.

எனவே, பாரதத்தில் பேரடையாளத்துக்கும் உள் அடையாளங்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். அது தனித்தன்மையை மதிப்பதால் வரும் வித்தியாசம். ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.

ஓர் உடம்பில் கை ஒருவிதமாக இருக்கும். கண் ஒருவிதமாக இருக்கும். அதற்காக கண்ணும் கையும் எதிரிகள் என்றா அர்த்தம். அந்த வித்தியாசம் என்பது இயல்பானது. பாரத தேசியத்திலும் அப்படியான வித்தியாசம் என்பது ஒன்றை ஒன்று மறுதலிக்காமல் ஒன்றையொன்று மதித்து அங்கீகரிப்பதாகவே இருக்கும்.

சொடலை மாடன், இசக்கி மாடன், பிடாரி, மாரியம்மா என்ற தெய்வ வழிபாடு இருந்த அதே தமிழகத்தில் மாமன்னர் ராஜராஜ ராஜர் காலத்திலேயே பிரமாண்ட ஆலயம் கட்டப்பட்டு சிவனும் வணங்கப்பட்டிருக்கிறார். கிராம தெய்வத்தை வணங்கிய அதே தமிழன் சிவபெருமானையும் வணங்கியிருக்கிறான். ஒரு தெய்வத்துக்கு மாமிச படையல் கொடுத்த அதே தமிழன் இன்னொரு தெய்வத்தை சர்க்கரைப் பொங்கல் படைத்து வணங்கியிருக்கிறான். மாமிசப் படையல் தரும் பக்தனே தமிழன் என்றால் ராஜராஜன் தமிழன் இல்லையா?

கள்ளையும் மாமிசத்தையும் உண்பது பற்றி ஒளவை சிலாகித்துப் பேசியிருக்கிறாரென்றால் வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை கொல்லாமையைப் பேரறமாக வலியுத்தியும் வந்திருக்கிறார்கள்.

பாரதத்திலும் தமிழகத்திலும் இப்படி எந்தவொரு விஷயத்தையும் பொதுமைப்படுத்த முடியாது என்பதுதான் இரண்டின் ஆதார அம்சமே. இரண்டுமே பலதரப்பட்ட பார்வைகளை இயல்பாக அனுமதிக்கவே செய்திருக்கின்றன.

பாரத தேசியத்துக்கு இன்று எதிர்ப்புகள் பல திசைகளில் இருந்து வருகின்றன.

பாரத தேசியம் (கலாசாரம், சனாதன தர்மம்) என்பதை ஒரு கோவிலாக உருவகம் செய்தோமென்றால் இஸ்லாம் அந்தக் கோவிலை இடிக்க முற்படுகிறது. கிறிஸ்தவம் அந்தக் கோவிலை சாத்தானின் உறைவிடம் என்கிறது. கட்டாய உழைப்பின் அடையாளம் என்கிறது கம்யூனிஸம். இந்த மூன்றின் கைப்பாவையாக கூலிப்படையாகச் செயல்பட போலித் தமிழ் தேசியப் போராளிகள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்காகப் போராடியவர்களில் எந்தவொருவரையாவது ஜல்லிக்கட்டு தொடங்கும் கோவிலில் நெற்றியில் விபூதியிட்டு வணங்கிப் பார்த்திருக்கிறீர்களா? இந்து நீக்கம்தான் அவர்களின் இலக்கு.

இவர்கள் முழுமையாக எதிர்க்கப்படவேண்டியவர்களே.

அதே நேரம் இந்து தர்மத்தையும் பாரத தேசியத்தையும் காப்பாற்ற வேண்டியவர்கள் எந்த அளவுக்கு தமது பணியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்? எந்த அளவுக்கு திறமையாகச் செயல்படுகிறார்கள்?

நம் பாரம்பரியக் கோவில் சிலைகளை மணல் வீச்சு முறையில் அழிப்பதும் ஓவியங்களை வெள்ளையடித்து சிதைப்பதும் யார்..? ஒருவேளை அதிகாரவர்க்கமும் அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இதைச் செய்கிறர்கள் என்றால் இந்து அரசியல் சக்திகள் இவற்றைக் காக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றன.

எதிரிகள் அழிவுச் செயலில் காட்டும் தீவிரத்தில் பத்தில் ஒரு பங்குகூட காக்கும் சக்திகள் செய்வதில்லையே… செய்ய முடிவதில்லையே…

ஒற்றைப் படைத்தன்மையைத் திணிக்கும் அரசியல் உணர்வு மிகுந்த சக்திகளை எதிர்ப்பது எங்கனம்? அவற்றைப் போலவே நாமும் ஒரு ஒற்றைப்படையை முன்வைக்கவேண்டுமா..? நமக்கான அரசியல் உணர்வை ஊட்டுவது எங்கனம்?

ஆங்கிலத்தை எதிர்ப்பதென்றால் தேசம் முழுவதும் ஹிந்தியை முன்னிறுத்துவதா..? அவரவர் தாய்மொழியை முன்னிறுத்துவதா?

தேசம் முழுவதையும் ராமனின் கீழ் அணிதிரட்டுவதா..? தமிழகத்தில் முருகன் வழிபாட்டின் மூலம் ஓரணியில் திரட்டுவதா?

நாடு முழுவதும் ஒரே தேர்வா..? மாநில வாரியாக ஒரே கல்வியா?

மேற்கத்திய பாணி தொழில் வளர்ச்சியா… மேற்கத்திய பாணி வாழ்க்கை முறையா..? சுதேசித் தொழில் வளர்ச்சியா, பாரம்பரிய வாழ்க்கையை மீட்டெடுப்பதா?

விண்ணை முட்டும் ஃபாளாட்களா… அனைவரும் வசிக்கும் சமத்துவ அக்ரஹாரங்களா.. எது நம் வீடாகக் கட்டப்படவேண்டும்?

சர்சுகள், மசூதிகள் யாருக்கு வாக்களிக்க என்று தீர்மானிப்பதுபோல் கோவில்கள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து இந்து அரசியல் நலனைக் காக்கச் சொல்லவேண்டுமா? சர்ச்சுகள், மசூதிகளை அரசுடமையாக்கி மத அரசியலில் இருந்து பிரிக்கவேண்டுமா?

பாரத தேசியத்தின் பலமாக இருக்கும் பன்மைத்துவமே எந்தவொன்று சார்ந்தும் ஓரணியில் திரட்டவிடாமல் நம் பலவீனமாகவும் இருக்கிறதா?

பாரத தேசியம் என்பது வரும் காலங்களில் எதை முன்னிலைப்படுத்த வேண்டும்? இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்கிரமிப்புக்கு முந்தைய தூய இந்து கலாசாரத்தையா..? இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களின் நல்லம்சங்களை ஏற்றுக்கொண்டு புதியதொரு அடையாளத்தை முன்வைக்கவேண்டுமா?

மேற்கத்திய கிறிஸ்தவ அடிப்படைவாதிகளும், அயல் நாட்டு இஸ்லாமிய அராஜகவாதிகளும் செய்த தவறுகளுக்கு இந்து மதத்தில் இருந்து மாற்றப்பட்ட பாரதிய இஸ்லாமியர்களையும் பாரதிய கிறிஸ்தவர்களையும் பொறுப்பாக்கவேண்டுமா?

மதத்தை மாற்றிக்கொள்ளும் ஒருவர் தனது விசுவாசத்தை மாற்றிக்கொண்டுவிடுகிறார் என்பது உண்மையே. ஆனால், அவரை எதிரியாகவே நடத்த வேண்டுமா… அவர் இந்து மதத்துக்கு இந்து கலாசாரத்துக்கு திரும்பியாகவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நடத்தவேண்டுமா?

நாத்திக, சார்வாக மரபினராக அவர்களை மதித்து வாத பிரதிவாதங்களில் ஈடுபடக்கூடாதா? அதி பரபரப்பை நாடும் ஊடகங்களில் ஆக்கபூர்வ வழக்காடு மன்றங்களை முன்னெடுக்கக்கூடாதா?

ஆதிக்க ஜாதிகள் என்னதான் பட்டியல் ஜாதியினருக்குத் தீங்கிழைத்தாலும் இருவரையும் அரவணைத்துச் செல்லும் வியூகமே இந்து தர்மத்தைக் காக்கும் என்றால் பாரதத்தைக் காக்க பாரதிய இஸ்லாமிய, பாரதிய கிறிஸ்தவர்களை அவர்களுடைய கெடுதல்களையும் மீறி நட்பு பாராட்டி, ஒருங்கிணைக்கும் அரசியல் அவசியமில்லையா?

நம் நாட்டில் இருந்தே நம் தேசியத்துக்கு தர்மத்துக்கு கலாசாரத்துக்கு எதிராகப் பேசுபவர்களை உருவாக்கும் எதிரியின் சாமர்த்தியத்தில் ஆயிரத்தில் ஒருபங்கையாவது அயல் நாட்டினரில் நம் கலாசாரத்தை மதிக்கும் நபர்களை முன்னிலைப்படுத்துவதில் காட்டியிருக்கிறோமா? கிரிக்கெட் அணிக்கு அயல் நாட்டு பயிற்சியாளரை நியமிப்பதுபோல் அரசியல் கட்சிகளுக்கு பாரத தேசியத்தின் மேல் அக்கறைகொண்ட அயல்நாட்டினரை ஆலோசகராக ஸ்போக்ஸ் பேர்சனாக நியமிக்க முடியாதா?

அமெரிக்க-ஐரோப்பிய வல்லாதிக்கத்தை எதிர்க்க இந்திய, பாகிஸ்தானிய, சீன சக்திகள் ஒன்று சேர்வதுதானே நல்லது. அண்டைவீட்டானுடன் சண்டை என்பது அமைதிக்கு என்றேனும் வழிவகுக்குமா..?

வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு பாத யாத்திரை போகும் பாரதிய கிறிஸ்தவர் போப்பின் கையாளா..? போப்பை மறுதலித்து இந்து மதத்துக்கு இயேசுவை இழுத்துவருபவரா..?

இந்து புற அடையாளங்களை ஏற்க முன்வரும் கிறிஸ்தவரை இயேசுவே கடவுள் என்று சொல்லாதீர்கள்; இயேசுவும் ஒரு கடவுள் என்று சொல்லுங்கள் என்று இந்து தர்மத்தின் ஆன்மாவை ஏற்கவைக்க என்ன செய்யவேண்டும்?

எங்கள் (?) அடையாளத்தைக் களவாடாதே என்று சொல்வது சரியா..?

சித்திரகுப்தன் சன்னதியில் யாக குண்டம் அமைத்து பாவங்களை மனமாறக் காகிதத்தில் எழுதி நெருப்பிலிடும் இந்து பாவமன்னிப்பு சடங்கை ஆரம்பிப்பது பாரதிய கிறிஸ்தவரின் நல்லெண்ணத்தை வெல்ல உதவுமா?

மேற்கத்திய எஜமானர்களின் கொள்கைகளுக்கு ஏற்ப இந்தி ஜாதிய வாழ்க்கையை முற்றாக மறுதலிக்கும் இந்து அரசியல் சக்தியினருக்கு அந்த ஜாதிக் கொடுமையினால்தான் மதம் மாறியதாக (ஒப்புக்குச்) சொல்லும் பாரதிய கிறிஸ்தவ, இஸ்லாமியரைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கவே கூடாது அல்லவா?

சமூக, வரலாற்று இயக்கம் என்பது ஒரு பெரிய தேர் ஆடி அசைந்து நகர்வது போன்றது. இதில் யார் சொல்வது சரி..? யார் அவரையறியாமலேயே எதிர் தரப்பின் தாளத்துக்கு ஏற்ப ஆடுகிறார்?

நாளைய மதம் என்பது இந்து மதமாகவோ, இஸ்லாம் மதமாகவோ, கிறிஸ்தவ மதமாகவோ இருக்காது. இவற்றின் நல் அம்சங்களை ஒன்று சேர்த்து உருவான புதிய மதமாக இருக்கும் என்று விவேகானந்தர் சொன்னதன் அர்த்தம் என்ன?

எதிரிகளைச் சரியாக இனம் கண்டாலே போர்களில் வெல்ல முடியும்.

எதிரி தெளிவாகத் திட்டமிடுகிறான். தீயாகச் செயல்படுகிறான். நாம்தான்…

3 Replies to “பாரத தேசியத்தின் சவால்கள்: போரும் வியூகமும்”

 1. முறையான சமய கல்வி 1000 ஆண்டுகளாக இந்துக்களுக்க கிடைக்கவில்லை. அவனுிடம் எந்த வித எழுசசியை காணப்போகின்றீர்கள். ஏதோ கொஞ்சும் விழிப்பணா்ச்சி ஏற்பட்டு வருகின்றது.
  கட்டுரை அருமையாக உண்மை நிலையை உணா்த்துகின்றது.

 2. This essay does not say anything new, but brings all the facts together.
  Christianity and Islam are religions with but a single agenda: world domination.Both resorted to violence and political domination as the route. Both destroyed other civilizations wherever they went. Christianity destroyed the Classical world; with the Renaissance and the consequent rise of Humanism and Secularism and the rise of science, educated Westerners do not subscribe to the basic Christian tenets any more. They are turning secular or call themselves spiritual but not religious. Commercial domination and Imperialism helped spread Christianity indirectly, by encouraging missionary activities. But the two world wars were fought mainly among the Christians.
  Muslims have spread by militancy, and they do not hide it. World domination is their agenda even today. Where they cannot fight others, they fight among themselves for group or sect domination. What began with the sword will end only with the sword( or bomb).
  These things have been as plain as sunlight for any student of history, but Indians do not study history.So, as George Santayana said, they are fated to repeat it.

  All over the world, education has become an instrument of state control. directly or indirectly. No country is an exception. In the US, the leading universities are apparently free, but are instruments of vested interests who dish out specific theories. Their alumni spread out in administration, politics, law, journalism, education and in every field and so enforce their ideology in many ways. It becomes the default position. Today, they are most of them leftist and secular.

  This is the position in India too. To this is added the combined weight of the two Abrahamic religions with their agenda of world domination. So, we have three enemies: the leftist-secularist default position, and the two alien religions.

  Our education system was designed by Macaulay with the specific aim and hope that no English educated Indian would remain loyal to his religion. As the percentage of youngsters rises in the population, the true India declines and disappears. This is now accelerated by technology. No government can stop this.

  India has been most unfortunate in its leaders, from Gandhi downwards. They did not understand the Abrahamic religions , but indulged in goody goody talk.No Christian or Mohammadan would ever say that Hindu religion is true. For Hindus to talk of the equality of all religions is incredibly foolish. To expect them to honour Hinduism is vain dream or a disease. This position has to be understood and resisted.

  Among our leaders, only B.R.Ambedkar systematically studied and understood the real nature of the Abrahamic religions. That is why he chose Buddha dharma when he chose to leave the Hindu fold.

  Tamil Nadu has its own additional features. The irony is, avowedly anti-national forces have been in power there for half a century! And ironically, so called national and even nationalistic parties are eager to align with them, come elections.

  All great historians and students of civilization ( ARnold Toynbee, Will Durant, Samuel Huntington etc) have treated India as a civilization. Even Diana Eck, who is no admirer of Hindutva said that India had its own concept of national unity, long before Europe discovered and adopted the concept of nationalism. But Indians themselves have lost all sense or idea of their civilization. Speaking of the Muslim invasion of India, Will Durant said that a sober or nobler civilization suffers at the hands of less cultured ones. This is still happening. Young India is a blind imitator of the West now. As those under 35 constitute over 65% of our population, there is absolutely no chance for revival of Indian spirit, sans a miracle.

 3. நாளைய மதம் என்பது இந்து மதமாகவோ, இஸ்லாம் மதமாகவோ, கிறிஸ்தவ மதமாகவோ இருக்காது. இவற்றின் நல் அம்சங்களை ஒன்று சேர்த்து உருவான புதிய மதமாக இருக்கும் என்று விவேகானந்தர் சொன்னதன் அர்த்தம் என்ன?

  எதிரிகளைச் சரியாக இனம் கண்டாலே போர்களில் வெல்ல முடியும்.

  எதிரி தெளிவாகத் திட்டமிடுகிறான். தீயாகச் செயல்படுகிறான். நாம்தான்…
  ——————————————————————-
  இந்துக்களுக்கு என்ன திட்டம் வைத்திருக்கின்றீர்கள்.
  அம்போ என்று கைவிட்டு வீட்டீர்களே! வழக்கம்போல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *