வள்ளுவர் காவிதான்! அதற்கென்ன இப்போது?

திருவள்ளுவருக்கு பாஜகவினர் காவிச்சாயம் பூசிவிட்டதாக திமுக, திக, இடதுசாரிகள், தமிழினவாத அமைப்புகள் கூக்குரல் எழுப்பி வருகின்றன. திருநீறு பூசி திருவள்ளுவரை இழிவுபடுத்திவிட்டதாக (திருநீறு இவர்களுக்கு இழிவாம்) கம்மூனிஸ்ட் கயவாளிகள் புலம்பி வருகிறார்கள். இந்தக் கிறுக்கர்களுக்கு திருவள்ளுவர் ஹிந்து துறவிதான் என்பதை பொட்டில் அடித்தது போல சொல்லவேண்டி இருக்கிறது.

முதலில் அவருக்கு காவி ஆடை அணிவித்தது சரியா என்ற கேள்விக்கு வருவோம். முதன்முதலில் நூறாண்டுகளுக்கு முன்னர் வள்ளுவப் பெருந்தகையை படமாக வரைந்தபோது அவருக்கு இந்து சாமியார் உருவமே வரையப்பட்டது. அவர் திருநீறும் தரித்திருந்தார். ருத்திராட்ச மாலையும் அணிந்திருந்தார். ஆனால், கவிஞர் பாரதிதாசனின் ஏற்பாட்டில் 1959இல் கே.ஆர்.வேணுகோபால் சர்மா வள்ளுவரின் உருவப்படத்தை வரைந்தபோது அப்போதைய (காங்கிரஸ்) ஆட்சியாளர்களின் சிறுமதியால் அவர் எந்த மத அடையாளமும் இல்லாதவராக, வெள்ளையாடை அணிந்தவராக மாற்றப்பட்டார். பிறகு ஆட்சிக்கு வந்த திமுகவினர் அந்தப் படத்தை அரசுப்பூர்வமான படமாக அறிவித்தனர். இவ்வாறு மாற்ற இந்தக் கீழ்மதியாளர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இப்போது காவி ஆடை அணிந்திருப்பது போல உள்ள படமும் புதியதல்ல. பாஜகவினர் அதைப் பயன்படுத்தியதால் தற்போது சர்ச்சைக்குள்ளாக்கி உள்ளனர், அவ்வளவே.

ஒரு பேச்சுக்காக இதை விவாதமாக்குவோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவர் எந்த ஆடையை அணிந்திருந்தார் என்பதை யார் நிர்ணயிப்பது? வள்ளுவர் அனைவராலும் விரும்பப்படுபவர் என்பதால் அவரவர் விருப்பப்படி அவரது ஓவியத்தைத் தீட்டலாமா? அந்நாளில் மட்டுமல்ல, இந்நாளிலும் தமிழகத்தின் துறவிகள் அனைவரும் அணிவது காவியாடை தானே?

திருவள்ளுவர் ஒரு சமணர் என்பதால் அவர் வெள்ளையாடை அணிந்திருக்கலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், வள்ளுவரின் குறள்கள் அவர் ஒரு சனாதனியாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பதை நிறுவுகின்றன. சனாதனிகளே இப்போது ஹிந்து என்று அழைக்கப்படுகிறார்கள். தவிர, சமணர் ஆயினும் அவர்களும் சனாதன தர்மத்தின் அங்கமே. ஆகவே கடவுள் மறுப்பாளர்களுக்கு இந்த விஷயத்தில் எந்த வேலையும் இல்லை.

திருக்குறளை ‘தங்கத்தட்டில் வைத்த மலம்’ என்று கேவலமாக விமர்சித்த ஈ.வெ.ரா.வின் அடிப்பொடிகளுக்கு பாஜகவினரை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை. திருவள்ளுவரை கடவுள் ஸ்தானத்தில் வணங்கும் ஹிந்துக்களுக்கு இல்லாத உரிமை, அரசியல் லாவணி பாடும் திமுகவினருக்கும் இல்லை.

இன்றும் சென்னை, மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு தனிக் கோயில் உள்ளது. தமிழகத்தின் மேலும் பல கோயில்களில் திருவள்ளுவர் வணங்கப்படுகிறார்.  மயிலைக் கோயில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டதாகும். இங்கு ஆண்டுதோறும் வைகாசி அனுஷம் நட்சத்திரத்தன்று வள்ளுவ நாயனார் குருபூஜை நடத்தப்படுகிறது. இங்கு அவரை தெய்வமாக வழிபடுவோர் ஹிந்துக்கள் தானே? வள்ளுவரை வழிபடுவோருக்கு, அவருக்கு என்ன ஆடை அணிவிக்க வேண்டும் என்று நாத்திகவாதிகள் பாடம் நடத்தலாமா?

மயிலை கபாலீஸ்வரர் கோயில் 63 நாயன்மார் உற்சவத்தின்போது, திருவள்ளுவ நாயனாரை 64 நாயன்மாராக ஊர்வலம் அழைத்து வரும் நிகழ்வு எத்தனையோ  ஆண்டுகளாக நடந்து வருகிறது. அப்போது அவர் காவியாடை தரித்து, திருநீற்று மங்கலத்துடன் தானே காட்சி தருகிறார்?

ஹிந்து தெய்வங்கள் குறித்து திருவள்ளுவர் பல குறள்களில் கூறி இருக்கிறார். வாமன அவதாரம் குறித்து 610வது குறளிலும், யமன் குறித்து 269, 326, 765, 1083, 1085 குறள்களிலும், பிரம்மா குறித்து 1062 வது குறளிலும், திருமகள் குறித்து 179, 519, 617, 920 ஆகிய குறள்களிலும், கண்ணன் குறித்து 1103வது குறளிலும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறாரே வள்ளுவர்! அவர் ஹிந்து அல்லவா? கடவுள் வாழ்த்து, தவம், துறவு, புலால் உண்ணாமை, ஊழ் என பல அதிகாரங்களில் அவர் வலியுறுத்துவது ஆன்மிக இயல்பல்லவா? வானம் பொய்த்தால் சிறப்பான பூசனை செல்லாது (குறள்- 16) என்று அவர் சொல்வது யாருக்காக?

தென்புலத்தார், தெய்வம், விருந்தொக்கல் தான் என்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

-என்ற குறள் (43)  வழி, திருவள்ளுவர் கூறுவது பாரதப் பண்பாட்டின் அடிநாதம் அல்லவா? பொருள் ஈட்டுவதும் அறத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற வள்ளுவரின் வரிகளை நினைத்தாலே, கழக அரசியல்வாதிகளின் கயமை முகம் தோலுரிந்து விடுமே!

ஹிந்துக்களின் நம்பிக்கையான மறுபிறப்பு, எழுபிறவி, விதிப்பயன், இறைவன் அடி சேர்தல் ஆகியவை மிகத் தெளிவாக வள்ளுவரால் குறிப்பிடப்படும் நிலையில் அவருக்கு ஏன் மதச்சார்பின்மை சாயத்தைப் பூசுகிறீர்கள்? தொன்றுதொட்ட பாரத சமய சாரமே வள்ளுவத்திலும் எதிரொலிக்கிறது. உண்மையில் தவறிழைத்தவர்கள் திராவிட விஷங்கள் தானே ஒழிய, அதைத் திருத்த முயல்வோர் அல்ல.

அவர் மதச்சார்பற்றவர் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். திருவள்ளுவரை வெள்ளையாடை சாத்திக்கூட தங்கள் அனைத்துக் கோயில்களிலும் வைக்க ஹிந்துக்கள் தயார். ஹிந்துக்கள் பலரது வீடுகளில் இப்போதே வள்ளுவர் அருள்பாலித்துக் கொண்டுதான் இருக்கிறார். இதேபோல இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் வைக்கத் தயாரா?

திருக்குறளை புனித நூலாக ஹிந்துக்கள் போற்றுகிறார்கள். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் அவ்வாறு திருக்குறளை புனித நூல் என்று ஒப்புக் கொள்கிறார்களா?

வள்ளுவர் என்பதே ஹிந்து மதத்தின் உட்பிரிவுதான். எதிர்காலத்தை கணித்துச் சொல்லும் அறிவாளர்களாக இந்த ஜாதியினர் விளங்கி வருகின்றனர். இதனை யாரேனும் மறுக்க முடியுமா?

இத்தனைக்கும் பிறகும், திருவள்ளுவருக்கு காவியாடை அனிவிக்காதே, திருநீறு பூசாதே என்பவர்களைப் பார்த்து ஹிந்துக்கள் கேட்க வேண்டிய கேள்வி, இதைச் சொல்ல நீங்கள் யார் என்பதே.

திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உதித்த ஞானி; பாரதப் பண்பாட்டின் அடிநாதமான ஒழுக்கலாறுகளை உபதேசித்த சனாதனி; உலகுக்கு ஞானம் அளித்த துறவி. சனாதனத்தின் இப்போதைய பெயர் ஹிந்து என்பதால், வள்ளுவர் ஓர் ஹிந்துவே. அவரைப் போற்றவும், எந்த வடிவிலும் வணங்கவும் ஹிந்துப் பெருமக்களுக்கு உரிமையும் உண்டு கடமையும் உண்டு. இதை விமர்சிக்க எவனுக்கும் உரிமை இல்லை.

திருவள்ளுவரும் திருநீறும்:

வெகுஜன அளவில் பிரபலமாக உள்ள திருவள்ளுவர் படத்தை எடுத்து ஃபோட்டோஷாப் செய்து விபூதி பூசிய அந்தத் தம்பியின் ஆர்வம் பாராட்டுக்குரியது. ஆனால் அவர் குழைத்து விபூதி இடும் பழக்கமில்லாதவர் அல்லது அத்தகைய தோற்றத்தினரைக் கூர்ந்து பார்த்திருக்காதவர் என்று தோன்றுகிறது. நெற்றியிலும் வலதுபுஜத்திலும் மட்டும் பட்டையை ஒட்டவைத்து விட்டுவிட்டார். இது எங்கும் காணாத ஒரு புதுவிதமான “திருவள்ளுவர் விபூதி ஸ்டைல்” என்று தோன்றுகிறது 

இதனை முறைப்படியும் திருத்தமாகவும் செய்திருக்கலாம். அதற்கு வள்ளுவரின் மேனி வெளித்தெரியும் வலது தோள், வலது மணிக்கட்டு, இடது மணிக்கட்டு, மார்பின் வலப்பகுதி ஆகியவற்றிலும் விபூதியைப் பூசவேண்டும்.

செய்ததோ செய்தார், ஸ்டிக்கர் பட்டை மாதிரி செயற்கையாதத் தெரியாமல், இயல்பான திருநீற்றுப் பூச்சு வருமாறு செய்திருக்கலாம். என்ன செய்வது? நல்ல முனைப்பு மட்டும் இருந்து, நுண்ணுணர்வு, அழகுணர்வு, கலையுணர்வு, ரசனை உணர்வு எதுவும் இல்லாவிட்டால் இப்படிப்பட காமெடி கலந்த விநோதங்கள் தான் காணக்கிடைக்கும். ஆனால், இதை வைத்துக்கொண்டே தமிழ்த் தொலைக்காட்சி தடியன்களும் சமூக ஊடகங்களில் உள்ள திமுக அடிமைகளும் அடிபட்ட நாய்போல அலறுகிறார்கள் என்பதைப் பார்க்கவும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது.

மேலே உள்ள படத்தில், திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பின் அட்டையில் எஸ்.ராஜம் வரைந்துள்ள திருவள்ளுவர் நல்ல அம்சமாக இருக்கிறார். நெற்றியில் மட்டுமே உத்தூளனமாக விபூதி தரித்திருக்கிறார், உடலில் அல்ல. இதுவும் சம்பிரதாயப் படி முறையானதே. 1880களின் புத்தகப் படங்களில் உள்ள திருநீறும் முறையாகவே உள்ளது.

– ஜடாயு, தனது ஃபேஸ்புக் பக்கத்தில்

11 Replies to “வள்ளுவர் காவிதான்! அதற்கென்ன இப்போது?”

  1. என்ன இருந்தாலும் திருவள்ளுவர் உருவம் பற்றிய இந்தச் சர்ச்சை வரவேற்கத்தக்கதே 60 ஆண்டுகால திராவிட நாத்திகக் கும்பல்களின் தீவிர பொய்பிரசாரத்தினால் சொரணை இல்லாமலிருந்த ஹிந்துக்கள் விழிப்படைய இந்தச் சர்ச்சையும் ஒரு காரணமாகிவிட்டதல்லவா!
    குறிப்பாக 50 ஆண்டுகால திராவிடக்கட்சிகளின் ஆட்சியின் பிடியில் இருந்த கல்வித்துறையில் புகுந்து வந்தவர்களுக்கு திருவள்ளுவரைப்பற்றிய அடிப்படை உண்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நம்மவர்கள்தான் பள்ளிப்படிப்பை நிறுத்தியதும் சீரிய விஷயங்களைப் படிப்பதில்லையே!
    திருக்குறளின் பரிமேலழகர் உரை போன்ற பழைய உரைகளைப் படித்துப் புரிந்துகொள்ளும் சக்தியோ பொறுமையோ இக்கால இளைஞர்களுக்கு இல்லை. தற்காலத்தில் வரும் உரைகளோ மேலெழுந்த வாரியாக, அரசினருக்கு அடங்கியதாக, அரசினரின் ஆதரவை எதிர்பார்த்து எழுதப்படுபவையே. இவற்றைப் படிப்பதால் திருக்குறளின் உண்மைப் பொருளை அறிய இயலாது.
    நமது பாரத நாட்டில் பொதுவாக வழங்கிவரும் தர்மக் கோட்பாடுகளை ஓரளவாவது அறிந்தவர்களுக்குத்தான் திருக்குறள் ஹிந்துசமயக் கோட்பாடுகளைச் சொல்கிறது என்பது தெரியவரும். திராவிட அரசினர் இதை மறைத்துவிட்டார்கள். ஆத்திகர்கள் இதை விளக்கத் தவறிவிட்டார்கள். திருவள்ளுவர் மதச் சார்பில்லாதவர், அவர் ஒரு ஜைனர், அவர் கிறிஸ்துவர் என்றெல்லாம் நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் புத்தகங்களும் வந்தவண்ண மிருக்கின்றன. ஆனால் திருக்குறளில் இருப்பது ஹிந்து தர்மம் என்று விளக்கி எத்தனை புத்தகங்கள் வந்திருக்கின்றன? சென்னை அல்லையன்ஸ் கம்பெனியார் 10 ஆண்டுகளுக்குமுன் ஒரு புத்தகம் ( 2 பகுதிகள்) வெளியிட்டனர். பிறகு எப்போது விசாரித்தாலும் ஸ்டாக் இல்லை என்கின்றனர்.சென்ற ஆண்டு கிரி டிரேடிங் கம்பெனி டாக்டர் ஆர். நாகஸ்வாமி எழுதிய ஆங்கிலப் புத்தகத்தை வெளியிட்டது. ஆனால் இதுவும் முழுமையானதாக இல்லை.
    திருக்குறள் ஹிந்து தர்ம சாஸ்திரம்தான் என்று அடித்துச் சொல்லும் வகையில்
    ஆதாரத்துடன் எந்த நூலும் வந்ததாகத் தெரியவில்லை. இப்போது நடக்கும் சர்ச்சையை முன்னிட்டாவது இத்தகைய ஆதாரபூர்வமான நூல் ஒன்றை ஆட்திக அறிஞர்கள் எழுதவேண்டியது அவசியம்.

  2. திமுக கட்சியை நினைத்து சதா பயந்து வாழும் ஒரு பயந்தாங்கொள்ளியாக அதிமுக கட்சி இருந்து வருகின்றது. பல விசயங்களில் திமுகவினகொள்கையை அதிமுக பினபற்றி பாரதிய ஜனதாவை ஏமாற்றி வருகின்றது.திருவள்ளுவா் காவி உடை பிரச்சனையில் அதிமுக அரசு முறையாக செயல்படவில்லை.

  3. திருக்குறள் சமயசார்பற்ற நூல் அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்று கூச்சல் போடும் முட்டாள் கூட்டங்கள் முஸ்லீம்கள் நடத்தும் அரபி பள்ளிகளில் திருக்குறள் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று அரசாணை போடுவார்களா ?

  4. //தற்காலத்தில் வரும் உரைகளோ மேலெழுந்த வாரியாக, அரசினருக்கு அடங்கியதாக, அரசினரின் ஆதரவை எதிர்பார்த்து எழுதப்படுபவையே. இவற்றைப் படிப்பதால் திருக்குறளின் உண்மைப் பொருளை அறிய இயலாது.//

    மு வ வின் உரைதான் பொதுவாக எடுத்துக்காட்டப்படுகிறது. கோனார் நோட்ஸும் அதன்படிதான். பரிமேலழகர் உரை ரொம்ப டெக்நிகல். பள்ளி மாணவர்கள் அதெல்லாம் வாசிக்க முடியாது. இதில் யாரை குறை சொல்கிறீர்கள்? கருணாநிதி எழுதிய உரையையா? அது பள்ளிகளில் போதிக்கப்படுவதில்லை. விரும்பியவர்களுக்காக அது ! என்னிடம் ஏழு உரைகள் இருக்கின்றன. சுஜாதா; கருணாநிதி, சாலமன் பாப்பையா, மு வ, பரிமேல்ழகர, சிவக்குமார், வேதாந்திri – அனைத்தையமே இரசித்து வாசிக்கிறேன். காரணம் திருக்குறள் அவர்கள் பார்வையில் எப்படி? திருக்குறளையும் குரானாக பார்ப்பவர்கள்தான் இன்னார் உரைதான் இருக்க வேண்டுமென்பார்கள். திருக்குறள் புனித நூல் கிடையாது

    //திராவிட அரசினர் இதை மறைத்துவிட்டார்கள்.//

    நல்ல நகைச்சுவை. மறைக்க என்ன ரகசிய மந்திரமா ? வள்ளுவர் எழுதிய சொற்களை எவரேனும் மாற்றி ஏமாற்றிவிட்டார்களா ? மாற்றத்தால் முடியுமா ? எப்படி சொல்கிறீர்கள் ‘மறைத்து விட்டார்கள்’ என்று ? திறந்த நூல். எவரும் தாராளமாக வாங்கி வாசிக்கலாம். எப்படி ஒருவர் ஒழித்து வைத்துக்கொள்ள முடியும் ? அவரவர், அவரவர் போக்கில் எப்பொருளையும் எடுத்துக்கொள்ளலாம். அவர் சமணர்; அவர் பவுத்தர்; அவர் சனாதனவாதி; என்று எடுத்துக்கொள்ளலாம். தடுக்க முடியாது. அப்படி தடுக்க வேண்டுமானால், காப்பி ரைட் வாங்க வேண்டும்.

    (Edited and published)

  5. +BSV திருக்குறள் படித்து ரசிப்பதற்கு மட்டும் அல்ல.கற்று அதன்படி நிற்பதற்கு எனவே தரும் பொருள் கசடற இருக்கவேண்டும்.
    திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கில் வருவது. இதில் திருக்குறள் உட்பட 11 நூல்கள் அற நூல்கள். வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுபவை. இவை அனைத்தும் நம் பாரத நாட்டிற்குப் பொதுவான அறக்கொள்கையின் மீது எழுந்தவை. இதற்கு உரை எழுதுவோர் மனம் போன போக்கில் எழுதாமல் நூலின் அடிப்படை நோக்கத்தை ஒட்டியே உரை எழுதவேண்டும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற ஹிந்து மதத்தின் நால்வகைப் புருஷார்த்தமே குறளில் விளக்கப்படுகிறது, வீட்டைப்பறித் தனியே சொல்லவில்லை, இதன் காரணத்தை பரிமேலழகர் விளக்கியிருக்கிறார். ஆனால் வேறு இடத்தில் சொல்லியிருகிறார். இலக்கிய நயம் ரசிக்க விரும்புவோர் வேறு நூல்களை ஆக்கலாமே?
    திருக்குறளில் மறுபிறவி, எழுபிறவி, பிறவிப்பெருங்கடல் தாண்டுவது, இறைவழிபாடு ( அதுவும் இறைவன் தாளைப் பற்றுவது) நல்வினை, தீவினை, அளறு, திருமகள்-மூதேவி,அறத்திற்கு ஆதியாய் நின்றது மன்னவன் கோல். செங்கோல் தவறின் ஆபயன் குன்றூம், வானம் பொய்க்கும், அறுதொழிலோர் நூல் மறப்பர், இல்லறம்- துறவறம் [ பிரவ்ருத்தி, நிவ்ருத்தி], ஐந்து வேள்விகள் போன்ற கோட்பாடுகள் அனைத்தும் பாரதத்தின் பொதுவான ஹிந்து சமய அற நிலை சார்ந்தவையே. பாரதத்தின் வெளியே எழுந்த மதங்களில் இல்லாதவை. நீத்தார் பெருமை- சந்நியாசிகளின் பெருமை பற்றிச் சொல்கிறாரே!. இவற்றையெல்லாம் மறைக்காமல் இருந்திருக்கிறார்களா?

    பரிமேலழகர் உரை ‘டெக்னிகல்’ என்றால் குறள் ‘டெக்னிகல்’ இல்லையா? பின் அதை ஏன் படிக்கவேண்டும்? தெரியாததைக் கற்கத்தானே பள்ளிக்கு வருகிறர்கள்?
    பல வருஷங்களுக்கு முன்பு ஒரு சைவ ஆதீனத்தார் திருக்குறளுக்கு உள்ள பழைய உரைகளையெல்லாம் தொகுத்து ‘உரைவளம்’ என்று வெளியிட்டார்கள். பின்னர் 1963ல் கோவை ராமக்ருஷ்ண வித்யாலயத்தினர் ( ஸ்ரீ டி.எஸ். அவிநாசிலிங்கம்] கி.வா.ஜ வைக்கொண்டு ஒரு அரிய ஆராய்ச்சிப்பதிப்பை வெளியிட்டனர்.. இதில் பரிமேலழகர் உரையை பிரதானமாகக்கொண்டு பிற உரைகாரர்கள் வேறு படும் இடங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருகின்றன. பிற்கால இலக்கியத்திலும் இருந்து ஒத்த பகுதிகள் எடுத்துக் காட்டப்படிருக்கின்றன. இலக்கிய ரசனை உள்ளவர்கள் இதையும் படிக்கலாமே! நாமக்கல் கவிஞர் ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள பத்துக் குறள்களுக்கும் உள்ள தொடர்பை சுருங்கச்சொல்லி விளக்கியிருக்கிறார். அதையும் படித்து ரசிக்கலாமே? இவர்கள் எவரும் குதர்க்கம் பேசவில்லை.
    இக்காலத்தில் அரசினர் வழி வரும் அல்லது அரசினர் ஆதரவு நாடி எழும் எந்த உரையும் திரித்துத்தான் பொருள் தருகின்றன. பள்ளிப் பாடத்திலும் பல முக்கிய பகுதிகள் வருவதில்லை ஒழுக்கமுடைமை அதிகாரம் வந்தால் அதில் எல்லா பாக்களும் இருக்காது! ஏனெனில் அவர்கள் விரும்பாத பகுதியும் அதில் வரும் (134)
    இதெல்லாம் மறைப்பது தானே?
    குறள் தானம் (ஈகை), தவம், வேள்வி ஆகியவை பற்றிச் சொல்கிறது.இவையே கீதையின் இறுதி அத்தியாயத்தில் வலியுறுத்தப்படுகின்றன. கொல்லாமை. புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, பிறனில் விழையாமை, வரைவின் மகளிர் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். இவற்றில் வருபவை பஞ்சமாபாதகம் என்பதில் சேரும் இதையெல்லாம் அரசினர் கல்விமுறையில் சொல்லித்தருகிறார்களா? இந்த அறிவுரைகளெல்லாம் மறைக்கத்தானே படுகின்றன?
    திருக்குறள் ஒரு அற நூல். இந்த உரைதான்-இன்னார் உரைதான் என்றில்லை, ஆனால் எந்த உரையும் அது அறநூல் என்பதை விளக்கியே எழுதப்படவேண்டும். மனம் போன போக்கில் உரை எழுதுவது எப்படி? மெய்ப்பொருள் காண்பது தானே அறிவு?

  6. Dear Editors
    Please stop publishing comments from someone known as BSV. He/she is wasting our time. We do not learn anything from his/her comments. They are absolute crap.
    Thanks
    Sakuntala

  7. Dear ms.Sakuntala Nagesa I agree with your comment “Please stop publishing comments from someone known as BSV. He/she is wasting our time. We do not learn anything from his/her comments. They are absolute crap.”
    Subramaniam Logan

  8. Dear Logan Subramanian,
    Thank you for agreeing with my opinion. I am sure there are many people who agree that Tamilhindu.com can do better than publishing BSV’s comments. I learnt a lot by reading the articles and the informative comments from learned people published in this blog.
    Sakuntala Nagesan

  9. திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தவரெனில், அக்காலத்தில் கிறிஸ்தவமும் இஸ்லாமும் இந்தியாவில் இருந்ததா? எனவே திருவள்ளுவர் இந்துவே

  10. வள்ளுவர் ஜைனர் ஆவார்.
    ************************************
    குறளில் ஆத்மா பற்றி ஒரு சொல் கூட இல்லை. ஆசார்யன் பற்றியும் ஒரு விசாரமும் இல்லை. அது ஜைனமத நூலாகும்.

    “மனத்துக்கண் மாசிலன் ஆதலின் அனைத்து அறன்” என்பது பிழையாகும். ஜைமினி மஹரிஷியின் மீமாம்சை சூத்திரம் “சோதனா லக்ஷண அர்தோ தர்ம:” என்பதே சரியாகும். வேதம் சொல்வதே தர்மம் ஆகும். ஜைனகுறள் நம்பத் தக்கதல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *