இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா?

Non-vegமனிதருக்கிடையே பழக்க வழக்கங்களில் இருக்கும் நியாயமான வேறுபாடுகளை இந்து மதம் ஏற்கிறது. அதுவுமன்றி, மாமிசம்தான் காட்டில் வாழ்ந்த ஆதிமனிதனின் முதல் உணவாக இருந்தது. அவரவர் குடும்ப வழக்கப்படி மாமிசம் உண்ணுவதை இந்துமதம் அங்கீகரிக்கிறது. ஆனால், அஹிம்ஸையை ஏதோ சமணமும் பௌத்தமும் மட்டுமே கண்டுபிடித்தது போலப் பேசுவது ஒரு கண்கட்டு வித்தைதான். தொடக்ககால சமணமும் பௌத்தமும் துறவறத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டிருந்தன. இந்து மதத்திலும் நான்காவது ஆசிரமமான சன்யாசத்துக்குப் போகும்போது ஊனுண்ணாமை வற்புறுத்தப்படுகிறது என்பதை நாம் காண வேண்டும். (இரண்டு மதங்களுமே மதப் பரவலின் கட்டாயத்துக்காக இல்லறத்தாருக்கும், பெண்களுக்கும் தமது மதத்தின் கதவுகளைத் திறந்துவிட்டன.)

திருவள்ளுவர் உட்பட இந்து ஆன்மீகப் பெரியோர்கள் கொல்லாமையை வற்புறுத்துகிறார்கள். ‘அருள் ஆட்சி ஆங்கில்லை ஊன் தின்பவர்க்கு’ என்பது வள்ளுவர் வாக்கு. எல்லாவற்றிலும் உயர்ந்த அறம் கொல்லாமை (அஹிம்ஸா பரமோ தர்ம:) என்று முன்னோர் தெளிவுறக் கூறியுள்ளனர். திருவள்ளுவரும் ‘புலால் மறுத்தல்’ என்ற அதிகாரத்தைத் துறவற இயலில் வைத்துள்ளார் என்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

இப்போது சமுதாயம் மாறிவிட்ட நிலையில் நாம் மனித சமத்துவத்துக்கு எதிரானதாகிவிட்ட வர்ணம் என்பதைக் களைய வேண்டியிருக்கிறது.

ஆனால் ஆசிரமம் என்பது வாழ்க்கையின் படிநிலை. பிரம்மசரியம் (மாணாக்க நிலை); கிரஹஸ்தம் (கல்விமுடிந்து சம்பாதிக்கிற காலத்தில் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தை ஏற்படுத்தும் நிலை), வானப்பிரஸ்தம் (குடும்பக் கடமைகளை நிறைவேற்றிவிட்ட பின்னர் பந்தங்களைத் துறந்து காட்டுக்குப் போகும் நிலை); சன்யாசம் (உலகியல் பற்றுக்கள் எல்லாவற்றையும் துறந்து இறைவனை அடையும் பொருட்டுத் தவம் மேற்கொள்ளும் நிலை) ஆகிய நிலைகள் அதே பெயரிலும் வடிவிலும் இல்லாவிட்டால் செயல்முறைப் படிநிலைகளாக இருக்கத்தான் செய்கின்றன. கல்வி, திருமணம், வயது முதிர்ச்சி ஆகியவை ஏற்படத்தான் செய்கின்றன. ஆனால் நாம் நமது மதம் விதித்த அறவழியில் செல்லாமல், இறுதிவரை பொருள்தேடுவதிலேயே கவனமாக இருப்பதால் மாணவன், குடும்பஸ்தன் என்ற நிலைகளைத் தாண்டுவதே இல்லை.

அப்படி அல்லாமல் ஒருவருக்கு மாணவப் பருவத்திலேயும் இறைநாட்டம் வந்துவிடலாம். ஆக, எந்த நிலையில் இருந்தாலும், தன்னில் இருக்கும் இறைத்தன்மையை வளர்ப்பது என்னும் ஆன்மீகப் பாதையை ஒருவர் தேர்ந்தெடுத்துவிட்டால் அவருக்குத் தாவர உணவே சாதகமாக இருக்கும் என்பது இந்து சமயத்தின் பரிந்துரை.

10 Replies to “இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா?”

 1. Yes, perhaps even Thiruvalluavar thought vegitarianism is a pre-condition for Sanyasam – maybe because it is Satvik food – and kept the Chapter in Thuravaram.

  But I am also tempted to feel that vegitarianism is what God expects ALL human beings to follow, irrespective of the Ashram he follows; the very reason he gave us a brain to ‘discover’ agriculture was, in my opinion, to wean us away from the jungle and eat Satvik food, so that we find it easy tolead a Dharmic life.

 2. Sir,

  I find the articles very informative. Please upload Othuvar songs in your site. We want the younger generation to keep alive our culture.

 3. ஓர் உயிரை கொல்வதை சரி என்று எந்த மதம் சொன்னாளும் ஏற்றுகொள்ள முடியாது.

 4. //திருவள்ளுவர் உட்பட இந்து ஆன்மீகப் பெரியோர்கள்//

  அது எப்படி திருவள்ளுவர் இந்து ஆன்மீகப் பரியோர் ஆனார்? அவர் சார்ந்த சமயம் பெளத்தம் அல்லவே?

  மனிதனுக்கு மட்டுமே சிந்திக்க தெரிந்து அதனால் விவசாயத்தை கற்றான். விலங்குகளுக்கு விவசாயம் செய்ய தெரியாது. மனிதனால் மட்டுமே சைவம் உட்கொள்ள முடியும். ஆனால், அசைவம் உண்கிறான். இது தவறு. நம்மால் முடியாவிட்டாலும் குறைத்துக் கொள்வது நலம்,

  இதனை பற்றின என் பழைய பதிவு.

  https://jeeno.blogspot.com/2007/01/blog-post.html

 5. தேவாரமே கிறித்தவ இலக்கியம்தான் என்று நிறுவப் பெரு முயற்சி நடக்கும் இந்தக் காலத்தில், திருவள்ளுவரை பவுத்தராக்கியதில் பெரிய ஆச்சரியமில்லைதான். மொத்தத்தில், தமிழின் முக்கிய நூல் எதையுமே இந்துக்களில் யாரும் எழுதவில்லை என்று சொல்லிச் சொல்லி, இந்துக்களை மூளைச்சலவை செய்ய ஒரு பெரிய அறிஞர் கும்பலே செயல்படுகிறது. ஏன், திருவள்ளுவர் ஒரு சமணர் என்றுதான் ஏகப்பட்ட நூல்கள் கூறுகின்றன! அதை நீங்கள் தட்டிக் கேட்கவே இல்லையே.

  புனித தோமையர் வந்து காட்டுமிராண்டித் தமிழனுக்குச் சிந்திக்கச் சொல்லிக் கொடுத்தார், அதன் விளைவாகத்தான் திருக்குறள் பிறந்தது என்பது தற்போதைய பொய்ப்பிரசாரம். ஐயா, இந்த மண்ணில் எண்ணமுடியாத காலம் தொட்டு இந்துச் சிந்தனைகள்தாம் தழைத்து வருகின்றன. அவற்றைத்தாம் திருக்குறள் போன்ற நூல்கள் செம்மையாக நமக்குப் பிழிந்து தந்திருக்கின்றன.

  ஏன், சொல்லப்போனால், சமணமும் பௌத்தமும் இந்து மதத்திலிருந்து பிழிபட்டவைதாமே? துறவறத்தையும், தவத்தையும் அவர்கள்தாம் புதிதாகக் கண்டுபிடித்தார்களா? வேத மறுப்பு, வேள்வி மறுப்பு, ஜாதிப்பிரிவு மறுப்பு என்று இந்த அம்சங்கள் மட்டுமே அவர்கள் வலியுறுத்துவது. ஆனால் இவற்றையும் இந்துமதத்துக்குள்ளிருந்தே செய்தவர்கள், செய்கிறவர்கள் இருக்கிறார்கள். அதேபோல அஹிம்சையையும் அவர்கள் உருவாக்கவில்லை. நமது வேதங்களே ‘அஹிம்சா பரமோ தர்மஹ’ என்றுதானே கூறுகின்றன.

  ‘இரக்கம், கருணை’ ஆகியவை எங்கள் ஏகபோகச் சொத்து என்று கிறிஸ்தவர்கள் பிரசாரம் செய்வதுபோலத்தான் இதுவும். நாம் அவற்றை விளம்பரமில்லாமல், மதமாற்ற நோக்கமில்லாமல் செய்கிறோம், அவ்வளவுதான்.

 6. ஒரு உயிரை கொன்று உண்பது தவறு என்பதும் பாவமான செயல் என்பதும் பலரின் கருத்து இல்லையா..! ஆனால் எந்த ஒரு உயிரினமும் பிற உயிர்களை கொல்லாமல் வாழவும் வழியில்லை அது முடியவே முடியாது. நாம் உண்ணும் அனைத்து பொருள்களும் ஏதேனும் உயிரை கொன்றோ அல்லது துன்புறுத்தியோ தான் கொண்டுவரப்படுகிறது. நெல், கோதுமை போன்ற தானியவகைகள், ஆடு, மாடு, மீன் போன்ற மாமிச உயிரிகள் இதை போன்ற அனைதயும் கொன்றே மனிதன் வாழ வேண்டியுள்ளது. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை அறிவியல் பூரணமாக நிருபணமாகிவிட்டது. ஆனால் சில குதர்க்கவாதிகள் கூறுகிறார்கள், ” தாவரங்களுக்கு உயிர் இருந்தாலும் அவற்றால் எதையும் உணர முடியாது என்று ”. ஆனால் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள், “தாவரங்களும் வலியை உணர்கிறது, அதற்கு தொடுயுணர்வும் உண்டு என்று“. இதன் பிறகும் சில குதர்க்கவாதிகள் கூறுகிறார்கள், “ தாவரங்களுக்கு மூன்று அறிவுதான் அதனால் அதை கொன்று திண்றால் ஒன்றும் பாவமாகிவிடாது என்று”.

  மனிதனுக்கு ஆறு அறிவும், விலங்குகளுக்கு ஐந்து அறிவும், தாவரங்களுக்கு மூன்று அறிவும் இருக்கின்றன். தாவரங்களுக்கு மூன்று அறிவு என்பதால் அதை கொள்வது பாவம் இல்லை என்று வைத்துக்கொண்டால், ஒரு மனிதன் செவிடனாகவும், ஊமையாகவும், குருடனாகவும் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம் இப்போது அம்மனிதன் மூன்றறிவு உடையவனாக கருதப்படுகிறான் இதன்பிறகு இது போன்றவர்களை கொள்வது பாவமில்லை என்று தானே அர்த்தம். ஆனால் இதனை எவரும், எம்மதத்தவர்களும் அனுமதிக்கமாட்டார்கள்.

  பொதுவாக மனிதன் அனைத்து தாவர வகைகளையும், அனைத்து மிருக வகைகளையும் உண்ணச் செய்வதில்லை. மிருகங்களில் தாவரங்களை உண்ணும் மிருங்களையே நாம் உண்ணுகிறோம் இதனை அவற்றின் பற்களை கொண்டே அறியலாம். அதாவது தட்டைபற்களை உடைய (ஆடு ,மாடு, மான்) போன்ற மிருகங்களையே உண்ணுகிறோம். கூரிய பற்களுடைய மாமிச உட்கொள்ளும் மிருகங்களையே பட்சிகளையோ நாம் உண்ணுவதில்லை. ஆடு, மாடு போன்ற மிருகங்களுக்கு மாமிசத்தை உட்கொண்டு அதை செரிக்கும் தன்மை அதன் குடல் அமைப்பிற்கு கிடையாது. அதை போல் சிங்கம், புலி போன்ற மிருகங்களுக்கு தாவரத்தை உட்கொள்ளும் தன்மை கிடையாது. ஆனால் மனிதனின் பற்கள் இதற்கு இடைபட்டதாக இருக்கிறது. தாவரம், மாமிசம் இவை இரண்டையும் செரிக்க கூடிய தன்மை மனித உடலமைபுக்கு உண்டு.

  தாவரங்களில் உள்ள சில சத்து பொருள்கள் மாமிசங்களில் இல்லை. அது போல் மாசிசங்களில் உள்ளவை தாவரங்களில் இல்லை. அதுமட்டுமில்லாமல் மீன் போன்ற அசைவங்களில் பல அத்தியாவசிய சத்துப்பொருள்கள் உள்ளதாக அறிவியல் நிருபித்துள்ளது. மேலும் மாமிச உணவு இல்லையென்றால் காய்கறி உணவுகளில் பற்றாக்குறை ஏற்படும், அதன் விலை தங்கத்தை போன்று உயரும்.

  மனிதன் மாமிசங்களை உண்பதால் மிருக குணம் ஏற்படும் என்ற கருத்தும் உண்டு ஆனால் மனிதன் உண்ணும் மிருகவகைகள் அனைத்தும் சாதுவான குணத்தைக்கொண்டது என்பதால் அதன் பாதிப்பு மனிதனை தாக்காது என்பதும் உண்மை. எவரும் இக்கருத்தை மறுப்பவருண்டா….?

 7. அப்போ , சைவம் ,அசைவம் என்ன வேறுபாடு ? நீங்க என்ன சொன்னாலும் இதை ஏற்றுகொள்ளமுடியாது , சைவம் மட்டும் உண்ணும் பொழுது நமது மனது மிகவும் சாந்தம் அடைகிறது .

 8. சகோதரர்களுக்கு வணக்கம்,

  மற்றும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  முதலில் ஆதி மனிதன் புலால் உணவு உண்டான், காரணம் அத்தகைய சூழலில் அவனது வாழ்க்கை இருந்தது, சிந்திக்க ஆரம்பித்த மனிதன் அதன் பின்னர் ஆன்மிக முன்னேற்றத்தின் விளைவாக உயிரின் தன்மை அறிந்து மாமிச உணவை தவிர்த்தான். ஆனால் சனாதன தர்மம்
  மாமிசம் புசிப்பதனை வேண்டாம் என்றும், சரி என்றும் யார் மீதும் திணிப்பது இல்லை. அஹிம்சை போதிக்கப் பட்டது, ஆனால் எந்த சனாதன தர்ம வாசிக்கும் அது கடமையாக்கப் படவில்லை.

  துறவிகளுக்கும், ரிஷிகளுக்கும் புலால் மறுக்கப் பட்டது, காரணம் அத்தகைய உணவால் அவர்களால் பிரமசாரியம், சாந்தம், முதலியனவற்றை கடை பிடிக்க முடியாது.

  சாந்தமான மிருகங்களையே நாம் உண்கிறோம், உண்மைதான் ஏனெனில் மாமிச பட்சிணியான புலி, சிங்கம் ஆகியனவற்றை பிடித்து உண்ணப் போனால் நாம்தான் அதற்க்கு உணவாகவேண்டி வரும்.

  அஹிம்சா உணவே உடலுக்கும் மனதுக்கும் இதமானது, இருபது வருடங்களுக்கு முன்னர்தான் டாக்டர்கள் மாமிச உணவை பரிந்து உரைத்தனர். பின்னர் படிப்படியாக ஆராய்சிகளின் மூலம் மாமிச உணவை விடவும் அஹிம்சா உணவே சிறந்தது என்று பல கட்டுரைகள் வந்து விட்டன. பல மருத்துவர்களே இப்போது மாமிசத்தை கைவிட்டு விட்டனர்.

  மனிதன் பருப்புகளையும் கீரைகளையும் உண்பதற்கான உடலமைப்பே கொண்டவன் என்பது உயிரியல் ஆய்வாளர்களின் முடிவு என்று சமீபத்தில் ஒரு அறிவியல் இதழில் நான் படித்து உள்ளேன்.

  கடைசியாக மிருக காட்சி சாலையில் சில காட்சிகளை நாம் பார்க்கலாம், சிங்கம், நரி, புலி போன்ற விலங்குகள் சிறிது நேரம் கூட சும்மா இராது, எதையாவது பிராண்டுவதும், உறுமுவதும் அலைவதுமாகவே கொண்டே இருக்கும், ஆனால் மான், யானை, ஆகிய விலங்குகள் சர்வ சாதாரணமாக விளையாடியபடி இருக்கும்.

  இதுவே சாத்வீகத்திற்கும் தாம்ச ரஜோ குணத்திற்கும் உள்ள, மாமிச உணவுக்கும், அஹிம்சா உணவிற்கும் உள்ள வித்யாசம்.

 9. Ramgopal நாம் உண்ணும் அனைத்து பொருள்களும் ஏதேனும் உயிரை கொன்றோ அல்லது துன்புறுத்தியோ தான் கொண்டுவரப்படுகிறது. நெல், கோதுமை போன்ற தானியவகைகள், ஆடு, மாடு, மீன் போன்ற மாமிச உயிரிகள் இதை போன்ற அனைதயும் கொன்றே மனிதன் வாழ வேண்டியுள்ளது.
  இது முற்றிலும் மறுக்கபடி ஒன்று இது தவறான
  கறுத்து உதாரணம் நெல்பயிர் அது முதிர்த்து தான் பயனை தருக்ரித்து அதுக்கு உயிர் இல்லை …. இன்னும் பல உதர்ணகள் உண்டு …ஒரு தாவரத்தில் இலையை பறிக்கும் பொழுது மீண்டும் தளைகிருது . அனால் ஒரு ஆட்டின் தலை பறித்தால் மீண்டும் தலிகுமா

 10. வித்யாசாகர் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை.தாவர இனத்திற்கும் மிருகங்களுக்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன.Our anatomy itself is the evidence for this.Our jaws and structure of teeth is evolved for vegetarianism and eating flesh is abnormal and unnatural.May be in ancient past undeveloped tribes could have been flesh eaters and I
  wonder how this became part of the Hinduism.

  The torturous life and painful death the animals undergo in the process of becoming food to the humans produces enormous bad karma.Non vegeans are absolutely aware of this, however they convince themselves with false ideas.Truth is they get addicted to the habit just like a smoker and drunkard.I have seen people crave for flesh eating if they don’t take it for sometime. Non veg Good for health? – these are chumma kadai.Its the craving for flesh, nothing else.Do the other animals undergo horrible painful death for us to be healthy??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *