இசுலாமிய அடிமைப் போர் வீரர்களை மம்லூக் என்று அழைப்பார்கள். இவர்கள் விலைக்கு வாங்கப்பட்டு படையில் பயன்படுத்தப்படுவார்கள். ஒரு கட்டத்தில் ஆசியா முழுக்க இந்த மம்லுக் படைத்தளபதிகளால் ஆளப்பட்டது. வட இந்தியாவில் முதல் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்திய முகமதுகோரியின் மம்லூக் வீரன்தான் குத்புதீன் ஐபக்காக பொயு.1206 ல் பதவியேற்றுக் கொண்டு ஆளத்தொடங்கினான். இதைத்தான் ‘டில்லி அடிமை வம்சம்’ என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவார்கள்.
இப்படி ஒரு துருக்கிய அடிமை வீரன்தான் அபூமன்சூர் சபுக்தஜின். இவனுடைய மனன்தான் முகமது இஃப்னு சபுக்தஜின் அதாவது முகமது கஜினி. எனவே இந்த மம்லூக் என்ற அடிமை வம்ச பேரரசை நீட்டிக்க மிகப்பெரிய பிரயத்தனத்தை ஆரம்பித்தவன் இவனே.
முதலில் கஜினியை வெறும் நாடுபிடிக்கும் ஆசை கொண்டவன் என்று பார்ப்பதே பிழை.அவனுடைய விருது பெயர்களில் ஒன்று “சிலை உடைப்பாளன் (புட்ஷிகர்)” என பெருமையோடு அழைக்கப்படுகிறான்.முழுமையான ஜிஹாதிய போர் முறையை அறிமுகப்படுத்தியது கஜினிதான்.
சமணர்,பௌத்தர்,இந்துக்கள் தங்களது மதநம்பிக்கைகாக கொல்லப்பட்டனர்.அவர்களது புண்ணிய தலங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.அவர்களது சிலைகள் உடைத்து எறியப்பட்டனர்.இந்த மக்கள் இந்தியாவாவின் சகலபகுதிகளுக்கும் சிதறி ஓடினர்.பொயு 1000 ல் இருந்து பொயு.1027 வரை வட இந்திய எல்லை பகுதியில் இந்துக்கள்,பெளத்தர்கள்,சமணர்கள் சர்வநாசமாக்கப்பட்டனர்.
ஹிந்து சாஹி அரசு காந்தஹாரை தலைநகராக கொண்டு பெஷாவர்,பஞ்சாப் சிந்து,காஷ்மீருக்கு இடையில் உள்ள பகுதிகளை ஆண்டது.கிட்டத்தட்ட ஆப்கானின் பாதி பகுதியில் இருந்து பாகிஸ்தான் பாதி பகுதியையும்.அந்த மன்னன் ஜெயபாலனோடு தொடர்ச்சியாக போரிட்டு ஒழித்துதான் உள்ளே நுழைந்தான் கஜினி.
பொயு.1001 ஜெயபாலனை போரில் வென்று அடிமையாகப் பிடித்துச் சென்றான் கஜினி.பின் 25 ஆயிரம் தினார் பிணைத் தொகை பெற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்தான்.மரபான அரசவம்சத்தவனான ஜெயபாலன் தற்கொலை செய்து கொண்டான்.எந்த அறமும்,யுத்த தர்மமும் இல்லாத மூர்கமான பாலை பகுதி தாக்குதலை பாரத போர் தர்மத்தின்படி எதிர்கொண்டதுதான் நமது ஹிந்து மன்னர்களின் மிகப்பெரிய தோல்விகளுக்கு காரணம் என்கிறார்கள்.
கஜினியின் அத்தனை படையெடுப்பும் கோவில்களை கொள்ளையடிப்பது.தெய்வசிலைகளை சேதப்படுத்துவது,பிற மதத்தினரை இஸ்லாமியர்களாக மதம் மாற்றுவது அல்லது கொன்றொழிப்பது என்ற முழுமையான ‘ஜிஹாதி’ வடிவமுறை போர்கள்தான்.தாலிபான்கள் நமது கண்முன்னால் புத்தர் சிலைகளை என்ன செய்ததோ அதையே அன்று கஜினியும் செய்தான்.
இந்த நேரத்தில்தான் ஹிந்து மன்னர்களின் கூட்டமைப்பு ஒன்று உருவானதை சில தரவுகள் சொல்கிறது.அது மத்திய இந்தியா சந்தேல அரசன் வித்யாதரன்,மாளவ அரசன் போஜராஜன்,காளச்சூரி அரசன் காங்கேயா விக்ரமாதித்தன் போன்றவர்கள் அதில் உறுதிபூண்டு நின்றார்கள் என்கிறார்கள்..
கூர்ஜரபிரதிகார அரசின் கன்னோஜ் தலைநகரை கொண்டு ஆண்ட ராஜ்யபாலன் பொயு.1018 ல் கஜினியின் தாக்குதலுக்கு பயந்து பின் வாங்கி ஓடியதில் இந்த கூட்டமைப்பு அந்த மன்னனை கொன்று திரிலோசனபாலனை அரியணை ஏற்றியதாக தெரிகிறது.இந்த ஹிந்து மன்னர்களின் கூட்டமைப்பு கஜினியை மிகுந்த எரிச்சலடைய வைத்தது.மீண்டும் பொயு.1021 ல் அந்த கூட்டணியின் மீது படையெடுத்து வந்தான் என்று தெரிகிறது.
இந்த நேரம்தான் ராஜேந்திர சோழனின் வடஇந்திய திக்விஜயம் நடந்தது. எனவே இந்த ஹிந்து மன்னர்களின் கூட்டமைப்பில் கலந்து கொண்டவன்தான் இராஜேந்திர சோழனும் என்கிற வரலாற்று பார்வை உள்ளதாக கே.கே.பிள்ளை போன்ற ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.ராஜேந்திர சோழனுக்கு போஜராஜன், காளச்சூரி காங்கேய விக்ரமாதித்யன் ஆகியோருடன் நட்பும் இருந்தது என்கிறார்.
இதை நம்மால் முழுமையாக தரவோடு சொல்ல முடியாது.ஆனால் அந்த பார்வை முழுக்க கற்பனை என்று புறந்தள்ளவும் முடியாது.கஜினி ஹிந்துக்களின் புண்ணிய தலமான மதுரா,தானேஸ்வரம் பின்னால் இரத்த சகதியை ஏற்படுத்திய சோமநாதபுரம் என்று கோவில்களை சூறையாடி இந்த தர்மத்தை குலைக்கிறான்..அது தங்கள் மீது தொடுக்கப்பட்ட போராக நினைத்திருக்க வாய்ப்புள்ளது.
ராஜேந்திரன் மெய்கீர்த்தியில் “வெஞ்சின வீரர் பஞ்சப்பள்ளியும்,பாசுடைப் பழன மாசுணிதேசமும்” என குறிப்பிடுகிறார்.இவை பஞ்சாப் சிந்து நதியின் முகத்துவாரத்தில் உள்ள நகரங்கள் என்கிறார்கள்.அந்த மாசுணி பஞ்சாப் பகுதிகள் வரை தன் திக்விஜயத்தை கொண்டு செல்வதன் மூலம் ராஜேந்திர சோழன் காட்ட விரும்பியது ஒரு பலம்பொருந்திய படைபலம் இருக்கிறது என்பதைத்தான் எனத்தோன்றுகிறது..இதனோடு சோழர் Vs சாளுக்கியர்,பாண்டியர் என்ற நூற்றாண்டு பகைகளை தொடர்புபடுத்தி பார்க்கக்கூடாது.
மாசுணி தேசத்தவர்கள்தான் அலெக்ஸாண்டரை எதிர்த்து நின்றவர்கள்..இந்த வழியில் வந்ததுதான் ஹிந்து ஷாஹி அரசும் அதை அழித்து முடித்து இஸ்லாத்தை ஆப்கான்,பாகிஸ்தான் பகுதியில் முழுமையாக பரப்ப தொடங்கியவன் கஜினி என்று சொல்கிறார்கள்..
எனவே ராஜேந்திர சோழனின் வட இந்திய திக்விஜத்தை இதனோடு பொருத்திப் பார்க்கிற ஆய்வுகளை அறிஞர்கள் சேர்ந்து செய்ய முற்படுவது மிகப்பெரிய வரலாற்று திறப்பை தரலாம்..