இந்த இயற்கைக்கு ஒரு மொழி உள்ளது. அது நம்மோடு பேசுகிறது என்பதை காடுபட்டி சிவனும், வனத்துறை அதிகாரி முரளியும் உணர்ந்துகொள்ளும் தருணம் நிலத்திற்கும் – அதிகாரத்திற்கும் வரும் இணக்கத்தை காட்டுகிறது.. ‘பஞ்சுருலி’ தன் மக்களுடைய தார்மீக சக்தி,அறத்தின் பெரு எழுச்சி. அது கண்களறியா நெருப்பு வேலியை போட்டு தன் மக்களை காக்கிறது.. இதை திரையில் சாத்தியப்படுத்திய விதத்தை பார்க்கும் போதுதான் அதில் இருக்கும் தெய்வத் தன்மையை உணர முடிகிறது. படத்தின் இறுதிக்காட்சிகளை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது…
View More காந்தாரா (கன்னடம்): திரைப்பார்வைAuthor: சுந்தர்ராஜ சோழன்
இந்துப் பண்பாட்டு மாநகர் மதுரையின் வரலாறு: ஒரு கண்ணோட்டம்
மதுரை கோவிலில் தமிழ் கல்வெட்டு,சம்ஸ்கிருத கல்வெட்டு என்றெல்லாம் பேசுபவர்கள் மாலிகாபூர் மற்றும் மதுரை சுல்தான்கள் ஆட்சியால் மீனாட்சி கோவில் முழுவதும் தரைமட்டமாக்கியதையும் அதை குமாரகம்பணர் மீட்டதையும் ஏன் பேச மறுக்கிறார்கள்?… ‘மதுரை’ என்கிற பெயரே தமிழ்தானா? என்பது இன்று வரை விவாதம்தான். கூடல் நகருக்கு பிற்பாடு மதுரை என்ற பெயர் பாண்டியர்களால் சூட்டப்பட்டது. பாண்டியர்களுக்கும் மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்பு, கிருஷ்ணன் பிறந்த வடமதுரைக்கும், நமது தென்மதுரைக்குமான தொடர்பு.. அப்பெயர் பாண்டியர்களின் சந்திரவம்ச தொடர்பில் இருந்து வந்ததா? என்பதை வெறுப்பற்ற ஆய்வுட்குட்படுத்த வேண்டும்…
View More இந்துப் பண்பாட்டு மாநகர் மதுரையின் வரலாறு: ஒரு கண்ணோட்டம்வேளாண் சட்டங்கள் ரத்து : ஒரு பார்வை
சீக்கியர்களின் மத உணர்ச்சியும்,ஜாதிய மற்றும் பிரிவினை உணர்ச்சியும் காலிஸ்தானிகளால் தூண்டப்பட்டது..இது முழு விஷமாக மாறுவதற்கு முன்பு நாட்டின் நலன் கருதி தன்னுடைய இமேஜை பற்றியெல்லாம் கவலைப்படாமல் மோடி சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளார். ஆனால் இந்த அரசு தங்களுக்காக கொண்டு வந்த சட்டத்தை வலிமையாக ஆதரித்து,மோடியோடு திரள மறுத்த ஹிந்து விவசாயிகளை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. ஒரு குறுங்குழு தனது போராட்டத்தால்,லாபியால்,கருத்துருவாக்கத்தால் இந்தியாவின் பெரும்பான்மை ஜனங்களின் அரசின் உள்நோக்கமற்ற நற்செயலை தடுத்து நிறுத்தியிருக்கிறது.இதற்கு என்ன காரணம்? நமக்கு திரளத் தெரியவில்லை,தலைமையை நம்புவதில் சந்தேகமும்,நடுநிலை என்று காயடிப்பு கோழைத்தனமும் வாட்டி வதைக்கிறது நம்மை…
View More வேளாண் சட்டங்கள் ரத்து : ஒரு பார்வைதிருமந்திரத் திரிபும் சைவர் கடமையும்
திருமந்திரத்தைப் பற்றிய தமிழ் தி இந்து கட்டுரையில் ‘தக்பீர்’ முழக்க (அல்லாஹு அக்பர்) உதாரணம் ஏன் வருகிறது? கயிலாயத்தில் இருந்து வந்த யோகி, வேதாகமப் பொருளை, தமிழ் பேசும் மண்டிலத்தவருக்கு விளக்கிச் சொல்கிறார் திருமூலராக. அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு? இதுதான் ஆபிரஹாமிய மதங்களுக்கும் சைவத்துக்கும்தான் ஏதோ தொடர்பிருப்பது போல காட்டும் திருகு வேலை..
View More திருமந்திரத் திரிபும் சைவர் கடமையும்அரசிடமிருந்து கோவில்கள் மீட்பு – ஏன் அவசியம்?
சுதந்திரத்திற்குப்பின் காங்கிரஸ், திராவிட கட்சிகள் கோவிலுக்கு எதுவுமே செய்யவில்லை என்று நான் விவாதிக்க தயார் இல்லை. எல்லோருமே ஏதோ ஒன்று முயன்றுள்ளார்கள். ஆனால் பல ஆயிரம் வருடம் காப்பாற்றப்பட்ட இந்த நிலம் – கோவில் – சிலை – கல்வெட்டுகள் எல்லாம் கடந்த 50 வருடத்தில் சூறையாடப்பட்டதன் அளவீட்டை கவனியுங்கள். இது முழுக்க முழுக்க நிர்வாக கோளாறாலும், அதிகார துஷ்பிரயோகத்தாலும் நடந்தது என்பதை பிரித்துப் பார்க்க நமக்கு ஒரு ஆய்வு தேவையில்லை. எனவே, ஜக்கி வாசுதேவ் சொல்கிற ஒரு புள்ளிக்கு நாம் வர வேண்டும். இதில் ஹிந்து பெருமக்களுக்கும், இந்த கலாச்சாரத்திற்கும் மாதேவடிகளான செம்பியன் மாதேவியார் தருகிற வலிமையான செய்தி ஒன்று உள்ளது. “அண்ணா,எங்கள் ஊருடைய பழைய பெயர் என்ன?” என கேட்டார்கள். அப்போதும் ஆநாங்கூர்தான் என்றோம். ஆனால் அவர்கள் நம்பவில்லை..
View More அரசிடமிருந்து கோவில்கள் மீட்பு – ஏன் அவசியம்?ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள் – புத்தக அறிமுகம்
ஒரு எளிய ஹிந்து அல்லது இந்தியன் தினம் தினம் ஒரு கூர்மையான வாதத்தால் வீழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு சாதரண பேச்சில் பகிரங்கமாக சீண்டப்படுகிறான். இந்த சூழலில், சமூகசேவை, கல்வி, மருத்துவம் தொடங்கி எல்லாமே இந்தியாவில் எப்படி ஒரு அரசியல் கருவியாக, உள்நோக்கம் கொண்டதாக ஆகியிருக்கிறது என்பதை தன் இயல்பான தர்க்கத்தால் முன் வைத்திருக்கிறார் B.R.மகாதேவன், கதைமாந்தர்களின் வழியாக. எப்படிப்பட்ட வாதங்களால் நாம் அன்றாடம் களத்தில் வீழ்த்தப்படுகிறோமோ, அது எல்லாவற்றிற்கும் வெகுசாதாரண மொழியில் பதில் சொல்ல,ஒரு தரப்பை உருவாக்கிக் கொள்ள இந்த புத்தகம் மிக முக்கியமானது…
View More ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள் – புத்தக அறிமுகம்ராஜேந்திர சோழனும் ஹிந்து மன்னர்கள் கூட்டமைப்பும்
கஜினியின் அத்தனை படையெடுப்பும் கோவில்களை கொள்ளையடிப்பது, பிற மதத்தினரை இஸ்லாமியர்களாக மதம் மாற்றுவது அல்லது கொன்றொழிப்பது என்ற முழுமையான ‘ஜிஹாதி’ வடிவமுறை போர்கள்தான். இந்த நேரத்தில்தான் அவனை எதிர்க்க சந்தேல அரசன் வித்யாதரன்,மாளவ அரசன் போஜராஜன், காளச்சூரி அரசன் காங்கேயா விக்ரமாதித்தன் முதலான ஹிந்து மன்னர்களின் கூட்டமைப்பு ஒன்று உருவானதை சில தரவுகள் சொல்கின்றன. இந்த நேரம்தான் ராஜேந்திர சோழனின் வடஇந்திய திக்விஜயம் நடந்தது.. ராஜேந்திர சோழனுக்கு மேற்கண்ட மன்னர்களுடன் நட்பும் இருந்தது..
View More ராஜேந்திர சோழனும் ஹிந்து மன்னர்கள் கூட்டமைப்பும்தமிழ்க்கடவுள், ஹிந்திக்கடவுள்? – திருமாவுக்கு ஒரு பதிலடி
ஆரிய கடவுள் வேறு, திராவிட கடவுள் வேறு என்றெல்லாம் சப்பரம் இழுத்துக் கொண்டிருந்த கோமாளி கூத்து காலமெல்லாம் முடிந்துவிட்டது. இன்று எல்லாமே வெளிப்படையாக இருக்கிறது. சங்க இலக்கியங்களை விரும்புகிற யாரும் அதை திறந்து வாசிக்க முடியும்… நக்கீரர் பாடிய புறநானூறு (பாடல் 56) தெளிவாக சிவன், திருமால், முருகன் ஆகியோரது தெய்வ அடையாளங்களைக் கூறுகிறது. இதற்கும் இன்று நாம் கோவில்களில் வணங்கும் கடவுளர்களுக்கும் என்ன வித்தியாசம்? இந்தியா முழுக்க இதைத்தான் ஹிந்து கடவுள் என்று வழிபாடுகிறார்கள்…..
View More தமிழ்க்கடவுள், ஹிந்திக்கடவுள்? – திருமாவுக்கு ஒரு பதிலடிதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்
பா.ரஞ்சித்திடம் பெரியார் முகமூடியை போடு இல்லையென்றால் நீ ஜாதி வெறியன் என்ற லாவணியை பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மெல்ல விவாதமாவது தமிழகத்தின் தலையாய தேவை. இன்றும் பெரியாரியம் யாருக்கு ஒரு முகமூடி என்பதை அரசியல் எதார்த்தம் சொல்லும். பிற்படுத்தப்பட்ட எழுச்சியும், அதிகாரமும் பட்டியல் ஜாதிகளுக்கு உறுத்தக்கூடாது என்ற ஏற்பாடு மட்டுமே பிராமண வெறுப்பு பேசுகிற திராவிடத்தின் மைய நோக்கம்… நீதிக்கட்சி இந்து மதத்திற்கு விரோதமாக இல்லை, ஆனால் தி.க/திமுகவின் இந்து மத விரோத கருத்துகள் மிஷனரி, இஸ்லாமிய மதமாற்றும் அரசியலுக்கு பயன்பட்டன. பிற்படுத்தப்பட்ட அதிகார எழுச்சி, ஆபிரஹாமிய மதமாற்ற குழுக்கள் மட்டுமே இன்றும் பெரியார் என்கிற முகமூடியை வேறு வேறு காரணத்திற்காக நீட்டித்துக் கொண்டிருக்கின்றன… ஆக, அன்று திமுக இன்று சீமான் பேசுவது போல இன்னும் சிறப்பாகவே பேசியது. தமிழர் ஆட்சி ஒப்பற்ற பேராட்சி ஆனால் பிராமணியம் சதி செய்து ஒழித்துவிட்டது என்று முன் வைத்தது. இன்று அதை மாற்றி சீமான் தெலுங்கர்கள் ஒழித்துவிட்டார்கள் என்கிறார். ஆனால் வரலாறு என்னவோ யாராவது தண்ணீர் தரமாட்டார்களா என்று சாவின் நொடியில் இழுத்துக் கொண்டிருக்கிறது இந்த நொடி வரை…
View More திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்