மேற்கு வங்க மாநில தேர்தலும் காணாமல் போன கம்யூனிஸ்ட்டும் காங்கிரஸூம்

நடந்து முடிந்த மேற்கு வங்க  சட்ட மன்ற தேர்தலில்  ஒரு வித்தியாசமான காட்சியை காண முடிகிறது.   30 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்த இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியும்,   நாடு விடுதலை பெற்றத்திலிருந்து பல ஆண்டுகள் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.    முஸ்லீம்களின் ஓட்டுக்களை மட்டுமே நம்பி பல ஆண்டு காலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸூம் கம்யூனிஸ்ட்டும் கைகோர்த்துக் கொண்டு தேர்தலை சந்தித்தார்கள்.   மேற்கு வங்க மக்கள் கம்யூனிஸ்ட்களையும்,  காங்கிரஸ் கட்சியையும் வெற்றி பெற வைக்காமல்,  முழுக்க நிராகரித்து விட்டார்கள்.    மேற்கு வங்க மாநில தேர்தல் பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டிய அவசியம்,  ஒன்று நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது.   இரண்டாவது மொகல்ஸ்தான் என்ற நாட்டை உருவாக்க போடும் திட்டத்தின் ஒரு பகுதி,  மூன்றாவது  சிறுபான்மையினர் என்ற போர்வையில் புகுந்துள்ள பயங்கரவாதம்  .

                முஸ்லீம் வாக்கு வங்கி  –  இந்த தேர்தலில்,  முஸ்லீம் வாக்குகள் பிரியாமல், முழுவதுமாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது.   2016-ல் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியும்,  26 இடங்களில் வெற்றி பெற்ற இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியும் ,   பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்திற்காக, பல தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற விட்டுக் கொடுத்துள்ளார்கள்.   2021-ல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலிலும்  முஸ்லீம்களின் வாக்குகளை முதன்மைப் படுத்தியே திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது பிரச்சாரத்தை தொடங்கியது.  மேற்கு வங்க மாநிலத்தில் 294 சட்ட மன்ற தொகுதிகளில் சுமார் 125க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் வாக்கு வங்கி முஸ்லீம் வாக்கு வங்கியாயும்.   முர்ஷிதாபாத், மால்டா, உத்தர் தீனேஷ்பூர்,  பிர்பூம், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானா ஆகிய ஆறு மாவட்டங்களும் முஸ்லீம் அதிக அளவில் வாழும் மாவட்டங்களாகும்.    இந்த ஆறு மாவட்டங்களில் மட்டும் 118 சட்ட மன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. 

                2021-ல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலி்ல்  முஸ்லீம்கள் அதிகம் வாழும் இந்த ஆறு மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி  வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.   மற்ற 112 சட்ட மன்ற தொகுதியிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.    2016 தேர்தலில் மேற்படி ஆறு மாவட்டங்களிலும்   காங்கிரஸ்  மற்றும் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற இடங்கள் முறையே, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மொத்தமுள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளில் 13 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது, இடதுசாரி கம்யூனிஸ்ட் 4 இடங்களில் வெற்றி பெற்றது.   33 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில்  காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியும் தலா மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது.   தெற்கு 24 பர்கானாவில் மொத்தமுள்ள 31 இடங்களில் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.   ஆனால் 2021-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் , இடதுசாரி கம்யூனிஸ்ட்களும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.  காரணம், பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு விட்டு கொடுத்து விட்டார்கள்.

                திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற,  இடதுசாரி கூட்டணியும்,  காங்கிரஸ் கட்சியும் விட்டுக் கொடுத்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்க  2016-ல் இவர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.   மூர்ஷிதபாத் மாவட்டத்தில் தும்கல் ( Domkal ) சட்ட மன்ற தொகுதியில் 2016-ல் இடதுசாரி கம்யூனிஸ்ட் பெற்ற வாக்குகள் 71,703 ம்,  காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 46,294 வாக்குகள் பெற்றுள்ளது.  ஆனால் 2021-ல் இந்த தொகுதியில் மம்தாவின் திரிணாமூல் கட்சி 47,229 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளது.  ஆகவே இரண்டு கட்சிகளும் பெற்ற 1,17,997 வாக்குகள் எப்படி மாயமாய் மறைந்தன என்பது இடதும், காங்கிரஸ் கட்சியும் விளக்க வேண்டும்.  மேற்படி புள்ளி விவரம் உதாரணத்திற்காக எடுக்கப்பட்டது.  இதை போலவே   மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள  ரகுநாத் கஞ்ச் சட்டமன்ற தொகுதி ,   உள்ளிட்ட பல தொகுதிகளிலின் வாக்குகள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க மறைமுகமாக வேலை நடந்துள்ளது.

                முஸ்லீம் வாக்குகளை பெறுவதற்காகவே  2011 மற்றும் 2016-ல் அதிக சலுகைகளை வழங்கியவர் மம்தா. தனது அமைச்சரவையில்  ஒன்பது இஸ்லாமியர்களுக்கு அமைச்சார் பதவியும்,  அரசின் சார்பில் சுமார் 60 ஆயிரம் இமாம்களுக்கு மாதம் ரூ2500 நிதி உதவி,   வழங்கப்பட்டன. 2013-  கல்கத்தா உயர் நீதி மன்றம் அரசியல் ஷரத்து 14 மற்றும் 15-ல் 1வது பிரிவின் படி மாநில அரசு வழங்கியது செல்லாது என தீர்ப்பு வழங்கியவுடன்,  இமாம்களுக்கு கொடுக்கும் உதவியை வகஃப் வாரியத்தின் மூலம் வழங்குவதற்கு சில சட்ட திருத்தங்களை செய்தவர் மம்தா.  மதரஸாக்களில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கியும்,  மாதந்தொரும் ஒரு குறிப்பிட்ட தொகை உதவி தொகையாக வழங்கப்பட்டது.  60 வயதுக்கு மேற்பட்ட இமாம்களுக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கப்பட்டது.   இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் அரசின் தொடர்பு மொழியாக உருது மொழி செயல்பாட்டிலிருக்கும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.   மாநிலத்தில் 57க்கும் மேற்பட்ட சட்ட மன்ற தொகுதிகள் முஸ்லீம்களுக்கு வழங்கப்படும் என உறுதி கொடுக்கப்பட்டு,  அவ்வாறே  ஆறு மாவட்டங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது. தொலைக்காட்சிகளில் , தஸ்லீமா நஸ்ரின் நாவல்கள் நாடங்களாக ஒளிபரப்புவது தடை செய்யப்பட்டது.  அங்கீகாரம் இல்லாத மதஸாக்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட மதரஸாக்களின் எண்ணிக்கை 10,000 மேல் என கூறுகிறார்கள்.  இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்ட மதரஸாக்கள் நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிட தக்கது.

                2016-ல்  முஸ்லீம் சட்ட மன்ற உறுப்பினர்கள்  32ஐ காட்டிலும்,  2021-ல்  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் தேர்வு பெற்ற முஸ்லீம் சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 42.   பங்களா தேஷ் நாட்டினர்  கடந்த பல ஆண்டுகளாகவே ஊடுருவிய 70 லட்சத்திற்கு மேற்பட்டவர்களில், சுமார் 50 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.  இவர்களின் வாக்குகளை பெறுவதற்கு  அரசியல் கட்சிகளுக்கிடையே போட்டி நிலவுகிறது.   2011-ம்வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மேற்கு வங்க மாநிலத்தில் 2.47 கோடி இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள்.  இது மாநில   மக்கள் தொகையில் 27 சதவீதமாகும். 

                  இந்த தேர்தலில்  மேற்கு வங்க மாநிலத்தில்,  முஸ்லீம்களின் வாக்குகள் சிந்தாமல், சிதறாமல், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைததுள்ளது.    உதாரணமாக  முர்ஷிதாபாத் மாவட்டத்தில்  Naoda        சட்ட மன்ற தொகுதியில்  2016-ல் வெற்றி பெற்ற கட்சி காங்கிரஸ்,  பெற்ற வாக்குகள் 62,639  இதில் போட்டியிட்ட, இடதுசாரி கூட்டணியின் சார்பாக ஆர்.எஸ்.பி. பெற்ற வாக்குகள் 43,013,  மம்தா கட்சி பெற்ற வாக்குகள் 43,377  .  2021 ல் நடைபெற்ற தேர்தலில் 74,153 வாக்குகள் அதிகம் பெற்று திரிணாமூல்  காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.  வெற்றி பெற்ற வேட்பாளர்  சாய்னா மும்தாஸ் கான் என்பவர்.    2016-ல் 43,377 வாக்குகள் பெற்ற மம்தா கட்சி 2021-ல் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது,  அந்த தொகுதயில் உள்ள இஸ்லாமியர்களின் மொத்த வாக்கும்  மம்தா கட்சிக்கே கிடைத்துள்ளது.   இது போலவே  ஆறு மாவட்டங்களிலும் உள்ள முஸ்லீம்கள் ஒட்டு மொத்தமாக  மம்தா கட்சியினருக்கு வாக்களித்திருக்கிறார்கள். 

                தேர்தலுக்கு முன் மம்தா தான் போட்டியிட்ட நந்திகிராமம்  தொகுதியில் வெற்றி பெற முடியுமா என சவால் விட்டு,  பா.ஜ.க.வினர் என் மீது தாக்குதல் தொடுத்து எனது காலை ஒடித்து விட்டார்கள் என பொய் நாடகம் ஆடியதை எந்த ஊடகமும் கண்டு கொள்ளவில்லை.   தேர்தல் பரப்புரையில்  பல சந்தர்பங்களில், மம்தா   பா.ஜ.க.விற்கு சவால் விட்டார்.  ஒன்று நந்திகிராமத்தில் வெற்றி பெறமுடியுமா என்றும், Sitalkuchi         சட்ட மன்ற தொகுதியில் வெற்றி பெற முடியுமா என்றும் சவால் விட்டார்.   நந்திகிராமத்தில் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவை தோற்கடித்தது  பாரதிய ஜனதா கட்சி, Sitalkuchi    தொகுதியில் 17,815 வாக்குகள் வித்தியாசத்தில்  மம்தா கட்சியை தோற்கடித்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர்   இது பற்றி    வாக்கு பதிவிற்கு முன்பு வரை ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்கள்.   முடிவு தெரிந்த பின்னர்  ஊடக விமர்சனகர்த்தாக்கள் எங்கே போனார்கள் என தெரியவில்லை.   

                இவ்வாறு முஸ்லீம்களின் வாக்குகளை கொண்டே ஆட்சியில் இருப்பதால் ஏற்படக் கூடிய  அபாயத்தை  காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள் தெரிந்தும் தெரியாமல் நடிக்கிறார்கள்.  ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறு சிந்தனை கிடையாது.   உண்மையில் மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆட்சியினால் ஏற்பட்டக் கூடிய ஆபத்து, நாட்டின் இறையான்மைக்கு குந்தகம் ஏற்படும் விதத்தில் உருவாகும்.  குடியுரிமை திருத்த சட்டம்,  தேசிய குடியுரிமை பதிவேடு இரண்டுக்கும் ஆதரவாக மம்தா செயல் படமாட்டார்.    இதற்கு முக்கியமான காரணம்,  பங்களா தேஷ் நாட்டிலிருந்து அகதிகளாக வந்துள்ள இந்துக்களுக்கு குடியுரிமை வழங்க கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மறுக்கப்பட்டு வந்துள்ளது.  

                சட்ட விரோத மதரஸாக்கள்  –   அரசின் அங்கீகாரம் அல்லாத ஆயிரக்கணக்கான மதரஸாக்கள், மேற்கு வங்க மாநிலத்தின் எல்லை பகுதியில் செயல்படுகிறது.  பர்துவான் மாவட்டத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில்  தொடர்பு கொண்ட பயங்கரவாதிகள்,  எல்லையில் உள்ள மதரஸாவில் தஞ்சம் புகுந்திருந்தார்கள் என தேசிய புலனாய்வு அமைப்பினர்  தெரிவித்தார்கள்.   அண்மையில் பர்த்வான் குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு , சட்டவிரோத மதரஸாக்கள் அல்லது முஸ்லீம் கல்வி  மையங்களின் சங்கிலியை,  அதாவது குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கும்  மேற்படி நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது    மதரஸாக்களும்,  முஸ்லீம் கல்வி மையங்களும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான இடமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

                இது பற்றி 2011 அக்டோபர் மாதம் மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்ட ஏழு பக்க அறிக்கையில்,  தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜமாத்-உல்- முஜாஹூதின்  அமைப்பினர் மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக ஊடுருவி,  உள்ளுர் அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லீம்களின் உதவியுடன், மதரஸாக்கள் உருவாக்கி,  அது  பயங்கரவாதிகளுக்கு புகலிடமாகவும்,  பயங்கரவாதிகளுக்கு பயிற்சிஅளிக்கும் மையமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.  வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரும் ஆயுதங்கள்,  வெடி குண்டு தயாரிக்க தேவையான மூலப் பொருட்கள் பதுக்கி வைக்குமிடமாகவும் மாற்றப்பட்டுள்ளன.    இவ்வாறு உருவாக்கப்பட்ட சட்ட விரோத மதரஸாக்கள், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   இந்த அறிக்கையில் முக்கியமாக  குறிப்பிட்டிருப்பது.  2011லிருந்து மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும்,  அதன் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன்  செயல்படுவதாகவும்  கூறப்பட்டுள்ளது.   சட்ட விரோத மதரஸாக்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதற்கு முன் மம்தா எந்த விசாரனையும் நடத்தாமல் அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.   இது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவே மாறி வருகிறது.

                2011, 2016 –ல் வாக்களித்த முஸ்லீம்கள்  2021-ல் மீன்டும் மம்தாவிற்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.   முஸ்லீம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி கொடுப்பவர் மம்தா என்பது அவரின் செயல்பாட்டின் மூலமாக தெரிந்து கொண்டார்கள்.     நிலப்போர் மற்றும் பாதுகாப்பு  மையத்தின்  ( Centre for land warfare and security ) இயக்குநர் துருவ் கடோச்  கூறுகையில்,  மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு  படிப்படியாக சரிந்து வருவதற்கு முக்கியமான காரணம்,  பங்களா தேஷ் நாட்டிலிருந்து ஊடுருவிய முஸ்லீம்களால்,  இதற்கு உறுதுணையாக இருப்பவர்  மம்தா.     எந்தவிதமான சான்றுகளையும்  சரிபார்க்காமலே,  முஸ்லீம்களை தாஜா செய்வதாலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுக் கிடக்கிறது என்றார்.  

                மிகவும் முக்கியமான அம்சம்,  பல ஆண்டு காலமாக பாகிஸ்தான் மற்றும் பங்களா தேஷ் நாட்டிலிருந்து வெளி வரும் குரல்,  அதாவது ஒன்றுப்பட்ட முஸ்லீம்கள் இணைந்த ” மொகல்ஸ்தான் ” என்ற நாடு.   இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் முழுவதும்,  பிகார் மற்றம் உத்திர பிரதேசத்தில் சில மாவட்டங்கள்  ஜம்மு காஷ்மீர் உள்ளிட்டவை.  2013-ல் மேற்கு வங்க மாநிலத்தில் அடிப்படை முஸ்லீம் மௌலானக்கள், மொகல்ஸ்தான் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள்.   இந்த கோரிக்கை வைத்த பின்னர்,  மேற்கு வங்க மாநிலத்தில்  வன்முறைகள் நடக்க துவங்கின.  குறிப்பாக இந்துக் கடைகள்,  இந்துக்கள், இந்து கோவில்கள்  நாசப்படுத்தப்பட்டன,  தாக்குதலுக்கு உள்ளாகின.  தாக்கியவர்கள் மீது ம்மதா அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்வில்லை.  இந்நிலையில்  இதற்கு பக்கபலமாகவே,  மம்தா 2014-ல் நாடாளுமன்ற மேல்சபைக்கு  பயங்கரவாத ஆதரவாளரும்,  முன்னாள சிமி இயக்கத்தில் பொறுப்பாளருமான அகமது ஹசன் இம்ரான்  தேர்வு செய்யப்பட்டார்.   சரதா சிட்பண்ட் நிதியை ,  பங்களா தேஷ் நாட்டில் கலவரத்தை உருவாக்க ஜமாத் இ இஸ்லாமி ஆஃப் பங்களா தேஷ் என்ற பயங்கரவாத அமைப்பிற்கு  திருப்பி விட்டார் என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்.    தேசிய புலனாய்வு அமைப்பின் அறிக்கையின் படி,  மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பலவற்றில் சம்பந்தப்பட்டவர்   அகமது ஹசன் இம்ரான்  என்றும்,   மொகல்ஸ்தான் என்ற தனி நாடு உருவாக்க முயலுபவர் என்றும் குறிப்பிட்டுள்னர்.    இது பற்றி மம்தா வாய் திறப்பதில்லை.   இதன் காரணமாகவும் முஸ்லீம்கள் மம்தாவிற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். 

மமதா பானர்ஜியை தோற்கடித்த பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, அமித் ஷாவுடன்

                ஊடகங்கள் குறிப்பாக தமிழக ஊடகங்கள்  மம்தாவின் வெற்றி இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றியதாக புகழாரம் சூட்டுகிறார்கள்.   உண்மையில்  மம்தாவின் வெற்றி  பாகிஸ்தான் மற்றும் பங்களா தேஷ் நாட்டில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும்,   பயங்கரவாதிகளுக்கும் கொண்டாடம் என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை.   2016-ல் 211 இடங்களில் வெற்றி பெற்ற மம்தா, 2021 –ல் இரண்டு இடங்கள் மட்டுமே  அதிகம் பெற்றது மிகப் பெரிய வெற்றியாக  பக்கம் பக்கமாக எழுதும் ஊடகங்கள்,  2016-ல் வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி,  2021-ல் 77 இடங்களில் வெற்றி பெற்றது மிகப் பெரிய வெற்றியாக தெரியவில்லை.   எந்த ஊடகமும்,  தேர்தலுக்கு முன் நந்திகிராமத்தில் என்னை தோற்கடிக்க முடியுமா என சவால் விட்ட மம்தாவை தோற்கடித்து காட்டியது பற்றி எழுதுவதற்கு அவர்களின் பேனாவில் மை தீர்ந்து விட்டது.  அந்தோ  ஊடக தர்மம்.  

2 Replies to “மேற்கு வங்க மாநில தேர்தலும் காணாமல் போன கம்யூனிஸ்ட்டும் காங்கிரஸூம்”

  1. கொல்கத்தாவில் மம்தாவின் கட்சி பெற்ற வெற்றிக்கு பின்னர் , ஆயிரக்கணக்கான இந்துக்கள் மீது அந்நிய நாட்டு முஸ்லிம்களாகிய ரோஹிங்கியா முஸ்லீம்கள் வன்முறை தாக்குதல் நடத்தி , இந்து பெண்களை கற்பழித்துக்கொன்றதுடன் நூற்றுக்கணக்கில் கொலை செய்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மம்தா நமது நாட்டுக்கே ஒரு பேரபாயம் .

  2. 2010-ஆம் ஆண்டில் மேற்குவங்காள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசில் அமைச்சராகவிருந்த ஒரு திமிர்பிடித்தவன் மகான் இராமகிருஷ்ண பரமஹம்சரை பற்றி கேவலமாகப்பேசினான். அந்த நாளில் இருந்தே கம்யூனிஸ்டுகளின் தோல்விக்கும் அழிவுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது.2011- தேர்தலில் எதிர்க்கட்சியாகி, 2016- தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து , 2021-இல் பூஜ்யம் ஆனார்கள் .விரைவில் அடுத்த அடுத்த தேர்தல்களில் கேரளாவிலும் அதே நிலைமை கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்படும் என்பது நிச்சயம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *