உள்ளாட்சியில் நல்லாட்சி சாத்தியமா-  தி.மு.க.வினால்  செய்ய இயலுமா?

உள்ளாட்சி தேர்தலுக்கு  முன்பே, தமிழக முதல்வர்   உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்  என கூறினார்.   நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில்  வெற்றி வாகை சூடிய தி.மு.க.  நல்லாட்சி வழங்க முடியுமா  என்ற கேள்வி சத்தியவான்களிடம் எழுகிறது.  இந்த கேள்வி எழுவதற்கு முக்கியமான காரணமே,  உள்ளாட்சியில்,  தி,மு.க.வின்  திருமங்கலம்  பார்முலா விளையாடியது.    தி.மு.க. வேட்பாளர்கள்  தேர்தலுக்கு செய்த செலவு  மாநகராட்சியில்  ஒரு வார்டுக்கு சுமார்   ஒரு கோடி வரையும்,  நகராட்சிகளில்  ஐம்பது லட்சம் வரையும் செலவு செய்துள்ளதாக  பரவலாகவும் நம்பகதன்மை கொண்ட செய்திகளும் வெளி வந்துள்ளன.  இந்த தேர்தல்  ஜனநாயகத்துக்கும்  பணநாயகத்துக்கும்  ஏற்பட்ட மோதல்  என்றால் மிகையாகாது.

                நடந்து முடிந்த  மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின்  தேர்தல்களில் ,  எதிர்பார்த்தது போலவே  ஆளும்  தி.மு.க.வின் அராஜக போக்கினாலும்,  ஜனநாயக விரோத செயல்களினாலும்  வெற்றி வாகை சூடியுள்ளது.   இந்த தேர்தலில்  ஜனநாயகம் வென்றது என்பதை விட பணநாயகம்  வெற்றி பெற்றுள்ளது  என கூறுவதே  சரியாக இருக்கும்.  தி.மு.க..விற்கு இது ஒன்றும் புதிதல்ல, ஏற்கனவே 2009ல் நடந்த திருமங்கலம் இடைத் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்காளர்களை ஒட்டுமொத்தமாக சுருட்டியது திமுக. அதனால்தான் அந்த தேர்தலில் பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்தது திமுக. அதிலிருந்துதான் பெரிய அளவிலான வெற்றி பெற வேண்டும் என்றால், திருமங்கலம் ஃபார்முலாவை வைத்து வென்று விடலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.  அதையே தான் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் பின்பற்றியது.   வெற்றி பெற்ற  ஆளும் கட்சியின் ஒரு மாமன்ற உறுப்பினர்  சுமார்   80 லட்சம் ரூபாய் செலவழித்தாக  கூறப்படுகிறது.   இவ்வளவு  தொகை செலவு செய்து வெற்றி பெற்ற உறுப்பினர்,  அரசாங்க நிதியில் எவ்வளவு கொள்ளையடிப்பார் என்பதையும் சற்றே சிந்திக்க வேண்டும்

                தி.மு.க.வின் கடமை , கண்ணியம், கட்டுப்பாடு  என்ற கொள்கைள்   திருவாளர்   அண்ணாதுரை சமாதியானவுடன்,  கொள்கையும்  சமாதியடைந்து விட்டது.   தற்போது கடமை என்பது  மாவட்ட செயலாளர்களை முறையுடன் கவனித்தால், உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்  என்ற கடமை உணர்ச்சியுடன்,   கௌன்சிலர் பதவிக்கு நிற்பதற்கே, அரை கோடி முதல் ஒரு கோடி வரை  செலவு செய்தது போக,  சீட் பெறுவதற்கு மாவட்ட செயலாளருக்கு பணத்தை கப்பம் கட்டுவதிலிருந்து  ஊழல் தொடங்கி விட்டது.   இந்த லட்சணத்தில்  உள்ளாட்சியில் நல்லாட்சி எப்படி மலரும்.

                தமிழக முதல்வர் தேர்தல் நடப்பதற்கு முன்பே , அனைத்து மாநகராட்சிகளையும், நகராட்சிகளையும், பேரூராட்சிகளையும் கைப்பற்ற வேண்டும் என தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.  தி.மு.க.வின் வேண்டுகோள் விடுத்தால் ,  அதன் உண்மை என்ன என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்.   சாம, தான, பேத, தண்டம்  என கூறுவது போல்,  இதில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி வெற்றி பெற வேண்டும் என்பது தான் முதன்மையான நோக்கமாகும்.  முந்தைய தேர்தல்களில்  பண பட்டுவாடா என்பது  தேர்தலுக்கு முதல் நாள் நடக்கும் சம்பவம்.   இது கூட பலருக்கும் தெரியாமல் நடக்கும்.   ஆனால்  தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில்  வாக்காளருக்கு பணம் பட்டுவாடா என்பது காவல் துறையினருக்கு நன்கு  தெரிந்தே வாக்களருக்கு பணம் கொடுக்கப்பட்டது.

                மாநிலத்தில் சில இடங்களில் தேர்தலுக்கு முதல் நாள் , பணம் மற்றும் பொருட்களுடன் வினியோகம் தொடங்கியது.  இதில் வேடிக்கை என்னவென்றால்,  தி.மு.க.வினர்  வீடுகள் தோறும் சென்று,  சத்துாசி போட்டாச்சா  என்று கேள்வியை முன் வைத்துள்ளார்கள்.   இதன் உண்மையான பொருள், கொரானாவிற்கு ஊசி போட்டாச்சா என்பதல்ல,  ஓட்டுக்கு பணம் வந்து விட்டதா என்பதை தெரிந்து கொள்வதற்கு பயன்படுத்திய  சந்தேக மொழியாகும். 

                வாக்கு ரூ 1000 முதல் ரூ 2000 வரை தி.மு.க.வினர் வழங்கியுள்ளார்கள்.  மாநகராட்சியில்  ஒரு வார்டுக்கு குறைந்தபட்சம் 8,000 முதல் 9,000 வாக்காளர்கள்  உள்ளனர்.   இதில் கறைந்த பட்சம் 75 சதவீத வாக்காளருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.   ஆகவே  தி.மு.க. வேட்பாளர்கள் ஒரு மாநகராட்சி வார்டுக்கு செலவு செய்த தொகை ரூ50 லட்சத்திற்கு  மேலாக செலவு செய்ததாக கூறப்படுகிறது.  இத்துடன் பல இடங்களில்  பணத்துடன் சேலை, குடம் , சிறிய குத்துவிளக்கு போன்ற பொருட்களும் வழங்கியுள்ளார்கள்.   ஆகவே  உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகம் என்பதை விட பணநாயகம் முக்கிய பங்கு வகித்துள்ளது.   இந்த போக்கு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வழி வகுக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

                     கோவையை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தி.மு.க. நடத்திய பணநாயம் எப்படிப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும்.  ஒரு ஓட்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ள நிலையில், ஒரு வார்டுக்கு  திமுக ஒரு கோடி ரூபாய் இறக்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி கொலுசு, வெள்ளி காமாட்சி விளக்கு, சேலை, ஹாட் பாக்ஸ் இன்னபிற பரிசுப்பொருட்கள் வழங்கியிருக்கின்றன.   ஆயிரம் ரூபாயும், செல்வாக்கான நபர்கள் போட்டியிடும் வேட்பாளர்கள் வார்டுகளில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுத்திருக்கிறார்கள்.   மேயர் வேட்பாளர் களமிறங்கிய வார்டில் ஒரு ஓட்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் 4 ஓட்டுக்கள் உள்ளவர்கள், 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளனர். சிலர் ஊட்டி, கேரளா என்று டூர் போய்விட்டார்கள். அந்த ஒரு வார்டில் மட்டுமே 75 கோடி ரூபாய்க்கு மேல் வாரி இறைத்துள்ளனர். 

                இந்த தேர்தலில் தி.மு.க.வினர் ஒரு புதிய வகையான வழி முறைகளை கொண்டு வந்துள்ளார்கள்.  தேர்தல் பணியில் ஈடுபடும் மாஜி ராணுவத்தினர்,  அரசுத்துறை ஒய்வு அதிகாரிகள், ஊர்காவல் படையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.  இவர்களும்  தங்களின் வாக்குகளை தபால் மூலம் வாக்களித்தார்கள்.   நடைபெற்ற உள்ள உள்ளாட்சி தேர்தலில்,  தபால் ஓட்டு போடும் மேற்கூறிய பிரிவினரையும்  தி.மு.க.வினர் நன்றாக கவனித்துக் கொண்டார்கள்.   இவர்களில் 25 சதவீதத்தினரை பணம், பொருட்கள், பணி மாற்றம் பெற்று தருவாதாக ஆசை வார்த்தை கூறி தங்களுக்கு சாதமாக வாக்களிக்க வைத்தார்கள்.  தபால் ஓட்டு போட ஓட்டு எண்ணிக்கை துவங்கும் பிப்ரவரி 19 காலை 7.00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது.  இது கூட தி.முக.வினரின் திட்டமிட்ட செயலாகும்.   அதாவது பிப்ரவரி 19-ந் தேதி இரவு ஓட்டுப் பதிவு சதவீதம் குறைந்து விடும் என்றும்,   வெற்றி வித்தியாசம் குறைந்த அளவில்  இருக்கும்  என உளவு துறை கூறியதால்,  தி,மு.க.வின் திட்டப்படி  தபால் ஓட்டு போடும் கால அவகசாம் ஓட்டு எண்ணும் நாள் 22-ந் தேதி காலை வரை நீடிக்கப்பட்டது.   இந்த இடைவெளியில் தி.மு.க.வின் திட்டப்படி கவனிக்கப்பட்டது.   இதே போல் வாக்கு பதிவு நாளன்று, தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு,  மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.   இந்த இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில் பதிவான வாக்குகளின் சதவீதம் என்ன என்பதை கவனித்தால்,  தி.மு.க.வின்  தில்லு முல்லு நன்றாக தெரியும்.   இதுதான் தி.மு.க.வினரில்  ஜனநாயகமாகவும்.   

                இதனிடையே,  அமைச்சர் துரைமுருகன் வாணியம்பாடி வாக்கு சேகரிக்கும் போது, எச்சரிக்கை செய்யும் விதமாக பேசியதும், வாக்களார்களை மிரட்டியது போல் இருந்தது.   வாணியம்பாடி மக்களுக்கு குறிப்பாக வாணியம்பாடி நகரத்தில் பரவலாக இருக்கும் மக்களுக்கு, எச்சரிக்கையாக ஒன்றை கூறுகிறேன்.  தமிழக அரசின் திட்டங்கள் அனைத்துகம், உங்களை முழுமையாக சென்று சேர வேண்டும் என்பது தான் தி.மு.க.வின் விருப்பம்.  அரசு திட்டங்கள் உங்களை வந்தடைய வேண்டும் என்றால், நல்ல கவுன்சிலர்களும், நல்ல தலைவரும் தேவை.  தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், திட்டங்கள் மிக  எளிதாக உங்களை வந்து சேரும், வணியம்பாடி சிறக்கும்.  என பேசியது  வாக்காளர்களை மிரட்டியது போல்  என்பதை மறந்து விட்டார்கள்.   இது பற்றி ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. கடைசி கட்டத்தில்,  குடும்ப தலைவிக்கு மாதம் ஊக்க தொகையாக ரூ1,000 மாதந்தோறும் வழங்கப்படும்  என சட்ட மன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை காப்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டை மறைக்க கையாண்ட விதம் மோசமான ஒன்றாகும்.   போலியாக ஒரு விண்ணப்பத்தை  தயாரித்து,  விநியோகப்பட்டு,  வக்காளர்களை கவரும்விதமாக  செயல்பட்டது  ஜனநாயக நெறிமுறையாக  என்பதை முதல்வர் தெளிவுப்படுத்த வேண்டும்.  ஏன்என்றால்,  அப்படிப்பட்ட விண்ணப்பம் அரசு தரப்பில் வழங்கப்படவில்லை என்பதை கூட கூறவில்லை என்பதையும் சிந்தித்தால்,  இது அப்பட்டமான பணநாயமும், மோசடித்தனமான செயல்பாடாகும்.   ஆகவே  தி.மு.க.வின் பெற்ற வெற்றி பணநாயகம் மற்றும்  குள்ளநரி செயலாகும்.

19 Replies to “உள்ளாட்சியில் நல்லாட்சி சாத்தியமா-  தி.மு.க.வினால்  செய்ய இயலுமா?”

  1. உக்ரைனிலிருந்து மீட்டு வரப்படும் மாணவர்களில் பலரும் நன்றி தெரிவிக்கிறார்கள் அரசுக்கு. பெற்றோர் கண்களில் கண்ணீருடன் மீண்டு வந்த பிள்ளைகளை கட்டித்தழுவுகிறார்கள், அரசுக்கு நன்றி சொல்கிறார்கள்!

    மாறாக ஒரு சிலர் அரசியல்வாதி போல பேசுகிறார்கள், “என்ன பெரிதாக கிழித்து விட்டது அரசு?” என்று. ‘இவர்கள் பெற்றோர்கள் நல்ல முறையில் சம்பாதித்து அந்த பணத்தில் இவர்களை வெளிநாடு அனுப்பியிருந்தால் இப்படி பேசுவார்களா?’ என்ற கேள்வி எழுகிறதுஸ Garbage-in , Garbage-out! அரசுக்கு இருக்கும் பணிகளில் இந்த ஆராய்ச்சியில் அரசு இறங்க வாய்ப்பில்லை.

    என்றாலும், உயிரின் மதிப்பறியாத இவர்களை, காஷ்மீர் – லடாக் – அருணாச்சல் எல்லையில் இரண்டு வருடம் கட்டாய சேவையில் அமர்த்தினால் ஒரு வேளை அவர்களுக்கு உயிரின் அருமை தெரியலாம், ‘எத்தனை இன்னல்களுக்கிடையே நம்மை அரசு மீட்டிருக்கிறது?’ என்பது புரியலாம்!

    சீனா இன்று தான் முதல் விமானத்தில் தன் பிரஜைகளை உக்ரைனிலிருந்து கொண்டுவந்திருக்கிறது! அமெரிக்கா ஒருவரையும் மீட்கவில்லை. அமெரிக்க ஹாலிவுட் நடிகர் ஷான் பென் பல கிலோமீட்டர்கள் நடந்து சென்று எல்லையை கடந்திருக்கிறார்.

    குவைத் போர், ஈராக் போர், லிபியா பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளின்போது மீட்பு பணிகளுக்கு பல மாதங்கள் எடுத்து கொண்டது அப்போதிருந்த காங்கிரஸ் அரசு! ஒரே வாரத்தில் மக்களை வெளியேற்றுகிறது மோதி அரசு!

    சிரியா, யெமென், ஆஃப்கானிஸ்தான் மீட்பு பணி முதல் உக்ரைன் மீட்பு பணி வரை – போர் செய்பவர்களிடம் பேசி, சில மணி நேரங்கள் போரை நிறுத்தி, அந்த இடைவெளியில் பிரஜைகளை மீட்டிருக்கிறது மோதி அரசுஸ

    இதற்கிடையில், நாடு திரும்பும் மாணவர்களுக்கு, இங்கேயே படிப்பை தொடர ஏற்பாடு செய்கிறாராம் மோதி ஜி. “நாங்கள் இந்தியா வேண்டாம் என்று தான் வெளிநாடு சென்றோம், எங்களை ஏன் இந்த பாஸிஸ்ட் மீண்டும் இந்தியாவிலேயே இருக்க சொல்கிறார்?” என சில “மாணவர்கள்” பொங்குவார்கள். Just wait for it!

    மழை பெய்யும் போது எல்லோருக்கும் சேர்த்து தான் பெய்கிறது – நல்லவர்களுக்கு தனியாக மழை, கெட்டவர்களுக்கு தனியாக என்று இல்லை.

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய் நன்றி கொன்ற மகற்கு!

    *** மீண்டு வருபவர்களில் எத்தனை பேர் அரசியல்வாதிகள் / அரசு அதிகாரிகள் பிள்ளைகள் என்று பார்த்தால் எளிதில் விவரம் புரியும். சமாஜ்வாதி அரசியல்வாதி மகள், காங்கிரஸ்காரி மகள் ஒருத்தி என பலரும் சிக்குகிறார்கள்!

  2. நீட் டை ரத்து செய்கிறேன் என்று குழு அமைக்கப்பட்டதா?

    ஆமா.

    என்னாச்சு?

    ஒண்ணும் ஆகல. அப்படியேத்தான் இருக்கு.

    பொருளாதரத்தை உயர்த்துகிறேன் என்று 5 கேப்மாரிகளை கொண்டு குழு அமைக்கப்பட்டதா?

    ஆமா.

    என்னாச்சு?

    ஒண்ணும் ஆகல. அப்படியேத்தான் இருக்கு.

    சென்னை வெள்ளத்தில் மூழ்கியதற்கு ஒப்பந்தக் காரர்களை தண்டிக்க குழு அமைப்பேன் என்று சொல்லப்பட்டதா?

    ஆமா.

    என்னாச்சு?

    ஒண்ணும் ஆகல. அப்படியேத்தான் இருக்கு.

    அடுத்து வெல்லத்தில் பல்லி வைத்தது யார் என்று கண்டு பிடிக்க குழு அமைக்கப்பட்டதா?

    ஆமா.

    என்னாச்சு?

    ஒண்ணும் ஆகல. அப்படியேத்தான் இருக்கு.

    அதேப்போலத்தான் இப்போ உக்ரைனிலிருந்து மீட்கப் போகிறேன் என்று குழு அமைத்ததும்….

    குழு அங்கே போகுமா?

    போகாது.

    அப்போ அந்தக் குழு என்னத்தான் செய்யும்?

    இங்கே பேட்டி மட்டும் கொடுக்கும்……

    குன்றிய_நிர்வாகமும்_கோமாளி_முதல்வரும்

    ஒன்றுக்கும்_ஆகாத_ச்டாலின்

  3. ‘இரண்டு நாடுகளின்
    தலைவர்கள் மட்டுமே
    பேசித் தீர்ப்பதாயிருந்தால்
    இரு குவளை மதுவோடு
    நின்றுவிடும் போர்!’

    அதுதான் உண்மை.

    ரஷ்யா முடிவை ரஷ்யா எடுக்கிறது.
    உக்ரெய்ன் முடிவை அமெரிக்கா எடுக்கிறது.

    பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது,
    அங்கே வரமாட்டேன், இங்கே முடியாது
    என்றெல்லாம் அலைக்கழிந்த உக்ரெய்ன்,
    ‘சரி, பெலாரஸுக்கு வருகிறேன்’ என்று ஒப்பியபிறகு, உக்ரேய்ன் செலென்ஸ்கி வாயில் வந்த
    முதல் முகூர்த்த வார்த்தை என்ன தெரியுமா?

    “பேச்சுவார்தைக்கு சம்மதம். ஆனால்,
    எதுவும் விளங்கப்போவதில்லை!”

    இதுதான் மனோநிலை.
    கட்டமைக்கப்பட்ட மனோநிலை.

    போர் முடிந்துவிடக்கூடாது.
    இதுதான் உள்ளூறின ஆசை.

    ரெண்டுமாசம் ரஷ்யா வந்து எல்லையைச் சூழ்ந்து நின்றபோதும். அதற்கு செவிமடுக்காது
    உக்ரெய்ன் காத்து நின்றது இந்தப் போருக்காகத்தான்.

    உக்ரெய்ன் ஜெயித்தால் என்ன? தோற்றால் என்ன?
    செலென்கிக்கு காத்திருக்கிறது
    அமெரிக்காவின் பட்டுப் பீதாம்பரம்.

    உக்ரெய்ன் எப்படியும் அமெரிக்காவின் கைப்பாவை ஆகிவிடவேண்டும். ஒரே லட்சியம் அதுதான். அவ்வளவுதான்.

    நினைவிருக்கிறதா? பெண்கள், குழந்தைகள், ஒட்டுமொத்தத்தில் பொதுமக்களை கேடயமாக்கி போரில் பயன்படுத்தினான் ஹிட்லர்.

    அதே பாணியில்,போர் தொடங்கிய முதல்நாளே,
    இலவச மிக்ஸி கிரைண்டர் மாதிரி இலவசத் துப்பாக்கி குடிமக்களுக்கு வழங்கப்படும், மக்கள் போருக்குத் தயாராகவேண்டும் என்றார் செலென்ஸ்கி.

    மக்கள் க்யூவில் நின்று துப்பாக்கி வாங்குவதாகவும்,
    ஒரு எண்பது வயது தாத்தா எனக்கு ரெண்டு துப்பாக்கி கொடுங்கள், ரெண்டு கையாலும் சுடுவேன் என்று அடம்பிடித்ததாகவும் சந்தோஷப்பட்டுக்கொண்டன அமெரிக்க சார்பு தமிழக டிவிகள்.

    பொதுமக்கள் என்ற பேரில் துப்பாக்கி எடுத்து சுடுவானாம்; ரஷ்யாக்காரன் பார்த்துவிட்டு
    சும்மா போவானாம்.

    மக்களைப் போரில் ஈடுபடச் சொன்னது மகா குற்றம். இப்போது குடியிருப்புக்குள் ரஷ்யா தாக்குதல் தொடுக்கிறது என்று அலறுவது மகா அயோக்கியத்தனம்.

    நேட்டோவில் பங்கெடுக்க உக்ரெய்னுக்கு சுய நிர்ணய உரிமை இல்லையா என்று சில சுதந்தர தாகிகள் கேட்கிறார்கள்.

    எப்படி உண்டு?

    எங்கோ அமெரிக்காவிலிருந்தும், பிரான்ஸிலிருந்தும், ப்ரிட்டனிலிருந்தும் லோகம் முழுமைக்கும் வந்து ராணுவத்தளம் அமைக்க நேட்டோவுக்கு என்ன அவசியம் வந்தது? என்ன உரிமை உண்டு?

    நேட்டோ உருவானபோது, 11 நாடுகளின் சொந்தப் பாதுகாப்புக்கு என்றுதான் சொன்னார்கள். ஆனால், விதிகளின் முதல் பத்தியிலேயே சோவியத் ஆதிக்கத்தைத் தடுக்க என்று பிரகடனப்படுத்தி, நோக்கத்தைத் தெளிவாக்கிவிட்டார்கள்.

    அவன் வந்து ரஷ்யாவின் வாசலில்
    வெடிகுண்டுக் கூடாரம் அமைக்க
    உக்ரெய்ன் இடம் கொடுப்பானாம்;
    ரஷ்யாக்காரன் மௌனித்திருக்கவேண்டுமாம்.

    சீனாக்காரன் லடாக்குக்குள் வந்தபோது
    ஏன் குய்ய்யோ முறையோ என்று அலறினீர்கள்?
    ‘வந்து கூடாரமடித்துவிட்டுப் போகிறான் பாவம்,
    அவன் இடுங்கிய கண்களைப் பார்த்தாலே
    பரிதாபம் சுரக்கிறது’ என்று
    விட்டு விட வேண்டியதுதானே?

    உங்களுக்கு வந்தால் குருதிப்புனல்?
    ரஷ்யாவுக்கு வந்தால் குங்குமக் கரைசலா?

    ‘புட்டின் தங்கக் கம்பியா ?’

    இல்லை.

    ‘கம்யூனிஸ ஆட்சி நடத்துகிறாரா?’

    இல்லை.

    ‘பின் ஏன் அவரை சப்போர்ட் பண்ணுகிறீர்கள்?
    போரை சப்போர்ட் பண்ணுகிறீர்கள்?’

    புட்டினையும் சப்போர்ட் பண்ணவில்லை;
    போரையும் ஆதரிக்கவில்லை.

    ‘பின்னே?’

    சோவியத் பயம் காட்டி நேட்டோவை நட்டீர்கள். அவர்களின் வார்ஸா கூட்டைக் காட்டி,
    நேட்டோவை வளர்த்துக்கொண்டு போனீர்கள்.

    இப்போது சோவியத்தும் இல்லை.
    வார்ஸாவும் இல்லை. நேட்டோவை
    ஏன் கலைக்க மறுக்கிறீர்கள்?

    எதற்கு நேட்டோ? நேட்டோவை உலகம் பூரா நிறுவ
    ஏன் அலைகிறீர்கள் ? தன்னந்தனி ரௌடிபோல
    ஏன் கலாட்டா செய்கிறீர்கள்? போரை விரும்பாத மாதிரி நாடகம் போடும் அமேரிக்கா ஏன் ராணுவத் தளவாடங்களை உலகமெல்லாம் கொண்டு செல்கிறது? நேட்டோவை ஏன் ரஷ்யாவின் நாலு திசைகளிலும் நிறுவுகிறது? இனி யாரால் உங்களுக்கு பயம்?

    ரஷ்யாதான் எதிரி என்று, அவன் எல்லைக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அவனை அமைதியாக பொறுத்துக் கொள்ளச் சொல்வதில் என்ன நீதி இருக்கிறது?
    எங்கே நியாயம் இருக்கிறது?

    இதுவே ரஷ்யப்போரில் நமது கேள்வி!
    நமது தரப்பு வாதம்!

    போர் கூடவே கூடாது.
    ரஷ்யாக்காரனாக இருந்தாலும் சரி,
    கிஷ்யாக்காரனாக இருந்தாலும் சரி,
    போர் கூடாதென்றால் போர் கூடாதுதான்.

    இது ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும்
    எல்லாருக்கும் பொருந்தும்.

    உலகமெங்கிலுமுள்ள அரசாங்கங்கள் –
    இந்தியா உட்பட – ராணுவச்செலவுகளைக் குறைத்து, கல்விக்கும் சுகாதாரத்துக்கு செலவிட வேண்டுமென்று இறைஞ்சுகிற கூட்டத்தில்தான் நாங்கள் இருக்கிறோம்.

    உக்ரெய்ன் அங்கு வாழும் ருஷ்யர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் நீதியான அரசாங்கத்தை நடத்தவேண்டும். ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த நேட்டோவை அழைக்கக்கூடாது. அமெரிக்கா அங்கிருந்து வந்து ஊரெல்லாம் மூக்கை நுழைக்கக்கூடாது. ஐநா என்ற ஒன்றை பொம்மையாக்கிவிட்டு நேட்டோவை பரப்பக்கூடாது. ரஷ்யாவும் போரைக் கைவிட்டு உலகில் பதற்றத்தைத் தவிர்க்கவேண்டும். பேசித் தீர்க்கமுடியாததை
    போரால் தீர்க்கமுடியாது.

    இதுவே நமது நிலை.

    ரஷ்யா கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும் ; அமெரிக்கா என்னவேண்டுமானாலும் அராஜகம் புரியலாம்; ஒரு கண்ணுக்கு மயோனிஸ் –
    மறு கண்ணுக்கு மிதில் ஆல்கஹால் என்பதுதான்
    வாதிட வருவோரின் நீதி என்றால்,

    மன்னிக்க வேண்டும்.

    நாங்கள் ரஷ்யன் பக்கம்தான்!

  4. சைவமும் தமிழும் பௌத்தமும் சிங்களமும் செழித்தோங்கி இருந்த இலங்கை தீவை போத்துகேயன் ஆக்கிரமித்து தமிழ்-சிங்களவர்களின் இறைமையை அழித்து கலை,கலாச்சாரத்தை அழித்து, மொழியை அழித்து சைவ,பொளத்த மதஸ்தளங்களை இடித்து கட்டாய மதமாற்றம் செய்தான். பின் ஒல்லாந்தன் அதன்பின் ஆங்கிலேயன் என அனைவரும் அதையே செய்தனர். ஆனால் அவர்கள் விலகியபின் சிங்களவர்கள் தங்கள் கலை,கலாச்சாரம்,இறையாண்மையை மீட்டு தன்னுடைய நாட்டையும் தன்னையும் காப்பாற்றிக்கொண்டான்.

    ஆனால் தமிழர்கள் தங்கள் இறைமையை போத்துகேயனிடம் ஈடுவைத்தன் விளைவு இன்றும் அடிமை பட்டு கிடக்கின்றான். போத்துகேயனின் வெளியேற்றத்துடன் அவன் இங்கே கட்டாயமாக திணித்தவற்றை இடித்து அழித்திருந்தால் தமிழர்களுக்கும் சிங்களவர்கள் போன்று இலங்கை தீவில் நாடு இருந்திருக்கும்.

    பல்வேறு தேவைகளுக்கு மதம்மாறிய சிங்களவர்கள் சிங்கள அரசியலில் இருக்க வேண்டும் என்றால் பௌத்தனாக இருக்க வேண்டும் என்கின்ற நிர்பந்தம் ஏற்பட்டதால் அவர்கள் தங்கள் இறைமையை காப்பாற்றி கொண்டனர். மீண்டும் பௌத்தம் திரும்பிய தலைவர்களும் தங்கள் அந்நிய கலாச்சார பெயர்களை வெறும் இனிசியல்களாக சுருக்கியும், மாற்றியும் கொண்டனர்.

    ஆனால் தமிழர்கள் அப்படி செய்யவில்லை. தமிழர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றால் சைவர்களாக இருக்க வேண்டும் என்கின்ற கடும் கோட்பாட்டில் தமிழர்கள் இருந்திருந்தால் இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழர்கள் இன்று இறைமையுள்ள நாட்டுக்கு சொந்தக்காரர்களாக இருந்திருப்பார்கள்.

    பி.கு: இது யாருக்கும் எதிரான பதிவல்ல. ஒரு நிமிடம் தமிழர்கள் இதை பற்றி சிந்திக்க வேண்டிய பதிவு. நீங்களே யோசித்து பாருங்கள் உண்மை புரியும்.

  5. தமிழ் பேசும் எல்லோரும் தமிழர்கள் இல்லை.

    தமிழர்கள் இறைவன் அருளிய தமிழை தம் உணர்வு உயிர் என்பவற்றில் கலந்த கலாச்சார பண்பாட்டு அடையாளங்களுடன் பயன்படுத்துகின்றனா்.அத்துடன் தமிழா்களின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்கள் அனைத்தும் சைவசமயம் சாந்தைவையாகவே காணப்படுகின்றது, தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ்பெயா்கள் பிறமொழி கலப்படம் அற்றவையாகவே காணப்படும். பிறமொழிகளின் கலப்பட பெயா்கள் தமிழனின் என்று அடையாளப்படுத்தப்படமாட்டாது.

    இலங்கையில் தமிழ் பேசுகின்ற சோனகர்கள் தமிழை தங்களின் தொடர்பாடலுக்காக பயன்படுத்துகின்றனர். சோனகர்களின் கலாச்சார பண்பாடுகள் அரேபிய இஸ்லாமிய கலாச்சார பண்பாடுகள் சாா்ந்தவையாகவும் சோனகர்கள் என்று அடையாளப்படுத்துகின்ற அவா்களின் பெயா்கள் அரேபிய இஸ்லாமிய மதத்தின் பெயராகவே காணப்படும்.

    இலங்கையில் தமிழ் பேசுகின்ற பறங்கியர்கள் தமிழை தங்களின் தொடர்பாடலுக்காக பயன்படுத்துகின்றனர். பறங்கியர்களின் கலாச்சார பண்பாடுகள் ஐரோப்பிய கலாச்சார பண்பாடுகளையும் அரேபிய ஏபிரகாமிய கீபுறு (ஹீபுறு) மொழி கலாச்சார பண்பாடுகளையும் கொண்டதாக காணப்படுகின்றது. பறங்கியர்களை அடையாளப்படுத்துகின்ற பெயா்கள் ஐரோப்பிய மொழி பெயா்களையும் கீபுறு (ஹீபுறு) மொழி பெயா்களையும் கொண்டவா்களாகவே காணப்படுகின்றது.

  6. 38 பாராளுமன்ற உறுப்பினர்கள், 159 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சியில் இருக்கும் கட்சி, 13 கட்சியை தன் அருகே அடியாள்களாய் நிறுத்தி கொண்டு,

    தன்னை யாரும் தாக்காதவாறு அத்தனை ஊடகங்களையும் விலைக்கு வாங்கி பாதுகாப்புக்கு அழைத்து கொண்டு,

    கடலில் இருந்து சுனாமி வந்தது போல் பணத்தை அல்லி வீசி, எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிக்கோ ஆனால் நாங்கள் செய்யும் அட்டகாசத்தை கேள்வி கேக்காதே.. கேட்டால் என்று மிரட்டி

    அரசு ஊழியர் ஒரு புறம், காவல்துறை மறுபறம் என்று மேலும் பாதுகாப்பை பலபடுத்தி அசுர பலம் வாய்ந்த கூட்டணியாய் வலம் வரும் இந்த கூட்டணி ஒருபுறம்

    கடந்த 10 வருடங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த கட்சி மறுபுறம்.

    இவர்களையெல்லாம் கூட சமாளித்து விடலாம்,

    வெறி கொண்ட வேங்கையாக புதிது புதிதாக கட்டு கதைகளை கட்டி பாஜக மீதான கண்மூடித்தனமான வெறுப்பினை தொடர்ந்து வளர்த்து வரும் கூலிப் பட்டாளங்கள், சிறுபான்மை பிரிவுகள், திக கூட்டங்கள்,

    மேலும் பத்திரிகையாளர் போர்வையில் காசுக்கு மாறடிக்கும் கூட்டங்கள் மற்றும் ஊடகங்கள், நெறியாளர்கள் இவர்கள் அனைவரும் ஏற்படுத்தும் ஆழமான பாதிப்பை கணிக்கவே முடியாது. முற்றிலும் எதிர்மறையான சூழல்.

    இந்த சூழலில் இங்கே திடீரென ஒரு அற்புத மனிதர் உள்ளே வருகிறார். ஒரு நம்பிக்கைக் கீற்று பிறக்கிறது. மிக சிறிய அளவில் தொடங்கிய வெளிச்சம் மெதுவாக பரவத் தொடங்குகிறது.

    டீ கடையில் ஆரம்பித்து, ஆங்காங்கே மக்கள் விவாதிக்கத் தொடங்குகிறார்கள்.

    தாங்கள் இதுவரை ஆதரித்து வந்த கும்பல்கள் குறித்து மக்கள் சந்தேகம் கொள்ளத் தொடங்குகிறார்கள்.

    அதை தடுக்க ஊடகமெனும் விஷ பாம்புகள் படமெடுத்து ஆடுகின்றன

    ஆனால் மக்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அந்த அற்புத மனிதரையும் அவரது அதியற்புத தலைவரையும் தாங்கள் இதுவரை வெறுத்து வந்த அவர்களின் கட்சியையும் நேசத்துடன் பார்க்கத் தொடங்குகிறார்கள்

    அதன் விளைவுகளை இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கின்றன.

    உடைந்த கண்ணாடித் துகள்கள் நிறைந்த பாதையில் ஓடி, முள் வேலிகளை தாண்டி, எரியும் நெருப்பு வளையத்தையும் தாண்டி, நெடுஞ்சாலையை அடைவதற்கு ஒப்பானது இது.

    ஒரு சில pocketகளில் மட்டும் என்று இருக்காமல் பரவலாக பல இடங்களில் கணிசமான ஓட்டுகள் வாங்கியிருப்பது தான் நிஜமான வெற்றி.

    ஒரு பேட்டியில் திரு. அண்ணாமலை “வருவோம்” என்று தீர்க்கமாக அறிவித்தார். அது செயல்படத் துவங்கி விட்டது.

  7. சு.ப.வீரப்பன்…
    இந்த மனிதர் குறித்த சர்ச்சை என்ன என்பது பற்றி பெரிய அளவில் புரிதல் இல்லை. ஆனால் சில ஆதாரங்களுடன் ஒரு குற்றசாட்டு முன் வைக்கப்படுகிறது.ஆனால் இது வரை அவர் அந்த குற்றசாட்டை மறுக்க வில்லை. கருத்தும் தெரிவிக்கவில்லை.

    இது அவரது தனிப்பட்ட விஷயம் என்று குளத்தூர் மணி இதை எளிதாக கடந்து செல்கிறார். ஆம் இது அவரின் தனிப்பட்ட விஷயம் தான், யாரும் தலையிட உரிமை இல்லைதான்.

    ஆனால் சு.ப.வீ என்பவர் ஒரு தனி மனிதனாக தன் குடும்ப வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் வரையில் இது போன்ற ஒரு விவகாரம் அவர் தனிப்பட்ட விஷயம் தான்.

    ஆனால் அவர் இப்போது இந்த சமூகத்தில் அவரின் தனிபட்ட வாழ்வை மட்டும் வாழும் தனிமனிதன் அல்ல. பள்ளி கல்வி துறையின் பாடத்திட்டத்தை வடிவமைக்கும் குழுவின் பொறுப்பு மிக்க உறுப்பினர்.அது மட்டுமல்ல சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவுக்கு தலைவரும் கூட.

    அது ஒன்றும் சாதாரண பதவி அல்ல.வருங்கால இளைய தலைமுறையை செதுக்கும் கல்வி திட்டத்தை வடிவமைக்கும் மிகப்பெரிய பொறுப்பு, மற்றும் சமூக நீதியை கண்காணிக்கும் பொறுப்பு.

    அத்தகைய உயரிய பொறுப்பில் இருந்து கொண்டு குற்றசாட்டுக்கு ஆளாகும்போது நிச்சயம் அவர் விளக்கம் அளித்துதான் ஆக வேண்டும். அரசும் தானே முன்வந்து இது பற்றி விசாரணை செய்ய வேண்டும்.

    மாணவர்களுக்கு ஒழுக்கம் போதிக்க வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு இது போன்ற ஒழுக்க கேடுகளில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்க தக்கது.

    சமூகத்தில் பெண்ணிய ஏற்ற தாழ்வுகளை களைய வேண்டிய இடத்தில் இருப்பவர் மீது இப்படி பெண் பாலியல் ரீதியான குற்ற சாட்டு எழுவது எத்தகைய இழிவு.?

    எப்போது ஒருவர் பொது வாழ்விற்கு வர ஆசைபடுகிறாரோ அப்போதே அவர் தன் ஒழுக்க கேடுகளை மூட்டை கட்டி ஓரம் வைத்தல் வேண்டும்.

    பாஜகவின் ராகவன் இது போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியபோது கட்சி பாகுபாடின்றி கேள்வி கேட்டு நியாயம் பேசியவர்களுக்கு இது ஏன் குற்றமாக படவில்லை.

    இத்தனைக்கும் ராகவன் ஒன்றும் அரசு பதவி ஏதும் வகிக்கவில்லை. ஆனாலும் ஒட்டு மொத்த தமிழகமும் அனலாக துடித்தது.

    ஆனால் ஒரு பொறுப்பான அரசு பதவியில் இருக்கும் ஒரு மனிதர் மீதான குற்றசாட்டுக்கு தமிழக அரசு மவுனம் காப்பது சரியல்ல.

    குழந்தைகள் தெய்வத்துக்கு சமம் அந்த குழந்தைகளின் கல்வி சார்ந்த இடத்தில் இந்த மனிதர் பதவியில் இருப்பது வெட்ககேடு. தன் மீதான குற்றசாட்டினை உரிய முறையில் எதிர்கொண்டு குற்றமமற்றவர் என்று நிரூபிக்கும் வரையிலும் இவர் பதவியில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.

    பள்ளி கல்வி துறை சீரழிவது நாட்டின் அடித்தளம் ஆட்டம் காண்பதற்கு சமம். எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து இதை அரசின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்வது நல்லது.

    நம் தமிழகத்தில் இப்போது என்ன ஒரு பிரச்சனை என்றாலும் அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரே மனிதர் அண்ணாமலை மட்டுமே. அவரால் மட்டுமே இதையும் செய்ய முடியும்.

    தமிழக பாஜகவினர் இதை அவர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்…

  8. நரசிம்மராவ் பிரதமராக இருக்கும்போது
    இந்தியாவின் பிரதிநிதியாக ஐநாசபைக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சித்தலைவராக இருந்த வாஜ்பாய் அவர்களை அனுப்பி வைத்தார்…

    ஐ.நா சபையில் காஷ்மீர் பற்றி சூடான விவாதம் நடந்து கொண்டிருந்தது.

    இந்தியாவின் பிரதிநிதி தன் பேச்சை துவங்கினார்

    “என் கருத்தை சொல்லும் முன், ஒரு சிறு கதையை சொல்ல விரும்புகிறேன்

    காஷ்மீர் என்ற பெயர் வர காரணமாய் இருந்த ரிஷி காஷ்யாப் காட்டினூடே சென்று கொண்டிருந்த போது ஒரு அழகிய ஏரியை கண்டார்.

    ஆஹா நாம் நீராட நல்லதொரு இடம் என்று தன் உடைகளை களைந்து ஓர் ஓரமாக வைத்துவிட்டு நீராட சென்றார்.

    திரும்பிவருகையில், அவர் தம் துணிகளை யாரோ சில பாகிஸ்தானியர்கள் களவாடி சென்றிருந்தனர்.”

    இப்படி சொன்னதும் பாகிஸ்தான் பிரதிநிதி எழுந்து பொய் சொல்லாதீர்கள், அந்த காலத்தில் பாகிஸ்தானே இல்லை. பாகிஸ்தானியர் எப்படி களவாடி இருக்க முடியும் என்று கூச்சலிட்டார்

    உடனே நம்மவர் சிரித்து கொண்டே, சரி, நான் சொல்ல வந்த விஷயம் முடிந்து விட்டது, விஷயத்துக்கு வருவோம்

    இன்று பாகிஸ்தானியர் சொல்கிறார்கள், காஷ்மீர் அவர்களுடையது என்று கூறினார்

    கரகோஷம் விண்ணை பிளந்தது.

    #படித்ததில்_பிடித்ததால்_பகிர்ந்துள்ளேன்

  9. உக்ரைனில் இருந்து திரும்பி வந்த டமில் மாணவன் நான்,

    டமிலன் என்ற ஒரே காரணத்தால் எனக்கு ப்ளைட்டில் ஜன்னல் சீட் ஒதுக்காதது கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. எனக்கு கொடுத்த சாப்பாட்டில் உப்பு சற்று கம்மியாகவும், காரம் தூக்கலாகவும் இருந்தது என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாகியது.

    மேலும் பைலட்கள் இருவரும் தங்களுக்குள் ஹிந்தியில் பேசிக்கொண்டது எங்களை மாதிரி ஹிந்தி தெரியாத தமிலர்கள் மனதை மிகவும் புண்படுத்தியது.

    எங்கள் உணர்வுகளை மதித்து எங்களுக்கு மீனம்பாக்கத்தில் இருந்து வீட்டுக்கு செல்ல தாயுள்ளத்தோடு ஷேர் ஆட்டோ ஏற்பாடு செய்து கொடுத்த உங்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி.

  10. உக்ரைன் தமிழரை மீட்க 4 பேர் கொண்ட குழுவினை அனுப்புவதாக தமிழக முதல்வர் அறிவித்திருக்கின்றார் இது எந்த அளவு கைகொடுக்கும்

  11. இந்திய மாகாண தமிழகத்தின் முதல்வரும் அங்கு ஆளும் கட்சியின் தலைவருமான மு.க ஸ்டாலின் அவர்கள் உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்களை மீட்க பேராவல் கொண்டிருப்பது நல்ல விஷயம், ஒரு மாகாண முதல்வராக அவர்களை மீட்கும் கடமை தனக்கு இருப்பதாக அவர் உணர்கின்றார் அது வாழ்த்துகுரியது

    ஆனால் அந்த கடமையினை எவ்வழியில் செய்யமுடியும் என்பதில்தான் அவர் சறுக்குகின்றார், இந்த விவகாரத்தை இந்தியாவின் மத்திய அரசுதான் செய்யமுடியுமே தவிர மாகாண அரசு தனியாக செய்யமுடியாத்

    காரணம் இந்திய தமிழக மாணவர்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், இந்திய குடியுரிமை அனுமதியின் பெயரில், இந்தியாவுக்கும் உக்ரைனுக்கும் உள்ள கல்வி ஒப்பந்த அடிப்படையில் சென்றவர்கள்

    உக்ரைன் அரசு தமிழக அரசுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை அப்படி செய்யவும் முடியாது, காரணம் இந்திய வெளியுறவு துறையில் மாகாண அரசு தலையிட முடியாது

    இப்பொழுது உக்ரைன் தமிழரை மீட்க 4 பேர் கொண்ட குழுவினை அனுப்புவதாக தமிழக முதல்வர் அறிவித்திருக்கின்றார் இது எந்த அளவு கைகொடுக்கும் என்றால் சுத்தமாக கொடுக்காது

    இந்த 4 பேரும் தனியாகவோ அல்லது முன்பு திமுக எம்பி கோப்பால்சாமி கள்ளதோணியில் இலங்கைக்கு சென்றதை போலவோ செல்லமுடியாது அவர்கள் மத்திய அரசின் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும், மத்திய அரசு சில நிபந்தனைகள் பேரில் பாதுகாப்பு காரணங்களை சொல்லி மிகுந்த கட்டுபாட்டோடுதான் அனுமதிக்கும்

    அதுவும் இவர்கள் உக்ரைனுக்குள் செல்லமுடியாது போலந்து ஹங்கேரி ரோமெனியா போன்ற நாடுகளுக்குள் செல்லலாம் ஆனால் அந்த அரசுகளுக்கும் இந்திய அரசுக்கும் பேச்சுவார்த்தை நடக்கும்பொழுது இவர்கள் கூடுதல் குழப்பமாக தெரிவார்கள்

    இவர்களால் நிச்சயம் ஆக கூடியது ஒன்றுமில்லை

    இவர்கள் சென்று ஒரு ஹோட்டலில் தங்கலாம் இல்லை அலுவலகம் திறந்து “இந்திய தமிழர்களுக்கு உதவுமிடம்” என கருணாநிதி ஸ்டாலின் படத்தோடு அமரலாம்

    அப்படி அமர்ந்து இவர்களிடம் தமிழக மாணவர்கள் வந்தாலும் சில செல்பி எடுக்கலாமே தவிர அந்நாட்டு அரசிடம் விமான நிலையத்திடம் பேசும் சக்தியோ அதிகாரமோ இவர்களுக்கு இல்லை அதை இந்திய அரசு பிரநிதிகள்தான் செய்ய வேண்டும்

    அவர்களிடம் தமிழர்களை மட்டும் முதலில் அனுப்பு என இவர்கள் மல்லுகட்ட முடியாது, மத்திய அரசு குழு தனகுட்பட்ட விதிகள் படி மீட்பினை செய்யும் அவர்களுக்கு எல்லோரும் இந்தியர்களே

    அவர்கள் அனுமதியின்றி தனி விமானத்தில் இவர்கள் தமிழகத்துக்கு மாணவர்களை அனுப்பவும் முடியாது அது விமான பறத்தல், குடிநுழைவு இலாகா இதர சோதனைகள் என பலசிக்கலான விஷயங்கள் உள்ளடக்கிய விவகாரம், இரு நாடுகள் சம்பந்தபட்ட ராஜதந்திர விஷயம்

    இதை தாண்டி ஐ.நா மூலம் செல்லலாம் என்றாலும் இந்திய மாகாண அரசு செல்லமுடியாது, காரணம் தமிழகம் ஐநா அங்கத்துவ நாடு அல்ல‌

    இந்தியாவில் ஏகபட்ட மாநிலங்கள் உண்டு, ஒவ்வொரு மாநில பிரதிநிதிகளும் இப்படி கிளம்பினால் சம்பந்தபட்ட நாடுகள் மிகுந்த கோபமும் குழப்பமும் அடையும் அதன் பின் “இந்திய அரசியல்வாதி அகதிகள் முகாம்” என ஒன்றை திறக்குளவு நிலமை மோசமாகும்

    இதனால் உறுதியாக சொல்லலாம் இதெல்லாம் தமிழக மக்களிடம் நாங்களும் ஏதோ செய்கின்றோம் என காட்ட உதவுமே தவிர மற்றபடி ஏதும் விஷயமில்லை

    இந்தியாவின் சட்ட அமைப்புபடி வெளியுறவு கொள்கையில் விமான போக்குவரத்தில் மாகாண அரசு தலையிட முடியாது அப்படியே ராணுவ விவகாரம் போன்றவற்றிலும் தலையிட முடியாது

    உக்ரைனில் அப்படி செய்யலாம் இப்படி செய்யலாம் ரஷ்யாவுக்குள் சென்று தமிழர்களை மீட்கலாம் என்பதெல்லாம் இந்திய ராணுவத்துக்கு சீனாவினை இப்படி அடியுங்கள் பாகிஸ்தானை இப்படி குத்துங்கள் என ஆலோசனை சொல்வது போலாகும், ஒரு வகையில் இது பெரும் காமெடியான விஷயமும் கூட‌

    இந்திய அரசு பல மாதங்களாக உக்ரைனை விட்டு வெளியேற இந்திய மாணவர்களை வலியுறுத்தியது, இப்பொழுதும் பலத்த சிரமத்திடையே தன் குடிமக்களை மீட்டு வருகின்றது, அந்த பரபரப்பான நேரத்தில் தமிழக அரசின் அதிகாரமற்ற செயல்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்துமே தவிர பலன் தராது

    இந்த நேரத்தில் நாம் ஒரு காட்சியினை நினைத்து பார்க்கலாம்

    1983ல் கொழும்பு நகரம் இந்திய தமிழகத்தில் இருந்து வெறும் 200 கிமீட்டரில் இருக்கும் அந்நகரில் கலவரம் மூண்டு 10 ஆயிரம் தமிழர்கள் கொல்லபட்டபொழுது திமுக தன் எம்பிக்களை அனுப்பவில்லை மாறாக இந்திராகாந்திதான் தன் அமைச்சர் நரசிம்மராவினை அனுப்பினார் அதன் பின்பே அமைதி திரும்பிற்று

    1987ல் அமைதிபடை செல்லும் பொழுதும் அங்கு என்ன சிக்கல் என சிங்கள அரசுடன் பேச திமுக எம்பிக்கள் அனுப்பபடவில்லை, தமிழக பத்திரிகையாளர் சோ ராமசாமிதான் சிங்கள தலைவன் ஜெயவர்த்தனேவினை சந்தித்து உண்மை நிலவரத்தை சொன்னார், அங்கே ஜெயவர்த்தனேவினை பகிரங்கமாக கண்டித்தும் பேசினார்

    1988களில் அன்றைய முதல்வராக கருணாநிதி இருந்தபொழுதும் இலங்கை தமிழர்களுக்காக தன் எம்பிக்களை அனுப்பவில்லை

    பின்னாளில் 2006 முதல் 2009 வரை உக்ரைனை விட கொடிய யுத்தமான இறுதி யுத்தத்தில் தமிழர்கள் கொல்லபட்டபொழுதும் அவர்களை மீட்க தமிழக எம்பிக்கள் அனுப்படவில்லை மாறாக எல்லாம் முடிந்த பின் ராஜபக்சேயுடன் பச்சரிசி பாயாசம் உண்டு வந்தனர்

    கடைசி வரை பிரபாகரனையோ ஈழ தமிழர்களையோ சந்திக்க திமுக எம்பிக்கள் கடைசி வரை முயற்சி எடுக்கவில்லை , அப்படி ஒரு சமரசம் பேசியிருந்தால் பல்லாயிரம் மக்கள் கொல்லபட்டிருக்கமாட்டார்கள்

    அதையெல்லாம் செய்யாமல் தன் காலடியில் தமிழர்கள் செத்தபொழுது கண்டுகொள்ளாமல் இப்பொழுது உக்ரைனுக்கு ஓடிவதெல்லாம் காலம் சிரிக்கும் விளையாட்டு

    நல்ல வேளையாக இந்த 4 எம்பிக்களும் அனுமதி பெற்று உக்ரைன் பக்கம் செல்வார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது என்றாலும் ஒரு கண்காணிப்பு வேண்டும்

    காரணம் முன்பு திமுக எம்பி கோப்பால்சாமி விசா இன்றி திருட்டுதனமாக கள்ளதோணியில் ஏறி இலங்கைக்கு சென்று இந்திய படைகளை எதிர்த்து சுட்டு கொன்ற பிரபாகரனை சந்தித்த காலமெல்லாம் உண்டு

    இந்த தேசதுரோகத்துக்கு பின்னும் அவர் பதவி பறிக்கபடவில்லை இன்றும் அவர் எம்பியாகவே இருக்கின்றார்

    இதனால் மத்திய அரசு இந்திய கடலோரங்களில் ஒரு சிறப்பு கவனத்தை செலுத்துவது நல்லது, கோப்பால்சாமி வேறு சத்தமில்லாமல் இருப்பது இன்னும் கவனிக்கதக்கது

    எனினும் தமிழக முதல்வரின் கடமை உணர்வும் தமிழக மக்களை காக்க வேண்டும் என்ற அக்கறையும் வாழ்த்துகுரியது

    இதே அக்கறை 1980களில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு இருந்திருந்தால் ஏகபட்ட தமிழர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் காக்கபட்டிருப்பார்கள்

    திருபெரும்புதூரிலும் 15 தமிழர்கள் செத்திருகமாட்டார்கள் அவர்கள் நடுவில் ராஜிவ் காந்தியும் செத்திருக்கமாட்டார், 2009ல் ஏகபட்ட தமிழர்கள் இலங்கையிலும் செத்திருக்கமாட்டார்கள்

    ஆக எச். ராசா போன்றவர்கள் “ஸ்டாலின் இஸ் டேஞ்சரஸ் தென் கருணாநிதி” என சொல்வதை “ஸ்டாலின் இஸ் பெட்டர் தென் கருணாநிதி” என மாற்றிகொள்ள வேண்டும், அதுதான் சரியானது

  12. தவறை தட்டிக்கேட்ட இந்தியா, ஆடிப்போன அமெரிக்கா.. அடக்கி வாசிக்கும் ரஷ்யா!

    உக்ரைன் போரில் அமெரிக்காவின் நிலையை ஆதரிக்காததால் இந்தியாவின் மீது தடையை ஏற்படுத்துவோம் என்று அமெரிக்கா சொல்வதாக இங்குள்ள மீடியாக்கள் ஒரு பயத்தை கட்டமைக்கிறது. அதன் பின்னால் அமெரிக்காவின் டூல் கிட் மட்ட்மல்ல அதன் அழுத்தமும் இருக்கிறது. ஆனால் அது முழுதும் உணமையல்ல என்பதைவிட உண்மை தெரிந்தே இந்திய மீடியாக்கள் செய்யும் அபத்தங்களை நாம் அறிவோம்.

    இந்தியாவின் நிலைப்பாடு என்பது நடுநிலையானது என்பதைவிட அமெரிக்காவிற்கு எதிரானது என்றே சொல்லலாம். ஏனென்றால் இந்தியா, அமெரிக்காவிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கவில்லை. அதற்கு மாறாக அமெரிக்க, ரஷ்யாவின் நிலையை பட்டவர்த்தனமாக எதிர்த்ததாக சொல்லப்படுகிறது.

    ஆம், அமெரிக்கா ரஷ்யாவை எதிர்த்து வாக்களிக்க வற்புறுத்தியது மட்டுமல்ல, செய்யாவிட்டால் உங்கள் மீதும் பொருளாதாத தடையை போடும் நிலை ஏற்படும் என்று இந்தியாவிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது. ஆனால் இந்தியாவோ, ரஷ்யா எதிர்பார்ப்பது நேட்டோவினை அமெரிக்கா விஸ்தரிக்காது என்ற உறுதிமொழியைத்தானே? அதுவும் நேட்டோவும் அமெரிக்காவும் கடந்த காலத்தில் கொடுத்த உறுதிமொழியை தொடரத்தானே கேட்கிறது. ஆனால் அதற்கு மாறாக நீங்கள் எப்படி உக்ரைனை நேட்டோவில் சேர்க்க முயற்சியில் ரகசியமாக இறங்கியது மட்டுமல்ல, ரஷ்யா போர் தொடுத்தால் உக்ரைனுக்கு ஆதரவாக போர் தொடுப்போம் என்று எப்படி கூறலாம்? என்று கேட்டது. அது மட்டுமல்ல, அதன் பின்னால் நடந்த இரகசிய காய் நகர்த்தலை புட்டு, புட்டு வைக்க, அமெரிக்கா வாயடைத்துப்போனது. அது மட்டுமில்லாமல் அதற்கு மேல் ஒரு படி போய், ரஷ்யாவின் நிலையில் நாங்கள் இருந்தால், எங்கள் முடிவும் இப்படித்தான் இருக்கும், உங்கள் முடிவும் அப்படித்தான் இருக்கும் என்று மூஞ்சியில் அடித்து அதன் தவறை சுட்டிக்காட்டியது.

    இந்தியா, கடந்த காலத்தைப்போல வளவளா என்று ஒரு காரணத்தை சொல்லும், அதை பொருளாதாரத்தடை என்று கூறி அமுக்கிவிடலாம் என்று நினைத்த அமெரிக்காவிற்கு அதன் ஆணித்தரமான நிலைப்பாட்டால் பதில் சொல்ல வழியில்லாததாலும், டொனால்ட் ட்ரம்ப் இருந்த போது இருந்த நெருக்கம், பைடனிடம் இல்லாததாலும், இதற்கு மேல் ஒரு அழுத்தத்தை இந்தியா மீது கொடுத்தால் அது ரஷ்யாவை நோக்கி போய்விடும் என்பது அதற்கு புரிய அதிக நேரம் தேவையில்லை. அப்படி ரஷ்ய-இந்திய-சீனா என்று ஒரு புதிய அணியை உருவாக்கக்கூட வாய்ப்பை நாமே ஏற்படுத்தி தந்ததாகிவிடும் என்று இந்தியாவை தன் பக்க இழுக்கும் முயற்சியை அமெரிக்கா பாதியில் கைவிட்டது.

    அதே வேளையில் சீனா அப்படி ஒரு வெளிப்படையான நடுநிலையை எடுக்காதபோது, இந்தியாவின் நிலையை அறிந்த புடின் அகமகிழ்ந்து போனதாக சொல்கிறார்கள். அதன் காரணமாக, இந்தியாவின் அழுத்தத்தினால், போரை முழு வீச்சில் தொடராமல் அதன் வேகத்தை குறைத்தது மட்டுமல்ல, இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க போரை தற்காலிகமாக நிறுத்தி இந்திய மாணவர்கள் வெளியேற அனுமதித்தது.

    அதற்கு ஆதாரம் என்ன?

    ரஷ்யாவிற்கு பலமான படைகளுக்கு அருகில் இருக்கும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற, ஒரு வாரம் என்பது மிக அதிகம். ஆனால் 9 நாட்கள் ஆகியும் அது தன் விமானப்படையை 10% கூட பயன்படுத்தவில்லை. அதன் ஐந்தாம் தலைமுறை பேர் விமானங்கள் இருக்க, மூன்றாம் தலைமுறை விமானங்களை மட்டுமே பயன்படுத்துகிறது. அது மட்டுமல்ல, உக்ரைனில் எல்லா பகுதியையும், அல்லது பொது மக்களுக்கு உயிர் சேதம் நடக்கும்படி போரை தீவிரமாக செய்யவில்லை. மாறாக அதன் தரைப்படை கூட கீவ் நகரை நோக்கி மிக மெதுவாக நகர்த்துகிறது. அதன் தாக்குதல்கள் மிக ஆமை வேகத்தில்தான் நடக்கிறது. அதன் ஆயுத பலத்திற்கு இந்த நேரத்தில் உக்ரைனின் விமானப்படை சின்னாபின்னம் ஆகியிருக்க வேண்டும். ஆனால் அதையும் செய்ய வில்லை என்பதை அமெரிக்காவும், உலக நாடுகளும் ஆச்சர்யமாக பார்க்கிறது.. இன்னும் சொல்லப்போனால் நேட்டோ நாடுகள் குழம்பிப்போய்விட்டது என்பதை அமெரிக்க, நேட்டோ நாடுகளின் மீடியாவிலிருந்து நாம் அறியலாம்.

    இந்தியா அமெரிக்காவின் தவறை மட்டும் தட்டி கேட்கவில்லை, ரஷ்யாவின் தவறையும் தடுக்கிறது என்பதை உலகம் அறியாமலில்லை. அது மட்டுமல்ல, முதலில் இந்திய மாணவர்களை அமெரிக்காவின் ஆலோசனைக்கு ஏற்ப கேடயமாக பயன்படுத்த துவங்கிய உக்ரைன், இந்தியாவின் கடுமையான எச்சரிக்கைக்கு பயந்து பின் வாங்கியது. அதன் காரணமாக அமெரிக்காவால் ஏமாந்த உக்ரைன் இப்போது இந்தியாதான் இந்த போரை நிறுத்தி சமாதானத்திற்கான ஒரு தொடக்கத்தை கொடுக்க முடியும் என்று முழுதாக நம்புகிறது. இறைஞ்சுகிறது.

    கூடுதல் செய்தி, இந்தியா தான் செய்ய முடியாத நடுநிலையை ஆணித்தரமாக முன் வைப்பதால பிரெஞ்ச், ஜெர்மனி, சீனா இந்தியாவிற்கு ஆதரவு தருகிறது, இது பெருகுகிறது. இதனால் அமெரிக்காவிற்கு அழுத்தம் அதிகரித்துள்ளதாம்!

    இந்தியா அமெரிக்காவை மட்டுமல்ல, ரஷ்யாவையும் கட்டுப்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்தியா கடந்த காலம்போல ஒன்றும் ஆமாம் சாமி போடும் நாடல்ல, தவறை தட்டிக்கேட்கும் தலைவன்!

  13. “#மோடி”
    #ஒரு_சாதாரண_மந்திரி அல்ல…..!

    அவர் ஒரு
    #கண்டிப்பான_பள்ளிக்கூட_வாத்தியார்..!

    வாங்கிய விலையில் பெட்ரோல் விற்க வேண்டும் என்று கேள்வி கேட்கும் நீங்கள் …

    1. பதினான்கு ரூபாய்க்கு கோதுமை வாங்கி மக்களுக்கு இரண்டு ரூபாய்க்கு ஏன் குடுக்கிறது அரசு என்று கேட்கவில்லையே?

    2. ரூபாய் 50 க்கு கெரஸின் வாங்கி ரூபாய் 15 க்கு ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?

    3. ரூபாய் 49 க்கு சீனி வாங்கி ரூபாய் 26 க்கு ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?

    4. ரூபாய் 25 க்கு அரிசி வாங்கி இலவசமாக ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?

    5. ஆறு கோடி கழிப்பறைகள் இலவசமாக ஏன் கட்டியது என்று கேட்கவில்லையே?

    6. மூன்று கோடி ஏழைகளுக்கு இலவச கேஸ் கனக்ஷன் ஏன் குடுத்தது என்று கேட்கவில்லையே?

    7. இந்தியா சீனா எல்லையில் போர்மேகம் சூழ்ந்த சூழ்நிலையில் களத்திற்க்கே சென்று நமது போர் வீரர்களை உற்சாகப்படுத்தியது இதுவரை எந்த பிரதமவராவது உண்டா.??

    ஜெயலலிதா அனைவருக்கும் அம்மா ஆகமுடியும்;
    சோனியா தேசத்திற்கே மருமகள் ஆக முடியும் ;
    மாயாவதி சகோதரி ஆக முடியும்;

    நேரு மாமா ஆக முடியும்
    காந்தி தேசப்பிதா ஆக முடியும்.
    ஆனால்….
    மோடி மட்டும் தேசத்தின் மகன் ஆகக்கூடாது…

    இவ்வளவு வெறுப்பு ஏன்?

    உங்கள் கோவம் பெட்ரோல் விலை மீது இல்லை.

    உங்களால் முன்னைப் போல பொய் பில்களை காட்டி வரி ஏய்ப்பு செய்ய முடியவில்லை.

    ஜிஎஸ்டி யில் முறையாக கணக்கு காண்பித்து வியாபாரம் செய்ய மனசே வரமாட்டேனென்கிறது.

    இன்னமும் “அவன் திருடுகிறான்,
    இவன் திருடுகிறான் ” என்று சொல்லிச் சொல்லி *உங்களை சரி செய்து கொள்ள மறுக்கிறீர்கள்….

    உங்களால் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை.

    இலட்சக்கணக்கான போலி குடும்ப கார்டுகள் ஒழிக்கப்பட்டு அரசு மானியம் இப்போது நேரடியாக அவரவரது வங்கி கணக்கில். இதனால் மட்டும் *ஒரு லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு (அரசுக்கு) வருமானம்.*

    நான்கு ஆண்டுகளுக்கு முன் 8 மணி நேர மின்வெட்டு தமிழகமெங்கும்…
    அசுர கதியில் உற்பத்தி , தேசத்தின் பிரதான கிரிட்டுகளோடு மின் இணைப்புகளை பலப்படுத்தியதில்

    *இன்று ஜீரோ மின்வெட்டு.*

    60 ஆண்டாக மின்சாரம் செல்லாத 18,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு.

    ஐந்து இலட்ச ரூபாய்க்கு இலவசமாய் மருத்துவ காப்பீடு…. ஒவ்வொரு சாமானியனுக்கும்.

    தைரியமாக இனி எந்த மருத்துவமும் பார்க்கலாம்.
    ஜெனிரிக் மருந்துகள், ஸ்டென்ட், மற்றும் மருத்துவ சம்பந்தப்பட்ட விலை வீழ்ச்சி.

    தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஊரகசாலை 73% வளர்ச்சி.

    ரயில்வே நிர்வாகம் சீரமைப்பு. முதலீடு அதிகரிப்பு.

    நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தல். அண்டை நட்பு நாடுகளுடன், வளர்ந்த நாடுகளுடன் மேம்பாட்ட உறவுக.

    விவசாயிகளூக்கு தட்டுபாடில்லா உரம், இஸ்ரேல் தொழில் நுட்பம், இடுபொருள் சிலவிற்கு மேல் 150% கொள்முதல் விலை. E-commerce மின் வர்த்தகம்.

    இருபத்து நாலு மணி நேரமும் இயங்கும் பிரதமர். *சொத்து சேர்க்க அவருக்கு குடும்பமும் இல்லை.*

    காக்கா பிடிக்கும் , சலாம் போடும் ஏன்… துறை அறிவே இல்லாத பொழுதும் “ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள் ” என்ற பயத்தில் அரை வேக்காடுகளை கூட மத்திய அமைச்சராக ஆக்கும் அசிங்கம் மருந்துக்கும் இல்லை..

    உங்கள் கொள்ளை நின்றுவிட்டது அல்லது தடுமாறுகிறது.

    அந்த கோபம் இப்போது மோடி மீது…
    மற்றவர்கள் போல் குடும்பத்திற்காக கொள்ளையடித்து சொத்து சேர்த்தாரா. அவர்கள் குடும்பத்தினர் இன்றும் ஆட்டோவில் பயணம் செய்து வருகின்றனர்.
    மோடி ஒரு நாளுக்கு16 முதல்18 மணி நேரம் நாட்டுக்காக நாட்டு மக்கள் வளர்ச்சிக்காக உழைக்கிறார்.

    இன்னுமொன்று…

    அப்படியே பெட்ரோல் விலையை நீங்கள் சொல்வதையும் தாண்டி ஐம்பது ரூபாய்க்கே கொடுத்தாலும் வாழ்த்தி விடவா போகிறீர்கள்…?
    வாக்குச்சீட்டு போலி என்றோ ,
    வாத்து முட்டைகள் கறுப்பு என்றோ கூவத்தானே போகிறீர்கள்…?

    முதலில் பார்வையை *முடிந்தால்* சரி செய்யுங்கள்.

    தப்புத், தப்பாகவே எதையும் பார்த்து விட்டால் , நூறு சதம் சரியானது கூட தப்பித்து விடும் பார்வையிலிருந்து…..

    உங்களது ஆவேச பேச்சுக்கும் ,
    ஜாதிய இனமான வீச்சுக்கும் உணர்ச்சி வசப்பட்டு வீழ்ந்துவிடும் ” பச்சைத் ” தமிழரல்ல இனி இவர்கள்…

    என்ன நடந்திருக்கிறது?
    எப்படி நடந்திருக்கிறது ?
    என்று மாற்றங்களை கண்கூடாக பார்த்து , உணர்ந்து , புரிந்து கொண்ட பிறகே ஓட்டுப் போடும் ” மெச்சும் ” தமிழர்கள் …

    உங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்றால் மாறுங்கள்
    உங்கள் வருங்கால வாழ்க்கை நன்றாக இருக்கும்.

    ஆம்

    “மோடி” #மந்திரி_அல்ல…..!

    அவர் ஒரு
    #கண்டிப்பான_பள்ளிக்கூட_வாத்தியார்…..!

    நன்றி…

  14. இந்த நடுநிலை இந்துக்கள் அதாவது நானும் இந்துதான் ஆனால் இந்துகொள்கையினையோ அதன் அரசியலையோ ஆதரிக்கா “மனிதநேய” இந்துநான் என சொல்லிகொண்டிருக்கும் மனிதநேய கொள்கை கொண்டவர்கள், ஒரு மனிதன் இங்கு அவன் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமை இல்லையா என சீறும் மனித உரிமை சீற்றங்களுக்கெல்லாம் உங்கள் பதில் என்ன என சிலர் கேட்பதால் சொல்கின்றோம்

    முன்பு சீனாவில் செங்கிஸ்கானின் வழிவந்த குப்ளேகான் அரசாண்டு கொண்டிருந்தான், இவன் காலத்தில்தான் மார்க்கோ போலா கோஷ்டி சீனா இந்தியா பக்கமெல்லாம் சுற்றி, சீனாவில் இருந்து வெடிபொருளையும் காகிதத்தையும் இன்னும் திசைகாட்டும் கருவியெல்லாம் ஆர்வமாக வாங்கி செல்ல உறவுகளை வலுத்தன‌

    அந்த இந்தியாவில் ஆப்கானிய ஆட்சி இல்லை, இங்கே பாண்டிய சோழ மன்னர் முதல் வடக்கே இந்துமன்னர்கள் வலுவாக இருந்ததால் ஐரோப்பியர் இந்த பக்கமே வரவில்லை

    மீறி வந்தவர்கள் பட்டுசாலை வழியாக வந்தார்கள் அல்லது செங்கடல் வழியாக வந்தார்கள் அவர்களும் இந்தியா என்றால் அஞ்சினார்கள் அரசுகள் அப்படி இருந்தன‌

    பட்டுசாலை சீனாவுக்கு நிலம் வழியாக சென்றதால் மார்க்கோ போலோ கோஷ்டி அச்சாலைவழியாக சென்று அங்கிருந்து கப்பலில் இந்தியா பக்கம் வந்து இன்னும் சுற்றிய காலம் அவை

    அப்பொழுது மெல்ல ஐரோப்பிய கும்பலுக்கு சீனாவில் கிறிஸ்தவம் வளர்க்கும் ஆசை வந்தது, அக்காலங்களில் மங்கோலிய செங்கிஸ்கான் அரசு ஐரோப்பா வரை பரவியிருந்தது போலந்து வரை அவர்கள் நாடுதான் ஆனால் பனி பாலைவனம் என ஒதுக்கி வைத்திருந்தார்கள் வலுவான‌ மங்கோலியர்கள்

    அந்த மங்கோலியரிடையே மெல்ல தங்கள் சுவிஷேசத்தை மேற்கு கோஷ்டிகள் தொடங்க மன்னனின் சபை அதுபற்றி கூடி விவாதித்து பின் அந்த ஐரோப்பிய கோஷ்டிகளை அழைத்து சொன்னது

    “உங்கள் மதம் நல்லமதமா, சரியானதா என்பது எங்கள் பிரச்சினை அல்ல. ஆனால் உங்கள் மதத்தை இங்கு அனுமதித்தால் எம்மக்கள் மனநிலை உங்கள் மதம் சொல்லும் இடம், கலாச்சாரத்தையே சுற்றும். உங்கள் மதத்தை எம்மவர் பின்பற்றினால் முழுக்க தங்கள் நாட்டை மறப்பார்கள், வரலாற்றை மறப்பார்கள், இதுதான் சொர்க்கம் செல்ல வழி என ஒரு மாயையில் சுழலுவார்கள்

    அந்த மாயையில் உங்கள் மொழி, உங்கள் உடை, உங்கள் வரலாறு என்றுதான் படித்து உங்களுக்கு அடிமையார்களே தவிர இந்நாட்டின் பற்றோ கலாச்சாரமோ வரலாறோ இதை முன்னேற்றும் முறையோ அவர்களுக்கு வராது

    உங்கள் மதத்தால் எல்லாம் முடியுமென்றால் சீனாவின் செல்வத்தை உங்கள் நாட்டிலே உங்கள் தெய்வம் தரலாமே, ஏன் இங்கு வந்து வரிசையில் நிற்கின்றீர்கள்?

    எங்களுக்கும் மதம் உண்டு, அதிலும் கொள்கைகள் உண்டு. எங்கள் மதம் எங்கள் மொழி, எங்கள் வரலாறு, எங்கள் ஆன்மீகம் என எங்களைத்தான் சுற்றிவரும் இதனால் எம் கலாச்சாரமும் மக்களின் மண் மீதான அபிமானமும் காலம் காலமாக தொடரும், அதில்தான் இந்த மண் வலுவாகும்

    மாறாக உங்களை அனுமதித்தால் உங்கள் மதத்தால் ஒரு அடிமைகூட்டத்தை உருவாக்கி அவர்களை தங்கள் வரலாறும் பெருமையும் தெரியாதவர்களாக்கி நீங்கள் கைகாட்டும் ஏதோ ஒரு நாட்டின் ஏதோ ஒருவரலாற்றை படிக்க வைத்து குழப்பி திசைதெரியா அறிவில்லா சுய வரலாறு தெரியா மடக்கூட்டம் ஆக்கிவிடுவீர்கள்

    இந்த பரந்த மங்கோலிய வம்ச பெருமையோ சீனாவின் வரலாறோ வருங்கால தலைமுறைக்கு தெரியாமல் உங்களுக்கு தலையாட்டும் சுய அறிவற்ற கூட்டத்தை உருவாக்குவீர்கள்

    இதனால் உங்களுக்கு தடை சொல்கின்றோம், எம்மக்கள் எம் வரலாற்றயும் கலாச்சாரத்தையும் காக்கத்தான் ஆட்சி செய்கின்றோம் அதில் உங்களை அனுமதிக்கமுடியாததும் எம் கடமையாகின்றது”

    இதைத்தான் பின்னால் வந்த சீனர்கள் செய்தார்கள்., மாவோ அதைத்தான் செய்தான் இன்று வலுவான சீனா உலகின் மிகபிரமாண்ட நாடாக வளர்ந்து நிற்கின்றது

    ஒருவேளை அன்று குப்ளேகான் ஐரோப்பியரை அனுமதித்திருந்தால் இன்று ஹாங்காங் எனும் சிறிய தீவு சீனாவுக்கு கொடுக்கும் நெருக்கடி போல் சீனம் முழுக்க நெருக்கடி பெருகியிருக்கும் சீனம் இன்றைய வலுவான சீனாவாய் இருந்திராது

    மதமாற்றம் என்பது ஏன் தேசிய அபாயம் என்கின்றார்கள் என்றால், சிறுபான்மையினரின் அதீத கொந்தளிப்பு ஏன் ஆபத்து என்றால் அதற்கு பதில் குப்ளேகான் வார்த்தையிலே இருக்கின்றது

    மதம் என்பது வெறும் ஆன்மீகம் அல்ல, அது நாட்டின் அரசியலை ஆட்டிவைக்கும் விவகாரம் தேசாபிமானத்தில் வேட்டுவைக்கும் விவகாரம் என்பதாலே ஓவ்வொரு நாடும் அந்த விஷயத்தில் மிக கவனமாக இருக்கின்றன, மதசார்பற்ற இந்தியாவில் அந்த கவனமில்லை அதனால் பல குழப்பங்கள் வரத்தான் செய்யும்

  15. என்னமோ வடக்குல மத்த மாநிலங்களில் பாலாறு தேனாறு ஓடுராமாதிரியும் உபி ல மட்டும் எல்லா தப்பும் நடக்குறாமாதிரியும் வன்மத்தை பரப்ப முக்கிய காரணம். உத்திரபிரதேசத்திற்கும் இந்து மதத்திற்கும் உள்ள முக்கியமான தொடர்புதான்.
    #காசி_விஸ்வநாதர்_ஆலயம்
    #அயோத்தி– ராம ஜென்மபூமி
    #மதுரா– கிருஷ்ணர் ஜென்மபூமி
    #பிருந்தாவணம்– கிருஷ்ணர் வளர்ந்த இடம்
    #ப்ரயாகை–கங்கா, யமுனா, சரஸ்வதி த்ரிவேணிசங்கமம்
    #கோரக்பூர்– மிழ்நாட்டில் மங்களம் பேட்டையில் ஜீவசமாதி அடைந்த கோரக்கர் சித்தர் பிறந்த இடம்.
    #கும்பமேளா
    இன்னும் பல விஷயங்கள் இந்துமதத்துக்கு சம்பந்தமா இருக்கு.
    அமைதிமார்கத்துக்கு — மெக்கா
    அதுங்க பங்காளிக்கு– ஜெருசலேம்
    அதுபோல இந்துக்களுக்கு முக்கியமான இடம் காசி… ஏற்கனவே 2கே கிட்ஸ் கோவிலுக்கு போறது கம்மி இதுல எங்க இருந்து புனித யாத்திரை யா வடக்கே போறது. அய்யய்யோ உபி யா னு அலறுவாங்க அந்த அளவுக்கு இங்க வெறுப்பு பிரச்சாரம் நடத்தி இருக்காங்க.
    இதுக்கு பின்னாடி நிச்சயமாக இந்து மதம் அழியனும்னு நினைக்குற மிஷனரி குல்லாஸ் திக சிறுத்தைங்கனு கூட்டு சேர்ந்து செய்யறாங்க போல…

  16. .*50% கிருத்துவர்கள் கொண்ட மணிப்பூரில் பாஜகவை தேர்வு செய்த கிருத்துவர்கள்….*

    *30% கிருத்துவர்கள் கொண்ட கோவாவில் பாஜகவை ஆட்சியில் அமர வைத்து அழகு பார்க்கும் கிருத்துவர்கள்..*..

    *உத்திரப்பிரதேசத்த்தில் தலித்கள்*
    *முஸ்லிம்கள்* *பெரும்பான்மையாக உள்ள எல்லா இடங்களிலும் பாஜக வெற்றி…*.

    எங்கே *பாஜக மதவாத கட்சி…. *

    ரூ *200 கூலிக்கு…
    ஒரே ஒரு வித்தியாசம்
    அங்கே, தமிழ்நாடு போல்
    வெட்கம் இல்லாமல்
    *வேசித்தனம்* பண்ணும் ஊடகங்கள் இல்லை.

  17. மதமென பிரிந்தது போதும்…

    அபதுல்காலம் னு ஒரு மாணவன் அவன் அம்மா ஒரு ஹிந்து அவன் அப்பா முஸ்லீம்.

    ரைட்டு மேட்டர் என்னான்ன….

    இவுக ஹிந்துவாக காதலிச்சாங்க கல்யாணம் ஆனதும் முஸ்லீமா மாறிட்டாங்க… இதுல என்ன மனிதநேயம் அன்பு எல்லாம் இருக்கு சுயநலம் தானே இருக்கு.

    இவனோட அப்பன் ஹிந்து பொண்ணை காதலிச்சி அவளை மதம் மாற்றினானே காதலிக்கும் போது ஹிந்து பொண்ணா இருக்கனும் பொண்டாட்டி யா குடும்பம் நடத்த மதம் மாறினாத்தான் எல்லாம் நடக்குமா… இதுல எங்க மனிதநேயம் இருக்கு பக்கா மதமாற்றம் ( லவ்ஜிகாத் தானே இதுவும்).

    அப்பா அம்மா சொல்லி கொடுக்க முடியாத மனிதநேயத்தை இந்த பையன் வாழ்க்கைல மடக்கு ஊதி முன்களப்ஸ் என்ன கூந்தலுக்கு பேட்டி எடுத்தான் அவன் தனியா கூப்பிட்டு சொல்லி கொடுத்திருக்கலாமே. மனித நேயத்தை.

    இதுல முக்கியமான விஷயம் மொத்தத்தில் இது ஒரு திட்டமிட்ட நாடகம் தான். இதுக்கு ஒரு தத்தி சுயசிந்தனை இல்லாத பகுத்தறிவு இல்லாத முதல்வர் வீடு கொடுத்தாராம்… அடேய் அந்த வீடு 2021 ம் ஆண்டே மத்தியரசின் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டது….

    நடுநிலை திகூ யானுங்களா செத்துருங்கடா…

  18. உக்ரைன் ரஷ்ய மோதல் என வெளியில் சொல்லபட்டாலும் உண்மையில் அது ரஷ்யாவுக்கும் சுமார் 40 எதிரிநாடுகள்க்கும் நடக்கும் மோதல் என்பதுதான் நிஜம்

    உக்ரைனுக்கு அமெரிக்கா முதல் பிரிட்டன் வரை ஆயுதம் அள்ளி கொடுக்கின்றது, பெரும் நிதி ஜப்பான் முதல் அமெரிக்கா வரை கொட்டுகின்றது உக்ரைனால் நீண்டகால யுத்தம் நடத்தும் அளவு வசதிகள் பெருகி நிற்கின்றது, அவர்கள் கேட்டது எல்லாம் கிடைக்கின்றது

    ஆப்கனில் முன்பு சோவியத் ரஷ்யா ராணுவத்த்க்கு எதிராக அதாவது பெரிய படைக்கு எதிராக சிறிய படைகளை நவீன ஆயுதம் மூலம் தாக்கிய வித்தை உக்ரைனுக்கு கொடுக்கபட்டிருக்கின்றது செயற்கைகோள் தரவுகளும் கொடுக்கபடுகின்றான்

    உக்ரைனில் ரஷ்யா திணறும் ரகசியம் இதுதான்

    கோடரி கொண்டு மரத்தை வெட்டலாம், கொசுவினை ஒழிக்கமுடியாதல்லவா? அதுதான் ரஷ்யா உக்ரைனில் சந்திக்கும் சோதனை

    இது ரஷ்யாவுக்கு வைக்கபட்ட மிகபெரிய சோதனை, ரஷ்யா வசமாக சிக்கிவிட்டது ஒன்று இனி அவர்கள் பின்வாங்க வேண்டும் அப்படி வாங்கினால் உக்ரைனை மிரட்ட முடியாது

    இரண்டாவது நீண்டகால யுத்தம் நடத்த வேண்டும் அதற்கு பொருளாதாரம் இடம் கொடுக்காது

    மூன்றாவது சாத்தியம் அபாயமானது, எங்களை வாழவிடாதோரை வாழவிடமாட்டோம் மொத்தமாய் அழிப்போம் அழிவோம் என சொல்லி இப்பொழுது உக்ரைனின் ஆயுத குடோனாக இருக்கும் போலந்தை பொடரியில் போட்டு மூன்றாம் உலகபோரை தொடங்குவது, இதுதவிர வேறு சாத்தியமில்லை

    ஐரோப்பியநாடுகள் ரஷ்ய எண்ணெய்க்கும் கப்பலுக்கும் தடை எனும் அளவில் பேசுகின்றன அப்படியானால் ரஷ்யவின் 75% வர்த்தகம் பாதிக்கபடும் அந்நாடு சீனாவினையே நம்பும்

    சீனா மிககுறைந்த விலைக்கு ரஷ்ய எண்ணெயினை வாங்கும் ஆனாலும் பழைய விற்பனை ரஷ்யாவுக்கு வராது எனும் நிலையில் ரஷ்ய சிக்கல் மேலதிகமாகும் சீனாவால் ரஷ்யாவினை முழுக்க தாங்க முடியாது

    ஒருவித வலையில் ரஷ்யா சிக்கும், அதன் பின் உலகில் இருந்து ரஷ்யா ஓரங்கட்டபடும் அது பழைய ரஷ்யாவாக திரும்பமுடியாது

    ஆக புட்டீன் சோவியத் வீழ்ச்சிக்கு பின் ரஷ்யாவினை பழைய பலமான நாடாக மாற்ற முயன்றார், சிரியாவிலும் லிபியாவிலும் அமெரிக்காவுக்கு கடும் சவாலாக இருந்தார் இன்னும் பல இடங்களில் அமெரிக்காவினை அலறவிட்டார்

    அதற்கு வட்டியும் முதலுமாக உக்ரைனில் திரும்ப கொடுக்கின்றது அமெரிக்கா

    யுத்தம் இருவாரத்தை தொட்டும் ரஷ்யாவால் ஓரே ஒரு நகரத்தை தவிர இதர பகுதியினை பிடிக்கமுடியவில்லை அதன் விமானமும் டாங்கிகளும் தர்ந்து கொண்டும் இருக்கின்றன‌

    ரஷ்யா ஒரு புதைகுழியில் சிக்கிவிட்டது, இனி ஒன்று அவர்கள் கவுரவத்தை பார்க்காமல் உக்ரைனில் இருந்து மட்டுமல்ல உலக ஆதிக்கத்தில் இருந்தும் ஒதுங்கி வாழ‌ வேண்டும் அல்லது உலகோடு மோதி தங்கள் பலத்தை காட்ட வேண்டும் எனும் இரு தேர்வுகளே எஞ்சியிருக்கின்றன‌

    முன்பு ஆப்கனில் கால்பதித்து சோவியத்தை விரட்டிய அமெரிக்கா அதே காட்சியினை உக்ரைனிலும் செய்து கொண்டிருக்கின்றது

  19. உக்ரைனில் இருந்து திரும்பும் மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார், தமிழக அரசு இதற்கு துணையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

    அதாவது இங்கு நீட் தேர்வு உள்ளிட்ட இதர தேர்வெல்லாம் எழுதி மருத்துவம் படிப்பவனெல்லாம் பைத்தியக்காரன், வெளிநாட்டுக்கு ஓடிவிட்டு வந்தவனெல்லாம் அறிவாளி என்பது போல் முதல்வர் கடிதம் எழுதுகின்றார்

    பொதுவாக இந்திய மருத்துவ கல்வி குழுவின் தீர்மானபடி அமெரிக்கா, லண்டன் போன்ற சில நாடுகளை தவிர இதர நாட்டில் மருத்துவம் படித்துவந்தால் இங்கே ஒரு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால்தான் இந்திய மருத்துவராக பணியாற்றமுடியும்

    அமெரிக்கா, லண்டனில் மருத்துவ தரம் அதிகம் என்பதாலும், காசு கொடுத்ததால் டிகிரி இல்லை பெரும் தகுதி அடிப்படையிலே சீட் வழங்கபடுகின்றது என்பதாலும் இந்த நடைமுறை உண்டு

    அது தவிர முன்னாள் சோவியத் நாடுகள் இதர நாடுகளின் மருத்துவகல்வி தரமானது இல்லை என்பதால் உரிய தேர்வினை நடத்தித்தான் அங்கிகரிப்பார்கள்

    உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு உரிய பதில உக்ரைன் தூதரகம் மூலம் உக்ரைன் பல்கலைகழகங்களைத்தான் கேட்க வேண்டும், ஆன்லைன் வகுப்பெல்லாம் சாத்தியம் உக்ரைனில் தொலை தொடர்பெல்லாம் முடங்கவில்லை

    இன்னும் இம்மாணவர்கள் அவர்களின் சொந்த சவாலில் சென்றதால் கல்விக்கான முழு பொறுப்பும் அவர்களையே சாரும்

    அவர்கள் ஆன்லைனில் கற்கலாம், படிப்பு முடியும் தருவாயில் இருந்தால் அவர்கள் உரிய தேர்வு எழுதி தங்களை நிரூபித்துவிட்டு இந்திய மருத்துவகல்லூரியில் இடம்பெறலாம்

    மாறாக இன்று உக்ரைன் மாணவர் என சலுகைகாட்டினால் அது நாளை எல்லா மாணவர்களும் இன்னொரு நாட்டுக்கு சென்றுவிட்டு ஏதோ காரணம் சொல்லி இந்தியா வந்து இங்கு சுலபமாக படிப்பை தொடர வழி செய்யும் இது ஆபத்தானது

    பொதுவாக தமிழக முதல்வரின் கடிதமெல்லாம் நீட் விலக்கு மசோதா போலத்தான் போக வேண்டிய இடத்துக்கு செல்லும் எனினும் இங்கொரு வரி கவனிக்கதக்கது

    அது மத்திய அரசுடன் தமிழக அரசு துணையாக இருக்கும் என்பது

    எல்லா விஷயத்திலும் மத்திய அரசினை “ஒன்றிய அரசு” என விமர்சிக்கும் அன்னார் , இப்பொழுது மத்திய அரசுக்கு துணையாக இருப்போம் என வரிந்துகட்டுவதன் காரணம் இவர்களுக்கு துணையாக பல மருத்துவ கல்லூரிகள் இருக்கலாம் , வாய்ப்பு கிடைத்தால் அள்ளிவிடலாம் என்பதை தவிர வேறொன்றாக இருக்கமுடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *