தமிழ் ஒரு மந்திரமொழி, தமிழ் இறைவனை மானிட உணர்ச்சியின் உச்சத்தில் பொருள்மாறாமல் வெளிபடுத்த சித்தன் அகத்தியனும் தெய்வம் முருகனும் உருவாக்கிய மொழி
இதனாலே தமிழின் அழகான சுவையும் உருக்கமும் பக்தி இலக்கியங்களில் அழகாக பிரதிபலிக்கும், தமிழ் இறைவனுக்கான மொழி இறைவன் தன்னை பாட தானே உருவாக்கிய மொழி என்பது அதன் பக்தி இலக்கியங்களில்தான் தெரியும்
பக்தியில் மூழ்கிய தமிழன் எவனோ அவன் அழியா காவியங்களை இயற்றினான், தங்கத்தில் பதிக்கபட்ட வைரம்போல் தமிழ் அவன் மூலமாக ஒளிவீசிற்று
சிங்கத்தின் பால் தங்க கிண்ணத்தில் மட்டும் கெடாது என்பது போல் தமிழின் சுவை பக்தி இலக்கியங்களில் கெடாது சுவைக்கும்
அது வைணவ இலக்கியங்களில் இன்னும் தெரியும், தமிழின் மிக சிறந்த பக்தி இலக்கிமெல்லாம் தமிழின் தீஞ்சுவையில் கம்பன் எனவும் ஆழ்வார்கள் எனவும் வைணவர்களால் பல இடங்களில் அழகாய் தெரிந்தது
மெல்ல ஓடும் குளிர்ந்த நதி போல், அந்தி மாலையில் வீசும் தென்றல் போல், நிழலில் கிடைக்கும் கரும்பின் சாறு போல் அந்த தமிழும் அதன் சுவையும் மிக ரம்மியமானது
ஆழ்வார்கள் அதை மிக சரியாக கொடுத்தார்கள், பக்தியில் மூழ்கி தமிழ் சிப்பி பிளந்து முத்தெடுத்தார்கள் அதை வகை வகையாக கோர்த்தார்கள்
அதில் ஒருவர்தான் பெரியாழ்வார்
அவர் தமிழ்பிறந்த பாண்டிநாட்டில் பிறப்பு அவர், இன்றும் தமிழக அரசின் முத்திரையாக உள்ள அந்த ஆலயத்தில்தான் அவர் பணியாளராய் இருந்தார்
அவர் இயற்பெயர் ராம ஆண்டான், சதா சர்வ காலமும் விஷ்ணுபக்தியில் ஊறி அவன் நாமத்தை சொல்லி கொண்டிருந்ததால் விஷ்ணு சித்தன் என அழைக்கபட்டார்
அவர் தொடக்கத்தில் கவிஞர் அல்ல, அவருக்கு பூ தொடுத்து சாற்றுவது மட்டுமே வேலை. மிகபெரும் அர்ப்பணிப்புடன் நாளும் பொழுதும் நொடியும் தவறாது, மகா ஆச்சாரமாய் வில்லிபுத்தூர் பெருமாளுக்கு மலர் அலங்காரம் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தார்
அப்பொழுது பாண்டிய நாட்டை ஸ்ரீவல்லபதேவன் ஆண்டுகொண்டிருந்தார் ஓர் இரவு
நகர்வலம் வருகையில் நகருக்கு புதியவன் ஒருவன் கோவில் அருகே உறங்கி கொண்டிருந்ததை கண்டு அவனிடம் வழிபோக்கன் போல் விசாரித்தான்
அதற்கு அந்த அந்நியன் “ஐயா! நான் ஒரு அந்தணன். கங்கையில் நீராடி வருகிறேன்“ என்றான். மன்னன் அல்லவா? யாரையும் நம்ப கூடாது அதே நேரம் தான் யாரென காட்டவும் கூடாதல்லவா இதனால் அவனை சோதிக்கும் கேள்வினை கேட்டான்
கங்கக்கு சென்று வருகின்றீரா, நல்லது உமக்கு தெரிந்த நீதிநூல் வரிகளை சொல்லும் எமக்கும் புண்ணியம் கிடைக்கும் என சாதாரணமானவன் போல் கேட்டான்
அந்த அந்நியன் தெளிவாய் சொன்னான் “மழைக்காலத்தின் தேவையை மற்ற எட்டு மாதங்களிலும், இரவின் தேவையை பகலில், முதுமையின் தேவையை இளமையில், மறுமையின் தேவையை
இம்மையில் தேட முயற்சி செய்ய வேண்டும்“ என்றான்.
மன்னனுக்கு அவன் பண்டிதன் என உறுதியானதால் தான் யாரென தெரியாமலே அரன்மனை திரும்பினான், ஆனால் அவன் மனம் சிந்திக்க தொடங்கியது
மறுமை என்றால் என்ன சேர்க்க வேண்டும் என தீராமல் சிந்தித்த மன்னன் தன் அமைச்சர் செல்வநம்பியுடன் விவாதித்தும் பலனில்லை
இது கடவுள் மட்டுமே விளக்கி சொல்லும் விஷயம் எம முடிவுக்கு வந்த மன்னன் இனி தெய்வமே தனக்கு விடைதரட்டும் என அந்த ஏற்பாட்டை செய்தான்
ஒரு கொடிமரம் போன்ற கம்பை நாடு அதன் உச்சியில் பெரும் பொற்கிழியினை தொங்கவிட்டிருந்தான், யார் மன்னனிடம் அந்த போதனையினை செய்யும்பொழுது இந்த கழி தானே வளையுமோ அவன் சொல்வதே நற்போதனை என அறிவிக்கவும் பட்டது
சுருக்கமாக சொன்னால் பாண்டிய மன்னனுக்கு சோதனை வந்து தருமி ஓடிவந்து பாடிய காட்சி போன்றது
அப்பொழுது யார் யாரெல்லாமோ வந்து போதித்தும் அந்த கழி வளையவில்லை, மன்னன் அடுத்து யார் யார் என எதிர்பார்த்து கொண்டே இருந்தான்
அப்பொழுது திருவில்லி புத்தூரில் விஷ்ணு சித்தனின் கனவில் வந்த பெருமாள் அவரிடம் மதுரைக்கு சென்று தன்னை பற்றி பாடி போதிக்குமாறு கூறி மறைந்தார்
எழுந்த விஷ்ணுசித்தர் திகைத்தார், தமிழ் பாட தெரியாத தனக்கு எப்படி பாடவரும் என்ற அச்சத்தில் தலைகுனிந்து நின்றாலும் பெருமாள் சொன்னதற்காக மதுரை செல்ல துணிந்தார்
மதுரை அரசவை மண்டபத்துக்குள் அவர் நுழைந்தபொழுது வேதம் அறியாத பண்டாரம் எப்படி இறைதத்துவம் பேசவரலாம் என அவதூறு எழுந்தது, ஆனாலும் செல்வநம்பி மண்ணுக்குள் தங்கமும் உண்டு என அவரை பேச அனுமதித்தார்
பெருமாளை வணங்கியபடி தன் விஷ்ணு பக்தியின் உச்சத்தில் கண்களை மூடி ஸ்ரீமன் நாராயணனே பரமேட்டி
ஏன ஸ்ருதி, ஸ்மிருதி, இதிகாச, புராண மேற்கோள்களால் விளக்கினார். சபை அதிசயத்தது
ஆலய மணிபோல் கம்பீரமாக முழங்கி கொன்டிருந்தார் விஷ்னுசித்தர், அவரின் போதனையில் சபை கட்டுபட்டு சொக்கி நின்றது, சிலருக்கு கண்ணீர் வந்தது
மன்னன் வியப்போடும் நன்றியோடும் பார்த்துகொண்டிருந்தபொழுதே அந்த கம்பு வளைந்து கிழி அவர் முன் தொங்கியபடி நின்றது
அந்த வேத சபையே அவர் ஆழ்வாரிலும் பெரிய ஆழ்வார் என கொண்டாடி, பெரியாழ்வார் என அழைத்தது, தன் சந்தேகம் தீர்ந்த மன்னன், மறுமைக்கு தயாராகும் வழி பெருமாளை பணிவதே என உணர்ந்து அதை போதித்த பெரியாழ்வாரை யானைமேல் ஏற்றினார்
அதுவும் பட்டத்து யானைமேல் ஏற்றி வலம் வந்தார்
அந்நேரத்தில் வானில் கருடனில் தோன்றி அவருக்கு காட்சி அளித்தார் திருமால் , அப்பொழுது அந்த நொடியில் பாட ஆரம்பித்தார் பெரியாழ்வார்
“
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு”
என வாழ்த்தி திருப்பல்லாண்டு பாடி அருளினார்.
திருபல்லாண்டு எனும் அழகிய பதிகம் அவர் கொடுத்ததே, இன்றும் வைணவ ஆலயங்களில் அது இல்லாமல் வழிபாடு இல்லை, வழிபாடுகளில் மட்டுமல்லாமல் சுவாமி ஊர்வலத்திலும் அதுதான் பாடபட்டது
வைஷ்ணவ வழிபாட்டின் மகா முக்கிய பாடல் அது
அதன்பின் தமிழ் அவருக்கு அழகாய் வந்தது, அற்புதமான பாடல்களையெல்லாம் எழுதினார், தமிழக முழுக்க வைஷ்ணவ ஆலயம் சென்று பாடினார்
திருவரங்கம், திருவெள்ளாறை, திருப்பேர்நகர்,கும்பகோணம்,திருக்கண்ணபுரம், திருச்சித்திரக்கூடம்,
திருமாலிஞ்சோலை திருக்கோட்டியூர்,ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குறுங்குடி, திருவேங்கடம், திருவயோத்தி, சாளக்கிராமம்,வதரியாச்சிரமம்,திருக்கங்கைக் கரைக்கண்டம்,துவாரகை,வடமதுரை,திருவாய்பாடி, திருப்பாற்கடல், பரமபதம் ஆகிய ஆலயமெல்லாம் அவரால் பாடபட்டதுஆவ்
குறிப்பாக கண்ணனை கொஞ்சும் அதுவும் குழந்தை கண்ணனை கொஞ்சும் சுவைமிக்க பாடல்களை எழுதினார்
தன்னை ஒரு தாயாக கருதி கண்ணனை தன் குழந்தையாக கருதி அவர் பாடிய பாடலெல்லாம் தீஞ்சுவை மிக்கவை, படிக்க படிக்க உருக்கமானவை
“கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்”
“மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே! தாலேலோ!
வையம் அளந்தானே! தாலேலோ!”
அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதி யேல்
மஞ்சில் மறையாதே, மாமதீ! மகிழ்ந்து ஓடிவா”
“பாரித்த மன்னர் படப்பஞ் சவர்க்கு அன்று
தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே! சப்பாணி”
“கொங்கைவன் கூனிசொற் கொண்டு குவலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வன்கான் அடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்”
ஆம் குழந்தை தவழ்தல், அதற்கு நிலா காட்டி சோறுட்டுதல், தவழும் குழந்தையினை கொஞ்சுதல், கண்ணாம்பூச்சி என விளையாடுதல், குளிப்பாட்டுதல் என தாய் குழந்தையினை கொஞ்சுதல் போல் கொஞ்சுகின்றார் ஆழ்வார்
பின்னாளில் பிள்ளைதமிழ் உருவாகவும், அதன் வழி பாரதியும் கண்ணதாசனும் கண்ணனை கொஞ்சி பாடவும், வாலி கண்ணனின் பிள்ளைதமிழ் பாடவும் பெரியாழ்வாரே காரணம்
அவர் தொடங்கிவைத்த கண்ணன் பாடலே பின்னாளில் பிள்ளை தமிழாகவும் கண்ணன் பாடலாகவும் வளர்ந்தது
“ஆயர்பாடி மாளிகையில்” என பாடியது பெரியாழ்வாரே, அதை தழுவித்தான் கண்ணதாசன் பாடினார்
மிக பெரிய விஷ்ணு பக்தனாக அவன் புகழ் பாடியே வாழ்ந்த ஆழ்வார், விஷ்ணுவுக்கு மலர் பறிக்கும் பொழுது ஒரு பெண்குழந்தை கிடக்க கண்டு அதை ஆண்டாள் என பெயர் சூட்டி அழைத்தார்
ஆண்டாளின் பக்திக்கும் தமிழுக்கும் அவரே குரு, ஆண்டாளின் அபரிமிதமான பக்திக்கு அவரே அடிப்படை
அவரின் தமிழே ஆண்டாளுக்கும் வந்தது , அந்த தமிழில் அவர் பக்தியின் உச்சத்தில் காதலாய் பாட ஆண்டாள் ஆழ்வார்களின் ஒரே பெண் ஆழ்வார் என்றானார்
ஆண்டாள் பெருமாளோடு கலந்த பொழுது அதை பாடவும் பெரியாழ்வார் தவறவில்லை
“ஒரு மகள் தன்னை உடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண்மால் தான் கொண்டு போனான்”
வைஷ்ணவ உலகின் மிகபெரிய ஆழ்வார்களில் ஒருவர் எனும் அளவு பெரும் பாடலை பக்தியோடு கொடுத்தவர் , இன்றும் அவரின் திருபல்லாண்டு அதி உன்னத இடத்தில் கொண்டாடபட்டு அதன் மூலமே வழிபாடும் நடகின்றது
தமிழில் வழிபாடு என பொங்கும் கோஷ்டி எதுவும் இந்த திருபல்லாண்டு மேல் வாய்திறக்கமுடியாதபடி அன்றே பாடிவைத்தவர் பெரியாழ்வார்
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரை திருப்பல்லாண்டு (12 பாசுரங்கள் எனவும், 13 தொடக்கம் 473 வரை பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்) ஆகிய இரு நூல்களில் அடங்கியுள்ளன.இவரின் பாடலெல்லாம் அமைந்துள்ளன
பெருமாள் கோவிலில் பெருமாள் சிலைக்கு அடுத்து அவசியமானது இப்பாடல்கள் என்பதைவிட அந்த பெருமையினை சுருக்கமாக சொல்லமுடியாது
தன்மேல் பக்தி கொண்ட ஒரு பூதொடுக்கும் பக்தனுக்கு காலமெல்லாம் அவன் மொழியில் தன்னை பாட வழிசெய்த பெருமாளின் கைமாறும் இங்கு கையெடுத்து வணங்க வேண்டியது
அந்த அளவு தன் பக்தன் மேல் மிகபெரிய நேசம் வைத்து அவனுக்கு மாபெரும் முடி சூட்டியிருக்கின்றார் பெருமான்
அவர் கருடனின் சாயலில் வந்தவர், ஆனிமாதம் சுவாதி நட்சத்திரம் அவரின் அவதார நாளாக கொண்டாடபடுகின்றது
அந்த அற்புத கவிக்கு, தமிழின் சுவையினை முழுக்க சொன்ன ஆழ்வாருக்கு, தன்னிகரற்ற பக்தியாளனுக்கு, ஆண்டாள் எனும் மகா அற்புத பக்திகவி அவதாரம் இங்கு வர காரணமாய் இருந்தவருக்கு அவதார நாள்
அவரின் பாடல்கள் சுவையும் ஆழமும் கொண்டவை, அவரின் முதல் பாடலே பெருமாளை பற்றி எப்படி தொடங்கிற்று என்றால் அவர் எக்காலமும் நிரந்தனமானவன் என்ற பொருளில் பாடபட்டது, ஆம் கவனியுங்கள்
பல்லாண்டு(பலஆண்டு)= X என வைத்துக்கொண்டால்
பல்லாண்டு(X) பல்லாண்டு(X) பல்லாயிரத்தாண்டு(X1000) பல்கோடி(X100,00,000) நூறாயிரம்(1,00,000) என்றாகும்
அதாவது, (X)(X)(X1000)(X100,00,000)(100,000) என நீளும்..
ஆம். பல, பல, [பலஆயிரம் (பலகோடிலட்சம்)] ஆண்டுகள் என நீண்டுவரும், அழியாத இறைவனே என பொருளாகும்
இப்படி ஒருவரியில் பெரும் யுகங்களை பெரும் விஷயங்களை சொல்லிபாடியவர் பெரியாழ்வார், அவரை படிக்க படிக்க ஆழமும் அதிகம் பொருளும் அதிகம் சுவையும் அதிகம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு அவர் புகழும் பக்தியும் இங்கு நிலைத்திருகும், அவரை எக்காலமும் நினைத்து பெருமாளை வழிபட்டால் எல்லா நலமும் நம்மை வந்தடையும்
எந்நிலையில் இருந்தாலும் முழு பக்தியோடு பெருமாளுக்கு தொண்டு செய்தால் உரிய நேரம் மிகபெரிய பாக்கியத்தை அவன் தருவான் என்பதை காலம் காலமாக சொல்லிகொண்டிருகின்றார் பெரியாழ்வார்
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
நல்ல கட்டுரை. ஆனால், இதில் எத்தனையெத்தனை எழுத்துப்பிழைகள், சொற்பிழைகள், வாக்கிய அமைப்பில் பிழைகள். மனவேகத்தில் எழுதி முடித்ததும் ஒருமுறை படித்து பார்த்திருந்தாலே இவையெல்லாம் தெரிந்திருக்கும்.
இனிவரும் கட்டுரைகளிலாவது பிழைகள் தவிர்க்கப்படவேண்டும்.
வீட்டுக்குள் வாப்பா உம்மா, காக்கா, மதராசா, மௌலவி, தர்கா, ஜனாசா, நிக்கா, என்று அனைத்தும் அரபி மொழி. தங்கள் பெயர் அரபு மொழி. தாடி, சுன்னத், கல்யாணம், சடங்கு, என்று அனைத்தும் அரபுவழி. *அதாவது பாரதத்தை கொள்ளையடிக்க வந்த துலுக்கனின் வழி.*
வீட்டிற்குள் டாடி, மம்மி, அங்கில், ஆன்டி, பிறதர், சிஸ்டர், ஃபாதர், லார்டு, சர்ச், கான்வென்ட், கண்வென்சன், ஈஸ்டர், கிறிஸ்துமஸ், சண்டே கிளாஸ், என்று அனைத்தும் இங்கிலீஷ் வழி..மாதங்கள் அனைத்தும் ஆங்கிலம். *அதாவது பாரதத்தை கொள்ளையடிக்க வந்த வெள்ளை தோல் கிறிசவன் வழி*
ஆனால் இவர்கள் இருவரும் *100% ஒரிஜினல், நயம், அக்மார்க் தமிழர்களாம்.*
*தமிழை மாமுனி அகஸ்தியர் என்ற பிராமணர் படைத்து, தொல்காப்பியர் என்ற பிராமணர் இலக்கணம் சமைத்து, நக்கீரன் போன்று நூற்றுகணக்கான சங்க கால பிராமண புலவர்கள் பாடல்கள் பாடி,… தற்போது… வீட்டில் அழகு* *கொஞ்சும் சுந்தர தமிழ் பேசி, தமிழ் மாதங்களை நினைவில் வைத்து, தமிழில் உரையாடி, உறவாடி, தமிழ்* *பண்பாடுகளை காத்து, பேணி,*
*சிலப்பதிகாரம் மணிமேகலை,* *பரிபாடல்,*
*நாலாயிர* *திவ்யபிரபந்தம்,*
*திருப்புகழ்,*
*தேவாரம்,*
*திருவாசகம்*
*திருவருட்பா*, *பாசுரங்கள்,*
*திருக்குறள், மணிமேகலை, பதிற்றுப்பத்து, பரிபாடல்*
*என்று தமிழ் பெரும் அமுதம் களை தினமும் போற்றிப் பாடி துதித்து தமிழன்னைக்கு சுயநலமற்ற, தியாக மனப்பான்மையோடு தொண்டு செய்யும் எங்கள் ஆருயிர் பிராமணர்கள்….. ஆரியர்களாம், மாடு ஓட்டிட்டு வந்தவர்களாம்….*
*நெஞ்சு பொறுக்குதில்லையே…. இந்த நிலைகெட்ட திராவிடிய, துலுக்க, கிறிசவ ஓநாய்களின் நிலையறிந்து……!*