மீன்டும் வாலாட்டும் சீனா

எவ்வித அறிவிப்பும் இல்லாமல், சீன அதிபர் ஜீ ஜின்பிங் திபெத்திற்கு விஜயம் செய்துள்ளார்.  30 ஆண்டுகளுக்கு பின்னர்   இந்த விஜயம் நடந்துள்ளது.  1990-ல்  Jiang Zermin க்கு பின்னர் எந்த ஒரு சீன அதிபரும் திபெத்திற்கு விஜயம் செய்ததில்லை.    ஜி ஜின்பிங் பயணம் குறித்து முன் கூட்டியே அறிவிக்கப்படவில்லை என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.   சீன அதிபரின் விஜயம் உலகின் பல நாடுகளின் கவனத்தை திசை திருப்பியுள்ளது.  அதாவது கொரோனா தொற்று பற்றிய ஆய்வை மீன்டும் நடத்த சீனா ஒப்புதல் கொடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம்  விடுத்த அழைபுக்கு பின்னர் நடந்த செயலாகும்.    

             2011 ஆம் ஆண்டில் ஜி ஜின்பிங் சீனாவின் துணைத் தலைவராக  இருந்த போது திபெத்துக்கு  விஜயம் செய்திருந்தார்,  அப்போது சிஞ்சியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தில் (XUAR) தனது நன்பரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான சென் குவாங்குவோ திபெத்தில் கட்சித் தலைவராக இருந்தார்.   இவரின் விஜயத்தை முன்னிட்டு   ஜீலை 21 ந் தேதியே திபெத்தின் லாசா நகரில் நடந்து கொண்டிருந்த   கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.     நாடு கடத்தப்பட்ட திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவின் குளிர்கால இல்லமும்,  லாசாவின் சின்னமான பொட்டாலா அரண்மனையும்  மூடப்பட்டது,   பெரும்பாலான தொழிற்சாலைகளும்  மூடப்பட்டன.   1951 ஆம் ஆண்டில்  17 ஷரத்துகளுடன் கையெழுத்திட்ட உடன்படிக்யைின்  70 வது ஆண்டு விழாவாகும்.    இந்த உடன்படிக்கை  திபெத்தின் மீது  சீனாவால் கட்டாயப்படுத்தப்பட்டு,  நாட்டின் கட்டுப்பாட்டை தன் கைக்கு பிடுங்கப்பட்ட  ஒரு ஒப்பந்தமாகும்,  இது ஏற்கனவே திபெத் நாட்டின் கிழக்குப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த சீனாவால், மேலும் இராணுவ நடவடிக்கைகளின் அச்சுறுத்தலில் மொத்த  திபெத்தும் கொண்டு வரப்பட்டது.     சீன ஜனாதிபதியின் திபெத்துக்கான விஜயம், இந்தியாவின் சீனாவுடனான எல்லையில் பதட்டங்களை ஏற்படுத்துவதற்கு ஜி ஜின்பிங் முன்னுரிமை அளிக்கிறது என்பதை இந்தியாவுக்கு சமிக்ஞை செய்யும் நோக்கில்  இந்த விஜயம்  இருந்திருக்கலாம் என வெள்ளிக்கிழமை ஆர்.எஃப்.ஏ. நேர்காணல்களில் இந்தியாவை தளமாகக் கொண்ட பிராந்திய வல்லுநர்கள்   தெரிவித்தார்கள்.  

             மேற்கு சீனாவின் சிச்சுவான் (Sichuan )  மாகாணத்துடன்  திபெத்தை இணைப்பதற்காக கட்டப்பட்ட ஒரு உயரமான  ரயில்வே  பாதையின் வழியாக  ரயிலில் ஜி ஜின்பின் பயணம் செய்தார்.    கட்டுமான பணியின் தரத்தை சோதிப்பதற்காக பயணித்தார் என கூறப்பட்டது.    ஏனென்றால் இந்த ரயில் பாதைகளை நிர்மாணிப்பதில் உண்மையில் என்ன நடந்தது என்பது [சிச்சுவான் தலைநகர்] உள்ளூர் இராணுவ பிராந்தியத்தின் தலைமையகமான செங்டுவிலிருந்து லாசாவுக்கான தூரம் வெறும் 13 மணி நேரமாக குறைந்துள்ளது, ” என துருவேவ் கடோச் ( Dhruv Katoch , former Director at New Delhi’s Centre for Land and Warfare Studies ) கூறினார்.   அருணாசல பிரதேசத்தின் எல்லையிலிருந்து வெறும் 15 கி.மீ. தூரம் கொண்டது செங்டு  என்பதும்   இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைய கூடும்  என்பதை புரிந்து கொள்ள வேண்டும்  என்றார்.  மேலும்  இது சீனாவுக்கு மிகக் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான துருப்புக்களை திபெத் பிராந்தியத்திற்கு போர்  ஏற்பட்டால் நகர்த்தும் திறனை அளிக்கிறது” என்றும் அவர் கூறினார்.     “கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களின் உண்மையைப் பார்க்கும்போது, ​​ஜனாதிபதி அதைச் சரிபார்க்கவே வந்தார் என்று நான் நினைக்கிறேன்,” என்று கடோச் கூறினார். 

                 திருவாளர் ஜீ ஜின்பிங் இறங்கிய இடம்  அருணாசல பிரதேசத்தை ஒட்டியுள்ள நைங்கி  (Nyingachi  )  பகுதியாகும்.  ஏற்கனவே  அருணாசல பிரதேசம் சீனாவிற்கு சொந்தமானது என உரிமை கொண்டாடி வரும் இச் சூழ்நிலையில்  சீன அதிபரின் விஜயம் பலரின் கேள்விக்கு பதில் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.  வழக்கம் போல்  சீன அதிபரின் விஜயத்தை இரு தினங்கள் கழித்து  சீனாவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில் , பாரம்பரிய உடைகளை அணிந்த திபெத்தியர்கள் சீன கொடியுடன் ஜின்பிங்கை வரவேற்பதை காட்டினார்கள்..  சிகப்பு கம்பளத்துடன் அவர் வழி அனுப்பி வைக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டார்கள். 

                இலங்கையின் ஏழ்மையை பயன்படுத்தி  தென் இந்தியாவில் கால் பதிக்கும் முயற்சியில் ஈடுபடும் சீனா , தற்போது அருணாச்சல பிரதேச எல்லையில்  சீன அதிபர் ஆய்வு செய்தது பல்வேறு யூகங்களையும் எழுப்பியுள்ளது.  பிரமபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட இருக்கும்  மிகப் பெரிய ஆணைக்கட்டின்   இடத்தை ஆய்வு செய்ததாகவும்,  நியாங் பாலத்தை பார்வையிட்டதாகவும்,  யர்லுங் ஜாங்போ நதி மற்றும் அதன் துணை நியாங் நதியின் படுகையில்  சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஆய்வும் செய்தார் என சீனாவின் சின்ஹூவா என்ற செய்தி நிறுவனம் அதிகாரபூர்வ செய்திகள் வெளியிட்டுள்ளது..  உண்மையில்  அருணாசல பிரதேசத்தை தாக்குதல் நடத்தினால்  கள நிலவரம் எவ்வாறு இருக்கும் என்பதை ஆய்வு செய்வதற்காகவே வந்ததாகவும்   மற்றொரு செய்தி கூறுகிறது.  பூகோள ரீதியாக அருணாசல பிரதேசம்  சீனாவின்  தாக்குதலுக்கு உகந்த இடம் கிடையாது என்பதும்,   இந்தியாவிற்கே சாதகமான பகுதி என்றும் ராணுவ ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.   1962 யுத்தத்திற்கு பின்  சீனா லடாக் பகுதியில் ஆக்கிரமித்த இடத்தை விட்டுக் கொடுக்கவில்லை,  மாறாக  அருணாசல பிரதேசத்தில் ஊடுருவிய இடங்களை விட்டு கொடுத்தது என்பதையும் கவனிக்க வேண்டும். 

                சீன வரலாற்றில் முதன் முறையாக ”அமைதியான வழியில் திபெத் சீனாவுடன் இணைந்த ” 70 வது ஆண்டு தினத்தை  அருணாசல பிரதேச எல்லையில் கொண்டாடபட்டது  உலக அரங்கில் சீன ராணுவத்தை நிறுத்தி திபெத் அபகரிக்கப்பட்டது என்ற உண்மையை மறைக்க நடந்த விழாவாக பார்க்க முடிகிறது.  இந்த கொண்டாடத்தில் கலந்து கொள்வதற்காகவே ஜி ஜின்பிங் விஜயம் செய்தார் என்றும் கூறப்பட்டது.   இதை விட கொடுமையான நிகழ்வு லாசாவில் உள்ள தலாய் லாமாவின் இருப்பிடத்திற்கும் சென்றுள்ளார்.   தலாய் லாமாவை அங்கீகரிக்காமல், ஒரு பொம்மையை உட்கார வைத்துள்ள சீனா  அங்கு விஜயம் செய்தது மற்றவர்களை ஏமாற்ற நடத்திய நாடகமாகும்.

                இது தவிர இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை தங்கள் எல்லை என்று சீன பல ஆண்டுகளாக கூறி வருகிறது.   சீனாவின் தெற்கு திபெத் என அருணாசல பிரதேசத்தை தங்களது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.   தொடர்ந்து பல ஆண்டுகளாகவே  அருணாசல பிரதேசத்தின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் சீனா சந்தர்பம் கிடைத்தால் ஆக்கிரமிப்பு செய்ய கூட தயங்காது.   இந்நிலையில்   சீனா அருணாசல பிரததேசத்தின் எல்லையில்  உள்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து பலப்படுத்தும் செயலை செய்து வருகிறது.  இந்த ஆண்டின் தொடக்கத்தில்  திபெத்தின் தலைநகர் லாசாவிலிருந்து நைங்கி வரை 490 கி.மீ. தூரத்திற்கு புல்லட் ரயில் சேவையை தொடங்கியிருகிறது.   இந்த வழித் தடம் அமைக்கப்பட்டுள்ளதால்,  ஏற்கனவே உள்ள பதற்றத்தை  மேலும் அதிகமாக்கவே  இது வழி வகுக்கிறது.

                சீனா அருணாசல பிரதேசத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  வெளிப் பார்வைக்கு  திபெத்தின் வளர்ச்சிக்காக   பல்வேறு  உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறுவதாக காட்டிக் கொண்டாலும்,  அந்த பணிகளின் உள்நோக்கம்  ராணுவத்தை  இந்தியாவின் எல்லையில் கொண்டு வருவதற்குறிய நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.  திபெத் மற்றும் சின்ஜியாங்கிடையே  அதி வேகமாக மேற்கொள்ளப்படும்  மாற்றங்கள்.  உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் படி திபெத்துக்கான ஐந்து சூப்பர் ஹைவேக்கள்,  ரயில்வே, தளவாட உள்கட்டமைப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.. சியோகாங் எல்லையில் பாதுகாப்பும்,  அக் கிராமத்தில் உள்ள மக்கள் தொகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.   ,  இந்திய விமானப் படைக்கு இருந்த நன்மைகளை மாற்றுவதற்கான முயற்சியில் திபெத் – சின்ஜியாங்கில்  விமான நடவடிக்கைளை மேற்கொள்வதில் சீனா முனுப்பு காட்டுகிறது.  

                காஷ்கர், ஹோடன், நகரி-குன்சா, டிங்ரி, டாம்கங், நைங்கி, தாஷ்கோர்கன் மற்றும் லாசா ஆகிய விமான நிலையங்கள்  புதிய தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வருகிறது.   இத்துடன்  ஆளில்லா வான்வழி வாகனங்கள் ( )  நிலத்தடி சுரங்கங்கள் , கடினப்படுத்தப்பட்ட விமான முகாம்கள், மற்றும் குண்டு வெடிப்பு பேனாக்கள், ஆயுதங்கள் சேமிப்பு கிடங்குகள்,  மற்றும் விமான ஓடுபாதைகள் புதுப்பிக்கப்பட்டு  வருகிறது.  திபெத் மற்றும் ஜின்ஜியாங்கில்  எஸ்.400 ஏ.டீ. அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரங்கள் தற்போது வெளி வந்துள்ளன.   இது மட்டுமில்லாமல்  மேற்படி விமான தளங்களுக்குள்  வான் பாதுகாப்பு  ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.   இது அண்டை நாடுகளை அச்சுறுத்தும் செயலாகவே  பார்க்கப்படுகிறது.  இயற்கையாகவே  சந்தேகம் எழும்,  சீனாவால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில்  குறிப்பிடதக்க எண்ணிக்கையிலான பாதுகாப்பு பணிகள் ஏன் கட்டப்படவில்லை.    தரைவழி நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால யுத்தத்தின் புதிய களங்கள் தெளிவான கருத்துருவாக்கத்தை உருவாக்கியுள்ளது.  மேலும்   இந்தியப் படைகளும்  களநிலவத்தின் அடிப்படையில்  சாலைகள், சுரங்கங்கள்,  வாழ்விடங்கள், நிலத்தடி சேமிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளின் உள்கட்டமைப்பு  வளர்ச்சியை கடந்த சில ஆண்டுகளாகவே    முடுக்கிவிட்டன என்பதை சீனா நன்கறிந்துள்ளது.

              2017லிருந்து சீனா டோக்லாம் பகுதியில் தனது ராணுவத்தை நிறுத்தியது மட்டுமில்லாமல், சாலைகள் அமைப்பதிலும் முனைப்பு காட்டியது.   முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அறிக்கை மட்டுமே விட்டு விட்டு பேச்சு வார்த்தையை நடத்தியது போல், மோடி  அரசும் நடந்து கொள்ளும் என நினைத்த சீனாவிற்கு இந்தியாவின் செயல்பாடு ஆச்சிரியத்தை கொடுத்தது மட்டுமில்லாமல்,  தனது போக்கை மறு ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டது.  ஏன் என்றால்  2019 ஆகஸ்ட் மாதம் சுமார் இரண்டு மாதங்கள் இந்திய ராணுவம் விட்டுக் கொடுக்காமல் போருக்கும் தயாராக இருப்பதாக காட்டிக் கொண்டது.    இதன் பின்னரே  சீனா தனது ராணுவத்தை பின்வாங்க வைத்தது.   டோக்லாம்   இந்தியாவின் பாதுகாப்பிற்கு முக்கியமான மையமாகும்.   குறிப்பாக விமான படைக்கு முக்கியமான கேந்திரமாகும்.   டோக்லாம் பூடானுக்கு சொந்தமானது என்றாலும்,  அதை பாதுகாக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கு உண்டு.  டோக்லாம் பீடபூமிக்கு அருகில்  இந்தியாவின் விமானப்படை தளம் அமைந்துள்ளது.   இந்த விமான தனம்  முதலில் போக்குவரத்துக்கு என திட்டமிட்டாலும், பின்னர்  தங்களது சு.30 எம்.கே.ஐ. போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.  இந்த விமான தளத்துக்கு உதவியாக சிலிகுரியில் உள்ள பாக்தோக்ரா மற்றும் ஹாசிமா விமான தளம்  உள்ளது .   இதுவே  சீனாவின் பின்வாங்குதலுக்கு காரணமாக அமைந்தது.  ஆகவே  தான் சீனா தனது குள்ள நரி தந்திரத்தை மாற்றும் விதமாக 19வது காங்கிரஸ் தீர்மானம் அமைந்துள்ளது.

                சீனாவின் குள்ளநரித் தந்திரம்  2014லிருந்து மாறுபட்ட கோணத்தில் அதன் அனுகுமுறை உருவாகியுள்ளது.   தங்களது 19 வது காங்கிரஸ் தீர்மானங்களை செயல்படுத்துவதால் ,  அதன் சர்வதேச உறவுகளின் அடிப்படையில்,  அது தெற்காசியாவை பெரிதும் பாதிக்கிறது என்பது தெரிந்தும் செயல்படுகிறது.     சீனாவின் தெற்காசிய கொள்கை என்பது மிகவும் மோசமான செயல்திட்டத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது.  சீனா உருவாக்கியுள்ள திட்டங்களை  மூன்று தீமைகள் என குறிப்பிட்டுள்ளார்கள்   ஆய்வாளர்கள்.   பிரிவினைவாதம் ( separatism ),  தீவிரவாதம் (extremism )  ,  பிளவுபடுத்தும் வாதம் (separatism ),   இம் மூன்றுக்கும்  சீனா கொடுத்துள்ள  குறியீட்டு  வார்த்தை,  திபெத், உய்கார், ஹாங்காங் என்பதாகும்.   இதன் அடிப்படையில் தான் திபெத்தின் சினோசிசேஷன்  என்ற பெயரில்  உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்துகிறது   திபெத் சின்ஜியாங் பங்கு இத் திட்டத்திற்கு  முக்கியமானதாக சீனா கருதுவதற்கு ,  இந்த இரு பகுதியின் எல்லைகள்  மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், மியான்மர் மற்றும் இந்தியா ஆகியவற்றின் எல்லைகள் அமைந்துள்ளன.   இந்தியாவை தவிர மற்ற நாடுகளுடன்  நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்ள இந்த திட்டம்  சீனாவிற்கு  கை கொடுக்கும் என சீனா அரசு கருதுகிறது.  இந்தியாவுடனான உறவுக்கு பண்டைய 36 உத்திகளை பயன்படுத்த முற்படுகிறது.  அதாவது பெரியவர்களை தோற்கடிக்க சிறியவர்களுடன் ஒத்துழைக்கின்றன  என்ற கோட்பாட்டின் படி , இந்தியாவை வீழ்த்த சிறிய நாடுகளான  ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் மியான்மரை் நாடுகளுடன் உறவை மேம்படுத்த, நிதி உதவி என்ற போர்வையில்  தனது குள்ளநரித் தந்நதிரத்தை பயன்படுத்துகிறது.  அதன் ஒரு அங்கம் தான்  திபெத் விஜயமாகும்.  

                இது பற்றி  Fox News,க்கு  Republican Congressman Devin Nunes said: ” I believe, that a Chinese dictator had been to Tibet, and also threatening India, over a billion people and also a nuclear power; threatening India that he’s going to build a big water project, possibly cut off water to India.”   என குறிப்பிட்டுள்ளார்.  ஆகவே சீனாவின் குள்ளநரித் தனம் மீன்டும் தலை தூக்குகிறது.     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *