கிட்டதட்ட 630 நாடுகளை பிடித்து வெள்ளையன் உருவாக்கியது பிரிட்டிஷ் இந்தியா, இரு வகையாக ஆண்டுகொண்டிருந்தான் ஒன்று வெள்ளையன் ஆளுநர், இன்னொன்று வைஸ்ராய்களின் மேலாண்மையினை ஏற்றுகொண்ட உள்ளூர் மன்னர்களால் சமஸ்தானம் என அழைக்கபட்டது, உச்ச அதிகாரம் வெள்ளையனுக்கே.
மெட்ராஸ் ஸ்டேட் எனப்பட்ட பகுதிக்கு கவர்ணர் உண்டு, மைசூர், ஐதரபாத், திருவாங்க்கூர் எல்லாம் சமஸ்தான வகையறா, அதாது இவை 4ம் கலந்துதான் பெரியார் சொன்ன திராவிட நாடு
பிரிட்டன் அரசு கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியாவினை கையகபடுத்திய பின், பிரிட்ட்டிஷ் இந்தியா எனும் வகையில் அவனும் சில உள்ளாட்சி தேர்தல்களை எல்லாம் நடத்திகொண்டிருந்தான், நிலங்களை அளத்தல், ரயில் நிலையம் கட்டுதல் என பல வளர்ச்சிகளும் அதில் இருந்தன. சுதந்திரம் நெருங்க முதல் பிரிவு மத அடிப்படையில் நடந்தது, இந்தியவில் அப்படி பல மாகாணம் பாகிஸ்தானுக்கு செல்ல, இரு மாகாணம் பங்கிடபட்டன, ஒன்று பஞ்சாப் இன்னொன்று வங்கம்
முதல் பிரிவுகள் இப்படி மத அடிப்படையில் நடந்தன.
சுதந்திரம் அடைந்த அடுத்த 3 ஆண்டுகளிலே மொழிவாரியாக மாநிலங்களை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பபட்டது, எழுப்பியர் பெரியார் அல்ல, அவர் திராவிட நாடு வேண்டுமென்றாரே தவிர மொழி அவருக்கு பிரச்சினை அல்ல. அன்று அவரே அண்ணா கும்பல் பிரிந்த கலக்கத்தில் இருந்தார், திமுக அன்று ஏதோ சொல்லிகொண்டிருந்தது, ஆனால் முணுமுணுத்துகொண்டிருந்தது, தமிழ்நாடு எனும் பெயரெல்லாம் கனவில் கூட இல்லை. பொட்ட ராமலு எனும் தெலுங்கர்தான் குளத்தில் முதலில் கல் எறிந்தவர், தனி ஆந்திரம் வேண்டுமென்று முதலில் அடம் பிடித்தவர் அவரே.பின் கமிஷன் அமைக்கபட்டு கன்னடம், கேரள, ஆந்திரம் என அமைக்கபட்டாலும், சென்னை மாகாணம் அதாவது மெட்ராஸ் ஸ்டேட் எனும் பழம்பெயர் தமிழகத்திற்கு தொடர்ந்தது.
இப்போது இருக்கும் தமிழகம் இல்லை அது, திருத்தணியும் சென்னையும் ஆந்திரர்களிடமிருந்தது, மபொசி தலமையில் நடந்த போராட்டமே அதனை மீட்டெடுத்தது
கன்னியாகுமரி மாவட்டம் மார்ஷல் நேசமணி தலமையிலான போரட்டத்தில் தமிழகத்தோடு இணைந்தது. தேவிகுளம் பீர்மேடு எனும் தமிழக பகுதிகளை கேரளம் தர மறுத்தது, கன்னடத்திடம் சில பகுதிகளை இழந்தோம். இது 62 ஆண்டுக்கு இதே நாளில் முன்பு நடந்த சம்பவங்கள். பின் தியாகி சங்கரலிங்கம் இது தமிழ்நாடு என அழைக்கபடவேண்டும் என சொல்லி போராடி செத்தார், பின்னாளில் அண்ணா தமிழ்நாடு ஆக்கினார்.
இன்றும் இந்தியாவில் நாடு என அமைந்திருக்கும் மாநிலம் இது மட்டுமே, அன்றிலிருந்தே டெல்லிக்கும் நமக்கும் இடையே சந்தேக பார்வை உண்டு. உண்மையில் திருப்பதி தொடங்கி திருவனந்தபுரம் வரைக்கும் தமிழக பூமி, கொஞ்சம் பெயர்களை கவனித்தாலே புரியும் திரு என்பதே தமிழக வார்த்தை, தெலுங்கர்களுக்கு சம்பந்தமில்லா வார்த்தை. திருப்பதியும், திரு அனைந்த புரம் எனும் அந்த பகுதியும் தமிழர் நிலமே, சந்தேகமே இன்றி சொல்லமுடியும், இன்றும் திருவனந்தபுரம் வரை உள்ள மலையாளமும், அதற்கு வடக்கே இருக்கும் கொடு மலையாளமே அதற்கு சாட்சி. சரி 60 ஆண்டுகளில் என்ன நடந்திருக்கின்றது?
அன்று எங்களுக்கு சென்னையினை விட்டால் வேறு சொல்லிகொள்ள நகரமில்லை என கதறிய தெலுங்கர்கள் ஐதரபாத்தினை பிரமாண்டமாக உருவாக்கினார்கள், அது தெலுங்கானாவிடம் போன்போதும் இன்று அமராவதியினை கன ஜோராக உருவாக்கிகொண்டிருக்கின்றார்கள். அன்று கன்னடத்தின் மிகசிறிய நகரமான பெங்களூர் இன்று உலகின் முண்ணணி நகரமாயிற்று. நாகர்கோவிலை விட பின் தங்கி இருந்த திருவனந்தபுரம் பெரும் நகரமாயிற்று, கொச்சின், திருச்சூர் எல்லாம் வளர்ந்திருக்கின்றன.
தமிழகத்தின் நிலை என்ன? வெள்ளையன் விட்டுசென்ற அதே சென்னை, நிச்சயம் மும்பை போல வளர்ந்திருக்கவேண்டிய நகரம் அதற்குரிய இடத்தினை பெறவில்லை, விமான நிலையம் கூட இடிந்துகொண்டே இருக்கின்றது
கன்னடமும், கேரளமும், ஐதராபாத்தும் கட்டங்களில் அசத்த நாமோ இன்னும் வெள்ளையன் கோட்டையிலே சட்டமன்றம் நடத்துகின்றோம். அவர்கள் இந்தியும் படித்து தங்கள் மொழியினையும் காத்துகொள்ள, நாமோ இந்தியும் படிக்காமல் தமிழையும் காக்காமல் மொழிகொலை செய்துகொண்டிருக்கின்றோம்,இன்றைய தமிழக தமிழனுக்கு ஒரு மொழியும் உருப்படியாக தெரியாது தமிழ் உட்பட.
நீர் மேலாண்மையில் அவைகள் எல்லாம் தன்நிறைவு பெற்றிருக்க நாமோ அவன் தரவில்லை, இவன் தரவில்லை என அழுதுகொண்டிருக்கின்றோம், தண்ணீர் வந்தால் கடலுக்கு அனுப்புவோம். இரு காரணங்களை உறுதியாக சொல்லமுடியும் ஒன்று சினிமா மோகமும் இன்னொன்று அதன் மூலம் ஆட்சிக்கு வந்த திராவிட அரசியலும். இந்த இரண்டாலும் தமிழகம் அடைந்திருக்கும் நாசம் கொஞ்சமல்ல, ஆந்திரா ராமராவோடு திருந்திற்று ஆனால் மாநில பிரிவு எனும் பெரும் விலை கொடுத்தது. காரணம் இதுதான் இந்திய அரசியல் .ஒரு மாநில கட்சி வளர்ந்தால் மாநிலத்தையே பிரிக்க மத்திய கட்சிகள் தயங்காது, இது ஒருவகை உத்தி ராஜதந்திரம். இன்று ஆந்திராவில் சினிமா நட்சத்திரம் அரசியலுக்கு வரமுடியாது, சிரஞ்சீவியின் வீழ்ச்சி அதனை சொல்கின்றது.
சந்திரபாபு சினிமாக்கரர் அல்ல, ஆனால் சினிமா மூலம் கிடைத்த ஆட்சியினை நல்லாட்சியாக மாற்றிகொடுத்துகொண்டிருப்பவர். கேரளமும், கன்னடமும், தெலுங்கானாவும், சீமாந்திராவும் இன்று வரை தேசிய நீரோட்டத்தில் விலாகது பயணிப்பதும் அவர்களின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் மகா முக்கிய காரணம். இந்தியர்களாக உணர்கின்றனர், வாக்களிக்கின்றனர் அதே நேரம் தம் மாநில நலனை காத்தும் கொள்கின்றனர். தமிழகத்தில் தாங்கள் தனிநாட்டில் இருப்பது போல் நாம் இருக்கின்றோம், இந்திய தேர்தல் என்றால் நாம் கலைஞரை அல்லது அம்மையாரை ஆதரிப்போம், அவர்கள் காங்கிரசை அல்லது பிஜேபியினை ஆதரிப்பார்கள். இதற்கு நேரடியாக மத்திய கட்சிகளை ஆதரித்தால் என்ன என நாம் யோசிக்கமாட்டோம், நாம் அப்படித்தான் . திராவிட அரசியல் அப்படி பல விமர்சனங்களுக்கு உட்பட்டது, இம்மாநிலம் அடைந்திருக்கும் பல கேடுகளுக்கு அவர்கள் காரணம் என்பதை மறுக்க முடியாது, மகா உண்மை.
இன்னொன்று யதார்த்த நிலையில் இந்தியா முழுக்க ஒரு கட்சிஆட்சியும் தமிழகத்தில் தனி கட்சி ஆட்சியும் நடப்பது எப்படி தமிழகத்திற்கு நல்ல பலன் தரும்? ஒரு காலமும் தராது. இது யதார்த்த நடைமுறை .இந்தி படிக்கமாட்டோம், ஈழ புலிகள் ஆதரவு என பல விஷயங்களில் தமிழகம் தனிகொடி பிடித்தே தன்னை சீரழித்தது, சரி ஆள்பவர்களாவது ஒழுங்காக ஆண்டார்களா என்றால் ம்ஹூம். கொஞ்சம் கூட அரசியல் ஞானமில்லா, கேமராவிற்கு முன் கூத்தடிக்கும் கும்பல் எல்லாம் நாடாளதுடிக்க இவர்களே காரணம், கேரளாவிலும் கன்னடத்திலும் இதெல்லாம் சாத்தியமில்லை, அறவே இல்லை. அட உலகில் எங்கும் சாத்தியமில்லை, பின் தங்கிய சோமாலியாவிலோ, ஆப்கனில் கூட சாத்தியமில்லா முட்டாள்தனம் தமிழகத்தில் மட்டும் சாத்தியமென்றால் திராவிட கட்சிகளே முதல் காரணம். மொத்தத்தில் இந்த மொழிவாரி பிரிவினையால் ஒரு மாநிலம் நாசமாக போய்கொண்டிருக்கிறது என்றால் அது தமிழகம் மட்டுமே, ஒரே காரணம் திராவிட கட்சிகள்.
இந்த மொழிவாரி பிரிவுக்கு பின் ஒரே ஒரு இந்திய அடையாளம் தமிழகத்தில் நிறுவபட்டது என்றால் அது விவேகானந்தர் பாறை மண்டபம் மட்டுமே, எப்படி அது அமைக்கபட்டது என்றால் ஏக்நாத் ராணடே எனும் மனிதனின் ராஜதந்திரம் எல்லோர் வாயினையும் கட்டிபோட்டது இல்லை என்றால் வங்கத்து காவி பரதேசிக்கு எங்கள் கடலில் மண்டபமா என கிளம்பியிருப்பார்கள் . ஆக மொழிவாரி மாநிலத்தால் நாம் இழந்தது மகா அதிகம், இன்னும் இழப்போம் இருந்து பாருங்கள். ஆனால் இந்த சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு ஒரு மனிதரை பார்க்கலாம், அம்மனிதருக்கு அன்று வயது 32 இருக்கலாம், பிரமாதமான வசனகர்த்தா கூடுதலாக அரசியல்வாதி. அப்பொழுதுதான் இப்பிரிவினைகள் எல்லாம் நடந்து தமிழ் மாநிலம் உருவாகின்றது,
மற்ற மாநிலங்கள் எல்லாம் தேசிய கட்சிகளை ஏற்றுகொள்ள, தமிழகத்தில் பிரளயமே வெடிக்கின்றது, நேருவே நான்சென்ஸ் என திட்டுகின்றார், பதிலுக்கு அந்த வசனகர்த்தா உனக்கு நோ சென்ஸ் என சொல்ல இந்தியா அதிர்கின்றத. ஒரு கட்டத்தில் தமிழகத்திலிருந்து காங்கிரசை விரட்டி ஆட்சியினை பிடிக்கின்றது அந்த கட்சி, அந்த நபர் முதல்வராகின்றார், அதாவது மாநிலம் அமைந்து 12 வருடம் ஆகியிருந்தது. அதன்பின் அம்மனிதர் பெரும் விஸ்வரூபமெடுத்தார், யாராலும் அவரை தமிழகத்தில் அசைக்கமுடியவில்லை, இந்திராவின் எதிரிகள் கூட அவரை நெருங்கினர். யோசித்த டெல்லி அவர் கட்சியினையே இரண்டாக உடைத்து இனி என்ன செய்வாய்? என்பது போல பார்த்தது. இங்குதான் அம்மனிதரின் ஆற்றல் அப்பட்டமாக தெரிகின்றது. என்ன மாயமோ? என்ன மந்திரமோ? உடைந்த கட்சியும் தேசிய கட்சிகளோடு இணையவுமில்லை, அவற்றை வளரவிடவுமில்லை
இந்திரா தமிழகத்தில் போட்டி இட இருந்ததை இரு கட்சிகளும் நுட்பமாக தடுத்ததே இதற்கு பெரும் உதாரணம்.
இருவரும் மாறி மாறி ஆண்டுகொள்கின்றார்களே தவிர, இன்னொரு கட்சி வளரவோ, தேசிய கட்சிகள் நுழையவோ வாய்ப்புகொடுத்ததே இல்லை. இந்த நுட்பத்தில் ஒன்றும் செய்யமுடியாமல் கையினை பிசைந்த டெல்லி சில வழக்குகளை போட்டு இருவரையும் ஏதோ செய்யபார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. கூட்டணி வைத்து திருப்திபட்டு கொண்டது, அதுவும் பிரயோஜனமில்லை, கருணாநிதியின் பெரும் ராஜதந்திரமிது . ஆக கிட்டதட்ட 50 ஆண்டுகளாக அம்மனிதர் டெல்லி கட்சிகளுக்கு பெரும் சவாலாகவே திகழ்ந்தார், சில இடங்களில் அவை கூட்டு சேர்த்து கட்டியழுகின்றதே தவிர முழு மனதோடு அல்லவே அல்ல. இந்த மொழிவாரி தமிழகத்தின் மிக சுவாரஸ்யமான மனிதர் அந்த கலைஞர் கருணாநிதி.
தன் கட்சி உடைந்து எதிர்கட்சி ஆனபின்பும் பொது எதிரி யார்? என்பதில் எவ்வளவு கவனமாக இந்த நொடியளவும் இருக்கின்றார் பார்த்தீர்களா? அதுதான் கலைஞரின் சாமர்த்தியம். எல்லா மாநிலங்களையும் ஆளும் தேசிய கட்சிகள் தமிழகத்தில் திருவோட்டுடன் நிற்பதும் அவராலே, அவர் ஒருவராலே. இந்த திராவிட ஆட்சிகளால் மாநிலம் அடைந்த நன்மை என்ன என்பது உங்களுக்கே வெளிச்சம். ஆனால் அப்படி ஒரு வில்லாதி வில்லன் 50 ஆண்டுகளாக இம்மாநிலத்தில் சமார்த்தியமாக, அசைக்கமுடியா சக்தியாக பெரும் மாயாவியாக அமர்ந்திருந்தார் என்பது வேறு வகையில் ரசிக்க கூடியது. இது மாறிவிட்ட காலம், அந்நாளில் கொடூரமாக கொள்ளையடித்தவன் அலெக்ஸாண்டர், மாவீரன் என சொல்கின்றோம், காரணம் வென்றுவிட்டான் திறமை. அப்படி இம்மாதிரியான நாகரீகமான உலகில் வாக்குதான் ஆயுதம், அதனை கவர்வதுதான் சாமர்த்தியம். அவ்வகையில் கலைஞர் பெரும் சாமார்த்தியசாலி
மொழிவாரியாக மாநிலங்கள் அமைந்தால் நாட்டில் குழப்பமிருக்காது என மத்திய அரசு நினைத்துதான் பிரித்தது, இல்லையேல் இன அடிப்படையில் விபரீத பிரிவினை நடந்திருக்கும் . மற்ற மாநிலங்களில் அந்த கணிப்பு பலித்தது. ஆனால் தமிழகம் டெல்லியின் தீரா தலைவலியாக மாறிபோனது, அது இன்றுவரைக்கும் தொடர்கின்றது, இன்னும் தொடரும். ஆனால் இதில் தமிழகம் இழந்துகொண்டிருப்பதுதான் அதிகம் , இதனை மக்கள் சிந்திக்கும்பொழுது மாற்றம் நிகழலாம். அதனை விட்டு தனிதமிழ்நாடு தீர்வு என கிளம்புவார்களாயின், கொஞ்சநாளில் தனி பாண்டிய நாடு, தனி கட்டபொம்மன் பாளையம் என குரல்கள் கேட்கும் காலம் வரும்
மானிட மனம் அப்படிபட்டதுதான், அதாவது பிரிய நினைத்தால் பிரிந்து கொண்டே இருக்கலாம், சேர்ந்து வாழ நினைத்தால் வாழ்ந்துகொண்டே இருக்கலாம். ஒற்றுமைதான் பலம் .
உலகில் ஓரளவு இந்தியாவிற்கு மரியாதை இருக்கிறதென்றால் அதன் பெரும் மக்கள் தொகையும், அது கொடுக்கும் பலமுமே மொழிவாரியாக பிரிந்தாலும், இந்தியன் எனும் உணர்வில் ஒன்றாய் இருப்பதே உயர்வுக்கு வழி, அமைதிக்கும் வழி. மொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும், ஆனால் நிச்சயமாக தமிழருக்கு ஒரு நலனும் இல்லை, தொல்லைகள் தான் கூடிகொண்டே இருக்கின்றன.
ஆனால் அவை நிச்சயமாக மாநில அரசியலால் அதிகரித்த தொல்லைகள் என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது.
ஸ்ரீலங்காவின் டபுள் கேமும் இந்தியா வெச்ச பலமான ஆப்பும்!
இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை இந்தியா மதிப்பதில்லை என்று நேபாள், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு ஒரு எண்ணம் எப்போதும் உண்டு. இந்தியா பிக் பிரதர் போல செயல்படுவதாக எண்ணி, இந்தியாவை சரிகட்ட நினைத்து அதன் எதிரியான பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுக்கும். உடனே இந்தியா, சமதானம் செய்துகொள்ள வந்தால் கடன் மற்றும் பல உதவிகளை வாங்கிக்கொண்டு கொஞ்ச நாள் அமைதியாக இருக்கும், அப்புறம் மீண்டும் அதே பூச்சாண்டியை காட்டும். இப்படியே தொடர்ந்து பூச்சாண்டி காட்டி காரியம் சாதித்து காலம் கடத்திக்கொண்டிருந்த நிலையில் பாகிஸ்தன் மிகவும் வலுவிலக்க இவர்களுக்கு எந்த லாபமும் இல்லாமல் போகவே இவர்கள் ஆட்டம் கொஞ்சம் குறைந்தது. இதுதான் இந்தியாவிற்கும் இந்த நாடுகளுக்கு இருந்த உறவின் ஆழம்.
இதில் புது பணக்காரன் சீனா புதிதாக உள்ளே வந்தபோது அந்த சமன்பாடுகள் மீண்டும் மாறியது. சீனா நிறைய கடன் கொடுக்க, நாங்கள் சீனாவின் பக்கம் என்று அணி மாறினார்கள். அதில் சீனாவோடு போகாமல் இருக்க அதை கொடுங்கள், இதை கொடுங்கள், இல்லாவிட்டால் அங்கு போய்விடுவோம் என்று பெரிய ஆட்டமும் போட்டார்கள். அதற்கு தகுந்து இந்தியாவும் அள்ளி கொடுத்தது, போட்டிக்கு சீனாவும் கொடுத்தது.
அப்போது இந்தியாவில் ஆட்சி மாறியது. மோடி பதவி ஏற்கும்போதே, அண்டை நாடுகளை சகோதரனாக அழைத்து மரியாதை தந்தது. ஆனால் அந்த மரியாதையை எல்லாம் பொருட்படுத்தாமல் சீனாவுடன் கை கோர்த்தார்கள். இந்தியாவின் எச்சரிக்கையை மீறி அம்பந்தோட்டாவில் ஒரு பெரிய துறைமுகம் கட்ட சீனா கடன் கொடுத்தது. அதோடு நிற்காமல் அதை நாங்கள்தான் கட்டுவோம் என்று சொல்லி கொடுத்த காசை மீண்டும்ன்எடுத்து கொண்டார்கள். ஆனால் கடன் மட்டும் வட்டி குட்டி போட்டு வளர்ந்து கொண்டே இருந்தது. துறைமுகம் கட்டி முடித்ததும் கடனை திருப்பி செலுத்த கேட்டது. ஸ்ரீலங்காவோ ஒன்றுமில்லாத பாக்கட்டை காட்டியது. விளைவு கடனை திருப்பு செலுத்தாவிட்டால் 99 வருஷத்திற்கு அந்த துறைமுகத்தை லீசுக்கு கொடு என்று சீனா மிரட்டியது.
வழக்கம்போல இந்தியா, சீனாவிடம் இருந்து ஸ்ரீலங்காவினை காப்பாற்ற கடனை கட்டும், இல்லாவிடில் அந்த துறைமுகம் சீனாவோடு போய்விடும் என்று ஸ்ரீலங்கா மிரட்டியது. இந்த துறைமுகம் சீனாவின் கைக்கு போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து வந்துவிடுன் என்பதால் இந்தியாவிற்கு வேறு வழி இல்லை என்று கணக்கு போட்டு காத்திருந்தது.
ஆனால் இந்தியாவோ, எப்படி நமக்கு ஸ்ரீலங்காவோ அது போல சீனாவிற்கு வியட்னாம், அதனுடம் உறவை புதுப்பித்து தென் சீனக்கடலில் எண்ணெய் எடுக்கிறோம் என்று தனது போர்க்கப்பல்களை சீனாவின் மூக்கிற்கு கீழே நிறுத்திவிட்டு, ஸ்ரீலங்காவின் விளையாட்டை கண்டுகொள்ளாமல் விட்டுவிட, அடடா, இது பழைய இந்தியா அல்ல என்று புரிந்து கொள்ளும்போது துறைமுகம் சீனாவின் கைக்கு போய்விட்டது.
சீனாவோ அது தன்னுடைய நாடுபோல தன் ராணுவத்தை அங்கு கொண்டுவர, ஸ்ரீலங்கா மக்கள் கொதித்துபோய் நமக்கு தேவையே இல்லாத இந்த துறைமுகம் நமக்கு எதற்கு என்று அரசுக்கு எதிராக போராட்டம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்தியா வெச்ச ஆப்பால் ஆடமுடியாதா அரசாங்கம் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.
ஆனால் இந்தியாவோ சீனாவின் மூக்குக்கு கீழே தன் போர்க்கப்பல்களை நிறுத்தி விட்டது மட்டுமல்லாம, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாட்டுடன் சேர்ந்து போர் ஒத்திகயை சீனாவுக்கு எதிரிலேயே செய்தது. டென்ஷனாகிப்போன சீனா அரபிக்கடலில் பாகிஸ்தானோடு சேர்ந்து போர் ஒத்திகையை செய்ய, இந்தியா இப்போது 11 நாடுகளுடன் கூடிய போர் ஒத்திகையை தென் சீனக்கடலில் மீண்டும் செய்ய திட்டமிட்டு அதற்கான தேதியும் அறிவித்து விட்டார்கள். சீனாவிற்கு பாகிஸ்தானை தவிர ஏதும் நட்பான நாடுகள் இல்லாததால், அடடா, சும்மா இருந்த சங்கை ஊதிக்கொடுத்துவிட்டோமே என்று சமாதானத்துக்கு ஏதாவது வழி கிடைக்குமா என்று காத்திருக்கிறது. கெடுவான் கேடு நினைப்பான்!
இது காந்தி, நேரு இந்தியா இல்லடா, மோடி இந்தியாடா!
9 வருடங்கள் கர்நாடக காவல்துறையின் உயர் பொருப்பில் இருந்த திரு. அண்ணாமலை IPS அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில மக்களிடம் பேசும்பொழுது “நான் ஒரு பெருமைமிகு கண்ணடன்” என்று பேசிவிட்டாரம், அதனால் நீங்கள் கண்ணடரா?, தமிழரா என்று கேட்கின்றனர்-
ரோமிலிருந்தால் ரோமானியனாக இரு என்பது பழமொழி –
இதையேதான் 1936-ல் பர்மாவில் வாழ்ந்துவந்த தமிழர்கள் மத்தியில் பேசிய பசும்பொன் தேவர் அவர்கள் அவர்களிடம்-
“நான் இங்கு குழுமியுள்ள எனது தாய் நாட்டு மக்களுக்குச் சொல்கிறேன்.-
இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டுள்ள பர்மாவுக்கு விஜயம் செய்துள்ள நான் உங்களுக்குச் சொல்கிறேன் –
இன்று முதல் நீங்கள் பர்மா நாட்டுமக்களோடு மக்களாய் வாழ வழி வகுத்துக் கொள்ளுங்கள் –
இல்லையேல், எதிர்காலத்தில் பல கஷ்ட நஷ்டங்களுக்கு நீங்கள் ஆளாக வேண்டி வரும் –
இங்கே வாழ்ந்து கொண்டு, இந்த நாட்டிற்கு விரோதமாக, அல்லது துரோகமாக செய்யாதீர்கள்-
இங்குள்ள பர்மா வாழ் மக்களோடு சேர்ந்து வாழ்வதும் –
அவர்கள் உணர்வுகளோடு சார்ந்து வாழ்வதும் தான் உங்கள் எதிர்காலத்திற்கும், உங்களது பிற்கால சந்ததியர்க்கும் ஒரு சுமூக உறவையும் வாழ்வையும் அமைத்திட உதவும் ” – என்று பேசினார் –
ஆனால், இதெல்லாம் இங்கேயே வாழ்ந்து கொண்டு பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும், இத்தாலிக்கும் ஆதரவாகப் பேசும் தேச துரோகிகளுக்குத் தெரியாது-
யாராக இருந்தாலும் பிறந்த நாட்டின் மீது பற்று இருக்கலாம், ஆனால் வாழ்ந்துவரும் நாட்டிற்கு உண்மையாக இருக்கவேண்டும் –
தமிழகத்தில் கூட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உயரதிகாரிகளாக இருக்கின்றனர், அவர்களிடமெல்லாம் சென்று இதே கேள்வியை எழுப்புவீர்களா?-
தொட்டாம்பட்டியில் பிறந்த பச்சைத்தமிழரான அண்ணாமலையிடம் நீ தமிழரா என்று கேள்வி கேட்ட ஊடகங்கள் –
“நான் ஒரு கண்ணடியன் பலிஜா நாயுடு” என்று நேரடியாகக் கூறிய ஈவேராவையும்,-
ஆந்திர மாநிலம் ஓங்கோலில் பிறந்த கருணாநிதியையும் கூட தமிழர்களையும், தமிழையும் காக்கவந்த தமிழர்கள் தலைவர்களாகச் சித்தரித்து வருகின்றனர் –
அண்ணாமலை அவர்களைப் பொருத்தவரை அவர் பணி செய்த மாநிலத்திற்கு நேர்மையாகப் பணியாற்றினார், தற்போது தமிழராக பிறந்த மாநிலத்திற்கு சேவை செய்ய வந்துள்ளார், அவரை மக்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்பது போகப்போகத் தெரியும் –
கண்ணடனையும், தெலுங்கனையுமே தலைவர்களாக ஏற்றுக்கொண்டு ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்த தன்மானத் தமிழர்கள் –
பச்சைத்தமிழன் அண்ணாமலையை கைவிட்டுவிடுவார்களா என்ன?-
சிறையில் மாட்டுத் தோலை சுத்தம் செய்ய வைத்து _
தொழுநோய்க்கு ஆட்பட்டு ,
அதன்பின்பும் அதே வேதனையுடன் _
வெள்ளையர்களின் , அரசு ரயிலில் ஏற அனுமதி மறுத்து ,
கால்நடையாகவே நடந்து சென்று சுதந்திரக் கனலைப் பரப்பியவர் ,
நமது சுப்பிரமணியன் சிவாவின் வீடு ,
வத்தலக்குண்டு அக்ரஹாரத்தில் பாழடைந்து கிடக்கிறது –
அந்தக் காலத்திலேயே பாப்பாரபட்டியில் அவர் கட்ட நினைத்த பாரதமாதா கோவில் இன்று வரை கட்டப்படவேயில்லை –
அவர் பிறந்த வத்தலக்குண்டு மண்ணில் அந்த மாவீரனுக்கு ஒரே ஒரு சிலை கூட இல்லை –
எவ்வளவு முயற்றி செய்தும் , கடைசிவரை பாரதமாதாவுக்கு கோயில் கட்ட முடியவில்லையே என்ற மனவேதனையிலேயே இறந்து போனார் .
இவரைத்தான் நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் வீரத்துறவி என்று தமது பேச்சிலே குறிப்பிட்டார் .
ஆனால்
சுதந்திரத்தை எதிர்த்தும் , சுதந்திரதினத்தை துக்கநாளென்றும் கூறி ,
தமிழையும், தமிழனையும் காட்டுமிராண்டிகள் என்று சொன்ன –
கன்னடன் ஈ.வே. ராமசாமிக்கு தமிழகம் எங்கும் சிலைகள் –
சென்னையில் மட்டும் 29 சிலைகள் –
எங்கள் ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதன் சொந்த இடத்தில் ராஜகோபுரத்திற்கு எதிரில் கூட சிலை –
தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜனுக்கு எதிரிலேயே சிலை –
இது போதாதென்று அவன் முறை தவறி சாகும் தருவாயில் மனமுடித்த மணியம்மைக்குக் கூட எழும்பூரில் சிலை –
அவ்வளவு ஏன் –
தமிழகத்தில் இந்துக்களையும், இந்துக் கோவில்களையும் கொன்று குவித்த _
திப்பு சுல்தானுக்கும், ஹைதர் அலிக்கும், திண்டுக்கல் மாநகரில் குளத்தை ஆக்ரமித்து மணிமண்டபம் –
அதற்கு ஒரு SI – இரு காவலர்கள் இரவு பகலாக பாதுகாப்பு நமது வரிப்பணத்தில் –
நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குக் கோபம் வருகிறது –
இந்த நாட்டை 50 வருடங்கள் ஆண்ட திராவிட கட்சிகளின் துரோகங்களை நினைத்தால் –
இனிமேலாவது இந்த மண்ணில் உண்மையான தேசத்தியாகிகளை மதித்து மரியாதை செய்யும் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் –
என்று, சபதமேற்போம் –
பாரதமாதா வாழ்க –
தேசப்பணியில் என்றும்.