தமிழகத்தை சூழ்ந்துள்ள முஸ்லீம்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் எல்லை மீறிய செயல்பாடுகள்
நாடு விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே, முஸ்லீம்கள் தமிழகத்தில் மத மாற்றம் செய்ய முற்பட்டார்கள். இவர்கள் நடத்திய மத மாற்றம் என்பது தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில், உயர் சாதியினரின் சாதி பற்றை வெறி என்பது போல் பிரச்சாரம் செய்தார்கள். இதனால் , உயர் சாதி இந்துக்களின் கொடுமையின் காரணமாக இஸ்லாத்திற்கு மதம் மாறியதாக இவர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் முஸ்லீம்கள் , தமிழர்களோடு இணைந்து வாழ்ந்து வந்தார்கள் என்றும், பாகிஸ்தான் பற்றிய சிந்தனையே கிடையாது என்றும் தி.மு.க. மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் அவ்வப்போது பரப்புரை செய்கிறார்கள். குறிப்பாக திருமா, வை.கோ. வீரமணி, உள்ளிட்ட பிரிவினைவாத சிந்தனையுடையவர்களும் அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். ஆனால் நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, தமிழகத்தில் இந்து முஸ்லீம் கலவரம் நடந்தது. இந்த கலவரங்களுக்கு காரணமே, முஸ்லீம்களின் தனி மனப்பான்மையாகும். இந்த மனப்பான்மையே இன்று வரை இந்து முஸ்லீம் கலவரங்களுக்கு தூண்டுதலாக இருக்கிறது.
மத மாற்றம் மற்றும் மதக் கலவரம்
தமிழகத்தில் முஸ்லீம்கள் மத மாற்றத்தில் முழுமையாக ஈடுபட்டார்கள். தென்தமிழ் மாவட்டங்களில் மத மாற்ற நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடந்துள்ளன. 1925 முதல் 1935 வரை மத மாற்றம் சிவகாசி, கமுதி, தென்காசி போன்ற பகுதிகளில் நாடார்களுக்கும், தேவர்களுக்குமிடையே இருந்த மோதல்களை பயன்படுத்திக் கொண்டு, மத மாற்றத்தில் முஸ்லீம்கள் ஈடுபட்டார்கள். இவர்களின் மத மாற்ற முயற்சியில் , தென்காசி பகுதியில் மட்டும் சில நாடார் குடும்பங்கள் முஸ்லீம்களாக மாறினார்கள். ஆனால் முஸ்லீம் மதத்திற்கு மாறாக, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நாடார்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். கம்பம் நகரத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 1,100 பேர்கள் முஸ்லீம் மதத்திற்கு மாறினார்கள். இந்த மாற்றத்திற்கு ”இஷா அத்துல் இஸ்லாம் ” என்ற அமைப்பு காரணமாயிருந்தது. முஸ்லீம் மதத்திற்கு மாறுவதற்கு நிதி உதவி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1933-ல் இஷா அத்துல் இஸ்லாமின் முதல் மாநாடு கம்பத்தில் நடைபெற்றது, இந்த மாநாட்டில் வெளிப்படையாக, பெரியகுளம் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் இஸ்லாத்தை தழுவக் காத்திருப்பதாகவும், ஊக்குவிக்கப் பணக்கார முஸ்லீம்கள் பண உதவி செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது. அப்துல் ஹக்கீம் இதற்குத் தன்னுடைய வருமானத்தில் பாதியை அளிக்க முன் வந்தார் என்ற செய்தியும் குறிப்பில் உள்ளது. ஆகவே மத மாற்ற பண உதவி செய்யப்பட்டுள்ளது.
இன்று அரசியலில் அதிக ஈடுபாடு காட்டுகின்ற தமிழக முஸ்லீம்கள், 1920களிலும், 1930களிலும் தொடக்க ஆண்டுகளிலும் வெளியாகிக் கொண்டிருந்த ” தாருல் இஸ்லாம்” ” அல்கலாம் ” தாஜூல்-இஸ்லாம்”, ” தத்துவ இஸ்லாம் ” ” ஹிஃபாஸதுல் இஸ்லாம் ” போன்ற தமிழ் முஸ்லீம் பத்திரிக்கைகளில், அரசியலை விட மத விஷயங்களில் தான் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்கள். தமிழக முஸ்லீம்களின் முதன்மையான நோக்கமே, இஸ்லாத்தைப் பாதுகாப்பதும், அதைத் தூய்மைப்படுத்துவதுமே . இஸ்லாத்தின் சார்பிலும், கிறிஸ்துவ மதத்தை எதிர்த்தும், அகமதியர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களின் இஸ்லாத்திற்கு முரணான வழக்கங்களை எதிர்த்தும், சில சமயம் புதியபாணி முஸ்லிம்களுக்கு எதிராகவும் நிறைய கட்டுரைகள் மேல் குறிப்பிட்ட பத்திரிக்கைகளில் அதிக அளவில் வெளி வந்தன.
மத விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டதின் காரணமாவே மத மாற்றங்கள் அதிக அளவில் நடத்த முற்பட்டார்கள். 1930க்கு பின்னர் மத மாற்ற நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெற்றன. மதுரை மாவட்டத்தில் செலியம்பட்டி, நாராயண தேவன்பட்டி, ராமநாதபுரத்தில் கீழக்கரையைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியை அடுத்துள்ள கிராமங்களிலும் மத மாற்றங்கள் நடந்தன. மேலப்பாளையம் வி.எஸ்.தமீம் காசிம் தரகனாரும், தென்காசி எம்.என்.அப்துல் ரகுமான சாகிபும் மத மாற்ற நிகழ்ச்சிகளை அந்தந்த கிராமங்களில் வெகு விமர்சியாக நடத்தினார்கள். மத மாற்ற நிகழ்ச்சியின் போது, பாதுகாப்பு என்ற அம்சத்தை வலியுறுத்தி மத மாற்றத்திற்கு அழைத்தார்கள். தென் ஆர்க்காடு மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த மத மாற்றத்தின் போது, இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், தாங்கள் குறைந்த எண்ணிக்கையில் மத மாறுவதால், தங்களின் இன்னல்கள் தீருமா என சந்தேகம் எழுப்பிய போது. காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் தலைவரான பஷீர் அகமது சையீத் , ஒரு முஸ்லீமுக்கு இன்னல் நேர்ந்தால் மற்ற முஸ்லீம்கள் அவருக்கு உதவ நிச்சயம் முன் வருவார்கள் என்று கூறினார்.
1930-ல் நான்கு இந்து முஸ்லீம் கலவரங்கள் நடந்துள்ளன. சேலத்தில் ஒன்றும், வட ஆர்க்காடு மாவட்டத்தில் வேலூரிலும் நிகழந்தது. சேலத்தில் நடந்த கலவரம், ஒரு இந்துவுக்கும், ஒரு முஸ்லீமுக்கும் நடந்த குஸ்திச் சண்டையின் விளைவாகும். இரண்டு தரப்பினரும் தாங்கள் வெற்றி பெற்றதாக கூறிக் கொண்டதாலும், இந்துக்கள் வெற்றி பெற்ற குஸ்தி வீரரை ஊர்வலமாக அழைத்து சென்ற போது, எரிச்சலடைந்த முஸ்லீம்கள், ஊர்வலத்தில் வந்த இந்துக்கள் மீது கல்லெறிந்து கலவரத்தை ஏற்படுத்தினார்கள். இதே போல் சில இந்துக்கள் முஸ்லிமுக்குச் சொந்தமான ஓர் ஆட்டை விரட்டி விட்ட நிகழ்ச்சியின் காரணமாக கலவரம் நடந்தது. சேலம் கிச்சிப்பாளையத்தில் இந்துத் திருவிழாவின் போதும் கலவரம் நடைபெற்றது, 1930 ஜீன் மாதம் 8ந் தேதி முஹாரம் திருவிழாவின் இறுதிச்சடங்காக ஊர்வலம் ஆற்றுக்குப் போகும் வழியில் தொட்டபாளையம் கோவிலுக்கு முன்னால் முஸ்லீம்கள் இசைத்துக் கொண்டு சென்றதை இந்துக்கள் ஆட்சேபித்ததுதான் வேலூரில் நடந்த கலவரத்திற்கு காரணம். பாதி ஊர்வலம் கோவிலைக் கடந்த பிறகு ஒரு முஸ்லீம் அசிங்கமான செய்கையால் கோவிலை அவமானம் செய்ததாக ஒரு இந்து உரத்தக் குரலில் புகார் செய்ததால் கலவரம் மூண்டது. ( ஆதாரம் முஸ்லீம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி பக்கம் 97)
. முகமது நபியின் பிறந்த நாளின் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசவிருந்த கூட்டத்திற்கு போய் கொண்டிருந்த இந்துக்களுக்கும், அதே வழியில் இறைத்தூதரின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு முஸ்லீம் ஊர்வலமும் எதிர்பாரமால் சந்தித்திக் கொண்டதின் விளைவு கலவரம் ஏற்பட்டது. ( ஆதாரம் முஸ்லீம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி பக்கம் 97) இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம், முந்தைய ஆண்டுகளில் செய்தாற்போல் அந்த ஆண்டு இறைத்தூதரின் பிறந்தநாளில் இந்துக்கள் தங்கள் கடைகளை மூடாததால் கலவரத்திற்கு காரணம் என முஸ்லீம்கள் குற்றச்சாட்டுக்களை வைத்தார்கள். ஆகவே முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் முஸ்லீம்களின் விழாக்களின் போது, இந்துக்கள் கடைகளை அடைக்க வேண்டும் என்ற வெறி கொண்டவர்களாக வாழ்ந்துள்ளார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகும். இதே நிலைதான் தற்போது தமிழகத்தில், வானியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், மேல் விசாரம், ராமநாதபுரம், மேலப்பாளையம், கோவை, தேனி போன்ற பகுதிகளில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் இந்தியன் முஸ்லீம் லீக் தலைவர் முஹம்மது இஸ்மாயில் 1945 தேர்தல் முடிந்த பின்னர் விடுத்த அறிக்கையில், நாம் இந்த தேர்தலில் முன்வைத்த முக்கியமான பிரச்னை மந்திரிசபை அமைப்பதல்ல என்பதை முஸ்லீம்கள் நன்கு அறிவார்கள். முஸ்லிம் லீக் இந்திய முஸ்லிம்களின் உண்மையான பிரதிநிதியா, பாகிஸ்தான் தான் அவர்களது கோரிக்கையா என்பதே முக்கியமான பிரச்னைகள் என்பதை அவர்கள் தெளிவாக அறிவார்கள். ஒரு தனியான, வேறுபட்ட இனமான முஸ்லிம்கள், அவர்கள் பெரும் பான்மையாக இருக்கும் பகுதிகளில் இஸ்லாமியக் கோட்பாட்டின் படி வாழவும், தங்களை ஆண்டு கொள்ளவும் பாகிஸ்தான் கோருகிறார்கள் என்று இன்னொரு அறிக்கையில் கூறினார். ஆகவே 1945க்கு முன்பிருந்தே, முஸ்லிம்கள் தங்களுடைய இஸ்லாமிய கோட்பாடுகளின் படி வாழவும் , தங்களை ஆண்டு கொள்ளவும் முயலுகிறாரர்கள் என்பது உண்மை. இந்த உண்மையை மறைத்து விட்டு, தற்போது நாடகமாடுகிறார்கள். . இதுவே தமிழகத்திலும் பிரிவினைவாதிகளுக்கு துணை போகவும், முடிந்தால் மாப்ளஸ்தான் என்ற பிரிவினையை கோரவும் தயக்கம் காட்டமாட்டார்கள்.
பிரிவினையை முழுமையாக ஆதரித்தவர் முஹம்மது இஸ்லமாயில், 1946 ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் டில்லியில் முஸ்லிம் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முஹம்மது இஸ்மாயில், அப்துல் ஹமீத் கான் மற்றும் சென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில், இந்தியாவில் முஸ்லிம்கள் ஒரு புனிதப் போரின் ( ஜிஹாத்) மத்தியில் இருப்பதாகவும், அவர்களுடைய பண்பாட்டைப் பாதுகாக்க மற்றும் அவர்கள் அமைதியாகவும் கௌரவமாகவும் வாழச் செய்ய பாகிஸ்தானால் மட்டுமே முடியும் என இஸ்மாயில் கூறினார்.
முஹம்மது இஸ்மாயில், பாகிஸ்தான் பற்றியும், தமிழக முஸ்லீம்கள் பற்றியும் கூறிய கருத்து மிகவும் முக்கியமானது. 1947 ஜீன் 9-ம் தேதி மவுண்ட் பேட்டன் திட்டத்தை பற்றி முடிவு செய்ய டில்லியில் அனைத்திந்திய முஸ்லிம் லீக் கவுன்சில் கூட்டம் நடந்தது. இஸ்மாயிலைத் தலைவராக கொண்ட சென்னை முஸ்லீம் லீக் குழு, ஜின்னாவை சந்தித்து, மாப்ளாஸ்தான் கோரிக்கையை பற்றி விவாதித்தது, மாப்ளாஸ்தான் கோரிக்கையை நடைமுறைக்கு ஒவ்வாதென்றும், அதீதக் கற்பனையென்று சொல்லித் தள்ளி விட்டதாக தெரிவித்தார்கள். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய முஹம்மது இஸ்மாயில், பாகிஸ்தான் இந்திய முஸ்லீம்களுக்கு நல்லதென்று வாதித்துக் கீழ்க் கண்ட அறிக்கையை வெளியிட்டார்.
நான் பல தடவை கூறியுள்ளது போல் ஒரு முஸ்லிம் எப்போதுமே முஸ்லிம் தான் – முதலில் முஸ்லிம் தான், இறுதியிலும் முஸ்லிம் தான்…… தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிம்கள் தாங்கள் பெரும்பான்மையாக இருந்த பிரதேசங்களை உள்ளடக்கிய ஒரு சுதந்திர நாட்டைக் கோரியது நியாயம் தான். பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கும் , அவர்களுக்குச் சற்றும் சளைக்காமல், இந்துஸ்தான் முஸ்லிம்களும் பாகிஸ்தானை அடைந்ததற்காகப் பெருமைப்படுகிறார்கள். அது மட்டுமல்ல அவர்கள் அனைவரும் அப்படிப் பெற்ற அந்தப் பாகிஸ்தானைப் பற்றியும் கூடப் பெருமைப்படுகின்றார்கள். நானும் மற்ற முஸ்லிம்களும் நாங்கள் பெற்ற பாகிஸ்தான் சிறந்தது, சுதந்தரமானது, பெருமைமிக்கது என்பதைத் தவிர வேறு வகையானது என்று ஒரு கணங்கூட ஒப்புக் கொள்ள மாட்டோம்.
இந்தப் பாகிஸ்தான் எதிர்காலத்தில் மேலும் புகழ்பெற உள்ளது. நானும் இந்துஸ்தானின் மற்ற முஸ்லிம்களும முழுமையாக திடமாக நம்புகிறோம். பாகிஸ்தான் அந்நாட்டு முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி இந்துஸ்தானின் முஸ்லிம்களுக்கும் நல்லது, தேவையானது என்று , இதுதான் நம்மைப் பாகிஸ்தானுக்காக உழைக்கச் செய்தது. ஜீன் 3ஆம் நாள் திட்டம் ஒர சமரசம்தான் என்றாலும், பாகிஸ்தான் இறுதியில் கிடைத்து விட்டதில் நாம் மிகவும் மகிழ்சி அடைகிறோம்.
பாகிஸ்தான் பிரிவினையை தென்னக முஸ்லீம்களின் பார்வை எவ்வாறு இருந்தது என்பதையும் கவனிக்க வேண்டும். முஸ்லீம்களின் பொருளாதார நலன்களை மட்டுமின்றி, அவர்களுடைய பண்பாடு மற்றும் ஆன்மீக நலன்களைக் காப்பாற்றவும் இந்த கோரிக்கை எழுப்பட்டதாகவே கருதினார்கள். இந்து ஆதிக்கத்துக்குட்பட்ட காங்கிரசிடமிருந்தும் இந்தியாவிலிருந்தும் தங்கள் பொருளாதார நலன்களைக் காப்பாற்றிக் கொள்வதை விடத் தங்கள் மதத்தைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்று தென்னக முஸ்லீம்கள் எண்ணத் தொடங்கினார்கள் என ஜே.பி.பி.மோரே என்பவர் கூறினார்.
இன்று வானளாவ புகழும் எம்.முகமது இஸ்மாயில் தன்னை எப்போதும் முஸ்லீம்மாக தான் கருதினார். இந்தியாவிற்கு ஆதரவாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மாறாக பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தையே பல இடங்களில் கூறினார். 1941 மார்ச் மாதத்தில் பாகிஸ்தான் தினத்தைக் கொண்டாடுவதற்காகச் சென்னையிலுள்ள பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டத்தில், அப்போது சென்னை மாவட்ட முஸ்லீம் லீக்கின் தலைவர் எம். முகமது இஸ்மாயில் , இந்தியா ஒருபோதும், ஒரே நாடாகவே ஒரே அரசாகவோ இருந்ததில்லை என்றும், மொழி அல்லது பண்பாட்டை விட மதம் ஒரு மனிதனின் வாழ்க்கையை அதிகம் பாதிப்பதால் தான் நாட்டை மத அடிப்படையில் பிரித்து விடலாமென்றும் கூறினார். இது காயிதே மில்லத்தின் உண்மை சொரூபத்தை காட்டுகிறது.
சுதந்திர போராட்ட களத்தில் காந்தியுடன் இணைந்து போராட்டங்களை நடத்தியவர்கள் முஸ்லீம்கள் என திராவிட இயக்கத்தின் தலைவர்கள் மேடைதோறும் பிரச்சாரம் செய்கிறார்கள். 1930 ஏப்ரல் மாதம் 13ந் தேதி நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் வேதாரணியத்துக்கு ஊர்வலமாக சென்றவர்களில் ஒருவர் கூட முஸ்லீம்கள் கிடையாது. உப்பு சத்தியாகிரகத்தின் காரணமாக காந்தி கைது செய்யப்பட்ட போது, கைதை எதிர்த்து சென்னை மாகாணம் முழுவதும் ஹர்த்தால் நடந்தது. எந்த மாவட்டத்திலும் நடந்த ஹர்த்தாலில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளவில்லை என்பது மட்டுமில்லாமல் புறக்கணித்தார்கள். காந்தியின் இயக்கம், முஸ்லீம்களுக்கும், நாட்டின் நலனுக்கும் எதிரானதென்று அதைத் தாக்கிப் பல கூட்டங்களை நடத்தினார்கள். தமிழகத்தில் உள்ளுர் முஸ்லிம் தலைவர்களால் நடத்தப்பட்டது. முத்துப்பேட்டை போன்ற பகுதிகளில் சுயமரியாதை இயக்கத் தொண்டர்களும், முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு உப்பு சத்தியாகிரகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள். தோப்புத் துறையில் பள்ளிவாசலின் தர்காவில் தங்கியிருந்த மதுரைவாசி முகமது இஸ்லாமியிலின் தலைமையில் போலீசார், காங்கிரஸ் தொண்டர்களுக்கு உணவளிக்காதிருக்கும்படி பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தனர். ( ஆதாரம் AICC papers file No. G.116/1930, Tamilnadu Satyagraha Report of 12 and 16 June 1930 )
எவ்வாறு உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் முஸ்லீம்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லையோ, அதே போல், அந்நிய துணி பகிஷ்கரிப்பு போராட்டத்திலும் முஸ்லீம்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. பிரிட்டிஷ் துணிகளை மட்டுமல்லாமல் எல்லா வெளி நாட்டுத் துணிகளையும் பகிஷ்கரிக்கும்படி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜாஜி வேண்டுகோள் விடுத்தார். சென்னை மாகாணத்திலும், மற்ற நகரங்களிலும் பெரும்பாலான வெளிநாட்டுத் துணி வியாபாரிகள் முஸ்லிம்களாயிருந்ததால், இந்த பகிஷ்கரிப்பு போராட்டம், முஸ்லிம் நலன்களுக்கு எதிரானது, எனவே தங்களுக்கெதிராக நடைபெற்ற மறியலை முறியடிக்கப் போலீஸ் பாதுகாப்பை முஸ்லீம்கள் நாடினார்கள். இதுவும் சுதந்திரத்திற்காக நடைபெற்ற போராட்டங்களில் கூட முஸ்லிம்கள் தங்களின் சுயநலத்தையே நாடினார்கள் என்பது புலனாகிறது. இப்படிப்பட்டவர்கள் நாடு விடுதலைக்கு பின்னர் பாரத தேசத்தின் மீது எவ்வாறு மதிப்பும் மரியாதையும் வைப்பார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஜின்னா ஈ.வெ.ராமசாமிக்கு எழுதிய கடிதத்தில், தி.க.வின் திராவிட நாடு பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ” உங்கள் மாகாண மக்கள் திராவிடஸ்தானை உண்மையில் விருமபினால், அவர்கள் அதற்காக முயற்சி செய்ய வேண்டும். நான் முஸ்லிம் இந்தியாவின் சார்பில் மட்டுமே பேச இயலும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்களென்று நம்புகிறேன். ஆனால் எங்காவது எப்போதாவது இவ்விஷயத்தில் எனக்குப் பேசும் உரிமை கிடைக்குமானால் , இந்திய மக்களின் எந்தப் பகுதியினரின் – குறிப்பாக தென்னிந்தியாவின் பிராமணரல்லாதரின் – நியாயமான கோரிக்கையையும் நான் ஆதரிப்பேன் என்ற உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ” என்றார். இந்த கடிதத்தின் மூலம், ஜின்னாவும் பெரியாரும் இணைந்து பிரிவினைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க கை கோர்த்துக் கொண்டார்கள்.
முஸ்லீம்களின் மாநாட்டில் கலந்து கொண்டு , இந்துக்களை இழிவாக பேசுவது தற்போது தான் நடைபெறுகிறது என்று எண்ண வேண்டாம். மத மாற்றத்திற்கு துணை போனவர்கள் தி.க.வினர். 1943 ஜீன் 20-ம் தேதி தீண்டாமை ஒழிப்பு நாள் விழாவில் பேசிய ஈ.வெ.ராமாசாமி நாயக்கர், ” தீண்டத்தகாதவர்கள் ஆயிரம் ஆண்டுகள் முயன்றாலும், இரண்டாயிரம் சுயராஜ்யங்கள் கிடைத்தாலும், அவர்களது நிலை மேம்படாது என்று சொல்லித் தனது பிரச்சாரத்தை நியாயப்படுத்தினார். அவர் தீண்டதாகவர்களுக்கு கூறியது, ” ஒரு துருக்கிக் குல்லாவையும், சிவப்பு லுங்கியையும் அணிந்து கொள்ளுங்கள். அப்போது என்ன நடக்கிறதென்னு பாருங்கள்……. இஸ்லாத்தின் பெருமையில்தான், திருவாங்கூர் கோயில் கதவுகள் தீண்டத்தாகவர்களுக்குத் திறக்கப்பட்டன. இருநூறு, முந்நூறு தீண்டத்தகாதவர்கள், கீழ்ச் சாதியினர் இஸ்லாத்திற்கு மாறிய போது, கதவுகள் திறக்கப்பட்ன. நமது இனம் போதிய பிரதிநிதித்துவம் பெறவில்லை. ஆனால் முஸ்லீம்களுக்கு அவர்களது எண்ணிக்கைக்கு அதிக விகிதத்தில் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. அவர்கள் நம்மைவிடப் புத்திசாலிகளா? அந்தத் துருக்கி குல்லாய்க்கும், சிவப்பு லுங்கிக்கும் அவ்வளவு வலிமை” என மத மாற்றத்திற்கு தூண்டியவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்.
மற்றொரு சம்பவத்தை சுட்டிக் காட்ட வேண்டும், முஸ்லீம்களின் மத மாற்றத்தை ஆதரித்து திராவிட கழகமும், அவர்களின் பத்திரிக்கைகளும் இந்த மத மாற்றங்களை ஊக்குவித்தன. தமிழ்நாட்டில் நடந்த பல முஸ்லிம் மாநாடுகளிலும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பங்கேற்றார். பல மாநாடுகளில் தலைமயும் தாங்கினார். ” நான் இந்து , முஸ்லிம் இரு சமூகத்தினருக்கும் இதைச் சொல்லுகிறேன். நான் சொல்வதில் மிகையில்லை. இஸ்லாத்தின் தத்துவம் ஒருக்கால் உலகமக்கள் யாவருக்கும் பொருத்தமாயிருக்கும், அது அண்மையில் தோன்றியதாதலால் அதைச் சீர்திருத்தப்பட்ட மதம் என்று கூறலாம்.
ஆகவே நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, தென்னிந்திய முஸ்லிம்கள், இந்த நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டார்கள். பாகிஸ்தான் , இந்துஸ்தான் முஸ்லிம்களுக்கும் நல்லது என்ற எண்ணத்துடன் செயல்பட்டார்கள். இதன் விளைவு, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உதவியுடன் பல பயங்கரவாத அமைப்புகள் உருவாகியுள்ளன. . தமிழகத்தில், பிரிவினையை ஊக்குவிப்பதும், முஸ்லீம்களின் ஷரியத் சட்டத்தை அமுல்படுத்த முயலுவதும், தி.மு.க. மற்றும் அ.இ.அ.தி.மு.க. வினரிடம் தங்களது நோக்கத்தை நிறைவேற்ற வாக்கு வங்கி அரசியல் நடத்துவதும், தமிழகத்தில் உருவாகியுள்ள புதிய ஆபத்தாகும். இதன் காரணமாக தமிழகத்தில் நடந்த கொலைகள் மற்றும் வன்முறைகளை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தின் சில பகுதிகளில் முஸ்லீம்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக மேல்விசாரத்தில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் கூட, சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மற்றவர்களை தேர்தலில் நிற்க கூட அனுமதிப்பதில்லை. ராமநாதபுரத்தில், முஸ்லீம் அல்லாதவர்கள் உள்ளே நுழைய கூட அனுமதியில்லை என தட்டி எழுதி வைத்ததும், உள்ளுர் மக்கள் முஸ்லீம்களை அனுசரித்து செல்ல வேண்டும் என அரசு அதிகாரிகளும் சுட்டிக் காட்டுகின்றனர். இது பற்றி ஒரு விரிவான விவரங்களை பார்க்க வேண்டும்
சுதந்திரத்திற்கு பின் – தமிழகத்தில் முஸ்லீம் அடிப்படைவாதிகள், சுதந்திரத்திற்கு பின்னர் வன்முறையை ஆயுதமாகக் கொண்டு, ஆட்சியாளர்களை தங்களின் வழிக்கு கொண்டு வருகிறார்கள். இதற்கு முதன்மையான காரணம் வாக்கு வங்கி அரசியல். 1967க்கு பின்னர் குறிப்பாக தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழக முதல்வரே நேரில் சென்று விசாரனை நடத்தும் அளவிற்கு வாக்கு வங்கி அரசியலை கையெடுத்துள்ளவர்கள் முஸ்லீம்கள். தமிழகத்தில் முஸ்லீம்கள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய போது, தி.மு.க. மற்றும் மதசார்பற்ற கட்சிகள் என தங்களை முன்நிறுத்திய கட்சிகள் கூட, அயோத்தியில் பிரச்சினைக்குறிய கட்டிடம் இடிக்கப்பட்டதற்கு பின்பு தான் பயங்கரவாத தாக்குதல் நடந்தன என ஒரு பொய்யான காரணத்தை கூறி, முஸ்லீம்களின் பயங்கரவாத செயலுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள்.
1992 டிசம்பர் மாதம் 6ந் தேதி நடந்த சம்பவத்திற்கு பின்னர் தான் முஸ்லீம்களின் அடிப்படைவாதம் தலை தூக்கியதாக கூறுபவர்களின் கவனித்திற்கு பல சம்பவங்களை சுட்டிக் காட்ட வேண்டும். பொதுவாக தமிழகத்தில் இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் இணக்கமான உறவு இருந்தபோதிலும், தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவில் இரு சமூகங்களுக்கிடையில் வகுப்புவாத ஒற்றுமை மற்றும் வன்முறை சம்பவங்கள் பல நடந்துள்ளன. 1985-ல் கோபால கிருஷ்ணா கமிஷன் அறிக்கையில் பதிவுசெய்த தரவுகளின் படி, 1961 மற்றும் 1971 க்கு இடையில் இந்தியாவில் வகுப்புவாத வன்முறை மிக அதிகமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. இந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் 11 இனவாத வன்முறைகள் நடந்துள்ளன. 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களின் முற்பகுதியிலும் தமிழகத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் முளைத்ததில், இந்த வகுப்புவாத கலவரங்களின் போது சிறுபான்மையினர் சிலர் பலியானதின் விளைவாக. உள்ளூர் அனுதாபிகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்டு, முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புகள் படிப்படியாக வளர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஒரு புதிய அணி உருவாக்கியது.
அரசாங்கத்தின் மிதவாத தன்மையின் காரணமாக முஸ்லீம் பயங்கரவாதம் பெரும் வளர்ச்சி பெற்றது. இது பற்றி கோகுல கிருஷ்ணன் கமிஷன் தனது அறிக்கையில், Due to lapse on the part of police personnel in discharging their duty more vigorously, vigilantly and intelligently , the Muslim Fundamentalists more especially, Al-Ummah cadres were able to explode the bombs at various places.” என குறிப்பிட்டுள்ளார்கள். இதன் காரணமாக கோவையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் அத்வானியின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என உளவு துறை டிசம்பர் 31-ல் அறிக்கை அளித்தும் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பிப்ரவரி மாதம் 13ந் தேதி விருப்பதகாத சம்பவங்கள் நடந்தன.
இந்தியாவில் முஸ்லீம்களின் தாக்குதல் என்பது மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகம் மாறுபட்டது. மற்ற மாநிலங்களில் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவத்தை போல், தமிழகத்தில் 1998ல் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தவிர வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களும் நூற்றுக்கு அதிகமானவர்கள் காயமடைந்த சம்பவங்களும் கிடையாது. ஆனால் திட்டமிட்ட ரீதியில் இந்து இயக்க பெறுப்பாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் பல தலைவர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இதற்குறிய காரணத்தை ஆய்வு செய்தால் நன்கு விளங்கும். கொலைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே ஆளும் தி.மு.க. மற்றும் அ.இ.அ.தி.மு. கட்சியினர் செயல்பட்டார்கள். இவர்கள் ஆதரிப்பதற்கு முதன்மையான காரணம் வாக்கு வங்கி அரசியல்.
1947 ஆகஸ்ட் மாதம் 15ந் தேதி விடுதலைக்கு முன்னர் தமிழகத்தில் கூட கிளாபத் இயக்கத்தின் தாக்கம் இருந்தது. சுதந்திரம் அடைந்த பின்னர் மற்ற மாநிலங்களில் வகுப்பு கலவரங்கள் தொடர்ச்சியாக நடந்தாலும், தமிழகம் அமைதியாகவே காட்சி தந்தது. ஆனால் 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ந் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த 1,200 தலித்துக்களை ஒட்டு மொத்தமாக இஸ்லாமிய மதத்திற்கு மத மாற்றம் நடந்த பின்னர், தமிழகமும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கயமை தனத்திற்கு ஆட்பட்டது. மத மாற்றத்தின் காரணமாக தமிழகத்தில் திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவுர், மதுரை, சென்னை, வட ஆற்காடு போன்ற மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் இந்துக்களை குறிப்பாக தலித்துகளை மத மாற்றம் செய்ய முயன்றனர். இதன் பின்னர் தான் தமிழகத்தில் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் செல்வாக்கு ஓங்க துவங்கியது. அன்றைக்கு ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசு மத மாற்றத்தை தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே முஸ்லீம் அடிப்படைவாதிகளுக்கு ஊக்கம் கொடுப்பதாக அமைந்தது. மத மாற்றத்தை தடுப்பதற்கு இந்து முன்னணி என்ற அமைப்பை துவக்கிய பின்னர், முஸ்லீம்களும், கோவையில் மர வியாபாரம் நடத்தி வந்த சையத் அகமது பாட்சா என்பவர் தலைமையில் அல்-உம்மா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அல்-உம்மா என்ற பெயரை வைத்தவர் அன்று சிமி இயக்கத்தின் மாநில தலைவரும், இன்றைய மனித நேய மக்கள் கட்சியின் தலைவருமான ஜவஹரூல்லா என்பவர். 1992-ல் பிரச்சினைக்குறிய கட்டிடம் இடிக்கப்பட்ட 1993-ல் துவங்கியது அல்-உம்மா அமைப்பு
இம் மத மாற்றத்தை தடுப்பதற்காகவே இந்து சக்திகள் ஒருங்கிணைந்து செயல்பட்ட போது, இஸ்லாமியர்கள் தங்களின் எதிர்ப்பை வன்முறையின் மூலம் காட்ட துவங்கினார்கள். 1992-ம் வருடம் டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் பிரச்சினைக்குறிய கட்டிடம் இடிக்கப்பட்ட பின்னர்தான் தமிழகத்தில் பயங்கரவாதம் தலை தூக்கியது என்று ஆய்வாளர்களும், அரசியல் வாதிகளும் தெரிவிப்பது தவறானது. ஏன்என்றால் 1992க்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்து இயக்கத்தினர் உட்பட்டனர். ஆண்டு தோறும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைகாடு பகவதி அம்மன் கோவிலில் நடக்கும் பொங்கல் விழாவில் 1982-ம் ஆண்டு மார்ச்சு மாதம் 1ந் தேதி கிறிஸ்துவர்கள், கடலில் குளித்துவிட்டு வந்த இந்து பெண்களை மானபங்கப்படுத்தி கலவரத்தை உருவாக்கி துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது, இதில் பலர் படு காயமடைந்த்து மட்டுமில்லாமல் சிலர் மரணமடைய காரணமாகவும் அமைந்த, இதை விசாரிக்க அமைக்க்ப்பட்ட கமிஷன் பல பரிந்துரைகளை செய்தும், அந்த பரிந்துரைகளை தி.மு.க. மற்றும் அ.இ.தி.மு.க. அரசுகள் செயல்படுத்த வில்லை.
தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது கோவையில் மட்டுமே மையம் கொண்டது, பின்னர் திருநெல்வேலியில் மேலப்பாளையம், தேனி, போன்ற பகுதிகளிலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் பயங்கரவாத செயல்பாடுகள் பரவ துவங்கின. ஆனால் அதிக அளவில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வெடி குண்டு தாக்குதல்கள் கோவையில் மட்டுமே நடந்துள்ளது.
தமிழகத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள்:
1981-ல் கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்த திருக்கோவிலூர் சுந்தரம் தாக்கப்பட்ட சம்பவத்திலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் இந்து இயக்கங்களின் பொறுப்பாளர்கள் தாக்கப்பட்டார்கள், சில சம்பவங்களில் கொலை செய்யப்பட்டார்கள். 1984-ல் கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது, செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு, காந்திபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது, இக் கூட்டத்தில் கலந்து கொண்ட திரு.ஜனா கிருஷ்ணமூர்த்தி, திரு.திருக்கோவிலூர் சுந்தரம், மாநில தலைவர் திரு நாராயணராவ், திரு.டி.ஆர்.கோபால் போன்றவர்கள் அரிவாளால் வெட்டப்பட்டார்கள். அதே ஆண்டு அதாவது 18.7.1984ந் தேதி இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் திரு.ராமகோபாலன் அவர்கள் மதுரை ரயில் நிலையத்தில் பயங்கரமான முறையில் தாக்குதல் அவர் மீது நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்பாட்டம் நடத்திய போது கோவையில் முகாம்பிகை மணி, மற்றும் கூடங்குளம் ஜெயராஜ் இருவரும் தாக்கப்பட்டார்கள். இதன் காரணமாக 30.8.1989ந் தேதி தனது இரவு பணியை முடித்து விட்டு வீட்டிற்கு வரும் போது இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்து முன்னணியின் பொறுப்பாளர் வீர கணேஷ் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை தொடர்ந்து, 5.9.1991ந் தேதி வீர கணேஷ் கொலை செய்யப்பட்டது போல், இந்து முன்னணியின் மற்றொரு பொறுப்பாளர் சிவக்குமார் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னர் கோவையில் காவல் துறை ஆணையராக இருந்த திரு.ஜீ.கணேசன் என்பவரும், துணை ஆணையராக இருந்த டி.ராதாகிருஷ்ணன் என்பரும் கோவையில் உள்ள கோட்டை மேடு பகுதியில் வீடு வீடாக சோதனை செய்த போது பெருமளவில் ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன, இதன் காரணமாக கோட்டை மேடு சுற்றி ஆறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன.
1992-ம் வருடம் டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் பிரச்சினைக்குறிய கட்டிடம் இடிக்கப்பட்ட பின்னர் கோவையில் குண்டு வெடிப்பு சம்வங்கள் நடந்தன. இந்த குண்டு வெடிப்பிற்காக அல் உம்மா இயக்கதினர் ஹைதர் அலி, அப்துல் முத்தலிப், முகமது அப்துல் காதர், ஜாகீர் உசைன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் கேரளத்திலிருந்து திருடப்பட்ட கார் மூலமாக அக்டோபர் மாதம் 1997-ல் கோவைக்கு வெடி குண்டுகள் கொண்டு வந்தனர் என காவல் துறையினர் கைது செய்த போது தெரிவித்தார்கள். அயோத்தி சம்பவத்திற்கு பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே 8.8.1993ந் தேதி சென்னையில் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் வெடி குண்டு தாக்குதல் நடத்தியதில் 11 பேர்கள் கொல்லப்பட்டார்கள். 14.4.1995ந் தேதி சென்னையில் சிந்தாரிப் பேட்டை பகுதியில் உள்ள இந்து முன்னணியின் அலுவலகத்தில் குண்டு வெடித்தது, இதில் இருவர் கொல்லப்பட்டார்கள், பையிள் சண்முகம் என்பவர் கொல்லப்பட்டவர்களில் ஒருவராவார்.
தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிக அளவில் நடந்த வருடம் 1997 என்றால் மிகையாகாது. இதற்கு காரணம், 1996-ல் தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற்றது, இத் தேர்தலில் கோவையில் தி.மு.க. சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் திரு சி.டி.தண்டபானி மற்றும் மு.ராமநாதன் போன்றவர்கள் தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், கோவையில் கோட்டை மேடு பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளை உடனடியாக அப்புறப்படுத்தப்டும் என்றார்கள். ஆகவே தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது, திமுகவினர் வெற்றி பெறுவார்கள் என்று தெரிந்தவுடன், கோட்டை மேடு பகுதியில் அமைந்த சோதனை சாவடிகளை வன்முறையின் மூலமாக இஸ்லாமியர்கள் அப்புறப்படுத்தினார்கள். இந்த சோதனை சாவடிகளை அப்புறப்படுத்தப்பட்ட போது அங்கே பணியில் இருந்த இரண்டு போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டார்கள்.
1996-ம் இறுதியில் கோவை சிறையில் வெடி குண்டு தாக்கி ஜெயிலர் பூபாலன் கொல்லப்பட்டார். 1993-ல் சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் வெடி குண்டு தாக்குதலில் கைது செய்யப்பட்ட அல் உம்மா இயக்கதினர் 16 பேர்களுக்கும் ஜாமீன் கிடைத்து விடுதலை செய்யப்பட்டார்கள்.1992-ம் வருடத்திற்கு பின்னர் தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் காளான்கள் போல் துவங்கின. 1993-ல் அல்உம்மா இயக்கம் துவக்கப்பட்டது. எஸ்.ஏ.பாட்சா என்பவரும், பேராசிரியர் எம்.ஹெச.ஜவஹருல்லா என்பவராலும் ஆரம்பிக்கப்பட்டது. கோவையில் உள்ள கோட்டை மேடு பகுதியில் தலைமையகம் அமைந்த்து. 1997-க்குள் தமிழகத்தின் பல பகுதிகளில் அல் உம்மா இயக்கம் துவக்கப்பட்டது, இவ்வாறு துவக்குவதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள இஸ்லாமிய வியாபாரிகளின் ஊக்கமே காரணமாக கூறப்பட்டது. அல் உம்மா இயக்கத்தின் தலைவரான சயீத் அகமது பாட்சா கோவையில் மர வியாபாரம் செய்து வந்தவன். இஸ்லாமியர்களின் நலன்களை காக்க வேண்டியே அல் உம்மா இயக்கம் துவக்கப்பட்டதாக முதலில் கூறினாலும், பின்னர் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதும், இரு தரப்பினரிடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க கட்ட பஞ்சாயத்து செய்வதும் தினசரி வேலையாக மாறிவிட்டது. 1996-ல் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக 15 அல் உம்மா இயக்கத்தினர் ஜனவரி மாதம் 1997-ல் விடுவிக்கப்பட்டார்கள். விடுவிக்கப்பட்டவுடன், மீன்டும் தங்களது பயங்கரவாத செயல்களை செய்வதற்கு முனைந்தார்கள் அதன் விளைவாகவே சில சம்பவங்கள் நடைபெற்றன.
1996-ல் நடு நிலை வகித்த இஸ்லாமியர்களை மிரட்டுவதற்காகவே , சென்னையில் 30.7.96-ல் ஆசியா ஹோட்டல், 27.9.1996-ல் ஹோட்டல் இம்பீரியல், 25.10.1996-ல் லக்கி ஹோட்டல்கள் தாக்கப்பட்டன, இந்த தாக்குதலில் 20க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள், இதன் மூலம் இஸ்லாமியர்களையும் மிரட்டும் முகமாக இந்த தாக்குதல்களை நடத்தியதாக பின்னர் அல் உம்மா இயக்கத்தினர் தெரிவித்தார்கள். 3.12.1997-ந் தேதி உடுமலை பேட்டையில் உள்ள நகராட்சி அலுவலத்தின் மீது வெடி குண்டு தாக்குதல் சம்பவத்தில் 3 பேர்கள் கொல்லப்பட்டார்கள். 6.12.1997-ந் தேதி அயோத்தி சம்பவத்தின் நினைவு தினத்தில் சென்னையிலிருந்து புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ரயில்களில் குண்டு வைக்கப்பட்டு வெடித்ததில் ஐந்து பேர்கள் கொல்லப்பட்டார்கள். 29.8.1997-ல் மதுரை சிறைச்சாலையில் ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் சிறைசாலை வளாகத்தில் கொலை செய்யப்பட்டார். இதே சமயத்தில் காவல் துறை ஆய்வாளர் முரளி மீதான வெடி குண்டு தாக்குதலில் அதிர்ட்ஷவசமாக அவர் உயிர் தப்பினார். 29.11.1997-ந் தேதி எவ்வித ஆவணங்கள் இல்லாமல் உக்கடம் பகுதியில்இரு சக்கர வாகனங்களில் வந்த இஸ்லாமியர்களை விசாரிக்கும் போது எவ்வித ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை, ஆனாலும் தாங்கள் இஸ்லாமியர்கள் எங்கை விசாரிக்க கூடாது என ஆர்பாட்டங்கள் நடத்தி வெளியேறிய போது அருகில் இருந்த போக்குவரத்து காவலர் செல்வராஜ் மீது தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டார். 1997 –ல் நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதம் நடத்திய தாக்குதல்களில் 18 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள், இதற்கு பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே அத்வானி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தெரிகிறது.
14.2.1998ந் தேதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்குகொள்வதற்காக வருகை புரிந்த அத்வானி அவர்களை கொல்லும் விதமாக வெடி குண்டுகள் வைக்கப்பட்டன. தமிழகத்தில் நடந்த வெடி குண்டு தாக்குதல் என்பதும் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய சம்பவம் என்றால் இந்த சம்பவம் மட்டுமே. 19 இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்த்தின் காரணமாக 58 பேர்கள் இறந்தார்கள், 250க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். மேலும் 13 குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. முதன் முறையாக தமிழகம் தொடர் குண்டு வெப்பு சதியைச் சந்தித்தது. இந்த சம்பவத்தில் திரு. அத்வானி அவர்கள் வர வேண்டிய விமானம் கால தாமதமாக வந்த்த்தால் அவர் கடவுள் அருளாள் தப்பினார். கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தி.மு.கவினர், கோவையில் உள்ள அல் உம்மா இயக்கதினர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த போகிறார்கள் என்பதை முன் கூட்டியே தகவல்கள் கிடைத்த பின்னரும், தமிழக அரசு எவ்வித முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.
31.1.1998ந் தேதி மாநில உளவு பிரிவு மாநில அரசுக்கு தகவல் கொடுத்தார்கள், இதை அடுத்து 12.2.1998ந் தேதி அத்வானி வரும் போது தாக்குதல் நடத்தக் கூடும் என்ற தகவல் மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. உளவு பிரிவின் தகவல்கள் கிடைத்த பின்னரும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் எடுக்கவில்லை என்பதற்கு இன்று வரை சரியான விடை கிடைக்கவில்லை. மேலும் கோவை குண்டு வெடிப்பிற்கு முன்னரே 8.2.1998ந் தேதி தஞ்சையில் சாலியமங்கலம் பகுதியில் முகமதியா மில்லிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி குண்டு தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேற்படி சோதனையின் போது குண்டு வெடித்து மில் உரிமையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கூட கோவையில் நடக்கும் பயங்கரவாத செயலுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. 14.2.1998ந் தேதி நடந்த சம்பவத்திற்கு பின்னர் சில தினங்களில் இஸ்லாமியர்களின் வன்முறை சம்பவங்களின் காரணமாக மேலும் 10 பேர்கள் கொல்லப்பட்டார்கள். அல் அமீன் காலனியில் இஸ்லாமியர்களின் குடியிருப்பு பகுதியில் சோதனை நடத்திய போது, வீட்டில் வைத்திருந்த வெடி குண்டு வெடித்து நான்கு பேர்கள் கொல்லப்பட்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், வெடி குண்டுகள் பொதுக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகிலேயே உள்ள மாட்டு வண்டி, இரு சக்கர வாகனங்கள், சைக்கிள், போன்றவற்றில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டன.
10.10.1994ந் தேதி மதுரையில் தனது வீட்டின் வாசற்படியில் அமர்ந்து செய்திதாள் வாசித்துக் கொண்டிருந்து இந்து முன்னணியின் மாநில தலைவர் திரு ராஜகோபாலன் படு கொலை செய்யப்பட்டார். இக் கொலைக்கு காரணம் உள்ளுர் பகை என்று அப்போது காவல் துறையினர் தெரிவித்தார்கள், ஆனால் முழு விசாரணையை முடுக்கி விடும் போது, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்த கொலை நடத்தப்பட்டதாக பின்னர் தெரிவித்தனர். 28.3.1998ந் தேதி அதே மதுரையில் அகில பாரத வித்தியார்த்தி பர்ஷித்தின் பொறுப்பாளராக இருந்த மதுரா கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய கே.ஆர். பரமசிவம் பட்ட பகலில் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலையில் கூட மேலப்பாளையத்தை சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருந்தும், காவல் துறையினரின் பொறுப்பற்ற தன்மையின் காரணமாக கைது செய்த குற்றவாளிகள் நீதிமன்றத்தின் மூலம் விடுதலை பெற்றார்கள்.
திருச்சி காவல் நிலையத்தின் மீது வெடி குண்டு தாக்குதல், 11.12.2000 கோவை உக்கடம் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியது, 2.8.2000ந் தேதி நாகூர் இந்து முன்னணி பொறுப்பாளர் வீட்டிற்கு வெடி குண்டு பார்சல் அனுப்ப பட்டது, தவறுதலாக அவரது மனைவி பிரிக்கும் போது வெடித்து அவர் உயிர் இழந்தார். சைனைட் விஷம் கலந்து இனிப்பு கோவை காவல் நிலையங்களுக்கு பார்சல் அனுப்பட்ட சம்பவம், டைரக்டர் மணி ரத்தினம் வீட்டின் மீது குண்டு வெடிப்பு போன்ற சம்வங்களும் நடந்தன. சென்னை திருச்சி, கோவை போன்ற நகரங்களில் உள்ள காவல் துறை சம்பந்தப்பட்ட அலுவலங்கள், வீடுகளுக்கு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டன. இவைகள் தக்க நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. சென்னை அண்ணா சாலையில் டிபன் கேரியர் வெடி குண்டு வைக்கப்பட்டது. சென்னையில் கொடுங்கையுரில் வீட்டில் விதவிதமான வெடி குண்டுகள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்ட்டது. குமரி மாவட்டத்தில் தேங்காய் பட்டினத்தில் தேங்காய் வடிவில் வெடி குண்டுகள் தயாரிக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. திருச்சியில் டாக்டர் ஸ்ரீதர் கொல்லப்பட்டார், 2005-ல் மதுரைளில் இந்து முன்னணியின் காளிதாஸ் கொல்லப்பட்டார். திண்டுக்கல்லில் மாவட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஆர்பாட்டத்தில் சில கொலைகள் நடந்தன.
2006-ல் தமிழகத்தில் மீன்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கதையாக மாற துவங்கியது. தென்காசி விசுவநாதர் கோவிலுக்கு உரிய இடத்தை இஸ்லாமியர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்ட போது அதை தடுத்தவர் இந்து முன்னணியின் பொறுப்பாளர் குமார பாண்டியன். இதன் காரணமாக 17.12.2006ந்தேதி தென்காசியில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் குமார பாண்டியன் படுகொலை செய்யப்பட்டார், குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்யாததின் விளைவாக, 14.8.2007ந் தேதி தென்காசியில் மேலும் குமார பாண்டியனின் சகோதரர்கள் மூன்று போர்கள் படு கொலை செய்யப்பட்டார்கள் சில காலங்கள் தமிழகம் அமைதியாக காட்சி தந்தாலும், கடந்த ஓர் ஆண்டு காலாமாக ஆறு கொலைகள் நடந்துள்ளன.
தமிழக அரசுக்கு காவல்துறையின் உளவு பிரிவானது,1998-ல் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் போல் மீன்டும் கோவையில் நடைபெறலாம் என அரசுக்கு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்துள்ள சில சம்பவங்கள் உளவுத் துறையினரின் செய்தியை உறுதிப் படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அ.இ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 27.11.2011ந் தேதி மதுரையில் அத்வானியை கொல்ல பைப் வெடி குண்டு வைத்த சம்பவம், இது தொடர்பாக குற்றவாளிகள் தவணை முறையில் காவல் துறையினர் கைது செய்து வருகிறார்கள். இரண்டு ஆண்டு காலமாக தமிழகத்தில் பல் வேறு மாவட்டங்களில் இந்து இயக்கத்தினர் மீது தொடர் தாக்குதல்கள், மேட்டுப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் மீது கொலை வெறித் தாக்குதல், குன்னுரிலும், ஊட்டியிலும் இந்து முன்னணியினர் மீது நடத்திய தாக்குதல்கள், கோவையில் இந்து இயக்கதின் பொறுப்பாளர் வீட்டின் மீது வெடி குண்டு வீச்சு, நாகர்கோவிலில் முன்னாள் மாநில பொறுப்பாளர் மீது நடத்திய அரிவால் வெட்டு, , போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகவே மாறி வருகிறது
2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெங்களுரில் பா.ஜ.க அலுவலகம் அருகில் நடந்த வெடி குண்டு தாக்குதலின் முக்கிய குற்றவாளிகள் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்றும் குறிப்பாக கோவை மற்றும் மேலப்பாளையத்தை சார்ந்தவர்கள் என காவல் துறையினர் தெரிவித்தனர். 1998-ல் கோவை குண்டு வெடிப்பிற்கு பின்னர் தடை செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத்தினர் தற்போது பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் நடமாடி வருகிறார்கள். இந்நிலையில் 2012 ம் வருடம் அக்டோபர் மாதம் சேலம் வழியாக 300 டன் அமோனியம் நைட்ரேட் என்ற வேதிய பொருள் கேரளத்திற்கு கடத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட வேதிய பொருள் கோவைக்கும், தேனி வழியாக மேலப்பாளையத்திற்கும் சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பெங்களுர் மற்றும் ஹைதராபாத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய வெடி குண்டு அமோனியம் நைட்ரேட்லிருந்து தயாரிக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுபான்மையினர் என்ற போர்வையில் வெளிநாடுகளில் நடக்கும் சம்பவங்களுக்கு இங்கே ஆர்பாட்டம் என்ற பெயரில் நடத்தும் செயல்பாடுகள் கூட மத பயங்கரவாத செயலுக்கு அச்சாரமாகவே கருத வேண்டியுள்ளது. . 4.7.2012-ல் நாகப்பட்டினத்தில் பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி கொல்லப்பட்டது, 23.10.2012 ந் தேதி வேலூரில் மாநில மருத்துவ அணியின் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்டது, 19.3.2013 ந் தேதி பரமகுடியில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் முருகன் கொலை செய்யப்பட்டது, போன்ற கொலைகளில் கூட இன்னும் குற்றவாளிகளை கண்டு பிடிக்க இயலாத நிலையில் இந்த அரசு உள்ளது.
தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள்
தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றன. இஸ்லாமிய பாதுகாப்புப் பேரவை, அல்-உம்மா, இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்(சிமி), ஜமாத்அத-இ-இஸ்லாமி-இந்த், எஸ்.ஐ.ஓ. ( மாணவர்கள் இஸ்லாமிய அமைப்பு) , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.எப்.ஐ., தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், அகில இந்திய ஜிகாத் கமிட்டி, தேசிய பாதுகாப்புப் பேரவை, மனுநீதி பாசறை , ட்ரூத் வாய்ஸ் போன்றவற்றுடன், 1998-ம் வருடம் பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவை குண்டு வெடிப்பிற்கு பின் அல்-உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டது, தடை செய்யப்பட்டவுடன் மனித நீதி பாசறை என்ற பெயரில் ஒரு புதிய இயக்கம் துவங்கப்பட்டது. கேரளத்தின் எல்லையில் அமைந்துள்ள கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் மனித நீதி பாசறையின் செயல்பாடுகள் அதிக அளவில் இருந்தன. இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேரளத்தில் உள்ள என்.டி.எஃப்பிடமிருந்து கிடைத்தன. மனித நீதி பாசறையில் செயல்படும் இரண்டு முக்கிய அமைப்புகள் ஒன்று அறிவகம் மற்றது தமிழ்நாடு டெவலப்மென்ட் பவுண்டேஷன் டிரஸ்ட் என்பதாகும். இந்த இரண்டு அமைப்புக்கள் பற்றியும், மனித நீதி பாசறையைப் பற்றியும் துணை டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் திரு. சஞ்சய் அரோரா தெரிவித்த கருத்து மிகவும் முக்கியமானதாகும். மனித நீதி பாசறை ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்கு அதிக அளவில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த அமைப்பில் உள்ள இரண்டு அமைப்புகளும் மனித நீதி பாசறைக்கு உறுதுணையாக இருந்து செயல்படுகிறது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடந்த சம்பவத்தை கூறி இந்த கருத்தை தெரிவித்தார். நெல்லிக்குப்பத்தில் உள்ள தலித்துகளை இஸ்லாமாக மதம் மாற்றி அவ்வாறு மதம் மாறியவர்களை தேனி மாவட்டத்தில் உள்ள முத்துதேவன்பட்டியில் செயல்படும் அறிவகத்திற்கு அனுப்பபட்டு , அறிவகத்தில் மதம் மாறியவர்களுக்கு பயிற்சி எனும் பெயரில் முளை சலவை செய்வது முக்கிய கடமையாகும். இதில் இவர்களுக்கு 1992ல் நடந்த அயோத்தி சம்பவம், 2002-ல் குஜராத்தில் நடந்த கலவரம் போன்றவற்றின் காட்சிகள் அடங்கிய சி.டியை காட்டி ஜிகாதிகளாக மாற்றுவது. இதன் காரணமாக நெல்லிக்குப்பத்தில் சில வீடுகளில் சோதனை நடத்திய போது பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. ஆகவே தமிழகத்தில் இயங்கி வருகின்ற இஸ்லாமிய அமைப்புகள் பயங்கரவாத செயல்களை செய்யும் அமைப்புடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது அரசுக்கும், காவல் துறையினருக்கும் நன்கு தெரிந்தும், நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டும் மர்மம் என்ன என்பது தெரியவில்லை.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும் தென்னகமும் 2014 செப்டம்பர் மாதம் 10ந் தேதி சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் இலங்கை தமிழரான அருண் செல்வராஜன் கைது செய்யப்பட்டான். கைதின் எதிரெலியாக, தமிழகத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ ஊடுருவியதாக ஊடகங்கள் புலம்ப துவங்கி விட்டன. ஏற்கனவே மே மாதம் மன்னடியில் கைது செய்யப்பட்ட ஜாகீர் உசைனிடம் நடத்திய விசாரனையின் அடிப்படையில் அருண் செல்வராஜன் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரனையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் உளவாளி என்பது தெரிய வந்தது. . உண்மையில் தமிழகத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் தூண்டுதல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்தது, நிதி கொடுத்தது போன்ற செயல்பாடுகள் நடந்துள்ளன என்பது உளவு துறையினருக்கு நன்கு தெரியும். 1967 லிருந்து தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திராவிட கட்சிகள் இது பற்றி பெரிய அக்கரை எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. காஷ்மீர் பிரச்சினையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஐ.எஸ்.ஐ இன்று வரை நாட்டின் பல பகுதிகளில் தங்களது கைவரிசையை காட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்ற உண்மை பலருக்கு தெரியாது.
தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் குறிப்பாக அல்-உம்மா கால் ஊன்றிய பின்னர், தங்களது தொடர்புகளை விரிவு படுத்திய போது, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டதாக உளவு துறையினர் தகவல்களை தெரிவிக்கிறார்கள். கைது செய்யப்பட்ட அருண் செல்வராஜ் இலங்கையைச் சார்ந்த தமிழர். இதுவரை ஐ.எஸ்.ஐக்கு உளவு சொல்வதற்கு நியமிக்கப்பட்டவர்கள் என உளவு துறையினர் கைது செய்த மூன்றாவது நபர். தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ யின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பதை பற்றிய ஒரு ஆய்வு செய்தால் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகிறது. இந்த கைது சம்பந்தமாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் விடுத்த அறிக்கையையும் சற்றே ஆய்வு செய்ய வேண்டும்.
உயர் பதவியில் உள்ளவர்களை தூதர்களாக நியமிக்கும் வழக்கம் பாகிஸ்தானில் கிடையாது. ஐ.எஸ்.ஐக்கு மிகவும் நெருக்கமான பத்திரிக்கையாளர் ஹசைன் ஹக்கானி (Hassain Haqqani ) என்பவன் இலங்கையின் ஹைகமிஷனராக நியமிக்கப்பட்டவன். இவனுக்கு பின்னர் பதவிக்கு வந்தவன் பஷிர் வாலி முகமது., பாகிஸ்தான் தனது செயல்பாடுகளை தென்னக பகுதியில் நடத்தும் நோக்கத்துடன் நியமிக்கப்பட்டதாக பல்வேறு நிபுனர்கள் கருத்து தெரிவித்தார்கள். இதற்கு முக்கியமான காரணம் பஷிர் வாலி முகமது, பாகிஸ்தான் உளவுத் துறையின் தலைவராக பதவி வகித்தவர், ஐ.எஸ்.ஐவுடன் நெருங்கிய தொடர்ப்பு கொண்டவர். ஏற்கனவே பஷிர் வாலி முகமது இலங்கையில் பணியாற்றியவன். முன்னர் பணியாற்றிய போது, தமிழகத்தில் உள்ள அல்-உம்மா இயக்கதினரை சந்தித்தது, இந்த சந்திப்பு நடந்த இடம் லன்டன், இதற்கு ஏற்பாடு செய்த இயக்கம் லஷ்கர்-இ-தொய்பாவாகும். , இலங்கையின் கிழக்கு பகுதியில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை பயங்கரவாத பயிற்சி பெறுவதற்காகவே காராச்சியில் உள்ள Mufti Nizamuddin Shamzai Madrasa படிக்கவும், பயிற்சி பெறவும் அனுப்பி வைத்தவன்.
ஐ.எஸ்.ஐ. முத்திரை 2006-ல் கொலும்பில் பஷிர் வாலி முகமதுவை கொல்லும் நோக்கத்துடன் மனித வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தற்செயலாக பஷிர் வாலி முகமது தப்பித்து விட்டார். இந்த செயலை செய்தவர்கள் விடுதலை புலிகள் என்பது பலருக்கும் நன்கு தெரியும். ஆனாலும் இந்திய உளவுத்துறையின் செயல்பாட்டால் தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகளை கசிய விட்டதில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐக்கும், இலங்கை அரசுக்கும் சம்பந்தம் உள்ளது. இதன் காரணமாகவே கொலும்பில் பாகிஸ்தான் உளவுத்துறையை பலப்படுத்துவது என்பது இந்தியாவை சீர்குலைப்பதற்குதான் என்பது வெட்ட வெளிச்சமாகியது. விடுதலை புலிகள் ஏன் பஷிர் வாலி முகமதுவை கொல்ல முயல வேண்டும். விடுதலை புலிகளுக்கு ஆரம்ப காலங்களில் ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் கொடுத்தது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. இது சம்பந்தமாக சுப்பையா என்ற ராவின் பொறுப்பாளர் இந்திய அரசுக்கு தெரிவித்த தகவல்கள் ஊர்ஜிப்படுத்துகின்றன. ஐ.எஸ்.ஐயின் ஆதரவுடன் ஆயுதங்களும், வெடிமருந்துகளும் பாகிஸ்தானின் ஹர்கத்-உல்-முஜாகுதீன் அமைப்பினரால் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டன. ( ஆதாரம் நிழல் வீர்ர்கள் பி.ராமன் பக்கம் 266) இந் நிலையில் விடுதலைப் புலிகள் பஷிர் வாலி முகமதுவை தாக்கப்படுவதற்கு முதன்மையான காரணம், பாகிஸ்தான் அரசு இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு ஆயுதங்கள் வழங்கவும், இலங்கை ராணுவத்திற்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் பாலமாக இருந்தவன் பஷிர் வாலி முகமது என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டது.
. 1998-ம் வருடம் பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவையில் நடத்திய குண்டு வெடிப்பு தமிழக வரலாற்றில் மறக்க இயலாத சம்பவம். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ தான் முதன்மையான காரணம் என அன்றைய பிரதமர் குஜ்ரால் தெரிவித்த கருத்து முற்றிலும் உண்மையானது என கருணாநிதி கூறியதை தற்போது நினைவுப் படுத்த வேண்டும். ராவில் பணியாற்றிய உயர் அதிகாரி கே.பி.பத்மநாபன் தமிழக முதல்வருக்கு தமிழகத்தில் உள்ள தமிழ் புலிகள் அமைப்பும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யும் இணைந்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்களை தெரிவித்தும், அன்றைய முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிபதி கோகுலகிருஷ்ணன் தலைமையில் விசாரனை நடத்திய குழு அளித்த அறிக்கையிலும், சிறப்பு புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரனையிலும் கோவை குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ தான் திட்டம் வகுத்து கொடுத்த்து என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் உளவு பார்ப்பதற்காக, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், தமிழ் பேசும் இஸ்லாமியர்களையே நியமிக்கிறது. இவ்வாறு நியமிக்கப்படுகிறவர்களின் தாயகமாக தமிழகமாக இருக்க வேண்டும் என்றும் பார்க்கிறார்கள். ரகசியமாக அனு ஆயுதங்கள் பாகிஸ்தான் தயாரிக்கிறது என்பதும், அதன் தலைவர் ஏ.க்யு. கான் என்ற விஞ்ஞானி, இந்த விஞ்ஞானிக்கு உதவி புரிந்த இலங்கை முஸ்லிம் புக்காரி சயீத் அபு தகீர் என்பவன் இந்தியாவில் பிறந்த இஸ்லாமியன். ஆகவே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யக் கூடிய வகையில் இருப்பவர்கள் இலங்கை இஸ்லாமியர்கள் என்பது நன்கு தெரிந்த உண்மையாகும்.
2012-ம் வருடம் செப்டம்பர்மாதம் திருச்சி விமான நிலையத்தில் தமீம் அன்சாரி என்பவனை காவல் துறையினர் கைது செய்தார்கள். தன்னை வெங்காய வியாபாரியாக காட்டிக் கொண்டு, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியராக செயல்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தார்கள்.
2013-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் மனியாட்சி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து ஒரு மர்ம தொலை பேசியில் இலங்கையிலிருந்து 35 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் படகின் மூலமாக தமிழக கடற்கரை பகுதியில் புகுந்துள்ளார்கள். அவர்கள் தங்களுடம் ஆயுதங்கள், மற்றும் மேலும் ஆறு பேர்கள் வருவதற்கு வழி வகையும் செய்துள்ளார்கள் என பேசியதாக காவல் துறையினர் தெரிவித்தார்கள். இலங்கையிலிருந்து தொலைபேசியில் பேசியதாகவும், காவல் துறையினர் விசாரனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்கள்.
2014 மே மாதம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் , மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில உள்துறைக்கு அனுப்பிய கடித்த்தில், தங்கள் மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ யின் செயல்பாடுகள் பற்றிய அறிக்கையை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்கள். இதற்கு பதிலாக தமிழகம் மற்றும் காநாடக அரசு பதில் அறிக்கை அனுப்பி இருக்கிறார்கள். இந்த அறிக்கையில் இரு அரசுகள் தெரிவித்துள்ள தகவல்கள், தென்னிந்தாயவில் குறிப்பாக தமிழகம் மற்றும் கர்நாடாகவில் ஐ.எஸ்.ஐயின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன என்பது நன்கு தெரியும். . தமிழகத்தில் அல்-உம்மா அமைப்பும் அதன் சார்பு அமைப்புகளும் வளர்ச்சியடைய அடைய முழு உதவி செய்தவர்கள் ஐ.எஸ்.ஐ அமைப்பினர்.
2014ந் தேதி மே மாதம் ஜாகீர் உசைன் என்ற பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளி சென்னையில் கைது செய்யப்பட்டான். கைது செய்யப்பட்ட ஜாகீர் உசைனுக்கு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பெங்களுர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்காக கோவையை சேர்ந்த ஹக்கீம் என்பவன் கைது செய்யப்பட்டான், இவனுக்கும் ஜாகீர் உசைனுக்கும் தொடர்ப்பு இருப்பது தெரியவந்தது. முழு விசாரனையில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவாளியான ஜாகீர் உசைனுக்கு கொடுக்கப்பட்ட பணி, சென்னையில் உள்ள அமெரிக்க கவுன்சில் அலுவலம் மற்றும் பெங்களுரில் உள்ள இஸ்ரேல் கவுன்சில் அலுவலகம் பற்றி முழு விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டியது. கைது செய்யப்பட்ட ஜாகீர் உசைன் மே மாதம் 1ந் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலை 7.20 மணிக்கு நடந்த இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாவான்.
ஜாகீர் உசைன் விசாரனையில், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியான அமீர் சுபையர் சித்தகி என்பவரின் உத்திரவின் பேரில் தமிழகத்தில் உளவு பார்த்த்தாகவும், கடந்த ஒரு வருடத்தில் பல முறை இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வருகை புரிந்த்தாகவும், மருந்து வியாபாரியாகவும், சில சமயங்களில் ஜவுளி வியாபாரியகவும் வருகை புரிந்ததாக தெரிவித்தான். தமிழகத்தில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி, ஜாகீர் உசைன், அருண் செல்வராஜ் ஆகிய மூவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் தூண்டுதலால் பாகிஸ்தானுக்காக தமிழகத்தில் உளவு பார்த்த்தாக தெரிவித்தார்கள். முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பின் பாகிஸ்தான் நாட்டில் மட்டுமே இயங்கி வந்த ஐ.எஸ்.ஐ., இலங்கையில் தனது அலுவலகத்தை துவக்கி, இலங்கை வி.ஐ.பிகள் இருவர் மூலமாக கள்ள நோட்டு, ஆயுதக் கடத்தல், ஸ்லீப்பர் செல்லுக்கான ஆட்களை பிடிப்பது போன்ற நாசகர வேலைகளை செய்ய துவங்கியுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியா குறிப்பாக தென்னக பகுதிகள். உளவு பார்த்தது மட்டுமில்லாமல், கள்ள நோட்டுகளை புழகத்தில் விடுவதற்கும் வந்ததாகவும் தெரிவித்தார்கள். தமிழகத்தில் குறிப்பாக குமரி மற்றும் ராமநாதபுரத்தில் கள்ள நோட்டு மாற்றியதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோனர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிட தக்கது.
அடுத்த கட்டுரையில் கிறிஸ்துவ மிஷன்களின் செயல்பாடுகள் தமிழகத்தில் ஆபத்தை எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்பதை பார்ப்போம்.
(தொடரும்)
Useful information. Text books prepared by authority do not convey facts.the sale rabbit and frog stories and about description of some wanted things in pulling words are seen.there are intelligent personalities to serve text book services.political means political only.