பாரதம் : நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்

நூலாசிரியர் B.R.மகாதேவன் எழுதியுள்ள முன்னுரை:

பிரிட்டிஷார் இந்துஸ்தானில் கால்பதித்தபோது இங்கு கல்வி, மருத்துவம், கணிதம், வானசாஸ்திரம், விவசாயம், இரும்பு உருக்காலைகள், காகித உற்பத்தி, நீர் புகா பசை தயாரித்தல், கப்பல் பழுது பார்த்தல் என பல்வேறு துறைகளில் உலகின் பிற பகுதிகளைவிட வெகுவாக முன்னேறிய நிலையில் இருந்தது. இந்த மறைக்கப்பட்ட உண்மையை, பிரிட்டிஷாரின் ஆவணங்களைக் கொண்டே உலகுக்கு எடுத்துச் சொன்னவர்களில் மிக முக்கியமானவர் ஸ்ரீ தரம்பால்.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்துஸ்தானியர்கள் எப்படி செயற்கைப் பஞ்சங்களின் மூலம் படுகொலை செய்யப்பட்டனர்; ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தியதாகச் சொல்லிக்கொண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எவ்வளவு சர்வாதிகாரத்துடன் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டனர்; தேசம் முழுவதும் ரயில் பாதைகளை அமைத்ததன் உண்மையான காரணம் என்ன.. அந்த ரயில்வே நிர்வாகத்தில் எந்த அளவுக்கு நிற வெறியுடன் நடந்துகொண்டிருக்கிறார்கள்; இந்துஸ்தானின் சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மிக நிறுவனங்களை எப்படியெல்லாம் சீரழித்தனர் என்பதுபோன்ற விவரங்களை திரு பவன் கே வர்மா, திரு சசி தரூர், திரு ராய் மாக்ஸம், திரு ராஜசேகர் பாசு போன்றவர்கள் மிக விரிவாக அதே பிரிட்டிஷ் ஆவணங்களைக் கொண்டே எழுதியிருக்கிறார்கள்.

இந்தப் புத்தகத்தின் முதல் பாதியில் மேலே சொல்லப்பட்டவர்களின் நூல்களில் இருந்து மேற்கோள்கள் வாயிலாக இந்துஸ்தானின் கடந்த காலப் பெருமைகளும் அவை சீரழிக்கப்பட்டவிதமும் விவரிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாதியில் சுதந்தரம் பெற்றதற்குப் பிந்தைய காலகட்டத்தில் கல்வி, மருத்துவம், சமூக நடைமுறைகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் நாம் செய்துவருபவை என்னென்ன… செய்திருக்கவேண்டியவை என்னென்ன… என்பவை விவரிக்கப்பட்டுள்ளன. இனி வருங்காலங்களில் நம் சிந்தனை எப்படி மாறவேண்டும்? பிரிட்டிஷ் வருகைக்கு முந்தைய காலகட்டத்தில் எட்டிய உயரிய நிலையை எப்படி நாம் மீட்டெடுக்கமுடியும் என்பவற்றின் அடிப்படையில் இந்த இரண்டாம் பகுதி எழுதப்பட்டுள்ளது.

பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டு என்று காலகட்டத்தை இரு பெரும் பிரிவாகப் பிரித்திருப்பதைப்போல் குலத் தொழில் காலம், குலத் தொழில் மருவிய காலம் என்றும் பகுக்கலாம். உலகம் முழுவதுமே குலத் தொழில் சார்ந்த வாழ்க்கை முறையே நிலவிய காலகட்டத்தில் பாரதத்திலும் அதுவே நிலவியது. அதோடு, அந்தக் குலத் தொழில் மரபில் உலகின் அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருந்தது. இதைத்தான் இந்தப் புத்தகத்தின் முதல் பாதியில் இடம்பெற்றுள்ள பிரிட்டிஷ் ஆவணங்கள் அழுத்தமாக, ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டுகின்றன.

பிரிட்டிஷார் அதாவது கிறிஸ்தவர்களுக்கு, தம்மைவிட இந்துக்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்பதைப் பொறுக்கவும் ஏற்கவும் முடியவில்லை. எனவே, நமது மரபார்ந்த அறிவுகள், கலைகள், வாழ்க்கைப் பார்வைகள் அனைத்தையும் இழிவுபடுத்தத் தீர்மானித்தனர். அளவிட எடுத்துக்கொள்ளும் மதிப்பீடுகளுக்கு ஏற்ப, எல்லா சமூகங்களிலும் கடைநிலை குலங்கள் என்று சிலர் இருக்கத்தானே செய்வார்கள். அதுபோல் இந்து சமூகத்தில் கடைநிலையில் இருந்தவர்களைத் தூண்டிவிட்டு அவர்களுடைய அதிருப்தியை அல்லது எதையோ தாம் இழந்ததாக நம்பவைத்து ஒரு மாபெரும் அரசியலை பிரிட்டிஷார் கட்டமைத்துவிட்டனர். இந்த வரலாற்றுத் திருபு வேலைக்கு முதலில் பலியானது அற உணர்வு கொண்ட மேல் ஜாதியினர்தான் என்பதுதான் மிகப் பெரிய வேதனையான நகைமுரண்.  

இந்த இடத்தில்தான் நமது குலத் தொழில் காலகட்டம் பற்றிய தெளிவான பார்வையை நாம் உருவாக்கிக்கொள்வது மிகவும் அவசியமாகிறது. நம் குலத் தொழில் காலம் என்பது நம் முன்னோர்களின் அறிவுச் சேகரத்தை அடிப்படையாகக் கொண்டது. தொழில் குலத்தின் ஒற்றுமையையும் தனி உரிமையையும் சுதந்தரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. உள்ளூர் தேவைகள், உள்ளூர் வளங்கள், உள்ளூர் நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

பரம்பரை வழியாக கைமாறித் தரப்பட்டதென்பது குலத் தொழில் மரபின் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் மட்டுமே. நவீன காலகட்டத்தில் அச்சு இயந்திரம் அதன் அடுத்தகட்டமாக இணையம் போன்றவையெல்லாம் வந்துவிட்ட நிலையில் எந்தத் தொழிலையும் யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள வசதி வாய்ப்புகள் பெருகிவிட்டன. எனவே இன்று எந்தவொரு தொழிலும் குலத்தொழிலாக நீடிக்கவேண்டிய அவசியமில்லைதான். ஆனால், குலத் தொழில் வாழ்க்கையின் பிற அடிப்படையான அம்சங்களான நம் முன்னோர்களின் அறிவு, தொழில் குல ஒற்றுமை, சுதந்தரம், உள்ளூர் தேவைகள், உள்ளூர் வளங்கள், உள்ளூர் நலன் ஆகியவற்றைப் புறமொதுக்கியதில் எந்த புத்திசாலித்தனமும் இல்லை.

நம் தேசத்துக் குலத் தொழிலுக்கு மாறாக நம் தேசத்து நவீன தொழில் முறைதான் பாரம்பரிய மரபில் இருந்து கிளைத்து வந்திருக்கவேண்டும். மேற்கத்திய நவீன தொழில் முறைகள் அவர்களுக்கு உகந்தவை. நாம் அவற்றைப் பின்பற்றுவதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் மிகவும் சொற்பமாகவே இருக்கும்.

நம் நாட்டில் விளையும் இள நீர் பழச்சாறுகள், காய், கனிகள் இவற்றைத்தான் நமது தாகத்தைத் தீர்க்கப் பயன்படுத்தவேண்டும். கொக்ககோலா, பெப்சிகளை அல்ல.

நேற்று குலத் தொழிலாகப் பனை மரம் ஏறியவர் இன்றும் பனை மரம் ஏறிக் கொண்டே இருக்கத் தேவையில்லை. ஆனால், நுங்கும், பதநீரும், கருப்பட்டியும் விற்பனை செய்யும் கார்ப்பரேட் நிறுவனம் நம் ஊரில் உருவாகியிருக்கவேண்டும். ஒவ்வொரு பெட்டிக்கடையிலும் கோக், பெப்ஸி நிறுவனத்தின் குளிர்பதனப் பெட்டிக்கு பதிலாக நம் நாட்டு இளநீர், பதநீர் பிராண்டு உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்.

ஆயுர்வேத, சித்த மருத்துவமே நமது பிரதான சிகிச்சை முறையாகவும் அலோபதி என்பது ஆல்டர்நேட் – மாற்று மருத்துவமுறையாகவும் இருந்திருக்கவேண்டும்.

சுதந்தரம் கிடைத்த பின்னர் இந்த அணுகுமுறைதான் நமக்கு இருந்திருக்கவேண்டும். இந்து மதப் பற்று, ஜாதி நல்லிணக்கம், கிராம சுயராஜ்ஜியம், சுதேசி, எளிமை, தியாகம், இயற்கையோடு இழைந்த வாழ்க்கை, எந்திரமயமாக்கலுக்கு எதிரான சிந்தனை, பசுப் பாதுகாப்பு, சம்ஸ்கிருத மேன்மை முதலான எண்ணம் கொண்ட காந்தி உண்மையில் ஒரு காந்தியவாதியிடம் நாட்டை ஒப்படைத்திருக்கவேண்டும். அல்லது குறைந்தபட்சம் இந்த இந்துப் பாரம்பரிய மதிப்பீடுகள் அனைத்தையும் மறுதலித்த நேருவிடம் ஆட்சியை ஒப்படைத்திருக்கக்கூடாது. முதல் கோணல் முற்றும் கோணலாகிக் கொண்டிருக்கிறது. நாம் சுதாரித்தாகவேண்டும்.

குலத் தொழில் வாழ்க்கை முறை நிலவிய காலகட்டத்தில், நவீன அளவுகோலின்படி பின்தங்கிய நிலையில் இருந்ததாகக் கருதப்பட்ட குலங்களின் பார்வைக் கோணத்தில் (இதுவுமே கடன் வாங்கப்பட்ட சிந்தனையே) பாரத சமூகத்தை மறுகட்டமைப்பு செய்ததுதான் நமது இன்றைய பின்னடைவுகளுக்கு முக்கிய காரணம். அப்படியான இழிவான, கடைநிலைப் பணிகளைச் செய்ய நேர்ந்த சமூகம் மீதான அக்கறை, அவர்களுடைய உரிமைக் குரல் என்ற போர்வையில் இந்து சமூகத்தின் கடந்த கால சாதனைகள் அனைத்தையும் விமர்சித்து ஒதுக்குவதென்பது குழந்தையைக் குளிப்பாட்டப்போனவர் கழுவிய நீரோடு சேர்த்து குழந்தையையும் ஆற்றுக்குள் விட்டுவிடுவதைப் போன்றது. பிறப்பின் அடிப்படையிலான வேலை என்பதை மட்டும் மாற்றிக் கொண்டு குலத் தொழில் மரபின் பிற அனைத்து நல்ல அம்சங்களையும் மீட்டெடுப்பதே நமக்கான முன்னேற்றமாக இருக்கும்.

இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பகுதி அதைப் பற்றியே பேசுகிறது.   

தமிழ் ஹிந்து வலைத்தளத்தில்புதிய பொற்காலத்தைத் தேடி’ என்ற பெயரில் தொடராக வெளிவந்தது. சிற்சில மாறுதல்களுடன் புத்தகமாகியிருக்கிறது.

B.R.மகாதேவன்

மார்கழி ஆருத்ரா தரிசன நன்னாள், 2021,
செம்பாக்கம், சென்னை-73

பாரதம்: நேற்று இன்று நாளை
B.R.மகாதேவன்
ஆதாரம் வெளியீடு,
விலை: ரூ. 170
புத்தகத்தை டயல் ஃபார் புக்ஸ் மூலம் வாங்கலாம். தொலைபேசி மூலம் ஆர்டர் செய்ய – 044-49595818, +91 94459 01234, +91 9445 97 97 97

5 Replies to “பாரதம் : நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்”

  1. மதமாற்ற வெறி ஏன் சில கோஷ்டிகளை ஆட்டிவைக்கின்றது? எங்கள் மதத்துக்கு மாறியே தீரவேண்டும் எங்களை தவிர எல்லோரும் சாத்தான் கூட்டம் என ஏன் மதிகெட்டு அறம்கெட்டு அலைகின்றார்கள், மூட நம்பிக்கைகளில்லாம் மகா கொடிய இந்த மூட நம்பிக்கையின் மூலம் என்ன?

    அதிலும் ஆச்சரியமாக பல மதங்கள் தங்களை தொட்டாலே சீறும் பொழுது இந்துக்களுக்கு ஏன் சகிப்புதன்மை அதிகம்? அவர்கள் ஏன் ஓரணியில் திரள்வதில்லை? மிக சிறிய இனமெல்லாம் பெருவாரி இந்துக்களை ஆள்வது எப்படி எனும் கேள்வி இன்று நேற்று அல்ல அக்காலத்திலே இருந்தது

    இதற்கு வீரசிவாஜி வாழ்வில்தான் பதில் இருக்கின்றது, ஒரு சாதுவிடம் இதே கேள்வியினை கேட்டு கலங்கி நிற்கின்றான் மொகலாய படைகள் அவனை ஒழித்துவிடும் நோக்கில் தேடிகொண்டிருக்கின்றன‌

    பெருவாரி இந்துக்கள் வாழும் இந்துஸ்தானில் இந்து ராஜ்ஜியம் அமைக்க முயன்ற அவனை அந்நிய சிறுபான்மை ஆட்சி ஓட விரட்டிய காலமது

    காசியில் ஒரு ஞானியினை சந்தித்து கலங்கிய கண்களோடு கேட்கின்றான், இங்கு பெருவாரி இந்துக்கள்தானே, அவர்களுக்காக ஒரு தேசம் அமைக்க நான் போராடும்பொழுது பாரத கண்டம் முழுக்க இந்துக்கள் இருந்தும் நான் ஏன் ஓடுகின்றேன்? எதில் சறுக்கினர் இந்துக்கள்? ஏன் பெரும் ஒற்றுமையும் எழுச்சியும் அவர்களிடம் இல்லை?

    ஞானி அமைதியாக கண்களை மூடி சொன்னார்

    “சிவாஜி இந்துக்களின் மதமும் மனநிலையும் முற்றிலும் வேறானது, இந்த சனாதானதர்மம் யாராலும் தோற்றுவிக்கபட்டது என சொல்லமுடியாதபடி ரிஷிகளும் ஞானிகளும் கொடுத்த அற்புதமான ஞானம்
    இது யாரையும் வெறுக்காது, யாரையும் பழி சுமத்தாது, யாருடனும் நீ செய்வது தவறு, நான் செய்வது சரி என வம்புக்கு நில்லாது, இதை செய் சொக்கம் போகலாம் என ஆசைகாட்டாது, நீ பாவி என யாரையும் சபிக்காது, நானே நல்வழியோன் என அது பெருமையும் காட்டாது

    இது எல்லோரும் சாம்பலாக போகின்றோம் எல்லாரும் சிவனின் கைபாவை என்பதை சொல்லி நீறணிந்து வாழ்வினை அதன் போக்கில் தர்மத்தோடு வாழசொல்லும் ஞானமதம்

    ஆனால் மேற்கத்திய தர்மநெறிகள் அப்படி அல்ல, அது ஒரு தனிமனிதனால் தொடங்கபட்டது அவர்கள் இன்னொரு கூட்டத்தை எதிர்த்து அல்லது வெறுத்து வளர்ந்திருப்பார்கள்

    அவர்கள் தொடக்கத்தில் வெகு சிலரே, விரல்விட்டு எண்ணகூடிய வகையில்தான் இருந்திருப்பார்கள், அவர்களை எதிர்தரப்பு நொடியில் அழிக்கும் ஆபத்து உண்டு

    இதனால் தங்கள் மதத்தை அடுத்தவரிடம் பரப்பி அவர்களை தங்கள்வழிக்கு இழுத்தால்தான் நீடிக்க முடியும் எனும் தேவை அவர்களுக்கு இருந்தது, உயிர்தப்பும் அவசியம் இருந்தது

    அதோ அந்த போர்ச்சுகீசியரின் மதமான கிறிஸ்துவத்தை எடு? அதன் மூலம் என்ன? யூதம்
    யூதமதத்தை சாடி அதனை வெறுத்துத்தான் கிறிஸ்தவம் வளர்ந்தது, யூதம் மேலான வெறுப்பு இயேசுவின் கொலைக்கு பின் இன்னும் கூடிற்று

    ஆனால் இயேசுவினையே கொன்ற யூதம் சீடர்களை விடுமா? தங்களை வலுபடுத்த மதம் பரப்பினார்கள் எங்கெல்லாமோ பரப்பினார்கள் ஒரு கட்டத்தில் யூதருக்கு அஞ்சி ரோமரிடம் சரணடைந்து, ரோமரை கிறிஸ்தவராக மதம்மாற்றி ஏற்கவனே பகையில் இருந்த ரோமருக்கும் யூதருக்கும் சண்டையினை ஏற்படுத்தி யூதரை ஒடுக்கி தங்களை வளர்த்தது

    இதுதான் ஏகபட்ட இடங்களில் காணும் விஷயம், ஒன்றை வெறுத்து அல்லது ஒன்றை ஒழிக்க கிளம்பும் மத கொள்கைகளில் மதமாற்றம் உள்ளிட்ட பல விஷயம் அவசியம், அது அவர்கள் காலடிவைக்கும் இடமெல்லாம் அவசியம்

    அதை அவர்கள் செய்தார்கள் அது அரசியலாக்கபட்ட பின் அதனை கொண்டு ஆட்சி செய்யமுடியும் என்ற நிலைவந்தபின் அது வழமையாயிற்று

    இது மேற்காசியா முழுக்க நடந்தது, மிலேச்சரின் கண்டத்தில் நடந்தது அது அவர்கள் காலடி வைக்கும் இடமெல்லாம் தொடர்ந்தது

    அவர்களுக்கு இருப்பதெல்லாம் அச்சம், இதனால் கால்பதிக்கும் இடமெல்லாம் தங்களை வளர்க்க அங்கிருக்கும் அடையாளங்களை அழிப்பார்கள்

    ஆப்கன் வரை அதை அலெக்ஸ்சாண்டர் செய்தான், எகிப்தில் செய்தான் பாபிலோனில் செய்தான். அதைத்தான் இங்கே சமணரும் பவுத்தரும் செய்தார்கள் அதனை தொடர்ந்துதான் மொகலாயரும் ஆப்கானியரும் செய்கின்றார்கள்

    அந்த ஜென்மபூமி சிதைக்கபட்டதும், இதோ இந்த காசியினை முழுமையாக மாற்ற அவுரங்கசீப் முழுமூச்சாய் நிற்பதும் எதற்காக? இவை அழிந்தால்தான் இந்துமதம் பூண்டற்றுபோகும் என்பதற்காக‌
    அம்மாதிரி வழிகள் அவர்களுக்கு அப்படி ஒரு அச்சம் கொடுக்கும், தாங்கள் நிலைக்கவும் ஆளவும் மதம் தங்களுக்கு வழிகாட்டும் என மனமார நம்பி நிற்பார்கள், யோசிக்கும் நிலைக்கு அப்பாற்பட்ட மனநிலை அது

    இது ஒரு இறுக்கத்தை கொடுக்கும் , இந்த இறுக்கம் அந்நியரிடம் உறவு பாராட்ட விடாது , சந்தோஷமாக இருக்கும் உலக இயல்புக்கு எதிரானதாகவே இருக்கும், அவர்களிடம் ஒரு அச்சமும் பயமும் இறுக்கமும் சந்தேகமும் குடிகொள்ளும்

    இதனால் தங்கள் வழிக்கு அடுத்தவர்களை இழுப்பார்களே ஒழிய அடுத்தவரோடு பழகமாட்டார்கள், தங்கள் சமூகத்தை பழகவோ, அவர்களுடன் உண்ணவோ மண உறவுக்கோ சம்மதிக்கமாட்டார்கள்

    காரணம் அப்படி அனுமதித்தால் தங்களின் அடையாளத்தை இழந்துவிடுவோம் வலுத்து பிடிக்கு இந்த கொள்கை உடைந்துவிடும் என அஞ்சுவார்கள்

    ஒரு வட்டமிட்டு வாழும் இறுக்கமான வாழ்வு அவர்களுடையது, ஒரு இனத்தை ஒரு கொள்கையினை எதிர்த்து தொடங்கிய அந்த சிந்தனையின் தாக்கம் அது

    ஆனால் இந்துக்கள் அப்படி அல்ல, இம்மதம் எல்லோரையும் அரவணைக்கும் மதம் இடையில் வந்து இங்கு சனாதான தர்மத்தை குழப்பிய புத்தனை கூட விஷ்ணுவின் அவதாரம் என அரவணைத்த தர்மம்

    இது யாரையும் வெறுக்காது, இன்னொன்று பாரதகண்டம் முழுக்க சனாதானதர்மமே இருந்ததால் இவர்களுக்கு யாரையும் மதமாற்றும் அவசியமும் கிடையாது, இந்த தர்மத்தில் அதற்கான அவசியமே இல்லை

    இம்மதம் தெளிவானது, யாரையும் பயமுறுத்தாது, யாரையும் நீ பாவி என சொல்லாது. கொடும்பாவியே ஆனாலும் அவனுக்கும் மன்னிப்பு உண்டு அவனுக்கும் கடவுளை உணர்ந்தால் முக்தி உண்டு என்பதை சூசகமாக சொல்லும் மதம் இது

    அவர்கள் சொர்க்கம் அடைதல் ஒன்றையே இலக்காக வைத்து எல்லோரையும் பயமுறுத்துவர், பயமுறுத்தல் ஒன்றே அவர்களின் ஆயுதம்

    சனாதானதர்மம் யாரையும் பயமுறுத்தாது

    அவர்கள் தெய்வங்கள் நல்லது செய்தால் சொர்க்கம் தரும் தீயது செய்தால் நரகம் தரும் என அச்சுறுத்தும்படி போதிக்கின்றன‌

    ஆனால் நம் தர்மம் நம் தெய்வங்களை நன்மை தீமைக்கு அப்பால் நிறுத்தியிருக்கின்றது, நன்மை செய்தால் நல்ல கர்மாவுடன் பிறப்பாய் கெட்டது செய்தால் கெட்டகர்மாவுடன் பிற்ப்பாய் கடவுளை உணர்ந்து அகங்காரம் அழிந்து ஞானம் பெறும்வரை இச்சுழற்சி நிகழும் என்பதை சொல்கின்றது

    சிவாஜி இங்கு மானிட பிறப்பு என்பது ஞானம் பெறுவதற்கானது, ஞானம் பெற சோதனை அவசியம்
    அந்த சோதனையினை கொடுப்பவனை சாத்தான் என அவர்கள் தூற்றுகின்றார்கள், நாமோ சோதிப்பவனை சனிபகவானே என வணங்குகின்றோம், நமக்கு ஞானம் கொடுப்பவன் அவன் என கொண்டாடுகின்றோம்
    நம் வழியும் கலாச்சாரமும் ஆழமானது

    ஆசைகளை கொடுப்பது சாத்தான் என அவர்கள் அதற்கு உருவம் கொடுத்து அஞ்சி கடவுளடி தேடினார்கள், நாமோ அவர்கள் ஆசை என சொல்வதை மாயை என்கின்றோம் மாயையினை வென்றால் இறைவனை அடையலாம் என்கின்றோம்

    இந்த மாயையினை வெல்லும் பயிற்சியும் தத்துவமே சனாதான தர்மத்தின் அடிப்படை சாரம், இதில் மானிட ஆத்மாவுக்கு யாரும் எதிரியும் அல்ல நண்பனும் அல்ல, அதன் கையில்தான் அதன் ஈடேற்றம் இருக்கின்றது
    இப்படி ஆழமான தத்துவங்களை சொல்லும் தர்மம் இது

    ந‌மக்கு ரிஷிகளும் ஞானியரும் வேதமும் இன்னும் பலவும் கொடுத்து நமக்கு உண்மையினை உணர்த்தினார்கள், புரியாத விஷயங்களை கூட மானிடருக்கு புரியும் படி ஆண் தெய்வம், பெண் தெய்வம், குழந்தை என மானிட குடும்ப வாழ்வில் உள்ள் பாத்திரங்களை சொல்லி புரியவைத்தார்கள்

    அங்கே அப்படி அல்ல, அங்கு குழப்பங்களும் சிக்கல்களும் அதிகம், வாழ்க்கை முறை வேறானது, அவர்களின் சட்டமும் அவர்கள் வகுத்த அறங்களும் குழப்பமானது

    அந்த குழப்பம் அவர்கள் வாழ்வில் புகுந்தது, அரசில் புகுந்தது, ஏழ்மையானார்கள் செல்வம் தேடி அலைந்தார்கள்

    அதனால்தான் அலெக்ஸாண்டர் முதல் ஆப்கானியன் வரை இங்கே வந்தான்

    அது மிக வளமான பூமி அல்ல, அவர்கள் வாழ மிகபெரிய போராட்டமும் ஓட்டமும் அலைச்சலும் அவசியம், மிகபெரிய மோதல்களும் குழப்ப்பங்களும் அங்கு வந்தன, அங்கு சமூகம் திசைமாறி சென்றபொழுது பிரபஞ்சம் அவர்களை சரிசெய்ய மிகசரியான புண்ணிய ஆத்மாக்களை அனுப்பியது

    அவர்கள் வாழும் வழியினை இறைவனுக்குரிய வழியினை போதித்தார்கள் ஆனால் எவ்வளவு அம்மக்களால் புரிந்து கொள்ளமுடியுமோ அவ்வளவுதான் போதித்தார்கள், உண்மையில் அவர்கள் ஆற்றலும் சிந்தனையும் தவமும் அதிகம் ஆனால் அவர்களை புரிந்துகொள்ள அம்மக்களால் முடியவில்லை

    அவர்கள் காட்டியது அம்மக்களின் வாழ்வுக்கும் இயல்புக்கும் அந்த பிரதேச அமைதிக்கும் சரியான வழி, ஆனால் பின் வந்தவர்களால் சிக்கல் இருக்கலாம்

    அவர்களின் மதங்களின் அடிப்படை உண்மையினை பார் அது இயேசுவோ, நபிபெருமானோ திரும்ப திரும்ப சொல்வது என்ன? “இறையச்சம் கொண்டால் பாவம் தவிர்க்கபடும், கடவுள் கருணையானவர், பாவம் செய்தால் நரகம் நிச்சயம்”

    இதைத்தானே நாம் அன்பே சிவம் என்கின்றோம்

    தண்டனை ஒன்றிற்கு மட்டும் அஞ்சும் மானிடனை நரகத்தை காட்டாமல் நல்வழிக்கு திருப்ப முடியுமா? அதைத்தான் அவர்களும் சொன்னர்கள்

    அடிபடையில் எல்லாம் ஒன்றே சிவாஜி, ஆனால் அந்த சிறு குழு வளரவும் தங்களை பாதுகாக்கவும் அம்மதங்களை பரப்பும் அவசியம் இருந்தது அது இங்குவரை நடந்தது

    அந்தமாதிரியான சூழலில் பெண்களுக்கு ஏகபட்ட சிக்கல் வந்தது, பெண் இல்லா சமூகம் எப்படி பலுகி பெருகும்? அப்பெண்களை காக்க அவர்களை திரையிட்டு மறைத்தார்கள்

    அது முதலில் பெண்ணடிமைதனமில்லை சிவாஜி, ஆலயத்தில் தெய்வசிலையினை நாம் திரையிட்டு மறைத்தல் போலத்தான் செய்தார்கள் பின்னாளில்தான் அவையெல்லாம் மாறிற்று

    ஆனால் நம் சனாதான மத பெண் சுதந்திரம் நீ அறியாததல்ல காரணம் இந்த தர்மம் பெண்களை கொண்டாடியது, அவர்களுக்கு எல்லா உரிமையும் கொடுத்து போற்றி உற்சாகபடுத்தி அவளை மகிழ்ச்சியாய் வைத்து, சபை முதல் கோவில் வரை அவளை வைத்து ஆனந்தம் கொண்டது

    அவர்களின் சித்தாந்தம் அவர்களை குழப்பி வைத்தது, அவர்களின் பாலை நிலம் அவர்களை ஓட வைத்தது
    நமக்கு அப்படி அல்ல இந்துஸ்தானி ஒவ்வொருவனும் அதிர்ஷ்டசாலி அவனுக்கு எல்லாமும் இங்கேயே இருந்தது
    சனாதான தர்ம சிந்தனை அவனை வாழவைத்தது அதனால் அரசுகள் வலுவாயின செல்வமும் வளமும் கொழித்தது
    அதனை நம் வழிபாட்டில் பார், குளித்து முடித்து மலர் சூடி என தொடங்குவதில் இருக்கின்றது நம் நீர் வசதியின் அருமை

    நம் நைவேத்தியங்களை பார், பழம் தேங்காய் என இறைவனுக்கு படைக்கும் விளைச்சல்களை பார், பூ புஷ்பம் சந்தணம் என அதன் செழுமைகளை பார், அப்படி ஒரு வளமான தேசம் இது

    நம் பூஜை முறைகளும் கொண்டாட்டமும் நாம் எப்படி வளமாக ஆசீர்வதிக்கபட்டிருந்தோம் என்பதை காலம் காலமாக காட்டும் சிவாஜி, நம் திருவிழாக்களின் பிரமாண்டமும் நம் பூஜை பொருட்களும் பிரசாதமும் நாம் வாழ்ந்த பெரு வாழ்வின் அடையாளங்கள்

    நடைபாதை பயணிக்கும் சத்திரம் கட்டி இலவச உணவிட்டு மகிழ்ந்த தர்மம் நம்முடையது, புற இனங்களில் இவையெல்லாம் காசு, தொட்டதெற்கெல்லாம் பணம், நாம் தர்மத்தை மட்டும் நோக்கும் இனம் சிவாஜி

    இதனால் படையெடுத்து வந்தவர்கள் மனநிலைக்கும் அவர்கள் தேவைக்கும் அச்சத்துக்கும் பெரும் காரியங்களை செய்துதான் தீரவேண்டும் அதை முழு கவனமாய் செய்தார்கள்

    இந்துவுக்கு இது புரியாது, அவன் தர்மமும் அவன் சிந்தனையும் வேறு, அவன் சுதந்திரமானவன் அவனின் சனாதன தர்மம் அதை அவனுக்கு கொடுத்திருக்கின்றது

    ஆனால் அந்த பெரும்தன்மையில் அவன் இந்த ஆபத்துக்களை மறந்தான் அதை எடுத்து சொல்வாரும் யாருமில்லை

    ஒரு கதை உண்டல்லவா சிவாஜி

    ஒரு அன்னபறவை மலை உச்சியில் கூடுகட்டி பாதுகாப்பாய் வாழ்ந்தது, அந்த கூட்டை யாரும் நெருங்கமுடியா உச்சி அது

    அந்த அன்னம் ஒரு காகத்துக்கு பெரும்தன்மையாய் இடம் கொடுத்தது காகம் பழங்களை தின்று போட்ட எச்சத்தில் ஒரு மரம் வளர்ந்தது, அந்த மரம் என்ன செய்யும் அதுவும் அடியாளத்தில் வளரும் மரம் என்ன செய்யும் என அன்னம் காகத்தை தொடர்ந்து இடமளித்து காத்தது, காகத்தின் எச்சத்தில் மரம் வளர்ந்தது
    அம்மரம் ஒருநாள் அன்னத்தின் கூட்டை எட்டியது, அம்மரம் மூலம் பாம்பும் இதர விலங்கும் அன்னபறவை கூட்டுக்கு வந்து அதன் குஞ்சுகளை விழுங்கின”

    இதுதான் இந்துக்கள் நிலை பெருந்தன்மையாய் இடம் கொடுத்துவிட்டு வளரும் ஆபத்து தெரியாமல் அலட்சியமாய் விட்டுவிட்டு பின் அலறுவது

    இன்றும் கவனி சிவாஜி, மேற்கத்திய மதங்கள் சிறுகுழுவாய் இருந்து வளர்ந்ததால் அவர்கள் ராணுவ கட்டுகோப்பு கொண்டவர்கள் அவர்களுக்கு ஒரு தலைவன் அவர்கள் மேல் ஒரு தலைவன் என அந்த அமைப்பு ஒரு அரசநிர்வாகம் போலிருக்கும்

    இந்துக்கள் வானத்து பறவை சாயல் கடல் மீன்கள் சாயல் அவர்களுக்கு அமைப்போ கட்டுபாடோ தலைவனோ இல்லை

    இங்கு அவர்களை முறைபடுத்து, அவர்களுக்கும் தலைவனை உருவாக்கு, நீ முதல் தலைவனாய் இரு
    ஒரு பெரும் நெருப்பு அணையும் நேரம் கடைசி கணல் துண்டு போல் நீ வந்திருக்கின்றாய், நீதான் இனி இங்கு பெரும் தீயினை மறுபடி எழுப்ப வேண்டு, அந்த தீயினை உன் நெஞ்சில்தான் பிரபஞ்சம் ஏற்றி வைத்திருக்கின்றது

    முதலில் இந்துக்களுக்கு உலக மாறுதலை காட்டு, சொல்லி கொடு ஆப்கானில் இருந்து வந்தவர்கள் மிலேச்ச கண்டத்தில் இருந்து வந்தவர்களை காட்டி இவர்களுக்கும் மதம் உண்டு அதற்கும் பெரும் ஆபத்து உண்டு என உணர வை

    இந்துக்கள் தங்களை உணராதவரை, தங்களின் இயல்பில் சில திருத்தங்களை செய்யாதவரை, தாங்கள் தங்களை காக்கவேண்டிய அவசியத்தை உணராதவரை இங்கு எதுவும் மாறாது

    சிவாஜி வாள்முனையில் நீ ஒரு இந்துசாம்ராஜ்யத்தை ஏற்படுத்தினால் அது உன்னோடு அழியும், மாறாக ஒவ்வொரு இந்துவினையும் யோசிக்க வை, அவனை யாரென உணரவை, தன்னையே மறந்துவிட்ட அவனுக்கு அவனை யாரென காட்டு, அது போதும்

    இந்துவுக்கு அவன் வரலாற்றை சொல், அவன் முன்னோரின் ஞானத்தை சொல், இந்துமதம் எவ்வளவு உயர்வானது என்பதையும் அது செழித்த காலத்தில் இத்தேசம் எவ்வளவு செழிப்பாய் இருந்தது என்பதையும் சொல்

    ஒரு இந்துவுக்கு அம்மதத்தை காக்கும் கடமையும் தன் மண்ணையும் அதன் தாத்பரியத்தையும் காக்கும் பெரும் பொறுப்பு உண்டு என்பதை உணரவை, அவனுக்கு உணர்ச்சியும் அறிவும் தெளிவும் கொடு, அதற்குத்தான் நீ படைக்கபட்டாய், அந்த கர்மாவினை செய்யத்தான் உனக்கு இங்கு வாய்ப்பும் வழங்கபட்டிருக்கின்றது

    அந்த அறிவு கிடைத்துவிட்டால் உன் காலத்துக்கு பின்னும் கால காலத்துக்கும் அந்த எழுச்சி நிற்கும் அதுதான் உண்மையான மாற்றத்தை நீடித்த காலம் கொடுக்கும், அதில்தான் இந்துஸ்தான் தன் பொற்காலத்தை மீட்டெடுக்கும்

    சிவாஜி வாளேந்துவதும் கோட்டையும் சேனையும் ஒருவகை போர் ஆனால் அதைவிட முக்கியம் ஒவ்வொரு இந்துவின் ஆன்மாவினையும் தட்டி எழுப்பி அதன் இந்து பாரம்பரியத்தை உணரவைப்பது, அதை செய் அதை செய்

    அது போதும், மாபெரும் எழுச்சி உன் மண்ணில் இருந்து எழுந்து வந்து இந்த தேசத்தை மாற்றும், நீ செய்யவேண்டியது போர்களும் சண்டையுமல்ல, எதற்காக நீ சண்டையிடுகின்றாய் எனும் நோக்கத்தை ஒவ்வொரு இந்துவிடமும் கொண்டு சேர்ப்பது அதைத்தான் நீ செய்யவேண்டும்

    அதன்பின் உன் யுத்தம் சாதிக்காததையெல்லாம் இந்த இந்துக்களின் ஆன்ம எழுச்சி சாதிக்கும்

    இங்கு அந்நியர் வந்ததையோ மதம் மாற்றி நம்மை இம்சிப்பதையோ கஷ்டம் என கருதாதே, நம்மை நமக்கு யார் என காட்ட சிவன் அனுப்பிய கூட்டம் இவை என கருதிகொள், அதற்கு சிவனுக்கு நன்றி சொல்

    இவர்கள் வந்து நம்மை உசுப்பிவிடாவிட்டால் நம்மை நாம் யாரிடம் சென்று நிரூபிப்போம்? நம் தாத்பரிய பெருமையும் மிகபெரும் ஞானமும் மாபெரும் உன்னத சித்தாந்த வாழ்வியலும் எப்படி உலகெல்லாம் விளங்கும்?

    எல்லாம் நன்மைக்கே அஞ்சாதே கலங்காதே, சிவனின் ராஜாங்கத்தில் நாமெல்லாம் கருவிகள், எதுவும் நம்மால் ஆவதில்லை, எல்லாம் அவன் விருப்படி நடந்துகொண்டிருக்கின்றன அவ்வழியில் உன்னை ஒப்படைத்து மென்மேலும் நடந்து கொண்டே இரு

    விதைப்பதுதான் உன் பொறுப்பு விளைச்சலுக்கு சிவனே பொறுப்பு, கடமையினை மட்டும் செய், கலங்காமல் செய்”

  2. உலக அரங்கில் ஆயுத அரசியல், வியாபார அரசியல், உளவு அரசியல் போல பிரதானமானது சினிமா அரசியல்

    இந்த ஆஸ்கர் என்பதும் உலகளாவிய படங்கள் என்பதும் சில அடிப்படை இலக்கணங்களை கொண்டவை, அவை இருந்தால்தான் விருதும் அங்கீகாரமும் நிச்சயம்

    அதாவது படங்கள் எக்காலமும் மேற்கு நாடுகளுக்கு எதிரானதாக இருக்க கூடாது, கிறிஸ்துவத்துக்கு எதிரானதாக இருக்க கூடாது, கிழக்கு நாடுகளின் அரசு சரியில்லை அரசாங்கம் சரியில்லை மக்கள் புரட்சிக்கு ஏங்குகின்றார்கள் எங்கும் வறுமை அழிவு சண்டை ஊழல் இப்படி சில இலக்கணம் வேண்டும்

    இது இல்லாவிட்டால் அங்கு அங்கீகாரமில்லை இன்னும் சில பக்கம் உண்டு அதாவது ஹிட்லர் தரப்பு நியாயத்தை கூட அங்கு படமாக்க முடியாது

    அங்குள்ள அரசியல் அப்படி

    இந்த அரசியலில்தான் அறியாமை மிகுந்த நாடுகளில் சில நாட்டு உளவுதுறைகள் அல்லது மதமாற்ற சக்திகள் நுழைகின்றன, அங்கு சினிமாவிலும் பத்திரிகையிலும் அவை “புரட்சி” “சமதர்மம்” என நுழைகின்றன‌

    நுழைந்தவை சில இம்சை தேசதுரோக டைரக்டர்களை பிடித்து உன் நாட்டு காவல்துறை, அரசு, சமூகமெல்லாம் கேவலபடுத்தி ஒரு படம் எடு என காசை அள்ளி எறிகின்றன‌

    இதற்கு ஸ்லம்டாக் மில்லியனர் என்றொரு படம் பெரும் உதாரணம், அது ஆஸ்கரை வாங்கியிருக்கலாம் ஏ.ஆர் ரகுமானுக்கு கூட விருது பெற்று கொடுத்திருக்கலாம்

    ஆனால் கதைகளம் இந்திய சேரிகளின் ஏழ்மை பற்றியது இந்த தாக்கம்தான் அங்கே அவசியம், இதை காட்டி மதமாற்ற நிதி இதர நிதிகளை பலரால் ஐரோப்பாவில் வசூலிக்க முடியும்

    இப்பொழுது இக்கரங்கள் தமிழ்சினிமா பக்கமும் வந்திருக்கலாம் தமிழக காவல்துறை இந்திய அரசமைப்பு என எதெல்லாமோ புரட்சி படம் என எடுக்கபட்டு ஐரோப்பாவில் விற்பனையாகின்றன‌

    இது இந்தியா பற்றி தவறான கண்ணோட்டத்துக்கு வழிவகுக்கும்

    உலகில் இஸ்ரேல், ரஷ்யா, சீனா இதர இறுக்கமான நாடுகளில் இம்மாதிரி படங்களை எதிர்பார்க்கவே முடியாது தொலைத்துவிடுவார்கள்

    ஆப்கன், பாகிஸ்தான், இதர அரபுநாடுகளில் இதெல்லாம் சாத்தியமே இல்லை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாய்ப்பே இல்லை

    வடகொரியாவில் இப்படி ஒருவன் சிந்தித்தாலே அவனை ராக்கெட்டில் கட்டி அனுப்பிவிடுவார் அதிபர் கிம்

    அருமை இந்தியாவில் சுதந்திரம் அதிகம், அந்த சுதந்திரத்தில் நுழைந்த்து இப்படி தேசத்தின் நற்பெயரையும் அதன் அதீத சுதந்திரத்தையும் காசுக்கு விற்கும் கூட்டமும் அதிகம்

    இந்தியாவில் சட்டம் கடுமையாக்கபட வேண்டும் அல்லது கருத்து சுதந்திரம் எனும் பெயரில் தேசத்தின் நற்பெயரை உலக அரங்கில் கேவலபடுத்தும் இக்கோஷ்டி மேல் நடவடிக்கை வேண்டும்

    உளவுதுறையில் ராணுவ, பொருளாதாரபிரிவு போல ஊடகங்கள் சினிமாவில் இருக்கும் அந்நிய சக்திகளை கண்டறிய இன்னொரு உளவுபிரிவும் அவசியம்

    இது கடுமையான குற்றம், சினிமா எனும் பெயரில் நாட்டின் நற்பெயரையும் நற்தோற்றத்தையும் உலக அரங்கில் களங்கபடுத்தி சேறு பூசுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது

    சினிமா எனும் பெயரில் இங்கு நடப்பது அப்பட்டமான தேசவிரோதம், அதை முறியடிக்க அரசு எல்லா அதிகாரங்களையும் பயன்படுத்தவேண்டும் அதை அவசரமாக செய்யவேண்டும் நிலமை எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றது

  3. ஒரு வல்லரசு இன்னொரு நாட்டில் கால்பதிக்கும் பொழுது பல்வேறு விஷயங்களை சிக்கல்களை எதிர்நோக்க வேண்டும், அதுவும் தன் அண்டைநாட்டில் கால்வைக்கும் பொழுது பலத்த சர்ச்சைகள் உருவாகும்

    1950க்கு பின்னரான காலங்களில் மிகபெரிய ஆக்கிரமிப்பு திபெத்தை சைனா விழுங்கியது, அந்நேரம் உலகம் பெரும் யுத்தம் முடிந்த களைப்பில் ஓய்வில் இருந்ததால் விஷயம் பெரிதாக வெளிவரவில்லை அதன் பின் ஆக்கிரமிப்புகளெல்லாம் யாரும் யோசிக்கமுடியாது

    பெரும் உதாரணம் சதாம் உசேன், அவர் மட்டும் சோவியத் காலத்திலே காட்சிகளை நடத்தியிருந்தால் இன்றுவரை நீடித்திருக்கலாம், அமெரிக்காவின் அடிமைகளில் ஒன்றான குவைத்தை சோவியத் இல்லாமல் ரஷ்யா பலகீனமான காலத்தில் அவர் பிடித்ததுதான் அழிவுக்கு காரணம்

    இன்று உக்ரைனில் ரஷ்யாவும் அமெரிக்காவும் மோதும் காலத்தில் தன் அண்டை நாடும் முன்னாள் பங்காளியுமான உக்ரைனில் ரஷ்யா கால்வைக்க முயல்வது இலங்கையில் இந்தியா கால்வைக்க முயன்றதற்கு சமம்

    இந்தியா இலங்கைமேல் 1971ல் இருந்து சந்தேகம் கொண்டிருந்தது, அந்த வங்கபோரில் பாகிஸ்தானை இலங்கை அழைத்தது முதல் 1980களில் திரிகோணமலையினை அமெரிக்காவுக்கு கொடுப்போம் என்பது வரை இலங்கையின் அட்டகாசம் அதிகம்

    1981ல் கொழும்பில் ஏற்பட்ட கம்யூனிச புரட்சியினை இந்திய படைகள்தான் சென்று அடக்கின ஆனாலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நெருடல் இருந்தது

    இந்நிலையில்தான் ஈழதமிழர் சிக்கல் கலவரமாக வெடித்தது 1983ல் கொழும்பு எரிந்தது, இந்தியா அதில்தான் தலையிடும் அவசியமே வந்தது, உலகில் ஒரு நாடும் அதை ஏன் என்றும் கேட்கவில்லை

    இன்று ரஷ்யா உக்ரைனில் ரஷ்யர்கள் உண்டு அவர்கள் தொப்புள்கொடிகள் என சொல்லிவருவது போலத்தான் ஈழதமிழர்கள் இந்திய உறவுகள் என காலடி எடுத்து வைத்தது இந்தியா

    ரஷ்யா 2016ல் உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவினை தன்னொடு இணைத்தது போல வட இலங்கையினை இந்தியா பிரித்து இணைத்திருக்கலாம் சாத்தியம் உண்டுதான், ஆனால் ஈழமக்கள் இந்தியாவோடு இணைய ஒரு காலமும் சம்மதிக்கமாட்டார்கள் என்பதுதான் அன்று இருந்த உண்மை

    இதனால் வீண் சிக்கலை விலைக்கு வாங்காமல் வேறுவழியில் களமிறங்கிய இந்தியா இன்று ரஷ்யா உக்ரைனில் டென்போஸ்க் பிராந்தியத்தில் செய்யும் காரியத்தை செய்தது

    அது ஒன்றும் ரகசியமல்ல ஒரு நாடு களமிறங்க இன்னொரு நாட்டில் சில கலவரமும் தீவிரவாதமும் போர் சூழலும் அவசியம் இன்று டென்போஸ்க் பிராந்தியம் உக்ரைனுக்கு தலைவலி அதன் பின்னால் இருப்பது ரஷ்யா, ஆனால் மக்கள் புரட்சி மக்கள் எழுச்சி ரஷ்ய தொப்புள்கொடி உறவு என ரஷ்யா சொல்லிகொண்டிருக்கின்றது

    இந்நிலையில் உக்ரைனின் ஒரு பகுதியில் ரஷ்யா பாயலாம் என நேட்டோவும் அமெரிக்காவும் வரிந்து கட்டுகின்றன‌

    சரி, இப்பொழுது ஒரு காட்சியினை பின்னோக்கி பாருங்கள்

    இந்த கிரிமியா ரஷ்யர்கள் தங்களுக்கு ஒரு “மேதகுவினை” உருவாக்கி கொண்டு, “அடைந்தால் கிரிமீயாழம் இல்லையேல் மயானம்” என கிளம்பி உக்ரைன் ரஷ்யா என இருநாடுகளையும் போட்டு அடித்தால் என்னாகும்?

    ரஷ்ய ராணுவத்தை தாக்கி புட்டீனுக்கு மனிதவெடிகுண்டு அனுப்பினால் என்னாகும்?

    இன்னும் யோசியுங்கள், அந்த டென்போஸ்க் பிராந்தியம் அதாவது இன்று உக்ரைனுடன் மோதும் பிராந்தியம் நாங்கள் அமெரிக்காவுக்கும் அடங்கமாட்டோம் உக்ரைனுக்கும் அடங்கமாட்டோம் என நேட்டோவினை தாக்கி பிடனுக்கு ஒரு மனிதவெடிகுண்டு எனுப்பினால் என்னாகும்?

    அரசியல் விளையாட்டுக்களை ஒதுக்கிவிட்டு உலகமே சேர்ந்து இவர்களை சுற்றி அடித்து அவர்களின் மேதகுவினை பிடித்து மண்டையினை பொளப்பார்களா இல்லையா?

    இதேதான் முன்பு இலங்கையின் வடக்குபகுதியில் நடந்தது, இதெல்லாம் உலக விவகாரங்கள் உலக அரசியலின் வல்லரசின் சதுரங்கங்கள்

    இதில் ஒரு நாடு அடைய பொறுமை அவசியம் குர்துகள் அதில் சரியாக இருக்கின்றார்கள், கிரிமியர்கள் தாய் இனமான ரஷ்யாவோடு இணைந்துவிட்டார்கள், டொன்போஸ்க் பிரதேசம் சரியான வாய்ப்புக்கு காத்திருக்கின்றது

    ஆனால் உலகிலே கொஞ்சமும் பொறுமையின்றி சில ஆண்டுகளிலே தனிநாடு கிடைக்கும் அதுவும் எல்லோரையும் கொன்றுகொண்டே இருந்தால் நாடு உடனே கிடைக்கும் என மடதனமாக நம்பியது புலிகோஷ்டி மட்டுமே, அதன் விளைவுதான் 2006ல் தெரிந்தது

    இப்போதைய உக்ரைன் சிக்கலுடன் ஈழசிக்கலை இணைத்து பார்த்தால் சில உண்மை விளங்கும், அப்பொழுதும் விளங்காவிட்டால் அவர்கள் சைமன் கோஷ்டி இதர ஈழ்நாடக கோஷ்டியில் தொடர்ந்து இருக்க முழு தகுதியானவர்கள் என அர்த்தமன்றி வேறல்ல

  4. பத்து வருஷத்துக்கு முன்னாடி பாகிஸ்தான்ல ஆஷிபா பீவி என்ற கிறிஸ்துவப் பெண் தான் குடித்த தண்ணீரை பிற இஸ்லாமியப் பெண்களுக்குக் கொடுத்து அவனாப்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டார் இவருக்கு ஆதரவாகப் போராடிய பாகிஸ்தான் பஞ்சாப் மாகான கவர்னர் சல்மான் மத அடிப்படைவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் –

    மூன்று வருடங்களுக்கு முன்பு 2019ம் வருடம் பிப்ரவரி 7ம் தேதி-சவுதி அரேபியாவின் மெக்கா நகரில்ல் உள்ள முகம்மது நபியின் மசூதிக்குச் சென்ற 6 வயது ஸகாரியா அல் ஜபீர் ஒரு மதவெறிகொண்ட சன்னி ஜாதி டாக்ஸி டிரைவரால் அவனது தாயின் முன்பே கொடூரமாக கழுத்தறுத்துக் கொல்லப்பட்டான் –

    சென்ற வாரம் கூட ஒரு இலங்கைத் தமிழர் பாகிஸ்தானில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார் –

    நேற்றும் கூட பாகிஸ்தானில் அனிகா அட்டிக் என்ற பெண் ஒருவர் வாட்ஸப்பில் முகமது நபி பற்றி ஒரு கருத்து பகிர்ந்ததாகக் கூறி மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளார்-

    வெறும் 74 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து தனிநாடு கேட்டுப் பிரிந்து சென்ற பாகிஸ்தானில்தான் இந்த ஜனநாயகம் இருக்கிறது –

    ஆனால், பாகிஸ்தானைவிட பல மடங்கு பெரியதான, ஹிந்துக்கள் பெரும்பாண்மையாக வாழும் ஒரு நாட்டில் ஹிந்துக்கள் மூன்றாம்தர குடிமக்களாக நடத்தப்படுவது பெரும் விசித்திரமாக இல்லையா?-

    இங்கே மாற்றுமதத்தினருக்கு இருக்கும் அதீத சுதந்திரம் ஹிந்துக்களுக்கு எதிராக பலமுறை பயன்படுத்தப்பட்டாலும் கூட அதைத் தட்டிக்கேட்க கூட முடியாத நிலையில் ஹிந்துக்கள் வாழ்வது ஏன்?-

    இங்கே சுதந்திரத்திற்குப் பிறகு ஆண்ட ஆளும் அரசாங்கங்கள் ஏன் ஹிந்துக்களை இப்படிப்பட்ட ஹீனஸ்தாதியில் வைத்திருந்தன வைத்திருக்கின்றன –

    இங்கே இஸ்லாமியர்கள் குண்டுகள் வைத்து பல அப்பாவி மக்களைக் கொல்லலாம், அவர்கள் மதத்தை எதிர்த்து அல்ல குறைந்தபட்சம் ஹிந்துமதத்திற்கு ஆதரவாகப் பேசினால் கூட அவர்களுக்கு இங்கே பாதுகாப்பில்லை –

    ஆனால் அவர்களால் இந்தியாவில் இருக்கும் ஹிந்துக்களை 24 மணி நேரத்தில் நாங்கள் கொன்றுவிட முடியும் என்று மேடைகளில் கூடப் பேசமுடியும் –

    ஹிந்துமத எதிர்ப்பாளர்களுக்கு மேடையமைத்துக் கொடுத்து ஹிந்துமதத்தை நம்பிக்கைகளை, கடவுள்களை அசிங்கப்படுத்த சுதந்திரம் இருக்கிறது, இதுதான் மதசார்பற்ற நாடா?-

    ஃப்ரான்ஸில் ஒரேயொரு கிறிஸ்தவ பேராசியர் முகம்மது நபி குறித்த புகைப்படத்தைப் பகிர்ந்ததற்காக அடுத்த நாளே வெட்டிக்கொன்றார்கள்-

    ஆனால், இங்கே ஒவ்வொரு கிறிஸ்தவப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஒவ்வொரு நிமிடங்களும் நமது தெய்வங்கள், நம்பிக்கைகள் பற்றி கொச்சைப்படுத்திப் பரப்புகிறார்கள் புகைப்படக் கண்காட்சி என்ற பெயரில் நமது கடவுள் உருவங்களை மட்டுமல்லாது, பாரதத்தாயையே அசிங்கப்படுத்தி வருகிறார்கள் அவர்கள் மீது நம்மால் குறைந்தபட்சம் வழக்கு கூடப் போட முடியவில்லை ஏன்?-

    பா.ஜ.க ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆன பிறகும்கூட மோடி, அமித்ஷா என்ற இருபெரும் சக்திகள் வந்தபிறகும்கூட நமக்கு உரிய சுதந்திரம், மரியாதை இங்கே கிடைக்கவில்லையே ஏன்?-

    ஹிந்துக்களைக் கொலை செய்தவர்கள் சிறைகளில் ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள், சசிக்குமார், ராமலிங்கம் போன்றவர்களைக் கொலை செய்த குற்றவாளிகள் பலர் இன்றும் சுதந்திரமாக வெளியில் சுற்றுகிறார்கள் என்றால் என்ன காரணம்-

    ஆமாம், நமது அரசியலமைப்புச் சட்டத்தையும், குற்றவியல் சட்டங்களையும் மாற்றியே ஆக வேண்டிய முக்கியமான தருணத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் –

    போலி மதசார்பின்மை இனியும் இங்கே தேவையில்லை, இஸ்லாமிய நாடுகள் போல ஹிந்துமத நிந்தனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கக்கூடிய சட்டங்கள் இயற்றாதவரை நாம் இங்கே நாலாந்திர மக்களாகத்தான் வாழ வேண்டியதிருக்கும் –

    அதற்காகத்தான் போராட வேண்டும் –
    சொந்த நாட்டில் அடிமைகளாக வாழ்வதைவிட போராடி செத்தொழிந்து போகலாம் –

  5. நெஜமாவே சொந்த வீட்லயே ஒர்த்தன், எனக்கு சாப்பாடு போடுங்கன்னு கெஞ்சறது எவ்வளவு கொடுமை தெரியுமா?-

    அதுதான் இன்றைய ஹிந்துக்களுக்கு இந்தியாவில் நடந்துகொண்டுள்ளது –

    ஆயிரம் வருட அன்னியர் கொடுமைகளையும் தாங்கி இன்றுவரை மதம் மாறாமல் ஹிந்துக்களாகவே வாழ்ந்துவரும் மண்ணின் மைந்தர்களாக எங்களுக்கு மதசார்பற்ற பாரதம் கொடுக்கும் பரிசா இது?-

    வேதனையாக இருக்கிறது –

    இங்கே நாம் அடிமையாக இருந்தபொழுது நடந்த ஒரு வரலாற்றை நினைவுபடுத்த விரும்புகிறேன் –

    ஒளரங்கசீப் காலத்தில் மதம்மாற மறுத்த வீரஹிந்துக்களுக்கு குரானை மேற்கோள் காட்டி ஜிசியா வரி விதிக்கப்பட்டது, அதற்கும் அஞ்சாமல் ஹிந்துவாகவே வாழ்ந்து அந்த வரிகட்ட வந்த நம் முன்னோர் எவ்வாறு நடத்தப்பட்டனர் தெரியுமா?-

    வரிவசூலிக்கும் அதிகாரி அமர்ந்திருக்கும் இடம் வரையிலும் ஹிந்துக்கள் முட்டிபோட்டவாறு வரவேண்டும், வரிவசூலிக்கும் அதிகாரி தனது வெற்றிலை எச்சிலைத் துப்ப அடிமை ஹிந்து தனது வாயைத்திறந்து காட்டவேண்டும், அதில் அவர் துப்புவார்-

    இத்தனை கொடுமைகளையும் சகித்துக்கொண்டு இன்றுவரை ஹிந்துக்களாகவே வாழ்ந்துவரும் நாங்களும், முகலாயனின் கற்பழிப்பிற்குப் பிறந்த இன்றைய இந்திய இஸ்லாமியர்களும், பஞ்சத்தை, வறுமையை உறுவாக்கி அதன்மூலம் மதம் மாற்றப்பட்ட இன்றைய கிறித்தவன்களும் ஒன்றா?-

    இல்லவேயில்லை –

    ஆனால், இங்கே மாதசார்பின்மை பாடம் ஹிந்துக்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறதே ஏன்? –

    மதசார்பற்ற ஒரு இஸ்லாமியனைக் காட்டு, மதசார்பற்ற ஒரு கிறிஸ்த்தவனைக் காட்டு பார்க்கலாம் –

    ஆனால், இங்கே, தாயின் பிரசவவலியை அறியாத பிள்ளைகள் போல, நம் முன்னோர் அனுபவித்த கொடுமைகள் அறியாமல் மதசார்பின்மை பேசும் அப்பாவி, சுயநல ஹிந்துக்களை நான் தினந்தோறும் பார்க்கிறேன்-

    ஓரடி அங்குஷத்திற்குப் பணியும் யானை போல, இவர்கள் திராவிடம் என்னும் மாயவலையால் கட்டுண்டு கிடக்கிறார்கள் –

    ஆனால், யானை தன் பலம் உணர்ந்து திருப்பி அடித்தால் இங்கே திராவிடம் சுக்குநூறாக உடைந்துவிடும் என்பதே உண்மை…
    Justice for லாவண்யா….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *