லாவண்யா மரணமும் தொல் திருமாவின் அயோக்கியதனமான கருத்தும்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி லாவண்யாவை, மதம் மாறும்படி வற்புறுத்தியதாலும், விடுதி காப்பாளர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாலும் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமா வெளியிட்டுள்ள. அறிக்கையில் தமிழ்நாட்டைப் பாதுகாத்திட சனாதன சக்திகளை ஒடுக்க வேண்டும்! வெறுப்புப் பிரச்சாரத்துக்கு எதிராகச் சட்டமியற்ற வேண்டும்! என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்! என அறிவித்துள்ளார்.

மேலும் லாவண்யா தற்கொலைக்கு அவரை மதமாற்றம் செய்ய முயற்சித்ததுதான் காரணம் என்று பொய்யான செய்தியைப் பரப்பி அந்தப் பள்ளிக்கு எதிராக மட்டுமின்றி ஒட்டுமொத்த கிறித்தவ மதத்தினருக்கு எதிராகவும் வெறுப்புப் பிரச்சாரத்தில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டில் இந்தியாவெங்கும் கிறித்தவ மதத்தினருக்கு எதிராக 486 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன எனவும் 2020 ஆம் ஆண்டில் நடந்த தாக்குதல்காளைவிட இது 75% அதிகம் எனவும் ‘ தி யுனைட்டெட் கிறிஸ்டியன் ஃபோரம்’ (The United Christian Forum ) என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. என மத மாற்றத்திற்கு வக்காலத்து வாங்கும் விதமாக அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது.

திருமா வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் முழுமையாக கொடுக்கவில்லை. 2021-ல் தமிழகத்தில் கிறிஸ்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், 12 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், கோவையில் நடந்த சம்பவம் ஒன்றாகும். கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், “சத்தம் மற்றும் இடையூறு” என்று புகார் கூறி, பாஜக வினர் கொடுத்த புகார் மனுவை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள இந்த பிரார்த்தனை மண்டபங்களில் சுமார் 30 பிராத்தனை கூடங்களை மூடுவதற்கு காவல்துறை உத்தரவிட்டது. காவல்துறையின் கூற்றுப்படி, மூடுவதற்கான உத்தரவு இருந்தபோதிலும், கிறிஸ்தவர்கள் காவல் துறை உத்தரவை மீறி கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தனர், இதை எதிர்த்து நடந்த மோதல் ஒன்றாகும்.

தாக்குதல் பற்றிய செய்தியும் உண்மைக்கு புறம்பானது. தமிழகத்தில் கிறிஸ்துவர்களையோ அல்லது முஸ்லீம்களையோ தாக்கப்பட்ட சம்பவங்களின் பட்டியலை வெளியிட்டிருக்க வேண்டும் தமிழகத்தில் மத மாற்றம் நடைபெறுகிறது என்பதற்கு, 1951-ல் 4.74 சதவீதமாக இருந்த கிறிஸ்துவர்கள், 2001-ல் 6.06 சதவீதமாக இருந்தது, 2011-ல் 6.12 சதவீதமாக உயர்ந்துள்ளது இது மத மாற்றத்தின் எதிரொலி என்பதையும், தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை பெறுவதற்காகவே , கிறிஸ்துவ மதம் மாறிய லட்சக்கணக்கான தலித்துக்கள், இன்றும் தங்களை இந்துக்களாகவே சான்றிதழ்களில் குறிப்பிட்டுள்ள மோசடியை பற்றி குறிப்பிடாடது ஏன் ? எவ்வாறு மேற்கு வங்கத்தில் முஸ்லீம்களின் ஆதிக்கத்தின் காரணமாக 100க்கும் மேற்பட்ட சட்ட மன்ற தொகுதிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் சூழ்நிலையில் முஸ்லீம்களின் வாக்கு வங்கி இருக்கிறதோ, அதே போல் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்ட மன்ற தொகுதிகளில் கிறிஸ்துவர்களின் வாக்கு வங்கி வெற்றி தோல்வியை உறுதி படுத்தும் காரணியாக இருக்கிறது. இது மத மாற்றத்தின் எதிரெலி என்பதை மறந்து விடக் கூடாது.

கன்னியாகுமரியில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகிவிட்டதால், இந்துக்களை முந்திக்கொண்டு, மாறிவரும் மக்கள்தொகையால் இந்துக்களை மிரட்டிய பொன்னையா, “நாங்கள் பெரும்பான்மையாக உள்ளோம் (கன்னியாகுமரி மாவட்டத்தில்) இப்போது 42 சதவீதத்தில் இருந்து 62 சதவீதத்தைத் தாண்டிவிட்டோம். விரைவில் நாங்கள் 70 சதவீதமாக இருப்போம். உங்களால் எங்களைத் தடுக்க முடியாது. எனது இந்து சகோதரர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இதை சொல்கிறேன். என கூறியவரை கண்டிக்காத திருமாவளவன், சனாதனவாதிகள் மீது வன்மத்தை விதைக்கிறார்.

வன்முறையை தூண்டும் விதமாக செயல்படுவது கிறிஸ்துவ அமைப்புகள் என்பதை மறந்து விடக் கூடாது. சர்சுகளும் மிஷனரிகளும், மொழிக் களவு, கலாசாரக் களவு இன வெறி ஆகிய அபாயகரமான யுக்திகளின் மூலம் மத மாற்றம் செய்ய முயலுகிறார்கள் வேண்டுமென்றே இந்துக் கோவில்களுக்கு எதிரிலோ, அல்லது அருகிலோ சர்ச்சுகளை கட்டுகின்றனர். அவைகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஒலிபெருக்கி மூலம் மதப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். பின்னர் இந்துக் கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் மதமாற்றப் பிரச்சாரம் செய்கின்றனர். இந்துக் கடவுள்களைக் கேலி, கிண்டல், அவமானம் செய்யும் துண்டுப் பிரசுரங்களையும், இந்து மதப் பழக்க வழக்கங்களை ஏளனம் செய்யும் துண்டுப் பிரசுரங்களையும், ஏசுவைப் புகழ்ந்து எழுதப் பட்டிருக்கும் கையேடுகளையும், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வழங்கி அவர்களை மதமாற்றம் செய்ய முயல்கின்றனர். இதன் மூலம் வன்முறையை தூண்டுகிறார்கள் என்பது தெரிந்தும், இந்துக்களுக்கு எதிரான திராவிட அரசுகள் கண்டு கொள்வதில்லை.

தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள சனாதன சக்திகளின் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டால் உத்தரப் பிரதேசத்தைப் போல ‘கும்பல் கொலைகள்’ நடக்கும் மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றி விடுவார்கள் என்பதை கவலையோடும் முன்னெச்சரிக்கைடும் சுட்டிக்காட்டுகிறோம் என்கிறார் திருமா. ஆனால் தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டிவிட்டு குளிர் காயும் ஈன பிறவிகள் யார் என்பதை நன்கு தெரிந்தும் தெரியாமல் இருப்பதாக நடிக்கிறார்கள். கும்பல் கொலைகள் என யாரை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை. விடுதலை சிறுத்தைகளின் வன்முறை தாண்டவம் பற்றிய தொகுப்பை பார்த்தால், கும்பல் கொலை செய்வது யார் என்பது தெரியும். 2009 ஜனவரி மாதம் ஒரு பிரச்சினைக்காக நடத்தின வன்முறையாட்டத்தில் 51 அரசு பஸ்கள் தாக்கப்பட்டன. இதில் மூன்று பஸ்கள் எரிக்கப்பட்டன. இதன் காரணமாக 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் தான் சனாதன சக்திகளைப் பற்றி பேசுகிறார்கள்.

தமிழகத்தில் பா.ம.க.வுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் எற்பட்ட மோதல் பற்றிய செய்திகளை பார்த்தால் வன்முறையை தூண்டியவர்கள் யார் என்பது நன்கு தெரியும். இவர்களைப் போல் சனாதனவாதிகள் வன்முறையில் ஈடுபட்டது கிடையாது.

மோசடி பேர்வழிகளை கொண்ட சர்ச்சுகளும், மிஷனரிகளும் ‘மொழிக் களவு’ (Hijacking the native language), ‘கலாசாரக் களவு’, ‘இனவெறி’ (Racism) ஆகிய அபாயகரமான யுக்திகளின் மூலம் மதமாற்றம் செய்யத் தொடங்கினர். இவற்றில், முஸ்லீம் ஆட்சியாளர்களின் முடிவுக்கு பின்னர் இடையே சற்று மங்கியிருந்த ‘கலாசாரக் களவு’ (inculturation) தற்போது பெரிதாகத் தலை தூக்கியிருக்கிறது. அதாவது, ‘கத்தோலிக்க ஆஸ்ரமங்கள்’ அமைத்தல்; ஆஸ்ரமத்தின் நுழைவாயிலின் முகப்பில் ‘ஓம்’ சின்னத்தை வைத்தல்; ‘ஓம்’ என்பது “வேதச்சொல்” என்றும் “இந்துச்சொல் அல்ல” என்றும் சாதித்தல்; ஆஸ்ரமத்தின் உள்ளே யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் தியானம் செய்வதுபோல் இயேசு வீற்றிருக்கும் சிலை அமைத்தல்; தாமரை மலரின் மேல் இயேசு ஒரு கால் மடக்கி, ஒரு கால் கீழே தொங்க விட்டு வீற்றிருப்பது போல் சிலையமைத்தல்; ஆஸ்ரமத்தில் உள்ள பாதிரியார்கள், கன்யாஸ்திரீகள் காவியுடை அணிதல்; போன்ற இந்துமதப் புனித வழிகளைப் போலியாக பாவனையில் ஏற்று, மக்களை ஏமாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இது மத மாற்றத்தின் மோசடித் தனமாக செயல்பாடாகும். இந்த பசப்பு செயல்கள் மூலம் கிறிஸ்துவர்கள் நடத்திய மத மாற்ற நாடகமாகும். மேலும், யேசுவுக்கு ‘அஷ்டோத்திர நாமாவளி’, ‘ஸஹஸ்ர நாமாவளி’ அர்ச்சனைகள் செய்தல்; வேளாங்கண்ணி போன்ற சில கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ள ஊர்களுக்குப் “பாத யாத்திரை” போதல்; “இருமுடி” தூக்குதல்; மேரி மாதாவை “மாரியம்மன்” என்று சொல்லுதல்; சில மலைகள் மேல் அரசாங்கத்தின் அனுமதி இன்றிச் சர்ச்சுகள் கட்டி அந்த மலைகளைச் சுற்றி பௌர்ணமி “கிரிவலம்” ஏற்பாடு செய்தல்; என இந்து மத ஆன்மீக வழிபாட்டு முறைகளையும் கலாசாரக் களவாடுதலிலும் சர்ச்சுகளும் மிஷனரிகளும் இறங்கியுள்ளன. இன்றைக்கும் இந்துக்கள் ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் போது, நாகூர் தர்காவிற்கும், வேளாங்கன்னி மாதா கோவிலுக்கும் செல்லும் பழகத்தை கானலாம்.

இந்துக்களின் பழக்க வழக்கங்களை கடைபிடித்து இந்துக்களை சீன்டுவதிலும் கிறிஸ்துவர்கள் தங்களின் கைவண்ணத்தை காட்ட துவங்கிளார்கள். முச்சந்திகளில் நாம் பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபடுலது போல, மேரி சிலைகளை வைக்க ஆரம்பித்துள்ளனர். எல்லா நகரங்கள் மற்றும் ஊர்களின் எல்லைகளில் வரிசையாக சர்ச்சுகளும் பிரார்த்தனைக் குடில்களும் அமைக்கின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் தங்கள் ஜனத்தொகைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல், அளவுக்கதிகமான சர்ச்சுகள், மற்றும் பிரார்த்தனைக் குடில்கள் அமைக்கின்றனர். (இப்படிச் செய்வது மிக லாபகரமான, வெளிநாட்டு வருவாய் ஈட்டும் தொழில் என்பதும் மக்கள் அறிந்ததே). மலைகள், குன்றுகளின் மீது வெள்ளை வர்ணத்தில் சிலுவை வரைதல், ‘மரியே வாழ்க’ என்று எழுதுதல் கணக்கின்றி அதிகரித்து வருகிறது.

வேண்டுமென்றே இந்துக் கோவில்களுக்கு எதிரிலோ, அல்லது அருகிலோ சர்ச்சுகளை கட்டுகின்றனர். அவைகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஒலிபெருக்கி மூலம் மதப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். பின்னர் இந்துக் கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் மதமாற்றப் பிரச்சாரம் செய்கின்றனர். இந்துக் கடவுள்களைக் கேலி, கிண்டல், அவமானம் செய்யும் துண்டுப் பிரசுரங்களையும், இந்து மதப் பழக்க வழக்கங்களை ஏளனம் செய்யும் துண்டுப் பிரசுரங்களையும், ஏசுவைப் புகழ்ந்து எழுதப் பட்டிருக்கும் கையேடுகளையும், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வழங்கி அவர்களை மதமாற்றம் செய்ய முயல்கின்றனர். உதாரணமாக, சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில், திருவேற்காடு ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் போன்ற மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் வாசலில் கூட இந்த மாதிரிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். (ஆதாரம்: குமுதம் ஜோதிடம் 14 நவம்பர் 2008 தேதியிட்ட இதழ்)

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் எஸ்றா சற்குணம் “இந்து மதம் ஒரு புனையப்பட்ட மதம் .அப்படி ஒரு மதமே கிடையாது. இதையெல்லாம் எடுத்துக் கூறுங்கள். நீங்கள் ஏமாற்றுகிறீர்கள் என்று சொல்லுங்கள். அவர்கள் ஏற்கவில்லை என்று சொன்னால் அவர்கள் முகத்தில் இரண்டு குத்து குத்துங்கள். அதைப்பற்றி பரவாயில்லை. கடவுளே மன்னித்து விடுங்கள் எனக்கு கொஞ்சம் கோபம் வந்துவிட்டது என்று சொல்லி முகத்தில் குத்தி ரத்தம் வருவது மாதிரி செய்து விட்டு அதன் பிறகு ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தொடர்ந்து உங்கள் பணிகளை செய்யுங்கள்.” என்று பேசியிருக்கிறார் . இது பற்றி 21.06.2019-ல் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது வன்முறையை தூண்டுவதும், இரண்டு மதங்களுக்கும் இடையே மோதலை உருவாக்கும் என்பது தெரிந்தும் இது பற்றி ஏன் திருமா இதுவரை வாய் திறக்கவில்லை. மோகன் சி.லாரன்ஸ் இந்து மதத்தை இழிவுப்படுத்தியும், இந்துக் கடவுளை கொச்சைப்படுத்தியும் பிரச்சாரம் செய்து வருவது திருமாவுக்கு தெரியாதா? இவர் மீது இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்ட போது வாய் திறக்காத திருமா, லாவண்யா தற்கொலைக்கு மட்டும் வாய் திறப்பது ஏன்?

இந்தியாவில் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய சட்ட ஆணையம் 2017ஆம் ஆண்டு சட்ட மசோதா ஒன்றைத் தயாரித்து இந்திய ஒன்றிய அரசிடம் அளித்துள்ளது. பாஜக அரசு அதை சட்டம் ஆக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தில் 153 சி மற்றும் 505 ஏ ஆகிய புதிய பிரிவுகளை சேர்ப்பதற்கான அந்த சட்டத் திருத்த மசோதாவைத் தமிழ்நாடு அரசே சட்டமாக்க முடியும். மேற்படி சட்ட திருத்தங்களுடன் சட்டமியற்றினால், பாதிக்கப்படுவது இந்து அமைப்புகள் கிடையாது. மதசார்பின்மை என்ற போர்வையில் உலா வரும் ஓட்டு பொருக்கிகள் தான் அதிக அளவில் சிக்குவார்கள்.

கிறிஸ்துவ மேடைகளில் இந்துக்களின் மத உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வக்கிரபுத்தி படைத்த அரசியல்வாதிகளில் திருமாவும் ஒருவர். இந்துக்களை சாதியாக பிரித்தவர்தான் கிருஷ்ண பகவான் என கிறிஸ்துவ விழாவில் திருமாவளவன் பேசியதும், இந்துக்களை இழிவுப்படுத்தும் செயலாகும். இவ்விதமாக பேசுவதற்கு மேடைகளை அமைத்து கொடுத்த கிறிஸ்துவ நல்நெண்ண இயக்கம் . திருமாவின் கோரிக்கையின் படி சட்ட திருத்தம் கொண்டு வந்தால், மேற்படி அமைப்பும் சட்ட சிக்கலில் மாட்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லீம்களின் வக்கிரமான பேச்சுகளை சற்றே திருப்பி படிக்க வேண்டும். லாவண்யா தற்கொலைக்கு பின்னர், எஸ்றா சற்குணம் , கிறிஸ்துவத்தை பின்பற்ற அழைப்பது எங்கள் உரிமை , பிடிக்காவிட்டால் வேறு பள்ளியில் சேர்ந்திருக்க வேண்டும். என இறுமாப்பாக பதில் கொடுத்துள்ளார். மத மாற்ற நிர்பந்தப்படுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டார் என தெரிந்தும், தூய இருதய மேல் நிலைப்பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என அரசுக்கு கோரிக்கை வைக்கிறார். இது பற்றி எந்த அரசியல் கட்சி தலைவரும் வாய் திறக்கவில்லை.

11 Replies to “லாவண்யா மரணமும் தொல் திருமாவின் அயோக்கியதனமான கருத்தும்”

 1. 200 ரூபாய் பணத்திற்கும்
  ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும்
  வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில்
  புரட்சி எங்ஙனம் வெடிக்கும்?

  என்றுதான் இத்தனை நாளும் தோன்றியது.. ..

  அயோக்கியன் என்று தெரிந்த பின்னும்
  அவனுக்கு ஆரத்தி எடுத்து….
  ஆரத்தித் தட்டில் விழப்போகும் சில்லரை பணத்திற்காக பல்லிளித்து நிற்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எங்ஙனம் சாத்தியம்?

  என்றுதான் இத்தனை நாளும் தோன்றியது.. ..

  எத்தனை கொடுமைகள் இழைத்தாலும்
  அதனையெல்லாம் மறந்துவிட்டு
  மீண்டும் மீண்டும் சின்னங்களை மட்டுமே பார்த்து வாக்களிக்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எப்படி நடக்கும்?

  என்றுதான் இத்தனை நாளும் தோன்றியது.. ..

  படித்தவன் சூதும் பாவமும் செய்கிற சமூகத்தில் முன்னேற்றம் எந்த வழியில் வந்து சேரும்?

  என்றுதான் இத்தனை நாளும் தோன்றியது.. ..

  என் அப்பா அந்தக் கட்சி… என் தாத்தா அந்தக் கட்சி … ”நாங்கள் பரம்பரை பரம்பரையாய் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப்போடுவோம்” என்று அப்பன் வெட்டிய கிணற்றில் உப்புத்தண்ணீர் குடிக்கிற மகன்கள் இருக்கிற தேசத்தில் புதிய மறுமலர்ச்சி எப்படி உருவாகும்?

  என்றுதான் இத்தனை நாளும் தோன்றியது.. ..

  நமது தாத்தனும், அப்பனும் பாடுபட்டு வளர்த்த கட்சி கடைசியில் தலைவரின் குடும்ப சொத்தாகிப் போனதின் சூது தெரியாமல் வாழ்க கோஷங்களை வாய் கிழிய எழுப்பும் மகன்கள் இருக்கிற நாட்டில் மாற்றம் எப்படி சாத்தியம்?

  என்றுதான் இத்தனை நாளும் தோன்றியது.. ..

  கட்சி எது? சின்னம் எது? தலைவர் யார்? எது சரியான பாதை? என்ற அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லாத பொறியியல் பட்டதாரிகள் மலிந்த இளைய தலைமுறையினால் மாற்றம் எப்படி வந்து சேரும்?

  என்றுதான் இத்தனை நாளும் தோன்றியது.. ..

  தேர்தல் என்றால் ஒரு நாள் விடுமுறை என்று வாக்குச்சாவடிக்கு செல்லாமல் விடுமுறை கொண்டாடுகிற தேசத்தில் புதிய அரசு எப்படி சாத்தியம்?

  என்றுதான் இத்தனை நாளும் தோன்றியது.. ..

  எமது மக்கள் எப்போதும் தற்காலிக சுகங்களிலே நிறைவடைந்து விடுபவர்களாய் இருக்கிற வரையிலும் நிம்மதியான வாழ்க்கையை வாழவே போவதில்லை….

  என்றுதான் இத்தனை நாளும் தோன்றியது.. ..ஆனால் சூரசம்ஹாரம் செய்யப் புறப்பட்ட முருகப் பெருமான் போல எமது தலைவன் மோடிஜி அவர்கள் கண்டெடுத்த தலைவன்

  அண்ணாமலை ஐபிஎஸ்

  அப்பேர்ப்பட்ட தமிழனையே தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டார் என்றுதான் தோன்றுகிறது

  இனி நல்லது நடக்கும் நம்பிக்கை தெரிகிறது..
  அட..நல்லதே நடக்காவிட்டாலும் நடக்கும் தீமைகள் குறையும் என்ற உள்உணர்வு தோன்றுகிறது…

  ஜெய் ஹிந்த்… வந்தே மாதரம்
  பாரத் மாதா கீ ஜே

 2. #இரண்டுமே_ஒன்றுதான்- #வரலாற்றுச்_சிறுகதை (போர்த்துக்கேயர் காலம்)

  படபடப்பாக வீட்டுக்குள் வந்த மரகதத்திடம் “ஏன் பிள்ளை நல்லநாள் அதுவுமா இப்படி பதறிற்று வாற” என்று கேட்டாள் மங்களம் பாட்டி. “இந்த ரீற்றா பெத்துப்போட்ட ரெண்டாவது வேலிக்கால எட்டி எட்டி பார்த்துக்கொண்டு நிற்குது.. இன்னைக்கு நாங்க பொங்கல் வைச்ச மாதிரித்தான்” என்று சலித்துக்கொண்டே சொன்னாள் மரகதம்.

  “நீ இந்த நாயை பார்க்கிறத விட்டுட்டு பார்க்கிற வேலையைப்பார், எல்லாத்தையும் தம்பிரான் பாத்துக்குவார்” என்றாள் மங்களம் பாட்டி. மங்களம் சொன்ன வார்த்தைகளால் மரகத்தத்தின் மனம் ஆறுதல் அடையவில்லை. “இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பார்த்துக்கொண்டே இருப்பார், இதுக்கெல்லாம் எப்பதான் முடிவு கட்டப்போறார்” என்று மனதுக்குள் நொந்து கொண்டாள்.

  அது போர்த்துக்கேயர் எமது மண்ணை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்திருந்த காலம். கிறிஸ்தவ காட்டுமிராண்டிகள் தமது அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டிருந்த காலம். அன்று எல்லா இடங்களிலும் கட்டாய மதம்மாற்றம் நடந்துகொண்டிருந்தது. கிறிஸ்தவர்களாக மாறவேண்டும் அல்லது கிறிஸ்தவர்கள் போலாவது தம்மைக் காட்டிக்கொள்ள வேண்டும். உயிர்வாழ்வதற்கு வேறு வழியே இல்லை. அன்றைய கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர்களால் தமிழர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள்.விரும்பியோ விரும்பாமலோ அந்த அடையாளங்களை ஏற்பதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். மறுப்பவர்கள் மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

  தமிழர்களின் பாரம்பரிய விழாக்கள், பண்டிகைகள், விரதங்கள் அனைத்தும் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டிருந்தது. யாரேனும் தமிழர்களின் பாரம்பரிய வழிபாடு, விரதம், பண்டிகை என்று கொண்டாடினால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளானார்கள். அவ்வாறு சித்திரவதை செய்யப்பட்ட பலர் கொல்லப்பட்டார்கள். அதனால் அப்போது யாரும் வெளிப்படையாக தமிழர்களின் பாரம்பரிய வாழ்வை வாழவே முடியாது என்றாகிவிட்டது.

  ஆனால் மக்கள் பலரும் இரகசியமான முறையில், ஏதோ திருட்டு வேலை செய்வதுபோல தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்களை பின்பற்றியே வந்தனர். ஆனால் அதனைக் கூட கிறிஸ்தவ காடையர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாரம்பரிய நிகழ்வுகளை நடத்தும் தமிழர்களை ஒற்றர்கள் மூலம் கண்டறிந்து சித்திரவதை செய்வதையும், கொலைகள் செய்வதையும் தொடர்ந்து கொண்டே இருந்தது கிறிஸ்தவ காட்டுமிராண்டி கூட்டம்.

  நாட்டிலோ, ஊரிலோ எங்குமே கோயில்கள் இல்லை. எல்லா கோயில்களும் கிறிஸ்தவ காட்டுமிராண்டி கூட்டத்தினால் இடித்து அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது எஞ்சியிருப்பவை முனியப்பர் முனீஸ்வரன் என்று வணங்கப்படும் பெருமரங்களும், நாகம்மா நாகதம்பிரான் என்று வணங்கப்படும் புற்றுக்கோயில்களும், விழாக்கள், விரதங்கள் தவிர்த்து சிலுவை வேடம் தரிக்கும் வைரவர் சூலங்களும் மட்டுமே.

  வழிபடும் வரை சூலமாக வைத்திருந்துவிட்டு, வழிபாடு முடித்தபின்னர் அதன் இரு கையையும் நிமிர்த்தி சிலுவை போன்று மாற்றிவிடுவார்கள்.

  மரகதத்தின் வீடிருக்கும் காணிக்குள் இருப்பதும் அப்படி ஒரு புற்றுக்கோயில்தான். மரகதம் குடும்பத்திற்கு நாகதம்பிரான்தான் குலதெய்வம். நாட்தவறாமல் விளக்கேற்றி பால்வைத்து பூசை செய்யும் கோயில். ஆனால் இப்போது மாதம் ஒருமுறை விளக்கேற்றுவதே பெரிய பாடாகிவிட்டது.

  ஒவ்வொரு வருடமும் பங்குனி மாத பௌர்ணமி அன்று குலதெய்வம் கோயிலுக்கு பொங்கல், படையல் என்று ஊரைக் கூட்டி கோலாகலமாக கொண்டாடுவது மரகதம் குடும்பத்தின் வழக்கம். ஆனால் கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்ததில் இருந்து ஊரைக்கூட்ட முடியவில்லை. இதற்கு முதல் வருடம்கூட யாருக்கும் தெரியாமல் பொங்கல் செய்து படைத்து பூசை செய்துவிட்டு, பிறகு அடையாளங்களை அழித்துவிட்டே வந்தார்கள். வந்த கொஞ்ச நேரத்திலேயே கிறிஸ்தவ காட்டுமிராண்டி கூட்டம் தேடுதல் நடத்தியது. ஒன்றுமே அந்த கூட்டத்தின் கையில் கிடைக்காததால் திரும்பிப்போனது.

  இந்த வருடம் பொங்கல் விழாவை நடத்தவே விடக்கூடாது என்பதற்காகவே ரீற்றா அவளின் இரண்டாவது மகனை உளவுபார்க்க அனுப்பியிருந்தாள். ஆனால் இப்படி யாரும் எட்டிப் பார்க்கக்கூடாது என்று போன கிழமைதான் மரகதமும் அவளின் கணவன் மாணிக்கமும் தெருவோர வேலி முழுவதும் அலம்பல் வைத்து கட்டி இரண்டு பக்கமும் பனையோலையும் வைத்து அடைத்தார்கள். அந்த வேலிக்கூடாக ஒன்றுமே தெரியாமல்தான் ரீற்றாவின் இரண்டாவது படாத பாடுபட்டுக் கொண்டு திரிந்தது.

  ரீற்றா அந்த ஊர்க்காரிதான். இந்த கிறிஸ்தவ கூட்டம் வருவதற்கு முன்பு அவள் ஊரைவிட்டு விரட்டப்பட்டிருந்தாள். அவளின் பெயர் ஒருவருக்கும் தெரியாது. “பெரிசு, பெரிசு” என்றுதான் அவளை எல்லோரும் குறிப்பிடுவார்கள். பன்னிரண்டு வயதிலேயே தம்பிமுத்தனின் பெரிய மகனோடு பெரிய வேலைபார்க்க பனங்காட்டுக்குள் போய், பிடிபட்டு ஊரைவிட்டு கலைக்கப்பட்ட ஓடுகாலிதான் இந்த ரீற்றா. அவள் அதற்குப் பிறகு நீண்டகாலம் ஊருக்குள் வருவதில்லை. ஏன் வரவே விடுவதில்லை என்றே சொல்லலாம். அந்த சம்பவத்திற்கு பிறகு தம்பிமுத்தனின் குடும்பம் எங்கே போனதென்றே தெரியாது. ஆனால் இந்த ரீற்றாவின் குடும்பம் ஊருக்கு வெளியே உள்ள பனங்காட்டுக்குள் ஒரு குடிசை போட்டுக் கொண்டு இருந்தது. “தாயும், மகளும் பெரிய வேலைபார்க்க தகப்பன் காவல் பார்க்கிறான்” என்று சனங்கள் அந்த காலத்தில் கேவலமா கதைப்பார்களாம். அரிசிக்கும் கிழங்குக்கும் அடிவயிறு நனைப்பதே றீற்றாவின் அப்போதைய முழு நேர தொழில்.

  இப்போது அவளை பிடிக்க இயலாது. ஊருக்குள்ள றீற்றாவின் வீடுதான் பெரிய வீடு. தம்பிமுத்தனின் மகனுடன் பனங்காட்டுக்குள் போய் பிறந்த மூத்தது, இப்போது வளர்ந்து ஊழியம் செய்ய என்று போய்விட்டதாம். அவ்வப்போது வெள்ளை நிறத்தில் பாவாடை மாதிரி ஒரு ஆடை உடுத்திக்கொண்டு வந்துபோகும். இரண்டாவதிற்கு அப்பா யாரென்றே தெரியாது. பனங்காட்டுக்குள் பலான தொழில் செய்தபோது பிறந்தது அது. அதுவும் ஊழியம் செய்யத்தான் போகப் போகின்றதாம். அதற்கு ஏதோ பயிற்சி எடுக்கிறதாம். இன்னும் முடியவில்லையாம். அதைவிட இன்னும் நாலு இருக்கிறது ரீற்றாவிற்கு. நாலும் பெண். அவற்றுக்கும் அப்பா யார் என்று தெரியாது. அதுகளும் இப்போது தாயுடன் சேர்ந்து தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டன.

  ரீற்றா இப்போது தனியாக இல்லை. நாலு மகள்கள். அதைவிட வெளியூரில் இருந்து வந்து தங்கியுள்ள நான்கைந்து இளம் பெண்கள். அவள் தொழில் கொடிகட்டிப் பறந்தது. அவள் வீட்டிற்கு கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு அதிகாரிகள், உள்ளூர்,வெளியூர் ஊழியக்காரர்கள் என்று வருவதும் போவதுமாக இருப்பார்கள். பனங்காட்டுக்குள் இருந்தபோது வாடிக்கையாளர்களாக இருந்தவர்களும் அவ்வப்போது வந்து செல்வார்கள். அவள் வீடு இப்போது பரபரப்பான இடம். வெள்ளை, கறுப்பு என்று வர்ண வேறுபாடு இல்லாமல் பலர் வந்து தங்கிச் செல்வார்கள். அவள் வீட்டு வாசலில் சிலுவை குறியீடாக பொருத்தப்பட்டிருந்தது.

  ரீற்றாவின் மகன் சுற்றித்திரியும் அந்த நேரத்திலும் படையலுக்கு தேவையான எல்லாவற்றையும் வீட்டிற்குள் வைத்தே செய்துவிட்டாள் மரகதம். அதற்குள் பூசைக்கான ஆயத்தங்கள் அனைத்தையும் செய்துவிட்டார் மாணிக்கம். பொழுது சாய ஆரம்பித்திருந்தது. யாரும் பார்க்காத வண்ணம் ஒவ்வொரு பொருளாக புற்றுக்கோவிலடிக்கு கொண்டுசென்றனர் மரகதத்தின் பிள்ளைகள். மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த பஞ்சலோக நாகத்தை எடுத்து புற்றுக்குள் சொருகினான் மரகத்தத்தின் மூத்தமகன் மேகநாதன். இலையை வைத்து வேகமாக படையலை வைத்துவிட்டு, ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி புற்றுவாயில் வைத்தார் மாணிக்கம். புற்றில் இருந்து வழக்கமாக வரும் நாகராஜன் வரவில்லை. அனைவருக்கும் ஒரே கவலை. ஆனால் என்ன செய்வது. காலம் தாழ்த்த முடியாது அவசர அவசரமாக பூசைகளைச் செய்தார் மாணிக்கம்.

  பூசை முடிந்தது. மனமுருகி தேவாரம் பாட ஆரம்பித்தார் மரகதம். இடர்களையும் பதிகத்துப் பாடலை அவளுடன் சேர்ந்து குடும்பம் முழுவதும் பாட ஆரம்பித்தது.

  “மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்

  பிறையுடையாய் பிஞ்ஞகனே என்று உனைப் பேசின் அல்லால்

  குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த

  நிறையுடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே”

  என்று அவர்கள் பாடி முடிக்கவும், “ஐயோ, அம்மா” என்று கதறல் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

  “எதுக்கும் பதட்டப்படாதங்க, எல்லாம் நல்லதுதான் நடந்திருக்கு” என்றாள் மங்களம் பாட்டி.

  அவசர அவசரமாக எல்லாவற்றையும் அகற்றினார்கள், பூசை செய்த அடையாளமே தெரியாமல் தடயங்களை அழித்தார்கள், பஞ்சலோக நாகத்தையும் மண்ணில் புதைத்தார்கள். பால் கிண்ணத்தை மட்டும் புற்றடியில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார்கள். வீதியில் வேலி ஓரத்தில் நாலைந்து பேர் பரபரப்பாக நிற்க ஒருவன் முனகிக்கொண்டே இருந்தான். மரகதம் கடப்பை திறந்து எட்டிப் பார்க்கவும் முனகியவனின் உயிர் பிரியவும் சரியாக இருந்தது.

  ரீற்றாவின் ரெண்டாவது மகனே செத்துப்போய் கிடந்தான். உளவுபார்க்க வந்தவன் நிலவுபார்க்கக் கிடந்தான். வேலியைப் பிரித்து கண்வைத்தவனின் ஒரு கண்ணையே காணவில்லை. எட்டிப் பார்த்தவன் எட்டாத தூரத்திற்கு சென்றுவிட்டான். ஆம், நாகராஜன் அவன் கண்ணிலேயே கொத்தியுள்ளான். எப்படித் தப்புவது?

  நாகராஜன் கடமை முடிந்த திருப்தியுடன் அமைதியாகப் பாலைக் குடித்துவிட்டு புற்றுக்குள் சென்றான்.

  ரீற்றாவின் வீட்டில் இருந்து வந்த சிலர் சவத்தை தூக்கிக் கொண்டு போனார்கள். மரகதத்திற்கு இந்த மரணம் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லா மரணங்களும் மனவருத்தம் தருவதில்லை, சில மரணங்கள் மகிழ்ச்சியையும் உண்டுபண்ணும் என்பதை அவள் அப்போதுதான் அனுபவபூர்வமாக உணர்ந்தாள்.

  சவத்தின் பின்னால் கதறி அழுதபடியே ரீற்றா சென்றாள். எட்டிப்பார்க்கும் மரகதத்தை நிலவு வெளிச்சத்தில் ரீற்றா திரும்பிப்பார்த்தாள். இப்போது மரகதத்தின் கண்களில் இருந்தும் கண்ணீர் துளிர்த்தது. இருவர் கண்களிலும் கண்ணீர்.

  கண்ணீர் இரண்டுமே ஒன்றுதான்.ஆனால் மரகதத்தின் கண்களில் இருந்து வருவது ஆனந்தக்கண்ணீர். ஆனால் ரீற்றாவின் கண்களில் இருந்து வருவதை என்னவென்று சொல்வது??

 3. எச்சரிக்கை…. இந்து ரத்தங்களே…

  இறுதிப்போர் நடக்கிறது
  இந்துக்களுக்கு எதிராக….

  இன்று விழிக்கவில்லை……எனில்
  இனி என்றுமே விழித்து எழ மாட்டோம்

  இன்றைய தமிழக அரசியல் களத்தில்

  கோயிலுக்குப் போற உங்களுக்கும் கோயிலுக்குப் போகாதவங்களுக்கும இடையே நடைபெறும் ஒரு இறுதிக்கட்ட தர்ம போராட்டம்தான்

  இந்து மதத்தை… கோயில்களை… கடவுள்களை வெறுப்பவர்களுக்கு… வாக்களித்து வெற்றி பெற வைத்த… இந்துக்கள் அனைவரும் இன்று …

  தமிழகம் முழுவதும் 122 கோவில்கள் கடந்த எட்டு மாதங்களில் இடிக்கப்பட்டபோது….
  அதை எண்ணி மனதளவில் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றனர்

  ஏன் இந்த நிலை?….

  நீங்கள் வாக்களித்து கொண்டு வந்தவர்கள் தானே
  இன்று இந்த இழிநிலைக்கு காரணம்

  தேர்தலுக்கு முன்பே அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று வருந்தி வருந்தி சொன்னோமே
  கேட்டீர்களா?…

  கோவிலுக்குப் போய் கடவுளை வணங்குவதால் மட்டும் கடவுளை திருப்திப்படுத்தி விடமுடியாது

  நீங்கள் குறைந்த பட்ச நியாயம் தர்மம் உள்ளவராக….
  யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை தராசு போல பாவித்து…
  தெரிவதுதான் புத்திசாலித் தனம்

  நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக நேர்மையாக தர்மமாக இருக்கட்டும்

  இனியாவது ஆன்மீகவாதிகள் பக்கம் வந்தால் ….
  உங்கள வழிபாட்டு உரிமைகள் நம் பண்டைய கலாச்சாரம்
  முன்னோர்களின் பண்பாடு அத்தனையும் நீடித்து இருக்கும்

  இல்லை நடுநிலை / மதச்சார்பின்மை எனப் பேசி தெரிந்தால் நீங்கள் மட்டும்தான் நடுநிலையோடு….
  நேர்மையோடு இருப்பீர்கள்

  மற்றவர்கள் எல்லாம் தங்கள் மதத்தைப் போட்டி போட்டுக்கொண்டு பரப்புவதில்தான்…..
  குறியாக வெறியாக இருப்பதை கடந்த காலத்திலிருந்து இன்றுவரை பார்த்துக் கொண்டே வருகின்றோம்.

  அப்படியானால் நடுநிலைமை என்பது… மதச்சார்பின்மை என்பது
  இந்துக்களுக்கு மட்டும் தானா?…..
  நீங்கள் ஏன் இதை உணரவில்லை?..

  நீங்கள் இப்படியே ஜாதிகளாகவும் கட்சிகளாகவும் பிரிந்து….
  அவற்றின் பெருமை பேசிக்கொண்டு இருக்கையில் ….

  இந்துக்களாகிய உங்களை… மெல்ல… மெல்ல… நீங்கள் இருக்கும் கட்சிகள் இந்து என்ற இனத்தையே அழித்துக் கொண்டு வருவதை பார்க்கிறீர்களா… இல்லையா?…….

  இனியும் நீங்கள் உணராமல் பழம் பெருமை பேசிக்கொண்டு ஜாதியால் மொழியால் இனத்தால் பிரிந்து கிடந்தால்…

  உங்களை…..
  நீங்கள் வணங்குகிற அத்தனை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்பது …
  நிதர்சனமான…சத்தியமான உண்மை…

  ஏன் எனில் இப்போது நடந்து கொண்டிருப்பது தர்மத்தின் இறுதியுத்தம்…
  இந்துக்களுக்கு வாழ்வா சாவா அப்படிங்கிற மிகப்பெரும் போர்….

  இதுக்கு தளபதியா திரு மோடி, தலைமையில் அமித்ஷா, யோகி அண்ணாமலை தேஜஸ்வி சூரியா எச்.ராஜா போன்ற நேர்மையாளர்கள் நிக்கிறாங்க

  இன்னொரு புறத்துல அத்தனை அயோக்கியர்களும்….
  இந்து மதத்தை கேவலப்படுத்துபவர்களும் ….
  அவர்களுக்கு காசு கொடுத்து பிரிவினையை வளர்க்கும்…..

  இந்துமதத்தை அழித்து மதமாற்றத்தை செய்யும்
  பிற மத வெறியர்களும் கூட்டமா நின்னுட்டு ….

  தங்கள் பக்கத்துல….
  தங்களை நம்பி இருக்கிற அப்பாவி இந்துக்களுடைய முதுகுல அவர்களுக்கே தெரியாமல் ……
  துரோகத்தால் குத்தி குத்தி இந்துக்களை அழித்து கொண்டிருக்கிறார்கள்….

  இனியாவது……
  மிச்சமிருக்கிற இந்துக்களாவுது…. விழித்தெழுந்து தர்ம போராட்டத்தில் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்

  இன்று இல்லையேல் இனி என்றும் இல்லை….
  இது சத்தியம் ….
  சத்தியமேவ ஜெயதே ….

  வாய்மையே வெல்லும் ….
  தர்மம் தலைகாக்கும்

  ஜெய்ஹிந்த்

 4. மதம் மாறிய நபர் என்னிடம் வந்து நீங்கள் பேயை வணங்குவதால் என்ன கண்டீர்கள்? பிசாசை வணங்குகிறீர்கள் என்றுகொண்டே இருந்தார்.
  நானும் பதிலேதும் பேசாமல் பொறுமையாகவே இருந்தேன்.

  நான் பொதுவாக யாருடைய வம்புக்கும் போவதும் இல்லை. அவரவர் மத நம்பிக்கை அவரவர்களுக்கு என்பதில் நான் மிகுந்த
  நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

  இன்று பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானேன்

  நண்பா வாங்க ! ஒரு சந்தேகம் கேட்கணும் உங்ககிட்ட”
  என்றேன்.

  நண்பா பேய் பிசாசுன்னா என்ன சார்?” என்றேன்.

  அவருக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. மேலும் கீழும் முழித்துக் கொண்டிருந்தார்.

  நான் சொன்னேன்:

  ” மனிதனாக பிறந்து
  செத்துப் போய் திரும்பி வந்தால் அதைத் தான் பேய் என்று எங்கள் ஊர்பக்கம் சொல்வார்கள். உங்க ஊர் பக்கமும் அப்படித்தான் சொல்வார்கள் என்று எண்ணுகிறேன்.”

  “ஆமாம்” என்று இழுத்தார்.

  நான் தொடர்ந்தேன்,
  “எங்கள் விநாயகரோ, சிவபெருமானோ, விஷ்ணுவோ எங்கும் இறந்து போனதாக இதுவரை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை! எந்த புத்தகத்திலும், ஏன் மாற்றுமத புத்தகத்திலும் கூட படித்ததும் இல்லை.

  ஆனால் நீங்கள் உங்கள் கடவுளாக சொல்லக்கூடியவர் தான் மனிதனாக பிறந்து இறந்து போய் திரும்பி வந்திருக்கிறார். இதை நான் சொல்லவில்லை. உங்கள் புத்தகம் தான் சொல்கிறது.”

  ஆசாமி எதுவும் பேசவில்லை.

  “ஆக உங்கள் புனிதநூலே சொல்கிறது அவர் மனிதனாக பிறந்து இறந்து போயி மீண்டும் வந்திருக்கிறார் என்று! இப்போது யார் பேயை பிசாசை வணங்குகிறார்கள் ?” என்று கேட்டேன்.

  மனிதர் முணுமுணுத்துக் கொண்டே கிளம்பி போய்விட்டார்

 5. 2 ஜி வழக்கும் லாவண்யா கதையும்

  ————————————————————————–

  2 ஜி வழக்கை ஆதியோடந்தமாக படித்திருக்கிறேன் .சுப்பிரமணியன் சாமி ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார் .

  புத்தகத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறார் : மொத்த நஷ்டம் சுமார் 30 000 கோடி இருக்கலாம்.

  முதல் அத்தியாயத்திலே தெளிவாக அம்பானி எப்படி தன்னுடைய ய பழைய நிதி நிறுவனத்தின் பெயரை டெலிகாம் என்று மாற்றி உரிமைகளை வாங்கி, அதையே உடனடியாக எப்படி பெரிய லாபத்துக்கு விற்றார் என்று…..

  அப்படி அவருக்கு அள்ளிக்கொடுத்த காங்கிரஸ்தான் மோடியை அம்பானியின் ஆள் என்கிறது .

  வழக்கை விசாரித்த நீதிபதி : யாராவது ஏதாவது ஆதாரம் கொண்டுவருவார்கள் என்று தினமும் காத்திருந்தேன்…ஒருவரும் கொண்டு வரவில்லை என்றார் .

  பின் ஏன் ராஜா கனிமொழி விடுதலையாக மாட்டார்கள்?

  எல்லாவற்றுக்கும் மேலாக அதிகபிரசங்கிகள் 30 000 கோடியை வேண்டுமென்றே ஒருலட்சத்து எழுபதாயிரம் கோடி என்று சொல்லி எள்ளி நகையாடினார்கள் .

  மாங்காய் திருடியவன் மரத்தையே மொட்டைய டித்துவிட்டான் என்று சொல்ல,மரத்துக்காரன் வந்து பார்த்தால் சில மாங்காய்களே திருடி இருந்தால் என்னவாகும்?

  சரி சரி விடு என்பானல்லவா ? அதுதான் நடந்தது

  அப்படிதான் வரிசையாக 2 ஜி வழக்கு நீர்த்து போனது .

  தவறே நடக்கவில்லை என்றில்லை .ஆதாரங்கள் கோர் வையாக தரப்படவில்லை.

  பரிவர்த்தனைகள் கண்காணிக்க படவில்லை

  ஆதாரங்கள் திரட்டப்படவில்லை .

  ஓவர் எஸ்டிமேஷன் குற்றத்தின் தன்மையை நீர்த்து போக வைத்து விட்டது.

  லாவண்யா விவகாரமும் அப்படித்தான்..

  லாவண்யா என்னை மதம் மாறும்படி கேட்டார்கள் . என் பெற்றோர் முன்னிலையில் கேட்டார்கள்.நான் மறுத்துவிட்டேன் என்கிறாள்.—-உண்மைதானே?

  அதனால்தான் உன்னை ஹராஸ் செய்தார்களா என்றால் இருக்கலாம் என்கிறாள். —உண்மைதானே?

  அதனால்தான் செய்தார்கள் என்று உறுதியாக சொல்ல அவளென்ன பிஜெபியா–
  அல்லது இல்லை என்று பொய் சொல்ல திமுகாவா ?

  அடுத்தது நான் இதை வெளியே சொன்னால் என் கேரக்டர் மோசமென்று சொல்லிவிடுவேன் என்றும் பயமுத்தினார்கள் என்கிறாள் .சொல்லவில்லையா?

  எல்லாவற்றுக்கும் மேலாக அவளை கழிவறை கழுவ சொன்னது யார்? எதற்காக?
  அதை உறுதி செய்தபின்தானே சகாய மேரியை கைது செய்தார்கள் ?

  இப்ப எல்லாமே மாறி விட்டதா?

  இத்தனைநாள் அமைதியாக அடங்கி ஒடுங்கி இருந்த பள்ளி நிர்வாகம் இப்ப தீடீரென்று
  ” நாங்கள் தவறு செய்யவில்லை ” என்று சொல்கிறதே இத்தனை நாள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்..?

  இப்ப யாரவது இப்படி சொல்லுங்கள் என்று தைரியம் கொடுத்தார்களா?

  அந்த பெண்ணின் தாயாரிடம் அவள் மதம் மாறினால் எங்களைப் போல நல்ல நிலைக்கு வரலாம் என்று சொன்னதாக வீடியோவில் அந்த பெண், அவர் தாயார் சொல்கிறாரே -இல்லையா? அதற்க்கு பெயர் என்ன?

  தற்கொலை செய்த பெண்
  அவள் தாயார்
  வீடியோ எடுத்தவர்கள்
  மற்ற தரப்பினர்
  அனைவருமே பொய் சொல்கிறார்கள்
  இல்லையா?

  போகட்டும் அண்ணண்மாலை ஒன்றும் உங்களைப்போன்ற அரைகுறையல்ல ….
  ஆயிரம் வழக்குகளை பார்த்திருக்கிறார் …
  அவர் என்ன சொன்னார்..?

  இதுதான் வீடியோ. அந்த பெண் தற்கொலை செய்திருக்கிறாள் ..

  கிறித்தவமே தவறு என்றோ அந்த பள்ளியை மூடுங்கள் என்றோ நான் கேட்கவில்லை.
  காரணத்தை சரியாக விசாரியுங்கள் விசாரித்துவிட்டு நடவடிக்கை எடுங்கள்

  என்றுதானே சொன்னார்?

  அது தவறா?

  முதல்நாளே எஸ் பி சொல்கிறார் அப்படி எதுவும் புகார் இல்லை .

  பொள்ளாச்சியில் ஒருவர் சொன்னாரே அதுபோல இல்லை ?

  அடுத்தது மந்திரி… இல்லை இல்லை இல்லை என்றே சொல்கிறார்

  தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்கிற மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது .

  நான் மேலே சொன்ன விபரங்களை தினமலரில் பார்க்க வில்லை …
  சி என் என்
  என் டி டிவி
  ரீ பப்லிக்
  ஆகிய மூன்று தொலைக்காட்சிகளிலும்
  சில வடநாட்டு இணைய தளங்களிலும் பார்த்தேன்.

  அவர்களும் தெளிவாக தமிழ் விடியோவை மொழி பெயர்து எழுதுவதாக கு றிப்பிட்டிருக்கிறார்கள்.

  நண்பரொருவர் முன்பே ஏன் சொல்லவில்லை என்று நக்கலடிக்க முயன்றிருக்கிறார் ….

  நான்கு நாட்களுக்கு முன்பே எழுதியுள்ளேன்
  இந்த வழக்கு நகராது என்று.

  தேவைப்பட்டால் அந்த பெண்ணின் அம்மா அப்பாமீது வழக்கு தொடுக்கப்படும்

  இப்பொழுது அண்ணாமலை கருப்பு மீது குற்றம் சுமத் துகிறார்கள் .அவர்கள் பொய் சொல்லிவிட்டார்களாம் ..

  வீடியோ எடுத்தவர் எங்கும் ஓடவில்லை .அவரது விடியோவை நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

  நீதிமன்றத்தில் ஆஜராகி மொபைலை ஒப்படைத்திருக்கிறார் .

  இனி என்ன செய்ய ?

  உதயகுமார் என் மகனே அல்ல ..

  மதுரை தினகரன் அலுவலகம் தானே தீப்பிடித்து எரிந்து அதனுள்ளே தூங்கியவர் இறந்தார் .

  வழக்கறிஞ்சர் ஷண்முகம் எப்படி இறந்தாரென்று தெரியாது .

  மதிமுக ஏழுமலை எப்படி இறந்தார் என்று தெரியாது .

  சாதிக் பாட்சா விமான டிக்கட் வாங்கிவிட்டு விமானத்தில் போக பயந்தது தற்கொலை செய்துகொண்டார் .

  அண்ணனை நகர் ரமேஷ் வாழ்க்கையின் லட்சியமே தற்கொலை செய்வதுதான்..

  என்றெல்லாம் நம்பும் நாம் இனி லாவண்யா விவகாரத்தில் லாவண் யா தற்கொலையே செய்யவில்லை இறந்தது வேறு யாரோ …இதோ லாவண்யா என்று ஒரு பெண்ணைக்காட்டினாலும் நம்புவோம்..

  கருப்பு, அண்ணாமலை, அந்த பெண்ணின் அம்மா
  அப்பா
  இன்னும் அவரின் சித்தப்பா பெரியப்பா எல்லாம் குற்ற வாளிகள் எனவும் மாறலாம்

  கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்

  இரு காதிழந்த மனிதர்முன்னே பாடலிசைத்தார்

  பாடலை பாடியபடியே போகவேண்டியதுதான்

 6. ஆங்கிலேயர்கள் வந்துதான் இந்தியாவுக்கு அனைத்து அறிவியலும் கிடைத்தது, கல்வி கிடைத்தது என சரக்கு சங்கர் முதல் பல திராவிட கூட்டங்கள் விடாமல் சொல்லி திரிகின்றன. ஆனால் ஆங்கிலேயர்கள் பாரதத்தில் இழைத்த கொடூரங்கள் எல்லாம் நம் ரத்தத்தை உறைய வைப்பவை.

  வங்காள பஞ்சத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கியது பலருக்கு இன்னும் தெரியாமல் இருக்கலாம். வங்காள விவசாயிகளை நெல் மற்றும் தானியங்கள் பயிரிடக் கூடாது என்று மிரட்டி, ஓபியம் மற்றும் இயற்கை சாய பூக்களை விளைவிக்க வைத்து, லட்சக்கணக்கான இந்தியர்களை பட்டினியில் சாக அடித்தார்கள் ஆங்கிலேயர்கள்.

  19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இது போலவே மெட்ராஸில் மிகப்பெரும் பஞ்சத்தை உருவாக்கினார்கள் ஆங்கிலேயர்கள். கலாச்சாரமும், ஆச்சாரமும் இல்லாத அவர்களின் வாழ்க்கை முறையினால் காலரா, பிளேக் போன்ற கொடூரமான நோய்கள் தமிழகத்தில் பரவின. மக்கள் கொத்து கொத்தாய் நோயினாலும், பட்டினியாலும் இறந்தார்கள். 1871-ல் மெட்ராஸ் வந்த ஒரு டச்சு வியாபாரி இவற்றை எல்லாம் விவரமாக டச்சு மொழியில் ஆவனப்படுத்தி வைக்க அதை ‘ஜேகப் டி ரோவர்’ என்பவர் மொழிப்பெயர்த்து ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார்.

  “நான் மெட்ராஸின் வீதிகளில் குவியல் குவியலாக பிணங்களை பார்க்கிறேன். அதிலும் பட்டினியால் சதை முழுதும் கரைந்து போய், தோல் ஒட்டிப்போன மனிதர்கள். அவர்களின் உடலில் எலும்புக் கூட்டை தவிர வேறு எதுவும் இல்லை. பல இந்தியர்களின் பலகீனமான மரண ஸ்வரத்தை என்னால் கேட்க முடிந்தது. ஆனால் அவர்களை ஏதோ காட்டு விலங்குகளாய் பாவித்த, ஆங்கிலேயர்கள், ஆயிரக்கணக்கில் அவர்கள் இறப்பதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

  தங்கள் பங்களா, பால்கனியில் அவர்கள் இவற்றையெல்லாம் வேடிக்கை
  பார்த்துக் கொண்டே சுவையான உணவை தின்று கொண்டிருக்க,
  பல இந்தியர்கள் வீதிகளில் விழுந்து இறந்து கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் ஆங்கிலேய தானிய கிடங்குளில் போதுமான தானியம் குவிந்து கிடந்தது. இருந்தும் கருணையையும், அன்பையும் குறித்து வாய் கிழிய பேசும் அந்த கிறிஸ்தவர்கள், நூற்றுக்கணக்கில் இறக்கும் இந்தியர்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

  பணக்கார இந்தியர்கள் சிலர் மட்டுமே காசு கொடுத்து தானியங்களை வாங்கக்கூடிய நிலையில் இருந்தார்கள். மிகப்பலரும் அந்த பஞ்சத்தில் கொஞ்ச கொஞ்சமாய் இறப்பதை தவிர வேறு வழியே இல்லாதவர்களாக பசியால் துடித்து துடித்து இறந்தார்கள். நாஜிகளின் ஆளுமையில் கேஸ் சேம்பர்களில் கொல்லப்பட்ட யூதர்களுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல, மெட்ராஸில் ஆங்கிலேயர்கள் ஆளுமையில் இறந்த இந்தியர்களின் நிலை”

  இப்படிப்பட்ட ஈவு இரக்கமற்ற ஆங்கிலேயர்களைதான், தோல் சீலை போராட்டத்தில் சமூக நீதியை காத்து சாதி சமத்துவத்தை உருவாக்கி தந்ததாகவும், கல்வியை அளித்ததாகவும், ஏழைகளுக்கு உணவளிக்கும் கருனை கடலாகவும், இவர்கள் நாட்டை செழிப்பாக்கி தந்ததாகவும் புகழ் பாடுகின்றன அவன் வீசிய ரொட்டிக்கு மாறிய கூட்டம்.

  என்ன அவன் அராஜகங்களை, கொடூரங்களை வெளியே தெரியாத வண்ணம் மறைத்து வைத்து விட்டான் அவ்வளவே.

  ஆங்கிலத்தில் படிக்க

  https://witness-to-our-times.org/2022/01/26/the-british-and-the-nazis-denying-the-experience-of-the-colonized/

  சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

 7. ஏன் தெரியுமா? நம்மிடம் ஒற்றுமை இல்லை. உலகிலேயே மிகவும் பரந்தகுணம் படைத்தவர்கள் இந்துக்களே.

  ஓர் இஸ்லாமியன் மதம் மாறினால், இஸ்லாமியர்கள் எல்லோரும் கூடி அவனை தீர்த்துக்கட்ட முன்வருவார்கள். மதமாறுபவர்களுக்கு மரணதண்டனை தான் தீர்வு என்பது அவர்களின் நம்பிக்கை. ஒரு கிறிஸ்துவன் மதம் மாறினால், கிறிஸ்துவர்கள் எல்லோரும் கூடி கோசம் போடுவார்கள். மதம் மாறுபவன் நரகத்தில் தள்ளப்படுவான் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால், ஓர் இந்து மதம் மாறினால் “அது அவனுடைய தனிப்பட்ட விருப்பம்” என்று சொல்லி விலகிச் செல்கின்றோம். இது நம்முடைய பரந்தகுணமா அல்லது இளிச்சவாய்த்தனமா?

  ஒருவரை தர்மத்தில் இருந்து விலக்கி அதர்மங்களை நோக்கி அழைத்துச் செல்லும்போது, தர்மத்தைக் காக்க பிறப்பித்த நாம் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கலாமோ? முடிந்தவரை அவர்களுக்கு தர்மங்கள் எது, அதர்மங்கள் எது என்று நன்கு புரியவைத்து மீண்டும் தர்மபாதைக்கே அழைத்து வந்து சேர்ப்பதே சிறப்பு.

  ஸ்வாமி விவேகானந்தர் சொல்கிறார், ”ஒவ்வொரு முறையும் ஓர் இந்து மதமாறுவது இந்து சமயத்திற்கு ஓர் இழப்பு மட்டுமல்ல; இந்து சமயத்திற்கு ஓர் எதிரி கூடுகிறான் என்றும் பொருள்படும்.” நம் தாய்வீட்டில் இருந்து பிரிக்கப்பட்டு, பின் தம் தாய்வீட்டிற்கே எதிராக ஆகும் அளவுக்கு மதமாறியவர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். மதமாற்றங்களைத் தடுப்போம்! மதமாறிய இந்துக்களை தாய்மதம் திருப்புவோம்! #மதம்_மாறுவது_அவமானம் #தாய்மதம்_திரும்புவது_தன்மானம்

  ஹரி: ஓம்

 8. அந்தணர் ஆண்டுக்கு 96 தர்பணமும் மற்றவர்கள் குறைந்தது தை அமாவாசைக்கும் ஆடி அமாவாசைக்கும் ஒருமுறை தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பது இந்து தர்மம் வலியுறுத்தும் விஷயம்

  வேதம் படித்தவன், அதை தவிர் ஏதும் தெரியாதவன், அந்த நிலையிலே வாழ்வினை யாசகத்தால் மட்டுமே கொண்டு செல்பவன் எனும் வகையில் பிராமணனுக்கு அது கடமையாக்கபட்டது

  உழைத்து வாழும் மக்களுக்கு, உலகை உழைப்பால் சூத்திரதாரியாக நின்று இயக்கும் மக்களுக்கு வருடத்து இருமுறையாவது முன்னோரை நினைத்துபார் என அம்மதம் ஆலோசனையும் சொன்னது

  தை அமாவாசை என்பது உலகெல்லாம் இந்துமதம் பரவியிருந்த காலத்தில் மிக பெரிய விஷேஷ நாளாய் இருந்தது, இந்து பாரம்பரியத்தோடு தொடர்புடைய பண்டைய சீனாவில் அது முன்னோர்க்கு நன்றி சொல்லி புதிய காரியங்களை தொடங்கும் விஷேஷித்த நாளாய் இருந்தது

  அது இன்றளவும் உண்டு, சீனர் இருக்குமிடமெல்லாம் உண்டு.

  இறந்தவர்களை நினைவு கூர்ந்து வழிபடுதல் என்பது இந்து தர்மம் என்றோ வலியுறுத்திய ஒன்று அதைத்தான் இன்று என்பது உலகெங்குமுள்ள‌ எல்லா மதங்களிலும் இனங்களிலும் உள்ள உலக வழக்கம்

  சீனர் போன்ற கிழக்காசிய இனம் தமிழரை போலவே 6 மாதத்துக்கு ஒருமுறை அனுசரிக்கும், அன்று முன்னோருக்கு படையல் மட்டுமல்ல சில ஸ்பெஷல் காகிதங்களை எரித்து அந்த புகையினை மேல் அனுப்பி முன்னோருக்கு பணம் அனுப்பும் முறை எல்லாம் உண்டு

  ஆடி அமாவாசையும் புரட்டாசி அமாவாசையும் அவர்களுக்கு நீத்தாருக்கானது.

  இந்த நீத்தார் வழிபாடு உலகெல்லாம் இருந்தாலும் தென்புலத்தார் எனும் தமிழரிடம் அதிகம் இருந்தது, வாழ்வின் மிகபெரும் கடமையாக அதை கருதினர்

  அது தமிழர்வாழ்வில் கலந்திருந்ததை புறனாற்று பாடலான
  “ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
  பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
  தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
  பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
  எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என
  அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
  கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
  எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
  செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
  முந்நீர் விழவின், நெடியோன்” என்பது தெளிவாக சொல்கின்ன்றது

  வள்ளுவனும் அதை தெளிவாக சொல்கின்றான் இப்படியாக‌

  “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
  ஐம்புலத்தாறு ஓம்பல் தலை..”

  இன்னும் ஏகபட்ட பண்டைய இலக்கியம் மற்றும் நீதி நூல்களில் அதன் அடையாளங்களை காணமுடியும்
  அது தமிழரின் அடையாளமாக இருந்தாலும் இந்துக்களின் கலாச்சாராமாக மட்டும் சுருங்கிவிட்டதுதான் சோகம், எனினும் இந்துக்களால் அந்த கலாச்சாரம் தொடர்கின்றது

  இன்றைய நாளில் அந்த வழக்கபடி முன்னோர்களை வணங்கி நினைவுகூறுவார்கள், அதை கூர்ந்து கவனித்தால் பல அற்புதமான விஷயம் இருப்பதை காணமுடியும்

  அதிகாலை எழுந்து விரதம் இருப்பார்கள், முதலில் காக்கைகு சோறு வார்ப்பார்கள், தங்கள் முன்னோர்களே காக்கை உருவில் வந்ததாக நினைத்து கொள்வார்கள்

  காகம் பித்ருக்களின் வடிவம் என்பது அவர்கள் நம்பிக்கை, மனிதனை அண்டிவாழும் பறவை என்பதாலும் கூடி உண்ணும் அப்பறவையில் பல தத்துவங்கள் இருக்கலாம் என்பதாலும் அச்சம்பிரதாயம் ஏற்பட்டது

  தன் இனத்தை எல்லாம் கூடிஉண்ண செய்யும் அப்பறவையில் தன் இனத்துக்காக உழைத்து சோறிட்ட முன்னோர்களை அவர்கள் கண்டிருந்தார்கள்

  அதன் பின் முன்னோர்களுக்கு பிடித்த ஆடையினை எடுத்து வைத்து அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்துவைத்து மறக்காமல் விளக்கேற்றுவார்கள்

  எவ்வளவு அருமையான ஏற்பாடு?

  முன்னோர்கள் நமக்கு உடை தந்தவர்கள், சுவையான உணவினை பாசமாய் தந்தவர்கள் என நினைவுகூறும் அற்புதமான நன்றிகடன் அது

  அதை பார்த்து பார்த்து அதில் மூழ்க செய்யும் நுட்பம் அது, மனமார அதில் கலந்துவிடும் ஏற்பாடு அது
  இன்னும் சிலர் முன்னோர்கள் கட்டி வைத்த கட்டங்கள் வீடுகள் அவர்கள் வளர்த்த செடிகொடிகளை எல்லாம் தொட்டு வணங்குவார்களாம், சிலருக்கு அச்சம்பிரதாயம் உண்டென்பார்கள்

  ஆம் முன்னோர்கள் விட்டு சென்ற சுவர்களை தொட்டாலே ஒருவித ஏகாந்தமும் நினைவும் வரும்.
  அதன் பின் மறக்காமல் நீர் நிலைகளுக்கு செல்வார்கள்

  அது ஏரி,குளம், ஆற்றங்கரை அல்லது கடற்கரை என செல்வார்கள்.

  அங்கு பிண்டம் வைத்து வணங்குவது அவர்கள் நம்பிக்கை எனினும் அதிலுள்ள தத்துவம் அந்த இடத்தில் அவர்கள் முன்னோர் நடமாடி இருப்பார்கள், குளித்திருப்பார்கள், அந்த குளகரையில் ஒன்றாக உண்டிருப்பார்கள்

  அந்த நீர்நிலையில் அவர்கள் கலந்து தங்களோடு இருப்பதாக கருதி அவர்களுக்கும் உணவளிப்பதாக அந்த பிண்டத்தை கரைப்பார்கள்

  ஏரியோ குளமோ அவர்கள் முன்னோர் கட்டியதாக இருக்கும், அவர்கள் உழைத்ததாக இருக்கும். ஆறு அவர்கள் வம்சத்துக்கு வாழ்வளித்த இடமாக‌ இருக்கும்

  அங்கு செல்வது சால சிறந்தது, நினைவாலயம் அவைகள்

  சிலர் கடலுக்கு செல்வார்கள், கடல் எல்லாவற்றையும் ஏற்றுகொள்ளும் கடவுளுக்கு சமம், கடவுளில் கலந்துவிட்ட முன்னோரை கடற்கரையில் நின்று நினைத்தால் மனம் ஒருவித நிறைவடையும்

  அந்த தை அமாவாசையின் ஒவ்வொரு ஏற்பாடும் மகா உன்னதமானது, அர்த்தம் மிகுந்தது.

  இதில் குலதெய்வ வழிபாடு வம்ச தொடர்ச்சி என பல நுணுக்கமான விஷயங்களும் இணைத்து பின்னபட்டன, அந்நாளைய இந்துவுக்கு தான் யார்? தன் வம்சம் என்ன? தன் குலதெய்வம் என்ன? முன்னோர்கள் எங்கே வசித்தார்கள் என்பதில் தன் வம்சாவளி அறிவும் தெளிவும் இருந்தது

  அந்த சங்கிலி தொடர்ச்சியில் வரலாறுகள் சரியாக தொடரபட்டது, அந்நிய குடியேற்றமோ கலாச்சார சீரழிவோ வர வாய்ப்பே இல்லை, அதனால் இந்து இந்துவாக தொடர்ந்து வந்தான்

  அந்த தொடர்ச்சியில் இந்து ஆலயங்கள் எழுந்தன, இந்துக்களின் பொற்காலம் இருந்தது, இவையெல்லாம் இம்மாதிரி தர்பணங்களின் தொடர்ச்சியே

  ஏன் அமாவாசையினை தேர்ந்தெடுத்தார்கள் எல்லா விஷயமும் இல்லாத ஒன்றில் இருந்தே தொடங்கும். நாங்கள் சூனியம் நீங்கள் ஒளிதர வாருங்கள் என அழைக்க அந்த இருட்டு நாளை தேர்ந்தெடுத்தார்கள்
  இன்னொரு கோணமும் உண்டு அது சாத்தியமான உண்மை.

  சந்திரன் காலண்டர் உள்ள அக்காலத்தில் அதுவே மாத தொடக்கம், அதுவும் அமாவாசை என்பது விவசாய பணிகளுக்கான தொடக்க நாள்

  நன்றியினை பெரிதாக கொண்ட தென்புல சமூகம் தன் முன்னோர்களை எண்ணி செய்த பெரும் ஏற்பாடு இது , உலகின் மற்ற இனங்களை விட இந்த இனம் நீத்தார் கடனில் தனித்து நின்றது

  அந்த மாபெரும் நன்றிவிழாவின் தொடர்ச்சியே இந்த தை அமாவாசை

  அந்நாளில் வழிபட்டால் பித்ருக்கள் ஆசி கிடைக்கும் என நம்பாதவன் கூட அப்படி செய்தால் ஏற்படும் மன‌ நிறைவினை மறுக்க முடியாது

  முன்னோர்களின் சொத்து எப்படி வழிவழி வருகின்றதோ அப்படியே அவர்கள் செய்யும் நல்ல காரியங்களின் ஆசியும் அவர்கள் செய்த பாவத்தின் தொடர்ச்சி சாபமாக வருகின்றது என்பதும் இந்துக்களின் நம்பிக்கை

  இதில் பகுத்தறிவாளர் ஒரு கேள்வி எழுப்புவர் நல்லதோ கெட்டதோ செய்தவனையன்றி அவன் வம்சத்தை தொடர்வானேன்? எல்லாம் கட்டுகதை என்பார்கள்

  அவர்கள் அப்படித்தான்

  ஒருவனுக்கு முன்னோர் சொத்து வழிவழியாக வந்தால் அதைகொண்டு அவர்கள் பெயரில் நற்காரியம் செய்தல் வேண்டும்

  முன்னோர் செய்த பாவம் ஒருவனை தொடர்வதாக கருதினால் அதற்கு நிவாரணமாக தாழ கிடப்பவருக்கு சில உதவிகளை செய்து வாழவைக்க வேண்டும்

  யாரையோ அழித்து முன்னோர் செய்த பாவம் அவன் வம்சாவழி யாரையோ வாழவைக்கும் பொழுது சரியாகின்றது

  ஆண்டவனின் கணக்கு மிக துல்லியமாகின்றது இன்று அயோக்கியர்கள் கையில் சேரும் சொத்து பல ஆயிரம் கோடிகளுக்கான சொத்து எதற்கு சேருகிறதென்று நமக்கு தெரியாது

  ஆனால் அவன் சந்ததியில் ஒருவன் அந்த செல்வத்தால் 4 பேரை வாழவைப்பான் என்பது ஆண்டவனுக்கே தெரியும்

  இன்றுநடக்கும் அநியாயங்களின் கொடுமை கடவுளில்லைஎன தலையாட்ட சொல்லலாம் , ஆனால் நாளை அந்த அநியாயக்காரரின் வாரிசுகள் பின்னாளில் பலகாரியங்களை செய்யும்பொழுது ஆண்டவன் கணக்கு சரியாகும் என்பது தெரியும்

  இதெல்லாம் நம் அறிவுக்கு எட்டா விஷயங்கள், புரிந்து கொள்ள முடியா சூட்சுமங்கள்.

  ஒவ்வொருவனின் முன்னோரும் தன் வம்சத்துக்கு ஒருவித காரியங்களை கடவுள் விருப்படிசெய்ய இங்கு வருகின்றான்

  அதை செய்துமுடித்துவிட்டு காலம் முடிந்து கிளம்புகின்றான் அதன் காரிய காரணங்களை அவனும் அறியமாட்டான், அதை தெரிந்துகொள்ளும் அறிவும் அவனுக்கு இல்லை

  ஆனால் அவன் வந்து சென்றதின் பலன் என்ன என்பது இப்பொழுது வாழும் தலைமுறைக்கே தெரியும்
  அதனால் குறிப்பிட்ட நாளில் தன் குலம் உதித்த காரணமும் அது செய்த நற்காரியங்களையும் தான் இந்த உலகுக்கும் உறவுக்கும் சமூகத்துக்கும் செய்யவேண்டிய காரியம் சாப நிவர்த்தி போன்றவற்றை செய்ய சிந்திது பார்க்க செய்யும் நாளே தை அமாவாசை

  இந்த நாள் சொல்லும் தத்துவம் அதுவே

  எல்லா மதங்களிலும் நீத்தார் வழிபாடு உண்டெனினும் மதங்களுக்கு தாயான இந்துமதம் அதை மிக தெளிவாக தனக்கே உரித்தான எளிமையுடன் அழுத்தமான தத்துவத்துடன் சொல்கின்றது

  தென்புலத்தானாக அதில் பெருமை அடையலாம்

  அவரவர் முன்னோரை இந்நாளில் கூர்ந்து கவனித்து நினையுங்கள், அவர்கள் நினைவுகளில் மூழ்குங்கள்
  அது வாழ்வினை திரும்பி பார்க்க வைக்கும், முன்னோர்களின் நினைவுகள் நமக்கு ஏகபட்ட பாடங்களை சொல்லும்

  இன்று அவர்களை வழிபட்டால் அவர்களின் ஆசி கிடைக்கும் என நம்பினால் அது கிடைக்கும், இல்லை குறைந்த பட்சம் மனநிம்மதியும் நாம் ஆற்றவேண்டிய கடமைகளின் பட்டியலும் மனதில் அப்படியே வந்து அமரும்

  மிக அர்த்தம் பொதிந்த முன்னோர் நினைவுநாளை ஏற்படுத்திய இந்து தர்மத்தையும், அதை அடியொற்றி நடக்கும் இந்துக்களையும் தூர இருந்து பார்க்கும்பொழுது மனம் மகிழ்த்தான் செய்கின்றது

  அவர்களின் முன்னோர்கள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும், முன்னோர்களின் கனவு இவர்கள் மூலம் நிறைவேறட்டும், உலகம் செழிக்கட்டும் தர்மம் நிலைக்கட்டும்.

  தர்பணம் எனும் சொல்லுக்கு சந்தோஷமடைதல் என பொருள், இத்தேசத்தில் இத்தேசதுக்காகவே வாழ்ந்த அந்த முன்னோர்களின் ஆன்மா இந்நாளில் சந்தோஷமடையட்டும், அவர்கள் ஆசியில் நாடு செழிக்கட்டும்

 9. சுஜித் வில்சன் எனும் ஒரு குழந்தை, 2019 அக்டோபர் மாதம் திருச்சி
  அருகே நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கைவிடப்பட்ட, மூடாத, போர்வெல்லுக்குள் விழுந்து விட்டது.

  போர்வெல் யார் போட்டது ?

  போர்வெல் சுஜித் வில்சனின் பெற்றோர்கள் போட்ட போர்வெல்.

  அதை மூடாமல் விட்டவர் யார் ?

  சுஜித் வில்சனின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ்

  போர்வெல் யார் வீட்டுக்குள் இருந்தது ?

  பிரிட்டோ ஆரோக்கியராஜின் வீட்டிற்குள் இருந்தது.

  சிறு குழந்தை அஜாக்கிரதையாக விடப்பட்ட போர்வெல்லுக்குள் விழும் நிலையில் அக்குழந்தையின் தாயார் என்ன செய்து கொண்டிருந்தார் ?

  மூத்த மகன் புனித்தை பார்த்துக் கொண்டிருந்தார்.

  ஆக அந்த குழந்தை போர்வெல்லில் விழுந்து இறந்ததற்கு யார் காரணம் ?

  போர்வெல்லை மூடி வைக்காமல் விட்ட சுஜித் வில்சனின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ் மற்றும் சிறு குழந்தையை கவனிக்காமல் விட்ட தாயார் கலாமேரி.

  இது குற்றமா ?

  போர்வெல்லை அலட்சியமாக மூடாமல் வைத்ததே பெரும் குற்றம்தான். சிறை தண்டனை தரப்பட வேண்டிய குற்றம்.

  ஆனால் என்ன நடந்தது ?

  மக்களின் வரிப்பணத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து குழந்தையின் மீட்பு நடவடிக்கை நடந்தேறியது. எத்தனையோ முயற்சி எடுத்தும் குழந்தையை மீட்க முடியவில்லை. குழந்தை இறந்து விட்டது. எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், ஆளும்கட்சியை குறை கூறினார். கிறிஸ்தவ மிஷநரிகளின் மீடியா பலம் வேலை செய்யத் தொடங்கியது. உலகம் முழுதும் இதை பரப்பியது. ஆளும் அதிமுக அஞ்சி நடுங்கி அரசு பத்து லட்சம் நஷ்ட ஈடும், கட்சி நிதியாக பத்து லட்சமும் கொடுத்தது. இது போதாது என பல தரப்பிலும் நிதி அந்த குடும்பத்திற்கு கிடைத்தது.

  இதனால் யார் பயனடைந்தார்கள் ?

  மீடியாக்கள் கோடிக்கணக்கில் இதை தொடர் ஒளிப்பரப்பு செய்து சம்பாதித்தன. தீபாவளி பண்டிகையை கூட கொண்டாடுவது தவறு என மிஷநரி மீடியாக்கள் கதறின. சில இந்துக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை கூட தவிர்த்ததாக கூறினார்கள்.

  சரி, சமீபத்தில் லாவண்யா விவகாரத்தில் என்ன நடந்தது ?

  மைக்கேல்பட்டி எனும் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில், முதல் மதிப்பெண் பெறும் ஒரு மாணவி, மதம் மாறுமாறு கிறிஸ்தவ ஆசிரியர்கள் ஸ்டெல்லா மேரி மற்றும் ரேச்சல் மேரியால் நிர்பந்திக்கபடுகிறார்கள். மறுக்கும் மாணவி அனைவருக்கும் முன் பள்ளி பொது கழிவறையை கழுவ கட்டாயப் படுத்தப் படுகிறாள். அதனால் மனம் நொந்து தற்கொலை செய்துக் கொள்கிறாள்.

  இதற்கு ஆதாரம்.

  மாணவியின் பெற்றோர்கள் கதறி கதறி பேசிய வீடியோக்கள். மாணவியின் கொடுமைகள் குறித்த வாக்குமூலம்.

  தமிழக மீடியாக்கள் இதற்காக சுஜித் வில்சனுக்கு பரப்புரை செய்தது போல் செய்ததா ?

  இல்லை, மாறாக, சட்டம் தன் கடமையை செய்யும் என திமுக அரசு கூறியதை திரும்ப திரும்ப காட்டியது. மதம் மாறிய மக்களிடமே சென்று இங்கே மதமாற்றம் நடக்கிறதா என பேட்டி கண்டது திமுக குடும்ப மீடியா.

  லாவண்யாவுக்கு யாருமே போராடவில்லையா ? உதவவில்லையா ?

  பாஜக மட்டுமே தொடர்ந்து போராடி வருகிறது. அதன் தலைவர் அண்ணாமலை, லாவண்யாவின் பெற்றோர்களை சந்தித்து கட்சி நிதியிலிருந்து பத்து லட்சம் கொடுத்தார்.

  ஏன் தவறிழைத்த சுஜித் வில்சன் பெற்றோருக்கு இத்தனை உதவிகள் ? கவன ஈர்ப்பு ? ஆனால் துளியும் தவறிழைக்காத லாவண்யா பெற்றோரை மட்டும் பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை ?

  காரணம் போர்வெல்லில் விழுந்த குழந்தை பெயர் சுஜித் ‘வில்சன்’, தற்கொலைக்கு தூண்டப்பட்டு இறந்த குழந்தை பெயர் லாவண்யா.

  சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

 10. பாஜக வை தொடர்ந்து மதவாத சக்தி என்று குறிப்பிடும் ஸ்டாலினுக்கு எனது கண்டனங்கள்.

  தான் சார்ந்துள்ள மதத்தின் மீது நம்பிக்கையுடன் இருப்பது மதவாதம் என்றால், சிறுபான்மை ஓட்டுப்பிச்சைக்காக தன்னை ஹிந்துமதப்பற்றாளன் என்று காட்டிக்கொள்வதற்கு கூச்சப்பட்டு ஹிந்துமத துவேசியாக காட்டிக்கொண்டு அந்நிய மதங்களுக்கு அடிமைத்தனமாக இருப்பதற்கு பெயர் என்ன..?

  ஸ்டாலின் இதுபோன்று பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்..

  தமிழ் நாட்டிற்கு வெளியே பாஜக ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர்களோ கிறுத்துவர்களோ இல்லை என்பது போல பேசுகிறாரா..?

  அல்லது அந்த மாநிலங்களில் பாஜக வினரால் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருக்கிறதா..?

  அப்படியெதுவும் இல்லையே..??

  மாறாக, போலிமதச்சார்பற்ற திமுக ஸ்டாலின் ஆளும் மாநிலத்தில் ஹிந்துமதத்தவருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது…

  தன் கட்சிக்காரன் மகளான லாவண்யா வின் மரணத்திற்கே நீதிகிடைக்காத போது, அது குறித்து வாயே திறக்காத ஸ்டாலினின் சுயரூபத்தை, அந்நிய மத அடிமைத்தனத்தை திமுக வில் இருக்கும் அப்பாவி ஹிந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும்…

  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, பொங்கல் பரிசாக 5000 கொடுப்பேன் என்று சொல்லி மக்களை ஏமாற்றியது..

  அஞ்சு பவுன் நகைக்கடன் தள்ளுபடியில் ஏமாற்றியது போன்ற நிர்வாகத்தோல்களை மறைக்க ஆக்கப்பூர்வமாக அனைத்து மக்களுக்குமான கட்சியாக இந்த தேசத்தை ஆண்டுகொண்டிருக்கும் பாஜக மீது மதவாத மதவாத என்கிற முத்திரை குத்தும் கீழ்த்தரமான அரசியலை கைவிடவேண்டும்…

  நிர்வாகத்தோல்விகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.நிர்வாக ரீதியாக எதிர்கொள்ள திராணி இல்லாத திமுக.

  பாஜகவை தொடர்ந்து மதவாத கட்சி என்று அழைக்குமாயின் திமுக வை அந்நிய மத அடிமைக்கட்சி என்று அழைப்பதில் என்ன தவறு..!

  இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பதிவு செய்து தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெற்று தேசத்தை ஆண்டுகொண்டிருக்கும், சிறுபான்மையினர் உட்பட பலகோடி தொண்டர்கள் இருக்கும் ஜனநாயக ரீதியிலான கட்சியை ஸ்டாலின் தொடர்ந்து மதவாத கட்சி என்று சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

  இந்த விஷயத்தில் திமுக விற்கு கடுமையான பதிலடியை ஹிந்துக்கள் மட்டுமன்றி அனைவரும் கொடுக்க வேண்டும் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.

 11. “லோகத்துக்கே குருவான மகா பெரியவா கூட கிறிஸ்தவப் பள்ளியில் படித்தவர்!”- இப்படிக் கிண்டலாக அவர் படத்தைப் போட்டு ஒரு பதிவு ‘மத்யமர்’ அரசியல் தளத்தில் பார்த்தேன்!

  இதில் கிண்டல் செய்து மகிழ திராவிடியாள்களுக்கு ஒன்றும் இல்லை!

  உண்மை! காஞ்சி மகா பெரியவர் கான்வென்டில் படித்தவர்.

  அது மட்டுமல்ல பள்ளி நாள்களில் “கிங் ஜான்”- எனும் பள்ளிக்கூட நாடகத்திலும் நடித்தார்.

  இதை வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் மிக அழகாகக் கூறுவார்:

  அறிந்தது ஆங்கிலப் பாடம் –
  அணிந்தது கிங் ஜான் வேடம்-
  அழைத்தது ஆன்மீக பீடம்!

  (சுப்பு ஆறுமுகம் தயாரித்த ‘குமுதம்’ இதழ்)

  சோ கூட லயோலா ப்ராடக்ட் தான்!

  எழுத்தாளர் சுஜாதா கூட செயின்ட் ஜோசஃப் ப்ரோடக்ட்தான்!

  பல ஆர்த்தடாக்ஸ் பிராமணக் குடும்பங்களில் பிள்ளைகள் கிறிஸ்தவப் பள்ளிகளில் படித்தனர்.

  எனது தமையனார் கூட வேலூர் ஊரிஸ் கல்லூரி பட்டதாரி – அதிலும் நன்கு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஏதோ ஸ்காலர்ஷிப் பெற்றுப் படித்தவர்!

  சேலம் LITTLE FLOWER HIGH SCHOOL (LFHS) ல் கூட – அக்காலத்தில் ஆச்சாரமாக திருமண் தரித்த தமிழாசிரியர்கள் இருந்தனர்.

  காஞ்சிபுரம் ஆன்டர்சன் பள்ளியிலேயே பிராமண ஆசிரியர்கள் பணி புரிந்தனர்.

  பிரச்னை அது அல்ல! இப்போதும் எல்லாக் கிறிஸ்தவ நிறுவனங்களையும் ஒட்டுமொத்தமாக எவரும் பழிக்கவில்லை. மாரிதாஸ் கூட தமது காணொளியில் அதைத்தான் கூறி உள்ளார்.

  மதமாற்றத்தைத் தீவிரமாக முன்னெடுக்கும் கிறிஸ்தவ அமைப்புகள் – (இக்காலத்தில் – முன்பு அது போல் இவ்வளவு தீவிரமாக இல்லை) குறித்துத்தான் விவாதம்!

  அதிலும் இப்போது உள்ளது போல் நெற்றியில் பூ வைக்காதே – பொட்டு வைக்காதே என்று பெண்களை வற்புறுத்துவதாகப் புகார்கள் வருகின்றனவே – அப்படிப் பட்ட புகார்கள் அந்தக் காலத்தில் வந்ததில்லை!

  இதெல்லாம் லேடஸ்ட் ட்ரெண்ட்!

  சென்னையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மாம்பலம் பகுதிகளில் பல ஆர்த்தடாக்ஸ் பிராமணக் குடும்பப் பெண்கள் அந்தக் காலத்தில் தீர்க்கமாகப் பொட்டு வைத்து – பூ வைத்து – பின்னி முடிந்து பாவாடை தாவணியுடன் க்வீன் மேரீஸ், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிகளில் சென்னையில் பயின்றனர்.

  அப்போதெல்லாம் அந்தக் காலத்தில் எந்தப் பிரச்னையும் புகாரும் வரவில்லை.

  இப்போது கிறிஸ்தவப் பள்ளிகள் சிலவற்றின் செயல்பாடுகள் சர்ச்சைக்கு உரியவையாக இருக்கிறது என்பதே இன்று எழுந்துள்ள மையமான பிரச்னை.

  இதற்கு பழைய கால விஷயங்களை எடுத்து வைத்துக்கொண்டு திராவிடியாள்ஸ் நியாயம் தேடுவது அறிவுரீதியான கயமைத்தனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *