அஞ்சலி: ஸ்ரீரங்கம் G.P.ஸ்ரீனிவாசன்

ஸ்ரீரங்கம் G.P.ஸ்ரீநிவாசன் (வயது 63) 2022 பிப்ரவரி 11 மதியம் இறைவனடி சேர்ந்தார்.

அமைதி, அறிவுபூர்வ ஆழ்ந்த சிந்தனையுடன் அகிம்சை வழி போராளியாக எளியவராக நடமாடும் நூலகராக சிறந்த வாசகராக மொழி பெயர்ப்பாளராக வாழ்ந்த நண்பர் விஷ்ணு பாதம் அடைய பிரார்த்தனை செய்கிறேன்.

அமரர் GPS (கோமடம் பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்) ஹிந்து (Hindu Voice) வாய்ஸ் என்ற மும்பை பத்திரிக்கையின் தமிழக செய்தியாளாராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். பற்பல இந்துத்துவ சிந்தனையாளர்களோடும் தொடர்பு கொண்டு ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பல வேலைகளை தனி ஒருவராக செய்து வந்தவர். அமரர் சேக்கிழார் அடிப்பொடி TNR (தன் அகில இந்திய நட்பு மூலம் புதிய நூல்களை அறிமுகம் செய்த) நெருங்கிய நண்பர்.

கிறிஸ்துவ மதமாற்றத்தை பற்றி எப்போதும் மிகவும் கவலைப்பட்டவர். மதமாற்ற சக்திகளின் மோசடிகளை முழுமையாக உணர்ந்து அதை தானும் எதிர்த்து ஒரு படையையே உருவாக்கினார். கனடா நாட்டில் பாதிரி குடும்பத்தில் பிறந்து தமிழகத்தில் இந்து சாமியாராக வாழும் திரு.ஈஸ்வர் சரண், டில்லியில் உள்ள Voice of India பதிப்பக நட்பில் எழுதிய நூல் தான் “புனித தோமா இந்திய வருகை” கட்டுக் கதையை உடைப்பதில் பெரும் பங்காற்றியது. அந்த நூல் பெருமளவில் உலகெங்கும் பரவ பின்னணியில் இருந்தவர் நமது GPS தான்.

தருமபுரம் ஆதினமடத்தில் கிறிஸ்தவ மோசடியாளர் தெய்வநாயகம் விவாதத்தில் தோற்று ஓடியதைப் பற்றி GPS காணொளி இங்கே.

இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாட்டில் இருந்த பல நேர்வழி (right wing) சிந்தனையாளர் தொடர்பில் வைத்து அவர்கள் பணிகளை உற்சாகப் படுத்தியவர். ராஜிவ் மல்ஹோத்ரா “உடையும் இந்தியா” (Breaking India) நூலை வெளியிடுமுன் ஆட்சி மாற்றம் என தடுமாறிய போது அது வெளிவரவும், மிகவும் பரபரப்பு அறிமுகம், வெளியீடு என பல விஷயங்களிலும் பின்னால் இருந்தவர்.

தொல்லியல் அறிஞர் நாகசாமி உடையவர் ராமானுஜர் வாழ்விற்கு ஆதாரமே இல்லை என எழுத, நட்பு என்றாலும் வரலாற்று உண்மை வெளிவர ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கொண்டே பதில் நூல் கொணரவும் பின்னணியில் இருந்தார்.

கிறிஸ்துவம் வெறும் கட்டுக் கதை என்ற உண்மைகளை நூலாக வர எனப் பல விவிலிய அறிஞர்கள் ஆய்வு நூல்கள் பதிப்பின் பின்னணியில் இருந்தார்.

தூத்துக் குடியில் சேது சமுத்திரத் திட்டம் என சிறிதும் பயனற்ற ஊழலுக்கே என திட்டம், அதன் மூலம் ராமேஸ்வரத்தின் இயற்கை பொக்கிஷங்களான பவளப் பாறைகள், ராமர் சேதுவை இடிக்க தமிழர் விரோத திமுக திட்டமிட்ட போது அதனை முறியடிக்க பெரும் முயற்சி செய்து வெற்றிக்கு பின் இருந்தவர். இது குறித்த சுட்ட்டிகள் இங்கே.

தூத்துக்குடி துறைமுக முன்னாள் தலைவர் சுந்தரம் ஐஏஎஸ், சிந்துவெளி முத்திரை படிப்பிலும், தொல்லியல் ஆய்விலும் உலகப் புகழ் பெற்ற சரஸ்வதி நதி திரு.கல்யாணராமன் பல கட்டுரைகள் எழுதிட, தஞ்சாவூரில் இருந்து சங்க தமிழ் இலக்கியம் முதல் 17ம் நூற்றாண்டு வரை தமிழில் ராமர் சேது பற்றிய குறிப்புகளை தொகுத்து 3 நூல்கள் வெளி வரச் செய்தது, உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி வழக்கிற்கு ஆணிவேராய் இருந்தது. கடைசி நேரத்தில் ஒரு பழைய நூலில் பெரிதும் மதிக்கப்படும் ஒரு வைணவ அறிஞர் ராமர் பாலம் இடிக்கப்பட்டது என கம்ப ராமாயணத்தில் உள்ளது என எழுதினார் என அரசு வாதிட, மிகவும் வேகமாக மற்றும் TNR +பல அறிஞர் காணொளிகள் எடுத்து தந்து வழக்கில் வெற்றியில் GPS நல்ல பங்கு உண்டு. இது குறித்த சுட்டிகள் இங்கே.

2009இல் மும்பை சர்வ மத கூட்டத்தில் கிறிஸ்தவ கத்தோலிக்க கார்டினல் ஜீன் லூயிஸ் சூழ்ச்சி தடுத்து காஞ்சி சங்கர மடம் பூஜ்ய ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சந்திப்பின்போது கூட்டு அறிக்கையில் கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தை நிறுத்த வேண்டும் என்ற பகுதிகளை சேர்க்கப்பட இவர் பின்னணியில் இருந்ததாக நம்மிடம் கூறினார்.

தஞ்சாவூர் கோவிலில் இந்திய தொல்லியல் துறை செய்த பல தவறுகளை ஆவணப் படுத்தினார். GPS இந்து கோயில்களை பாதுகாக்க தானாகவும் பலரை கோவில்களை காக்க ஈடுபடவும் வைத்தார். சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் உரிமைகளைப் பாதுக்காபது தொடர்பான வழக்கிலும் பின்னணியில் இருந்தார். ஸ்ரீ ரங்கம் கோவில் பூஜைகள் சரியாக நடைபெற வேண்டும் என வைணவப் பெரியவர் வைஷ்ணவஸ்ரீயோடு சேர்ந்து பல விஷயங்களை ஆவணம் செய்தும் வழக்குகள் தொடரவும் உதவினார்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழையலாம் என்ற தீர்ப்பில் ஆரம்பத்தில் பாஜக தலைமை சரியான முடிவு எடுக்காது நின்ற போது, திரு.அமித் ஷா அவர்களுக்கு முழு விபரத்தை மெயிலில் விளக்க, அவரும் நன்றி சொல்லி பாரம்பரியம் காக்க மத்திய அரசு உதவிட பணியாற்றியதன் பின்னணியில் இருந்தவர்களில் GPS முக்கியமானவர்.

சென்னையில் திராவிடச் சான்றோர் பேரவை மாநாடு நிகழ்வில் பழகி என்னோடு நெருக்கமான நண்பராக இறுதி வரை இருந்தார்.

கோவில் இறைவன் திருமேனிகள் திருட்டைத் தடுக்க பல நடவடிக்கை எடுத்தார். ஸ்ரீரங்கம் அவர் இல்லம் சென்றபோது தஞ்சாவூர் சென்று பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சில மிகப் பெரும் பழைய கோவில் சிலைகளைப் பார்க்க அங்கே மூத்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், வக்கீல் கேட்ட பல கேள்விகளுக்கு நான் கொடுத்த பதில்கள் பற்றி GPS சந்தேகப்பட திரு.TNR வீடு சென்று நண்பர் குடவாயில் பாலசுப்ரமணியம் அழைத்திட, என் பதில்கள் சரியே எனப் புரிந்து கொண்டார். அப்போது குடவாயில் அவர்கள் ராஜராஜன் சிலை குஜராத் முசியத்தில் உள்ளது கூற, வக்கீல் அதை சிலை கடத்தல் பிரிவு டிஜிபி பொன் மாணிக்கவேலிடம் சொல்ல அது மீட்கப்பட்டதில் எங்கள் பங்கும் உண்டு. சிலை கடத்தல் பிரிவு டிஜிபி பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிக்கப் படவேண்டும் என வழக்கறிஞர் ஸ்ரீதர் வழக்கு போட வைத்தார். அன்றைய கவர்னரிடம் அனுமதி பெற்று டிஜிபி பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்பிற்கு மனுவும் தந்தோம்

ஸ்ரீரங்கம் GP ஸ்ரீநிவாசன் திருக்குறள், விவிலியம் பற்றி என் நூல்கள் வெளிவர பல விதங்களில் தூண்டி முயற்சித்தார், நான் முடிக்கவில்லை. பல நண்பர்களை ஏற்படுத்திக் கொடுத்தவர். நான் விரைவாக என் நூல்கள் எழுதி அவருக்கு சமர்ப்பணம் செய்வதே என்னால் இன்று இயலும்.

மரணத்தில் GPS கொடுத்துள்ள பாடம்:

ஒவ்வொருமுறை சந்திக்கும் பொழுதும் அல்லது போனில் பேசும் பொழுதும் ஒரு புதிய நூலையோ அல்லது ஒரு புதிய நண்பரைப் பற்றி கூறி அவரோடு அவருடைய என்னை சேர்க்க பார்ப்பார். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக நான் பலமுறை நேரில் போனில்/சந்தித்த போதும் அவரை கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்ட பொழுதெல்லாம் போட்டுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அதைப் போட்டுக் கொள்ளாததால் 63 வயதான இந்த இளைய வயதில் தன் உயிரை அவர் கொடுக்க நேர்ந்தது. எனவே தயவு செய்து இதைப் படிப்பவர்கள் அனைவரும் உடனடியாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்னும் பாடத்தை தன் மரணத்தின் மூலம் GPS நமக்கெல்லாம் படிப்பினையாக கொடுத்துள்ளார்.

இக்கட்டுரையாசிரியர் திரு. தேவப்ரியா சென்னையில் வசிக்கும் இந்து சிந்தனையாளர், கட்டுரையாளர். செயல்வீரர். தனது வலைப்பதிவிலும், தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

One Reply to “அஞ்சலி: ஸ்ரீரங்கம் G.P.ஸ்ரீனிவாசன்”

  1. I have personally lost a great friend and a wonderful Hindutva Nationalist and condoled his family members

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *