இன்றைய சூழலில் சிலர் “இந்துமதத்தில்” இருந்த தீண்டாமையும், சாதிக்கொடுமையும்தான் மதம் மாற முக்கிய காரணமாக இருந்தது என்றும், இந்துமதத்தில்தான் கட்டாய மதமாற்றம் முதன் முதலில் நடந்தது என்றும் உருட்டுகிறார்கள். இவர்கள் யாரென்று பார்த்தால் நேற்றுவரை இந்து என்றொரு மதமே இல்லை, வெள்ளைக்காரன்தான் இந்து என்று பெயர் வைத்தான். தமிழர்களுக்கு மதமே இல்லைனு கத்திக்கிட்டு திரிந்தவர்களாவர். இந்த வாயை வாடகைக்கு விட்டுட்டுதான் இந்துமதத்தில் சாதி, தீண்டாமை இருந்ததால்தான் மதம் மாறினார்கள் என்று உபதேசம் பண்ணிக்கிட்டு திரியுறானுக.
மக்கள் சாதிக்கொடுமைகளாலும், வறுமையினாலும் மதம் மாறினார்கள் என்பதை மறுக்கவே முடியாது. அதே சமயம் இந்த சாதிக்கொடுமைகளுக்கும், வறுமைகளுக்கும் அதிகாரவர்க்கத்தின் ஆளுமைகளே காரணமாக இருக்க முடியுமே அன்றி இந்துமதமோ, இந்து மதத்தின் தர்ம நூல்களோ இவற்றை முன்மொழியவே இல்லை. என்னைக்கேட்டால் இந்த மதமாற்றங்களுக்கு கூட இந்த அதிகாரவர்க்கம்தான் துணைநின்றது என்பேன். 18, 19 ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் நடந்த மதமாற்ற விகிதங்களை விட இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடந்த மதமாற்றங்களின் விகிதமே அதிகம் என்பேன்….!
எங்கள் ஊர்ப்பகுதிகளில் 1980 களுக்கு பிறகே பெருவாரியான மதமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒடுக்குமுறைகள் இருந்த காலத்தில் மதமாறியதை சுயமரியாதைக்காக மாறினோம் என்று கூறுபவர்கள் சமீப காலங்களில் நடக்கும் மதமாற்றத்தை, இது இந்திய அரசியலமைப்பு சட்டம் எங்களுக்குத் தந்துள்ள உரிமை என்ற பெயரில் கடந்து செல்கின்றனர். இன்றைய காலத்தில் அவர்களால் சாதி, தீண்டாமை போன்ற காரணங்களை முன்னிறுத்தி மதம் மாற்றவோ மாறவோ முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் கடந்த காலங்களுக்காக மட்டுமே இந்த வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். இந்நிலையைப் பார்த்தால் ஒரு கதை ஞாபகம் வருகிறது அதாவது,
தென் மாவட்டங்களில் ஒருகாலத்தில் நாயக்கர்களை எதிர்கொள்ள போர்ச்சிகீசியர்களிடம் உதவி கேட்ட வேணாட்டு அரசிடம், நயவஞ்சகமாக இங்குள்ள மக்களை மதம் மாற்றுவதற்கு அனுமதி தந்தால் நாயக்கர்களை ஒன்றாக எதிர்ப்போம் என்று கேட்டதும் வேணாட்டு அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது போன்று, தனக்கு சாதகமான இடங்களிலெல்லம் அப்பகுதியை ஆளும் மன்னர்களை கைக்குள் போட்டுக்கொண்டு பிரிட்டிஷ் அரசு நிகழ்த்திய மதமாற்றங்கள் ஏராளம். அதோடு இங்கே ஆட்சியாளர்களிடையே காழ்ப்புணர்சசிகளால் நடந்த ஒருசில கசப்பான நிகழ்வுகளையும் பிரிட்டிஷ் அரசு மதமாற்றம் செய்வதற்கு பயன்படுத்திக்கொண்டனர் என்பதை மறுக்க முடியாது.
அதுபோல வறுமைகளுக்கும், குறிப்பாக தென் மாவட்டங்களில்18 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய் கப்பம் கட்ட வேண்டிய கட்டாயத்தில் திருவிதாங்கூர் அரசு இருந்த காரணத்தால், ஆளும் வர்க்கமானதது அந்த வரிச்சுமையை மக்களின் மீது சுமத்தி மக்களை சுரண்டியது என்பதையும் மறுக்க முடியாது. இதன் காரணமாகவே அக்காலங்களில் மதமாற்றம் அதிகமாக நடந்தது. இதனால் தன்னை பொருளாதார ரீதியாக உயர்ந்த சமூகமாக மாற்றிக்கொண்ட சமுகங்கள் ஏராளம். தான் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்ற பிறகும் மதம் மாறும் மக்களை என்னவென்று சொல்வது?
சரி பதிவின் முதற்பகுதிக்கு வருவோம். இந்த சாதிக்கொடுமைகளுக்கும், வறுமைக்கும் அதிகாரவர்க்கமே காரணமாக இருக்க முடியுமே அன்றி இந்துமதம் இதற்கு காரணமாக இருக்க முடியாது. ஆகவே இந்துமதம் என்ற ஒன்று இல்லை என்று உருட்டும் அண்ணன்மார்களே, இந்துமதம் என்ற ஒன்று இல்லைனா இந்துமதத்தில் சாதிக்கொடுமைகளும், வறுமைகளும் இருந்தது என்று கூற உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சரி, இந்து என்ற பெயரே வெள்ளைக்காரன் வைத்ததாக உருட்டுகிறீர்களே? ஒருவேளை வெள்ளைக்காரன் இந்த பெயரை வைத்திருந்தால் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர்கள் தங்களை இந்து மன்னர்களாக எப்படி அழைத்திருக்க முடியும்?
“சுபமஸ்து ஸ்வஸ்திஸரீ ஸரீமன் மகா மண்டலேசுவர அரி ராய விபாடன் பாஷைக்குத் தப்புவராய கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் – இந்து ராய சுரத்ராண இராசாதி ராசன் இராச பரமேசுவரன் பூர்வ தட்சிண பச்சிம உத்தர சமுத்ராதிபதி ஸரீவீர கசவேட்டை கண்டருளிய பிரதாப இம்மடி தேவராய மகாராயர் பிருதிவி ராச்சியம் பண்ணியருளா நின்ற சகாப்தம் 1373 ன் மேல் செல்லா நின்ற பிரசாபதி வருஷத்து மீனஞாயிற்று அமரபட்சத்து நவமியும் வியாழக் கிழமையும் பெற்ற திருவொணத்து நாள்”
– இரண்டாம் தேவராய மகாராயரின் மெய்க்கீர்த்தி(1426-1452)
அதாவது தன்னை “இந்து ராய சுரத்ராண” என்று அழைக்கும் அவ்வார்த்தைக்கு பொருளாவது இந்து ராஜ்யத்தின் சுல்தான் என்பதாகும். 15 ஆம் நூற்றாண்டில் தன்னை இந்து ராஜ்யத்தின் சுல்தான் என்று அழைக்கும் மன்னர்கள் இருந்திருந்தால் 18 ஆம் நூற்றாண்டில் வெள்ளைக்காரன் எப்படி இந்து என்ற பெயரை தந்திருப்பான் என்று சிந்திப்பீர்களா?
[பி.கு: “சுரத்ராண” என்ற சொல்லை “சுல்தான்” என்பதன் சம்ஸ்கிருத சொல் வடிவம் என்று எண்ணி கல்வெட்டு ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். இது சரியான கருத்தாகத் தோன்றவில்லை. சுர+த்ராண = தேவர்களுக்கும் பாதுகாப்பாக இருப்பவர் என்பதே இதன் பொருள். அதாவது விஜயநகர அரசு தெய்வங்களின் கோயில்களைப் பாதுகாக்கும் என்ற அர்த்தத்தில் இச்சொல் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் – தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு]
(பா. இந்துவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இயேசு கிறிஸ்து என்ற நபர் பிறக்கவேயில்லை. அவர் பிறந்ததற்கு எந்தவித வரலாற்று ஆதாரமும் இல்லை. அவர் ரோமானியர்களால் கற்பனையாக உருவாக்கப்பட்டவர்தான் என்பதை ஒவ்வொரு ஹிந்துக்களும் அறிந்து கொள்ள வேண்டும்.