ஒரு நாட்டுக்கு மகா அவசியமான வளம் நீர்வளம் அதுவும் இந்தியா போன்ற விவசாய மற்றும் மக்கள் தொகை நிறைந்த நாட்டுக்கு அது மகா அவசியம்
விவசாயத்தாலும், தொழிற்சாலைகளாலும் ஒரு நாடு தன்னிறைவு அடைய நீர் ஆதாரமே அடிப்படை அதுதான் மூலம்
இந்தியா நதிகளால் ஆசீர்வதிக்கபட்டநாடு, மாபெரும் நதிகளும் அது உருவாக்கிய சமவெளிகளுமே இந்தியாவின் செல்வத்துக்கும் பெரும் நிலைதன்மைக்கும் அடிப்படை. வெள்ளையன் ஆண்ட காலங்களில் அவன் ஏற்படுத்திய செயற்கை பஞ்சங்களை தவிர இந்த பூமி யாரையும் பட்டினியால் கைவிட்டதில்லை
அப்படிபட்ட இந்தியாவில் சில நேரம் விசித்திரமான காட்சி நிலவும் மிகபெரிய ஆறுகள் பொங்கி கடலுக்கு செல்லும்பொழுது இன்னொரு பக்கம் வறண்டு கிடக்கும்
இந்த காட்சியினை கண்டு முதலில் நதிகளை இணைக்க குரல் கொடுத்தவன் பாரதி “வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் வையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்” என அவனேதான் கனவு கண்டான்
சுதந்திர இந்தியாவில் இந்த குரல்கள் எழும்பின ஆனால் மாநிலம் ரீதியாக மட்டும் அணைகட்டும் திட்டம் செயல்படுத்தபட்டது இந்து மாநிலங்களுக்குள் செழிப்பினை ஏற்படுத்தினாலும் பல மாநிலம் பகிரும் நதிகளில் பெரும் சிக்கலை ஏற்படுத்திற்று உதாரணம் காவேரி நதி நீர் சிக்கல்
இந்த சிக்கல் எதிர்காலத்தில் எல்லா மாநிலத்திலும் வரும் இந்திய தேசியத்துக்கு அது சவால்விடும் அதை முறியடிக்க நதிகளை இணைக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்த கட்சி பாஜக
அது கங்கை காவேரி இணைப்பை தன் பெரும் கனவாக வைத்திருக்கும் கட்சி அதுதான் இந்திய தேசியத்தை காக்கும் வழி மாநில பிரிவினை குரல்களை ஒடுக்கும் வழி என்பதை அது கருதிற்று, மிக சரியான விஷயம் அது
அப்படியே நீர்வழி போக்குவரத்துகும் இது பெரிதும் கைகொடுக்கும்
இதை முதலில் மோடி கங்கையில் பரிசீலித்தார், காரணம் குஜராத் நதிகளை சீரமைத்து பிரமாண்ட திட்டங்களை சாத்தியமாக்கிய அனுபவம் அவருக்கு இருந்தது, அதில் வெற்றி கிடைத்தது
இன்று கங்கை சுத்தமாக அதன் கிளைநதிகளில் போக்குவரத்துடன் பெரும் பயன் அளிக்கின்றது
கங்கை காவேரி இணைப்பு என்பது பெரும் கனவு பெரும் செலவு பிடிக்கும் திட்டம் அதன் முன் தென்னக நதிகளை இணைப்பது நல்லது என மோடி அரசு கருதிற்று
அதன்படி கோதாவரி காவேரி இணைப்பினை முன்னெடுக்கின்றது
இது உலகில் அமெரிக்கா செய்திருக்கும் சில ஆச்சரியமான இணைப்புகள், சீனா செய்திருக்கும் பரகாசுர திட்டங்களுக்கு ஈடானது
கோதாவரி காவேரி இடைபட்ட தூரம் சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள், இவ்வளவு பெரும் தூரத்தை பல மலைகள் மேடு பள்ளங்கள் இடையே வெட்டி இணைப்பது என்பது மிகபெரிய முயற்சி
மோடி அரசின் பொருளாதார பலமும் உலகில் இத்தேசம் பெற்றிருக்கும் செல்வாக்கும் இதை சாத்தியபடுத்தும் காலத்துக்கு கொண்டுவந்துவிட்டன
ஆம், இதில் சம்பந்தபட்ட 6 மாகாணங்கள் டெல்லியில் ஆலோசனையினை தொடங்கிவிட்டன, இந்தியா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பெரும் திட்டத்தில் இறங்குகின்றது
ஆட்சி என்பது மிக சக்திவாய்ந்தது, அதை பல கோடிபேரில் ஒருவனை வாழவைக்கும் இட ஒதுக்கீடு ,அதீத சிறுபான்மை ஆதரவு , சமூக நீதி எனும் பெருங்குழப்பம் இன்னும் என்னவெல்லாமோ செய்து வாக்கு வங்கியினை பெருக்குகின்றோம் பேர்வழி என இறங்காமல் நாட்டுக்கு எது தேவையோ அதை செய்தல் வேண்டும்
மோடி அரசு அதை சரியாக செய்கின்றது
முதல்கட்ட கூட்டம் இப்பொழுது தொடங்கியிருக்கின்றது இனி விரைவில் திட்ட வரைவுகள் முடிவு செய்யபட்டு வேலைகள் தொடங்கபடும்
இந்தியாவில் எது மகா அவசியமோ, எது தேசியத்தை வளர்க்குமோ, எது மாநில சிக்கல்களை குறைக்குமோ அதையெல்லாம் பாஜக அரசுதான் செய்யும்
தங்க நாற்கர சாலை திட்டம் அதில் முக்கியமானது வாஜ்பாய் அரசு அதை செய்தது
இப்பொழுது மோடி அரசு நதிகளை இணைக்கும் பெரும் திட்டத்தில் இறங்கியிருக்கின்றது இன்னும் 10 ஆண்டுகளில் தென்னக நதிநீர் சிக்கலெல்லாம் தீரும்
மாபெரும் சரித்திர சாதனையினை முன்னெடுக்கும் மோடியினை தென்னக மக்களும் காவேரி கரைவாழ் மக்களும் மகிழ்ந்து வாழ்த்துகின்றார்கள்
அசாதாரண விஷயங்களை சாதரணமாக முடிக்கும் மோடி மிகபெரிய திட்டத்தை தொடங்கி வைத்திருக்கின்றார் , காவேரிக்கு மறுவாழ்வு கொடுக்கும் அந்த மன்னவனை இனி இரண்டாம் கரிகால் சோழன் என்றுதான் அழைத்தாக வேண்டும்
வரைபடப்படி, ஆந்திரம் மொத்தம் (26122+14080=40202Mm3) நீரைப் பெருகிறது. இதுபோக கோதாவரி, கிருஷ்ணா நதிகளின் நீரும் வந்துசேருகிறது. ஆயினும், தமிழ்நாடுக்குக் காவிரிக்கு வந்துசேர 8566Mm3 நீரே ஒதுக்கப்படுகிறது. ஆக, இந்தத் திட்டத்தால் வங்க, ஒரிய நதிகளின் நீரால் பயனடையப் போகும் மாநிலம் ஆந்திரம்தான் எனத் தெளிவாகிறது. கருநாடுபோல ஆந்திரமும் அந்த 8565ல் எவ்வளவு நீரைத் தமிழகத்திற்கு அனுப்புமோ தெரியவில்லை. இந்த ஒரு வரைபடத்தை வைத்தே திராவிடக் கட்சிகள் எதிர்பிரசாரம் செய்ய இயலும். இவ்வளவு நீரை ஆந்திரத்துக்கு ஏன் ஒதுக்கவேண்டும்?
கடந்த 10 ஆண்டுக்கு முன் இத்திட்டத்தைச் சொல்லி ஓட்டு வாங்கி ஆட்சியில் அமர்ந்த மோடிஜி, இத்திட்டத்தை பார்க்கவும் படிக்கவும் கேட்கவுமே செய்திருக்கும் சாதனையை செய்திருக்கிறார். மெச்சலாம்… நல்ல மனிதனாக இருந்தால் இதுவரை இத்திட்டத்தில் கண்ட முன்னேற்றம் என்ன என்பதை தெளிவுபடுத்துங்க… 1919,1970, 2003 போது எழுந்த இத்திட்டத்தை மோடிதான் கொண்டுவந்தாரென்று பிதற்றிக்கொள்ளும் நீங்கள் இதில் நீங்கள் சாதித்தவற்றையும் குறிப்பிடுக.