கரௌலி கலவரம்: இந்துக்கள் மீது வன்முறை வெறியாட்டம்

ராஜஸ்தானில் இந்து நாட்காட்டியின் கீழ் நேற்று புத்தாண்டின் முதல் நாள் என்பதால் மாநிலத்தில் இந்துக்கள் விமரிசையாகக் நவசம்வத்ஸர் விழாவை கொண்டாடினர். “இந்து புத்தாண்டை முன்னிட்டு இந்து மதம் சார்ந்த அமைப்பினர் இருசக்கர வாகனத்தில் பேரணியை நடத்தினர்கள். அப்போது முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதியான கரௌலி நகர் மசூதி அருகே இந்து அமைப்பினர் ஊர்வலமாக வந்தபோது, ஊர்வலத்தின் மீது முஸ்லிம்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பெரும் கலவரமாக மாறிய இந்தச் சம்பவத்தில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கடைகள் எரிக்கப்பட்டன. இதில், 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் கலவரத்தின் பதற்றம் காரணமாக கரௌலி நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரௌலியில் சாத்தியமான வன்முறை குறித்து முன்னரே எச்சரித்த கடிதத்தின் பின்னணியில் PFI இன் நோக்கம் மற்றும் பங்கு குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டாலும், நிலைமையைத் தடுக்க கூடுதல் படைகளை அனுப்புவது போன்ற தேவையான நடவடிக்கைகளை ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் ஏன் செய்யத் தவறியது என்பது முக்கியமான விஷயம். சட்டம் ஒழுங்கு நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க கரௌலியில் தற்போது சுமார் 1,200 போலீசார் பணியில் உள்ளனர் என்று ஷெகாவத் கூறினார். கரௌலி வகுப்புவாத வன்முறையில் PFI சதி வெளிப்பட்டது, என்பதை கூற ராஜஸ்தான் அரசு தயக்கம் காட்டுகிறது. இதுவரை 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் சனிக்கிழமை (ஏப்ரல் 2) இந்து புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக எடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணி கரௌலி மாவட்டத்தில் முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதி வழியாகச் சென்றபோது சுற்றுவட்டார வீடுகளின் மொட்டை மாடியில் இருந்து பேரணி மீது கற்கள் வீசப்பட்டதால் இந்த சம்பவம் உளவுத்துறையின் தோல்வி என்றும் கூறப்படுகிறது. எவ்வாறு டெல்லியில் குடியுரிமை சட்ட மசோதாவிற்கு கலவரம் ஏற்பட்டதோ அதே போல் தற்போதும் நடந்துள்ளது. கற்கள் வீசப்பட்டதைத் தொடர்ந்து தீ வைப்பு மற்றும் நாசவேலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கரௌலியில் நடந்த வன்முறை குறித்து கெஹ்லாட் அரசுக்கு PFI முன்கூட்டியே கடிதம் எழுதியது! இந்து புத்தாண்டு ஷோபா யாத்திரையை குறிவைத்து வன்முறை நடக்கும் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்? PFIக்கு தெரிந்த தகவல்கள் எப்படி ராஜஸ்தான் நிர்வாகத்திற்கு தெரியால் போனது? என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை. கரௌலியின் ஹத்வாரா பஜார் பகுதியில் வகுப்புவாத வன்முறை வெடித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, கல் வீச்சு சம்பவத்தின் முக்கிய சதிகாரராக காங்கிரஸ் கவுன்சிலர் மத்லூப் அகமது அடையாளம் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார்கள். ஏப்ரல் 2, 2022 அன்று நகரில் இந்து புத்தாண்டைக் கொண்டாடும் பைக் பேரணியின் மீது கல் வீசுதல், வன்முறையைத் தூண்டுதல் மற்றும் கும்பலைத் தாக்கியதாக மத்லூப் அகமது மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. , இந்த சம்பவத்தில் காங்கிரஸ் உள்ளூர் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், கரௌலியில் வெடித்த வகுப்புவாத மோதல்களில் தீவிர இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு (பிஎஃப்ஐ) பங்கு இருப்பதாகவும் , இது “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி” என்றும் பாஜக, மற்றும் இந்து அமைப்புகள் கூறின.

இந்து அமைப்பினர் நடத்திய பைக் பேரணி மசூதியைக் கடந்து சென்றதையும், கூரையில் இருந்து கற்களை வீசுவது போன்ற வன்முறைச் செயலையும் போலீசார் ஒப்புக்கொண்டனர். சுமார் 100 முதல் 150 பேர் வரை ஜிம்மிலிருந்து வெளியே வந்து தடியடி நடத்தியதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. ஆனால் கலவரம் நடத்தியவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி கூறவில்லை. தனியார் தொலைக்காட்சி கூரையிலிருந்து கல் வீச்சிய பட காட்சிகளை வெளியிட்டது, ஊர்வலம் மசூதி வழியாக சென்ற போது கலவரம் வெடிக்கவில்லை, மசூதிக்கு அருகில் உள்ள வீடுகளிலிருந்து கல் வீசித் தாக்குதல் நடத்திய பின்னர் தான் கலவரம் வெடித்தது , இந்துக்கள் நடத்திய ஊர்வலத்தினால் கலவரம் வெடிக்கவில்லை என்ற உண்மையை தனியார் தொலைக்காட்சி வெளியிட்டது. கரௌலியில் நடந்த வகுப்புவாத மோதல்களின் பின்னணியில் காங்கிரஸ் கவுன்சிலர் முக்கிய சதிகாரராக அடையாளம் காணப்பட்ட பிறகு, கட்சியின் ராஜஸ்தான் பிரிவு இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் கலவரம் நடந்ததது என்பதல்ல, நாடு முழுவதும் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதியில் இந்துக்களின் ஊர்வலத்திற்கு தடை கோருவதும், மேற்படி தடை விதிக்காவிட்டால் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்கின்றன. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, இறுதியில் நடக்கும் விஜர்சன ஊர்வலத்தில் , திருவல்லிக்கேணி பகுதியில் ஊர்வலத்திற்கு தடை விதிப்பதும், பல இடங்களில் ஊர்வலத்தின் மீது கல்வீசுவதும் , இதற்கு ஆளும் கட்சியினர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசுவதும் நடைமுறையாகவே மாறிவிட்டது. இவர்களின் இந்த விபரீத போக்கு நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே துவங்கி விட்டது.

1930-ல் தமிழகத்தில் நான்கு இந்து முஸ்லீம் கலவரங்கள் நடந்துள்ளன.  சேலத்தில் ஒன்றும், வட ஆர்க்காடு மாவட்டத்தில் வேலூரிலும் நிகழந்தது.   சேலத்தில் நடந்த  கலவரம்,  ஒரு இந்துவுக்கும், ஒரு முஸ்லீமுக்கும் நடந்த குஸ்திச் சண்டையின் விளைவாகும்.  இரண்டு தரப்பினரும் தாங்கள் வெற்றி பெற்றதாக கூறிக் கொண்டதாலும்,  இந்துக்கள் வெற்றி பெற்ற குஸ்தி வீரரை ஊர்வலமாக அழைத்து சென்ற போது,  எரிச்சலடைந்த முஸ்லீம்கள், ஊர்வலத்தில் வந்த இந்துக்கள் மீது கல்லெறிந்து கலவரத்தை ஏற்படுத்தினார்கள். .   சேலம் கிச்சிப்பாளையத்தில் இந்துத் திருவிழாவின்  போதும்  கலவரம் நடைபெற்றது,   1930 ஜீன் மாதம் 8ந் தேதி முஹாரம் திருவிழாவின்  இறுதிச்சடங்காக ஊர்வலம் ஆற்றுக்குப் போகும் வழியில் தொட்டபாளையம் கோவிலுக்கு முன்னால் முஸ்லீம்கள் இசைத்துக் கொண்டு சென்றதை இந்துக்கள் ஆட்சேபித்ததுதான் வேலூரில் நடந்த கலவரத்திற்கு காரணம்.  பாதி ஊர்வலம் கோவிலைக் கடந்த பிறகு ஒரு முஸ்லீம்  அசிங்கமான  செய்கையால்  கோவிலை  அவமானம் செய்ததாக ஒரு இந்து உரத்தக் குரலில் புகார் செய்ததால் கலவரம் மூண்டது. ( ஆதாரம் முஸ்லீம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி  பக்கம் 97)  

முஸ்லீம்கள் வாழும் பகுதியில் எந்த ஊர்வலத்திற்கும் அனுமதிப்பதில்லை. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, . 1930-ல் முகமது நபியின் பிறந்த நாளின் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசவிருந்த கூட்டத்திற்கு போய் கொண்டிருந்த இந்துக்களுக்கும், அதே வழியில் இறைத்தூதரின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு முஸ்லீம் ஊர்வலமும் எதிர்பாரமால் சந்தித்திக் கொண்டதின் விளைவு கலவரம் ஏற்பட்டது. ( ஆதாரம் முஸ்லீம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி பக்கம் 97) இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம், முந்தைய ஆண்டுகளில் செய்தாற்போல் அந்த ஆண்டு இறைத்தூதரின் பிறந்தநாளில் இந்துக்கள் தங்கள் கடைகளை மூடாததால் கலவரத்திற்கு காரணம் என முஸ்லீம்கள் குற்றச்சாட்டுக்களை வைத்தார்கள். ஆகவே முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் முஸ்லீம்களின் விழாக்களின் போது, இந்துக்கள் கடைகளை அடைக்க வேண்டும் என்ற வெறி கொண்டவர்களாக வாழ்ந்துள்ளார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகும். இதே நிலைதான் தற்போது தமிழகத்தில், வானியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், மேல் விசாரம், ராமநாதபுரம், மேலப்பாளையம், கோவை, தேனி போன்ற பகுதிகளில் நடைபெறுகிறது.

கரௌலி வன்முறையில் இஸ்லாமியர்களின் கைகள் தெளிவாக வெளிப்பட்டாலும், இஸ்லாமியர்களின் அடிவருடிகள் முழுப் பிரச்சினையையும் திரித்து தங்கள் இந்து விரோதப் பிரச்சாரத்தை இயக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சமூக ஊடகங்களில் ‘இந்துத்துவா’ வன்முறை பற்றிய போலியான கூற்றுகள் பரவி வருகின்றன. தில்லி இந்துக்களுக்கு எதிரான கலவரத்தைப் போலவே, கரௌலி வன்முறையும் இஸ்லாமியர்களால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது இந்து புத்தாண்டையொட்டி நடந்த பைக் பேரணியின் போது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட ஆயுத கும்பலில் காங்கிரஸ் கூட்டணிக் கவுன்சிலர் மத்லூப் அகமது மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் அங்கம் வகித்தனர் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெளிச்சத்திற்கு வந்த உண்மையில், கலவரத்தில் கெலாட் அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பங்கையும் வீடியோ ஆதாரம் முழுமையாக வெளிப்படுத்துகிறது.

, ராஜஸ்தான் காங்கிரஸ் அரசாங்கம், ‘கலவரத்தைத் தூண்டிவிட்டதாக’ பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளது. இது பற்றி ராஜஸ்தான் பாஜக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோர், காவல்துறை அதிகாரிகள் காயமடைந்த போதிலும் கூட கெலாட் அரசாங்கம் இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்ய கால தாமதம் செய்தது என எடுத்துக்காட்டுகிறார். “கரௌலி வன்முறை வழக்கில் மற்றொரு உண்மை வெளிப்பாட்டினை , ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க் ஐந்து கிளிஞ்சர்களை ( Clinchers ) வெளியிட்டுள்ளது. இது ஏப்ரல் 2 அன்று வெடித்த வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதை தெளிவாகக் குறிக்கிறது. மேலும், சமீபத்திய வீடியோக்கள் ராஜஸ்தானின் கரௌலியில் கலவரக்காரர்களின் இடைவிடாத வன்முறையைக் காட்டியது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறை அதிகாரிகள் குழு ஒன்று நிலமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர், இருப்பினும், காவல்துறையினரின் முன்னிலையில் குண்டர்கள் தடிகளுடன் ஓடி பல வாகனங்களை சேதப்படுத்துவதைக் காண முடிந்தது. இந்த சம்பவம் நடந்த உடனேயே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என்று ரிபப்ளிக் டிவியின் கிளிஞ்சர்கள் கூறியது.

31 வயதான ராஜஸ்தான் போலீஸ் கான்ஸ்டபிள் நேத்ரேஷ் ஷர்மா தனது கைகளில் ஒரு குழந்தையுடன் தீப்பிடித்து எரிந்த கட்டிடங்களை கடந்தபோது ஒரு விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றிய செய்தி அனைத்து வன்முறைகளுக்கு மத்தியில் வெளிவந்துள்ளது. பைக் பேரணி மசூதியை கடந்து சென்றபோது கற்களை வீசத் தொடங்கிய இஸ்லாமியர்களால் வன்முறை தொடங்கப்பட்டது என்பதை காவல்துறை பதிவு செய்த எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) உறுதிப்படுத்துகிறது. காவல்துறையின் கூற்றுப்படி, 100-150 பேர் ஜிம்மிலிருந்து வெளியே வந்து வன்முறை மற்றும் தீவைக்கத் தொடங்கினர். பேரணிக்கு ஒரு நாள் முன்னதாகவே கற்களை சேகரித்து மொட்டை மாடியில் வைத்து இஸ்லாமியர்கள் முன்கூட்டியே தயார் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

வன்முறை தொடங்கும் முன்பே முஸ்லிம்கள் தங்கள் கடைகளை மூடிவிட்டனர் என்பதை நேரில் பார்த்தவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். வன்முறைக்குப் பிறகு இந்துக்கள் பாகுபாடுகளுக்கு ஆளாகியிருப்பது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. தாக்குதலில் தனது மூன்று கடைகளை இழந்த சந்திரசேகர் கர்க் கூறுகையில், தீயணைப்புப் படையினர் மூன்று முதல் நான்கு குழுக்களாக பிரிந்து தீயை அணைக்கும் போது கூட முதலில் முஸ்லீம்களுக்கு உதவினார்கள் , ஆனால் இந்துக்களுக்கு உதவ முன்வரவில்லை.

“நாங்கள் எட்டு கடைகளை நடத்துகிறோம், மேற்படி கடைகள் முஸ்லிம்கள் நடத்தும் கடைகளுக்கு அருகில். இருக்கிறது. சுமார் 15:30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் முஸ்லிம்கள் தங்கள் கடைகளை மூடிவிட்டு அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் ஒரு இடத்தில் கூடி, ஒரு பேரணியை நடத்தினர்கள். பேரணியின் போது, அவர்கள் எங்களை கடைகளில் இருந்து எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். என் தந்தையையும் சகோதரனையும் கோபமான கும்பல் கடைகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியது, பின்னர் அவர்கள் முழு கடையையும் சூறையாடினர்”, கார்க் கூறியதாக OpIndia மேற்கோளிட்டுள்ளது.

வீடியோவை முழுமையாக ஆராய்ந்த பிறகு, வைரலான வீடியோவின் சில கிளிப்கள் ராஜஸ்தானின் கரௌலியில் இருந்து எடுத்தது கிடையாது என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். பொய் பிரச்சாரத்தின் போது கூறப்படும் வீடியோவின் கிளிப் உ.பி., காஜிபூரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. காசிபூர் எஸ்பி ராம் பதன் சிங்கும் இந்த வீடியோ காசிபூரில் உள்ள கமர் கிராமத்துடன் தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், ராஜஸ்தானின் கரௌலி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அர்ஜுன் மெஹர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ கரௌலியைச் சேர்ந்தது அல்ல. மேலும் இது தொடர்பாக பொய்யான செய்தி மற்றும் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கரௌலியில் நடந்த கலவரம் தற்போது கர்நாடாகவிலும் தொடர்கிறது. சிறுபான்மையினருக்கு சலுகை என்ற பெயரில் வாக்கு வங்கி அரசியல், தற்போது நாட்டின் பாதுகாப்பிற்கும், நல்லிணகத்திற்கும் ஊறு விளைவிக்கும் வகையில் அமைகிறது. இதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8 Replies to “கரௌலி கலவரம்: இந்துக்கள் மீது வன்முறை வெறியாட்டம்”

 1. மேய்ப்பனும் ஆடுகளும்- இது சைவர்கள் பற்றிய கதை

  ஒரு ஊரில் ஒரு இடையன் இருந்தான். அவன் காட்டை அண்டிய ஒரு பகுதியில் ஆட்டு மந்தை கூட்டம் ஒன்றை மேய்த்துவந்தான். அவனுக்கு ஆட்டிறைச்சி என்றால் மிகவும் பிரியம். அதனால் வாரந்தவறாமல் ஒரு ஆட்டினை அடித்து பெரிய சட்டியில் வறட்டி கறியாக்கி வாரம் முழுவதும் உண்பான். 

  ஆனால் அவனுக்கு ஒரு சிக்கல் இருந்தது. ஒரு ஆட்டைப் பிடித்து கொல்லும் போதோ அல்லது வெட்டி கறியாக்கும் போதோ பார்க்கும் ஏனைய ஆடுகள் தெறித்து காடுகளுக்குள் ஓடிவிடும். பின் காடு முழுவதும் பலபேர் தேடி பெரும் சிரமப்பட்டு அவற்றைப் பட்டிக்குக் கொண்டுவரவேண்டும். சில வேளைகளில் காடுகளுக்குள் தெறித்து ஓடும் ஆடுகளை புலி, சிங்கம் என்று காட்டு விலங்குகள் வேறு வேட்டையாடிவிடும்.  

  அப்போதுதான் அந்த மேய்ப்பனுக்கு ஒரு யோசனை வந்தது. அவனுக்கு ஆட்டின் பாசை தெரியும். மற்றவர்களை பேசியே ஏமாற்றி மயக்கும் வசியமும் அவனிடம் இருந்தது. அவை இரண்டையும் பயன்படுத்துவது என்று தீர்மானித்தான். 

  ஒரு ஆட்டிடமும் சென்று, நீ ஆடில்லை, நீ ஒரு சிங்கம், நீ என் நண்பன், உன்னை நான் கொல்லமாட்டேன், நான் ஆட்டினை மட்டுமே கொல்வேன் என்பான். இன்னொரு ஆட்டிடம் சென்று நீ ஆடில்லை நீ ஒரு புலி நீ என் நண்பன் உன்னை நான் கொல்லமாட்டேன் நான் ஆட்டினை மட்டுமே கொல்வேன் என்பான். இப்படி பட்டியில் உள்ள ஒவ்வொரு ஆட்டையும் சிங்கம், புலி, யானை, வேங்கை, கரடி என்று விதம் விதமாக நம்பவைத்துவிட்டான்.

  இப்போது அந்த மேய்ப்பனின் பிரச்சினை தீர்ந்துவிட்டது. அவன் ஒரு ஆட்டினைப் பிடித்து கொல்லும் போதோ, சமைக்கும் போதோ அவன் ஆட்டைத்தான் கொல்கிறான். நமக்கென்ன வந்தது. நான்தான் ஆடில்லையே சிங்கமல்லவா, புலியல்லவா, என்ற நினைப்பில் ஏனைய ஆடுகள் அமைதியாக இருந்துவிடும். இடையனும் எந்த இடையூறும் இல்லாமல் வாராவாரம் ஒவ்வொரு ஆடாய் கொன்று தின்னலானான்.

  இந்த ஆடுகள் வேறு யாருமல்ல, உலகெங்கிலும் உள்ள எம் இந்துக்கள் தான், அந்த மேய்ப்பன் வேறு யாருமல்ல இந்த கிறிஸ்தவ இனமாற்றிகள்தான்.

  நான் இந்து இல்லை சைவன், நான் இந்து இல்லை வைணவன், நான் இந்து இல்லை பாகன், நான் இந்து இல்லை கானானியன் என்று நம்பவைத்துவிட்டு ஒவ்வொருவராக இல்லாமல் செய்துவருகிறது கிறிஸ்தவ பாசிசம்.

  இந்துக்களுக்கு தான் பிரச்சினை நமக்கில்லை, நாம்தான் சைவர்களாச்சே என்று ஒரு பெரிய முட்டாள் கூட்டமே இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கி வளர்த்து வரும் அந்த மேய்ப்பர்களை அந்த பலியாடுகள் உணரவில்லை என்றால், அவர்களும் சேர்த்தே கொல்லப்படுவார்கள் என்பது நிச்சயம்.

  உங்களுக்கு தெரிந்த “நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள்” என்று சொல்லி அலையும் பைத்தியக்கார பலியாடுகள் அனைவருக்கும் இந்த உண்மையை எடுத்துக் கூறுங்கள். எம் மதத்தின், இனத்தின் அழிவை ஒன்றுசேர்ந்து தடுப்போம்.

  சமாரியர் வேறு, கானானியர் வேறு, ரோமானியர் வேறு, அசுரியர் வேறு என்று நம்பவைத்தே கிறிஸ்தவர்கள் அவர்கள் அனைவரையும் அழித்து தம்மினத்தை முதலில் உருவாக்கினார்கள். இன்றுவரை அவர்களின் பிரித்தாளும் அணுகுமுறை மாறவில்லை. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் கடந்தும் நாம் அந்த சூழ்ச்சியை உணரவில்லை, அதிலிருந்து விடுபடவில்லை என்பதுதான் துயரமானது.

  நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள் என்று நம்பவைக்கப்பட்ட, அறியாமையில் வாழ்பவர்களை ஒருநிமிடம் சிந்திக்க வைப்போம்!

 2. தை நீராடல் , மார்கழி நீராடல் என தைமாத சிறப்புக்களை சொல்லும் சங்க இலக்கியங்கள் எதிலும் தமிழ் வருடபிறப்பு என்ற குறிப்பே இல்லை, பொங்கல் கொண்டாடியது பற்றியோ உழவர் திருநாள் என்றோ தகவலே இல்லை

  ஆனால் மார்கழி நோன்பு, மார்கழி நீராடல், தை மாத நோன்பு என இந்துக்களின் பண்டிகைகள் சங்க இலக்கியமெங்கும் கிடக்கின்றன‌

  மார்ழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண் ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு.

  பலராமன் சங்க இலக்கியங்களில் வாலி யோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப் பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க் கலப்பை ஆகும். (“”நாஞ்சிற்பனைக் கொடி யோன்” ௭ புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.

  பலராமனை “புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்ன னின் தளவாய்புரச் செப்பேடு’ குறிப்பிடுகி றது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்தி ரனுக்கு உரிய விழா அன்று.

  பலராமனின் ஆயுதம் ஏர்கலப்பை, அந்த பலராமனின் பண்டிகைதான் அவனுக்குரிய ஆயுதமான ஏர்கலப்பையினை கொண்டு இங்கு கொண்டாடபட்டது

  அதாவது பலராமன் விழாவில் ஏர்கலப்பை வந்ததே தவிர, உழவர் திருவிழா என்பதால் ஏர்கலப்பை வரவில்லை

  இந்த ஏர்கலப்பை விழா அதாவது பலராமனின் விழாதான் பின்னாளில் ஐரோப்பிய மிஷனரி சதியில் உழவன் விழா, உழவர் திருநாள் என மடைமாற்றபட்டது

  ஒரு இந்துபண்டிகை, இந்துக்களுக்கான பண்டிகை தமிழர் விழா, உழவர் திருநாள் என மாறியது இப்படித்தான்

  எவ்வளவுக்கு தமிழக இந்துக்களின் வரலாறு மாற்றபட்டு அக்கூட்டம் தன் வரலாறும் அடையாளமும் தெரியா அளவு மடமைக்குள் தள்ளபட்டிருக்கின்றது என்றால் இப்படித்தான்

 3. தமிழக இந்துக்களின் சித்திரை புத்தாண்டு உற்சாகமாக தொடங்குகின்றது, கோவிட் பெருந்தொற்றின் இருவருட கால முடக்கத்துக்கு பின் சித்திரை புத்தாண்டு இவ்வருடம் வழக்கமாய உற்சாகத்தில் வரவேற்கபடுகின்றது

  தைமாதமே தமிழ் புத்தாண்டு, அது ஆரிய வருகைக்கு பின் இப்படி திரிந்துவிட்டது என சொல்லும் கோஷ்டிகள் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தோன்றின, அதற்கு முன் இப்படிபட்ட வாதமே இல்லை

  உலகம் முழுக்க புத்தாண்டு என்பது இந்த வசந்த காலத்தில்தான் கொண்டாடபட்டது, ஐரோப்பாவில் கூட ஏப்ரலில்தான் புத்தாண்டு இருந்தது, பின் கிறிஸ்தவ போப் காலத்தில் ஜனவரிக்கு மாற்றிவிட்டு ஏப்ரல் 1ல் புத்தாண்டு கொண்டாடுபவர்கள் முட்டாள்கள் என அவர்களாக சொல்லி கொண்டார்கள்.

  தமிழ் புத்தாண்டு எக்காலமும் சித்திரை மாதமே, அதுவே இந்துக்கள் இங்கு கொண்டாடும் புத்தாண்டும் ஆயிற்று, இப்பொழுதும் அது தமிழ் இந்துக்களின் புத்தாண்டே, ஆம் இந்து தமிழர்களே அதை கொண்டாடுகின்றார்கள்

  தைமாதம் தமிழ் புத்தாண்டு என்று பண்டைய இலக்கியத்தில் குறிப்பில்லை அப்படியே பொங்கல் விழா உழவனின் விழா என்றெல்லாம் வரலாறும் இல்லை ஆவணமுமில்லை

  பாரத கண்டத்தின் தென்பகுதி கலாச்சார படி சித்திரை 1ம் தேதியே புத்தாண்டாயிற்று, இது தமிழருக்கு மட்டும் அல்ல, தெலுங்கு மலையாளம் ஏன் சிங்களவருக்கு கூட அதுதான் புத்தாண்டு

  தமிழனை பிராமணன் குழப்பினான் என்றால் சிங்களவனை குழப்பியது யார்?

  இந்து தமிழர் வானவியலை கசடற கற்றிருந்தனர், இந்துக்களான தமிழர் வானியல் அறிவுபடி கடவுள் முதல் கன்றுகுட்டி வரை ஜாதகம் உண்டு, பூமிக்கும் அது உண்டு

  அதன் படி முதல் ராசியான‌ மேஷ ராசியில் சூரியன் நுழையும் நாள் புத்தாண்டு என அறிவிக்கபட்டது, மேஷ ராசியில் அதாவது முதல் ராசியில் சூரியன் நுழையும் பொழுது பூமி 7ம் இடத்தில் இருக்கும்

  மீன ராசியின் நட்சத்திரம் சித்திரை

  அடுத்து சூரியன் ரிஷப ராசிக்கு வரும் பொழுது பூமி விசாக நட்சத்திரத்தை கொண்ட ராசி மண்டல்த்தில் இருக்கும்

  ஆம் இந்துக்களின் மாதமெல்லாம் பவுர்ணமி அன்று என்ன நட்சத்திரம் வருமோ அதை குறித்தே அமைந்திருக்கும்

  சித்திரா பவுர்ணமி முதல் பங்குனி உத்திரம் வரை கொண்டாடபட்டு , தமிழ் மாதங்களின் பெயர் நட்சத்திர அடிப்படையில் அமைந்திருப்பது அப்படியே

  இப்படித்தான் 12 ராசிக்கும் 12 மாதங்களென சொல்லி 12 பவுர்ணமிக்கும் 12 நட்சத்திரங்களை கொடுத்து வைத்திருந்தது இந்துமதம்

  முதல் ராசி மேஷம் என யார் சொன்னார்கள்? ஆதாரம் உண்டா என்றால் உண்டு, சொன்னது அகத்திய மாமுனி

  அவர்தான் தன் பன்னிராயிரம் நூலில் பங்குனி கடைமாதம் சித்திரை முதல்மாதம் என அன்றே எழுதி வைத்தார்

  சங்க இலக்கியங்களின் பதினென்மேல்கணக்கு நூல்களின் பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநெல்வாடையின் வரிகள் (160௭161) இப்படி சொல்கின்றன‌

  “திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக
  விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து..”

  அதாவது திண்ணிய நிலையினையும் கொம்பினையுடைய மேட ராசியினை முதலாக கொண்டு ஏனை இராசிகளிற் சென்று திரியும் சூரியன் என பொருள்

  ஆம் , மேஷ ராசி முதலாவதாக கொண்டுதான் இங்கு ஆண்டு கணக்கு அன்றே தொடங்கபட்டது, இந்து இந்துக்களின் வழக்கமாக இருந்தது

  இந்துக்களின் ஒரு பிரிவான தமிழருக்கும் அது புத்தாண்டாயிற்று

  புறநாநூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ் இலக்கிய நூல்களிலும் இதை உறுதி செய்யும் வரிக உண்டு

  திருவாரூர் இந்து ஞானி கமலபிரகாசர் சித்திரையே வருட தொடக்கம் என பலநூறு ஆண்டுக்கு முன்பே எழுதி வைத்தார்

  பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும் இதை சங்க இலக்கியமான மலைபடுகடாம் தெளிவாக சொல்கின்றது

  “தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை” என்கின்றது

  பழமொழி நானூறு “கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்” என்றும் பாடுவதால் இளவேனில் தொடக்கமான சித்திரையினை தெளிவாக சொல்கின்றது

  பொழுதுகள்தான் தமிழ் வருடத்தை நிர்ணயிக்கும் என ஒரு வாதத்துக்கு சொன்னாலும் சீவக சிந்தாமணி கோடை கால தொடக்கமே முதல் பருவம் என தெளிவாய் சொல்கின்றது

  சிலப்பதிகாரத்தில் “ஏர்மங்கலம்” என ஒரு பாடலே உண்டு, அதில் “சித்திர மேழி வைபவம்” என ஒரு விழா நடப்பதே தமிழரின் பருவகால தொடக்கம் அது என சொல்கின்றது

  அதாவது சித்திரை மாதத்தில் அரசன் ஏர் ஓட்டி வருடத்தை தொடங்கி வைப்பான் என்கின்றது அந்த வரி

  இந்த நிகழ்வு அன்று பாரத கண்டம் முழுக்க இந்து விழாவாக‌ இருந்தது, ஆம் அப்படி ஒருநாள் ஜனகன் மன்னனாக இருந்து பொன் ஏரால் உழும் பொழுதுதான் சீதை கிடைத்தாளாம்

  பாரதம் முழுக்க அரசர்கள் அப்படி சித்திரை 1ம் தேதி உழுது புத்தாண்டை தொடங்குவார்கள், இன்று கம்போடியாவில் மட்டும் அரசன் சித்திரை 1ம் நாள் உழும் வைபவம் நடக்கின்றது

  இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 ௭ 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் ௭ முதுவே னில், கார் ௭ கூதிர், முன்பனி ௭ பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது.

  எனவே வானநூல் ௭ ஜோதிட அடிப்படையி லும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்க மாகும்.
  சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 ௭ 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது.

  நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “”தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்” என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது.

  இப்படி ஏகபட்ட சான்றுகள் உள்ளன‌

  சங்க இலக்கியம், அரச வரலாறு, வானியல், தொன்று தொட்டு வரும் சம்பிரதாயம், தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்து இன்று மலையாளம் என்றாலும் கனி காணும் சித்திரை விஷூ தரிசனம் செய்யும் சகோதர இனம் என ஏக சான்றுகள் உண்டு

  முன்பு இந்துவாக இருந்து பின் பவுத்தமதம் தழுவினாலும் இந்துக்களின் புத்தாண்டான தமிழ் புத்தாண்டிலே சிங்கள புத்தாண்டு வருவது இன்னொரு பெரும் சான்று, காலம் கடந்து நிற்கும் சான்று

  இவ்விடத்தில் இந்த பகுத்தறிவு கோஷ்டி ஒரு கேள்வியினை எழுப்பும், அது தமிழ் ஆண்டுகள் 60க்கும் தமிழ் பெயர் இல்லையே ஏன் என்பது?

  தமிழரில் இளவேனில் முதல் பின்பனிக்காலம் வரை பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தது, ஒரு பொழுதுக்கு இரு மாதம் என 6 பொழுதுக்கும் 12 மாத கணக்கினை அது சொன்னது

  ஆண்டு என்பது ஒரு சுழற்சி எனும் அடிப்படையில் அதற்கென பெயர் வைக்கும் அவசியம் இல்லை

  மாயன் காலண்டரில் ஆண்டுக்கு பெயர் உண்டா? இல்லை இந்த ரோமன் நாள்காட்டியில்தான் ஆண்டுக்கு பெயர் உண்டா?

  எந்த இனத்திலும் அன்று அப்படி இல்லை

  வருடம் என்பது ஒரு சுழற்சி அதற்கு பெயரிடும் அவசியம் அன்று இல்லை, ஆனால் இந்துக்களின் பெரும் வானியல் அறிவு ஒரு உண்மையினை சொன்னது, அது கோள்களின் சஞ்சாரம்

  பூமி சூரியனை ஒரு வருடத்தில் சுற்றி பழைய இடத்துக்கு வந்துவிடுகின்றது, ஆனால் மற்ற கோள்கள் அப்படி அல்ல‌

  செவ்வாய் சூரியனை சுற்ற 3 வருடமும் வியாழன் சூரியனை சுற்ற 12 வருடமும், சனி சூரியனை சுற்ற 30 வருடமும் எடுப்பதை அது அறிந்தது

  ஆம், இன்றைய விஞ்ஞானம் இப்பொழுது உறுதிபடுத்தியதை அன்றே சொன்னமதம் இந்துமதம்

  அம்மதம் மிக சரியாக 60 வருடங்களுக்கு ஒருமுறை கோள்கள் அவை தொடங்கிய இடத்தில் சரியாக அமர்கின்றன என்பதை உணர்ந்தது

  அதாவது சுற்றிகொண்டே இருக்கும் கிரகங்கள் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை சரியான கோணத்துக்கு வருகின்றன, அதன் பின் அவை மாறிவிடுகின்றன‌

  60 வருடத்தில் அந்த கோணம் மறுபடி அமைகின்றது

  இதனால் பூமி சூரியனை சுற்ற ஒரு வருடம் என்பதை தாண்டி, அது மற்ற கோள்களுடன் சரியாக பொருந்திய இடம் வர 60 ஆண்டுகள் ஆகும் என்பதை உணர்ந்து அதை குறிக்க 60 வருடத்தை சொன்னது

  இந்த 60 வருடங்களுக்கான பெயரை ஒரு கதை மூலம் சொன்னது

  பகுத்தறிவு கும்பல் அந்த கதையினை பிடித்து கொண்டுதான் நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த குழந்தைகளா 60 வருடங்கள் என ஆபாசம் ஆபாசம் என ஊளையிட்டு திரிகின்றன‌

  அவைகளின் பகுத்தறிவு அவ்வளவுதான், அவைகளின் 4.5 அறிவுக்கு பெயர் பகுத்தறிவு என அவைகளே நினைத்து ஊளையிடுகின்றன‌

  உண்மையில் அந்த 60 குழந்தைகள் அது நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த குழந்தைகள் என்பதில் பெரும் வானியல் தத்துவமே அடங்கி இருக்கின்றது

  ஆம் நாரதர் என்றால் ஓடி கொண்டே இருப்பவர், ஓரிடத்தில் நில்லாதவர் என பொருள். ஆம் கிரகங்களும் நாட்களும் கோள்களும் ஓடி கொண்டே இருப்பவை

  விஷ்ணு என்றால் பிரபஞ்சம், இந்த மாபெரும் பிரபஞ்சம் அவர் வடிவே

  இந்த பூமி 60 வருட சுழற்சியில் எங்கெல்லாம் நிற்குமோ எந்த புள்ளிக்கெல்லாம் செல்லுமோ அதை குறிக்கத்தான் 60 பெயரை இட்டார்கள்

  நாரதரின் குழந்தைகள் அவை என்றால் ஓடி கொண்டே இருக்கும் நாட்களும் பூமியும் இந்த இடத்தில் இருக்கின்றன எனும் மைல் கல் போன்ற அடையாளங்கள் அன்றி வேறல்ல‌

  புரிவதற்கு மிக சிரமமான இந்த வானியல் தத்துவத்தை அவை ஒரு பக்தி கதையினை சொல்லி புரிய வைத்தன‌

  இன்னும் ஆழமாக சொல்ல வேண்டுமானால் உங்களுக்கு வானியல் இயற்பியல் அறிவு இருந்தால் சொல்லலாம்

  ஆம், வானம் என்பது வெற்றிடம் அல்ல, அங்கு கருந்துளை முதல் விலக்கு விசை பிரபஞ்ச ஈர்ப்பி விசை உள்ளிட்ட ஏக சங்கதிகள் உண்டு

  கண்ணுக்கு தெரியாத போர்வையில் சுற்றிவரும் கோலி குண்டு போல் பூமி சுற்றி வருகின்றது, அப்பொழுது அது தொடர்ந்து இயங்க ஒரு சக்தி அவசியம்

  இந்த 60 இடங்களிலும் வெவ்வேறு சக்திகள் அதற்கு துணைபுரிகின்றன, இவை எல்லாம் ஒருவகை சக்திகள்

  பிரபவ முதல் அட்சய என்பது வரை கண்ணுக்கு தெரியாத சக்தியின் ஊடாக பூமி செல்லும் காலங்கள், அப்படி 60 இடங்கள் உண்டு

  இதனை இன்று விஞ்ஞானம் அறியும் முதல்படியில் கூட இல்லை, அவர்கள் கருந்துளை , கருஞ்சக்தி என இப்பொழுதுதான் வாசல் அருகே சென்றிருக்கின்றார்கள்

  பிரிதொரு நாளில் பூமியின் இயக்கம் பிரபஞ்சத்தில் எப்படி நடக்கின்றது எனும் முடிவுகள் வரும்பொழுது , அன்றே இந்துக்கள் சொன்ன 60 வருட சுழற்சியும் அதற்கு காரணமான 60 இடங்களின் விஞ்ஞான வடிவமும் அப்பொழுது வெளிவரும்

  ஆம், இந்துமதம் எனும் அந்த மகா பிரபஞ்ச கடல் எல்லாவற்றிலும் கடைபுள்ளிவரை அன்றே உணர்ந்து அன்றே மானிடருக்கு புரியும் வண்ணம் சொல்லி வைத்திருந்தது

  அறுவடை முடிந்து மாசி மாதம் ஓய்வு கொண்டாட்டம் என முடித்து சித்திரையில் மறுபடி ஆண்டு கணக்கை தொடங்குவார்கள்

  இதனால் சித்திரா பவுர்ணமி அவர்களின் தொடக்க பவுர்ணமி ஆயிற்று

  இங்கு ஒரு குழப்பமும் இன்றித்தான் ஆண்டாண்டு காலம் தமிழ் புத்தாண்டு கொண்டாடபட்டது , சுல்தானிய ஆட்சியில் குழப்பம் வந்தாலும் நாயக்கர் ஆட்சியில் அது சரியாயிற்று

  சிக்கல் வெள்ளையன் ஆள தொடங்கிய‌ 18ம் நூற்றாண்டில் வந்தது, செல்லும் இடமெல்லாம் அந்த இனத்தின் கலாச்சாரத்தை மதத்தை அடையாளத்தை தன் கைகூலிகள் மூலம் அழித்து தன் மேலாண்மையினை ஏற்க செய்த வெள்ளையன் இங்கு குழப்பத்தை தொடங்கினான்

  இந்த குழப்பம் 16ம் நூற்றாண்டி தொடங்கிற்று, 17ம் நூற்றாண்டில் தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்பம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அப்பியை (ஐப்பசி) மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமி ழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

  அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அப்பியை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.

  இதை இன்னும் அழுத்தியவன் தமிழகத்துக்கு கிறிஸ்தவம் பரப்ப வந்து தமிழ் படித்த வீரமாமுனி எனும் இத்தாலியனான பெஸ்கி, தேம்பவானி என கிறிஸ்த நூலை தமிழில் எழுதியது அவனே

  அவன் தன் தேம்பாவணியில் (மக வருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகின்றான், அதாவது ஐரோப்பிய மாதமும் தமிழ் மாதத்தையும் ஒரே மாத கணக்கில் கொண்டு வருகின்றான்

  இதுதான் இன்றும் ஈழதமிழர் ஜனவரி 1ம் தேதியினை தை 1 என குறிக்க அடிகோலிற்று, இன்றும் ஈழதமிழரிடையே இந்த குழப்பம் உண்டு

  நவம்பர் 26ம் தேதியினை கார்த்திகை 26 என தமிழின உணர்வாளர்கள் முழங்குவது இப்படித்தான்

  ஐரோப்பாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் ஏயர் எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர்.

  கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங் குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்பு கள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர்

  இது அப்படியே இந்துக்களின் கொண்டாட்ட சாயலை சொல்வதை அறியலாம், பூம்புகாரின் இந்திரவிழாவின் பொழுது கிரேக்க கப்பல்கள் அங்கு இருந்ததும் குறிப்பிடதக்கது

  கிரேக்கர்கள் இந்திய இந்துக்களிடம் இருந்தே பலவற்றை கற்று ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றனர் என்பது எல்லோரும் ஒப்புகொண்ட வரலாறு

  கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ் வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட “ஏரீஸ்’ வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப் ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.

  இந்திய ஜோதிட அறிவியலில் பூர் ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பார சீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாத மாகும். இவ்வாறு பங்குனி ௭ சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறு பாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாத மாகக் கருதப்பட்டுள்ளது.

  காலக்கணக்கீட் டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது “”மீன மேஷம் பார்த்தல்” என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.

  இப்படியெல்லாம் இருந்த உலக வழமை கிறிஸ்தவ காலங்களில் மாறிற்று, இன்னும் ஈழ கைகூலிகள் சில தமிழ் புத்தாண்டை தைமாதம் எனவும் அதுவும் தை மாதம் 1 தேதி ஜனவரி 1ம் தேதியே பிறப்பதாக மாற்றி வைத்து அவனை மகிழ்ச்சி படுத்தின‌

  ஆனால் தமிழகத்தில் இந்துக்கள் வலுவாய் இருந்ததால் மாற்ற முடியவில்லை, விளைவு தந்திரமான காரியம் மூலம் இந்துக்களை குழப்பினான் வெள்ளையன்

  அதுவரை வடமொழியும் தமிழ்மொழியும் இரு கண்களாக இருந்த தமிழகத்தில் இரு மொழியும் செழித்த தமிழகத்தில் குபீர் தமிழுணர்வு பொத்து கொண்டு வந்தது

  அகத்தியன் முதல் கம்பன் வரை எவ்வளவோ தமிழ்காத்த புலவர்கள் இருந்த மண்ணில் தனிதமிழ் இயக்கம் எனும் இம்சை வெள்ளையன் காலத்தில்தான் வந்தது

  இதில் வேதாசலம் எனும் பெயரை மறைமலை அடிகள் என மாற்றி இம்சை செய்தவர் முக்கியமானவர்

  இக்கோஷ்டித்தான் வெள்ளையன் தூண்டுதல் பேரில் தமிழர் இந்தியர் அல்ல, தமிழர் வேறு அவர்கள் கலாச்சாரம் வேறு என கொடிபிடித்தது

  இவர்கள்தான் 1920 வாக்கில் தமிழனுக்கு தைமாதமே புத்தாண்டு என ஓலமிட்டனர்., ஆனால் அதை கண்டு கொள்வார் யாருமில்லை

  இதையே ராம்சாமி அண்ணா கோஷ்டியும்

  1972ல் கருணாநிதி இதைத்தான் பிடித்து தொங்கி தமிழ்புத்தாண்டு தைமாதம் என அழிச்சாட்டியத்தை ஆரம்பித்தார்

  அவர் பிறவி அரசியல்வாதி, இப்படி ஒரு பிரச்சினையினை கிளப்பினால்தான் அரசின் ஊழல் முதல் குடும்ப அரசியல் பிரச்சினை வரை மக்கள் பார்வையில் இருந்து மறையும் என்பது அவர் கணக்கு

  இதனால் தன்னை காக்க இப்படி புது புது பிரச்சினைகளை கிளறிவிட்டு அரசியல் செய்து கொண்டிருந்தார், அவருக்கு தெரிந்தது அதுதான்

  மற்றபடி இங்கு தமிழ் மொழி குடும்பத்துக்கு தென்னக இந்துக்களுக்கு சித்திரை 1ம் தேதியே புத்தாண்டு

  இதனால்தான் திராவிட விஷம் படியாத கேரளமும் தெலுங்கும் கன்னடமும் தங்கள் புத்தாண்டினை சித்திரை தொடக்கத்தில் உற்சாகமாக கொண்டாடுகின்றன‌

  இங்குமட்டும் குழப்பம் எனில் திராவிட இம்சைகள் செய்த கெடுதல் எவ்வளவு என்பது புரிய சிரமமானது அல்ல‌

  கேரளத்தின் விஷூ தரிசனம் முதல் யுகாதியில் வைக்கும் வேப்பம் பூ பச்சடி வரை தமிழ் இந்துக்களின் பண்பாடே

  காணுதல் என பொருள்படும் விஷூ எனும் அந்த வார்த்தையே ஆங்கிலத்தில் Visual வரும் வார்த்தைக்கு முன்னோடி ஆயிற்று

  ஆம் அன்று சித்திரை 1ல் காலையில் எழுந்து கனி தரிசித்து, பெரியோரிடம் ஆசி வாங்கி, குலதெய்வம் கோவிலில் வழிபட்டு , புத்தாடை அணிந்து கடவுளை தொழுது,ஏரோட்டி வேலை தொடங்கி என பெரும் சம்பிரதயங்கள் இருந்தன‌

  வேப்பம்பூ துவையலும் சர்க்கரை பொங்கலும் சமைக்கபடும் பதார்த்தமாயிருந்தன, இனிப்பும் கசப்பும் கலந்துதான் எல்லா வருடமும் வரும் என்பதை அவை சொல்லாமல் சொல்லிற்று

  இது போக மருந்துநீர் என ஒரு மூலிகை நீர் இளையோருக்கு மூத்தோரால் கொடுக்கபட்டு ஆசீர்வதிக்கபடும், எல்லா சிக்கலுக்கும் பெரியோர் வழியில் தீர்வு உண்டு என்ற தத்துவம் அது

  விஷூ நீர் என அதற்கு பெயர்

  அதன் பின் இளையோருக்கு பெரியோர்களால் அன்பளிப்புகள் வழங்கபடும் அது “கைவிசேஷம்” என்றானது

  இவ்வழக்கம் தமிழகத்தில் விடைபெற்றாலும் ஆச்சரியமாக சிங்களவர்களிடம் இன்றும் உண்டு

  இன்று தமிழ்நாட்டில் அந்த அழகான‌ கலாச்சாரமில்லை, பெரும் காரணம் வெள்ளையனுக்கு அடிமையான சில தமிழக இயக்கங்கள் அன்றி வேறல்ல‌

  மலையாளிக்கும் தெலுங்கனுக்கும் அப்படி இயக்க்கம் இல்லை என்பதால் அவன் இந்துவாக பாரம்பரியபடி புத்தாண்டை கொண்டாடுகின்றான்

  தமிழனை அந்த அரையறிவு இயக்கங்கள் பகுத்தறிவு பேசி குழப்பி வைத்துவிட்டன‌

  முன்பு சேரநாட்டு பகுதியாய் இருந்த கன்னியாகுமரி பக்கம், பாபநாசம் பக்கம் தவிர தமிழகத்தில் புத்தாண்டு கொண்ட்டாட்டம் பெரிதாக இல்லா அளவு இங்கு மடைமாற்றபட்டது

  சித்திரை புத்தாண்டு மிக விமரிசையாக கொண்டாடபட வேண்டும், எல்லா மரபுகளையும் சம்பிரதாங்களையும் மீட்டெடுத்து தமிழகம் அதை உற்சாகமாக கொண்டாடட்டும்

  தமிழ் தமிழர் என சொல்லி சொல்லி இங்கு தமிழரின் மரபும் பண்பாடும் ஒழிக்கபட்டதன்றி வேறு எதுவும் நடக்கவில்லை, காரணம் தமிழும் தமிழனும் இந்துமதமும் பிரிக்கமுடியாதவை

  இதில் ஒன்றை பிரித்தாலும் இன்னொன்று நிலைக்க முடியாது, அப்படித்தான் இந்து எனும் பெரும் கடலே பிரிக்க முயற்சிக்கபட்டு தமிழன் எதையெல்லாமோ தொலைத்துவிட்டு நிற்கின்றான்

  இந்துக்களின் தமிழ்புத்தாண்டில் அவனின் மரபுகள் ஒவ்வொன்றாக மீட்கபட்டு முறையாக அது கொண்டாடபட வேண்டும் அதற்கு கனி தரிசனம் முதல் ஆலய வழிபாடு என தொடங்கி ஒவ்வொன்றாய் மீட்டெடுக்கலாம்

  பிறக்கும் இந்து தமிழ் வருடமான சுபகிருது ஆண்டு வீட்டுக்கும் நாட்டுக்கும் உலகுக்கும் நன்மை தரும் ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்

  இந்த இந்து தமிழ் புத்தாண்டை இந்து சம்பிரதாயக்களுடன் கொண்டாடுவது ஒவ்வொரு இந்துவின் கடமையாகின்றது, கனி காணுதல் எனும் அந்த நிகழ்வு மலையாளிகளுக்கு மட்டுமானது அல்ல அது தமிழக இந்துக்களின் வழமை

  தமிழகத்தில் ஏற்பட்ட ஆப்கானிய தாக்கம், நாயக்க அரசு மற்றும் மராட்டியரின் தாக்கம் கேரளத்தில் இல்லை என்பதால் அந்த சம்பிரதாயம் அங்கு மட்டும் நீடித்து முன்னாள் கேரளமான நாகர்கோவில், கோவை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்கின்றது

  அந்நாளை எல்லா இந்துக்களும் கனி தரிசனத்தோடு கொண்டாடலாம், சுபகிருது வருடம் நாட்டுக்கும் எல்லா மக்களுக்கும் நன்மையும் வளமையும் கொண்டுவர வாழ்த்துக்கள்

 4. பாகிஸ்தான், பர்மா, இலங்கையினை தொடர்ந்து அடுத்த விக்கெட்டாக நேபாளம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கின்றது

  கொரோனா கால தாக்கம் என்பது இனிதான் உலகளாவில் தெரியும் என எதிர்பார்க்கபடும் நிலையில் இந்த சீன ஆதரவு நாடுகள் அந்த சீன தாக்கத்தாலும் கடுமையாக வீழ்கின்றன‌

  நேபாளத்தின் இந்து மன்னர் ஆட்சி செய்தவரை அந்த நாடு இந்தியாவுக்கு வடக்கே அரணாக இருந்தது உலகில் ஒரே ஒரு இந்துநாடு எனும் அடையாளத்தை பெற்றிருந்தது

  அங்கு “சமத்துவம்”, “புரட்சி” “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என கம்யூனிஸ்டுகள் உருவாகும் பொழுது சிக்கல் தொடங்கிற்று, அவர்கள் மாவோயிஸ்டுகள் என்றபொழுது உண்மை பளிச்சென ஆனது

  சீன ஆதரவு கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தபின்பே இந்திய நேபாள உறவுகள் சீர்கெட்டன, காங்கிரசும் தன் அணிசேரா கொள்கையால் இச்சிக்கலை வளர்த்துவிட்டது

  நேபாளம் கடந்த சில வருடங்களாக இந்தியாமேல் போர் பூபாளம் பாடியது, காலே நதி தங்களுக்கு என்றது நாங்கள் நினைத்தால் இந்தியாவினை பொசுக்கிவிடுவோம் என்றது இன்னும் வரைபடத்தை மாற்றி டெல்லிவரை கோடு இழுத்து இதுதான் அகண்ட நேபாளம் என காமெடி எல்லாம் செய்தது

  சீனாவின் உண்மை முகமும் மேற்கத்திய நாடுகளின் உலக அரசியலும் அத்தோடு கொரோனாவும் போட்டு தாக்க நேபாளம் சரிந்தது

  சீன கைகூலி பிரதமர் ஓலி மாற்றபட்டு புதிய பிரதமர் வந்த நிலையில் கடும் சிக்கல் நிலவுகின்றது

  இலங்கை போல் அல்ல நேபாளம், அது நான்குபக்கமும் நிலமும் மலையும் சூழ்ந்த நாடு, அதற்கு மதம் இனம் அடிப்படையில் இந்தியா மட்டுமே உதவிசெய்ய முடியும்

  பஞ்ச காலத்தில் பண்ணையார் ஊருக்கெல்லாம் படியளப்பது போல இலங்கையினை தொடர்ந்து நேபாளத்துக்கும் அன்னை பாரதத்தின் உதவிகள் செல்ல தொடங்கியிருக்கின்றன‌

  மோடியின் ஆட்சியில் கொடும் பொருளாதார நெருக்கடி காலத்திலும் தன்னை நிறுத்தி அக்கம் பக்கம் நாடுகளையும் கைதூக்கிவிட்டு கொண்டிருக்கின்றது இந்தியா

  உண்மையில் மோடி அரசு இருந்திராவிட்டால் இந்தியா சொந்தமாக கொரோனா மருந்து உருவாக்கியிருக்காவிட்டால் இந்தியாவும் இந்த பட்டியலில் பரிதாபமாக இணைந்து 1960களின் நிலைக்கு பின்னால் சென்றிருக்கும்

  மோடிபிரானும் அவரின் ஊழலற்ற திறமையான அமைச்சரவையும் இந்த நாட்டை நிலை நிறுத்தி வெற்றியாக பயணிக்க வைத்து கொண்டிருக்கின்றனர்

  ஆக எஞ்சியிருப்பது பாகிஸ்தான், அவர்களுக்கும் இந்தியாவினை விட்டால் யாருமில்லை என்ற நிலை மெல்ல மெல்ல உருவாகின்றது , விரைவில் அவர்களும் ரகசியமாக இந்தியா நோக்கி கண் சிமிட்டலாம்

 5. ஜாலியன் வாலாபாக் படுகொலையினை பெரிதாக‌ கண்டிக்காத காந்தி, அந்த கொடுமையினை காண சகிக்காமல் பகத்சிங் ஆயுதமேந்தியதை கண்டித்த காந்தி, அக்கொலைக்கு காரணமான ரெஜினால்ட் டயரை உத்தம் சிங் சுட்டுகொன்றபொழுது கடுமையாக கண்டித்து அஹிம்சை பேசினார்

  பல்லாயிரம் இந்தியர்கள் இறந்தபொழுது வராத அஹிம்சை, பகத்சிங் சாகும்பொழுது வராத அஹிம்சை, ஒரு வெள்ளையன் செத்தபொழுது காந்தியாருக்கு ஏன் பொங்கிற்று என்பதற்கு அவரின் சீடர் அய்யா Jebamani Mohanraj அவர்கள் இப்பொழுது விளக்கமளிப்பார்

 6. அக்காலகட்டம் வெள்ளை அரசு ஆடிகிடந்தது, காரணம் 1917 அதாவது 1919ன் ஈராண்டுகளுக்கு முன்னர்தான் ஜார் மன்னனை வீழ்த்தி புரட்சியாளன் லெனின் ரஷ்யாவில் ஆட்சி அமைத்திருந்தார், அது உலகெங்கும் உரிமைக்காக போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிற்று, ஏகாதிபத்தியம் அச்சமுற்ற நேரம்.

  உலகின் சரிபாதியினை ஆண்டுகொண்டிருந்த ஏகாதிபத்திய ஆங்கிலேயன் அச்சமுற்று, இதனை தடுக்க ரவுலட் என்பவர் தலமையில் குழுபோட்டு ஆலோசித்தான், முடிவில் அது சட்டமாயிற்று.

  கொடுமையான சட்டம் அது, “ம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்.” என்ற வசனத்தின் வடிவம் அது. அரசுக்கு எதிரானவன் என்ற சந்தேகம் மட்டும்போதும், காவல்துறை அவன் தலைவிதியினை இஷ்டபடி எழுதலாம், நீதிமன்றம் எல்லாம் தலையிடமுடியாது, ஜாமீன், வழக்கு எல்லாம் கனவிலும் நடக்காது.
  வெள்ளையன் அப்படித்தான் எல்லாம் சட்டமியற்றிவிட்டுத்தான் செய்வான், அவன் வழக்கம் அது.

  புல்லினை புடுங்கவேண்மென்றாலும் சட்டம் என்ன சொல்கிறது என பார்த்துவிட்டுதான் செய்வான்.அப்படி ஒரு சட்டம் இல்லாவிட்டால் இயற்றிகொள்வான்.

  இந்நாளில் இஸ்ரேலியசட்டம், ஜெயவர்த்தனேவின் பாதுகாப்பு சட்டம், இந்தியாவின் தீவிரவாத தடுப்பு சட்டம் என எல்லாவற்றிற்கும் இந்த ரவுலட்சட்டம்தான் தாய் அல்லது முப்பாட்டி.

  நாடு முழுக்க அச்சட்டத்தினை எதிர்ப்புகள் வெடித்தபொழுது அது பஞ்சாபிலும் உணர்ச்சி கணல் ஊட்டிற்று, இன்றுபோல் அன்றும் பஞ்சாபியருக்கு அறுவடை திருவிழா, அந்த பைசாகி எனப்படும் பண்டிகை அன்றுதான் மக்கள் அந்த அமிர்தசரஸ் பூங்காவில் மாலையில் கூடினர், விழாக்காலம் என்பதால் பெருங்கூட்டம், கிட்டதட்ட 10000 பேர் கூடியிருக்கலாம் என்பது கணக்கு.

  அந்த பூங்காவின் பெயர்தான் ஜாலியன் வாலா பாக். நாலுபக்கம் மதில் கொண்ட பூங்கா அது, நுழைய ஒரு குறுகிய வாயில்தான் உண்டு. பழம் அரசர் காலத்தின் தொடர்ச்சியான வரலாற்று திடல், ஒரு காலத்தில் யானை பழக்கும் மைதானமாக இருந்தது என்கின்றது சில குறிப்புக்கள்

  வெள்ளையன் காலத்தில் அங்கு அன்றைய கமிஷனர் பெயர் ஜெனரல் ரெஜினால்ட் டயர், ஒரு காவல் படையோடே வந்தான் அதில் 50 இந்தியரும் உண்டு.

  வந்தவன் எச்சரிக்கை கூட கொடுக்காமல் சுட சொன்னான், மக்கள் செத்துமடிந்தனர், வாசலை அடைத்துகொண்டு சுட்டதால் சுவர் ஏறி குதித்த நெரிசல், கிணற்றில் தவறிவிழுந்து, மிதிபட்டு என கிட்டதட்ட 1500க்கு மேற்பட்டவர் செத்தனர், நிதானமாக கடமையாற்றிய டயர் தோட்டாவும், பீரங்கிகுண்டுகளும் தீருமட்டும் சுட்டான்,

  அவை தீர்ந்ததால் மீதிமக்கள் கொல்லபடவில்லை எனினும் மாலை ஆனதால் ஊரடங்கு உத்தரவு என சொல்லி திறந்தவெளி சிறைவத்து காலையில்தான் வெளியில் விட்டான் டயர். அவன் கடமை உணர்ச்சி அப்படி.

  அதாவது சட்டபடி சுடமட்டும் செய்தானாம், கத்தியால் குத்தவில்லையாம், சட்டபடி ஊரடங்கு உத்தரவில் அவர்களை பிணகுவியல்நடுவே அழவும் வைத்தானாம், சுற்றி சொந்தம் இறந்துகிடக்க,நடுவிலிருந்தவருக்கு எப்படி இருந்திருக்கும்?? பெண்களும் குழந்தைகளும் கூட ஏராளம்.

  செத்தது 379 பேர் என சொன்னது பிரிட்டன் அரசு, அரசுகள் என்று உண்மையினை சொல்லும்? கிட்டதட்ட 2000 பேர் இறந்திருக்கலாம் என்பது உண்மை.

  நடந்த நாள் ஏப்ரல் 13, 1919.

  இந்திய சுதந்திரவரலாற்றில் பெரும் திருப்பத்தினை ஏற்படுத்தியது இந்த படுகொலை,நாடு கொந்தளிக்க வெள்ளை அரசாங்கம் அவனை பணிமாற்றி லண்டனுக்கு அனுப்பியது, அங்கு அவன் பெரும் ஹீரோ என கொண்டாடபட்டான்

  வெள்ளையர்கள் அவனை உள்ளூர ரசித்தான். லண்டன்வாசிகள் இப்படித்தான் சுதந்திரம் கேட்பவர்களை கொல்லவேண்டும், நாம் ஆள, கொல்ல பிறந்தவர்கள் என அறுதியிட்டு சொன்னது. அவனை கொண்டாடியது.

  எந்த பெரும் ஆணவ கொலைகாரனை பழிவாங்க காலம் ஒருவனை உருவாக்கும் அல்லவா? இறைவனின் விதி அது. அப்படி உருவானான் பஞ்சாபின் உதம்சிங்.

  தொடர்ந்த தேடுதலில் 21 ஆண்டுகளுக்கு பின் உதம்சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்தது, லண்டனின் பெரும் ஹீரோவான கொடியவன் டயர் கலந்து கொண்ட கூட்டத்தில் உத்தம்சிங்கும் கலந்தான், டயர் கூட்டத்தில் உரையாற்றினான் இப்படி,

  “ஆப்ரிக்க பிரிட்டன் காலணிநாடுகளில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பினை அடக்க என்னைபோல ஆட்கள் அவசியம், அன்று அமிர்தசரஸில் இன்னும் ஆயுதம் இருந்திருந்தால் ஒருவரையும் விட்டிருக்கமாட்டேன், என் கடமையினை முழுமையாக செய்யாதற்கு வருந்துகிறேன், இன்னுமோர் வாய்ப்பு ஆப்ரிக்காவில் அரசு தருமா?” என இன்னும் வீரமுழக்கம் எல்லாம் இட்டு இறங்கினான் டயர்.

  கொஞ்சம் கூட அத்தனை பேரினை, அப்பாவிகளை கொன்ற வருத்தம் கொஞ்சம் கூட அவனிடம் இல்லை, அத்தனை அகம்பாவம்.

  அவன் முன்னால் சென்றான் உதம் சிங், தன் கையில் உள்ள புத்தகத்தை பிரித்தான், உள்ளே இருந்து துப்பாக்கி எடுத்தான்,”இன்னொரு வாய்ப்பு தரமாட்டோம்” என சொல்லி சுட்டான், இன்னும் இருவருக்கும் சூடு விழுந்தது, இறந்து வீழ்ந்தான் கொடியவன் டயர்.

  எங்கும் ஓடாமல் அமைதியாக நின்றான் உதம்சிங், மெதுவாக புன்னகைத்து சொன்னான், ” உன் பெயர் என்ன என்றதற்கு? ராம் முகம்மது சிங் ஆசாத், நான் ஒரு இந்தியன், இந்த டயரால் கொல்லபட்ட மக்களின் ஆன்மா, நான் என் கடமையினை முடித்துவிட்டேன், இனி என்ன மரணம்தானே, கொடுங்கள்”

  ஒரு புத்தகத்தின் உள்பக்கத்தை வெட்டி துப்பாக்கி மறைத்து, கைகளில் கொண்டு, பாதுகாப்பான அந்த மண்டபத்தில் நுழைந்தான் உதம்சிங்

  (பின்னாளில் ராஜிவ் கொலையாளி சிவராசனும் திருப்பெரும்புதூரில் இப்படியான துப்பாக்கிபுத்தகத்தோடுதான் நின்றான்)

  தன் தலைநகரிலே புகழ்மிக்க(?) டயரினை ஒரு இந்தியன் கொன்றதை வெள்ளையனால் தாங்கமுடியவில்லை. எப்படியாவது உதம்சிங் ஒரு மனநிலை சரியில்லாதவன் என நிரூபிக்க படாதபாடுபட்டது வெள்ளையன் அரசு, ஆனால் முடியவில்லை.

  ஒரு இந்தியன் வெள்ளை ஜெனரலை சுட்டது அவனுக்கு அவ்வளவு பெரும் அவமானம்.

  பின்னாளில் கென்னடி கொலையில் கூட, விசாரித்து இந்த சின்ன கொசுவா அமெரிக்க அதிபரை கொன்றது? வெளியில் சொன்னால் அவமானம் அல்லவா? என சொல்லி அந்த கொலைகாரன் ஆஸ்வால்ட்டினை மெண்டல் என தீர்பளித்தது நினைவிருக்கலாம்.

  இன்றுவரை கென்னடி கொலை தீர்ப்பு அப்படியானது.

  எந்த பைத்தியம் அப்படி மிக சரியாக சுடும் என்பதும் தெரியவில்லை, வெள்ளையன் இறுமாப்பு அப்படி. ஒரு பைத்தியம் இப்படி வந்து கொல்லுமளவிற்கா உங்கள் பாதுகாப்பு இருக்கின்றது? என ஒருநாடும் பதில்கேட்கவுமில்லை என்பது இன்னொரு விஷயம்.

  மொத்தத்தில் பெரிய மனிதன் அடிபட்டால் வெளியில் சொல்லமாட்டான் என்ற பழமொழியின் வடிவம் இது.

  உதம்சிங்கினை அப்படி பைத்தியமாக்க முயன்ற வெள்ளையன் முயற்சி படுதோல்வி,பைத்தியம் என உதம்சிங் வழக்கறிஞர் நிரூபித்துவிட்டால் உதம்சிங் வழக்கிலிருந்து தப்பும் வாய்ப்பும் இருந்தது, இந்திய வழக்கறிஞர்கள் அவரிடம் சொல்லியும் பார்த்தனர், ஆனால் உதம்சிங்கிற்கும் அடிபணிந்து வாழ விருப்பமில்லை. சிங்கமாகவே இறந்தார்.

  ஜாலியன் வாலாபக் படுகொலைக்கு அழுத காந்தி, டயரின் கொலைக்கும் அழுதார், அவர் அப்படித்தான், இது வன்முறை கலாச்சாரம் என்றார்.யாரும் உதம்சிங்கினை பற்றி ஒன்றும் சொல்லவில்லை

  ஒரே ஒரு குரல் மிக தைரியமாக உதம்சிங் செயலினை வரவேற்றது, அது நேதாஜியின் குரல்.

  நேரு உதம்சிங்கினை புகழ்ந்தபொழுது இந்தியா சுதந்திரம்பெற்று 15 வருடம்தான் ஆகி இருந்தது.

  1940ல் உதம்சிங் தூக்கிலிடபட்டு லண்டனில் புதைக்கபட்டார், பின்னாளில் இந்திராவின் இந்திய கோரிக்கைபடி அவரது எலும்புகள் இந்தியாவிற்கு அனுப்பபட்டு, நினைவுசின்னம் எழுப்பபட்டது.

  இந்திய சுதந்திர பொன்விழாவினையொட்டி இந்தியா வந்த அரசி எலிசபெத் கணவன் பிலிப்புடன் அங்கு சென்று அஞ்சலி செலுத்தினார், அந்த கல்வெடினை பார்த்து, 379பேர் இறந்திருக்கமாட்டார்கள், எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாக சொல்லியிருக்கலாம் என எடின்பரோ சொன்னது சர்ச்சையானது, 2000 பேர் செத்ததை 379 என மறைத்ததே கொடுமை, இதில் இவர் வேறு.

  லண்டன் பெருமிதம் அப்படியானது, இவர்களுக்கெல்லாம் ஹிட்லரும், சதாம் உசேனும், வடகொரிய அதிபரும், புட்டீனும்தான் சரி.

  ஜாலியன் பூங்கா போல பல‌ தியாகங்கள் நிறைந்தது இந்திய வரலாறு, இப்படுகொலை நிகழ்ந்தாவது அடிமை இந்தியா. இன்று என்ன நடக்கின்றது?

  ஜாலியன் வாலாபாக் ஒரு திட்டமிட்ட கொடூரம் என்றாலும் அவர்களின் சாவு இந்தியாவில் சுதந்திர தீயினை மூட்டியது, வெள்ளை அரசாங்கமே ஆடியது, ஆனானபட்ட சர்ச்சிலே முகத்தினை மறைக்க வைத்த சம்பவம் அது.

  நிச்சயம் உதம்சிங்கின் போராட்டமும் அவரின் வீர தியாகமும் மறக்கமுடியாதது.

  அமிர்தசரஸ் என்றால் பொற்கோயில் மட்டுமல்ல, அந்த ஜாலியன் பூங்காவும் மறக்கமுடியாதது, இரண்டும் இரத்தத்தால் ஒரு காலத்தில் கழுவபட்டதுதான் கால‌ சோகம்.

  இப்படி ஏராளமான சோகங்களை, தியாகங்களை கடந்துதான், சோதனைகளை வென்றுதான் இத்தேசம் உயர்ந்துகொண்டிருக்கின்றது

  அந்த தியாகமிக்க பஞ்சாபிய சகோதரர்கள் அனுபவித்த கொடுமையில் 1000ல் ஒரு பங்கு கூட தமிழர்கள் அனுபவித்திருக்க மாட்டோம், ஆனாலும் தமிழர்களை இந்தியா அழிக்கின்றது என சொல்லிகொண்டே இருப்பார்கள், அரைப்பைத்தியங்கள்

  அந்த ஜாலியன் வாலாபாக் பூங்கா இன்றும் மிக அமைதியாக தியாகத்தின் அடையாளமாக, பிரிட்டன் அடக்குமுறையின் சாட்சியாக, இந்திய விடுதலையில் புது திருப்பம் கொடுத்த வடுவாக பல விஷயங்களை சொல்லிகொண்டே இருக்கின்றது

  இந்திய விடுதலை போராட்டத்தில் 102 ஆண்டுகளுக்கு முன்னால் பெரும் எழுச்சியூட்டிய தியாக சம்பவம் அது..
  உலகமே அரண்டு நின்ற , இந்தியாவில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்திய இச்சம்பவத்தை பற்றி, பகத்சிங் முதல் பலரும் களத்துக்கு வந்த இச்சம்பவம் பற்றி, தேசமே அதிர்ந்த இந்த கொலை பற்றி ஒரு கோஷ்டி கள்ள மவுனம் காத்தது

  ஒரு வார்த்தை அவர்கள் வெள்ளையனை கண்டிக்கவே இல்லை, மாறாக சாமரம் வீசிகொண்டிருந்தனர்
  அவர்கள் பெயர் பிராமண எதிர்ப்பு நீதிகட்சி

  இந்த திக , திமுகவின் முன்னோடி கட்சி. அதனால்தான் அவர்கள் வழிவந்த ராம்சாமி முதல் திமுக வரை ஒரு காலமும் நாட்டுபற்றோடு இருப்பதில்லை.

  ஈரோட்டு ராம்சாமி ஒரு வார்த்தையும் இதை பற்றி சொன்னதில்லை

  1012ஆண்டுகள் ஆனாலும் இன்னும் பிரிட்டன் அரச குடும்பமும் பிரிட்டன் பாராளுமன்றமும் இன்னும் இச்சம்பவம் பற்றி மன்னிப்போ எதுவுமோ கேட்கவில்லை, கேட்கவும் மாட்டார்கள், எல்லாம் சட்டம் மூலம் செய்தோம் எனும் ஒருவித திமிரிலே இருப்பார்கள்

  இந்தியர்கள் சாகபிறந்தவர்கள் எனும் அலட்சியம் அன்றி வேறல்ல‌ , சென்ற இடமெல்லாம் அங்கிருந்த பூர்வகுடிகளை இப்படி கொன்றுத்தான் ஆண்டார்கள்

  இங்கே இந்தியர்கள், அமெரிக்காவில் செவ்விந்தியர்கள்

  செவ்விந்தியர்களை எளிதில் காட்டுமிராண்டிகள் என அடக்கிய வெள்ளையனால் நாகரீகமும் அறிவும் மிகபெரிய தத்துவ ஞானமும் வாழ்க்கைமுறையும் கொண்டிருந்த இந்திய மக்களின் அடையாளத்தை எளிதில் அழிக்க முடியவில்லை

  இதனால் சாதி, இனம், மொழி, வர்ணாஸ்ரமம் என என்னவெல்லாமோ தூண்டிவிட்டான், இந்து மதம் காட்டுமிராண்டி மதம் என தன் கைகூலிகளால் பேசவிட்டான்

  அந்த காட்டுமிராண்டி மதமா ஆப்கானியரும் வெள்ளையனும் வந்து சுரண்டும் அளவு இங்கு செல்வங்களை சேர்த்திருந்தது என்பதற்கு அவனிடம் வஞ்சக மவுனமே எஞ்சியது, அவனின் அடிப்பொடி கைகூலிகள் இன்றுவரை அதையே சொல்லிகொண்டிருக்கின்றன‌

  இந்த பஞ்சாப்படுகொலை பற்றி ராம்சாமி ஒருவார்த்தை கடைசிவரை சொல்லவில்லை என்பதுதான் அவரின் நாட்டுபற்று

  இன்று பஞ்சாபியரின் பைசாகி அறுவடை நாள், அதே நேரம் நாட்டுக்காக தன் மக்களை இழந்த வலியான நாளும் அதுவே

  பஞ்சாபிய மக்களுக்கு பைசாகி வாழ்த்து சொல்லிவிட்டு, அன்று வாலாபாக் பூங்காவில் நாட்டுகாய் செத்த அம்மக்களுக்காகு அஞ்சலி செலுத்தி வணங்குகின்றது அருமை பாரதம்

  மோடி அரசு அந்த பூங்காவினை புதுபித்து நினைவு அடையாளங்களை செய்து மிக உன்னதமான நாட்டுபற்றுடன் அந்த தியாகிகளை நினைவு கூற ஏற்பாடு செய்தது

  இன்று நாட்டுமக்களுக்கு அந்த தியாக பூங்காவின் பெருமையினை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றார் பிரதமர் மோடி, அவரோடு தேசமும் அஞ்சலி செலுத்துகின்றது

 7. இந்தி திணிப்பு என பொங்குபவர்கள் “கிறிஸ்தவ திணிப்பு” இதர மத திணிப்பு பற்றி பேசவே மாட்டார்கள்

  இங்கு மொழிமட்டும் சட்டம் போட்டு காக்கபட வேண்டுமாம், சாதி சட்டமியற்றி அடையாளபடுத்தபடுமாம்

  ஆனால் மதம் மட்டும் அவரவர் விருப்பபடி பின்பற்ற பட வேண்டுமாம்

  புரியாத இந்த பெரும் குழப்பத்துக்கு பெயர் டிரவிடியன் மாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *