கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ள ஏதாவது காரணம் இருக்க முடியுமா? – மரியா வர்த்

ஆனாக், கிறிஸ்தவப் பழத்தைப் பிரிக்க முடியாது. பழத்தை முழுதாக உண்டால் மட்டுமே பலன் கிடைக்கும், என்ன பீட்டரே, அப்படித் தானே? என்ன செய்வது?

1980களில் கும்பமேளா சமயம் இந்தியாவிற்கு பயணியாக வந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மரியா விர்த் (Maria Wirth), இந்து ஆன்மீகத்தால் முழுமையாக ஈர்க்கப்பட்டார். ஸ்ரீ ஆனந்தமயி மா, தேவராஹா பாபா ஆகிய குருமார்களின் சீடராகி அவர்கள் அருளுக்கும் அன்புக்கும் பாத்திரமானானர். யோகம் பயின்றார். இந்து தர்மத்தின் மேன்மை குறித்தும், இந்துப் பண்பாட்டிற்கு தற்போது ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் ஜெர்மன் மொழியிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார். Thank you India – a German woman’s journey to the wisdom of yoga என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். Is there a good reason to accept Christianity? என்ற அவரது சமீபத்திய பதிவை கள்ளப்பிரான் எஸ் ஐயங்கார் இயல்பான பேச்சுத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ள ஏதாவது காரணம் இருக்க முடியுமா?

ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறக்காட்டா நிச்சயமாக ஒரு காரணமும் இருக்க முடியாது. அப்படியே பிறந்திருப்பினும், உங்களோட நம்பிக்கையின் சுய லாபங்களையும், பொது இடர்களையும் சீர் தூக்கிப் பாருங்க.

என்னையே எடுத்துக்குங்க. நான் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்துல பொறந்தவ. ஒரு குழந்தையா இருக்கும் போது, ‘கடவுள், நம்மைப் படைத்து, நம்மை அறிந்து அன்போடிருப்பவர்’, போன்ற நம்பிக்கைகள் அழகா இருந்திச்சு. சிறு வயசுல எங்கம்மை எனக்கு ஜெர்மன் மொழியில ஒரு சின்னப் பிரார்த்தனைப் பாட்டு ஒண்ணச் சொல்லிக் குடுத்தா:

‘கருணையுடையவரே, நான் சிறியவள்.
என் இதயம் தூய்மையானது,
என்னை என்றும் உம்முடையவளாக இருக்கச் செய்வீர்’.

இது கடவுள்ட்ட ஒரு நெருக்கத்தத் தந்ததோடு அவரோட வலுவான பாதுகாப்புல இருப்பதாவும் நம்புனேன்.

தொடர்ந்து ஏசுவே கடவுளின் ஒரே குழந்தை, நம் பாவங்களுக்காக உயிர் விட்டவர், மீண்டும் நமக்காக உயிர்த்தெழுந்தவர் என்றும் எனக்குச் சொல்லிக் கொடுத்தாங்க. நரகம் பத்தின விஷயம் இதுல முக்கியமானது.

‘ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுக்குப் போகலியா, பாதிரியார் கிட்டப் பாவமன்னிப்புக் கேக்கலியா, நீ நரகத்துக்குத் தான் போவே, அங்க உன்னை நிரந்தரத் தீக்குண்டத்துல நிரந்தரமாச் சாம்பல் ஆகாம எரிப்பாங்க…’ இந்த மாதிரி.

எனது இளம் வயதுக் காலமான 1950-60களில் ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச் போகாமல் இருப்பது கொடும்பாவம், ஸ்ட்ரெயிட்டா நரகத்துக்கு அக்ஸஸ் கார்டு வாங்கறா மாதிரி. தனி மனுசனுக்கு, ஏன்மனித குலத்துக்கே தீங்கான இப்படி ஒரு கோழைத்தனமான விஷயம் இருக்கறதா அப்ப நான் நம்பினேன், ஒரு கோழையா ஒடுங்கி, நறுங்கிக் கெடந்தேன்.

இதுக்கு நடுவுல ஸ்கூல்ல, ‘கிறிஸ்தவம் மட்டுமே உண்மை’ என்று அடுத்த பாட்டை ஆரம்பிச்சாச்சு. ‘ஏசுவை ஏத்துக்காத வேற்று ஜாதிகள் நிரந்தரமான நரகத்தின் நிரந்தரமான தீக்குண்டத்தில் நிரந்தரமா எரிஞ்சு சாம்பலாகாம நிரந்தரமா எரிஞ்சுக்கிட்டே இருப்பாங்க’.

இந்தப் பனிஷ்மென்ட் மனிதத் தன்மைக்கே எதிரானது. இதை ஏத்துக்கிட்டு நம்பற கிறிஸ்தவர்கள் அகராதி பிடிச்சு அலையாம என்ன செய்வாங்க? இவங்க ஜில்லுனு குளிர்ச்சியா இருக்கும் போது ஏத்துக்காத ஜாதியினர் எரிஞ்சு சித்ரவதைப் படுவாங்களாம். அதனால கருணை கூர்ந்து கிறிஸ்தவர்கள் அந்தப் பிற ஜாதியினரைக் கொல்லவும் கொல்லுவாங்களாம். கிறிஸ்தவம் சென்ற இடத்தில் எல்லாம் ரத்தக் காடாச்சு. கொடுமை, எல்லாம் அந்தக் கருணையின் பேரால நடந்தது தான்.

இப்படி ஒரு நம்பிக்கை ஒரு மதமா எப்படி இருக்க முடியும்? ஒரு வாத்துக்கு இருக்கற சூட்சுமம் உள்ளவன் கூட இது மனுசங்களப் பிரிச்சு அவர்களை அடிமையாக்கி, தாங்கள் கொழுக்கிறதுக்கான சதித் திட்டம்னு புரிஞ்சுக்க முடியும். ஆனாச் சின்ன வயசுலேயே கிறிஸ்தவத்துக்கு வசக்கப் பட்டவர்கள், வயசாகியும் வாத்துக்களைப் போலக்கூடப் பரிணாம வளர்ச்சி அடையல்ல.

கிறிஸ்தவத்தில ஒரு குறைந்தபட்ச சாதாரண “நன்மை” இருக்கு. நன்மைன்னா நம்ம வாழ வைக்கிற ஒரு சூப்பர் பவரை ஏத்துக்கறது. அதுக்காக ஒண்ணுக்கு ஒண்ணு ஃப்ரீன்னு இதுகூடப் பொட்டலமாக் கட்டி வர்ற கொடுமையான பொய்களையும் ஏத்துக்கணுமா? ஆனாக் கிறிஸ்தவப் பழத்தைப் பிரிக்க முடியாது. பழத்தை முழுதாக உண்டால் மட்டுமே பலன் கிடைக்கும், என்ன பீட்டரே அப்படித் தானே? என்ன செய்வது?

இந்தச் சர்வ வல்லமை வாய்ந்த சக்திங்கற தத்துவம் ஓக்கே. ஆனா இதுவும் கிறிஸ்தவம் வெளியில இருந்து சுட்ட பழம்தான். கிறிஸ்தவம் அப்டீன்னு ஒரு சொல்லு உருவாகப் பல யுகங்கள் முன்னால இருந்தே இருக்கற தத்துவம் அது.

காலத்தின் சுவடுகள் கூடத் தொட முடியாத தொன்மை வாய்ந்த வேதங்கள் இந்தச் சக்தியைப் பிரம்மம் என்று நிறுவுகின்றன. சத்-சித்-ஆனந்தம் என்று நிரந்தர இன்பத்தை அவை முன் வைக்கின்றன. இந்த ஆனந்தம் நிரம்பி வழிபவர்கள் நாம். நிரம்பி வழிபவையே அனைத்தும்! பெயர்கள், வடிவங்கள் மட்டுமே நிரந்தரமல்ல, வேறுவேறு. நிரந்தர நரகத்தின் பொசுங்கல் நாத்தத்துக்கும், பூமியிலேயே நிரம்பி வழியும் ஆனந்தத்துக்கும் தான் எவ்வளவு வேறுபாடு.

இந்தப் பிரம்மம்ங்கற நித்திய ஆனந்தத் தத்துவத்தச் சிதைச்சு ஒரு நித்தியப் பழிவாங்கும் கிறிஸ்தவக் கடவுளா ஆக்கி விட்டுட்டானுங்க. பிரம்மம் தானாகவும் தான் உருவாக்கியவற்றில் ஊடுருவியும் இருக்கிறது. ஆனால் கிறிஸ்தவக் கடவுள், தான் உருவாக்கியவற்றில் இருந்து தீட்டுப் படாம இருக்கணும்ணு எட்டடி தூர நிக்காரு. தன் புள்ள ஏசுவ ஏத்துக்கிட்டாச் சொர்க்கம், இல்லன்னா முறுகலா ரோஸ்ட்டிங் தான்.

இப்பச் சொல்லுங்க, எது உண்மைக்கு நெருக்கமானது, மனுசனுக்கு நன்மையானது: ஆனந்தப் பிரம்மமா, அகண்ட நரக நெருப்பா?

‘பிரபஞ்சமே மகிழ்ந்திருக்கட்டும், மேலான உண்மைகளை எங்களுக்குக் காட்டவும், இருளில் இருந்து ஒளியை நோக்கி எங்களை அழைத்துச் செல்வாய்’, போன்ற பிரார்த்தனைகள் சனாதன இந்து தர்மத்தில் இருப்பதில் ஆச்சர்யம்தான் என்ன.

இதுக்கு நேர் எதிராக் கிறிஸ்தவம் தங்களோட கிளப்புக்கு நைச்சியமா MLM-ல மெம்பர்ஷிப்பத் தலைல கட்டுது.

இந்தக் கருமத்தை எல்லாம் பாத்துட்டுத்தான் கிறிஸ்தவச்சியாப் பொறந்தாலும் சச்சிதானந்தமே உண்மைங்கறேன்.

ஹாங், இந்துக்கள் மதம் மாத்த மாட்டாங்க, ஆபிரகாமியர்களப் போல வெத்துக் கும்பலாப் பெருகுறதுல நம்பிக்கை இல்லாதவங்க. இந்த ஆபிரகாமியர்கள் மட்டும் இதே இந்து உணர்வோட இருந்துட்டா, ‘சொர்க்கம் பூமியிலயே அமைந்து விடும்’.

(கள்ளப்பிரான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).

One Reply to “கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ள ஏதாவது காரணம் இருக்க முடியுமா? – மரியா வர்த்”

 1. ஏசு கிறிஸ்து ஒரு கற்பனை! அப்படி ஒருவர் இல்லை! இல்லவே இல்லை!
  -ஜோசப் இடமருகு

  நான் ஜோசப் இடமருகு பேசுகிறேன். இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவரும். உலக நாத்திக சங்கத்தின் துணைத் தலைவருமான ஜோசப் இடமருகுதான் பேசுகிறேன்.1934 செப்டம்பர் 7ஆம் தேதி கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் பிறந்தேன்.

  இளமைக்காலத்தில் கிறித்துவைத் தெய்வமாக நம்பி. அம்மத நூல்கள் அனைத்தையும் தீவிரமாகப் படித்தேன். வயது வளர்ந்தது, எனது பகுத்தறிவு வலிமை பெற்றது. விமர்சன கண்ணோட்டத்தோடு மூடநம்பிக்கையை ஓரம்கட்டி வைத்துவிட்டு, பைபிளைப் படிக்கத் தொடங்கிய பிறகுதான் அதில் உள்ள குறைபாடுகள் தெரியவந்தன.

  19ஆவது வயதில் எனது ஆராய்ச்சிப்படி கிறித்து ஒரு மனிதனாக வேண்டுமானால் இருக்கலாம் நிச்சயம் கடவுளாக இருக்க வாய்ப்பில்லை என்று எழுதினேன்.இது கிறித்துவர்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியது.நான் அஞ்சவில்லை. என்னைக் கிறித்துவ மதத்திலிருந்து நீக்கினர். நான் மகிழ்ச்சியடைந்தேன்.

  அதன்பிறகுதான் எனது ஆராய்ச்சி தீவிரமானது. ஏசுவினுடைய வாழ்க்கையில் நேரடித் தொடர்புடைய இடங்களை நேரில் சென்று காணவேண்டும் என்ற ஆசை பிறந்தது.

  பாலஸ்தீனத்திற்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சிகள் கிறித்துவம் என்பது ஒரு ஏமாற்று வேலை என்பதை எனக்குத் தெளிவாக எடுத்துக்காட்டியது. உதாரணமாக ஏசு சுமந்த சிலுவையின் துண்டுகள் என்று மரத்துண்டுகளை விற்றுக் கொண்டிருந்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரே ஒரு சிலுவையின் துண்டுகளை விற்றுக் கொண்டிருக்கிறீர்களே, அது இன்னும் விற்றுத் தீரவில்லையா? அது முழுமையாக விற்றுத் தீருவதற்கு இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும்? என்று வினவினேன்.

  “தங்கள் பிழைப்பில் மண்ணைப்போட இந்தியாவில் இருந்து ஒருவன் வந்துவிட்டான்” எனக்கருதி என்னைச் சூழ்ந்து கொண்டு கிறித்துவர்கள் தாக்க முற்பட்டனர்.வந்த இடத்தில் அறிவு பூர்வமாகப் பேசி வம்பில் மாட்டிக் கொண்டு விட்டோமோ? என்று ஒரு கனம் சிந்தித்து அமைதியானேன்.

  நூறுடாலரும் இருநூறு டாலரும் கொடுத்து அதனைச் சிலர் வாங்கிக்கொண்டு போன போதுதான் எனக்குத் தெரிந்து, கிறித்துவம் முட்டாள்களையும் மூடநம்பிக்கையாளர்களையும் நம்பித்தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறதென்று! கேரளத்தில் தாமஸின் மண்டை ஓடு இதுதான் என்று ஆறு ஏழு இடங்களில் வைத்து வணங்குவதைப் பார்த்துள்ளேன். கிறித்துவ மூடத்தனம் உலகம் முழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.

  ஏசுவைச் சிலுவையில் அறைந்த கல்வாரி மலை கல்லும், முள்ளும், பாறைகளும் நிறைந்த மாபெரும் மலை என்று கிறித்துவ பாதிரிமார்கள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு வளர்ந்த எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. சுமார் 15அடி உயரத்திற்குமேல் இல்லாத ஒரு மேடை. அதுவும் ஒரு ஜெப ஆலயத்திற்கு உள்ளேயே இருக்கிறது. இதனைத்தான் அவர்கள் மாபெரும் கல்வாரி மலை என்று கதையளந்து கொண்டிருந்தனர்.

  எவ்வளவு தூரம் நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள் இந்தப் பாதிரிகள் என்று எண்ணிப் பார்த்தேன். எனக்கு கோபம் கோபமாக வந்தது. ஏசுவின் வாழ்க்கையில் நடந்ததாகப் பாதிரியார்கள் கூறும் சமபவங்கள், நடந்த இடங்கள் எவை எவை என்று தேடித்தேடிச் சென்று விசாரித்தேன். அவர்கள் காட்டிய இடங்களும் சொன்ன கதைகளும் கொஞ்சம் கூட அறிவிக்குப் பொறுந்துவதாக இல்லை.

  எதையாவது சொல்லி பணத்தைப் பிடுங்குவதிலேயே குறியாக இருந்த அங்குள்ள பாதிரியார்களின் பணத்தாசை என்னை மிகவும் ஆச்சிரியப்பட வைத்தது.

  கிறித்துவப் பாதிரியார்களை விட்டுவிட்டுச் சாதாரண மனிதர்களிடம் சென்று பேசினேன். அவர்களில் பலர் பாதிரியார்களின் ஒழுக்கக்குறைவுகளைப் பற்றி கதைகதையாகக் கூறினர். உள்ளூர் மக்களுக்குக் கிறித்துவத்தின் மீது நம்பிக்கையோ ஈடுபாடோ அவ்வளவாக இல்லை என்பதை உணர்ந்தேன். அவர்களில் பலர் ஏசுவின் கதையை உண்மை என்று ஏற்க மறுக்கின்றனர்.

  உள்ளூரில் சலித்துப் போன சரக்கைப் “புதியது” எனக் கூறி மற்ற நாடுகளில் விற்பனைச் செய்ய கிறித்துவம் முயலுவதை அறிந்தேன். உள்ளூர் மக்களே ஒப்புக் கொள்ள மறுக்கும் ஒரு கதை எப்படி உண்மையாக இருக்கும் என்று என் மனம்

  சந்தேகம் கொண்டது.அதன் விளைவாக விரிவான ஆராய்ச்சியில் இறங்கினேன்.கிறித்துவம் தோன்றுவதற்கு முன்பிருந்தே உலகில் நிலவிவரும் பழம்பெரும் மதங்கள் பலவற்றின் நூல்களைத் தேடிப்பிடித்துப் படித்தேன். ஒரு உண்மை விளங்கியது.

  ஏசு கிறிஸ்து குறித்து கூறப்படும் செய்திகள் அனைத்தும் கற்பனையானவை. அப்படி ஒருவர் பிறக்கவே இல்லை. உலகை மதரீதியாக ஆதிக்கம் செய்ய நினைத்த ஒரு கூட்டம் இந்துமதம் மற்றும் புத்தமதம் ஆகியவற்றிலிருந்து திருடப்பட்ட கருத்துகளைக் கொண்டு கற்பனையாய் படைத்து உலவவிட்ட ஒரு கதாபாத்திரம்தான் ஏசுகிறிஸ்து என்பது மிகத் தெளிவாக தெரிந்தது. அதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கே தருகிறேன்.

  கிருஷ்ணனின் கதையிலிருந்துதான் கிறித்துவின் கதை தயாரிக்கப்பட்டுள்ளது.

  கிருஷ்ணனிலிருந்து தோன்றிய கிறிஸ்து

  கிருஷ்ணன் மகாபாரதக் கதையில் ஒரு பாத்திரமாக வரக்கூடியவர். மகாபாரதம் நடந்து முடிந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கிருஷ்ணர் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.இயேசு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எனவே, கிருஷ்ணனின் கதையிலிருந்து கிறித்துவின் கதை வந்தது என்பதை உறுதியாக நம்பலாம். இதோ அவற்றிற்கான ஆதாரங்கள்.

  கிருஷ்ணன் யது வம்சத்தில் பிறந்தார். இதை கொஞ்சம் மாற்றி கிறிஸ்து யூத வம்சத்தில் பிறந்தார் என்றனர்.

  2. கிருஷ்ணன் பிறப்பதற்கு முன்பே அசரீரி அறிவித்தது.அதைக் கொஞ்சம் கூட மாற்றாமல் கிறிஸ்துவின் வருகையை அசரீரி அறிவித்தது என்று எழுதி வைத்தார்கள்.

  கிருஷ்ணன் அரச குடும்பத்தில் பிறந்தார். அதனையே அச்சு மாறாமல் தாவீது என்னும் அரச வம்சத்தில் பிறந்ததாகக் கூறிக் கொண்டனர்.
  தேவகி கணவனுடன் சேராமலேயே கர்ப்பம் தரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. மேரியும் அப்படித்தான் கர்ப்பம் தரித்தாள் என்று கதை எழுதினர்.

  கிருஷ்ணன் பிறக்கும் போது நட்சத்திரம் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. ஏசு பிறந்தபோதும் நட்சத்திரம் தோன்றியதாக தங்கள் கதையைப் பலப்படுத்தினர்.

  கிருஷ்ணன் பிறக்கும் போது தேவலோகம் கொண்டாடியது. ஏசு பிறந்தபோதும் அப்படித்தான் தேவலோகம் மகிழ்ச்சியுற்றது என்று எழுதிவைத்தனர்.

  குழந்தையாகிய கிருஷ்ணனை மாட்டு இடையர்கள் கண்டுகளித்ததாகப் புரயணங்களில் வருகிறது. அதனைக் கொஞ்சம் மாற்றி ஏசுவை ஆட்டு இடையர்கள் தரிசித்தனர் என்று கூறிக் கொண்டனர்.

  குழந்தை கிருஷ்ணனை நாரதர் உள்ளிட்ட முனிவர்கள் கண்டு வணங்கியதாகப் புராணம் கூறுகிறது. குழந்தை ஏசுவையும் கிழக்கிலிருந்து வந்த அறிஞர்கள் கண்டு வணங்கியதாகப் பைபிளில் எழுதி வைத்தனர்.

  கிருஷ்ணனால் தனக்கு ஆபத்து என்று கம்சன் கருதினான், அதையே கொஞ்சம் மாற்றி கிறித்துவால் தனக்கு ஆபத்து என்று “ஏரோது” மன்னன் கருதியதாக எழுதிக் கொண்டனர்.
  கிருஷ்ணனை யமுனை நதிக்கு அப்பால் கொண்டுபோய் ஆயர்பாடியில் தலைமறைவாக வளர்த்து வந்தனர். அதனைப் பின்பற்றி ஏசுவை எகிப்துக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வளர்த்து வந்ததாக கதைப்படுத்தினர்.

  கிருஷ்ணனின் அவதாரத்தை அறிந்து இரண்டு வயதிற்குட்பட்ட எல்லா குழந்தைகளையும் கொல்வதற்குக் கம்சன் உத்தரவிட்டான் இதே போன்றதொரு உத்தரவை ஏசுவைத் தேடிய ஏரோது மன்னனும் இட்டதாகச் சொல்லி வைத்தனர்.
  கிருஷ்ணனுடைய தலமாகப் போற்றப்படுவது மதுரா. ஏசு வளர்க்கப்பட்டதாகக் கிறித்துவர்கள் கூறிக்கொள்ளும் ஊர் மதூரியா.

  கிருஷ்ணனுடைய தாயார் தேவகிக்கு மாயாதேவி என்ற ஒரு பெயரும் உண்டு. ஏசுவினுடைய தாயார் மேரி என்றனர். மாயா-மேரி பெயர் ஒற்றுமை காண்க.

  கிருஷ்ணனுடைய தாயாருக்கு நந்தரின் மனைவி தோழி. மேரிக்கும் ஒரு தோழியைத் தயார் செய்தனர் கிறித்துவர்கள்.

  கிருஷ்ணனுக்குப் பலராமன் அண்ணனாக இருந்ததைப் பார்த்து ஏசுவுக்கு அண்ணனாக யோவானைப் படைத்துக் கொண்டனர்.
  கிருஷ்ணன் வாதத்தில் அறிஞர்களை வென்றதை அறிந்து ஏசுவும் மதகுருமார்களை வென்றதாக எழுதிவைத்தனர்.

  கிருஷ்ணன் காட்டிற்குச் சென்று தவம் இருந்ததைப் படித்துவிட்டு ஏசு பாலைவனத்திற்குச் சென்று தவம் இருந்ததாக எழுதினர்.

  இந்து மதத்தில் காணப்படும் மும்மூர்த்திகளில் இரண்டாவது மூர்த்தி விஷ்ணு. அதனை அப்படியே பின்பற்றி கிறித்துவத்தின் மும்மூர்த்தி தத்துவத்தில் கிறித்துவை இரண்டாவதாக வைத்தனர்.
  தர்மத்தை நிலைநாட்டி நல்லோர்களைப் பாதுகாக்க ஏற்பட்டது கிருஷ்ணாவதாரம். இதனை அப்படியே பின்பற்றி ஏசுவும் அதற்காகத்தான் தோன்றினார் என்று எழுதிவைக்கப் பட்டுள்ளது.
  கிருஷ்ணன் காளிங்கனான நாகத்தை அழித்ததாக வரலாறு. ஏசுவும் ஒரு நாகத்தை அழித்ததாகப் பைபிளில் எழுதிவைத்தனர்.

  கிருஷ்ணனை “பரமாத்மா” என்கிறது இந்துமதம். அதனை அப்படியே ஏற்று கிறிஸ்துவை பாவமற்றவர் என்கிறது கிறித்துவம்.
  கிருஷ்ணன் நிறைவான மனிதனாகவும் தெய்வமாகவும் திகழழ்ந்தான் என்கிறது புராணம். ஏசுவும் அப்படித்தான் இருந்தார் என்று எழுதி வைக்கப்பட்டது.

  கிருஷ்ணன் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் என்பதைப் படித்துவிட்டு ஏசுவும் அவற்றைச் செய்ததாக எழுதி வைத்தனர்.
  கிருஷ்ணன் முதன்முதலில் குஷ்டரோகியைக் குணப்படுத்தினார் என்கிறது இந்துமதம். ஏசுவும் அப்படித்தான் என்று எழுதிக் கொண்டது கிறித்துவ மதம்.

  25.கிருஷ்ணன் இறந்தவர்களை உயிர் பெறச் செய்தார் என்று இந்துமதம் கூறுகிறது.ஏசுவும் அவ்வாறே செய்ததாக கிறித்துவர்கள் எழுதிவைத்தனர்.

  மரத்தின் மேல் படுத்திருந்த கிருஷ்ணனை வேடன் அம்பு எய்து கொன்றான் என்பது வரலாறு. இதனைப் பார்த்து மரச்சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த கிறித்துவை ஒரு வீரன் ஈட்டியால் குத்தினான் என்கிறது கிறித்துவம்.

  கிருஷ்ணன் முக்தி பெற்றபோது துர்நிமித்தங்கள் உண்டாயின. சந்திரனில் கரியவட்டம் காணப்பட்டது. சூரியன் இருண்டு போனது. வானிலிருந்து நெருப்பும் சாம்பலும் மழைபோல் பொழிந்தது என்கிறது இந்துமதம்.

  இதனை பின்பற்றி ஏசு இறந்த போதும் நாடு இருளில் மூழ்கியது. தேவாலயத்தின் திரைச்சீலை கிழிந்து தொங்கியது என்றும் எழுதி வைத்தனர்.

  28.கிருஷ்ணனுடைய மரணத்திற்குப்பின் யாதவ வம்சம் அழிவுற்றது என்கிறது

  இந்துமதம்.கிறித்துவின் காலத்திற்கு பின் யூத வம்சமும் அழிவைத் தான் சந்தித்தது என்று எழுதிவைத்தார்கள் கிறித்துவர்கள்.

  கிருஷ்ணன் போர்க்களத்தில் உபதேசம் செய்தார். கொஞ்சம் மாற்றி மலைப்பிரதேசத்தில் ஏசு உபதேசம் செய்தார் என்று எழுதி வைத்தனர் கிறித்துவர்கள்.

  பதினாறு வயதான போது தனது போதனைகளை உலகெங்கும் பரப்புமாறு சீடர்களை அனுப்புகிறார் கிருஷ்ணன். இதனை அப்படியே பின்பற்றி ஏசுவும் தனது சீடர்களை அனுப்பியதாக எழுதி வைத்தனர் கிறித்துவர்கள்.

  இவ்வாறு கிருஷ்ணரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை யெல்லாம் இந்தியாவிலிருந்து வாணிகத்திற்காக வந்தவர்களிடம் தெளிவாகக் கேட்டு தெரிந்து கொண்டு அதனையே கொஞ்சம் கூட்டியும் குறைத்தும் எழுதித் தொகுத்தது தான் கிறித்துவின் கதை!

  பௌத்தத்தை தழுவிய பைபிள்

  சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய புத்த, சமண நூல்கள் பல உன்னதமான கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கின. அவற்றை அப்படியே அபகரித்துக் கொண்டுதான் கிறித்துவம் வளர்ந்துள்ளது.

  ஏசு போதித்ததாகக் கிறித்துவர்கள் கூறும் பல கருத்துகளின் மூலத்தை புத்தரிடம் காணலாம். “லலிதாவிஸ்தாரா” என்ற சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள புத்தமத நூலில் உள்ள கருத்துகளைத்தான் பைபிள் கருத்துகள் என்று காப்பியடித்து எழுதிக்கொண்டுள்ளனர் கிறித்துவர்கள்.

  “என்னை நம்பி விசுவாசம் செய்வோர் ஆனந்தம் அடைவர் ” என்பது தொடங்கி “அழிவை நேக்கிச் செல்லும் ஆடுகளைத் திசைதிருப்பும் ஞபானமுள்ள மேய்ப்பன் நான்” என்பதுவரை அனைத்தும் லலிதாவிஸ்தாராவில் இருந்து திருடப்பட்டவைதான்.

  புத்தர் தனது சீடர்களுக்கு அனைத்தையும் துறந்துவிட்டு வருமாறு அறிவுறுத்தியதைக் காப்பியடித்து ஏசு கூறியதாக எழுதிக் கொண்டனர்.

  “ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு வழி காடட்டினால் இருவருமே குழியில் விழுவர்” என்கிற கருத்து புத்த நூலில் உள்ளது. அதனை அப்படியே கிறித்துவர்கள் களவாடிக் கொண்டு பைபிளில் எழுதிக் வைத்தனர்.

  இப்படி பைபிளில் உள்ள எல்லா வசனங்களுக்கும் புத்தமத நூல்களில் இருந்து ஆதாரம் காட்ட முடியும். அதனை விரிவாகக் கூறிப் படிப்போரைச் சலிப்படைய செய்திட நான் விரும்பவில்லை. ஆனால் வலுவான ஆதாரமாக விளங்கும் ஒரு கதையைப் பற்றி நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.

  அந்தக்கதை இதோ:

  புத்தகுரு ஒருவர் பொதுமக்களிடம் காணிக்கை கோருகிறார். பணக்காரர்கள் அள்ளிக்கொடுத்தனர். ஒருவிதவை இரண்டு நாணயங்களை மட்டும் கொடுத்தார்.அப்போது குரு “எல்லோரும் தனக்குத் தேவையானதை வைத்துக் கொண்டு மீதியைத் தானமாகக் கொடுத்தனர்.ஆனால் இந்த விதவைப் பெண்மனியோ தனக்கென்று எதையுமே வைத்துக் கொள்ளாமல் தன்னிடமிருந்த இரண்டு நாணயங்களையும் கொடுத்து விட்டார். எனவே, இவர் கொடுத்தது தான் மற்றெல்லாவற்றையும் விட மேலானது.” என்று கூறி பாராட்டினார்.

  இந்தக் கதையை அப்படியே திருடி பைபிளில் சேர்த்துவிட்டனர். “புத்தகுரு” என்பதற்குப் பதிலாக “ஏசு” என்று மாற்றி போட்டு எழுதிவைத்துக் கொண்டனர். புத்த நூலில் இந்தக் கதையை படித்துவிட்டு இதே கதையை அச்சுமாறாமல் பைபிளில் படிக்க நேரும் யாவரும் கிறித்துவர்களின் கதைத் திருட்டை எளிதாக அறியலாம்.

  இதையெல்லாம் யார் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் வார்த்தைகளைக்கூட மாற்றாமல் அப்படியே எடுத்துப் போட்டு “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்று உளறிய முட்டாளைப் போல் கிறித்துவர்கள் மாட்டிக் கொண்டனர்.

  டிசம்பர் 25 பிறத்தல், 3ஆம் நாள் உயிர்த்தெழுதல், 12 சீடர்கள்

  டிசம்பர் 25ல் பிறந்தது, 3ஆம் நாள் உயிர்த்தெழுந்தது, 12 சீடர்கள், ஆகிய அனைத்தும் ஏற்கனவே பலநாட்டுக் கதைகளில் உள்ள கற்பனைச் செய்திகள் தான். அதனை அப்படியே களவாடிக் கற்பனைக் கதாபாத்திரமான ஏசுவுக்குப் பொருத்திவிட்டனர்.

  இதோ, கிறித்துவத்திற்கு முன்னாள் உள்ள பழைய கதைகளில் உள்ள ஆதாரங்கள்.

  கிரேக்க தெய்வம் ஹர்குலிஸ் இறந்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக ஒரு கதை உள்ளது.
  எகிப்தின் ஒஸிரிஸ் தெய்வம் டிசம்பர் 25ல் பிறந்து வெள்ளிக் கிழமையில் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததாகவும் ஒரு கதை உண்டு.
  டயோனியஸஸ் என்ற கடவுள் டிசம்பர் 25ல் பிறந்து, துன்பப்பட்டு இறந்து பிறகு மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததாகவும் அவருக்கு 12 சீடர்கள் இருந்ததாகவும் ஒரு கதை காணப்படுகிறது.

  ரோமாபுரியில் மித்ரா என்னும் தெய்வம் ஒரு கன்னியின் வயிற்றில் டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்ததாகவும் அப்போதுஇடையர்கள் சூழ்ந்து இருந்ததாகவும்,அத்தெய்வத்திற்கு 12 சீடர்கள் இருந்ததாகவும்,அத்தெய்வம் சீடர்களிடம் தன்னுடைய மரணத்திற்குப்பிறகுத் தனது உடலைத் தின்று இரத்தத்தைக் குடிக்கும் படியாகக் கூறியதாகவும், கல்லறையிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததாகவும் ஒரு கதை கூறப்படுகிறது. சதையைத் தின்று ரத்தத்தைக் குடிக்கும் தத்துவத்தை இங்கிருந்து தான் கிறித்துவர்கள் களவாடினர்.

  இக்கதைகள் அனைத்திலும், டிசம்பர் 25ஆம் தேதி பிறத்தல், 12 சீடர்கள், மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல் ஆகியன ஒரே மாதிரியாக இருக்கக் காணலாம்.

  கிறித்துவ மதம் தோன்றுவதற்கு முன்பே வழங்கி வந்த தொன்மையான கதைகளைத் திருடி அதை ஏசுவின் சரித்திரம் என போலியாக ஒரு கதையைத் தயாரித்தனர்.

  இப்போது கூட்டிப் பாருங்கள் கணக்கு சரியாக வரும்,

  கிரேக்க,எகிப்து நாடோடி கதைகள்+கிருஷ்ண வரலாறு+பௌத்த தத்துவங்கள் = கிறித்துவும், கிறித்துவ மதமும்

  கிறித்துவும், கிறித்துவ மதமும் கற்பனையாகக் கட்டியமைக்கப் பட்டவை என்பதை ஆய்வு செய்து நீரூபித்தற்காக என்னைக் கிறித்துவ மதத்தை விட்டு வெளியேற்றி விட்டார்கள். அதன் பிறகு தான் பகுத்தறிவு மிக்க மனிதனானேன். என்னை மூடநம்பிக்கையிலிருந்து வெளியேற்றிய கிறித்துவர்களுக்கு நன்றி!

  இப்படிக்கு,
  ஜோசப்_இடமருகு
  இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர்
  (தற்போது) புதுதில்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *