கேள்விக்கென்ன பதில் – புத்தக அறிமுகம் 

கேள்விக்கென்ன பதில்
(கற்பனைக் கேள்விகள் , கற்பனை பதில்கள்)
ஆசிரியர்: B.R.மகாதேவன்
எல்.கே.எம் பதிப்பகம்
விலை ரூ. 300/-

என்னுரை

பொதுவாக தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்றவற்றில் எடுக்கப்படும் பேட்டிகளில் இடதுசாரி, திராவிட இயக்கம், காங்கிரஸ், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவற்றைச் சேர்ந்த பிரபலமென்றால் பூப்போல் கேள்விகள் கேட்பார்கள். வலதுசாரி பிரபலங்கள் என்றால் முள்ளால் குத்திக் கிழிப்பார்கள்.

திரிசூலம் டி.வி. என்ற கற்பனை டி.வி.யின் பேட்டியில் இடதுசாரி, வலதுசாரிகளிடம் கேட்கவேண்டிய உண்மை யான கேள்விகள் கேட்கப்படுகின்றன; அதற்கு அந்தப் பிரபலங்கள் பல்வேறு இடங்களில் சொல்லிய மற்றும் சொல்லியிருக்கக்கூடிய விஷயங்கள் பதிலாகத் தொகுக்கப் பட்டு இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கூடுமானவரை இந்து தர்மம், கிறிஸ்தவம், இஸ்லாம், கம்யூனிஸம், தலித்தியம், போலி திராவிடம், போலி தமிழ் தேசியம், திரை உலகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மற்றும் அவற்றின் அரசியல் குறித்த தெளிவான புரிதலை உருவாக்குவதே நோக்கம். அதனால் பெரும்பாலான பக்கங்களில் அப்படியான உரையாடலே கட்டமைக்கப் பட்டிருக்கிறது. எனினும் சில இடங்களில் கேள்வி-பதில்கள் நாகரிக வரம்புகளை மீறியும் சென்றிருக்கின்றன. அவை சம்பந்தப்பட்ட பிரபலங்களுடைய அராஜகச் செயல்பாடு களின் மெல்லிய எதிர்வினையாகவே இடம்பெற்றுள்ளன.

எனவே, இந்தப் பேட்டிகளினால் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் அல்லது அவர்களுடைய ஆதரவாளர்கள் யாருடைய மனங்களாவது புண்பட்டால், அவர்கள் செய்த செயல்கள், சொல்லியவை எல்லாம் மற்றவர்களையும் இதுபோல் புண்படுத்தியிருக்குமே என்பதைப் புரிந்து கொண்டு, தங்களைத் திருத்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட பிரபலங்கள், இதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆர்வத்துடன் முன்வந்தால் நிச்சயம் அவை அடுத்த பதிப்பில் மகிழ்ச்சியுடன் சேர்த்துக் கொள்ளப்படும், தகுந்த புதிய கேள்விகளுடன். அப்படியான ஓர் உரையாடல் நடக்க வேண்டும் என்பதுதானே அனைவருடைய எதிர்பார்ப்பு.

B.R.மஹாதேவன்

கேள்விகளே முக்கியம் – M.மாரிதாஸ்

கேள்வி பதில்! இவற்றில் பதில்களைவிடக் கேள்விகள் மிக முக்கியமான கருவி என கருதுபவன் நான்.

ஒருவர் எப்படி பதில்கள் கொடுக்கிறார் என்பதைவிட எப்படியான கேள்விகளை ஒருவர் கேட்க விரும்புகிறார் என்பதைவைத்து அந்த நபருடைய ஆரோக்கியமான தேடுதலை நம்மால் அளவிட முடியும் என்ற நம்பிக்கை கொண்டவன் நான். ஆக பதில்களைவிடக் கேள்விகள் முக்கியம்.

அதிலும் குறிப்பாக, பத்திரிகை துறை சார்ந்து இயங்கும் உலகம் கேள்விகளைச் சரியாக, உன்னிப்பாக, தீர்க்கமாக முன்வைப்பது அவசியம் என்பதால் எப்படி எப்படி எல்லாம் கேள்விகள் கேட்கலாம் என்ற தனி ஆய்வே தேவை. ஏனென்றால் அது உண்மையை மக்கள் முன் கொண்டுவர உதவும்.

B.R.மகாதேவன் இந்த புத்தகத்தில் அப்படியான கச்சிதமான கேள்விகளை உருவாக்கி அதற்கான தர்க்கவாதங்களை கற்பனை வடிவில் தலைவர்கள் பதிலாக முன்வைத்திருக்கிறார். இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கேள்விகளுக் கான பதில்களைப் படிக்கும் நபர்களுக்கு சில கோணங் களில் கருத்துகள் மாறலாம். அல்லது பல இடங்களில் பதில்கள் சிறப்பாக தோன்றலாம். ஆனால் B.R.மகாதேவன் எழுப்பியுள்ள கேள்விகள் ஆக முக்கியமானவை; நுணுக்கமானவை என்பதை நம்மால் மறுக்கவே முடியாது.

கேள்விகள் எப்படிக் கட்டமைக்கப்பட வேண்டும் என்ற தேடல் இருந்தால், முக்கியமாக புலனாய்வுக் கட்டுரைகள் எழுதுபவர்கள் அல்லது பத்திரிகை துறை சார் இளைஞர்கள் மற்றும் படைப்புலகம் சார்ந்த இளைஞர் களுக்கு இந்த புத்தகம் ஒரு நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும். அரசியல் தாண்டி பொதுவாழ்வில் ஒரு விவகாரத்தை ஆய்வு செய்ய எப்படியான கேள்விகளுக்கு நமக்கு பதில் தேவை என்ற தெளிவையும் இந்த புத்தகம் கொடுக்க வல்லது.

எப்படியான மனிதர்களிடம் எப்படியான பதில்கள் உண்டு; அதை உடைத்து அதையும் தாண்டிய உண்மையைத் தோண்டியெடுக்க உங்கள் கேள்விகளை எப்படிக் கருவியாகப் பயன்படுத்த முடியும் என்பதை இந்த புத்தகம் உங்களுக்கு நன்கு அறிமுகம் செய்யும்.

‘இந்த உலகத்தை, நம் சுற்றத்தை நாம் தவறாகப் புரிந்து கொள்ளக் காரணமாக அமைவது நாம் அவசியமான கேள்விகளை எழுப்ப தவறுவதே’. அந்தவகையில் கேள்விகளை எழுப்ப கற்றுக் கொடுக்கும் புத்தகமாக இது வந்திருப்பதால் இது முக்கியமானது. தனித்துவமானது. அதனாலேயே இந்த புத்தகம் நிச்சயம் வாசிக்கப்பட வேண்டியது.

தற்போதைய சமூகத்தில் ஓர் ஆரோக்கியமான பங்களிப்பாக இதை நான் உணர்கிறேன். அதற்காக நூல் ஆசிரியர் B.R.மகாதேவனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன்.

சுதந்தர சிந்தனைக் குரல் – A.அஸ்வத்தாமன், மாநிலச் செயலாளர் – சட்டப்பிரிவு, பாஜக, தமிழகம்.

ப.சிதம்பரம், கமல்ஹாசன், ஜவஹிருல்லா, திரு அமித்ஷா, நடிகர் சூர்யா, நல்லகண்ணு, திருமாவளவன், சீமான், திராவிட பிரசன்னா என பலரிடம் கற்பனையாக எடுக்கப் பட்ட பேட்டிகளின் தொகுப்பு இந்தப் புத்தகம்.

இந்திய சித்தாந்தம் தொடர்பாக பல முக்கியமான புத்தகங்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருப்பவர் என்பதால் B.R.மகாதேவனின் புத்தகம் தொடர்பான ஆர்வமும் எதிர்பார்ப்பும் நமக்கு அதிகமாகவே இருப்பது இயல்புதான். ஆனால், இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நபர்களுடன் எதற்காகக் கற்பனைப் பேட்டி எடுக்க வேண்டும் என்ற சந்தேகத்துடன்தான் இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.

இந்திய சித்தாந்தவாதிகள் ஊடகங்களால் கடித்துக் குதறப்படுவது வாடிக்கை. அதேநேரம் அந்நிய நாட்டுச் சித்தாந்தங்களைப் பேசுபவர்கள் மீது மென்மையான அணுகுமுறையை ஊடகங்களும் சமூக ஆர்வலர்கள் என்று தங்களைக் காட்டிக்கொள்பவர்களும் கடைப்பிடிக்கிறார்கள். இந்த ஒருதலைப்பட்சமான போக்கின் மீதான ஆதங்கத்துடன்தான் இந்தப் புத்தகத்தை நூல் ஆசிரியர் எழுதவே ஆரம்பிக்கிறார் (பொதுவாகப் பலரும் வலதுசாரி, இடதுசாரி என்று இந்தப் பிரிவினரை அடையாளப்படுத்துவதுண்டு. அது எனக்கு ஏற்புடையது அல்ல).

இந்த உலகம் இன்று சுதந்தர சிந்தனையை நோக்கி நகர்ந்தாகவேண்டும். அனைவரும் அதற்காகக் குரல் கொடுத்தாகவேண்டும். நாம் என்ன யோசிக்கவேண்டும்; என்ன பேசவேண்டும் என்பதை எங்கிருந்தோ யாரோ சிலரைக்கொண்ட ஒரு லாபி முடிவுசெய்வது என்பது நம்முடைய இன்றைய காலகட்ட, பகுத்தறிவு மிகுந்த மனித குலத்துக்கு அழகல்ல. நமக்கு அடுத்ததாக வரவிருக்கிற தலைமுறைக்கு சொந்தமாகச் சிந்திக்கும் திறன் இருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக நம் முன்னே வந்து நிற்கிறது. சுதந்தர சிந்தனைக் குரலைப் பலப்படுத்த வேண்டியது இன்றைக்கு மிகவும் அவசியம்.

அந்தவகையில் நூல் ஆசிரியர், இங்கு உருவாக்கப்பட்டிருக்கிற ஊடக லாபி செய்யத் தவறிய விஷயங்களை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் இந்தப் புத்தகத்தில் செய்துகாட்டியிருக்கிறார்.

ஊடக லாபியைக் கைக்குள் வைத்துக்கொண்டு, தங்களுக்கு எதிராக எந்தக் கேள்வியும் எழுப்பப்படாது என்ற அசட்டு தைரியத்தில், திமிரில் அறமற்ற அரசியலைச் செய்துவருகிற பல அரசியல்வாதிகளைக் கற்பனைப் பேட்டி வடிவிலான இந்தப் புத்தகத்தில் நீதிக்கூண்டில் நிறுத்தி அவர்களுடைய மனசாட்சியை உலுக்கியிருக்கிறார் நூல் ஆசிரியர்.

திராவிட, கம்யூனிஸ, தலித்திய, இஸ்லாமிய, கிறிஸ்தவ அதிகாரமையங்களின் பிரதிநிதிகளைக் கட்டம் கட்டிக் கேள்விகள் கேட்பதுதான் புத்தகத்தின் நோக்கம் என்றாலும் எழுத்தாளர், தனது மேதைமையைக் காட்டும் நோக்கில் மட்டும் இந்தக் கேள்விகளைக் கேட்கவில்லை. பேட்டி அளிப்பவர்கள் கடினமான இந்தக் கேள்விகளுக்கு என்ன விதமான அறிவுபூர்வமான பதில்களையும் சமாளிப்புகளையும் தந்திருப்பார்களோ அவற்றை அப்படியே துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன்னை மட்டும் பெரிய அறிவாளிபோல் காட்டிக்கொண்டு, பேட்டி கொடுப்பவர்களை மட்டம் தட்டும் தொனி இந்தக் கற்பனைப் பேட்டியில் சிறிதும் இல்லை. கேள்விகளில் வெளிப்படும் அறிவுக்கூர்மை கற்பனை பதில்களிலும் வெளிப்படுகின்றன. அது இந்தப் பேட்டிகளை ஒருவகையில் ஆரோக்கியமான உரையாடலாக மாற்றியிருக்கிறது. எழுத்தாளரின் சிந்தனைத் திறமைக்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

அதோடு வரலாற்று நிகழ்வுகளைக் கோடிட்டுக்காட்டும் டைரியாகவும் இந்தப் புத்தகம் திகழ்கிறது. பிரிவினைக் கால வன்முறைகள், ரஷ்ய சீன அரசுகளின் இஸ்லாமியர் மீதான அராஜகங்கள், கீழ்வெண்மணி, மரீஜ்ஜபி படுகொலைகள், கோத்ரா படுகொலைகள், இலங்கைப் பிரச்னை, ராஜாஜி கொண்டுவந்த கல்வித்திட்டம், புதிய கல்விக்கொள்கை, சீன வைரஸ் பேரிடர், கடந்த கால பாரதத்தின் பெருமைகள், கடந்த சில வருடங்களாக நம் தேசத்தில் முன்னெடுக்கப் பட்டுவரும் நிர்வாக சீர்திருத்தங்கள், பொருளாதார நடவடிக்கைகள் என பல்வேறு நிகழ்வுகள் விரிவாகவும் சுருக்கமாகவும் நூல் முழுவதும் இடம்பெற்றிருக்கின்றன.

பலரும் பேச மறந்த, மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட பல வரலாற்று விஷயங்களைத் துணிச்சலாக வெளிப்படுத்தி இருக்கிறார். இந்திய சித்தாந்தப் பாதையில் எழுதுகிற, பயணிக்கிற தற்கால ஆளுமைகளில் நூல் ஆசிரியரின் ஆளுமை நிஜமாகவே நமக்கு ஆச்சரியமூட்டுவதாக இருக்கிறது.

வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடும்போது நூல் ஆசிரியரின் விமர்சனமும் கூடவே இடம்பெறுகின்றன. அவை அந்த நிகழ்வுகள் மீது நமக்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. பிரிவினைக்கால வன்முறைகளின்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகமான நாக்பூரில் ஒரு இஸ்லாமியர் மீது சிறு சிராய்ப்புகூட ஏற்படுத்தப்படவில்லை என்ற உண்மையை கவனப்படுத்துகிறார்.

ஊடகங்கள் உண்மைகளைச் சொல்லத் தயங்கும் இன்றைய கொரானா பேரிடரை சீன வைரஸ் பேரிடர் என்று துணிந்து அடையாளப்படுத்துகிறார்.

திரு நரசிம்மராவ் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் அரசு அவருக்குச் செய்த துரோகங்களை விரிவாகப் பட்டியலிட்டிருக்கிறார். இப்படிப் பல வரலாற்று நிகழ்வுகளும் அவை மீதான நூல் ஆசிரியரின் பார்வையும் இந்தப் புத்தகத்தில் அழுத்தமாக இடம்பெற்றிருக்கின்றன.

நடிகர் கமல்ஹாசனுடனான கற்பனைப் பேட்டியில் அவருடைய படங்களில் பல, எந்தெந்த ஹாலிவுட் திரைப்படங்களின் காப்பி என்பதை ஆதாரபூர்வமாக விவரித்திருக்கிறார். அதைப் பார்க்கும்போது அரசியலையும் தாண்டி நூல் ஆசிரியருக்கு பிற துறைகளிலும் இருக்கும் விசாலமான அறிவு வெளிப்படுகிறது.

அந்நிய சித்தாந்தவாதிகளிடம் கேட்கும் கேள்விகளில் எப்படி நிமிர்ந்தபார்வை வெளிப்படுகிறதோ அது இந்துத்துவவாதியிடம் கேட்கும் கேள்விகளிலும் முழுமையாக வெளிப்படுகிறது.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், தமிழக ஊடகத்துறை எப்படி இருந்திருக்கவேண்டும் என்பதற்கான மிகச் சிறந்த முன்னுதாரணமாக இந்த நூல் விளங்குகிறது.

கேள்விகளால் ஒரு வேள்வி – வேலூர் இப்ராஹிம், தேசிய சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர்,பாஜக, தமிழகம்.

அன்புச் சகோதரர் மரியாதைக்குரிய திரு.மகாதேவன் ‘கேள்விக்கென்ன பதில்’ என்ற தலைப்பில் கற்பனைப் பேட்டி வடிவிலான புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

காந்தியவாதியும் ஒப்பற்ற வரலாற்றாய்வாளருமான திரு தரம்பால் அவர்களின் ‘அழகிய மரம்- 18-ம் நூற்றாண்டு இந்தியாவில் பாரம்பரியக் கல்வி’ உள்ளிட்ட புத்தகங்களை தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார். வேத கால பாரதம், தென்னாபிரிக்காவில் சத்யாகிரகம், பாகிஸ்தான்-இந்தியப் பிரிவினை உள்ளிட்ட பல முக்கியமான புத்தகங்களை மொழிபெயர்த்தவர். பாரதம்-நேற்று இன்று நாளை, இந்துமதம்-நேற்று இன்று நாளை, மறைக்கப்பட்ட பாரதம், தமிழர்கள் இந்துக்களா? முதலான நூல்களை எழுதியவர்.

பாரத தேசத்தின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் மீட்டுருவாக்கம் செய்வதாகவும் இந்துத்துவா என்ற உயரிய சித்தாந்தத்தை எளிய வகையில் அனைவருக்கும் அறியத் தரும் வகையிலும் அவருடைய புத்தகங்கள் திகழக் கூடியவை. அதேநேரத்தில் தமிழகத்தில் கடவுள் மறுப்பு என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், நபர்களுக்கு சாட்டையடி கொடுக்கும்விதமாக பல்வேறு ஆதாரங்களை முன்வைத்தும் எழுதிவருகிறார். அந்த வரிசயில் இன்னொரு அருமையான புத்தகமாக ‘கேள்விக்கென்ன பதில்’ என்ற இந்தப் புத்தகம் உருவாகியுள்ளது.

யாரும் இதுவரை கேட்டிருக்காத கேள்விகளையும் அதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் என்ன பதில்களைச் சொல்லியிருக்கக்கூடும் என்ற கோணத்தில் சிந்தித்துத் தொகுத்தும் இந்த நூலை எழுதியிருக்கிறார்.

பாரத தேசத்தில் இருக்கும் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உயரிய எண்ணமும் உலகின் குருவாக பாரதத்தை ஆக்கவேண்டும் என்ற விருப்பமும் இந்த நூல் ஆசிரியருக்கு இருப்பது இந்தப் புத்தகத்தில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் மதத்தைப் பயன்படுத்தி, சிறுபான்மையினரை, குறிப்பாக இஸ்லாமியர்களை வெறும் வாக்குவங்கியாகக் கருதிச் செயல்படும் ஜவாஹிருல்லா போன்றவர்கள் இஸ்லாமிய மக்கள் மத்தியில் என்னவிதமான பிரிவினைவாத சிந்தனைகளை விதைக்கிறார்கள்; பொது நீரோட்டத்தில் இருந்து இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தும் தேச விரோதச் செயல்களை எப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பதையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சூர்யா, கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் தமது நடிப்புத் திறமையின் மூலம் திரைத்துறையில் வெற்றிகரமாகத் திகழ்கிறார்கள். ஆனால், அரசியலில் தன் கருத்தைச் சொல்கிறேன் என்ற அடிப்படையில் ஒருதலைப்பட்சமாக, வலதுசாரிகளுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து வெளிப்படுத்திவருகிறார்கள். தேசிய சிந்தனை, ஆன்மிகம், அனைத்து மக்களையும் சமமாக மதிக்கும் இந்துத்துவா போன்ற கொள்கைகளை கேலிப்பொருளாக அல்லது இவையெல்லாம் வன்மம் நிறைந்தது என்பதுபோல் விமர்சனம் செய்கிறார்கள். அதன் மூலம் தங்களை ஏதோ பெரிய பகுத்தறிவு சிந்தனை கொண்டவர்களாக, புரட்சியாளர்களாகக் காட்டிக்கொண்டுவருகிறார்கள்.

இந்தப் புத்தகத்தில் இவர்களுடைய பேட்டிகளாக இடம்பெறுபவை இந்த விஷயம் சார்ந்த அருமையான வாதப் பிரதிவாதமாக வெளிப்பட்டிருக்கின்றன.

இந்த நடிகர்களின் திரையுலகப் பங்களிப்புகள் பாராட்டுக்கு உரியவைதான். ஆனால், சமூக அக்கறையுடன் பேசுவதாகச் சொல்லிக்கொண்டு இவர்கள் முன்வைக்கும் கருத்துகள் சமூகத்தில், குறிப்பாக அடித்தட்டு மக்களிடையே, மத்திய அரசுக்கு எதிரான வன்மத்தைத் தூண்டுவதாக இருக்கின்றன. இதை நூல் ஆசிரியர் தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கிறார்.

திமுக ஆதரவு நிலைப்பாடு கொண்ட பிரசன்னாவாகட்டும் சீமான் போன்ற நகைச்சுவைப் பேச்சாளராக இருக்கட்டும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி பாரதப் பிரதமரை, மத்திய அரசை இழிவுபடுத்தவேண்டும்; பகுத்தறிவு என்ற பெயரில் இந்து ஆன்மிகத்தை இழிவுபடுத்தவேண்டும் என்று செயல்பட்டுவருகிறார்கள். இவர்கள் மக்கள் மத்தியில் விதைக்கும் விஷக் கருத்துகளுக்கு கேள்விகள் மூலமாகவே நூல் ஆசிரியர் தகுந்த பதிலடிகளைத் தந்திருக்கிறார். இந்தக் கேள்விகள் எல்லாம் வேள்வித்தீ போல் கொழுந்து விட்டு எரிகின்றன. பொய்மைகளை எரிக்கின்றன.

திரு அமித்ஷாவுடனான கற்பனைப் பேட்டியில் தேசத்தை எந்தத் திசையில் கொண்டுசெல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அக்கறையும் வெளிப்படுகின்றன.

தேசிய சிந்தனையை வலியுறுத்துவதாகவும் சிறுபான்மைச் சமூகத்தை வாங்கு வங்கியாகப் பயன்படுத்தி ஓரங்கட்டுவதை விமர்சிப்பதாகவும் இந்தப் புத்தகம் எழுதப்பட்டு இருக்கிறது. சுதந்தரப் போராட்டத்திலும் அதற்குப் பின்னரும் பல்வேறு தியாயகங்களைச் செய்த சிறுபான்மைச் சமூகத்தின் ஆளுமைகள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டு பிரிவினைவாத சக்திகள் பலம் பெற்றுவருவதை நூல் ஆசிரியர் வருத்தத்துடன், வன்மையாகக் கண்டிக்கிறார்.

யாரும் கேட்டிருக்காத கேள்விகளால் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம் சூடான விஷயங்களைக் கொண்டிருக்கும் அதே நேரம் சுவையான அம்சங்கள் பலவற்றையும் கொண்டதாகத் திகழ்கிறது. தேசிய சிந்தனைகளை முன்வைத்துச் செயல்பட்டுவரும் B.R.மகாதேவனின் தொடர் முயற்சியில் இன்னொரு அருமையான புத்தகமாக இது உருவாகியிருக்கிறது. தேச ஒற்றுமை தொடர்பான கருத்துகளை மேலும் அதிக உத்வேகத்துடன் அவர் முன்னெடுக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன். எல்லா வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

4 Replies to “கேள்விக்கென்ன பதில் – புத்தக அறிமுகம் ”

 1. இளையராஜாவின் அறிக்கையில் ஒன்றும் பெரிய தவறோ குழப்பமோ இருப்பதாக தெரியவில்லை, அம்பேத்கர் உண்மையான இந்தியர் அதனால்தான் பாகிஸ்தானில் வரவேற்பு இருந்தபொழுதும் கூட இந்தியனாக இருந்தார்

  சில சாதிய கொடுமைகளை களைய போராடினாரே அன்றி இந்திய தேசத்தை அவர் வெறுக்கவே இல்லை, கடைசிவரை தனிநாடோ பிரிவினைகளையோ ஆதரிக்கவில்லை, தாழ்த்தபட்ட மக்களுக்கு தனி தேசம் என்றெல்லாம் கிளம்பவில்லை

  அவரை அந்நாளைய ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் அதன் அரசியல் அமைப்பான ஜனசங்கமும் ஏற்றுகொண்டன, அவரும் அவர்கள் பால் அபிமானம் கொண்டிருந்தார்

  காங்கிரஸும் நேருவும் தேர்தலில் வென்றால் அம்பேத்கர் அமைச்சராகிவிடுவார் என விரட்டி அடித்து தோற்கடித்தபொழுது ஜனசங்கமும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புமே அவரை மேல் சபை எம்பியாக்க பாடுபட்டது

  இன்றும் அம்பேத்கர் இருந்தால் பல விஷயங்களுக்காக பாஜகவினை ஆதரித்திருப்பார் அதில் சந்தேகமே இல்லை

  பாஜக இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி அல்ல, அதன் அரசியலில் சாதி இல்லை எல்லா இன மக்களுக்கும் எல்லா வகை வாய்ப்பும் வழங்கபட்டிருக்கின்றது

  ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை அம்பேத்கர் விமர்சிக்காமல் அமைதி காத்ததற்கு அந்த அமைப்பில் சாதி தாண்டிய சமத்துவம் இருந்ததும் ஒரு காரணம்

  இன்று பாஜக இட ஒதுக்கீட்டை நிலை நிறுத்தியிருக்கின்றது, அம்பேத்கர் சொன்னபடி இந்த இடஒதுக்கீடு 3 தலைமுறைக்கு பின் மறுபரிசீலனை செய்யபட வேண்டும் எனப்தையும் செய்கின்றது

  பாஜக ஆட்சியில்தான் தாழ்த்தபட்டவர்கள் குடியரசு தலைவராகவும் தகுதியுள்ளோர் அமைச்சர்களாகவும் நிற்கின்றனர்

  இதெல்லாம் அம்பேத்கரின் கனவுகள் அதைத்தான் இளையராஜா சொன்னார்

  அம்பேத்கர் என்றல்ல காமராஜர் ராஜாஜி என அன்றைய தலைவர்கள் இன்று இருந்திருந்தாலும் தயக்கமின்றி பாஜகவினை ஏற்றுகொள்வாகள் என்பதே உண்மை

  இளையராஜா ஒரு தாழ்த்தபட்டவர், அவர் தன் இசைஞானம் ஒன்றால் அடையாளம் பெற்றவர், எந்த இடத்திலும் அவர் இந்துமத விரோதமோ இந்துத்துவ எதிர்ப்போ காட்டியதில்லை

  அந்த இளையராஜா அம்பேத்கரை சரியாக உணர்ந்திருக்கின்றார் உணர்ந்ததை சொல்லியிருக்கின்றார்

  இளையராஜாவினை இவர்கள் கரித்து கொட்ட அவரின் அம்பேத்கர் பற்றிய கருத்து அல்ல விஷயம், அவர் ஒரு இந்து என்பதும் ஈரோட்டு ராம்சாமி படத்துக்கு இசை அமைக்கமாட்டேன் என அவர் மறுத்ததும், இன்றுவரை திருநீறும் குங்குமம் தாங்கி தன்னை “திருநீலநக்க நாயனாராக” கருதி வாழும் அந்த தூய இந்துவாழ்வுதான் காரணம்

  அது ஒன்றுதான் காரணம்

  இப்பொழுது அம்பேத்கர் என்றல்ல 1950களில் வாழ்ந்த எல்லா நாட்டுபற்றுள்ள தலைவர்களும், காங்கிரஸை எதிர்க்கமுடியாமல் மனதிற்குள் அழுத எல்லா தலைவர்களும் இன்று இருந்திருந்தால் நிச்சயம் பாஜகவினைத்தான் வாழ்த்துவார்கள் காமராஜர் கக்கன் உள்பட

 2. மோடி பற்றிய தன் கருத்துக்களை திரும்ப பெறமுடியாது என சீறியிருக்கின்றார் இளையராஜா இது சரியானது

  இதனால் இனி அந்த சங்கீத மேதை இனி “சங்கி” என்றாகின்றார்

  நிச்சயம் இளையராஜாவின் கருத்துக்கள் சரியானது, மோடி ஒன்றும் உயர்சாதி அல்ல, குஜராத்தின் அடிமட்ட சாதிகளில் ஒன்றில் இருந்துதான் அவர் வந்தார், அந்த நிலையில் இருந்துதான் தேசபிரதமர் அளவு உயர்ந்தார்

  சாதியற்ற இந்தியா என அம்பேத்கர் கண்ட கனவினை நோக்கி எல்லா மக்களையும் அணைத்து செல்லும் மோடியினை சரியான வார்த்தைகளால் சொல்லியிருக்கின்றார், சங்கீத சங்கி

 3. தமிழ் கலாச்சாரத்தை பெரிதும் போற்றி வணங்கும் கன்னடியர் ஜக்கி வாசுதேவ் தமிழக கோவில் விஷயத்தில் தலையிடக்கூடாது – திராவிட (கிறிஸ்தவ) கூட்டம் அலறல்.!

  கர்நாடக ஜக்கி வாசுதேவ் கன்னடியர், மோடி குஜராத்தியாமே…!?
  ஈவெரா கூட கன்னடியர்தான் சொல்லவே இல்லை.!!?

  முதலில் கர்நாடகம், தமிழ்நாடு எல்லாம் எவ்வளவு ஆண்டுகளாக இருக்கின்றன? வெறும் 1956 முதலே. அதுவரை எல்லாமே மெட்றாஸ் ராஜதானி என்ற பெயர்தான்.

  கீழ்காணும் அனைவரும் தமிழகத்துக்கு உதவியவர்கள் அல்லது தமிழகத்தை காத்தவர்கள் அல்லது தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர்கள்.

  இன்றைய தமிழகத்தில் பிறந்த கன்னடியர் – ராகவேந்திர சுவாமி.

  இன்றைய தமிழகத்தில் பிறந்த தெலுங்கர் – தியாகராஜ ஸ்வாமிகள்.

  இன்றைய தமிழகத்தில் பிறந்த கந்தர் சஷ்டி கவசத்தை இயற்றிய கன்னடியர் – பாலன் தேவராயர்.

  இன்றைய ஆந்திரா தேசத்தில் பிறந்தவர் கம்பண்ண உடையார்

  ஸ்ரீரங்கம், சமயபுரம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களை இஸ்லாமியர்களிடமிருந்து மீட்டு புதுப்பித்தவர் இன்றைய ஆந்திரா தேசத்தில் பிறந்த கிருஷ்ண தேவராயர்

  இன்றைய ஆந்திரதேசத்தில் பிறந்தவர் திருமலை நாயக்கர்

  முகலாயர்களை வீழ்த்தி இன்றைய மஹாராஷ்டிராவில் பிறந்தவர் இந்து ராஷ்டிரம் அமைத்த சத்ரபதி சிவாஜி மஹராஜ்..

  இவர்களெல்லாம் தேசியத்தையும் தெய்வத்தையும் காத்த #இந்துக்கள்… என்பதனால் திராவிட திருடர்களுக்கு இவர்களெல்லாம் #வேற்றுமாநிலத்தவர்கள்.

  ⚡இதே தமிழ் கலாச்சாரத்தை துளியும் மதிக்காமல் அசிங்கமாக பேசிய ஈ.வே.ராமசாமி கூட #கன்னடியர்தான்.

  அதே கன்னடியரான ஈவெராவின் எல்லா சிலைகளையும் தூக்கி கடல் அரிப்பு ஏற்படும் இடங்களில் போட்டுவிட்டு, அவரது புத்தகங்களை எரித்துவிட்டு, பின்னர் ஜக்கி வாசுதேவ் அவர்கள் பற்றி பேசலாமா??

 4. தயவு செய்து ஒரு மதசட்டம் போடுங்கள். ஏன் என்றால்….
  ⚫”மத நல்லிணக்கம்” என்ற பெயரில் தான்சமூதாய மத பிரச்சனை உருவாகுது…⚫

  ❤அவரவர் மத மாறியவர்கள் பண்டிகையை அவர்ரவர் கொண்டாடி…
  இந்து பண்டிகைகளை…. ஒரு பூகபம் போல் ஆக்குவதே…அரசியல் ஆகிறது……..

  இங்கு இந்து பண்டிகளில் மட்டும் ஏன் பிற மதத்தினர் ஏன் சேவை செய்ய நுழைகிறார்கள்…??. யாரும் அவர்களிடம் கேட்க்க வில்லையே…

  இந்துக்கள் விழாவில்…

  ஆபிரகாமிய நம்பிக்கையில் #ஒரு_குழு… #சேவை_செய்து மத நல்லிணக்கத்தை சித்தரிப்பதை காட்டுது.

  ஆபிரகாமிய நம்பிக்கைகளின் #மற்றொரு #குழு #கற்களை_வீசுகிறது..

  #மற்றொரு_குழு ஆபிரகாமிய நம்பிக்கைகள் கடவுள் #ஊர்வலங்களுக்கு_இடையூறாக செயல்படுது…

  ️மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கம் என்ற வார்த்தை பிரச்சனைகளை உருவாக்குகிறது.

  ⚫மேலே உள்ள அனைவரும் இந்துக்கள் அல்லாதவர்கள்.
  இந்து மதத்தை விட்டு வேறு நம்பிக்கையில் இணைந்திருக்கிறார்கள்..

  சென்றவர்கள் உங்கள் தெய்வத்திற்க்கு உண்மையாக வணங்குங்கள். உங்களை பொருத்தவரை தேவன் ஒருவனே..சிலை வழிபாடு இல்லை…

  ஆனால் சனாதனத்திலோ.
  .”.பரம்பொருள் ஒன்றே”..வெவ்வேறு வடிவத்தில் சிலை அமைத்து வணங்கிகின்றோம்.

  ஒரு காலை இங்கேயும் ஒரு காலை அங்கேயும் ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்…நீங்கள்….???

  ️ஒன்று இந்த பக்கம் வாருங்கள் அல்லது மறுபக்கம் செல்லுங்கள்…
  ஒருவருக்கொருவர் இடையூறு ஏற்படுத்தாமல்…

  குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தங்கள் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும்.️

  இந்த இந்துக்கள் அல்லாதவர்கள் மத நல்லிணக்கத்தை விரும்பினால்…

  ❤*தயவு செய்து உங்களை நல்வழிப்படுத்துங்கள்…

  ❤*இந்துஸ்தானில் இருந்து கொண்டு…இந்துக்கள் பண்டிகைகளுக்கு இடையூராக செயல் படாதீங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *