சமீபத்தில் தேவசகாயம் பிள்ளை (1712-1752) என்பவருக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மத அதிகார பீடம் “புனிதர்” பட்டம் வழங்கியது. 18-19ம் நூற்றாண்டுகளின் கிறிஸ்தவ மதமாற்ற சூழ்ச்சிகளின் ஒரு கண்ணியாக விளங்கிய ஒரு நபரைக் குறித்து இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்வது என்பதே அதே மதமாற்ற அரசியலின் தொடர்ச்சி அன்றி வேறில்லை. இச்சூழலில் தான் இந்த நபரைப் பற்றிய வரலாற்று உண்மைகளை எடுத்துக் கூறவேண்டியது அவசியமாகிறது – ஆசிரியர் குழு.
பார்க்க: தேவசகாயம் பிள்ளை – ஒரு புனிதப் புரட்டு
எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன் இணைந்து எழுதிய ‘தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்’ – ஆய்வு நூலின், ’18ஆம் நூற்றாண்டைய வேணாட்டு அரசியல்’ என்ற அத்தியாயத்திலிருந்து:
கன்னியாகுமரி மாவட்டத்தையொட்டி, எல்லைப் பகுதியில் அமைந்துள்ள (நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டம்) வடக்கன்குளம், கத்தோலிக்கக் கிறிஸ்தவ சமய வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம்பெற்ற ஊராகும். தொடக்கத்தில் இவ்வூர் பெருங்குடி என்ற பெயரில் பிராம்மணர்களுக்குரிய பேரூராகவே இருந்தது. எல்லைப் பகுதியான அறைவாய்ப் பொழியின் (ஆரல் வாய்மொழியின்) வடக்கே அமைந்துள்ள, குளத்துடன்கூடிய ஊராதலால் இவ்வூரை மலை நாட்டு வழக்கில் வடக்கன்குளம் எனக் குறிப்பிடுவதுண்டு. கி.பி. 1680ஆம் ஆண்டில் தோப்புவிளை என்ற ஊரிலிருந்து ஞானமுத்து நாடான் என்ற கத்தோலிக்கக் கிறிஸ்தவரும் அவரது மனைவி சாந்தாயியும் இப்பகுதியில் குடியேறிப் பெருங்குடி பிராம்மணர்களின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துப் பருத்திப் பயிரிட்டு அதனை விற்று வாழ்ந்துவந்தனர். வடக்கன்குளத்தில் சிறிய குருசடியையும் அமைத்து வழிபட்டுவந்தனர். 1685ஆம் ஆண்டில் ஜான் டி பிரிட்டோ என்ற கத்தோலிக்கப் பாதிரியார் இக்குருசடியை வழிபாட்டுக்கூடமாக மாற்றினார். அதன்பின்னர் இவ்வூர் சான்றோர் குலக் கத்தோலிக்கர்களின் ஊராக மாறிற்று.[13]
கி.பி. 1743ஆம் ஆண்டில் நெல்லை மாவட்டம் விட்டலாபுரம் என்ற ஊரைச் சேர்ந்த சிதம்பரம் பிள்ளை என்ற கார்காத்த வேளாளர் இவ்வூரில் குடியேறிக் கிறிஸ்தவராக மதம் மாறி ஞானப்பிரகாசம் பிள்ளை என்று பெயர் வைத்துக்கொண்டார். திருவிதாங்கோடு சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கிய பத்மநாபபுரத்தை அடுத்த புலியூர்குறிச்சியில் படைத்தலைவர் டி-லெனாயின்கீழ்த் திருவிதாங்கோடு அரசின் படையிலும் அரசு நிர்வாகத்திலும் பணிபுரிந்துவந்த நாயர் சமூகத்தவரான நீலகண்டன் பிள்ளை என்பவர் 1745ஆம் ஆண்டில் வடக்கன்குளத்தில் வைத்து ஞானப்பிரகாசம் பிள்ளையால் ஞானஸ்நானம் வழங்கப்பட்டுக் கத்தோலிக்கராக மதம் மாறினார். இவருக்கு லாசரஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. லாசரஸ் என்ற பெயரைத் தேவசகாயம் என மொழிபெயர்த்து வழங்கினார்கள். ஞானப்பிரகாசம் பிள்ளையும், தேவசகாயம் பிள்ளையும், மதுரேந்திரம் பிள்ளை என்ற கார்காத்த வேளாளர் ஒருவரும் சேர்ந்து வடக்கன்குளத்தில் கி.பி. 1749ஆம் ஆண்டில் புதிதாகக் கத்தோலிக்க ஆலயம் கட்டும் முயற்சியைத் தொடங்கினர்.
இந்த ஆலயக் கட்டுமானத்திற்குத் தேவையான தேக்கு மரங்கள் தேவசகாயம் பிள்ளையால் அவரது பதவிச் செல்வாக்கை முறைகேடாகப் பயன்படுத்தி அரசு அனுமதியின்றிக் கடுக்கரை மலையிலிருந்து வெட்டிக் கொண்டுவரப்பட்டன.[14] இத்தகைய முறைகேடான செயல்கள் மட்டுமின்றி, வடக்கன் குளம் என்ற கத்தோலிக்கக் குடியிருப்பின் நிர்வாகத் தலைமையும், முதன்மையான வழிபாட்டு உரிமைகளும் சான்றோர் சமூகத்துக்கு இனி இல்லை என்றும் வேளாளர் சமூகத்துக்கே உரியன என்றும் ஒரு பிரச்சினையை இக்கூட்டணியினர் உருவாக்கினர். இத்தகைய செயல்களால் சமூக நல்லிணக்கத்தைக் குலைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுத் திருவிதாங்கோடு அரசர் அனுஷம் திருநாள் மார்த்தாண்டவர்மாவால் 1752ஆம் ஆண்டில் நீலகண்டன் பிள்ளை என்கிற தேவசகாயம் பிள்ளை மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
திருவாட்டாறு கோயிலின் கீழ்சாந்தி பூசாரியான வாசுதேவன் நம்பூதிரிக்கும் தேவகி என்ற நாயர் குலப் பெண்ணுக்குமிடையே நிலவிய சம்பந்தத்தில் பிறந்த நீலகண்டன் பிள்ளை மருமக்கள் தாயத்தைப் பின்பற்றிய நாயர் தரவாட்டின் காரணவராகவும், திருவிதாங்கோடு சமஸ்தானத் தலைநகரான பத்மநாபபுரத்தில் இருந்த நீலகண்ட சுவாமி கோயிலின் ஸ்ரீகார்ய உதவியாளராகவும் இருந்து, வாரிசுரிமை போன்றவற்றில் ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாக மனம் சோர்வடைந்து கிறிஸ்தவராக மாறியவர் எனக் கருதப்படுகிறது.[15] இவரால் வடக்கன்குளத்தில் உருவாக்கப்பட்ட பிரச்சினையே 19ஆம் நூற்றாண்டில் அவ்வூரில் வேளாளர் – சான்றோர் சமூகத்தவரிடையே மிகப் பெரிய பிரச்சினையாக வெடித்தது. நெல்லைச் சீமையில் நிகழ்ந்த அப்பிரச்சினைக்கும் திருவிதாங்கோட்டு சமஸ்தானப் படைப்பிரிவுத் தலைவராக இருந்த நாயர் ஒருவரே முதன்மையான காரணவராக இருந்துள்ளார் என்பதனால் இவ்விவரங்களை இங்கு குறிப்பிட நேர்ந்தது.
[13] Tinnevelly District Gazetteer, Vol I, p. 90, H.R. Pate, 1917; கிறித்தவமும் சாதியும், பக். 42, ஆ. சிவசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்-629001, 2002. ஜான் டி பிரிட்டோ இராமநாதபுரம் மாவட்டம் ஓரியூரில் வைத்துக் கிழவன் சேதுபதியால் மரண தண்டனை வழங்கப்பட்டுச் சிரச்சேதம் செய்யப்பட்டவர் என்பது வரலாற்றாய்வாளர்கள் அறிந்த செய்தியாகும்.
[14] வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை வரலாறு, பக். 26, அ.கா. பெருமாள், யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை-600014, 2004.
[15] மேற்படி நூல், பக். 20-21.
“இந்துக்கள், கிறிஸ்தவர்கள் எல்லாம் தங்கள் இறுதி காரியம் செய்ய தேவையான பொருட்கள் வாங்கி வைத்துகொள்ளுங்கள்,
உங்களை எல்லாம் தேடி காலன் வருகிறான்.
மரியாதையாக கட்டுப்பட்டு வாழ்வதானால் இங்கே வாழலாம் இல்லை என்றால் காலன் உங்களை தேடி வருவான் ”
கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா ஊர்வலத்தில்
தோளில் சுமந்து வரப்பட்ட பதின்மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கையை உயர்த்தி
எச்சரிக்கை செய்யும் விதமாக விரலை ஆட்டி
உரக்க சொல்ல சொல்ல
பல நூறு பேரால் சத்தமாக திரும்ப
எழுப்பப்பட்ட கோஷங்கள் இது.
எவ்வளவு வன்மம் நிறைந்த வார்த்தைகள்,
அவன் உரக்க கோஷம் எழுப்பிய விதம்
வார்த்தைகளில் நிறைந்திருக்கும் குரூரத்தை அறியாமலே அவன்,
மதவெறி பிடித்தவர்களால் சொல்லி கொடுக்கபட்ட விதத்தில் சத்தமிட்டான் என்றிருந்தால் மன சாந்தி கொள்ளலாம்.
ஆனால் அவன் சொல்ல சொல்ல, திருப்பி கோஷம் எழுப்பிய பெரியவர்கள் அனைவரும், அந்த வார்த்தைகள் சொல்லும் உண்மை புரிந்தே
திரும்பவும் உரக்க குரல் எழுப்பினர்.
இதை யாரும் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.
கேரள உயர்நீதிமன்றம் இந்த வீடியோ வைரலான நிலையில், கடுமையாக விமர்சித்து விசாரணையை முடுக்கி விட உத்தரவிட்டுள்ளது.
ஆளும் பினராயி விஜயனோ, அவரது கட்சியினரோ இந்த நிகழ்வை கண்டிக்கவில்லை.
ஆனால் பாஜக மற்றும் காங்கிரஸார் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வட இந்திய மீடியாக்கள் பல விவாதங்களை செய்து கடுமையாக சாடியுள்ளனர். ஆனால் தமிழக ஊடகங்களில் இது பேசு பொருளாகவே இல்லை.
கடந்த காலத்தில் சிஏஏ போராட்டத்தின் போது மாபுலா கலவரகாரர்களின் உடை, ஆயுதங்களை தரித்து, மாபுல சம்பவங்களை மறந்துவிட்டீர்களா? நாங்கள் மீண்டும் அதை செய்வோம் என்று சவால் விட்டபடி, ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது முஸ்லிம்களால்.
இதைப்பற்றி உங்களில் எவருக்கு தெரியும்?
நமது ஊடகங்கள் இந்த செய்தியினை உங்களுக்கு தருவித்ததா?
இந்த மதவெறி ஊர்வலத்தை பற்றி விவாதிக்க தமிழக ஊடகங்களுக்கு தைரியம் இல்லை.
இப்படி விவாதிக்கப் பட வேண்டிய விஷயங்களை எல்லாம் மறைத்து மறைத்து
தமிழக ஒற்றை கண் ஊடகங்களால்
என்ன மாதிரியான மதச்சார்பின்மையை காத்துவிட முடியும்?
என்ன மாதிரியான சமூகநீதியை நிலை நிறுத்த முடியும்?
இதே போல இந்திய வரலாறு நெடுக,
இந்திய ஊடகங்களும், இந்திய அரசியல்வாதிகளும் மறைத்து, நீர்த்து போக செய்து, மறந்து போக செய்த
இந்துக்களுக்கு எதிரான படுகொலை சம்பவங்களும், அநீதிகளும் ஏராளம், ஏராளம்?
காஷ்மீர் சம்பவங்கள் போல, எத்தனை எத்தனை இங்கே நடத்தப்பட்டுள்ளது என்று
எதைப்பற்றியும் எந்த விவரங்களும் இங்கே பேசப்படாது.
ஆனால் இவை எல்லாம் வெறும் நூறாண்டுக்குள் நிகழ்ந்த சம்பவங்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
அப்படி என்றால் முகலாயர்களின் ஆட்சி காலத்தில் என்னென்ன நடந்திருக்கும் என்று எண்ணி பாருங்கள்.
ஆனால் இங்கே இருக்கும் போலி மதச்சார்பற்ற கூட்டத்தினர்
யாருக்கு சகிப்புத்தன்மை குறித்த பாடத்தை நடத்துகின்றனர்? இந்துக்களுக்கு.
ஆனால் உண்மையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் எதிர்தரப்பினரை பற்றி ஒரு வார்த்தை பேசுவதும் இல்லை. அவர்களுக்கு சகிப்புத்தன்மையை போதிப்பதும் இல்லை.
காரணம், அவர்கள் மீதான பயம்.
வன்முறைகளை யார் செய்தாலும், யார் காரணமாக இருந்தாலும் அதை சுட்டி காட்டி, கண்டிக்க தயக்கம் எதற்கு?, பயம் எதற்கு?
ஒரு தரப்பு மக்களுக்கு மட்டும் நீதி நியாயம் குறித்து போதிக்கும் நீங்கள், மறு தரப்பிற்கு போதனை செய்ய நினைக்கையில் உங்களுக்கு உயிர் பயம் ஏன் வருகிறது?
இவை எல்லாம் சர்ச்சைக்குரிய விஷயங்கள் என்று நீங்கள் பேசுவதற்கு பயந்து பயந்து
இப்படி
மறைத்து மறைத்து
திரித்து திரித்து
இந்த தேசத்திற்கு நீங்கள் எதை பரிசளிக்க போகின்றீர்கள்,
கலவரங்களையா? அமைதியின்மையையா?
தேச பிரிவினையையா?
வெகு சமீபத்தில்
ஓவைஸியின் சகோதரன் ஒரு கூட்டத்தில் பேசுகிறார்,
“உங்களது காவல்துறையை பதினைந்து நிமிடங்கள் நிறுத்தி வையுங்கள், நாங்கள் இந்துக்களே இல்லாத இந்தியாவை உருவாக்கி விடுவோம் என்று உரக்க குரலெழுப்பினார்.”
ஆதை ஆமோதித்து, பல்லாயிரம் குரல்கள் உரக்க சத்தமிட்டது.
இங்குள்ள மதச்சார்பற்ற சமூக போராளிகள் எத்தனை பேர் இதை கண்டிக்க முன் வந்தனர்?
எத்தனை அரசியல்வாதிகள்
எத்தனை தலைவர்கள்
எத்தனை ஊடகங்கள் இதைப்பற்றி விவாதித்து, கண்டித்து பேச முன்வந்தனர்?
மனித நேய காவலர்கள், சகோதரத்துவதத்தை காப்பவர்கள் என்று சொல்லிக்கொள்ளும்
நடுநிலை இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும்
இது போன்ற வன்முறையை தூண்டும் சம்பவங்களை கண்டிக்க முன் வருவதில்லையே ஏன்?
தவறு செய்பவர்களின் மதத்தை பார்க்காமல்,
தவறினை சுட்டி காட்டி கண்டிக்க நீங்கள் அனைவரும் முன் வரவில்லை என்றால்
இந்த தேசத்தில் உங்களால் ஒரு போதும் அமைதியை,
மத ஒற்றுமையை ஏற்படுத்தி விட முடியாது.
ஆனால் நீங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டு, காதுகளை பொத்தி கொண்டு இவற்றையெல்லாம் கடந்து போகையில்
உங்களால் எதிர்கால இந்தியாவே பாதிக்கப்பட போகிறது.
இந்த சுதந்திர தேசத்தில் எதிர்கால இந்துக்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையினையும், அச்சுறுத்தல்களையும் மட்டுமே நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
பாதிக்கப்பட போகிறவர்களில் நீங்கள் பெருமையாக சொல்லி கொள்ளும் மதச்சார்பற்ற நடுநிலை இந்துக்களும் இருக்க கூடும்,
ஏனெனில் வாளேந்தி ஒருவன் தாக்க வருகையில்
நான் நடுநிலை இந்து என்று வேறுபடுத்தி காட்ட அவர்களிடம் எந்த அடையாளமும் கிடையாது.
ஆனால் ஒரு விஷயத்தை மறந்து விடாதீர்கள்,
வன்முறை இரு பக்கமும் கூர் முனையுள்ள ஆயுதம்
எதிரில் இருப்பவனை மட்டும் சாய்க்க போவதில்லை,
அதை ஏந்தி வீசுபவனையும் சாய்க்கும் வல்லமை உடையது.
அதேவேளையில் கடந்த கால வரலாறுகள் சொல்லும் உண்மை ஒன்று தான்,
“எந்த நிலையிலும் எண்ணிக்கை மட்டுமே, வீரத்தை நிர்ணயம் செய்திட முடியாது”
ராணா பிரதாப் சிங்கும், அலெக்சாண்டரும், சத்ரபதி சிவாஜியும் உதாரண புருஷர்கள்.
அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்போம்.
அனைத்து மத நம்பிக்கைகளையும் மதிப்போம்.
அனைத்து உயிர்களையும் சமமாக மதித்திடுவோம்.
வன்முறையற்ற உலகை படைப்போம்.
குறிப்பு:
இது போன்ற சம்பவங்கள் குறித்து ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் பேச வேண்டும் என்பதற்காக தான் இந்த பதிவு.
எனவே தேவையற்ற கமெண்ட்களை தவிர்க்கவும். அது பதிவின் நோக்கத்தையே மாற்றி விட கூடும்.
எனது பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம். ஆனால் இந்த தேசத்திற்காக உயிர் கொடுத்த பல நூறு பல்லாயிரம் மக்களில் நானும் ஓருவனாக இருப்பதில் பெருமையடைவேன்.
ஆனால் சில நேரங்களில் சில விஷயங்களை எல்லோரும் கடந்து சென்று விட்டால், தேசத்தில் நீதி பரிபாலனம் கேள்வி குறியாகி அதர்மம் அதிகரிக்கும். இது கலிகாலம் கடவுள் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்க முடியாது.
உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றால் அனைத்து தரப்பு மக்களும் தவறுகளை கண்டித்து நியாயம் பேச முன் வாருங்கள்.
“இந்த உலகிற்கு அதர்மிகளால் ஏற்பட்ட இழப்பை விட
தர்மம் அறிந்தவர்கள், தவறுகளை சுட்டி காட்டி, தட்டி கேட்காமல்
கடந்து சென்றதால் ஏற்பட்ட இழப்புகள் தான் பல மடங்கு அதிகம்.”
என்று அந்த பரமாத்மாவே கீதையில் பேசுகிறார்.