தேவசகாயம் பிள்ளை: சில வரலாற்று உண்மைகள்

சமீபத்தில் தேவசகாயம் பிள்ளை (1712-1752) என்பவருக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மத அதிகார பீடம் “புனிதர்” பட்டம் வழங்கியது… திருவிதாங்கோடு அரசின் படையிலும் அரசு நிர்வாகத்திலும் பணிபுரிந்துவந்த நாயர் சமூகத்தவரான நீலகண்டன் பிள்ளை என்பவர் 1745ல் கத்தோலிக்கராக மதம் மாறினார். லாசரஸ் என்ற இவரது பெயரைத் தேவசகாயம் என மொழிபெயர்த்து வழங்கினார்கள். சர்ச் கட்டுமானத்திற்குத் தேவையான தேக்கு மரங்கள் தேவசகாயம் பிள்ளையால் அவரது பதவிச் செல்வாக்கை முறைகேடாகப் பயன்படுத்தி அரசு அனுமதியின்றிக் கடுக்கரை மலையிலிருந்து வெட்டிக் கொண்டுவரப்பட்டன. இத்தகைய செயல்களால் சமூக நல்லிணக்கத்தைக் குலைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்…

View More தேவசகாயம் பிள்ளை: சில வரலாற்று உண்மைகள்

தேவசகாயம் பிள்ளை – ஒரு புனிதப் புரட்டு

இன்று தென் தமிழகத்தில், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல பிரசாரங்களும், நம் நாட்டிற்கு எதிராக சூழ்ச்சியும் நடைபெறுகின்றன. போப்புக்காக கொலை செய்தவர் கணிசமான இந்துக்களை தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மாற்றிவிட்டார். மீதமுள்ள இந்துக்களை மாற்ற போப்புக்காக கொலையுண்ட (?) கிறிஸ்துவ வீரரை தயாராக்குகிறது கிறிஸ்துவ சர்ச். இந்த கிறிஸ்துவ நோக்கத்துக்காக நம் நாட்டு மன்னர் மத வெறியனாக்கப்பட்டுள்ளார். நம் சமுதாயம் பிற்போக்குச் சமுதாயமாக ஜோடிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் ஈவு இரக்கமற்ற இரத்தக் காட்டேறிகளாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். வரலாற்று மோசடி நடத்தப்பட்டுள்ளது. விளைவு- மண்ணின்மைந்தர் தியாகி, புனிதர் என்ற ஜால வார்த்தைகளால் மண்ணின் மைந்தன் ஏமாற்றப்படுகிறான். இந்த மாதிரியாகக் கட்டுக்கதைகளைப் புனைந்து வரலாற்று மோசடிகளில் ஈடுபடுவது சர்ச்சுக்கு கைவந்த கலை.

View More தேவசகாயம் பிள்ளை – ஒரு புனிதப் புரட்டு