கலிதோஷம் போக்கும் கந்தபுராணம்: நூல் வெளியீடு

ஸ்ரீமுருகப்பெருமானின் அருள் வரலாற்றை கூறும் நூல், ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியர் பாடியருளிய ஸ்ரீ கந்தபுராணம்.

கந்தபுராணம் படித்தால் கைமேல் பலன் என்பது அனுபவ வாக்கு.

முருகனின் விரத நாட்களில் கந்தபுராணம் முழுவதும் பாராயணம் செய்வது கந்தபுராணம் படனம் என்று கூறுவார்கள். 10,500க்கும் மேல் உள்ள பாடல்களை பாராயணம் செய்துவந்தனர் நமது முன்னோர்கள். முக்கியமாக ஐப்பசி மாத ஸ்கந்த சஷ்டி ஆறுநாட்களில் கந்தபுராணம் பாராயணம் செய்வது கேட்கும் வரங்களை தரவல்லது. காரணம் ஸ்கந்தஷஷ்டி சூரசம்ஹார விழா கந்தபுராணம் அடிப்படையில் நிகழ்வது.

இன்றைய நிலையில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் உள்ள பாடல்களை பாராயணம் செய்வது அரிதாக உள்ளது. எனவே கந்தபுராண பாராயணத்தை மீள் எழுச்சி செய்யும் நோக்கில் அனைவரும் பாராயணம் செய்வதற்கு வசதியாக 351 பாடல்களாக சுருக்கி, கலிதோஷம் போக்கும்கந்தபுராணம் என்ற இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கந்தபுராண ஞானசபை வாயிலாக புத்தகமாக வெளிவந்துள்ளது.

சஷ்டி விரத நாட்களில் ஆறு நாளும் இந்த 351 பாடல்களையும் நமது வீட்டிலேயே பாராயணம் செய்யலாம். அல்லது ஒவ்வொரு நாளும் 50 பாடல்களாக பாராயணம் செய்யலாம். இது ஸ்கந்தஷஷ்டி காலத்தில் கந்தபுராணம் முழுவதும் பாராயணம் செய்த பலனை / சித்தியை தரவல்லது.

இந்த நூலின் விலை: அனுப்புகை செலவோடு சேர்த்து – ரூ. 100+50 = 150

விரும்பும் அன்பர்கள் ஃபேஸ்புக் மூலம் உள்பெட்டியில் செய்தி அனுப்பலாம். அல்லது வாட்ஸ் அப் மூலம் 9751848933 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

சிவார்ப்பணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *