அண்ணாமலை தலைமை: மத்திய பாஜக செய்யவேண்டியது என்ன?

எல்.முருகன் மிக அவசர அவசரமாக தலைமைப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் தலைவராக இருந்தபோது நடந்த தேர்தலில் அண்ணாமலை ஜெயிக்கவில்லை. நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன், சரஸ்வதியம்மா, எம்.ஆர்.காந்தி ஆகிய நான்கு பேர் மட்டுமே அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றனர். அண்ணாமலையை தமிழகக் கட்சித் தலைமைக்குச் சீக்கிரமே கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் மத்திய தலைமைக்கு இருந்திருந்தால் இந்த நான்கு பாதுகாப்பான தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் அவரை நிற்க வைத்து வெற்றிபெற வைத்து அதன் பின் கட்சித் தலைவராக ஆக்கியிருக்கலாம்.

மத்திய பாஜக செய்த முதல் தவறு இது.

அண்ணாமலை கட்சித் தலைமைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து முன்னாள் தலைவர்கள் கவர்னர் பதவி, மத்திய அரசுப் பணி ஆகியவை கொடுத்து அனுப்பபட்டனர். தொலைகாட்சிகளில் பாஜக கட்சியிலிருந்து யாரும் பேசவேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது. தனிப்பட்ட வீடியோக்கள் கூட வெளியிட முடியாத நிலை. கட்சியின் ஒரே முகமாக, ஒரே குரலாக அண்ணாமலை மட்டுமே என்பதாக வடிவமைக்கப்பட்டது. கருணாநிதி, ஜெயலலிதா போல் இந்திரா காந்தி, நரேந்திர மோதிபோல் மகேந்திர சிங் தோனி போல், விராட் கோலி போல் மாநில அரசியலுக்கான முழு அதிகாரமும் மாநிலத் தலைமையிடம் தரப்பட்டது.

அதே நேரம் திமுக மீதான அண்ணாமலையின் விமர்சனங்கள், மோதல்கள் எல்லாம் வெறும் பரபரப்பைத் தாண்டி எதையும் செய்து காட்டவில்லை. மத்திய பாஜக நினைத்திருந்தால் திமுகவில் பலர் மீதான வழக்குகளை முடுக்கிவிட்டிருக்கமுடியும். தமிழக பாஜக தலைமைக்கு அது வலு சேர்த்திருக்கும். செல்வாக்கை அதிகரித்திருக்கும். மத்திய பாஜக இந்த உதவியை எந்த பாஜக தலைவருக்கும் செய்து தரவில்லை. மாநிலத் தலைமையும் கட்சியினரும் மத்திய பாஜகவின் வெற்றிக்கு வழிவகுக்கவேண்டும். ஆனால், மாநிலத்தலைவர் மற்றும் மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு மத்திய தலைமை துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாது. இதுதான் மத்திய தலைமையின் கடந்த காலச் செயல்பாடு. மாநிலத் தலைமையின் பின் அனைவரும் அணிவகுங்கள்; அப்போதுதான் வெற்றி என்று சொல்லப்பட்டது. கொஞ்சமாவது வெற்றி பெற்றுக் காட்டியிருந்தால் மிகுந்த விசுவாசத்துடன் அத்தனை பேருமே அணிவகுத்திருப்பார்கள். திமுகவில் இரண்டாம் மூன்றாம் கட்ட பிரமுகர் யாரையாவது அவர்கள் செய்த தவறுக்குச் சிறையில் அடைத்திருந்தால் தமிழக பாஜக தலைமை மீது கட்சியினருக்கு நம்பிக்கை வந்திருக்கும். ஆனால், சிலரை வெளியே நிறுத்த மத்திய தலைமை திட்டமிட்டிருக்கிறது; இத்தனை காலம், தான் செய்த தவறுக்கு சில பலிகடாக்கள் அதற்குத் தேவைப்படுகிறது போலிருக்கிறது.

மத்திய தலைமை செய்த இரண்டாவது தவறு இது.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரிய தலைமைகள் இருந்தவரை பாஜக இந்த இரண்டு கட்சியின் தயவை எதிர்பார்த்து மட்டுமே தமிழக அரசியலில் காய் நகர்த்தியது. தமிழகத்தில் எந்தவொரு வலிமையான தலைவரும் வளர முடியாமல் போய்விட்டது.

காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் யாரையும் வளர விடாததற்கு அதன் தலைமையின் சர்வாதிகார மனநிலை காரணம். மத்திய பாஜக, தமிழகத்தில் பெரிய பாஜக தலைவரை வளர விடாததற்கு நிச்சயம் சர்வாதிகார மனநிலை காரணமல்ல. இரண்டு திராவிடக் கட்சிகளுடன் நட்புடன் இருந்து ஆட்சியில் பங்குபெற்று அதன் பின் கட்சிக்கு தனி வலிமையைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று வெகுளியாக நினைத்தது.

இப்போது, தன் இலையைக் கிழியக் கொடுத்துவிட்டு வாழை மரம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறது. இதில் தவறில்லை. ஆனால், வாழை மரத்தின் இலை இத்தனை வலுவற்று இருக்க மரமே காரணம். தானாகவே இலையைக் கிழித்துக் கொள்வது, புயல் வீசும்போது மரத்தை மிக அதிகமாக பாதிக்கவே செய்யும்.

மத்திய தலைமை செய்த மூன்றாவது தவறு இது.

ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸும் திமுகவும் செய்த துரோகத்தை மத்திய பாஜக துளிகூடப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. உண்மையான அக்கறையை விட்டுவிடுங்கள்… தமிழக அரசியல் ஆதாயம் கருதிக் கூட இதைச் செய்யவில்லை. தமிழக பாஜகவையும் இதைப் பேச அனுமதிக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த இந்திய, இந்து வெறுப்புப் பிரசாரத்தைத் தடுக்க மத்திய பாஜக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இது மத்திய பாஜக செய்த நான்காவது தவறு.

உண்மையில் பாஜகவின் முன்னாள் தலைவர்களுக்கும் இன்றைய தலைமைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் இன்றைய தலைமைக்கும் எந்த மோதலும் இல்லை. கவர்னருக்கும் இன்றைய தலைமைக்கும் எந்த விலகலும் இல்லை. பிராமணர்களுக்கும் இன்றைய தலைமைக்கும் எந்த இடைவெளியும் இல்லை. ஆனால், இந்த அனைத்தும் இருப்பதாக ஒரு சித்திரம் உருவாக்கப்படுகிறது.

ஊடக பலம் கொண்டுதான் இதை எதிர்கொள்ளமுடியும். உண்மையான எதிரிகளைப் பந்தாடினால்தான் இந்த உள் முரண்கள் விலக வழி பிறக்கும். மத்திய பாஜக இது தொடர்பாக எந்தவொரு பெரிய முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை.

மத்திய பாஜக செய்யும் ஐந்தாவது தவறு இது.

கூட்டாட்சி அமைப்பில் தேசியக் கட்சியின் இலக்கும் அணுகுமுறையும் மாநிலக் கட்சியின் இலக்கும் அணுகுமுறையும் பெருமளவுக்கு மாறுபட்டதாகவே இருக்கும். இந்த விஷயத்தில் தேசியக் கட்சியும் அதன் மாநிலக் கிளையும் பரஸ்பரம் உதவி செய்துகொண்டு செல்வாக்குப் பெற முயற்சி செய்யவேண்டும். பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் தமிழகத்தில் இப்படிச் செய்ய முடியாமல் போய்விட்டது.

பாஜகவுக்காவது உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர், கோவா என சில மாநிலங்களில் வலுவான பிராந்தியத் தலைவர்கள் இருக்கிறார்கள். காங்கிரஸுக்கு அப்படி யாருமே இல்லை.

திமுக, அதிமுகவிலெல்லாம் இரண்டாம் கட்டத்தலைவர்கள் என்று யாருக்குமே பெரிய இடம் கிடையாது. எவ்வளவு தியாகமும் கடின உழைப்பும் அனுபவமும் இருந்தாலும் வாரிசுக்குத்தான் அடிபணிந்தாகவேண்டும்.

அந்த வகையில் பாஜக கூடுதல் ஜனநாயகம் கொண்ட கட்சி. அதிக தலைவர்களைக் கொண்ட கட்சி. ஆனால், துரதிஷ்டவசமாக தமிழக பாஜகத் தலைவர்களுக்கு மாநில அரசியலில்கூடச் செல்வாக்கு கிடைக்காமல் போய்விட்டது.

இப்போது பாஜகவுக்கு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை புதுமாதிரியானது.

நாடாளுமன்றத் தேர்தல் என்றால் திராவிடக் கட்சிகளில் ஏதாவது ஒன்றுட ன் கூட்டணி என்பதுதான் காலகாலமாக தேசியக் கட்சிகளின் ராஜ தந்திரமாக இருந்திருக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளாக அமீத்ஷா செருப்பு மாட்டிக் கொண்டுவிட்டார்… தோளில் துண்டைப் போட்டுவிட்டார்… கண்ணாடியை மாட்டிக் கொண்டுவிட்டார் என்றெல்லாம் ஏகப்பட்ட புல்லரிப்புகள் இதே தமிழக பாஜக அரசியல் வெளியில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தன. முதல் முறையாக மாநிலத்தலைமையில் இருப்பவர் அப்படியான ஃப்யர் விடத் தயாராக இல்லை.

அடுத்து வரவிருக்கும் சட்ட மன்றத் தேர்தலில் தனது வெற்றிக்கும் உதவும் வகையான முடிவையே எடுக்க விரும்புகிறார். இதில் எந்தத் தவறும் இல்லை.

மத்திய தலைமைக்கு உதவியாளாக மட்டுமே இருந்து இதுவரை தமிழக பாஜக தலைவர்கள் தமது அரசியல் வாழ்க்கையை வீணாக்கியதுதான் மிச்சம். கட்சியை வலுவடையவைக்கவில்லை என்ற பழியையும் சுமந்ததுதான் மிச்சம்.

இந்த விளையாட்டுக்கு அண்ணாமலை தயாராக இல்லை. இது மிகவும் நியாயமான விஷயம் தான்.

கடந்த கால நிகழ்வுகள் பற்றிக் குறைந்தபட்ச புரிதல் இருந்தாலும் ஒருவர் இதைத்தான் தேர்ந்தெடுப்பார். அதிலும் அரசியல் கட்சியின் தலைமைப் பதவிக்கு எந்தவித அரசியலும் செய்யாமல் நேரடியாக வந்தவர் அப்படியான நிமிர்வுடன் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.

இதில் ஒரே ஒரு பெரிய வருத்தம் என்னவென்றால்,

கூட்டணி பற்றிய விவாதம் உள்ளரங்கில் நடக்கவேண்டியது. எதனால், யாரால் பொதுவெளிக்கு வந்தது?

இதுவரை அத்தனையையும் செய்துவந்த மத்திய தலைமை நைஸாகக் கழண்டு கொண்டு முன்னாள் மாநிலத் தலைவர்கள் மீது முழு விமர்சனமும் ஏன் குவிக்கப்படுகிறது?

விமர்சிப்பதென்றால் இரு தரப்பையும் விமர்சிக்கவேண்டும். ஆதரிப்பதென்றால் இரு தரப்பையும் ஆதரிக்கவேண்டும்.

உண்மையில் அண்ணாமலையும், முன்னாள் தலைவர்களும் இந்தப் புரிதல் உடையவர்கள்தான். சமூக வலைதளங்களில்தான் பிழையான வம்புகள் தூண்டப்படுகின்றன.

மாநிலத் தலைமையும் முன்னாள் தலைவர்களும் இணைந்து இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும்.

அல்லது உண்மையில் இது மாநிலத் தலைமைக்கும் மாநிலக் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான மோதல் இருப்பது உண்மையே; மத்திய தலைமைக்கும் மாநிலத் தலைமைக்கும் இடையிலான கருத்து வேறுபாடு இருப்பதும் உண்மையே என்றால் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இதை அணுகியாகவேண்டும். இப்படி இருக்காது/இருக்கக்கூடாது என்றே நம்புவோம்.

ஒருவேளை அந்த நம்பிக்கை பொய்யென்றால்…

அண்ணாமலையின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று மத்திய தலைமை அறிவித்தால் மத்திய தலைமையே கூட்டணியை அறிவிக்கும் என்ற வாக்கியத்தைச் சொன்னவர்கள் / சொல்பவர்கள் அண்ணாமலைக்கு எதிரி என்று பார்க்கப்படும் அபாயம் இருக்கிறது.

கூட்டணி தேவை என்று மத்திய தலைமை முடிவு செய்தால் அண்ணாமலை மிகவும் வருத்தப்பட வாய்ப்பு இருக்கிறது.

கூட்டணி தேவையா தேவையில்லையா என்பதை உள் அரங்கில் பேசி முறையாக அறிவித்துக் களம் கண்டாலே வெற்றிக்கான வாய்ப்புகள் குறைவு என்ற நிலையில் இப்படி முதல் கோணலாக ஆரம்பித்திருக்கும் 2024 தேர்தல் பணிகள் என்னவாகப் போகிறது என்று தெரியவில்லை.

இது இப்படி நடந்திருக்கவே வேண்டாம்.

பி.ஜே.பியைவிட தமிழக இந்துக்களுக்கு இது ஏற்படுத்தவிருக்கும் இழப்பே மிகவும் அதிகம்.


தமிழக பாஜக கட்சி மற்றும் இந்து ஆதரவு சக்திகளின் முன்பாக இப்போது வைக்கப்படும் ஒற்றைக் கேள்வி: அண்ணாமலையின் தலைமையை முழுமையாக ஏற்கிறாயா இல்லையா? என்பதுதான்.

புதிய தலைவர் தன் அலைவரிசையில் சிந்திப்பவர்களை தன் குழுவில் இடம்பெறச் செய்வதென்பது மிகவும் இயல்பானதுதான். வெற்றிக்கு உத்தரவாதம் அதன் மூலமே கிடைக்கும். இதை அதிக மனவருத்தங்கள் இன்றிச் செய்து முடிப்பதே எந்தவொரு அமைப்புக்கும் நன்மைதரும்.

கிரிக்கெட்டில் சேவாக், கம்பீர் எல்லாம் தோனியால் ஓரங்கட்டப்பட்டனர். அஸ்வினை கோலி ஓரங்கட்டினார். கோலியின் தொடர் வீழ்ச்சியினால் அஸ்வின் மீண்டு வந்துவிட்டார்.

நேரு காந்தியவாதிகள் அனைவரையும் ஓரங்கட்டினார். ஜெயலலிதா அதிமுகவின் முந்தைய தலைவர்கள் அனைவரையும் ஓரங்கட்டினார். கருணாநிதியும் அப்படியே பலரை ஓரங்கட்டித்தான் முன்னிலைக்கு வந்தார். நரேந்திர மோதியின் விஷயத்திலும் அதுவே சிறிய அளவில் நடந்தது.

எனவே, இது தொடர்பாக அதிகம் யோசிக்கத் தேவையில்லை. எல்லா இடங்களிலும் இருப்பதுதான். அரசியலும் தேச நிர்வாகமும்கூட அப்படித்தான். திறமை, அதிர்ஷ்டம், நெளிவு சுளிவு, தரப்படுவது போதும் என்ற எண்ணம் எல்லாம் உள்ளவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும்.

திமுக, காங்கிரஸில் எல்லாம் அவர்களுடைய கட்சியின் கொள்கைக்கு ஏற்ற எத்தனையோ திறமைசாலிகள், அனுபவசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வாரிசுகளுக்கு முன்னால் அவமானப்பட்டுத்தான் கட்சிப் பணியாற்றி வருகிறார்கள். ஒப்பீட்டளவில் பாஜகவில் இந்த அவமானமும் ஓரங்கட்டலும் மிக மிகக் குறைவு.

கிரிக்கெட்டில் என்னவிதமான அரசியல், துரோகங்கள், ஓரங்கட்டல்கள் இருந்தாலும் இந்திய அணி சர்வ தேச அரங்கில் வெற்றி பெறுகிறதா என்பது மட்டுமே ரசிகரின் எதிர்பார்ப்பாக இருக்கமுடியும்.

அரசியலிலும் கட்சிக்குள் என்ன விசுவாசங்கள், துரோகங்கள், ஓரங்கட்டல்கள், துதிபாடல்கள் நடந்தாலும் கட்சி வெற்றி பெற்றால் போதும் என்பதுதான் கட்சியினரின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

பொது மக்களைப் பொறுத்தவரையில் தேசத்துக்கும் மதத்துக்கும் தமக்கும் எது நன்மை தரும் என்பதுதான் முக்கியமாக இருக்கும்.

தமிழக அரசியல் களத்தில் திராவிட பிரிவினைவாத மற்றும் இந்து விரோத சித்தாந்தத்துக்கு எதிரான சக்திகள் கூர்மையடைந்து அவற்றுக்கிடையே ஒற்றுமை பெருகி வெற்றி பெற வேண்டுமென்றால் தேசியக் கட்சி மற்றும் அதன் பிராந்தியக் கட்சி இரண்டின் இலக்கும் ஒன்றாக இருக்கவேண்டும். மத்திய தலைமை, தான் வெற்றி பெற கூட்டணி தேவை என்றும் மாநிலத் தலைமை தான் வெல்ல தனித்து நிற்பதே நல்லது என்றும் கருதுமென்றால் அதிருப்தியும் விலகலுமே அதிகரிக்கும்.

  • மாநிலத் தலைவர் இங்கு இருக்கும் ஊழல்வாதியை விமர்சித்தால் மறு நாளே மத்திய தலைமை அந்த ஊழல்வாதியை சிறையில் அடைக்கவேண்டும்.
  • இந்து விரோதப் பேச்சு பேசிய ஒருவரை மாநிலத் தலைமை கண்டித்தால் மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  • மத்திய தலைமையை யாரேனும் விமர்சித்தால் மறு நாளே அவரை எங்கும் பேசவிடாமல் மாநில அரசு முடக்கவேண்டும்.

பரஸ்பரம் மிக்ஸர் ஊட்டி விட்டுக் கொண்டிருந்தால் எதிரி கூடுதலாக அல்வாவும் கொடுத்துவிட்டு ஆட்டம் போடத்தான் செய்வான். கடைசியில் கெளரவமான தோல்வி என்று மாநிலத்தலைமையும் நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருகிறோம் என்று மத்திய தலைமையும் அறிக்கை விட்டுக் கொண்டே இருக்கவேண்டியதுதான்.

  • அண்ணாமலையை வலுவான தலைவராக ஆக்க மத்திய தலைமை முன்வரவேண்டும்.
  • திமுக, விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளில் முக்கியமான சிலரை இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படைவாதிகளில் சிலரை கைது செய்து காட்டவேண்டும்.

அதுவே மாநிலத்தலைவருக்கு கட்சியினரிடம் மட்டுமல்ல; மக்களிடமும் செல்வாக்கைப் பெற்றுத் தரும்.

உண்மையில் இதைச் செய்துவிட்டு அண்ணாமலையின் பின்னால் அணி திரளுங்கள் என்று சொல்லியிருந்தால் அத்தனை பேரும் அணி திரண்டிருப்பார்கள்.

  • இனிமேல் கூட அதைச் செய்து கட்சியினரிடையே ஒற்றுமையை வளர்க்கமுடியும்.
  • வெற்றிக் கோப்பையைக் குழுவினரிடம் ஒப்படைக்கவேண்டும்.
  • தோல்விக்கு, தானே முழுப் பொறுப்பேற்கவேண்டும்.
  • நரேந்திர மோதிக்கு 2024 இலக்கு.
  • அண்ணாமலைக்கு 2026 இலக்கு.
  • தமிழக இந்துக்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் இலக்கு.

அனைவரையும் அரவணைத்து வெற்றி பெறுவதென்பது மிகவும் எளிய விஷயம்தான்.

எப்படியெல்லாமோ நடந்துகொள்ளும் எதிர் தரப்புடன் காட்டும் நல்லிணக்கத்தை சொந்த கட்சியினருக்குள்ளும் கொஞ்சம் காட்டலாம்.

ஸப்கா ஸாத் ஸப்கா விகாஸ் என்பதில்
அப்னோம்கா சாத் அப்னோம்கா விகாஸ்
என்பதும் இருக்கட்டும்.

(கட்டுரையாசிரியர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

6 Replies to “அண்ணாமலை தலைமை: மத்திய பாஜக செய்யவேண்டியது என்ன?”

  1. மிக அருமை. குறிப்பாக கீழே உள்ளவை அவசியம் செயல்படுத்த வே ண்டும்.
    அரசியல் களத்தில் திராவிட பிரிவினைவாத மற்றும் இந்து விரோத சித்தாந்தத்துக்கு எதிரான சக்திகள் கூர்மையடைந்து அவற்றுக்கிடையே ஒற்றுமை பெருகி வெற்றி பெற வேண்டுமென்றால், தேசியக் கட்சி மற்றும் அதன் பிராந்தியக் கட்சி இரண்டின் இலக்கும் ஒன்றாக இருக்கவேண்டும். மத்திய தலைமை, தான் வெற்றி பெற கூட்டணி தேவை என்றும், மாநிலத் தலைமை தான் வெல்ல தனித்து நிற்பதே நல்லது என்றும் கருதுமென்றால் அதிருப்தியும் விலகலுமே அதிகரிக்கும்.

    மாநிலத் தலைவர் இங்கு இருக்கும் ஊழல்வாதியை விமர்சித்தால் மறு நாளே மத்திய தலைமை அந்த ஊழல்வாதியை சிறையில் அடைக்கவேண்டும்.
    இந்து விரோதப் பேச்சு பேசிய ஒருவரை மாநிலத் தலைமை கண்டித்தால் மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.
    மத்திய தலைமையை யாரேனும் விமர்சித்தால் மறு நாளே அவரை எங்கும் பேசவிடாமல் மாநில அரசு முடக்கவேண்டும்.
    பரஸ்பரம் மிக்ஸர் ஊட்டி விட்டுக் கொண்டிருந்தால் எதிரி கூடுதலாக அல்வாவும் கொடுத்துவிட்டு ஆட்டம் போடத்தான் செய்வான். கடைசியில் கெளரவமான தோல்வி என்று மாநிலத்தலைமையும் நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருகிறோம் என்று மத்திய தலைமையும் அறிக்கை விட்டுக் கொண்டே இருக்கவேண்டியதுதான்.

    அண்ணாமலையை வலுவான தலைவராக ஆக்க மத்திய தலைமை முன்வரவேண்டும்.
    திமுக, விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளில் முக்கியமான சிலரை இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படைவாதிகளில் சிலரை கைது செய்து காட்டவேண்டும்.
    அதுவே மாநிலத்தலைவருக்கு கட்சியினரிடம் மட்டுமல்ல; மக்களிடமும் செல்வாக்கைப் பெற்றுத் தரும்.

    உண்மையில் இதைச் செய்துவிட்டு அண்ணாமலையின்

  2. *’ஓட்டுக்கு துட்டு’*

    இதுவே…
    *நமக்கு வேட்டு*❗

    1967 ல்…

    முதன்முதலாக திமுக ஆட்சியை கைப்பற்ற…

    கையாண்ட யுக்தி இது தான்

    இன்று வரை இந்த நடைமுறை புரையோடி…

    புற்று நோயை விட ஆபத்தான விளைவை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

    ஆம்…

    இலவசங்கள்..

    மக்களின் சோம்பேறி தனத்தை தூண்டி, ‘இயலாமை’ நிலைக்கு கொண்டு செல்கிறது.

    இதனால்,
    ஆரோக்கியமற்ற சமுதாயத்தையும்,

    ஆரோக்கியமற்ற சந்ததியினரையும் உருவாக்கி வருகிறது திராவிட அரசியல்.

    ஆட்சியை பிடிக்க…

    அரசியல்வாதிகளுக்கு தேவை,
    *நமது ஓட்டு*

    கைமாறாக நாம் ஆட்சியாளர்களிடம் பெற வேண்டியது…

    *நல்ல தரமான குடிநீர்*

    *நல்ல தரமான கல்வி*

    *நல்ல தரமான மருத்துவம்*

    *தூய்மையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம்*

    *நல்ல தரமான சாலைகள்*

    *போதுமான போக்குவரத்து வசதிகள்*

    *மின்சார வசதிகள் மற்றும் தடையில்லா மின்சாரம், எரிவாயு*

    *அனைத்து போதை பொருட்கள் ஒழிப்பு*

    *உலகின் சிறந்த வாழ்வியலான…*

    *நமது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் ஆன்மிகத்தை காக்கும் வகையில் தக்க நடவடிக்கை*

    *’நஞ்சற்ற’ விளைபொருட்களை தரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள்*

    *ஆரோக்கியத்தை கெடுத்து, ஆயுளை குறைக்கும் ‘உணவு கலப்படங்களை’ அடியோடு ஒழித்தல்*

    *பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்*

    *’குண்டு வெடிப்பு’* *போன்ற பயங்கரவாத செயல்களை தடுக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை.*

    *கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, நிலஅபகரிப்பு மற்றும் ரவுடிஸம்…*

    *இவற்றிற்கு எதிராக கடும் நடவடிக்கை*

    *இதன் மூலம் அனைவரும் பாதுகாப்பாக ‘வாழும் சமுதாய சூழல்’*

    *இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ஊக்குவித்தல்*

    *தொழில் துறைகளை பெருக்கி, அந்நிய முதலீடுகளை ஈர்த்து வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்*

    இது போன்ற ஏராளமான அடிப்படை விஷயங்களை தான் நாம் கேட்டு பெற வேண்டும்.

    அல்லது…

    இது போன்ற விஷயங்களை தர கூடிய ஆட்சியாளர்களை தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    அப்போது தான்,
    நமது வாழ்க்கை மட்டுமல்லாமல்…

    நமது சந்ததியினர் வாழ்வும் சிறப்பாக அமையும்.

    இதையெல்லாம் மறந்து விட்டு…

    ஒரு சில நாட்களை சந்தோஷமாக கழிக்க…

    கை செலவுக்கு என்று,
    ஊழல்வாதிகள் தரும் 500 ரூபாய், 1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு…

    நமது வாழ்க்கை
    மற்றும்
    நமது சந்ததியினர் வாழ்க்கையையே அடமானம் வைப்பது…

    *எந்தளவு அறிவுடமை?*

    அதர்மக்காரர்களிடம் நமது வாழ்க்கையை ஒப்படைத்து விட்டு…

    நல்ல குடிநீர் கிடைக்காமல்…

    நல்ல உணவு பொருட்கள் கிடைக்காமல்…

    பல பல அவஸ்தைகள்!

    மேலும்,

    நல்ல தரமான கல்வி பெற…

    நல்ல மருத்துவ சிகிச்சை பெற…

    லட்சக்கணக்கில் பணத்தை தனியாரிடம் கொட்டி கொடுத்து…

    சிறுக சிறுக சேமித்த கையிருப்பை காலியாக்கி விட்டு…

    பின்னர்,
    கடன் மேல் கடன் வாங்குவதும்…

    அதற்கு, வட்டி மேல் வட்டி கட்டுவதுமாக…

    அவஸ்தை மேல் அவஸ்தை படுவதை தவிர வேறு வழியில்லை.

    இந்த ஊழல் அரசியல்வாதிகளோ…

    நம்மிடம் ஜாதி, மத, இன, மொ‌ழி உணர்வுகளை தூண்டி…

    *’பிரித்தாளும் சூழ்ச்சியில்’* நம்மை வீழ்த்தி…

    சொத்துகள் மேல் சொத்துகளாக குவித்து வருகிறார்கள்.

    அவர்களின் குடும்ப சொத்துகளின் விபரங்களை மட்டுமல்லாமல்…

    அவர்களின் ‘பினாமி’ பெயரில் உள்ள சொத்துகளின் விபரங்களையும் நாம் அறிந்தால் தான்…

    நயவஞ்சகர்களின் சுயரூபத்தை நாம் சரியாக புரிந்து கொள்ள முடியும்.

    அன்று முதல் இன்று வரை…

    *பொய், உருட்டு, புரட்டு, திருட்டு என நம்மை ஏமாற்றி வரும் இந்த திராவிட கும்பலின்…*

    *மாய வலையில் நாம் மாட்டிக் கொண்டிருப்பது* நமக்கே அப்போது தான் தெரிய வரும்.

    ‘உலகம் போற்றும் உன்னத வாழ்வை’ வாழ்ந்திருக்க வேண்டிய நாம்…

    ‘வெந்ததை தின்று…
    விதி வந்து சாகும்’ நிலையில் தான் நாம் உள்ளோம்…

    என்பதும் புரிய வரும்.

    இனிமேலும் இந்த நிலை தொடர்ந்தால்…

    அந்த கடவுளே நினைத்தாலும் நம்மை காப்பாற்ற முடியாது.

    ஆம்…

    இப்போதே *தமிழகத்தின் கடன் சுமை சுமார் 7 லட்சம் கோடிகளை தாண்டி…*

    *இன்னும் மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் கோடிகள்* என்ற பரிதாப நிலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறது.

    அதாவது,
    இலங்கையை போன்று…

    *’திவாலாக’* கூடிய நிலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறது.

    *’வரும்முன் காப்பதே சிறந்தது’*

    இந்த அசம்பாவிதம் நடக்காமலிருக்க வேண்டுமானால்…

    *’நாம் இந்தியராய் ஒன்று பட வேண்டும்’*

    இந்த
    *’திராவிஷ’ இருளில் இருந்து…*

    *நம் தமிழகத்தை மீட்டெடுக்கும் பெரும் பொறுப்பு…*

    *நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.*

    மத்தியில் அமைந்தது போல…

    *’வலிமையான, நேர்மையான தலைமையை நம் மாநிலத்திலும் உருவாக்க வேண்டும்”*

    அதற்கு,
    *தகுதியான தலைவர் யார்?*

    நன்றாக சிந்தித்து பாருங்கள்!

    ஜாதி, மத, இன, மொ‌ழி காழ்ப்புணர்ச்சியை தவிர்த்து விட்டு…

    *சரியாக பகுத்தறிந்து பாருங்கள்…*

    மனசாட்சியுடன், இறைத்தன்மையுடன் மனதை நடுநிலையோடு நிறுத்தி அலசி பாருங்கள்.

    அப்போது…

    உங்கள் முன்னால் நிற்பது…

    *அண்ணாமலை*
    மட்டுமாக தான் இருப்பார்!

    கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவரை தவிர வேறு யாரும் புலப்படவில்லை.

    *நல்ல துடிப்பும்,*
    *நல்ல படிப்பும் மிக்க இளைஞர்.*

    *நேர்மையும், திறமையும் மிக்க நல்ல மனிதர்.*

    *கடுமையான உழைப்பாளி.*

    தான் பிறந்த மண்ணுக்கு *’நம்மால் முடிந்த நல்லதை செய்ய வேண்டும்’* என்ற குறிக்கோளுடன்…

    IPS அதிகாரத்தை ஒரம் கட்டிவிட்டு…
    அரசியல் அதிகாரத்திற்கு வந்துள்ளார்.

    இவரின் இந்த பண்புகளால்…

    இன்று,
    அனைத்து தரப்பு மக்களின் மனங்களிலும் இடம்பிடித்து கொண்டிருக்கும் *உன்னதமான தலைவன்.*

    ஆக…

    தமிழகத்தை சீர்திருத்த, இவரை விட சிறந்த தலைவர்…
    இப்போதைக்கு நமக்கு இல்லை.

    சிலர் நினைக்கலாம்…

    ‘ஏன் சீமான் இல்லையா?

    அவர் கூட தமிழ் தேசியம் பேசி…

    திராவிடத்தை எதிர்த்து…

    ஊழலற்ற நல்லாட்சி தருவதாக தானே பேசி வருகிறார்.’ என்று.

    சீமான் பேச்சில் தான் புலி!

    செயலை நன்றாக கவனித்து பாருங்கள்…

    *நேரேதிரானவர்.*

    திராவிடத்திற்கு சற்றும் சளைக்காத வகையில்…

    பொய், உருட்டு, புரட்டோடு
    அண்ட புளுகு, ஆகாச புளுகுகளை அள்ளி விடுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.

    உடனே,

    விதண்டாவாதத்திற்கு சிலர்…

    அண்ணாமலையை மீதும் ஏதாவது குற்றம் குறைபாடுகளை சுட்டிக்காட்டலாம்.

    ஒருவேளை அதில் சிறிது உண்மை கூட இருக்கலாம்.

    உலகில் 100 சதவீதம் உத்தமராக…
    அந்த புத்தர் கூட இல்லை.

    *’குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்’*

    என்னும் குறள் நெறிப்படி பார்த்தாலும்…

    அண்ணாமலை தான் நமது முதல் தேர்வாக இருக்கும்.

    தமிழகத்தின் அகல் விளக்காக இப்போது அண்ணாமலை திகழ்கிறார்.

    இந்த அகல் விளக்கை அணைத்து விட…
    பல தீய சக்திகள் திட்டம் தீட்டி வருகிறது.

    இதை அணையா விளக்காக…

    திருவண்ணாமலை மீது ஏற்றி…

    ‘பெரும் ஜோதியாக’ மாற்ற வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

    இன்று,
    நமது தமிழகத்திற்கும்…

    நாளை,
    நம் பாரதத்திற்கே ஒளி கொடுக்க கூடிய வல்லமை வாய்ந்தவர்…

    *நமது அண்ணாமலை!*

    நமது தமிழகத்தில் உள்ள
    தேச விரோதிகளை, ஊழல்வாதிகளை வேரோடு பிடுங்க…

    இவரை விட்டால் இப்போதைக்கு வேறு யார் உள்ளார்?

    கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்ட திராவிட
    கயவர் கூட்டத்தை பாருங்கள்…

    தன் தலைவனை கொன்றவனை…
    கூட்டணி கட்சி முதல்வர் கட்டித்தழுவி பாராட்டுகிறார்.

    ஆனாலும் வலிக்காதது போல் நடிக்கும் *காங்கிகள்!*

    முஸ்லீம் கட்சிகளை உள்ளடக்கி… *மதச்சார்பற்ற கூட்டணி!*

    வேங்கைவயலில் குடிநீரில் மலத்தை கலந்த போதிலும் வாயை திறக்காத…
    *கார்ட்டூன் சிறுத்தைகள்!*

    கேரளாவில் எதிரிகளாகவும்….
    இங்கே காதலர்களாகவும் திரியும்…
    *காங்கி & கம்மிகள்!*

    ‘சுடாலினை எப்படி முன்னிறுத்தலாம்?’ என்று வீறு கொண்டு கட்சியை விட்டு வெளியாகி…

    தனிக்கட்சி கண்டவர் இன்று சொல்கிறார்,
    “எங்கள் வருங்கால முதல்வர் உதயநிதி வாழ்க!” என்று.

    இதையெல்லாம் சகித்துக்கொண்டு…

    இவர்களை ஆட்சி பீடத்தில் அமர வைத்த நம்மவர்களை…

    *’அப்பாவிகள்’* என்பதா?

    *’அடப் பாவிங்களா?’* என்பதா?

    தொலைநோக்கு பார்வை இல்லாமல்…
    அப்போதைக்கு ‘கிடைச்ச வரைக்கும் லாபம்’ என்ற மனபான்மையில்…

    ஈரோடு வரைக்கும் பெருவெற்றியை பரிசளித்திருக்கிறார்கள் *அ(ட)ப்பாவி மக்கள்!*

    இன்று,
    அண்ணாமலை அரசியலுக்கு வரும் வரை…

    ‘தமிழகத்தில் தாமரை மலருமா?

    குஜராத் போன்று தமிழகமும் வளருமா?’

    என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள்
    ஏங்கி தவித்து கொண்டிருக்க…

    இப்போது அண்ணாமலை வருகைக்கு பிறகு தான் புத்துணர்வு அடைந்துள்ளார்கள்.

    *’தாமரை மலருந்தே தீரும்’* என்று 100 சதவீதம் நம்பிக்கையில் உள்ளார்கள்.

    அதை மெய்ப்பிக்கும் விதமாக…

    அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் கூட்டம் அலை மோதுகிறது.

    அனைத்து ஊடகங்களிலும் அண்ணாமலையின் பேச்சுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெருகி வருகிறது.

    காரணம்…

    ஆதாரங்களுடன் ஆளும் கட்சியிடம் கேட்கும் கேள்விகளும்…

    அதற்கான விளக்கங்களும்.

    வரும் ஏப்ரல் 14ல்…

    திமுகவினரின் இரண்டரை லட்சம் கோடிகளுக்கு மேற்பட்ட சொத்து கணக்குகளை ஆதாரங்களுடன் வெளியிட போவதாக…

    அண்ணாமலை அறிவித்த நாளிலிருந்து…

    ‘தங்கள் ஆட்சிக்கு ஆபத்து வருமா?’

    ‘யார் யார் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும்?’
    என்று ஆளும் கட்சியினர் பயந்து கொண்டிருக்க…

    கூட்டணி கட்சியினரும், ‘தங்களையும் ஆட்சியமைக்க அண்ணாமலை விடமாட்டாரா?’
    என அஞ்ச தொடங்கி விட்டனர்.

    காரணம்…

    *” ‘ஓட்டுக்கு துட்டு’ எப்போதும் கொடுக்க மாட்டேன்…”* என்றும்…

    *”அப்படி கொடுப்பவர்களால் எப்படி சுத்தமான, ஊழலற்ற ஆட்சி செய்ய முடியும்?”*
    என்றும்…

    சமீபத்தில் அண்ணாமலை பேசியது இவர்களுக்கும் அடிவயிற்றை கலக்க ஆரம்பித்துவிட்டது.

    ஏனெனில்,

    *திராவிட கட்சிகள் இரண்டுமே…*

    *ஊழல் இல்லாத ஆட்சிக்கு உத்திரவாதம் இல்லாத கட்சிகள்.*

    கைதேர்ந்த திருடன்
    ‘தடயம் இல்லாமல் திருடுவதை போல…’

    திமுகவினர் ‘ஆதாரம் இல்லாமல் ஊழல்’ செய்வதில் பெயர் போனவர்கள்.

    அப்படியிருந்தும்,
    ஊழலுக்கு ‘உ’ போடும் முன்பே…

    அண்ணாமலை அடுக்கடுக்காக பல ஆதாரங்களை தாக்கல் செய்து விடுகிறார்.

    இதனால் பாதிக்கு பாதி ஊழல் தவிர்க்கப் பட்டு வருகிறது.

    அதிமுகவை எடுத்து கொண்டால்…

    அஞ்சி, அஞ்சி ஊழல் செய்து…
    சில இடங்களில் அகப்பட்டு கொண்ட வரலாறுகளும் உண்டு.

    இதை வைத்து பார்க்கும் போது…

    ‘கொள்ளையனுக்கு பயந்து…
    திருடன் வீட்டிற்குள் புகுந்த மாதிரி ஆகிவிட கூடாது.’

    என்று எண்ணியதால் தான் ‘அதிமுகவுடன் கூட்டணியை தொடர விரும்பவில்லை’ என்று அண்ணாமலை தனது கருத்தை வெளிப் படுத்தினார்.

    முன்பு குஜராத்திலும்…

    இப்போது மத்தியிலும்
    மோடி செய்து வரும்…

    *”ஊழலற்ற சுத்தமான ஆட்சி”* யை…

    தமிழகத்திலும் கொண்டு வருவதே தனது அரசியல் பயணத்தின் ‘ஒற்றை குறிக்கோள்’
    என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

    இதற்கு…
    அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் எப்படி சாத்திய படும்?

    ஆகவே தான்,
    அண்ணாமலை,
    *’பாஜக தனித்து போட்டியிட வேண்டும்…’*

    *’பாஜக தலைமையில் தான் கூட்டணி வேண்டும்’*

    என்று விரும்புகிறார்.

    இதில் என்ன தவறு உள்ளது?

    ‘நல்ல ஆட்சி வேண்டுமா?’

    ‘நயவஞ்சகர்களின் ஆட்சி வேண்டுமா?’

    என்பதை இனி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

    ‘கர்ம வீரர்’ காமராஜருக்கு பிறகு…

    இது போன்ற அரசியல் தலைவரை தமிழகம் அடைய…
    எத்தனை வருடம் காத்திருக்க வேண்டியதாயிற்று!

    காலமும், கடவுளும் சேர்ந்து…
    நமக்காக கொடுத்திருக்கும் அற்புதமான சூழல் இது.

    இதை தவற விட்டால்…

    இனி, தமிழகத்தை அந்த கடவுளாலேயும் காப்பாற்ற முடியாது.

    ஏனெனில்,

    இன்னொரு இலங்கையாக மாற கூடிய சூழலின் அருகில் தான் உள்ளது நமது தமிழகம்.

    அப்போது,
    ஓட்டுக்கு ஒரு லட்சம் வாங்கினாலும்…

    ஒரு மாதத்திற்கு கூட பத்தாது.

    அப்போதும் கூட,
    மோடி, இலங்கையை காப்பாற்றியது போல…

    இங்கும் ஆதரவு கரம் நீட்டி நம்மை காப்பாற்றுவார்.

    அத்தனை உதவிகளையும் வாங்கி கொண்டு…

    உபிஸ்கள்,
    ‘மோடி தமிழ் நாட்டிற்கு என்ன செய்தார்?’ என்று தான் உருட்டுவார்கள்.

    உதவாக்கரை தலைவர்களோ, தனியறையில் காலில் விழாத குறையாக வளைந்து நெளிந்து விட்டு…

    தமிழகம் வந்ததும் காலரை தூக்கி விட்டு, “மோடியை காண நாங்கள் செல்லவில்லை…
    அவர் தான் எங்களை காண வரவேற்பறைக்கு வந்தார்” என்பார்கள்.

    மேலும்,
    மத்திய அரசு அனுப்பி வைக்கும் அத்தனை நிவாரண பொருட்களிலும் ‘ஸ்டிக்கர்’ ஒட்டி…

    ‘மோடி’ செய்த நன்மைகள் அனைத்தையும் மறைக்கும் ‘கேடிகள் தான் இவர்கள்.

    மேலும்,

    ‘மதசார்பற்ற ஆட்சி’ என்று சொல்லிக் கொண்டு…

    தொடர்ந்து பல *இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு வருகிறது.*

    கனிம வளங்கள் பெரிய அளவில் கொள்ளை போய் கொண்டிருக்கிறது.

    இதனால் *வறட்சியை சந்திக்கும் சூழல்* அருகில் உள்ளது.

    மாணவர்கள் தேர்வு எழுத பயந்து…
    *தேர்வை புறகணிக்கிறார்கள்.*

    ஆனால்…

    *டாஸ்மாக்கில் மட்டும் கூட்டம் அதிகரிக்க* அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள்.

    இதனால்,
    பல குடும்பங்களில் *விதவைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.*

    நிலமை இவ்வாறு கைமீறி போய் கொண்டிருக்க…

    *’ அண்ணாமலை அவசர படுகிறார்’* என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள்…

    ‘மூழ்கி கொண்டிருக்கும் கப்பலின் ஓட்டைகளை நிதானமாக அடைத்தால் போதும்…’
    என்று செயல்பட்டால்…

    கப்பல் மூழ்குவதை தவிர்க்க முடியாது.

    இது போன்ற வேளையில் எது முக்கியம்?

    *நிதானமா?*

    *வேகமா?*

    கப்பலை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் *’வேகமாக’* தான் செயல்படுவார்கள்…

    தங்களை மட்டும் காப்பாற்றிக் கொள்ள நினைப்பவர்கள் வேண்டுமானால் ‘நிதானமாக’ செயல்படுவார்கள்.

    இதில் ‘எது முக்கியம்?’ என்பது ஒவ்வொருவரின் மனநிலையை பொருத்தது.

    ஆகவே,

    கப்பலை காப்பாற்றுபவரை…

    பயணிக்கும் நாம் அனைவரும் சேர்ந்து…
    காப்பாற்ற வேண்டியது நமது கடமை.

    *எந்த நல்ல செயலையும் தள்ளி போக்கூடாது.*

    அவ்வாறு தள்ளி போட்டால் அது நடக்காமல் போய்விடும்.

    காலம் தாழ்த்தாமல்…

    கடமையை சரியாக செய்தால் தான்…

    சரியான பலன் கிடைக்கும்.

    இதை தான் வள்ளுவர்,

    *தூங்காமை கல்வி துணிவுடைமை* *இம்”மூன்றும்” நீங்கா நிலனாள் பவர்க்கு*

    அதாவது,
    *காலம் தாழ்த்தாமை,*
    *கல்வி,*
    *துணிவு*
    இந்த மூன்று பண்புகளும்…

    நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை!

    என்று தெளிவாக கூறியுள்ளார்.

    ஆகவே,

    ‘அப்புறம், அப்புறம்’ காலம் தாழ்த்தி…

    ‘தும்பை விட்டு…
    வாலை பிடிக்கும்.’
    தவறை செய்யாமல்…

    முழ்கி கொண்டிருக்கும் கப்பலை காப்பாற்ற…

    உடனே அனைத்து காரியங்களையும் செய்தாக வேண்டும்.

    *இப்போது இல்லையெனில்…*

    *எப்போதும் இல்லை.*

    ஆகவே,

    *நல்ல மாற்றங்களை வரவேற்றால் தான்…*

    *நல்வாழ்வு பெற முடியும்*

    ஆகவே,
    வரும்காலத்தில்
    *’ஓட்டுக்கு துட்டு’* என்ற கலாச்சாரத்தை முறியடித்து…

    அண்ணாமலை தலைமையில்…

    *நல்லவர்களை,*
    *வல்லவர்களை தேர்ந்தெடுத்து…*

    *நல்லாட்சி அமைய வழிவகை செய்வோம்*

    அப்போது,
    *அனைவரும் நலமுடன் வளமாக வாழ்வோம்.*

    *நன்றி!*

  3. சரி ஒரு வாதத்துக்கு சிறுபான்மை வாக்கு வங்கிக்காக அதிமுக பாஜகவோடு கூட்டணி இல்லை என அறிவித்தால் என்னாகும்?

    அடுத்த நிமிடம் காங்கிரஸ் அதிமுகவோடு ஒட்டும், வரலாற்றில் காங்கிரஸுக்கு நெருக்கமான கட்சி அதிமுக ஆனால் ஜெயாவின் சில பிடிவாதம் காரணமாக திமுக அதனை பயன்படுத்தி கொண்டது

    இப்படி அதிமுக காங்கிரஸ் இதர கோஷ்டி கூட்டணி அமையும் பட்சத்தில் திமுகவின் பலம் குறையும், அதே நேரம் பாஜக சில இடங்களில் வெற்றிபெறும் சாத்தியம் அதிகரிக்கும்

    அதிமுகவுடன் சேர்ந்து ஒரு தொகுதியில் வெல்வதை விட அதனை கழற்றிவிட்டால் பாஜக பல இடங்களில் வெல்லும் அப்படியே திமுகவின் பலமும் குறையும்

    சந்தடி சாக்கில் சிறுபான்மை ஆதரவு அதிமுகவுக்கு எவ்வளவு என்பதையும் அளக்கலாம் அது மிக மிக கீழான அளவில்தான் இருக்கும்

    அண்ணாமலையின் கணக்கு ஒரு வகையில் சரிதான், காலம் அதனை சரியாக்கி காட்டும்

  4. *’வாய் கொழும்பு சீலைல வடியுது…’*

    என்ற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருது!

    *யாருக்கு சவால் விடுகிறார் ராகுல்?*

    நரேந்திர மோடியிடமா?

    அல்லது

    பூர்ணேஷ் மோடியிடமா?

    அல்லது

    சூரத் நீதிமன்றத்திடமா?

    அல்லது

    மக்களவை செயலகத்திடமா?

    பிரதமர் மோடியை ‘திருடன்’ என்று இழிவுபடுத்திய போதும் கூட…

    மோடி பெருந்தன்மையுடன் எந்த அவதூறு வழக்கும் போடவில்லை.

    ராகுல் அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை…

    *ஜாதிக்காரர் அனைவரும் ‘திருடர்கள்’* என்று இழிவுபடுத்தினால்…

    மற்றவர்கள் சும்மா விடுவார்களா?

    அதனால் தான் *பூர்ணேஷ் மோடி* ராகுல் காந்தி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எச்.எச்.வர்மா,

    ‘இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 499 மற்றும் 500-ன் கீழ்…

    *’ராகுல் காந்தி குற்றவாளி’* என்று தீர்ப்பளித்தார்.

    மேலும்,

    ராகுல், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில்…

    ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியதுடன்…

    தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளார்.

    இதை தொடர்ந்து…

    மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(3) ன் படி…

    நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர் வேறு ஏதேனும் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு,

    *இரண்டு வருடங்கள்…*
    அல்லது
    *அதற்கும் அதிகமாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.*

    இதன்படி தான் மக்களவை செயலகம்,
    ராகுல் காந்தியின் MP பதவியை தகுதி நீக்கம் செய்தது.

    இந்த சட்டத்திற்கு எதிராக *மன்மோகன் சிங்* ஆட்சியில் அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தார்…

    அப்போது, அந்த சட்டத்தின் நகலை *கிழித்தெறிந்தது* இதே ராகுல் தான்!

    அந்த ஆணவ செயல் தான்…

    இன்று அவரது பதவியை பறித்து விட்டது.

    ஆக…
    *அன்று விதைத்தே இன்று அறுவடை செய்கிறார்.*

    *கர்மா*

    உண்மை நிலைமை இவ்வாறு இருக்க…

    சம்பந்தமே இல்லாமல் ‘மோடி தான் காரணம்’ என்று குற்றம் சாட்டுவதும்…

    மோடியிடம் ‘சவால்’ விடுவதும் எந்த வகையில் நியாயம்?

    *எந்தளவுக்கு அறிவுடமை?*

    இவர்களின் பழக்க வழக்கங்கள் எப்பவுமே இப்படித்தான்.

    வரிசையாக தவறு செய்ய வேண்டியது…

    யாராவது வழக்கு தொடர்ந்தால்…

    அதற்கு ‘மோடி தான் காரணம்’ என்று பழி சுமத்துவது.

    பின்னர்,
    வழக்கை தீர விசாரித்து நீதிமன்றம் எச்சரிக்கையோ, தண்டனையோ வழங்கினால்…

    அதற்கும் ‘மோடி தான் காரணம்’ என்று நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டியது.

    இப்படி தான்…

    *’ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல்’* என்று அவதூறுகளை பரப்பினார்கள்…

    வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது.

    இறுதியில் அது ‘பொய்’ என்று நிரூபணமாக…

    அப்போது,
    *உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் ராகுல்*

    https://www.hindutamil.in/news/india/965611-supreme-court-warns-against-rafale-verdict-unchanged-rahul-gandhi.html

    இந்த உண்மையை தெரிந்தும் 200 ரூபாய் உபிஸ்கள்…

    இப்போது வரை
    ‘ரபேல்’ பற்றி பொய்யாக உருட்டி வருகிறார்கள்

    இதன் மூலம் தாங்கள் *’பொய்யர்கள்’* என்று மக்களுக்கு நிரூபித்து…

    தங்கள் தலையிலேயே மண்ணை அள்ளி போட்டு கொள்வது தான் மிச்சம்.

    அதே போல 2019ல்…

    ‘உச்சநீதிமன்றமே பிரதமர் மோடியை திருடன்’ என்று கூறியதாக…

    *’பொய் பிரச்சாரம்’ செய்ய…*

    அந்த வழக்கிலும் *ராகுல் பாட்டியாலா நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.*

    இவ்வாறு பொய் பிரச்சாரம் செய்வதும்…

    பின்னர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பதும்…

    இவர்கள் ரத்தத்தில் ஊறி போன விஷயம் தானே!

    ஆம்…

    காந்தி கொலையில் கூட…

    RSS பேரியக்கத்தை தொடர்பு படுத்தி அன்றும் *’பொய் பிரச்சாரம்’* செய்து விட்டு…

    பின்னர்,
    *அம்பாலா நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்கள்.*

    இப்போது வரை அதே பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்கள் சில *தேசவிரோதிகள்!*

    ஆம்…

    *தேசபக்தர்கள் நிறைந்த ‘RSS’ பற்றி தவறாக சித்தரித்து வருபவர்கள் தேச விரோதிகள் தானே!*

    இனி,
    *’புதிய இந்தியா’* வில்
    தேசவிரோதிகளுக்கு இடமில்லை.

    *தேசத்தின் மீது பற்றும்…*

    *மக்கள் நலனில் அக்கறையும்* கொண்டவர்கள் மட்டுமே இந்த நாட்டை ஆள முடியும்.

    களவாணிகளும், காழ்ப்புணர்ச்சி காரர்களும் காணாமல் போவது உறுதி

    ஆகவே,
    திருடர்கள் இனியாவது,

    *திருந்துங்கள்…*

    அல்லது

    *திருத்தப்படுவீர்கள்!*

    ஆம்…

    முத்தாய்ப்பாக அடுத்து வர போகிறது…

    *’நேஷனல் ஹெரால்டு’ வழக்கின் தீர்ப்பு!’*

    இதற்கு மன்னிப்பு கேட்டாலும் நீதிமன்றம் விடப்போவதில்லை.

    காரணம்…

    கடந்த ராஜிவ்காந்தி அரசு செய்த…
    *’போபோர்ஸ் ஊழலை’* விட மிகப்பெரிய ஊழல் தான்…

    இந்த *’நேஷனல் ஹெரால்டு’ ஊழல்!*

    எல்லா டீலிங்கிலும் ‘கமிஷன்…’
    மற்றும்
    ‘வாங்கிய சொத்துகள்’ என வரிசை கட்டி நிற்கின்றன ஆதாரங்கள்.

    கொஞ்சமா உப்பை சாப்பிட்டிருந்தால்…

    கொஞ்சமா தண்ணீர் குடித்தால் போதும்.

    ஆசை…

    பேராசை!

    மூட்டை மூட்டையா தப்பை பண்ணிட்டு…

    தண்டனையிலிருந்து தப்ப முடியுமா?

    அவ்வாறு தப்பி செல்வதற்கா,
    இந்திய அரசியலமைப்புச் சட்டமும்,
    நீதி மன்றங்களும் உள்ளது?

    இப்போது போல் அப்போதும்…

    நீதிமன்றம் தண்டனை வழங்கும் போது,

    ”மோடி தான் காரணம்…

    மோடி பழி வாங்குகிறார்…

    மோடி பயப்படுகிறார்!”

    என்று உருட்டி, புரட்டி மோடி மீது வீண் பழி சுமத்தத்தான் போகிறார்கள்.

    இதில் மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம் என்னவென்றால்…

    *’மோடி மீதான அவதூறு வழக்கில் ராகுல் சிறை தண்டனை!’*

    என்று…

    *தவறான கருத்துருவாக்கத்தை* ஊடகங்களும் சேர்த்து செய்து வருவது தான்.

    எதிர் அணியினர்கள் அரசியல் லாபத்திற்காக இது போன்ற தவறான பிரசாரம் செய்து வரலாம்…

    ஆனால்,
    *ஊடகங்கள் என்ன லாபத்திற்காக இது போன்ற தவறான பரப்புரை செய்ய வேண்டும்?*

    முன்பு ஜெயலலிதா ஜெயிலுக்கு செல்லும் போது…

    யாரை குற்றம் சுமத்தி செய்திகள் வெளியிட்டார்கள்?

    அவரின் ‘முதல்வர்’ பதவி பறி போக யார் காரணம்?

    *செய்த ஊழலா?*

    *திமுகவா?*

    *நீதிமன்றமா?*

    *சட்டமன்ற விதிகளா?*

    அப்போது சரியாக சிந்தித்த ஊடகங்கள் இப்போது மட்டும் தவறாக சிந்திக்கிறதே…

    ஏன்?

    *பகுத்தறிவு மழுங்கி விட்டதா?*

    அனைத்தும் ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்!

    இவ்வாறு ஊடகங்களும் சேர்ந்து மோடி மீது,

    *வீண்பழி சுமத்துவதாலோ…*

    *உதார் விடுவதாலோ…*

    *சவால் விடுவதாலோ…*

    எந்த பிரயோஜனமில்லை.

    காரணம்…

    *மக்கள் தெளிவாக உள்ளார்கள்.*

    அன்றைய திராவிட ‘போலி’ பகுத்தறிவாதிகள் இல்லை.

    உண்மையை சரியாக அலசக்கூடிய, நிஜ பகுத்தறிவாதிகள் தான் இன்றைய மக்கள்.

    உங்களை ‘பொய் பிரச்சாரம்’ செய்ய சொன்னது மோடியா?

    நீங்கள் ‘ஜாதியை இழிவு படுத்தி’ பேச காரணம் மோடியா?

    உங்கள் ஆட்சியின் போது ‘ஊழல் செய்து சொத்துகளை குவிக்க’ சொன்னது மோடியா?

    ஆக…

    தப்புகள் அனைத்தும் செய்தது நீங்கள்.

    அதற்கான தண்டனையை வழங்குவது கூட நீதிமன்றங்கள் தான்.

    உண்மை இப்படியிருக்க, மோடி மீது பழி சுமத்துவதும்,

    மோடியிடம் சவால் விடுவதும்…

    உங்களின் *’மலிவான அரசியல் லாபத்திற்காக தான்’* என்பதை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்…
    என்று நினைக்கிறீர்களா?

    *’அயோக்கியர்கள் மீது அனுதாபம் கொண்டால்…*

    *நாட்டில் அக்கிரமங்கள் தான் பெருகும்’*
    என்பதை அறியாதவர்கள் அல்ல மக்கள்.

    1947ல் நாடு பிரிவினை போது…

    எல்லா சொத்துகளையும் விட்டு விட்டு பாகிஸ்தான் நோக்கி ஓடியவர்கள் போல…

    நீங்களும் ஓடி போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

    கீதையில் கூறியது போல…

    *இங்கிருந்து எடுக்கப்பட்டது ‘எல்லாம்’…*

    *இங்கேயே திரும்ப வந்து சேரும்.*

    விரைவில் இந்திய அளவில் மட்டுமல்ல…

    தமிழ் நாட்டிலும் அது நடக்க தான் போகிறது.

    அப்போது…

    *நம் நாடும், வீடும் சுபிட்சமாக மாறும்.*

    *நல்ல மாற்றமே*
    *நல்வாழ்வு தரும்.*

    *நல்வாழ்த்துக்கள்!*

    *நன்றி!*

  5. சாவர்க்கரை தன்னோடு ஒப்பிட்டு அப்படி மன்னிப்பு கேட்கமாட்டேன் என ராகுலார் சொல்வதெல்லாம் நேருவின் பேரனாக உச்சகட்ட காமெடி

    சாவர்க்ர் ஆயுத போராட்டம் தொடர்ந்த‌ வழக்கில் சிக்கி லண்டனில் கைது செய்யபட்டார், கப்பலில் இந்தியா அழைத்துவரபடும் பொழுது நடுகடலில் பிரான்ஸ் கப்பலுக்கு தப்பி செல்ல முயன்றபொழுது பிடிபட்டார்

    அவர் எந்நேரமும் தப்பி செல்லலாம் என அஞ்சிய பிரிட்டிஷ் அரசு, இந்திய சிறையில் அவருக்கு எழும் ஆதரவு உள்ளிட்ட எல்லாவற்றையும் சிந்தித்து அந்தமான் கொடும் சிறையில் அடைத்தது

    அங்கிருந்து மராட்டிய மாகாணம் ரத்னகிரி சிறைக்கு மாற்ற கோரினார் சாவர்கர், வீரசிவாஜி மேல் பெரும் அபிமானம் கொண்டிருந்தவரும் மறைக்கபட்ட அவன் வாழ்வை வெளிகொண்டுவந்தவருமான அவர் சிவாஜி நடமாடிய ரத்னகிரியிலே தன் வாழ்வை முடிக்கத்தான் அந்த சிறையினை கோரினார்

    அப்பொழுதுதான் அவர் லன்டன் கப்பலில் தப்பி செல்ல முயன்ற சம்பவம் காவல்துறையால் நீதிமன்றத்தில் சொல்லபட்டபோது, இனி அப்படி தப்ப முயற்சிக்கமாட்டேன் என வாக்குறுதி கொடுத்தார்

    இதுதான் சாவர்க்கர் கேட்ட மன்னிப்பு என காங்கிரஸ் உள்ளிட்ட பல கோஷ்டிகள் சொல்லிகொண்டிருக்கின்றன‌

    சரி, சாவர்க்கரை தனிதீவில் அடைத்த பிரிட்டிஷ் அய்யா நேருவினை ஏன் அந்தமானுக்கு அனுப்பவில்லை?

    வ.உ.சி செக் இழுத்த சிறைகள் இருக்கும் தேசத்தில் அய்யா நேரு மட்டும் மாளிகை சிறையில் இருந்து பல நூல்களை எழுதினார் எப்படி?

    இந்த சிறைவாழ்வுக்கு இடையில் அவர் சுவிஸ் செல்ல அனுமதி கொடுக்கபட்டது எப்படி?

    அதாவது சாவர்க்கர் மேல் பிரிட்டிசாருக்கு பயம் இருந்தது, அவர் தப்பி சென்றால் ஆபத்து எனும் அச்சம் இருந்தது காரணம் அவர் உண்மையான போராளியாக இருந்தார்

    நேரு எப்படியான போராளியாக இருந்திருந்தால் இப்படியெல்லாம் சலுகை கிடைத்திருக்கும் என்பது ஊகிக்க கடினம் அல்ல‌

    முன்பு இப்படி அலகாபாத் இந்திராமேல் கொடுத்த தீர்ப்புத்தான் எமர்ஜென்சி வர காரணமாயிற்று, அதாவது இந்திரா செய்தது தவறு என நீதிமன்றம் சொன்ன மறுநொடி தேசம் அவசரகாலத்தில் சிக்கி நீதிமன்ற மாண்பே இல்லாமல் போனது

    அப்படிபட்ட பாரம்பரியம் கொண்டது காங்கிரஸ்

    இதையெல்லாம் மறந்துவிட்டு ராகுலார் குதிப்பதெல்லாம் சரியல்ல‌

    நல்ல வேளையாக ராகுலார் இப்பொழுது பிரதமராக இல்லை இருந்திருந்தால் இன்னொரு எமர்ஜென்சி வந்திருக்குமோ என்னமோ?

  6. சந்தண கடத்தல் வீரப்பனாருக்கு அடுத்து அதிக நாள் தலமைறைவாக இருந்து சாதனைபடைத்தவர் எஸ்.வீ சேகர், பழனிச்சாமி அரசில் அந்த சாதனையினை அவர் செய்தார்

    பழனிச்சாமி அரசாங்கம் இறுக்கமானது, தூத்துகுடியிலெல்லாம் மிக பெரிய பலம் காட்டியது, அந்த அரசு காலத்திலும் பல மாதம் தலைமறைவாக இருந்து அசாத்திய சாதனைச் செய்தவர் எஸ்.வீ சேகர்

    அவரெல்லாம் இன்று அண்ணாமலையினை விமர்சித்து ஏதோ பேசுவதெல்லாம் சீரியசாக எடுக்க வேண்டியது அல்ல, அவரின் வழமையான காமெடிகளில் ஒன்று என்றே நகர வேண்டும்

    அன்னார் காமெடி எனும் பெயரில் பல இடங்களில் பார்வையாளருக்கு கோபம் வரவைப்பார், அது அவரின் சுபாவம், தன்னை காமெடியன் என நம்பவைக்க படாதபாடுபடுவார், மிக மிக சிரமபடுவார

    இப்பொழுதும் அவர் அதே பாணியில் கஷ்ட்பட்டு தமிழக மக்களை சிரிக்க வைக்க ஏதோ வழக்கம் போல முயற்சிக்கின்றார் அவ்வளவுதான் விஷயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *