திரிசூலம் அஹிம்சையின் அடையாளமாம்…

சிவபெருமான் கையில் இருக்கும் திரிசூலம்
அஹிம்சையின் அடையாளமாம்

தாய் அரக்கி
செங்குருதியில் குளிக்கும் திரிசூலம் கண்டு
இரவெல்லாம் தூங்காமல் துடித்துப் புரளும்
குட்டி அரக்கனுக்கும் சேர்த்துச் சொல்லிக்கொண்ட
தேவதைக் கதை போலிருக்கிறது.

(அல்லது
அது அப்படி சாத்விகமாக இருப்பதால்
அவன் அப்படிச் சொல்கிறானா?)

வேறென்ன
அழிக்க வேண்டியவர்களை அழிக்காவிட்டால்
திரிசூலமும் அஹிம்சையின் தட்டக்குச்சிதான்.
*
குரு நானக் மெக்கா சென்றார்
சீனா சென்றார்
லங்கா சென்றார்
தாய்லாந்தும் சென்றாராம்

எங்குமே அவர் யாரையும் ஹிம்சிக்கவில்லையாம்.

அன்பையே போதித்தாராம்
அஹிம்சையையே போதித்தாராம்

பின் என்ன கேசத்துக்கு
கேசம் அறுக்காதே… பகையை அறு…
புத்தியைத் தீட்டுவதோடு
கத்தியையும் தீட்டிக்
கைவசமே வைத்துக்கொள் என்றாராம்…

சரி… குரு நானக் அன்பை போதித்தார் என்றே வைத்துக்கொள்வோம்.

அப்பாவிகளையும் அவர்தம் குருமார்களையும்
கொன்று குவித்தவர்கள் யார்..?

அதை அவன்கள் அன்பினால்தான் செய்தான்களா..?
அவன்களை அன்பால்தான் திருத்தச் சொன்னாரா குரு நானக்

உன் ஒரு கையை அவன் வெட்டினால்
அவனுடைய இரண்டு கைகளையும் வெட்டு என்றுதானே போதித்தனர்.

ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தைக் காட்டச் சொல்பவன்
அன்பை அல்ல… அடிமைத்தனத்தையே போதிக்கிறான்.

அடிவாங்கியவனிடம்
அடுத்த கன்னத்தைக் காட்டச் சொன்னவன்
அடித்தவனிடம் ஒன்றுமே சொல்லவே இல்லையே…

அடிக்கிறவனின் கர்த்தர் அப்படித்தான்
அடிவாங்குபவனை
அடி வாங்கிக் கொண்டே இருக்கச் சொல்வான்.

கொஞ்சமாவது
சுய மரியாதையும் சொரணையும் இருந்தால்
அடிப்பவன் கன்னத்தில் திருப்பி அறைவான்

நீ என்னை ஒரு கன்னத்தில் அறைந்தால்
நான் உன்னை மறு கன்னத்தில் அறைவேன்
இதுதானே சமத்துவம்.
இதானே சமூக நீதி.
இதுதானே உரிமைக்குரல்
இதுதானே பகுத்தறிவு.

எல்லா தெய்வங்களும்
அபய ஹஸ்தமே காட்டுகிறார்களாம்

தன் கட்சியும் அதையே காட்டுகிறதாம்…

நீயும் உன் தென்னகக்
கூட்டுக் களவாணிக் கும்பலும்
ராஜபக்சேவுடன் சேர்ந்து காட்டினீர்களே
அதுதானே உன் கட்சியின் அபய ஹஸ்தம்

கையில் சிக்கிய சீக்கியருக்கெல்லாம்
உன் அப்பனும்
உன் கட்சியின் அபய ஹஸ்தம்தான் காட்டினான் இல்லையா?

ஆர்ட்டிகிள் 370 தந்த அதிகாரத்தைக் கொண்டு
நேற்றுவரை தேசியக் கொடியை எரித்தான்கள்

நாடாளுமன்றம் தரும் அதிகாரத்தைக் கொண்டு
நடு மண்டபத்தில் நின்றுகொண்டு
இன்றும் நஃப்ரத் நஞ்சை விதைக்கிறான்கள்.

எலி உரத்த குரலில் கத்துகிறதென்றால்
கதவிடுக்கில் மாட்டிக் கொண்டிருக்கிறதென்று அர்த்தம்

எதிர்க்கட்சி ஊளையிடுகிறதென்றால்
உள் காயம் பலம் என்று அர்த்தம் என்று
எத்தனை காலம் தான்
எங்களை நாங்களே தேற்றிக்கொள்வது

நரன்களின் இந்திரரே
நாசகாரக் கும்பலைக் கொஞ்சம்
நடுத்தெருவிலும் விட்டு நான்கு சாத்து சாத்துங்கள்.

நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தவர்களுக்கு
நெருக்கடியைக் கொஞ்சம் கொடுங்கள்.

அவர்கள் உமிழும் நஞ்சை
அவர்களையே அருந்தச் செய்யுங்கள்.

பிரித்தாள நினைப்பவர்களைப்
பிரித்து அழியுங்கள்

திரினிட்டிபுர அரக்கர்களை அழிக்க
திரிசூலம் ஏந்தவேண்டிய தருணம் வந்தேவிட்டது

தாமதித்தால் இப்படித்தான்
தட்டக்குச்சி என்று சொல்லிக்கொண்டு திரிவான்கள்.

(B.R.மகாதேவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *