சந்திரயான், பாரம்பரிய அறிவியல் மற்றும் அரைகுறை ‘பகுத்தறிவு’…

பாரத பாரம்பரியத்தில் மட்டுமல்ல உலகின் அனைத்து இயற்கை வழிபாட்டு (pagan)பாரம்பரியங்களிலும் சந்திரன் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டிருக்கிறது. இந்திய இலக்கியம் மற்றும் அழகியலில் சந்திரனின் கலைகள் மானுட மனத்தின் நீங்காததோர் தொன்மச் சின்னமாகவே அறியப் படுகின்றன.

மிகப்பண்டைய காலத்தைச் சேர்ந்த பெண் தெய்வ வழிபாடுகளில் தொடங்கி இன்றைக்கு நாம் காணும் பல தெய்வீக சின்னங்களிலும் சந்திரன் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. சந்திரன் பொதுவாக மனதோடு தொடர்பு படுத்தி பேசப்படுகிறது. “பரம்பொருளின் மனத்தினின்று சந்திரன் தோன்றினான்” (சந்த்ரமா மனஸோ ஜாத:) என்று ஆகத் தொன்மையான ரிக்வேதப் பாடலான புருஷசூக்தம் கூறுகிறது. மனம் சுயபிரகாசம் இல்லாதது, ஆத்ம சூரியனால் பிரகாசிப்பது என்பதாக பேசும் உபநிடதங்கள். புராணங்கள் என்பது ஒருவித மொழியாடல். அக உண்மைகளை புறப்பிரபஞ்சத்துடன் இணைத்து பேசும் அந்த முறையை பாரத மரபும் சரி, பொதுவாகவே பாரத மக்களும் சரி சரியாகவே புரிந்திருக்கிறார்கள். இதனால்தான் இந்த தேசத்தில் அறிவியலுக்கும் ஆன்மிகத்துக்கும் அமைப்பு ரீதியான மோதல் என்றுமே வந்தது கிடையாது.

மேற்கிலோ இன்றைக்கும் படைப்புவாதம் பேசும் அடிப்படைவாதிகளுக்கும் அறிவியலாளர்களுக்கும் மோதல் இருந்தபடியேதான் இருக்கிறது. ஆனால் போலி பகுத்தறிவாளர்களால் இந்த அறிவியல் ஆன்மிக இணைப்பு பாரத கலாச்சாரத்தில் நிலவுவதை தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை. எனவே போலி பகுத்தறிவு பேசி அரசியல் நடத்தி இன்றைக்கு பெரும் பொறுப்பில் இருக்கும் தமிழகத் தலைவர் ஒருவர் சந்திரயான் விண்கலம் குறித்து கவிதை என்கிற பெயரில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் தெரியும் இந்து எதிர்ப்பு வக்கிரம் அந்த தலைவரது பகுத்தறிவின்மைக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்திருப்பதுதான் இதில் வேடிக்கை. இதோ அந்த ‘கவிதை’யின் சிலவரிகள்:

புராணத்தில் வரும் சந்திரனோ, குருவின் மனைவி தாரைக்கு
புதியதோர் காதலன் என்று புராணமே கூறி வணங்கும்!
பாம்புகள் இரண்டு ராகுவும் கேதுவும் சந்திரனை விழுங்குமாம்;
பஞ்சாங்கம் அதனை கிரகணம் என விளம்புமாம்!
அனைத்தும் பொய், புளுகு, கற்பனையெனத் தூக்கி அடித்து;
அமெரிக்க, ரஷ்ய, அய்ரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின்
அணி வகுப்பில் இணைந்து அருஞ்சாதனை புரிந்து விஞ்ஞானம்;
அசோக சக்கரக் கொடியை அம்புலியில் நாட்டியது;
அறிவியக்க வரலாற்றில் ஓர் அற்புதமாம்;
அதுவும் நம் நாட்டில் என்பதிலோர் பெருமிதமாம்!

உண்மையில் ராகு, கேது என்றால் என்ன என்பதனை பாரதிய வானவியல் சாஸ்திரங்கள் மிகத் தெளிவாகவே கூறுகின்றன. உதாரணமாக சூரிய சித்தாந்தத்தின் நாலாவது அத்தியாயம் சந்திரகணம் என்பதுதான். கணிதப்பேராசிரியர் எஸ்.பாலச்சந்திர ராவ் விளக்குகிறார்:

In Surya Siddanta) the parameters required for the computation of a lunar eclipse are:

(i) True longitudes of the Sun, the Moon and the Moon’s node (Raahu)
(ii) The true daily motions of these three bodies
(iii) The lattitude of the moon and
(iv) The angular diameters of the Earth’s shadow (Bhoo-chaayaa) and of the moon

இந்த அடிப்படையில் செய்யப்படும் கணக்கீடுகளின் மூலம் சந்திர கிரகணத்தின் தொடக்க நேரம், முடியும் நேரம், முழு கிரகணத்தின் காலம் ஆகியவற்றைத் தெளிவாகக் கணக்கிடலாம்.

இதில் மற்றொரு விஷயமும் உண்டு. கிரகணங்களைக் குறித்த தொன்மக் கதைகள் உலகமெங்கிலும் ஒரு பூதநாகம் (dragon) சூரியனையோ சந்திரனையோ விழுங்குவதாகவே கூறின. இந்த கிரகண-பூத நாகத்தை (Eclipse-Dragon) ஒரு தெய்வீக வீரன் அழிப்பான். இந்தக் கதை பண்டைய இஸ்லாமிய மரபிலும், கிறிஸ்தவ மரபுகளிலும் உண்டு. ஆனால் இந்து மரபில் மட்டுமே இந்த ராகு-கேது தொன்ம மரபு பூமி-சந்திரன் ஆகியவற்றின் இயக்கத்துடனும் நிழல்களுடனும் தொடர்பு கொள்ளச் செய்யப்பட்டு அவை சாயாகிரகங்கள் என அழைக்கப்பட்டன. வானியல் கணித்தல்களில் ஒரு கணிதச்சமன்பாட்டின் அங்கமாக மாற்றப்பட்டன.

இன்னும் இவ்விதத்தில் விவிலிய தொன்மத்தை எதிர்த்தமைக்காக வானியல் அறிஞர்களை தீயில் எரித்தும், கலிலியோவை கைது செய்தும் மதத்தைக் காப்பாற்ற முயன்ற பண்பாடுகளிலிருந்தும் பாரதப் பண்பாடு தனித்து தலை நிமிர்ந்து நிற்கிறது.

நம் தேசத்தின் திருவிழாக்கள் சடங்குகள் பிரபஞ்ச சுழல்களுடன் தொடர்புப்படுத்தப்பட்டவை என்பதால் ஜோதிட காலக் கணக்குகள் – கிரகங்களின் இயக்கங்கள் முக்கியமானவையாக உள்ளன. பஞ்சாங்கங்கள் அவ்விதத்தில் பாரம்பரிய அறிவியக்கத்தின் முக்கியமான அங்கமாகும். இவை அரசியல்வாதிகளின் அரைகுறை கவிதைக் கிறுக்கல்களை போல தம்முடைய பொருளை இழந்திடுபவை அல்ல மாறாக இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பல இயற்கை நிகழ்வுகளை கணித்து சொல்லும் திறம் கொண்டவை. குறிப்பாக மழையை நாடி நிற்கும் பாரத விவசாயிகளுக்கு பஞ்சாங்கம் முக்கியமான ஒரு கருவியாகும். மட்டுமல்ல இன்றைய மானுட நடவடிக்கைகளால் எந்த அளவு தட்பவெப்ப சூழல் நம்முடைய இயற்கையான மழைக் காலங்களை பாதித்துள்ளது என்பதையும் நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 2003 இல் இந்திய பாரம்பரிய் அறிவியல் சஞ்சிகையில் (Indian Journal of Traditional Knowledge) பஞ்சாங்கங்களின் மழைக்கணிப்பு குறித்து ஒரு ஆராய்ச்சி வெளிவந்தது. அந்த ஆராய்ச்சி 13 ஆண்டுகள் (1986-99) விவசாய அறிவியல் துறை தட்பவெப்ப ஆராய்ச்சி மையங்களில் பதிவு செய்யப்பட்ட மழை நாட்களின் தரவுகளையும் மழை நாட்கள் குறித்த பஞ்சாங்க முன்கணிப்புகளையும் ஆராய்ந்தது. உத்தர பிரதேசத்தின் அஸாம்கார்க்கில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இக்காலகட்டத்தில் 13 முறை 100 சதவிகிதம் சரியான கணிப்புகள் கிடைத்தன. பஞ்சாங்கம் மூலமாக மழைநாட்கள் குறித்த சரியான முன்னறிவிப்புகளின் சதவிகிதம்: மாத அடிப்படையில்- 16.67 முதல் 100 சதவிகிதம். ஆண்டு அடிப்படையில்: 66.20 முதல் 96.88 சதவிகிதம். 13 ஆண்டு காலகட்டத்துக்குமாக 82.10 சதவிகிதம், என்பதாக அமைந்தது. மழை நாட்களில் மழையின் அளவு எவ்வளவாக இருக்கக் கூடும் என்பதையும் பஞ்சாங்கம் கணிக்கிறது. 79 தடவைகளில் மழை விழுந்ததைக் காட்டிலும் அதிகமாகவும், 18 தடவை குறைவாகவும், 12 தடவைகள் மழை அளவை நூறு சதவிகிதம் சரியாகவும் இருந்தன. 34 சதவிகிதம் மழை அளவு கணிப்பு ஏற்கப்படமுடிந்த அளவே கிடைத்த மழை அளவிலிருந்து வேறுபட்டிருந்தது. ஆக, பஞ்சாங்க கணிப்பு முறைகள் ‘பொய் புளுகு கற்பனை’ என எழுதுவது அரைகுறை அறிவு அல்லது போலி பகுத்தறிவின் விளைவே என்பது தெளிவு.

நமது முன்னோருக்கு எல்லாமே தெரிந்திருந்தது என்று தமிழ்இந்து.காம் சொல்ல வரவில்லை. மாறாக, நமது பாரம்பரியமே ‘பொய், புளுகு, கற்பனை’ என கூறிவரும் போலி பகுத்தறிவு அரசியல்வாதிகள், சந்தர்ப்ப வாதிகளை நம் மக்கள் நன்றாக இனம் கண்டு கொள்ளவேண்டும். என்பதுடன் இத்தகைய அரைகுறை உளறல்களை நம் பாரத பாரம்பரியத்தின் சிறப்பை மக்களிடம் மீள்-உறுதி செய்ய ஒரு வாய்ப்பாகவும் தமிழ்இந்து.காம் எடுத்துக்கொள்கிறது. ஒன்று நிச்சயம் நமது பாரம்பரிய அறிவியல் பார்வையின் சிறப்பினை இத்தகைய அரசியல்வாதிகள் அறிந்து கொண்டார்களோ இல்லையோ நிச்சயமாக நமது தேசத்தின் அறிவியலாளர்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். எனவேதான் பாரத விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சந்திரனே உன்னை எம் அறிவால் அறிவோம் எனும் வேத கோஷத்தை தனது வாசகமாக கொண்டுள்ளது.

மேலும் இந்த அரசியல்வாதி முன்வைக்கும் போலி பகுத்தறிவை அவரது ‘கவிதை’யின் மீதே வைத்துப் பார்த்தால் என்ன ஆகும்? இந்த ‘கவிதை’ நிலாப்பெண்ணே என ஆரம்பிக்கிறது. ‘வான் முகத்தில் நகக்குறி போல் இருக்கின்ற நிலாப் பெண்ணின் தேன் கிண்ண இதழ்களிலே’ முத்தமிட்டு என எழுதப்பட்டுள்ள இந்த ‘கவிதை’ வரிகள் பொய், புளுகு, கற்பனை என அறிவியல் நிறுவியுள்ளது என்றும் சொல்லலாமே? நிலா நகக்குறியாக தெரியலாம் ஆனால் நகக்குறியாக இருக்கவில்லை அது ஒரு துணைக் கோள். அது பெண்ணுமல்ல அதற்கு தேன் கிண்ண கன்னமும் இல்லை. ஆக இந்த ‘கவிதையே’ இவரது பார்வையிலேயே பொய் புளுகு தான். நல்ல இலக்கியங்களின் இலக்கணமும் அறியாமல் வாழ்க்கை நெறியாம் திருக்குறளை மேடைக்கும் கட்டுரைக்கும் மட்டுமே பயன்படுத்தி வாழ்ந்து வரும் ஒருவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

பாவம் அறிவியலின் அடிப்படையும் தெரியாமல், பாரம்பரிய அறிவியக்கத்தின் ஆழமும் புரியாமல், சமுத்திரத்தை வாலால் ஆழம் பார்த்த நரியாக, அரசியலுக்கு மட்டுமே பயன்படும் மஞ்சள் துண்டு பகுத்தறிவால் அறிவியலையும் பாரம்பரிய அறிவியக்கத்தையும் இரு வேறு மோதும் சக்திகளாக மட்டுமே பார்க்கும் போலி-பகுத்தறிவு அரசியல்வியாதிக்கு இவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அந்த அரசியல்வாதியின் அறிவின்மையை அறிவீனத்தை மன்னிப்போம். தனது அறிவீனத்தை பொதுமக்கள் மத்தியில் தானாகவே வெளிச்சம் போட்டு காட்டும் அந்த முட்டாள்தனம் ஆத்திரத்துக்கு அல்ல பரிதாபத்துக்கு மட்டுமே உரியது.

தரவுகளுக்கான ஆதாரங்கள் மற்றும் மேலதிக விவரங்களுக்கு:

1.எஸ்.பாலசந்திர ராவ், Indian Astronomy – an Introduction, பக். 141-154, Universities Press, 2000

2.ரிச்சர்ட் எல் தாம்ப்ஸன், Vedic Cosmography and Astronomy, பக்.97-100, Motilal Banarsidass Publ., 2003

3.தி.வரதராஜன், Fly Me to the Deity , நியூயார்க் டைம்ஸ், அக்டோ பர் 28 2008

4.ரன்ஜய் கே சிங், பி.எஸ்.த்வேதி, An investigation into the indigenous knowledge for rainfall prediction, Indian Journal of Traditional Knowledge, Vol. 2(2), April 2003, pp. 189-201

5. ‘நிலா பெண்ணே’ – மு. கருணாநிதி கவிதை

25 Replies to “சந்திரயான், பாரம்பரிய அறிவியல் மற்றும் அரைகுறை ‘பகுத்தறிவு’…”

  1. ராம.கோபாலன் அறிக்கை

    Saturday, 22 November, 2008

    சென்னை, நவ. 22: இந்துக்களின் நம்பிக்கைகளைப் பற்றி தரக்குறைவாக விமர்சிக்கும் முதல்வர் கருணாநிதியின் கருத்துகள் மிகவும் கண்டனத்துக்குரியவை என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

    நிலாவில் இந்திய தேசியக்கொடி தடம் பதித்த சாதனையை சாக்காக வைத்துக்கொண்டு முதல்வர் கருணாநிதி இந்துக்களின் நம்பிக்கையையும், புராணங்களையும் வழக்கம்போல் தாக்கி உள்ளார்.

    எல்லா மதங்களிலும் புராணக் கதைகள் உண்டு. அவற்றைப் பற்றி எல்லாம் கருணாநிதி அச்சம் காரணமாக வாய் திறந்து பேசமாட்டார்.

    ஆனால் இந்துக்கள் வாய்மூடி மௌனிகளா இருப்பதால், வாய்க்கு வந்தபடி தூற்றுவதற்கு அவர் வெட்கப்படவில்லை. 10 ஆண்டு களுக்கு முன்பு இருந்ததை விட இந்து விழிப்புணர்வு வளர்ச்சி அடைந்து இருப்பதை எவரும் மறுக்க முடியாது.

    வானசாஸ்திரம் (அஸ்ட்ரானமி) வேறு; ஜோதிடம் (அஸ்டராலஜி) வேறு; ஜோதிடம் வான சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. உறவினர்களைக் கொண்டு ஜோதிடம் பார்க்கும் கருணாநிதிக்கு இது தெரியாத விஷயம் அல்ல. இருப்பினும் இவரை நம்பி ஏமாந்து போகக் கூடியவர்களை திசை திருப்ப இவர் மேற்கொள்ளும் பொய் பிரச்சாரம் உலகம் அறிந்தது.

    ராகு, கேது மீது நம்பிக்கை இல்லையெனில் வேட்பு மனு தாக்கல் செய்யும் போதும், பதவி ஏற்பின் போதும் நல்ல நேரம் பார்ப்பது ஏன்? பவள மோதிரம், மஞ்சள் துண்டின் காரணம் தான் என்ன? திருச்சி திமுக மாநாட்டு கால்கோள் விழாவின் போதும், தற்போது புதிய தலைமைச் செயலகம், சட்டசபை கட்டுவதற்காகவும் நல்ல நேரம் பார்த்து, பிராமணரை வைத்து பூஜை நடத்தியது மட்டும் எந்த வகை பகுத்தறிவாம்?

    தமிழகத்தில் மின்வெட்டு அதிகம் உள்ள நிலையில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்று தமிழகத்தில் மழை பெய்வதற்கு “வருணயாகம்’ நடத்துங்கள் என்று கோரிக்கை வைத்தது யார்? யாகம் முடியும் முன்பே தமிழகத்தில் மழை கொட்டோ கொட்டோவென்று கொட்டியதற்கு காரணமும் கருணாநிதிக்கு தெரியும்.

    இஸ்ரோவின் தலைவர் மாதவன் நாயர் பி.எஸ்.எல்.வி. விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பு திருப்பதி பெருமாளை மனமுருகி பிரார்த்தார்.

    என்ன தான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் இறையருளும், ஆண்டவன் துணையும் அவசியம் என்று இஸ்ரோ தலைவருக்கு தெரியும்; ஆனால் நம் முதல்வருக்கு தெரியாது.

    கருணாநிதி முதல்வர் என்கிற அதிகாரத்தில் இருந்து கொண்டு செய்யும் தரக்குறைவான விமர்சனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். கருணாநிதி இந்து மத விரோத கருத்துகளை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    https://www.maalaisudar.com/newsindex.php?id=22570%20&%20section=19

  2. Thank you, you have said what need to be said about this worm ( my applogy to the worms). I waitng for the day when Hindus join together and throw out this scum and his party and initiate a thorough investigation into his/ his family menber’s wealth.
    God bless you all
    Rama

  3. பார்ப்பனர்கள் மட்டும்தான் “ஆரியர்” மற்றெல்லோரும் “திராவிடர்கள்’ என்று ஆரிய த்ராவிட மாயையில் மூழ்கி கிடக்கும் தலைவர்களை ஒரு பொருட்டாக எண்ணாமல் இருப்பதுதான் நமது பகுத்தறிவு !!

  4. அறிவியலின் களம் வேறு ஆன்மீகத்தின் களம் வேறு நம் மக்கள் இதை பண்டைக்காலம் முதல் தெளிவாகவே இன்றுவரை புரிந்து கொண்டுள்ளனர். இரண்டையும் குழப்பிக்கொள்வது இல்லை.

    ராகு-கேது என்பவை சாயா அதாவது நிழல் கிரங்கங்கள் என்பது பண்டைக்காலத்திலிருந்தே அனைவரும் அறிந்திருந்தனர். பழங்கால இந்திய வானியல் அறிஞர் லல்லர் 8ஆம் நூற்றாண்டில இவ்வாறு கூறுகிறார்.

    सवितुश्च यदन्यथा़ऽन्यथा प्रतिदेशं सकलं समीक्ष्यते न च कुत्रचिदित्यवेतत्य कः कुरुते राहुकुते तेग्रहे ग्रहणम्

    சவிதுஷ்ச யதன்யதா’ந்யதா ப்ரதிதேசம் சகலம் சமீக்ஷ்யதே ந ச குத்ரசிதித்யவேத்ய க: குருதே ராஹுகுதே தே க்ரஹே க்ரஹணம்

    பூமியில் பல்வேறு இடங்களில் வாழும் மக்கள் சூரியனின் வெவ்வேறு பாகங்கள் கிரகணத்தால் பீடீக்கப்பட்டதாக காணுகின்றனர். சில இடங்களில் கிரகணம் தெரிவதே இல்லை. இதை புரிந்து கொள்ளும் போது இனி யார் ராஹுவினால் கிரகணம் ஏற்படுகிறது என்று கூற இயலும் ?

    🙂

    இந்துக்கள் யாவரும் கருணாநிதிக்கு இதை “தந்தி” அனுப்பவும். தந்தி அணுப்புவது/வாஙகுவது கருணாநிதிக்கு பிடித்த காரியம் ஆயிற்றே.

    :)))

    நம்முடைய அகண்ட பாரதத்தின் பண்டைய அறிவியல் பெருமையை விரைவில் விரிவாக எழுத முயல்கிறேன்

  5. நண்பர்களே,

    /// வானசாஸ்திரம் (அஸ்ட்ரானமி) வேறு; ஜோதிடம் (அஸ்டராலஜி) வேறு; ஜோதிடம் வான சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. ///

    வான சாஸ்திரம் ஜோதிடத்தை அடைப்படையாகக் கொண்டது. ஜோதிடமே முதன்முதலில் உலகில் விருத்தியடைந்து பிறகு வான சாஸ்திரத்துக்கு வழி அமைத்தது.

    மகா அலெக்ஸாண்டர் இந்தியப் படையெடுக்குப் பிறகு (கி.மு.323) இந்தியாவிலிருந்து அரிய ஜோதிடக் கணித சாஸ்திரத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் சென்றதாக அறியப் படுகிறது. அதுபோல் இஸ்லாமிய வானியல் அறிஞர் இந்தியாவுக்கு விஜயம் செய்த போது இந்திய ஜோதிட சாஸ்திரத்தை அரேபிய நாடுகளுக்கு எடுத்துச் சென்றதாகவும் வரலாறுகளில் தெரிகிறது

    1946 இல் வெளிவந்த ஜவஹர்லால் நேருவின் ‘இந்தியக் கண்டுபிடிப்பு ‘ [Discovery of India] என்னும் நூலில் பண்டித நேரு பண்டைக் கால இந்திய வல்லுநர்களின் கணிதச் சாதனைகளை மெச்சுகிறார். கிரேக்க கணித மேதை பித்தகோரஸ் [Pythagorus] எழுதியதற்கும் முன்பே [500 BC] ஜியாமெற்றி தேற்றங்களை [Geometric Theorems] இந்தியக் கணித ஞானிகள் படைத்ததாக அறியப்படுகிறது. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் பத்து இலக்கக் கணிதத் தொகுப்புகளைக் கையாண்டு, ஏழாம் நூற்றாண்டில் பூஜியத்தை [Zero] ஓரிலக்கமாகப் படைத்தனராம். ‘இக்கணித முன்னோடிகள் மனித சிந்தனையை விடுதலை செய்து, கணித இலக்கங்களை முக்கியமாக்கிச் சுடரொளி பாய்ச்சினர்‘ என்று அந்நூலில் நேரு கூறுகிறார்.சதுரம், நீண்ட சதுரம், வட்டம், கோணம், பின்னம், பத்தின் பன்னிரெண்டாம் அடுக்கு [Ten to the power 12 (10^12)], அல்ஜீப்ரா சமன்பாடுகள் [Algebriac Formulae], வானியல் [Astronomy] போன்றவை 3500 ஆண்டுகளுக்கு முன்பே இந்து வேத நூல்களில் காணப்படுகின்றன. இந்தியா மற்ற கிரேக்க, எகிப்து, ஐரோப்பிய நாடுகள் போல் ஜோதிடக் கணிதத்திலும் நுணுக்கமான தேர்ச்சி அடைந்திருந்தது என்று கூறிகிறார்.

    முதல் பௌதிக விஞ்ஞானி என்று போற்றப்படும் இத்தாலிய மேதை கலிலியோ ஒரு ஜோதிட ஞானி. “புவி மையக் கோட்பாடைத்” தவறென்று எதிர்த்தவர். ஜோதிட மேதை காப்பர்னிக்கஸ் எடுத்துக் கூறிய “பரிதி மைய நியதியை” கலிலியோ நிலைநாட்டி வானியல் விஞ்ஞான வளர்ச்சியைத் துவக்கியவர்.

    வானியல் விஞ்ஞானமே பண்டை ஜோதிடக் கணிப்பால்தான் முன்னடி வைத்து முன்னேறியது. உலகப் பெரும் விஞ்ஞான மேதைகள் டாலமி, புருனோ,காப்பர்னிகஸ், கலிலியோ, கெப்ளர், நியூட்டன் ஆகியோர் அனைவரும் ஜோதிட நம்பிக்கையாளர். அவரே வானியல் விஞ்ஞானப் படைப்புகளையும் உலகில் வளர்த்தவர்.

    சி. ஜெயபாரதன், கனடா.

  6. நண்பர்களே,

    ராகு, கேது கிரகங்கள் வான சாஸ்திரத்தில் “நிழல் கிரகங்கள்” என்று குறிப்பிடப்படுவது விஞ்ஞானக் கருத்துப்படி ஏற்றுக் கொள்ளப்படுபவையே. தற்போது கரும் பிண்டம் (Dark Matter), கருந் துளை (Black Hole) எனப்படும் மாயமான பூதக் கோள்களை விண்ணோக்கிகள் மூலம் காண முடியாது. அவர் அசுரத் திணிவு நிறையும் (Dense Mass), அபார வல்லமையும் கொண்டவை. பரிதி மண்டலத்தில் அவை போன்ற கருங்கோள்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் ஒருவேளை ஒளிந்திருக்கலாம்.

    சி.ஜெயபாரதன், கனடா.

  7. I request all the Gentleman to concentrate on the core and Important part of Hinduism. There were many belifes which were considered as part of Hinduism. But Swami vivekanatha has clarified clearly to shun away the superstition!

    இந்து மதம் உண்மையில் சூரியன் , பூமி ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள உருவாக்கப் பட்டது அல்ல.

    இந்து மதம் “மனிதனின் உயிர் ஏன் இயற்க்கைக்கு அடிமையாக இருந்து பல துன்பங்களை சந்திக்கிறது? துன்பங்களில் இருந்து ஒரே அடியாக விடுபட்டு , சுதந்திரமான, அழிவற்ற நிலையை அடைவது எப்படி?” என்பது போன்ற உயிர் ஆராய்ச்சியைத் தருவதே இந்து மதம்!

    எம‌னை நேரில் ச‌ந்த்தித‌தாக‌ கூற‌ப் படும் ந‌சிகேத‌ச் ,எம‌னிட‌ம் இற‌ந்த‌ பின் ம‌னித‌ உயிர் எங்கு செல்கிற‌து என்ர‌ உண்மையைக் கூறுமாறு கேட்டான். அதுதான் முக்கிய‌ம். நான் இற‌ந்த‌ பின் என் உயிர் எங்கே போகும் என்ன‌ ஆகும் என்ற உண்மை அறிவ‌த‌ர்க்கே ஆன்மீக‌ம்.

    Kindly look how some people are gaining advantage with these. Let me quote from E.V.R,
    E.V.R. எழுதியதைப் படியுங்கள் ” உபாத்தியார் பள்ளியிலே கிரகணம் எப்படி நடை பெறுகிறது, சூரியனும் சந்திரனும் பூமியும் நேர் கோட்டிலே வரும் போது சந்திரன், சூரியனை மறைப்பதால் சூரியனின் ஒளி நமக்குத் தெரியாமல் மறைக்கப் படுவதால், சூரியன் இருண்டது போல காட்சி ஏற்படுவது, சூரிய கிரகணம்! என்று தெளிவாக விளக்கி விட்டு, வீட்டிற்கு போய், ராகு என்னும் பாம்பு சூரியனை விழுங்குவதால் கிரகணம் உருவானதாக கற்பிதம் செய்து சடங்கு செய்து தலை முழுகுகிறார்கள்.”

    ஒரு பக்கம் நவீன வானவியலுக்கு அடித்தளம் அமைத்ததாகக் கூறப்படும் விஞ்ஞானி சந்திரசேகர் , மற்றும் சி,வி. ராமன், ராமானுஜம் இவர்களையும் வைத்துக் கொண்டு இன்னொரு புறம் இந்த பாம்பு பல்லி கதை நமக்கு தேவையா?

    இந்த பாம்பு கதைகளை கூறியவர்களை, நாம் குறை கூறவில்லை. அவ்ர்கள் காலத்தில் தொலை நோக்கி கருவிகள் இல்லை. அவர்களுக்கு மனதில் தோன்றியதை கூறி விட்டனர். ஆனால் இப்போது நம் நிலை என்ன?

    இந்து மதம் உண்மையில் சூரியன் , பூமி ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள உருவாக்கப் பட்டது அல்ல.

    ஆன்மீக‌த்தை பூமி சூரிய‌னை சுற்றுகிறி‌தா என்றா உண்மையை அறிய‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌தில்லை.

  8. //நண்பர்களே,

    ராகு, கேது கிரகங்கள் வான சாஸ்திரத்தில் “நிழல் கிரகங்கள்” என்று குறிப்பிடப்படுவது விஞ்ஞானக் கருத்துப்படி ஏற்றுக் கொள்ளப்படுபவையே. தற்போது கரும் பிண்டம் (Dark Matter), கருந் துளை (Black Hole) எனப்படும் மாயமான பூதக் கோள்களை விண்ணோக்கிகள் மூலம் காண முடியாது. அவர் அசுரத் திணிவு நிறையும் (Dense Mass), அபார வல்லமையும் கொண்டவை. பரிதி மண்டலத்தில் அவை போன்ற கருங்கோள்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் ஒருவேளை ஒளிந்திருக்கலாம்//

    Fine, it could be Mr. Jayabaarthan. But does the eclipse happen due to these dense mass / black holes swallowing the moon or Sun?

  9. I APPRECIATE MR. VINOTH RANJAN!

    //அறிவியலின் களம் வேறு ஆன்மீகத்தின் களம் வேறு நம் மக்கள் இதை பண்டைக்காலம் முதல் தெளிவாகவே இன்றுவரை புரிந்து கொண்டுள்ளனர். இரண்டையும் குழப்பிக்கொள்வது இல்லை.

    ராகு-கேது என்பவை சாயா அதாவது நிழல் கிரங்கங்கள் என்பது பண்டைக்காலத்திலிருந்தே அனைவரும் அறிந்திருந்தனர். பழங்கால இந்திய வானியல் அறிஞர் லல்லர் 8ஆம் நூற்றாண்டில இவ்வாறு கூறுகிறார்.

    सवितुश्च यदन्यथा़ऽन्यथा प्रतिदेशं सकलं समीक्ष्यते न च कुत्रचिदित्यवेतत्य कः कुरुते राहुकुते तेग्रहे ग्रहणम्

    சவிதுஷ்ச யதன்யதா’ந்யதா ப்ரதிதேசம் சகலம் சமீக்ஷ்யதே ந ச குத்ரசிதித்யவேத்ய க: குருதே ராஹுகுதே தே க்ரஹே க்ரஹணம்

    பூமியில் பல்வேறு இடங்களில் வாழும் மக்கள் சூரியனின் வெவ்வேறு பாகங்கள் கிரகணத்தால் பீடீக்கப்பட்டதாக காணுகின்றனர். சில இடங்களில் கிரகணம் தெரிவதே இல்லை. இதை புரிந்து கொள்ளும் போது இனி யார் ராஹுவினால் கிரகணம் ஏற்படுகிறது என்று கூற இயலும் ?//

    THANKS TO MR. VINOTH RAJAN.

  10. Dear Tiruchikkaran,

    /// But does the eclipse happen due to these dense mass / black holes swallowing the moon or Sun? ///

    NO, NO, No. I am not entering into any debate which is solely based on puraanak kathaikaL. It is meaningless to argue about any scientific event, based on puraank kathaikaL or old beliefs.

    S. Jayabarathan

  11. /// இந்து மதம் உண்மையில் சூரியன், பூமி ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள உருவாக்கப் பட்டது அல்ல.

    இந்து மதம் “மனிதனின் உயிர் ஏன் இயற்க்கைக்கு அடிமையாக இருந்து பல துன்பங்களை சந்திக்கிறது? துன்பங்களில் இருந்து ஒரே அடியாக விடுபட்டு, சுதந்திரமான, அழிவற்ற நிலையை அடைவது எப்படி?” என்பது போன்ற உயிர் ஆராய்ச்சியைத் தருவதே இந்து மதம்!

    ஆன்மீக‌த்தை பூமி சூரிய‌னை சுற்றுகிறி‌தா என்றா உண்மையை அறிய‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌தில்லை.///

    ஆன்மீகம் என்பது மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள ஒப்பான உறவைத் தேடுவது. நாம் வாழும் பிரபஞ்சத்தின் பால்வீதி காலக்ஸியில் உள்ள சூரிய மண்டலத்துக்கும் உயிரினத்துக்கும் உள்ள ஒப்பு உறவைத் தேடுவது.

    உயிர் என்பது என்ன ? ஆத்மா என்பது என்ன ? பரமாத்மா என்பது என்ன ? ஆன்மீகம் இந்த வினாக்களுக்கு விடை தேடுகிறது. மேதை டார்வின் உயிரினத்தின் உடல் வடிவ விருத்தியின் படிப்படி பரிணாம வளர்ச்சியைக் கூறினாரே தவிர, அந்த உடலை இயக்கும் உயிரைப் பற்றியோ, ஆத்மாவைப் பற்றியோ எதுவும் எழுதவில்லை.

    உடல் அழிவது. உயிர் உடலை இயக்கும் சக்தி மயமாக இருப்பதால் அது அழிவில்லாதது. உடல் உயிரின இரசாயன மூலக்கூறுகளால் உண்டானது. ஆனால் உயிர், ஆத்மா இரசாயனப் பண்டங்களால் படைக்கப்பட்டவை அல்ல.

    சி. ஜெயபாரதன், கனடா

  12. Dear Mr. jayabharathan,

    Thanks for taking my comments in the right perception.

  13. இந்திய‌ர்‌களை‌ப் பொருத்த‌ வ‌ரையில் ஆன்மீக‌ம் என்ப‌தும் இய‌ற்பிய‌ல், வேதிய‌ல் , க‌ணித‌ம் போல‌ ஒரு அறிவிய‌ல் தான். ஆன்மீக‌ம் என்ப‌து உயி‌ர் அறிவிய‌ல்!

    க‌ணித‌ம் தெரியாத‌வ‌ன் க‌டைக்குப் போனால், 73 ரூபாய் ம‌திப்புள்ள‌ ஒரு பொருளை வாங்க‌ 100 ரூபாய் கொடுத்து விட்டு, க‌டைகார‌ர் பொருலுட‌ன் வெறும் இருப‌து ரூபாய் குடுத்தால், க‌ணித‌ம் தெரியாத‌வ‌ன் அதை வாங்கி கொண்டு வ‌ந்து விடுவான்‍ அவ‌னுக்கு க‌ண‌க்கு தெரியாத‌தால் ந‌ஷ்ட‌ம் 7 ரூபாய் தான். But If a person is weak in Spirtual science he faces the risk of losing the life!

    ம‌னித‌னின் உயிரைக் காப்பாற்றும் அறிவிய‌ல் ஆன்மீக‌ம். எல்லொரும் சாக‌ப் போவ‌து உறுதி. ஆனால் சாவுக்குப் பின் உயிரின் நிலை என்ன‌?எத‌த‌னை நாளைக்கு பிற‌ப்பு, இற‌ப்பு அல்ல‌து சொர்க்க‌ம், ந‌ர‌க‌ம்? ந‌ம் விதியை நாமெ தீர்மானிப்ப‌து எப்போது? இப்படிப் ப‌ட்ட‌ ஆராய்ச்சிதான் ஆன்மீக‌ம்.

    ஒவ்வொரு அறிவிய‌லுக்கும் ஒரு உப‌யொக‌ம் உள்ள‌து. அந்த‌ அறிவிய‌ளீன் விதிக‌ள் அந்த‌ த‌ள‌ங்க‌லுக்குள் ம‌ட்டுமெ ப‌ய‌ன்ப‌டும்.

    நியூட்ட‌னின் விதிக‌ளை வைத்து, ம‌ஞ்ச‌க் காமாலைக்கு ம‌ருந்து க‌ண்‌டு பிடிக்க‌ முடியுமா?

    Swami vivekaantha used the Physics and chemistry to explain Spirituality!

    In fact Swami Vivekaanathars Knoweldge in Science is stunning Great!

    If any one ask what is Physics, what shall we say?

    We say that physics is about Light, about Sound, about Motion, about Force, about Heat, about Electricity…. etc

    But swamy concluded the Physics in one sentence. Not only the Physics, also the Chemistry.

    Swamiji told in Chicago

    “If any one can find the Source of Energy from which the energy for all other energy sources is created , that is the apex and end point of Physics research! There is nothing to find more in Physics!

    If any one can find the Basic thing from which atoms of all molecules are created, that is the apex and end point of Chemistry research! There is nothing to find more in Chemistry!

    If any one can find the Soul, from which all souls are created that is the apex and end point of spiritual research! There is nothing to find more in Spirituality!

  14. முதலில் பகுத்தறிவை வழங்க வேண்டும். Thalaivar கூறுவதை பகுத்தறிவு என எண்ணி ஏமாறுபவர்களுக்கு உண்மையான பகுத்தறிவை ஊட்ட வேண்டும்.

    அதுதான் நம் கடமை.

    பகுத்தறிவு என்பது என்ன? பகுத்தறிவாளர் என்பவர் யார்?

    “The Belief that opinions and actions should be based on reason and knowledge rather than on religious belif or emotion”!

    “அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பிக்கையின் அடிப்படையில் செயல் படாமல் அறிவை , யுக்தியை, தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து உண்மை என்ன என்று அறிய முயல்வதுதான் பகுத்தறிவாகும்.

    பகுத்தறிவாளர் என்பவர் யார்?

    இப்படி பகுத்தறிவின் மூலம் உண்மையை விருப்பு வெறுப்பு இன்றி தேடுவதும், அப்படித் தான் அறிந்த மட்டில், தான் உண்மை என்று தேர்ந்து கொண்டதை எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுபவன், அப்படி கூறும்போது வரும் எந்த எதிர்ப்பையும் உறுதியாக எதிர்த்து நிற்ப்பவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி.

    சரிதானே ?

    “மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா? மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? ”

    இதற்க்குத் தயக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்மையை வழங்க நாத்தீக வாதி தயாராக இருந்தாரா?

    “மனித உயிர், உடல் மரணம் அடையும் போது, உயிர் மரணம் அடைகிறதா- இல்லை உயிர் தொடர்ந்து வாழ்கிறதா?”- இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!
    உடலோடு சேர்ந்து உயிரும் அழிந்து விட்டாதாக கொண்டால் பிரச்சினை சிறிது எளிதாக முடிந்து விடும். ஏதோ வந்தோம், ஓரளவு நியாயமாக வாழ்வோம், சாவோம் என்று முடிக்கலாம்.

    ஆனால் அப்போது கூட சில கேள்விகளுக்கு கண்டிப்பாக பதில் தேவை.
    இப்படி வெறும் நூறு ஆண்டு வாழ்க்கையில் கூட ஏன் பலர் ஏழையாக, சாமானியனாக, சிலர் குருடாக, முடமாக பிறக்க வேண்டும்?
    ஏன் சிலர் மட்டும் சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புகளோடு பிறக்க வேண்டும்? நான் ஏன் சூர்யாவாக (நடிகர் சூரியா, சிவகுமாரின் மகன்) பிறக்கவில்லை? நான் ஏன் முகேஷ் அம்பானியாகப் பிறக்கவில்லை? நான் அபிசேக் பச்சனாகவோ, ஹிரித்திக் ரோஷனாகவோ, ஸ்டாலினாகவோ, அழகிரியாகவோ பிறக்க முடியாமல் போனது ஏன்?

    நான் ஏன் உயரமாக, சிவப்பாக, அழகாக, நல்ல உடல் கட்டுடன் பிறக்கவில்லை?
    அதாவது “உடலோடு சேர்ந்து தான் உயிர், உடல் அழியும்போது உயிரும் அழியும், தொடர்ந்து வாழ்வதில்லை” என்ற ஒரு கோட்பாட்டின் படி கூட, நம்மால் நாம் விரும்பிய படியான வாழ்க்கையை எடுத்துக் கொள்ள முடியாமல் – கிடைத்தை எடுத்துக் கொள்ளும் அடிமை நிலையில் தான் இருக்கிறோம்- என்பதை மறுக்க முடியுமா?

    ஆனால் “உடல் அழியும் போது உயிர் அழிவதில்லை, அது (உயிர்) வேறு எங்கோ போகிறது, அல்லது உயிர் மீண்டும் பிறக்கிறது” என்றால் அது நமக்கு மிகவும் சீரியசான பிரச்சினை யாகும். ஏனெனில் இப்படி- கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட வேண்டிய அடிமை நிலை, தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது- என்ன வேதனையான அடிமை நிலை?

    பெரியார் சொன்னது போல கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால்? புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்-நோய், மூப்பு, மரணம், இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான்.

    ஒழியட்டும்! இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி- புத்தரே அவ்வளவு தியானம், ஆரய்ச்ச்சி செய்து கடைசியில் உயிர் பல பிறவிகள் எடுத்து மேலும் மேலும் துன்ப சாகரத்தில் உழல்வதாக கூறுகிறார்.

    இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு! மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபியுடனோ(pbuh), ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை!
    மனித உயிர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும். மனித உயிர் அறிவியல் முடியும் இடம் தான் கடவுளாக (அப்படி ஒருவர் இருந்தால்) இருக்க முடியும்!
    எனவே வெறுமனே உண்டு விட்டு, உறங்கி விட்டு, காலையில் எழுந்து “கடவுள் எங்கே? காட்டு!” என்று கேட்பது, நுனிப்புல் மேயும் முறையாகும்!

    மெரீனா கடற் கரையில் நின்று கொண்டு “எங்கே இருக்கிறது ஆப்பிரிக்க கண்டம்? எனக்கு காட்டு பார்க்கலாம்!” என்று கேட்பது போல் உள்ளது!

    நான் கடவுளைப் பார்த்தது இல்லை! எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் தயார் இல்லை!! கடவுள் இல்லை என்பது ஃபாரடேயின் மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

    கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

    ஆனால் எதுவானாலும் அதை ஆராயாமல், உணராமல், குருட்டுத் தனமாக ஒரு முடிவுக்கு வர முடியுமா?

    ஆனால் நண்பர்களே நாம் அபாயத்தில் இருக்கிறோம், எந்த நோயோ அல்லது துன்பமோ நம்மையோ, நமது நெருங்கிய உறவினரையோ தாக்கினால் அதைத் தடுத்து நம்மை காத்துக் கொள்ளும் திறன் நமக்கு இருக்கிறதா?

    இதில் பிராமணர்களாக இருந்தால் என்ன வேறு யாராக இருந்தால் என்ன? ஒரு பிராமணரின் கை இரண்டு துண்டு ஆனால், அதை எடுத்து சேர்த்து வைத்தால் உடனே ஒட்டிக் கொண்டு சரியாகி விடுகிறதா? கொத்தடிமைகளாக இருக்கும் நமக்குள் இந்த சண்டை ஒரு கேடா?

    நண்பர்களே, மிகச் சிக்கலான நிலையிலிருந்து விடுபட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
    எனவே நான் நம்முடைய ஆத்தீக நண்பர்கள், நாத்தீக நண்பர்கள் இரு தரப்பாரையும் கேட்டுக் கொள்வது என்ன வென்றால் நாம் அனைவரும் உண்மையான ஆன்மீக ஆராய்சச்சியில் ஈடுபடுவோம்!

    இறுதியில் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்!

    ஏன் எனில் உண்மை யாருக்காகவும் வளையாது. உண்மை அது மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப் படையில் தேர்ந்து எடுக்கப் படுவதில்லை.

    உலகில் எல்லொரும் உலகம் தட்டை என்று நினைத்தாலும், ஒருவன் மட்டும் உருண்டை என்று கூறினால், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எல்லொரும் அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

    Because Truth can never be defeated- it is the property of the truth!

    Truth shall prevail! No body can defeat the Truth.

    Hence let us all strive to find the truth.

    முதலில் அவர்களை சிந்திக்கும் மனநிலைக்கு கொண்டு வாருங்கள்.

    பிறகு அவர்கள் தாமாக வணங்க ஆரம்பிப்பார்கள்.

    இவர்களுக்கு உண்மையான பகுத்தறிவை ஊட்ட வேண்டும்.

    My Thalivan is a comedy specilist. You know about the comedian, he will say many things, which he can not do, but finally he will Essscaaaaapppe!

    So we will concentrate on important matters!

    அதுதான் நம் கடமை.

  15. /// பெரியார் சொன்னது போல கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம்.

    இறுதியில் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்! ///

    இந்த வாசகங்கள் முன்னுக்குப் பின் முரணாகத் தோன்றுகின்றன !!! விடுதலை இந்தியாவில் இந்தக் கட்டளை யாராலும் ஏற்றுக் கொள்ளப் படாது.

    சி. ஜெயபாரதன்

  16. நண்பர் திருச்சிக்காரன் அவர்களே

    /// இந்திய‌ர்‌களை‌ப் பொருத்த‌ வ‌ரையில் ஆன்மீக‌ம் என்ப‌தும் இய‌ற்பிய‌ல், வேதிய‌ல், க‌ணித‌ம் போல‌ ஒரு அறிவிய‌ல் தான். ஆன்மீக‌ம் என்ப‌து உயி‌ர் அறிவிய‌ல்! ///

    ஆன்மீகம் என்பது ஒரு விஞ்ஞானப் பகுதியில்லை. அது விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியாத, விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட மெட்டா ஃபிசிக்ஸ் (Meta-physics). அது இந்தியருக்கு மட்டுமில்லை. யாவருக்கும் ஏற்றது. அதாவது மெட்டீரியல் சையன்ஸுக்கு அப்பாற் பட்டது. ஆத்மீகம் என்பது உள்ளத்தால் சிந்தித்து உணர்வது. அதனை விஞ்ஞானக் கருவிகளால் உணரவும் இயலாது, அளக்கவும் முடியாது, விளக்கவும் இயலாது.

    கடவுளைப் பற்றி உணரும் நம்பிக்கை உணர்வு ஆன்மிக்கத்தில் அடங்குவது. உயிர், ஆத்மா என்பவையும் ஆன்மீகத்தில் அடங்குவது. ஆன்மீகம் என்பது உயிர் அறிவியலன்று. உயிர் அறிவியல் என்றால் பயாலஜி (Biology).

    சி. ஜெயபாரதன், கனடா

  17. கூரை ஏறி கோழி புடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போனானாம் என்னும் கதையாக, கோழி புடிக்க முடியாத அமெரிக்க, ரஷிய, ஐரோப்பிய ஞானிகள், புவியின் அருகில் இருக்கும் சந்திரனில் இவ்வளவு நாட்களாக தண்ணீர் கிடையாது என்று கூறிவிட்டு, திடீரென்று ஐஸ் இருக்கிறது என்று, நாம் எப்போதும் சந்திரனை தண்ணீர் உள்ளதாகக் கூறியதை, பறை சாற்றும் போது, ராஹு-கேது இவற்றின் பாதையையே, நாம் கணித்து, க்ரகனங்களை அனுசரிக்கும் போது, எட்டப்ப பரம்பரையினர் எது சொன்னாலும், ஏளனப் படுபவர்கள் எட்டப்பர்கள் தான்.

  18. ஆலயத்தின் கோபுரத்தில்,கருணாநிதி ‘ஆ’ என்று’ லயித்தது’ ‘நிர்வாண’ சிற்பத்தில்; ஆளைக்கண்டு ஊதுகாமாலையில் மயங்கும் கருணாநிதியும் சித்தர்கள் வாழும் தெனிந்தியாவில் வாழ்பவர்தான்; என்னே படைப்பின் கோலம்; சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம் சார்ந்த ‘உண்மைகள்’ மாறும் தன்மையை உடைத்து, முன்னது பின் பொய்யாகும். எனவேதான் ‘மெய்ஞானம்’ மாறாத உண்மையைத் தேடுகிறது. அமெரிக்கர், ரஷியர்,ஐரோப்பியர் கூட்டுடன் இந்தியர் தேடிக் குழம்பியது, சந்திரனில் ‘இது இருக்கிறதா’ என்று; ‘எது இருக்கிறது’ என்று; நிச்சியமாக ‘சந்திரன் குருவின் மனைவி தாராவின் காதலனா?’
    “பாம்புகள் இரண்டு ராகுவும் கேதுவும் சந்திரனை விழுங்குமா?’ என்பதை பற்றி அல்ல; ராகு கேது இவற்றின் சூரிய நீள்வட்டப் பாதையை இன்றும் காட்டும் இந்திய மற்றும் தென்னிந்திய பஞ்சாங்கங்களின் வானவியல் கணக்கு அமெரிக்கர், ரஷியர்,ஐரோப்பியர் கூட்டுக்கு இன்றும் குழப்பமான ஒன்றுதான்; சித்தர்களுக்கு, இந்தியர்களுக்கு எவ்வாறு முன்னமே தெரிந்தது என்பதுதான் அந்தக் குழப்பம்; எனவே ‘மஞ்சள்’ காமாலைக் கண்கொண்டு பார்த்தல், மேல் துண்டு ‘மஞ்சளாக’ இருந்தால் கூட உண்மையைக் காட்டாது. பகுத்தறிவு என்பது ‘தானே’ மட்டுமே உண்மையை முயன்று காண்பது என்றால், கருணாநிதி சந்திரனுக்குப் போக வேண்டும்; அங்கு ‘நிர்வானம்’ கிடைக்கும்.

  19. வேதகால ரிஷிகளுக்கு உலகம் உருண்டை என்றோ அது ஞாயிறைச் சுற்றிவருகிறது என்ற உண்மையோ தெரிந்திருக்கவில்லை. உலகம் தட்டை அதனை ஆதிசேடன் தாங்கிக் கொண்டு இருக்கிறான் என்பதே அவர்களது கண்டு பிடிப்பாகும். ஞாயிறு நாளும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறான் என்பதுதான் வேதங்களின் முடிவு. இது அவர்களுடைய பிழை அல்ல. அந்தக் காலத்தில் இப்போதுபோல் அறிவியல் முன்னேறி இருக்கவில்லை. இந்து மதம் மட்டுமல்ல மற்ற மதங்களும் இவ்வாறுதான் கற்பனையாக எழுதி வைத்துள்ளன. உலகத்தைப் படைத்த கடவுள் அது அசையாமல் இருக்க ஒரு கட்டையில் கயிற்றால் சிக்காராகக் கட்டினார் என பைபிள் சொல்கிறது. சமயங்கள் நம்பிக்கையில் தங்கியிருக்கின்றன. சமயங்களில் அறிவியலுக்கு இடமில்லை.

  20. நக்கீரன் என்ற பெயரை மட்டும் வைத்து கொண்டால் போதாது கொஞ்சமாவது யோசித்து தேடி தெளிவடைந்த விசயங்களை மட்டும் எழுத வேண்டும் அப்போதுதான் நடுநிலையான தகவல் பரிமாற்றம் இருக்கும்.
    இறந்துபோன தாத்தச்சாரியின் பெயரில் அவர் சொன்னதாக பொய்யான புரட்டுகட்டுரைகளை வெளியிட்டவர்கள் தானே நீங்கள், (அதற்கு பதிலடி கட்டுரைகள் கொடுத்தாகிவிட்டது) இப்பிரபஞ்சம் அண்ட வடிவானது என்றே இந்துக்களாகிய எங்கள் முன்னோர் நம்பினர்.
    அண்ட பிரபஞ்சம் என்றுதான் கூறுகிறார்களே அல்லது தட்டை பிரபஞ்சம் என்று அல்ல.
    வெள்ளை நிறத்தின் தொகுப்பான ஏழு வண்ணங்களை குறிப்பிடும் தத்துவ விளக்கம் பாமரர்க்கு புரியவில்லை என்றால் சரி உங்களுக்குமா புரியவில்லை.
    சரி அந்த முடிவான வேத வாக்கியங்களை வெளியிடுங்களேன்.
    உருண்டை உலகம் என்பதற்கு எனக்கு தெரிந்த ஆதாரங்கள்
    Infact, Hindu scriptures were the first in the world to coin the word “bhūgolaḿ” .
    bhugolam = bhu(earth) +golam(sphere).
    Hindu scriptures mentions the spherical earth about 1700 BC while it was proposed by mundane philosophers only in 600 BC but got proved/ demonstrated only in 1500

    If the earth is flat, every part of the earth will have day & night simultaneously. There will not be any time gap. This is impossible to obseve in the ancient time .However, this conept is clearly mentioned in atleast two scriptures.

    Rig veda dated to be ( 1700 -1100 BC). It was the first known literature in the world to ascertain the spherical nature of earth beyond any doubt.
    Aitareya Brahmana (shakha of the Rigveda )
    He( i.e the sun) neither sets nor rise.What is believed to be his set in his turning himself around at the end of the day. He makes night on this side and day on the other side. simillarily, what is taken to be his rise in the morning is his turning himself around at the end of the night, when he makes day on this side and night on the other side. In fact, he never sets.
    (Dikshit, 1969, p.9)
    similar such concept is in Bhagavatam
    Srimad Bhagavatam 5.21.8-9
    People living in countries at points diametrically opposite to where the sun is first seen rising will see the sun setting, and if a straight line were drawn from a point where the sun is at midday, the people in countries at the opposite end of the line would be experiencing midnight. Similarly, if people residing where the sun is setting were to go to countries diametrically opposite, they would not see the sun in the same condition.

  21. several mantras in Vedas that clearly discuss the movement of earth. Some examples:

    Rig Veda 10.22.14
    “This earth is devoid of hands and legs, yet it moves ahead. All the objects over the earth also move with it. It moves around the sun.

    Rig Veda 10.149.1
    “The sun has tied Earth and other planets through attraction and moves them around itself as if a trainer moves newly trained horses around itself holding their reins.”

    Yajur Veda 33.43
    “The sun moves in its own orbit in space taking along with itself the mortal bodies like earth through force of attraction.”

    Rig Veda 1.35.9
    “The sun moves in its own orbit but holding earth and other heavenly bodies in a manner that they do not collide with each other through force of attraction.

    Rig Veda 1.164.13
    “Sun moves in its orbit which itself is moving. Earth and other bodies move around sun due to force of attraction, because sun is heavier than them.

    https://agniveer.com/3050/scientific-errors-in-hinduism/

    please go and read here to know more about earth and hindu vedhas

  22. வேதங்களை கரைத்து குடித்த மாதிரி பேசும் நக்கீரரே ஒரு சாதாரண கேள்வி. கோள்கள் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? எனக்கு தெரிந்து கோள் என்றால் உருண்டை வடிவிலான பொருள் என்று பெயர். உருண்டை வடிவில் இருப்பதால் தான் கிரகங்கள் கோள்கள் என்று அழைக்கப்டுகின்றன.

    \\உலகம் தட்டை அதனை ஆதிசேடன் தாங்கிக் கொண்டு இருக்கிறான் என்பதே அவர்களது கண்டு பிடிப்பாகும்\\

    இதை எங்கே படித்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

    \\ஞாயிறு நாளும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறான் என்பதுதான் வேதங்களின் முடிவு\\

    அது என்ன முடிவு… சனாதன தர்மத்தில் முடிவு என்ற வார்த்தைக்கே இடம் இல்லை அது சுழற்சி என்ற வார்த்தைக்கே இடம் உண்டு. முடிவு என்பது ஆப்பிரகாமிய வகை சொல்…. ஹ்ம்ம்ம்…

    சினிமாவை பார்த்து கெட்டு போன மக்கள் தமிழ் நாட்டில் அதிகரித்து கொண்டே உள்ளன.

    சினிமாவில் தான் குதிரைகளை பூட்டு வருவது போல் காட்டுவார்கள். அதை அப்படியே எடுத்து கொண்டால் அதற்கு ஹிந்து மதம் எப்படி பொருப்பாகும்.

    இப்படி அரை குறையாக படித்துவிட்டு எழுதக் கூடாது. ஏழு வண்ணங்கள் என்பவை சூரிய ஒளியில் இருக்கும் ஏழு வண்ண பிரிகைகளை குறிக்கின்றனவே தவிர அவை குதிரைகளை குறிக்கவில்லை.

    நன்றாக சண்டையிடும் ஒருவரை பார்த்து அவன் சிங்க குட்டி என்று சொல்வார்கள். இது சிங்க குட்டியின் வீரத்தை ஒப்பிடுவதே அன்றி அவன் சிங்கத்தின் வயிற்றில் இருந்து பிறந்தன் என்று பொருள் அல்ல.

    கடைசியாக, அறிவியல் மூலம் எங்கள் மதத்தை நாங்கள் நிறுபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு காலத்தில் மாட்டு மூத்திரம் குடிக்கும் முட்டாள் என்று சொன்னார்கள். ஆனால் தற்போதோ அதே மாட்டு மூத்திரத்தில் இருந்து கேன்ஸரை குணப்படுத்தும் மருந்த்தை பிரித்து எடுக்கிறார்கள். பல தோல்வியாதிகளுக்கு மாட்டு மூத்திரம் தான் மருந்து….

  23. நாகீரன் சுவாமிக்கு அடியேன் அநேக தண்டன் சமர்பித்து எழுதிக்கொள்வது

    உங்களது ஞானம் என்னை புல்லரிக்க வைக்கிறது.

    //
    வேதகால ரிஷிகளுக்கு உலகம் உருண்டை என்றோ அது ஞாயிறைச் சுற்றிவருகிறது என்ற உண்மையோ தெரிந்திருக்கவில்லை.
    //

    ஷனி (சனி) கிரகம் என்று கேள்விக்கிப்பட்டிருப்பீர்கள் – சமஸ்க்ரிதஹ்தில் ஷாநைஹீ என்றால் மெல்ல என்று அர்த்தம் – அதாவது சூரியனை சுற்றி மிக மெதுவாக நகரும் கிரகம் எதுவோ அதுவே சனி கிரகம்

    //உலகம் தட்டை அதனை ஆதிசேடன் தாங்கிக் கொண்டு இருக்கிறான் என்பதே அவர்களது கண்டு பிடிப்பாகும்.
    //

    ஆதி சேஷன் என்று இங்கு சொல்லப்படுவது gravity force அல்லது த்ரி குணங்கள் என்பதை தான் – இதற்ற்கு வைணவத்தில் தீர்கமான விவரணம் இருக்கிறது.

    // ஞாயிறு நாளும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறான் என்பதுதான் வேதங்களின் முடிவு.
    //
    கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன் என்கிறீர்களே

    ஏழு குதிரைகள் – சின்ன வயசில் வேறேதோ ஏழு பற்றி படித்ததில்லையா ? ஆஆங் – வானவில்லில் எத்தனை வண்ணம்.

    இங்கு குறிப்பிடப்படுவது சூரிய ஒளியை தான் – இதற்கான விவரணங்கள் பூர வேதத்திலேயே உள்ளது

    ரிக் வேதத்திற்கு உரை எழுதிய சயனாச்சார்யர் என்ற பதினாலாம் நூற்றாண்டு காரர். ஒளியின் வேகத்தை மிகத் துல்லியமாக தந்துள்ளார். இதை பற்றி ஏற்கனவே இந்த தள்ளத்தில் எழுதி இருக்கிறேன்

    //இது அவர்களுடைய பிழை அல்ல. அந்தக் காலத்தில் இப்போதுபோல் அறிவியல் முன்னேறி இருக்கவில்லை.
    //

    நிச்சயம் அவர்கள் பிழை அல்ல – உங்களது பிழை தான். இந்தியாவை பற்றி எதுவுமே படிக்காமல் படிக்க முயற்சிக்காமல் இருப்பது உங்களது பிழை தான்.

    //
    இந்து மதம் மட்டுமல்ல மற்ற மதங்களும் இவ்வாறுதான் கற்பனையாக எழுதி வைத்துள்ளன. உலகத்தைப் படைத்த கடவுள் அது அசையாமல் இருக்க ஒரு கட்டையில் கயிற்றால் சிக்காராகக் கட்டினார் என பைபிள் சொல்கிறது. சமயங்கள் நம்பிக்கையில் தங்கியிருக்கின்றன. சமயங்களில் அறிவியலுக்கு இடமில்லை.
    //

    இந்து மதம் இவ்வாறு அல்ல – நீங்கள் இழ்டப்பட்டால் ஒவ்வொரு மந்திரமாக உருவி விவரமாக பார்க்கலாம்.

    ஒரு உதாரணத்திற்கு 108 என்ற என் எப்படி வந்தது தெரியுமா

    distance betwwen earth and sun/diameter of sun = 108
    distance between earth and moon/diameter of moon = 108

    இது எதோ புருடா அல்ல – நீங்களே கூகிள் ஆண்டவரை கேட்டு நமக்கு தெரிந்த கணித சாஸ்திரத்தை வைத்து வகுத்துப் பாருங்களேன்?

    வேடங்களை பத்து சாகைகலாக பிரித்த பொது அதன் எண்ணிக்கைகளை பூமியிலிருந்து ஐந்து கொல்களுக்குள்ளான தூரத்தை கணக்கிட்டு பிரித்தார் வியாசர் – இதை பற்றியும் முன்பு ஒரு மறு மொழியில் எழுதி உள்ளேன்.

    உன்களை குறை சொல்லி ப்ராவ்ய்ஜனமில்லை – நம்மை பற்றி நாமே தாழ்வாக நினைக்கத்தான் கற்று கொடித்திருக்கிரார்கள் ஆங்கிலேயர்கள். அதை செவ்வனே செய்கிறோம். கொஞ்சம் இந்தியாவை பற்றி தெரிந்து கொள்ள முயற்ச்சித்தால் நன்றாக இருக்கும்

  24. பாரம்பரிய அறிவியல் பற்றியி கட்டுரை இது என்பதால் சில வஷய்ந்களை தெளிவாக புரிந்து கொள்ள இது இடமாக இருக்கும் என்று நம்புகிறேன்.சூர்யா சித்தந்தம், சிதைந்த சிரோன்மணி போன்ற பண்டைய நூல்களில், அறிவியல் உண்மைகள் மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.புரிந்து கொள்வதற்கு கடினமாக இருப்பது புராணங்கள் தான்.புராணங்கள் கூறுவதை literal ஆக எடுத்துக்கொள்ள கூடாது அவைகள் முழுவதும் Allegories என்று அறிஞர்கள் வலியுருத்துகிறார்கள்

    விஷயம் தெரிந்தவர் விளக்கி சொன்னால் ஒழிய புரிந்துகொள்ள முடியாதுபோல் உள்ளது

    I find the concept of eternal heaven and eternal hell in the other religions as fancies and childish.However when I read about the descriptions of various hells and the graphic description of tortures, suffering in our puranas like the other religions, I get confused.Is it symbolism, allegory, psychological means for moral conduct or a true after life reality.The Judgement, Punishment in hell, reward in hell were more or less similar to the other religions.I remember reading that the early rig vedic hyms does not speak about these things much but in the later periods the details were
    explained in the puranas

    I would be very thank full if some explain the truths behind these concepts in our puranas.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *