இன்று கிறிஸ்தவ அமைப்புகள் மட்டுமின்றி, இஸ்லாமிய அமைப்புகளும் பல்வேறு சாமர்த்தியமான செயல் திட்டங்களுடன் ஹிந்துக்களை மத மாற்றம் செய்வதில் மும்முரமாக இயங்கி வருகின்றன. முக்கியமாகப் பெண்கள் மிகவும் எளிதாக மத மாற்றத்திற்குக் குறிவைக்கப்படுகிறார்கள். ஏனென்றால் ஹிந்து சமயத்தைக் கட்டிக் காப்பவர்கள் பெண்களாகவே இருக்கிறர்கள்.
இன்று தமிழ் நாட்டில் வியாபாரம் பெருமளவில் முகமதியர் கட்டுப்பாட்டிற்குச் சென்றாகிவிட்டது. இங்கு வேலைக்கு அமர்த்திக் கொள்ளப்படும் ஹிந்துப் பெண்கள் சிறிது காலத்திற்குப்பிறகு சிறுகச் சிறுக மூளைச் சலவை செய்யப்பபட்டு, அதன் பின் அவர்களுக்கென்றே முகாம் அமைக்கப்பட்டு முகமதிய சம்பிர தாயங்களில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் சேலத்திற்கு அருகில் ஒரு நிலைமையை நேரில் கண்டறிவதற்காக நான் அழைத்துச் செல்லப்பட்டேன். என்னுடன் பத்திரிகையாளர் பி ஆர் ஹரனும் வந்திருந்தார். அவருக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அங்கு நாங்கள் சில ஹிந்து ஜவுளிக் கடைகளில் தங்க நேர்ந்தபொழுது பல பெண்கள் விற்பனையாளர்களாக இருக்கக் கண்டேன். அவர்களில் பெரும்பான்மையினர் முகமதியராக இருந்தனர். இதுபற்றி கடை உரிமையாளர்களிடம் விசாரித்தபோது அந்த வட்டாரத்தில் முகமதியர் அதிகம் இருப்பதால் கடைநிலை நடுத்தர வர்க்க முகமதியக் குடும்பங்களிலிருந்து ஓரளவு படித்த பெண்கள் வேலை தேடி வருவதாகவும் அவர்களை வேலையில் அமர்த்திக் கொள்வதாகவும் சொன்னார்கள். ஆனால் அந்தப் பெண்களிடம் மதம் சம்பந்தமாக எந்தவிதப் பேச்சும் வைத்துக் கொள்வதில்லை என்றும் உறுதியாகக் கூறினார்கள். ஹிந்துக் களின் மனப் போக்கு இயல்பாகவே இவ்வாறாக உள்ளது. மாற்றுச் சமயத்தினர் எவரையும் தமது மதத்தினராக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் பழகும் போக்கு ஹிந்துக் களிடையே இல்லை.
ஹிந்துஸ்தானத்தில் ஏதோவொரு காரணத்திற்காக ஏதோ ஒரு தலைமுறையில் கிறிஸ்தவராகவோ முகமதியராகவோ மதம் மாறியவர்களைத் திரும்பவும் தாய் மதமான ஹிந்து மதத்திற்கு அழைத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதே பெரும்பாலான ஹிந்துக்களுக்குத் தெரிவதில்லை. அது ஒரு அவசியமான கடமை என்கிற பிரக்ஞையும் ஹிந்துக்களுக்கு இல்லை. அதேசமயம் கிறிஸ்தவ, முகமதிய மதத்தவர் ஹிந்துக்களுடன் தொடர்பு கொள்கையில் அவர்களுக்குத் தூண்டில் போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இதனை நான் அனுபவத்தில் அறிவேன். ஒரே ஒருவரைத் தமது மதத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தாலும் அது ஆண்டவருக்குப் ப்ரீதியான செயல், அதற்குப் பலனுண்டு என்று அவர்களிடையே போதிக்கப்படுகிறது. மேலும், மத மாற்றம் செய்வதென்பது கிறிஸ்தவ, முகமதியப் பிரிவுகளிடையே ஒரு சமயக் கடமையாகவே கருதப்படுகிறது, ஊக்குவிக்கப் படுகிறது.
கிறிஸ்தவ மத மாற்றப் பணிகள் பல நிலைகளில் ஒரு ஆக்டோபஸ் செயல்படுவதைப்போல நடக்கிறது. இதில் ஊடுருவல் ஒரு முக்கிய அம்சம். ஐக்கிய ஆலயம் என்று சொல்லிக்கொண்டு, இயல்பாகவே எல்லா சமயங்களும் இறுதியில் இறைவனை அடையும் வழிகள்தன் என்கிற மனப் போக்கில் ஹிந்துக்கள் இருப்பதால் எளிதாக அவர்களை வர வழைத்து காலப்போக்கில் மத மாற்றம் செய்யப்படுகிறது. ஹிந்து சமயச் சடங்குகள் அப்படியே பின்பற்றப்படுவதும் ஹிந்து கலை அம்சங்களைத் தமது சமயக் கருத்துகளை வெளியிடப் பயன் படுத்துவதும் சரளமான உத்திகளாக உள்ளன.. ஹிந்து சமயத் தத்துவங்களை அவர்கள் கோணத்தில் எடுத்துச் சொல்லி விளக்கித் தமது சமயக் கோட்பாடும் அதுவே என்கிற மயக்கமூட்டுதலும் நடக்கிறது. ஸ்ரீ ரமண மஹரிஷி ஆசிரம ஆங்கில மாத இதழான மவுண்டன் பாத் இதழில் கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள் மிகவும் சாமர்த்தியமாக சமரசவாதிகள் போல எழுதும் கட்டுரைகளைப் படித்தால் அவர்களின் தந்திரம் புரியும். இவர்கள் எல்லாம் பால் ப்ரண்டன்கள் அல்ல, இவர்களுக்கு ஒரு உள்நோக்கம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
முகமதியரை எடுத்துக் கொண்டால அவர்களின் செயல்முறை சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் அதுவும் சாமானிய மக்களிடையே மிகவும் பலன் தருவதாகவே உள்ளது. ஒரு கலீமாவைத் தப்பும் தவறுமாகச் சொல்ல வைத்தே இந்தக் கணம் முதல் நீ ஒரு முகமதியன் உனக்கு எல்லா உதவிகளும் வரும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. வாய்க்கு வந்தபடி கலீமாவை ஒப்ப்த்து முடித்தவரிடம் பெரியவரே இப்ப நீங்க முஸ்லிம் ஆயிட்டீங்க, இப்ப உங்களுக்கு என்ன பேரு வைக்கலாம், அப்துல் கலாம்னே வெச்சுடலாமா என்று விளையாட்டாகக் கேட்கிற காட்சியையும் அதில் காணலாம்! அப்போது அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்ததால்தான் அப்படியொரு கிண்டல்! இது சம்பந்தமாக ஒரு வீடியோ பதிவைப் பார்த்தேன். அதில் ஏற்கனவே முகமதியராக மத மாற்றம் செய்யப்பட்ட ஒரு தலித் முதியவரைத் தரகராக வைத்துக்கொண்டு மற்ற தலித்களை வெறும் கலிமா சொல்லவைத்தே முகமதியராக்கும் வித்தையைப் பட்டவர்த்தனமாகப் படம் பிடித்துள்ளார்கள். இத்தகைய மத மாற்றம் கேள்வி கேட்பாரின்றி தென் மாவட்டங்களில் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் நடக்கிறது.
பொதுவாக மக்களுக்கு லெளகீகத் தேவைகளுக்காகவே கடவுளை வணங்குவது அவசியமாக இருக்கிறது. நம்மால் ஆகாதது கடவுளால் ஆகும் என்கிற நம்பிக்கையின் அடிப்படை யில் உலகியல் விருப்பங்களுக்காக மக்கள் வெவ்வேறு கோயில் களுக்குச் செல்வதாக உள்ளது. இதற்காக வேளாங்ண்ணி மாதாவோ, அந்தோனியாரோ, நாகூர் ஆண்டவரோ, அஜ்மிர் கரீப் நவாஸ் சிஸ்தியோ யாராக இருந்தால் என்ன, பிரார்த்தனை நிறைவேறினால சரி என்று போய்விடுவதாக இருக்கிறது. இந்நிலையில் இன்றைய ஹிந்துக்களே இருக்கும்போது ஏதோ ஒரு தலைமுறையில் வலுக் கட்டாயமாகவோ, ஆசை காட்டப்பட்டோ, சமூகச் சங்கடங்களைச் சமாளிக்க ஒரு வழியாகவோ கிறிஸ்தவராகவும் முகமதியராகவும் மாற்றப்பட்ட ஹிந்துக்களை எப்படித் தாய் மதம் திரும்பச் செய்வது?
நம் காலத்திலேயே மீனாட்சிபுரத்தில் தலித்துகள் முகமதியராக மாற்றப்பட்டதை நாம் பார்க்கவிலையா? அவர்கள் எதனால் முகமதியரானார்கள்? குரானின் மேன்மையை உணர்ந்ததாலா? கொலைக் குற்றத்திலிருந்து சட்டப் பாதுகாப்பைப் பெறுவதற்காகவே அல்லவா? மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் கன்னியாகுமரி மீனவர்கள் கிறிஸ்தவர்களாக மாறியது ஏன்? கிறிஸ்தவராக மதம் மாறினால் கடல் கொள்ளைக்காரர்களிட மிருந்து பாதுகாப்புத் தருவதாக நிபந்தனை விதிக்கப்பட்டதால் தான் அல்லவா? அவர்கள் என்ன விவிலியத்தைப் படித்துவிட்டுப் பரிசுத்த ஆவியை உணர்ந்ததாலா கிறிஸ்தவர்களானார்கள்? சமூகக் காரணங்களுக்காகவே அவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள். ஆகையால் சமூக அடிப்படையிலேயே அவர்களைத் தாய் மதம் திரும்பச் செயவதே சாத்தியம். சமயக் கோபாடுகளை எடுத்துச் சொல்வது அடுத்தபடியாக இருக்கும், இருக்க வேண்டும். நம் நாட்டில் இன்றைய நிலையில் கிறிஸ்தவ, முகமதிய சமூகங்களில் உள்ள கட்டுப்பாடுகளையும் அங்கு தனி மனித சுதந்திரம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சங்கடங்களையும் மனதில் பதிய வைப்பதன் மூலமே ஒருவரைத் தாய் மதம் திரும்பச்செய்வது எளிதாக இருக்கும்.
கிறிஸ்தவர்களாகவும் முகமதியராகவும் உள்ள ஹிந்துக்களிடம் ஹிந்து சமயக் கோட்பாடுகளை எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. இறைவனுக்கு ஆயிரம் நாமங்கள் என்று நாம் சொல்வதால் நாங்களும் அதைத்தானே சொல்கிறோம் என்று அதுதான் விஷயமே என்பதுபோல் பாமரத்தனமாகக் கேட்கத்தான் அவர்களுக்குத் தோன்றும். செய், செய்யாதேக்களைச் சொல்லி இவை நல்ல விஷயங்கள்தாமே என்று பேச்சை திசை திருப்பிக் கொண்டு போகத் தோன்றும்.
நான் உனக்குச் சொல்ல வேண்டியனவற்றையெல்லாம் சொல்லிவிட்டேன், இனி தீர ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டியது உன் வேலை என்று மனிதனுடைய பகுத்தறிவிற்கு மரியாதை கொடுத்து தனி மனித சுதந்திரத்திற்கு அளிக்கப்படும் வாயப்பு ஒரு ஹிந்துவுக்கு இருப்பதை எடுத்துச் சொன்னால், அவர்கள் வேதத்திலும் இரு வழிகளும் சொல்லப்பட்டு எந்த வழியில் போகிறாயோ போ, தவறான வழியில் போனால் அதன் ப்லனை அனுபவிப்பாய் என்று அச்சுறுத்துவதைச் சொல்லி நாம் சொல்வதும் அவர்கள் சொல்வதும் ஒன்றே என்றுதான் அவர்களுக்கு வாதிடத் தோன்றும். இது அவர்களின் தவறு அல்ல. காலங் காலமாக அவர்கள் இவ்வாறு பாடம் செய்யப்பட்டு, tune செய்யப்பட்டு, வந்திருக்கிறர்கள். எனவே அவர்களுக்குப் புரியும் விதமாக அவர்கள் ஏற்கத் தக்க வகையில் ஹிந்து சமயக் கோட்பாடுகளை எடுத்துக் கூறுவதும், எல்லா சமயங்களிலும் தவறானவையும் உள்ளன என்று சமூக நிலவரத்திற்கு சமயத்தின் மீது பழி சுமத்தி சமரசம் பேசுவதும் எவ்விதப் பலனும் விளைவிக்காது. வெறும் வெட்டிப் பேச்சாகவே எல்லாம் முடிந்து போகும்.
நான் ஒரு தொண்டு நிறுவனத்தில் ஊடக ஆலோசகனாக இருந்த பொழுது அங்கு பணியாற்றிய ஒரு படித்த முகமதியருக்கு மத மாற்றம் செய்வது தவ்று என்பதை எவ்வளவுதான் விளக்கியும் அவரால் அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஏனெனில் அவர் அவ்வாறாகத் தயார் செய்யப்பட்டிருக்கிறார். இதுதான் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது முகமதிய, கிறிஸ்தவ நண்பர்களின் நிலை. உங்கள் வழி உங்களுக்கு, அவர்கள் வழி அவர்களுக்கு என்கிற பெருந்தன்மையெல்லாம் ஆரம்ப காலத்தில், கை ஓங்குவதற்கு முன் சொல்லப்பட்டவைதாம். மெக்காவில் வழிபாட்டுக்கான வடிவங்களை முதலில் அனுமதித்ததும் சகிப்புத்தன்மையினால் அல்ல, இன்னும் பலம் பெறாத நிலையில் இருக்கிறோம், சுய ரூபத்தைக் காட்ட நமக்கு இன்னும் வேளை வரவில்லை என்கிற நடைமுறை சூழ்ச்சிதான்.
முதலில் நான் ஹிந்துவாகப் பிறந்ததால் ஹிந்துவாக இல்லை. ஹிந்துவாகப் பிறந்தது எனது பூர்வ புண்ணியக் கர்ம பலன் என்றாலும் பகுத்தறியும் தன்மை எனக்கு இருப்பதாலேயே நான் ஹிந்துவாக இருக்கிறேன். இந்தப் பகுத்தறிவு எனக்கு இருக்கும் பட்சத்தில் நான் எந்தச் சமூகத்தில் பிறந்திருந்தாலும் ஹிந்துவாகவே மாறியிருப்பேன். ஆனால் இவ்வாறு கூறுவதற்கு ஹிந்து சமயத்தின் அடி நாதத்தை உள்வாங்கிக் கொள்ளும் உணர்வைப் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய உணர்வைத் தோற்றுவிப்பது எளிதல்ல.
எனவேதான் நான் நமது கிறிஸ்தவ, முகமதிய சகோதரர்களைத் தாய் மதம் திரும்பச் செய்கையில் ஹிந்து சமயக் கோட்பாடு களைப் புரிய வைக்கும் முயற்சியை முதல் படியாக மேற்கொள்வதே இல்லை.
ஒருமுறை சென்னை பார்தீய வித்யா பவனைச் சேர்ந்த ஸ்ரீ அனந்த நாராயணன் நான் ஒருவரைத் தாய் மதம் திரும்பச் செய்கையில் அவரை பகவத் கீதையைப் படிக்கச் சொல்லுங்கள் என்றார். அதற்கு நான், மாட்டேன், இந்த நிலையில் கீதையை அவர் படித்தால் அவரால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது, எல்லாம் தவறாகவே தோன்றும், நுட்பமான ஹிந்து சமயக் கோட்பாடுகளை இப்போது புரிய வைக்க முடியாது என்று சொன்னேன். அவரும் ஒப்புக் கொண்டார். உதாரணமாகக் கொல்பவனும் நான், கொல்லப் படுபவனும் நானே என்று என் எஜமானன் ஸ்ரீ கிருஷ்ணன் சொல்வதை ஒரு கிறிஸ்தவரிடமோ, முகமதியரிடமோ சொன்னால் அதை அவர் எப்படிப் புரிந்து கொள்வார்?
ஆகையால் ஒருவரைத் தாய் மதம் திரும்பச் செய்கையில் நான் எப்போதும் சமூகப் பிரச்சினைகளையே எடுத்துக் கூறுகிறேன். ஒருவர் ஹிந்துவாக இருக்கையில் மதம் அவரது தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதைத்தான் மிகவும் வலுவாக, ஏராளமான எடுத்துக் காட்டுகளுடன் விளக்குகிறேன்.
கிறிஸ்தவ ஆலயங்களிலும் மசூதிகளிலும் ஆட்டு மந்தைகளைப் போல மக்கள் உட்கார வைக்கப்பட்டு போதகர்களால் சமூகப் பிரச்சினைகளில் இன்னவாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்படுவதுபோல் ஹிந்து ஆலயங்களில் நடைபெறுவ தில்லை என்று எடுத்துக் கூறுகிறேன்.
மேலும் ஹிந்து சமூகத்தில் இன்று விரும்பத் தகாத நடைமுறைகள், கவனியுங்கள், ஹிந்து சமயத்தில் அல்ல, ஹிந்து சமூகத்தில் நீடித்தாலுங்கூட சட்டப்படி அதை எதிர்த்துப் போராட முடியும், போராடி வெற்றி பெறவும் முடியும், ஹிந்து சமூகச் சட்டங்களில் காலத்திற்கு ஏற்ற விதிகளை நடைமுறைக்குக் கொண்டு வருவது மிகவும் எளிதாகவே உள்ளது, கிறிஸ்தவ, முகமதிய சமூகங் களில் இவ்வாறான செளகரியம் இல்லை, முகமதியத்திலும் கிறிஸ்தவத்திலும் மதம் சமூக வாழ்க்கையில் மேலாதிக்கம் செலுத்துவதுபோல் ஹிந்து சமூக வாழ்க்கையில் நிலைமை அவ்வாறில்லை என்றெல்லாம் விவரிக்கிறேன். கிராமப் புறங்களில் சமயத்தின் பெயரால் சமூகக் கட்டுப்பாடுகள் நீடித்தாலும் அவற்றுக்குச் சட்ட ரீதியாகவே பரிகாரம் தேடவும், எதிர்த்துப் போராடவும் வாய்ப்பு இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறேன்.
நானறிந்தவரை ஹிந்துஸ்தானத்தில் ஏதோ ஒரு தலைமுறையில் மத மாற்றம் செய்யப்பட்ட சராசரி மனப் போக்குள்ள கிறிஸ்தவரையும் முகமதியரையும் சமயக் கோட்பாடுகளை எடுத்துக் கூறுவதன் மூலமாக அல்ல, சமூகப் பிரசினைகளில் உள்ள சாதக பாதகங்களை உணரச் செய்வதன் மூலமே தாய் மதம் திரும்பச் செய்ய முடியும்.
இயல்பான ஹிந்து எண்ணப் போக்கிற்கு இணங்கச் சிலர் கிறிஸ்தவரும் முகமதியரும் மத மாற்ற வேலைகளில் ஈடுபடுவதால் நாமும் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? அவரவரும் அவரவர் மதத்திலேயே நீடிக்கட்டுமே, என்ன பிரச்சினை? மத மாற்றம் கூடாது என்று மட்டும் சொன்னால் போதாதா? என்று என்னிடம் கேட்கிறார்கள்.
நாம் யாரையும் மத மாற்றம் செய்வதில்லை. தாய் மதம் திரும்பச் செய்கிறோம், அவ்வளவே. ஹிந்துஸ்தானத்தின் சமய அடிப்படையிலான மக்கள் தொகை விகிதம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காகவே தாய் மதம் திரும்பச் செய்யும் கடமை நமக்கு இன்றியமையாததாகிறது. ஏனெனில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கும்வரைதான் ஹிந்துஸ்தானத்தில் வழிப்பாட்டுச் சுதந்திரமும் உண்மையான மதச் சார்பின்மையும் நீடிக்கும். ஹிந்துக்களின் எண்ணிக்கை மிகவும் நிதானப் போக்கில் அதிகரித்து வருகிறது. ஆனால் கிறிஸ்தவ, முகமதிய சமயங்களில் எண்ணிக்கைப் பெருக்கம் அதிக அளவில் உள்ளது. நூறு ஆண்டுகளுக்குப்பின் ஹிந்துஸ்தானத்தில் நிலைமை என்னவாக இருக்கும் என்றே சிந்திக்க வேண்டியுள்ளது. ஹிந்து சமயத்திற்கு அழிவில்லை என்பது வாஸ்தவம். ஆனால் சமூகக் கண்ணோட்டத்துடன் ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டும்.
கஷ்மீரில், ஆஃப்கனில், பிரிவினைக்கு முந்தைய பஞ்சாப், ஸிந்து, வங்காள மாகாணங்களில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்ததால் என்ன ஆயிற்று என்று சிந்திக்க வேண்டும். இப்போது நம் நாட்டிலேயே கூட கிறிஸ்தவரும் முகமதியரும் எண்ணிக்கை கூடிய பகுதிகளில் ஹிந்துக்கள் எதிர்கொள்ள நேரிடும் தொல்லைகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 95 சதத்துக்குக் குறையாமல் இருப்பதே ஹிந்துக்களுக்கு மட்டுமின்றி மாற்றௌச் சம்யத்தினரிம் அனைத்துப் பிரிவினருக்குங்கூட வழிபாட்டுச் சுதந்திரமும் நாத்திகம் உள்ளிட்ட கருத்துச் சுதந்திரமும் சாத்தியமாகும். இந்த விஷயத்தில் நம் நாட்டின் நிலவரத்தை ஐரோப்பிய ஜனநாயகநாடுகளுடனோ அமெரிக்கவுட்னோ ஒப்பிட்டுப் பார்ப்பது பொருந்தாது.
ஹிந்துக்களை மத மாற்றம் செய்வது எளிதாக இருக்ககிறது ஆனால் கிறிஸ்தவர்களையும் முகமதிய்ரையும் தாய் மதம் திரும்பச் செய்வது எளிதாக இல்லை. அவர்களால் முடிவது நம்மால் ஏன் முடிவதில்லை என்று யோசிக்க வேண்டும்.
நம்மாலும் முடியும் என்ற திட சங்கற்பத்துடன் முயற்சி செய்தால் முடியும் என்பதை உணர வேண்டும். ஹிந்துக்கள் ம்தம் மாறுவதைத் தடுப்பதில் ஒரு அணியினரும் மாற்றுச் சமயம் தழுவிய ஹிந்துக்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதில் இன்னொரு அணியினருமாகப் பணியைப் பகிர்ந்துகொண்டு இதில் இறங்க வேண்டும்.
சைதன்ய மஹாப்ரபுவும், வித்யாரண்யரும், குமர குருபரரும், ஆரிய சமாஜம் நிறுவிய தயானந்த சரஸ்வதியும் எண்ணற்ற பெரியோரும் மேற்கொண்ட கொண்ட திருப்பணியே தாய் மதம் திரும்பச் செய்தல். எனவே இதில் எவ்விதத் தய்க்கமும் காட்டத் தேவையில்லை.
தாய் மதம் திருமபச் செய்தலை ஓர் இயக்கமாகவே தீவிரமாக நடத்தத் தொடங்கினால் அதைக் கண்டு ஏற்படும் மிரட்சியின் காரணமாகவே மத மாற்ற முயற்சிகள் பெருமளவு குறைந்து விடும்.
பொருளும் வாய்ப்புகளும் அளித்து மதமாற்றம் செய்வதுதான் தவறு என்பதல்ல. ஏசுவை ஏற்றுக்கொண்டால்தான் விமோசனம் என்று கிறிஸ்தவர்களும் முகமதுவை ஏற்றுக் கொண்டால்தான் சுவர்க்கம் என்று முகமதியரும் பிரசாரம் செய்வதே சட்ட விரோதமான ஆசை காட்டுதல்தான். இவர்கள் அவரவர் சமயக் கோட்பாடுகளை விவரிப்பதோடு நிறுத்திக் கொள்வதேமுறை.
மலர்மன்னன் ஐயா வணக்கம்,
///முதலில் நான் ஹிந்துவாகப் பிறந்ததால் ஹிந்துவாக இல்லை. ஹிந்துவாகப் பிறந்தது எனது பூர்வ புண்ணியக் கர்ம பலன் என்றாலும் பகுத்தறியும் தன்மை எனக்கு இருப்பதாலேயே நான் ஹிந்துவாக இருக்கிறேன். இந்தப் பகுத்தறிவு எனக்கு இருக்கும் பட்சத்தில் நான் எந்தச் சமூகத்தில் பிறந்திருந்தாலும் ஹிந்துவாகவே மாறியிருப்பேன்./////
இந்த தங்களின் வரி நம் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும் இவ்வெண்ணம் இருந்தால் எல்லோருக்கும் நான் உண்மையான இப்பகுத்தறிவினை ஊட்ட முடியும்
மேலும் நம்முள் நுழைந்து நல்லவர் போல காண்பித்து குட்டை குழப்பி ஆதாயம் தேடும் நரிகூட்டத்தை இனம் கண்டு அவற்றிக்கு இடம்கொடாது முதலிலேயே அகற்ற வேண்டும் புல்லுருவிகளின் உளறல்களை வளர விடாது அடியோடு அழிக்க வேண்டும்
Dear malarmannan,
your suggestion is correct that hindus must not shy away from engaging christians and muslims for reconversion back to their forefathers religion of hindu sanatana dharma. They can not be easily convinced as they are brain wash ignorant hindus. Mainly ignorant ladies from urban or semi urban areas or small towns fall in to the trap of missionaries who offer them some money. Missionaries smell their weakness particularly when they are sick, christian hospitals offers some free treatment but not in a proper way . They extract more money from them.you could have heard of a an eye hospital in tiruchi got in to problem where all poorer people went for the free eye operations by christian missioanreis run eye hospital lost their eyes which was even reported in TVs. Village people are more wiser as they do not want to cross their limits since there are many village demi gods like karupanna swamy, munieswaran, Ayyanar, amman in which they have total trust. so these villagers never fall in the trap.out of fear atlease. so missionaries never visit villages but attack only semi urban towns where they can buy lands at cheaper prices for building churches, brainwashing people without any medias attention ect.
Hence it is high time, hindus must tell their christians friends to reconvert in to their parents religions even if they have a name tag of christianity .Example Lawerence raghavendra is the devotee of ragavendra and built a temple. Vijays parents who were in christianity returned to hinduism silently and same is the case with many known personalities. How they returned is out of thier intelligence to realise the truth. But for the ignorant people, hindus organisation must publish a book about the differences between hinduism, chiristianity and islamism and tell about the advantage and disadvantages. Also all hindu organisions like RSS, VHP,SHIVA SENA
must actively gear up openly conducting reconverion festivals in all over tamil nadu similar to the one they conducted in terunelveli last two years ago. This should be done in all over tamil nadu for which hindus organisaition must bring out a book ” reverting to hinduism’ or ‘ Religions and your duties”. All christians muslims must be told that they committed a major sin to their original hindu forefathers by their conversion to the new relgion of man made brought from desert. This sins are the root cause of problems faced by them at present. similar to pithru dosha. These sort of new innovative messages would alter their minds out of fear, to think of reconversion after reading a book given free of cost to them by hindu organisaions.Donations can be collected from business establishments, Big shops and from public for this cause to fight against foreign supported religions of man made.Now nadar community whose forefathers fell to the tricks of missionaries earlier now started realising the truth and slowly coming back.They can be easily persuaded becouse they are always flexible if messages is given to them properly.
” முதலில் நான் ஹிந்துவாகப் பிறந்ததால் ஹிந்துவாக இல்லை. ஹிந்துவாகப் பிறந்தது எனது பூர்வ புண்ணியக் கர்ம பலன் என்றாலும் பகுத்தறியும் தன்மை எனக்கு இருப்பதாலேயே நான் ஹிந்துவாக இருக்கிறேன். இந்தப் பகுத்தறிவு எனக்கு இருக்கும் பட்சத்தில் நான் எந்தச் சமூகத்தில் பிறந்திருந்தாலும் ஹிந்துவாகவே மாறியிருப்பேன். ஆனால் இவ்வாறு கூறுவதற்கு ஹிந்து சமயத்தின் அடி நாதத்தை உள்வாங்கிக் கொள்ளும் உணர்வைப் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய உணர்வைத் தோற்றுவிப்பது எளிதல்ல.”
அற்புதமான கருத்து. வணங்குகிறோம்.
very very well written article. however i doubt how much it is possible to win back ppl whom we have lost.. just being a bit pessimisstic going by what i see in and around central districts. Esp i feel i-slam is a much bigger threat than Xtianity. just my opinion. “Azhaippu pani” as they put it, is going on in an alarming pace whereas unfortunately we are winning one or two ppl here and there (like nayan).
anyways i saw TMMK website getting nearly 20,000 hits. do we also get that much hits? because anyways our views will never be published in print media, so would be nice to know atleast if we are getting a bigger reach in cyberspace. Thanks again for the wonderful article.
அற்புதமான கருத்துக்கள்…!!! இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இந்துக்களை ஏமாற்றியும் போலியான ஆசை வார்த்தைகள் கூறியும் மதம் மாற்றுவது அதிகரித்து வருகிறது. ஆனால் இதை தட்டிக்கேட்க வலிமையான இந்து அமைப்புகள் இங்கு இல்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.
மேலும் தற்காலத்தில் வெளிவரும் அநேகமான திரைப்படங்களில் இந்துக்களையும் இந்து சமயத்தையும் கேலி செய்யும் கருத்துக்கள் அதிகமாக படமாக்கப்படுகின்றன. அதேசமயம் கிறிஸ்தவ, முகமதிய மதங்களை உயர்த்திக்காட்டவும் தவறுவதில்லை. இந்து அமைப்புகள் இவற்றை தடுக்க முயற்சி எடுக்க வேண்டும்.
ஆசிரியர் அவர்களுக்கு,
எனது பின்னூட்டத்துக்கு ஒரு கட்டுரை வடிவிலேயே பதில் சொல்லியமைக்கு நன்றி.
பொதுவாக நாம் பழகும் மக்களிடம் ஜாதி மதம் பற்றிய கருத்து பரிமாற்றம் செய்வதில்லை. அதனால் உங்களைப் போல் இது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. ஆனால் இனி யாராவது ஜபக் கூட்டத்துக்கு வருகிறாயா என்றாலோ உங்களுக்காக நாங்கள் ஜபம் செய்கிறோம் என்று சொன்னாலோ முன்னே எல்லாம் நட்பு கருதி அமைதியாக இருந்துவிடுவதுண்டு. இனிமேல் அதை தவிர்க்கவும் கூடவே ஒரு சிறு ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் என்றே கருதுகிறேன்.
—
ஒரு குடும்பத்தை கலைத்து தன் வாழ்வை தொடங்க தாய் மதம் திரும்பிய நயன்தாரா படம் இங்கே பொருத்தமாக இல்லை.
அப்பாவி இந்துக்கள் —— களிடம் சிக்கி படாதபாடுபடுகிறார்கள் இந்தியாவில் அதுவும் தமிழகதில்
அன்புள்ள ஸ்ரீ விருட்சம்,
தீண்டாமை, வறுமை, அரவணைப்பு இல்லாமை, இலவசங்கள் போன்ற பொதுவான காரணிகள் மத மாற்றத்திற்கு வழிசெய்வ தாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் இன்று இவற்றோடு மேலும் பல காரணங்களால் மத மாற்றம் சாத்தியமாகி வருகிறது. பன்னாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை செய்யும் படித்த ஆண்-பெண் இளைஞர்களும் மத மாற்றம் செய்யப்ப்டுகிறார்கள். பொருளாதாரப் பிரச்சினைகளோ கண் மூடித்தனமான நம்பிக்கையோ இத்தகையோர் மதம் மாறக் காரணமாக இல்லை. வேற்று மதக் கருத்துகள் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போலப் புரிந்து கொள்வதற்கு எளிதாக உள்ளன. அவற்றை எடுத்துச் சொல்பவர்களிடம் உத்வேகம் உள்ளது. இது தவிர லவ்-ஜிஹாத், லவ்-க்ரூஸேட் சமாசாரங்களும் உள்ளன. எல்லாம் திட்டமிட்டு, வியூகம் வகுத்து, அவரவர் சாமர்த்தியம், வசதிகளுக்கு ஏற்பப் பணிகளைப் பகிர்ந்துகொண்டு மத மாற்றம் நடந்து வருகிறது.
நமது இளைஞர்களுக்கு நமது சமயக் கோட்பாடுகளை சரிவரப் புரிந்துகொள்ள சரியான ஏற்பாடு இல்லை. சமயச் சின்னங்கள் அணிவது, கோவிலுக்குப் போய் சம்பிரதாயமான அர்ச்சனை முதலான செயல்களின் மூலம் வழிபாடு செய்வது, பண்டிகைகள் அனுசரிப்பது இவையெல்லாந்தாம் நமது மதம் என்று அவர்கள் புரிந்துகொள்ளும் நிலைமை உள்ளது. உலகியல் காரணங்களுக் காகத்தான் கடவுளை வணங்க வேண்டும், உலகியல் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே கடவுளிடம் வேண்டுதல் செய்கிறோம் என்ற எண்ணம் வேரூன்றியிருக்கிற்து. இதனால்தான் இன்று உயர் சாதியினர் என்று வகைப்படுத்தப் பட்டிருக்கும் பிராமண இளைஞர்கள்கூட மதம் மாறுகின்றனர்.
இறை வழிபாட்டின் நோக்கம் உலகியல் ஆதாயங்களையும் நன்மைகளையும் பெறுவதல்ல என்பதை இவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால் அவற்றையெல்லாம் சுய முயற்சியால் எய்துவதற்கான திட சங்கற்பத்தைப் பெறுவதற்கு இறைச்சக்தியின் துணை தேவையாதலால் அதன் அருளையும் ஆற்றலையும் வேண்டி வழிபாடு செய்வது அவசியமாக உள்ளது என்பதைப் புரிய வைக்க வேண்டும். துன்பங்கள் நேர்கையில் அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைக் கொடு என்றுதான் வேண்டிக் கொள்ள வேண்டும். உலகியல் முன்னேற்றம் வேண்டும் எனில் அதைப் பெறுவதற்கான ஆற்றலைத் தந்து வழி முறைகளையும் கற்றுத் தா என்றுதான் வேண்ட வேண்டும் இதுவே ஹிந்து சமய சம்பிரதாயம் என அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும்.
ஹிந்து சமயக் கோட்பாடுகளைச் சிறு கையேடுகளாகக் கேள்வி-பதில் வடிவத்தில் தயாரித்து அனைவருக்கும் விநியோகம் செய்வது நமது இளைஞர்கள் தமது சமயக் கருத்துகளை அறிய உதவும். இவ்வாறு வினா-விடைக் கையேடுகள் விநியோகம் செய்யப்படும் பணி சில இடங்களில் ஓரளவு நடைபெறுவதாக அறிகிறேன். இது பெரிய அளவில் விரிவுபடுத்தப்படவேண்டும். அலுவலகங்கள். பொது இடங்கள், ஆலயங்கள், மருத்துவ மனைகள், சிறைச்சாலைகள் ஆகியவற்றில் இவற்றின் விநியோகம் நடைபெற வேண்டும்.
மன ஆறுதல் வேண்டுவோருக்கும், சந்தேகம் கேட்பவர்களுக்கும் சமாதானம் கிடைக்கத் தொலைபேசி மூலம் தன்னம்பிக்கை யூட்டுவதும், விளக்கம் அளிப்பதுமமான இலவச சேவை மையங்கள் செயல்பட வேண்டும்.
நண்பர் ஸ்ரீ சிங்கமுத்து மிகவும் ஆதங்கத்துடன் நம் கோயில்களில் கண்ணீருடன் நிராதரவாக நிற்பவர்களுக்கு ஆறுதல் சொல்வார் இல்லையே என்று வருந்தியிருந்தார்.
நமது கோயில்கள் வழிபாடு செய்வதற்கானவை மட்டுமல்ல, அவை கலாசார கேந்திரங்களாகவும் சமூகக் கலந்துறவாடல் களுக்கான பொது இடங்களாகவும் சேவை செய்வதற்குமானவை.
கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாட்டின் போது சமூக உணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.. வழிபாட்டில் நாடு நலமாயிருக்கவும், நாட்டை ஆள்வோர் மக்கள் நலனுக்கு ஏற்ப நடந்துகொள்ளும் நல்ல புத்தியுடன் இருக்குமாறும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. வழிபாட்டின் இறுதியில் அனவரும் இடமும் வலமும் முகம் திருப்பி முன்பின் அறியாதவாரய் இருப்பினும் புன் முறுவலுடன் வணக்கம் கூறிக்கொள்ளும் சடங்கு அனுசரிக்கப்படுகிறது. நமது கூட்டு வழிபாடுகளிலும் இவ்வாறான நோக்கம் இருப்பினும் போதுமான தீவிரமோ செயல் முறையோ இல்லை. நமது ஆலயங்களில் தினமும் மாலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இவ்வாறான கூட்டு வழிபாட்டை நடைமுறைப்படுத்துவது இளைஞர்கள் மத மாற்ற வலையில் விழாமல் பாதுகாக்க உதவும்.
அனைவருக்கும் உலகியல் நோக்கமே முக்கியமாக இருப்பதால் மதம் மாற முனைவேரிடமும் சமூகக் கண்ணோட்டத்துடனேயே அணுகி, ஹிந்து சமயம் தனி நபர் சொந்த வாழ்க்கையில் தலையிடுவதில்லை என்பதையும் வேற்று மதங்கள் ஆடு மாடுகளைப் போல மக்களைப் பட்டியில் அடைத்து வைப்பதையும் எடுத்துக் கூறுவதே முதல் கட்டச் செயல் திட்டமாக இருக்க வேண்டும்.
-மலர்மன்னன்
சென்ற வருடம் ஜூலை மாதம் மலேரியா மஞ்சள் காமாலை காரணமாக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்.ICU பிரிவில் வாய், மூக்கு என்று எங்கு எங்கு குழாய்கள் வைக்க முடியுமோ அங்கெல்லாம் வைத்தனர். அது ஒரு கிறிஸ்த்துவ நிறுவனம் நடத்தும் மருத்துவமனை. நூற்றாண்டு கண்டது. அலுவலக நண்பர்கள் இருபது வருடங்களாக என்னை அறிந்தவர்கள் எனை பார்ப்பதற்கு வந்தனர். அப்பொழுது ஒரு நால்வர் அணி என் பெயரைச் சொல்லி உள்ளே வந்தனர். அவர்கள் எனக்கு அறிமுகமில்லாதவர்கள். வந்தவர்களில் ஒரு பெண்மணி எனது அலுவலக நண்பரின் பெயரைச் சொல்லி .ஜபம் செய்ய வந்திருப்பதாகச் சொன்னார். மேலும் அவருடைய தகப்பனார் பெயர் ஸ்ரீனிவாச ஐயங்கார் என்றும் அவருடைய மகளான தான் தேவ மகிமையை அறிந்ததாகவும் சொன்னார், எனக்கு எரிச்சல் வந்தது. ஆனால் வாயை மூடி மாஸ்க் வைத்ததினால் பேச முடியவில்லை. எனது நண்பர்கள் அவரிடம் இப்போது தொந்திரவு செய்யவேண்டாம் என்று சொல்ல சென்று விட்டார். ஒரு ஐயங்கார் நோயாளிக்கு ஜபம் செய்யவேண்டும் என்றால் செய்துவிட்டு போகவேண்டியதுதானே. வந்தவர்கள் தங்களை அய்யங்கார் வழித்தோன்றல்கள் என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும் என்பது எனது நண்பர்களிடையே பின்னர் விவாதப் பொருளானது. போப்பும் தற்போது இந்து வழிமுறைகளை காப்பியடிக்க ஒப்புதல் அளித்துள்ளார் என்பது எவ்வளவு பேருக்கு தெரிந்திருக்கும். ஒரு உதாரணம்: வேளாங்கண்ணி பாத யாத்திரை செல்பவர்கள் காவி சட்டை,வேட்டி அணிந்து மாலை அணிந்து இந்து முறைகளை காண இது சரியான சீசன்.
மிக அழகான கட்டுரை.
சமுதாய அந்தஸ்துகள் மற்றும் சமுக பிரச்சனைகளை வைத்துக்கொண்டு நாம் பேச வேண்டும் என்பது முற்றிலும் ஏற்க்கக்கூடிய ஒரு விஷயம். அனால் அதற்கு நிறைய படிக்கவும், பல இடங்கள் சென்றும் பல பேருடன் பழகியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
என் உறவினர் ஒருவர் அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுவதை ஒரு மாபெரும் உறுதியாக வேள்வி போல அவர்கள் செய்வதாகவும் சொன்னார்கள். நம்மிடம் அவ்வாறான நிலை இல்லை என வருத்தப்பட்டார்கள் ஆனால் உங்கள் கட்டுரை என் சிந்தனையை தூண்டுகிறது. நன்றி.
dear ranganathan and mallar mannan / and the tamilhindu team ….
the intention of the patha yaatra with safron dress is happening for a long time. One of my friends went and enquired one in the team. he said we will go to villages and stay in their entrance thinnai. It has been a custom in Bhaaratha desam that any one who comes and stays in thinnai have to be served with food. the villagers will serve food and slowly these people will start speaking about their God. The villager may enquire is it maariyaaman and this guy replies it is mary amman. the next year the villager may also join. its a pattern that all of us have to understand and act.
//ஒரு ஐயங்கார் நோயாளிக்கு ஜபம் செய்யவேண்டும் என்றால் செய்துவிட்டு போகவேண்டியதுதானே- Sri G Ranganaathan //
தயவு செய்து இந்தப் பெருந்தன்மையான மனப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும், ஸ்ரீ ரங்கநாதன்.
நமக்கு எதற்கு வேற்று சமய முறைப்படி ஜபம்? நம்மிடம் இல்லாத ஸ்லோகங்களும் பதிகங்களுமா வேற்று சமயங்களில் உள்ளன?
நாம் நாகரிகம் கருதி இப்படி ஜபம் செய்ய அவ்ர்களை அனுமதிப் போமானால் அதுவே அவர்களுக்கு மத மாற்றப் பணிகளில் பெரும் ஊக்கத்தை அளித்துவிடும். தமக்கு வரவேற்பு இருப்பதாக எண்ணிக் கொள்வர்.
ஆகவே ஜபம் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு நமது வீடுகளுக்கும் மருத்துவ மனைக்கும் வருவோரை தயவு தாட்சண்யமின்றி வெளியேற்ற வேண்டும்.
முச்சந்திகளில் நின்றுகொண்டு பல் பொடி வியாபாரம் செய்வதுபோல் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பவர்கள் கொடுக்கும் பிரதியைக் கையில் வாங்கி அவ்ர்கள் எதிரிலேயே சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிய வேண்டும். .என்னிடம் ஒரு முறை ஒரு வெள்ளைக்காரன் ஒரு துண்டுப் பிரசுரத்தை அளித்தான். நான் அவனிடமிருந்த ஒரு கற்றைப் பிரசுரஙகளையும் கேட்டு வாங்கி எல்லாவற்றையும் கிழித்துக் குப்பைத் தொட்டியில் எறிந்தேன். சுற்றுலாவுக்கான வீஸாவில் வந்துவிட்டு இம்மாதிரி துஷ்பிரயோகம் செய்தால் போலீசில் புகார் செய்வேன் என எச்சரித்தேன். அந்த் மனிதன் மறுபேச்சுப் பேசாமல் விரைந்து மறைந்தான். எல்லாம் பட்டப் பகலில் பலர் முன்னிலையில் நடந்தது. இம்மாதிரி தயவு தாட்சண்யமின்றி நடந்துகொள்ள் நாம் தயங்கவே கூடாது.
-மலர்மன்னன்
// ஹிந்துவாகப் பிறந்தது எனது பூர்வ புண்ணியக் கர்ம பலன் என்றாலும் பகுத்தறியும் தன்மை எனக்கு இருப்பதாலேயே நான் ஹிந்துவாக இருக்கிறேன். இந்தப் பகுத்தறிவு எனக்கு இருக்கும் பட்சத்தில் நான் எந்தச் சமூகத்தில் பிறந்திருந்தாலும் ஹிந்துவாகவே மாறியிருப்பேன். // பூர்வ புண்ணிய கர்ம பலனையும் பகுத்தறிவையும் ஒரே வாக்கியத்தில் இணைக்கும் கஷ்டமான காரியத்தை செய்திருக்கிறார்! பலே!
Thiru.Malarmannan has rightly mentioned about the love j-had among young ppl since they dont have any religiosity.
All these moderate nonsense about “all religions are equal” have made us impotent. I myself have spoken with a few ppl who have converted to i-slam and xtianity just for getting married. Their common refrain is “it is just another path to reach GOD. Whats in assuming a new name”.
However we dont get other ppl getting converted to our religion for marrying someone. (nayan is exception. The otherway around u can find in many bollywood filmstars and also shiela dikshit’s daughter and subrahmaniam swamy’s daughter ). I like swamy … no offence meant to him. just took his case for example.
Similar thoughts only lead many westerners to convert to i-slam (eg: Nasser Hussein and katrina kaif have white mothers and indian mus. fathers.).
Y this happens is because mus. are firmly taught from their childhood that “all other religions are evil and false” . This help them not to stray from their religion during their teenage.
Its like whats happening in india is :
Step1: The leftist press with all its media power will preach all those liberal non-sense and make us unable to defend ourselves.
Step2: we will loose ppl in conversion and also thru love j-had and love cr-sade.
For a simple person like me its not really possible to understand the nuances of our great religion.
But atleast i believe even if we dont understand abt our religion , we should atleast educate our friends and children about the evil designs of other religionists.
To educate about i-s-am is really not very difficult. proving it as evil is as simple as proving 1+1=2.
Just a personal experience in this regard: My friend used to believe that only rss is fanatic and those minority organisations are simply fighting for their rights and have no intention to dominate us. i just requested him to watch thamizhan TV in nite (those MMK programs and TJ programs) and now he said may be there is some truth in what rss says.
we shud just somehow make our ppl read the whole life history of p.mohammed. that will be enuf to stop any conversions there..
நன்றி. அருமை. பெரிய அளவில் செயல் படும் மடங்களும் இதற்கு சரியான முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இருக்கின்ற அளவு வேதங்களையும் அழித்து விடாமல் காக்க வேண்டும். அனைவரின் ஒற்றுமை மிகவும் முக்கியம். ஹிந்துக்களே ஒன்று படுங்கள்.
முன்பெல்லாம் ரயில் வண்டிகளில் பாட்டுப் பாடுபவர்கள் சினிமா பாடல்களைப் பாடி வந்தனர். இப்போது எங்கு சென்றாலும் கிறிஸ்தவ மதத்தினரின் தூண்டுதல்கள் அதிகமாக இருக்கிறது. முஸ்லிம்களும் ஏற்கனவே இங்கு வந்த கட்டுரைகளின் படியே லவ் ஜிகாத் என்று கூறிக்கொண்டு ஹிந்துப் பெண்களை மதம் மாற்றிக் கொண்டு இருக்கின்றனர். இனியும் வேண்டாம் தாமதம். ஒன்று படும் தருணம் இதுவே. ஒன்று படுவோம்.உயர்வடைவோம்.
அன்புள்ள ஆசிரியர் குழுமத்திற்கு,
நாங்கள் சில வருடங்களாக மலர்மன்னன் அவர்களின் கருத்து மிக்க கட்டுரைகளை படித்து பயன் பெற்று வருகிறோம்.
அவரை நேரில் பார்த்ததில்லை. அவரது புகைப்படத்தை வெளியிடவும். அவரை பேட்டி கண்டு இணைய தலைதில் ஒளி படமாக வெளியிடவும். செய்வீர்களா ?
ரேவதி.
// பூர்வ புண்ணிய கர்ம பலனையும் பகுத்தறிவையும் ஒரே வாக்கியத்தில் இணைக்கும் கஷ்டமான காரியத்தை செய்திருக்கிறார்! பலே! //
ஆர் வீ, எங்கே உங்கள் பகுத்தறிவை வைத்து நிரூபியுங்கள் பார்க்கலாம் – பூர்வ புண்ணிய பலன் எல்லாம் கிடையாது என்று.
// சுற்றுலாவுக்கான வீஸாவில் வந்துவிட்டு இம்மாதிரி துஷ்பிரயோகம் செய்தால் போலீசில் புகார் செய்வேன் என எச்சரித்தேன். அந்த் மனிதன் மறுபேச்சுப் பேசாமல் விரைந்து மறைந்தான். எல்லாம் பட்டப் பகலில் பலர் முன்னிலையில் நடந்தது. இம்மாதிரி தயவு தாட்சண்யமின்றி நடந்துகொள்ள் நாம் தயங்கவே கூடாது. //
நான் ஒரு முறை சென்னை அண்ணாசாலையை கடப்பதற்காக சுரங்கப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தேன். வெள்ளை சேலை கட்டிய இருவர் பிரசுரங்கள் தந்து கொண்டிருந்தனர். பார்ப்பதற்கு பிரம்ம குமாரிகள் சங்கத்தவர்களைப் போலிருந்தனர். பிரசுரம் வாங்கியவுடன் தெரிந்தது அது அவர்கள் அல்ல… மதமாற்றிகள் என்று…. அவர்களின் எதிரேயே அதைக் கசக்கி தூக்கி எறிந்தேன். இது நடந்தது பத்து வருடங்களுக்கு முன்….
இப்போது வருந்துகிறேன் இன்னும் அதிகமாக பெற்று எறிந்திருகிகலாமோ என்று…
திரு மலர்மன்னன் அய்யா அவர்களின் மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டால் , அவருக்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், தமிழ் ஹிந்து .காமில் வெளியிட தேவை இல்லாத சில தகவல்களையும் அவருக்கு மட்டும் தெரிவிக்க விரும்புவோருக்கும் , மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டால் உபயோகமாயிருக்கும்.
வணக்கம்.
திரு மலர்மன்னன் ஐயா சிகரங்களின் சமீபத்திலே சஞ்சரிக்கும் சிம்ஹம்.
அவரை அல்ப்பங்கள் அணுகாமல் இருப்பதே உத்தமம்.
உன்னதமான அவரது கருத்துக்களை உசத்திப் பிடித்து பரப்புவதே அவருக்கு நாம் செய்யும் மிகப் பெரிய கைங்கர்யம்.
பேட்டிக்கும் பிரபலத்துக்கும் துளியும் தேவையில்ல ஒரு மனோ நிலையிலே வாழ்ந்து வரும் அவரை மானசீகமாக வணங்கி அவரது கருத்துக்களின் உள்ளே தாண்டவமாடும் சத்தியத்தை கண்டு கொண்டு தொழுவதே நம் வேலை.
சிந்திக்கத் தெரிந்தவர்கள் யோசிக்கட்டும்.
ஒரு குகையிளிருந்துகொண்டு சுடர்விட்டு பிரகாசிக்கும் அந்த ரிஷியை – ஆசிரியரை வணங்குகிறேன் .
நன்றி.
பராசக்தி துணை.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.
Yes it is true that christians missionaries and churches have taught them the same mechanism every where throughout world. if any christians come across a brahmin, the would say to them
many brhamins are coming now to churches and same person if he comes across a mudaliyar community person, he would utter them that many mudaliyars are converting to christianity
and attend mass prayers. i have heard the same word from every christians telling from different cities or towns repeating the same pattern like parrots taught in all chruches . Suprisingly even an indonesian christians whom i came across told me that many chinese in indonesians are converting now and added further that we always tell only 5% population in indonesian to escape the attention of muslims ( similar strategy is being followed by missionaries to escape from the attention of hindus in india by telling that christians are just 3% in india ) but actual christians population in indonesia is 20pct he told me. Same way i could say christians in india exceed total 10 pct and in T N state alone is 17% but they say only 3 pct always to fool hindus organisations.
so i find universally this same pattern of fooling the other religions are follwed in a organised manner. Mainly hindus converted in to christianity are very particular in converting hindu friends
if they are in trouble either sick or in finance or in education ect, they inform pasters in their attached churches from where some sale representatives are sent to the friend to his surprise and shock as to how this person came suddently from church- they would engage him nicely and trap for conversion. Now money, women,liquor,weakness or help in return,social mixing are their weapon to fool hindus.Long time ago when i let out my house for rental, a broker by mistake
brought a christian lady to me for fixing a rent. i told her that i will not give the house for rent to christians or muslims but only to hindus. Then she told me that she was also the same caste of mine and got converted recently. she added that she will cook only veg only. when i refused further, she started absuing hindus and talked of caste. So convert christians are more dangerous people and hindus must not let out their houses to them as they would convert in to ”prayer house ‘ for bringing more people every day- this happended to one of my friend in kumbakonam . Later he realised his mistake and used police help to vacate the christian family
IN short christianity is like a octopus spreading its tendacles to suck the souls of hindus.
ஹிந்து சமூகத்தில் உள்ள மடங்கள் ஒன்று திரள வேண்டும். நான் பல ஊர்களுக்கு சென்றிருக்கிறேன். பெரும்பாலான மடங்கள்( காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், மயிலம் ) முழுவதுமாக தேங்கி விட்டன. வெறும் சடங்குகள் செய்வதோடு நிறுத்திக்கொள்கின்றன. மக்களுக்கு போதனைகள் செய்வதோ மதக் கருத்துக்களை பரப்புவதோ கிடையாது. நயன்மார்களாகட்டும், அழவார்களாகட்டும் ஊர் ஊராக சென்று பாடினார்கள். மக்களை சந்தித்தார்கள். அவர்கள் வழி வந்த இவர்கள் ஏன் இப்படி தேங்க வேண்டும்? இம்மடத்தை சேர்ந்த துறவிகள் சாதாரண மக்களை மிகவும் எளிதாக ஈர்க்க முடியும். சாதாரண மக்களின் சிறு கோவிலை திறந்து வைப்பதின் மூலம் இதைச் சாதிக்கலாம். அதற்கு நம்மாலான உதவிகளைச் செய்யலாம்.
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாசன்,
உங்களைப் போன்ற உன்னதமான பக்த சிகாமணிகளைப் பெறுவது அரும் பாக்கியம். சைதன்ய மஹாப்பிரபுவின் பரவச நிலையை உங்கள் எழுத்துக்களில் காண்கிறேன். ஆபிரகாமிய சக்திகளுக்கு எதிராக, அனல் எழுத்தாளர் தியாகி மனிதப் புயல் மலர்மன்னன் அவர்களுக்காக நீங்கள் தீக்குளிக்காமல் இருக்க வேண்டுமே என்ற படபடப்பும் எழுகிறது. ஆனால், தேசபக்தியில் புடம் போட்ட நம்மை எல்லாம் தீயால் என்ன செய்துவிட முடியும்?
பிகு: உங்களின் பக்திப் பெருக்கால் பொங்கி எழும் கண்ணீர் கம்ப்யூட்டர் கீ-போர்டுகளைக் கெடுத்துவிடும் ஆபத்தைப் பற்றி மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவும். மற்றபடி உங்கள் பக்திப் பெருக்கைக் கண்டினியூ செய்யவும்.
அடியேன்,
தாசானு தாசானு தாசானு தாசன்,
க்ருஷ்ண புத்ரன்,
தலைவர்-தொண்டர்,
தேசபக்த புல்லரிப்போர் கழகம்,
அறிஞர் அண்ணா காலனி,
பிரம்ம-சத்திரிய கொடுக்குகள் ப்ளாக்,
மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி ஏரியா,
மதராஸா பட்டிணம்,
ஹிந்துஸ்தானம்.
.
அருமையான கட்டுரை. நான் எனது நண்பனோடு, கிருத்துவக் கோவிலுக்குச் செல்லுவேன். ஆனால் அவன் ஒருமுறை கூட என்னோடு நமது கோவிலுக்குள் வந்ததில்லை. பின்னர் எனக்கு அவர்களது எண்ணமும் கருத்தும் புரியவரவே, நானும் அவனோடு செல்வதையே நிறுத்திவிட்டேன்.
இந்த தளத்தில் சில வைணவ , சைவ கருத்து வேறுபாடுகள் வந்தபோதிலும் , அய்யா மலர்மன்னன் அவர்களின் கடிதங்களை படிக்கும் போதுதான் , நமது மதத்தின் விரிவும், இதரரின் குறுக்கமும் நன்கு தெரிகிறது.
ஒன்று :- நாம் மேலும் வளர , நமக்கு எவ்வித எல்லையும் இல்லை என்பதை ஏற்போருக்கே எதிர்கால உலகம் என்பதை உணர்வோம்.
இரண்டு :- பெருந்தெய்வம் , சிறுதெய்வம் என்று எதுவும் இல்லை, எல்லாம் ஒன்றே என்பதை நினைத்து உணர்வோம்.
மூன்று:- இது மட்டுமே தெய்வத்தின் பெயர் , இது மட்டுமே தெய்வத்தின் உருவம் , தெய்வத்திற்கு உருவமே இல்லை , என்று குறுக்கும் செயல்களில் நாம் ஈடு படமாட்டோம்.
நான்கு:- என்னை பெற்ற இந்த தாய் நாட்டை விட, என் கடவுள் தான் உயர்ந்தவர், எனவே என் தாய் நாட்டை வணங்க மாட்டேன் என்று சொல்லும் மனிதர்களை பார்க்கும் போது, தாய்நாடும் , கடவுளும் ஒன்றே. தாய்நாடு வணங்கத்தக்கதில்லை என்றால், உன் கடவுளும் வணங்க த்தக்கவன் இல்லை என்பதை புரியவைப்போம்.
ஐந்து:- தன்னைத்தவிர, பிறரின் நம்பிக்கைகள் மற்றும் வழிபாடு இவற்றை கேலி பேசி, இழிவு செய்யும் பிறவிகளை , அவர்கள் தான் உலகிலேயே மட்டமான பிறவி என்பதை உணரச்செய்வோம்.
ஆறு:- பெண்களை இழிவு படுத்தி , ஆணுக்கு அடிமைகளாக கருதும் இழிந்த , கேவலமான கோட்பாடுகளை மதம் என்ற மோசடி பெயரால் திணிக்க முற்படுவோரை மனித சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைப்போம். ஆணுக்கு பெண் சமமில்லை என்னும் அயோக்கியர்களை , பெண் உரிமை சட்டங்களின் கீழ் வழக்கு தொடுத்து , சிறைக்கு அனுப்புவோம்.
ஏழு:- அனைத்து சாதியையும் சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் ,அனைத்து இந்து கோயில்களிலும், அர்ச்சனை, அபிஷேகம், அலங்காரம் என்று பிராமணர்களும், வேறு சில சாதியினரும் தற்போது பெற்றுள்ள உரிமைகளை எல்லா சாதிக்கும் பரவலாக்குவோம்.
“ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாசன்,
உங்களைப் போன்ற உன்னதமான பக்த சிகாமணிகளைப் பெறுவது அரும் பாக்கியம். சைதன்ய மஹாப்பிரபுவின் பரவச நிலையை உங்கள் எழுத்துக்களில் காண்கிறேன். ஆபிரகாமிய சக்திகளுக்கு எதிராக, அனல் எழுத்தாளர் தியாகி மனிதப் புயல் மலர்மன்னன் அவர்களுக்காக நீங்கள் தீக்குளிக்காமல் இருக்க வேண்டுமே என்ற படபடப்பும் எழுகிறது. ஆனால், தேசபக்தியில் புடம் போட்ட நம்மை எல்லாம் தீயால் என்ன செய்துவிட முடியும்?
பிகு: உங்களின் பக்திப் பெருக்கால் பொங்கி எழும் கண்ணீர் கம்ப்யூட்டர் கீ-போர்டுகளைக் கெடுத்துவிடும் ஆபத்தைப் பற்றி மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவும். மற்றபடி உங்கள் பக்திப் பெருக்கைக் கண்டினியூ செய்யவும்.
அடியேன்,
தாசானு தாசானு தாசானு தாசன்,
க்ருஷ்ண புத்ரன்,
தலைவர்-தொண்டர்,
தேசபக்த புல்லரிப்போர் கழகம்,
அறிஞர் அண்ணா காலனி,
பிரம்ம-சத்திரிய கொடுக்குகள் ப்ளாக்,
மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி ஏரியா,
மதராஸா பட்டிணம்,
ஹிந்துஸ்தானம்.”
———————————————————————————————————————-
எத்தனை முகங்கள்! எத்தனை பெயர்கள்! எத்தனை விஷம்! எத்தனை வெறுப்பு!
ஸ்ரீ ஸ்ரீ என்று மங்களமாக ஆரம்பித்ததே இவர் மிக கவனமாக சமீபத்திய மறுமொழிகளை படித்து பல்லை கடித்திருக்க வேண்டும் என்று நன்றாக தெரிகிறது.
இத்தனையும் நாம் தெரிந்து கொள்ளவே இது போன்ற மறுமொழிகளையும் ஆசிரியர் குழு வெளியிடுகிறது போலும்.
நல்லது தான்.
//நண்பர் ஸ்ரீ சிங்கமுத்து மிகவும் ஆதங்கத்துடன் நம் கோயில்களில் கண்ணீருடன் நிராதரவாக நிற்பவர்களுக்கு ஆறுதல் சொல்வார் இல்லையே என்று வருந்தியிருந்தார்.//
ஸ்ரீ.மலர்மன்னன் ஐயா,
என் வார்த்தைகள் யாரையும் சென்றடையவில்லை என்று நான் நினைத்த நேரம், உங்கள் கட்டுரை என் மனதை குளிர செய்தது.
மிக்க நன்றி,
சிங்கமுத்து
சமயச்சடங்குகளைக் கடந்து இந்துசமயப்பணிகளில் இந்துக்கள் அனைவரும் ஈடுபடவேண்டும். பெரும்பான்மை இந்துக்கள் சிறபான்மை மதத்தினற்காக அதிகளவு தியாகம் செய்துள்ளார்கள், செய்கிறார்கள். இருப்பினும் பிறமதத்தவர்கள் இந்துசமயத்தவர்களை தமதுமதத்திற்கு மாற்றும் நோக்குடனேயே இருக்கிறார்கள். இந்துக்களாகப்பிறந்து பணத்திற்காகவும் சொற்ப சலுகைகளுக்காகவும் மதம்மாறிவர்கள் வெட்டிவிட்ட தலைமுடியாக தொலைந்துபோகட்டும். இனிவரும் சமுதாயம் தனது அடையாளத்தை சொந்தநாட்டில் தொலைக்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். நாம் எமது இந்து சமயத்திற்கு எவரையும் மதம்மாற்ற வேண்டிய தேவை இல்லை. ஆனால் எமது சமயத்தில் பிறக்கும் அனைவருக்கும் எமது சமயநெறியின் உட்பொருளை விளக்கவேண்டும். இளம் சமூகத்தின் ஐயப்பாடுகளைக் களையவேண்டும். ஒவொருவரும் தாம் இந்துக்களாகப் பிறந்ததை இட்டு பெருமைப்படச் செய்யவேண்டும். அரிது அரிது மானிடராய்ப்பிறத்தல் அரிது அதனிலும் அரிது பிறப்விக்கடலைக்கடக்கவல்ல இந்து சமயத்தில் பிறத்தல் என்பதை ஒவொரு இந்துவும் உணரச்செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இந்துநலத்துறை என்ற பெயரில் அரசே இந்துக்களுடைய செல்வத்தை பிறநோக்கத்திற்;கு செலவிடுகிறது. இவை இந்துக்களுடைய முன்னேற்றத்திற்கு பயன்பட வைக்கவேண்டும். இதுதவிரவும் இந்துசமயத்தைசேர்ந்த அனைவரும் கருத்தொற்றுமையுடன் செயற்பட்டு இந்துசயமத்தில் இருக்கும் சாத்திர, சம்பிரதாய, முரண்பாடுகளக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதுதவிரவும் பணிகள் ஆயிரம் இந்துக்களுக்கு காத்திருக்கின்ற… முஸ்லிம், கிறிஸ்தவர் எவராக இருந்தாலும் பாரதத்தில்வாழ்பவன் தன் முன்னோர் ஒரு இந்துவாகத்தான் வாழ்ந்திருக்கிறான் என்பதை ஏற்று இந்துக்களுடன் இணைந்து இந்து தர்மத்தை மதித்து வாழ கற்றுக்கொடுக்கவேண்டும்….
தில்லைச்சிவா
(edited and published)
நண்பர்களே,
ஸ்ரீ க்ருஷ்ணபுத்ரன் என்கிற பெயர் எனக்கு மெய்சிலிர்ப்பூட்டுகிறது என்றாலும் யோசிக்கும் வேளையில் க்ருஷ்ண புத்ரர்களால்தான் குல நாசம் விளைந்தது. தம் புத்ரர்களாலேயே அவர் மன உளைச்சலுக்குள்ளாக நேர்ந்தது..
எனினும் க்ருஷ்ணபுத்ரனுக்கு ஏற்படும் எரிச்சல் முற்றிலும் நியாயமானது.
ஸ்ரீ ஸ்ரீநிவாஸன் எழுதியதைப் படித்தபோது எனக்கே சங்கடமாகத் தான் இருந்தது. எதற்காக இவர் இவ்வாறெல்லாம் என்னைப் போற்றி எழுத வேண்டும் என்று வருந்தவே செய்தேன். அவருக்கு என்மேல் அந்த அளவுக்கு மதிப்பு இருந்தால் அவர் அதை அவருக்குள் வைத்திருந்தால் போதாதா? பகிரங்கப் படுத்துவதால் ஆகப் போவது என்ன? தனிநபர் துதி பாடுதல் வரவேற்கத் தக்கது அல்ல. மலர்மன்னன் ஐயா என்று குறிப்பிட்டு எழுதுவதைப் படிக்கிறபோதுகூட எனக்கு சங்கடமாகத்தான் இருக்கிறது. வெறுமே பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதுமே?
ஐயா என்கிற அடைமொழியெல்லாம் எதற்கு? பெயரே கூட எதற்கு? கட்டுரை ஆசிரியர் என்று மட்டும் குறிப்பிட்டால் கூடப் போதுமே!
ஸ்ரீமதி / ஸ்ரீ ரேவதி என்ற வாசகரின் (இவர் யாரோ, அறியேன்) விருப்பமும் தேவையற்றதுதான். அதைப் படிக்கிறவர்களுக்குக் கண்டிப்பாக எரிச்சல் வரத்தான் செய்யும். இவன் மட்டும் என்ன உயர்த்தி என்றே நினைக்கத் தோன்றும். எனது உருவத்தைக் காண்பதால் ஆகப் போவது என்ன? மேலும் அது எவ்வளவு தற்காலிகமானது! அத்துடன் என்னைப் பேட்டி எடுத்து ஒளி பரப்புகிற வெட்டி வேலை எல்லாம் எதற்கு? பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நான் கருதுகிற விஷயங்களையும், என்னிடம் எதிர்பார்க்கப்படுகிற கருத்துகளையும் தெரிவித்துக்கொண்டுதானே இருக்கிறேன்? இதற்கு மேல் பேட்டியில் புதிதாக என்ன சொல்லிவிடப் போகிறேன்?
கல்லடியையும் பூமாலையையும் வேறுபடுத்திப் பார்க்கும்
மனநிலையைக் கடந்துவிட்டேன். ஆகவே இது சம்பந்தமாக மெளனம் சாதிக்கவே விரும்பினேன். ஆனால் ஸ்ரீ க்ருஷ்ண புத்ரனின் மறுமொழிக்கு ஸ்ரீ மணிகண்டன் ராஜு என்ற வாசகர் செய்துள்ள எதிர்வினையைப் படித்ததும் கட்டுரை மீதான கருத்துப் பரிமாற்றங்களிலிருந்து திசை மாறி என்னைப் பற்றிய விமர்சனங்களே இனி அதிக இடத்தையும் நேரத்தையும் எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிடும் என்ற கவலையால் இதுபற்றி எழுதலானேன்.
எனது கட்டுரைகளில் தெரிவிக்கப்படும் எண்ணங்களை விமர்சித்தால் போதுமானது என்றே கருதுகிறேன். அவ்வாறு விமர்சிக்கையிலும் அவரவர் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும்போதும் எனது பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை.
எனது மின்னஞ்சல் முகவரி பல தருணங்களில் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட முறையில் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள அது அவசியம்தான். ஆனால் அதன் மூலம் தொடர்பு கொள்பவர்களும் எனக்கு சங்கோஜம் உண்டாகிற அளவுக்கு துதி செயவதிலேயே அதிகச் சொற்களை விரையம் செய்து விடுகிறார்கள். இவ்வாறின்றி கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் என்னைப் பேச அழைக்கவும் மாத்திரமே மின்னஞ்சல் வழியாகப் ப்லரும் என்னுடன் தொடர்புகொள்வதை வரவேற்கவே செய்கிறேன். எனது மின்னஞ்சல் முகவரி அறிந்துள்ளவர்கள் இங்கு அதனைத் தெரிவிக்க விரும்பினாலோ, தமிழ் ஹிந்து அதனை இங்கு வெளியிட ஏற்றுக்கொணாடாலோ எனக்கு ஆட்சேபணை இல்லை.
வந்த சுவடு தெரியாமல் போய்விடவே விரும்புகிறேன். எனக்கு உதவியாக இருக்க வேண்டும் என்கிற சுய விருப்பத்தின்பேரில் என்னுடன் இருப்பவர்களிடம்கூட எனது சடலத்தை நான் துறக்கும்போது அந்தச் செய்தியை எவருக்கும் அறிவிக்கலாகாது என் மிகவும் கண்டிப்பாகக் கூறி வைத்திருக்கிறேன்.
-மலர்மன்னன்
// எனது மின்னஞ்சல் முகவரி அறிந்துள்ளவர்கள் இங்கு அதனைத் தெரிவிக்க விரும்பினாலோ, தமிழ் ஹிந்து அதனை இங்கு வெளியிட ஏற்றுக்கொணாடாலோ எனக்கு ஆட்சேபணை இல்லை. //
மதிப்பிற்குரிய ஐயா, இது மிகவும் எளியது..
மறுமொழி இடும்போது Mail (will not be published) என்ற பெட்டியில் போடுவது வெளியாகாது.. மறூமொழியாளரின் privacy தளத்தால் பாதுகாக்கப் பட வேண்டும். அதை வைத்து ஈமெயில் முகவரியை அறிந்து கொள்ள வசதி செய்ய மாட்டார்கள், ஏனென்றால் பிறகு எல்லா மறுமொழியாளர்களின் ஈமெயில் முகவரியும் தெரிய ஆரம்பித்து விடும்.. அது சரியல்ல !!!!
நீங்களே ஒரு மறுமொழிக்கு உள்ளே ”எனது ஈமெயில் முகவரி ” என்று குறிப்பிட்டு உங்கள் ஈமெயில் முகவரியை அளியுங்கள். அந்த மறுமொழி பதிப்பிக்கப் படும்போது உங்கள் ஈமெயில் முகவரி படிப்பவர்களுக்குத் தெரிய வந்து விடும்.
அன்புடன்,
எம். வெங்கட்
Like Krishna puthiran, I am also quite irritated by the comments of sychophants… It is one thing to express genuine appreciation for the author of an article, but another thing to go overboard with praises!
Frankly, I find this article rather very ordinary. Even in the same website, more sharp, precise and elegantly written pieces have appeared on the subject of conversions.
I understand that Malarmannan is a very elderly person. With all due respects to him, I find that his articles are very preachy in nature, instead of being analytical. Such a tone will appeal to one set of readers, but not all. In fact, it will be unappealing to most young readers.
ஸ்ரீ வெங்கட்,
நன்றி. ஒரு முறை அந்தத் தவறைச் செய்தேன்.
இது ஒரு சுய விள்ம்பரம் போல் ஆகிவிடுவதாக அஞ்சுகிறேன்.
-மலர்மன்னன்
Dear Sri Bala,
You are quite right. Your assessment is cent per cent correct. I am NOT NOT an intellecutual but a layman. It was only out of compulsion that I had started wiriting on these topics with my very limited knowldge and use of the language. Naturally, my writings will be very ordinary, as they are expression of an ordinary person. I lkie to be called an activist only.
BUT starangely, most of the people in contact with me are young only! And persons asking me ro address are also young. Also, it is the youth who gather around me whenever I attend any meeting. I use to wonder about this.
-Malarmannan
Shri Malar Mannan had EARNED the respect of the readers here. This comes from years of hard toil for the Hindu cause and his tireless work in bringing Muslims/ Christians back to the Hindu fold. It is our age old tradition to respect and show reverence to people like him. Nothing wrong with that and nothing wrong with anyone who admires such people.
Dear Shri Bala, i find the article enlightening and may be it is ONLY meant for us poor ignorant souls. Do you have a problem with this Sir?
Sir, may be you can write some master piece and educate us all better. (as they say in Oz land about putting money where the mouth is.)
// Dear Shri Bala, i find the article enlightening and may be it is ONLY meant for us poor ignorant souls. Do you have a problem with this Sir?
Sir, may be you can write some master piece and educate us all better. (as they say in Oz land about putting money where the mouth is.) //
Dear Rama,
Well. you don’t have to be an artist yourself to give a critical opinion about an art performance, isnt it? Any discerning art connoussier or Rasika can give that. Same is the case here – I just gave my opinion as a keen, discerning reader. Again, did I ask for Malarmannan’s writings to be censured or something?? NO, I was only trying to categorize the writings. What is wrong with that?
Pl read my reply. I am not against genuine appreciation. What I hate is articially sounding sycophancy.
எனது கேலியைச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். மலர்மன்னன் எழுதியுள்ள விஷயங்களைப் பற்றிப் பேசாமல், அவரைப் பற்றி பஜனைப் பாடல் பாடுகிறவர்களைக் கேலி செய்யாமல், கூடச் சேர்ந்து சிங்கி அடிக்க வேண்டுமா?
இந்து மதத்துச் சாமியார்கள் மீது பொய்கேஸ் போட்டு உள்ளே அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கோயில் சொத்துக்களை எல்லாம் கொள்ளை அடிக்கிறார்கள். இந்து என்ற வார்த்தையையே கெட்ட வார்த்தை என்று சமூகத்தில் பதிய வைத்திருக்கிறார்கள். ஆபாச எழுத்தாளனான அண்ணாவைப் போய் அறிஞர் என்கிறார்கள். இவர்களிடம் போய், உன் சமூகத்தில் இருக்கிற பிரச்சினை என்னன்னா… என்று பேச ஆரம்பித்தால் காறித் துப்புவார்கள்.
நிலவரம் இப்படி இருக்க, இந்து மதப் பெருமைகளைப் பேசாமல், கிருத்துவ, இசுலாமியரின் சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினால் அவர்கள் எல்லாம் உடனடியாக பைப்பருக்குப் பின்னால் ஓடிய எலிகள் போல இந்து மதத்துக்கு ஓடி வந்து விடுவார்கள் என்கிறார் மலர்மன்னன். சிரிப்பு வருகிறது. கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா ? ஆனால், அவரைப் பற்றி நான் விமர்சனம் செய்யப் போவதில்லை.
ஏனெனில், மன்மோகன் சிங்கைப் போற்றும் ஊடகங்கள் அவர்குறித்த விமர்சனங்களைப் பற்றி வாய்மூடி இருப்பதுபோலத்தான் தமிழ் இந்து தளமும் நடந்து கொண்டு வருகிறது. மலர்மன்னனைக் காட்டமாக விமர்சனம் செய்யும் என் கமெண்டுகளை அது வெளியிட்டதில்லை. என்னுடைய முந்தைய கமெண்ட் மலர்மன்னன் குறித்த கேலி இல்லை என்பதால் அதை மட்டும் எப்படியோ வெளியிட்டுவிட்டார்கள் போலும்.
என் பெயரான க்ருஷ்ண புத்திரனைக் கண்டு முதலில் மெய்சிலிர்த்த மலர்மன்னனுக்கு, இப்போது அவர் குறித்த என் விமர்சனம் கண்டவுடன், க்ருஷ்ண புத்திரன் யார் என்பதும் அவனால் யாதவ குலமே அழிந்ததும் ஞாபகம் வருகிறது.
எல்லாவிதமான ஆசைகளும் கடந்தவரின் இயல்பு இப்படித்தான் இருக்கும்.
(edited and published)
//Any discerning art connoussier or Rasika can give that. Same is the case here – I just gave my opinion as a keen, discerning reader. -Sri Bala//
மன்னிக்க வேண்டும். ஸ்ரீ பாலாவின் விளக்கம் பொருத்தமாக இல்லை.
நான் இங்கு எழுதவதெல்லாம் எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதப்படுவதுதான் (பெரும்பாலும் இளைஞர்கள் கேட்டுக் கொள்வதால்தான்). இவை படைப்பிலக்கியமோ, ஆய்வுக் கட்டுரைகளோ அல்ல. Fact Fining Report போன்றவைதாம் அவை. இதில் ரசிப்பதற்கு எதுவுமில்லை. தகவல் போதுமானவையாக இல்லை என்றோ, நம்பகமாக இல்லை என்றோ விமர்சிப்பதுதான் சரியாக இருக்கும்.
சுய அனுபவங்களின் அடிப்படையில் நான் எழுதுவதால் என் எழுத்தின் தொனி preachy யாக அமைவதும் தவிர்க்க இயலாததே. ஒரு wake-up call ஆக நான் எழுதுவதால்தான் அவ்வறான தொனி தோற்றமளிக்கிறது.
அடிப்படையில் நான் ஒரு பத்திரிகையாளன். ஆராய்சியாளன் அல்ல. சாமானிய மக்களுக்கான, சராசரிக்கும் கீழான புத்திசாலித்தனத்துடன் எழுதப்படுபவைதான், நான் எழுதுவதெல்லாம். ரசிப்பதற்காக எழுதப் படுபவை அல்ல. அவற்றுக்கு நாளிதழ்களில் வரும் செய்திக் கட்டுரைகளுக்குக் கொடுக்க வேண்டிய முகியத்த்துவத்தைக் கொடுத்தாலே எதேஷ்டம்! ஆனால் இம்மாதிரியான சராசரிக்கும் கீழான தகவல் கட்டுரைகளுக்கும் அவசியம் இருப்பதாகவே கருதுகிறேன்.
-மலர்மன்னன்
திரு.பாலா அவர்களே….
நல்ல காரியத்தை நீங்களும் செய்ய மாட்டீர்கள்….வேறு யாராவது [ திரு.மலர்மன்னன் போன்றவர்கள் ] செய்ய வந்தாலும் ஆயிரத்தெட்டு நொட்டை சொல்வீர்கள்…..என்னைப் போன்ற பாமரர்களுக்கு திரு. மலர்மன்னன் அவர்களின் கட்டுரை சுலபமாக புரிகிறது…..பின் நவீனத்துவ எழுத்தாளர்களைப் போல் எழுதினால் தான் உங்களை போன்ற அறிவுஜீவிகளுக்குப் புரியும் போலும்….நீங்களும் கிருஷ்ண புத்திரனும் திரு.மலர்மன்னனை விமர்சிப்பதில் ஏதோ பழைய பகை உள்ளது போலும்…..அதை வேறு இடங்களில் வைத்துக்கொள்ளலாமே……இல்லாவிட்டால் உங்கள் இருவரின் அப்ரூவல் கிடைத்த பின் இந்த தளத்தின் கட்டுரைகள் வெளியாகுமாறு ஏற்பாடு செய்து விடுங்கள்…….
//ஹிந்துக்களை மத மாற்றம் செய்வது எளிதாக இருக்கிறது ஆனால் கிறிஸ்தவர்களையும் முகமதியரையும் தாய் மதம் திரும்பச் செய்வது எளிதாக இல்லை. அவர்களால் முடிவது நம்மால் ஏன் முடிவதில்லை என்று யோசிக்க வேண்டும்.//
இது எனது கட்டுரையில் இடம் பெறும் அனுபவ ரீதியான வாசகம்.
//கிருத்துவ, இசுலாமியரின் சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினால் அவர்கள் எல்லாம் உடனடியாக பைப்பருக்குப் பின்னால் ஓடிய எலிகள் போல இந்து மதத்துக்கு ஓடி வந்து விடுவார்கள் என்கிறார் மலர்மன்னன். சிரிப்பு வருகிறது. கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா ?//
இது ஸ்ரீ க்ருஷ்ணபுத்ரன் செய்துள்ள விமர்சனம்.
முடிவை வாசகரிகளிடம் விடுகிறேன்.
//எல்லாவிதமான ஆசைகளும் கடந்தவரின் இயல்பு இப்படித்தான் இருக்கும்-ஸ்ரீ க்ருஷ்ணபுத்ரன்//
நான் எந்த ஆசையையும் கடந்துவிடவில்லை. துறக்கவுமில்லை.
எனது ஹிந்துஸ்தானம் வல்லமை மிக்க சக்தியாக உலகம் முழுமைக்கும் ஆன்மிக குருவாகத் திகழ வேண்டும் என்ற பேராசையுடன் இருந்து வருகிறேன். பலவீனன் பேசுகிற சமாதானம் கோழையின் கெஞ்சலாகவே கருதப்படும். வலிமையானவன் பேசுகிற சமாதானத்திற்கே சபையில் மரியாதை கிடைக்கும். ஆகவே எனது ஹிந்து சமூகம் ஒரு வலிமை மிக்க சமூகமாக இருக்கப் பேராசைப் படுகிறேன்.
ஆசையைத் துறந்திருப்பின் இங்கே வந்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருக்க மாட்டேன். எனது நேரத்தை ஹிந்து சமூக நலனுக்கான பணிகளில் செலவிட்டுக்கொண்டிருக்க மாட்டேன். முழு நாளும் எனக்கு மிகவும் பிரியமான இறையுணர்வில் ஆழ்ந்து கிடப்பேன். துறந்தது என் சொந்த நலன்களைத்தான். ஹிந்து சமூக நலன்களை அல்ல. குல நாசம் எனபது ஹிந்து குல நாசம் பற்றிய கவலையே. ஏனெனில் நடக்கிற சிறு பணியையும் அவநம்பிக்கையால் குலைத்துவிட முயற்சிக்க வேண்டாம் ஊக்குவிக்காவிட்டாலும் பரவாயில்லை.
-மலர்மன்னன்
//ஒரு ஐயங்கார் நோயாளிக்கு ஜபம் செய்யவேண்டும் என்றால் செய்துவிட்டு போகவேண்டியதுதானே- Sri G Ranganaathan //
தயவு செய்து இந்தப் பெருந்தன்மையான மனப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும், ஸ்ரீ ரங்கநாதன்.
அன்புள்ள மலர்மன்னன் ஐயா
எனது பின்னூட்டம் அத்வானி-ஜின்னா போல் தவறாகப் புரிந்துகொள்ளபட்டதோ என்று நினைக்கிறேன். எனது நண்பர்கள் விவாதப் பொருளாக்கிகொண்டது “வந்தவரின் தந்தையார் ஐயங்கார் என்று ஏன் சொல்லவேண்டும். இது ஒருவகையான பசப்பு வேலை தானே என்பது. அவர்கள் நிஜமான”” வசுதைவக குடும்பகம்”” என்ற மறை பொருளை உணர்ந்தால் இது போன்று “”கவரிங் “” வேலைகளில் ஈடுபட மாட்டார்கள் ஆனால் ஆள் பிடிக்கும் கூட்டம் இதுபோன்ற உயர்ந்த தத்துவங்களை அறியாதவர் என்பதே உண்மை.
// அவற்றுக்கு நாளிதழ்களில் வரும் செய்திக் கட்டுரைகளுக்குக் கொடுக்க வேண்டிய முகியத்த்துவத்தைக் கொடுத்தாலே எதேஷ்டம்! ஆனால் இம்மாதிரியான சராசரிக்கும் கீழான தகவல் கட்டுரைகளுக்கும் அவசியம் இருப்பதாகவே கருதுகிறேன்.
-மலர்மன்னன் //
Fully agree. That is why I do not object to your articles or any such articles appearing. I already said that.
So, what do you do when someone praises the “news paper report like articles” (in your own words) with extreme superlative phrases like சிகரங்களின் சமீபத்திலே சஞ்சரிக்கும் சிம்ஹம் etc. ?? You make fun of the sycophant, right?
That’s precisely what I did.
//நீங்களும் கிருஷ்ண புத்திரனும் திரு.மலர்மன்னனை விமர்சிப்பதில் ஏதோ பழைய பகை உள்ளது போலும்-ஸ்ரீ சரவணகுமாரன்//
எனக்குப் பழைய பகை, புதிய பகை என்று எதுவும் கிடையாது, ஸ்ரீ சரவண குமாரன். கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை அவர்கள் பயன் படுத்துவதிலும் நியாயம் இருக்கும். ஏனெனில் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு என்மீது எவ்வித விரோதமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களும் உங்களைப் போலவே என்னுடன் நேரடியான அறிமுகம் இல்லாதவர்களே. உங்களைப் போலவே என் எழுத்தின் மூலமாக மட்டுமே என்னை அறிந்த்வர்கள். உங்களுக்கு என் எழுத்து பிடிக்கிறது. அவ்ர்களுக்குப் பிடிக்கவில்லை, அவ்வளவுதானே! இதை ஏன் பெரிது படுத்த வேண்டும்? அவர்களும் ஹிந்து சமூக உணர்வும் அக்கறையும் உள்ளவர்கள்தாம். நமக்குள் அனாவசிய மன வருத்தங்கள் வேண்டாம்.
கட்டுரை மீதான கருத்துப் பறிமாற்றம் நடந்தால் ஏதும் பயன் இருக்கும்.
எனக்குத்தான்!
-மலர்மன்னன்.
//So, what do you do when someone praises the “news paper report like articles” (in your own words) with extreme superlative phrases like சிகரங்களின் சமீபத்திலே சஞ்சரிக்கும் சிம்ஹம் etc. ?? You make fun of the sycophant, right?
That’s precisely what I did. -ஸ்ரீ பாலா.//
உங்களுக்கும் எனக்கும் சாதாரண செய்திக் கட்டுரையாகத் தெரிவது சிலருக்கு மிகச் சிறந்ததாகத் தோன்றினால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அதற்காக அவர்களை எள்ளி நகையாடுவது .நாகரிகம் அல்லவே!
லோகோ பின்ன ருசி! அவரவர் ரசனை அவரவருக்கு!
என்னைப் போற்றி எழுதுவதால் அவர்களுக்கு யாதொரு பலனும் கீட்டப் போவதில்லை. நானும் அகமகிழ்ந்துவிடப் போவதில்லை. சங்கடம்தான் படுகிறேன். கண்டும் காணாமலும் போய்க் கொண்டிருந்தால் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த அவகாசம் கிட்டும். . மேலும் ஸ்ரீ ஸ்ரீநிவாசன் இக்கட்டுரைக்காக அவ்வாறு எழுதியிருக்க மாட்டார். அவராகவே என்னைத் தேடி வந்து நான் வாழும் முறையினை நேரில் கண்டதால் அவருக்கு அவ்வாறு எழுதத் தோன்றியிருக்கும். ஸ்ரீ பாலாவும் ஸ்ரீ க்ருஷ்ணபுத்ரனும் எனது எளிய பணிகளை நேரில் காண நேர்ந்தால் ஒருவேளை என்னை உற்சாகப்படுத்த வேண்டும் என்கிற விருப்பத்துடன் ஏதேனும் பாராட்டுச் சொற்களைக் கூறியிருக்கக் கூடும்.
-மலர்மன்னன்
//So, what do you do when someone praises the “news paper report like articles” (in your own words) with extreme superlative phrases like சிகரங்களின் சமீபத்திலே சஞ்சரிக்கும் சிம்ஹம் etc. ?? You make fun of the sycophant, right? That’s precisely what I did. –ஸ்ரீ பாலா.//
உங்களுக்கும் எனக்கும் சாதாரண செய்தித்தாள் கட்டுரையாக இருப்பது சிலருக்கு மிகச் சிறந்த கட்டுரையாகத் தோற்ற மளித்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அவர்களில் எவரேனும் கட்டுரையைப் படித்த உற்சாகத்தில் கட்டுரை ஆசிரியரை வானளாவப் புகழ்ந்தால் அதை ஏளனம் செய்வது நாகரிகம் அல்லவே! அவரவர் ருசி அவரவருக்கு. நமக்குள்ளாகவே சிரித்துவிட்டுப் போக வேண்டியதுதான். துரதிருஷ்டவசமாக நான் அந்தக் கட்டுரையின் ஆசிரியனாகிப் போனதால் அத்தகைய போற்றுதலுக்கு எனது அதிருப்தியைத் தெரிவிக்கவே செய்துள்ளேன். மற்றவர் எவருக்கேனும் அவ்வாறான போற்றுதல் மொழி இடப்பட்டிருந்தால் சரியென்று மேற்கொண்டு படித்துச் சென்று நேரத்தை மிச்சப் படுத்திக் கொள்வேன்.
மேலும் இவ்வாறு போற்றிய ஸ்ரீ ஸ்ரீநிவாஸன் மேற்படி கட்டுரைக்காக அல்லாமல் ஒருமுறை அவராகவே என்னைத் தேடி வந்து நான் வாழும் முறையை நேரில் பார்த்ததால் அவருக்கு அவ்வாறு எழுதத் தோன்றியிருக்கலாம். இதையெல்லாம் பெரிது படுத்திக் கொண்டிருப்பதில் நேரத்தைச் செலவிடாமல் எனது வேலையைப் பார்த்துக்கொண்டு போவதுதான் புத்திசாலித்தனம். . ஸ்ரீ பாலாவும் ஸ்ரீ க்ருஷ்ணபுத்ரனும் ஒருவேளை எனது எளிய பணிகளை நேரில் காண நேர்ந்தால் என்னை உற்சாகப்படுத்துவதற்காகப் பாராட்டுதலாக ஓரிரு வார்த்தைகள் சொல்லவும் கூடும்!
என்னைப் போற்றி எழுதுவதால் எவ்விதப் பயனும் கிட்டப் போவதில்லை. நானும் அக மகிழப் போவதில்லை.
-மலர்மன்னன்
முதலில் மிகச்சிறந்த கட்டுரை ரசிகரும், கட்டுரைகளைக் கழற்றிப் பிரித்துத் தர வரிசையில் அடுக்குவதில் நிபுணரும் ஆன பாலாவுக்கும்,
யாராவது யாரையாவது புகழ்ந்துவிட்டால் அதில் உள்ள உள், வெளி, மேல், கீழ் அர்த்தங்கள், சில வார்த்தைகளை வைத்தே எழுதியவரையும் எழுதப்பட்டவரையும் பற்றி எல்லாம் தெரியவல்ல மிகப் பெரிய அறிவும், அதற்கும் மேலான நகைச்சுவை உணர்வும் கொண்ட க்ருஷ்ண புத்ரனுக்கும் ஒரு பாராட்டு விழா எடுக்குமாறு தமிழ்ஹிந்துவுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
கட்டுரை என்ன சொன்னால் என்ன. நம் அறிவு பிறரை விட எவ்வளவு மேல் என்பதை நிரூபிக்கத்தானே வலையில் உலாவுவதே. தவறொன்றுமில்லை.
Shri Bala, your criticism was ALSO on the banality of the article ( in your opinion). We beg to differ.You also said that you have read better articles elsewhere. Well,who cares? Totally irrelevant point. This article is not meant for elites like yourself. It is for us, the uneducated mass, thank you.
Please find fault on the article and your solutions to the conversion problem.
Mr Krishnaputra, give yourself a wake up call. Comparing Shri Malarmannan with the spineless MMS shows your ignorance and or some hidden agenda here. Sir, why don’t you write on this problems of conversion and your solutions to it? It is easy sitting on ivory tower, criticizing someone like Shri Malarmannan who has been doing all the hard work on the ground.
Arm chair critics are dime a dozen.
நான் பல வருடங்களாக இந்தத் தளத்தின் அந்தியந்தமான வாசகன். வேறு எவரும் சொல்ல அஞ்சுகிற கட்டுரைகளை இந்த தளத்தில் படித்துவருகிறேன்.
நிற்க. திருவாளர் மலர்மன்னன் அவர்களின் கட்டுரைகளை திண்ணை இணையதளத்தில் இருந்தே படித்துவருகிறேன். அவர் நேரடியாகக் கண்டதையே எழுதி வருகிறார். நேரடியாக அவர் செயல்பட்டதில் அவருடைய பங்கே சிறப்பானது என்ற தோற்றத்தை அவரது கட்டுரைகள் உருவாக்குகின்றன.
இருந்தாலும், மலர்மன்னனுடைய கட்டுரைகளின் ரசிகன் நான். இந்தக் கட்டுரையும் சுவையாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது.
ஆனால், பாலா மற்றும் கிருஷ்ண புத்திரன் போன்றோர் அவரது இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட அறிவுரை செயல்படுத்த முடியாதது என்று மறுக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் சொல்லி உள்ள விமர்சனம் தவறு என்று யாரும் சொல்லவில்லை. மாறாக, அவர்கள் மலர்மன்னனுக்கு எதிரிகள் என்று பதில் சொல்லுகிறார்கள். மலர்மன்னனைப் போன்றவர் எழுதியதைக் குறை சொல்லலாமா என்று கேள்வி எழுப்புகிறார்கள். முகமதியர்கள் கொலை நூலான குரான் பற்றியோ முகம்மது பற்றியோ விமர்சனம் செய்தால் எப்படி எதிர்வினை ஆற்றுவார்களோ அப்படித்தான் இந்த எதிர்வினைகள் இருக்கின்றன.
இதில் வருத்தமான விசயம் மலர்மன்னன்கூட மீண்டும், மீண்டும் கவனத்தைத் தன்மீது திருப்புவதுதான். படிப்பவர்களின் கவனம் கட்டுரை சொல்லும் கருத்தில் இல்லாமல் தன்மீதே இருக்க வேண்டும் என்பது போலத்தான் அவரது பதில்களும் இருக்கின்றன.
ஹஜ்ஜிற்காக அரேபியாவிற்குப் போகும் இந்தியர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்று ஒருமுறை இந்த தளத்தில் எழுதி இருந்தார். அது பற்றிய விவரங்கள் தாருங்கள் என்று ஒரு இஸ்லாமியர் கேட்ட கேள்விக்கு மொண்ணையான சால்ஜாப்பு கொடுத்துவிட்டு வேறு ஒரு பிரச்சினைக்கு மக்களைத் திசை திருப்பிவிட்டார். ஒரு இணைய தளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கே பதில் சொல்ல முடியாதவர், நேரடியான சூழலில் எப்படி நடந்துகொள்வது என்று அறிவுரை சொல்வது நம்பும்படியாக இல்லை. இப்படிச் சொல்வதற்கு மன்னிக்கவும்.
மலர்மன்னனை விமர்சிப்பவர்கள் சொல்லுவதுபோல அவர் சொன்ன அறிவுரையானது முற்றிலும் தவறானதல்ல. பாலாவும், கிருஷ்ண புத்திரனும் அவர் சொன்னதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால், இந்து மதத்தின் சிறப்பைப் பற்றி மதம் திரும்ப வேண்டியவர்களிடம் பேச வேண்டியதில்லை என்று மலர்மன்னன் சொல்லுவது முற்றிலும் தவறு.
மதம்மாறுபவர்களுக்கு மதம் சார்ந்த அறிவானது கொடுக்கப்படாமல், ஒரு சிலர் கையில் மட்டுமே அந்த அறிவு இருக்க வேண்டும் என அவர் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக விரும்புகிறார். அவரை ஆதரிப்பவர்களும் அதையே விரும்புகிறார்கள் என்றுதான் இந்தக் கமெண்டுகளைப் படிப்பவருக்கு எண்ணம் ஏற்படுகிறது.
இதை மலர்மன்னன் தவிர்த்திருக்க வேண்டும்.
ஸ்ரீ மலர்மன்னன் மஹாசய,
நான் அடிக்கடி ப்ரயாணத்தில் இருப்பதால் பலமுறை புதிய வ்யாசங்களை சமயத்தில் வாசிக்க இயலாமல் போகிறது. இந்த வ்யாசமும் தாமதமாகவே வாசித்தேன். என் மித்ரர் ஒருவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ஆங்க்ல பதங்களை நான் தமிழினூடே ப்ரயோகிப்பதாய் ஆரோபித்திருந்தார். இது ஏது புதிய ஆரோபம் என விசாரித்ததில் ஸ்ரீ க்ருஷ்ண புத்ரன் அவர்களின் உத்தரத்தைச் சுட்டியிருந்தார். மஹோதய, அவர் வேறு நான் வேறு என அவருக்கு தெரிவிக்க வேண்டியிருந்தது. இணைய தளத்தில் இப்படியெல்லாம் குழப்பங்கள் நேர இயலும் என்பது எனக்கு சற்று புதிதே. மற்றபடி மட்டற்ற ஸ்துதி மட்டற்ற நிந்தை இரண்டுமே முகஞ்சுளிக்க வைக்கின்றன.
\\\\\\\\\ஏனெனில் நடக்கிற சிறு பணியையும் அவநம்பிக்கையால் குலைத்துவிட முயற்சிக்க வேண்டாம் ஊக்குவிக்காவிட்டாலும் பரவாயில்லை.\\\\\\\
நடப்பது சிறு பணி அல்ல பெரும்பணி. டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள் சங்கத்தைத்துவக்கியது வெறும் ஐந்து பேர்களை மட்டும் வைத்து. இன்று அது ஹிந்துக்களைக் காத்து ரக்ஷிக்கும் கோவர்த்தன மலை போன்றது. ஹிந்து சமூஹத்தைக் காக்கச் செய்யப்படும் ஒவ்வொரு பணியும் சிறு துளி பெருவெள்ளம் என்ற படிக்கே என்பதில் சம்சயம் வேண்டாம்.
வ்யாசத்தில் தங்களது கீழ்க்கண்ட உத்தரம் ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படும் வ்ருத்தாந்தத்திலிருந்து வேறுபடுவதால் தங்களது கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன்.
“க்ருஷ்ண புத்ரர்களால்தான் குல நாசம் விளைந்தது” தம் புத்ரர்களாலேயே அவர் மன உளைச்சலுக்குள்ளாக நேர்ந்தது..” .
மேல் வாசகத்தில் தாங்கள் குறிப்பிடுவது கருவி மட்டுமே. காரணகர்த்தா மற்றும் காரணங்கள் யதுகுல நாசம் என்ற வ்ருத்தாந்தத்தில் முக்யம் என்பதால் அது பற்றி சில வாசகங்கள் எனக்கு தெரிந்த வரை பகிர்கிறேன். தவறுகள் சுட்டப்பட்டால் திருத்திக்கொள்கிறேன். மிக முக்யம் கீழே சொல்லப்படும் விஷயம் வ்ருத்தாந்தம் சம்மந்தப்பட்டதே. உபமான உபமேயங்கள் என்ற படிக்கு போக விழைய வேண்டா.
“தம் புத்ரர்களாலேயே அவர் மன உளைச்சலுக்குள்ளாக நேர்ந்தது..” – சரியல்ல. நிகழ்வுகள் கண்ணனின் சங்கல்பப்படி நிகழ்த்தப்பட்டவை. த்வந்தங்களுக்கும் மனதிற்குமே அப்பாற்பட்டவனன்றோ கண்ணன். எனவே யோகேஸ்வரனான கண்ணன் மன உளைச்சலுக்குள்ளானான் என்பது சரியான நிலைப்பாடல்ல.
ஸ்ரீமத் பாகவதம் (1-11-4)
அந்த: கலிம் யதுகுலஸ்ய விதாய
வேணுஸ்தம்பஸ்ய வஹ்னிமிவ சாந்திம் உபைமி தாம
மூங்கில்கள் உரசுவதால் ஏற்படும் தீ போன்று யதுகுலத்தோரிடையே பூசல் ஏற்படுத்தி அதன் பின் அமைதி உண்டாக நான் எனது இருப்பிடமேக இயலும் என கண்ணபிரான் தெரிவிக்கிறார்.
கண்ணனுடைய புத்ரர்கள் கருவிகள். அவர்கள் அவ்வாறு கருவிகளானது கண்ணனின் தீர்மானப்படி. காரணகர்த்தா கண்ணன்.
முப்பத்தொரு அத்யாயங்கள் கொண்ட ஸ்ரீமத் பாகவதத்தின் பதினோராவது ஸ்கந்தத்தில் (பாகம்) முதல் அத்யாயத்தில் யது குல நாசத்திற்கான துவக்கம் காட்டப்படுகிறது. இரண்டாவது முதல் இருபத்தொன்பதாவது அத்யாயம் வரை நவ யோகிகள் நிமி மகராஜனுடன் நிகழ்த்திய சம்வாதமும் (உரையாடல்) பின் உத்தவனுக்கும் கண்ணனுக்கும் இடையேயான உத்தவ கீதை எனப்படுவதான சம்வாதமும் பின் முப்பதாவது அத்யாயத்தில் யதுகுல நாசமும் முப்பத்தொன்றில் கண்ணன் தன் இருப்பிடம் ஏகுவதும்.
நாரதர், விஸ்வாமித்ரர், துர்வாசர், வாமதேவர் மற்றும் பல ரிஷிமுனிகள் கண்ணனின் தகப்பனார் ஸ்ரீ வசுதேவரின் இல்லத்தில் நற்கருமங்கள் செய்த பின் கண்ணனால் பிண்டாரகம் என்ற க்ஷேத்ரத்திற்கு வழியனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆங்கே கண்ணனின் மகன்கள் கண்ணனுக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த சாம்பன் என்ற மகனுக்கு பெண் போல் வேடமிட்டு விளையாட்டாக அந்த ரிஷிகள் முன் அனுப்பி இந்த பெண் நிறைமாத கர்ப்பிணி; இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும் என முற்றுமறிந்த நீங்கள் தெரிவிக்க வேண்டும் என கூறினர். கோபமடைந்த முனிவர்கள் “குலநாசமளிக்கும் முஸலம் (உலக்கை) இவளிடமிருந்து உண்டாகும்” என தெரிவித்தனர்.
திடுக்கிட்ட அந்தப்பிள்ளைகள் ஆடையை விலக்கிப் பார்க்க உலக்கையை ஆங்கே கண்டு விசனமுற்று உக்ரசேன மஹாராஜாவிடம் நடந்தவற்றை தெரிவிக்கின்றனர். அவர் அவ்வுலக்கையை தூள் தூளாக்கி சமுத்ரத்தில் வீசும்படி ஆணையிடுகிறார். அவ்வாறு வீசப்பட்ட லோஹ (இரும்பு) த்துகள்களில் சில ஒரு மீனால் விழுங்கப்பட்டும் மீதியனைத்தும் கரையை அடைந்து ஆங்கே பெரும் மூங்கில்களாக வளருகின்றன.
உத்தவனை பதரிகாச்ரமம் (பத்ரிநாத்) அனுப்பி யாதவசபைக்கு வரும் கண்ணன் தென்படும் துர்நிமித்தங்களைக்காட்டி பெண்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகளை சங்கோத்தாரம் என்ற இடத்திற்கு செல்லுமாறும் மற்ற யாதவர்களை ப்ரபாச க்ஷேத்ரத்திற்குச் சென்று ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள நற்கருமங்களைச் செய்யுமாறு சொல்கிறான். அவ்வாறே உடன்படும் யாதவர்கள் கண்ணன் சொன்னபடி செய்கிறார்கள். (குல நாசம் என்பது கூட ஒருவகையில் ஔபசாரிகமே. கிட்டத்தட்ட பாதிபேர்கள் சங்கோத்தாரம் சென்று விட்டார்களே)
ப்ரபாச க்ஷேத்ரத்தில் கருமங்கள் செய்தபின் யதுகுலத்தோர் கேளிக்கையில் ஈடுபடுகிறார்கள். அப்போது “மைரேய” என்ற மது பானம் அருந்துகிறார்கள். மது அருந்தியதால் மதியிழந்து ஒருவரொடொருவர் வீண்வாதத்தில் ஈடுபடுகிறார்கள். வாய்ச்சண்டை வலுக்க கையில் கிடைத்த ஆயுதங்களால் தாக்கிக் கொள்கிறார்கள். ஆயுதங்கள் கிடைக்காதபோது ஆங்கிருக்கும் மூங்கில்களைப் பிடுங்கி தாக்கிக்கொள்கிறார்கள். அவை இரும்பைப்போலாகி தாக்க எல்லோரும் மடிகிறார்கள்.
ஆக “க்ருஷ்ண புத்ரர்களால்தான் குல நாசம் விளைந்தது” என்றில்லாது
காரணகர்த்தா :- கண்ணனும் கண்ணனின் சங்கல்பமும்
கருவிகள் : க்ருஷ்ண புத்ரர்கள்
குலநாசத்திற்கு காரணங்கள் :-
1. குற்றமற்ற முனிவர்களை பரீக்ஷிக்க முனைந்தது
2. குற்றமென அறிந்தும் முனிவர்களிடம் பொய்யுரைத்தது
3. மதியிழக்கச்செய்யும் மதுபானம் அருந்தியது
4. மட்டற்ற குதர்க்க வாதப்ரதிவாதங்கள் யதுகுலத்தோரிடையே நிகழ்ந்தது.
இது போன்ற காரணங்களிலிருந்து மனித குலம் விலக வேண்டும் என்பது இதைப்படிப்பவர்களுக்கு கண்ணன் தெரிவிக்கும் பாடம என்பது எனக்கு புரிந்த படி.
ஸ்ரீமத் பாகவதம் (1-28-1)
ஸ்ரீ பகவானுவாச :-
பரஸ்வபாவ கர்மாணி ந ப்ரஸம்சேத் ந கர்ஹயேத்
பகவான் சொல்கிறார்:-
ஒருவருக்கு இயற்கையாய் அமைந்த ஸ்வபாவத்தை புகழவோ இகழவோ செய்யாதே.
மேலும் போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்பது தங்களுக்கு தெரிந்ததே
//
திரு மலர்மன்னன் அவர்களுக்கு,
மதம் மாறியவர்கள் அல்லது மாறுபவர்கள் முக்கியமான காரணங்களாக முன் வைப்பது தீண்டாமை. அதற்கும் பல கடவுள் வழிபாட்டுக்கும், பின்பற்றும் சம்பிரதாயங்களுக்கும் நேரடி தொடர்பை கண்டெத்தி விட முடிகிறது. மத மாற்றிகள் குறிவைப்பது ஜாதியின் கீழ் அடுக்குகளில் இருக்கும் ஏழைகளை. கிறிஸ்தவம் ஏழைகளை அடுத்து நோயாளிகள், குற்றவாளிகள் மற்றும் வியாபாரத்தில் ஏற்படும் நஷ்டத்தில் சிக்கிக் கொள்பவர்களை. இதற்கு ஆரிய, திராவிட பிரிவினையை தூண்டி, பல கடவுள் வழிபாட்டுத் தன்மையை கொச்சைபடுத்தி , கல்வி, வாழ்க்கைக்கு வழி என்று முன்நேற்றுப் பாதையில் சிறு நம்பிக்கையை ஊட்டி விடும் போது மத மாற்றம் சுலபமாகி விடுகிறது. இதற்கு வெளிநாட்டில் இருந்து திட்டம் போட்டு பணம் அனுப்பப்படுகிறது.
அக்கம் பக்கம் மக்களைப் பார்க்கும் போது இவர்கள் மதம் மாறியதாலேயே இன்று இந்த வளமான நிலையில் இருக்கிறார்கள் என்றே கருத இடமுண்டு. அவர்களிடம் தாய் மதம் குறித்த எந்த நல்ல எண்ணமும் இருக்க வாய்பிருக்குமா என்பது சந்தேகமே. நல்ல நிலையில் இருக்கும் ஒருவர் மத மாற்றம் பற்றி யோசிக்கவே மாட்டார். மேலும் நேற்று வரை இந்துவாக இருந்த ஒருவர் மதம் மாறுவதை காண நேரும் போது தம் மதம் குறித்த பெருமை தான் வரும்.
ஆனால் இதை எல்லாம் தாண்டி நீங்கள் ஒருவரை தாய் மதம் திரும்ப வைக்க முடியும் முடிந்திருக்கிறது என்று சொல்ல்வது ஆச்சர்யம் அளிக்கிறது. மதத்தின் பெருமையை புரிந்து மதத்தை ஏற்றுக் கொள்ள வெளிநாட்டில் இருந்து பலரும் வரலாம். ஆனால் நம் மக்களின் கடவுள் தேவை என்பது பெரும்பாலும் சுயநலம் நிறைந்ததாக அதாவது ஓரளவேனும் வசதியான, மரியாதையான வாழ்க்கை என்று இருக்கும் போது மதம் மாற்றங்களும் அதன் அடிப்படையிலேயே தானே நிகழ முடியும். அப்படி ஒரு வளமான வாழ்வுக்கான நம்பிக்கையை உங்களால் முன் வைக்க முடிந்திருக்கிறதா?
உங்கள் அனுபவங்களை கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
//
இந்தக் கட்டுரை ஆசிரியர் அவர்களின் முந்தைய கட்டுரைக்கு நான் இட்ட பின்னூட்டம். அதைத் தொடர்ந்து இந்தக் கட்டுரை வெளியாகி இருப்பதால் நான் எனது பின்னூட்டத்துக்கான பதிலாக இதை தொடர்புபடுத்தி புரிந்து கொண்ட போது எனக்கு இது ஆசிரியரின் அனுபவ பகிர்வாக புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு வேளை இதை தனியாக பார்த்தால் மதம் பற்றிய சிறப்பைச் சொல்லாமல் பிற மதங்களை ஏற்றுக் கொள்ளும் போது வரும் உலகியல் பிரச்னை பற்றி சொல்லி தாய் மதம் திரும்ப செய்வதாக ஒருவர் சொல்வதை ஏற்றுக் கொள்ள இயலாமல் இருக்கலாம்.
இங்கே பலரும் கட்டுரைக்கான பொருள் குறித்த விமர்சனத்தை விடுத்து ஆசிரியரை நேரடியாக புகழ்வதும் குறை சொல்வதுமாக இருப்பது வருந்தத தக்கது. ஆசிரியர் திரும்பத் திரும்ப கட்டுரையின் பொருளில் கருத்து பரிமாற்றம் செய்ய சொல்லி கேட்டுக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் ஆசிரியர் மேலும் பின்னூட்டம் இடுவோர் மேலுமே விவாதம் திரும்பிக் கொண்டு இருக்கிறது.
இதை தவிர்த்து கட்டுரையின் பொருளில் விவாதத்தை திருப்பலாமே.
\\\\\\\கஷ்மீரில், ஆஃப்கனில், பிரிவினைக்கு முந்தைய பஞ்சாப், ஸிந்து, வங்காள மாகாணங்களில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்ததால் என்ன ஆயிற்று என்று சிந்திக்க வேண்டும்.\\\\\\\\\
ஸ்ரீ மலர்மன்னன் மஹாசய, பலத்த ராணுவ பாதுகாப்புடன் உள்ள வழிபாட்டில் இருக்கும் ஓரிரு ஆலயங்கள் தவிர காஷ்மீரத்தில் பல ஆலயங்கள் ஆளுயர கம்பிகளுக்கிடையே பாதுகாக்கப்பட்டுள்ள ஸங்க்ரஹாலயங்களாக (அரும் காட்சியகங்களாக) மாறியுள்ளன. அகண்ட பாரதத்தின் பகுதியான காந்தாரமும் காங்க்ரஸ் மற்றும் வெள்ளைக்கும்பினிக்காரர் சதியால் பிளக்கப்பட்ட பாரதத்தின் முந்தைய பஞ்சாப், ஸிந்து, வங்காள மாகாணங்கள் உலகமே அருவருக்கும் பகுதிகளாய் உலக நாடுகளுக்குத் தீராத் தலைவலியாய் மாறியுள்ளன. இங்கு ஹிந்துக்கள் எப்படி உள்ளார்கள் என்பது அடுத்த விஷயம். முஸல்மான்களால் ஆளப்படாத தார்-உல்-ஹரப் என்ற ராஜ்யத்திலிருந்து முஸல்மான்களால் ஆளப்படுவதான தார்-உல்-இஸ்லாமுக்கு அகண்ட பாரதத்தில் தின்ற உப்புக்கு த்ரோஹம் செய்து ஓடிப்போன முஸல்மான்கள் பிரிவினைக்கு முந்தைய பஞ்சாப், ஸிந்து, வங்காள மாகாணங்களில் படும் அவஸ்தை இந்த மதங்களுக்கு மாற விழைபவர்கட்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமாயினும் வழிபாடு செய்ய ஹிந்து மதத்தில் உரிமை உண்டு. சில வாரங்களுக்கு முன் இங்கு கருத்து பகிர்ந்த முஸல்மாணியர் தர்க்காக்களை இடித்து ஆங்கே மஸ்ஜித் கட்ட வேண்டும் என எழுதியிருந்தார். ஆக நிலமை எப்படி என்பது வெட்ட வெளிச்சம். பிரிவு வேறு என்பதற்காக ஓரிரு தினம் முன்பு baqi sthan ல் உள்ள மசூதிகளில் குண்டு வெடிக்கப்பட்டது.
\\\\\\\இப்போது நம் நாட்டிலேயே கூட கிறிஸ்தவரும் முகமதியரும் எண்ணிக்கை கூடிய பகுதிகளில் ஹிந்துக்கள் எதிர்கொள்ள நேரிடும் தொல்லைகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.\\\\\\\\\
உத்தரபாரதமெல்லாம் தூரம். தமிழகத்தில் வருஷம் ஒருமுறை வந்து போகும் எனக்கு மாறிவரும் தமிழகம் எப்படியெல்லாம் மாறிவருகிறது ஆப்ரஹாமிய ஆக்ரமிப்புகளால் என்பது தெரிகிறது. மேல்விஷாரம் பற்றி இணையத்தில் படித்ததில் அங்கு நடக்கும் அக்ரமும் கீழ் விஷாரத்தின் மீது கட்டவிழ்க்கப்படும் தொல்லைகளும் ஜாதிக்கட்சிகள் தங்கள் ஜாதிக்காரர்களுக்கு கூட ஆதரவு அளிக்காது முஸல்மான்களுக்கு வால் பிடிப்பதும் தெரிய வருகிறது.
\\\\\மதம்மாறுபவர்களுக்கு மதம் சார்ந்த அறிவானது கொடுக்கப்படாமல், ஒரு சிலர் கையில் மட்டுமே அந்த அறிவு இருக்க வேண்டும் என அவர் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக விரும்புகிறார். \\\\\\\\\
\\\\\\\\\ஒருமுறை சென்னை பார்தீய வித்யா பவனைச் சேர்ந்த ஸ்ரீ அனந்த நாராயணன் நான் ஒருவரைத் தாய் மதம் திரும்பச் செய்கையில் அவரை பகவத் கீதையைப் படிக்கச் சொல்லுங்கள் என்றார். அதற்கு நான், மாட்டேன், இந்த நிலையில் கீதையை அவர் படித்தால் அவரால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது, எல்லாம் தவறாகவே தோன்றும், நுட்பமான ஹிந்து சமயக் கோட்பாடுகளை இப்போது புரிய வைக்க முடியாது என்று சொன்னேன். \\
அன்பார்ந்த ஸ்ரீ தீனதயாளன் தவறான ஆரோபம். ஹிந்து மதம் பற்றி சற்றேனும் அறிவுரை வழங்காது யாரும் மதம் மாற்றியிருக்க இயலாது. மதம் சார்ந்த ஆழ்ந்த அறிவு கொடுப்பது நீண்ட பணி. மதம் மாறிய பின்னும் மதம் சார்ந்த அறிவு வழங்க இயலும். மத அறிவு வழங்கப்படும் வரை தாய்மதம் திரும்பும் பணியை தாமதம் செய்யலாம் என்பது சரியான நிலைப்பாடு அல்ல.
இவையெல்லாம் மீறி மிக முக்யமான விஷயம்.
bai sthanல் ஹிந்துக்களின் நிலை. அதிலும் நமது தலித் ஹிந்து சஹோதரர்கள் நிலை.
அகண்ட பாரதத்தைப் பிளந்து உருவாக்கப்பட்ட தார்-உல்-இஸ்லாம் எனப்பட்ட பாகிஸ்தான் என்ற உடோபியா இருபத்து நான்கே வருஷங்களில் அதீத சுய சஹிப்பின்மையால் திரும்பவும் பிளக்கப்பட்டு கேலிக்கூத்தாக baqi sthan ஆனதும் கிழக்கிலும் மேற்கிலும் ஔரங்கசீப்பின் காலத்தில் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மக்கள் வாழ்கையில்
அங்குள்ள ஹிந்துக்களை மதம் மாற்ற முஸல்மான்களும் க்றைஸ்தவர்களும் விழைவது பெரிதல்ல. இந்த மதமாற்ற பேய்களுக்கு இறையாகாது, இன்னமும் தங்கள் தாய்மதத்தில் ஸ்திரமாக இருக்கும் ஹிந்துக்களைப் பார்க்கையில்
\\\\\\\\\நூறு ஆண்டுகளுக்குப்பின் ஹிந்துஸ்தானத்தில் நிலைமை என்னவாக இருக்கும் என்றே சிந்திக்க வேண்டியுள்ளது. ஹிந்து சமயத்திற்கு அழிவில்லை என்பது வாஸ்தவம்.\\\\\\\\
ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் மேற்கண்ட வாசகத்தில் சொன்ன விஷயத்தில் உள்ள ஞாயம் புரிபடுகிறது.
கீழ்க்கண்ட சுட்டியை அவசியம் வாசித்தால் சொல்லொணாத்துன்பங்களையும் துயரங்களையும் மீறியும் இன்றும் baqi sthanல் ஹிந்துக்கள் ஹிந்துக்களாக இருப்பது இந்த மதத்தில் மறுக்க முடியாமல் இருக்கும் சிறப்புகளுக்கு சான்று
அவசியும் கண்டு களிக்க வேண்டிய சுட்டி
https://news.bbc.co.uk/2/shared/spl/hi/picture_gallery/07/south_asia_hindus_in_pakistan/html/5.stm
@தீனதயாளன் ,
//ஹஜ்ஜிற்காக அரேபியாவிற்குப் போகும் இந்தியர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்று ஒருமுறை இந்த தளத்தில் எழுதி இருந்தார். அது பற்றிய விவரங்கள் தாருங்கள் என்று ஒரு இஸ்லாமியர் கேட்ட கேள்விக்கு மொண்ணையான சால்ஜாப்பு கொடுத்துவிட்டு வேறு ஒரு பிரச்சினைக்கு மக்களைத் திசை திருப்பிவிட்டார்.// எங்க கம்பெனியில் டிரைவராக இருந்தவர் , குவைத்தில் இருந்தபோது அரேபிய சிறுவர்கள் கூட நம்(பாக்,பங்களாதேசம்) மக்களை எவ்வாறு நடத்துவார்கள் என்று சொன்னார். (மசூதியில் குனிந்து இருக்கும்போது தள்ளுவார்களாம்) ஆனால் ஒன்றும் செய்யமுடியாது .. இதை சொன்னது ஒரு முஸ்லிம் தான். அதற்காக இப்போ என்னிடம் அதற்கு ஆதாரம் கேட்டால் குடுக்க முடியுமா? இல்ல இந்த மனிதர் தான் சொன்னார் என்றால் மற்ற முஸ்லிகள் அவரை சும்மா விட்டுவிடுவார்களா? இதன் காரணமாகவே மலர்மன்னன் சொல்லாமல் இருந்திருக்கலாம். அதானால் மலர்மன்னன் சொன்னது இல்லை என்று ஆகிவிடுமா? இல்லை நான் சொன்னது தான் இல்லை என்று ஆகிவிடுமா.. அதை படிக்கும் அதை அனுபவித்த முஸ்லிம்களுக்கு தெரியும் அது போதும்.
காலத்தின் கோலம் மணிதனுக்கு கடவுளிடம் பக்தியும் இல்லை பயமும் இல்லை. எல்லாம் இயந்திரதனமாக மாறிவிட்டது. இந்து கடவுளின் இருப்பிடத்தையும் அரசாங்கம் வியாபார ஸ்தலமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. பரம்பரை பாரம்பரியம் பண்பாடு என்பதைபற்றியெல்லாம் சிறிதும் கவலைகொள்ளாமல் பணம் பணம் என்று அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்
1. கிருஸ்துவமதத்திற்கு மாறுவதால் தான் வலியசென்று பாவி மஹாபாவி என்ற பட்டங்களை முதலில் சுமக்கிறான் என்பதை நாம் மதம் மாறுபவர்களுக்கு எடுத்து கூறவேண்டும்.
2. சுவாமி தயாநந்த சரஸ்வதி கூறுவதுபோல் எப்படி பண்ணைகளில் ஆடு மாடு பன்றி கோழிகள் கொழுத்து வளர்கப்பட்டு பின்பு உணவிற்காக வெட்டப்படுகிறதோ அதுபோல் தான் கிருஸ்துவர்கள் செய்யும் தொண்டும் சிலரை சிலகாலம் கொழுக்கவைத்து பின்பு சமூகங்களிடையே சண்டையை மூட்டி கொலைகள் பல நிகழ்த்தி இடையில் குளிர்காய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள் என்பதை சரித்திர ஆதாரங்களுடன் விளக்கவேண்டும்
3. கிருஸ்துவர்கள் நடத்தும் கல்வி நிலையங்களுக்கு நம்குழந்தைகளை அனுப்பமாட்டோம் என்று இந்து பெற்றோர்கள் சபதம் எடுக்கவேண்டும்
4. ராமகிருஷ்னாமடம் விவேகாநந்தா இயக்கங்கள் சத்தியசாயி ஸ்தாபனம் ஆதிபாராசக்தி பீடம் ஆகிய ஸ்தாபனங்கள் தங்களை இந்து நிறுவனங்கள் என்று கூற தயங்குவதோடு அனைத்து மதமும் அந்த ஒரே கடவுளிடம்தான் இட்டுசெல்கிறது என்பதால் பணம் பொருட்கள் அளிக்கும் கிருஸ்துவமதத்திற்கு மாறுகிறார்கள். இவர்கள் இம்மாதிரியான பிரசாரங்களை நிறுத்தவேண்டும். மேலும் இவர்களும் ஆரியசாமாஜ் போன்று தாய்மதம் திரும்பும் பிராசாரத்தையும் மேற்கொள்ளவேண்டும்.
5. மக்கள் வறுமையின் காரணமாகவோ அல்லது தீண்டாமை காரணமாகவோ மதம் மாறுகிறார்கள் என்பது முற்றிலும் உண்மை அல்ல. அதற்கு காரணம் இஸ்லாமியர்களை போல் தீவிர மதபற்று இல்லாமையே காரணம். நாத்திக பிரசாரங்களினாலும் போலி மதசார்பின்மை பேச்சுகளினாலும் நமது மக்கள் முதலில் இந்துபற்று இல்லாதவர்களாகமாறி பின்பு இந்து மதத்தை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்
6. வாரம்தோறும் இந்து நன்பர்கள் தங்கள் தொகுதிகளில் சத்சங்கங்களை கூட்டி நடத்தவேண்டும். மதம்மாறிய குடும்பங்கள் எப்படி பாயை சுரண்டி பைத்தியமாய் அலைகிறார்கள் என்பதை நாம் அவர்களுக்கு விளக்கவேண்டும். நமது பண்டிகைகளின் பெருமைகளை விளக்கி அதனால் வாழ்கையில் ஏற்படும் பற்றுதல்களை விளக்கவேண்டும்.ஒவ்வொரு கோவில்களிலும் சிறந்த பேச்சாளர்களை கொண்டு வாரம்தோறும் பிரசாரங்கள் நடத்தவேண்டும். மதமாற்றத்தால் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் விளையும் தீமைகள் பற்றி விளக்கி கூறவேண்டும்
7. மத மாற்று தடைசட்டத்திற்கும் இந்து கோவில்களை அரசாங்க பிடியிலிருந்து நீக்குவதற்கும் தொடர்ந்து குரல் கொடுத்து போராட வேண்டும்.
//ஆனால், இந்து மதத்தின் சிறப்பைப் பற்றி மதம் திரும்ப வேண்டியவர்களிடம் பேச வேண்டியதில்லை என்று மலர்மன்னன் சொல்லுவது முற்றிலும் தவறு.- ஸ்ரீ தீனதயாளன்//
கீழே காணப்படும் வாசகங்கள் இக்கட்டுரையில் நான் எழுதியுள்ளவை:
//ஹிந்து சமயக் கோட்பாடுகளை எடுத்துச் சொல்வது அடுத்தபடியாக இருக்கும், இருக்க வேண்டும்…….
……எனவேதான் நான் நமது கிறிஸ்தவ, முகமதிய சகோதரர்களைத் தாய் மதம் திரும்பச் செய்கையில் ஹிந்து சமயக் கோட்பாடுகளைப் புரிய வைக்கும் முயற்சியை முதல் படியாக மேற்கொள்வதே இல்லை.//
இந்து மதத்தின் சிறப்பைப் பற்றித் தாய் மதம் திரும்ப வேண்டியவர்களிடம் பேச வேண்டியதில்லை என்று நான் சொல்லவே இல்லையே! முதல்படியாக அதை வைத்துக்கொள்ள வேண்டாம் என்றுதானே சொல்கிறேன்.
நீங்கள் என்ன, ஒரே த்டவையில் ஒரே கருத்துப் பரிமாற்றத்தில் ஒருவரைத் தாய் மதம் திரும்பச் செய்துவிட முடியும் என்றா நினைக்கிறீர்கள்? இப்பணியில் நேரடியாக ஈடுபட்டுப் பாருங்கள், அப்போதுதான் உங்களுக்கு இதில் உள்ள சிரமங்கள் தெரியும். நீங்கள் தற்காப்புக் கலையும் சிறிது கற்று வைத்திருப்பது நல்லது! இது நமது முயற்சியை முறியடிக்க முரட்டுத்தனமாக முன்வருவோரை எதிர்கொள்ள நேரிடுவதால்!
முதல்படியாக நமது கோட்பாடுகளை விஸ்தாரமாக விவரித்துக் கொண்டிருந்தால் வேற்று சமயத்தினர் எதிர் வாதம் செய்வதில் தான் இறங்குவர். இது மனித இயல்பு. தன்னை, தன் சார்பை நியாயப் படுத்திக்கொள்ளவே எவருக்கும் தோன்றும்.
சமயக் கோட்பாடுகளை விவரித்துக் கொண்டிருந்தால் வாதப் பிரதி வாதங்களில் நேரமும் சக்தியும் விரையம் ஆவதுதான் மிஞ்சும்.
சமயக் கோபாடுகளை முதல் படியாக வைத்துக்கொள்வதைவிட சமூக நிலவரங்களை முதலில் அணுகுவது பயனுள்ளதாக என் அனுபவத்தில் அறிந்ததையே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
தாய் மதம் திரும்பச் செய்யும் பணியில் ஈடுபட எவரேனும் விரும்பினால் அவர்களுக்குப் பயன்படக்கூடும் என்பதால்தான் இக்கருத்துகளை வெளியிட்டேன், மற்றபடிப் பலரைத் தாய் மதம் திரும்பவைத்துள்ளேன் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அல்ல. உண்மையில் இது சம்பந்தமாக நான் வெளிப்படையாக எழுதுவது எனது பணிக்கு இடையூறாகவே இருக்கும்.
//இதில் வருத்தமான விசயம் மலர்மன்னன்கூட மீண்டும், மீண்டும் கவனத்தைத் தன்மீது திருப்புவதுதான். படிப்பவர்களின் கவனம் கட்டுரை சொல்லும் கருத்தில் இல்லாமல் தன்மீதே இருக்க வேண்டும் என்பது போலத்தான் அவரது பதில்களும் இருக்கின்றன.- ஸ்ரீ தீனதயாளன்//.
இவ்வாறெல்லாம் தனிநபர் விமர்சனங்கள் வரும்போது மேலும் மேலும் தன்னிலை விளக்கம் அளிப்பது தவிர்க்க முடியாததாகிறது. அவ்வாறு அளிக்கும் போது மேலும் மேலும் விமர்சனங்கள், தன்னிலை விளக்கங்கள் என்று சுழற்சி தொடர்கிறது.
//ஹஜ்ஜிற்காக அரேபியாவிற்குப் போகும் இந்தியர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்று ஒருமுறை இந்த தளத்தில் எழுதி இருந்தார். அது பற்றிய விவரங்கள் தாருங்கள் என்று ஒரு இஸ்லாமியர் கேட்ட கேள்விக்கு மொண்ணையான சால்ஜாப்பு கொடுத்துவிட்டு வேறு ஒரு பிரச்சினைக்கு மக்களைத் திசை திருப்பிவிட்டார்- ஸ்ரீ தீனதயாளன்//
இதோ இப்படியொரு குற்றச்சாட்டை சர்வ சாதாரனமாகச் சுமத்திவிட்டீர்கள். இதற்கு விளக்கம் அளிக்காமல் புறந்தள்ளிவிடலாம். எனது நேரம் மிச்சமாகும். ஆனால் என்னிடம் விவரம் இல்லாததால் மெளனம் சாதிப்பதாகத் தான் வாசகர் தளத்தில் கருத்து உருவாகும்.
ஹஜ் செல்லும் அராபியர் அல்லாத முகமதியர் அராபியரால் எவ்வாறு இழிவாக நடத்தப்படுகின்றனர் என்பதை ஹஜ் சென்று வந்தவர்கள் மூலமாக நான் அறிந்த தகவல்களை வெளியிடுவதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. ஆனால் அவ்வாறு வெளியிட்டால் ஆதாரம் கேட்பார்கள். ஊர், பெயர் வெளியிடுமாறு சவால் விடுவார்கள். நானும் உணர்ச்சி வசப்பட்டு அந்த விவரங்களை வெளியிட்டால் அதனால் பாதிக்கப்படக் கூடியவர்களின் நிலைமை என்ன ஆகும்? நீங்கள் யோசிக்க வேண்டாம், நானும் யோசிக்காமல் இருந்துவிட முடியுமா?
முகமதிய ஜமாதுகளின் அசுர சக்தியை அறிய வேண்டுமானால் ஒன்று நீங்கள் ஜமாத்துகளால் பாதிக்கப் பட்ட முகதியரை அறிந்திருக்க வேண்டும். அல்லது நீங்களே ஒரு முகமதியராக இருக்க வேண்டும்.
ஹஜ் சமாசாரங்கள் பற்றித் தகவல் தந்தவர்களைப் பற்றிய விவரம் சொல்லாமல் ஒரு கட்டுரையாக வேண்டுமானால் எழுதலாம். உங்கள் திருப்திக்காக எழுதிவிடுகிறேன்.
நேரடியான களப்பணி செய்து பார்த்தால்தான் தாய் மதம் திரும்பச் செய்யும் பணியில் உள்ள சிரமங்கள் எல்லாம் புலனாகும். மேலும் நான் தனி நபராகவே இயங்கி வருகிறேன் என்பதையும் சொல்லவேண்டும்..
பின் விளைவுகளையெல்லாம் தீர ஆலோசித்த பிறகுதான் எதையும் எழுத்தில் பதிவு செய்ய முடியும். என் மூலம் தாய் மதம் திரும்பியோரின் பெயர் விவரங்களைத் தர அதிக நேரம் ஆகாது. ஆனால் அதன் விளைவு என்ன ஆகும் என்ற கவலை கேட்பவர்களுக்கு இருக்காது. ஏதேனும் பதிப்பு வந்தால் நான்தான் பொறுப்பேற்க வேண்டிவரும். எனது பணுயும் பாதிப்புக்குள்ளாகும்.
சிரமங்கள் யாவும் நேரடியாகச் செயலில் இறங்குவோருக்கே.
-மலர்மன்னன்
அன்புள்ள ஸ்ரீ க்ருஷ்ணகுமார்,
ஒரு தெருக் கூத்தில் விடிய விடிய ஸ்ரீ ராமன் புகழ் பாடும் ராமாயணம்.
மர்யாதா புருஷோத்தம் ஸ்ரீ ராமச் சந்திர மூர்த்தியை கானகம் ஏகுமாறு தசரதன் சொல்கிறான்.
உடனே பர்வையாளர் மத்தியிலிருந்து நடுத்தர வயது கிராமவாசி ஒருவர் ஒரே பாய்சலாக ஆட்டக் களத்தில் வந்து நின்றார்.
ஏண்டா தசரதா, ஒனக்கு கொஞ்சமாவது அறிவு வேணாம்? ஒரு பொறாமை பிடிச்ச பொம்பளை பேச்சைக் கேட்டு ஆடறியே, வெக்கமா இலே?
ராமா நீ ஒண்ணும் காட்டுக்குப் போக வேணாம், இந்தக் கிழவனுக்கு இனிமேயும் ஆள யோக்கியதை இல்லே. வா, தலையிலே கிரீடத்தை வெய்யி. ராஜ்ஜியம் நடத்து.
ஏய், இங்க யாராச்சும் ராமனைக் காட்டுக்குப் போகணும்னு சொன்னா தொலைச்சுப் புடுவேன் தொலைச்சு!
அவ்வளவுதான். தெருக் கூத்து அத்துடன் முடிவு பெற்றது.
கக்ருஷ்ணபுத்ரன் என்அ பெயரைப் படித்த அந்தச் சமயத்தில் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் ஒரு துஷ்டப் பிளையைப் பெற்ற தகப்பனாகவே தெரிந்தான். எண்பது பிள்ள்களைப் பெற்ற தகப்பன்!
பக்தி ஒரு எல்லையைத் தாண்டிவிடுகிற போது கடவுள் நம் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திரருப்பவராகவே தோன்றத் தொடங்கிவிடுகிறது. அத்தகைய உணர்வு நிலையில் ஸ்ரீ க்ருஷ்ணன் மன உளைச்சல் கொண்டதாக அவ்ரை ஒரு தகப்பனாகவே உணர்ந்து எழுதினேன்.
பூஜையின் போது நிவேதனத்தைக் சுடச்சுடக் கொண்டு வந்து வைத்தால் கொஞ்சம் ஆறட்டுமே, க்ருஷ்ணன் நாக்கைச் சுட்டுக் கொள்வான் என்கிறேன். என்ன செய்வது நான் ஒரு மூடன்தான்.
ஆனால் இப்படி மூடனாக இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது!
-மலர்மன்னன்
test
Nayanthara’s decision to convert to Hinduism ahead of her marriage to Prabhudeva seems to have touched a few nerves here and there. Speaking on behalf of a Christian organization its office bearer Inian John said that the news of Nayanthara’s decision to convert to Hinduism came as a shock and caused much pain to him.
He said that Nayanthara’s actions in the recent past have been totally against the principles of Christianity. The Bible clearly forbids a Christian from coveting something that belongs to someone else. By deciding to marry Prabhudeva, Nayanthara has incurred the wrath of the Lord by deciding to step away from Christianity, as said in the Bible. He also said that Nayanthara would also have to incur the pain for the grief that she has brought upon Ramlath.
He also added that it was evident that Nayanthara had been forced to convert to Hinduism by Prabhudeva. He added that such coercion was almost a criminal offence.
இழையின் முக்ய கருத்திலிருந்து விலகுவதற்கு என் க்ஷமா யாசனம்.
முதலில் தன் பெயரில் என் பெயரின் சாம்யதையைக்கொண்டு ஆனால் நேரெதிரான பாவத்தில் இங்கு உத்தரம் பகிர்ந்த ஸ்ரீ க்ருஷ்ணபுத்ரனின் “சைதன்ய மஹாப்ரபுவின் பரவசநிலை” பற்றி. சொல்லுக்கு அப்பாற்பட்டதான தூயதான அந்த பக்தி நிலையை அவர் கொச்சைப்படுத்தியது மனதைப் புண்படுத்தியது. எத்தனையோ உத்தரங்களை ப்ரசுரம் செய்யாத அல்லது திருத்தி ப்ரசுரம் செய்த ஆசிரியர் குழு இப்படிப்பட்ட உத்தரத்தை அப்படியே ப்ரசுரம் செய்தது சரியாகப்படவில்லை. பின்னிட்டும் ஹிந்துக்களை ஆழிப்பேரலை போன்று விழுங்க வந்த முஸல்மாணிய முரட்டுத்தனத்தை எதிர்கொண்டு பகவன் நாமம் மற்றும் பக்தி பாவத்தினாலேயே சமர் செய்து முழு கௌடப்ரதேசத்தையும் ஹிந்துக்களையும் ஹிந்துஸ்தானத்தையும் பல தலைமுறைகளுக்கு காத்து இன்று உலகமெங்கும் ஜாதி, மதம், தேசம், நிறம் போன்ற பல வித்யாசங்களை நொறுக்கி மானுட குலத்தையே ஹிந்து மஹா சாகரம் என்ற பாற்கடலில் ஐக்யப்படுத்தும் காரியத்தை செய்தது செய்து வருவது சொல்லுக்கு அப்பாற்பட்ட க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபுவின் “பரவசநிலை” என்ற ஆதாரத்திலேயே என்பதை மறப்பது மதிஹீனம் மற்றும் நன்றி மறப்பது.
\\\\\\\\\\\\பக்தி ஒரு எல்லையைத் தாண்டிவிடுகிற போது கடவுள் நம் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திரருப்பவராகவே தோன்றத் தொடங்கிவிடுகிறது. அத்தகைய உணர்வு நிலையில் ஸ்ரீ க்ருஷ்ணன் மன உளைச்சல் கொண்டதாக அவ்ரை ஒரு தகப்பனாகவே உணர்ந்து எழுதினேன்.
பூஜையின் போது நிவேதனத்தைக் சுடச்சுடக் கொண்டு வந்து வைத்தால் கொஞ்சம் ஆறட்டுமே, க்ருஷ்ணன் நாக்கைச் சுட்டுக் கொள்வான் என்கிறேன். என்ன செய்வது நான் ஒரு மூடன்தான்.
ஆனால் இப்படி மூடனாக இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது!\\\\\\\\\
தன்ய ஹோ ஸ்ரீ மலர் மன்னன் மஹாசய, வினயம் என்ற பாவம் (bhavam) மௌட்யம் என்ற போர்வையால் மூடப்படலாம். பக்தி என்ற பயிருக்கு பாவம் (bhavam) என்பது தானே நீராகும். பாவக்ராஹி ஜனார்த்தன: என்று தானே பெரியோர்கள் சொல்கிறார்கள்.
பாஷ்ய பாடம் வாசிக்கும் எனக்கு என் ஆசான்கள் சொல்லிக் கொடுத்ததான “வாதே வாதே ஜாயதே தத்வபோத:” – வாதம் செய்யச் செய்ய தத்துவம் துலங்கும் என்ற ந்யாயம் (தர்க்கம்) சார்ந்த ஸுபாஷிதம் நினைவுக்கு வருகிறது. ஆனால் அது உண்மை துலங்கவேண்டும் என்ற அவாவுடன் நேர்மையாக வாதம் செய்யும் பக்ஷத்தில். பூர்வமீமாஸகர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையே அத்வைதிகளுக்கும் பூர்வமீமாஸகர்களுக்கும் இடையே இப்படியாக நடந்த விவாதங்கள் வழியே கருத்துகளில் தெளிவு பிறந்தன. சாரமற்ற விதண்டாவாதம் குதர்க்க வாதம் மற்றும் கருத்துக்களைச்சாராது தனிமனிதர்களை மட்டற்று நிந்திப்பதான வாதமுறையைப்பற்றியதானதன்று இந்த ஸுபாஷிதம்.
பின்னிட்டும் இந்த ஸுபாஷிதம் வேதாந்திகளுக்குத் தான். பக்தர்கள் விஷயத்தில் வேறான வழிமுறை. நாரத பக்தி ஸூத்ரத்தில், “வாதோ நாவலம்ப்யதே” – பக்தன் வாதத்தில் ஈடுபடக்கூடாது என்பதாக பெரியோர் சொல்வர்.
உத்தரபாரதம் வந்தால் ப்ருந்தாவனமும் கோவர்த்தனமும் அவசியம் வாருங்கள். நிற்கா மழையினின்று வ்ரஜ வாசிகளைக் காக்க கண்ணன் கோவர்த்தன மலையைத்தூக்கி குடையாய்ப் பிடித்தது புராணம். அப்போதிருந்த கோப கோபியரின் நிலையை ப்ருந்தாவனத்தில் எழுதப்படும் சித்ரங்கள் காண்பிக்கின்றன. தன் சுண்டு விரலால் கோவர்த்தனமலையைத் தாங்கிப்பிடிக்கும் கண்ணனைச் சுற்றி பெண்கள், குழந்தைகள், முதியோர், வாலிபர் என பல கோப கோபியர் மற்றும் மாடு கன்றுகள். அதில் சில வ்ருத்தரான கோபர்கள் தங்கள் மாடு ஓட்டும் கழியை மலைக்கு ஈடுகொடுக்க நிறுத்தியதாக சித்ரம். காரணம் கண்ணனின் கைவலியை குறைக்க வேண்டுமாம். என்னதான் கல்வி கற்காதவர்கள் எனினும் கழி மலையைத்தாங்காது என்ற அளவு மதி கல்லாதவர்கட்கும் இருக்கும் தான். ஆயினும் கண்ணனின் கைவலி அதற்கு தங்களாலானதைச் செய்ய வேண்டும் என்ற த்ருடமான பக்தி பாவத்திற்கு முன்னால் மதி மறைக்கப்படுவது பெரிதன்று.
“நாசிக்குள் ப்ராண வாயுவை ரேசித்தெட்டாத யோகிகளுக்கு” எளிதில் தன்னைக் கொடுக்காத கண்ணன் இப்படியான நிஷ்கபடமான பக்தர்களுக்கே தன்னைக் கொடுத்ததாகவே புராணங்களும் சொல்கின்றன.
த்வந்தங்களுக்கும் மனதிற்கும் அப்பாற்பட்ட கண்ணனை மன உளைச்சலுக்காளானதாக சொல்லிவிட்டரே என்று சொரேல் என்று இருந்தது. அந்த ஆதங்கத்தில் எழுதி விட்டேன். பக்தி பாவங்கள் காரண காரியத்திற்கு அப்பாற்பட்டவை என்ற மூத்தோர் சொல்லுணர்ந்து சிரம் தாழ்கிறேன்.
காரியம் வழி தவறி அன்ய மதங்களால் விழுங்கப்பட்ட நமது சஹோதரர்களை தாய் மதம் மீட்பது. இந்தப் புனித பணியை எப்படியெல்லாம் செய்யலாம் என கருத்து பரிவர்த்தனம் செய்வது நன்று. ஏற்கனவே இந்தப்பணியில் வெற்றி கண்டவர்களின் அனுபவ பகிர்வுகளின் முன் அறிவு சார்ந்த வாதங்கள் அடுத்த படியிலேயே இருக்கும்.
நெருப்பு எப்படி சுடும் என்பதை நான்கு பக்கங்களில் விளக்குவதைக் காட்டிலும் எரியும் நெருப்பருகே விரலைக் கொண்டு போனாலே விளங்கிவிடும். புத்தி சார்ந்த விளக்கங்கள் எந்த அளவு அவசியமோ அதற்கீடாகவே அனுபவ விளக்கங்களும்.
திரு மலர்மன்னன் அவர்களுக்கு:
எதை வைத்து உங்கள் மத மாற்ற முயற்சி செய்யப்போகின்றீர்கள்…?.
ஏசுவை ஏற்றுக்கொண்டால்தான் விமோசனம் என்று கிறிஸ்தவர்களும் முகமதுவை ஏற்றுக் கொண்டால்தான் சுவர்க்கம் என்று முகமதியரும் பிரசாரம் செய்வது அவர்களின் அடிப்படை நம்பிக்கை விஷயம்., யாரும் ஆசை காட்ட வில்லை, முகமதியர்கள் பின்பற்றும் குரான் சத்தியத்தை சொல்கிறது அதை முழுவதுமாக படித்துவிட்டு பிறகு முகமதியரை விமர்சனம் செய்யுங்கள்.
@kayal Anaban ,
// முகமதியர்கள் பின்பற்றும் குரான் சத்தியத்தை சொல்கிறது அதை முழுவதுமாக படித்துவிட்டு பிறகு முகமதியரை விமர்சனம் செய்யுங்கள்.//
ஏன் இப்படி ஜோக் அடிக்கிறீர்கள்.. ?
காயல்
//
முகமதியர்கள் பின்பற்றும் குரான் சத்தியத்தை சொல்கிறது அதை முழுவதுமாக படித்துவிட்டு பிறகு முகமதியரை விமர்சனம் செய்யுங்கள்.
//
கொஞ்சம் படிச்சாலே கொமட்டுது – நீங்கள் கூட நிச்சயமாக அர்த்த சஹிதம் படித்திருக்க மாட்டீர்கள் என்று என்னால் நிச்சயமாக கூற முடியும். அர்த்த சஹிதம் குரானை படித்தால் எந்த நல்லவனுக்கும் கொமட்டல் வரும்.
உங்களுக்கு வேண்டுமானால் சில பல வசனங்களின் மொழி பெயர்ப்பை இங்கு அலசலாம்.
ஏசுவை ஏற்றுகொண்டால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதும், முகமதுவே இறுதி தூதர் அவர் சொல்வதே இறைவன் சொல்வதும் என்று சாதிப்ப்தும் நிச்சயமாக ஆசை காட்டுதல்கள்தான். பாமரர்கள் இந்தச் சொற்களைக் கேட்டு மதி மயங்கி மதம் மாறுவார்கள். பகிரங்கமாகக் கூட்டம் போட்டு அற்புத சுக மளிக்கும் நாடகங்கள் நடத்துவதும் பகிரங்க ஆசை காட்டுதல்தான். வழிபாட்டுச் சுதந்திரத்தை முகமதிய அமைப்புகளும் கிறிஸ்தவ அமைப்புகளும் துஷ்பிரயோகம் செய்வதாக வழக்குத் தொடர வேண்டும். அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள வழிபாட்டுச் சுதந்திரம் என்பது அவரவர் வழிபாட்டுத் தலங்களில் வழிபாடு செய்வது, சமயச் சார்புள்ள பண்டிகைகளை ஊர்வலம் வருதல் போன்ற வெளிப்படையான சடங்குகளை சமய விதிகளுக்கு இணங்க நடத்துவது ஆகியவைதாம். கூட்டம் போட்டு மதப் பிரசாரம் செய்வது அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமையை துஷ் பிரயோகம் செய்வதாகும்.
-மலர்மன்னன்
ஊர்வலம் வருவது, கோஷமிடுவது போன்ற செயல்களுக்கு முகமதியத்தில் அனுமதி இல்லை. ஆகவே மிலாடி நபி ஊர்வலங்களை நடத்துவது முகமதியர் தங்கள் பலத்தைக் காட்டி அச்சுறுத்தும் நோக்கத்தை வெளிபடுத்துவதாக இருக்கிறது என்றும் சமயத்தைக் காரணம் காட்டி அவ்வாறு ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்றும் வழக்குத் தொடர வேண்டும்.
-மலர்மன்னன்
I think we need a Kandahar in Tamilnadu on other, go, they wil respect only to muscle power not to mind power because they are shaved in mind .
இனி நாம் செய்யவேண்டியது என்ன என்பதே இந்த விவாதத்தின் அடிப்படையாக அமைந்துள்ளதால்,
மனித சமுதாயம் மற்றும், நமது இந்து சமுதாயத்தின் நலன் கருதி,
(அ) இந்து சமயத்தின் முக்கிய ஆறுவகை பிரிவுகளுக்குள் ஒன்று மட்டுமே மற்றதை விட உயர்வு என்று கூறாமல், ஒரே சக்தி தான் பல பெயர்களையும், பல உருவங்களையும் பெற்று உள்ளது என்று உணர்ந்து , எல்லாம் சமமே என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
(ஆ) இந்து சமயத்தின் முக்கிய ஆறு பிரிவுகளுக்குள் , அவற்றின் பல சிறு உட்பிரிவுகளுக்குள்ளே ,
( வடகலை, தென்கலை, வீரசைவம், சாதா சைவம் , ஸ்பெஷல் சைவம் என்று ) ஒன்றை சிறிது உயர்வு என்றும் , மற்றதை சிறிது தாழ்வு எனவும் சொல்லாமல் எல்லாம் சமமே என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
(இ) மனிதனை பாவி என்று சொல்லும் பதர்களை ஒதுக்குவோம். எவன் பிறரை பாவி என்று சொல்கிறானோ அவனே பாவி என்பதை உணர்த்துவோம்.
(ஈ) இறைவன் வேறு மனிதன் வேறு என்று சொல்லி, இறைவனை விட மனிதன் மட்டம் என்று கூறாமல், எங்கும் நிறைந்தவனே மனித உருவிலும் உள்ளான் என்பதை உணர்ந்து, மனிதனின் அம்சமே இறைவன், இறைவனின் அம்சமே மனிதன் என்பதை உணர்வோம்.
(உ) இந்து மத தலைவர்கள் மற்றும் வழிகாட்டியாக இருப்பவர்கள் , ஒரு சாதியை சேர்ந்தவர் இன்னொரு சாதியை சேர்ந்த ஆண் அல்லது பெண்ணை திருமணம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால், நமது இந்து கோயில்களிலேயே அந்த திருமணங்களை நடத்தி பதிவு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்வோம்.
(ஊ ) அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவும், மற்றும் எல்லா தொழில்களையும் அனைத்து சாதியினரும் செய்ய வழி வகுப்போம். ஏனெனில், அர்ச்சகர் பணி ஒரு சாதியினரிடம் இருப்பதாக குற்றம் சாட்டப்படுவதுபோல், ( அது எந்த அளவு உண்மை என்பது வேறு விஷயம்)
வேறு சில தொழில்களும் சில குறிப்பிட்ட சாதியினர் வசமே உள்ளது. அவ்வாறு இல்லாமல், எல்லோரும் வேதம் படிக்க வசதி செய்து கொடுப்பதுடன், எல்லோரும் எல்லா தொழிலும் செய்ய பயிற்சியும் , வாய்ப்பும் கொடுக்கப்பட வேண்டும்.
மேலே கூறியவற்றை செய்தால், ஆபிரகாமிய மோசடிகளால் ஏமாந்துபோனோர் , மீண்டும் ஒரிஜினல் மதத்திற்கு திரும்புவர். ஆபிரகாமிய மதங்கள் காணாமல் போகும்.
முதலில் ஜாதியையும் மதத்தையும் காரணம் காட்டி வோட்டு வாங்கும் அரசாங்கத்தையும் அரசியல்வாதியையும் முதலில் புரிந்து கொண்டு ——-அடித்து விரட்டவேண்டும். இவர்களே இதுபோன்ற செயல்களுக்கு காரணமானவர்கள்.
தாய் மதம் திருமபச் செய்தலை ஓர் இயக்கமாகவே தொடங்க வேண்டும்
நான் நிறைய கேனைத் தனமான இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன் , கழுத்தில் சிலுவையும் நெற்றியில் சிறிய அளவிலான திருநீறும்.அவர்களிடம் இது குறித்து விசாரித்தால் …….அவனது பெண் நண்பி கொடுத்த அன்பு சிண்ணமாம்.