2.2.2012ந் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வியும், ஏ.கே.கங்குலியும் அளித்த தீர்ப்பு, கடந்த மூன்றாண்டுகளாக காங்கிரஸ் கட்சியும், தி.மு.கவும் 2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என மக்கள் முன் வைத்த வாதம் தவறானது என்பது போல் தீர்ப்பு அமைந்துள்ளது. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், பொது மக்கள் முன்னிலையிலும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் முக்கிய எதிர்கட்சிகள் இந்த ஊழலை எடுத்துக் கூறிய போது குற்றச்சாட்டுகளை பாரதிய ஜனதா கட்சியின் மீது திருப்புவதிலே அதிக கவனம் செலுத்தியவர்கள் காங்கிரஸ் கட்சியினரும், திமுகவினரும். குறிப்பாக 21.4.2010ந் தேதி அமைச்சர் ராசா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜனதா கட்சி தலைவர் திரு.சுப்பிரமணிய சுவாமி என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் தி பயனிர் எனும் பத்திரிக்கையில் வெளிவந்தது. இந்த பத்திரிக்கை பாரதிய ஜனதா கட்சியின் பத்திரிக்கையாகும் என குறிப்பிட்டிருந்தார்.
வெளிவந்த தீர்ப்பில் மூன்று விதமான குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதில் கிடைத்துள்ளது.
- உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளன
- முறைகேடுகள் நடந்தது பிரதமருக்கும், அன்றைய நிதித் துறை அமைச்சருக்கும் நன்கு தெரியும், கூட்டணி தர்மம் என்கின்ற முறையில் வாய் மூடி மைளனியாக இருந்தார்கள்.
- அமைச்சர் கபில் சிபில் கூறியது போல் உரிமம் வழங்கியதில் எவ்வித இழப்பும் மத்திய அரசுக்கு ஏற்படவில்லை என்றும் மத்திய தணிக்கை துறை அளித்த அறிக்கை உண்மைக்கு புறம்பானது என்று கூறியதை தவறானது
என மூன்றுக்கும் சரியான பதிலாக தீர்ப்பு அமைந்துள்ளது.
24.12.2008ந் தேதி வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் திரு. பிரகாஷ் ஜவடேர் எடுத்து வைத்த குற்றச்சாட்டுக்கள் இந்த தீர்ப்பின் மூலம் குற்றச்சாட்டுகள் உண்மையாகியுள்ளன.
கபில் சிபில் குற்றச்சாட்டுக்கு பதில்
முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணியின் கொள்கைப்படி உரிமம் வழங்கப்பட்டது என்றார் ஆனால் முந்தை பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் அதாவது 2003ம் ஆண்டு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தை தொலைத் தொடர்புத் துறையும், நிதி அமைச்சகமும் இணைந்து விவாதித்து முடிவு செய்யும் இதற்காக அதிகாரம் மிக்க அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவை 2006ல் தொலை தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், விலை நிர்ணயத்தில் நிதி அமைச்சகத்துடன் விவாதித்து முடிவு செய்ய வேண்டும் என்ற நிலை நீக்கப்பட்டது. இதற்கு பிரதம மந்திரி ஒப்புதல் கொடுத்தார் ஆகவே இந்த நீக்கத்திற்கு பிரதமர் ஏன் ஒப்புதல் கொடுத்தார் என்பதை கபில் சிபில் மறந்து விட்டு பா.ஜ.க மீது குற்றம் சுமத்துகிறார்.
மத்திய கணக்கு தணிக்கை ஆணையர் அறிக்கை, சி.பி.ஐ. அறிக்கை, நீதிபதி ஷிவ்ராஜ் பாட்டீல் அறிக்கை மற்றும் தொலை தொடர்பு ஆணையம் கொடுத்த அறிக்கையையும் நிராகரித்த கபில்சிபில் ஊழல் விசாரனையின் ஒவ்வொரு அம்சத்தையும் நிராகரித்தார். அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என கூறியபோது “நுகர்வோருக்கு கிடைத்த பலன்களைப் பார்த்தால் இதில் இழப்பு ஏதுமில்லை” என வக்காலத்து வாங்கினார். இவரின் அனைத்து கருத்துக்களுக்கும் சம்மட்டி அடி கொடுப்பது போல் நீதிபதிகள் 122 உரிமங்களையும் ரத்து செய்துள்ளார்கள்.
முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் லைசென்ஸ் என்ற கொள்கை முந்தைய ஆட்சியில் கடைபிடித்தது என கூறிய கபில்சிபலுக்கும், ராசாவிற்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பு “First come first served principle has inherently dangerous implications” என்பதை நினைவு படுத்த வேண்டும். இது சம்பந்தமாக தனது 69 வது பாராவில் நீதிபதிகள் தெரிவித்துள்ள அடுத்து மிகவும் முக்கியமான வார்த்தைகள் Any other methodology for disposal of public property and natural resources national assets is likely to misused by unscrupulous people who are only interested in garnering maximum financial benefit and have no respect for the constitutional ethos and values. ஆகவே கபில் சிபில் போன்ற அதிமேதாவிகளுக்கு கொடுத்த பதிலாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க இறுதி தேதி 1.10.2007 என அறிவித்து விட்டு திடீர் என 25.9.2007 என மாற்றியதை உச்ச நீதிமன்ற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளது. தன்னிச்சையாக சலனபுத்தியுடன் பொது நலனுக்கு எதிராக அமைந்துள்ளது (Wholly arbitrary, capricious and contrary to public interest) இந்த வார்த்தைகளை போலவே எஸ்.டெல் நிறுவனம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் இறுதி தேதி சம்பந்தமாக தொடுத்த வழக்கில், 2009ம் ஆண்டு ஜூலை மாதம் டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி G.S.Sistani கொடுத்த தீர்ப்பில் தன்னிச்சையாக இறுதி தேதியை மாற்ற அதிகாரம் கிடையாது. ஆகவே 10.10.2008ந் தேதி தொலை தொடர்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்கிறேன் (the DOT could not be allowed to arbitrarily change the cut-off date and that too without any justifiable reasons) என தீர்ப்பு வழங்கினார் இந்த தீர்ப்பை கூட மத்திய அரசு மதிக்கவில்லை.
முதலில் விண்ணப்பித்தவருக்கு முதலில் லைசென்ஸ் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு என்ற முறையை கூட ராசா பின்பற்றவில்லை. 2006ம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் 25 செப்டம்பர் 2007 வரை உரிமம் கேட்டு விண்ணப்பித்தவர்களின் படிவங்களை தேதி வாரியாக ஒழுங்குப்படுத்தவில்லை. 25.9.2007 வரை வந்த விண்ணப்பங்களுக்கு எல்.ஓ.ஐ. வழங்குவதாக 10.1.2008ல் அறிவிப்பு வெளியிட்டு அதே தேதியில் மதியம் 2.45க்கு மீன்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்கியதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்கள். பாரா 74ல் (1) ல் The licences granted to the private respondents on or after 10.1.2008 pursuant to two press releases issued on 10.1.2008 and subsequent allocation of spectrum to the licensees are declared illegal and are quashed. ஆகவே உரிமம் வழங்கியதில் கூட முறையான அனுகுமுறையை கடைபிடிக்கவில்லை என்பதால் உச்ச நீதிமன்றம் இரண்டு அறிவிப்புகளையும் ரத்து செய்தது. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு விழுந்த மிகப் பெரிய அடியாகும்.
இந்த பிரச்சினையில் கட்ஆஃப் தேதியான 25.9.2007 என்பதை மத்திய அமைச்சர் ராசா 2.11.2007ல் முடிவு செய்து விட்டு 10.1.2008ந் தேதி வரை அறிவிப்பு வெளியிட வில்லை ஆகவே இந்த செயலானது தனக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்குவதற்காகவே அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பு 70வது பாராவில் எi பத்தியில் குறிப்பிட்டுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியினர் செய்கின்ற பிரச்சாரமானது உச்ச நீதிமன்றம் ராசா ஒதுக்கிய 122 உரிமங்களை மட்டும் ரத்து செய்துள்ளது, ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் ஒதுக்கிய உரிமங்களi ரத்து செய்யவில்லை என முறைமுக குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்கள். இந்த குற்றச்சாட்டுக்கும் நீதிபதிகள் தெளிவாக தனது தீர்ப்பில் “2001 முதல் 24.9.2007ந் தேதி வரை உரிமம் பெற்றவர்கள் அதாவது சட்ட பூர்வமாக உரிமம் பெற்றவர்கள் பற்றி பிரச்சினை கிடையாது என்று தெரிவித்துள்ளார்கள். (71. 2001 onwards should be cancelled does not deserve acceptance because those who have got licence between 2001 and 24.9.2007 are not parties to these petitions and legality of the licences granted to them had not been questioned before this court.)
இந்த ஊழல் சம்பந்தமாக பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் விவாதித்த போது அமைச்சர் ராசா எடுத்த நடவடிக்கை அனைத்தும் பிரதமருக்கு நன்கு தெரியும், பிரதமருக்கு தெரிந்தே உரிமம் வழங்கப்பட்டதாக தொடர்ந்து கூறினார். அமைச்சர் ராசா கூறியதை வழிமொழிந்து பிரதமரும் பாராளுமன்றத்தில் ராசா எவ்வித தவறும் செய்யவில்லை, முந்தைய ஆட்சியில் எடுத்த கொள்கை முடிவின் படி உரிமம் வழங்கப்பட்டது என்றார். ஆனால் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இவர்களின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. மேலும் கைதாகி சிறையில் இருக்கும் ராசா நீதி மன்றத்தில் விசாரனையின் போது தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரத்தையும், பிரதம மந்திரியை விசாரிக்க வேண்டும் என பல முறை நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார் என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு 70வது பாராவில் (iv) பத்தியில் தொலை தொடர்பு அமைச்சர் ராசா அமைச்சரவை முடிவின் படியோ அல்லது நிதித் துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் படியோ செயல்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையே 28.10.2009ந் தேதி வெளிவந்த நாளிதழில் அமைச்சர் ராசா சட்ட அமைச்சகத்தின் கருத்தினை புறக்கணித்தார் என செய்தி வெளிவந்தது. தி பயனிர் பத்திரிக்கையை பாரதிய ஜனதா கட்சியின் பத்திரிக்கை என குற்றம்சாட்டிய அமைச்சர் ராசா நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதை நினைவு படுத்த வேண்டும் (iv) In view of the approval by the Council of Ministers of the recommendations made by the Group of Ministers, …………………… However as the Minister of C&IT was very much conscious of the fact that the Secretary Finance had ojected to the allocation of 2G spectrum at the rates fixed in 2001 , he did not consult the Finance Minister or the officers of the Finance Ministry) என தெளிவாக தீர்ப்பில் உள்ளது. ஆகவே நடைபெற்ற ஊழலில் மிகப் பெரிய பங்கு ராசாவுடையது என்றால், அதை தடுக்க வேண்டிய நிலையில் இருந்த பிரதம மந்திரி ஏன் தடுக்க வில்லை என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
அலைக்கற்றை விலை நிர்ணயம் தொடர்பான விவகாரத்தை தனியதிகாரம் கொண்ட அமைச்சர்கள் குழுவிடம்(Empower Group of ministers) விட வேண்டும் என இன்றைய கர்நாடக கவர்னரும் முந்தைய சட்ட அமைச்சருமான பரத்வாராஜ் தந்த ஆலோசனையை ராசா நிராகரித்ததை உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருக்கிறது. இதை பாரதிய ஜனதா கட்சியும் மற்ற எதிர்கட்சிகளும் சுட்டிக் காட்டி விவாதம் செய்த போது பிரதமர் கண்டு கொள்ளவில்லை. இதை போலவே 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிதிச் செயலாளரையும் உள்ளடக்கிய முழு தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் சமர்ப்பித்த பரிந்துரைகளை ராசா எவ்வாறு சமர்ப்பிக்கவில்லை என்பதையும் நீதி மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. தொடக்கத்திலிருந்தே நிதித்துறை அமைச்சகம் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்கிற கொள்கையை எதிர்த்தது என்பதை நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய அனைத்து மீறல்களும் மத்திய அமைச்சரவையில் இருந்த அனைவருக்கும் தெரிந்தது. இந்த மீறல்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மீடியாவில் போட்டு உடைக்கப்பட்டவை. இந்த மீறல்கள் சம்பந்தமாக 2007ம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களான அக்டோபர் நவம்பர் டிசம்பர் முதல் 2008ம் ஆண்டு ஜனவரி பிப்ரவரி மார்ச் மாதங்கள் வரை பாராளுமன்றத்தில் அமளி துமளியாக்கப்பட்டன. இது பற்றிய அனைத்து விவகாரங்களும் பிரதமருக்கும் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தெரிந்தும், இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி ராசா செய்த அனைத்து செயல்களும் சட்ட விரோதமானவை என்று கூறிய பின்னர், பாரத தேசத்தின் பிரதமர் பதில் கூறுவதில் தயக்கம் காட்டுவது கேள்வி குறியாகிறது. 1.11.2007ந் தேதி பிரதம மந்திரி ராசாவிற்கு எழுதிய கடிதத்தில் உரிமம் வழங்குவதில் வெளிப்படையான தன்மை இருக்க வேண்டும், முடிவு எடுப்பதற்கு முன் என்னிடம் தெரிவிக்க வேண்டும் என எழுதிய கடிதத்திற்கு புறம்பாக ராசா அனைத்து செயல்களையும் செய்தார் என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டாகும். எதிர் கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என உச்ச நீதிமன்றம் கூறிய பின்னும் பிரதம மந்திரி மௌன குருவாக காட்சியளிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதற்கு சரியான பதில் கிடைக்க வேண்டும்.
அன்புள்ள ஈரோடு சரவணன்
நல்ல தொகுப்பு. உங்களுக்கு இறைஅருள் மேலும் பெருகுக.
சேவற்கொடியோன்
நேற்று அத்வானி சோனியாவை கடுமையாக தாக்கியுள்ளார். அவரது வருகைக்கு பின் தான் ஒரே ஆட்சி காலத்தில் அதிகமான எண்ணிக்கையில் ஊழல்களும் நாட்டையே சுரண்டும் அளவில் பணம் கொள்ளைகள் நடந்துள்ளன என்கிறார். சுப்ரமணியம் சுவாமி சோனியாவை விஷகன்னி என்று கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை. சுவாமியிடம் சிபிலை சிரோ இழப்பு பற்றிய கேள்விக்கு சிபிலுக்கு சிரோ பிறகு எண்ணதெரியாது என்று கிண்டல் செய்கிறார். சோனியாவை பதவியிலிருந்து நீக்காதவரையில் ஒரு திருடனும் தண்டனை பெறபோவதில்லை. நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை உச்ச நீதிமன்றம் தான். அதிலும் நேர்மையான நீதிபதிகள் எண்ணிகை இன்று வெகுவாக குறைந்துவிட்டது என்பது ஒரு கவலைதரும் செய்தியாகும்.
சிதம்பரம் வழக்கின் தீர்ப்பிற்கு வந்த இரண்டு மறுமொழிகள் –
Not a Co-Accused because he knew it but did not participate… What kind of ridiculous theory is that…
Everyone knows except SC all other court and judges are price tagged..
எப்படி பதில் சொல்லுவார் நமது பிரதமர். அவரை ஆட்டிவைக்கும் சாட்டை சோனியாவின் கையில் உள்ளது. காந்தியின் குரங்கு பொம்மை தத்துவத்தை கடைபிடித்து அதர்மத்தை பார்காதே பேசாதே சொல்லாதே என்று சோனியாவின் முன் பதவி பிராமணம் எடுத்தவர் அல்லவா !!!
Will you write an article about supreme court’s questions to Mr. Modi about Gujarat riots?
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி அவர்களை நன்றியுடன் புகைப்பட வடிவில் ஆரம்பத்திலேயே காண்பிப்பதற்கு நன்றி. கெட்டதற்கு கெட்டது செய்யும் சுவாமிஜி போன்றவர்களை ஆர் எஸ் எஸ் ஏஜென்ட்டுகள் என, ஆர் எஸ் எஸ் வடிவில் நாட்டுக்கு நல்லது செய்வது கண்டிக்கத்தக்கது போல ஏசுபவர்களுக்கு, ஆர் எஸ் எஸ் அவ்வப்போது தக்க பதிலடி கொடுக்கத் தவறுவது, மிகவும் வருத்தமானது.
kindly write an article also about continued silence of Mr.Modi for the observations made by Gujarat high court/supreme court on the 2002 riots.