கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1

தன் மக்களை பயங்கரவாதத்தால், அச்சுறுத்தலால், மத – இனவெறியால் கொன்றவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைக் கைது செய்து விசாரித்துத் தண்டனை வழங்குவதோ அல்லது கைது செய்ய முடியாத பட்சத்தில் அவர்களைக் கொன்று இனியும் அது போன்ற பயங்கரவாதச் செயல்களை நடவாதவாறு உறுதி செய்வதோ மட்டுமே எந்தவொரு மக்கள் நலனிலும் நாட்டு நலனிலும் அக்கறையுள்ள ஒரு அரசு செய்யக் கூடிய முறையான துணிவான செயலாக இருக்கும்.

முதுகெலும்பு உள்ள எந்தவொரு தலைவனும் அதைத்தான் செய்வான். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குக் காரணமான பின்லாடனை பாக்கிஸ்தானுக்குள் புகுந்து கொன்ற அமெரிக்காவின் நடவடிக்கை இத்தகைய துணிவான நடவடிக்கைக்கான சமீபகால உதாரணம்.

ஆனால் இந்தியாவிலோ நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை விட, மக்களின் உயிரை விட, தீவிரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப் பட்ட உயிர்களுக்கான நியாயத்தை விட, இந்த சோனியா காந்தி + மன்மோகன் சிங் அண்ட் கோ அரசுக்கு அவர்களது ஓட்டு மட்டுமே குறியாகிப் போன கேவலமான நிலையில், இன்று இந்தியாவில் நீதி கேலிக்குரியதாக்கப் பட்டு விட்டது. நேரு காலம் தொடங்கி மன்மோகன் சிங் ஆட்சி வரை இந்த அவல நிலைத் தொடர்ந்து வருகிறது. நமது நாட்டிற்கு உள்ள எதிரிகளைக் கண்டு பிடித்து அழிக்கக் கூடிய, உலக அரங்கில் அவர்களின் கொடுமைகளை நிரூபித்து நியாயம் வழங்க முடியாத, விரும்பாத ஆட்சிகளே இந்தியாவுக்குத் தொடர்ந்து அமைவது இந்தியாவின் மீதான ஏதாவது ஒரு சாபமாக, சாபக்கேடாக மட்டுமே இருக்க முடியும்.

இந்தியா மீண்டும் மீண்டும் தன் மீது போர்தொடுத்த பயங்கரவாதிகளை என்ன செய்தது?

நினைவூட்டுதலாக சில செய்திகள்:

அபு சலீம் – ஒரு இஸ்லாமியப் பயங்கரவாதி 1993 மும்பை குண்டு வெடிப்பை நிகழ்த்திய சதிகாரர்களுள் முக்கியமான ஒருவன். குண்டு வெடிப்பைத் திட்டமிட்டு நடத்திய தாவூத் இப்ராஹிமின் ஒரு முக்கிய அடியாள். அவன் குண்டு வெடிப்புக்குப் பின்னால் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று விட்டான். அவனை இந்திய அரசின் உளவுப் பிரிவினரால் தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை. மும்பைக் குண்டு வெடிப்பில் மட்டும் அல்லாது இந்தியாவில் ஏராளமான கொலை, கடத்தல் குற்றங்களையும் செய்தவன். ஆள்களைக் கடத்திச் சென்று பணம் பறிப்பவன். பணத்துக்காகக் கொலைகள் செய்யும் ஒரு பயங்கரவாதி. அவனை 2002ம் வருடம் செப்டம்பர் மாதம் இண்டர்போல் போர்ச்சுக்கலின் லிஸ்பன் நகரத்தில் வைத்து அடையாளம் கண்டு இந்தியாவுக்குத் தகவல் தெரிவித்தது. அவனையும் அவனுடைய காதலியான நடிகை மோனிகா பேடியையும் இந்திய அரசிடம் ஒப்படைக்க போர்ச்சுக்கல் அரசு மறுத்து விட்டது. கடுமையான சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இந்தியாவில் பல நூறு பேர்களின் கொலைகளுக்குக் காரணமான கொடூரமான கொலைகாரனுக்கு நாங்கள் மரண தண்டனை விதிக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை போர்ச்சுக்கள் நீதிமன்றத்துக்கு இந்தியா கொடுத்த பின்பே கடும் போராட்டத்திற்குப் பின்பே 4 வருடச் சட்டப் போராட்டத்திற்கு பின்பே அவனை போர்ச்சுக்கல் அரசு இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புக் கொண்டது. இப்பொழுது அவனுக்கு கடுமையான தண்டனை எதையும் விதிக்காமல் தன் சிறையில் வைத்து உபச்சாரம் செய்து கொண்டிருக்கிறது இந்திய அரசு. இது வரை அவனுக்கு எந்த வித தண்டனையையும் இந்திய கோர்ட்டுகள் வழங்கவில்லை. நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் படு கொலைகளுக்கு நீதி இந்தியாவில் வழங்கப் படவேயில்லை.
தாவூத் இப்ராஹிம் – 1993, 2008 மும்பை குண்டு வெடிப்புகளுக்கும் இந்தியாவில் பல ஆயிரம் கோடி கள்ளக் கடத்தல் மற்றும் சட்டவிரோத வணிகங்களுக்கும் மூளையாக, தலைவனாக இருக்கும் பயங்கரமான இஸ்லாமிய பயங்கரவாதி. அவன் மீது நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற கொலைக் குற்றச் சாட்டு ஆதாரங்களுடன் சாட்டப் பட்டுள்ளது. இந்தியாவிற்குள் போதை மருந்து கடத்துவது இந்திய நகரங்களில் குண்டு வைத்து பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்துவது போன்ற எண்ணற்ற கொடூரமான சதிச் செயல்களை இன்று வரைத் தொடர்ந்து செய்து வருபவன். எண்ணற்ற அப்பாவி இந்துக்களின் உயிர்களைப் பறித்தச் சண்டாள அரக்கன். இந்தியாவின் இருப்பையே அழிக்க உறுதி பூண்டுள்ள ஒரு தேச விரோதி மனித குல விரோதி இந்த தாவூத். அமெரிக்க அரசு உட்பட பல நாடுகள் அவனை ஒரு உலக அளவிலான முக்கிய பயங்கரவாதியாக அடையாளம் கண்டுள்ளன. அவன் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று பாக்கிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்தில் வசிப்பதாக பல முறை இந்திய அரசு பாக்கிஸ்தான அரசிடமும் அமெரிக்க அரசிடமும் முறையிட்டு அவனை நாடு கடத்துமாறு கெஞ்சி வருகிறது. அவனை பாலிவுட்டின் நடிகைகளும் இந்தியாவின் பிற பயங்கரவாதிகளும் சந்திக்க முடிகின்றது. அவனது மகளின் திருமணத்தில் இந்தியர்கள் கலந்து கொள்ள முடிகிறது. ஆனால் இன்று வரை அவனைக் கைது செய்து இந்தியா கொண்டு வர வக்கில்லாமல் இந்திய அரசு பாக்கிஸ்தானின் ராணுவத் தலைமையிடமும் அமெரிக்க அரசிடமும் பிரிட்டனிடமும் இன்னும் பல நாடுகளிடமும் அவனைத் திருப்பித் தரக் கோரி மண்டியிட்டுக் கெஞ்சி வருகிறது. கிஞ்சித்தும் சுயமரியாதையும் தம் நாட்டுப் பிரஜைகளின் உயிர்களுக்கு மரியாதை அளிக்காமலும் இந்தியாவின் இருப்புக்கே அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு பயங்கரவாதியை இன்று வரைப் பிடித்து அவனால் கொல்லப் பட்ட மக்களுக்கு நீதி வழங்க வக்கில்லாமல் இருக்கிறது இந்திய அரசு.
டைகர் மோமன், காந்தாஹார் விமானக் கடத்தல் பிணையினால் விடுவிக்கப் பட்ட பயங்கரவாதிகள் முதல் கடைசியாக நடந்த மும்பைக் குண்டு வெடிப்புகள் வரை இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் நடக்கும் அத்தனை விதமான பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தும் அனைத்து விதமான பயங்கரவாதிகளும் இந்தியாவிற்குள் எந்தவித சிக்கலும் இல்லாமல் நுழைந்து தங்கள் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்த முடிகிறது. 2008ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புக்கும், அக்சர்தம் கோவிலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் திட்டமிட்ட டேவிட் ஹெய்லி என்ற அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதியை அமெரிக்க அரசு பிடித்து விட்டாலும் கூட இந்திய உளவுத் துறையினர் அவனை விசாரிப்பதற்குக் கூட அனுமதி வழங்கப் படவில்லை.
இந்தியாவின் இறையாண்மையின் சின்னமாக விளங்கும் பாராளுமன்றத்தைத் தாக்கிய அப்சல் குரு என்பவனை இந்தியாவின் உச்ச நீதி மன்றம் பலமுறை தூக்கிலுமாறு உத்தரவிட்டும் கூட இன்று வரை இந்தியாவை ஆளும் சோனியாவின் காங்கிரஸ் அரசாங்கம் பிடிவாதமாக அவனுக்குத் தண்டனை அளிக்க மறுத்து வருகிறது. அவனைத் தூக்கில் போட்டால் முஸ்லீம் ஓட்டுக்கள் கிடைக்காது என்ற ஒரே காரணத்திற்காக கேடுகெட்ட காங்கிரஸ் அரசாங்கம் அவனைப் பாதுகாத்து வருகிறது.

இப்படி எத்தனையோ உதாரணங்களை நாம் கொடுத்துக் கொண்டே போகலாம். இந்தியாவின் ஆட்சியாளர்கள் மீது விரக்தியையும் வெறுப்பையும் அவமானத்தையுமே இந்த நிகழ்வுகள் நமக்கு ஏற்படுத்துபவை. இந்தியாவின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்க முடியாத, இந்தியாவையும் அதன் மக்களையும் அன்றாடம் கொன்று தீர்க்கும் மிருகங்களைக் கண்டு பிடிக்க முடியாத, அப்படியே கண்டு பிடித்தாலும் அவர்களை விசாரித்து உரிய தண்டனை கொடுக்க பலம் இல்லாத கோழையான அரசாங்கங்களையே இந்தியா தொடர்ந்து பெற்று வருகிறது.

சுயமரியாதையும், சுய பாதுகாப்பு உணர்வும் ஒற்றுமையும் இல்லாத ஒரு சமூகம் இந்த உலகில் வாழ அருகதையில்லாத எளிதில் அழிக்கப் படக் கூடிய, உலகில் மரியாதை பெறாத முதுகெலும்பில்லாத ஒரு கேவலமான சமூகமாகி விடும். அப்படிப் பட்ட கேவலமான ஒரு இடத்தில் தான் இந்தியா இன்று இருக்கிறது பெரும் மன வலியை ஏற்படுத்தும் ஒரு உண்மை. சீனா முதல் பங்களாதேஷ், இலங்கை வரை இந்தியாவை ஒரு முதுகெலும்பில்லாத காமெடிப் பீசாக மட்டுமே உலக நாடுகள் கருதுகின்றன. அதன் காரணம் நம் வரலாற்றை உணர்ந்து நம் வலிமையை உறுதி செய்யாத பலவீனமான அரசியல்வாதிகளும் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் நம் பலவீனமான மக்களுமே.

இந்தியாவின் நடத்தைக்கு நேர்மாறான முதுகெலும்புள்ள ஒரு தேசம் இஸ்ரேல். தன் நாட்டின் ஒலிம்பிக் வீரர்களை 1972ஆம் ஆண்டு ம்யூனிக் நகரத்தில் கொன்ற இஸ்லாமியப் பயங்கரவாதிகள் ஒவ்வொருவரையும் தேடிக் கண்டு பிடித்துக் கொன்றது இஸ்ரேலின் உளவுப் படை. தன் மக்களின் உயிர்களுக்கு மரியாதை செலுத்தத் தெரிந்த ஒரு அரசாங்கம் அது. தன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தன் மக்களின் பாதுகாப்புக்கு கெடுதலாக விளங்கும் எவரையும் அவர்கள் நடுங்கும் வண்ணம் ஒழிக்கும் மன உறுதி படைத்த தலைவர்களைப் பெற்ற புண்ணிய தேசம் இஸ்ரேல்.

தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்ட்ரீட் (The House on Garibaldi Street) என்கிற இந்த இஸ்ரேலிய திரைப்படம் கூட நிஜமாகவே நடந்த அத்தகைய ஒரு தீர சாகசத்தின் கதைதான். 1979ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது. மொசாட் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான இஷர் ஹரல் என்பவர் ஐக்மேன் என்கிற நாஜி கொடுங்கோலனை, அவன் அர்ஜென்டினாவில் ஒளிந்து வசித்து வரும் இடத்தில் இருந்து கண்டுபிடித்து இஸ்ரேலுக்குக் கடத்தி வந்து இஸ்ரேலிய நீதிமன்றத்தில் நிறுத்திய சம்பவங்களை இதே பெயரில் ஒரு நாவலாக எழுதியுள்ளார். அந்த நாவலை சினிமாவாக எடுத்திருக்கிறார்கள். ம்யூனிக் சினிமா பற்றி ஏற்கனவே தமிழ்ஹிந்துவில் எழுதியிருக்கிறேன். அந்த சினிமா போலவே இந்த கரிபால்டி தெரு வீடு சினிமாவும் ஒவ்வொரு இந்தியராலும் அவசியம் பார்க்கப் பட வேண்டிய முக்கியமானதொரு சினிமா.

ம்யூனிக் சினிமா – கற்க வேண்டிய பாடங்கள் – விச்வாமித்ராவின் விமர்சனம்
படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியும் நம்மை இருக்கையின் விளிம்பிலேயே அமர்த்திவிடுகிறது. ஒவ்வொரு கொலையும் எடுக்கப்பட்டுள்ள விதம், கேமரா கோணம், விறுவிறுப்பான இசை ஆகியவை பிரமிக்க வைக்கின்றன. ஹிட்ச்காக்தனத் திகில் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை…

யூதர்களுக்கு எதிராக நடந்த முக்கியமான படுகொலைகளுக்குக் காரணமாக இருந்த ஹிட்லரின் பல அடியாட்கள் உலகப் போருக்குப் பின்னால் கத்தோலிக்கச் சபைகளின் தயவால் அவர்கள் ஆதிக்கம் நிலவும் தென்னமரிக்க நாடுகளுக்குக் கடத்தப் பட்டு அங்கு பத்திரமாகப் பாதுகாக்கப் பட்டனர். ஹிட்லரின் மறைவுக்குப் பிறகும் அவனது அட்டூழியங்களுக்கு உறுதுணையாக இருந்தன கத்தோலிக்க தலைமையும் அதன் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளும். கேஸ் சேம்பர்களை அமைப்பதிலும் படுகொலைகளை நடத்துவதிலும் முக்கியமான பங்கெடுத்த அடால்ஃப் ஐக்மான் என்ற ஜெர்மனி நாசியை கத்தோலிக்க உதவியுடன் பத்திரமாக நாடு கடத்தி தென்னமெரிக்க நாடான அர்ஜெண்டைனாவில் உள்ள ப்யூனஸ் ஐயர்ஸ் நகரத்தில் அவனது பெயரை மாற்றி பாதுகாத்து வருகிறார்கள்.

சான் ஃபெர்டினாண்டோ என்ற புற நகர்ப் பகுதியில் அமைந்த கரிபால்டி தெருவில் அவன் பாதுகாக்கப் பட்டு வருகிறான் என்ற ரகசிய செய்தி 1959ம் வருடம் ஏதோ ஒரு காரணத்தினால் ஜெர்மனியினாலேயே இஸ்ரேலின் உளவுப் பிரிவுக்கு கசிய விடப் படுகிறது. ஆரம்பத்தில் இந்தச் செய்தியை இஸ்ரேல் நம்பாவிட்டாலும் எதற்கும் ஒரு முயற்சி செய்து பார்ப்போமே என்று முடிவு செய்கிறார்கள். இஸ்ரேலின் பிரதமர் பென் குரியன் நேரடியாகத் தலையிட்டு எப்பாடு பட்டேனும் இந்த ஐக்மேனை உயிரோடு இஸ்ரேலுக்குக் கடத்திக் கொண்டு வந்து விசாரிக்கப் பட்டுத் தண்டனை அளிக்கப் பட வேண்டும் என்று உத்தரவிடுகிறார்.

அர்ஜெண்டினாவின் பாதுகாப்பில் இருப்பவன் உண்மையிலேயே பல லட்சம் யூதர்களை காஸ் சேம்பர்களில் இட்டுக் கொடூரமாகக் கொன்ற அதே அடால்ஃப் ஐக்மான் தானே என்ற சந்தேகத்தை உறுதி செய்வதற்காகவும் அவன் தான் அந்த நபர் என்றால் அவனைக் கடத்திக் கொண்டு வருவதற்காகவும் மொசாட்டில் ஒரு சிறு குழு அமைக்கப் படுகிறது.

இஸ்ரேல் அர்ஜெண்டினாவிடம் அவனை நாடு கடத்துமாறு நேரடியாகக் கோர முடியாது. அப்படிக் கோரினால் கத்தோலிக்க நாடான அர்ஜெண்டைனா அப்படி ஒரு ஆளே அங்கு இல்லை என்று எளிதாக மறுத்து விடும். இந்தியா இப்பொழுது தாவூத் இப்ராஹிமை ஒப்புவிக்கச் சொல்லி பாக்கிஸ்தானிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருப்பது போல, அபு சலீமை நாடு கடத்தக் கோரி போர்ச்சுக்கல் கோர்ட்டுக்களில் கெஞ்சிக் கொண்டிருந்தது போல மிக எளிதாக புதிய சிறிய நாடான இஸ்ரேலை ஏமாற்றி விடுவார்கள்.

அப்படி முறையாக கோரிக்கை வைப்பதில் எந்தவித பயனுமில்லை என்பதை நன்கு உணர்ந்த இஸ்ரேலியப் பிரதமர் அந்த வழியில் செல்லக் கூட முயற்சிப்பதில்லை. தனது திறமையான உளவுப் படையின் தலைவரிடம் மட்டுமே அவனை உயிருடன் பிடித்து வரும் பணியை ஒப்படைக்கிறார். அப்படிப் போய்க் கெஞ்சுவதற்கும் ஏமாறுவதற்கு இஸ்ரேல் ஒன்றும் முதுகெலும்பில்லாத இந்தியா அல்ல பென் குரியனும் மண்புழு மன்மோகன் சிங் அல்ல. அவர்கள் தெளிவாக முடிவெடுக்கிறார்கள். மயிலே மயிலே என்றால் மயில் இறகு போடாது என்ற உண்மையை உணர்ந்த இஸ்ரேல் தனது ஒற்றர்கள் படை ஒன்றை அர்ஜெண்டினாவுக்கு அனுப்பி வைக்கிறது. மொசாட் குழுவினர் வர்த்தகர்கள் என்ற போர்வையில் ப்யூனஸ் ஐயர்ஸ் செல்கிறார்கள்.

தங்கள் முறைப்படி மிகத் தந்திரமாக துப்பறிந்து ஐக்மானின் வீட்டைக் கண்டு பிடிக்கிறார்கள். ஆனால் க்ளெமெண்ட் ரிக்கார்டோ என்ற பெயரில் வாழும் ஐக்மான் இடம் மாறி கரிபால்டி தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கப் பட்டிருக்கிறான். ரகசியமாக உள்ள அவனது புது விலாசத்தை மிகத் திறமையாகத் தேடிக் கண்டு பிடிக்கிறார்கள். கண்டு பிடித்து அது அவன் தான் என்பதை உறுதி செய்கிறார்கள். அதன் படி அடுத்தக் கட்ட நடவடிக்கைத் தொடங்குகிறது.

அர்ஜெண்டினா நாட்டின் 150வது சுதந்திர தினத்தில் பங்கு கொள்ள இஸ்ரேலியக் குழுவை அனுப்புமாறு தற்செயலாக பென் குரியனுக்கு வரும் ஒரு கடிதத்தைப் பயன் படுத்திக் கொண்டு இன்னொரு குழுவை இஸ்ரேல் விமானத்தில் அனுப்பி வைக்கிறார்கள். திட்டமிட்டபடி ஐக்மேன் கடத்தப் பட்டு ஆள்மாறாட்டம் செய்யப் பட்டு அந்த விமானம் மூலமாக பல அதிரடி சாகசங்களைச் செய்து அர்ஜெண்டினா போலீஸிடம் இருந்து தப்பி இஸ்ரேல் கொணர்ந்து சேர்க்கிறார்கள் அதன் பின் அவன் விசாரிக்கப் பட்டு 1962ம் வருடம் மரண தண்டனை அளிக்கப் படுகிறது. இவை அனைத்தும் 1959-62 வரை நடந்த உண்மைச் சம்பவங்களே. மிகத் தத்ரூபமாக நாவலின் அடிப்படையில் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.

(தொடரும்)

25 Replies to “கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1”

 1. திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறீர்கள். அறிமுகத்துக்கு நன்றி!

 2. ஐக்மேன் பற்றி இப்போது தான் மொசாட் என்ற மருதனின் நாவலில் படித்தேன். இங்கு பார்க்கையில் ஆச்சரியம்.

  அதுசரி, என் எப்ப பார்த்தாலும் இஸ்ரேல்லுடனேயே ஒப்பிடுகிறீர்கள்?

 3. ஒரு இனத்தை அழித்து அதில் வளர முயழும் எந்த ஒரு இனமும் தலைத்ததாக வரலாறு இல்லை.

  இந்திய நாட்டிற்குள்ளேயே இன படுகொலை புரிந்து, பல ஆயிர கணக்கானவர்களை கொன்று விட்டு இனனமும் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருபபவர்கலையே இந்த அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லையே?

 4. //இந்திய நாட்டிற்குள்ளேயே இன படுகொலை புரிந்து, பல ஆயிர கணக்கானவர்களை கொன்று விட்டு இனனமும் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருபபவர்கலையே இந்த அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லையே?-சிகந்தர்//
  அப்படி எதுவும் ஹிந்துஸ்தானத்தில் நிகழ்ந்துவிடவில்லை என்றாலும் இவர் எதை நினைத்து அவலை இடிக்கிறார்? இங்கே இனம் என்பதாக ஒன்று இருக்குமானால் அது பாரதியர் என்ற இனமாகத்தான் இருக்க முடியும். நம் நாட்டினரை மத அடிப்படையில் இவர் தனித் தனி இனங்களாகக் காண்கிறார் என்றால் இவர் தனது இனத்தின் பிரகாரம் இருக்க வேண்டியது இங்கல்ல!

 5. நீங்கள் சொல்ல வருவது என்ன? மத அடிப்படையில் கொலை செய்தால் அது குற்றம் இல்லையா?

 6. “ஒரு இனத்தை அழித்து அதில் வளர முயழும் எந்த ஒரு இனமும் தலைத்ததாக வரலாறு இல்லை”

  அப்படி மற்ற இனங்களை கடந்த 800 ஆண்டுகளாக அழித்து, இன்று சிறப்பாக அழிந்து கொண்டு இருக்கும் நாடுகளில் பின் வரும் நாடுகள் முதன்மையான முன்று இடத்தை பிடித்துள்ளன ,அவையாவன பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ! பெட்ரோலியம் எனும் எரிபொருள் தீர்ந்தவுடன் இன்னும் பலநாடுகள் மற்ற இனங்களை கடந்த காலத்தில் அழித்துள்ளதால்,அழிவை சந்திக்கும் என்பதிலும் எந்த ஐயமும் இல்லை.

  பிரதீப் பெருமாள்

 7. சிக்கந்தர்……..

  // இந்திய நாட்டிற்குள்ளேயே இன படுகொலை புரிந்து, பல ஆயிர கணக்கானவர்களை கொன்று விட்டு இனனமும் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருபபவர்கலையே இந்த அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லையே?//

  நீங்கள் குறிப்பிடுவது இந்திரா காந்தி படுகொலையை தொடர்ந்து [ திட்டமிட்டு ]நடத்தப்பட்ட சீக்கிய இனப்படுகொலையை நிகழ்த்திய காங்கிரஸ் கட்சியைத்தானே? ……… உங்கள் வருத்தம் நியாயமானது…….

 8. “நீங்கள் சொல்ல வருவது என்ன? மத அடிப்படையில் கொலை செய்தால் அது குற்றம் இல்லையா?”

  சத்தியமாக நாங்கள் (ஹிந்துக்கள்) அப்படி சொல்லவில்லை! சிக்கந்தர்…!! நீங்கள் முஸ்லிமாக இருந்தால் உங்கள் மதம் அப்படிதான் என்று சொல்வதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.. உங்கள் முஸ்லிம் சகோதரர்கள் சொல்வதை படியுங்கள்…

  “Democracy is among the menaces we inherited from an alien government. It is part of the system we are fighting against… It is not possible to work within a democracy and establish an Islamic system… If Allah gives us a chance, we will try to bring in the pure concept of an Islamic Caliphate.”

  “The notion of the sovereignty of the people is anti-Islamic. Only Allah is sovereign.”

  Hafiz Mohammad Saeed, the leader of the Lashkar-e-Toiba terrorist organization.

  Yes! We – the terrorists of India – THE INDIAN MUJAHIDEEN, – the militia of Islam whose each and every Mujahid belongs to this very soil of India – have returned, to execute the compulsion of Allah:

  “Fight them (the disbelievers), Allah will punish them by your hands and bring them to disgrace, and give you victory over them and He will heal the hearts of those who believe.” (Qur’an 9:14).

  Here we begin … raising the illustrious banner of Jihad against the Hindus and all those who fight and resist us…

  All Praise and Glory be to Allah, Who Alone Helps His slaves, Who Alone Fulfils His Promise, and Who Alone Defeats the enemy….

  While hoping for the Help and Victory from Allah we declare that such and more severe attacks shall continue irrespective of what the blamers blame us for.

  The hosts (of the Kafir) will all be routed and will turn and flee. [Qur’an 54: 45].

  We ask Allah to forgive us and Have Mercy on us and Aid us to conquer the unbelievers and Guide us to raise His Word and degrade His enemies with His Will Alone.
  And peace be upon His Messenger, and all those who follow the Guidance.

  The Indian Mujahideen, claiming credit for a brutal series of bombings that left dozens of civilians dead and hundreds more in agony.

  தமிழில் வேண்டுமா? உங்கள் உலகளாவிய வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்ற தயாராய் இருக்கிறோம்.

 9. இஸ்ரேலின் மனத்திண்மை நமக்கு இருந்திருந்தால் பாகிஸ்தான் எப்பவோ பாரதத்தின் காலை நக்கிகொண்டிருக்கும். இல்லாத ஒன்றை கனவு காணவாவது நமக்கு உரிமை உண்டு.

 10. எவனாவது ஒரு மடையன் புனித இஸ்லாத்தை பற்றி எதாவது உளறி இருந்தால்
  அதை பற்றி நங்கள் ஏன் அலட்டி கொள்ள வேண்டும்?
  ஒரு ஜேப்படி திருடன் முஸ்லிமாக இருந்தால் அவனை அந்த மதத்தோடும், சமூகத்தோடும் தொடர்பு படுத்தி பார்க்கும் உங்களை போன்றவர்கள் இருக்கும் பொழுது இந்த நாட்டின் ஆட்சி எப்படி இருக்கும்?
  இந்த அடிப்படை உண்மை கூட புரியாத நீங்கள் எதை தண்டவாளத்தில் எற்றா தயாராக இருக்குறீர்கள்?

 11. //நீங்கள் சொல்ல வருவது என்ன? மத அடிப்படையில் கொலை செய்தால் அது குற்றம் இல்லையா?-சிகந்தர்//
  நீங்கள் இனம் என்று குறிப்பிட்டுச் சொல்ல வந்தது எந்த இனத்தை? அப்படியொரு தனி இனம் இந்த நாட்டில் இருக்குமானால் அதற்கு இங்கு இடம் இல்லை என்கிறேன். மத அடிப்படையில் கொலை செய்தால் அது குற்றம் இல்லையா என்று அப்பாவிபோல் என்னிடம் கேட்க வேண்டிய அவசியம் என்ன? மத அடிப்படையில் மாற்று மதத்தவரைக் கொன்று குவிப்பதை நியாயப்படுத்துவதோடு பாராட்டிக் கொண்டாடும் ஆவணங்கள் சுல்தான்கள், நவாபுகள், மொகலாயப் பேரரசர்களின் சாகசங்களாகப் ஏராளமாகப் பதிவாகியுள்ளனவே! மாற்று மதத்வரை மதம் மாற மறுக்கும் பட்சத்தில் கொன்றுவிடுவதை ஒரு சமயக் கடமையாக வலியுறுத்தும் மத நூலும் அவர்களின் அன்றாடப் பாராயணத்திற்குப் பயன்பட்டு வந்ததே! இன்றுவரை மத அடிப்படையில் மாற்று மதத்தினரைக் கொலை செய்வதை சமயக் கடமையாக அனுசரித்து வருபவர்கள் யார்?
  -மலர்மன்னன்

 12. மதத்தின் பெயரால் அப்பாவிக் மக்களை கோழைத்தனமாக குண்டு வெடிக்கச் செய்து கொல்வதும், பொது மக்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு தங்கள் மத நூல் வாசகங்களை ஒப்பிக்குமாறு வற்புறுத்துவதும், தங்களுடைய வழக்கப்படி வழிபாடு செய்யுமாறு துப்பாக்கி முனையில் கட்டாயப்படுத்துவதும் யார்? தங்கள் மதத்தினரிலேயே இன்னொரு பிரிவினர் வழிபாடு செய்யும் நேரத்தில் அவர்களின் வழிபாட்டுத் தலத்தில் குண்டு வீசிக் கொத்தாக உயிர் பலி வாங்குவதும் யார்? இதோ, இங்கே சென்னையில் தன் ஆசிரியை உமா மஹேஸ்வரி உங்கள் மகன் சரியாகப் படிப்பதில்லை என்று பெற்றோருக்குத் தகவல் அளித்த கடமைக்காகப் பட்டப் பகலில் வகுப்பறையிலேயே அந்த ஆசிரியரைக் கத்தியால் விடாமல் குத்திப் படுகொலைசெய்து விட்டான் முகமது இக்பால் என்கிற பதினைந்து வயதுச் சிறுவன். அதற்காக அவனது மதத்தை யாரும் குறை கூறிவிடப் போவதில்லை. ஆனாலும் வெறித்தனமான வன்முறைக்கு அவன் துணிந்தது எப்படி என்பதை யோசிக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால் மதத்தின் பெயரால் மதத்திற்காக மாற்று மதத்தினர் மீது மறைந்திருந்து கொல்லும் பயங்கர வாதத்திற்கு அந்த மதத்தின் தலைவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். ஆனால் அவர்களே மதத்தின் பெயாரால் தலையைக் கொய்யும் ஃபத்வா விடுப்பவர்களாகத்தானே இருக்கிறார்கள்!
  -மலர்மன்னன்

 13. மதத்தின் பெயரால் பயங்கர வாதத்தில் ஈடுபடுவோரைத் தமது மதத்திலிருந்து விலக்கி வைப்பதாக இதுவரை ஃபத்வா எதுவும் வந்ததுண்டா? பயங்கர வாதத்திற்கு சப்பைக்கட்டுக் கட்டுகிற வேலைதானே நடக்கிறது? குரானையும் பழைய, புதிய ஏற்பாடு விவிலியத்தையும் முழுமையாகவும், ஆழ்ந்தும் படித்துவிட்டுத்தான் அந்த மதங்களைப் பற்றிப் பேச முன்வருவது எனது நடைமுறை. குரான் வாசகங்கள் அவ்வப்போது செளகரியப்படும்போது சொல்லப்பட்டவைதாம். ஆரம்ப நிலையில் ஆதரவு இல்லாத தருணத்தில் மிகுந்த சமரச உணர்வோடு வெளிப்பட்ட வாசகங்களை இப்போது எடுத்துக் காட்டுவதில் பயனில்லை. ஆதரவு அதிகரித்துக் கரம் வலுப் பெற்ற பிறகு வெளிப்பட்ட வாசகங்கள் எப்படிப்பட்டவை என்பதை யோசிக்க வேண்டும்.
  -மலர்மன்னன்

 14. //நீங்கள் சொல்ல வருவது என்ன? மத அடிப்படையில் கொலை செய்தால் அது குற்றம் இல்லையா?-சிகந்தர்//

  \\\\நீங்கள் இனம் என்று குறிப்பிட்டுச் சொல்ல வந்தது எந்த இனத்தை? அப்படியொரு தனி இனம் இந்த நாட்டில் இருக்குமானால் அதற்கு இங்கு இடம் இல்லை என்கிறேன்.\\\\ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர்

  தமிழன் என்பவர் யார் என சான்றிதழ் அளிக்கும் உரிமை கழகக் கண்மணிகளுக்கு உள்ளது. அதே போல் இனம் என்பது என்ன என்ற சான்றிதழ் அளிக்கும் உரிமை செகுலர் வாதிகளுக்கும் அவர்களின் ஆதரவில் அவர்கள் வால் பிடித்துக் கொண்டிருக்கும் இடதுசாரி சக்திகளுக்கும் மற்றும் ஆப்ரஹாமியருகுமான தனியுரிமை. இனம் என்றால் என்ன கொலை என்றால் என்ன யார் யாரை கொலை செய்யலாம் என்பதை இவர்கள் விளக்குவது அதீதமாய் இருக்கும். இது சம்பந்தமான நகைச்சுவை விவாதங்களை (முன்னேற்பாடு செய்யப்பட்ட விவாதங்களை) ஆங்க்ல தொலைக்காட்சி சேனல்களில் பார்க்கலாம்.

  மேல் விபரம் அறிய விழைபவருக்கு ஒரு உதாரணம் கர்கில் யுத்த சமயத்தில் நட்வாட்-உல்-உலேமா-இ-ஹிந்த் (தேவ்பந்தி வஹாபி இஸ்லாமிய பல்கலை) என்ற இஸ்லாமிய படிப்பகத்தைச் சார்ந்த இஸ்லாமிய அறிஞர் அலி மியான் (அபு ஹஸன் அலி ஹஸன் நத்வி) முஸல்மான்கள் (சுன்னி முஸல்மான்கள் என கொள்ளவும்) ஹிந்துஸ்தானிய சேனை யுத்தத்தில் வெற்றி பெற ப்ரார்த்தனை செய்ய வேணுமா என்பதற்கு தெரிவித்த அபிப்ராயம் கீழே.

  கர்கில் யுத்தத்தில் அதிக அளவு பாதிக்கப் பட்டவர்கள் ஷியா முஸல்மான்கள். ஹிந்துஸ்தானிய சேனைக்கு கர்கில் யுத்தத்தின் போது த்ராஸ் மற்றும் கர்கில் பகுதிகளில் தேச பக்தியுடன் உபகாரங்கள் பல செய்தவர் கர்கில் மற்றும் த்ராஸ் பகுதிகளைச் சார்ந்த ஷியா முஸல்மான்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஷியா சுன்னி முஸல்மான்களின் பரஸ்பர வெறுப்போ அல்லது சுன்னி முஸல்மான்களின் தேச பக்தியை குறை சொல்வதோ எனது அபிப்ராயமன்று. மாறாக தேசத்துக்கு தொண்டு செய்யும் சுன்னி முஸல்மான்களை மற்ற ஹிந்துஸ்தானியர் போன்று போற்றவே செய்வோம். பின்னிட்டும் ஹிந்துஸ்தானத்தின் தேவ்பந்த் சுன்னி பிரிவைச் சார்ந்த உலக முழுதும் ப்ரக்யாதி வாய்ந்த சுன்னி முஸல்மான் அறிஞர் அவரது கருத்து என்ன என்பது கீழே. அபிப்ராயங்களை வாசிப்பவர்கள் அவதானிக்கலாம்.

  the report in THE HINDU also mentions “A suggestion to pray for
  the victory of Indian forces fighting in Kargil was also turned down by
  Ali Mian at the congregation. According to some participants, Muslim
  clerics were prepared to pray for the well being of the country but they
  had reservations about holding prayers for the well-being of the Indian
  soldiers who were fighting militants in an action of Jehad (battle of
  religion). To pray for soldiers would mean to pray for the defeat of
  Jehadis was the argument given, sources said. A section of the Shia
  community has interpreted the developments quite differently. A majority
  of the people affected by the Kargil conflict belong to the Shia
  community. To refuse to pray for the victory of Indian soldiers may be
  due to setarian feelings among Shias and Sunnis in Lucknow, Shia leaders
  felt”

  concluded THE HINDU report.

  (For a full reading please see Page 15 THE HINDU dt 30th June 1999
  ======================================================================

 15. மலர்மன்னன் சார்,
  நான் இனம் என்று சொன்னது எந்த இனத்தையும் குறிப்பிட்டு அல்ல. அது ஒரு பொதுவான கருத்து. பதிக்கப்பட எந்த ஒரு இனத்திற்கும், மதத்தினருக்கும், மொழியினருக்கும் பொருந்தும்.

  மதத்தின் பெயரால் அப்பாவிகளை கொன்று குவிக்கும் எவரையும் இஸ்லாம் அங்கீகரிப்பது இல்லை. ஒரு குண்டு வெடிப்பைப் பற்றி கேள்விப் படும் பொழுது உங்களுக்கு என்ன உணர்ச்சி எழுமோ அதே உணர்ச்சி தான் நாங்களும் அடைகிறோம்.

  நபிகள் நாயகத்தை நங்கள் உயிரினும் மேலாக நேசிப்பவர்கள் என்று அறிந்து இருப்பிர்கள். அவர்கள் காட்டியதுதான் எங்களுக்கு வழி.

  அவர்கள் சொல்கிறார்கள் ” அண்டை வீட்டுக் காரணுக்கு தொல்லை தருபவன் எம்மை சேர்த்தவன் இல்லை.” மேலும் ” படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும், அவற்றை நேசிப்பவனே இறைவனை நேசிப்பவனாவான்.” என்றும் கூறினார்கள்.

  நபிகள் நாயகம் “அண்டை வீட்டுகார முஸ்லிம்களை மட்டும்” என்று சொல்லவில்லை. அனைவரையும் சேர்த்துதான் சொல்லி இருக்கிறார்கள். இதுதான் முஸ்லிம்களின் நிலைப்பாடு. இதை பின்பற்றாதவர்கள் முஸ்லிம்கள் இல்லை. இதற்கு ஏன் புதிய பத்வா? அதுதான் நபிகள் நாயகம் தெள்ள தெளிவாக கூறிவிட்டர்களே? இதுபோல் நாட்டில் பலரும் பல கருத்துகளைச் சொல்வார்கள். அது எல்லாம் இஸ்லாம் ஆகிவிடுமா?

  மோகலாயர்களையும், நவப்புக்களையும் ஏன் இஸ்லாத்தின் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்கிறீர்கள்? இவர்கள் இஸ்லாத்திற்கு நன்மை செய்ததை விட தீமை செய்ததுதான் அதிகம். இவர்கள் எல்லா மன்னர்களையும் போல் மன்னர்களாகத்தான் இருந்து இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வு இஸ்லாத்திற்கு உட்பட்டதாக இருக்க வில்லை. உதாரணமாக பாபர், இப்ராகிம் லோடி என்ற முஸ்லிம் மன்னரைத்தான் வென்று டில்லியில் கால் வைத்தார். தான் போரிடுவது சகோதர முஸ்லிம் என்று விட்டு விட வில்லை.

  சரி எந்த இந்து மன்னர் போரில் யாரையும் கொல்லாமல் வெற்றி பெற்றார் என்று சொல்லுங்கள் பார்போம்? அதனால் எல்லா இந்து மன்னர்களும் தீவிர வாதத்தைத் தான் வளர்த்தார்கள் என்று சொல்லமுடியுமா?

  பேப்பரில் பலவிதமான கொலைச் செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒவ்வொரு கொலை காரர்களுக்கும் அவர்கள் மதம் எவ்வாறு வெறியுட்டியது என்றா பார்கிறீர்கள்? இந்த செய்தியை ஏன் இஸ்லாத்தோடு தொடர்பு படுத்தி ஆராய்கிறீர்கள்? சட்ட சபையில் ஆபாச படம் பார்த்த மக்களின் பிரதிநீதிகளை ஏன் இந்த அளவுகோலோடு பார்க்கவில்லை?

 16. மலர்மன்னன் சார்,
  நான் இனம் என்று சொன்னது எந்த இனத்தையும் குறிப்பிட்டு அல்ல. அது ஒரு பொதுவான கருத்து. பதிக்கப்பட எந்த ஒரு இனத்திற்கும், மதத்தினருக்கும், மொழியினருக்கும் பொருந்தும்.

  மதத்தின் பெயரால் அப்பாவிகளை கொன்று குவிக்கும் எவரையும் இஸ்லாம் அங்கீகரிப்பது இல்லை. ஒரு குண்டு வெடிப்பைப் பற்றி கேள்விப் படும் பொழுது உங்களுக்கு என்ன உணர்ச்சி எழுமோ அதே உணர்ச்சி தான் நாங்களும் அடைகிறோம்.

  நபிகள் நாயகத்தை நங்கள் உயிரினும் மேலாக நேசிப்பவர்கள் என்று அறிந்து இருப்பிர்கள். அவர்கள் காட்டியதுதான் எங்களுக்கு வழி.

  அவர்கள் சொல்கிறார்கள் ” அண்டை வீட்டுக் காரணுக்கு தொல்லை தருபவன் எம்மை சேர்த்தவன் இல்லை.” மேலும் ” படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும், அவற்றை நேசிப்பவனே இறைவனை நேசிப்பவனாவான்.” என்றும் கூறினார்கள்.

  நபிகள் நாயகம் “அண்டை வீட்டுகார முஸ்லிம்களை மட்டும்” என்று சொல்லவில்லை. அனைவரையும் சேர்த்துதான் சொல்லி இருக்கிறார்கள். இதுதான் முஸ்லிம்களின் நிலைப்பாடு. இதை பின்பற்றாதவர்கள் முஸ்லிம்கள் இல்லை. இதற்கு ஏன் புதிய பத்வா? அதுதான் நபிகள் நாயகம் தெள்ள தெளிவாக கூறிவிட்டர்களே? இதுபோல் நாட்டில் பலரும் பல கருத்துகளைச் சொல்வார்கள். அது எல்லாம் இஸ்லாம் ஆகிவிடுமா?

  மோகலாயர்களையும், நவப்புக்களையும் ஏன் இஸ்லாத்தின் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்கிறீர்கள்? இவர்கள் இஸ்லாத்திற்கு நன்மை செய்ததை விட தீமை செய்ததுதான் அதிகம். இவர்கள் எல்லா மன்னர்களையும் போல் மன்னர்களாகத்தான் இருந்து இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வு இஸ்லாத்திற்கு உட்பட்டதாக இருக்க வில்லை. உதாரணமாக பாபர், இப்ராகிம் லோடி என்ற முஸ்லிம் மன்னரைத்தான் வென்று டில்லியில் கால் வைத்தார். தான் போரிடுவது சகோதர முஸ்லிம் என்று விட்டு விட வில்லை.

  சரி எந்த இந்து மன்னர் போரில் யாரையும் கொல்லாமல் வெற்றி பெற்றார் என்று சொல்லுங்கள் பார்போம்? அதனால் எல்லா இந்து மன்னர்களும் தீவிர வாதத்தைத் தான் வளர்த்தார்கள் என்று சொல்லமுடியுமா?

  பேப்பரில் பலவிதமான கொலைச் செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒவ்வொரு கொலை காரர்களுக்கும் அவர்கள் மதம் எவ்வாறு வெறியுட்டியது என்றா பார்கிறீர்கள்? இந்த செய்தியை ஏன் இஸ்லாத்தோடு தொடர்பு படுத்தி ஆராய்கிறீர்கள்? சட்ட சபையில் ஆபாச படம் பார்த்த மக்களின் பிரதிநீதிகளை ஏன் இந்த அளவுகோலோடு பார்க்கவில்லை?

 17. என் அன்புத் தம்பி ஸ்ரீ சிகந்தர்,
  உங்கள் மன உணர்வுகள் எங்களுடையது போலவே இருப்பதில் வியப்பி்ல்லை. ஏனெனில் நீங்களும் சில தலைமுறைகளுக்கு முன் ஹிந்துவாக இருந்தவர்தான். ஆனால் நீங்கள் முகமதிய மதத்திற்கே உரிய கடுமையான கட்டுப்பாட்டுத் தளையில் சிக்கி இருப்பதால் உங்களின் சிந்தனைப் போக்கு பிறழ்கிறது. முகமதிய மன்னர்கள் மாற்று மதத்தினரை வலுக்கட்டாயமாக மதம் மாற்றினார்கள். மதம் மாற மறுத்தவர்களைக் கொன்று குவித்தார்கள். மாற்று மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை எல்லாம் உடைத்து நொறுக்கினார்கள். தங்கள் மதத்தின் பெயராலும் மதத்திற்காகவும் அப்படி நடந்துகொண்டதற்கு அவர்களின் மதத் தலைவர்களே தூண்டுதலாகவும் இருந்தார்கள். அப்படியிருக்க முகமதிய மன்னர்களுடன் ஹிந்து மன்னர்களை ஒப்பிட உங்களுக்கு எப்படி மனம் வருகிறது? உங்கள் முன்னோரை இகழ எப்படித் துணிகிறீர்கள்? சரித்திரத்தை சரியாகப் படியுங்கள். சம்பந்தமில்லாததையெல்லாம் போட்டுக் குழப்பாதீர்கள். குர் ஆன் வாசகங்கள் ஒரே சமயத்தில் இறங்க வில்லை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கு ஏற்ப சொல்லப்பட்டவைதான். இதைப் புரிந்துகொள்ளுங்கள். கரம் தாழ்ந்திருந்த சமயங்களில் சொல்லப்பட்ட வாசகங்களை எடுத்துக்காட்டிப் பேசாதீர்கள். அந்த வாசகங்களுக்கு முற்றிலும் மாறான வாசகங்கள் பிற்பாடு இறங்கின என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இனத்தைப் பற்றி எனக்கு சொல்லித் தரும் அளவு அறிவுத் திறம் படைத்துள்ள நீங்கள் சிறிது நடுநிலையுடன் யோசித்துப் பாருங்கள். இங்கே நாம் மதம் சம்பந்தமான விவகரத்தைப் பேசுகையில் அதற்கு சம்பந்தமில்லாத ஏதோ மொபைல் சமாசாரங்களை எழுதும் அளவுக்கு ஏன் துவேஷத்தை வளர்த்துக் கொள்கிறீர்கள்? உலகம் முழுவதுமே முகமதியம் காலடி எடுத்து வைத்த இடங்களில் எல்லாம் பாரம்பரிய கலாசாரம், நம்பிக்கைகள், தத்துவங்கள், ஆகியவை தயை தாட்சண்யமின்றி அழிக்கப்பட்ட சரித்திரத்தை ஆழ்ந்து படியுங்கள். உங்களுக்கு சிந்தனை செய்யும், பகுத்தறியும் அறிவை இறைச் சக்தி மிகுந்த கருணையுடன் வழங்கியுள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்துங்கள். முறைகேடுகளுக்கெல்லாம் ஏதாவது ஒரு சாக்குச் சொல்வதை விட்டு அவற்றை பகிரங்கமாகக் கண்டிக்கும் துணிவைப் பெறுங்கள். உங்கள் மூதாதையர்கள் அனுசரித்த புராதனமான பண்பாட்டுச் சிறப்புடன் ஒட்டோ உறவோ இல்லாத ஒரு அத்து மீறிய அந்நிய கலாசாரத்திற்காக ஏன் இப்படி வலிந்து வக்காலத்து வாங்குகிறீர்கள்? தலையைக் கொய்வதற்கெல்லாம் ஃபத்வா வருகையில் உங்கள் வாதப்படியே உங்கள் மதத்தை துஷ்பிரயோகம் செய்யும் பயங்க வாதிகளுக்கு எதிராக ஃபத்வா வர வேண்டாமா? இதை ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள்? குர்ஆன் வாசகங்களைச் சொல்லித்தான் பயங்கரவாதிகளும் தங்கள் சமயக் கடமையை ஆற்றுவதாகச் சொல்கிறார்கள். அதற்கு உங்கள் மதத் தலைவர்கள் அதிகாரப் பூர்வமாக தண்டனை வழங்க வேண்டாமா? நம் மதத்தின் பெயரால் கொடுமைகள் செய்து நம் மதத்தின் பெயரைக் கெடுக்கிறார்கள் ஆகவே அவர்களின் தலைகளைக் கொய்வோருக்கு பரிசு பல லட்சம் என்று அறிவிக்க வேண்டாமா? யோசியுங்கள் தம்பி ஸ்ரீ சிகந்தர்.
  -மலர்மன்னன்

 18. மலர்மன்னன் சார்,
  இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியில், இந்துக்கள் என்ன கதி அடைந்தார்களோ அதே கதிதான் முஸ்லிம்களும் அடைந்தார்கள். தன் ஆட்சியை எதிர்த்த எத்தனையோ சூபி பெரியார்களை கொன்றார்கள். இவ்வளவு ஏன் தன் உடன் பிறந்த சகோதரனை அழித்துவிட்டுத் தானே ஆட்சியில் அமர்ந்தார்கள்?
  மதம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அதைத்தான் சொன்னேன் அவர்கள் வெறும் மன்னர்களாகத்தான் இருந்தார்கள் என்று. அவர்களால் இஸ்லாத்திற்கு எந்த நன்மையையும் இல்லை. இதையேத்தான் அனைத்து மன்னர்களும் செய்து இருக்கிறார்கள். நரசிம்ஹ வர்ம பல்லவனுக்கு “வாதாபி கொண்டான்” என்று பட்ட பெயர் உண்டு. இரண்டாம் புலிகேசியை விரட்டிச் சென்று வீழ்த்தி வாதாபி நகரையும் தீயிட்டு அளித்தான். தன் மதத்தைச் சேர்ந்தவன் என்று விட்டுக் கொடுக்க வில்லை. தன் ஆட்சியைக் காக்க என்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்தான். இதை யாரும் இன வெறியாகவோ, மத வெறியாகவோ பார்க்கவில்லை. ஆனால் முஸ்லிம் மன்னர்களின் செயலை மட்டும் எதற்க்கு இன்றைய இஸ்லாமியர்கொளோடு தொடர்பு படுத்தி அவர்கள் மேல் வெறுப்பை வளர்க்க வேண்டும்? இதனால் தேச ஒற்றுமை எவ்வாறு வளரும்? இத்தகைய சிந்தனையால் ஹிந்து அல்லாத மாற்று மதத்தினர் மேல் வெறுப்பும் அதனால் குழப்பங்களும் தான் மிஞ்சும்.

  திருக்குரான் ஒரே சமயத்தில் இறங்க வில்லை. ஒரு சிறு குழுவினர் முற்றிலும் புதிய கொள்கையை ஏற்றிருக்கும் பொழுது அப்பொழுது இறங்கிய வசனங்கள் அந்த நம்பிக்கையை பலபடுத்தும் விதமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர போரில் கிடைத்த பொருள்களை எப்படி பங்கிட வேண்டும் என்றா இருக்க முடியும்? பின்பு நம்பிக்கை பலமடைந்தவுடன், மக்கள் கூட்டம் பெருக, வழிகாட்டுதல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. அதனால் முன்பு இறங்கிய வசனங்கள் எல்லாம் செல்லாதவை ஆகிவிடவில்லை. நபிகள் நாயகம் முன்பு இறங்கிய வசனங்களை எல்லாம் விட்டுவிட சொல்ல வில்லை.

  ஹிந்து மதத்தில் முன்பு இருந்த பல முட பழக்க வழக்கங்கள் இன்று இல்லை. இதை பண்பாட்டின் முதிர்ச்சி என்பிர்களா அல்லது பண்பாட்டின் அழிவு என்பிர்களா? இஸ்லாம் ஒரு வாழ்வியல் நெறி. மக்களிடம் நிலவிய பல மூட பழக்க வழக்கங்களை அகற்றி மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டுகிறது. அறிவுக்கு நெருக்கமான அதன் கருத்துக்கள் எங்களுக்கு பிடித்திருக்கிறது அதனால் அதை வாழ்வியல் நெறியாக ஏற்று கொண்டோம். ஒவ்வொரு மனிதனும் “ethics” பற்றி ஒரு கருத்து இருக்கும். இஸ்லாம் எங்கள் “ethics”க்கிற்கு எற்றதாக இருக்கிறது அதனால் அதை பின்பற்றுகிறோம். இது பண்பாட்டின் முதிர்ச்சியே தவிர அழிவில்லை.

 19. சிக்கந்தர், நீங்கள் மோடியைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மோடி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மிடில் ஈஸ்ட் என படையெடுத்து அந்த் மக்களை கொலை, கொள்ளை , கற்பழிப்பு என நாசம் செய்யவில்லை – மதம் என்ற போர்வையில். அவர் இந்த தேசத்தின் பாதுகாவலர், எங்களின் வீரம்.. எங்களின் கைகள்… எங்களின் ஒரே நம்பிக்கை. அவரை விமர்சிப்பவர்கள் ஒன்று கோழைகள் இல்லை எட்டப்பர்கள் இல்லை விலை போனர்வர்கள்

 20. சிகந்தர் கூறுவதில் ஒன்று உண்மை, மன்னர்கள் மன்னர்களாகத்தான் இருந்துள்ளனர். முகலாய மன்னர்களும் முகமதியர்களை கொலை செய்துள்ளனர். அதே சமயம் அவர்கள் இஸ்லாமியர்களை கொன்றது எல்லாம் அரசியல் காரணங்களுக்காக, இந்துக்களை கொன்றது எல்லாம் மத காரணங்களுக்காக. இங்கு இணையத்தில் எழுதும் இஸ்லாமியர்களின் பெரும்பான்மையினர், மோடி என்பவர் கொலைகாரர், இந்தியாவில் முஸ்லீம்கள் பரிதாபமான நிலையில் உள்ளனர், நியாயம் கிடைக்கவில்லை என்று புலம்புவதுதான் ஆச்சரியமாக உள்ளது. நிஜமாகவே இவர்கள் தெரிந்து உளறுகின்றார்களா? மனதளவில் அவ்வாறு நம்ப வைக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனரா?

 21. நண்பர் சிக்கந்தர் நீங்கள் சொல்வதை பார்த்தால் இந்தியாவுல உண்மையான முஸ்லிம்1 சதவிகிதம் கூட தேறமாட்டார்கள் போல உள்ளதே. இந்தியாவுல இருக்கிற 99 சதவிகித முஸ்லிம்கள், முஸ்லிம்களே இல்லையா? அவர்கள் ஹிந்து மதத்தின் எச்சமா?

  அப்படி இல்லையென்றால்,யாரோ ஒரு அரேபியன் சொல்லிய இறை வசனங்களை தங்கள் சுயநலனுக்காக பயன்படுத்தி அப்பாவி ஹிந்துக்களை மிரட்டி பயமுறுத்தி வாழ்ந்து கொண்டு இருக்கிறவர்கள் தான் அதிகமாக இருகிறார்கள் என்பதை நீங்கள் சொல்லிய கருத்தின் முலம் நாங்கள் புரிந்துகொள்ளலாமா?

  “மோகலாயர்களையும், நவப்புக்களையும் ஏன் இஸ்லாத்தின் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்கிறீர்கள்?”

  அப்படி என்றால் யார் உண்மையான முஸ்லிம்களின் பிரதிநிதிகள்? எங்களுக்கு தெரிந்த ஒரு நபரை காட்டி அவர் தான் உண்மையான முஸ்லிம் என்று நீங்கள் யாரை சொல்ல முடியும்? முஹம்மது அவர்களை காட்டி அவர் தான் உண்மையான முஸ்லிம் என்று சொல்லவேண்டாம்.அவர் எங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாதவர்.அவர் எப்படி இறை வசனங்களை சொன்னார் என்பது இது வரை புரியாத புதிராகவே உள்ளது.

  இந்தியாவில் பிறந்து இன்று இஸ்லாமின் அமைதியை உள்ளது உள்ளபடியே,கொஞ்சமும் சுயநலம் இல்லாமல்,சமுக நல் இணக்கத்துக்காக போராடும், தான் சார்ந்து இருக்கிற அல்லது தன்னை சார்ந்து இருக்கிற மதத்தை பெரிதாக எண்ணாமல் மனிதமே பெரிது என்று என்னும் ஒரு முஸ்லிம் நபரை காட்டுங்கள். நாளையே நான் முஸ்லிமாக மாறத் தயார்.

  சட்ட சபையில் ஆபாச படம் பார்த்தவர்களின் பதவி பறிபோனது இந்த முஸ்லிம் நண்பருக்கு ஏன் மண்டையில் ஏறவில்லை.ஆபாச படம் பார்த்தது தவறு என்று உடனே நிருபணம் ஆகவில்லையா? ஆபாச படம் பார்த்த குற்றத்திற்கு அவர்களுக்கு உடனே மரணதண்டனை விதிக்கவேண்டும் என்று இந்த நண்பர் எண்ணுகிறாரா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

  அதே சமயம் முஸ்லிம்கள் முன்றோ அல்லது நான்கோ கல்யாணம் பண்ணலாம் என்று இறை வசனம் இறங்கி இருக்கும் போது முஹம்மது மட்டும் நான்கு மனைவியர் உயிருடன் இருக்கும் போதே மேலும் ஆறு மனைவியரை திருமணம் செய்தது ஏன்? ஏன் இவர் மனைவியர் மட்டும் இவர் மறித்தவுடன் மறுமணம் செய்து கொள்ள இவர் அனுமதித்து இருக்கவில்லை? ஏன் அந்த பெண்களுக்கு மட்டும் ரலி என்ற பதவி? இந்த உண்மையான முஸ்லிம் சிக்கந்தரின் அளவு கோலுக்கு ஏன் இதுவெல்லாம் தெரியவில்லை?

  இஸ்லாம் சொல்லும் சொர்க்கம் என்றால் என்ன என்பதை ஏன் இங்கே இவர்கள் வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள்? எது இவர்களை அதை சொல்ல தடுக்கிறது?

  எனக்கு சொர்கமும் (ஜன்னத்) வேண்டாம், நரகமும் வேண்டாம்,இந்த பூமியும் வேண்டாம் என்று நான் நினைக்கும்போது எனக்காக கருணையும் அன்பும் மிக்க அல்லா எந்த திட்டத்தை வைத்துள்ளார் என்பதை ஏன் இந்த உண்மையான முஸ்லிம்கள் சொல்ல மறுக்கிறார்கள்? அதை குறித்து அல்லா ஒரு வசனத்தையும் இறக்கி இருக்கவில்லையா? ஏன் இரண்டில் ஒன்றை ஏற்று கொள்ளத்தான் வேண்டும் இல்லையேல் நீ இறை நம்பிக்கை இல்லாதவன் என்று குரான் சொல்லவேண்டும்?

 22. “அவரை விமர்சிப்பவர்கள் ஒன்று கோழைகள் இல்லை எட்டப்பர்கள் இல்லை விலை போனர்வர்கள்”

  அது ஏன் எட்டப்பன் மட்டும் உங்களுக்கு இளக்காரம்? பர்வேசு முசரபுன்னு சொல்லுங்க? சவுதி ராஜான்னு சொல்லுங்க?

 23. Sikenthar,

  how could you say HIndusam had superstitions.Then ,are you damnsure Islam is free from superstitions.

  Here,Arvuselvan clearly said about Mohammed. Islam is just religion of Arabs. thatsall. Why ,non-Arab people need to follow this religon.
  Mohammed while interacting with polytheist Arabs, he clearly said that he brought new way in order to create dominance of Arabs over other races.
  If it is Global religion, why need people necessary going to kaba which is in saudi-Arabia. why Mohammed is last prophet of Islam. why, people of India put unnessary arab names. Why Allah is arabi wording denoting Almighty.

 24. அன்பார்ந்த ஸ்ரீ மயில்வாகனன்,

  பெயர் எழுதும்போதே மனதில் நிறைவு வருகிறது.

  நான் தங்களது கருத்தில் இருந்து மாறுபட்டது போட்டிக்காக செய்யப்பட்ட 108 போற்றி பற்றி மட்டும் தான்.

  அருளாளர்களால் அருளப்பட்ட திருப்புகழ், நாலாயிரம், திருமுறை இவற்றினைப் போல யாரோ செய்த 108 போற்றிகள் இறைவனுடைய பேரருளால் அனுபவத்தை சொல்லும் நூற்கள் இல்லை தான். என்றாலும், போட்டிக்காக செய்யப்பட்டிருப்பினும் இறைவனுடைய நாமங்களால் தொகுக்கப்பட்ட நாமாவளி என்ற படியால் அதுவும் மனதிற்கு நிறைவையே தரும் என்பதையே நான் சொல்ல வந்தது. இறைவன் நாமங்களை உள்ளடக்கியவை என்பதால் அதைக்கூட நாம் நிறைவாகவே போற்றுவோமே என்று தான் சொல்லியுள்ளேன்.

  \\\\\“திருப்புகழ் உள்ளிட்ட அருள் நூல்களில் பயின்று வந்துள்ள சொற்றொடர்களைப் பயன்படுத்தி 108 போற்றிகள் சொல்வது தவறு” என நான் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை ஐயா.\\\\

  அன்பரே ஆம் தாங்கள் அப்படிக் கூறவில்லை. பல முருகன் ஆலயங்களில் தமிழ் அர்ச்சனையில் நான் கேட்டு மகிழ்ந்தது திருப்புகழ்ப்பாமாலைகளில் இருந்து தொடுக்கப்பட்ட நாமாவளி. முருகா போற்றி மால்மருகா போற்றி என்று நாமாவளி அர்ச்சனையாக செய்யப்பட்டால் முருகன் மட்டும் நினைவில் வருகிறான். ஆனால் திருப்புகழால் தொடுக்கப்பட்ட நாமாவளி என்றால் மனது முருகனை மட்டுமின்றி வள்ளல் அருணகிரிப்பெருமானையும் நினைவூட்டுகிறதே. இரட்டிப்பாக இறைவனையும் இறைவனடியாரையும் ஒருங்கே நினைவுறும் பாக்யம். அவ்வளவே

  மொழிகள் பற்றி மதிப்புக் குறைவாக வித்யாசங்கள் தொனிக்க கருத்து எழுதியமையை சுட்டியது ஜெனாப் சுவனப்ரியன் அவர்கள் பக்ஷத்தில் அதுவும் அவர் மற்ற ஆப்ரஹாமியர் போலன்றி சற்று கண்யத்துடன் கருத்துப் பரிவர்த்தனம் செய்கிறார் என்பதால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *