மண்குடமும் பொன்குடமும்

அண்மையில் குஜராத் மாநிலத்தில் 2002-ஆம் ஆண்டு நடந்த வகுப்புக் கலவரம் தொடர்பாக அம்மாநில முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு   28 ஆண்டு சிறைதண்டனை உள்பட 29 பேருக்கு கடும் தண்டனைகளை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.

2002-ஆம் ஆண்டு, பிப்ரவரி 27-ஆம் தேதி, குஜராத் மாநிலம், கோத்ரா ரயில்நிலையத்தில் கரசேவகர்கள் சென்ற சபர்மதி ரயிலின் பெட்டி எரிக்கப்பட்டது. அதில் 56 கரசேவகர்கள் பலியாகினர். அதையடுத்து நடந்த வகுப்புக் கலவரங்களில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர். கோத்ரா சம்பவத்தின் எதிரொலியாக நடந்த இந்தக் கலவரங்களில் சிறுபான்மையினர் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மீது அவதூறுப் பிரசாரம் செய்வோர் இன்றும் கூறிவரும் குற்றச்சாட்டு இந்த மதக் கலவரம்தான்.

‘இந்தக் கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது; பாஜகவினரும் உள்ளூர் ஹிந்து அமைப்பினரும் இஸ்லாமியரை வேட்டையாடவிட்டு அரசு வேடிக்கை பார்த்தது; காவல் துறையினரின் கரங்கள் கட்டப்பட்டிருந்தன’ – என்றெல்லாம் இன்றும் கூறப்படுகிறது. அந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறிய எந்த ஊடகங்களும், தற்போதைய இந்தத் தீர்ப்பை அடுத்து குஜராத் மாநிலத்தின் குற்றவியல் விசாரணை சட்ட நடைமுறை குறித்துப் பேசவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

சமுதாயம் அமைதியாக  இருக்க வேண்டுமானால், குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். இதற்காகவே நாம் சட்டங்களை உருவாக்கி இருக்கிறோம். உரிமையியல் சட்டங்கள், குற்றவியல் சட்டங்கள் போன்றவை சமுதாயத்தை கட்டுப்படுத்துபவை. (இதிலும் கூட உரிமையியல் துறையில் இஸ்லாமியர்கள் ஷரியத்- தனிச் சட்டம் வைத்திருக்கிறார்கள்). இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் கடமை. ஆனால், நமது நாட்டில் ஆளும்கட்சிகளுக்கு ஆதரவாக நமது குற்றவியல் விசாரணை நடைமுறைகளும், நீதிமன்ற விசாரணைகளும் நடைபெறுவதையே காண்கிறோம்.    பல உதாரணங்கள் கூறலாம்.

மதுரையில் பட்டப்பகலில் ஒரு கும்பல்  தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் நுழைந்து தீயிட்டுக் கொளுத்தியதில் இருவர் உயிரிழந்தனர். அந்த வழக்கில் முன்னாள் துணை மேயர் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன? கண் முன் நடந்த இந்த வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டடனர். அப்படியானால், தினகரன் அலுவலகம் தானே தன்னை எரித்துக்கொண்டதா?

1984-இல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய கலவரங்களில் சீக்கியர்கள் 2700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் (20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் புள்ளிவிபரம் உண்டு). இதில் குற்றவாளிகளாக விசாரணை ஆணையங்களால் சுட்டிக்காட்டப்பட்ட ஜெகதீஷ் டைட்லர், ஹெச்.கே.எல்.பகத், சஞ்சன் குமார் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்பட்டார்களா?    மார்வா விசாரணை ஆணையம், மிஸ்ரா விசாரணை ஆணையம், கபூர் மிட்டல் விசாரணைக்குழு, ஜெயின் பானர்ஜி விசாரணைக்குழு, பொட்டி ரோஸா விசாரணைக்குழு, ஜெயின் அகர்வால் விசாரணைக்குழு, அஹுஜா விசாரணைக்குழு, தில்லான் விசாரணைக்குழு, நாருலா விசாரணைக்குழு, நானாவதி விசாரணை ஆணையம் உள்பட எத்தனை விசாரணைக் குழுக்கள் சீக்கியருக்கு எதிரான கலவரங்களை விசாரித்தன! இக்குழுக்கள் அனைத்துமே பெருவாரியாக சொன்ன உண்மை, காவல்துறையின் ஒத்துழைப்பில்லாமல் நாடு முழுவதும் நான்கு நாட்களில் ஆயிரக் கணக்கானோர் பயங்கரமாக கொல்லப்பட்டிருக்க முடியாது என்பதுதான். தவிர கலவரத்தைப் பின்னிருந்து இயக்கிய காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டது.

அதே சமயம், கடந்த 2007-இல் ஜெகதீஷ் டைட்லர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று கூறி அவர் மீதான வழக்குகளை சி.பி.ஐ கைவிட்டது. சீக்கியருக்கு எதிரான கலவரங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் சாதாரண பாமரர்களே  ஒழிய காங்கிரஸ் தலைவர்கள் அல்ல. ஏனெனில், “ஒரு பெரிய ஆலமரம் வீழும்போது, அருகிலிருக்கும் நிலம் அதிரத்தான் செய்யும், அந்த அதிர்வில் புல், பூண்டுகள் பாதிப்படைவதைத் தவிர்க்க முடியாது!” என்று சொன்ன ராஜீவ் காந்திதான் அடுத்து பிரதமர் ஆனார். அவரது வழிகாட்டுதலில் செயல்பட்ட சி.பி.ஐ.யோ, டில்லி மாநிலக் காவல்துறையோ நியாயமாகச் செயல்பட்டிருந்தால்தான் ஆச்சரியம்.

ஆக, நமது நிர்வாக நடைமுறை என்பது ஆட்சியாளர்களின் கண்ணசைவுக்கு ஏற்ப தாளமிடுவதாகவே இருந்து வருவதைக் காண்கிறோம். ஒவ்வொரு ஆட்சி மாறும்போதும் எதிர்க்கட்சிகள் மீது ஊழல் வழக்குகள் தொடுப்பதும், ஆட்சி மாறியவுடன் அவை கைவிடப்படுவதையும் தமிழக மக்கள் தாராளமாகவே கண்டு வருகின்றனர். 1996-இல் ஜெயலலிதா தோல்வியுற்றவுடன் அடுத்துவந்த கருணநிதி அரசு ஜெயலலிதாவின் செருப்புகளைக்கூட சாட்சியமாக்கி வழக்குத் தொடுத்தது. 2001-இல் ஜெயலலிதா முதல்வராகியவுடன் கருணாநிதியை கட்டிய லுங்கியுடன் சிறைக்கு அனுப்பினார். அப்போது கருணாநிதியால் உதிர்க்கப்பட்ட ”கொல்றாங்கப்பா” வசனத்தை யாரும் மறக்க முடியாது.    உண்மையில் நமது நிர்வாக ஏற்பாடுகள் அரசியல்வாதிகளுக்கு  கட்டுப்பட்டு நடக்க வேண்டியவை அல்ல. முதுகெலும்புள்ள அதிகாரிகள் பந்தாடப்படுவதாலும், அங்கும் லஞ்சம் தனது சல்லி வேர்களைப் பரப்பி இருப்பதாலும்தான், ஆளும் தரப்புக்கு ஏற்ப அதிகாரிகள் சலாமிடும் நடைமுறை தோன்றி இருக்கிறது. இதன் விளைவாக, நியாயம் அனைவருக்கும் ஒன்றாக இருப்பதில்லை. குறிப்பாக மத்தியப் புலனாய்வு அமைப்பில் (சி.பி.ஐ) நியாயம், நீதி என்பது ஆளும் கட்சிக்கு ஏற்றவாறு செயல்படுவது என்றே மாறிப்போனது.    சுதந்திர இந்தியாவில் அதிக ஊழல் செய்த கட்சி எது என்று கேட்டால் சிறு குழந்தை கூட காங்கிரஸ் கட்சியின் பெயரைச் சொல்லும். ஆனால், இதுவரை ஏதேனும் ஒரு காங்கிரஸ்காரர் ஊழல் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்டிருக்கிறாரா? தொலைதொடர்பு ஊழலில் சுக்ராம் தண்டிக்கப்பட்டிருக்கிறார்- அதுவும் காங்கிரசில் இருந்து விலகியவர் என்பதால். அதேசமயம், போலி ஆயுதப் பேர ஊழல் என்ற பெயரில் தெஹல்கா என்ற காங்கிரஸ் ஆதரவு இணையத்தளம் நடத்திய புலனாய்வுப் படப்பிடிப்பில் ஒரு லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிய பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவர் பங்காரு லட்சுமணன் (4 ஆண்டு சிறைத் தண்டனை) தண்டிக்கப்பட்டிருக்கிறார். ஆக, மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது தானே நமது நாட்டின் நீதி நிர்வாகமாக இருந்து வருகிறது?

அதே நடைமுறையைத் தான் குஜராத் வகுப்புக் கலவர வழக்கிலும் காண்கிறோம். குஜராத் மாநிலத்தில் 2002-இல் நடந்த கலவரத்தில் நரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த கலவரம் 97 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங்க தளத்தின் பிரமுகர் பாபு பஜ்ரங்கி  உள்ளிட்ட 62 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கையே குஜராத்தில் நடத்தக் கூடாது; அம்மாநில அரசு மீது நம்பிக்கை இல்லை. வேறு மாநிலத்துக்கு இவ்வழக்கை (வேறு பல கலவர வழக்குகளையும்தான்) மாற்ற வேண்டும் என்று மதச்சார்பின்மையைக் காக்கவென்றே அவதரித்த பலர் முழக்கமிட்டதை மறக்க முடியாது.

எனினும், குஜராத் மாநிலக் காவல்துறைதான் இவ்வழக்கை விசாரித்தது; அங்குள்ள சிறப்பு நீதிமன்றத்தில் 2009 முதல் இவ்வழக்கு நடந்து வந்தது. அங்குள்ள எந்த ஆளும் கட்சிப் பிரமுகரும் நெஞ்சுவலி வந்து மருத்துவமனைக்குச் சென்று படுத்துக் கொள்ளவில்லை; காவல்துறையின் நடவடிக்கையில் அரசு ஆதிக்கமும் செலுத்தவில்லை. விளைவாக வழக்கு எந்த இடையூறும் இன்றி தொடர்ந்து நடந்தது. இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது; 32 பேர் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்;  பிறர் விடுவிக்கப்பட்டனர்.  இந்த தண்டனை குறித்த மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. அவை தனியே விவாதிக்கப்பட வேண்டும். இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புவது, பாஜக ஆளும் ஒரு மாநிலத்தில் நீதி நிர்வாகம் எந்த அளவுக்குக் கடுமையாகவும், நியாயமாகவும் உள்ளது என்பதைத்தான்.

நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பது சாட்சியங்களின் அடிப்படையில் மட்டுமே. அதற்குக் காவல்துறையினர் வழக்கின் துவக்கத்தில் இருந்தே உறுதியான சாட்சியங்களைச் சேகரிப்பதும், நடுநிலையாகச் செயல்படுவதும் அவசியம். ஆளும் தரப்பின் இடையூறு இல்லாமல் இருந்திருந்தால் தினகரன் வழக்கு நீர்த்துப் போயிருக்காது. அது எவ்வளவு உண்மையோ, அதேபோல, குஜராத் மாநில அரசின் தலையீடு இல்லாததால் தான் நரோடா பட்டியா கலவர வழக்கில் அம்மாநில காவல்துறை ஆளும்கட்சிப் பிரமுகருக்கு    எதிராகவே வழக்குப் பதிய முடிந்தது என்பதும் உண்மை. தமிழகத்திலோ, கேரளத்திலோ, உத்தரப்பிரதேசத்திலோ இத்தகைய நடைமுறையைக் காண முடிகிறதா?

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட சுப்பிரமணியன் சுவாமியின் அயராத போராட்டத்தால் தானே ஆ.ராசாவும், கனிமொழியும் கைது செய்யப்பட்டார்கள்? மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா மீது மத்திய புலனாய்வு அமைப்பு உடனடியாக வழக்குப் பதிந்து நடவடிக்கையைத் துவக்கவில்லையே? நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்ட பிறகு, சுவாமியின் பொதுநல வழக்கை ஏற்று உயர்நீதிமன்றம் கடும் கண்டனக் கணைகளைத் தொடுத்த பிறகுதானே மத்திய அரசு ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் செயல்படத் துவங்கியது? இன்றும் கூட கலைஞர் தொலைக்காட்சிக்கு எதிரான சி.பி.ஐ வழக்கு எளிதில் நீதிமன்றத்தில் தோற்கடிக்கப்படும் வகையில்தான் ஜோடிக்கப்பட்டிருக்கிறது. அவ்வழக்கு தள்ளுபடியாகும் நிலை ஏற்பட்டால், நமது ‘டெசோ மாநாட்டுச் சிங்கம்’ ஊழல் புகார் குறித்து முரசொலியில் ஒருபக்கக் கட்டுரை தீட்டுவார்- சூத்திரரை வீழ்த்த நடத்தப்பட்ட ஆரிய சதியென்று! இதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.

இப்போது விஷயத்துக்கு வருவோம்… ‘நீதி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டால்தான் சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெற முடியும்; அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது’ என்று கூறும் ஊடகங்கள், இந்த நீதி நிர்வாகம் குஜராத்தில், முதல்வர் மோடி தலைமையிலான  அரசில் சிறப்பாக இருப்பதையே இந்தத் தீர்ப்பு காட்டுகிறது என்று ஏன் கூறுவதில்லை? 1984 கலவரத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான சீக்கியர்களின் மனப்புண்ணை ஆற்ற, அந்தக் குற்றவாளிகளைத் தண்டிக்க இதுவரை காங்கிரஸ் ஏதும் செய்யாமல் உள்ளது ஏன் என்று எந்த ஊடகமும் குரல் கொடுப்பதில்லை? காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நீதி, பாஜகவுக்கு ஒரு நீதி என்பது எந்த வகையில் ஊடக தர்மம்? இது ஒருவகையிலான நவீனத் தீண்டாமை அல்லவா?

குஜராத் வகுப்புக் கலவர வழக்குகளை வெளிமாநிலத்தில் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று கூறிய தீஸ்டா செடல்வாட் இப்போது எங்கே போனார்? நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக அவதூறுப் பிரசாரங்களைக் கட்டவிழ்த்துவிடும் இடதுசாரிகள் எங்கே போனார்கள்? குஜராத் நீதிமன்றங்களையே சந்தேகக் கண்ணுடன் விமர்சித்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் இப்போது அமைதியாக இருப்பது ஏன்? இந்தக் கழிசடைகள் கூறியதை நம்பி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்திய இஸ்லாமிய நண்பர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?

‘எந்த ஒரு செயலுக்கும் எதிர்விளைவுண்டு’ என்று மோடி கூறாத நியூட்டன் தத்துவத்தை பெரிய அளவில் பிரசாரம் செய்த பாஜகவின் எதிரிகள், மோடியின் அமைச்சரவை சகாவாக இருந்த பெண் அமைச்சர் மாயா கோட்னானிக்கு வழங்கப்பட்டுள்ள கடும் தண்டனை குறித்துக் கருத்து கூறாமல் மௌனம் சாதிப்பது வியப்பளிக்கிறது. பாஜகவின் எதிரிகள் இந்தத் தீர்ப்பையும் கூட அரசியல் ஆயுதமாக்கவே முயற்சிப்பார்கள். ”பாருங்கள், கோத்ரா கலவரத்தில் தொடர்புடைய பாஜக அமைச்சர் தண்டிக்கப்பட்டிருக்கிறார், நாங்கள் சொன்னது உண்மைதானே?” என்று அவர்கள் கூறக்கூடும். துரியோதனர்கள் திருந்துவதில்லை.

நரோடா பாட்டியா கலவரத்துக்குக்  காரணமான திட்டமிட்ட ரயில் பெட்டி எரிப்பில் தொடர்புடைய 31 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கோத்ரா நிகழ்வை அடுத்த பெஸ்ட் பேக்கரி சம்பவம் உள்ளிட்ட கலவரங்கள் தொடர்பாகவும் தீர்ப்புகள் வெளியாகி உள்ளன. இவை அனைத்தும் குஜராத் நீதித்துறையின் நடுநிலையைப் பறைசாற்றுகின்றன. ஆனால், நீதிபதி ஷா– நானாவதி ஆணையம் தனது விசாரணை அறிக்கையில் கூறிய குஜராத் அரசின் நியாயமான செயல்பாடுகள்  குறித்த ஆதாரங்களை ஏற்க சிலருக்கு மனமில்லை. குஜராத் கலவரத்திற்கும் முதல்வர் மோடிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை ஆணையம் தெளிவாகக் கூறிய பிறகும், அவர் மீது சேறு  வாரி இறைக்கப்படுகிறது.

இந்நிலை எப்போது மாறும்? பாஜகவின் எதிரிகள் செய்யும் துஷ்பிரசாரம் பாஜகவுக்கே நன்மையாக முடியும் என்பதை எப்போது அவர்கள் உணர்கிறார்களோ, அப்போதுதான் இத்தகைய நியாயமற்ற பிரசாரங்கள் நிற்கும். அதற்காக, கோட்னானி போன்றவர்கள் சிறை புகுவது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது. மேல்முறையீட்டில் இந்தத் தீர்ப்பு மாறக்கூடும். நீதி என்றும் நிலையானது என்பதை அப்போது நாடு உணரும்.

கோட்னானி உள்ளிட்டோர் தவறே செய்யவில்லை என்று கூறுவது  நமது நோக்கமல்ல. எனினும் அவர்கள் திட்டமிட்டு இந்த வன்முறையில் ஈடுபடவில்லை என்று உறுதியாகச் சொல்லமுடியும். வன்முறையை எக்காலத்திலும் நாம் ஆதரிக்க முடியாது. ஏனெனில் வன்முறையால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஹிந்து இயக்கங்கள்தான் என்பது சரித்திரம். அதேபோல, குஜராத்தில் மோடி அரசு நியாயமாகச் செயல்படுகிறது என்பதற்கும்  இந்தத் தீர்ப்பு நிரூபணம்.

 

தீர்ப்புகள் திருத்தப்படலாம்

நரோடா பாட்டியா கலவரத்தைத் தூண்டியவர் என்று பாஜகவின் நரோடா பாட்டியா தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான மாயா கோட்னானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்காகவே அவருக்கு 28 ஆண்டு சிறைதண்டனை. இதில் பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையாகும்.

கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கூறப்பட்ட பஜ்ரங்க தளப் பிரமுகர் பாபு பஜ்ரங்கிக்கு வாழ்நாள் முழுவதும்  சிறையில்  கழிக்க  உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும்  7  பேருக்கு  21  ஆண்டு   சிறைதண்டனையும்,  22 பேருக்கு 14 ஆண்டு சிறைதண்டனையும்  விதிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தண்டனை அறிவிப்புகள், மேல்முறையீட்டில் மாற வாய்ப்புள்ளது. வழக்குகள் மீது வெளிப்புறத்தில் இருந்து திணிக்கப்படும் மனோவியல் நிர்பந்தங்களும் கூட கடுமையான தீர்ப்புகளுக்குக் காரணமாகி விடுகின்றன. இதில் ஊடகங்கள் செலுத்திய செல்வாக்கு பெரும்பங்கு வகித்துள்ளது.

அரசு காவல்துறையையும் நீதித்துறையையும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்து விட்ட நிலையில், நீதித்துறை வெளிப்புற நிர்பந்தங்களுக்கு செவிசாய்ப்பது கூடாது. இந்தத் தீர்ப்புகள் திருத்தப்படலாம். ஏனெனில் நீதிமன்றங்களில் எப்போதும் உணர்ச்சிகளுக்கு இடமில்லை.

17 Replies to “மண்குடமும் பொன்குடமும்”

  1. அன்பார்ந்த ஸ்ரீமான் சேக்கிழான்,

    \\\\ஹெச்.கே.எல்.பகத், சஞ்சன் குமார் \\\\
    சஜ்ஜன் குமார் என்றிருக்க வேண்டும்.

    \\\\காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நீதி, பாஜகவுக்கு ஒரு நீதி \\\\
    எந்த பிரச்சினை ஆயினும் ஹிந்துக்களுக்கு ஒரு நீதி போலி மதசார்பின்மை பேசும் கயவர்களுக்கு ஒரு நீதி மாற்று மதத்தவர்களுக்கு ஒரு நீதி என்பது கிரிஸ்தவ பணத்தில் வயிறு வளர்க்கும் ஊடகங்களின் நிலைப்பாடு. ஊடங்கங்களின் கூச்சல் எந்த அளவு ந்யாயாலய தீர்ப்புகளை பாதிக்கிறது என்பதுவும் அவதானிக்கப் படவேண்டும். தில்லி சீக்கியர் கலவரத்தில் இதுவரை எத்தனை பேர் தண்டிக்க பட்டிருக்கிறார்கள்?

    \\\இந்த தண்டனை குறித்த மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. அவை தனியே விவாதிக்கப்பட வேண்டும்\\\
    இது சம்பந்தமாக தாங்கள் அவசியம் தனியாக ஒரு வ்யாசம் சமர்ப்பிக்க வேண்டும் என விக்ஞாபித்து கொள்கிறேன். ஓடிஸா பரங்கி பாதிரி கொலை வழக்கில் பாதிரி நல்லவன் போலும் தாரா சிங்க் கொடியவன் போலும் தமிழகத்து ஊடங்கங்கள் கதைகள் புனைந்தன. விஜயவாணி தளத்தில் ஸ்ரீமதி ராத ராஜன் அல்லது ஸ்ரீமதி சந்த்யா ஜெயின் அம்மையார் இது சம்பந்தமாக மாற்று கருத்துக்கள் பகிர்ந்ததில் பிரச்சினையின் முழு பரிமாணம் தெரிந்தது.

    \\\மனோவியல் நிர்பந்தங்களும் கூட கடுமையான தீர்ப்புகளுக்குக் காரணமாகி விடுகின்றன. இதில் ஊடகங்கள் செலுத்திய செல்வாக்கு பெரும்பங்கு வகித்துள்ளது.

    அரசு காவல்துறையையும் நீதித்துறையையும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்து விட்ட நிலையில், நீதித்துறை வெளிப்புற நிர்பந்தங்களுக்கு செவிசாய்ப்பது கூடாது. \\\\\

    மிக முக்யமான கருத்து. ஊடகங்களின் கூச்சல் எந்த அளவுக்கு ந்யாயாலய தீர்ப்புகளை பாதிக்கிறது என்பது அவதானிக்க வேண்டிய விஷயம்.

  2. அன்புள்ள சேக்கிழான்,

    நல்ல நெத்தியடி கொடுத்துள்ளீர்கள். ஆனால் அவர்களுக்கு உரைக்காது. ஏனெனில் அவர்கள் சோற்றிலே உப்பிட்டு உண்பவர்கள் அல்ல.பொய் மதச்சார்பின்மை பேசும் பித்தலாட்ட காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு சூடு சொரணை இருந்தால் நாக்கை பிடுங்கிக்கொண்டு சாவார்கள். கேவலமான பிறவிகள். என்ன செய்ய ? நல்ல கருத்துள்ள உண்மை தொகுப்புக்கு நன்றி.

  3. பா ஜ க விலேயே உள்ள உள் எதிரிகள் மோடியை கவிழ்த்து விடப் பார்க்கிறார்கள்.
    பா ஜ க வின் ஒற்றுமை பலப் பட வேண்டும்.
    முதலில் மக்கள் நடக்கும் விஷயங்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பா ஜ க முயற்சி எடுக்க வேண்டும். நன்றி.
    வாழ்க பாரதம்.

  4. “குஜராத் கலவரத்திற்கும் முதல்வர் மோடிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை ஆணையம் தெளிவாகக் கூறிய பிறகும், அவர் மீது சேறு வாரி இறைக்கப்படுகிறது.”

    தூற்றுவோர் தூற்றட்டும் நாளைய வெற்றி நமதே 2014 ஆம் ஆண்டு திரு.மோடி அவர்கள் ஹிந்துஸ்தானத்தின் பிரதமர் ஆவர் என்பது உறுதி ….இதை ஒரு சபதமாக ஒவ்வொரு ஹிந்துவும் விநாயக சதுத்ர்தி அன்று உறுதி ஏற்ப்போம்…..

    நமஸ்காரம்
    Anantha Saithanyan

  5. அன்புள்ள சேக்கிழான் அவர்களுக்கு
    அற்புதமான கட்டுரை வரைந்துள்ளீர்கள். பொய் மத சார்பின்மை நாட்டுக்கு ஒரு போதும் உதவாது. மதச்சார்பின்மை என்ற கொள்கையுடன் சிறுபான்மை மதங்களை வளர்ப்பதும் அவர்களுக்கு விசேட அந்தஸ்து கொடுப்பதும் தவறல்ல. ஆனால் அதற்காக பெரும்பான்மை இந்துக்களின் மத உரிமைகளையும் மரபுகளையும் சீரழிப்பது எந்த விதத்தில் நியாயம்? இந்துக்களை மதம் மாற்றுவது, இந்துக்களின் கொள்கைகளை பழிப்பது, போன்ற வேலைகள் செய்வதை சிறுபான்மை மதங்கள் இத்துடன் நிறுத்திக்கொள்ளவேண்டும். அத்துடன் மதமாற்ற தடைச்சட்டம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். இஸ்லாத்தை பழிக்கும் படம் வந்தவுடன் இஸ்லாமிய மக்கள் கொதித்தெழுவது போல் எங்காவது இந்து மதத்திற்கு கஷ்டம் வந்தால் அதற்க்கு இந்து மத தலைவர்கள் குரல் கொடுக்க முன் வரல் வேண்டும். இந்திய இந்து நாடாக வரும் பட்சத்தில் தான் இது சாத்தியமாகும்.

  6. அன்புடையீர்! தமிழ்நாடு அருபத்தேழுக்குப் பிறகு எப்போதுமே நமது பாரத தாய்த்திருநாட்டின் போக்கிலிருந்து மாறுபட்டே நடந்து வந்திருக்கிறது. முன்பு எல்லாம் குற்றம் புரிந்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. இந்திரா காந்தியை மதுரையில் தாக்கியவர்கள் தண்டனை அடையவில்லை. ராஜீவ் காந்தியின் சென்னை விஜயமும் அவருடைய படுகொலையும் குற்றத்தின் பின்னணியில் இருப்போரை வெளிக்காட்டவில்லை. முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலைக்குக் காரணமானவர்கள் தண்டனை அடையவில்லை. மதுரையில் தினகரன் எரிப்பு மட்டுமல்ல, வேலூர் நாராயணனின் அலை ஓசை, மக்கள் குரல், குமுதம், தினமலர் போன்ற பத்திரிகைகள் தாக்கப்பட்ட சம்பவத்துக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் நீதித்துறைதான் முக்கியமானது. அந்த நீதித் துறை பழுதடையாமல் காப்பது நம் ஒவ்வொருவருடைய கடமையும் ஆகும். நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பது எத்தனை முக்கியமோ, அதே போல குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது. இது நிச்சயமாகக் கடைப்பிடிக்கப்பட்டாலோழிய மக்களின் நம்பிக்கை தகர்ந்துதான் போகும். மதுரை தினகரன் தாக்குதல் வழக்கில் பத்திரிக்கை தாக்கப்பட்டதுகூட முக்கியமல்ல, அது சகோதர யுத்தம். அதில் உயிரைப் பலிகொடுத்த கூலிக்கு உழைக்கும் ஏழை பாட்டாளிகளின் உயிர்களுக்கு என்ன பதில்? வானை முட்டும் அளவுக்கு நியாயம் பேசும் யோக்கியர்கள் இதற்கு பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் மோடியைப் பற்றி பேச வாய் இல்லாதவர்கள், பேசக் கூடாது. நியாய உணர்வை தூண்டிவிட்ட சேக்கிழான் அவர்களுக்கு நன்றி.

  7. //பா ஜ க விலேயே உள்ள உள் எதிரிகள் மோடியை கவிழ்த்து விடப் பார்க்கிறார்கள்.//

    லட்சத்தில் ஒரு வார்த்தை……பா.ஜ.க வுக்கு எதிரிகள் வெளியிலிருந்து வர வேண்டியதில்லை….பா.ஜ.க வில் குறைந்தது ஒரு டஜன் பேருக்கு பிரதமர் கனவு உள்ளது……காங்கிரசின் ஒரே நம்பிக்கை பி.ஜே .பி யின் உட்கட்சிப்பூசலே…..காங்கிரசின் நம்பிக்கை வீண்போகாது என்றே நினைக்கிறேன்…..[ ஏன்னா நாட்டுல நல்லது எதுவும் நடக்க மாட்டேங்குதே ]

    சமீபத்தில் வந்த திரைப்படத்தில் ஒரு வசனம்….

    தப்பு பண்றவன் எல்லாம் மாட்டிக்கிரதில்ல…..தப்ப தப்பா பண்றவன் தான் மாட்டிக்கிறான்……காங்கிரசின் துணை அமைப்புகளான சேவாதளம் , மகிளாகாங்கிரஸ் மாதிரி சி.பி.ஐ அமைப்பை மாற்றிக்கொண்டு காங்கிரஸ் தூள் கிளப்புது பாருங்க……பி.ஜே. பி யும் தான் ஆறு வருஷம் ஆட்சியில் இருந்தது…..குறைந்த பட்சம் போபர்சை வைத்து காங்கிரசை ஒருவழி செய்திருக்கலாமே?

    பல லட்சம் கோடி அடிக்கிற காங்கிரசார் எவரும்சிக்குவதில்லை…..ஒரு லட்சம் [அதுவும் கட்சி நிதி…] வாங்கிய பங்காரு லட்சுமன் தண்டிக்கப்பட்டுவிட்டார்…..

    இந்தியாவில் இதுவரை எத்தனை சாதி மற்றும் மத கலவரங்கள் நடந்துள்ளன? [இவற்றில் பெரும்பாலானவற்றை தூண்டிவிட்டவர்கள் அரசியல்வாதிகள்…..] இதுவரை எத்தனை அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்?

  8. Yapozuthu Hindukkalin ottukkaga arasiyalvaathigal
    Bayappadugiraargalo appothu thaan inthanilai maarum….. Atharku Hindu makkal ondru padavendum … Ondru pattal undu vaazvu ithai naam unaravendum.

  9. கோத்ராவில் கரசேவகர்கள் எரித்துக் கொல்லப் பட்ட பின் நடந்த கலவரங்களில் முஸ்லிம்கள் மட்டும் கொல்லப் படவில்லை. ஏராளமான ஹிந்துக்களும் முஸ்லிம்களால் கொல்லப் பட்டனர். ஆசிரியர் இதை எழுத மறந்து விட்டார்.

    இதனால் பிரச்னையின் முழுப் பரிமாணம் தெரியாமல் போய் விட வாய்ப்புள்ளது

  10. ” வானை முட்டும் அளவுக்கு நியாயம் பேசும் யோக்கியர்கள் இதற்கு பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறார்கள். “-

    அன்புள்ள தஞ்சை வெ. கோபாலன் ,

    இந்த அயோக்கிய சிகாமணிகளை போய், யோக்கியர்கள் என்று வஞ்சப்புகழ்ச்சியாக சொல்லியுள்ளீர்கள். யோக்கியர்கள் என்று எழுதுவதே அவர்களுக்கு பிடிக்காது. அவர்கள்திருடிய பணமே அவர்களுக்கு சமாதி கட்டும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கேப்மாரித்தனம், இவையே இவர்களின் சொத்துக்கள்.

    இந்திராவை தாக்கிய திமுகவினருடன் இந்திராவே கூட்டு சேர்ந்து அரசியல் செய்தபின்னர் அவர்களுக்கு எதிராக யார் சாட்சி சொல்ல வருவார்கள்.? திமுக ஆட்சியில் நடந்த அலையோசை , குமுதம், தினமலர் , உதயகுமாரன், பூலாவாரி சுகுமாரன் என்று பட்டியல் போட்டு பலன் எதுவும் இல்லை. வன்முறை, குடும்ப சர்வாதிகாரம் இவற்றின் ஒட்டுமொத்த உருவமான திமுக தமிழக அரசியல் மற்றும் மத்திய அரசியல் களத்தில் இருந்து விரைவில் அகற்றப்படும்.

  11. காஷ்மீரில் இரண்டு லட்சத்துக்கும் மேல் ஹிந்துக்கள் முஸ்லீம் தீவிர வாதத்தால் கங்கள் வீடுகள், உடைமைகளை விட்டு சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
    அவர்களுக்கு நியாயம் வழங்கப படவில்லை.
    நூற்றுக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப் பட்டனர்.
    பெண்கள் மான பங்கப் படுத்தப் பட்டனர்
    ஏராளமான கோயில்கள் இடிக்கப் பட்டன
    மோடியை எடுத்ததெற்கெல்லாம் குற்றம் சொல்லும் ஹிந்து விரோத, தேச விரோத சக்திகளும் , ஊடகங்களும் அவ்வப்போது ஆட்சியில் இருந்த காஷ்மீர் முதல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏன் கேட்கவில்லை?

  12. WHAT SRIDARAN SAID IS CORRECT. IT WAS REPORTED THAT NEARLY 2000 HINDUS WERE ALSO KILLED AFTER GODRA INCIDENT. WHY NOBODY TALKING ABOUT IT?
    WHEN PRINCE RAUL VINCI GANDHI VISITED GUJARATH, STUDENTS ASKED THE SAME QUESTION AND PRINCE LEFT WITHOUT ANY REPLY.
    DOES IT MEAN THEY “DESERVE TO BE KILLED” ?
    I REQUEST THE AUTHOR TO COLLECT FULL INFORMATION AND WRITE AN ARTICLE.

  13. அண்மையில் குஜராத் சென்றிருந்தேன். அங்கு மிக நீண்ட தூரத்த்டுக்கு பைப்பு லைன் மூலம் சமையல் எரிவாயு அதாவது சமையல் கேஸ் , சுமார் ஏழு லட்சம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இருபது லட்சம் வீடுகளுக்கு , இதே போல குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்க இத்திட்டத்தை நீடிக்க / விரிவாக்கம் செய்ய , குஜராத் அரசு மத்திய அரசின் அனுமதியை கோரியுள்ளது. ஆனால், மத்திய காங்கிரஸ் அரசு, அதனை மறுத்துவிட்டது. எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே மத்திய காங்கிரஸ் அரசு வழக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டம் அமல் செய்யப்பட்டால், பல கோடி காஸ் சிலிண்டர்கள் தேவைப்படாது. காஸ் சிலிண்டருக்கான முதலீடு குறைந்து, அரசுக்கு உபரி பணம் கிடைக்கும்.காங்கிரஸ் கொள்ளையர்கள் வேரோடும், வேரடி மண்ணோடும் நம் நாட்டை விட்டு அழித்து விரட்டப்படவேண்டும், அப்போது தான், நாட்டில் ஏதாவது நல்லது நடக்க முடியும். காங்கிரசை ஓட்டுப்பெட்டி மூலம், விரட்டுவோம்.

  14. //காங்கிரஸ் கொள்ளையர்கள் வேரோடும், வேரடி மண்ணோடும் நம் நாட்டை விட்டு அழித்து விரட்டப்படவேண்டும், அப்போது தான், நாட்டில் ஏதாவது நல்லது நடக்க முடியும். காங்கிரசை ஓட்டுப்பெட்டி மூலம், விரட்டுவோம்//

    காங்கிரஸ் மீண்டும் உள்ளே நுழைந்தற்குக் காரணமே பா ஜ க வின் மெத்தனம்தான். வாஜ்பாய் மனம் வைத்திருந்தால் சோனியாவின் செல்வாக்கை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க முடியும். பரிதாபப் பட்டார். இந்த விஷயத்தில் நரசிம்ம ராவுக்கு இருந்த முன்னெச்சரிக்கைகூட வாஜ்பாய்க்கு இல்லாமற் போயிற்று. 2009 தேர்தலில்கூட வாக்காளர்கள் நம்மைத்தான் தேர்ந்தெடுத்தாக வேண்டும் .என்கிற அதீத நம்பிக்கையில் இருந்தார்கள். மக்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்கள். பாஜக நாடு முழுவதும் பிரசாரத்தை இப்போதே முடுக்கிவிடாவிட்டால் காங்கிரசைவிட்டால் வேறு கதியில்லை என்ற நிலை திரும்பிவிடும். கூட்டம் சேருகிறதோ இல்லையோ கேட் மீட்டிங் போல தெருவுக்குத் தெரு பாஜக கூட்டம் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 2009 ஆகஸ்ட் 15 அன்று பொன் ராதாகிருஷ்ணன் என்னை கட்சி முன்னணியினரிடையெ பேசச் சொன்னபோது தமிழ் நாட்டில் பாஜக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இது அருமையான வாய்ப்பு. ஸ்டாலின் ஒரு மக்கு அழகிரி ஒரு போக்கிரி. ஜயலலிதா வின் அகம்பாவம் மக்கள் அறிந்தது. தி.மு.கவுக்கு மாற்று பாஜகதான் என்கிற நம்பிக்கையை மக்கள் மனதில் ஊட்டிவிட்டால் போதும், மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க ஆரம்பித்துவிடுவார்கள். தற்சமயம் தங்கள் வாக்கு வீணாகிவிடுமோ என்ற கவலையினால்தான் வேறுவழியின்றி திமுக அதிமுக என்று மாற்றி மாற்றி வாக்களித்து வருகிறார்கள் என்று பேசினேன். அப்போதைக்குச் சிரித்து மகிழ்ந்தாரக்ளேயன்றி நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் போதிய கவனம் செலுத்தவில்லை. பாஜக வெற்றி பெறக் கூடிய பல தொகுதிகளில் அதிமுக வை மக்கள் வெற்றி பெறச் செய்ததற்குக் காரணம் தி மு க மீண்டும் வெற்றி பெற்றுவிடுமோ என்ற அச்சமும், அதிமுக வை விட்டால் வேறு வழியில்லை என்ற கையறு நிலையும்தான். சென்ற தேர்தலின்போது ஒரு திமுக தலைவர் என்னிடம் பாஜக எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடுவதை நாங்கள் வரவேற்கிறோம். அது அதிமுக வாக்குகளைப் பிரிக்கும் என்றார். வாக்களர்களுக்கும் இதே எண்ணம் இருந்ததால்தான் தி மு க ஜயிக்கக்கூடாது என்ற உறுதியின் காரணமாக அதிமுகவுக்கு வாக்களித்தனர். சென்னை மயிலையில் நியாயப்படி ஜயிக்க வேண்டிய பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீநிவாசன் தோற்று அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதைக் கண்கூடாகக் கண்டேன். வானதி ஸ்ரீநிவாசன் அருமையான வேட்பாளர்தான். ஆனால் எங்கே தி முக வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அதிமுகவுக்கு வாக்களித்தோம் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். பாஜகவால் உறுதியான மாற்று ஆட்சியைத் தரமுடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஊட்டுவது பாஜகவினர் கடமை. காங்கிரஸ் கலாசாரப்படி மேலிட முடிவுக்கு மாநிலங்களை அடிபணியச் செய்வது பாஜகவிலும் தொடர்வதை மாநில பாஜகவினர் அனுமதிக்கலாகாது. மாநில பாஜகவினர் தங்கள் மக்கள் செல்வாக்கை உறுதி செய்து காட்டினால்தான் அவர்களின் சொல் அம்பலமேறும். சொல்ல வேண்டியவர்களிடம் பலமுறை சொல்லிவிட்டேன்.
    -மலர்மன்னன்

  15. “சொல்ல வேண்டியவர்களிடம் பலமுறை சொல்லிவிட்டேன்.”

    என்னை பொறுத்த அளவில் பா.ஜ.க-வும் இன்னொரு கட்சி. அவ்வளவே.

  16. சி ஏ ஜி அலுவலர் திரு ஆர் பீ சிங் அவர்கள் நாளொரு மேனியும் , பொழுதொரு வண்ணமுமாக , காலை மாலை என்று புது புது அறிக்கைகள் , பேட்டிகள் என்று வெளுத்து வாங்குகிறார். இன்றைய ( 26 -11 -2012 )ஆங்கில தினசரி ஒன்றில் , முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் ராசாவின் அறிக்கைகளையும், ஆர் பீ சிங்கின் அறிக்கைகள் மற்றும் பெட்டிகளையும் ஒப்பிட்டு, அழகாக ஒப்பிட்டு காட்டியுள்ளார்கள். ஆர் பி சிங்கின் பேட்டிகள் ஒரே உளறலாக இருப்பதாலும், முன்னுக்கு பின் முரணாக இருப்பதாலும், இந்த முக்கியமான டூ ஜி வழக்கு நீதி மன்றம், இவரை உண்மை கண்டறியும் நார்கோ அனலிசிஸ் மற்றும் பிரைன் மேப்பிங் டெஸ்டு ( narco analysis and brain mapping test) செய்து , இவர் சொல்லியுள்ளவற்றில் எது உண்மை என்று கண்டறிய வேண்டும்.

    மேலும் திமுக தலைவரின் குடும்ப உறுப்பினர்களை காப்பாற்ற , அவர்கள் தரப்பில் ஏதாவது தில்லுமுல்லு செய்து, இந்த ஆர் பி சிங் தேவை இல்லாமல் மாட்டிக்கொண்டாரா என்பதையும் கண்டு பிடிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *