டிசம்பர் 6 சமகால வரலாற்றில் மறக்க முடியாத நாள். அயோத்தி இயக்கத்தின் சிகர தினம். இந்தியாவின் செல்திசையையே மாற்றி அமைத்த அந்த இயக்கத்தின் பயணத்தில் முக்கியமான இன்னும் சில தினங்களையும் இந்த நாளில் நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.
1989 நவம்பர் 9 . அன்று தான் அயோத்தியில் ராமஜன்ம பூமி ஆலயத்தின் அடிக்கல் (சிலான்யாஸ்) நாட்டப் பட்டது. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் வழிபட்டு அனுப்பிய ராம சிலா செங்கற்கள் அயோத்தியை வந்தடைந்தன. கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் பூஜித்துக் கொணர்ந்த செங்கற்களின் படங்கள் அப்போதைய விஜயபாரதம் இதழ்களில் வந்தன. அவை சாதாரண செங்கற்கள் அல்ல, ஓர் மகோன்னதமான இந்து எழுச்சியின் அஸ்திவாரக் கற்கள்.
அந்த அடிக்கல் நாட்டு நிகழ்வை பாஜக தவிர்த்த மற்ற அத்தனை அரசியல் கட்சிகளும் எதிர்த்தன. ஆயினும் மக்கள் சக்திக்குத் தலைவணங்கி வேறு வழியின்றி மத்திய அரசும் உபி அரசும் அனுமதி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சிலிர்ப்பூட்டும் சரித்திர நிகழ்வில் முதல் கல்லை எடுத்து வைத்தவர் காமேஷ்வர் சௌபல். பீகார் விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர். தலித். அவரைப் பின்தொடர்ந்து சாதுக்களும், மற்ற தலைவர்களும் 141 செங்கற்களை சம்பிரதாயமாக அடுக்கி அஸ்திவாரமிட்டனர். நூற்றாண்டுகளாக ஒடுக்கப் பட்டுக் கிடந்த நமது சகோதரர்களில் ஒருவர் இந்து புத்தெழுச்சியின் பிரதிநிதியாக முன் நின்ற ஒரு பொற்கணம்! ஒரு விதத்தில் இந்தக் குறியீட்டுச் செயல்பாடு இந்து ஒற்றுமை எப்படி அமைய வேண்டும் என்பதற்கான வழிகாட்டும் வரைபடமாகவும் இருந்தது. ஆனால், குறியீடாக மட்டும் இது நின்று விடவில்லை. ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அப்போதைய தலைவர் பாளாசாகேப் தேவரஸ் வழிகாட்டுதலில் சங்க பரிவாரம் முன்னெடுத்த தீவிர சமுதாய சமத்துவ செயல்பாடுகளும், அயோத்தி இயக்கமும் ஒன்றை இன்னொன்று மேன்மேலும் பலப் படுத்துவதாக, வளர்ப்பதாக இருந்தன. குறிப்பாக மகாராஷ்டிரத்தில், டாக்டர் அம்பேத்கருடன் நெருக்கமாக இருந்து, அவரது சமூக சிந்தனைகளை உள்வாங்கியிருந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் இதில் நேரடியாகப் பங்களித்தனர்.
1990 அக்டோபர் 30 & நவம்பர் 2. சரயூ நதியின் தண்ணீருடன் செந்நீர் கலந்தோடிய தினங்கள். அயோத்தி இயக்கத்தின் ஒரு மாபெரும் துயர அத்தியாயம் இத்தினங்களில் நிகழ்ந்தது. அந்த வருடம் ஜூன் மாதம் முதலே கரசேவைக்கான அழைப்பு விடுக்கப் பட்டது. மக்கள் நாடெங்கிலும் இருந்து வெள்ளமெனத் திரண்டனர். பல்வேறு தடைகளையும் முட்டுக் கட்டைகளையும் தாண்டி எட்டு லட்சத்திற்கும் அதிகமான கர சேவர்கள் அயோத்தி நகரின் சுற்றுப் புறங்களில் வந்தடைந்தனர். ரயில்கள் வேண்டுமென்றே ரத்து செய்யப் பட்டதால் 100 கிமீ தூரம் நடந்தே வந்தவர்கள் அனேகர். வழி நெடுகிலும் உள்ள கிராமங்களில் இருந்த எளிய மக்கள் ராம காரியத்தில் தங்கள் உப்பு சேர வேண்டும் என்று கரசேவர்களுக்கு இடையறாது உணவளித்தனர். அவர்களைக் கவனித்துக் கொண்டனர். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளின் வழியாக கரசேவர்கள் பயணம் செய்த போதும் எங்குமே கலவரங்களோ மோதல்களோ ஏற்படவில்லை. நாட்கள் நெருங்க நெருங்க, உபி மாநிலத்தின் எல்லா அரசு கட்டடங்களும் கரசேவர்களை நிரப்பும் சிறைக் கூடங்களாக மாற்றப் பட்டன.
இது எல்லாவற்றையும் மீறி ஒரு லட்சம் கரசேவர்கள் அயோத்தி நகருக்குள் குழுமினர். அமைதியாக ராம பஜனை பாடிக் கொண்டு ராம் லாலாவின் கோயிலை நெருங்கிச் சென்றவர்கள் மீது முதலில் தடியடி நடத்தப் பட்டது. பிறகு கொடூரன் முலாயம் சிங் யாதவ் உத்தரவின் பேரில் துப்பாக்கிச் சூடு நடந்தது. சாதுக்களையும் பெண்களையும் கூட அங்கிருந்த பொறுக்கி எடுக்கப் பட்ட காவல் படையினர் வெறித்தனமாக சுட்டனர். சடலங்கள் மிதந்தால் காட்டிக் கொடுத்து விடும் என்பதற்காக மணல் பைகளில் கட்டி சரயூ நதியில் தள்ளினர். ஒரு தவறும் செய்யாத 400க்கும் மேற்பட்ட அப்பாவி இந்தியப் பிரஜைகள், உதிர்ந்து போன பழைய கும்மட்டங்கள் இடிக்கப் படலாம்; அவற்றைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற எண்ணத்தில் “மதச்சார்பின்மையின்” பெயரால் ஈவிரக்கமின்றி கொல்லப் பட்டனர். இந்த அப்பட்டமான அறமீறலை செய்த மாநில முதல்வர், அரசு அதிகாரிகள், காவல் படையினர் மீது உருப்படியான விசாரணை இன்று வரை நடத்தப் படவில்லை. தண்டனை வழங்கப் படவில்லை. இதன் பின்னணியில் ஊடகங்களும் செக்யுலர் அரசியல் கட்சிகளும் பரப்பி விட்ட வதந்திகளாலும் பொய்ச் செய்திகளாலும் தான் மதக் கலவரங்களும் மோதல்களும் பல இடங்களில் உருவாயின. அதற்கான பழி ஒட்டுமொத்தமாக அயோத்தி இயக்கம் மீது, சங்க பரிவாரங்களின் மீது போடப் பட்டது.
அன்று உயிர்நீத்த அந்த பலிதானிகளை கண்ணீர் அஞ்சலியுடன் நினைவு கூர்வோம்.
1992 டிசம்பருக்குப் பிறகு 20 ஆண்டுகள் கழிந்து விட்டன. எத்தனையோ வரலாற்று சான்றுகள், அகழ்வாராய்ச்சி முடிவுகள், நீதிமன்றத் தீர்ப்புகள் மீண்டும் மீண்டும் அங்கிருந்த ஆலயம் 15ம் நூற்றாண்டில் தகர்க்கப் பட்டதை ஆதார பூர்வமாக நிறுவியுள்ளன. இடிக்கப் பட்டது பாபர் மசூதி அல்ல; கும்மட்டம் மட்டுமே என்று அறிவித்துள்ளன.
ஆரம்பம் முதலே, முஸ்லிம் சகோதரர்கள் இதை ஏற்கும் நிலைக்கான சாத்தியம் ஏற்பட்டிருந்தாலும், நேருவிய போலி மதச்சார்பின்மை வாதிகளும், வாக்கு வங்கி அரசியல் கயவர்களும், இஸ்லாமிய மத வெறியர்களும், இடதுசாரி போலி அறிவுஜீவிகளும், அவர்களது பிரசார ஊடகங்களும் முனைந்து இந்த பிரசினை சுமுகமாகத் தீர்க்கப் படக் கூடாது என்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள்.
அதன் எதிரொலியாகவே ஒவ்வொரு வருடமும், கறுப்பு தினமாக, கசப்புணர்வை, வெறுப்பை, துவேஷத்தைப் பரப்பும் தினமாக டிசம்பர் 6ம் தேதியை அனுஷ்டிக்கிறார்கள். ஏதோ நாட்டுக்கே இழிவை ஏற்படுத்தி விட்ட தேசிய அவமானம் என்பது போல பரப்புரைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
“இப்போது நாம் அனைவரும் மனசாட்சியைத் தொட்டுக் கேட்க வேண்டிய கேள்வி – எது இந்திய மதச்சார்பின்மைக்கும் அற உணர்வுக்கும் செய்யப் பட்ட மிகப் பெரிய அநீதி? திட்டமிட்டுப் பொய்ப் பிரசாரம் செய்து, இல்லாத மசூதியான ஒரு கும்மட்டத்தை, ஒரு மசூதியாக சிறுபான்மை மக்கள் மனதில் பதித்த இந்தப் படித்த அயோக்கியர்களின் செயலா? அல்லது தாக்கப் பட்டு, குண்டடி பட்டு, மீண்டும் மீண்டும் இந்தியாவின் உச்ச மட்டங்களில் அமர்ந்திருக்கும் அதிகார வர்க்கத்தினரால் ஏமாற்றப் பட்டு, அந்த கும்மட்டத்தை ஏறி உடைத்த கரசேவகர்களின் செயலா?”
என்று கேட்கிறார் அரவிந்தன் நீலகண்டன் (2010 அக்டோபரில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளிவந்தவுடன் எழுதிய கட்டுரை).
அயோத்தி பிரசினையின் ஊடாக நாம் கற்றுக் கொண்ட பாடம் என்ன? உண்மையில் இந்தப் போராட்டம் ஒரு நிலத் தகராறுக்காக அல்ல. வரலாற்றுப் புத்தகங்களை வைத்து அல்ல. அடிப்படையான மதரீதியான கலாசார மோதல் இது. இந்திய முஸ்லீம்களிடம் உள்ள பிரசினை, அவர்களது ஆக்கிரமிப்பு மனப்பான்மையோ, அல்லது அவர்களுக்கு சொந்தமில்லாததைக் கூட அநியாயமாக உரிமை கோரும் தீவிரமோ அல்ல. இதற்கெல்லாம் உந்துதல் அளிக்கும் ஒரு மதத்தை அவர்கள் கண்மூடித் தனமாகப் பின்பற்றுவது தான். கொய்ன்ராட் எல்ஸ்ட் சொல்வது போல, “பிரசினை அயோத்தியிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவதல்ல. முஸ்லிம்களிடமிருந்து இஸ்லாமியத்தை (Islamism) வெளியேற்றுவது தான்” [1].
ஒரு தேசமாக, இந்தியாவில் இந்த பிரசினைக்கு நீண்ட காலத் தீர்வு காண்பதற்கான வாய்ப்பை அயோத்தி இயக்கம் ஏற்படுத்தியது. ஆனால், இன்று திரும்பிப் பார்க்கையில் இந்திய முஸ்லிம்களிடம் இஸ்லாமியம் அதிகரித்துக் கொண்டிருப்பதைத் தான் காண நேர்கிறது. தொடர் குண்டுவெடிப்புகளும், பர்தா போடாத பெண்கள் கல்லெறி படுதலும், கலை சுதந்திரத்தை முடக்கும் அச்சுறுத்தல்களும் இதன் சாட்சியங்கள். கடும் அடிப்படைவாத கருத்துக்கள் முஸ்லிம் இளைஞர்கள் மனதில் நஞ்சாக ஏற்றப் படுகின்றன. இவை முஸ்லிம்களை உள்ளிருந்தே அழித்துக் கொண்டிருக்கின்றன. இந்திய தேசியத்திற்கு எதிரான ஒரு மாபெரும் அபாயமாக இது வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரழிவிற்கு எதிராக, தங்கள் மீட்சியை இந்திய முஸ்லிம்கள் தாங்களே தான் தேடிக்கொள்ள வேண்டும். அமைதியிலும் இந்திய தேசியத்திலும் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள் முன்வர வேண்டும். அரசும், ஒட்டுமொத்த சமூகமும் அதற்கு ஊக்கமும் உதவியும் அளிக்க வேண்டும்.
அதற்கான வழிகள் உள்ளன. கபீர்தாசரின், உஸ்தாத் பிஸ்மில்லா கானின், பீர் முகமது அப்பாவின், டாக்டர் அப்துல் கலாமின் வழி. இந்த மண்ணின் பண்பாட்டுச் செழுமையுடன் தங்களைப் பிணைத்துக் கொண்டு நல்லிணக்கத்துடன் வாழும் வழி. நவீனக் கல்வியும், அறிவியலும், ஜனநாயகமும் உருவாக்கும் சுதந்திர வெளிகளின் வழியே தங்களது மதத்தின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளை, பெண் அடக்கு முறைகளை, வன்முறை சித்தாந்தங்களை விமர்சித்து நிராகரிக்கும் வழி.
“[உண்மையான] மதம் என்பது எப்போதும் கருத்து நெறிகளாகவே இருக்க வேண்டும். கட்டளைகளாக இருக்க முடியாது. அது கட்டளைகளாக மட்டுமே கீழிறங்கும் போது, மதம் என்ற மதிப்பை இழக்கிறது. ஒரு உண்மையான மத ஆசாரத்திற்கு இலக்கணமாக உள்ள பொறுப்புணர்வை அத்தகைய மதம் கொன்று விடுகிறது.” [2]
நவ பாரத சிற்பி அம்பேத்கரின் சொற்கள் இவை. டிசம்பர் 6 அவர் பரிநிர்வாணம் அடைந்த தினம்.
இந்திய சமூகத்தில் நல்வழிகளை நினைவுறுத்தும் நாளாக இந்த நாள் அமையட்டும்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
சான்றுகள்:
[1] Ayodhya: The Case against the Temple by Koenraad Elst, Chapter 13.
[2] “Religion must mainly be a matter of principles only. It cannot be a matter of rules. The moment it degenerates into rules, it ceases to be a religion, as it kills responsibility which is an essence of the true religious act”.
டிசம்பர் 6 துக்கமான நாள். மைனாரிட்டி சமுகம் கெடுபிடிக்கு எத்தனை ஆண்டுகள் பெருவாரியான சமுக மக்கள் பயந்து பயந்து ரயில் பஸ் கோயில்களுக்கு
செல்லவேண்ட்டிருக்கிறது வேற்றுமையில் ஒற்றுமை என்பது பொய்யான அரசியல்வாதிகளின் பொய்யான வாதம்
என் நம்பிக்கை ஒன்றே போதும், அதன் அடிப்படையில் மசூதியை, இல்லை இல்லை கும்பட்டத்தை, அட வேண்டாம் ஒரு கக்கூசை நான் போய் இடித்துக் கொள்ளலாம் என்றால் கோர்ட், சட்டம் எல்லாம் எதற்கு? ஜடாயு வீட்டு சமையலறை என் முப்பாட்டனின் ஜன்மபூமி, என் வரையில் புனிதமானது, அங்கே கடுகு தாளிப்பது என் முப்பாட்டனைக் கேவலப்படுத்துகிறது என்று நான் போய் இடித்தால் ஜடாயு, ஆஹா என்ன பக்திமான் இந்த ஆர்வி என்று கை தட்டுவாரா? 1949-இல் நடந்த “அதிசயம்” போல ஜடாயு குடும்ப்ம் வெளியூர் போயிருக்கும்போது “தானாகவே” ஒரு அறையில் என் முப்பாட்டனின் உருவப்ப்டம் வைக்கப்பட்டு அதை வழிபட என் சுற்றத்தினர் கூட்டம் கூட்டமாக வந்தால் அதை ஜடாயு எப்படி எதிர்கொள்வாராம்?
கேஸ் நடக்கிறது, அது முடியும் வரையில் பொறுக்காமல் ரதயாத்திரை மாதிரி ஆரம்பித்தால்தான் அரசியல் ரீதியாகப் பயனடையலாம் என்று ஆரம்பிக்கப்பட்ட பச்சை அயோக்கியத்தன அரசியல் இது.
ஒரு hypothetical கேள்வி. ஒரு வேளை தீர்ப்பு வேறு மாதிரி வந்திருந்தால் அதை ஹிந்த்துத்துவர்கள் ஏற்றுக் கொண்டு சட்டத்தை மதித்திருப்பீர்களா? அப்படி சட்டத்தை மதிப்பது முக்கியமாக இருந்தால் சட்டத்தை மீறிய நாளை நினைவு கொண்டு பெருமைப்படுவது ஏன்?
ஆர்வி, சுதந்திர தாகம் எழுந்த தருணத்தில் தேசபக்தியே பச்சை அயோக்கியத்தன அரசியல் என்று தான் ஒரு சாராரால் வசைபாடப் பட்டது. நினைவிருக்கட்டும். கோடிக்கணக்கான இந்துக்களின் இதய நாதம், உயிர்விலும் உணர்விலும் கலந்த விஷயம் ராம ஜன்ம பூமிக்கான போராட்டம்.
இந்த பிரசினையை ஒரு “கோர்ட் கேஸாக” அல்லது நிலத்தகராறாக அல்லது சட்ட பிரசினையாக அல்லது வாக்கி வங்கி அரசியலின் துருப்பு சீட்டாக *மட்டுமே* பார்த்த அயோக்கிய பச்சை நேருவிய போலி மதச்சார்பின்மை மனநிலை தான் 1992 கும்மட்ட இடிப்புக்கு வழிவகுத்தது. உயிரிழப்புகளுக்கும் கலவரங்களுக்கும் காரணமானது. நீங்கள் இங்கு நீட்டி முழக்கி கேட்டிருக்கும் எத்தனையோ முறை பதிலளிக்கப் பட்ட கேள்விகள் அந்த மனநிலையைத் தான் பிரதிபலிக்கின்றன.
சத்தியம் என்ன என்பது எல்லாருக்கும் தெரியும். சட்டமும் தீர்ப்பும் அதை உரத்துச் சொல்லியிருக்கின்றன. அவ்வளவே. அபத்தமான hypothetical கேள்விகள் இந்த விஷயத்தில் அர்த்தமற்றவை.
ஆர்வீ கேட்டுள்ள கேள்விகள் அவருக்கு இந்த கும்மட்டம் அல்லது மசூதி பற்றி ஒன்றும் புரிய வில்லை என்பதை பட்டவர்த்தனமாக தெரிவிக்கிறது.
1. முதல் கேள்வி இவரைப்போன்ற பேர்வழிகள், 1992-க்கும் முன்னரே 1989-1991 ஆகிய ஆண்டுகளில் முப்பதுக்கும் மேற்பட்ட , இந்து கோயில்கள் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் வி பி சிங்க் போன்ற மாதப் பிரதமர் ஆட்சிக்காலத்திலும், கூட இடிக்கப்பட்டபோது, , என்ன செய்துகொண்டிருந்தீர்கள் ? ( ஆதாரம் பார்லிமெண்டில் மத்திய அமைச்சரே அளித்துள்ள தகவல்கள்.) அந்த இந்து கோயில்கள் மக்கள் வழிபாட்டுக்கு பயன்படுத்திய கோயில்கள். ஆனால் பல ஆண்டுகளாக பாழடைந்து எந்த நேரமும் தானே இடிந்து விழலாம் என்று இருந்த ஒரு பழைய கட்டிடத்தை சில நபர்கள் இடித்தபோது இப்படி கூக்குரல் போடும் ஆர் வீ 1992- ஆம் ஆண்டில் தான் பிறந்தாரா? 1992-லே இடித்தவர் அநீ அல்ல. இடித்தவனைப் போய்க்கேளு தம்பி.
2. சட்டம் நீதி ஆகியவற்றை காஷ்மீர் இஸ்லாமிய ஆதிக்கம் தங்கள் கால்களில் போட்டு மிதித்தபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்.?
3. நல்ல உதாரணம். உங்கள் அப்பா உங்களுக்கு உயர்வு என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். யாரும் மறுக்கவில்லை. ஆனால் உங்கள் அப்பா உங்கள் குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கு மட்டுமே வழிபாட்டுக்கு உரியவர். ஆனால் கோடிக்கணக்கான இந்துக்களின் தெய்வம் ராமபிரான் பிறந்த இடத்தைப்போல , உங்கள் அப்பாவும் கோடிக்கணக்கான மக்களால் வழிபடப் படுபவராக இருந்தால் தான் இப்படி ஒப்பிட்டு பேசலாம். என்ன அறிவோ ?
4. முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இஸ்லாமிய தீவிரவாதி பாபரால் இடிக்கப்பட்டு , மசூதியாக மாற்றப்பட்ட இடத்தில் , இராமனுக்கு கோயில் எழுப்புவதில் கட்டுவதை இந்திய முஸ்லீம்கள் யாரும் எதிர்க்கவில்லை. அந்த பழைய கட்டிடம் யாரோ சிலரால் இடிக்கப்பட்டதை இங்கு யாரும் ஆதரிக்க வில்லை. ஆனால் உங்களைப் போன்ற நண்பர்கள் காஷ்மீரில் இந்து கோயில்கள் இடிக்கப்பட்டபோது வாய் மூடி இருந்துவிட்டு, இதற்கு கூக்குரல் இடுவது சரியா ?
5. கடவுள் நம்பிக்கை இல்லாதவனை இன்பிடல் ( infidel ) என்று சொல்லி , அவர்களை அதாவது நாத்திகர்களை உடனே கொன்றுவிடும்படி , இஸ்லாமிய மக்களுக்கு மத கட்டளைகள் உள்ளன. அதன் பிறகு, இஸ்லாம் அல்லாத மதங்களை சேர்ந்தவர்களை கொல்லவும் மதக்கட்டளைகள் உள்ளன. உங்களுக்கு விவரம் தெரிய வேண்டுமென்றால், , iraiyillaislam , tamil .alisina .org ,senkodi.wordpress .com ,faithfreedom .org ஆகிய தளங்களில் சென்று படித்து, உண்மைகளைப் புரிந்து கொள்க.
6.உத்திரப்பிரதேசத்தில், ஷியாக்களின் கல்லறையை சன்னிகள் ஆக்கிரமித்துக்கொண்டு , உச்ச நீதி மன்ற தீர்ப்பு வந்து அறுபது ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த தீர்ப்பு அமுல் செய்யப் படவில்லை. ஏனய்யா ஆர்வீ அவர்களே, உங்கள் சட்டம் எங்கே போயிற்று ? ஏனிந்த மௌனம் ?
7. அன்பும், சஹோதரத்துவமும் எப்போது வெளிப்படும் , ? ஒவ்வொருவனும் மற்றவனை அவமதிக்காமல் இருக்கவேண்டும் ? ஆனால் இஸ்லாமியர்களோ , உருவங்கள் மூலம் கடவுளை வழிபடும் , இந்துக்களையும், பவுத்தர்களையும் , ஜைனர்களையும், காபிர்கள் என்று சொல்லி, கேவலமாக பேசுவதுடன் , காபிர்களை கொல்லவேண்டும் என்று மத நூலில் சொல்லி உள்ளது என்று சொல்லி , வெடிகுண்டு முதலிய தற்கொலைப்படை வேலைகளில் இறங்குகிறார்களே ? இதனைப்பற்றி ஆர்வீ என்ன சொல்கிறார் ?
8. கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் , பிறரை கொல்ல சொல்லும் மதங்களை விட, நாத்திகமே உயர்வானது. நாத்திகர்கள் கூட சொர்க்கத்துக்குப் போவார்கள். ஆனால்
.பிற மதங்களை அழிக்க நினைக்கும் ஆபிரகாமியர் முழு நிரந்தர நரகத்துக்கே செல்வார்கள்.
9. ஆபிரகாமிய மதமாற்ற மதங்கள் மாறட்டும்., மனிதநேயம் நிலைக்கட்டும். கூட்டம் சேர்த்து ரவுடித்தனம் செய்வது மதமா ?
10. 11-9-2001- அன்று இரட்டை கோபுர தாக்குதலில் ஏராளமான இந்தியர்களும் இறந்துள்ளனர். அப்படி இருக்க, இந்தியர்களை கொன்ற அந்த பேடித்தனமான சதி திட்டத்துக்கு காரணமான ஒசாமா பின் லேடனின் மரணத்துக்கு சென்னையில் ஒரு மசூதியில் அஞ்சலி கூட்டம் நடத்தினார்களே, அப்போது எங்கே போனார் நண்பர் ஆர்வீ ?
11. சிறிதாவது நாம் சிந்தித்தால், பல உண்மைகள் விளங்கும். அன்பு, அமைதி என்பது ஒருவழிப்பாதை அல்ல.நான் பிறரை நேசித்தால் , பிறரும் என்னை நேசிப்பார்கள்.நான் பிறரை கொல்ல நினைத்தால், பிறரும் என்னை கொல்ல நினைப்பார்கள். நான் இட்டலி சாப்பிட வேண்டுமா அல்லது கஞ்சி குடிக்கவேண்டுமா என்பதை நான் தான் முடிவு செய்யவேண்டும். நீ இட்டலி சாப்பிடக் கூடாது, கஞ்சி தான் சாப்பிட வேண்டும் என்று யாராவது என்னை கட்டாயப்படுத்தியோ, பயமுறுத்தியோ நிர்ப்பந்தப் படுத்துவது ,நடக்க விடமாட்டேன். அனைவர் நிலையும் இதுதான்.
12. ஒரு மதத்தினர் பிற மதத்தினரை கொல்ல நினைத்தால், உலகில் அமைதி இருக்காது. இதனைத்தான் அலிசினா போன்ற உண்மைப் பகுத்தறிவாளர்கள் சொல்லுகிறார்கள். ஆர்வீ அவர்கள் சிறிது அவற்றைப் படித்து மகிழட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
ஜடாயு,
முலயமையும் நரசிம்ம ராவையும் பதவியிலிருந்து இறக்கி பா.ஜ.க. பதவிக்கு வர முடியும். வரவும் செய்தது என்று வரலாறும் இருக்கிறது. வெள்ளையர் அரசையும் இந்த அரசுகளையும் ஒரே தட்டில் வைப்பது அபத்தம் என்று நான் உங்களுக்கு சொல்ல வேண்டி இருப்பது ஆச்சரியப்படுத்துகிறது.
கோடிக்கணக்கான ஹிந்துக்களின் இதய நாதம்! இங்கே எது உங்களுக்கு முக்கியமாகப் படுகிறது? கோடி என்ற கணக்கா? ஒரு செய்கையை எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள் என்பதுதான் அந்த செய்கையை சரி தவறு என்று நிர்ணயிக்கிறதா? சரி அப்படியே வைத்துக் கொள்வோம், அப்படி என்றால் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் இதய நாதம் ஒரு பொருட்டே இல்லையா? என்னைப் போன்ற ஹிந்துக்கள் கோடிக்கணக்கில், சரி உங்கள் கண்ணில் நூற்றுக்கணக்கில் இருக்க மாட்டோமா? எங்கள் இதய நாதம் என்னாவது?
மதச்சார்பற்ற ஒரு அரசு “இந்த பிரசினையை ஒரு “கோர்ட் கேஸாக” அல்லது நிலத்தகராறாக அல்லது சட்ட பிரசினையாக” மட்டுமேதான் பார்க்க முடியும். இதை வாக்கு வங்கி அரசியலின் துருப்புச்சீட்டாக பயன்படுத்தியது அத்வானியே! இல்லாவிட்டால் பா.ஜ.க. எங்கே ஆட்சியைப் பிடிப்பது?
எத்தனை முறை நீட்டி முழக்கிக் கேட்டாலும் பதில் வருவதில்லை, சப்பைக்கட்டுகளே வருகின்றன. உங்களிடமிருந்தும் அப்படித்தான்!
திரு RV அவர்களே! 16 ஆம் நூற்றாண்டில் அதாவது 1528 ல் பாபரின் தளபதியான “மீர் பாக்கி” என்பவன் ராமர் கோவிலை இடித்துவிட்டு மசூதியை கட்டினான் 1521 ல் (அதாவது அது மசூதி ஆக மாறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்) குருநானக் அவர்கள் ராமர் கோவிலுக்கு சென்று வணங்கியுள்ளார். இத்தகவல் “குரு கரந்த சாஹிப்” என்ற நூலில் பக்கம் எண் 418 ல் உள்ளது.
அப்சல் பசல் என்பவர் “ஜன-இ-அக்பரியில்” கீழ்கண்டவாறு எழுதியுள்ளார் Ayodhya is the place of Ramachandra’s residence.
11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த “கதா சரிதா சாகரா” என்ற நூல் ஏற்கனவே இருந்த ராமர் கோவிலை விக்ரமாதிதயர் புனர் நிர்மாணம் செய்தார் என்று கூறுகிறது.
அந்த மசூதி என்பதே நமது அடிமைச் சின்னம். நாம் அதை சுதந்திரம் அடைந்த பின்னும் அதை வைத்திருக்கலாமா? அந்த மசூதியில் தொழுகை கூட நடக்காதபோது உமக்கு அது குறித்து எதற்கு அழுகை?
RSS தலித்துக்களை மதிப்பதில்லை என்று குற்றசாட்டு வைப்பார்கள். ஆனால் ஒரு தலித் சகோதரை கொண்டு கோவிலுக்கு அடிக்கல் நாட்டினால் அதை கண்டு கொள்ளவே மாட்டார்கள். கேவலம் ஒரு கும்மட்டதை இடித்ததற்காக 400 உயிர்களை கொன்ற செய்தி குமட்டவில்லையா உங்களுக்கு? அடாவடித்தனமாக அடுத்தவன் kitchen ஐ ஆகிரமித்துவிட்டதாக ஆவேசப் படுகிறீர்களே! உண்மையில் ஆக்கிரமித்தது யார்? அப்படியே இந்துக்கள் அதை ஆகிரமித்திருந்தாலும் ராஜீவ் காந்தி எதற்கு சிலான்யாசுக்கு அனுமதி கொடுத்தார்.? நிறுத்தியிருக்கலாமே!
/////ஒரு hypothetical …………………………………………………………………………மதிதிருப்பீர்களா?////
Shah Banu (73 வயது) வின் கணவன் Md Ahamed Khan அவரை தலாக் செய்தான். Supreme court 23.4.85 ல் Code of criminal procedure ன் பிரிவு 125 ன் படி Shah Banu
விற்கு alimony வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. முஸ்லிம்கள் கொதித்தெழுந்து தங்களுடைய Personal law வினை காப்பாற்ற எதையும் தியாகம் செய்ய தயார் என்று கலவரம் செய்தனர் வீதிக்கு வந்து. அப்போது அவர்கள் விதியை (law ) மதித்தார்களா? மகளிர்களுக்காக போராடுகிறோம் என்று வீரமுழக்கமிடும் women ‘s rights activists வாய் மூடி இருந்ததேன்? ஷா பானு ஒரு பெண் இல்லையா? அலியா? அதனால்தான் அவர்களுக்கு alimony தேவையில்லை என்று விட்டுவிட்டார்களா? அது போகட்டும். கோர்ட் தீர்ப்பை எதிர்த்து சட்டத்தை மாற்றிய ராஜீவ் காந்தி சட்டத்தை மதிப்பவரா? சோமநாதபுர கோவிலை முஸ்லிம் ஆக்கிரமிப்பாளன் கஜினி இடித்தான் என்பதையாவது ஒத்துகொள்வீர்களா? அல்லது அதுவும் பொய் என்பீர்களா? அது மெய் என்றால் ராமர் கோவிலை ஆக்கிரமித்ததும் மெய்யே. அதை இடிப்பதில் தவறே இல்லை. எப்படி அரசுக்கு சொந்தமான இடத்தில கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கபட்டதோ அதே போல இந்துக்களுக்கு சொந்தமான இடத்தில கட்டப்பட்ட அந்த அவமான சின்னமான கும்மட்டமும் இடிக்கப்பட்டது.
திரு கதிரவன் அவர்களே! RV அவர்களை பார்த்து “1992 க்கும் முன்னரே……………………………என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று ஒரு கேள்வி கேட்டீர்கள் அல்லவா? அதற்கு அவர் பதில் சொல்லமாட்டார். அதற்கு நான் பதில் சொல்லட்டுமா? அவர் அப்போது இந்த NATION ல் இல்லை. அவர் HIBERNATION (=செறிதுயில்) ல் இருந்தார். இப்போதுதான் துயில் கலந்து மயில் மாதிரி வந்தார். மசூதி இடித்ததை அறிந்து புயல் மாதிரி கேள்விகளை வீசுகிறார். நீங்கள் குறிப்பிட்டுள்ள சில இணைய தளங்களை படித்தால் அந்த புயல் சின்னம் கரையை கடந்துவிடும். பின்னர் அது (மசூதி) ஒரு அவமான சின்னம்தான் மூன்று முறை அடித்து சொல்லுவார். அப்புறம் அவரை அடிச்சிக்க ஆளே இருக்காது.
ஜடாயு அவர்கள் பொறுமையாக RV க்கு பதில் சொல்லி இருக்கின்றார். நானாக இருந்து இருந்தால் இந்த அபத்தகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க மாட்டேன். சப்ஜெக்ட்ல் குறைந்த பட்ச வாசிப்பு கூட இல்லாத ஒருவரிடம் வாதாடி என்ன பண்ண போகின்றீர்கள். போர்டல் போர்டல் ஆக போயி அக்கப்போரு கூடுவதுதான் இவர்களின் முக்கியமான பொழுதுபோக்கு.
திரு RV அவர்களே, நீங்கள் எப்பொழுதேனும் சுந்தந்திர தினம் கொண்டாடவுது உண்டா. எதனால் கொன்ன்டாடுகிரீர்கள் என்று ச்ற்று சிங்க்ஹித்ததுண்டா. ஏன் எப்பொழுதும் அடிவருடி பிழைக்க வேண்டும் என்ற சிந்தனை.
திரு.ஹானஸ்ட் மேன்.
//எப்படி அரசுக்கு சொந்தமான இடத்தில கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கபட்டதோ அதே போல இந்துக்களுக்கு சொந்தமான இடத்தில கட்டப்பட்ட அந்த அவமான சின்னமான கும்மட்டமும் இடிக்கப்பட்டது.//
முள்ளிவாய்கால் முற்றத்தை யாரும் அத்துமீறி கட்டவில்லை… அது நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் என்பது தெரிந்து தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் இசைவு பெற்று அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்து முறையாக தான் கட்டப்பட்டது. அதற்க்கான ஆதாரங்களை பழ.நெடுமாறன் அப்போதே அளித்துவிட்டார். இது அணைத்து செய்தி ஊடகங்களிலும்( ஜூனியர் விகடன், தமிழக அரசியல், நக்கீரன்) வெளியானது. ஆகவே, முள்ளிவாய்கால் நினைவு சின்னத்தினை இடித்தது ஜெயலலிதாவின் அப்பட்டமான அரசியல் காழ்புணர்ச்சி என்பதை தவிர வேறு எந்த முறைகேடுகளும் கிடையாது . எனவே, பாபர் மசூதி விவகாரத்துடன் இதை இணைத்து முடிச்சு போட வேண்டாம் என்று தங்களை மிக அன்போடு கேட்டு கொள்கிறேன்.
உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள். முதலில் உங்களை நீங்கள் தமிழராக உணருங்கள். இந்துவாக இருப்பது இந்தியனாக இருப்பதை எல்லாம் நாம் பிறகு பார்த்துக்கொள்வோம்.
அய்யா திரு தாயுமானவன் அவர்களே கவிப்பேரரசன் கம்பன் தமிழன்தானே ? அவர்தான் கம்பராமாயணம் எழுதினார் என்றாவது தெரியுமா? தமிழனும் ஹிந்துதான் என்பதை உணருங்கள். குஜராத் கலவரத்தில் இறந்த முஸ்லிம்களுக்காக வக்கலதுவாங்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஏன் மற்ற மாநில முஸ்லிம்களிடம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக காங்கிரெஸ் மற்றும் தி மு க விற்கு எதிராகக் குரல் கொடுக்க சொல்லவில்லை. அவர்களுக்கு தமிழர்கள் பற்றிய்ய அக்கறை இல்லை. இஸ்லாமியருக்கு வக்காலத்து வாங்கும் திராவிட அறிவு ஜீவிகள் ஏன் அவர்களை தமிழில் தொழுகச் சொல்வதில்லை?
//உங்களை நீங்கள் தமிழராக உணருங்கள். இந்துவாக இருப்பது இந்தியனாக இருப்பதை எல்லாம் நாம் பிறகு பார்த்துக்கொள்வோம்.//
இன்னும் எத்தனை காலம்தான் இதை சொல்லபோகிராமோ!! இன்னும் 56 தேசமாகத்தான் இருக்கின்றோமே தவிர பாரதம் என்ற உணர்வு வரவில்லை.
வருத்தப் பட வேன்டிய விஷயம்.
எதைப் பற்றி பேசுகிறோம் என்பதைக் கூட உணராமல் என்னென்னவோ பேசும் கதிரவன், ஹானஸ்ட் மான், வந்தியத்தேவன். அதுவும் ஹானஸ்ட் மானும் வ. தேவனும் நல்ல காமெடி பீஸ்களாக இருக்கிறார்கள்
வ. தேவன், சுதந்திர தினம் கொண்டாடுவதற்கும் ஜடாயு-நான் விவாதிப்பதற்கும் என்ன தொடர்பு? அதுவும் எப்பொழுதேனும் கொண்டாடுவது உண்டா என்கிறீர்கள், அடுத்த வரியில் ஏன் கொண்டாடுகிறாய் என்கிறீர்கள், உடனே அடிவருடல் என்கிறீர்கள்! உளறுவதற்கும் ஒரு எல்லை வேண்டும்.
ஹானஸ்ட் மான், நீங்கள் என்ன ப(வெ)ட்டிமன்றப் பேச்சாளரா? மூழ்காத ஷிப் ஃப்ரெண்ட்ஷிப் என்று ஒரு காலத்தில் பேசுவார்கள், அதைப் போல நேஷன் ஹைபர்நேஷன் என்கிறீர்கள். துயில் கலைத்து மயில் போல வந்தார் என்கிறீர்கள். ஏன் அத்தோடு நிறுத்திவிட்டீர்கள்? ஜெயிலில் இருந்து துயில் கலைத்து மயில் போல ஒயிலாகவும் க்ரிஸ் கெய்ல் போல அடித்தும் ஆடுகிறேன் என்று எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே!
கதிரவன், யாராவது ஷா பானோ தீர்ப்பை மாற்றி சட்டம் கொண்டு வந்த நாளை சிலிர்ப்புடன் நினைவு கூர்வோம், இல்லை பாபர் கோவிலை இடித்த நாளைக் கொண்டாடுவோம் என்றொ எழுதினால் அதைக் கண்டித்து வாதிடலாம். அப்படி யாரும் எழுதுவதாக எனக்குத் தெரியவில்லை. அவனைத் திருந்தச் சொல், அப்புறமா நான் திருந்துகிறேன் என்பதெல்லாம் நாயகன் சினிமாவுக்கு சரிப்படும். கருணாநிதி இப்படித்தான் ஜெயலலிதா திருடலியா என்கிறார். ஜெ கருணாநிதி யோக்கியனா என்கிறார். இரண்டு பேரும் அயோக்கியர்கள் என்றுதான் அனேக தமிழர்கள் நினைக்கிறார்கள். கருணாநிதியின் ஊழல் ஜெ.யின் ஊழலை நியாயப்படுத்த முடியாது and vice versa. சட்டத்தை மீறி மசூதியை சரி வேண்டாம் கும்மட்டத்தை சரி அதுவும் வேண்டாம் கக்கூசை இடித்த நாளை சிலிர்ப்புடன் நினைவு கூர்வதாம்! ஒரு ஹிந்து என்கிற முறையில் அதற்காக தலை குனிய வேண்டும் அய்யா! பெருமைப்படுகிறீர்களே!
லட்சக்கணக்கான கன்னடிகர்கள் காவேரி மீது தமிழர்களுக்கு உரிமை இல்லை என்று நினைக்கிறார்கள். என்ன செய்யலாம்? எத்தனை பேர் ஒரு செயலை ஆதரிக்கிறார்கள் என்பது ஒரு செய்கையை நியாயப்படுத்தாது என்ற அற்ப விஷயத்தைக் கூட வெளிப்படையாக சொல்லத்தான் வேண்டுமா? அறுபது எழுபது வருஷங்களுக்கு முன் கூட தலித்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்றுதான் பெரும்பான்மை ஹிந்துக்கள் நினைத்தார்கள். இன்று லட்சம் கோடி என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஹிந்துத்துவர் யாருக்காவது ஆம் எண்ணிக்கையே சரியான வழி, அதனால் அன்றைய ஆலயப் பிரவேச சட்டங்கள் அநியாயமானவை என்று சொல்லக் கூடிய தார்மீக நேர்மை இருக்கிறதா?
எல்லாம் கிடக்கட்டும் கதிரவன், அநீ இடிக்கவில்லை என்று எழுதி இருக்கிறீர்களே, இந்த விவாதத்தில் அநீ எங்கே வந்தார்? உருப்படியாக வாதிடக் கூடிய ஹிந்துத்துவர்கள் ஏன் இவ்வளவு குறைவாக இருக்கிறீர்கள்?
//ஒரு வேளை தீர்ப்பு வேறு மாதிரி வந்திருந்தால் அதை ஹிந்த்துத்துவர்கள் ஏற்றுக் கொண்டு சட்டத்தை மதித்திருப்பீர்களா? அப்படி சட்டத்தை மதிப்பது முக்கியமாக இருந்தால் சட்டத்தை மீறிய நாளை நினைவு கொண்டு பெருமைப்படுவது ஏன்?//
தகுந்த ஆதரங்களுடன் வழக்கில் நம் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை நிரூபித்தது, ASI அதாவது இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக்கழகம் அளித்த ஆணித்தரமான ஆதாரம், வரலாற்று ஆசிரியர்களின் அவ்வப்போதைய பதிவுகள், இத்தனை நம்பகமான தரவுகளுக்குப் பிறகும் வேறு மாதிரி தீர்ப்பு எவ்வாறு வரும்? நாங்கள் ஏன் வேறு மாதிரி தீர்ப்பை முன்கூட்டியே எதிர்நோக்கி பதிலை தயார் செய்ய வேண்டும்? வந்தா மலை என்று இறங்குகிறவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. சட்டத்தை மீறிய நாளை நினைவு கொண்டு பெருமைப் படுவதாக அர்த்தமாகாது.
கட்டடம் இடிபட்ட காரணம் ஒன்று தான் அடிமனை ஹிந்துக்களின் புனித இடம் என்பதை நிரூபிக்க ஏதுவானது. இல்லாவிடில் ASI போன்ற அரசு நிறுவனங்களை உள்ளே புகுந்து ஆய்வு செய்ய அனுமதித்திருப்பார்களா?
வாதங்களுக்கு ஆரோக்கியமான எதிர் “”வாதம்”” புரியாமல் நான் என்ன சொல்லி உள்ளேன் என்பதும் புரியாமல் (அல்லது புரிந்து கொள்ளாமல்) எனது ஒவ்வொரு word யையும் Sword கொண்டு dissection செய்து அதை “”வதம்”” செய்வதில்தான் ஆர்விக்கு ஆர்வம் போலும்!.
உங்கள் மஞ்சள் காமாலை கண்ணுக்கு பட்டிமன்ற பேச்சாளர் எல்லாம் வெட்டி மன்ற பேச்சாளர்களா? மூழ்காத ship தான் friendship என்பது “””ஒரு காலத்தில்””” பேசுவார்கள் என்று கூறும் நீங்கள் என்ன “”பாட்டி”” மன்ற பேச்சாளரா? எனது 42 வரி வாதத்திற்கு 4 1/2 வரி வாதம் போதுமா? நீங்கள் அடுத்த வருடம் ஜன- வரி வந்தாலும் என் வினாக்களுக்கு உருப்படியான ஒரு வரி விடை கூட தரமாட்டீர்கள். மயில் என்பது மென்மையை குறிக்கும். புயல் என்பது வன்மையை குறிக்கும் தூக்கத்திலிருந்து எழுந்தவர்கள் கொஞ்சம் நிதானமாக (அதாவது மென்மையாக) இருப்பார்கள் அதனால் மயில் என்றேன். தூக்கத்தில் இருக்கும்போது அக்கம்பக்கத்தில் நடப்பது தெரியாது. எழுந்தபின் தான் தெரியும். Hibernation லிருந்த அவர் (அதாவது RV ) மசூதி இடிப்பை கேள்விப்பட்டு புயலாக மாறிவிட்டார் என்று கூறினேன். இதில் என்ன தவறு கண்டீர்? சொற் குற்றமா? அல்லது பொருட் குற்றமா? இப்படி சொன்னதால் நான் ஒரு comedy piece ஆ? உமது மறுமொழிகள் எல்லாம் Master – piece ஆ? கீழே படியுங்கள் உங்கள் வாதங்களை எல்லாம் piece piece ஆக ஆக்குகிறேன்.
Jail க்கும் விளையாட்டு வீரர் Gail க்கும் என்னய்யா சம்பந்தம்? சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசும் நீர் எங்களை பார்த்து “என்ன பேசுகிறோம் என்பதை உணராமல் பேசும்” என்று எங்களை பார்த்து குறை கூறுகிறீர் இந்த உமது குற்றசாட்டு குறித்து .உங்களுக்கு நான் பதில் சொல்லுவதை விட திரு பாண்டியன் (7-12-13 அன்று கூறியுள்ள) பதிலே உங்களுக்கு போதும்.
திரு தாயுமானவன் என்றுமே “நியாயமானவ(ர்)ன்” தான். சரி அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அந்த இடிப்பை செய்திருந்தால் நீதி மன்றத்தில் JJ மேல் வழக்கு தொடுக்ககூடாதா? உங்களிடம் ஒரு சிறிய கேள்வி.” இந்தியனாக இருப்பதை பிறகு பார்த்துகொள்ளலாம்”.என்று கூறுகிறீர்கள். அது எப்போது? Date சொல்லுகிறீர்களா? ஒரு அம்மா தன மகனை பார்த்து “””நீ எனக்கு மகனாக இரு, உன் மனைவிக்கு கணவனாக இருப்பது குறித்து அப்புறம் பார்த்து கொள்ளலாம்””” என்று சொன்னாளாம்! திருமணம் ஆகிவிட்டபின் அம்மாவுக்கும் மகனாகவும் மனைவிக்கு கணவனாகவும் simultaneous ஆகத்தான் இருக்கவேண்டும். அதே போல தமிழனாகவும் இந்தியனாகவும் ஒரே நேரத்தில் இருக்க வேண்டும். அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்பதெல்லாம் கூடாது. OK ?
மீண்டும் RV இடம் வருகிறேன். பாபர் மசூதி இடித்த நாளை வெக்கமின்றி துக்கநாளாக துலுக்கர்கள் கொண்டாடவில்லையா? (அல்லது அனுசரிக்கவில்லையா?) அதை நீர் கண்டித்து வாதிட்டீரா? எண்ணிக்கை முக்கியமல்ல (நாம் கொண்ட) எண்ணம்தான் முக்கியம் என்கிறீர்கள். சரிங்க. பார்லிமெண்டில் ஒரு நல்ல எண்ணம் கொண்ட மகளிர் மசோதா கொண்டு வந்த போது போதிய (ஆதரிப்போர்) எண்ணிக்கை இல்லாததால் தோற்றுவிட்டதே! அங்கே எண்ணிக்கை முக்கியமா எண்ணம் முக்கியமா? நீங்கள் சொல்லிய வண்ணம் நடந்ததா? ஆகவே எண்ணிக்கை தான் ஜெயிக்கும் என்பது திண்ணம். எண்ணிக்கை is immaterial என்று கூறும் நீங்கள் “”உருப்படியாக வாதாடுவோர் இவ்வளவு குறைவாக இருக்கிறார்களே”” என்று வருத்தபடுவது ஏன்? குறைவாக இருப்பவர்கள் நியாயமாக வாதாடினால் ஏற்று கொள்ளமாட்டீரோ? என்னே ஒரு முரண்! உங்களுக்கு பொய் புகல்வது ஒன்றே அரண்.
திரு கதிரவனின் 7-12-13 தேதியிட்ட மறுமொழியை மறுபடியும் படியுங்கள் அவர் எங்கேயாவது ஷா பானு பற்றி எழுதியுள்ளாரா? நான் எழுதிய விஷயத்தை கதிரவனிடம் (உங்களது மறுமொழியின் 4வது பாராவை பாருங்கள்)
ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? அவர்தான் அநீ பற்றி குறிப்பிட்டு ஒரு பெரிய அநீதி இழைத்து விட்டார். ஆனால் நீர்?ஒருவர் மீது சுட்டு விரல் கொண்டு குற்றம் சாட்டும்போது 3 விரல்கள் உம்மை நோக்கி உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.
அன்பின் ஹானஸ்ட்மேன்
ஸ்ரீ ஆர்.வி இந்த தளத்தின் மூத்த வாசகர்.
மிகக் கடுமையான எதிர்வாதங்களை முன்வைப்பவர். எதிர்வாதங்கள் சில சமயம் (கு) தர்க்க பூர்வமாக இருப்பினும் சரி.
உங்களுடைய உத்தரங்களில் நீங்கள் எதுகை மோனையை வலிந்து ப்ரயோகம் செய்வது அவரால் பகடி செய்யப்படுகிறது. உங்களுடைய கவனம் எதுகை மோனையில் அதிகம் சென்றால் நீங்கள் கூர்மையாக பகிர விரும்பும் கருத்துக்களில் மனம் செல்லாது வாசகங்களின் அழகில் மனம் செல்லும். கருத்துக்கூர்மை மிக வேண்டிய உங்கள் உத்தரங்களில் கருத்தாழம் குறையலாம். நீங்கள் அழகாகக் கருத்துப் பகிரும் அன்பர். உங்கள் கருத்தாழம் மிக்க உத்தரங்கள் தொடர வேண்டும் என்ற ஆதங்கத்தில் இதை பகிர்கிறேன்.
விவாதாஸ்பதமான கட்டிடம் அயோத்தியில் இடிக்கப்பட்டது. இதை ஹிந்துக்கள் நிலத்தகறாராக முன் வைக்கவில்லை. வைக்கக்கூடாது.
சரி. நிலத்தகறாறு என்ற ரீதியில் ந்யாயாலயத்தில் விவாதிக்கப்பட்டு– ந்யாயாலயம் நிலத்தை பட்டுவாடா செய்த பின்பும் –ந்யாயாலயத்தின் தீர்ப்பை ஒட்டி நிலத்தை உரிய நபர்களிடம் ஒப்படைக்காவிட்டால் — ஹிந்துக்கள் சட்டத்தை மீண்டும் மீறுவதற்கு ஏன் முயலமாட்டார்கள். சட்டத்தை ஏன் அமலுக்கு கொணர முடியவில்லை? ஹிந்துக்களுக்கு சாதகமாக இருப்பதாலா?
மாயாசாரோ மாயயா வர்த்திதவ்ய: சாத்வாசாரோ சாதுனா வர்த்திதவ்ய: என்ற கண்ணனின் செயல்முறைக்குத் தக சட்டத்தை தங்கள் தங்கள் சௌகர்யத்துக்குத் தக வளைக்க முயலும் தேசத்ரோஹ சுயலாபத்துக்காக வளைக்க முயலும் — நேர்மையற்ற மதசார்பற்ற அரசியல்வாதிகள் எனும் தேசத்ரோஹ அரசியல் சக்திகளின் மத்தியில் ஹிந்து இயக்கங்கள் முற்றிலும் நேரான பாதையில் எக்காரணம் கொண்டும் அரசியல் செய்ய முனையக்கூடாது. வஞ்சகர்களை வஞ்சனையாலேயே வெல்ல வேண்டும்.
காஷ்மீரத்திலிருந்து ஹிந்துக்கள் விரட்டப்பட்டது ஹிந்துஸ்தானத்தின் எந்த சட்டப்படி?
காஷ்மீரத்தில் கோவில்கள் இடித்து நொறுக்கப்பட்டது ஹிந்துஸ்தானத்தின் எந்த சட்டப்படி?
காஷ்மீரத்து ஸ்த்ரீகள் மற்ற மாகாணத்து புருஷர்களை விவாஹம் செய்து கொண்டால் — அந்த தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு — ஜம்மு காஷ்மீர மாகாணத்திலுள்ள தங்கள் மாதாவின் அசையா சொத்தில் உரிமை இல்லை — என்ற அநிச்சயத்தை சட்டம் மூலம் கொணர முயற்சித்து – சட்டம் ந்யாயலயத்தில் தோற்ற பின்பும் – இன்னமும் என் மித்ரர்களின் குடும்பங்கள் இந்த ப்ரச்சினையை சந்தித்து வருவது — அராஜகத்தாலா அல்லது சட்டப்படியாலா?
ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் மதாசார்யர்களைக் கூட சட்டத்தால் சம்சயத்தின் பேரில் காராக்ருஹத்தில் அடைக்க முடியும் ஆனால் த்ராவிட மடத்தைச் சார்ந்த அரசியல் வ்யாதிகளுக்கு தமிழகத்தில் கொலைக்குற்றங்களில் சம்பந்தமிருந்தாலும் அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்க முடியும் என்பது — சட்டப்படி நடப்பதாலா?
ஷரத்து 370 என்பது தாத்காலிகமான ஷரத்து என்று அரசியல் சாஸனத்தில் நுழைக்கப்பட்டது. அறுபது வருஷம் என்பது தாத்காலிகமா? குயுக்தி குதர்க்கம் தேசத்ரோஹம் இவைகளே சட்டம் என்ற ரீதியில் தேசத்ரோஹ காங்க்ரஸ் கட்சியால் இந்த தேசத்தில் ஆட்சி செய்யப்பட்டு வந்திருக்கிறது.
சட்டம் என்பது மாற்ற முடியாத வாசகங்களைக் கொண்டதான பைபள் அல்லது குரான் போன்றது அல்ல.
ஹிந்து இயக்கங்கள் இந்த சட்டம் என்ற விஷயத்தை கண்டிப்பாக யுக்தி பூர்வமாக அணுக வேண்டும் …. மதவெறி மற்றும் தேசத்ரோஹ சக்திகள் எவ்வளவு நயவஞ்சகத்துடன் இதை அணுகுகிறார்களோ அதை விட பலமடங்கு நயவஞ்சகமாக.
அறிவுஜீவி புகைவளையத்திலிருந்து வெளிவருவது, சாமான்யர்களை சந்திப்பது தங்களுக்கு சலிப்பூட்டுவது தான், RV ! என் செய்ய
எப்போதேனும் காஷ்மீரத்தில் கடந்த நூற்றாண்டிலேயே இடிக்கப்பட்ட ஆலயங்களையும், வெளியேற்றப்பட்ட இந்துக்களைப் பற்றியும் எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?
புராதன ஹிந்துகோயிலை இடித்து அதன்மேல் கட்டிய ஒரு நினைவிடம், புல்பூண்டு முளைத்து எந்த தொழுகையுமே நடக்காத, பாழ்அடைந்த கும்மூட்டத்தை இடித்தது சட்டப்படி தவறுதான். இது சட்டம் காலம் கடத்தப் பட்டதால் ஏற்ப்பட்ட வீபரீதம். நீதிமன்றம் உறுதி செய்த பின்னும் இன்றுவரை கோவில் கட்டமுடியாமல் செக்யூலர் வியாதிஸ்தர்களால் காலம் கடந்து கொண்டுதான் இருக்கின்றது. கட்டிடத்தை இடித்ததால் இன்று இல்லாவிடினும் வெகுவிரைவில் அங்கே ராமர் கோயில் கட்டப்படத்தான் உள்ளது. இடிக்காவிடில் அங்கே ராமர் கோவில் வருவது என்பது சந்தேகமே ? துலுக்கர்கள் இடித்த ஹிந்துகோவில்கள் கணக்கில் அடங்காதது. அதற்கெல்லாம் வருத்தம் தெரிவித்து துக்கதினம் கொண்டாடவேண்டும் என்றால் வருடத்தின் 365 நாட்கள் போதாது. மீதமுள்ள இரண்டு முக்கிய இடங்களான காசிக்கும், மதூராவிற்கும் சட்டத்தை அணுகுவோம். சட்டம் காலம் கடத்தப்பட்டால் ??? இடித்தது 3000 திற்கு மேற்ப்பட்ட கோவில்கள் என்பது சரித்திர சான்று.
786 என்ற எண்ணிற்கு ஒரு விளக்கம் – 7 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்த மதம்பிடித்த மதம் 7+ 8 = 15 நூற்றாண்டில் புற்ஈசல்போல் பரவி 7 +8+ 6= 21 நூற்றாண்டில் அழியதொடங்கும். அதற்கான அறிகுறிகள் ஆரபித்துள்ளன. சைனா ஜப்பான் போன்றநாடுகள் இதன்வாலை ஒட்ட அறுத்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. அஸ்திரேலிய பிரதமரும், இங்கிலாந்து பிரதமரும் இந்த மதம் பரவுவதை கடுமையாக ஆட்சேபனை செய்துள்ளார்கள். சமீபத்தில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்த மதத்தை கடுமையாகதாக்கி பேசியுள்ளார். ரஷ்ய மொழியில் குரானை வெளியிட தடை விதிகப்பட்டுள்ளது. இனி மேலும் மசூதிகளையும் எழுப்பக்கூடாது என் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அங்கோலா என்ற ஆப்பிரிக்க நாடு மசூதிகளை இடித்துதள்ளி வருகிறது.
Muslim special reservations – Islamic Bank – Muslim Districts – Subsidy for Haj Pilgrimage -Funds for Mdrassas – Urdu Universities – Shadi Khanas – Iftar parties – Salaries for Imams – entitlement to four wives – triple talaaq -sharia courts – right to invite and shelters Muslims from Bangladesh, Burma & Pakistan – unfettered freedom to build mosques, dargas and mazaars on public properties, pavements and road junctions impunity from the crime of abducting Hindu girls – absence from work for prayers during office hours- special privileges for convicted terrorist in jail – special allowances for poor muslim children –
“The way in which the Indian Government is dealing with Islamic terrorism , India would be the safest place for the Talibans in future” (Russian President – Putin )
பிரசன்ன சுந்தர், இந்தக் கட்டுரை சட்டத்தை மீறிய நாளை சிலிர்ப்புடன் நினைவு கொள்ள வேண்டும் என்கிறது. “சிலிர்ப்பு” என்பதற்கு என்னதான் பொருள் கொள்கிறீர்கள்? கட்டிடத்தை இடித்ததால்தான் ASI உள்ளே போயிற்று என்பது தவறான தகவல். அதற்கு முன்பே ASI ஆய்வுகள் தொடங்கிவிட்டன என்பது இந்தத் தளத்திலேயே அங்கீகரிக்கப்பட்ட விஷயம்.
ஹா. மான், வெட்டிப்பேச்சு என்பதில் சந்தேகம் வேறா? மசூதி இல்லை இல்லை கும்மட்டம் இல்லை இல்லை கக்கூஸ் இடிக்கப்பட்டு 21 வருஷம் ஆகிவிட்டது இப்போதுதான் துயில் கலைந்தது என்று பிதற்றல்! இந்த விவாதத்துக்கும் துயிலுக்கும் மயிலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று புரியாவிட்டாலும் ஜெயிலுக்கும் கெய்லுக்கும் சம்பந்தம் இல்லை என்றாவது புரிகிறதே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
முஸ்லிம்கள் ஒரிஜினல் பாபர் கோவிலை இடித்த நாளை கொண்டாடுகிறார்களா என்று கேட்டால் “பாபர் மசூதி” (கவனியுங்கள் மசூதி என்று சொல்வது ஹா. மான், நானல்ல 🙂 ) இடிபட்ட நாளை துக்க நாளாக பாவிக்கிறார்கள் என்கிறீர்களே! என்ன எழுதி இருக்கிறேன் என்று படித்துவிட்டு பதில் சொல்லிப் பாருங்களேன்!
கதிரவன் ஷா பானோ பற்றி பேசாவிட்டால் நான் கதிரவனிடம் ஷா பானோ பற்றி எதுவும் சொல்லக் கூடாது என்று சட்டமா என்ன? அப்ப்டி என்றால் நான் ஷா பானோ பற்றி எதுவும் சொல்லாதபோது நீங்கள் பிரஸ்தாபிப்பானேன்? என்னய்யா கோமாளித்தனமான பேச்சு!
க்ருஷ்ணகுமார், நீங்கள் இப்படி என்னைப் பற்றி ஏதாவது சொல்லி ஹா. மான் எழுதுவதை நிறுத்திவிடப் போகிறார்! காமெடி தொடரட்டுமே!
// இந்தக் கட்டுரை சட்டத்தை மீறிய நாளை சிலிர்ப்புடன் நினைவு கொள்ள வேண்டும் என்கிறது. “சிலிர்ப்பு” என்பதற்கு என்னதான் பொருள் கொள்கிறீர்கள்? //
ஆர்.வி, தவறு. சிலான்யாஸ் (அடிக்கல் நாட்டு) நிகழ்வைத் தான் அப்படி கட்டுரை குறிப்பிடுகிறது. அது சட்டத்தை மீறிய நாள் அல்ல. அந்தப் பத்தியிலேயே மத்திய, மானில அரசுகள் அந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானதைப் பற்றீயும் கூறப் பட்டுள்ளதே…
1992 கும்மட்டம் இடிக்கப் பட்டது என்பது ஒரு “துரதிர்ஷ்டவசமான” நிகழ்வு என்று தான் ஆர் எஸ் எஸ், விஹிப, பாஜக அமைப்புகளைச் சேர்ந்த அயோத்தி இயக்கத் தலைவர்கள் அனைவரும் கூறினார்கள் (அவமான கரமான, துக்ககரமான – என்று அல்ல, அவை செக்யுலர்வாதிகளின் அடைமொழிகள்). ஆம், நீதி மன்ற தீர்ப்பு தாமதங்களால், அரசாங்க நடவடிக்கைகளால் பொறுமை இழந்திருந்த கரசேவகர்களின் மாபெரும் மக்கள் திரள், அனைத்து கட்டுப்பாடுகளையும் இயக்கத் தலைவர்களின் கோரிக்கைகளையும் கூட மீறி உணர்ச்சி வேகத்தில் அந்த கும்மட்டதை இடித்தது.
அது ஒரு அசாதாரணமான வரலாற்றுத் தருணம். அத்தகைய ஒரு தருணம் அனேகமாக இந்திய வரலாற்றில் அதற்குப் பின் ஏற்படவே இல்லை என்பதிலிருந்தே அதன் தன்மை எப்படிப் பட்டது என்று புரிந்து கொள்ள முடியும். அந்தத் தருணத்தை வெறும் அரசியல், சட்டம், ஒழுங்கு கண்ணோட்டத்தில் மட்டுமே காண்பது குறைத்தல் வாதம் மட்டுமே. அந்தத் தருணத்தைக் குறித்து பிறகு வி.எஸ்.நய்பால் என்ன கூறினார் என்பதைப் படித்துப் பாருங்கள், ஒருவேளை நீங்கள் உணரக் கூடும்.
இது பற்றி ஏற்கனவே நிறைய எழுதப் பட்டுள்ளது. இந்தத் தளத்திலேயே நாம் விவாதித்திருக்கிறோம். உங்கள் அடிப்படை அணுகுமுறை மாறப் போவதில்லை என்றால் அது எதுவும் உங்கள் கருத்தில் சென்று சேராது.
திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு எழுதிகொண்டது. வணக்கம். 8-12-2013 (9-04 P M ) அன்று உங்களது மறுமொழியில் ஒரு நபரைப் பற்றி நீங்கள் எழுதிய 3 மற்றும் 4 வது வரிகளில் கடைசி 4 வார்த்தைகள் அனைத்தும் naked truth என்பது இன்று பிற்பகல் 12-17 க்கு மீண்டும் வந்த அந்த நபரின் இன்னொரு மறுமொழிக்குப் பிறகு ஊர்ஜிதமாகிவிட்டது. நீங்கள் கூறும் அந்த நபர் மட்டும்தான் கட்டுரையை ஒட்டி பேசுகிறார். மற்ற அனைவருமே (வேலை ஏதுமின்றி) வெட்டி பேச்சு பேசுகின்றனர். திரு கிரூஷ்ணகுமார் அவர்களே!
பாபர் மசூதி இடிக்கப்பட்டது 6-12-1992 அன்று . ஆனால் அதற்கு முன்பேயே அதாவது 1989 ல் 13 கோவில்களும் 1990 ல் 9 கோவில்களும் 1991 ல் 16 கோவில்களும் ஆக மொத்தம் 36 கோவில்கள் காஷ்மீரில் முஸ்லிம்களால் இடிக்கப்பட்டபோது ((((இத்தகவல் 12-3-1993 அன்று பாராளுமன்றத்தில் இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது)))) செறிதுயிலில் அந்த நபர் இருந்தாரா? ஆனால் பாபர் மசூதி இடித்ததுமே தூக்கம் கலைந்து அது பற்றி மட்டும் கேள்வி கேட்பது சரியா? கோவில் பற்றி அக்கறை இல்லையா? என்று கேட்டேன். அதற்கு “” மசூதி இடிக்கபட்டு 21 வருடங்கள் ஆகிவிட்டன.. இப்போது தான் துயில் கலைந்து எழுந்தீர்களா என்று கேட்பது பிதற்றல்.”” என பதில் வருகிறது. துயில் மயில் ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தியமைக்கு நான் விளக்கம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். (எனது மறுமொழி (தேதி 8-12-13 ..நேரம்: 5-47)யின் 2 வது பாரா காண்க) தூங்குபவனை எழுப்பலாம். ஆனால் தூங்குபவனைப் போல நடிப்பவனை எழுப்புவது இயலாது. பாபர் என்பவன் ஒரு முஸ்லிம் அப்படியிருக்க “”பாபர் கோவில்”” என்பது சரியா திரு கிருஷ்ணகுமார் அவர்களே? நீங்களே இதற்கு பதில் கூறுங்கள். “முருகன் மசூதி” என்றால் எப்படி தவறோ அதே போல “பாபர் கோவில்” என்பதும் தவறு
“ராமர் கோவில்” என்றுதானே கூறவேண்டும் சரி போகட்டும்.அந்த நபரின் வார்த்தைகளின் படியே “பாபர் கோவில்” இடிக்கப்பட்டதை எந்த முட்டாள் முஸ்லிமாவது கொண்டாடுவானா? அப்படி கொண்டாடினால் அதுவே கோவில் இடிக்கப்பட்டதற்கு தக்க சான்று ஆகிவிடுமே! அவர்கள்தான் பாபர் “ராமர் கோவிலை” இடிக்கவே இல்லை அப்படி இடித்த இடத்தில் மசூதி கட்டப்படவில்லை என்று வாதாடுகிறார்களே! அப்புறம் “பாபர் கோவிலை” இடித்ததை முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்களா என்று எதற்கு தேவையற்ற கேள்வி? இந்த கேள்வி தேவைதானா? எனது 7-12-13 (7-15 am ) தேதியிட்ட மறுமொழியில் கடைசி பாராவின் 2 வது வரியில் ஷாபானு பற்றி எழுதியிருக்கிறேன். பதிலை எனக்கு சொல்லாமல் கேள்வி கேட்காத நண்பருக்கு பதில் சொல்லப் பட்டது.. அதை பற்றி கேள்வி கேட்டால் அதற்கு ஒரு cantankerous reply வருகிறது. அந்த நபரின் 8-12-13 (நேரம் 12-18) அன்றைய மறுமொழியில் 4 வது பாராவில் ஷாபானு பற்றி எழுதியுள்ளார். ஆனால் “””நான் ஷாபானு பற்றி எதுவும் எழுதாதபோது அதை பற்றி நீங்கள் பிரஸ்தாபித்து ஏன்”” என்று கேள்வி வேறு. அவரை நீங்கள் ஒரு “”மூத்த” வாசகர் என்று கூறுகிறீர்கள். அந்த மூத்தவர் தான் “பிதற்றல்” “கோமாளிதனப் பேச்சு” என்ற மிக மிக நாகரிகமான எழுத்துக்களை எழுதுகிறார். அப்படித்தான் Sagathivel (மன்னிக்கவும் ) Sakthivel என்று ஒரு அருமையான நபர் uncivilised word களைப பயன்படுத்தி சக்தி (=சேறு) வாரி இறைத்தார். கடந்த 4 வருடங்களாக இந்துத்துவா படித்துவரும் அந்த பண்பாளர் மற்றவர் மனதை பண்பட செய்வதற்கு பதிலாக புண்பட செய்கிறார். மற்றவர்கள் இதை கண்ணுறும்போது ஓ! இதுதான் இந்துத்வாவா? என்று தவறாக நினைக்க மாட்டார்கள்? திரு கிருஷ்ணகுமார் அவர்களே இது என்ன “ஆதித்யா டிவியா? விளம்பர இடைவேளைக்கு பிறகு “காமெடி தொடர”? உங்கள் மூத்த வாசக நண்பரின் மறுமொழிக்கு நான் எழுதும் கடைசி எதிர்வினை இதுவே. அந்த இரு நபர்களும் நீடு வாழ்க! கடவுள் அவர்களுக்கு நல்லருள் புரியட்டும்!
அன்புள்ள ஹா.மேன்,
// அப்படித்தான் Sagathivel (மன்னிக்கவும் ) Sakthivel என்று ஒரு அருமையான நபர் uncivilised word களைப பயன்படுத்தி சக்தி (=சேறு) வாரி இறைத்தார். கடந்த 4 வருடங்களாக இந்துத்துவா படித்துவரும் அந்த பண்பாளர் மற்றவர் மனதை பண்பட செய்வதற்கு பதிலாக புண்பட செய்கிறார். //
என்று எழுதுகிறீர்கள். நீங்கள் கீழே மேதாவித் தனமாக எழுதியவை எல்லாம் சேறு பூசுவது இல்லையா? ஒரு கட்டுரையாளரை, அதை வாசிக்கும் வாசகர்களை எல்லாரையும் அவமதிக்கிறீர்கள்.. அதை சுட்டிக் காட்டுவதற்காகத் தான் அப்படி எழுதினேன். ஆனாலும், அது உங்களுக்குக் கொஞ்சம் கூட புரியவே இல்லை உங்கள் “ஸ்டைலை” பரிசீலனை செய்யக் கூட உங்களுக்குத் தோன்றவில்லை. அதை மாற்றீக் கொள்ளவும் நீங்கள் முற்படவில்லை 🙁
// பேய் கதை நாய் கதைதான் படம் பிடித்து எழுதுவோம் என்று அடம் பிடித்தால் //
// இந்த இணையத்தின் மீது தான் விழும் பழி. கூட இருந்தே மோடிக்கு பறிக்கப் போகிறதா குழி? //
// ஒரு செய்யுளை எழுதி அதற்கு பொழிப்புரையை அருஞ்சொற்களோடு கொடுத்து வருகிறீர்கள்.பள்ளி மாணவர்களுக்கு Tuition ஆ எடுக்கிறீர்களா? இதை “ஆஹா, ஓஹோ” என்று பாராட்டுவதற்கேன்றே சிலர் காலங்காத்தாலயே காத்துகொண்டிருகின்றனர் //
// ஊர் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம்! பாரத நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கையில் நீரோ (திரு ஜடாயு) இசைகச்சேரி நடத்துகிறீர்கள். சபாஷ்! அதற்கு பக்க்பாட்டு படுபவர்கள் உங்களை விஞ்சுகிறார்கள். சரியான போட்டி! //
ஹா. மான், // உங்கள் மூத்த வாசக நண்பரின் மறுமொழிக்கு நான் எழுதும் கடைசி எதிர்வினை இதுவே. // அடடா, பொன் முட்டையிடும் வாத்தை நானே கொன்றுவிட்டேன் போலிருக்கிறதே!
ஹா. மான். உத்வேகம் மட்டும் போதாது, எழுதி இருப்பதைப் படித்துப் பார்த்து சிந்தித்து எழுத வேண்டும் என்பதை உணர்ந்தால் காமெடி தானாகவே நின்றுவிடும். உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன். இந்தத் தளத்தில் அந்தக் கட்டிடத்தை மசூதி என்று அங்கீகரிப்பவர்கள் அபூர்வம். சர்வ ஜாக்கிரதையாக கும்மட்டம் கும்மட்டம் என்பார்கள். எனக்குத் தெரிந்து நீங்கள் ஒருவர்தான் “பாபர் மசூதி” என்று எழுதுகிறீர்கள், “பாபர் மசூதி” என்றுதான் சொல்ல முடியும், “பாபர் கோவில்” என்றல்ல என்று விளக்கம் தருகிறீர்கள். அது ஒரு கும்மட்டம் என்பதை நீங்கள் மறுத்தால்; அது ஒரு மசூதிதான் என்று உறுதியாக நினைத்தால்; நீங்கள் வாதிக்க வேண்டியது என்னோடல்ல. இதைத்தான் குறிப்பிட்டிருந்தேன், இது கூட புரியாமல் என்னென்னவோ எழுதுவது காமெடியாகத்தான் இருக்கிறது.
இந்த சுட்டியை பார்க்கவும்.
தமிழகமெங்கும் டிசம்பர் 6 போராட்டம்
https://tmmk.in/index.php?option=com_content&view=article&id=3689%3A-6-&catid=58%3A2009-10-11-12-42-41&Itemid=178
மீண்டும் மீண்டும் எவ்வாறு வெறுப்புணர்வையும் துவேஷத்தையும் இந்திய தேசிய எதிர்ப்பையும் தூண்டுவதற்கு இந்த தினத்தைப் பயன்படுத்துகிறார்கள் பாருங்கள்.
இத்தகைய சூழலில் நின்று கொண்டு தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதையாவது ஆர்.வி போன்றவர்கள் உணர்ந்தால் சரி.
R. V.
//அட வேண்டாம் ஒரு கக்கூசை நான் போய் இடித்துக் கொள்ளலாம் //
//ஜடாயு வீட்டு சமையலறை என் முப்பாட்டனின் ஜன்மபூமி, என் வரையில் புனிதமானது, அங்கே கடுகு தாளிப்பது என் முப்பாட்டனைக் கேவலப்படுத்துகிறது //
இப்படியெல்லாம் எழுதிய உங்களுக்கு “எதைப் பற்றி பேசுகிறோம் என்பதைக் கூட உணராமல் என்னென்னவோ பேசும் கதிரவன், ஹானஸ்ட் மான், வந்தியத்தேவன். அதுவும் ஹானஸ்ட் மானும் வ. தேவனும் நல்ல காமெடி பீஸ்களாக இருக்கிறார்கள்” என்று சொல்லும் அளவுக்குக் கோபம் வருகிறது.
கொஞ்சம் அமைதியாகச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ராம ஜன்ம பூமியை ஜடாயு வீட்டு சமையலறைக்கு ஒப்பாகவும் ஸ்ரீ ராமனை முப்பாட்டன் என்றும் சொல்லலாம், யாருக்கும் எந்த உணர்ச்சியும் வரக் கூடாது?
உங்கள் நியாயம் எப்படி இருக்கிறது என்று யோசியுங்கள்.
சரி, விஷயத்துக்கு வருவோம். டிசம்பர் ஆறாம் தேதியை வெறுப்பை வளர்க்க மட்டுமே பயன்படுத்தும் முஸ்லிம்கள் குறித்து உங்களுக்கு எந்தக் கருத்தும் இருக்காது என்றுதான் தோன்றுகிறது.
ஆனால், எதிர்வினையாக இந்துக்கள் அனைவரும் வருடாவருடம் சோம்நாத் கோவில் இடிப்புத் தினத்தையும், ராம் ஜன்ம பூமி இடிப்புத் தினத்தையும், மதுரா கோவில் இடிப்புத் தினத்தையும் அனுசரிக்கத் தொடங்கினால் ஏற்பீர்களா?
எனது கருத்து இந்துக்கள் இவற்றை உடனடியாக அனுசரிக்கத் துவங்க வேண்டும்.
அன்பார்ந்த ஸ்ரீ தாயுமானவன்
\\ உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள். முதலில் உங்களை நீங்கள் தமிழராக உணருங்கள். இந்துவாக இருப்பது இந்தியனாக இருப்பதை எல்லாம் நாம் பிறகு பார்த்துக்கொள்வோம். \\
உங்கள் தூய (கலப்பில்லா) தமிழ்மொழிப்பற்று என்ற விஷயம் நான் விதந்தோதும் விஷயம் – எனது ஆதர்சமான அலகீடு – என்பது தாங்கள் அறிந்ததே.
மதம் கடந்த – அதாவது – ஹிந்துமதம் கடந்த – தமிழ் (இனம்!!!!) என்ற ஒன்றை தாங்கள் அவதானிப்பது எனக்குப் புரியாத விஷயம்.
தமிழ் மொழி பேசும் நமக்கு தமிழின் படைப்பிலக்கியங்கள் அனைத்தும் – சீறாப்புராணம், தேம்பாவணி – இவையெல்லாம் கூட முக்யமே. மதம் கடந்து. நம் தாய்மொழியில் இயற்றப்பட்ட படைப்பிலக்கியங்கள் என்ற படிக்கு.
முஸல்மாணிய, க்றைஸ்தவர்களுக்கு — தமிழின் சைவ, வைஷ்ணவ படைப்பிலக்கியங்கள் இவர்களுக்கு ஏற்புடையவை? இவற்றை இவர்கள் முதலில் ஏற்பார்கள்? அப்படியே பரிசீலிக்க விழைந்தாலும் – எதற்கு????? விதந்தோதுவற்கா??? (மு.மு. இஸ்மாயில் போன்று விதிவிலக்குகளை தவிர்த்து) – அதன் கருத்தாக்கங்களை குலைப்பதற்கு!!!!!!!! இதே தளத்தில் ஸ்ரீ முத்துகுமாரஸ்வாமி மஹாசயர் அவர்கள் ஜி.யு.போப் பற்றி எழுதிய வ்யாசத்தை வாசித்துப் பார்க்கவும். நிறை குறைகளை நேர்மையாகப் பகிர்ந்த வ்யாசம். போப்பின் வாசிப்பு அவருக்குத் தந்தது திருவாசகத்தின் மீதான காதலையா? அல்லது திருவாசகம் – திருக்குறள் போன்ற தமிழ்நூற்களின் பரிசீலனை – என்ற வ்யாஜத்தில் க்றைஸ்தவத்தை ஊடுருவ விழைந்த அவலத்தையா?
சீறாப்புராணத்தையும் தேம்பாவணியையும் வாசிக்கும் தமிழ் பேசும் ஹிந்து தன் சமயக்கருத்துக்களை இந்த நூற்களின் கருத்தாக்கங்களின் பால் ஊடுருவ விழைவார்களா?
ஸ்ரீ லங்காவில் தமிழர்களுடைய ஆலயங்களை சிதைத்து நொறுக்குபவர்கள் சிங்களர்கள் மட்டுமா? இல்லையே? கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் சைவ ஆலயங்களை க்ராமம் க்ராமமாக சிதைத்தவர்கள் தமிழ் பேசும் முஸல்மாணியர்கள். இதே தளத்தில் இது சம்பந்தமாக விரிவான வ்யாசங்கள் உள்ளன. வாசித்துப் பார்க்கவும். சஹோதரத் தமிழர்களை தமிழர்களாகக் கருதாது அவர்களுடைய உடமைகள், வழிபாட்டு ஸ்தலங்கள் இவற்றை சூறையாடும் இவர்களுக்கு – தாம் சூறையாடுவது – இன்னொரு தமிழனுடையவை – மதம் கடந்து நாமெல்லாம் தமிழர் என்ற தாங்கள் அவதானிக்கும் உணர்வு – லவலேசமும் இருக்குமானால் – இந்நிகழ்வுகள் நடந்திருக்காது.
தமிழகத்தில் ஃப்ளெக்ஸ் தட்டி ஏந்தி போராட்டக்களம் புகுந்த மாணவர்கள் இப்படி தமிழர்களுக்கு எதிராக அராஜகம் புரிந்த தமிழ் பேசும் முஸல்மாணியர் பற்றி தங்கள் வாயையாவது திறந்ததை தாங்கள் எங்கும் பார்த்திருந்தால் பகிரலாம். ஏன்!!!!!!!!! தமிழ் ஹிந்துக்களுக்கு சிங்களவர் அராஜகம் இழைத்தால் அது எதிர்க்கப்பட வேண்டியது; ஆனால் தமிழ் பேசும் முஸல்மாணிய சஹோதரர்கள் அராஜகம் இழைத்தால் அது கபளச்சோற்றில் மறைக்கப்பட வேண்டிய பூஷணிக்காய்
முஸல்மாணியரை, க்றைஸ்தவரை நான் பொதுவிலே ஆரோபிப்பதாக எண்ண வேண்டாம். நான் பகிருவது மிகக்குறிப்பான ஆரோபம். முஸல்மாணிய, க்றைஸ்தவ சஹோதரர்கள் – அவரவர் மதப்படி ஒழுகுவதை நான் மதிக்கவே செய்பவன். நான் முஸல்மான் அல்லது க்றைஸ்தவர்களை பொதுவில் வெறுப்பவன் (என்ற மாயா) தளத்திலிருந்து நமது கருத்துப் பரிமாற்றம் வேண்டாம்.
க்ஷமிக்கவும். மதம் கடந்து நாமெல்லாம் தமிழர்கள் என்ற ஒரு உணர்வு ஒரு நீர்க்குமிழியே.
மதம் கடந்து ஆனால் பொதுவிலான பண்பாடு என்ற அடையாளம் கொண்டு நம்முடன் நெருக்கம் பாராட்டும் ஸ்ரீ மு.மு.இஸ்மாயில், ஸ்ரீ அயாஸ் ரஸூல் நஸ்கி, ஸ்ரீ.கெ.ஜெ.யேசுதாஸ், உஸ்தாத் பிஸ்மில்லா கான் – போன்றோரிடம் நெருக்கத்தை கொணர்வது – நாம் பொதுவில் புரிந்து போற்றும் பண்பாடு. அதன் ஆதாரம் – விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஹிந்து மதம்.
நான் தமிழன் நான் ஹிந்து – இந்த இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தது. முதல் பின்னால் என்று இதில் ஏதும் இல்லை.
நீங்கள் கீழ்க்காணும் உரலுடன் முழுதும் ஒத்துப்போக வேண்டும் என்று இல்லை. பின்னும் பல விஷயங்கள் முகத்திலறையும் படிக்கு வெளிப்படையாக ஸ்ரீ ராமசாமி அவர்களால் பகிரப்பட்டுள்ளதை ஒதுக்கவும் முடியாது
https://othisaivu.wordpress.com/page-10/
\\ அடடா, பொன் முட்டையிடும் வாத்தை நானே கொன்றுவிட்டேன் போலிருக்கிறதே! \\
why this kolaveri ஆர்.வி?
அன்பின் ஹானஸ்ட்மேன்,நண்பர்களே,
கருத்துப் பரிமாற்றத்தின் போது கடுமையான சொற்களைத் தவிர்க்கலாமே
மிகவும் கஷ்டமான ஒரு நிலைப்பாடு. தன் மீது ஒரு அன்பர் கடுமையான சொற்களை ப்ரயோகிக்கும் போதும் கூட அவர் மீது பதிலுக்குக் கடுமையான சொற்களை ப்ரயோகம் செய்யாமை.
எதிர்க்கப்பட வேண்டியது மற்றவரின் நிலைப்பாடு. தனிநபர் அல்ல.
இது எனது ஆதர்சமான நிலைப்பாடு. நான் பெரும்பாலும் பின்பற்ற விழையும் நிலைப்பாடு. பெரும்பாலும் என்று சொன்னபடிக்கு இதிலிருந்து நான் பிறழவும் செய்துள்ளேன் என்பதனையும் பகிர்வதே சரியாக இருக்கும்.
நமது கருத்துக்கள் கூர்மையாக இருந்தால் அதுவே நம் எண்ணங்களை தெளிவாகப் பேசும்.
தொடர்ந்து தர்க்கபூர்வமாக உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
ஆர் வீ அவர்கள்…
மீண்டும் மீண்டும் “வெறும் நம்பிக்கையின் பேரில்” என்று எழுதி வருகிறார். இராம ஜன்ம பூமியின் மீது உள்ள கண்மூடித்தனமான த்வேஷத்தால் சும்மா இப்படி எல்லாம் எழுதி கருத்துப் பரிமாற்றத்தின் திசை திருப்பும் முயற்சி இது. ராம ஜன்ம பூமி “வெறும் நம்பிக்கையா”? வரலாற்றுக்கும் நம்பிக்கைக்கும் வித்தியாசம் தெரியாது போல இவருக்கு.
// ஜடாயு வீட்டு சமையலறை என் முப்பாட்டனின் ஜன்மபூமி, என் வரையில் புனிதமானது, அங்கே கடுகு தாளிப்பது என் முப்பாட்டனைக் கேவலப்படுத்துகிறது என்று நான் போய் இடித்தால் ஜடாயு, ஆஹா என்ன பக்திமான் இந்த ஆர்வி என்று கை தட்டுவாரா? //
பாபர் ஒண்ணும் காசு போட்டு நிலத்தை வாங்கி அங்கு கட்டிடம் கட்டவில்லை. இத்தகைய வாத யுக்திகளால் வாதத்திற்கு ஒரு பயனும் இல்லை. இதை நான் கூட வேறு மாதிரி திருப்பிப் போட முடியும்:
ஆர் வியின் கொள்ளுத் தாத்தாவுக்குச் சொந்தமான நிலத்தில் ஒருவன் ஆக்கிரமித்து அங்கு ஒரு கழிவறையைக் கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கழிவறையை ஆக்கிரமிப்பாளனின் நான்கைந்து தலைமுறையினர் ‘இது எங்கள் தாத்தா கட்டினது’ என்று கூறிக்கொண்டு இடத்தைக் காலிபண்ணாமல் தகறாரு செய்கிறார்கள், அதனால் ஆர். வீயின் பரம்பரைச் சொத்தான அந்த நிலத்தில் ஆர் வீ வீடு கட்ட தடையாகிறது. அந்த வழக்கும் கோர்ட்டில் இழுத்துக் கொண்டே போகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு பேச்சுக்காக, இதனால் ஆர் வீயும் அவர் குடும்பத்தாரும் வாழ இடமின்றித் திண்டாட வேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது தான் இன்றைய ராம ஜன்ம பூமி இயக்கத்தவரின் நிலை.
இந்த விவகாரத்தில் பணயமாக இருப்பது என்ன என்று புரிந்துக் கொள்ள வேண்டும். அயோத்தி ராம ஜன்ம பூமி கோயில் ஒன்றும் “ஏதோ ஒரு கோயில்” அல்ல. அது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புண்ய க்ஷேத்ரமான அயோத்தியில் நெடுங்காலம் இருந்து வந்த சக்கரவர்த்தித் திருமகனின் திருக்கோயில். தளத்தின் புனிதத்துவத்தை நம்பாத ஆனால் நடுநிலை நின்று யோசிக்கும் நாத்திகன் கூட — ஏன் முஸ்லீம் கூட — அந்தக் கோயிலும் தலமும் மீட்டெடுத்துப் பேணிப் பாதுகாக்க வேண்டிய கலாச்சாரக் கருவூலம் என்று நம்புவான்.
அக்கோயிலை ஒரு இஸ்லாம் எனும் காட்டுமிராண்டி நம்பிக்கையில் இருந்த காட்டுமிராண்டி ஒருவன் பலாத்காரமாக இடித்துத் தள்ளி அங்கு அவமானச் சின்னமாகக் கட்டப்பட்ட ஒன்று தான் பாபர் கட்டிடம். இவ்விஷயத்திற்கு ஆதாரமாக பல பல வரலாற்று ஆவணங்கள். விஷயம் தெளிவாக இல்லை?
இந்தத் தெளிவைச் சட்டமும் நீதிமன்றமும் அரசியல்வாதிகளும் அயோத்தி விவகாரத்தில் காட்டியிருந்தால் கர சேவகர்கள் பாபர் கட்டிடத்தை இடித்திருக்க மாட்டார்கள். அரசும், நீதிமன்றமும், ஊடகங்களும் முஸ்லீம் தலைவர்களுக்கு இதை ஆதாரம் காட்டி எடுத்துச் சொல்லி முஸ்லீம்களுக்கு இதைப் புரிய வைக்குமாறு கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் செய்வதனால் என்ன பயன் போலி மதச்சார்பின்மை அரசியல்வாதிகளுக்கு? இப்படி எல்லாம் செய்தால் முஸ்லீம் ஓட்டு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? பிரச்சனையே அங்கு தான்.
முதலில் பாபர் கட்டிடம் என்பது மற்ற கலாச்சாரங்களைப் பின்பற்றும் சமூகங்களை மதிக்காமல் அவற்றைக் காட்டுமிராண்டித் தனமாக அழித்தொழித்து தலைதூக்கி நிற்க முயலும் ஒரு காட்டுமிராண்டிக் கலாச்சாரம் எழுப்பிய அவமானச் சின்னமே என்பதைப் புரிந்துக்கொள்ளாதவர்கள் இந்த விவகாரத்தில் எதையுமே புரிந்துக் கொள்ள இயலாது.
The Babri structure is just a symbol of pure vandalism perpetrated against a wonderful structure bearing much cultural, religious, and historical heritage. This symbol of vandalism is preserved till today, thanks to the appeasement of a culture that constantly demands ‘respect’, ‘acceptance’, and ‘tolerance’ while at the same time it shows great zeal in displaying its lack of respect, acceptance, or tolerance of any other culture.
மிக சரியாக சொன்னீர்கள் கந்தர்வன்.
இப்போதைய இளைய தலைமுறைக்கு ஊடகங்கள் வேண்டுமென்றே அரைகுறை சித்திரத்தை அளித்து தவறான புரிதலை உருவாக்குகின்றன. கடந்த சில வருடங்களாக செய்தித் தாள்களில் அயோத்தி இயக்கம் குறித்து வரும் கட்டுரைகளில் புராதன ராமர் கோயில் குறித்த அகழ்வாராய்ச்சிகளும், பாபர் கோயிலை இடித்த வரலாற்று சான்றுகளும், எல்லாம் முழுவதுமாக இருட்டடிக்கப் பட்டு It is believed to be the birthplace of Lord Ram by Hindus என்று சொல்லி விட்டு, உடனே 1992 கட்டட இடிப்பைப் பற்றி எழுதுகிறார்கள்.. படிப்பவர்களுக்கு வெற்றிடத்தில் கட்டப் பட்டிருந்த ஒரு மசூதியை வேண்டுமென்றே *நம்பிக்கையை மட்டுமே* காரணம் காட்டி இந்து வெறியர்கள் இடித்துத் தள்ளி விட்டார்கள் என்ற உணர்வு தான் ஏற்படும். செக்யுலர் ஊடகங்களின் கடைந்தெடுத்த கயமை.
ஆனால், ஆர்வி 1990களில் கல்லூரி மாணவராக இருந்தவர், அவருக்கு இந்த விவரங்கள் தெரிந்திருக்கும், இருந்தாலும் ராமஜன்ம பூமி ஏதோ “வெறூம் நம்பிக்கை” என்பது போல பேசுகிறார். அது தான் ஆச்சரியமாக இருக்கிறது.
திரு. ஜடாயு அவர்களே,
நன்றி. இன்னும் தெளிவாக நாம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
நான் நினைப்பது என்னவென்றால், பிரச்சனையே இந்த விவகாரத்தில் what is at stake என்பதைச் சரியாகப் புரிந்துக் கொள்ள இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் வாய்ப்பில்லை என்பது தான். குறிப்பாக இந்துக்களுக்கு, ராம ஜன்ம பூமி இயக்கத்தில் why what is at stake is significant என்பது புரிய வேண்டும். இந்துக்களில் அறிவாளிகள் பலருக்கும் இது புரியவில்லை என்றே தெரிகிறது.
“எனக்கு என் குடும்பத்தார், என் வீடு, என் கார், பதவி உயர்வு, என் ஜால்ரா கும்பல் இதெல்லாம் தான் முக்கியம். மற்றது இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன” என்று நினைப்பவர்களுக்கு, ஜன்ம பூமி இயக்கத்தில் why what is stake is significant என்பது புரியாது.
// ஆனால், ஆர்வி 1990களில் கல்லூரி மாணவராக இருந்தவர், அவருக்கு இந்த விவரங்கள் தெரிந்திருக்கும், இருந்தாலும் ராமஜன்ம பூமி ஏதோ “வெறூம் நம்பிக்கை” என்பது போல பேசுகிறார். அது தான் ஆச்சரியமாக இருக்கிறது. //
ஆர் வீ என்ன பண்ணுவார் பாவம். உண்மை எதுவென்று தெரிந்தும் ஒத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு அவருக்குப் பல காரணங்கள் இருக்கலாம். உண்மையை ஒத்துக் கொண்டால் இதுவரை தமது அறிவுஜீவி பேச்சுக்கெல்லாம் ஜால்ரா அடித்துக் கொண்டிருந்த கும்பல் போய் விடுமே என்று பயம் இல்லாமல் இருக்குமா?
இன்னும் சில வாதங்களையும் அவர் முன்வைப்பார். இதோ:
(1) மசூதி என்ன, இன்று காணப்படும் இந்துக் கோயில்களில் பெரும்பான்மையானவற்றை மன்னர்கள் முன்பிருந்த கட்டிடங்களை இடித்துத் தான் கட்டினார்கள்.
(2) நானும் இராமனைத் தான் வணங்குகிறேன். சர்வ வல்லமை படைத்த இராமனுக்கு உங்களைப் போன்ற பாடிகார்டுகள் தேவையா?
\\\ மசூதி என்ன, இன்று காணப்படும் இந்துக் கோயில்களில் பெரும்பான்மையானவற்றை மன்னர்கள் முன்பிருந்த கட்டிடங்களை இடித்துத் தான் கட்டினார்கள். \\\
ம்ஹும்….. அப்படி உப்பு சப்பில்லாமல் வாதம் முன்வைக்க மாட்டார்
மாறாக
மசூதி என்ன, இன்று காணப்படும் இந்துக் கோயில்களில் பெரும்பான்மையானவற்றை மன்னர்கள் முன்பிருந்த *பௌத்த ஜைன கோவில்களை* இடித்துத் தான் கட்டினார்கள் என்ற படிக்கு திடுக்கிடும் வாதத்தை தான் நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
ஆனால் அவர் வாதங்களை முன்வைத்துத் தொடரும் ப்ரதிவாதங்களால் அவருக்குக் கருத்துத் தெளிவு ஏற்படுகிறதோ இல்லையோ வாசகர்களுக்குக் கருத்துத் தெளிவு ஏற்படுகிறதே. அதுவரையில் அவரது வாதங்கள் அவசியமானவையே
ஜடாயு,
தமுமுக சுட்டியைப் போய்ப் பார்த்தேன். அந்தச் சுட்டியில் புகைப்படங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லையே? புகைப்படங்களிலும் ஆட்சேபத்துக்குரிய போஸ்டர்கள், ஃப்ளெக்ஸ் போர்டுகள் எதுவும் இல்லையே? டிசம்பர் ஆறாம் தேதியை “சிலிர்ப்புடன்” நினைவு கூரவில்லை என்றால் இந்திய தேசிய எதிர்ப்பு என்று சொல்லமாட்டடீர்கள் என்று நினைக்கிறேன். 🙂 வேறு ஏதாவது சுட்டி தர நினைத்திருந்தீர்களோ?
அன்புள்ள அடியவன்,
// இப்படியெல்லாம் எழுதிய உங்களுக்கு… என்று சொல்லும் அளவுக்குக் கோபம் வருகிறது. // காமெடியைக் கண்டு கோபம் எப்படி வரும்? சிரிப்புதான் வந்தது.
// கொஞ்சம் அமைதியாகச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ராம ஜன்ம பூமியை ஜடாயு வீட்டு சமையலறைக்கு ஒப்பாகவும் ஸ்ரீ ராமனை முப்பாட்டன் என்றும் சொல்லலாம், யாருக்கும் எந்த உணர்ச்சியும் வரக் கூடாது? // தாராளமாக உணர்ச்சி வசப்படுங்கள், அது உங்கள் உரிமை. (இதில் உணர்ச்சிவசப்பட என்ன இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை என்பதும் உண்மை.) ஆனால் வந்தியத்தேவன், ஹானஸ்ட் மான் போல் கோபத்தில் உளறினால் எனக்கு சிரிக்க உரிமை கிடையாதா என்ன?
இந்தக் கட்டுரையில், மறுமொழிகளில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறோம். வெட்டித்தனமான அலங்காரப் பேச்சு எந்த விதத்தில் இந்த வாதத்தை முன் கொண்டு செல்லும்?
// டிசம்பர் ஆறாம் தேதியை வெறுப்பை வளர்க்க மட்டுமே பயன்படுத்தும் முஸ்லிம்கள் குறித்து உங்களுக்கு எந்தக் கருத்தும் இருக்காது என்றுதான் தோன்றுகிறது. ஆனால், எதிர்வினையாக இந்துக்கள் அனைவரும் வருடாவருடம் சோம்நாத் கோவில் இடிப்புத் தினத்தையும், ராம் ஜன்ம பூமி இடிப்புத் தினத்தையும், மதுரா கோவில் இடிப்புத் தினத்தையும் அனுசரிக்கத் தொடங்கினால் ஏற்பீர்களா? எனது கருத்து இந்துக்கள் இவற்றை உடனடியாக அனுசரிக்கத் துவங்க வேண்டும். // இதில் நான் ஏற்பதற்கும் மறுப்பதற்கும் ஒன்றுமில்லை. உங்கள் இஷ்டம். நான் அனுசரிக்க மாட்டேன், அவ்வளவுதான்.
Statute of Limitations என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பல நூறு வருஷங்கள் கழிந்த பின்னர் எந்த சமூக அநீதிக்கும் தண்டனை பெற்றுத் தருவது ப்ராக்டிகல் இல்லை. என், உங்கள் முப்பாட்டன்மார் அவர்கள் மனைவியை மீது ஆதிக்கம் செலுத்தி இருப்பார்கள். அதற்காக என் மனைவி, பெண்கள் என்னை தண்டிக்கக் கிளம்பினால் அதை ஏற்கமாட்டேன். வெள்ளையர் நம் நாட்டைக் கொள்ளையடித்து அவர்கள் நாட்டை வளப்படுத்திக் கொண்டது ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு. அதற்காக இன்று இங்கிலாந்து மீது போர் தொடுத்து கோஹினூர் வைரத்தை மீட்டு வர வேண்டும் என்று கிளம்பமுடியாது. என்னைப் பொறுத்த வரை நூறு வருஷங்களுக்கு முன் நடந்த அநீத்களை மறந்துவிடத்தான் வேண்டும். Statute of Limitations! எனக்கு நூறு என்பது உங்களுக்கு ஆயிரமாக இருக்கலாம், ஜடாயுவுக்கு பத்தாயிரமாக இருக்கலாம். ஆனால் Statute of Limitations என்ற கருத்தாக்கத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்.
சோம்நாத் கோவில் இடிபட்டு 900 வருஷம் இருக்காதா? 20 வருஷம் முன்னால் இடிபட்டதையே முஸ்லிம்கள், என்னைப் போன்ற ஹிந்துக்கள் மறந்துவிட வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் 900 வருஷம் முன்னால் நடந்த்தை நினைவு வைத்துக் கொள்வேன் என்றா சொல்கிறீர்கள்?
கஜினி முகமதும், பாபரும், ராணா சங்காவும், கிருஷ்ணதேவராயரும் ஆண்ட காலத்தில் படைபலமே நியாய அநியாயங்களை – குறிப்பாக போர்க்காலங்களில் – நிர்ணயித்தது. இன்றும் எண்ணிக்கை பலமே பிரச்சினைகளின் நியாய அநியாயங்களி நிர்ணயிக்க வேண்டும் என்கிறீர்களா என்ன?
கந்தர்வன்,
// மீண்டும் மீண்டும் “வெறும் நம்பிக்கையின் பேரில்” என்று எழுதி வருகிறார். இராம ஜன்ம பூமியின் மீது உள்ள கண்மூடித்தனமான த்வேஷத்தால் சும்மா இப்படி எல்லாம் எழுதி கருத்துப் பரிமாற்றத்தின் திசை திருப்பும் முயற்சி இது. ராம ஜன்ம பூமி “வெறும் நம்பிக்கையா”? வரலாற்றுக்கும் நம்பிக்கைக்கும் வித்தியாசம் தெரியாது போல இவருக்கு. // எதை நம்பிக்கை இல்லை என்கிறீர்கள்? ராமன் பிறந்த இடம் என்பது வரலாறா என்ன? ஒரு வேளை கோவில் இடிக்கப்பட்டு மசூதி எழுப்பப்பட்டது என்பதை குறிப்பிடுகிறீர்களா? நான் நம்பிக்கை என்று குறிப்பிடுவது அது ராமன் பிறந்த இடம் என்ற தொன்மத்தையே. கட்டிடத்தை இடித்தவர்கள் அது ராமனின் ஜன்ம பூமி என்றே இடித்தார்கள்!
// ஆர் வியின் கொள்ளுத் தாத்தாவுக்குச் சொந்தமான நிலத்தில் ஒருவன் ஆக்கிரமித்து அங்கு ஒரு கழிவறையைக் கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கழிவறையை ஆக்கிரமிப்பாளனின் நான்கைந்து தலைமுறையினர் ‘இது எங்கள் தாத்தா கட்டினது’ என்று கூறிக்கொண்டு இடத்தைக் காலிபண்ணாமல் தகறாரு செய்கிறார்கள், அதனால் ஆர். வீயின் பரம்பரைச் சொத்தான அந்த நிலத்தில் ஆர் வீ வீடு கட்ட தடையாகிறது. அந்த வழக்கும் கோர்ட்டில் இழுத்துக் கொண்டே போகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு பேச்சுக்காக, இதனால் ஆர் வீயும் அவர் குடும்பத்தாரும் வாழ இடமின்றித் திண்டாட வேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது தான் இன்றைய ராம ஜன்ம பூமி இயக்கத்தவரின் நிலை. // ஆனால் எனக்கு பல குறைகள் உள்ள நமது நீதி நிர்வாகத்தைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது? நானும் என் குடும்பத்தவரும் போய் அந்தக் கழிப்பறையை இடித்துவிட முடியுமா? அப்படியே underhand means மூலம் இடித்தாலும் அதைப் பற்றி ஹிந்த்த்துவர்கள் போல பெருமிதத்துடன் வெளிப்படையாக பேச முடிய்மா?
// உண்மையை ஒத்துக் கொண்டால் இதுவரை தமது அறிவுஜீவி பேச்சுக்கெல்லாம் ஜால்ரா அடித்துக் கொண்டிருந்த கும்பல் போய் விடுமே என்று பயம் இல்லாமல் இருக்குமா? // எனக்கே ஜால்ரா கூட்டமா? கேட்கவே சந்தோஷமாக இருக்கிறதே! ஆனால், அய்யா, இந்தக் கும்பலில் ஓரிருவரையாவது அடையாளம் காட்டினால் நன்றியுடையவனாக இருப்பேன். ஏம்பா ஜால்ராக்களா, தனியா இங்கெ நின்னு பேசிக்கிட்டிருக்கேன், கூட பேச்சுத்துணைக்காவது வரக் கூடாது? என்ன மாதிரி ஜால்ராய்யா நீங்க எல்லாம்?
// மசூதி என்ன, இன்று காணப்படும் இந்துக் கோயில்களில் பெரும்பான்மையானவற்றை மன்னர்கள் முன்பிருந்த கட்டிடங்களை இடித்துத் தான் கட்டினார்கள். // இருக்கட்டும், அதனால் என்ன? Statute of Limitations பற்றி எழுதி இருப்ப்தைப் படித்துப் பாருங்கள்.
// சர்வ வல்லமை படைத்த இராமனுக்கு உங்களைப் போன்ற பாடிகார்டுகள் தேவையா? // தேவை இல்லை என்பது எனக்குப் புரிகிறது. சர்வ வல்லமை படைத்த ராமனுக்கும் தெரியும். ஹிந்த்துத்துவர்களுக்கும் அது ஒரு நாள் புரியும் என்று இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது.
ஜடாயு,
// கடந்த சில வருடங்களாக செய்தித் தாள்களில் அயோத்தி இயக்கம் குறித்து வரும் கட்டுரைகளில் புராதன ராமர் கோயில் குறித்த அகழ்வாராய்ச்சிகளும், பாபர் கோயிலை இடித்த வரலாற்று சான்றுகளும், எல்லாம் முழுவதுமாக இருட்டடிக்கப் பட்டு It is believed to be the birthplace of Lord Ram by Hindus என்று சொல்லி விட்டு, உடனே 1992 கட்டட இடிப்பைப் பற்றி எழுதுகிறார்கள்.. படிப்பவர்களுக்கு வெற்றிடத்தில் கட்டப் பட்டிருந்த ஒரு மசூதியை வேண்டுமென்றே *நம்பிக்கையை மட்டுமே* காரணம் காட்டி இந்து வெறியர்கள் இடித்துத் தள்ளி விட்டார்கள் என்ற உணர்வு தான் ஏற்படும். // என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. ராமன் பிறந்த இடம் என்பது நம்பிக்கைதானே? அதை “It is believed to be the birthplace of Lord Ram by Hindus ” என்று சொல்லாமல் வேறெப்படி சொல்வது?
// ஆனால், ஆர்வி 1990களில் கல்லூரி மாணவராக இருந்தவர், // என் வயதைக் குறைப்பதற்கு நன்றி!
\\\ என்னைப் பொறுத்த வரை நூறு வருஷங்களுக்கு முன் நடந்த அநீத்களை மறந்துவிடத்தான் வேண்டும். Statute of Limitations! எனக்கு நூறு என்பது உங்களுக்கு ஆயிரமாக இருக்கலாம், ஜடாயுவுக்கு பத்தாயிரமாக இருக்கலாம். ஆனால் Statute of Limitations என்ற கருத்தாக்கத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். \\\
இடிக்கிறதே. அப்போது ஆதி கால ஜாதி உயர்வு தாழ்வு இதையெல்லாம் கூட Statue of Limitations படி மறக்கச்சொல்வீர்களா?
அன்புள்ள கிருஷ்ணகுமார் அவர்களே,
ஒவ்வொருவரும் தனக்கு சாதகமான விஷயங்கள் இருந்தால், லிமிடேஷன் பிரியடை ஐயாயிரம் அல்ல பத்தாயிரம் வருடம் வரை கொண்டு போக, தயாராக இருக்கிறார்கள். ஆனால் தங்களுக்கு பாதகமாக இருக்கும் விஷயங்களுக்கு மட்டும் ஐம்பது அல்லது நூறு வருடங்களுக்குள் லிமிடேஷன் முடிந்துவிடுகிறது என்கிறார்கள். இது தான் விஷயம். மேலும் திரு ஆர் வீ அவர்கள் எழுதும் கருத்தில் இராமன் பிறந்த இடம் என்பது நம்பிக்கை தானே என்று இளக்காரமாக தெரிவித்துள்ளார். இந்து மத நம்பிக்கைகளை இளக்காரம் செய்யும் அளவுக்கு மற்ற மத நம்பிக்கைகளை இளக்காரம் செய்யும் உரிமை இவருக்கு இருந்தால் , இவர் பேசலாம். இவர் ஆபிரகாமிய மத நம்பிக்கைகளை பற்றி பேசினால், இவர் கதை முடிந்துவிடும். ஒரு உதாரணம், நபிகள் நாயகத்தின் முடி ( hair ) காஷ்மீரில் ஒரு வழிபாட்டுத் தலத்தில் இருப்பதாக இஸ்லாமிய மக்களால் நம்பப்படுகிறது. அது தொலைந்து போய்விட்டதாக ஒரு வதந்தி கிளப்பிவிடப்பட்டு, அந்த ஊரையே கொளுத்தி விட்டார்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள். இது எல்லாப் பத்திரிக்கைகளிலும் வெளிவந்த செய்தி. விக்கியிலும் அனைவரும் பார்க்கலாம் படிக்கலாம், இந்த ஆர் வி போன்றவர்கள் அப்போது வாய்மூடி மவுனம் சாதித்தது ஏனப்பா ? ஊரை கொளுத்தி பலரை கொன்றால், காணாமல் போன பொருள் திரும்ப கிடைத்துவிடுமா ? என்று அந்த காஷ்மீர வஹாபி தீவிரவாதிகளை ஆர்வியை போன்றவர்கள் எப்போதாவது கேட்டதுண்டா ? இல்லை கேட்கத்தான் முடியுமா ? ஆனால் இப்போது இஸ்லாத்தை சேர்ந்தவர்களிலும் உண்மையான சிந்தனையாளர்கள் உருவாகி வருகிறார்கள். உலகம் முழுவதும் மூடத்தனங்கள் எல்லாமே , கேள்விக்கு உட்பட ஆரம்பித்து விட்டன. அதன் விளைவாக தான் , faithfreedom .org , iraiyillaislam , செங்கொடி, tamil .alisina .org என்று முன்னாள் இஸ்லாமியர்கள் கோடிக்கணக்கில் கிளம்பி விட்டார்கள். எதிர்காலத்தில் பெண்ணடிமை, பிற மதத்தினரை அழிக்க சொல்லும் உத்தரவு ஆகியவை உள்ள மதங்கள் குப்பை கூடைக்கு மட்டுமே போகும். இரண்டு அசுரர்கள் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டு அழிந்தது போல, இந்த அயோக்கிய மதங்கள் அழியும். எம்மதம் ஆயினும், சமத்துவம், அன்பு, சஹோதரத்துவம் ஆகியவற்றை ஏற்கத்தவறினால் , அவற்றுக்கு அஞ்சலி தான்.
நேற்று ஒரே நாளில் இரண்டு துக்க வீட்டுக்குச் செல்ல வேண்டி இருந்தது. உடலைத் தூக்கும்போது எல்லோர் வாயில் இருந்து வந்த வார்த்தை “ராம்” “ராம்”.
திரும்பி வீட்டுக்கு வரும் வழியில் ஒரு பஜனை – ” ஹரே ராம ஹரே க்ரிஷ்ண ” நான் அப்படி ஒன்றும் பக்திமான் அல்ல. ஒரு விதத்தில் இறை மறுப்புக் கொள்கை உடயவனே. ஆனால் இந்த இரு வார்த்தைகளும் எப்படி எல்லார் மனத்திலும் ஒன்றிப் போய் இருக்கிறது என்ற நினைப்பு என்னை விட்டு இன்னும் நீங்கவில்லை. இதை வெறும் நம்பிக்கை என்ற ஒரு வார்த்தையில் போட்டு அடைக்க முடியும் என்று தோன்றவில்லை.
\\ படிப்பவர்களுக்கு வெற்றிடத்தில் கட்டப் பட்டிருந்த ஒரு மசூதியை வேண்டுமென்றே *நம்பிக்கையை மட்டுமே* காரணம் காட்டி இந்து வெறியர்கள் இடித்துத் தள்ளி விட்டார்கள் என்ற உணர்வு தான் ஏற்படும் \\
\\ “It is believed to be the birthplace of Lord Ram by Hindus ” \\
ஸ்ரீமான் ஆர்.வி.
இரண்டு வேறு வேறு வாசகங்களை மிக சௌகர்யமாக உங்கள் கருத்துக்கு ஏற்ப சேர்த்து வாதம் செய்கிறீர்கள்.
முதல் வாசகத்தில் ஸ்ரீமான் ஜடாயு அவர்கள் சொல்ல வரும் விஷயம் *ராம ஜென்மஸ்தான்* என்று *நம்பப்படும்* இடத்தில் *மஸ்ஜித்* என்ற கட்டிடம் (அது மஸ்ஜித் தானா என்பதுமே விவாதத்திற்குறியது) …………..வெற்றிடத்தில் உருவாக்கப்படவில்லை என்பது.
அதை தாங்கள் புறந்தள்ளுகிறீர்கள்.
அந்த கட்டடம் கட்டப்பட்ட இடத்தில் அங்கு முதலில் ஆலயம் இருந்தது அகழ்வாராய்ச்சியில் நிரூபணம் ஆகியுள்ளது.
ஆக மதவெறி கொண்ட முஸல்மான் கள் ஒரு கோவிலை தகர்த்து அதன் மீது ஒரு கட்டடம் எழுப்பியுள்ளனர் என்பது நம்பிக்கை அல்ல. முறையாக நிரூபணம் ஆகி ந்யாயாலயம் ஏற்றுக்கொண்ட விஷயம்.
நம்பிக்கை என்பது அந்த இடம் தான் ராம ஜென்மஸ்தான் என்பது மட்டிலுமே.
விவாதாஸ்பதமான கட்டிடம் ஒரு கோவிலின் மீது கட்டப்பட்டது என்பது நம்பிக்கை அல்ல.
இதெல்லாம் இரண்டாம் பக்ஷம் ந்யாயாலயத் தீர்ப்பு வரும் வரை ஹிந்துத்வர்களைப் பார்த்து எல்லோரும் தவறாது கேட்ட கேழ்வி நீங்கள் ந்யாயாலயத் தீர்ப்பை ஏற்பீர்களா இல்லையா?
இன்று தான் தீர்ப்பு வந்து விட்டதே. இன்னும் எதற்கு மேற்கொண்டு நாட்டாமை?
அறிவு ஜீவிகள் — அதுவும் ந்யாயாலயத்தீர்ப்பை துண்டு தாண்டி சத்யம் செய்பவர்கள் – அதை அமல் படுத்துவது பற்றித் தானே பேச வேண்டும்?
\\\ நீதிபதி கானின் தீர்ப்பில் இந்தச் சர்ச்சைக்குரிய பகுதி இப்படிப் பங்குபோடப்பட வேண்டுமெனக் கூறுகிறது:
மையக் கும்மட்டத்துக்குக் கீழே ராம்லாலா விக்கிரகங்கள் வைத்துள்ள தற்காலிகக் கோயில் அமைந்துள்ள பகுதி ஹிந்துக்களுக்கே இறுதியாக அளிக்கப்பட வேண்டும் என மேலும் அறிவுறுத்தப்படுகிறது. \\\
ஆர்.வி அவர்கள்,
\\ ஆனால் எனக்கு பல குறைகள் உள்ள நமது நீதி நிர்வாகத்தைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது? \\
இப்படிச் சொல்லியிருக்கிறாரே. தேசத்தின் நீதி நிர்வாகத்தில் நம்பிக்கை உள்ள அவர் இன்று பேச வேண்டியது உடன் தீர்ப்பை அமல் படுத்துங்கள். அங்கு கோவில் கட்டுங்கள் என்று மட்டிலும் தான்.
சஹோதரி ஸ்ரீமதி அத்விகா,
பொதுவில் அறிவு ஜீவிகள் ஹிந்து மதத்தை மட்டிலும் தான் விமர்சனம் செய்து பார்த்திருக்கிறேன். கொஞ்சம் தெம்பிருந்தால் க்றைஸ்தவத்தை பற்றி விமர்சனம் செய்ய யோசிப்பார்கள். இஸ்லாம் பற்றி மூச்சே விட மாட்டார்கள்.
ஆர்.வி அவர்கள் அமேரிக்காவில் இருக்கிறார். ஆதலால் அவருக்கு பயம் அப்படியெல்லாம் மஜ்பூரி ஏதும் இல்லை என நினைக்கிறேன். ஆனால் அப்படி பொதுப்படையாக ஏதும் விமர்சனம் பண்ணப்போக அறிவு ஜீவி *aura* காணாமல் போய் விடுமோ என்று நினைக்கிறாரோ என்னமோ 🙂
ம்……..அன்பார்ந்த ஸ்ரீ ஹானஸ்ட்மேன், நீங்களும் உங்கள் கருத்தை தொடர்ந்து பதிவு செய்யுங்கள். எதற்குத் தயங்குகிறீர்கள்
திரு ஆர். வீ.,
// எனக்கே ஜால்ரா கூட்டமா? கேட்கவே சந்தோஷமாக இருக்கிறதே! ஆனால், அய்யா, இந்தக் கும்பலில் ஓரிருவரையாவது அடையாளம் காட்டினால் நன்றியுடையவனாக இருப்பேன். ஏம்பா ஜால்ராக்களா, தனியா இங்கெ நின்னு பேசிக்கிட்டிருக்கேன், கூட பேச்சுத்துணைக்காவது வரக் கூடாது? என்ன மாதிரி ஜால்ராய்யா நீங்க எல்லாம்? //
ரொம்ப ஜோக் அடித்துவிட்டதாக நினைக்க வேண்டாம். உண்மையைப் பலவாறு விளக்கியும் லவலேசம் கூட நீங்கள் உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளாததற்குக் காரணம் ஏதேனும் இருக்க வேண்டும். ஒருவேளை இப்படி இருக்குமோ என்பது என்னுடைய ஊகம். கிருஷ்ணகுமார் பின்வருமாறு கூறியிருப்பது பொருத்தமென்றே தோன்றுகிறது.
// ஆனால் அப்படி பொதுப்படையாக ஏதும் விமர்சனம் பண்ணப்போக அறிவு ஜீவி *aura* காணாமல் போய் விடுமோ என்று நினைக்கிறாரோ என்னமோ 🙂 //
இந்த aura அல்லது feel good effect தான் விஷயமே என்று நினைக்கிறோம். சரி இதையெல்லாம் விடுங்க. விஷயத்துக்கு வாங்க.
அது இருக்கட்டும், நீங்கள் முஸ்லீம்களிடம் “சர்வ வல்லமை படைத்த அல்லாவிற்கு உங்களைப் போன்ற மெய்க்காப்பாளர்கள் தேவையா?” என்று கேள்வி என்றாவது கேட்டதுண்டா?
// ஆனால் எனக்கு பல குறைகள் உள்ள நமது நீதி நிர்வாகத்தைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?//
இப்படியெல்லாம் ivory tower-இல் இருந்து கொண்டு நியாயம் பேசுவது எளிது சாமி. இப்படி எல்லாரும் இருந்திருந்தால் பிரிட்டிஷாரிடமிருந்து நமக்கு விடுதலை கிடைத்திருக்காது. UK overseas territory என்று நாம் பெருமைப்பட்டுக்கொண்டு, தன் சொந்த பிள்ளையையும் பேரனையும் கொள்ளுப்பேரனையும் கூட சிம்மாசனத்தில் உட்காரவிடாமல் இடம் பிடித்து வைத்திருக்கும் பெருங்கிழவிக்கு சேவை செய்துகொண்டு ‘எலிசபெத் மகராணி பிள்ளைத் தமிழ்’, ‘எலிசபெத் மகராணி உலா’, ‘எலிசபெத் மகராணி கலம்பகம்’ பாடி மகிழ்ந்து கொண்டிருந்திருப்போம்.
// நானும் என் குடும்பத்தவரும் போய் அந்தக் கழிப்பறையை இடித்துவிட முடியுமா? அப்படியே underhand means மூலம் இடித்தாலும் அதைப் பற்றி ஹிந்த்த்துவர்கள் போல பெருமிதத்துடன் வெளிப்படையாக பேச முடிய்மா? //
நிச்சயமாகப் பெருமைப்பட வேண்டிய காரியம். ஆமைத்தனத்துக்கும், சட்டத்தைக் கயவர்களின் புகலிடமாக ஆக்கிவிட்டதற்கும் அரசின் கன்னத்தில் விழவேண்டிய பலமான அறை.
// ஒரு வேளை கோவில் இடிக்கப்பட்டு மசூதி எழுப்பப்பட்டது என்பதை குறிப்பிடுகிறீர்களா? நான் நம்பிக்கை என்று குறிப்பிடுவது அது ராமன் பிறந்த இடம் என்ற தொன்மத்தையே. கட்டிடத்தை இடித்தவர்கள் அது ராமனின் ஜன்ம பூமி என்றே இடித்தார்கள்! //
நீங்கள் என்ன அவர்களுடைய மண்டைகளுக்குள் புகுந்துப் போய்ப் பார்த்தீர்களா? அல்லது இடித்தவர்களில் நீங்களும் ஒருவரா? என்னமோ அவர்கள் உங்களுக்கு ரொம்பத் தெரிந்தவர்கள் மாதிரி இப்படியெல்லாம் sweeping statements விடவேண்டாம். நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் நாடெங்கிலும் VHP, RSS தொண்டர்கள் கண்ணுக்குத் தெரியும் மசூதிகளையெல்லாம் இடிக்க ‘நம்பிக்கையின் பேரில்’ சாக்கு தேடிக் கொண்டிருப்பார்கள்.
எப்படி? Statute of Limitations ஆ? இது ஒரு ஓட்டைப் பானை வாதம் என்று கிருஷ்ணகுமார் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் என்று பார்ப்போம்.
Statute of Limitations என்பது இரு மனிதர்களுக்கிடையே நடந்த நிலத்தகராறு போன்ற வழக்குகளுக்கு மாத்திரமே செல்லுபடியாகும். விதிவிலக்குகள் உண்டு. அயோத்திப் பிரச்சனையில் பணையமாக இருப்பது கலாச்சாரத் தொடர்ச்சியின் சீரழிவு, ஒரு மாபெரும் வரலாற்றுச் சின்னத்தின் சீர்க்குலைவு. எக்காரணம் கொண்டும் Statute of Limitations என்னும் ஒரு arbitrary-ஆன சித்தாந்தத்தின் பேரில் ஒரு நாடு இவற்றைச் சரிசெய்யத் துணியவில்லையென்றால் அது தற்கொலைக்குச் சமம்.
இந்த statute of limitations-ஐக் காரணம் காட்டி இந்து வழிபாட்டுத் தலங்களின் சீர்க்குலைவிற்கு சப்தமில்லாமல் தலைகுலுக்கி வரவேற்பது நேருவிய நரித்தனம்.
நண்பரே, நீங்கள் ஒரு விஷயம் புரிந்துக் கொள்ளவில்லை. இந்தியக் கலாச்சாரத்திலும் ஆன்மீக இலக்கியத்திலும் தொன்றுதொட்டு ஏழு முக்தி க்ஷேத்ரங்களாக வழங்கப்பட்டுவரும் அயோத்யா, மதுரா, மாயாபுரி, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை இவற்றில் மூன்று க்ஷேத்ரங்களில் (காசியிலும் அயோத்தியிலும்) மக்கள் பலர் வழிபட்டு வந்த ஆலயங்களை வம்புக்கென்றே அவற்றை இடித்துத் தள்ளியோ அல்லது (மதுராவில்) புனிதத்தை அசுத்தப்படுத்தும் விதத்தில் சுவரோடு சுவர் ஒட்டிக்கொள்ளும்படியோ இஸ்லாமியக் கட்டிடங்களைக் கட்டியதன் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்?
இவையெல்லாம் அவமானச் சின்னங்கள், இந்துக்களை வலுக்கட்டாயமாக அடிமைப்படுத்திய இஸ்லாமிய வெறியர்கள் வெற்றிக் களிப்பில் செய்த கேலிச் சிரிப்பின் எதிரொலி, இதற்குச் சான்றுகள் பல பல உள்ளன என்று நாங்கள் பக்கம் பக்கமாக வரலாற்று ஆவணங்களைக் காட்டியுள்ளோம். இந்த இஸ்லாமியக் கட்டிடங்களுக்குப் பெருமைப்படுமளவு எந்தவிதமான வரலாற்றுச் சிறப்பும் இல்லை என்பது புரிய வேண்டும். இந்திய அரசு vandalism, graffiti முதலியவற்றை அகற்றி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டிடங்களை மீட்டு வருவது போல அயோத்திக் கோயிலையும் மீட்க வேண்டும் என்று கூறுகிறோம்.
மசூதி அல்லது பள்ளிவாசல் என்பது அவர்கள் காபாவை நோக்கி பிரார்த்தனை செய்வதற்காக ஒன்று கூடும் இடம், அவ்வளவே. இஸ்லாமில் பெரும்பான்மையாக மக்கா, மதீனா தவிர “புண்ணிய ஸ்தலங்கள்” கிடையாது. வேறு ஸ்தலங்களைப் புண்ணிய ஸ்தலங்களாகக் கூறினால் வகாபிக்கள் அதை ‘ஹராம்’ என்று கடுமையாக மறுப்பர். மற்ற முஸ்லீம்களைப் பொருத்தவரையில் கூட அந்த இடம் ஒரு கல்லறையோ தர்காவோ கூட இல்லை. ஆகையால் மதநம்பிக்கைப் படி பார்த்தாலும் அந்த “பாபரி மசூதிக்கு” எந்தவிதமான சிறப்பும் இல்லை. அது இருக்கும் இடத்தை மாற்றினால் என்ன?
//
// சர்வ வல்லமை படைத்த இராமனுக்கு உங்களைப் போன்ற பாடிகார்டுகள் தேவையா? // தேவை இல்லை என்பது எனக்குப் புரிகிறது. சர்வ வல்லமை படைத்த ராமனுக்கும் தெரியும். ஹிந்த்துத்துவர்களுக்கும் அது ஒரு நாள் புரியும் என்று இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது.
//
ஆஹா, இங்கு தான் உங்களது நிலைப்பாடு தெரிகிறது. நண்பரே, சோமநாதர் ஆலயத்தைக் காப்பாற்றுவதற்கு 50,000 இந்துக்கள் உயிரிழந்தார்களே, மாலிக் கஃபூர் / உலுக் கான் / கில்ஜி படையெடுத்த போது 12,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் உயிரிழந்தார்களே, அவர்களுக்கெல்லாம் “சர்வவல்லமை படைத்த சிவபெருமானுக்கு/அரங்கநாதனுக்கு நாம் எதற்கு மெய்க்காப்பாளர்களாக இருக்க வேண்டும்?” என்று ஆலோசிக்கத் தெரியவில்லையா என்ன? ஒரு கோயிலையும், கல்லாலும் உலோகத்தாலும் ஆன அர்ச்சா மூர்த்திக்கும் இவ்வளவு பேர் உயிரிழந்தது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கோயில் இல்லையென்றால் என்ன, வீட்டுக்குப் போய் கண்ணை மூடிக்கொண்டு தியானம் பண்ணுங்கள் என்று சொல்வீர்களா?
ஏன், ‘பண்டு ரீதி கொலுவு ஈய ஐய ராம’ கீர்த்தனையில் ‘நான் உனது இரட்சகனாகப் பணிபுரியும் வேலை தாரும்’ என்று இராமனைப் பார்த்துக் கேட்ட தியாக பிரம்மம் உங்கள் அகராதியில் பைத்தியக்காரரா?
நண்பரே, எனக்கும் பெரும்பான்மையான எல்லா இந்துக்களுக்கும் ‘இராமன் சர்வ வல்லமை படைத்தவன், நாம் அவனைக் காப்பாற்றத் தேவையில்லை’ என்று தெரியும். ஆனால், அவன் விட்டுச் சென்றிருக்கும் புண்ணியத் தலங்கள், அர்ச்சா மூர்த்திகள், கோயில்கள் எல்லாம் பகவதனுபவத்திற்கு இன்றியமையாதவை. அவற்றை இழந்தோமென்றால் எமது ஜீவாதாரமாகிய ராம கைங்கர்யத்தை இழந்தோம். சட்டத்தின் பிடியிலும் இஸ்லாமிய வெறியர்களின் பிடியிலும் சிக்கியிருப்பது இராமனல்ல, எமது அபரிமிதமான ராம கைங்கர்யமும் பகவதனுபவமும்.
இதெல்லாம் நம்பிக்கை விஷயம் தான், ஒத்துக் கொள்கிறேன். விற்றுப் பணம் பண்ணவோ, நாவால் சுவைத்து வயிற்றை நிரப்புவதற்கோ, உடல்ரீதியான காம இன்பத்திற்கோ பயன்படாதவையெல்லாம் இருந்தாலும் இல்லையானாலும் ஒன்றுமில்லை, அவற்றில் நேரம் செலவழிப்பதால் வீண் என்ற மனப்பான்மை தான் பல சிக்யூலிரிசர்களின் மனப்பான்மை. நீங்கள் அந்தப் பட்டியலில் சேர வேண்டுமா?
// அது இருக்கட்டும், நீங்கள் முஸ்லீம்களிடம் “சர்வ வல்லமை படைத்த அல்லாவிற்கு உங்களைப் போன்ற மெய்க்காப்பாளர்கள் தேவையா?” என்று கேள்வி என்றாவது கேட்டதுண்டா? //
இந்த வரி இடம் மாறியுள்ளது. மறுமொழியின் கடைசி வரியாகக் கொள்ளவும். (cut-paste செய்ததில் தவறிவிட்டேன்)
க்ருஷ்ணகுமார்,
// அப்போது ஆதி கால ஜாதி உயர்வு தாழ்வு இதையெல்லாம் கூட Statue of Limitations படி மறக்கச்சொல்வீர்களா? //
1. Context-ஐ விட்டுவிட்டீர்களே! சோம்நாத் இத்யாதி இடிக்கப்பட்ட நாளை துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்ற வாதத்தின் எதிர்வினையாக வைக்கப்பட்டது அல்லவா அது?
2. ஆம். அன்று மனுவோ வேறு யாரோ பிராமணர்களே உயர்ந்தவர்கள் என்று சொன்னதற்கு மனுவின் சந்ததியினர் என்று கருதப்படுபவர்களை தண்டிக்க வேண்டும் என்று கிளம்புவது முட்டாள்தனம் அல்லவா? அதைத்தான் தி.க.வினர், வினவு குழுவினர் போன்றவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
3. சில வருஷங்கள் முன் வினவு தளத்தினருக்கும் இந்த Statue of Limitations கருத்தாக்கத்தை விளக்க முயற்சி செய்து தோல்வி அடைந்திருக்கிறேன். இங்கும் ஒரு கட்டத்தில் இங்கே எழுதுவதில் பயனில்லை என்று விலகிப் போனேன். அ.நீ. மீது உள்ள மரியாதையால் அவரது சமீபத்திய கட்டுரைகளைப் படித்து மீண்டும் இங்கே எழுத ஆரம்பித்தேன், எதிர்வினை, எதிர்வினைக்கு எதிர்வினை என்று போய்க்கொண்டே இருக்கிறது. யாராவது காது கொடுத்துக் கேட்கிறார்களா என்று பார்ப்போம்.
// ஆக மதவெறி கொண்ட முஸல்மான் கள் ஒரு கோவிலை தகர்த்து அதன் மீது ஒரு கட்டடம் எழுப்பியுள்ளனர் என்பது நம்பிக்கை அல்ல. முறையாக நிரூபணம் ஆகி ந்யாயாலயம் ஏற்றுக்கொண்ட விஷயம்.
நம்பிக்கை என்பது அந்த இடம் தான் ராம ஜென்மஸ்தான் என்பது மட்டிலுமே. // இப்போது அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டேன்.
அத்விகா,
// இராமன் பிறந்த இடம் என்பது நம்பிக்கை தானே // எனக்கு ஒரு genuine சந்தேகம். இந்தத் தளத்தில் யார்யாரெல்லாம் ராமன் பிறந்த இடம் என்பது வரலாறு, நிறுவப்பட்ட உண்மை என்று நினைக்கிறீர்கள்? குறை கண்டுபிடிக்கக் கேட்கவில்லை, உண்மையாகவே தெரிந்து கொள்ளக் கேட்கிறேன்.
கந்தர்வன்,
// இந்த aura அல்லது feel good effect தான் விஷயமே என்று நினைக்கிறோம். // என்றும் எழுதுகிறீர்கள். // நீங்கள் என்ன அவர்களுடைய மண்டைகளுக்குள் புகுந்துப் போய்ப் பார்த்தீர்களா? // என்றும் கோபப்படுகிறீர்கள். நீங்கள் எப்போது என் மண்டைக்குள் புகுந்து பார்த்தீர்கள்? நீங்கள் உங்கள் judgment-ஐ வைத்து அடுத்தவர் மனநிலை என்ன என்று யூகிக்கலாம், அனுமானிக்கலாம், ஆனால் அடுத்தவர் அவர்கள்து judgment-ஐ பயன்படுத்தக் கூடாது, நிறுவப்பட்ட உண்மைகளை மட்டுமே முன் வைக்க வேண்டும் என்கிறீர்களா? என்னங்க இது அடாவடியாக இருக்கிறதே?
அப்போது பேசினாயா இப்போது பேசினாயா என்று கேட்பவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு பதில்தான். நேரம் இருந்தால் இணையத்தில் தேடிக் கொள்ளுங்கள்.
“மத நம்பிக்கையின் அடிப்படையில் பாபர் மசூதியை இடித்தது தவறு” என்று கூவும் ‘மாமனிதர்களை’ ஒன்று கேட்கிறேன்:-
முகலாயர்களும் மற்ற இஸ்லாமிய மன்னர்களும் கோவில்களை இடித்தது மத நம்பிக்கையின் அடிப்படையில்தானே? அது மட்டும் சரியா? என்ன ஆதாரம் உள்ளது அவர்கள் நம்பிக்கை உண்மை என்பதற்கு? ஆப்கானிஸ்தானில் இருந்த கம்பீரமான பெமியன் புத்தபெருமானின் சிலைகளை கொள்ளையர்கள் தகர்தார்களே, அதை எப்படி நியாயப் படுத்துவீர்?
“ஆகா! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் முகலாயர்கள் கோவில்களை இடித்தார்கள் என்பதற்காக இன்று மசூதியை இடிக்கலாமா? அன்று இருந்த விதிகள், அரசியல் சட்டம் வேறு, இன்று இருப்பவை வேறு” என்று சொல்வீர்களே ஆனால், அதற்கும் எதிர்வினை உண்டு!
நீங்களேதான் ஹுசைன் போன்ற ‘ஓவியர்கள்’ போற்றுதலுக்குரிய இந்து தெய்வங்களை கொச்சையாக வரைந்தவர்களுக்கு ஜால்ரா அடிக்கிறீர்கள். என்னவென்று:- “காஜுராகோ போன்ற கோவில்களில் நிர்வாண சிலைகள் இல்லையா. அதிலிருக்கும்போது, ஹுசைன் வரைந்தால் என்ன தவறு என்று”. உங்களின் ‘பகுத்தறிவை’ வைத்தே கேட்கிறேன்:- ஐநூறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கோவில்களில் நிர்வாண சிலைகள் இருக்கிறதென்று இன்று தெய்வங்களை கொச்சையாக வரைவது எந்த விதத்தில் நியாயம்? அப்போது இருந்த விதிகள், அரசியல் சட்டம் வேறு, என்று வேறு அல்லவா?
உங்களுக்கு சரியென்றால் ஒரு நியாயம், அதுவே தவறு என்று பட்டால் அதை ‘மூடநம்பிக்கை’ என்பீர்கள்.. ஏன் இந்த குள்ளநரித்தனம்?
ஒரு மசூதி இடிந்ததர்காக, இவ்வளவு கத்தும் நீங்கள், பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும், காஷ்மீரிலும், ஏன் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் கூட எண்ணற்ற கோவில்கள் இடிபடுவதை ஏன் கண்டிக்கவில்லை? அரபு நாட்டில், உருவ வழிபாடு இருக்ககூடாது என்று நபிகள் எல்லா சிலைகளையும் உடைத்தாராம். சரி சார், அது அவர்கள் நாடு, நியாயம் தான். பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் கோவில்களை இடித்தார்கள், இடிக்கிறார்கள்.. சரி, அந்நாடுகள் துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கென்று கொடுத்தாகிவிட்டது.. இடித்துக் கொள்ளட்டும்.. ஆனால், காலம் காலமாக, இராமன் வாழ்ந்ததாக நம்பப்படும் இடத்தில், இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு எப்படி நீங்கள் கண்டனம் தெரிவிக்கலாம்? ஏற்கனவே பல வருடங்களாக இருந்த கோவிலை இடித்துதான் பாபர் மசூதியைக் கட்டினார் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் நிரூபித்துவிட்டார்களே?
மீண்டும் சொல்கிறேன்.. நியாய சாஸ்திரத்தை (logic) உலகத்திற்கு அளித்ததே இந்துக்கள் தான்.. தர்க்கம், விதர்கம், குதர்க்கம்.. எல்லாமே இந்துக்களுக்குத் தெரியும். அமைதியாக இருக்கிறார்கள் என்பதற்காக, என்ன வேண்டுமானாலும் உளறிக்கொட்டலாம் என்று பகுத்தறிவுவா(ன்)திகள் நினைக்கவேண்டாம்!
“We owe a lot to the Indians, who taught us how to count, without which no worthwhile scientific discovery could have been made.”
– Albert Einstein.
ஒரு கட்சியினர் எப்போதும் கேட்பார்கள்:- “உலகத்திற்கு இந்தியர்களின் பங்கு என்ன? இந்துக்களின் பங்கு என்ன?” என்று. “சரி சார், நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?” எதிர்வினை கேட்டால் மூச்!
சிலநாட்களுக்கு முன்னால் yahoo- வில் ஒரு பதிவு:- “வட இந்திய பந்துவீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவைவிட தமிழக வீரர் அஷ்வின் சிறப்பாக விளையாடுகிறார்” என்று. மகிழ்ச்சி. இதற்க்கு ஒரு கழகக் கண்மணி எழுதியிருந்தார்:- “வட இந்தியர்கள் தின்னுவதர்க்குத் தான் லயக்கென்று” அவரது வட இந்திய வெறுப்பை உமிழ்ந்தார். நான் கேட்டேன்:- “சரி சார், இஷாந்த் ஷர்மாவின் வயது 23, உமேஷ் யாதவிற்கு 25. அவர்கள் நாட்டிற்காக ஆடுகிறார்கள். 44 வயதிற்கு நீங்கள் என்ன கிழித்துள்ளீர்கள்”. ஏன் பதில் வருகிறது??
வாய்ச்சொல்லில் வீரரடி….