தியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து

ந்திய சுதந்திரப்போரில் வன்முறைப் புரட்சியாளர்களின் சகாப்தம் என்பது ஒரு தனியான தியாக வரலாறு. அதில் வாஞ்சிநாதனின் இடம் என்பது இன்னமும் முக்கியத்துவம் கொண்டது. ஏனென்றால் புரட்சி இயக்கம் வங்காளம், பஞ்சாப், மகாராஷ்டிரம், ஐக்கிய மாகாணங்கள் (இன்றைய உ.பி பீகார்) ஆகிய பிரதேசங்களில் மட்டுமே மையம் கொண்டிருந்தது. தேசத்திற்காக இன்னுயிரை ஈந்த புரட்சி இயக்க தியாகவீரர்கள் என்று சந்திரசேகர ஆசாத், பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, குதிராம் போஸ், மதன்லால் திங்ரா, படுகேஷ்வர் தத், அஷ்பகுல்லா கான், ராம்பிரசாத் பிஸ்மில், சாபேகர் சகோதரர்கள், சூர்யா சென், உதம் சிங் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோரைப் பட்டியலாம். அதில் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் சார்பாகவும் இடம்பெறும் ஒரே பெயர் வாஞ்சிநாதன். அலிப்பூர் குண்டுவெடிப்பு, காகோரி ரயில் கொள்ளை, தக்காண புரட்சி (வாசுதேவ் பலவந்த் பட்கே), சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதல், பல பிரிட்டிஷ் அதிகாரிகளின் கொலைகள் என்று அக்காலகட்டத்தின் பல சம்பவங்களுடன் ஒன்றாக இணைத்துத் தான் மணியாச்சியில் நிகழ்ந்த 1911 கலெக்டர் ஆஷ் படுகொலையும் பேசப்படுகிறது.

1986ல் நான் பள்ளிமாணவனாக இருந்த போது வாஞ்சி நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் நன்றியுணர்வுடனும் தேசபக்தியுடனும் அனுசரித்தது. அப்போது தான் மணியாச்சி ரயில் நிலையத்திற்கும் வீரவாஞ்சியின் பெயர் சூட்டப்பட்டது. அதற்குக் கால் நூற்றாண்டுக்குப் பிறகு, அந்த சம்பவத்தைக் குறித்து அயோத்திதாசர் என்ற பிரிட்டிஷ் அடிவருடி புனைந்த எந்த ஆதாரமுமற்ற ஒரு வக்கிரமான பழைய பொய்க்கதை ’புதிய வரலாறு’ என்ற பெயரில் ஊடகங்களில் மீண்டும் மீண்டும் பரப்பப் படுகிறது. சில வருடங்களுக்கு முன் தேசதுரோக வெறுப்பு இயக்கங்களின் உள்வட்டங்களிலும் துண்டுப்பிரசுரங்களிலும் இடம்பெற்ற இந்த பொய்ப்பிரசாரம் இப்போது தமிழ் ஊடகங்களிலும் நாளிதழ்களும் வருமளவுக்கு ஆகியிருக்கிறது. 1986ல் ரகமி எழுதிய வீரவாஞ்சி நாவலை தினமணி கதிர் வெளியிட்டது. இன்று ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை, இந்த இழிவுப் பிரசாரத்திற்கும் இடமளித்திருக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. வாஞ்சிநாதனை மட்டுமல்ல, “பிரிட்டிஷார் இந்தியாவுக்கு நல்லாட்சி அளிக்கையில் அதைக் கவிழ்க்கும் முகமாக தீய நோக்குடன் கப்பல் வணிகத்தை ஆரம்பித்த ராஜதுரோகி வ.உ.சி” என்று வ.உ.சியையும், பாரதியையும், தேசபக்தர்கள் அனைவரையுமே அதேவீச்சில் அந்தப் பொய்க்கதையின் ஊடாக அயோத்திதாசர் வசைபாடியிருப்பதை மறைத்து செலக்டிவ்வாக வாஞ்சி மீது மட்டும் வெறுப்புத்தோன்றும் படியாக இந்த பிரசாரம் செய்யப் படுகிறது.

20ம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் அதற்கு சற்று முன்பும் பிரமாண, சத்ரிய ஜாதிகளைச் சார்ந்த இளைஞர்களே ஆங்கிலக் கல்வி மூலம் தேசிய இயக்க சிந்தனைகளை அறிந்தவர்களாகவும், புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலர் அன்னை காளி மீதும், பகவத்கீதை மீதும், சனாதன தர்மத்தின் மீதும் தான் பிரதிக்கினை செய்தார்கள். இதை வைத்துக் கொண்டு, இன்றைய காழ்ப்புணர்வுகளின் அடிப்படையில் தேசபக்தர்களின் தியாகங்களை அவமதிப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. ஊதம் சிங்கை அவமதித்து அவரால் கொல்லப்பட்ட ஜெனரல் டயரைப் பாராட்டியும், மதன்லால் திங்ராவை அவமதித்து அவரால் கொல்லப்பட்ட கர்சான் வைலியை பாராட்டியும், ராஜகுருவை அவமதித்து அவரால் கொல்லப்பட்ட ஜெ.பி.ஸாண்டர்ஸை பாராட்டியும் ’புதிய வரலாறு’ என்ற பெயரில் ஒரு பொய்மை அவிழ்த்துவிடப்பட்டால் தேசம் சும்மாயிருந்திருக்குமா என்ன? பஞ்சாபிலும், வங்கத்திலும் மகாராஷ்டிரத்திலும் அதைப் பார்த்துக் கொண்டிருப்பார்களா? செருப்பால் அடித்திருப்பார்கள். கேடுகெட்ட மே.வங்க இடதுசாரிகளோ, இந்துத்துவ எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட மராட்டிய தலித் இயக்கத்தவர்களோ தங்கள் பிரதேசத்தின் தேசபக்த தியாகவீரர்களை அவமதிக்கும் இழிசெயல்களை செய்வதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இப்படி?

வீரவாஞ்சியின் தியாக நினைவை அவமதிக்கும் இந்தக் கீழ்மகன்களை எதிர்த்துக் கேள்விகேட்க நாதியில்லையா? தமிழ்நாட்டின் எந்தத் தலைவரும், பிரபலமும் இந்த வக்கிரத்தைக் கண்டிக்க ஏன் முன்வரவில்லை? கயமையில் ஊறிய தேசதுரோக கட்சிகள் ஆஷ் துரையின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கின்றன என்று நாளேடுகள் செய்தி வெளியிடுகின்றன. நாளை ஆஷ் துரையை நல்லவனாகவும் வாஞ்சியை சாதிவெறியனாவும் சித்தரித்து பாடப்புத்தகத்தில் எழுதும் அபாயம் கூட உள்ளது. இந்த அளவுக்கா நன்றிகெட்டு இழிந்து போய்விட்டது தமிழ்நாடு? த்தூ. வெட்கம் அவமானம்.

ண்மையில் தமிழ்நாட்டில் தேசபக்தியும் வீரமும் கொஞ்சமாவது எஞ்சியிருந்தால், அங்கு சென்று அஞ்சலி செலுத்தத் துணிந்த துரோகிகளின் முகரைகளை உடைத்திருக்க வேண்டாமா? அதையும் விட, இப்படி ஒரு வக்கிரத்துக்கு வாய்ப்பளிக்கும் கலெக்டர் ஆஷின் நினைவிடம் ஏன் அங்கு இருக்க வேண்டும்? அதை உடைத்து நொறுக்கினால் நாட்டிற்கு எந்த இழப்பும் ஏற்பட்டு விடாது.

******

வாஞ்சிநாதன் குறித்த திரிபுகள் பொய் தான். ஆனாலும் அவர் ஒரு தீவிரவாதி, வன்முறையாளர்; தொலைநோக்கு சிந்தனை இன்றி செயல்பட்டவர். எப்படியானாலும், இந்திய சுதந்திரத்திற்கான வன்முறைப்புரட்சி இயக்கம் கடும் தோல்வியில் தான் முடிந்தது. எனவே அதில் ஈடுபட்டவர்களின் உயிரிழப்புகள் எதற்கும் மதிப்போ அர்த்தமோ எதுவும் கிடையாது – இப்படிக் கூறும் ஒரு மோஸ்தர் சமீபகாலமாக சில அறிவுஜீவிகள், இலக்கியவாதிகள் மற்றும் அவர்களது அடிப்பொடிகளிடம் காணக்கிடைக்கிறது.

ஜெயமோகன் எழுதுகிறார் – // ‘நான் வாஞ்சிநாதனின் ‘தியாகத்தை’ போற்றவில்லை. எனக்கு அம்மாதிரி சில்லறைக் கலவரங்களில் நம்பிக்கை இல்லை. அது போன்ற நிகழ்வுகளுக்கு சுதந்திரப்போரில் ஒரே ஒரு மதிப்புதான் உண்டு, அவை மக்களின் கவனத்தைக் கவர்ந்து சுதந்திரப்போர் குறித்த செய்தியை கொண்டுசெல்கின்றன. ஆனால் ஏற்கனவே பஞ்சத்தில் நொந்து அஞ்சிப்போய் கிடக்கும் மக்களுக்கு அவை மேலும் அச்சத்தை ஊட்டி சுதந்திரப்போராட்டத்தை மேலும் பின்னுக்கிழுத்தன. ஆம், பகத்சிங் மீதும் , படுகேஷ்வர் தத் மீதும் சந்திரசேகர ஆஸாத் மீதும் எனக்கு இதே அபிப்பிராயம்தான்.’ //

இவர்களில் இன்னும் ஒரு சிறு உட்குழு இன்னுமே தீவிரமானது. அது கூறுகிறது – ”ராணுவ வீரர்கள் என்பவர்கள் யார்? கூலிக்கு மாரடித்து செத்தவர்கள் தானே? காஷ்மீரிலும் கார்கில் போரிலும் உயிர் நீத்த இளம் ராணுவ வீரர்கள் செய்ததெல்லாம் தியாகம் என்று சொல்லமுடியாது. அவர்களைப் போற்றுவதும் அர்த்தமற்றது”. அதாவது, தோற்றபோர் என்றல்ல, வென்ற போரிலும் கூட வீரனுடைய தியாகத்திற்கு சமூகம் ஏன் மதிப்புக் கொடுக்கவேண்டும் என்பது இந்தப் பதர்களின் வாதம்.

தியாகம் என்பதை அடைப்புக்குறிக்குள் போட்டு நக்கல் செய்யும் இந்த மனநிலையை எப்படி அழைப்பது? இது அறிவு முதிர்ச்சியோ அல்லது தெளிவான சிந்தனையோ எல்லாம் அல்ல. சுயநலத்தையோ அல்லது முன்முடிவுகளுடன் கூடிய வெறுப்புணர்வையோ வார்த்தைகளின் இடுக்களில் மறைத்து வெளிப்பாடுத்தும் போலிப்பாவனை மட்டுமே.

எந்த வகையில் பார்த்தாலும் வாஞ்சிநாதனின் செயல் பாரதியாரின் கீழ்க்கண்ட வரிகளுக்கு இலக்கணமாகத் தான் அமைந்தது. பாரதியின் பாடல்களில் தோய்ந்திருந்த வாஞ்சி இவற்றிலிருந்து நேரடியாகவே உத்வேகம் பெற்றிருக்கவும் கூடும்.

மொக்குள்தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்.
தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சரை
மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?

தாய்பிறன் கைப்படச் சகிப்பவனாகி
நாயென வாழ்வோன் நமரில் இங்குளனோ?

படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக்
கடைபடு மாக்களென் கண்முன்நில் லாதீர்.

… நம் இதம்;பெருவளம் நலிந்திட விரும்பும்
வன்மியை வேரறத் தொலைத்தபின் னன்றோ
ஆணெனப் பெறுவோம்;அன்றிநாம் இறப்பினும்
வானுறு தேவர் மணியுல கடைவோம்.

நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம்.

ஆனால், ஆஷ் கொலை மற்றும் அதைத் தொடர்ந்த வழக்குகளின் போது பாரதியார் வாஞ்சியின் வன்முறைச் செயலை கண்டனம் செய்து எழுதினார். ஒட்டுமொத்த தேசிய எழுச்சிக்குரிய காலம் வரவில்லை என்று அவர் கருதியதே இதற்குக் காரணம். பாரதியின் அந்தக்கருத்தை அப்போதைய சமகால அரசியல் அழுத்தங்களுடனும் சேர்த்தே மதிப்பிட வேண்டும். ஆயினும், வாஞ்சியின் தேசபக்தி உணர்வையும் தியாகத்தையும் பாரதி ஒருபோதும் சிறுமைப்படுத்தவில்லை.

ஆனால், இன்று நாம் வரலாற்றின் மேட்டுநிலத்திலிருந்து (Vantage point of history) கடந்தகாலத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில் ஒவ்வொருவரின் செயல்களுக்கும் பின்னால் அந்தந்த சூழல்களின் தாக்கமும் நியாயங்களும் இருந்தன என்பதை சமநிலையுடன் வரலாற்றை நோக்கும் சிலராவது புரிந்து கொள்கிறோம். எனவே, 1857 கிளர்ச்சி, வாஞ்சி, ஆசாத், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் செயல்கள், நேதாஜியின் ராணுவம் இவை எதுவுமே முற்றிலுமாக *தோல்வியில்* முடிந்தன என்பது சரியல்ல என்று நாம் கூறுகிறோம். அவை ஒவ்வொன்றும் தேசபக்தி என்ற ஜ்வாலை அணைந்துவிடாமல் எரிவதற்காக அளிக்கப்பட்ட ஆகுதிகள். இந்த வன்முறை சார்ந்த இயக்கங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிய பிரிட்டிஷ் அரசு, காங்கிரசையும் காந்தியின் மக்கள் இயக்கங்களையும் மென்மையாகவும் பாதி அசட்டையுடனுமே கையாண்டது என்பதையும் நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால் இந்த முரண்களையெல்லாம் புறந்தள்ளி, இந்திய சுதந்திரப் போரில் காந்தியின் தரப்பு மட்டுமே வெற்றியடைந்தது; மற்றவையெல்லாம் தோல்வியைத் தழுவின; எனவே, அந்த இயக்கங்களின் தியாகங்கள் எல்லாம் தியாகங்களே அல்ல, அவை மதிப்பிற்குரியவை அல்ல என்பது எந்தவகையான ”காந்திய” சிந்தனை? அத்தகய சிந்தனை கடும் கண்டனத்திற்கும் நிராகரிப்புக்கும் உரியது.

மனித மனத்தின் ஆழங்களையும் மனித உணர்வுகளின் நுண்மைகளையும் அறிந்த எந்த ஒரு கவிஞனும் படைப்பாளியும், ஒரு தேசபக்தன் தன் உயிரைத் துச்சமெனக் கருதி, அதைத் துறக்க முடிவெடுக்கும் தருணத்தின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளமுடியும். அந்தப் புனித கணத்தில் அவன் இதயத்தில் மேலூறி நிற்பது தூய உணர்ச்சி மட்டுமேயன்றி தொலைநோக்குப் பார்வைகளோ, கணக்குகளோ அல்ல. அந்த ஒரு காரணத்திற்காகவே, எந்த மக்களை முன்னிட்டு அவன் அந்தத் தியாகத்தைச் செய்தானோ, அம்மக்களால் என்றென்றைக்கும் அந்த தியாகம் போற்றப்படும், போற்றப்படவேண்டும். வறட்டுத் தர்க்கங்களால் அதை மறுதலிப்பது என்பது துரோகமும் பச்சையான நன்றி மறத்தலும் மட்டுமே.

வீரரை வீரர் போற்றுவர். வாஞ்சியையும் சந்திரசேகர ஆசாத்தையும் பகத்சிங்கையும் சாவர்க்கரையும் நாம் போற்றுகிறோம்.

வந்தே மாதரம்.

16 Replies to “தியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து”

  1. ஆஷ துரைக்கு அஞசலி அசிங்கம்.சோறு தின்னு வளராத ஜென்மங்கள்.

  2. ஜடாயு, ஜெயமோகன் அப்படித்தான். நான் ஏற்கனவே சொன்னதுதான். . கதைகளில் கட்டுரை எழுதுவார். கட்டுரைகளில் கதை விடுவார். ( இதை அவர் தன புத்தக முன்னுரையில் வேறு போட்டுக் கொண்டிருக்கிறார்) அவர் தன் தரப்பை நிறுவ பல கதைகைளை விடுவார். இப்படித்தான், சதுர் மாசியத்தில் யாரும் மடத்தை விட்டுப்போக மாட்டார்கள், சந்திரசேகர சரஸ்வதி காந்தியைப்பார்க்க பாலக்காடு வரை சென்றார் என்று கதை விட்டார். சந்யாசிகள் மடத்தில் அல்லாது வேறு ஊர்களில் சதுர் மாஸ்யம் செய்வது உண்டு. சந்திரசேகர சரஸ்வதி பாலக்காட்டில் சாதுர்மாஸ்யம் செய்தபோது,சந்திரா சேகர பாரதி ஸ்வாமிகள் கோயம்புத்தூரில் சாதுர்மாஸ்யம் இருந்தார். அதுமட்டும் அல்ல. காந்தி சூத்திரர் . அதனால் அவரை மாட்டுக் கொட்டாயில் சந்தித்தார் என்று எழுதினர். அவர் கதை மன்னன். தன் தரப்பை நிறுவ எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்.

    இதேபோல் இவர்கள் யாத்திரை போனபோது , பெலகாம் ராமகிருஷ்ண மடத்தில் தங்க இடம் கேட்டுள்ளார். நமக்குத் தெரியும் இவர் உலக மகா எழுத்தாளர் என்று. ஆசிரமத்தில், அதுவும் சிறு பிள்ளைகளிருக்கும் இடத்தில், 10 வெளி ஆண்களை , அதுவும் முன் பின் தெரியாத வழிப் போக்கர்களை எப்படி அனுமதிப்பார்கள்? அது என்ன tourist பங்களாவா? அங்கு இப்படி கேட்கும் எல்லாரையும் தங்க அனுமதிக்க முடியுமா? துறவி மறுத்ததற்கு , புழுத்து நாறும் என்ற பதத்தை உபயோகப் படுத்தியவர். இவரே பின்னர் mother தெரசா பற்றி பேச்சு வந்தபோது, ராமகிருஷ்ண மடத்தின் சேவை என்று புகழுவார்.

    அவர் எல்லாரையுமே விமர்சனம் செய்து ” உண்மையை” நிலை நாட்டுவார். அவரைப் பற்றி சொன்னால் ” ஆயாசப் படுவார்”

    அவரிடம் உள்ள நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றவைகளை உதறி விடுங்கள்.

  3. //மனித மனத்தின் ஆழங்களையும் மனித உணர்வுகளின் நுண்மைகளையும் அறிந்த எந்த ஒரு கவிஞனும் படைப்பாளியும், ஒரு தேசபக்தன் தன் உயிரைத் துச்சமெனக் கருதி, அதைத் துறக்க முடிவெடுக்கும் தருணத்தின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளமுடியும். அந்தப் புனித கணத்தில் அவன் இதயத்தில் மேலூறி நிற்பது தூய உணர்ச்சி மட்டுமேயன்றி தொலைநோக்குப் பார்வைகளோ, கணக்குகளோ அல்ல. அந்த ஒரு காரணத்திற்காகவே, எந்த மக்களை முன்னிட்டு அவன் அந்தத் தியாகத்தைச் செய்தானோ, அம்மக்களால் என்றென்றைக்கும் அந்த தியாகம் போற்றப்படும், போற்றப்படவேண்டும். வறட்டுத் தர்க்கங்களால் அதை மறுதலிப்பது என்பது துரோகமும் பச்சையான நன்றி மறத்தலும் மட்டுமே.//

    ஜெயமோகனின் கருத்துக்குத் தக்கமுறையிலான பதிலடி. உண்மையில் அவர் மீதான மதிப்பு பல படிகள் சரிந்துவிட்டது.அவரைப் போன்றவர்களிடம் கேட்டால், உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கக்கூடாது என்பார்கள். என் பதில் என்னவென்றால், நம் வீட்டுப்பெண்களை ஒருவன் மானபங்கம் செய்தால் நம் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதுதான். மனிதன் ஓர் எல்லைக்குப்பிறகு உணர்வுகளால் ஆளப்படுகிறான்.

  4. /இந்திய சுதந்திரத்திற்கான வன்முறைப்புரட்சி இயக்கம் கடும் தோல்வியில் தான் முடிந்தது. எனவே அதில் ஈடுபட்டவர்களின் உயிரிழப்புகள் எதற்கும் மதிப்போ அர்த்தமோ எதுவும் கிடையாது//

    இது ஜயமோகன் எழுதியதன் கருத்து என்று சொல்வது சரியான புரிதல் கிடையாது. அவர் சொல்வது வன்முறையைக் கையிலெடுத்து சிறுகுழுக்கள் சுதந்திரபோராட்ட காலத்தில் செய்ல்பட்டன. அதில் ஒன்றுதான் நீலகண்ட பிரம்மாச்சாரியின் குழு. அதில்தான் வாஞ்சிநாதன் இயங்கினார். இவர்கள் நாட்டுப்பற்றில்லாதவர் என்று அவர் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் வழி நமக்கு விடுதலையை வாங்கித்தர உதவவில்லை. மாறாக, பஞ்சத்தில் நொந்து அஞ்சிப்போய் கிடக்கும் மக்களுக்கு அவை மேலும் அச்சத்தை ஊட்டி சுதந்திரப்போராட்டத்தை மேலும் பின்னுக்கிழுத்தன என்கிறார்.

    For me, his argument is convincing. I think you shouldn’t add his argument with that of others. Take it separate and look into it. It has no connection with Vanchinathan. It is a general view of such isolated groups believing in violence and killing persons. Whatever their purpose, their method was useless. The British didn’t fear such groups as it killed a collector here and a SP there. In fact, the Brtish police dealt with them with iron hands. The British left only when they sensed the pulse of the movement under Gandhi. However, some historians do believe that even for Gandhi, the British had no serious concern. They left only because to maintain a British Empire – where the Sun didn’t set meaning it was wide spread across time zones – was not viable. So, their Parliament discussed the issue and decided to transfer powers to Indians.

  5. TamilHIndu

    சங்ககாலம் தொட்டு சுதந்திரபோராட்டம் வரை வாழ்ந்த உயர்வான பிராமிணர்கள் எல்லோர் மீதும் காழ்பினால் பல புனையப் பட்ட கதைகள் எழுதுவதில் அற்ப சுகம் காண்பவர்கள் மேற்கு இந்திய கிருஸ்துவர்களின் அடிமைகளான திராவிட கழுதைகள், மதம் மாறிய கிருஸ்துவர்கள், இடதுசாரிகள் என்பது வெளிப்படையாக தெரியும் உண்மை. இதை மறைமுகமாக சொல்லி பழிக்கும் நன்கு படித்த இலக்கியவாதிகள், கலைஞர்கள், கவிஞர்கள், ஆதினங்கள் எல்லாம்கூட உண்டு நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி……………………………..வாய் சொல் வீரர்கள். தெற்கில் வாஞ்சி தொடங்கி வடக்கில் நேதாஜியின் ஐ. என். ஏ வரை புரட்சியாளர்கள் இல்லையெனில் சுதந்திரம் அம்போ என்று போயிருக்கும் என்பதை அறியாத மூடர்கள்

    ஜெயமோகனின் பதிலை எதிர்பார்து அவர் பல்வேறு தலைப்புகளி்ல் எழுதிய கருத்துகள் (கோட்) பற்றி சமீபத்தில் தான் இ-மெயில் அனுபினேன். அதை அவர் தனது வலைதளத்தில் போடுவது சந்தேகம்தான். ஜெமோகன் பிராமிணர்களை வஞ்சகபுகழ்சி செய்பவர் என்றும் அவரிடமும் ஜாதி என்ற கு.நா. இருக்கிறது என்பதை நான் மேலோட்டமாகவே தெரிந்து கொண்டேன். –

    quote // சங்ககாலம் முதல் நாம் காணும் தமிழகப் பண்பாட்டு மோதல் என்பது தமிழர் x வடுகர் என்பதுதான். [வடுகர் என்றால் தெலுஙகர், கன்னடர். கிருஷ்ணைக்கும் கோதாவரிக்கும் நடுவே உள்ள வேசரநாட்டைச் சேர்ந்தவர்கள்] //

    quote // இத்தனை ஆண்டுக்கால அரசியல் வழியாக வடுகர் x தமிழர் பிரச்சினையை வெற்றிகரமாக பிராமணர் X தமிழர் என்று மாற்ற இவர்களால் முடிந்தது. //

    சங்ககாலம் முதல் தமிழர் x வடுகர் பண்பாட்டு மோதல் என்பது என்ன என்று தெரியவில்லை. நான் இதுவரையில் எங்கு சொல்லபடாத செய்தியை உங்கள் மூலம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
    அரசியல் வழியாக வடுகர் + தமிழர் = திராவிடம் என்ற கூட்டு சதிதானே நடந்தேரியது. பண்பாட்டு மோதல் என்ன என்று சற்று விளக்கவும். பிராமிணர், ஹிந்து மத பண்பாட்டு மோதல் தானே இன்றுவரை நடக்கிறது.

    பிராமணர்xதமிழர் என்ற பிரச்சனைக்கு வடுகர்களுடன் கூட்டு வைத்து கும்பிஅடித்து காட்டிகொடுத்த முதலியார்வாள் பிள்ளைவாள் பற்றி சொல்லாதது ஏன் ? திராவிட இயக்கம் இன்று வரை தொடர்வதற்கு அவர்களின் பங்களிப்பு மிகவும் பெரியது. இந்த நாயகர், முதலியார்வாள் கூட்டு என்பது விஜயநகர சாம்ராஜ்யம் ஆரம்பித்த நாட்களிலிருந்தே தொடர்ந்து வந்துள்ளது. அன்னியர்கள் தமிழ்நாட்டில் கால்ஊன்ற பெரிதும் துணை நின்றவர்கள். சுதந்திரமே தேவையில்லை என்று அன்னியர்கு காவடி தூக்கியவர்கள். ஆங்கில ஆட்சியில் செயற்கை பஞ்சங்கள் ஏற்படவும், லஞ்சங்கள் பெறுகவும், துபாஷிகளாக சேவகம் செய்து செல்வந்தராக ஆனவர்கள். பல ஏக்கர் நிலங்களுக்கு சொந்தகாரர்களானவர்கள். கோவில் தர்மகர்தாக்களாக இருந்து கோவில் வீடுகளை பட்டா செய்து கொண்டவர்கள். சென்னையில் உள்ள தெருக்களின் பெயர்களே இதற்கு சான்று. என்னால் 50 திற்கும் மேற்ப்பட்ட துபாஷிகளின் பெயர்களையும் தெரு பெயர்களையும் பட்டியல் இட முடியும்.

    quote // இதில் வருந்தத் தக்கது என்னவென்றால் மேலே சொன்ன கதை புராணங்களில் இல்லை என வாதிடும் ஒரு சாராரிடம் உள்ள மேட்டிமை நோக்குதான். ஒரு சாதாரண பிராமணன் ஜக்கி தன்னிடம் வந்து ஒருவார்த்தை கேட்டிருக்கலாமே என்னும் பாவனையில் எழுதுவதிலுள்ள ஆணவத்தைப் பார்க்கையில் தான் எத்தனை ஜக்கிகள் இங்கே இன்னும் தோன்ற வேண்டியிருக்கிறது என்னும் எண்ணம் வருகிறது. //

    மேட்டிமை என்பது பிராமிணர்களுக்கு மட்டும் உள்ள சுபாவம் என்பது போல் காழ்புடன் சொல்வதே ஒரு மேட்டிமை குணம்தான் என்று நான் கருதுகிறேன் !! பார்பான் வெறுப்பு ஒர் அளவுக்கு ஓய்ந்தாலும் தலித் வெறுப்பு இன்றுவரை தொடர்கிறது. இது ஜாதி ஹிந்துகளின் மேட்டிமையை குணத்தை தானே காட்டுகிறது.(இதுதான் காழ்ப்பு) பார்பனபுத்தி, பரபுத்தி என்பதுதானே சமூகத்தில் நிலைத்ததுவிட்டது மற்ற புத்திகள் எங்கு ஓடி ஒளி்ந்து கொண்டன. பிராமணர்களிடம் மேட்டிமை என்பது வெள்ளையர் ஆட்சியில் ஆங்கில படிப்பதில் முன்னிலை வகித்ததால் ஏற்ப்பட்ட குணம் ஆனால் அப்படி எதுவும் இப்பொழுது இருப்பதாக தெரியவில்லை. மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையிடம் கல்வி கற்ற தமிழ் தாத்ததா உ.வே. சா , தளவாய் அரியநாத முதலியாரை பற்றி புத்தகம் எழுதிய எம.எஸ்.சுப்ரமணிய ஐயர். பக்தியியக்கத்தில் சுதந்திர போராட்டத்தில் பிராமிணர்கள் ஜாதி ஹிந்துகளுடன் கைகோர்த்தது எல்லாம் கற்றாரை மதிக்கும் பண்பினால் வந்த குணம். மேலும் இதைப்போல் சான்றுகள் பல கூறமுடியும்..

  6. Tamil Hindu

    // முரஹரி ஐயங்கார் என்றொரு கதாபாத்திரம் இந்த நாவலில் வருகிறது. வக்கீல் தொழிலுக்குப் படித்திருக்கும் அவர் பிரிட்டிஷாருக்கு நிதி ஆலோசனைகள் வழங்கும் ஆடிட்டராகவும் இருக்கிறார். பஞ்ச காலத்தில் லட்சக்கணக்கில் தலித்கள் செத்து விழுவதை அவர்களுடைய விதி என்று எள்ளி நகையாடுகிறார். கூடவே பிரிட்டிஷாருக்குக் கூட்டிக் கொடுத்தும் தனது செல்வாக்கைப் பலப்படுத்திக்கொள்கிறார் என்று நாவலில் சொல்லப்படுகிறது. அப்படி ஒருவர் இருந்தாரா… அவர் அதைச் செய்தாரா என்பவையெல்லாம் நிரூபிக்க முடியாத புனைவு உண்மைகள். ’பெரியார் மண்’ணில் சுமார் 20-25 ஆண்டுகளுக்கு மேலாகத் தனியொருநபராக, இந்து ஆன்மிக மரபின் இலக்கிய ஆதரவாளராக வீரியத்துடன் செயல்பட்டுவரும் ஜெயமோகனே இதையும் செய்திருப்பதைப் பார்க்கும்போது வேதனையே மிஞ்சுகிறது. //
    இது வெள்ளையானை நாவலுக்கு வந்த ஒருவரது பதில் உரை. மேலே சொன்ன முரஹரி ஐயங்கார் என்பதற்கு பதிலாக காலணி ஆதிக்க நிகழ்வுகளை வெள்ளையன் எழுதியவற்றை முழுவதும் படித்தால் நீங்கள் முரஹரி ஐயங்கார் என்பதை முரஹரி முதலியார் என்று எழுதுவதே சரியானதாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாதா ?
    quote // கூடவே அதேயளவுக்கு சாதிவெறி கொண்ட பிராமணர்களும் பிற உயர்சாதியினரும் இங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். //
    quote // ஒரு கீழ்த்தர அரசியல் உத்தி அது. பிராமணரல்லாத உயர்சாதியினர் [நாயர்கள் முக்கியமாக] சாதியாதிக்கத்தை கடுமையான வன்முறைமூலம் நிலைநிறுத்தி பிறசாதியினரைச் சுரண்டிப்பிழைத்தவர்கள். //
    எனக்க தெரிந்தவரையில் பிராமிண ஜாதி வெறி என்பது கிடையாது ஆனால் ஜாதி பற்று உண்டு. மற்ற ஜாதி வெறியர்களால் தான் திராவிடம் பிறந்து தொடர்ந்து வருகின்றது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இப்படிபிராமிணர் என்பதை பற்றி விவரவாக சொல்லும் நீங்கள் உயர்சாதியினர் யார் யார் என்று எப்பொழுதும் பட்டியல் போடாதது ஏன். அதிலும் குறிப்பாக முதலியார், பிள்ளை என்று வந்தால் அவர்களை மேலோட்டமாக விமரிசிப்பது ஏன் ? நாயர்கள் முக்கியமாக என்று சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்று புரியவில்லை ? அவர்களும் வடுகர்களா ? வடுகர்களான விஜயநகர ஆட்சியினால் முகலாயர் ஆக்ரமிப்பு பெரிய அளவில் நடைபெறாமல் தடுக்கப்பட்டதும் கோவில்கள் புதுபிக்கப்பட்டதும், கர்நாடக சங்கீதம், கலைகள் வளர்க்கப் பட்டதும் பண்பாட்டு மோதலா. மோதலை தூண்டிவிட்டவன் வெள்ளையன் அதற்கு வடுகர்களுடன் துணைநின்று அதில் மேலும் தூபம் போட்டவர்கள் வெள்ளாளர்கள் என்பது தெரியாதா? அவர்கள் பங்களிக்கவில்லை எனில் திராவிடம் என்றோ மறைந்து போயிருக்கும். பச்சையப்பன் கல்லூரியிலும் பல்கலைகழகத்திலும் ஆக்ரமித்து தமிழக சரித்திரத்தையே மாற்றி தமிழகத்தை தேசிய நீரோடையிலிருந்து பிரித்த வள்ளல்கள் அல்லவா !
    quote // ஆகவே தமிழகத்தில் பிராமணர்களும், வேளாளர்களும், முதலியார்களும் ,செட்டியார்களும் சாதியை நிலைநிறுத்தியதன் பொறுப்பை முதன்மையாகச் சுமக்கவேண்டும். அதற்காக வெட்கவும், அதற்காக பிராயச்சித்தம்செய்யவும் வேண்டும். அதில் பிராமணர்களுக்கு மேலதிகமான பொறுப்பு ஏதுமில்லை. அப்படிப் பொறுப்பாக்குவது பிறசாதியினரின் கீழ்மைநிறைந்த அரசியல் தந்திரம் //
    இது உண்மை பிராமிணர்களுடன் சேர்ந்து மற்றவர்களும் என்பது ஏற்புடையதுதான்.
    quote // பிராமணர்கள் வன்முறை அற்ற சமூகமாக, கல்வியை மட்டுமே ஆயுதமாகக் கொண்டவர்களாக இங்கே செயல்பட்டிருக்கிறார்கள். சமரசத்தை உருவாக்குபவர்களாகவும், இணைப்பவர்களாகவும் கற்பிப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதன்பொருட்டு பெருமிதம் கொள்ளலாம் //
    இப்படி அடையாளப் படுத்தியதற்கு நன்றி ? (பின் மேட்டிமை மேட்டிமை என்கிறீர்களே அது காழ்பா) ஆனால் அப்படிபட்டவர்களை இன்று தேடவேண்டும் என்ற நிலைக்கு தள்ளியது இந்த திராவிட மாயை ? பார்களிலும் டாஸ்மாக் கடைகளிலும் அவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்கிறது, அறிவு மழுங்கிவறுகிறது. இதற்கு யார் பொறுப்பு !! ?????
    quote // கணிசமான பிராமணர்கள் வெறுக்கப்படுவது அவர்களின் மேலோட்டமான நட்புமுகத்திற்கு அப்பால் சகமானுடரை இழிவெனக் கருதும் அந்த மேட்டிமை அம்சம் எங்கோ ஆழத்தில் இருந்து, தருணம் கிடைத்தால் வெளிப்படும் என்பதை பலர் உணர்ந்திருப்பதனால்தான். குறிப்பாக பொருளியல் மேன்மை அடைந்து, அதிகாரத்தை அணுகும்தோறும் பிராமணர்களிடம் அந்த மேட்டிமைத்தனம் வெளிப்படுகிறது..//

    quote // கணிசமான பிராமணர்கள் இலக்கியம், கலை, ஆன்மீகம் ஆகியவற்றில் பிராமணியத்தன்மைகொண்டவற்றை மட்டுமே ஏற்கக்கூடியவர்களாக, பிற அனைத்தையும் அறியாமலேயே கீழானவையாக கருதக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இது அவர்களிடம் தன்னிச்சையாக வெளிப்படும். இயல்பாகவே புதுமைப்பித்தன் பிடிக்காது, மௌனி பிடிக்கும். நுண்ணியல்பாலேயே வள்ளலாரோ நாராயணகுருவோ உவப்பாக இராது, ரமணரோ ஜே.கிருஷ்ணமூர்த்தியோதான் உண்மையான ஞானிகள் எனத்தோன்றும். //

    இதுவும் ஒர் அளவிற்கு உண்மைதான் அது பொருளியல் மேன்மை அதிகாரத்தால் மட்டும் அல்ல கணிசமமான மற்றவர்களிடம்மும் இந்த சுபாவம் உண்டு. இது மற்ற பல ஜாதியரிடமும் உண்டு. இதற்கு ஏற்ற எதிர்மறை ஜாதி ஹிந்துக்கள் பார்பானை எதிரிபோல் பார்ப்பதுதான் என்று உங்களுக்கு தெரியாதா ?.

  7. கவலைப்படாதீர்கள் வேதம் கோபால். கண்டிப்பாக ஜயமோஹன் நீங்கள் எழுதியவைகளை வாசிப்பார். ஒருவேளை பின்னொரு நாள் ஒரு தர்க்கக் கட்டுரை வழியாக பதில்கள் கொடுக்கலாம். அவர் தமிழ் ஹிந்து வாசிக்கும் பழக்கமுடையவர் என்பது என் எண்ணம். இத்தள்த்தில் கட்டுரை வரைவோர்களில் அவரும் ஒருவர் எனப்து தெரிந்ததே.

    அவருக்கு நீங்கள் எழுதியவை போக சில பொதுவான கருத்துக்களையும் இங்கே வைத்திருக்கிறீர்கள். அவற்றில் ஒன்று மட்டும் தெளிவாகிறது. உங்களுக்கு அளவுகடந்த ஜாதிப்பற்று இருக்கிறது. சிலர் அதிக உணர்ச்சியடைபவர்கள். சிலர் சாதார்ணமாக எடுத்துக்கொள்வார்கள். நீங்கள் முதல் இரகம். இவர்களை இணையதளங்கள்; முகநூல்களில் பார்க்கலாம். வாலிபரிலிருந்து வயதானவர் வரை, பெரிய வியப்பென்னவென்றால், கோயில் அர்ச்சகர்களும் முகநூல்களில் தங்கள் ஜாதிக்காக எழதிவருகிறார்கள்.

    //மேட்டிமை என்பது பிராமிணர்களுக்கு மட்டும் உள்ள சுபாவம் என்பது போல் காழ்புடன் சொல்வதே ஒரு மேட்டிமை குணம்தான் என்று நான் கருதுகிறேன் !! // இது ஜயமோகன் ஜக்கி வாசுதேவ் பற்றி எழுதியதற்கு நீங்கள் வைக்கும் எதிர்வினை. அவர் கருத்து பார்ப்ப்னரல்லாத ஆன்மிகவாதிகள் புகழடையும் போது பார்ப்ப்னர்களுக்கு பொறுக்காதென்பதே. அதற்கு மேட்டிமை உணர்வே காரணம் என்கிறார்.

    ஜயமோகனுக்கும் மற்ற பார்ப்பன எதிர்ப்பாளருக்கும் உள்ள ஒரு வேறுபாடு என்னவெனில், மற்றவர்கள் தொடக்ககாலத்தில் இப்படி மதத்தில் பார்ப்பனர்கள் காட்டும் மேட்டிமை உணர்வை பெரிதுபடுத்திப் பார்த்தார்கள். அதுவே அடிப்படையாக இருந்தது. பின்னர் அவர்கள் அதை ஹிந்துமத வெறுப்பாக்கியவுடன். அதற்கு வேலையில்லாமல் போய்விட்டது. அவர்கள் கவனம் ச்மூகத்தில் பார்ப்பனர் கொண்ட மேட்டிமை உணர்வுப்பக்கம் திரும்பிவிட்டது. ஒருவர் இந்துவாக இருக்கும்போது மட்டுமே பார்ப்பனர்கள் தங்களை பிராமணர்கள் எனவழைத்துக்கொண்டு மேட்டிமை உணர்வுடன் செய்யும் செயல்கள் பெரிதாகத் தெரியும்; அதே இந்துக்கள் பிறமதங்களுக்குப்போன பின் நமக்கென்ன அவர்கள் மேட்டிமைத்தனம் பிற இந்துக்களின் உபத்திரம் என்று போய்விடுவர். அம்பேதக்ர போன்ற் ஒரு சிலர் தொடர்ந்து அதைக்குறிப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

    ஜயமோகன் சமூகத்தில் பார்ப்ப்னர்களை உயர்த்திப்பேசுபவர். எனவே பார்ப்பன எதிர்ப்பாளர்களின் வெறுப்புக்காளானவர் எனப்து தெரியுமே? ஆனால் அவர் மதத்தில் விடவில்லை. எனவே அவர் பேசுவது மதத்தில் repeat மதத்தில் பார்ப்பனருக்குள் உறையும் மேட்டிமைத்தனமே.

    அதைத்தான் நீங்கள் இல்லை என்று மறுக்க வேண்டும். அதை நீங்கள் சமூக உணர்வுகளோடு சேர்த்துக்குழப்புகிறீர்கள். மதத்தில் அம்மேட்டிமை உணர்வை உங்களுக்குப் புரியவராது. காரணம். நீங்கள் தன் ஜாதிப்பாசத்தால் விழியுண்ர்வை அற்றவர். எப்போது புரியுமென்றால், நீங்கள் ஆன்மிகத்தில் ஆழங்கால் பட்ட ஓர் பார்ப்ப்னரலலாத ஹிந்துவாக இருக்க வேண்டும். அது நடக்காது. ஆன்மிகத்தில் என்றால் ஜக்கிமாதிரி, ஆறுமுகசாமி மாதிரி. ஓர் அய்யா வைகுண்டர மாதிரி, ஒரு நாராயண குரு மாதிரி, ஒரு வள்ளலார் மாதிரி, ஓர் இரவிதாசு மாதிரி பரபரப்பை உருவாக்கும் பேர்வழியாக இருக்க வேண்டும். உங்கள் ஆன்மிகத்தைப்பற்றி பொது ஹிந்து ஜனம் கண்டு கொள்ளாது.

    உங்கள் மேட்டிமை உங்கள் சொற்களிலிருந்தே வருகிறது. பிராமணர் ஜாதி என்கிறீர்கள். அது எப்படி சரியாகும்? பார்ப்ப்னர் எனப்துதானே ஜாதிப்பெயர்?. பார்ப்பான் என்றால் அவச்சொல். பார்ப்ப்னர் என்பது உவேசா எழுதிய தனித்தமிழ். கல்விக்கடல் கோபாலையர் போன்றோர் தொடர்ந்து எழுதியதுதானே? வள்ளுவரும் எழுதியிருக்கிறாரே? தனித்தமிழ். இலக்கியங்கள் காட்டிய தமிழ். அது உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லையென்றால், மதவழியாக உங்களுக்குள் உருவாகியிருக்கும் மேட்டிமை உணர்வை அது தடை போடுகிறது. இது ஒரு எ.கா மட்டுமே.

    மற்ற ஜாதியை விட்டுவிட்டு எம்மை மட்டும் பிடிக்கிறார்களே என்பது நல்ல கேள்வி. இதில் மதம், சமூகமென இரு அடிப்படைகள் காரணிகள். ஏற்கன்வே சொன்னது போல ஜயமோகன் போன்றோர் மதத்தை மட்டும்; மற்றவர்கள் சமூகத்தை மட்டும். சமூகம் என்று வரும்போது மட்டுமே உங்கள் கேள்வி நல்ல கேள்வி. மதம் என்று வரும்போது கெட்ட கேள்வி. ஹிந்துமதத்திலிருந்து மேட்டிமைத்தனத்தை உருவாக்கிக்கொண்டு அலட்டல் செய்த பிறஜாதியினரைப் பற்றிக் கேள்விப்பட்டதே கிடையாது. அவர்களனைவரும் தங்களை தமிழ்ஹிந்து என்ற குடைக்குள்தான் கொண்டுவருகின்றனர். நீங்கள் அக்குடைக்கு வெளியே நின்று தமிழ்ப்பிராமணர் என்று அடையாளத்தைக்கொண்டு வாழ்கிறீர்கள்.

    மதத்தில் பார்ப்ப்னர்களுக்கு மேட்டிமை உணர்வு ஊறியவொன்று; அது காலம்காலமாக பிறரால் வெறுக்கப்பட்டே வருந்தது. சிலரால் செயலில் காட்டப்பட்டது. புராணகாலத்திலிருந்தே உண்டு. நம்காலத்தில் இம்மேட்டிமை உணர்வைக் கண்டு இவர்களே நமக்கு வேணடாமென போனவர்களைப்பற்றிய கட்டுரைகள் இத்தளத்தில் அடிக்கடி வந்து கொண்டுதான் இருக்கின்றன. இவர்கள் ஏன் போடுகிறார்கள் என்றால், இந்துமதத்தில் எல்லாவற்றிற்கும் இடமுண்டு எனபதால். பிராமணனே தமக்கு வேண்டாமெனப் போக இம்மதம் தடையாக இருப்பதில்லை என்று போனவர்களை ஹிந்து மஹான்கள் என்று நாம் சொல்லியிருக்கிறோம். இத்தளத்தில் ஒரு பெரிய கிட்டத்தட்ட நூறு மஹானகளைக் காட்டும் படமொன்றைப் போட்டிருந்தார் ஜடாயு. அதில் புத்தரும் உண்டு இல்லையா?

    அடுத்து பார்ப்பனர்கள் ஜாதிப்பற்றுடன் இருக்கிறார்கள்; ஜாதி வெறியுடன் இல்லையென்பதும் பொய். மற்றவர்களுக்குமுண்டே எனப்து அவனுக்கு காச நோய் இருக்கிறது. எனக்கும் இருக்கிறது எனப்தைப் போல. முதலில் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். முன்பு தெரியவில்லை. இன்று வெளிப்படையாக பச்சையாக தெரிகிறது. இணைய தளங்கள்; முகநூல்கள், முன்பு ஆர்க்குட் விவாதங்கள். இன்று தொலைக்காட்சி விவாதங்கள் இவைகள் உங்கள் ஜாதியினரின் ஜாதிப்பற்றக்காட்டவில்லை. ஜாதி வெறிகளைக் காட்டுகின்றன. மற்ற ஜாதியினர் இருக்கும் ஜாதி வெறி இப்படி வெளித்தெரியாமல் இருக்கிறது. இன்று வெளியே வந்து பேசுகிறார்கள். மற்றவர்கள்? அவர்கள் ஜாதிவெறியை மறைப்பதே இல்லை. இணையமில்லாமால் அவர்கள் வெறி எப்போதுமே வெளிப்படைதான். அவர்கள் தங்களுக்குப் பற்றுதான் இருக்கிறது வெறியில்லை என வாதிடுவதை நான் கண்டதில்லை.

    இவ்வுணர்வுகள் போகா.எப்போதுமே. இருக்கும். நீங்களும் தொடர்ந்து: அவனை மாறச்சொல்லு; நான் மாறுகிறேன் என்றெழுதி வாணாளைப்போக்குவீர்கள். தமிழ் ஹிந்து என்று மற்ற தமிழ் ஹிந்துக்களோடு நீங்கள் சேரும்போது, ஹிந்து மதம் மென்மேலும் ஒளிரும். There won’t be any reason for anyone, including Jeyamohan, to bother. When everyone is a common Hindu, and no one is a special Hindu, where’s the room for heartburn?

  8. யார் இந்த ஆறுமுகசாமி (சிதம்பரம் கோவிலில் தகராறு செய்தவறா ?) யார் இந்த இரவிதாசு (ரவிசங்கரை சொல்கீறீர்களா?)

    எனது ஆதங்கம் என்று சொன்னதின் தொடடர்சியாக இந்த வெள்ளாள ஜாதிகள் பெரும் கலக்கல் (பம்மாத்து) பேர்வழிகள் இவர்களால்தான் இலங்கையில் தமிழ் இனம் பந்தாடப்பட்டு பலர் செத்து மாண்டனர். அதைபோல் தமிழகத்திலும் திராவிடம் பேசியே தமிழர்களை தேசிய நீர்ஓடையிலிருந்து பிரித்தவர்கள் என்பதை எனது முந்தைய பின்னூட்டதிலும் சொல்லி உள்ளேன். வடுகர்களுடன் சேர்ந்து திராவிடம் பேசிய இவர்கள் தான் இன்று பிராமிண எதிர்ப்பு எடுபடவில்லை என்பதால் பின் வழியாக வடுகர்கள் தமிழ் தேசியம் என்று பேசிகொண்டு மேலும் பிரிவினையை தூண்டிக் கொண்டிருக்கிறார்கள். விதிவசமாக வெள்ளாள ஜாதியில் பல கண்மணிகள் இருந்தும் (கம்பன்தொடங்கி.,-.ஒட்டகூத்தர்-சேக்கிழார் – 13 நாயன்மார்கள் -வ.உ..சி – திலலையாடி வள்ளிஅம்மை – செண்பகராமன் -) என்று வழிவந்த குழுவில் கம்பரசம் எழுதிய போலி தென்நாட்டுகாந்தி அன்ணா தொடங்கி பட்டியல் எண்ணமுடியாத அளவு படித்த படிக்காத கழிசடைகள் நிறைந்த சமூகம் மாறாமல் திராவிடம் பேசி திரிவது ஏன் என்பதுதான் எனது ஆதங்கம்.

    மேலும் தமிழகத்தில் இட ஒதுக்கீட்டில் உயர் ஜாதி பட்டியலில் பார்பன ஜாதியை தவிர மற்ற ஜாதிகளுக்கெல்லாம் நிறைய உட்பிரிவு ஜாதிகளை பட்டியலில் கொடுத்துள்ளார்கள். நொடிபொழுதில் மற்ற உயர் ஜாதி ஹிந்துக்கள் இந்த உபஜாதி சான்றிதழை பெற்று பின்பட்ட வகுப்பாரின் இட ஒதுக்கீட்டை விழிங்கி கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அது ஏன் ? கடைசியாக இந்த மேட்டிமை குணம் படைத்தவன் யார் ஆனாலும் அவன் பிறரை மதித்து மரியாதை அளிப்பதில்லை என்றால் அவனை சட்டை செய்ய தேவையில்லை இது கேட்டு பெரும் குணம் அல்ல. இன்றும் கடைவீதீகளுக்கு செல்லும் பார்பானை மட்டும் படிகாத பாமரர்கள் ஐயா சாமி வாங்க வாங்க என்று அழைப்பது கேட்டு பெருவது அல்ல !!! ????

    நான் சமீபத்தில் தமிழ் ஹிந்துவிற்கு ஒரு கட்டுரை (கிழக்கிந்திய கம்பெனி துபாஷிகள் சரித்திரம் – பார்பன எதிர்பின் ஆரம்பம்) அனுப்பினேன். அதை பரிசிலித்து வெளியிடுகிறோம் என்று சொல்லி மாதங்கள் கடந்து விட்டன. அவர்கள் ஆர்.எஸ.எஸ் சார்புடையவர்கள். இப்படி ஜாதி பிணக்கை தூண்டகூடிய கட்டுரை வெளியிட தயக்கம் காட்டுகிறார்கள் ? இப்படி எதிர் வினை புரியாமல் நமக்கேன் என்று போய்கொண்டிருந்தால் மற்றவர்கள் நம்மை எட்டி உதைப்பார்கள் என்பது பார்பான் இல்லாமலும் ஹிந்துமதம் இயங்கும் என்ற பதிலில் தொனிக்கிறது! !!????

  9. திரு. பி.எஸ்.வி
    // அவற்றில் ஒன்று மட்டும் தெளிவாகிறது. உங்களுக்கு அளவுகடந்த ஜாதிப்பற்று இருக்கிறது. சிலர் அதிக உணர்ச்சியடைபவர்கள். சிலர் சாதார்ணமாக எடுத்துக்கொள்வார்கள். நீங்கள் முதல் இரகம். //
    பி.எஸ்.வி் ஐயா நீங்கள் சொல்வது போல் எனக்கு ஜாதி பற்றோ அல்லது வெறியோ அறவே கிடையாது. பொதுவாக நான் பிராமிணர்கள் ஜாதி பற்று உடையவர்கள் என்று சொன்னேன். ஏன் இந்த திராவிட தமிழர்கள் இப்படி பார்பானை மட்டும் தனிமைப்படுத்தி குற்றவாளி போல் கூண்டில் நிறுத்தினார்கள். குழுக்களாக ஒன்றுகூடி செய்த சமூக, சமய குற்றங்களை மேல்படியில் இருப்பவன் அவன் தான் எனவே அவனே எல்லா பழியையும் சுமக்கவேண்டும் என்று அடையாளப்படுத்திய திராவிட ஜாதி ஹிந்துக்கள் மேல் கோபம் அதனால் ஒரு ஆதங்கத்தினால் எங்களிடம் மட்டும் குறை காணாதீர்கள் கூட்டு களவாணிகள் பலர் இருக்கிறார்கள் என்பதை அறிவிப்பதே எனது நோக்கம். நீங்கள் எழுதிய மறுமொழியின் கடைசி பத்தியில் பிராமிணன் (பார்பான்) இல்லாமலும்கூட ஹிந்துமதம் இயங்கும் என்று சொல்லுவது அதர்மம் இல்லையா ???. இப்படி சொல்லும் குணத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் ? முதலில் எனக்கு ஜாதி பற்று அதிகம் உள்ளது என்று சொல்லிவிட்டு கடைசி பத்தியில் நான் ஜாதி வெறியுடன் இருக்கிறேன் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள் என்று வற்புறுத்துகீறீர்கள்.
    // கருத்து பார்ப்ப்னரல்லாத ஆன்மிகவாதிகள் புகழடையும் போது பார்ப்ப்னர்களுக்கு பொறுக்காதென்பதே. அதற்கு மேட்டிமை உணர்வே காரணம் என்கிறார். //
    // அவர் பேசுவது மதத்தில் பார்ப்பனருக்குள் உறையும் மேட்டிமைத்தனமே. அதைத்தான் நீங்கள் இல்லை என்று மறுக்க வேண்டும். அதை நீங்கள் சமூக உணர்வுகளோடு சேர்த்துக்குழப்புகிறீர்கள். மதத்தில் அம்மேட்டிமை உணர்வை உங்களுக்குப் புரியவராது.//
    பிரம்ம ஞானம் பெற்ற ஆதிசங்கரரே ஒரு புலயனை விலகு, விலகு என்று சொல்லி அவன் கேட்ட எதிர் கேள்வியால் (இந்த சரீரத்தை விலக சொல்கிறாயா இல்லை அதன் உள்ள ஆத்மாவை விலகசொல்கிறாயா ) என்றதும் ஞான தெளிவு பெற்று தன் தவறை உணர்ந்து ”மநீஷா பஞ்சகம்” பாடவில்லையா !! ? அப்பூதிஅடிகள் அந்தனர், திருநாவுக்கரசர் வேளாளர் அவரை நேரில் பார்காமலே பசு ,கன்று, தட்டுமுட்டு சாமான்கள், அன்னதானம், தண்ணீர்பந்தல் என்று எல்லாவற்றிற்கும் அவர் பெயர் வைத்து மகிழ்ந்ததும். அவர் யார் என்று தெரியாமலே பாதபூஜை, இலை பறிக்க சென்ற மகன் பாம்பு கடித்து இறந்ததை மறைத்து உணவு உபசாரம். எங்கே ஜாதி பிணக்கு, பண்பாட்டு மோதல் வந்தது. அதை போல் ராமானுஜர் அந்தணர், திருகச்ச நம்பி வேளாளர் அவருக்கு கால் கழுவி பணிவிடை செய்யவில்லையா !? பிராமிண மதுரகவி ஆழ்வாரின் ஞான குரு வேளாளரான நம்மாழ்வார். திருஞானசம்பந்தர் தீண்டதகாத வகுப்பாக கருதப்பட்ட திருநீலகண்ட யாழ்பாணரை யாழ் இசைக்க தன்னுடன் வைத்து கொள்ளவில்லையா? உ.வே.சா அந்தணர் அவர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையிடம் கல்வி பயின்று, பணிவிடை செய்யவில்லையா !!?? .ஜெயேந்திரர் பார்பனர் அவர் தலித் வகுப்பை சேர்ந்த மாதா அமிர்தானந்தமயியை சென்று பார்கவில்லையா – வேளாளர்களை வைசியர் என்று அழைக்க வேண்டும் என்று ”வருண சிந்தாமணி” என்ற நூலை கனகசபை பிள்ளை வெளியிட்டார். அந்த நூலுக்கு பாரதியார் ”பாயிரமாக” ஒரு கவிதை அளித்தார். அவர்களுக்காக வக்காலத்து வாங்கினார். இப்படி என்னால் பல உதாரணங்களை சொல்ல முடியும். பின் எங்கிருந்து வந்தது இந்த மேட்டிமை. அதேசமயம் ஆங்கில கல்வி தொடங்கிய பொழுது சில பிராமிணர்கள் மேட்டிமை குணத்துடன் அலைந்தார்கள் அது இப்பொழுது இல்லை என்று எனது முந்தைய பதிவில் சொல்லியுள்ளேன்.. மேலும் அத்தனை கார்பரேட் ஜாதிஹிந்து சாமியார்களிடம் சிஷ்யர்களாக இருப்பவர்கள் பிராமிணர்கள்தான் என்பது தெரியாதா ?

    / உங்கள் மேட்டிமை உங்கள் சொற்களிலிருந்தே வருகிறது. பிராமணர் ஜாதி என்கிறீர்கள். அது எப்படி சரியாகும்?//

    நான் அவ்வாறு சொல்லவில்லை பார்பான் என்ற சொல்லையும் பயன் படுத்தியுள்ளேன். அரசாங்கமே எங்களை பிராமிண சாதி என்றுதான் அடையாள படுத்தியுள்ளது. (ஐயர் ஐயங்கார் பார்பான் என்று சொல்ல வில்லை) பிராமிணன் என்பது ஜாதி அல்ல வர்ணம் என்பது எல்லோருக்கும் தெரியும். சத்திரியன் வைசியன் சூத்திரன் என்று பட்டியலில் இல்லாதபோது ஏன் அரசாங்கம் பிராமிணன் என்று பட்டியலில் சேர்த்தது ? விடை தெரியாது ? அது சரி காஸ்ட் ஹிந்து காஸ்
    ட் ஹிந்து (ஜாதி ஹிந்துக்கள்) என்பது சமூகத்தில் நிலைத்துவிட்டது எதனால் என்று விளக்கம் சொல்ல முடியுமா? அவர்கள் எல்லாம் யார் யார் ? ஏன் அப்படி ஒரு பெயர் ஏற்ப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும் ஆனால் ஒத்துகொள்ள மாட்டீர்கள்.

    my comment interchanged read this first

  10. மேலும் ஜெயமோகன் சில சமய மேட்டிமை குணம் கொண்ட பார்பனர்களை தான் எதிர்கிறார் ஆனால் சமூக பார்பானை எதிர்பதில்லை என்கீறீர்கள். அப்படி என்றால் முரஹரி ஐயங்கார் புனைவு கதாபாத்திரம் சமயம் சார்ந்ததா ?

    ஒருவர் இந்துவாக இருக்கும்போது மட்டுமே பார்ப்பனர்கள் தங்களை பிராமணர்கள் எனவழைத்துக்கொண்டு மேட்டிமை உணர்வுடன் செய்யும் செயல்கள் பெரிதாகத் தெரியும்; அதே இந்துக்கள் பிறமதங்களுக்குப்போன பின் நமக்கென்ன அவர்கள் மேட்டிமைத்தனம் பிற இந்துக்களின் உபத்திரம் என்று போய்விடுவர். அம்பேதக்ர போன்ற் ஒரு சிலர் தொடர்ந்து அதைக்குறிப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

    அம்பேத்கர் என்ன சொல்லுவார் – மேல் பத்தியை சற்று தெளிவாக விளக்கவும் ?

  11. திரு.பி.எஸ்வி. ஐயா
    // ஹிந்துமதத்திலிருந்து மேட்டிமைத்தனத்தை உருவாக்கிக்கொண்டு அலட்டல் செய்த பிறஜாதியினரைப் பற்றிக் கேள்விப்பட்டதே கிடையாது. அவர்களனைவரும் தங்களை தமிழ்ஹிந்து என்ற குடைக்குள்தான் கொண்டுவருகின்றனர். நீங்கள் அக்குடைக்கு வெளியே நின்று தமிழ்ப்பிராமணர் என்று அடையாளத்தைக்கொண்டு வாழ்கிறீர்கள். //
    மதுரை ஆதீனம் – நித்தியானந்தா அலட்டல் எல்லாம் எந்த வகையைச் சேர்ந்தது. தமிழர் மதம் வேறு ஹிந்து மதம் வேறு என்று அலட்டல் செய்த முறைமலைஅடிகள் போன்ற பலர் எந்தமாதிரி அலட்டல் வகையை சேர்ந்தவர்கள்.. நாங்கள் பாரதியன் ஹிந்து தமிழன் பார்பான் என்ற வரிசையில் தான் பார்கிறோம். தமிழ் பிராமிணர் என்று அடையாளபடுத்திக் கொண்டு வாழ்கிறோம் என்பது உங்கள் கற்பனை !! ??

  12. ஜெயமோகன் பிராம்மண ஆதரவாளருமில்லை.எதிர்ப்பாளருமில்லை. அவர் குறை நிறைகளை சுட்டிக் காட்டுகிறார்.அதே சமயம் அவர் நிலைப்பாடுகளை சொல்ல வரும்போது , தன கருத்துக்கு வலு சேர்க்க சில கதைகள் விடுவார். அதே மாதிரி நல்ல காரியவாதி. ஞானி , ஹிந்து ராம் போன்ற ப்ராஹ்மண முற்போக்குவாதிகளின் ஓவர் எகிறி குதிப்பை சரியாக அடையாளம் காட்டுவார். அதே சமயம் ஞானி, ராம் என்று லிஸ்ட் போடும்போது கவனமாக லிஸ்டில் கமலஹாசனை விட்டுவிடுவார். ( தொழில் சாமி!!) அந்த லிஸ்டில் முதல் ஆளாகப் போட வேண்டியது கமல்தான்.ஆனால்நான் கமலஹாசனை அந்தக் கட்டுரை வாயிலாகத்தான் புரிந்து கொண்டேன். தமிழ் சூழலில் கமல் அப்படி இருந்ததால்தான் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக முடிந்தது.வைதீகம் வேண்டாம். ஒரு பக்திமானாக இருந்திருந்தால் கூட அவர் பார்ப்பானாக அடையாளம் காட்டப்பட்டு ஒழிந்திருப்பார். காதல் மன்னனையும் நான் அப்படித்தான் புரிந்து கொண்டேன். ஜெயமோகன் ஒரு முக்கியமான ஆளுமை. அவர்நமக்குக் கிடைத்த ஒரு கொடை. அப்ப அப்ப கொஞ்சம் கதை விடுவாரு. அதை மட்டும் இப்படி மறுத்தால் போதும்.

  13. இந்திய நாட்டின் விடுதலை காந்தியின் அஹிம்சையினால் கிடைத்தது
    என்றாலும் நேதாஜி , பகத்சிங், வாஞ்சிநாதன், போன்றோர் மேலும் உருவாகிவிடுவார்கள் என்ற பயமும் விடுதலைக்கு ஆங்கிலேயரை
    வேகமாக சிந்திக்க தூண்டியது என்பதும் உண்மை.

  14. தமிழ் சூழலில் கமல் அப்படி இருந்ததால்தான் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக முடிந்தது.வைதீகம் வேண்டாம். ஒரு பக்திமானாக இருந்திருந்தால் கூட அவர் பார்ப்பானாக அடையாளம் காட்டப்பட்டு ஒழிந்திருப்பார். காதல் மன்னனையும் நான் அப்படித்தான் புரிந்து கொண்டேன். ஜெயமோகன் ஒரு முக்கியமான ஆளுமை. அவர்நமக்குக் கிடைத்த ஒரு கொடை. அப்ப அப்ப கொஞ்சம் கதை விடுவாரு. அதை மட்டும் இப்படி மறுத்தால் போதும்.

    Ramesh,

    I agree to some extent. But kamal has taken it to extreme limits by his open criticism of hinduisnm, leaning towards EVR & scant comments on Hindu Gods & Goddesses, brahmins etc.,

    Gemini Ganesan on the other hand never made such comments. Even when he was invited by EVR for a meeting, he went & politely made his points which made EVR uncomfortable, but he did not outdo it.

  15. Just to onslaught on Hinduism these people make mudslinging on bramins and their sacrifice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *