பெரியாரின் மறுபக்கம் – பாகம் 1 (தமிழ்மொழி வெறுப்பு)

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழரா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடுபட்டவர் என்றெல்லாம் இன்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் ‘தமிழர் தலைவர்’ என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை சொல்கின்றார்களே – அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?

”கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர்” (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள் – முதல் தொகுதி)

என்றும்,

”நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்” (குடியரசு 22.08.1926)

என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

‘நான் கன்னடியன்’ என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் ‘தமிழர்’ என்றும், ‘தமிழர் தலைவர்’ என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

‘நான் கன்னடியன்’ என்று சொல்லிக்கொண்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழ்ப் புலவர்களை விமர்சித்த விமர்சனங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

தமிழ் புலவர்களைப் பற்றிய விமர்சனம்:

‘தமிழும் தமிழுரும்’ என்ற நூலில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:

”இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் இரண்டு மூன்று புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் 1. தொல்காப்பியன், 2. திருவள்ளுவன், 3. கம்பன்.

இம்மூவரில்,

1. தொல்காப்பியன் ஆரியக்கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட்ட மாபெரும் துரோகி.

2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றான்.

3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுப்படுத்தி கூலிவாங்கி பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். இம்மூவர்களும் ஜாதியையும், ஜாதித் தொழிலையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஆவார்கள்”.

இதுதான் முக்கியத் தமிழ்ப் புலவர்களைப் பற்றிய பார்வை ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு. தொல்காப்பியரும், கம்பனும் துரோகிகள்! சரியான பட்டம்!

தமிழுக்காக தமிழ் இலக்கியத்தை படைத்த இவர்கள் தமிழ்த் துரோகி என்றால் அதே தமிழைப் பழித்த ஈ.வே. ராமசாமி நாயக்கரும் துரோகிதானே! ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழை எவ்வாறெல்லாம் விமர்சித்தார் தெரியுமா?

தமிழ் காட்டுமிராண்டி மொழி:

”தமிழும் தமிழரும்” என்ற நூலிலே, ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன்.”

”தமிழ்ப் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100 க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்வான்களாக… தமிழ்ப் புலவர்களாக வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்டதனால் அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.”

(அதாவது தமிழ் படித்ததால்தான் பகுத்தறிவு இல்லாமல் போய்விட்டார்களாம். உலகம் அறியாதவர்களாகி விட்டார்களாம். நூலாசிரியர்.)

”தமிழை ஒதுக்கிவிடுவதால் உனக்கு (தமிழருக்கு) நட்டம் என்ன? வேறுமொழியை ஏற்றுக் கொள்வதால் உனக்கு பாதகம் என்ன?”

”புலவர்களுக்கு (தமிழ் படித்துத் தமிழால் பிழைப்பவர்களுக்கு) வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையே என்கிற காரணம் ஒன்றே ஒன்று அல்லாமல் தமிழர்கள் நல்வாழ்விற்கு தமிழ் எதற்கு ஆக வேண்டியிருக்கிறது?”

”யாருக்குப் பிறந்தாலும் மானம் தேவை. அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்பொழுது சிந்திக்க வேண்டிய தேவை. அதையும்விடத் தமிழ்மொழியிலும், தமிழ் சமுதாயத்திலும் இருக்கிறதா, இருப்பதற்குத் தமிழ் உதவியதா என்பதுதான் முக்கியமான, முதலாவதான கேள்வி?”

”இந்தியை நாட்டுமொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக்கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.”

(தமிழ்ப்பற்றால் இந்தியை எதிர்க்கவில்லை என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரே சாட்சியம் கொடுத்துள்ளார் – நூலாசிரியர்.)

”தமிழ் காட்டுமிராண்டிக் காலத்துமொழி”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

”தமிழ் ஒரு நியூசென்சு, தமிழ்ப் புலவர்கள் (யாவரும்) குமுக எதிரிகள்”
(நூல்: தந்தை பெரியார், கவிஞர் கருணானந்தம்)

”தாய்ப் பாலை (தமிழை) எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?”

”இன்றைய முற்போக்குக்கு முதல் எதிரி தாய்ப் பால் குடித்த மக்கள்தானே.”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

இதுதான் தமிழைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய கணிப்பு. இன்று தமிழுக்காக போராடுகின்ற தமிழறிஞர்கள் முதலில் எதிர்க்க வேண்டியவர் ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

(இதிலே இன்னொரு விஷயம் தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொன்ன பாரதிதாசன் தமிழைப் பழித்த ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சீடராகவே இருந்தது, பாரதிதாசனின் தமிழ்ப் பற்றுமேல் சிறிது ஐயம் கொள்ளவைக்கிறது.)

தமிழைப் பற்றி இவ்வளவு தரக்குறைவுடன் கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஆங்கில மொழியைப் பற்றி பெருமையாக கூறிய கருத்துக்களைப் பற்றி பார்ப்போம்.

– தொடரும்

சில குறிப்புகள்:

01. ஈ.வே. ராமசாமி நாயக்கர் கன்னடர்…

பெரியார் ஈ.வே.ரா நாட்டாலும் பழக்க வழக்கங்களாலும் தமிழராயினும், மொழியால் கன்னடர்தான். ஆம் அவரது வீட்டு மொழி கன்னடம். தாம் கன்னடர் என்பதை அவரே தமது பேச்சிலும், எழுத்திலும் பன்முறை மிகவும் பெருமிதத்தோடு சொல்லிக்கொண்டார்.

டாக்டர் ம.பொ. சிவஞானம்
நூல்: தமிழகத்தில் பிறமொழியினர்

02. கம்பன் தமிழர் நாகரிகத்தின் விரோதியா?

சிலர் இலக்கிய ஆராய்ச்சி முறைக்கு மாறாகக் குறுக்கு வழியிலே புகுந்து கம்பனைப் பற்றி ஏதேதோ எழுதுகின்றனர். பேசுகின்றனர். அரசியல் கொள்கை, இன வெறுப்பு, பண்பாட்டு வெறுப்பு இவைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு கம்பன் மீது காய்ந்து விழுகின்றனர்.

‘கம்பன் தமிழர் நாகரிகத்தின் விரோதி: தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரி. தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை. நாட்டுப்பற்றில்லாதவன். மொழிப்பற்றில்லாதவன். கலாசாரப் பற்றில்லாதவன்’ என்றெல்லாம் ஒரு சிலர் ஓங்கிப் பேசுகின்றனர். இது உண்மைக்கு மாறான பேச்சென்பதே கம்பனை நடுநிலையிலிருந்து கற்றவர்களின் கருத்து.

தமிழறிஞர் சாமி. சிதம்பரனார்
நூல்: கம்பன் கண்ட தமிழகம்.

03. கம்பன் காவியத்தைக் கொளுத்தலாமா?

கம்பன் மீது இன்று சிலர் காய்ந்து விழுகின்றனர். தமிழின் சிறப்பைத் தரணியிலே விளக்கி நிற்கும் இக்காவியத்தை கொளுத்த வேண்டும் என்றுகூடச் சிலர் கூறுகின்றனர். கம்பன் காவியத்தைக் கையினால் தொடக்கூடாது என்றும் பேசுகின்றனர்.

சிறந்த காவியங்கள் – உயர்ந்த இலக்கியங்கள் – எந்தக் காலத்திலும் மக்கள் உள்ளத்திலிருந்து ஓடிப் போய்விடமாட்டா. அவைகளை அழிக்க முயன்றவர்கள் யாராயினும் வெற்றி காணமாட்டார்கள். இந்த உண்மையை நாம் தமிழ் இலக்கிய வரலாற்றிலே காணலாம்.

தமிழறிஞர் சாமி. சிதம்பரனார்
நூல்: கம்பன் கண்ட தமிழகம்.

14 Replies to “பெரியாரின் மறுபக்கம் – பாகம் 1 (தமிழ்மொழி வெறுப்பு)”

  1. Very Good Article. Waiting for more. I will print this out. Thanks Mr Vengadasen!!

  2. Valthukal…
    Samudhaya Vilipunarchiku ithu oru Eduthukattu….
    Melum Thodaravum…

  3. தமிழரின் தாய் மதம் ஏன் சமசஸ்கிருதத்தில் இருக்கு?
    இந்து கோவில்க‌ளில் த‌மிழில் அர்ச்ச‌னை ந‌டை பெற‌வில்லை அப்புற‌ம் எப்பிடி சார் இந்து த‌மிழ் ம‌த‌ம்…!!!???

  4. ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கதம்
    – தமிழ்விரகர் நற்றமிழ் ஞானசம்பந்தர்

  5. //தமிழரின் தாய் மதம் ஏன் சமசஸ்கிருதத்தில் இருக்கு?
    இந்து கோவில்க‌ளில் த‌மிழில் அர்ச்ச‌னை ந‌டை பெற‌வில்லை அப்புற‌ம் எப்பிடி சார் இந்து த‌மிழ் ம‌த‌ம்…!!!???//

    ————————-

    It is true that all Hindu scriptures are in Sanskrit, but please understand that Azhwars, Naynmars and other followers of the Bhakti movement sang and wrote in Tamil and other languages (some of their mother tongues). It was Acharya Ramanuja (1017-1137) who made sure that the Tamil treatises of the Azhwars, viz. Thiruvaimozhi, Naalayira Divya Prabhandam, etc., are sung in all temples on par with the Sanskrit Vedas. Don’t blabber like useless Periyar goons. Alright, why is that Muslims recite Qur’an only in Arabic? Ippo eppadi Sir Islam Thamizh madham aagum? Kettuthhaan paarungalaen, kaetta naavu thundikkapadum… Shri.Venkatesan has written on that too!

  6. //தமிழரின் தாய் மதம் ஏன் சமசஸ்கிருதத்தில் இருக்கு?
    இந்து கோவில்க‌ளில் த‌மிழில் அர்ச்ச‌னை ந‌டை பெற‌வில்லை அப்புற‌ம் எப்பிடி சார் இந்து த‌மிழ் ம‌த‌ம்…!!!???//

    —————————–

    வடஇந்திய இந்துக்கள் நமது திருக்குறளையோ சங்க நூல்களையோ பயன்படுத்துவது இல்லை என்பது உண்மைதான். ஆனால், தமிழ் இந்துக்கள் பயன்படுத்தும் திருக்குறள், திருவாசகம், திருமுறை, தேவாரம், பெரிய புராணம், திருவாய்மொழி, நாலாயிர திவ்ய பிரபந்தம் இவை அனைத்தும் சமஸ்க்ருத வேதங்களிலிருந்தும் மற்ற சமஸ்க்ருத புரானங்களயுமே பின்பற்றுகின்றன!! சரி சார், சங்க நூல்களும், அகநானூறு, புறநானூறு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய நூல்கள் காட்டும் மதம் எது? கிறிஸ்தவமா இஸ்லாமா? இந்து வேத மதம் தானே? சில நூல்கள் புத்த மற்றும் சமண மதங்களை காட்டினாலும், பெரும்பான்மை என்னவோ இந்து மதம், இல்லை இல்லை நீங்கள் சொல்வதுபோல ‘ஆரிய’ மதத்தையே காட்டுகின்றன!
    பிறகு தமிழர்களின் தாய்மதம் இந்து இல்லாமல் வேறென்ன சார்???

  7. தமிழர்களளின் மதம் இந்து மதமாக இல்லையென்றால் வேறேது அவர்களளின் மதம்?அவர்கலுக்கு மதமே கிடையாதென்றால் நாகரீகமடைந்தவர்கல்லாக அவர்கள் ஆனதெப்படி?நம்முடைய எந்த புராணத்திலும் அந்தனர்கல் ஆதிக்கம் செலுத்தியதாக இல்லையே.பின் ஏன் இந்து மதத்தை தமிழில் இருந்து வேறுபடுத்தி அதை ஆரிய {அனாவசிய} சம்பந்தமாக பார்க்க வேண்டும்?

  8. ” தமிழரின் தாய் மதம் ஏன் சமஸ்கிருதத்தில் இருக்கு?
    இந்து கோவில்க‌ளில் த‌மிழில் அர்ச்ச‌னை ந‌டை பெற‌வில்லை அப்புற‌ம் எப்பிடி சார் இந்து த‌மிழ் ம‌த‌ம்…!!!??? “-
    இளவேனில் உங்கள் கேள்வி மிக அபத்தமானது. சமஸ்கிருதம் எல்லோருக்கும் பொதுவான ஒரு இணைப்பு மொழி. அது சரி கிறித்தவர்களின் வேதம் பைபிள் என்று சொல்கிறார்களே, அது என்ன தமிழிலா இருக்கிறது ? மேற்கத்திய மொழிகளில் இருப்பதை உலகில் பலவேறு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள் அவ்வளவு தான்.. இஸ்லாமியர்களின் வேதம் குரான் தமிழில் இல்லை. அராபிய மொழிகளில் இருப்பதை உலகின் பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

    புத்த, ஜைன மதங்களுக்கு வேதம் எதுவும் கிடையாது. ஏனெனில் அவை வேதத்தை ஒப்புக்கொள்ளாத மதங்கள். இந்துக்களின் வேதம் சமஸ்கிருதத்தில் இல்லை. இந்துக்களின் வேதம் சந்தஸ் என்ற மொழியில் தான் உள்ளது. இந்த சந்தஸ் தான் ஆதிகாலத்தில் நம் மூதாதையர் பேசிய தமிழ் ஆகும். இதிலிருந்துதான் சமஸ்கிருதம் பிறந்தது.

    இந்து கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம். உங்களூர் கோயிலில் உள்ள அர்ச்சகருக்கு தமிழில் அர்ச்சனை செய்ய தெரியாவிட்டால், நீயே நாலாயிர திவ்ய பிரபந்தமோ, அல்லது தேவாரம் , திருவாசகம், திருக்குறள் போன்ற புனித நூல்களை படித்து பாடி , அர்ச்சனை செய்து வணங்கு. மசூதிகளில் தமிழில் குரான் ஓத முடியாது.

    தமிழரின் தாய் மதமான இந்துமதம் சமஸ்கிருதத்தில் இல்லை. இந்து மதம் பல மொழிகளிலும் உள்ளது. சமஸ்கிருதத்திலும் இருக்கிறது அவ்வளவு தான். உன்னைப்போன்ற நண்பர்கள் , பரிசுத்த ஆவியில் இட்டலியும், இடியாப்பமும் செய்து பெரியார் திடலில் வியாபாரம் செய்யும் திக போன்ற மோசடி கும்பல்களின் பொய் பிரச்சாரத்தில் மயங்கியே இப்படி , அர்த்தம் இல்லாத கேள்விகளை கேட்கிறீர்கள் என்பது தெளிவு.

    இந்துக்கள் புனிதமாக கருதும் காயத்திரி மந்திரத்துக்கு உரிய முனிவரே சத்திரியன் ஆன விஸ்வாமித்திரன் தான். இந்துக்கள் வணங்கும் ராமன் ஒரு சத்திரியன் , கிருஷ்ணன் ஒரு மாடு மேய்க்கும் வகுப்பில் பிறந்தவர் தான். இந்துக்களில் சைவர்கள் வணங்கும் சிவன் , மலை ஜாதியை சேர்ந்தவர். இந்துக்களின் வேதங்களை தொகுத்து அளித்த வியாசன் ஒரு மீனவ இனப்பெண்ணுக்கு பிறந்தவன். ராமாயணம் எழுதிய வால்மீகி ஒரு காட்டு வேடன். இவர்களில் எல்லோரும் நமது மூதாதையரே ஆவார்கள். உனக்கு எல்லா விஷயங்களையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டு மென்றால் , பெரியாரின் மறுபக்கம் ( திரு வெங்கடேசன்) திராவிட மாயை ( திரு சுப்பு) போன்ற நல்ல நூல்களை வாங்கி படி. தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றும் தமிழன் காட்டுமிராண்டி என்றும் சொன்ன மோசடிக்காரர்களை விரட்டு.

  9. மொழியை புனிதமாக கருதுகிற மூடநம்பிக்கையை எதிர்த்து, தமிழை புராணங்களால் நிரப்பி வைத்திருக்கிற தமிழ்ப் புலவர்களின் மோசடியை கண்டித்து, தமிழர்களின் உயர்வுக்கு தமிழை பயன்படுத்தாமல், தமிழர்களின் வீழ்ச்சிக்கு பயன்படுத்திய மதவாத கும்பலை அம்பலப்படுத்தி, தமிழை ‘காட்டுமிராண்டிமொழி’ என்று பெரியார் சொன்னார்.

    பெரியாரின் இந்த அறிவியல் பார்வையை தமிழர்களுக்கு எதிராக, தமிழனுக்கு எதிரான கண்ணோட்டமாக மாற்றினார்கள், பெரியாருக்கு எதிரான, தமிழர்களின் ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து பேசாத, ஒடுக்கப்பட்ட தமிழர்களின் எதிரிகளான, தனித்தமிழ் பேர்வழிகளும், தமிழ்த்தேசிய பேர்வழிகளும்.

    இவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பெரியாரின் மொழிப்பார்வை எவ்வளவு அறிவியல் பூர்வமானது என்று விளக்கி எழுதியிருக்கிறார் தோழர் கவி. இதை இவர் எழுதியது என்பதைவிட, பெரியாரே எழுதினார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். காரணம், அந்த அளவிற்கு பெரியாரின் எழுத்துக்களில் இருந்து உதாரணங்களைக் காட்டி, தன் எழுத்தை சுருக்கியிருக்கிறார்.

    இவர் சொந்த ஊர் திருவாரூர். இப்போது சிங்ப்பூரில் பணிபுரிகிறார். பெரியாருக்கு எதிரான தமிழ்தேசியவாதிகளை கண்டித்து, நான் எழுதியதை தொடர்ந்து படித்து வந்த தோழர் கவி, அவர் எழுதிய கட்டுரையை எனக்கு அனுப்பி வைத்தார்.

    இதில், பெரியார் மொழிக்குறித்தும், தமிழ் குறித்தும் சொல்லியிருக்கிற செய்திகள் நிரம்ப அறிவு செறிவுள்ளதாக இருக்கிறது. (பெரியாரின் தமிழ் பற்றிய இந்த சிறப்பான கருத்துக்களும், டாக்டர் அம்பேத்கர் தமிழ் பற்றி சொன்ன கருத்துக்களும் ஓரே தன்மையுடையவை. இதுபற்றி நான் வேறு ஒரு சமயத்தில் எழுதுகிறேன்.)

    தமிழ் மொழியை தாய்மொழி என்பதும், அதைப் புனிதமாக பார்க்கும் போக்கும், பழைய தமிழ் புலவர்களை பெரிய மேதைகளாக நினைக்கும் எண்ணமும், சில பெரியாரிஸ்டுகளிடமும் இருக்கிறது. இதற்கு காரணம், பெரியார் கருத்துக்களைவிட தமிழ்தேசிய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், முறையாக அவரை வாசிக்காததும் அல்லது சில இடங்களில் அவர் கொள்கைகளை கைவிட்டுவிடுவது, வசதியாக இருப்பதுமே காரணம்.

    தோழர் கவி எழுதியிருக்கிற இந்தக் கட்டுரை, தமிழ்த் தேசிய வாதிகளுக்கு மட்டுமல்லாமல், ஏதோ ஒரு ஆர்வத்தில் பெரியாரை ஆதரிக்கிற சில பெரியாரிஸ்டுகளுக்கும், பெரியாரின் மொழி கொள்கையை தெளிவாக காட்டும். அதனால இதைத் தொடராக வெளியிடுகிறேன்.

    இப்படி வெளியில் இருந்து ஒருவர் எழுதிய கட்டுரையை வெளியிடுவது இதுதான் முதல்முறை. இதற்கு முன்பு என் பதிவுகளில் இடம்பெற்ற கட்டுரைகளை ஒட்டி நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்த தோழர் ஏகலைவன், தோழர் விஜய் கோபால்சாமி இவர்களின் கட்டுரைகள் மட்டும்தான் இடம் பெற்றிருக்கிறது.

    தோழர் கவியின் இந்தக் கட்டுரை, பெரியார் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கு ஒர் அறிவு சுரங்கம்.

  10. பெரியார் தமிழ் சீர்
    எழுத்துருக்கள்
    தமிழுக்கும் சீர்தானே

  11. வட இந்திய இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்களில் உள்ள கருத்துக்களை எடுத்துக் கொள்ள வில்லை என்ற வாதமே தவறானது. இந்தியாவில் பல்வேறு மொழிகள் பிறந்து அவற்றில் இலக்கியங்கள் உருவான போது பொதுவாக இருந்த வேத உபநிஷதக் கருத்துக்கள் ஆங்காங்கே இடம் பெற்று வந்துள்ளன. இப்படி எல்லாம் ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ, மராட்டியத்திலோ அல்லது வங்கத்திலோ எவரும் சிந்திக்க வில்லை. சிந்திக்கவும் மாட்டார்கள். கிணற்றுத் தவளைகளாகவே இருந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே இப்படி சிந்திப்பார்கள்.

  12. ஈ.வே.ரா.வைபோல் .ஒரு மோசமான ஆள் இந்த உலகத்தில் இதுவரை பிறக்கவில்லை. தமிழகத்தில் பிறந்து வளர்ந்து “தமிழை.” காட்டுமிராண்டி மொழி என்று கூறிய உத்தமர்!!!! தமிழர்களை மிருகங்களாக மாற்ற பல்வேறு கருத்துக்களை கூறி மூடனாக்கியவர்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *