தீவிரவாதத்திற்குத் துணைபோகும் போலிகள்

டில்லியில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு புதியதல்ல. தொடர்ந்து பல்கிப் பெருகிவரும் தீவிரவாதத்தின் அறைகூவல்; இந்திய இறையாண்மைக்கு தீவிரவாதிகள் விடும் நேரடி சவால். இந்த தீவிரவாதச் செயல் ஏதோ, அரிசி பருப்பு கிடைக்கவில்லை, படிப்பு கிடைக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை என்று ஏழ்மையிலும் வறுமையிலும் ஏற்பட்ட வெறுப்பின் வெளிப்பாடு அல்ல. ஆனால் அவற்றால்தான் என்று சொல்லி தொடர்ந்து அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும் தம்மை மட்டுமன்றி, நம்மையும் ஏமாற்றிக் கொண்டு வருகின்றனர்.

டில்லி குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய இந்திய முஜாகிதீன் அமைப்பே அவ்வளவு எளிதாக சிறுபிள்ளைத் தனமாக தன் நோக்கத்தைப் பற்றி சொல்லிக் கொள்ள விரும்பாது. இந்தத் தீவிரவாதிகள் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாமிய ஆட்சியை எதிர்பார்க்கின்றனர். அதற்குக் குறைவாக எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதாயில்லை. அப்படி இஸ்லாமிய ஆட்சிக்குள் இந்தியா அடங்க நேரிட்டாலும் அப்போதும் பாகிஸ்தானைப் போல், ஆப்கானிஸ்தானைப் போல், ஈரான், ஈராக்கில் தொடர்வதைப்போல் இந்தத் தீவிரவாதம ஓயப்போவதில்லை.

ஒரு வெடிகுண்டுச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது; அதைத் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. நம்மை ஆளும் அரசியல்வதிகளிடமிருந்தும்; பத்திரிக்கைகள் மூலமாகவும் நமக்கு என்ன செய்தி வந்தடைகிறது? குஜராத் சம்பவங்களுக்கு பதிலாகத்தான் இந்த தீவிரவாதச் செயல்; அயோத்தி சம்பவங்களின் விளைவாகத்தான் இந்த பயங்கரவாதச் செயல்; காஷ்மீரில் கஷ்டப் படுவதால்தான் இந்த வெறிச் செயல்; இட ஒதுக்கீடு கிடைக்காததால்தான் இந்த ஈனச் செயல் என்று சாக்குப்போக்குகள்தாம் நம்மை வந்தடைகின்றன. இதே காரணங்களை மற்ற பௌத்த, ஜைன, பார்சி சிறுபான்மைக்காரர்களும் சொல்லிக் கொண்டு குண்டு வைத்தால் அப்படியே ஏற்றுக் கொண்டு மக்களை சாவுக்குக் கொடுத்த வண்ணமாக இருக்க வேண்டியதுதானா?

ஒரு குஜராத்தையும், ஒரு அயோத்தியையும் காரணமாகச் சொல்லி இந்தச் சம்பவங்களுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத கோடானுகோடி ஹிந்துக்களை அவசியமில்லாத குற்ற உணர்ச்சிக்கு ஆட்படுத்த வேண்டும் என்று தீவிரவாதிகள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு அரசியலும் ஊடகங்களும் துணை போகின்றதன. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த போலித்தனம்?

இந்தத் தீவிரவாதிகளுக்கு சற்றும் சளைக்காத அரசியல் சார்ந்த அறிவுஜீவி கூட்டமொன்று இருக்கிறது. இஸ்லாமிய தீவிரவாதிகளின் செயலுக்கு காரணமாக ஒட்டு மொத்தமாக இஸ்லாமிய சமூகத்தையே காரணமாக காட்டுவது தவறு என்கிறார்கள் இவர்கள். இன்று வரை தீவிரவாதிகளை ஆதரிக்கிற முஸ்லீம்களைத்தான் பார்க்கிறோமே தவிர, தீவிரவாதிகளை பகிரங்கமாக கண்டிக்கும் இஸ்லாமிய தலைவர்களையோ, தீவிரவாதிகளுக்கு மத ரீதியாக வெளியிடப்படும் பத்வாக்களையோ கண்டிருக்கிறோமா? ஒரு இஸ்லாமியப் பெண் சானியா மிர்சா ஜீன்ஸ் ஆடை அணிந்து வந்ததற்கும், செய்தித் தாளில் கார்ட்டூன் வரைந்ததற்கும் இஸ்லாமிய உலகத்தில் வரும் எதிர்ப்பையும்; படுபயங்கர தீவிரவாதச் செயல்கள் நிகழும்போது நிலவும் கனத்த மௌனத்தையும் பார்க்கும்போது அந்தச் சமூகமும் இந்த நிலைமைக்கு ஒரு காரணமாக இருக்கலாமோ என நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது?

ஆனால் இப்போதெல்லாம் மௌனம் சாதிப்பதைக் குறைத்து, தீவிரவாதத்தை ஆதரிக்கவே தொடங்கி விட்டனர். டில்லி குண்டுவெடிப்புக்கு பின் நிகழ்ந்த என்கௌன்டரில் ஒரு முக்கிய அதிகாரி கொல்லப் பட்டிருக்கிறார். இருந்த போதிலும், முஸ்லீம்கள் வெளிப்படையாக தீவிரவாதத்துக்கு ஆதரவாக வந்து செத்த தீவிரவாதி ஒன்றும் அறியாதவன், அதிகாரியை சுட்டுக் கொன்றவர்களும், துப்பாக்கியை வைத்திருப்பவர்களுமான மற்ற தீவிரவாதிகள் அப்பாவிகள்; இந்த என்கௌன்டர் ஒரு நாடகம் என்றெல்லாம் முழக்கம் இடுகிறார்கள். இதை விட ஒரு அநியாயம் இருக்க முடியுமா? உயிர்த் தியாகம் செய்த அந்த உன்னத மனிதனுக்கு இதைவிடவும் பெரிய அவமானம் ஏற்பட முடியுமா?

தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படும் போலி மதச்சார்பின்மைவாதிகளும், சில பத்திரிக்கையாளர்களும் உயிரிழந்த அப்பாவிகளை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. தன் உயிரைக் கொடுத்து நம்மைக் காப்பாற்றும் போலிஸ், ராணுவ அதிகாரிகளின் உயிரை நினைத்துப் பார்ப்பதும் இல்லை. தன் கடமையில் உயிர் துறந்த அதிகாரியை விட தீவிரவாதிகளின் உயிரும், அவர்களுடைய கொள்கைகளும் உயர்ந்தனவாக இவர்களுக்குத் தோன்றுகிறது.

இன்னொரு வேதனையான–கேலிக்குரிய–விஷயம், போலி மதச்சார்பின்மை பேசும் அறிவுஜீவிகள் “இந்து தீவிரவாதி” என்று சித்திரிப்பதற்கு யாராவது சிக்க மாட்டார்களா என்ற தவிப்பதுதான்! நரேந்திர மோடியை தீவிரவாதி என்று சொல்லிப் பார்த்தார்கள். அவரோ அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றிமேல் வெற்றிபெற்று வந்துகொண்டே இருக்கிறார். இவர்களுக்கு ஒட்டு மொத்த குஜராத் மக்களையும் தீவிரவாதிகள் என்று சொல்லி விடலாமா என்றுவேறு தவிப்பு உண்டாகி இருக்கிறது. இந்த குண்டுவெடிப்புகளை இந்து பஜ்ரங் தளம் செய்தது என்று திரும்ப திரும்பசி சொல்லி எப்படியாவது நிறுவிவிடப் பார்க்கிறார்கள். அதற்குச் சான்றாக அங்கொன்றும் இங்கொன்றுமாக வெடிகுண்டு தயாரிக்கும் போது பஜ்ரங் தள உறுப்பினர்கள் இறந்ததாக குறிப்பிடுகிறார்கள். இறந்தது நிஜமாகவே பஜ்ரங் தளக்காரர்கள்தாமா, அவர்கள் வெடிகுண்டு வைக்கக் கூடியவர்களா என்பதற்கான சான்றுகள் எதுவுமின்றி திரும்ப திரும்ப ஒன்றையே சொல்லி அதையே உண்மை என நிறுவிவிட முயல்கிறார்கள்.

இதற்குரிய அவசியம், தேவை அல்லது லாபம் என்னவாக இருக்க முடியும்? அரசியல்தான்! முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் மைனாரிட்டிகள் என்கிற கருத்து செல்லாதாதாகி விட்டது. இந்தியாவின் பல மாநிலங்களில், பல மாவட்ட, தொகுதிகள் அடிப்படையில் பார்த்தால் முஸ்லீம்களின் செறிவு அதிகம் உள்ள இடங்கள் கணிசமாக இருக்கின்றன. அந்த இடங்களில் அவர்கள் மைனாரிட்டிகள் இல்லை. தேர்தலில் ஓட்டுக்காக அலையும் அரசியல்வாதிகள் அவர்கள் கட்சியை சேர்ந்த அறிவுஜீவிகள் இந்த இடங்களை விட்டுவிடுவார்களா, நிச்சயம் அந்த மாநில, மாவட்ட, தொகுதிகளில் வெற்றி பெற்று பதவியை பிடித்துக் கொள்ள இவர்கள் மற்ற பகுதிகளில் இருக்கும் மக்களை பலி கொடுத்து விடுகிறார்கள்.

இன்னமும் இந்தியாவில் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருக்கும் தீவிரவாத வெடிகுண்டு சம்பவங்களை ஏதோ இந்தியாவில் இருக்கும் பிரச்சனைகளின் எதிரொலி என்று பார்ப்பது அர்த்தமற்றது. அதை நிகழ்த்துவதும், அதற்குக் காரணமாக இந்து அமைப்புகளையே காட்டுவதும் வக்கிரம். அப்படியெனில் அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இரான், இராக் போன்ற நாடுகளில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் இதுவேதான் காரணமா என்ற கேள்வி எழுகிறது அல்லவா. இஸ்லாமிய தீவிரவாதம் ஒரு உலகளாவிய பிரச்சினை. இதை இலவசக் கல்வி, வேலை வாய்ப்புகள், வேட்டி சேலை எல்லாவற்றையும் கொடுப்பதனால் தீர்த்துவிட முடியாது. அப்படித் தீர்த்துவிடலாம் என்று நினைப்பது அறிவீனம். உடனடியாகத் தேவைப்படுவது அரசிடமிருந்து கடுமையான சட்டங்களும், பாரபட்சமற்ற நடவடிக்கைகளும்தான்.

தீவிரவாதம் ஒரு பெருந்தீமை. அதற்குப் பரிவுகாட்டி மென்மையாகவும் மக்கள் விரோதமாகவும் நடக்கும் அரசாங்கம் ஒரு வக்கிரம். இதில் பொதுமக்களாகிய நாம் என்ன செய்யலாம்? தீவிரவாதத்துக்கு எதிரான வழியை அரசியல்வாதிகளும், பத்திரிக்கையாளர்களும் தாமாக முன்னெடுத்து செல்லப்போவது சந்தேகம் தான். பொதுமக்களாகிய நாம் நமது எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். உங்கள் உள்ளூர் அரசியல்வாதிகளிடம் உங்கள் கருத்தை தெரிவியுங்கள். ஊடகங்களுக்கும், அரசுக்கும் உங்கள் கருத்தை எழுதி அனுப்புங்கள். ஆட்சியில் இருப்பது காங்கிரசாகவோ, பிஜெபியாகவோ, கம்யூனிஸ்டாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். பெரும்பான்மை மக்கள் தமது கருத்தை தெரிவிக்கத் தொடங்கினால் நிச்சயம் இந்திய அரசியலின் எண்ணப் போக்கில் மாற்றம் நிகழும். நிகழ வேண்டும்!
(படங்கள்: நன்றி. இந்துஸ்தான் டைம்ஸ்.)

6 Replies to “தீவிரவாதத்திற்குத் துணைபோகும் போலிகள்”

  1. ஜெய்ப்பூரில் குண்டு வெடித்ததும் முஸ்லிம்களை காரணமில்லை என்று முதலிலேயே தீர்ப்பு சொன்னார்கள் முஸ்லிம் அமைப்புகள். முஸ்லிம்களை விசாரணைக்கு உட்படுத்தியதும் ஐயோ என்று ஓலமிட்டார்கள். மாலேகாவ் குண்டுவெடிப்பிலும் எந்த ஆதாரமில்லாமல் முஸ்லிம்கள் செய்யவில்லை, எல்லாம் காவிச்சட்டைகள் வைத்தார்கள் என்று சரடு விட்டுப்பார்த்தார்கள்.

    இப்போது டில்லி குண்டு வெடிப்பிலும் குண்டு வெடித்த நாளே, இது மோடிதான் செய்திருக்கிறார் என்று “கண்டுபிடித்து” அறிக்கை விட்டார் தமுமுக தலைவர் ஜவஹருல்லா அவர்கள். இந்த மாதிரி அபத்தங்கள் இவர்கள் தீவிரவாதத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்க காரணமாகிறது.

    இப்போது முஸ்லிம் அமைப்பினர் கூடி டில்லியில் தீவிரவாதிவேட்டை நடந்தது மிகவும் மனித உரிமை மீறல் என்றும் அது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார்கள். இறந்த திரு.சர்மா அவர்களின் உடல் வெந்த சுவடு கூட ஆறவில்லை. இவர்கள் இந்தியர்களை எத்துணை அற்பமாக நினைக்கிறார்கள் என்று நினைத்தால் மனம் வெதும்புகிறது.

    அந்த தீவிரவாதிகள் இருந்த ஊருக்குள் விசாரணை செய்யக்கூடாது என்று முஸ்லிம்கள் போராடுகிறார்கள். அப்படி விசாரணை செய்தால் அது அவர்களுக்கு அவமானமாக இருக்கிறதாம். என்ன கூத்து ஐயா இது!! தீவிரவாதிகள் புனித குர்ஆனை மேற்கோள் காட்டி அதன்படிதான் குண்டு வைத்தோம் என்று பக்கம் பக்கமாக ஒவ்வொரு முறையும் எழுதும்போதும் உங்களுக்கு அவமானமாக இல்லையா!

    ஏன் ஒரு இஸ்லாமிய முல்லா கூட அவர்கள் சொல்வதுபோல குர்ஆனில் இல்லை என்று சொல்ல வில்லை!! சொல்ல மனமில்லையா இல்லை சொல்ல முடியவில்லையா?

    நன்றி

    ஜயராமன்

  2. கட்டுரை மிக அருமை, வாழ்த்துகள் !

    அத்வானி வந்ததும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் தான் இஸ்லாமியர்களின் வெறிச் செயலுக்கு காரணம் என்கிறார்கள் சில மேதாவிகள். அப்படியானால் 1947-ல் நாட்டை இரண்டாக பிரித்துக் கொண்டு போனார்களே..அப்பொழுது எந்த அத்வானி காரணம் ?

    ஆயிரக்கணக்கான கோவில்களை தரை மட்டமாக்கினானே ஔரங்கஜீப்..அப்பொழுது ஹிந்துக்கள் தீவிரவாதிகளாக மாறினார்களா ?

    அல்லது 1989-ல் சொந்த மண்ணிலிருந்து அடித்து விரட்டப்பட்டார்களே 4 இலட்சம் காஷ்மிர் ஹிந்துக்கள்..அவர்கள் தீவிரவாதிகள் ஆனார்களா ?

    ஹிந்துக்கள் விழித்தெழ ஆரம்பித்து விட்டார்கள். மாற்றம் வெகுத் தொலைவில் இல்லை !

  3. ஒவ்வொரு முக‌ம‌திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நிக‌ழ்வுக‌ளுக்குப்பின்ன‌ர் விவாத்துக்குள்ளாக்க‌ப்ப‌டுவ‌து ப‌ய‌ங்க‌ர‌வாத்துக்கு எதிரான‌ ச‌ட்ட்ங்க‌ள் போதுமானவையாக இருக்கிறதா இல்லையா என்ப‌தே.

    பயங்கரவாதத்தை எதிர்க்க சட்டசீர்திருத்தங்கள் வேண்டும், சட்டங்களை வலுவுடையதாக்க வேண்டும் என்றும்… பொடா போன்ற சட்டங்கள் மீண்டும் வராது. இருக்கும் சட்டங்களே போதுமானவை என்றும் ஆளும் க‌ட்சிக்கு உள்ளேயே க‌ருத்து வேறுபாடுக‌ள் காண‌ப்ப‌டுகிற‌து.

    ஒரே அரசின் வெவ்வேறு ம‌ட்ட‌ங்க‌ளில் ஏன் இத்த‌னை முர‌ண்பாடு ? முகமதிய சிறுபான்மையினரை (?) முன்வத்து நடக்கும் வோட்டு அரசியல் என்ப‌தை க‌ண்டுபிடிக்க‌ பெரிய‌ ஆராய்சியெல்லாம் தேவையில்லை.

    பொடா போன்ற சட்டங்களை திரும்ப கொண்டு வந்தால் மட்டும் என்ன செய்துவிடமுடியும்? கடுமையான சட்டங்கள் இருந்தபோதும் ஹிந்துஸ்தான மண்ணில் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடந்துவந்திருக்கின்றன. நாடாளுமன்றத்தின் மீதே முகமதிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்பாவி குடிமக்களின் உயிர்களை பலிவாங்கிய சம்பவத்துக்குப் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் நபர்களை கைது செய்வதிலிருந்து, விசாரணைக்கு உட்படுதுவதிலிருந்து, தண்டனை வாங்கித்தருவதுவரை எத்தனைவிதமான தடங்கல்கள்… பயங்கரவாதசெயல்கள் நடக்காமல் தடுக்க ச‌ட்ட‌ங்க‌ளை சீர்திருத்துவ‌தும் புதிய‌ ச‌ட்ட‌ங்க‌ளை கொண்டுவ‌ருவ‌தும் ப்ர‌யோஜ‌ன‌ம‌ற்ற‌ வேலை என்ப‌து க‌ண்கூடு.

    மேலும், இந்த சட்டசீர்திருத்த விவாஹாரங்கள் எந்தவொரு முடிவையும் எட்டப்படாமல் அடங்கிப்போவதும், அடுத்தமுறை குண்டுவெடித்தவுடன் மறுபடியும் ஜீரோவிலிருந்து சட்டங்கள் குறித்த விவாதங்கள் ஆரம்பிக்கும்…. எத்தனை வெடிகுண்டுகளுக்குப் பின்னர் நாம் விழித்துக் கொள்ளப் போகிறோமோ ?

    அமெரிக்காவில் 2001ம் ஆண்டு அல்-காய்தா தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் அமெரிக்காவில் பயங்கரவாத சம்பவங்கள் ஏன் நடக்கவில்லை ? பயங்கரவாத செயல்களுக்கு எதிராக புதிய சட்டங்களை எதையும் அமெரிக்கா இயற்றவில்லையே. காவல்துறையும் உளவுத்துறை ஒருங்கிணைங்து இருக்கும் சட்டங்களை முறையாக அமல் செய்தும், பயங்கரவாதிகளை தீவிரகண்காணிப்புக்கு உட்படுத்தியும்தானே வெற்றிகண்டிருக்கின்றனர். அவர்களது நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு கொஞ்சம்கூட இல்லை என்பதே இந்த வெற்றிக்கு காரணம்.

    ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது ? காஷ்மீர் வழியாகவோ, மேற்குவங்கம் வழியாகவோ… நாலாபுறமிருந்தும் பயங்கரவாதிகள் தாராளமாக ஊடுருவலாம். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ கொடுத்த கள்ள இந்திய பணத்தையும் சவூதியின் பெட்ரோ டாலர்களையும் கொண்டுவந்தால் போதும்.. அவர்களை உள்ளே அனுமதித்து அரவணைத்துக்கொள்ள பெரிய முகமதிய சமுதாயமே காத்திருக்கிறது, எந்தவொரு சாதாரண இந்தியனும் சாதிக்க முடியாத அனைத்தையும் சாதிக்க (தொழில்கள் ஆரம்பிப்பதுமுதல்… கூட்ட்ம் சேர்ப்பதுமுதல்… அரசியலில் ஈடுபடுவது வரை…) அந்த பயங்கரவாதிகளுக்கு வாய்ப்பிருக்கிறது.

    எப்படி அவர்களால் இதை சாதிக்க முடிகிறது. சாதாரண குமாஸ்தாவிலிருந்து, அதிகாரிகள் வரை… வட்டசெயலாளர்கள் முதல் மந்திரி வரை அனத்துமட்டங்களிலும் ஊடுருவிப்பரவிய ஊழல்களையும், இருக்கிற ஒன்றிரண்டு நேர்மையான அதிகாரிகளின் செயல்பாடுகளையும் முடக்க்கிப்போடும் அரசியல் தலையீடுகளையும், ஹிந்துஸ்தான மக்களின் அளவுக்கு அதிகமான சகிப்பித்தன்மையையும் காரங்களாகக் கூறலாம்.

    முகமதிய பயங்கரவாதிகளின் உயிர்நாடி பாரத்தத்துக்கு உள்ளேயும் வெளியிலிருந்தும் கிடைத்துவரும் பொருளாதார ஆதரவு மட்டுமே. இவ்வகையான ஆதரவு இல்லாமல் அவைகளால் செயல்பட இயலாது. முகமதிய பயங்கரவாதம் களையப்படவேண்டுமானால், அவைகளுக்கு பொருளாதார உதவிகள் கிடைக்காமல் செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் வலுப்பெற வேண்டும். அரசு அதிகாரிகள் வுதவியுடன் உளவுத்துறையும் காவல்துறையும் இணைந்து இதை செய்யவேண்டும். அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு எந்த அரசியல் குறுக்கீடுகளும் இல்லாது இவை நிறைவேற்றப்படவேண்டும். பயங்கரவாதிகளுக்கு கிடக்கும் பொருளாதார உதவிகளையும் அவைகள் செய்யும் பரிவர்த்தனைகளையும், அவைகளுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளையும் ஹிந்து அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்தல் அவசியம். முகமதிய சமுதாயத்தால் எந்த ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை. முகமதியம் அவர்களுக்கு பயங்கரவாதத்தைத்தவிர வேரெதையும் கற்றுத்தரவில்லை.

    பெரும்பான்மை ஹிந்துக்கள் எழுந்து நிற்காதவரை உருப்படியாக ஏதும் நிகழ‌ப்போவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *