கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன?

கர்னாடகாவில் கடந்த சில நாட்களாக மதக் கலவரம் தலை தூக்கியுள்ளது. கிறித்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டு வருகின்றதாக வரும் செய்திகள் நம்மை கவலையுறச் செய்கின்றன. இந்த தாக்குதல்களில் சில இந்து அமைப்புகள் ஈடுபட்டிருக்கின்றன என்று கிறிஸ்துவ அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. பொதுவாக இந்துக்கள் மதத்தின் பேரில் அடித்துக்கொள்வதை விரும்பாத ஒரு சாதுவான சமுதாயம். மற்ற மதத்தவரின் வழிப்பாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதை நாம் கண்டிக்கிறோம். ஆனால் உண்மையில் அங்கு என்ன நடந்தது? நிகழ்ந்தவைகளுக்கு அடிப்படைக் காரணம் என்ன? யாருக்கு என்ன கோபம் ?..

எனக்கு கிடைத்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

சமீபத்தில் ஒரிஸ்ஸாவில் ஒரு மரியாதைக்குரிய இந்துத் துறவி – சுவாமி லக்ஷ்மனானந்தா அவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதின் விளைவாக பெரிய அளவில் அங்கே மதக் கலவரம் வெடித்தது. அதன் எதிரொலியாகத்தான் கர்னாடகாவிலும் கிறிஸ்தவ சர்ச்சுகள் மீது தாக்குதல்கள் நடக்கின்றன என்றுதான் முதலில் நினைக்க தோன்றியது. ஆனால் நடந்த விஷயங்கள் வேறு. மங்களூரை ஒட்டிய பகுதிகளில் புதிதாக முளைத்திருக்கும் ஒரு மதமாற்றக் கும்பல் “வாலாட்டியதே” இத்தனைப் பிரச்சனைக்கும் மூல காரணம் என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது.

“சத்ய தர்ஷினி” என்று ஒரு புத்தகம். அதில், இந்து கடவுள்கள் மீது வீசப்பட்டுள்ள தரக் குறைவான, சொல்லக் கூசும் தாக்குதல்கள். இவைதான் அங்கே மதக் கலவரத் தீயை மூட்டி விட்டுள்ளன.

மங்களூரில் இயங்கி வரும் “நியு லைஃப் ட்ரஸ்ட்” (New Life Trust) எனப்படும் கிறுத்தவ அமைப்பு அந்தக் கன்னட புத்தகத்தை மக்களிடையே விநியோகம் செய்துள்ளது. அதில் பரம்பொருளின் திருவுருவாக நாம் அனைவரும் கருதி வழிபடும் சிவபிரான், இராமர், கிருஷ்ண்ர், தேவி ஆகிய தெய்வங்கள் பற்றி கேவலமான சொற்களால் தரக்குறைவாக விமரிசித்திருக்கிறார் நூலின் ஆசிரியர்.

அந்தப் புத்தகத்தில் கண்டுள்ள வசனங்களில் சில இதோ…( இவற்றை இங்கே குறிப்பிடுவதே வேதனையாக இருக்கிறது. ஆனால் மக்களுக்கு இந்தத் தகவல்கள் போய்ச் சேர வேண்டியுள்ளதால் இடுகிறேன். மன்னிக்கவும் ):

 • “நாராயணனின் புதல்வியான ஊர்வசி ஒரு வேசி. அவளுடைய மகன் தான் வசிஷ்டர். இப்படிப்பட்ட வசிஷ்டர் தான் இந்து கடவுளாகிய இராமனுக்கு குரு.”
 • “சீதையை கடத்திச் சென்றது பிரம்மா. இப்படிப்பட்ட ஆசைகளுக்கு அடிமைகளான சிவன்,விஷ்ணு, பிரம்மா போன்றவர்களை கடவுள் என்று அழைப்பது பெரிய பாவம்.”
 • “கடவுளே ! கிருபை கூர்ந்து இந்தியர்களான பாவிகளை விடுவியும். அவர்கள் கேவலமான உறவுகள் (‘விபசாரம்’) வைத்துள்ள கடவுள்களை வழிப்பட்டு வருகின்றனர்.”
 • “கிருஷ்ணர் என்பவர் ஒரு கீழ்த்தரமான நபர். இவரை வழிபடும் மூடர்களை விடுவிப்பது (அதாவது மதமாற்றம் செய்வது) நம் கடமை.”

மேலும் இதுபோன்ற சில “புனித” வசனங்களை படிக்க : https://greathindu.com/2008/09/denigration-of-hindu-gods-reason-for-christian-attack/

இந்த “சத்திய தர்ஷினி” புத்தகத்தை முதலில் எழுதியது சூரியநாராயண ராவ் என்ற “இந்து பெயர் தாங்கிய” ஒரு ஆந்திர கிறிஸ்தவர். அவர் “அருளியதை” கன்னடத்தில் ராம ரெட்டி என்பவர் மொழி பெயர்த்துள்ளார்.

இந்த புத்தகத்தை New Life Trust அமைப்பு, மத மாற்ற பிரச்சாரத்திற்காக விநியோகம் செய்யப் போய் அது தான் இப்பொழுது கலவரத்திற்கு காரணியாகியுள்ளது.

கிறிஸ்தவர்கள் ஒன்றும் சாதுக்கள் அல்ல. அவர்கள் தரப்பிலிருந்து போலீஸ் மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது. அதுபற்றிய செய்தி இங்கே : https://drvsacharya.blogspot.com/2008/09/attacking-fellow-human-being-which.html

இந்தத் தகவல்களை நமது அறிவு ஜீவி செய்தி நிறுவனங்கள் வழக்கம் போல் கண்டு கொள்ளவில்லை. மதச்சார்பின்மை என்பது இந்துக்களுக்கு மட்டும் தானே? சிறுபான்மையினர் என்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இத்தாலியிலிருந்து அமெரிக்கா வரை, அவர்களைப் பற்றி கவலைப்பட பல நாடுகள் உள்ளன. இந்துக்களைப் பற்றி உள்ளூர்க்காரன் கவலைப்பட்டால் அவன் மதவாதி !

பார்க்க: ஜடாயு கட்டுரை – Church Attacks, Conversions & Holy Fathers..

ஓருவரின் உண்மையான மதத்தை மாற்ற நினைப்பது என்பதே உண்மையான ஆன்மீகத்திற்குப் புறம்பான ஒரு கேவலச் செயல். அதிலும் இது போன்ற மற்ற மதத்தின் மீது சேற்றை வாரிப் பூசும் செயல்களை என்ன சொல்ல?

சிறுபான்மை இனம் என்று தங்களை சொல்லிக்கொண்டு, பெரும்பான்மை மக்கள் எல்லோரும் தங்களை பொத்திப் பாதுகாக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையினர் மூக்கைச் சுரண்டி விளையாடி விட்டு, அவர்கள் மிகச் சிறிய அளவில் எதிர்வினை புரிந்தாலும் குய்யோ முறையோ என்று கூச்சல் போடுவதால் என்ன பயன் ?

இந்து தெய்வங்கள் மீது அவதூறு பேசுவது இது முதல் முறை இல்லை. நாடு முழுவதும் இது பல வருடங்களாக நடந்துக்கொண்டிருக்கிறது. தமிழகம் உட்பட..ஆனால் இவர்கள் என்னவோ ஒன்றும் அறியாத தங்களைத் தாக்கி விட்டதாக அலறுவது நல்ல காமெடி.

“மதச்சார்பின்மை என்பதும், மத நல்லிணக்கமும் ஒரு வழிப் பாதை அல்ல. நமக்கும் அதில் பங்கு இருக்கிறது” என்பதை மதமாற்ற மிஷனரிகள் புரிந்து கொள்ளும் வரை இந்த மாதிரி பிரச்சனைகளை நாடு சந்தித்துக் கொண்டுத்தான் இருக்கும் என்பது கசப்பான உன்மை.

17 Replies to “கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன?”

 1. இந்த கலவரங்கள் குறித்த பின்னணி விவரங்கள் தெளிவாக தந்ததற்கு நன்றி. இதில் கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்வதும், மற்ற மதத்தினரை காரணமின்றி இழிவாக பேசி அவமதிப்பதும் எவ்வளவு கண்டிக்கத் தக்கதோ, அதே அளவு அதற்கு பதிலாக வன்முறையில் இறங்குவதும் கண்டிக்கத் தக்கதே.

 2. பெங்களூரு ஆர்ச்பிஷப்பின் திமிர்!

  இந்த செய்தியைப் படியுங்கள்:

  தன்னை சந்திக்க வந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை
  வாசலிலேயே நிற்க வைத்து பெங்களூர் ஆர்ச் பிஷப் அவமானப்படுத்தி இருப்பதாக இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  .
  அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

  கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கர்நாடகபெங்களூர் ஆர்ச்பிஷப்பை அவரது வீட்டில் சென்று சந்தித்து இருக்கிறார். இவருடைய நல்ல மனதை பயன்படுத்திக் கொண்டு ஆர்ச்பிஷப் முதல்வரை வரவேற்காமல் தன்னுடைய வீட்டு வாசலிலேயே நிற்க வைத்து நாங்கள் புண்பட்டுவிட்டதாக ஆவேசப் பட்டு டி.வி. சேனல்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

  விளம்பரம் தேடிக்கொண்ட பிறகு அவரை வீட்டிற்குள் அழைத்து சென்றிருக்கிறார் ஆர்ச்பிஷப். இந்த பண்பற்ற செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

  முதல்வர் எடியூரப்பா ஆர்ச்பிஷப் வீட்டிற்கு போயிருக்கக் கூடாது. போனால்
  இப்படித்தான் அவமானப்பட வேண்டியிருக்கும். நமது நாட்டில் எந்த முதல்வரும் செய்யாத ஒரு நல்ல முன் உதாரணத்தை கர்நாடக முதல்வர் செய்ய போய் அவமதிக்கப் பட்டுள் ளதைக் கண்டு ஏராளமானவர்கள் வருந்தி உள்ளார்கள்.

  பிஜேபி ஆட்சியை கவிழ்ப்பதற்கு தேவகவுடாவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டு சேர்ந்து கலவரங்களை உண் டாக்கி, சட்டம் ஒழுங்கை சீர் குலையச் செய்ய சர்ச்களை தாக்கி இருக்கக் கூடும்.

  சர்ச் உடைப்பு சம்பவங்களை பார்வையிட மத்தியக் குழுவை அனுப்பும் அரசு ஒரிசா லட்சுமணானந்தா கொலை சம்பவத்தின் போதும் இந்துக்கள் பாதிக்கப்பட்ட போதும் குழுவை அனுப்பாதது ஏன்? சர்ச்களை தாக்குபவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கப் போவதாக அறிவித்த அரசு, கோவில்களை தாக்குபவர்களையும் குண்டர் சட்டத்தில் அடைக்கப் போவதாக அறிவிக்க வேண்டும்.

  மோசடி மதமாற்றமும், இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி நடத்தப்படும்
  பிரச்சாரங்களும் தான் பிரச்சனைக்கு காரணம் என்பது உலகறிந்த உண்மை. இதை ஆர்ச்பிஷப் நிறுத்தினால் அமைதி திரும்பும்.

  பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்து மனப்பான்மையுடன் நடக்க வேண்டாம் என்றும்,
  கலவரங்களில் குளிர்காய வேண்டாம் என்றும் இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.

 3. இதையும் படியுங்கள் !

  இந்தியாவில் ஒரு மாநில அரசு, ஒரு கிறுத்தவ பேரணிக்காக பொது விடுமுறை அளிக்கும் அளவிற்க்கு போயிருக்கிறது.
  வடக்கிழக்கு மாநிலங்கள் எந்த அளவிற்க்கு மத மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன என்பதற்க்கு ஒரு வேதனையான சான்று !
  இனியும் தூங்கினால் ஹிந்துக்களை கடவுளும் காப்பாற்ற முடியாது !

  https://www.hindu.com/thehindu/holnus/004200809260322.htm

  Christians take out rally in Mizoram

  Aizawl (PTI): Thousands of Christians on Thursday held mass prayer and “solidarity procession” here today for fellow Christians who are being persecuted in Orissa and Karnataka allegedly by majority community.

  A two-and-a-half-hour mass prayer was held at a playground in MacDonald Hill here, a place where Christian missionaries began their mission in Mizoram. The congregation then went in a rally towards the centre of Aizawl city upto the Salvation Army Temple.

  The mass prayer and procession was organised by “Orissa Ringtute Tuarpuitu” formed by former speaker of the state assembly Rokamlova, who is a Presbyterian church elder.

  The provessionists not only prayed for the persecuted Christians but also for the persecutors, Rokamlova said.

  Meanwhile, Mizoram Kohhran Hruaitute Committee (MKHC), leaders of the conglomerate of 13 major churches in the state is organising a “Peace Rally” on Monday here and in headquarters of seven other districts.

  The MKHC, in a statement, said the peace rally was being organised to show solidarity with fellow Christians in Orissa, Karnataka and Madhya Pradesh.

  The state government had announced a public holiday on that day so that the government employees and students could take part in the rally, Rev Lalrinsanga, Secretary of MKHC said.

 4. ஏங்க, மதமாற்றம் செய்வது எங்கள் பிறப்புரிமை என்று திலகர் கணக்கா சவுண்டு விடும் கிருத்துவர்களும், மதமாற்றம் செய்வதற்கே கோடிகோடியாய் பணத்தில் புரளும் சுவிசேச ஆலேலூயாக்களும் சேர்ந்து நம் அரசியல் சட்டத்தின்படித்தான் நடக்கிறோம் என்கிறார்களே! அத்வானி ஐயா கூட சொல்லிட்டார், மதமாற்றம் செயவதை நிறுத்த முடியாது என்று. மதமாற்றமும் செய்ய வேண்டும், ஆனால், மாற்றப்படும் மதத்தை மட்டமாக பேசக்கூடாது என்றால் எப்டீங்க. என்னை அடி, ஆனால் எனக்கு வலிக்க கூடாது என்று சொல்வது மாதிரீல்ல இருக்கு! இந்துக்களுக்கு சொரணேயே கிடையாதா?

  நன்றி

  ஜயராமன்

 5. ஐயா, நீங்கள் ஆர்.எஸ் ராஜாவா இல்லை ஆர்.எஸ்.எஸ். ராஜாவா??

 6. ஜயராமன்,

  நீங்கள் என்னை ஆர்.ஸ்.ஸ் என்று அழைத்தாலும் எனக்கு மகிழ்ச்சியே. உங்களுக்கு என் பெயரில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா ? 🙂

 7. கிறிஸ்தவத்துற்கு மற்ற மதங்களை அழிப்பதே வேலை. கிறிஸ்தவம் அதன் வளர்ச்சியில் பல உள்ளூர் மதங்களை Paganism என்று கூறி அழித்தது நிதர்சனம்.

  இந்து, பௌத்தம், ஜைனம், ஆஜீவகம் போன்ற எந்த ஒரு இந்திய மதமும் தம் கொள்கைகளை நம்பாதவர்கள் நரகத்தில் தள்ளுவதாக கூறியதில்லை. ஆனால் கிறிஸ்துவத்திலோ அவர்களின் கடவுளை நம்பாதவர்கள் எவ்வளவு நல்லவர்களகாவும் நரகத்துக்குத்தான் செல்ல வேண்டும்.

  எல்லாவிதமான பொய்ப்பிரச்சாரங்களையும் செய்யக்கூடியவர்கள்.

  ஒரு பர்மிய கிறிஸ்தவ பிரச்சார உண்மை…மன்னிக்கவும்..நகைச்சுவைக்கதை:

  ஒரு புத்த பிக்ஷு இறந்துப்போனாராம். இறந்த பிறகு யம லோகம் சென்ற அவரை, எமன் நோக்கி நரகத்தில் தள்ளுமாறு கூறினாராம். இதற்கு காரணம் கேட்ட பிக்ஷுவிடம், இயேசுவை நம்பாததால் தான் நரகத்துக்கு செல்வதாக கூறினாராம். பிக்ஷு திரும்பி பார்க்கையில் புத்த பகவான் நரகத்தில் உள்ளதை கண்டுள்ளாராம். ரொம்ப நல்லவரான புத்தர் ஏன் நரகத்தில் உள்ளவரென கேட்க, எவ்வளவு நல்லவராக இருந்தாலும் இயேசுவை நம்பாதவர்கள் நரகத்தில் வாட வேண்டும் என்று எமன் கூறினாராம்.

  அப்போதுதான் ஒரு அப்போஸ்தலர் தோன்றி, கிறிஸ்தவ பெயர் சூட்டி அவரை இயேசுவை பின்பற்றுமாறு கூறி் பூமிக்கு திருப்பி அனுப்பினாராம். அவரது அடக்கம் செய்யும் தருவாயில் அவருக்கு உயிர் வந்து நடந்ததை கூறி நூற்றுக்கணக்கான பௌத்த பிக்ஷுக்களையும் பல மக்களையும் இரட்சிப்புக்கு உள்ளாக்கினாராம்.

  பி.கு: கிறிஸ்துவுக்கு முன்பு புத்தர் பிறந்தார். கிறிஸ்துவின் பாதி கதை புத்தரின் கதையில் இருந்து சுடப்பட்டது என்பது கூடுதல் தகவல் 🙂

  தென்கொரியாவில் பௌத்தத்தை பாதி அழித்து விட்டது, இப்போதைய விழுக்காட்டின் படி 40% தான் பௌத்தர்கள் மீது கிறிஸ்துவர்கள். தென் கொரியாவை கிறிஸ்துவின் கோட்டையாக்குவதே அவர்களின் கொள்கையாம்.

  ஒரு கிறிஸ்தவ பிரச்சார இதழ் எமது வீட்டுக்கு மாறி வந்தது. அதில் தமது குறிக்கோளாக குறிப்பிட்டிருந்தது ”2010க்குள் 20% இந்தியர்களையாவது இரட்சிப்புக்கு உள்ளாக்குவது (அதாவது மதம் மாற்றுவது)”. இப்படி பகிரங்கமாகவே அறிவிக்கின்றனர் 🙁

  இந்தியாவில் இப்படி ஒரு நிலைமை வராமல் காப்பது அவசியம், ஏன் ஒவ்வொரு இந்துக்கள் மட்டுமல்ல நமது இந்திய பாரம்பரியத்தை காப்பது ஒவ்வொரு இந்தியரின் கடமையும் கூட.

  என் கல்லூரி நண்பர் என்னிடம் இன்று சாயந்திரம் கல்லூரி வகுப்பின் போது கூறியது: “ஒரிசால சும்மா பணம், ஏக்கர் நிலம், சப்பாடு, அரிசி, வேலைன்னு மதம் மாத்திட்டு இருந்தாங்க. அவங்களும் பொறுத்து பொறுத்து பாத்தாங்க, தாங்க முடியாம போட்டு தாக்கிட்டங்க”. ”என்ன இருந்தாலும் அவங்க பண்ணதும் தப்பு இவங்க பண்ணதும் தப்பு” என்று கடைசியாக ஒரு வாக்கியத்தை இணைத்து விட்டார்.

 8. I would like some of the learned persons, like Mr Jayaraman, for whom I have high regards or people like Mr Cho Ramaswamy to front up the PS media and put our Hindu point of view and our anger reg the conversion agenda. We must also question the media about their silence on any issues reg Hindusim. The dopey Hindu public need to be awakened.

 9. எந்த மீடியாவும் கிறிஸ்துவர்கள் செய்ததை கண்டு கொள்ளவில்லை. இது சரி அல்ல.

  உண்மையை வெளியிடும் உங்கள் இணையதளத்துக்கு நன்றி.

  இப்போது நடப்பது இந்துக்களின் எழுச்சி. இது இனி இந்தியா முழுதும் தொடரும்.

 10. Unless goverment takes action against conversion ,these attacks will continue;because many families are torn apart because of conversion.

 11. ஐயா,

  நான் மங்களூரில்தான் இரண்டு வருடமாக இருக்கிறேன். இங்கே கலவரம் நடந்தது உண்மைதான்.

  தாக்கப்பட்ட கிருத்துவ கட்டிடங்கள் எல்லாம் சர்ச்சுக்களே இல்லை. அவை ஓலை குடிசைகள் அல்லது சிறிய மதமாற்றும் வழிபாட்டுத் தலங்கள். உண்மை இப்படி இருக்க சர்ச்சுக்கள் தாக்கப்பட்டன, சர்ச்சுக்கள் தாக்கப்பட்டன என்று எல்லா பத்திரிக்கைகளும் சொல்லுவது பெரும் பொய்.

  பத்திரிக்கைகள் கலவரம், கலவரம் என்று சொல்கிறார்களே ஒழிந்து யார் கலவரம் செய்கிறார்கள் என்பதை சொல்லுவதே இல்லை. கலவரம் செய்வது கிருத்துவர்கள்.

  இந்த கலவரத்தில் எத்தனையோ இந்துக்களின் வீடுகள், கடைகள், தொழிற்கூடங்கள் நாசமாக்கப்பட்டன. தினசரி பிழைப்பிற்கு நான் உபயோகித்து வந்த என்னுடைய டெம்போ வேனை எரித்துவிட்டார்கள்.

  ஆனால், நாங்கள் எல்லாம் இந்துக்கள் என்பதால் எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.

  இன்ஷூரன்ஸிடம்போய் நஷ்ட ஈடு கேட்டால், கலவரத்தால் அழிந்த பொருளுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்காது என்று சொல்லி அலையவிடுகிறார்கள்.

  கிருத்துவர்களின் வழிபாட்டு தலங்களின் சுவர்களில் விழுந்த கீறலைப் பற்றித்தான் இந்த அரசாங்கமும், பத்திரிக்கைகளும் கவலைப்படுகின்றன. எரிந்துபோன எங்கள் வாகனங்கள், தாக்கப்பட்ட எங்கள் இருப்பிடங்கள், கை கால் உடைந்த எங்கள் நண்பர்கள், கத்தி குத்துப் பட்ட எங்கள் உறவினர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

  எங்கள் வாழ்க்கை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்ற நிலமையில் இருக்கிறது. விபச்சாரிக்கும், பிச்சைக்காரனுக்கும் இருக்கும் சுதந்திரம், உரிமைகூட எங்களுக்கு இல்லை. மனித உரிமை என்பது இந்துக்களுக்கு மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது?

  மதம் மாறினால்தான் நாங்கள் மனிதர்களாக மதிக்கப்படுவோம் என்றால், அதற்காக எல்லாவித வன்முறையையும் எங்கள் மீது கட்டவிழ்த்து விடுவோம் என்று இந்த மதம்மாற்றிகள் செயல்பட்டால், எங்களுக்கும் கோபம் வரும் என்பதை காட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

  இந்த மதமாற்றிகள் பலமுள்ள சிறுபான்மையினர். நாங்கள் பலமற்ற பெரும்பான்மையினர்.

  பலமில்லாத புழுகூட எதிர்த்துவிட்டுத்தான் சாகிறது.

  மதம் மாறுவது மட்டுமே பிழைக்க வழி என்று நினைத்து மதம் மாறுபவர்கள், மதம் மாற்றுவதற்காக நீங்கள் உபயோகித்த வன்முறையையும், அவர்கள்பட்ட அவமானத்தையும் சேர்த்தே கொண்டுவருகிறார்கள். இந்தியா முழுவதையும் நீங்கள் மதம் மாற்றுவதில் வெற்றிபெற்றாலும், இந்த வன்முறை உங்களை உள்ளிருந்தே எரித்துவிடும்.

  எச்சரிக்கை.

 12. பவுர்ணமி முழு இரவு ஜபம், அமாவாசை ஆராதனை என்று இந்திய வேடம் போடும் கிருத்துவ குழுக்கள் செய்யும் பம்மாத்து வேலைகளினால் கெடுவது சமூக அமைதி. டெலிவிஷன் சேனல்களும் சிறுபான்மை பஜனை தான் நடத்துகின்றன. போலிமதச்சார்பின்மை பேசும் புரட்டுக் கூட்டம் எல்லா இடத்திலும் சாக்கடைப் புழுக்களாய் வியாபித்துள்ளன். சிறுபான்மைக்கு அரண்களாய் எல்லாக் கட்சிகளும் நோன்புத் திறக்கின்றன். பெரும்பான்மை வோட்டுகளைப் பெற்று ஆட்சிக்கு வரும் கட்சிகள் தேசவிரோத கிருஸ்துவ, இஸ்லாமிய கூட்டங்களை ஆதரித்து வெட்கம் மானமில்லாம்ல் பல் அப்பாவிகளின் உயிருக்கும் உடைமைக்கும் சேதத்தை விளைவிக்கின்றன. பயங்கரவாதிகளைக் காக்க மனித உரிமை ? கூட்டங்கள் ! இதற்கெல்லாம் ஒரு முடிவு ஆண்டவன் கையில் தான் உள்ளது.

 13. “The Hindu” or “The Anti-Hindu” ????

  Today’s “The Hindu” says this , in the front page head lines

  Nun was gang raped and priest brutally assaulted in Kandhamal

  https://www.hindu.com/2008/09/30/stories/2008093058040100.htm

  but it reports that the incident happened on August 25 , a month ago !.., just two days after Swami Lakshmanananda was killed and violence began and was hot.

  While we strongly condemn these cruelties,

  1. Why did “The Hindu” publish this one-month old news in today head lines as though it happened just yesterday ?

  2. Will people not misguided as though it is a recent one and indulge in more violence ?

  3. Did “The Hindu” cover the mysteries behind the killing of Swami lakshmanananda ?

  I think Hindus should boycott this anit-Hindu newspaper !

 14. திரு. ராஜா, நீங்கள் சொல்வது முழுக்க உண்மை.

  நான் ஹிந்து, விகடன் போன்ற பத்திரிகைகளை வாங்குவதை நிறுத்தி விட்டேன்.

  Boycott these newspapers and magazines.

 15. ‘The Hindu’ – is owned by a christian Gospel group in europe.

  Also note seated on the stage from left to right of its story,are the whos who of Anti Hindus.
  Kanimozhi of ‘did Ram really exist fame?’,hwo wont ask that to the bishops if christ ever did.
  Prince of Arcot- the crypto jihadi face of secularism
  The Bishops who uttered not a word of regret for Swamiji murder with other sadvis though we believe jesus asked ‘to show the other cheek’
  They neither asked christians to exit maoist groups.
  And funnily,the left side corner a story of maoists admotting that ‘they murdered the swamiji’ and in the same breath ,’Maoist outfits in orissa are predominantly christians’.
  They also swore to kill Advani,Tagodia and singhal.
  But the correspondent didnt ask the government to follow this lead by booking him and findout more-journalist ethics perhaps.If it was bajrang Dal that will be a scoop and investigative journalism.

  Why the media, many papers and magazines and TVs are anti hindu is not only becos most educated hindus went through a rootless and de-hinduising education ,reading books prepared by marxist historians and authors, its also becos they have been taken over by christian and jihadi business groups.
  The media takeover is a prelude to subversion of publuc opinion and silencing of hindu diseenting voices.

  The Deccan chronicle holdings are with Saudis, wahabi groups that export jihad. So, with M J Akbar as editor it pleads for muslim causes,whitewashes, justifies and protects Islamic terror and perpetrators.

  NDTV is pranay roys mouth piece, and he is brother in law of Prakash Karat the jihadi comrade in arms who posed with abdul naser madani on acquital from coimbatore blast case.

  The Headlines is a evangelical world council of church owned unabashed christian outfit.

  And on and on it goes.

  The near total monopolisation of media is a strategic step,becos for global jihad, chinese imperialism and western backed churchianity, the sedation of hindu minds and blunting thier resistance is of utmost importance, and huge sums have been so allocated.
  Each of them want to dismantle india on behalf of thier masters
  and carve out their space.
  China especially is worried that India will be a serious challenge to its hegemony, and fareastern states might come together under its leadership.
  Western powers want a strong christian base by demographic engineering in the event of confrontation with china and pakistan.
  Jihadis view the islamic conquest of India as stressed by the prophet of Islam,as paramount to its world domination.
  Infact they take the prophets promise of total absolution of sins for those who fall in their jihad against India as a prophesy of its eventual capitulation to Islamic rule.
  So, the need of the hour is to setup papers,internet sites,television stations to represent and interpret news and events as it affects the hindu interests and point of view.
  This website is a good move in that direction.

 16. இந்த கலவரங்கள் குறித்த பின்னணி விவரங்கள் தெளிவாக தந்ததற்கு நன்றி.

 17. i condemn the bad damn christians. Religion is belief. Don try to brain wash or force. Human have the freedom to follow any religion by his wish.all the indian christians and muslims think of your great grand fathers. You seed is from hinduism.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *