நிதிநிலை அறிக்கை-2014: கவர்ச்சி இல்லாத தொலைநோக்கு திட்டம்

ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சடங்காகவும், அரசியல் லாபமீட்டுவதற்கான கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிடுவதற்கான வாய்ப்பாகவுமே…

View More நிதிநிலை அறிக்கை-2014: கவர்ச்சி இல்லாத தொலைநோக்கு திட்டம்

எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 3

முதல் பகுதி… இரண்டாம் பகுதி… . மக்களாட்சி முறையில் அரசாங்கங்களை அவற்றின் செயல்பாட்டின்…

View More எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 3

எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 2

2003- 04ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ. 2,828 கோடி வருமானம் கிடைத்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு 2013-14ஆம் நிதியாண்டில் இது ரூ. 21,500 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் மொத்த வருமானத்தில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பெரும்பகுதி தான் விலையில்லாத் திட்டங்களில் செலவிடப்படுகிறது. “கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?” என்று மகாகவி பாரதி கேட்டது இதைத் தான். இந்த டாஸ்மாக் வருமானம் முழுவதும் தமிழக இளைஞர்களின் ஆற்றலை உறிஞ்சி, தமிழகப் பெண்களின் கண்ணீரில் விளைவிக்கப்பட்ட வருவாய் தான். மாநிலத்தையே மலடாக்கும் டாஸ்மாக் அளிக்கும் வருவாயில் தான் தங்களுக்கு விலையில்லாத் திட்டங்கள் அள்ளிவிடப்படுகின்றன என்ற உண்மையை சாமானிய தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்களா? எனவே தான் பல்வேறு சமூகநல இயக்கங்களின் தொடர் போராட்டத்தையும் மீறி தமிழகத்தில் மதுவிற்பனையை அரசு ஊக்குவித்து வருகிறது. தமிழகத்தின் எந்தத் தெருவிலும் வீழ்ந்து கிடப்பது போதை ஆசாமிகள் மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்காலமும் தான் என்பதை ஏன் தமிழக முதல்வர் ஜெயலலிதா உணர மறுக்கிறார்?…

View More எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 2

எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 1

…ஆனால், இப்பொருள்களுக்கு விலையில்லாமல் இல்லை. திமுக ஆட்சியில் விநியோகிக்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டி ரூ. 1000-க்கு வெளிச்சந்தையில் கிடைத்த்து போலவே, அதிமுக ஆட்சியில் விநியோகிக்கப்படும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் சுமார் ரூ. 5,000-க்கு விற்பனைக்கு உடனுக்குடன் கைமாறுவதையும் காண முடிகிறது. … முந்தைய கருணாநிதி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி அதன் விளம்பரப்படத்தில் முதல்வர் படம் மட்டும் தற்போது மாற்றப்பட்டிருக்கிறது. இத்திட்டம் ஒருவகையில் ஏழை மக்களும் நவீன மருத்துவ சிகிச்சை பெற உதவினாலும், இதன் பலனை பெருநிறுவன மருத்துவமனைகள் துஷ்பிரயோகம் செய்வதாகவும் தகவல்கள் வருகின்றன.

View More எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 1

இலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி

மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த…

View More இலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி

மோடி அரசின் ஆரம்பமே அசத்தல்!

நாட்டின் 15வது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடியின் ஆரம்பமே அசத்தலாக உள்ளது. தனது…

View More மோடி அரசின் ஆரம்பமே அசத்தல்!

பாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு

பாரதப் பிரதமராக மோடியை ஏகோபித்த ஆதரவுடன் இந்தியா தேர்ந்தெடுத்துவிட்டது. இதுவரை காணாத வகையில்…

View More பாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு

மோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்!

இந்த வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியின் செயலற்ற தன்மை மீதான மக்களின் கோபமே காரணம் என்றாலும், அதை வாக்குகளாக மாறியது தான் மோடியின் அசுர சாதனை. கண்டிப்பாக மோடியின் இடத்தில் அத்வானி உள்ளிட்ட வேறு எவர் இருந்திருந்தாலும், இத்தகைய இமாலய சாதனையை நிகழத்தியிருக்க முடியாது…. மோடியின் பிரமாண்டமான பொதுக்கூட்டங்களையும் பேரணிகளையும் திட்டமிட்டு நடத்தியது பாஜகவின் நிகரற்ற சாதனை…. விலைக்கு வாங்கப்படும் ஊடகங்களைக் கொண்டு அரசியல் நடத்திவந்த காங்கிரஸ் கட்சியால் பாஜக வெகுவாக பாதிக்கப்பட்டுவந்தது. அந்நிலையும் இம்முறை மாறியது. காங்கிரஸுக்கு எதிரான மக்களின் மனநிலை ஊடகங்களின் காங்கிரஸ் ஆதரவுப் போக்கிற்கு கடிவாளமானது…. சுயநல நாட்டம் மிகுந்த அரசியல்களத்தில் வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களை இணைத்து, ஓரணியாகக் கொண்டுசெல்வது மிகவும் கடினமானது. அதை சங்கமே சாதித்தது….

View More மோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்!

மாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…

1984-க்குப் பிறகு இந்திய அரசியலில் நிலவிய குழப்பமான, அரசியல் எண்ணிக்கை விளையாட்டுக்கு வழிவகுத்த சூழல் இத்தேர்தலில் காணாமல் போயிருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில் சிறு கட்சிகள் கூட ஆதிக்கம் செலுத்தும் நிலையையும், பாஜகவின் மகத்தான வெற்றி மாற்றி அமைத்திருக்கிறது…. மக்களிடம் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்து வென்று, பிறகு மக்கள் முதுகில் குத்துவது போல காங்கிரஸை ஆதரித்துவந்த பல கட்சிகளுக்கும் இத்தேர்தல் ஆப்பு வைத்துவிட்டது… இஸ்லாமியர்களும் கூட குறிப்பிடத்தக்க அளவில் பாஜகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களித்து, தங்கள் மீதான அபவாதத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினரை தாஜா செய்யும் போக்கிற்கு இத்தேர்தல் முடிவு கண்டிருக்கிறது…

View More மாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…

சென்னை குண்டுவெடிப்புகள்: தொடரும் அச்சுறுத்தல்கள்

சென்னையில் இலங்கையைச் சார்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி கைதாகியுள்ள நிலையில், மீதமுள்ள சக பயங்கரவாதிகளைக் காப்பாற்ற, காவல்துறையை திசைதிருப்புவதற்காக இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது… மே 1 முதல் மூன்று நாட்களுக்கு ஆந்திரப் பிரதேசத்தில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்வதைக் கணக்கிட்டு, மோடியின் சுற்றுப்பயணத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கலாம்… கைதாகியுள்ள ஜாகீர் ஹுசேன் அளித்துள்ள தகவல்களின்படி பார்த்தால், நாட்டின் கிழக்கு கடற்கரை முழுவதிலுமே பயங்கரவாதிகள் திட்டமிட்ட முறையில் காலூன்றி இருப்பது தெரிகிறது. தமிழகத்தின் ராமநாதபுரம், பூம்புகார், வேதாரண்யம், காயல்குடி, கோடியக்கரை, சென்னை, எண்ணூர் பகுதிகளில் சத்தமின்றிச் செயல்படும் பயங்கரவாத ஆதரவுக் குழுக்கள் இயங்குவதாக மத்திய புலனாய்வுத் துறையே தெரிவித்துள்ளது. இப்பகுதிகளில் அடிக்கடி கள்ளநோட்டுப் புழக்கம், தங்கக் கடத்தல், மர்ம நபர்கள் நடமாட்டம் போன்ற சமூகவிரோத நிகழ்வுகள் நடப்பதைக் கணக்கிட்டால், நம்மைச் சூழ்ந்துள்ள பயங்கர ஆபத்தின் பரிமாணம் விளங்கும்…

View More சென்னை குண்டுவெடிப்புகள்: தொடரும் அச்சுறுத்தல்கள்